http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கிறுக்கல்கள் - பகுதி - 1

பக்கங்கள்

சனி, 4 ஜனவரி, 2020

கிறுக்கல்கள் - பகுதி - 1

எல்லோரின் வாழ்க்கையிலும் அந்த முதல் காதல் என்றும் பசுமையாய் மனதில் இருக்கும். அதுபோல் தான் எனது நாயகனுக்கும். ஆனால் சற்று வித்தியாசமானது இவனின் உணர்வுகள். படித்து நீங்களே கூறுங்கள்.

நான் மாலை ஆறு மணி விமானத்தை பிடிப்பதற்காக, எனது அலுவலகத்தில் இருந்து வழக்கத்தை விட சற்று முன்னரே வந்து விட்டேன். ஆனாலும் அந்த மேரு காப்ஸ் (மும்பை லோக்கல் டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனம்), வண்டி வர தாமதம் ஆனது. நேரம் இப்பொழுது நான்கு மணி முப்பது நிமிடங்கள். எனது கை கடிகாரத்தி வினாடிக்கு மூன்று முறை பார்த்து கொண்டிருந்தேன். நான் பார்த்தது மணியை அல்ல எனது மனைவியின் படத்தை. ஆம் கைகடிகாரத்தில் டைல்லாக அவளது புகை படத்தைதான் வைத்திருந்தேன். அழகாய் புன்னகைத்தாள்.

சற்று நேரத்திற்கு முன்னரே எனக்கு தொலைபேசியில் தெரிவித்தனர். எனது மனைவி மருதுத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுல்லாள் என்று. அதோ டாக்ஸி வந்து விட்டது. விவரம் என்ன என்பதை நான் டாக்ஸ்யில் ஏறிய பின் சொல்கிறேன்.

எனக்கும் டாக்ஸி டிரைவருக்கு நிகழ்ந்த உரையாடல்:

நான், என்னப்பா இப்படி லேட்-டா வர, எனக்கு ப்ளைட் 6 மணிக்கு இப்போமே நாலு முப்பது.. எப்படி நான் போய் ப்ளைட் பிடிகிறது..

டிரைவர்: நான் என்ன சார் பண்ணுறது, வர்ற வழில ஒரே டிராபிக். நான் முடிஞ்ச வரை சீக்கிரமா கூட்டிடு போறேன்.

நான்: நீ எப்படியாவது என்னை சீக்கிரம் கொண்டு போய் சேர்த்து விடு நான் மீட்டருக்கு மேல நூறு ரூபாய் தருகிறேன்டிரைவர்:கண்டிப்பா சார், உள்ள ஏறுங்க.


ஒரு சிறிய டிராலி பேக்-கை வண்டியினுள் வைத்து நானும் அமர்ந்தேன், டாக்ஸி மும்பை மலாட்-இல் இருந்து அந்தேரி விமான நிலையம் நோக்கி பயணித்தது.

ஒஹ், நான் என்னை பற்றி சொல்லுகிறேன்.

எனது பெயர் ஹரி, மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை செய்கிறேன். எனது மனைவி பரணி, இப்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுல்லாள். இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பிரசவம் நிகலாம் என டாக்டர்ஸ் சொன்னதாக எனது அம்மா சொல்லிருந்தார்கள்.

இப்போது நான் திருவனந்த புறம் சென்று அங்கிருந்து எனது சொந்த ஊரான நாகர்கோயில் செல்ல வேண்டும். எப்படியும் இன்று நள்ளிரவுக்குள் நான் போய் சேர்ந்து விடுவேன் என்கிற நம்பிக்கையில் பயணிக்கிறேன்.


வெஸ்டேர்ன் எக்ஸ்பிரஸ் ஹை வே-யில் நான் பயணிக்கும் டாக்ஸி சீறி பாய்ந்து சென்று கொண்டிருந்தது. வழியெங்கும் ஒரே விளம்பர பலகை, சாரைசாரையாக எறும்பை போல் வாகனங்களின் நெருக்கடியில் மும்பை நகரம் புகை மூட்டத்தில் மூழ்கி இருந்தது. செல்லும் வழியில் சிக்னலில் ஒரு பெண்மணி கையில் பிறந்து சில மாதங்களே இருக்கும் கை குழந்தையுடன் எனது வண்டியில் அருகில் நின்று தர்மம் கேட்டாள். இதுவரை பிச்சை ஒரு பாவ செயலாக நினைத்த நான், முதன் முறையாக ஒரு தாயின் கைகளுக்கு தர்மம் அளித்தேன். கடவுளுக்காக எனது மனைவிக்கு நல்ல படியா பிரசவம் ஆகணும் என்று வேண்டி வைத்திருந்த தொகையிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தேன். கொடுத்ததில் ஒரு மன திருப்தி, இதுவரை இல்லாத திருப்தி. இதைதான் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார்களோ!!!

முப்பது நிமிட நீண்ட நெருக்கடிக்கு பிறகு டாக்ஸி விமான நிலையத்தை அடைந்தது. சரியாக கொண்டு வந்து சேர்த்த டிரைவருக்கு, வாக்களித்த படி மீட்டருக்கு மேல் நூறு ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு, ஓட்டமும் நடையுமாக நிலையத்தின் உள் சென்றேன். பரிசோதனைக்கு பிறகு என்னை விமான செல்ல அனுமதித்தனர். இண்டிகோ விமான சேவை நிறுவனத்தை சார்ந்த விமானம். இரண்டு மணி நேரத்தில் திருவனத்தபுரம் சேர்ந்திடும் என அட்டைவனையில் குறிப்பிட்டு இருந்தனர்.

நான் அங்கு போய் சேர்வதற்குள் எனது மண வாழ்க்கை பற்றி சொல்லி விடுகிறேன். எனக்கு திருமணம் ஆகி இருபது மாதங்கள் ஆகின்றன. எனது திருமண வாழ்க்கைக்கு முன் நான் கண்டிப்பாக அவளை பற்றி சொல்லியே ஆக வேண்டும். யார் அவள், எனது மனைவி அல்ல. பின் யாரு என்று கேட்கிறீர்களா. மேலும் படியுங்கள் புரியும்.

இரண்டு வருடங்களுக்கு முன் நான் யாரை என் வாழ்நாளில் பார்த்திட கூடாது எனது எண்ணி மும்பை வந்து வேலைக்கு சேர்ந்தேனோ, அவளை இதே போல் ஒரு தினம் சந்தித்தேன். அப்பொழுது நான் இங்கிருந்து நாகர்கோயில் செல்லும் ரயிலில் பயணித்த தினம். அவளை விபத்தாக சந்தித்தேன். அந்த நாள்தான் எனது இந்த திருமண வாழ்க்கைக்கு என்னை எண்ண தூண்டிய நாள். அவள் வேறு யாரும் அல்ல என்னுடன் கல்லுரி பயின்ற தோழி, காதலி எப்படி அழைப்பது என தெரியவில்லை. காதலன் என்கிற வார்த்தைக்கு நான் அவளுக்கு தகுதியானவன் அல்ல என நினைகிறேன்.

என் கல்லுரி வாழ்க்கையை தெரிந்த பின் நீங்களே கூறுவீர்கள்.
நாகர்கோயில் நான் பிறந்து வளந்த ஊர். நாகராஜனும், பகவதி அம்மாளும் என்னை ஆசிவழங்கி வளர்த்த ஊர். குமரி கடலில் நீந்தி, செம்மண்ணில் விளையாடி, நண்பர்களுடன் மகிழ்ந்த காலம். சிறுவயதில் தந்தையை இழந்த நான் தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன். நான் பகுதி நேரமா சிறு சிறு வேலை செய்து எனது படிப்பை கவனிக்க, எனது அம்மாவோ ஜவுளி கடைகளில் வேலை செய்து வீட்டை நடத்தினாள். நான் ஒரே மகன் என்பதால் எனது படிப்பை மட்டும் நிறுத்தாமல் தொடர செய்தாள். தந்தையில் பெயரில் இருந்த சில சொத்துக்களே என்னை மேற்படிப்புக்கு உதவியது.

கல்லுரி படிப்பு மட்டும் பத்தாது, மேலும் MBA ஏதாவது செயல்தான் இவன் நல்ல வேலைக்கு போவான் என்று சொந்தகள் அறிவுரை கூற எனது அம்மாவோ என்னை வற்புறுத்தி படிக்க செய்தாள். அங்கு நான் கற்றது கல்வி மட்டும் அல்ல மேல பல விசயங்களை...

அந்த கல்லுரி தங்களுகேனே ஒரு நுழைவு தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது. தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லுரி சேர பதிவுக்கான தினம் நான் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டும் கல்லூரிக்கு சென்றிருந்தோம் அங்குதான் நான் அவளை முதன் முதலாக சந்தித்தேன். அவளின் பெயர் என்னவாக இருக்கும் என நண்பர்கள் பலவாக யோசிக்க தொடங்கினோம்.

இப்படி ஒரு பேரழகி என்னால் ஊரில் இதுவரை பார்த்ததில்லை.


அப்பொழுதான் அந்த கல்லூரி பணியாளன் விரிந்த கண்களும், திறந்த வாயுடன் அவளை பார்த்து அழைத்தான். அவளின் பெயரை அப்பொழுதான் நாங்கள் கேட்டோம் 'கலா' கலைநயம் மிக்க குடும்பம் போலும் ஒரு பொற்சிலைக்கு இப்படி ஒரு பெயர் சூட்டி அழகு பார்கின்றனர். பிரின்சிபால் அலுவலகம் சென்று திரும்பியவள் அங்கிருந்த நோட்டீஸ் போர்டில் எதையோ பார்த்தாள். பின்னர் எங்களை கடந்து வெளியே செல்லும் பொழுது என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே சென்றாள். அவளின் பார்வைக்கு அருத்தங்கள் நான் அறியும் முன்னரே எனது நண்பர்கள் என்னை ஓட்ட தொடங்கினர்.

அவள் ஏன் என்னை அப்படி பார்த்தாள், நானே குழம்பி போனேன்...


கலா எங்களை கடந்து சென்ற பின்னர், அதே கல்லூரி எடுப்பு என்னை அழைத்தான். இந்த முறை அவனது அழைப்பு, சற்று அலட்சியமாகவே இருந்தது. வேறு வழி நானும் அந்த பிரின்சிபால் ஆபீஸ் என்று பெயர் எழுதி இருந்த அலுவலகத்தின் உள் சென்றேன். அதுவரை நான் எந்த வித பயமும் இல்லாமல் தைரியமாகத்தான் இருந்தேன். ஆனால் அந்த ஆபீஸ் என்கிற வார்த்தையை பார்த்த உடன். எனக்கு சிவாஜி பட காட்சிகள் கண்களில் ஓடியது. இறுதியாக கொஞ்சம் மனம் தைரியம் வரவழைத்து கொண்டு உள்ளே சென்றேன். அங்கு ஒரு மூன்று பெரியவர்கள். ஒருவர் குறைந்த முடியுடன், அடுத்தவர் துத்தமாக தலை முடியே இல்லாமல்.இடப்புறம் இருந்தவர் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமான முடி, மேலும் தாடியுடன் இருந்தார்கள். அவர்கள் தாங்களே அறிமுகமாகி கொண்டனர். முதலில் ஹெட் ஆப் டிபார்ட்மென்ட், அடுத்தவர் பிரின்சிபால், கடைசியாக இருந்தவர் பைனான்ஸ் பாட பிரிவின் ப்ரோபிச்சர்.

மூவரையும் கண்ட பொழுது எனக்கு என்னென்னமோ தோன்றியது. மூன்று குரங்குகள், மூன்று பணம் விழுங்கும் முதலைகள் என அக்ரீனையாகவே தோன்றியது. ஏதாவது ஏடாகூடாமா கேள்வி கேட்க போறாங்க நான் வசமா மாட்டிக்க போறேன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. ஆனா அந்த சொக்க போட்ட மக்கா சொத்த கேள்விகளையே கேட்டார்கள் அவை அனைத்திற்கும் நான் அறிந்த ஆங்கிலத்திலேயே விடை அளித்தேன். (என்ன கேள்வின்னு இப்போ கேட்காதிங்க சத்தியமா இப்போதே நியாபகம் இல்லை)

எல்லா கேள்விகளை கேட்ட பின்னர் பிரின்சிபால் கேட்ட ஒரு கேள்விக்குதான் என்னால் பதிலே சொல்ல முடியவில்லை.

10 , 12 , எல்லாம் 80 % மார்க் வாங்கி இருக்கீங்க, ஏன், Bcom இல் மட்டும் மார்க் 50 % க்கும் கீழ வாங்கி இருக்கீங்க.. என்று என்னை பார்த்து கேட்டார்.

என்னனு பதில் சொல்ல, நான் வேலை பார்த்து படித்ததால் பாடத்தை கோட்டை விட்டேன் என்று சொல்லவா?, அல்லது நான் பயின்ற கல்லூரியில் பார்க்கும் படியாக எந்த பொண்ணும் இல்லை அதனால் பாதிநாள் விடுப்பில் இருந்தேன் என்று சொல்லவா...என்று நான் சிந்தித்து கொண்டு இருக்கும் போதே, அவரே பதிலை அளித்து என் தேடலுக்கு முற்று புள்ளி வைத்தார்.

வாட் ஹரி, எனி பர்சனல் ரீசன்? நோ ப்ரோப்லேம், லீவ் இட்..

ஆனால் உங்களில் BCOM மார்க்குதான் இப்போ பிரச்சனை, எங்களுடைய குறைந்த பட்ச தகுகுதிகுள் இல்லை, நாளை வாங்க நாங்கள் எங்கள் தாளாளரிடம் அனுமதி பெற்று கூறுகிறோம் என்று என்னை புதிராகவே அனுப்பி வைத்தனர். இந்த சோகத்தில் நான் அந்த நோட்டீஸ் போர்டில் என்ன இருந்தது என்று பார்க்கவே இல்லை. வீடு சென்ற உடன் நடந்தவற்றை அம்மாவிடம் சொன்னேன், நீ கவலை படாதே ராசா, நான் வேண்டிகிட்ட சாமி உன்னை நல்ல காலேஜ்-ல சேர்ப்பாள் என்று நம்பிக்கை அளித்தாள்.

அன்றைய பொழுது நண்பர்களுடன் கேலி கிண்டலுடன் சந்தோசமாக கழிந்தது. ஆனால் மனதுக்குள் ஒரு சிறு உருத்தலிருந்து கொண்டே இருந்தது. எப்படியாவது அந்த காலேஜ்-ல சீட் வாங்கிடனும், இல்லைனா எப்படி அந்த காலாவை நான் மீண்டும் பார்ப்பது என்கிற ஏக்கம் தான் என்னை அப்படி சிந்திக்க தூண்டியது.

மறுநாள் மீண்டும் கல்லூரி சென்றேன், அவர்கள் என்னமோ எனக்காக மேலிடத்தில் பரிந்து பேசி சீட் வாங்கி வைத்ததாக சொன்னார்கள்.

அப்பொழுதுதான் புரிந்தது, அவர்கள் காசை ஆட்டை போற சதி செய்தார்கள் என்று. எது எப்படியோ நான் அந்த கலாவுடன் இங்கேயே படிக்க போகிறேன்.. என்கிற சந்தோஷத்தில் அவர்கள் கேட்ட தொகையை காசோலையாக கட்டிவிட்டு வீடு திரும்பினேன். எனக்கு சீட் கிடைத்ததில் அம்மாவுக்கும் சந்தோசம்.

ஒரு வாரம் நான் சந்தோசம், உற்சாகத்துடன் களித்தேன். கல்லூரி திறக்கும் நாள். மிகுந்த தாழ்வு மன பான்மையுடன் உள்ளே சென்றேன் ஏனென்றால், அங்கிருந்தவர்களில் தோற்றம், என்னை மிரட்டியது. அனைவரும் பார்க்க பெரிய இடத்து பிள்ளைகள் போல் இருந்தனர். அவர்களில் ஆடைகளும், காலணிகளும் அதனை பறை சாற்றியது. எனது பாதி சுருங்கிய ஆடை, சற்று பழைய சூ என எனது தோற்றம் எனக்கே வெறுப்பாக இருந்தது. இதுவரை காலாவை காண போகிறேன் என்கிற சந்தோசத்தில் இருந்த நான், எனது தோற்றம் கண்டு வெட்கப்பட்டேன். ஆனால் அங்கு நடந்ததோ வேறு.


நான் எனது வகுப்பறையில் ஒரு மூலையில் இருந்த இருக்கையில் கூனி குறுகி அமர்ந்திருந்தேன்.

அப்பொழுதுதான் அந்த பெண், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் படி கரகோசத்துடன் சத்தாமாக சொன்னாள். என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் எனலாம். நான் எனது தாழ்வு மனப்பான்மையை வென்ற நாள்.

அந்த பெண்ணின் பெயர் கீது மலையாளம் கலந்த தமிழில்,

கைஸ், இங்க கவனிங்க, இப்போதான் நுழைவு தெரிவில் தேசிய அளவில் முதல் பத்து இடத்திற்குள் வந்த ஹரி வந்திருக்கிறார். அவரை எல்லோரும் கைதட்டி வரவேற்கலாம் என்று கூறினாள்.

அதுவரை அவள் சொன்னதை கவனிக்காத நான் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்ட நானும் எழுந்து நின்றேன். அவள் நேரா வந்து எனது கைகுலுக்கி முன்னாள் வந்து ஏதாவது பேசுங்கள் என்றாள்.

இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத நான் எப்படி முன் சென்றேன் தெரியவில்லை. என்னை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி இருக்கையில் அமர்ந்தேன். பின்னர் ஒவ்வொருவராக அறிமுகம் படுத்தி கொண்டனர். முதல் நாள் பாடங்கள் இல்லாமல் பலமுறை அறிமுகத்திலேயே சென்றது. உணவு இடை வேளையில் அனைவரும் ஒன்றாக சென்றானர்.

எல்லோரும் எந்த வித தயக்கம் இன்றி அனைவரின் உணவுகளை பகிர்ந்து கொண்டனர். நான் எனது முந்தைய கல்லூரியில், மாலை அல்லது காலை வகுப்பில் மட்டுமே இருந்தேன் அதனால் இந்த மாதிரியான அனுபவம் புதுசு.

இன்று எனது அம்மா, மதிய உணவிற்காக புளிக்கொளம்பு சாதமும், வத்தலும் வைத்திருந்தாள். அதன் வாசனை பிடித்துப்போன பலர் தேடி வந்து சாப்பிட்டனர். அன்றைய நாளில் மட்டும் அனைவருடன் பேசி விட்டேன் கலாவை தவிர... ஏனென்று தெரியவில்லை ஆனாலும் சந்தர்பமும் வர வில்லை.


முதல் நாள் கல்லூரி முடிந்து வீடு செல்லும் வேளையில் தான், நான் அந்த நோட்டீஸ் போர்டு-டில் இருப்பதை படித்தேன். அதில் கல்லூரியில் நடக்க இருக்கும் சில நிகழ்ச்சியின் குறிப்பு மேலும், நுழைவு தேர்வின் ரிசல்ட் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதல் இடத்தில் எனது பெயர் கண்ட உடன் நான் இறக்கை இல்லாமல் பறப்பதுபோல் ஒரு ஆனந்தம், சில நொடிகள் மட்டுமே நீடித்தது. எனக்கு அடுத்த இடத்தில் இருந்த பெயர், என்தலையில் கொட்டி தரைக்கு கொண்டுவந்தது. அது வேறு யாரமல்ல, கலாதான் அவளின் முழுப்பெயர் அப்பொழுதான் நான் தெரிந்து கொண்டேன். அவளின் முழுப்பெயர் கலைமதி. முதல் மூன்று இடத்தை பெற்ற நபர்களின் புகைப்படத்துடன் அந்த லிஸ்ட் ஒட்டப்பட்டிருந்தது. அடுத்துவந்த நாட்களில்தான் நான் தெரிந்து கொண்டேன், ஏன் கலா என்னை பார்த்து முதல் நாள் அப்படி ஓர் பார்வை வீசி சென்றாள் என்று.

அவள் இந்த நுழைவு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்று முதலிடம் வர வேண்டும் என்பதற்காக கடுமையாக முயற்சி செய்திருந்தாள், ஆனால் அவளால் முதலிடத்தை பெற முடியவில்லை என்பதே அவளின் ஒரே ஆதங்கம். அவள் என்னைபார்த்து நான் அழகு என்பதற்காக அல்ல, இவனெல்லாம் என்னை விட அதிகம் மதிப்பெண் பெற்று விட்டானே என்கிற அலட்சியம் கலந்த ஆக்ரோஷம். என்ன ஒரு பெண்ணடா!!!.

அவளை ஆசையோடு பார்த்த நான் அதுமுதல் மற்ற பெண்களை பார்ப்பது போல் சாதாரணமாகவே பார்த்தேன், யாரிடம் நெருங்கி பழக மாட்டோமா என்று ஏங்கிய நான் அதுமுதல் இவளுடன் அதிகம் சகவாசம் வைத்திருக்க கூடாது என எண்ண தொடங்கினேன். எனது முதல் செமஸ்டர் முடியும் வரை நான் அவளிடம் அதிகம் பேசாமல், ஹாய்!!! பாய்!!! என்கிற மாதிரியே பழகினேன்.

செமஸ்டர் முடிவுகள் இன்று வரலாம் என்று மாணவர்களிடம் ஒரே எதிர்பார்ப்பு. அதுவரை நான் ஏதோ அதிஷ்டத்தில் நுழைவு தேர்வில் முதலிடம் பெற்றேன் அதனால் இம்முறை வரும் முடிவு, எனது வேஷத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என்று என்னிடமே நான் பழகிய நண்பர்கள் கேலியுடன் பேசினார்கள்.

உண்மையில் நானுமே, என்னால் அதிக மதிப்பெண் வாங்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு ஆசிரியர் ஒரு படி மேலே போய் கலாவிடமும் அவளுடன் நெருங்கி பழகும் அதிகம் படிக்கும் பேர்வழிகள் என்று பெயர்வாங்கிய நண்பர்களிடமும் 'அட்வான்ஸ் விஷேஸ் போர் யுவர் குட் மார்க் ', நீங்க கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு, அவங்களை பாரு, படிக்க வந்த மாதிரியா இருக்காங்க.. அவங்களும் அவங்க டிரஸ் கோடும் என என்னை சாடைமாடையாக திட்டியும் விட்டு சென்றார்.

அப்பொழுதுதான் எனக்கே என் மேல் சற்று கோபமும் ஆதங்கமும் வந்தது. நாமும் படிச்சு அவங்களை கிழிக்கணும் என்று ஒரு வைராக்கியம் வந்தது.

ஒரு ஆசிரியரே என்னை ஏளனமாக பேசிவிட்டு செல்கிறாரே, என்று சோர்ந்து போய் கல்லூரி நுலகத்தில் ஏதேதோ புத்தகத்தை படிக்கிற மாதிரி ஒரு மாதிரியான மன வேதனையுடன் இருந்தேன். அங்கு எதேர்ச்சையாக வந்த கலா எனக்கெதிராக அமர்ந்து "The Economic Times ' தினசரி நாளிதழை படித்து நண்பர்களுடன் பிசினஸ், ஷேர் மார்கெட் நியூஸ் எல்லாம் கலந்து பேசிகொண்டிருந்தாள்.

இது அவர்கள் தற்செயலாக செய்தார்களா இல்லை என்னை கடுப்பேற்ற செய்கிறார்களா தெரியவில்லை. ஆனால் என்னால் அங்கே இருக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். அன்று மதிய பாடவேளை நாங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் லேப்-பில் இருந்தோம். அப்பொழுதான் அதே ஆபீஸ் ஆஸிஸ்டன்ட் (எடுப்பு) ஒரு சில பேப்பர்கள் பின் செய்து எடுத்து வந்தான்.

ஆபீஸ் அச்சிஸ்டன்ட் பேப்பருடன் வரும்போதே எனக்கு மிக அருகில் அமர்ந்திருந்த சில நண்பர்கள், கலாவுக்கு மிக மிக நெருக்கமான நண்பர்கள் மாதேஷ் மற்றும் ஆண்டனி இருவரும் கண்களால் வரும் விஷயம் என்ன என்று கேட்டனர். அச்சிஸ்டெண்டோ, என்னமோ அவரே தோல்வி அடைந்த மாதிரி பெரும் விரலை தலைகீழாக கவிழ்த்து காட்டி ஜாடையால் தோல்வி என தெரிவித்தான். பின்னர் அதனை வாங்கிய கம்ப்யூட்டர் பாட ஆசிரியர், அவன் கிளம்பி செல்லும் வரை பொறுத்திருந்து பின்னர் ஒரு மயக்கும் புன்னகையுடன் செமஸ்டர் முடிவுகளை அறிவிக்க தொடங்கினார். அவர் வேண்டுமென்ற சதி செய்வதுபோல் எனது பெயரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களின் பெயரையும் மார்க்கையும் பாட வாரியா சொல்லி கொண்டிருந்தார். எனது வகுப்பில் பாதிக்கும் மேல் மாணவர்கள் ஒரே பாடத்தில் 50 %க்கும் குறைவாக பெற்றிருந்தனர். சிலர் அழுதே விட்டனர். மொத்த வகுப்பிற்கும் வாசித்த பின் சிலர் கலாவை பார்த்து நீதான் இந்த முறை முதலிடம் வந்திருப்ப என்று கூறி வாழ்த்துகளை தெரிவிக்க. கடுப்புடன் நான் எனது பெயர் விடுபட்டதை தெரிவித்தேன். எனது நியாயமான கோபத்தை சிறிய புன்னகையுடன் தலையாட்டிவிட்டு வாசிக்க தொடங்கினார்.

அவர் வாசிக்கும் போதே, அதுவரை சந்தோசத்தில் சிவந்திருந்த கலாவின் முகம், கோபத்தில் வெளுக்க தொடங்கியது. ஆம், மொத்தம் இருந்த ஏழு பாடத்தில் ஐந்தில் நான் முதலிடம் பெற்றிருந்தேன். எல்லாம் சொல்லிமுடித்த பிறகு ஆசிரியார் எனக்கு முதலாவதாக வாழ்த்துக்கள் சொன்னார். பின்னர் அங்கிருந்த சிலர் தான் பெயிலானாலும் எனக்கு சந்தோசத்துடன் வாழ்த்துக்களை சொல்ல தொடங்கினர். நானே நம்ப முடியாத செமஸ்டர் ரிசல்ட், சந்தோஷத்தில் வானுக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கினேன். ஆனால் எனது எல்லா கர்வமும் அடுத்து வந்த நாட்களில் நிகழ்ந்த சில சம்பங்கள் முழுமையாக அகற்றி விட்டது. அதுவரை வாழ்க்கையில் எந்த விதமான பெரிய இலட்சியம் எதுவும் இல்லாமல் இருந்த என்னையும் மாற்றிவிட்டது.
செமஸ்டர் ரிசல்ட் வந்த பின்பு ஒருநாள் எங்கள் கல்லூரியில் 'Parents day ' என்று ஒரு விழா எடுத்தனர். கல்லூரியின் நோக்கம், மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் இணைத்து ஒரு கலந்தாய்வு மாதிரியான நிகழ்ச்சி நடத்துவது. அதுவரை எனது குடும்ப நிலை அறியாமல் என்னுடன் போட்டியிட்ட சிலர் நெருங்கி பழகாமல் இருந்த சிலர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் என்னுடன் நட்பாய் பழக ஆரம்பித்தனர்.

'Parents Day ' அன்று அனைவரின் பெற்றோர்களும் வந்தனர். எனது அம்மாவால் உரிய நேரத்திற்கு வர முடியவில்லை, அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை ஆனாலும் வேலைக்கு சென்றிருந்தார்கள். வேலையிலிருந்து அனுமதி பெற்று நேரத்திற்கு வர முடியவில்லை. விழாவில் சில ஆசிரியர்கள் மாணவர்களையும் அவர்களுக்கு இருக்கும் எதிர்காலத்தை பற்றியும் ஆங்கிலம் மற்று தமிழில் கலந்து பேசிக்கொண்டிருந்தனர். மேலும் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவர்களும் பேசவேண்டும். பின்னர் நேரம் இருக்கும் பற்றதில் கலந்தாய்வு நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தனர். அதுபோல் விழாவையும் தொடங்கிவிட்டனர். ஆனால் என்னுடைய அம்மாவோ வர வில்லை. எனது அதிஷ்டம் அவ்வுளவுதான் என்று நினைத்து கொண்டிருந்தேன்.

நிகழ்ச்சியில் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகபடுத்திக்கொண்டு பேச தொடங்கிவிட்டனர். பின்னர் மாணவர்கள் பேசதொடன்கினர், முதலில் மூன்றாம் இடம் பிடித்த கீது (Geethu) பேச தொடங்கினாள். அப்பொழுதான் எனது அம்மாவும் அங்கு வந்தார்கள். அவளை அடையாளம் கண்ட சில பேராசிரியர்கள் ஒரு இருக்கையில் அமர செய்திருந்தனர். பின்னர் கலா பேசினால் அதை தொரர்ந்து மேடையில் பேச எனது முறையும் வந்தது, ஆங்கிலத்தில் பேசலாம் என்று எழுதி வைத்திருந்ததை கிழித்தெறிந்து விட்டு, அம்மாவுக்காக தமிழில் பேச தொடங்கினேன். உள்ளத்தில் இருந்ததை அப்படியே பேசினேன். கண்ணீர்மல்க பேசினேன், ஆனால் என்ன பேசிகொண்டிருந்தேன் என்று உணராமல் அம்மாவிற்கும் ஆனந்த கண்ணீர் வரும் வரை பேசினேன். அதுவரை அவளை சட்டைகூட செய்யாத பலர் அவளை பெருமையுடன் பார்க்க தொடங்கினர். மேடையிலிருந்து அனைவரின் தலையும் அவளை நோக்கி திரும்பிவதை பார்க்க முடிந்தது.

நான் பேசி முடித்த பின் சில பேராசிரியார்கள், ஏன் கல்லூரி முதல்வரும் அம்மாவிடம் நேரில் சென்று வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தனர். கணவன் இழந்த பின்பும் மகனை மேற்படிப்பை தொடர்ந்து படிக்க செய்தும், குடும்ப பாரத்தை சிறிது அவனும் காட்டாமல் இருந்த செய்கையையும் சேர்த்து அனைவரும் பாராட்டினர். சில நண்பர்கள், என்னை கட்டி அனைத்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். நான் முதன் முதலாக மேடையில் பேசியது இதுதான் முதல் முறை. அதுவரை இருந்த எனது பயம் எல்லாம் மறைந்து எப்படி பேசினேன் எனது எனக்கே புரியவில்லை. இருந்தாலும் அம்மாவின் ஆனந்தத்தில் வரும் கண்ணீரை பார்க்குபோது அவளை இன்னும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்கிற வைராக்கியமே என்னுள் முளைத்தது. விழா எதிர் பார்த்ததை விட அதிகம் நேரம் எடுத்ததால், அடுத்த நாள் எங்களை மட்டும் வைத்து 'ஸ்டுடென்ட் கவுன்செல்லிங்' நடத்தினார்.


அதுவரை மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச கர்வமும் 'ஹெட் ஆப் டிபார்மென்ட்' பேராசிரியாரால் கிழித்து எறியப்பட்டது. ஆரம்பத்தில் என்னை சீண்டும் சில கேள்விகளால் எனது கோபத்தையும் வேகத்தையும் ஏறசெய்தார். நான் கூறிய பதிலை கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் மெதுவாக அவரது கருத்துகளை என்னுள் விதைக்க தொடங்கினார். அவர் கூறியவற்றில் இன்றும் நினைவில் இருப்பது ஓன்று மட்டும்தான். 'MBA முடிச்சுட்டு என்ன பண்ண போற என்று கேட்டார். நானும் ஏதாவது கம்பெனில வேலை சேர்வேன் என்றேன். அதற்கு அவர் 'உனது பலம் எதுன்னு கூட தெரியாமலே வாழ்க்கையை கடத்த போறியா, எல்லாரையும் மாதிரி நீயும் டிகிரி வாங்கிட்டு கம்பெனி கம்பெனி-யா ஏறி இரங்கி வேலை பார்க்க போறியா. அன்று விழாவில் உன்னோட அம்மாவை சந்தோஷ படுத்தி பார்த்து நீ சந்தோசமா இருந்தாய்'. உனது சந்தோசம் ஒருவேலைல சேர்ந்தா மட்டும் நிறைவேரிடுமா. முதல் வாழ்க்கைல ஒரு இலக்கை குறிவைகனும் பின்னர் அதனை நோக்கி நீச்சல் அடிக்கணும். இலக்கில்லா வாழ்க்கை கண்டிப்பா மன நிம்மதியான வாழ்க்கையா இருக்காது. 'MBA வெறும் டிகிரி சேர படிக்கிறதா நினைச்சிருந்தா இப்போவே நீ இங்கிருந்து கிளம்பலாம். இங்க படிகிறத தாண்டி ஒரு பெரிய பொறுப்புக்கு உன்னை தகுதி படுத்துறதா இருக்கணும். நீ வெறும் ஏட்டு புத்தகத்தை வச்சிருகாம, ஒவ்வொரு புது விசயத்தை தெரிஞ்சிக்க முயர்ச்சிகனும் என்றும் மேலும் நிறையா சொன்னார்.

ஆனால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஆணி அறைந்த மாதிரி இறங்கியது. கவுன்செல்லிங் முடிந்த பின், ஒரு தெளிவானா மன நிலையுடன் வெளியே வந்தேன். அதுவரை கிளாஸ் ரோமியோ, ஜோக்கர் என பட்டம் வாங்கி பெண்களை கவர முயற்சி செய்த நான், கொஞ்சம் பாடம், கொஞ்சம் விளையாட்டு, சரிசமாக புதிய விசயங்களை பற்றிய தேடல் என வாழ்க்கையின் போக்கை மாற்றினேன்.

நான் ஒருபுறம் என்னை மாற்றி கொண்டிருக்க, விதி வேறு மாதிரி விளையாடியது. கலா என்னுடன் போட்டியிட்ட நாட்கள் போய், சிநேகமாக பழக ஆரம்பித்தாள். எனக்கு அவளது நட்பு பிடித்திருந்தது, நானும் அவளிடம் இருந்து பல புதிய விசயங்களை கற்று கொண்டேன்.

இரண்டாம் செமஸ்டர் முடிந்த பின், எங்களை 'Internship ' என்று பெரிய நிறுவனங்களில் நான்குமாத தொழில் சம்மந்தமான பயிற்சிக்கு அனுப்பி இருந்தனர். நமது தமிழ் நாட்டில் பல பெரிய நிறுவனங்கள் சென்னையில் தான் உள்ளது அனைவரும் சென்னைக்கே சென்று பயிற்சி பெற்றோம். அந்த நான்குமாதம் எனக்கும், கலாவிற்கு ஒரு மன மாற்றத்தை தந்தது. எனக்கு அவளை பற்றிய தேடல் அதிகமாக இருந்தது.

நாங்கள் இருவரும் இரு வெவ்வேறு நிறுவனங்களில் பயிர்ச்சி பெற்று வந்தோம். அவள் என்னை தொடர்பு கொள்ள எந்த விதமான வசதியும் என்னிடம் கிடையாது. நான் எனது நண்பர்களுடன் தங்கி இருந்தேன். அந்த நான்கு மாதம் தான் எனக்கு பல பெரிய நல்ல நண்பர்கள் கிடைக்க உதவியது.அப்பொழுதி திடீரென்று ஒருநாள் எனது அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாக, அவர்களால் தொடர்ந்து வேலைக்கு போக முடியவில்லை. அதனால் என்னால் மேலும் பயிற்ச்சியை தொடர வசதியும் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் பலர், உதவியுடன் அந்த பயிற்சியை முடித்தேன். அவர்கள் அன்று அளித்தது வெறும் பொருள் உதவி மட்டும் அல்ல மன தயிருமும் கூட. இன்றுவரை அவர்கள் செய்த பொருள் உதவியை திரும்பி கேட்கவும் இல்லை, அவர்களின் நட்பு முறையும் மாறவே இல்லை. இப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க உண்மையில் நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என எண்ணியது கூடஉண்டு.


எங்களின் பயிற்சி மூன்று மாதங்கள் முடிந்து விட்டது, அப்பொழுது ஒருநாள், எங்கள் கல்லூரி 'ஹெட் ஆப் டிபார்ட்மென்ட்' பேராசிரியார் எங்களுக்கு ஒரு மீட்டிங் வைத்திருந்தார். எங்களின் பணி எப்படி இருக்கிறது, ப்ராஜெக்ட் வொர்க் நல்ல பண்ணுறோமா என்று ஆலோசை வழங்க அந்த ஏற்பாட்டை செய்திருந்தார். அங்கு எப்படியும், கலாவை காண்பேன் என்று சந்தோசத்தில் சென்றிருந்தேன். அங்கோ கலாவை சுற்றி பலர் சூழ்ந்திருந்தனர். மனதில் எதோ ஒரு நெருடல், எங்கே நான் அவளிடம் இப்போது பேசினால் கண்டிப்பாக என்னையும் மற்றவர்களை போல் நினைப்பாள் என்று கருதி அவளை தவிர மற்ற நண்பர்களுடனும், பேராசிரியரிடமும் பேசிவிட்டு, அங்கு தயாராக இருந்த மதிய உணவை உண்ண சென்றேன்.


அங்குவைத்துதான் அது நிகழ்ந்தது. கலா என்னை மார்பில் கைவைத்து தடுத்து நிறுத்தினாள். என்ன நீ ஒரு பெரிய இவனா, இங்க உனக்காக இப்படி ஒருத்தி காத்துட்டு இருக்கேன் நீபாட்டுக்கு வந்தும் என்னை கண்டுகாமல், என்னை தவிர எல்லாரிடமும் பேசுற. இப்போ உன்பாட்டு சாப்பிட வர. நீ மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கிற. என நெற்றியில் அறைந்தாற்போல் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள். அவள் சமாதானம் செய்வதுக்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.


அதன் பின்பு வந்த நாட்கள் அவளின் நினைவுகளிலேயே கடத்தினேன். அவள் என்னை காதலித்தாளா, இல்லை நான் அவளை காதலிக்க தொடங்கினேனா?? புரியாமலே நான் தவித்தேன். வாழ்க்கையில் ஒரு இலக்கை அடையாமல் எந்த வித ஆசைக்கும் தவிக்க கூடாது என எனது மனதை கட்டுப்படுத்த முயன்றேன். மனதை அடக்க நினைத்தால் அது அலையும், அறிய நினைத்தால், அது அடங்கும் என்று எங்கோ கேட்டே நியாபகம். மனதை கட்டுப்பாடுடன் வைக்க சில பயிற்ச்சிகள் செய்தேன். எனது இலட்சியமாக நான் வைத்திருந்த 'இழந்த எனது தந்தையின் சொத்துக்களையும், கடனால் விற்றுவிட்ட எனது அப்பா நடத்திய அந்த ரப்பர் பாக்டரியை மீட்டு, சொந்தமாக தொழில் செய்யவேண்டும்' மேல் அதிக கவன செலுத்த மனதை தயார் செய்தேன். எனது காதல் கனவுகளை ஒதுக்க முயற்சி செய்தேன்.


பயிற்சி முடிந்து, கல்லூரியில் இரண்டாம் ஆண்டும் நன்றாக சென்றது. ஆனால் வழக்கத்தை விட கலா என்னுடன் அதிக நெருக்கமாக பழகினால். ஒருநாள் நண்பர்கள் சிலர் என்னுடன் படத்திற்கு செல்லலாம் என்று கேட்டுகொண்டிருன்தனர். அதை எங்கிருந்தோ கேட்டவள், என்னை பிடித்துகொண்டு, நானும் படத்திற்கு வரேன் என்று கூறி பிடிவாதமாக இருந்தாள். நான் போகவேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் இருந்தேன். இவள் இப்படி கேட்ட பின்பு, பிடிவாதமாக மறுத்துவிட்டேன். அதன் பின் என்மேல் கோபமாக இருந்த கலா, என்னுடன் ஒருநாள் பேசாமல் இருந்தாள். அவளுடன் பேசாமல் இருக்க முடியவில்லை பேசினாலும் இருக்க முடியவில்லை இரு தலை கொல்லி எறும்பு போல் நான் தவித்தேன். அவளோ அடுத்த நாளே என்னுடன் சரளமாக பேச தொடங்கினாள். காதல் என்கிற வார்த்தை சொல்லாமலே காதலர்களாக சுற்றி திரிய ஆரம்பித்தோம். கல்லூரியின் இரண்டாம் ஆண்டும் முடியும் தருவாய். ஒவ்வொருவரும் பல இண்டேர்விவ் அட்டென்ட் பண்ணி பணியில் சேர முயற்சித்து கொண்டிருந்தனர். அந்த இறுதி நாளும் வந்தது, நான் காதலை சொல்வேன் என்று எதிர் பார்த்து காத்திருந்தவள் அவளே சொன்னாள்.


எது வேண்டாம் என்று என்னை நானே கட்டுபாடுக்குள் வைத்திருந்தேனோ, அது நடந்தது. அவள் கைகளில் காதல் வாசகம் எழுதி இருந்த க்ரீடிங்க்ஸ் உடன் வந்திருந்தாள். அதனை என்னிடம் தந்துவிட்டு தந்து விட்டு மூன்று வார்த்தை மந்திர சொல்லை தனது செவ்விதழ்களால் சொன்னாள். நாங்கள் இருந்தது நூலகத்தில் அங்கு யாரும் வரவில்லை.

சொல்லிவிட்டு வார்த்தை முடியும் முன்னமே என்னை அனைத்து கொண்டாள். மனதில் ஆயிரமாயிரம் பூக்கள் மலர்ந்த மாதிரி, உலகத்தில் எங்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை என்கிற பிரம்மை. அந்த நிமிடம் எதை கேட்டிருந்தாலும், மறு பேச்சின்றி கொடுத்திருப்பேன் அப்படி ஒரு சந்தோசம்.

என் வாழ்நாளில் நான் அதிகம் மகிழ்ந்த நாள் என்று கூட சொல்லலாம். வாழ்க்கையாவது இலட்சியமாவது. இவள் தான் இனி எனது உலகம் என்று கூட நினைக்க தொடக்கினேன். நாங்கள் இருவரும் சுய நினைவுக்கு வர சில நிமிடங்கள் ஆனது


பின்னர் நிதானத்துக்கு வந்த இருவரும் ஏதேதோ பேசினோம், எதிர்காலம் பற்றி, ஏன் நான் எனது காதலை மறைக்க முயன்றேன் அடுத்து என்னப்பண்ணலாம் என்று பேசி முடிவு எடுத்தோம். எனது அம்மாவிற்கு கண்டிப்பாக உன்னை ரொம்ப பிடிக்கும், அதுபோல் உன்னது வீட்டிலும் என்னை பிடிக்கணும். மேலும் உங்க வீட்டில் நான் வந்து பெண் கேட்பதற்கு முன் நான் எனது வாழ்க்கை இலட்சியத்தை அடையணும். கண்டிப்பாக எனக்காக குறைந்தது இரண்டு வருடமாவது காத்திருக்க வேண்டு என்று கேட்டேன். நான் முடிக்கும் முன்பே, நீ மட்டும் இல்லை நானும் எங்க வீட்டின் சமதத்துடன் தான் நம்ம திருமணம் நடக்கணும். நாமே இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து சீக்கிரம் எல்லாம் முடிக்கலாம் என்று ஆதரவாக சொன்னாள். நேரம் போவது கூட தெரியாமல் இருவரும் மணிக்கணக்காக பேசினோம்.

பின்னர் திட்டமிட்ட படியே நான் அடுத்த சில தினங்களில் சென்னையில் ஒரு பெரிய பன்னாட்டு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். எனது முதல் சம்பாத்தியத்தில் நான் வாங்கியது எனது அம்மாவுக்கு ஒரு புடவையுயம், காதலியுடன் பேச ஒரு மொபைல் போனும் வாங்கினேன் அதுவரை ஒரு ரூபாய் காயின் பூத்தில் பேசி வந்த நாங்கள் பிறகு சுதந்திரமாக பேசிவந்தோம், பகல், இரவு என பாராமல் பேசினோம். நான் சென்னையிலும். அவள் நாகர் கோவிலிலும் இருந்தாலும் தினம் இரவில் காற்றில் மின்னொலியில் தூதுவிட்டு பேசிவந்தோம். அப்பொழுதுதான் சில நாட்கள் நான் பணியின் நிமித்தமாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டி இருந்தது. அவளுடன் அதிகம் பேசமுடியாமல் போனது.

ஆறுமாத இடைவேளைக்கு பின் சென்னை திரும்பிய உடன் நான் நாககோயில் சென்றேன் ஆனால் அங்குதான் நான் எதிர் பார்க்காத அந்த அதிர்ச்சி காத்திருந்தது.....
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக