http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : உறவாடிக் கெடு! - பகுதி - 33

பக்கங்கள்

சனி, 11 ஜனவரி, 2020

உறவாடிக் கெடு! - பகுதி - 33

இனி கதை, லாவண்யாவின் பார்வையில்.
 
மெல்ல பெரு மூச்சு விட்டு எழுந்தேன். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்! தனியாக! அதனால் வீட்டின் வெளியே வந்து, வீட்டுக்கு ஒரு ஓரமாக போட்டிருந்த சேரில் வந்து அமர்ந்தேன்.
 
அன்று காலை, மதனின் அக்கா என்னிடம் ஃபோன் பண்ணி, ஒரு ப்ராமிஸ் கேட்டாள். அது, ஒரு வேளை மதன் வந்து, நீ இதைப் பண்ணியான்னு ஏதாச்சும் கேட்டா, ஆமாம்னு சொல்லனும் என்று. எதைச் சொன்னாலும் என்று சொல்லியிருந்தாள்.
 
இப்படி ஒரு கதை ஏன் கட்டினாள் என்று எனக்கு புரியாவிட்டாலும், அவளிடம் ஓகே சொல்லியிருந்த ஒற்றைக் காரணத்துக்காகத்தான் நானும் மதன் கேட்டதற்கு ஆமாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அதன் விளைவு…..?
 
திரும்பிப் பார்க்காமலேயே என்னிடம் சொல்லி விட்டுச் சென்றவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் வார்த்தைகளும், அதிலிருந்த உண்மையும், வேதனையும் என்னை உலுக்கியிருந்தது. என்னையே நான் கடிந்து கொண்டேன்.


 
அவ்வளவு கல்மனதா எனக்கு?

[Image: nanjupuram-raghav-ranganathan-monica-anu...dreamz.jpg]

என்னைக் கொடுமைப்படுத்தியவர்களையெல்லாம் விட்டுவிட்டு, என்னைக் காதலிப்பவனிடம்தான், என் வன்மத்தைக் காட்ட வேண்டுமா? நான் உம் என்று சொன்னால், என் வாழ்வை வசந்தமாக்கி விடுவானே! இவனிடமா கோபம், வருத்தம்?
 
என் கோபம் நியாயமானதுதான்! ஆனால் தெரிந்தா செய்தான் இவன்? இன்னமும் இவனுக்கு நடந்ததே தெரியாது. நானும், கொஞ்சம் தைரியமாகச் செயல்பட்டிருக்கலாம்.

 
அன்று, நான் வேகமாக, அவன் அறைக்கு நுழைந்திருந்தால்…. இந்த நிலையே இல்லையே. 

 
நான் மட்டும் யோக்கியமா? சொல்லப் போனால் உண்மை தெரிந்தால், அவன்தான் என்னிடம் கோபப்படுவான். அப்போது நான் என்ன பதில் சொல்லப் போகின்றேன்?

உண்மையில் அவனை கோபித்துக் கொள்ளும் தகுதி இருக்கிறதா எனக்கு?

இனியும் இவனைக் கஷ்டப்படுத்தக் கூடாது. பாவம் சின்ன வயதிலிருந்து எந்த வித நேசத்தையும் அனுபவிக்காதவன், இப்போதும் என் நேசத்துக்காக காத்திருக்கிறான்.
 
அவனைப் பற்றிய யோசனைகள் என் உதடுகளில் மென் புன்னகையை வரவழைத்திருந்தது! அது, அவன்மேல் ஏற்பட்டிருந்த, மறைத்து வைக்கபட்டிருந்த எனது காதலை எடுத்துச் சொல்லியது.
 
எதற்க்காக நான் இப்படி நடந்து கொண்டிருக்கிறேன். இவன் அக்காவையே நான் மன்னித்து விட்டேன், ஆனால் இவனிடம் மட்டும் கோபம் காட்டுகிறேன். இத்தனைக்கும் இன்னமும் ஏன் என்று புரியவில்லை! 

 
ஒருவேளை உண்மை தெரிந்தால், அவன், என் மேல் காட்டப் போகும் கோபத்தை எண்ணி பயந்து, அதை எதிர்கொள்ளத் துணிவில்லாமல்தான் இப்படி நடந்து கொள்கிறேனா? அவன் எப்படி ரியாக்ட் செய்வான் என்று யோசித்தாலே, என் முகம் இருண்டது. மனம் கலங்கியது! அந்த மாற்றம், அதுதான் உண்மை என்று பட்டவர்த்தனமாக எனக்குச் சொல்லியது!

 
என் இயலாமையை கோபத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கிறேன் என்று அறிந்த பின் மனம் இன்னமும் வருந்தியது!

 
எப்படிப் பார்த்தாலும் இப்படியே, எத்தனை நாள் இருக்க முடியும்? இப்படி இருப்பதும் அனைவருக்கும் வருத்தம்தான் தருகிறது, அதுவும் என் மனதைத் திருடியவனுக்கு பெரிய வலியினைத் தருகிறது எனும் போது கூட, இதற்கு தீர்வினைத் தராமல் இருப்பது, அவனுக்கு நான் இழைக்கும் மிகப் பெரும் அநீதி அல்லவா?

எவனுக்கு, என் அன்பை எல்லாம் அள்ளி அள்ளிக் கொடுக்க நினைத்தேனோ, அவனுக்கு அன்பை வழங்காவிட்டாலும், வலியைத் தராமல் இருப்பது என் கடமையல்லவா?


 
வாழ்க்கையில் பெற்றவர்களின் பாசத்தை கொஞ்சமும் அனுபவிக்காத அவனுக்கும், எனக்கும், ஒருவருக்கொருவர்தானே துணை?

 
இந்த இடைபட்ட 8 மாதத்தில் அவனே பயங்கரமாக மாறியிருக்கிறான். உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். இந்தச் சமயத்தில், நான் என் உணர்வுகளை மறைத்தால், அது உண்மையான காதலுக்கு அடையாளமா? உண்மை தெரிந்து அவன் வெறுத்தாலும் பரவாயில்லை. ஆனால், அதை மறைத்து அவனுக்கு வலியினைத் தந்தால், காதலியாக இல்லை… ஒரு பெண்ணாக கூட இருக்க எனக்குத் தகுதியில்லை!

 
மெல்ல என் மனதில் தீர்வு தெரியாவிட்டாலும், ஓரளவு நான் நடந்து கொள்ள வேண்டிய முறை தெளிவாகியது! அந்தத் தெளிவு, மனதிற்கு நிம்மதியைத் தந்தது! அந்த நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக, அடி ஆழத்தில் அவன் மேல் நான் புதைத்து வைத்திருந்த காதல் உணர்வுகளை மேலே கொண்டு வந்தது!

 
அந்த காதல் நினைவுகள் என் புன்னகையை இன்னும் அதிகமாக்கியது!

 
புன்னகையுடன் கூடிய நினைவுகள் அவன் மேலான காதலை இன்னும் ரசனையுடன் அசை போடத் தொடங்கியது! ரசனையான காதல் நினைவுகள், கொஞ்சம் கொஞ்சமாக காதலை, மோகத்தின் பக்கம் கொண்டு சென்றது! அது என் உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.

 அந்தச் சமயத்தில்தான், என் மனதில் மின்னலடித்தாற் போன்று ஒரு நினைவு வந்துச் சென்றது!

[Image: monica-50.jpg]
அது, சற்று நேரத்திற்க்கு முன்புதான், அவன் என்னை, ஏறக்குறைய முழு நிர்வாணமாக பார்த்தான் என்பது!
 
அது, என்னுள் படபடப்பை ஏற்படுத்தியது! அவன் முன் நான் நின்றிருந்த தோற்றம் மெல்ல என் கண் முன் வந்தது. அது, என் கன்னங்களில் வெட்கச் சிவப்பை ஏற்படுத்தியது. என் மூச்சுக் காற்றை சூடாக்கியது!

 
அவன் என் ஜாக்கெட்டை கழட்ட முடியாமல் கோபத்தில் பிய்த்து எறிந்தது புன் சிரிப்பையும், அவன் மேல் பரிதாபத்தையும் கொடுத்தது.

 திருடன், எப்பியும் அவசரம் அவனுக்கு! காதலைச் சொல்றதுக்கே அவசரப் பட்டவனாச்சே!

அந்த நேரத்தில் என்னை ரசித்துப் பார்த்தானோ? இல்லை சரியாகப் பார்க்கவில்லையோ? பாவம்!
 
ஆனாலும் அவ்வளவு கோபமாக நடந்து கொண்டாலும், தவறு செய்தாலும், நான் ஒரு வார்த்தைச் சொன்னவுடன், பொட்டிப்பாம்பாக அடங்கி, திரும்பிச்சென்றதை நினைக்கும் போது என் மனம் பூரித்தது!
 

அந்த நினைவில் என் மனம் பெருமிதத்தில் திளைத்தது!

 
எப்பேர்பட்ட பணக்காரன்! அதி புத்திசாலி! எவ்வளவு அழகிய பெண்ணையும் திரும்பிப் பார்க்காதவன், என்னிடம் மயங்கிக் கிடக்கிறானே! அவனுக்கு நான் என்னச் செய்து விடப் போகிறேன்?

 
ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியைப் போன்றவன், ஒரு சாதாரண பெண்ணின் மனம் கனியக் காத்திருக்கிறான் என்றால், அவன் காதல் எவ்வளவு ஆழமானது?

 
அந்தத் தருணம், என்னை, நானே ஒரு மகாராணியைப் போல் உணர்ந்தேன். என்னுள் ஒரு கம்பீரம் குடியேறியது!

 
என்னை அறியாமல், கால் மேல் கால் போட்டு, தலை நிமிர்ந்து, ஒரு பெருமிதத்தில், புன்னகையுடன், அவன் நினைவுகளில் ஆழ்ந்தேன்!
 

என் அழகை விட, என் அழுகை அவனை பாதிக்கிறது என்கிற பெருமிதம்!

 எல்லாரையும் எளிதில் வெற்றி கொள்ளும் வீரன், என் கை அசைவிற்கு காத்திருக்கிறான் என்கிற இறுமாப்பு! 
 
அவனுடைய சீற்றங்கள் எல்லாம், ஒரு சின்னப் பார்வையில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதென்ற தலைக்கனம்! 

 என் அழகைக் காட்டாமல், அன்பினையும் காட்டாமல், ஏன் எதையும் செய்யாமலேயே, அவனை எனக்கு அடிமையாக வைத்திருக்கிறேன் என்ற திமிர் என்னுள் ஏறியது!

[Image: 2013042113665161761202270224.jpg]
என் மேல் அவ்ளோ லவ்வாடா? நான் எது சொன்னாலும் கேப்பியா?
 
அதென்ன போறப்ப, இனி நீ என் சொந்தம்னு சொல்லிட்டு போற? எந்த மாதிரி சொந்தம்? நான் என்ன உன் பொண்டாட்டியா? ம்ம்?
 

லூசு, என்னை மாதிரி ஒருத்தி டிரஸ்ஸில்லாம இருக்கிறப்பியும், ஃபீல் பண்ணிகிட்டு திரும்பி நிக்குது! இவனை வெச்சுகிட்டு என்ன பண்ண? குறைந்த பட்சம், அப்புடியே என்னைச் சமாதானம் பண்றேன்னு பக்கத்துல உக்காந்துருக்க வேணாம்?

 
இத்தனைக்கும் நானே, என்னை எடுத்துக்கோன்னு சொல்றேன். ஆனா, இவன் என்னமோ ரொம்பத்தான் ஃபீல் பண்றான். 

 
உண்மையில் நான் எப்படிச் சொன்னேன், அவன் எதற்காக திரும்பினான் என்பதெல்லாம் என் மனதிற்கு தோன்றவேயில்லை. என் மனம், என் மணாளனுடன், அவனை திட்டுவது போல் கொஞ்சிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் காதல் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தது!

 
அவன் என் உணர்வுக்கு மரியாதை கொடுத்து திரும்பி நின்றதில் பெருமைப்பட்ட அதே மனம், காதல் என்று வந்தவுடன், ஏண்டா திரும்பி நின்ன என்று அவனிடமே செல்லச் சண்டையிடத் தொடங்கிவிட்டது!

 
சமயங்களில், காதலிலும், காமத்திலும், நியாயம் மிகப்பெரிய அநியாயமாகிறது! அநியாயம், மிகச் சரியான நீதியாகிறது!

 
அவனுடனான நினைவுகளில் எவ்வளவு நேரம் மூழ்கிக் கிடந்தேன் என்று எனக்கு தெரியவேயில்லை! சொல்லப்போனால், நான் உலகத்தையே மறந்து, அவன் நினைவுகளுடன் ஒரு தனி உலகத்திற்குள் இருந்தேன்.

 
உதடுகளில் புன்சிரிப்பும், மனதிற்குள் மகிழ்ச்சியும் குடி கொண்டிருந்தது!

 
திடீரென்று யாரோ என்னை வேகமாக உலுக்கினார்கள்!

 
தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தவள் போல் திடுக்கிட்டு யாரென்று பார்த்தேன்!


அங்கு கோபத்துடன் மதன் நின்றிருந்தான்! அவன் தலையும், சட்டையும் கலைந்திருந்தது. முகத்தில் கடுப்பும், தவிப்பும்!
 
என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கான்?
 
எ… என்ன மதன்?
 
என்னை கோபமாக முறைத்தவன், என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்!
 
நான் மெல்ல, அவனுடன் சென்றேன்.
 
உள்ளே அவனது அறைக்கு இழுத்துச் சென்றவன், பின் வேகமாக கையை உதறிவிட்டு, என்னை முறைத்தான்.
 
எதுக்கு இப்படி முறைக்கிறான்? இவனும், இவன் கோபமும்! சரியான அவசரக் குடுக்கை!
 
என்னுள் நான் எடுத்திருந்த எனது முடிவு, எனக்குள் ஒரு தெளிவைத் தந்திருந்ததால், இனி அவனுக்கு அன்பைத் தர முடிவு செய்துவிட்டதால், அவனது கோபம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. முன்பே அவனது கோபம் பொருட்டல்ல. இப்பொழுதோ, சொல்லவே வேண்டாம்!
 
எங்கடி போன? சொல்லித் தொலைஞ்சிருக்கலாம்ல?
 
ஏன், என்னாச்சு?

மண்ணாங்கட்டி! உன்னைத் தேடி எங்கல்லாம் அலையுறது?
 
நான் இங்கத்தானே இருந்தேன்? எதுக்கு எங்கெங்கியோ தேடுன?
 

ஆமா நல்லா பேசு. நீ இருந்த இடம், ஒரு ஓரமா, மறைவா இருக்கு! நீ அங்க இருப்பன்னு எனக்கு ஜோசியமா தெரியும்? ஃபோன் பண்ணாலும் எடுக்கலை. டிரஸ்ஸு பேக், எல்லாம் இங்க இருக்கு! நான் என்னான்னு நினைக்கிறது? எங்கல்லாம் தேடுறது? ஏண்டி, இப்படி தவிக்க விடுற மனுஷனை?

 
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஃபோன் சைலண்ட் மோடில் போட்டிருப்பேன். இன்னமும் என் உதடுகளில் புன்னகை!

 
சரி சொல்லு! எதுக்கு என்னைத் தேடுன? என்ன விஷயம்!

அவனிடம் மெல்லிய தடுமாற்றம்! விஷயம்லாம் இல்லை. சும்மாதான் தேடுனேன்!

 
இப்பொழுது என் முகத்தில் ஆச்சரியம்.

 
விஷயமில்லாமியா இவ்ளோ கோவம்? எங்க போயிருக்கப் போறேன்? கொஞ்ச நேரத்துல வந்துடப் போரேன்! அதுக்கு எதுக்கு எங்கெங்கியோ தேடி அலையனும்? ம்ம்?

 
என் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை…

 
சொல்லு!

 
இல்லை… அது வந்து. கொஞ்சம் தடுமாறியவன், பின் சொன்னான், நான் உன்கிட்ட நடந்துகிட்ட முறைக்கு அப்புறம், கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா, உன்னைக் காணோம். ஃபோன் பண்ணா எடுக்க மாட்டேங்குற!

 
சரி, வந்துடுவன்னு பாத்தா, இருட்டாகிட்டே இருக்கு, ஆனாலும் உன்னைக் காணோம்! நான் என்னான்னு நினைக்கிறது?

 
நீ கோவிச்சிகிட்டு எங்கியாவது போயிட்டியா? எங்க இருக்க? கையில காசு இருக்கா? எல்லாத்துக்கும் மேல இந்த இருட்டுல நீ எங்கியாவுது மாட்டிகிட்டன்னா? உனக்கு வேற குளிர் தாங்காது! ஸ்வெட்டர் எடுத்துகிட்டியா என்னான்னு கூடத் தெரியலை. தவிர, நான் பண்ணதுக்கு, நீ ரொம்ப வருந்தி, எந்த மாதிரி மனநிலையில இருக்கன்னு கூட தெரியலை!

 
கொஞ்சம் இடைவெளி விட்டவன், பெருமூச்சு விட்ட படி சொன்னான். உள்ளுக்குள்ள கொஞ்சம்… ரொம்பவே பயந்துட்டேன்… ஆனா நீ என்னான்னா, ஹாயா, இங்கியே ஓரமா உட்கார்ந்துகிட்டு இருக்க! எனக்கு எப்புடி இருக்கும்?!

 
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன், இப்போதும், என் மேலான அக்கறையில், இருக்கிறான். எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பதைக்கிறான்!

 
என் மனம் அவன் மேலான காதலில் வெறி கொண்டது! என்னையே கடிந்து கொண்டது.

இதற்கு மேலும், இவனைத் தவிக்க விட்டால், நானே என்னை மன்னிக்க மாட்டேன்.
மெல்ல, அவன் கையைத் தொட்டேன்.

 சாரி மதன். நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கலாம்னு தோணுச்சு. அவ்ளோதான். ஃபோன் சைலண்ட்ல போட்டிருந்தேன் போல. நீ, தேடுனது எல்லாம் எனக்கு தெரியாது! சாரி! வெரி சாரி! நான் வேணும்னுல்லாம் பண்ணலை.

 
ப்ச்… விடு! நீ சேஃபா இருக்கிறதே போதும். நீ போயி ரெண்டு மணி நேரம் ஆகுது. போனவ ஸ்வெட்டரோ, ஓவர் கோட்டோ எடுத்துட்டு போயிருக்க வேண்டியதுதானே? உனக்குதான் குளிர் ஆகாதுல்ல???

 
அப்போதுதான் நான் அதை உணர்ந்தேன். என் உடல் மிகவும் சில்லென்று இருந்தது. குளிரில், என் உடல், என்னையறியாமல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. இவ்வளவு நேரம் அவனது உணர்வுகளில் மூழ்கிக் கொண்டிருந்தவளுக்கு இது எதுவும் தெரியவில்லை. இப்பொழுது, அவன் சொன்னவுடன் தெரிகிறது.

 
என்ன மாதிரியான காதல் இது? என் உணர்வுகளில், அவன் தடுமாறுகிறான். அவன் நினைவுகளில், நான் என் நிலை மறக்கிறேன்?!

 
இப்போது சுயநிலை வந்தவுடன், குளிர் எனக்கு நன்றாக உறைக்க ஆரம்பித்தது. குளிர் மெல்ல மெல்ல என் உடலில் ஏறிக் கொண்டிருந்தது.

 
வெளியே ஓரளவு இருட்டியிருந்தது. நவம்பர் மாத ஊட்டி குளிர் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நடுக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

 
நான் கைகளை தேய்த்துக் கொண்டேன். மெல்ல என்னை நானே கட்டிக் கொண்டேன். உதடுகளை அழுந்தப் பற்றிக் கொண்டேன்.

ஆனால், ஏற்கனவே என் உடலில் ஏறியிருந்த குளிரும், இப்பொழுது அதிகமாகும் குளிருக்கும் அது போதவில்லை!
 
நான் என்னை சாமாளிக்க முயற்சி செய்து கொண்டே, அவனைப் பார்த்தேன்.

ஆனால், அவனுக்கு புரிந்து விட்டது, என்னுடைய தடுமாற்றமும், செயலும் தெளிவாகச் சொல்லியது என் நிலையை!

 
டக்கென்று, பெட்டில் இருந்த கம்பளியை எடுத்து என் மேல் போர்த்தியவன், என்னைப் பிடித்து அவன் பெட்டில் உட்கார வைத்தான். பின் வேகமாகச் சென்றவன், ஃபிளாஸ்க்கில் இருந்து, சூடாக டீயை கொண்டு வந்து கொடுத்தான்.

 
அது ஓரளவு குளிருக்கு இதமாய் இருந்தாலும், ப்ளாங்கட் எனக்கு கதகதப்பை கொடுத்தாலும், உள்ளுக்குள் ஏறியிருந்த குளிர், இன்னும் என் உடலை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.

 
டீயை குடித்தவுடன் வாங்கி டேபிளில் வைத்தான்.

 
இப்ப பராவாயில்லையா? அவன் குரலில் அக்கறை!

 
ம்ம்… பராவாயில்லை. சொல்லும் போதே என் உதடுகள் தந்தியடித்தது.

ம்க்கும்… நான் டாக்டர் இருக்காங்களான்னு கேக்கட்டுமா என்று நகர முயன்றவனை எனது கைகள் தடுத்தது!

 
கொ… கொஞ்சம் பக்கத்துலியே இரேன்!

 
நான் சொன்னது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மெல்ல என் அருகில் அமர்ந்தான். நான் அவன் கையை விடவில்லை.

 

இப்போது அவன் கோபம் குறைந்திருந்தது.

 
ப்ச்… இதுக்குதான் சொன்னேன், தனியா, ஸ்வெட்டரு இல்லாம போகாதன்னு! இப்பப் பாரு, இப்படி குளிருது உனக்கு. நான் சொல்ற பேச்சை மட்டும் கேக்க மாட்டேன்னு சபதம் எடுத்திருக்கியா என்ன?


 

அவன் குரலில் சலிப்பு இருந்தாலும், அவனது கோபமும், சலிப்பும் கூட என் மேல் கொண்ட அக்கறையால் என்பது, ஏற்கனவே அவன் மேல் நான் அவன் கொண்டிருந்த காதலைக் கூட்டியது.

 
அவனையே, சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது புன்னகையும், பார்வையும், அவனையே கொஞ்சம் குழப்பியது! இருந்தும் சலிப்புடன் சொன்னான்…
 

இந்தப் பார்வைக்கு மட்டும் கொறைச்சலே இல்லை. சொல்ற பேச்சையும் கேக்குறதில்லை. பக்கத்துல வந்தாலும் முறைக்கிறது. ஆனா, ஏதாச்சும் சொன்னா மட்டும், ஒண்ணுமே தெரியாத மாதிரி இப்பிடி பாக்…

 
அவனது பேச்சு பாதியிலேயே நின்றது. அவன் கண்கள் விரிந்தது. மனமோ குழம்பியது!

ஏனெனில், அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான், என்னை கோபமாக திட்டியவனின் மடியிலேயே சாய்ந்து கொண்டேன்! அவன் மடியில் நான் படுத்த உடன் அவன் பேச்சு நின்றது!
ஏய், என்ன ஆச்சு? இதுவரை நானாக, அவனை நெருங்காதவள், அவன் என் பக்கம் வரும்போதும், கோபம் காட்டியவள், இன்று நானாக மடி சாய்ந்ததும் குழம்பினான். பதறினான்!
 
ப்ச்… ஒண்ணுமில்லை. நீ பக்கத்துலியே இரு!
 
இருந்தாலும், அவன் பதற்றம் குறையவில்லை. ரொம்ப குளிருதா? டாக்டரை கூப்பிடட்டுமா?

நான் தலையசைத்தேன் வேண்டாமென்று. அதெல்லாம் வேணாம். நீ, இங்கியே இரு! ப்ளீஸ்.
 

கடைசியாக நான் சொன்ன ப்ளீஸ், அவனுள் என்னமோ செய்தது. அப்படியே அமர்ந்திருந்தான். மற்றபடி அவன் என்னை எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை. அந்த நிலை எங்கள் இருவருக்குமே பிடித்திருந்தது. முக்கியமாக எனக்கு!

 

அப்படியே இருந்தோம் சிறிது நேரம். என் மேலுடல் மட்டும் ப்ளாங்கெட்டால் போர்த்தப்பட்டிருந்தது. கால் முழுக்க வெளியே தொங்க விட்டிருந்தபடியால், அது வழியாக குளிர் என் உடலில் ஏற ஆரம்பித்தது.

 

நான் இன்னமும், நடுங்குவது உணர்ந்த அவன், நல்லா போர்த்திக்கோ, என்று சொல்லி வலுக்கட்டாயமாக எழுப்பி, என்னை நன்றாக படுக்க வைத்தவன், என் உடல் முழுக்க போர்த்தி விட்டு, வெளியே சென்று கதவை சாத்திவிட்டு, உள்ளே வந்து ஹீட்டரை ஆன் செய்தான். பின் என் அருகில் வந்தவன், ஹீட்டர் போட்டிருக்கேன், சரியாகிடும் என்று எனக்கு ஆறுதல் சொன்னான்.

 

நான் படுத்த படியே, எனக்கு வலது புறம் இருந்த காலி இடத்தை தட்டி அமரச் சொன்னேன்.

 

அவன் தயங்கியபடியே என்னருகில் அமர்ந்தான்.

 

அவனது தயக்கத்தைப் பார்த்து, எனக்கு, உள்ளுக்குள் சிரிப்பு வந்தது! நீயாடா, என்னை ரேப் பண்ண வந்த?
 
[Image: nanjupuram-actors-actress-raghav-monika-...dreamz.jpg]

என் மேலுள்ள காதலால், அக்கறையால், நான் செய்யாத ஒன்றை செய்ததாய் நினைத்து என்னை ரேப் பண்ண வந்தவன், இப்பொழுது, அதே காதலின் மிகுதியால், என் அருகில் அமரக் கூட தயங்குவது கண்டு, என் உள்ளம் இன்னமும் அவன் மேல் காதல் கொண்டது.
 

இதுவல்லவோ ஆண்மை! என் மேல் பலவந்தமாக பாய்வதா ஆண்மை! நான் மறைமுகமாக அன்பைத் தெரிவிக்கும் போதும், தயங்குவதே ஆண்மை!

 

நான் மிக நெகிழ்ந்திருந்தேன், அவனது அன்பில்! அந்த நெகிழ்ச்சியின் காரணமாக, அவன் அருகில் அமர்ந்தவுடன், மீண்டும் அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டேன்!

 

என் முகம் ஏறக்குறைய, அவன் வயிற்றில் முகம் புதைத்திருந்தது. என் கைகள், அவனது இடுப்பை சுற்றியிருந்தன.
 
இன்னமும், அவன் தயங்கிக் கொண்டுதான் இருந்தான். அது, அவன், இன்னும் எதுவும் செய்யாமல் இருப்பதிலேயே தெரிந்தது! எனக்கும் கூட, நான் என்ன எதிர் பார்க்கிறேன் என்று தெரியவில்லை!
 

அவனது உடல் கூட கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது! அது குளிரிலா அல்லது எனது நெருக்கம் தந்த தயக்கத்தாலா என்று தெரியவில்லை!

 

நான், எனது ப்ளாங்கெட்டையே, அவனுக்கும் போர்த்தினேன். அவனையும் சரியாக படுக்க வைத்தவள், இப்பொழுது அவன் மார்பினுள் புதைந்து கண்களை மூடிக் கொண்டேன்!

 

அந்தத் தருணத்தை கண் மூடி ரசித்தேன். அவனுக்கும், எனக்குமான முதல் அணைப்பு! இது நாள் வரை நான் அனுபவித்த என் வேதனைகள், என் பிரச்சினைகள் எல்லாம் போய், நான் கை விட்ட எனது காதலை மீண்டும் கண்டெடுத்த நிம்மதி, ஒரு பெரும் பாதுகாப்பு என் மனதுள் தோன்றியது.

 

என்னையறியாமல், என் கண்கள் கலங்கியது!

 

அவன் உடலில் இருந்து வந்த ஆண்மை கலந்த வாசத்தை மெல்ல சுவாசித்தேன்.

கண் மூடியிருந்தாலும், நான் தூங்கவில்லை என்பதை உணர்ந்தவன், மெல்ல காதோரம் இருந்த என் முடிக் கற்றைகளை சரி செய்தான். என் முன் நெற்றியை வருடினான்.

அவனது இன்னொரு கை, என்னை மெல்ல அணைத்திருந்தது.

 

இப்ப பரவாயில்லையா? இன்னும் குளிருதா?

 

நான் பதில் சொல்லவில்லை!

 

அவனது கை, மெல்ல என் கன்னத்தை வருடிக் கொடுத்தது. இன்னொரு கை, முதுகை ஆறுதல் படுத்துவது போல், தடவிக் கொடுத்தது.

 

மெல்ல அவன் விரல்கள் என் காது மாடல்களை வருடியது!

எனக்கு கூசியது! அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டேன் பேசாமல். இன்னமும் என் கண்கள் மூடித்தான் இருந்தது.

 

அப்படியே வருடிக் கொடுத்த கை, மெல்ல அவளது பின்னங்கழுத்துக்குச் சென்றது. மெல்ல அவளது பின்னங்கழுத்தில் வருடிக் கொடுத்தவாறு, விரல் வட்டம் போட்டது.

எனக்கு குறுகுறு என்றிருந்தது. இன்னமும் அவனை இறுக்கிக் கொண்டேன். என் மூச்சுக்காற்று அவனது கன்னங்களைத் தீண்டியது. என் உதடுகள், அவனது கழுத்தில் உரசியது.

 

அவனால் நம்ப முடியவில்லை போலும். எப்படி திடீரென்று, அவனைத் தேடி வந்திருக்கிறேன் என்று திகைத்தான்.

 

லாவண்யா.

 

ம்ம்… ஒரு வேளை தூக்கத்தில் இருக்கிறேன் என்று செக் செய்கிறானோ? எனது உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது.

 

அதற்கு மேல் முன்னேறவும் அவனுக்கு தயக்கம். ஆனால், எனது அருகாமை, அவனுக்குள் கொஞ்சம் சூடேற்றவும் ஆரம்பித்திருந்தது. என்னையும் கூட கொஞ்சம் ஆட்டியிருந்தது.

 

நான் ஒரு முடிவு எடுத்திருந்தேன். அது, அவன் இப்பொழுது, என்ன செய்தாலும் நான் தடுக்கப் போவதில்லை. ஆனால், வாய்விட்டு எதுவும் சொல்லப் போவதில்லை! (எவ்ளோ சேஃப் கேம்?!). இனி அவன் முடிவு.

 

மெல்ல அவன் கை, என் தோள்களில் உலாவர ஆரம்பித்திருந்தது. அப்படியே, மெல்ல முதுகுப் புறம் சென்று, அங்கேயே கொஞ்சம் தங்கி, வருடி, பின் தயங்கித் தயங்கி இடையை நோக்கி நகர்ந்தது.

 

இடையை அடைந்த அவன் கை, மெல்ல என் இடையைப் பற்றியது! எனக்குள் ஒரு சின்ன அதிர்வு! அவனது கை, என் இடையை முதன் முறையாகத் தொடுகிறது! அந்த அதிர்வில் இருந்து தப்பிக்க, புகலிடம் தேடி, அவன் மார்பிலேயே இன்னும் ஒன்றினேன்.

 

இருந்தும் எந்த வித உணர்வோ அல்லது எதிர்ப்போ காட்டவில்லை. நான்தான் ஏற்கனவே முடிவெடுத்திருந்தேனே!

 

இவ்வளவு நேரம், என் அமைதி அவனுக்கு வசதியாக இருந்தது. இப்பொழுது, அதுவே அவனைத் தடுத்தது! இடையைத் தொட்ட கைகள், அடுத்து முன்னேற பயப்பட்டு அங்கேயே தங்கி நின்றன. அதே சமயம், இடையில், சும்மாவும் இல்லை!

 

அவனது தடுமாற்றம், அவனது ஆண்மையை எனக்குச் சொல்லியது. எனக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.

 

ஹேய்…

 
அவன் என்னைக் கூப்பிட்டான். நான் எந்த சலனத்தையும் காட்டவில்லை.

[Image: nagalapuram_stills_0211140725_06.jpg]

 
என்னிடமிருந்து, சின்ன ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறான்.

 
அவனுக்கு புரியவில்லையா? இதுவும் ஒருவித ஒத்துழைப்புதான் என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக