சக்தி, "ஏன் புடவை கட்டி காண்பிக்கணும்ன்னு இருந்தே?" வந்தனா, "நான் எப்பவும் மாடர்ன் ட்ரெஸ் அப்பறம் சுடிதார்தான் போடுவேன்னு நீ நினைச்சுக்க வேண்டாம்ன்னு" சக்தி, "மாடர்ன் ட்ரெஸ், சுடிதார் எல்லாம் பிடிக்கலைன்னு சொன்னேனா?" வந்தனா, "எப்படியும் நீ உங்க அம்மாகிட்ட பேசும் போது நான் என்ன மாதிரி ட்ரெஸ் பண்ணுவேன்னு பேச்சு வரும் ..." சக்தி, "ஸோ மேடம் இப்பவே மாமியார்கிட்ட நல்ல பேர் வாங்கலாம்ன்னு பார்க்கறாங்களா?" வந்தனா, "ஆமா ... " என்றவள் சற்று யோசித்து "ஷக்தி, உங்க அம்மா ஒத்துப்பாங்கதானே?" சக்தி, "அப்படித்தான் நினைக்கறேன். நான் சொல்றதை விட உன்னை ஒரு தடவை நேரில் பாத்தாங்கன்னா நிச்சயம் ஒத்துப்பாங்க" வந்தனா, "ஷக்தி, எனக்கும் உங்க அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. முதல்ல அவங்க என்னை பாத்து ஓ.கே சொல்லணும்" சக்தி, "ஏன் அதுக்கு அப்பறம்தான் நீ உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லணும்ன்னு இருக்கியா?" முகம் சுருங்கிய வந்தனா, "அப்படி இல்லை ஷக்தி, அவங்களுக்கு பிடிக்கலைன்னாலும் எங்க அப்பா அம்மா ஒத்துப்பாங்கன்னு நான் நம்பறேன் ஷக்தி. உன் கூட பழகினதுக்கு அப்பறம் அவங்களுக்கும் நிச்சயம் உன்னை பிடிக்கும்.
ஆனா உங்க அம்மாவுக்கு என்னை முதலில் இருந்து பிடிச்சு இருக்கணும். " சக்தி, "ஏன்?" வந்தனா, "ரிடையர் ஆனதுக்கு அப்பறம் நம்மகூட இருக்கணும்ன்னு நினைச்சுட்டு இருப்பாங்க இல்லையா? என்னை பிடிக்கலைன்னா இப்ப இருந்தே அவங்க ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுவாங்க ஷக்தி. யாரோ ஒரு போலீஸ்காரி என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டான்னு அவங்க நினைச்சா சத்தியமா என்னால சந்தோஷமா இருக்க முடியாது" வாய்விட்டு சிரித்த சக்தி, "உனக்கு இருக்கற அளவுக்கு எனக்கும் உன் வீட்டைப் பத்தி பயம் இருக்கு. என்ன பண்ணலாம் சொல்லு"சென்ற வாரம் லஞ்சுக்கு சென்ற ஸோஃபியா'ஸ் ஆஃப் லிட்டில் இட்டலியை அடைந்தனர். ரிஸர்வ் செய்யப் பட்டு இருந்த டேபிளில் அமர்ந்து உரையாடலை தொடர்ந்தனர். வந்தனா, "எப்படியாவுது அவங்க என்னை பார்க்க ஏற்பாடு பண்ணேன்" சக்தி, "நீ ஈரோடுக்கு போறியா?" வந்தனா, "வேணும்ன்னா போவேன். ஆனா ஒரு காரணமும் இல்லாம எப்படி போறது? .. எங்க வீட்டிலும் என்ன சொல்லிட்டு போறது?" சக்தி, "ஆக்சுவலா இந்த அசைன்மெண்ட் முடிஞ்சதும் அம்மாவையும் சாந்தியையும் டெல்லி ஆக்ரா ஜெய்பூரெல்லாம் கூட்டிட்டு போறதா சொல்லி இருக்கேன்." வந்தனா, "உங்க அம்மா இதுவரைக்கும் அங்கே எல்லாம் வந்தது இல்லையா?" சக்தி, "அம்மா பாத்து இருக்காங்க. சாந்திதான் பாவம் சென்னையை தாண்டி ஒரு ஊருக்கும் போனது இல்லை" வந்தனா, "எதுக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்? இந்த டிஸம்பர் சமயத்தில் அவங்களுக்கும் லீவ் இருக்கும். க்ளைமேட்டும் ரொம்ப நல்லா இருக்கும். அவங்க ரெண்டு பேரையும் அப்ப வரச் சொல்லேன். நான் லீவ் போட்டுட்டு டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்தி காண்பிச்சுட்டு அப்படியே எங்க உதைப்பூருக்கும், எங்க வீட்டுக்கும் கூட்டிட்டு போறேன்" முகம் மலர்ந்த சக்தி, "அப்ப நான் அந்த இடமெல்லாம் பார்க்கலைன்னா பரவால்லைன்னு சொல்றியா?" வந்தனா, "ஹெல்லோ! கல்யாணத்துக்கு அப்பறம் அது எல்லாம் உன் மாமனார் ஊர்!!" சக்தி, "எது ஆக்ராவா?" வந்தனா, "ஜோக் அடிக்காதே. மத்த மூணு இடத்தையும் சொன்னேன். என்ன சொல்றே உங்க அம்மாவை எப்படியாவுது கன்வின்ஸ் பண்ணி இந்த டிஸம்பர்ல ஒரு ஹாலிடே ப்ரோக்ராமுக்கு ஒத்துக்க வைக்கறயா. I will make sure that it will be a memorable holiday for both of them" சக்தி, "உன் வேலைக்கு நடுவே உன்னால் அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமா?" வந்தனா, "ஆக்சுவலா, எங்க ப்ளான் படி நாங்க இப்ப எடுத்துக்கப் போற அசைன்மெண்ட்டை டிஸம்பரில் பாதி முடிச்சு இருப்போம். கடைசிலதான் கொஞ்சம் டைட்டா இருக்கும். நடுவில் ரெண்டு வாரம் லீவ் போடறதில் ஒரு பிரச்சனையும் இருக்காது" சக்தி, "ஓ, நீங்க இப்ப எடுத்துக்கற அசைன்மெண்டை அடுத்த ஏப்ரலுக்கு முன்னாடி முடிச்சுடுவீங்களா?" வந்தனா, "எங்க ரெண்டு பேரோட கணிப்பு அது. நாளைக்கு எங்க பாஸ் வர்றார். நாளைக்கு சாயங்காலம் ஒரு முடிவுக்கு வருவோம்." சக்தி, "என்ன முடிவுக்கு" என்று கேட்டபின் "சாரி ..நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்" எதிரில் அமர்ந்தவனின் கையைப் பற்றியபடி, "ஷக்தி, எனக்கு ஒவ்வொண்ணும் உன் கிட்ட சொல்லணும்ன்னு இருக்கு. ஆனா சொல்ல முடியாம தவிக்கறேன்." சக்தி, "ஹேய், எனக்கு புரியுது ஹனி. இட்ஸ் ஓ.கே" வந்தன, "பட் யூ நோ சம்திங்க்? நீ மட்டும் இதில் முழுசா இன்வால்வ் ஆனா இந்த அசைன்மெண்ட் எல்லாம் ரெண்டே மாசத்தில் முடிக்கலாம்" சக்தி, "கை நிறைய கிடைக்கற சம்பளத்தை விட்டுட்டு கவர்மெண்ட் சம்பளத்துக்கு சேர சொல்றியா?." வந்தனா, "முடிக்கலாம்ன்னுதான் சொன்னேன். ஷாந்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கறவரைக்கும் உனக்கு இருக்கும் பொறுப்புக்கள் எல்லாம் எனக்கு தெரியும். அதனாலதான் வந்து எங்க R&AWவில் சேருன்னு சொல்லலை" சக்தி, "Don't worry. By God's grace .. நான் ஒரு அளவுக்கு சேத்து வச்சு இருக்கேன். நம் கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மாகிட்ட சாந்தியோட கல்யாணத்துக்குன்னு ஒரு FD போட்டு அம்மாகிட்ட கொடுத்துடலாம்" வந்தனா, "இன்னும் வேணும்ன்னா எங்க அப்பாகிட்ட வரதட்சணை டிமாண்ட் பண்ணலாம். நிச்சயம் கொடுப்பார்" சக்தி, "அம்மா தாயே! இந்த பக்கம் கொடுத்துட்டு அந்த பக்கம் உங்க சித்தப்பாவை விட்டு என்னை அரெஸ்ட் பண்ணறதுக்கா?" வாய் விட்டு சிரித்த வந்தனா, "யூ...! இந்த மாதிரி சீரியஸ்ஸா மூஞ்சியை வெச்சுட்டு ஜோக் அடிக்கறது மட்டும் போதும். எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை தலை மேல தூக்கி வெச்சுட்டு ஆடுவாங்க. சரி. அப்ப உங்க அம்மாவையும் ஷாந்தியையும் இந்த டிஸம்பர்ல டெல்லிக்கு வர வைக்கறே. ஓ.கே?" சக்தி, "ஓ.கே. உன்னை பத்தி என்னன்னு எங்க அம்மாகிட்ட சொல்றது?" வந்தனா, "காலேஜ் படிக்கும் போது அறிமுகம் ஆனான்னு சொல்லு. மறுபடி நான் யூ.எஸ் வந்து இருந்தப்ப நல்லா பழக்கமானான்னு சொல்லு" சக்தி, "முதல்ல ஃப்ரெண்ட்டுன்னு சொல்லிட்டு உன்னை பாத்ததுக்கு அப்பறம் அவளை உங்களுக்கு பிடிச்சு இருக்கான்னு கேக்கணுமா? எதுக்கு? எனக்கு எங்க அம்மாகிட்ட பொய் சொல்ல பிடிக்காது" வந்தனா, "ப்ளீஸ் ஷக்தி, அவங்களுக்கு என் மேல் ஒரு அன்பயாஸ்ட் ஒபீனியன் வரணும். நீ என்னை காதலிக்கறதா சொன்னதுக்கு அப்பறம் அவங்க என்னை பார்க்கும் விதமே வேற மாதிரி இருக்கும்" சக்தி, "சரி. ஆனா ஒண்ணு சொல்றேன். எங்க அம்மா ரொம்ப ஷார்ப். நான் எதுவும் சொல்லாமலே அவங்க அனேகமா கண்டுபிடிச்சுடுவாங்க" வந்தனா, "கவலைப் படாதே. அப்படி கண்டுபிடிச்சுட்டா உடனே காலில் விழுந்து நான் தான் என்னை பத்தி சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்னு சொல்லி மன்னிப்பு கேக்கறேன்" சக்தி, "Let us hope she believes that .. " வந்தனா, "ரொம்ப பயமுறுத்தாதே. எனக்கு இப்பவே ரொம்ப எக்ஸைட்டடா இருக்கு" சக்தி, "ஹூம் .. உங்க அப்பா அம்மாவை என்னை பாத்து ஓ.கே சொல்ல நான் தான் அடுத்த மே மாசம் வரைக்கும் வெய்ட் பண்ணனும்" வந்தனா, "முதல்ல உன் அம்மா என்னை பாத்து ஓ.கே சொல்லட்டும்" மேலும் கனவுகளை பகிர்ந்தவாறு டின்னரை முடித்தனர். வாங்கிய இரண்டு டெஸர்ட்டுகளையும் அவனை சுவைக்க விட்டு வந்தனா அவன் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் இனிப்பில் திளைப்பதை பார்த்து ரசித்தாள். திரும்ப ஹோட்டலுக்கு வந்து காரில் அமர்ந்த படி சிறிது நேரம் பேச்சு தொடர்ந்தது .. வந்தனா, "நாளைக்கு எங்க பாஸ் வரார் நாங்களும் பிஸியாதான் இருப்போம். ஆனா உன்னை மறுபடி பாக்காம நான் ஃப்ளைட் ஏற மாட்டேன். சனிக்கிழமை முழுவதும் பிஸின்னு சொல்லாதே...." சக்தி, "ம்ம்ம் .. ஏர்போர்ட்டுக்கு வரேன். ஓ.கே?" வந்தனா, "ஏர்போர்ட்டில் ப்ரைவஸியே இருக்காது. அதுக்கு முன்னாடி முடியாதா?" சக்தி, "எதுக்கு ப்ரைவஸி?" வந்தனா, "ம்ம்ம் .. இன்னைக்கு சாயங்காலம் மாதிரி ஹோட்டல் லாபின்னா கூட பரவால்லை. அங்கே ஏர்போர்ட்டில் என் பாஸ் கூட இருப்பார்" என்றபிறகு வெட்கத்தை மறைக்க வெளியில் பார்த்தாள். அடுத்த கணம் காரின் இரண்டு இருக்கைகளுக்கு நடுவே இழுக்கப் பட்டு அவனது அணைப்பில் இருந்தாள். பல முத்தங்களுக்கு பிறகு பிரியாவிடை பெற்றனர்.Friday, 29 August 2008 வெள்ளி, ஆகஸ்ட் 29 2008 நியூ யார்க்கை சுற்றி இருந்த பல ஊர்களில் இருந்த கிளைகளில் ஒரு வியாபார நிறுவனத்தின் கணக்கில் கேஷாக டெபாசிட் ஆகப் போகும் இருநூற்று நாற்பது மில்லியன் டாலர்கள் கொலம்பியன் ட்ரக் கார்ட்டலை சேர்ந்த வெனிஸுவேலாவில் இருக்கும் ஒரு பினாமிக் கம்பெனியின் கணக்குக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான வேலைகளில் நண்பர்கள் மூவரும் அன்று லீவ் எடுத்துக் கொண்டு காலையில் இருந்து மூழ்கினர். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Friday, 29 August 2008 9:00 AM FBI New York Field Office, 23rd Floor, Federal Plaza, NY வெள்ளி, ஆகஸ்ட் 29 2008 எஃப்.பி.ஐ நியூ யார்க் அலுவலகம், 23ம் தளம், ஃபெடரல் ப்ளாஸா, நியூ யார்க் காலை எட்டு மணிக்கு முன்பே வந்த வந்தனாவும் தீபாவும் தங்களது செயற்திட்டத்தை மறுபடி ஒரு முறை பரிசீலனை செய்து முடித்தனர். அவர்களது அன்றைய உபயோகத்துக்கு ஒதுக்கப் பட்ட கான்ஃபரன்ஸ் ரூமில் வந்தனா தனது லாப்டாப்பை ப்ரொஜெக்டரில் இணைத்து திரையில் விழும் பிம்பத்தை சரி செய்து முடிக்க, முரளீதரன், எஃப்.பி.ஐ தலைமை அலுவலகத்தில் இருந்து வந்து இருந்த க்ரிஸ்டஃபர் மோரிஸ் (Christopher Morris), ஷான் ஹென்ரி, மற்றும் சான்ட்ரா ஆஸ்டின், இந்த நால்வரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். அறிமுகங்களுக்கு பிறகு வந்தனாவும் தீபாவும் தங்களது செயற்திட்டத்தை விளக்கினர். வந்தனாவின் மேலோட்டமான அறிமுகத்துடன் அவர்களது ப்ரஸெண்டேஷன் ஆரம்பித்தது தீபா பிறகு தொடர்ந்தாள் "முதலில் நாங்க இதுவரைக்கும் மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி தெரிஞ்சுகிட்ட விவரங்கள்: 1. மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் புகுந்த கணிணிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும். அதுவும் அதன் உரிமையாளர் செஞ்ச மாதிரியே செய்ய வைக்க முடியும். இது ஷானும் சான்ட்ராவும் ஏற்கனவே கண்டு பிடிச்சது 2. இந்த பாட் நெட்டில் இருக்கும் கணிணிகளுக்கு பெரும்பாலான சமயங்கள் நேரடியா சர்வர்கிட்ட இருந்து எந்த தகவலும் (மெஸ்ஸேஜும்) வருவது இல்லை. மத்த கணிணிகளிடம் இருந்துதான் மெஸ்ஸேஜஸ் வருது. சர்வர் ஒரு குறிப்பிட்ட கணிணிக்கு அனுப்பும் நேரடி மெஸ்ஸேஜாக இருந்தால் கூட அது பல கணிணிகள் கை மாறி குறிப்பிட்ட கணிணிக்கு வந்து சேருது. சோ, ஒரு மெஸ்ஸேஜ் எந்த இணைய விலாசத்தில் இருந்து வந்து இருக்குன்னு பாத்து சர்வரை கண்டு பிடிக்க முடியாது. 3. ஒரு கணிணியில் இருந்து வெளியில் போகும் மெஸ்ஸேஜை டாம்பர் (tamper) பண்ணினா அந்த கணிணியில் இருக்கும் வைரஸ்ஸுக்கு தன்னை தானே அழித்துக் கொள்ளும்படியான ஒரு மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து வருது. இதனால் அந்த கணிணி பாட் நெட்டில் இருந்து நீக்கப் படுகிறது. அந்த கணிணிக்குள் மறுபடி வைரஸ்ஸை புகுத்தினாலும் அந்த கணிணி பாட் நெட்டுக்குள் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை. அதன் இணைய விலாசத்தை முற்றிலும், அதாவது அந்த டொமெயினையே (domain), மாற்றினால் மறுபடி ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதாவது சர்வர் வேறு ஒரு கணிணி என்று நினைத்து அதை ஏற்றுக் கொள்ளுது. 4. மாங்க்ஸ் பாட் நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்றம் (மெஸ்ஸேஜ்) எல்லாம் சங்கேத மொழியில் இருக்கு என்பது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம். மேலும் எந்த விதமான சங்கேத முறை (Encryption algorithm) உபயோகிக்கறாங்க என்பதும் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியாம இருக்கு. மாங்க்ஸ் பாட் நெட்டின் சர்வரை நாம் கண்டுபிடிக்கணும்ன்னா அவங்க உபயோகிக்கும் சங்கேத முறையை கண்டு பிடிச்சே ஆகணும். ஏன்னா சர்வரின் இணைய விலாசம் அவங்க அனுப்பும் மெஸ்ஸேஜுக்குள் பொதிந்து இருக்குன்னு நாங்க நம்பறோம். அடுத்தபடியாக அவங்க சங்கேத முறையை கண்டு பிடிக்க பல மெஸ்ஸேஜுகளையும் நாங்க அனலைஸ் பண்ணினோம். மாங்க்ஸ் பாட் நெட்டில் அனுப்பப் படும் தகவல் பரிமாற்றங்களை நாலு விதமா பிரிக்கலாம்: 1. விளம்பர ஈமெயில் அனுப்புவதற்கான சர்வரிடம் இருந்து வரும் ஆணை ... 2. தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணை அதாவது செல்ஃப் டிஸ்ட்ரக்ட் கமாண்ட் (Self Destruct Command).. 3. மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் வைரஸ்கள் ஒழுங்கா வேலை செஞ்சுட்டு இருக்கான்னு சர்வர் கண்டுபிடிக்கறதற்கான தகவல் பரிமாற்றங்கள். (Health Check Messages) 4. கணிணிக்கு அந்த உரிமையாளர் கொடுத்ததுபோல் பிறப்பிக்க படும் ஆணைகள் ... இந்த நான்கு வகை தகவல் பரிமாற்றங்களில் ஈமெயில் அனுப்புவதற்கான மெஸ்ஸேஜ்களை இப்ப எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் இன்னும் அவங்க உபயோகிக்கும் சங்கேத மொழியை புரிஞ்சுக்க முடியலை." என்று தீபா தன் பகுதியின் ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் விளக்கம் கொடுத்து முடித்தாள். கிரிஸ்டஃபர் மோரிஸ், "ஷான், அந்த கடைசி பாயிண்டைதான் நீ ஒரு மேஜர் ஃபைண்டிங்க் அப்படின்னு சொன்னியா?" ஷான், "ஆமா. நாம் இதுவரைக்கும் கண்டு பிடிக்காத இன்னொரு விஷயம். தீபா, எப்படி அதை கண்டு பிடிச்சீங்கன்னு கொஞ்சம் விளக்கறயா?" தீபா, "ஷ்யூர் ஷான், . ... ஒரு கணிணியில் இருந்து அனுப்பப் பட்ட விளம்பர ஈமெயிலையும் அந்த கணிணிக்கு வந்த மெஸ்ஸேஜஸ்ஸையும் சேர்த்து வைத்து அனலைஸ் பண்ணினோம். விளம்பரத்தில் இருக்கும் எழுத்துக்கள், வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களின் நீளம் இதை எல்லாம் வெச்சு பாக்கும் போது ஒவ்வொரு விளம்பர ஈமெயிலுக்கும் ஒரு தனி பாட்டர்ன் (எழுத்துக் கோர்வையின் அமைப்பு) இருப்பதை கவனிச்சோம். இந்த இரண்டு வாரத்தில் இதுவரைக்கும் ஐந்து வெவ்வேறு விளம்பர ஈமெயில்கள் அனுப்பப் பட்டு இருக்கு. இதில் ஒவ்வொண்ணுக்கும் இருக்கும் தனி பாட்டர்னை ஒரு அளவுக்கு எங்களால் ஐடெண்டிஃபை பண்ண முடிஞ்சுது. அந்த பாட்டர்னை வெச்சு எல்லா மெஸ்ஸேஜஸ்ஸையும் ஃபில்டெர் (சல்லடையால் சலிப்பதுபோல்) பண்ணினோம். ஈமெயில் அனுப்புவதற்கான ஆணைகளை எங்களால் தனியா பிரிக்க முடிஞ்சுது. அப்படி ஒரு கணிணிக்கு வந்த ஒரு ஆணையை எடுத்து நாங்களே மறுபடி அந்த கணிணிக்கு அனுப்பினோம். அந்த கணிணி இன்னொரு முறை அதே ஈமெயில் விளம்பரத்தை அனுப்புச்சு. " கிரிஸ்டஃபர், "ஃபெண்டாஸ்டிக் ... முரளீ, your girls are terrific!. ப்ளீஸ் கண்டின்யூ" தீபா, "சோ, ஒரு விளம்பர ஈமெயிலை ஒரு கணிணி அனுப்பினதுக்கு அப்பறம் எந்த ஆணை மூலம் அந்த விளம்பர ஈமெயிலை அந்த கணிணி அனுப்புச்சுன்னு இப்ப கண்டு பிடிக்க முடியும். இதுவரைக்கும் எங்ககிட்ட அந்த மாதிரி அஞ்சு மெஸ்ஸேஜஸ் இருக்கு. ஆனா, அவங்க சங்கேத முறையை கண்டு பிடிக்க எங்களுக்கு அந்த மாதிரி சில நூறு மெஸ்ஸேஜ்கள் தேவை படுது. முடிந்த வரை வெவ்வேறு விளம்பரங்களுக்கு வெவ்வேறு கணிணிகளுக்கு வந்ததா இருக்கணும் அப்படி இருக்கும் போதுதான் சர்வரின் இணைய விலாசத்தை கண்டு பிடிக்க முடியும். அதே மாதிரி சில நூறுகள் இல்லைன்னாலும் நூறு தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஆணைகள் எங்களுக்கு தேவை" கிரிஸ்டஃபர், "சில நூறுன்னா, குறைஞ்சது எத்தனை?" தீபா, "குறைந்தது இருநூறு. முந்நூறு இருந்தா வேலை இன்னும் சுலபமா முடியும். அதிகமாக அதிகமாக கண்டுபிடிப்பது சுலபமாகும்" ஷான், "இந்த ரெண்டு வாரத்தில் ஐந்து வெவ்வேறு ஈமெயில் விளம்பரங்கள் போயிருக்கு. உங்க கணக்குப் படி ஒரு ரெண்டு வருஷத்துக்குள்ள உங்களுக்கு இருநூறு விளம்பரங்களுக்கான மெஸ்ஸேஜஸ் கிடைக்கும் ... இல்லையா?" வந்தனா, "அவங்களுக்கு அத்தனை ஆர்டர் வந்தாதான் அத்தனை விளம்பர ஈமெயில் அனுப்புவாங்க. அப்படி ஆர்டர் வரலைன்னா?" கிரிஸ்டஃபர், "ஷான், நீ அப்ஸர்வ் பண்ணின இந்த ரெண்டு வருஷத்தில் சுமார் எத்தனை விளம்பரங்கள் போயிருக்கும்? வாரத்துக்கு எத்தனை போகுது?" ஷான், "வந்தனா சொன்ன மாதிரி ரெகுலரா வாரத்துக்கு இத்தனைன்னு சொல்ல முடியாது" கிரிஸ்டஃபர், "ஸோ என்ன பண்ணலாம்? ரெண்டு வருஷம் எல்லாம் பொறுத்துட்டு இருக்க முடியாது" வந்தனா, "அதையே தான் நானும் சொல்றேன். அவங்களுக்கு ஆர்டர் வந்து அவங்க அனுப்பும் வரை நாம் வெயிட் பண்ணாம நாமே ஏன் அவங்களுக்கு ஆர்டர் கொடுக்கக் கூடாது?" அந்த அறையில் சில நிமிடங்கள் அமைதி குடி கொண்டது. கிரிஸ்டஃபர், "எப்படி?" வந்தனா, "எதாவுது ஒரு பொருளுக்கோ அல்லது வலை தளத்துக்கோ நமக்கு தெரிஞ்ச யார் மூலமாவுது அவங்களுக்கு விளம்பர ஈமெயில் அனுப்ப ஆர்டர் கொடுப்போம். நமக்கு வெவ்வேறு மெஸ்ஸேஜஸ் கிடைக்கும். கூடவே அவங்களை அணுக அவங்க உபயோகிக்கும் முறையையும் நாம் இன்வெஸ்டிகேட் பண்ணி அவங்களை பிடிக்க முடியுமான்னு பார்க்கலாம். After all, அந்த சர்வரை எதுக்கு கண்டு பிடிக்கணும்? அதை கன்ட்ரோல் செய்யறவங்களை பிடிக்கத்தானே?" முரளீதரன், "Greate Vanthana! இது தான் போலீஸ் புத்தி!"கிரிஸ்டஃபர், "சுலபமா பண்ணலாம். துப்பறியறதுக்காக எஃப்.பி.ஐ மற்றும் ஸீ.ஐ.ஏவை சேர்ந்த நிறைய பினாமி கம்பெனிகள் இருக்கு. அந்த கம்பெனிகள் கொடுத்தது போல் விளம்பர ஈமெயிலுக்கான ஆர்டர்களை கொடுக்கலாம்" ஷான், "சரி, இந்த மாதிரி முறையில உங்களுக்கு தேவையான அளவுக்கு விளம்பர ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ்கள் கிடைக்கும். தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஆணைகள் அத்தனைக்கு எங்கே போவீங்க?" தீபா, "எங்களுக்கு நூறு கணிணிகள் வேணும். எங்களுக்கு உதவறதுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் வேணும்" முரளீதரன், "ஒவ்வொரு கணிணியிலும் வைரஸ்ஸை புகுத்தி அதன் மெஸ்ஸேஜை டாம்பர் பண்ணப் போறீங்களா?" தீபா, "ஆமா, எங்க கணிப்பில் ஒரே நாளில் நூறு கணிணிகளிலும் மெஸ்ஸேஜ் டேம்பர் செய்யணும். அப்ப அடுத்த நாள் நூறு கணிணிக்கும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரும்" சான்ட்ரா, "ஏன் ஒரே நாளில் அவ்வளவு கணிணிகளில் டேம்பர் பண்ணனும்?" வந்தனா, "சில கணிணிகளை வெச்சு பல நாட்களில் தினம் தினம் அவைகளின் இணைய விலாசங்களை மாற்றி செய்யலாம்ன்னுதான் நாங்க முதலில் நினைச்சோம். ஆனா, இவ்வளவு நூதனமான ஒரு பாட் நெட்டை உருவாக்கினவங்க நிச்சயம் இந்த மாதிரி மெஸ்ஸேஜ் போறதை கண்காணிச்சுட்டு இருப்பாங்கன்னு தோணுது. யாரோ வேணும்ன்னே டாம்பர் பண்ணறாங்கன்னு அவங்களுக்கு தெரியும். ஒண்ணு ரெண்டு நாளில் நாம் என்ன செய்ய முயற்சிக்கறோம்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சுதுன்னா உடனே சுதாரிச்சுட்டு அந்த மாதிரி ஒரு மெஸ்ஸேஜ் போறதை நிறுத்தக் கூடும் இல்லையா? ஒரே நாளில் செய்யும் பொது நூறு மெஸ்ஸேஜும் போனதுக்கு அப்பறம்தான் அவங்களுக்கு தெரியும்" கேட்டுக் கொண்டு இருந்த அனைவரும் சற்று மலைத்து அமர்ந்து இருந்தனர். முரளீதரனின் முகத்தில் அளவிலா பெருமிதம். ஷான், "God, you girls really think big!" கிரிஸ்டஃபர், "சரி, நூறு கணிணிகளையும் நீங்க ஏழு பேர் எப்படி ஆபரேட் பண்ணப் போறீங்க. ?" வந்தனா, "நாங்களே உக்காந்து டாம்பர் பண்ணப் போறது இல்லை. டாம்பர் பண்ணறதுக்கு ஒரு மென் பொருள் எழுதப் போறோம். அந்த மென்பொருளை நூறு கணிணிகளில் புகுத்தப் போறோம். வைரஸ் அனுப்பும் மெஸ்ஸேஜ்களை நாங்க குறிப்பிடும் நாளில் எங்க மென் பொருள் டாம்பர் செய்யும். எங்களுக்கு இந்த வேலையில் உதவறதுக்குத்தான் அந்த டீம்" சான்ட்ரா, "வாவ்!" கிரிஸ்டஃபர், "சர், உங்களுக்கு விளம்பர ஈமெயிலுக்கான சில நூறு மெஸ்ஸேஜ்களும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட்டுக்கான நூறு மெஸ்ஸேஜ்களும் கிடைக்குது. அதுக்கு அப்பறம்?" வந்தனா, "அதுக்கு அப்பறம்தான் ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. அதுக்கு எங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த கணிணியும் பாட்டர்ன் மாட்சிங்க் அல்காரிதம் எல்லாம் தெரிஞ்ச சிலரின் உதவியும் வேணும்" ஷான், "எதுக்கு?" வந்தனா, "இந்த மெஸ்ஸேஜ்களை எல்லாம் சேர்த்து வைத்து அவைகளை வெவ்வேறு முறைகளில் ஒரு மென் பொருள் மூலம் அனலைஸ் பண்ணி அவங்களோட சங்கேத முறையை கண்டு பிடிக்க. அப்படிப் பட்ட ஒரு மென்பொருளை எங்களால் எழுத முடியாது" கிரிஸ்டஃபர், "சரி, நான் விசாரிக்கறேன். முரளி, உங்களுக்கு அப்படிப் பட்டவங்க யாராவுது தெரியுமா?" தீபாவும் வந்தனாவும் ஒன்று சேர்ந்து மனதுக்குள், 'அந்த மாதிரி ஆளுங்க ரெண்டு பேரை எனக்கு தெரியும். ஆனா ரெண்டும் இப்ப இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதிட்டு இருக்குங்க' என்று நித்தினையும் சக்தியையும் திட்டினர். முரளீதரன், "நிச்சயம் ஐ.ஐ.டிகளில் யாராவது இருப்பாங்க. பிரச்சணை இல்லை அரேஞ்ச் பண்ணலாம்" கிரிஸ்டஃபர், "Great Team India! முரளி, ஊருக்கு போனதும் எனக்கு ஒரு டீடெயிலான செயல் திட்டம், முடிஞ்ச வரை நாள், தேதியோட தயாரிச்சு எனக்கு அனுப்புங்க. இவங்க கேட்டது எல்லாம் அரேஞ்ச் பண்ண நான் எஃப்.பி.ஐயில் இருந்து பணம் ஒதுக்கறேன். அதுக்கப்பறம் உடனே நீங்க உங்க வேட்டையை தொடங்கலாம். இப்ப என்னோட லஞ்ச் சாப்பிட வாங்க" என்றவாறு முடித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு மதிய உணவுக்கு ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்றார்.சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் வந்தனா, "கிரிஸ், எனக்கு ஒரு சந்தேகம்" கிரிஸ்டஃபர், "ப்ளீஸ் கோ அஹெட் ..." வந்தனா, "நம் நோக்கம் என்ன? மாங்க்ஸ் பாட் நெட்டை கைபற்றி அதை உருவாக்கினவங்களை கைது செய்வதா?" ஷான், "அவங்களை கைது செய்வது நடக்காத காரியம். ஒரு சட்ட விரோதமான செயலிலும் ஈடு படாதவங்களை என்னன்னு பிடிக்கறது?" கிரிஸ்டஃபர், "இல்லை ஷான், தவறான வழியில் உபயோகிக்க கூடிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் தேச துரோகிகள் கையில் சிக்காமல் அரசாங்கத்தில் மேற்பார்வைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இருக்கு. மாங்க்ஸ் பாட் நெட் கெட்டவங்க கைக்கு போனா இருக்கும் அபாயத்தை கருதி அந்த சட்டத்தை பயன் படுத்தலாம்" முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட்டின் சர்வர் அமெரிக்காவுக்கு வெளியில் இருந்தா? அல்லது அதை க்ண்ட்ரோல் பண்ணறவங்க அமெரிக்கர்களா இல்லாமல் இருந்தா?" கிரிஸ்டஃபர், "முரளீ, ஐ.நா சபையின் சைபர் க்ரைம் பிரிவு அமெரிக்காவோட கைப் பொம்மை அப்படிங்கறது உனக்கு தெரிஞ்ச விஷயம்தானே? இன்டர்போல் மூலம் மாங்க்ஸ் பாட் நெட்டை நம் மேற்பார்வைக்கு கொண்டு வரலாம்" தீபா, "அவங்க அதுக்கு ஒத்துக்கலைன்னா? அவங்க லீகலா மூவ் பண்ணினா?" முரளீதரன், "அவளோட அப்பா இந்தியாவில் ஒரு பெரிய லாயர்" என்று கிண்டலடித்தார் ஷான், "காட்! அது வேறயா?" என்க எல்லோரும் சேர்ந்து சிரித்தனர் ... கிரிஸ்டஃபர், "தீபா, நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது. ஒரு நல்ல லாயரை பிடிச்சு அரசாங்கத்தின் மீது கேஸ் போட்டா அரசாங்கத்தினால் ஒண்ணும் பண்ண முடியாது. பேச்சு வார்த்தையில் தான் அவங்களை நம் வழிக்கு கொண்டு வரணும். அல்லது அவங்களுக்கு பணம் கொடுத்து இதை விலைக்கு வாங்கணும். ஷான், "சோ, உண்மையில் அவங்க பணம் சம்பாதிக்க நாம் இப்ப உதவிட்டு இருக்கோம்." வந்தனா, "அப்படி மட்டும் ஏன் பார்க்கறீங்க ஷான்? இந்த மாங்க்ஸ் பாட் நெட் அரசாங்கத்தின் கையில் அல்லது மேற்பார்வையில் இருந்தா இதை நிறைய நல்ல விதத்திலும் உபயோகிக்கலாம்" கிரிஸ்டஃபர், "எப்படி?" வந்தனா, "இந்த மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் எந்த கணிணியையும் ஒரே இடத்தில் இருந்த படி எந்த வேலை வேணும்னாலும் செய்ய வைக்கலாம். இந்த ஒரு திறமையை மட்டும் வெச்சு யாராலையும் ஊடுருவ முடியாத ஒரு தகவல் பரிமாற்றத்தை உருவாக்கலாம் இல்லையா? ரொம்ப செக்யூரா இருக்கும். தீவிரவாதிகளும் ஒற்றர்களும் கண்டு பிடிக்க முடியாத படி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்" கிரிஸ்டஃபர், "யூ ஆர் ரைட்! கொடுக்கற காசுக்கு நிறையவே சாதிக்கலாம்" தீபா, "அதாவது அவங்க உங்ககிட்ட மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுக்க ஒத்துகிட்டா!" முரளீதரன், "விட்டா நீயே உன் அப்பாவை அவங்களுக்கு லாயரா இருக்க வைப்பே மாதிரி இருககே" தீபா, "இல்லை சார், எப்ப ஹார்ஷ்7 இதில் இன்வால்வ் ஆகி இருக்கார்ன்னு தெரிஞ்சுதோ அப்ப இருந்தே எனக்கு அவங்க நாம் சொல்றது எதுக்கும் ஒத்துக்க மாட்டாங்கன்னு தோணுது" முரளீதரன், "ஏன் அப்படி சொல்றே?" தீபா, "யாரையும் நம்பாத ஆள் ஹார்ஷ்7. ஒண்ணு சொல்லுங்க சார், அரசாங்கம் அப்படின்னா என்ன? உங்களை போன்ற அதிகாரிகள் சேர்ந்த அமைப்புதானே அது? அதில் எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்? ஒப்படைத்த பிறகு அரசாங்கத்தை சேர்ந்த ஒருவரே இதை கெட்ட வழியில் பயன் படுத்த மாட்டான்னு என்ன நிச்சயம்?" கிரிஸ்டஃபர், "நீ சொல்வது நூத்துக்கு நூறு உண்மை. அப்ப என்னதான் செய்யணும்?" வந்தனா, "அவங்க எப்படிப் பட்டவங்கன்னு பாத்துட்டு அவங்க கிட்டயே விட்டுடணும். முடிஞ்சா அவங்ககூட இருந்து அந்த மாங்க்ஸ் பாட் நெட்டின் செயல்களை கண்காணிக்க சிலரை நியமிக்கணும்" முரளீதரன், "நீ சொல்றதும் சரிதான்"அடுத்த நாள் காலை அவர்களது அறையின் கதவு தட்டப் பட்டது தூக்கக் கலக்கத்துடன் கதவை திறந்த தீபா, "ஹாய் சஞ்சனா" அறைக்குள் நுழைந்த சஞ்சனா, "தூங்கு மூஞ்சி .. இன்னும் படுக்கையில் இருந்து எந்திரிக்கலையா? வந்தனா எங்கே?" தீபா, "வந்தனா குளிச்சுட்டு இருக்கா" சஞ்சனா, "நீங்க ரெண்டு பேரும் போரடிச்சுட்டு இருப்பீங்கன்னு உங்க கூட இருக்க நான் வந்து இருக்கேன்" தீபா, "ஜாஷ்வா வரலை?" சஞ்சனா, "மூணுக்கும் மந்த் எண்ட் வேலை! எங்க ஆளுக்கு அவன் பேங்கில் உங்க ஆளுங்களுக்கு அவங்க இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில். நாம் மூணு பேரும் நியூ யார்க்கை ஒரு கலக்கு கலக்கலாம் வாங்க" மாலை வரை தந்தையர் கொடுத்து இருந்த க்ரெடிட் கார்டின் வரம்பு வரை செலவு செய்து குடும்பத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பொருட்கள் வாங்கி குவித்தனர். ஏழு மணிக்கு அவர்களை ஹோட்டலில் விட்டு சஞ்சனா விடைபெற்றாள். மாலை எட்டு மணியளவில் தோழிகள் இருவரும் பல முறை தங்களது காதலர்களை அவர்கள் கைபேசியில் அழைத்தும் பதில் இல்லாமல் போக பெரும் கோபத்தில் இருந்தனர். அந்த ஹோட்டலிலேயே முந்தைய தினம் இரவு அறை எடுத்து இருந்த முரளீதரன் அவர்களை லாபியில் இருந்து அழைக்க வேண்டா வெறுப்புடன் அறையை காலி செய்து முரளீதரனுடன் விமான நிலையத்தை நோக்கி பயணித்தனர்.
விமான நிலையத்தில் போர்டிங்க் பாஸ் எடுக்கும் க்யூவில் நின்று கொண்டு இருந்த போது நித்தினும் சக்தியும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு அருகே வந்த இருவரும், "ஹாய், சாரி லேட்டாயிடுச்சு" என்று வழிந்தனர். முரளீதரன் தான் இருப்பதால் வந்த சங்கடத்தில் நெளிந்த தோழிகளிடம், "நான் க்யூவில் நின்னுட்டு இருக்கேன். நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிட்டு வாங்க. க்யூ நகர இன்னும் பதினைந்து நிமிஷமாவுது ஆகும்" என்று அவர்களை அனுப்பினார். இரு ஜொடிகளும் இருபுறம் சென்றதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தார். ~~~~~~~~ தீபா, "பேசாதே போ!" நித்தின், "அதான் சாரின்னு சொன்னேன் இல்லை" தீபா, "உனக்கு இப்பத் தான் நேரம் கிடைச்சுதா?" நித்தின், "ஏய், ஐ செட் சாரி..." தீபா, "போய் உன் இன்ஸ்யூரன்ஸையே கட்டிட்டு அழு. உனக்காக காலையில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எத்தனை தடவை உன் செல்லில் கூப்பிட்டேன். ஒரு தடவையாவுது ஆன்ஸர் பண்ணினயா. உனக்கு என் மேல ...." அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அவளை இழுத்து அணைத்த நித்தினின் உதடுகள் அவளது இதழ்களை சிறை பிடித்து இருந்தன. பிறகு அணைத்தபடி அவர்களின் பேச்சு சகஜ நிலையில் தொடர்ந்தது. ~~~~~~~~~~~~~~
வந்தனா, "ஏன் இவ்வளவு லேட்? சீக்கிரம் வந்து இருக்கலாம் இல்லை?" சக்தி, "சாரி டியர். வேலை இருக்கும்ன்னு சொன்னேன் இல்லையா?" வந்தனா, "சொன்னேதான். ஏழு மணிக்காவுது நீ வந்து இருக்கலாம்" சக்தி, "சாரி ... இருக்கும் சில நிமிடங்களை வேஸ்ட் பண்ண வேண்டாம்" அருகில் வந்தவனின் கைகள் அவள் இடையை வளைத்து தூக்க அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்து இதழோடு இதழ் சேர்த்தனர். சில நிமிடப் பேச்சுக்கு பிறகு மறுபடி க்யூவை நோக்கி இருவரும் நடந்தனர். ~~~~~~~~~~~ க்யூவை அடைந்த தன் டீம் மெம்பர்கள் இருவரும் அவர்களுடன் இருந்த ஆடவர்களிடம் கண்களால் பகிர்ந்து கொண்ட அன்னியோன்னியத்தை முரளீதரன் கவனித்தார்.Monday, 1 Sep 2008 9:00 AM A conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள் செப்டம்பர் 1 2008 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி சுற்றி இருந்த நாற்காலிகளில் ஜாயிண்ட் டைரக்டர், வந்தனா, தீபா மற்றும் ஒரு தலை சிறந்த கல்லூரியில் கணிதப் பேராசிரியரான ப்ரொஃபெஸ்ஸர் கே.எஸ்.சாரி அவர்களும் அமர்ந்து இருந்தனர். முரளீதரன் மாங்க்ஸ் பாட் நெட்டைப் பற்றி ஒரு ப்ரஸெண்டேஷன் மூலம் விளக்கினார். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முரளி, Let me summarise what you said so far. Correct me where I am wrong, இந்த மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா அதை உருவாக்கினவங்க அப்படி இதுவரை செய்யலைன்னாலும் செய்யக் கூடும் என்ற அபாயம் கருதி அமெரிக்க அரசாங்கம் அதை கைப் பற்றணும்ன்னு முடிவெடுத்து இருக்கு. அதற்கு நாம் உதவப் போறோம். இல்லையா?" முரளீதரன், "எஸ், நீங்க சொல்றது ஓரளவு சரி. இதுவரை எந்த சட்ட விரோத செயலையும் பணத்துக்காக செய்யலைன்னு சொல்லலாம். அதே சமயம் அவங்க இதுவரை நடந்துகிட்ட விதத்தை வெச்சு அவங்க எப்படி பட்டவங்களா இருக்கக்கூடும்ன்னு மனோதத்துவ முறைப் படி ஆராய்ந்ததில் எந்த வெறித்தனமா சட்ட விரோத செயலிலும் ஈடுபட மாட்டாங்கன்னு தோணுது" ஜாயிண்ட் டைரக்டர், "அப்பறம் எதுக்கு அவங்க இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு பாட் நெட்டை உருவாக்கணும்?" முரளீதரன், "எஃப்.பி.ஐயின் யூகம், which I concur, என்னன்னா, அவங்க அதை உருவாக்கும் போது எதுக்கு பயன் படுத்தணுன்னு நினைச்சு உருவாக்கலை. அவங்களோட கண்டுபிடிப்பு ஒரு அளவுக்கு accidentalன்னு (எதேட்சையா நடந்ததுன்னு) சொல்லலாம். கண்டு பிடிச்ச பிறகுதான் அவங்களுக்கே அதன் ஆற்றலைப் பற்றி புரிஞ்சு இருக்கு. ஆனால் அதை சட்ட விரோதச் செயலுக்கு பயன் படுத்த விரும்பலை. இருந்தாலும் தங்களோட கண்டு பிடிப்பை ஹாக்கர்கள் மத்தியில் சொல்லி பெருமை பட்டு இருக்காங்க" ஜாயிண்ட் டைரக்டர், "எப்படி விளம்பர ஈமெயில் அனுப்பறதைத் தவிர பணத்துக்காக எந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபடலைன்னு சொல்றீங்க?" முரளீதரன், "எஃப்.பி.ஐ அவங்களை மறைமுகமா பல முறை அணுகி பாத்து இருக்கு. விளம்பர ஈமெயில் அனுப்புவதை தவிர வேற எதற்க்கும் அவங்க ஒத்துக்கறது இல்லை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, “எப்படி அவங்களை அணுகறது?” முரளீதரன், “monks2006@gmail.com அப்படிங்கற அவர்களின் ஜீமெயில் ஐடி மூலம்” ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ், அவங்களுக்கு மெயில் ஐ.டி இருக்குன்னா, அந்த மெயில் பாக்ஸை எந்த இணைய விலாசத்தில் இருந்து உபயோகிக்கறாங்கன்னும் கூகிள் நிறுவனத்தின் மூலமே தெரிஞ்சுக்கலாமே?" முரளீதரன், "இல்லை ப்ரோஃபெஸ்ஸர், இந்த மெயில் அக்கௌண்டை அவங்க வீட்டில் இருந்தோ அலுவலகத்தில் இருந்தோ ஓபன் பண்ணற அளவுக்கு அவங்க முட்டாள்களா இருக்க மாட்டாங்க. எதாவுது இன்டர்நெட் பார்லரில் இருந்து ஓபன் பண்ணி பாத்து பதில் போடுவாங்க. எந்த ஊர், எந்த நாடு எதுவும் சொல்ல முடியாத நிலையில் அந்த கோணத்தில் ஆராய்ந்தால் ஒரு பயனும் இல்லைன்னு விட்டுட்டாங்க. அது மட்டும் இல்லை மனித உரிமை சட்டம் அமெரிக்காவில் ரொம்ப ஸ்ட்ராங்க். அரசாங்கம் ஒரு மெயில் ஐடியின் போக்குவரத்தை அந்த மெயில் ஐடியின் உரிமையாளருக்கு தெரியாமல் கண்காணிக்கணும்ன்னா அதுக்கு தகுந்த கோர்ட் ஆர்டர் வேணும். அவங்க அரசாங்கத்துக்கு எதிரா செயல் படக்கூடும் அப்படிங்கறதுக்கு தகுந்த ஆதாரங்களோட அணுகினால்தான் கோர்ட்அதற்கான ஆர்டர் கொடுக்கும். இது எல்லாத்துக்கும் மேல், இவ்வளவு திறமையோட செயல்படறவங்க அந்த ஐ.டியை ஒரு நிஜமான நபரின் பெயரில் தொடங்கி இருக்க மாட்டாங்க. இல்லையா“ ப்ரொஃபெஸ்ஸர் சாரி, “இருந்தாலும் கோர்ட் ஆர்டர் வாங்கறது முடியாத ஒரு செயலா என்ன?” முரளீதரன், “முடியும். இல்லைன்னு சொல்லலை. ஆனா அது ஒரு பெரிய ப்ராஸஸ். அதனால எஃப்.பி.ஐ இதுவரை அதை செய்யலை. ஆனா, இப்ப மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு கிடைத்து இருக்கும் மோசமான விளம்பரத்தினால் எளிதா கோர்ட் ஆர்டர் வாங்கி கூகிள் நிறுவனத்தை அணுக முடியும்." ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி, மேல சொல்லுங்க நீங்க எப்படி கண்டு பிடிக்கப் போறீங்க? எங்கே என் உதவி தேவை?" முரளீதரன், "வந்தனா, You please continue .. ." வந்தனா அவர்கள் இதுவரை கண்டு பிடித்ததையும் அவர்களது செயற்திட்டத்தையும் விளக்கினாள். முடிவில், "Let me summarize. மாங்க்ஸ் பாட் நெட் சர்வரில் இருந்து வரும் ஆணைகளில் அதன் இணைய விலாசம் புதைந்து இருக்கு. சர்வரில் இருந்து வரும் மெஸ்ஸேஜ்களை பிரிச்சு எடுத்து ஆராய்ந்து அந்த இணைய விலாசத்தை கண்டு பிடிக்கணும். கூடவே அவங்களுக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவங்களுக்கு கொடுக்கும் போதும் அவங்களை நேரடியா அணுக முடியுதான்னு பார்க்கணும். எங்க ஆக்க்ஷன் ப்ளானை நான் மூணு மேஜர் ஸ்டெப்ஸா பிரிச்சு இருக்கேன். ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் எவ்வளவு நாள் தேவைன்னுநாங்க கணித்ததையும் கொடுத்து இருக்கேன்" என்ற படி அடுத்த ஸ்லைடைக் காட்டினாள் 1. ஈமெயில் விளம்பரங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து மாங்க்ஸ் சர்வரில் இருந்து வரும் ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை பிரித்து எடுத்து சேமிப்பது. இதே கட்டத்தில் ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவங்களுக்கு கொடுக்கும் போதும் அவங்களை நேரடியா அணுக முடியுதான்னு பார்க்கற வேலையை எஃப்.பி.ஐ செய்ய ஒத்துகிட்டு இருக்காங்க. .... மூன்று மாதங்கள் .... செப்டெம்பர் 1 2008 முதல் நவம்பர் 28 வரை 2. நூறு கணிணிகளில் மாங்க்ஸ் வைரஸை புகுத்தி அவைகளின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை சர்வரில் இருந்து வரவழைத்து அவைகளை பிரித்து எடுப்பது. ..... ஒரு மாதம் ... டிஸம்பர் 2008 முழுவதும் 3. ஈமெயில் விளம்பரம் அனுப்ப வந்த ஆணைகளையும், தன்னை தானே அழித்துக் கொள்ள வந்த ஆணைகளையும் ஒன்றாக சேர்த்து அவைகளில் புதைந்து இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை ஆராய்ந்து கண்டு பிடிப்பது .... மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம் ... இதை இப்போதைக்கு சரியாக கணிக்க முடியாது" 4. ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வந்தனா நானும் என் டீமும் எந்த ஸ்டெப்பில் முழுசா இன்வால்வ் ஆகணும்?" வந்தனா, "கடைசி ஸ்டெப் முழுக்க முழுக்க உங்களுதுதான் சார். அந்த ஸ்டெப்புக்கு தேவையான அளவுக்கு எங்களுக்கு தெரியாது. பட், மத்த ஸ்டெப்ஸ்லயும் வாரத்துக்கு ஒரு தடவை நீங்களும் முரளி சார்கூட சேர்ந்து ரிவ்யூ பண்ணினா நல்லா இருக்கும்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஓ.கே. டன்! ஆனா முரளி, அவங்களை அணுக இருக்கும் ஒரே வழி அவங்க ஜீமெயில் ஐ.டி. கூகிள் நிறுவனத்தின் உதவியோட அவங்களை கண்டு பிடிக்க முடியுமான்னு இன்னும் தீவிரமா முயற்சி செய்யணும்ன்னு எனக்கு தோணுது. அப்படி முடியும்ன்னா வந்தனா, நீ சொன்ன மத்த எதுவும் தேவை இல்லை. சரியா?" வந்தனா, "எஸ் ப்ரொஃபெஸ்ஸர்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முதலில் ஏன் ஈமெயில் விளம்பரத்துக்கான் ஆர்டர் கொடுத்து சர்வரில் இருந்து வரும் ஆணைகளை பிரித்து எடுக்க மூணு மாசம் தேவைன்னு போட்டு இருக்கே?" வந்தனா, "நமக்கு குறைஞ்சசு முந்நூறு மெஸ்ஸேஜ்களாவுது தேவை. ஒரே நாளில் நிறைய ஆர்டர் கொடுக்க முடியாது. கொடுத்தா சந்தேகப் படுவாங்க. அதனால வாரத்துக்கு ரெண்டு அல்லது மூணு ஆர்டர்ன்னு கணக்கு பண்ணி இருக்கேன். நாம் கொடுப்பதை தவிர அவங்களுக்கு வாரத்துக்கு ஒரு ஆர்டராவுது வருது. அதையும் சேர்த்து முந்நூறுன்னு கணக்கிட்டு இருக்கேன்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, நீ போட்ட ப்ளானில் இருந்து ரொம்ப விலகாம ஒரு காரியம் செய்யலாம். உன் ப்ளான் படி முதலில் அவங்களுக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை கொடுக்கப் போறோம். அப்படி ஆர்டர் கொடுக்கறதுக்கு முன்னால் கூகிள் நிறுவனத்தை அணுகி அந்த ஐ.டியின் மெயில் போக்குவரத்து அனைத்தையும் நம்மிடம் அவங்க பகிர்ந்து கொள்ளணும்ன்னு அவங்களுக்கு ஒரு கோர்ட் ஆர்டர் கொடுக்க வைக்கணும். அப்படி ஒரு ஆணை தயாராக கொஞ்ச நாள் ஆனாலும் பரவால்லை. முதலில் கூகிள் நிறுவனம் ஒத்துகிட்டத்துக்கு அப்பறம் மாங்க்ஸ் ஜீமெயில் ஐடிக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை கொடுக்க சொல்லலாம். எஃப்.பி.ஐ கொடுக்கும் ஒவ்வொரு ஆர்டர் தொடர்பான மெயில் போக்குவரத்தையும் நாம் கண்காணிக்கலாம். கூடவே அந்த ஆர்டர்களினால் சர்வரிடம் இருந்து வரும் மெஸ்ஸேஜ்களையும் பிரிச்சு எடுத்து சேர்க்கலாம். அவங்க எந்த இணைய விலாசத்தில் இருந்து ஈமெயில்களை படிக்கறாங்கன்னு ஓரளவுக்கு க்ளூ கிடைச்சதும் அவங்க யார்ன்னு எளிதா கண்டு பிடிச்சுடலாம்" முரளீதரன், "வந்தனா, தீபா, ப்ரொஃபெஸ்ஸர் சொல்றது சரி. நான் முதலில் கூகிள் நிறுவனத்திடம் இருந்து ஒப்புதல் வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணறேன். அதுவரைக்கும் நீங்க ஆபரேஷனை ஆரம்பிக்க வேண்டாம்" தீபா, "அதுக்கு எவ்வளவு நாள் ஆகும் சார்?" முரளீதரன், "தெரியலை தீபா. என் கணிப்புப் படி ரெண்டு மூணு வாரம் ஆகலாம்" வந்தனா, "சரி சார்" என்றாலும் டிஸம்பர் இறுதியில் இருந்து ஜனவரி முதல் இரண்டு வாரங்கள் வரை லீவ் எடுக்க வேண்டியதை மனதில் கணக்கிட்டாள். முரளீதரன், "பட், நீங்க கேட்ட மத்ததுக்கு ஏற்பாடு பண்ணறேன். நீங்க இரண்டாவதா செய்யறதா இருந்த அந்த மெஸ்ஸேஜ் டாம்பர் செஞ்சு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை வரவழைக்கறதை முதலில் ஏன் செய்யக் கூடாது?" வந்தனா, "முடியாது சார். ஒரே நாளில் நூறு ஆணைகள் சர்வரில் இருந்து போறதை அவங்க பாத்த உடனே சுதாரிச்சுக்குவாங்க. அதுக்கு அப்பறம் என்ன செய்வாங்கன்னு நம்மால யூகிக்க முடியாது. நிச்சயம் கொஞ்ச நாள் அவங்க மாங்க்ஸ் பாட் நெட்டை நிறுத்தி வைப்பாங்க. ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை அவங்க எடுத்துப்பாங்களாங்கறது சந்தேகம். ஆனா, நமக்கு அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை மெஸ்ஸேஜ்களுடன் ஈமெயில் விளம்பரத்துக்கான முந்நூறு ஆணைகளுக்கான மெஸ்ஸேஜ்களும் தேவை. அதனால் அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்கறதை ரெண்டாவதாதான் செய்ய முடியும்" தீபா, "இல்லை வந்தனா. ரெண்டாவுது ஸ்டெப்பில் இருக்கும் எல்லா வேலைகளையும் இப்போ செய்ய முடியாது. ஆனா சில வேலைகளை செய்ய முடியும். இப்போ இருந்து ஒரு நாளைக்கு ஒரு டாம்பர் செஞ்சு அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை எப்படி பிரித்து எடுப்பதுன்னு ஆராயலாம். கூடவே இந்த ஸ்டெப்புக்கு தேவையான மென்பொருள்களை எழுதலாம். இந்த ரெண்டு வேலைகளை முடிக்க நமக்கு எப்படியும் ரெண்டு மூணு வாரம் ஆகும். அந்த வேலைகள் எல்லாம் முடிச்சுட்டா நூறு கணிணிகளையும் ஒரே சமயத்தில் டாம்பர் செய்யறது, மாங்க்ஸ் சர்வரில் இருந்து வரும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை பிரிக்கறது இதெல்லாம் ரெண்டு மூணு நாளில் முடிச்சுடலாம்.
ஏன்னா அதெல்லாம் ஆடோமாட்டிக்கா மென்பொருள் மூலம் செய்யற வேலைகள்வந்தனா, "அப்படின்னா அந்த ரெண்டாவதா ஸ்டெப்பை செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்க தேவையான் ஏற்பாடுகள் செய்வது, செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்கறது அப்படின்னு ரெண்டா பிரிச்சுக்கலாம்" என்ற படி தன் பவர் பாயிண்டில் கீழ்கண்ட் மாற்றங்களை செய்தாள். மனதுக்குள் தனக்கு டிசம்பர் இறுதியில் தேவையான மூன்று வாரங்களை கழித்து கணக்கிட்டு எழுதினாள். 1. தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து வரவழைக்க தேவையான் ஏற்பாடுகள் செய்வது ... மூன்று வாரங்கள் .... செப்டெம்பர் 1 2008 முதல் செப்டெம்பர் 19 2008 வரை 2. ஈமெயில் விளம்பரங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து சர்வரிடம் இருந்து வரும் ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை பிரித்து எடுத்து சேமிப்பது. எஃப்.பி.ஐ மூலம் ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவர்களுக்கு கொடுக்கும் போதும் அவர்களை நேரடியா அணுக முடிகிறதா என்று பார்க்கின்ற வேலை.... மூன்று மாதங்கள் ... செப்டெம்பர் 22 2008 முதல் டிசம்பர் 19 2008 வரை 3. நூறு கணிணிகளில் வைரஸ்ஸை புகுத்தி அவைகளின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை சர்வரில் இருந்து வரவழைத்து அவைகளை பிரித்து எடுப்பது. .... அதிக பட்சம் ஐந்து நாட்கள் ... டிசம்பர் 22 2008 முதல் டிசம்பர் 26 2008 வரை 4. ஈமெயில் விளம்பரம் அனுப்ப வந்த ஆணைகளையும், தன்னை தானே அழித்துக் கொள்ள வந்த ஆணைகளையும் ஒன்றாக சேர்த்து அவைகளில் புதைந்து இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை ஆராய்ந்து கண்டு பிடிப்பது .... அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் ... முரளீதரன், "எக்ஸலெண்ட். நீங்க அந்த நூறு கணிணிகளையும் டாம்பர் செய்யறதை டிசம்பர் 24 தேதி அன்னைக்கு பண்ணுங்க. அடுத்த ஒரு வாரம் அமெரிக்காவில் எல்லாரும் லீவில் போவாங்க. ஒரு வேளை நம் மாங்க்ஸ் சூத்திரதாரிகள் அமெரிக்கர்களா இருந்தா ஒரு வாரத்துக்கு சர்வரை கண்காணிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கு" தீபா, "வாவ்! முரளி சார்!! பரவால்லை சார் உங்களுக்கும் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கு" ஜாயிண்ட் டைரக்டர் முறைக்க மற்றவர் அனைவரும் சிரித்தனர். முரளீதரன் ஜாயிண்ட் டைரக்டரிடம், "கண்டுக்காதீங்க சார். என் டீமில் எல்லாரையும் நான் என்னையே கிண்டல அடிக்க விடுவேன். அந்த சலுகையை முழுக்க பயன் படுத்திக்கற ஒரே ஆள் தீபா" அன்றில் இருந்து வந்தனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இணைய விலாசம் கொண்ட ஒன்று இரண்டு கணிணிகளில் மாங்க்ஸ் வைரஸ்ஸை புகுத்தி அவற்றின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து அடுத்த நாள் வரும் ஆணைகளை எப்படி பிரித்து எடுப்பது என்று ஆராயத் தொடங்கினாள். தீபா மென்பொருள் எழுதுவதில் மூழ்கினாள்.Sunday, 7 September 2008 11:30 AM Joshua's Flat, New York, USA செப்டெம்பர் 7 2008, காலை 11:30 மணி ஜாஷ்வாவின் இல்லம், நியூ யார்க் ஜாஷ்வா, "என்ன சக்தி, ஒரு வாரமா வந்தனா நினைப்பாவே இருக்கா?" சக்தி, "ம்ம்ம் ... ஆமா. ஆனா கூட கடுப்பாவும் இருக்கு" ஜாஷ்வா, "ஏன்?" நித்தின், "அவங்க ஊருக்கு போன ரெண்டு நாளில் இருந்து தினம் ஒண்ணு ரெண்டு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து போயிட்டு இருக்கு" ஜாஷ்வா, "பொண்ணுங்க அவங்க வேலையை தொடங்கிட்டாங்க! சரி, அவங்க என்ன செய்யறாங்கன்னு கண்டு பிடிச்சீங்களா?" சக்தி, "ம்ம்ம் ... அவங்க கணிணியில் இருந்து போற மெஸ்ஸேஜ்ஜை டாம்பர் செய்யறாங்க" ஜாஷ்வா, "சோ, அவங்களால் இப்ப மாங்க்ஸ் வைரஸ்ஸின் மெஸ்ஸேஜ் போக்கு வரத்தை அந்த கணிணியின் மத்த மெஸ்ஸேஜ்களில் இருந்து தனியா பிரிச்சு எடுக்க முடியுது. இல்லையா?" நித்தின், "ஆமா .. " ஜாஷ்வா, "அடுத்ததா என்ன செய்வாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?" சக்தி, "நம்மை, மாங்க்ஸ் சர்வரை அடையாளம் கண்டு பிடிப்பதுதான் அவங்களோட குறிக்கோள் இல்லையா?" ஜாஷ்வா, "ஆமா" சக்தி, "சோ, மெஸ்ஸேஜஸ்ல இருக்கும் சர்வரோட ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்க என்ன வழின்னு பார்ப்பாங்க" நித்தின், "அதாவது நம் மெஸ்ஸேஜஸுக்குள்ள ஐ.பி அட்ரெஸ் இருக்குன்னு அவங்க நினைச்சா" ஜாஷ்வா எழுந்து கிச்சனுக்கு சென்று அங்கிருந்து, "Beer ... anybody?" என்று கூப்பிட்டான் சக்தியும் நித்தினும் எழுந்து கிச்சனுக்கு சென்றனர். சக்தி ஃப்ரிட்ஜில் இருந்த பியர் கேனை எடுத்து உடைத்தவாறு, "நம் ஆளுங்களை அவ்வளவு கம்மியா எடை போடாதே. நிச்சயம் அப்படி யூகிச்சு இருப்பாங்க. ஆனா நம் மெஸ்ஸேஜகளை அவங்களால டீ-கோட் செய்ய முடியும்ன்னு எனக்கு தோணலை." என்றான். பிறகு நித்தினிடம் தமிழில் "எப்படியும் ஒண்ணு ரெண்டு மெஸ்ஸேஜ்களை வெச்சுகிட்டு ஒரு மயிரையும் புடுங்க முடியாது" என்றான். சஞ்சனா சுவாரஸ்யமாக அந்த உரையாடலை கேட்டவாறு சமைத்துக் கொண்டு இருந்தாள். ஜாஷ்வா சஞ்சனாவின் இடுப்பை வளைத்து அவள் அருகில் நின்றபடி, "ஹனி, சக்தி கடைசியா என்ன சொன்னான்?" விழித்து தலையை சொறிந்த சக்தியையும் ஜாஷ்வாவையும் பார்த்து சஞ்சனா, "ஜாஷ் கண்ணா, முதல்ல நீ சாதாரண பேச்சு எல்லாம் கத்துக்கோ. அண்ணன் சொன்னதை அப்படியே மொழி பெயர்த்தான்னா நீ எக்கச் சக்கமா கேள்வி கேப்பே. உனக்கு பதில் சொல்ல எங்களுக்கு தெரியாது. அதான் தலையை சொறிஞ்சுட்டு நிக்கறான்" சக்தி, "நோ சஞ்சனா, ஐ வில் ட்ரை" என்றபடி ஜாஷ்வாவை அழைத்துக் கொண்டு சென்றான். சஞ்சனா, "சரி, நீயாச்சு உன் மாமனாச்சு .. என்னை மட்டும் உதவிக்கு கூப்பிடாதே" மதிய உணவு தொடங்குகையில் சக்தி இந்திய பண்பாட்டில் ஏன் தலை முடிக்கு மதிப்பு இல்லை என்பதை ஜாஷ்வாவுக்கு விளக்க திணறிக் கொண்டு இருந்தான். Monday, 20 October 2008 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், அக்டோபர் 20 2008 காலை 9:00 மணி R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி ஒவ்வொரு திங்களன்றும் அவர்கள் கூடி கடந்த வாரத்தின் செயல்களையும் அந்த வாரத்தில் செய்யப் போவதையும் அலசுவது என்று முடிவெடுத்து இருந்தனர். கடந்த மூன்று வாரமாக ரிவ்யூ மீட்டிங்க்கிற்கு ப்ரொஃபெஸ்ஸர் சாரி வந்து இருக்கவில்லை. ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்கள் கொடுக்கற வேலை ஆரம்பிச்சாச்சா?" வந்தனா, "எஸ் ப்ரொஃபெஸ்ஸர். கூகிள் நிறுவனத்திடம் இருந்து செப்டெம்பர் 25ம் தேதிதான் ஒப்புதல் வந்துது. அதுக்கு அடுத்த ரெண்டு நாளில் ஆரம்பிச்சோம். இப்ப மூணு வாரமா ஏழு ஈமெயில் விளம்பரத்துக்கு ஆர்டர் கொடுத்து இருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அவங்க நாம் அனுப்பும் மெயிலை எந்த இணைய விலாசத்தில் இருந்து படிக்கறாங்கன்னு தெரிஞ்சுதா? எதாவுது க்ளூ கிடைச்சுதா?" தீபா (ஏளனம் மிகுந்த குரலில்), "ஓ நிறைய தெரிஞ்சுது. இது வரைக்கும் அனுப்பிய. ஒவ்வொரு மெயிலையும் ரஷ்யா, ஐஸ்லாந்து, ஐயர்லாண்ட், லித்துவேனியா இப்படி வெவ்வேற நாட்டில் இருக்கும் கணிணியில் இருந்து படிச்சு இருக்காங்க. நாங்க சுத்தமா குழம்பிப் போயிருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன சொல்றே நீ." வந்தனா, "நாங்க எப்படி வெவ்வேறு இணைய விலாசத்தை வெச்சுட்டு டாம்பர் பண்ண முயற்சி செய்யறமோ அதுக்கும் ஒரு படி மேல அவங்க இருப்பாங்கன்னு தோணுது. விலாசம் மட்டும் இல்லை அவங்க ஆக்ஸஸ் செய்யும் கணிணியே வேற நாட்டில் இருப்பது போல் இருக்கு" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அப்ப மாங்க்ஸ் பாட் நெட்டை ஒரு கூட்டமே ஒண்ணா சேந்து ஆபரேட் பண்ணுதா?" முரளீதரன், "அப்படி இருக்க முடியாதுன்னு ஷான் ஹென்றி அடிச்சு சொல்றார். ஆனா அவருக்கும் எப்படி அவங்க ஆக்ஸஸ் பண்ணறாங்கன்னு புரியலை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி அதை விடுங்க. விளம்பர ஆர்டருக்கான பணத்தை எப்படி வசூல் செய்யறாங்க?" முரளீதரன், "ஒரு அமெரிக்கன் பாங்கில் அட்லாண்டா நகரத்தில் இருக்கும் கிளையில் ஒரு அக்கௌண்டில் போட சொல்லி மெயில் அனுப்பறாங்க. அந்த அக்கௌண்ட் யாருதுன்னு எஃப்.பி.ஐ விசாரிச்சு பார்த்தது. அஞ்சு மாசத்துக்கு முன்னாடி யாரோ ஒரு ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் வந்து அந்த அக்கௌண்டை ஓபன் பண்ணி இருக்கான். அவன் கொடுத்த ஐடி ப்ரூஃப் அட்ரெஸ் ப்ரூஃப் எல்லாம் போலி. அதுக்கு அப்பறம் அவன் பாங்க் பக்கம் வரவே இல்லை. டெபாசிட் ஆகிற பணத்தில் இதுவரைக்கும் மூணு தடவை அவங்க எடுத்து இருக்காங்க. எடுத்து இருக்காங்கன்னா அவங்க எடுத்துக்கலை. ஒரு சர்ச், ஒரு அனாதை இல்லம் அப்பறம் சால்வேஷன் ஆர்மி இந்த மூணுக்கும் அவங்க நெட் பாங்கிங்க் மூலம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி இருக்காங்க" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்னது இது?, வாங்கற காசை எல்லாம் தர்மம் பண்ணறாங்களா?" வந்தனா, "அப்படித்தான் தோணுது. ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல இருக்கு. அதே சமயம் பணக்காரங்களா இருப்பாங்க மாதிரி இருக்கு" முரளீதரன், "Any how, உங்க திட்டத்தின் படி உங்களுக்கு தேவையான மெஸ்ஸேஜஸ் கிடைக்குது இல்லையா?" தீபா, "கிடைக்குது சார்." வந்தனா, "ப்ரொஃபெஸ்ஸர், இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். அவங்க ஜீமெயில் ஐடிக்கு மெயில் வந்தால் மட்டும் அவங்க மெயில் பாக்ஸை ஓபன் பண்ணறாங்க. மெயில் எதுவும் வராத தினத்தில் மெயில் பாக்ஸ் ஓபன் செய்யப் படுவதே இல்லை. ஆனா, வெவ்வேற கணிணிகளில் இருந்து ஜீடாக் மூலம் மெயில் வந்துதான்னு செக் பண்ணறாங்க. ஜீடாக் மூலம் செக் பண்ணற கணிணியும் மெயில் ஓபன் பண்ணி பாக்கற கணிணியும் வெவ்வேற" ப்ரோஃபெஸ்ஸார் சாரி, "எப்படி இதை செய்யறாங்க. புரிஞ்சுக்கவே முடியலையே" முரளீதரன், "இதுவரைக்கும் அமெரிக்காவிலோ இந்தியாவிலோ இருக்கும் எந்த கணிணியில் இருந்தும் அவங்க மெயில் ஆக்ஸஸ் பண்ணலை. ஒவ்வொரு முறையும் ஆர்டர் கொடுத்ததுக்கு பிறகு எந்த இணைய விலாசத்தில் இருந்து அவங்க ஆக்ஸஸ் செய்யறாங்கன்னு தொடர்ந்து கண்காணிச்சுட்டு வருவோம். நிச்சயம் ஒரு நாள் நாம் எளிதில் கண்டு பிடிக்கக் கூடிய எதாவுது ஒரு நாட்டில் இருக்கும் கணிணியில் இருந்து அவங்க ஆக்ஸஸ் பண்ணுவாங்கன்னு தோணுது. பார்க்கலாம்" தீபா, "ஆனா, எங்களுக்குதான் டிசம்பர்வரை ஒரு வேலையும் இல்லை" முரளீதரன், "இந்திய அரசாங்கத்தில் இருக்கற ஒவ்வொரு ஊழியனும் உன்னை மாதிரி வேலை செய்யணும்ன்னு பார்த்தா பாதி பேருக்கு ஒரு வேலையும் இருக்காது. ஜாலியா இரு." தீபா, "அப்ப நாங்க தீபாவளிக்கு ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு ஊருக்கு போயிட்டு வரலாமா?" முரளீதரன், "என்னைக்கு போறீங்க?" வந்தனா, "வரும் வெள்ளிக் கிழமை, தட் ஈஸ் 24ம் தேதி சாயங்காலம் புறப்படலாம்னு இருக்கோம். அடுத்த வாரம் ஞாயிற்று கிழமை நவம்பர் ஒண்ணாம் தேதி திரும்பி வந்துடுவோம்" முரளீதரன், "நீங்க ஏற்கனவே ப்ளான் பண்ணிட்டு கேட்கற மாதிரி இருக்கு. நீங்க இங்கே இல்லாத சமயத்தில் சர்வரில் இருந்து வரும் ஈமெயில் விளம்பரம் அனுப்பறதுக்கான ஆணைகளை உங்க புது அஸிஸ்டண்ட்ஸ் ஒழுங்கா செய்வாங்களா?"
தீபா, "நான் என் லாப் டாப்பை எடுத்துட்டுத்தான் போறேன். அவங்க பிரிச்சு எடுத்த மெஸ்ஸேஜ்களை எனக்கு அனுப்பச் சொல்லப் போறேன். தினமும் நான் செக் பண்ணறேன்" ப்ரோஃபெஸ்ஸர் சாரி, "அந்த மெஸ்ஸேஜ்ஜை எப்படி உனக்கு அனுப்புவாங்க?" தீபா, "பிரிச்சு எடுத்த ஒவ்வொரு மெஸ்ஸேஜையும் ஒரு தனி ஃபைலில் ஸ்டோர் பண்ணி வைக்கறோம். அந்த ஃபைலை எனக்கு ஈமெயிலில் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க" முரளீதரன், "அதனால் உன் லாப்டாப்புக்கு ஒரு தொந்தரவும் வராதா?" தீபா, "ம்ம்ம்ஹும், மைக்ரோஸாஃப்ட் விண்டோஸுக்கு அந்த மெஸ்ஸேஜ் என்னன்னே தெரியாது" ப்ரோஃபெஸ்ஸர் சாரி, "சோ, அடுத்த வாரம் ரிவ்யூ மீட்டிங்க இருக்கப் போறது இல்லையா?" முரளீதரன், "அதுக்கு அடுத்த வாரம் மீட் பண்ணலாம் ப்ரொஃபெஸ்ஸர்" அடுத்த வாரம் தோழிகள் இருவரும் தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.