http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : ரேணுகாவும் சிவாவும் - பகுதி - 2

பக்கங்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2020

ரேணுகாவும் சிவாவும் - பகுதி - 2

ரேணுவின் தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்த சிவாவுக்கு அவளுடைய ஜடை அவனை கட்டி இழுப்பதைப்போல இருந்தது. ரேணுவின் அழகான இந்த கூந்தலில் ஒரு கத்தரிக்கோல் விளையாடினால் எப்படி இருக்கும் என நினைத்தான். ரேணுவின் முடியை வெட்டவேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் பொங்கிவந்தது. தன் எண்ணத்தை அடக்கிக்கொண்டு காலடி சத்தம் வராமல் மெல்ல ரேணுவை நோக்கி நடந்தான். கண்ணாடி முன் அமர்திருந்த ரேணு, தன் முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணலாமா என்று நினைத்துக்கொண்டிருந்தாள். நல்லவேளையாக சிவா அருகில் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டு மெல்ல ஜடையை அவிழ்க்கத்துவங்கினாள். ஒருவேளை சிவா அருகில் இருந்தால், “மொட்டை பாப்பா” என கிண்டல் செய்வான். அவளுக்கு அவன் மொட்டை என்று சொல்லும்போதெல்லாம் தன்னை மொட்டைத்தலையோடு நினைத்துப்பார்ப்பாள். அப்படி நினைக்கையில் கொஞ்சம் கூச்சமாகவும், பயமாகவும் இருக்கும். மறுபடி இந்த நீண்ட கூந்தலை மொட்டை அடிக்க ஆசை வந்துவிடுமோ என்று ஒரு பயம் இருந்தது. ஆனாலும் அவள் ஜடையை கையில் பிடித்து இருக்கும்போது இந்த உலகமே அவள் கைகளில் இருப்பது போல தோன்றும். தன்னுடைய அடர்த்தியான முடியை திருப்தியாக பார்த்துவிட்டு, ஜடையை பிரித்துக்கொண்டே கண்ணாடியில் பார்த்தாள். சிவா அறைக்குள் வருவதைக்கண்டதும், ஒருவித உணர்ச்சியில் கொஞ்சம் படபடத்தாள். மறுபடியும் சிவா அவள் தலைமுடியை வைத்து கிண்டல் செய்வானோ என நினைத்து அப்படியே தன் ஜடையை மீண்டும் கொண்டையாக போட்டாள். கொண்டையை போட்டுக்கொண்டே திரும்பி சிவாவை பார்த்து ” என்ன அண்ணா, இந்த பக்கம். எதுவும் வேணுமா?” என்றாள். ரேணு அவனைக்கண்டதும் மீண்டும் கொண்டை போட்டுக்கொண்டு அவளுடைய தலைமுடியை மறைத்தது அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவன் ரேணுவின் அருகில் வருவதற்குமுன் ரேணு கொண்டைபோட்டு முடித்திருந்தாள். கருநாகம்போல நீண்டு தொங்கிய அவளுடைய ஜடை இப்போது மெல்ல பெட்டிப்பாம்பு போல சுருண்டு அவள் தலையில் கொண்டையாக அமர்ந்தது. ரேணு திரும்பி சிவாவை பார்த்து அமர்ந்தாள். அவள் கொண்டை அவன் கண்களில் இருந்து மறைந்தது. ஆனால் கண்ணாடியில் அவளுடைய கொண்டையை பார்த்தான். இவ்வளவு அடர்த்தியான அவளுடைய கொண்டை அவன் கைகளில் சிக்காமல் கண்களுக்கு மட்டும் விருந்தளித்தது.


ரேணு: என்ன அண்ணா,  எதுவும் வேணுமா?
சிவா: ஆமா ரேணு… அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்.
ரேணு: சொல்லுங்க அண்ணா
சிவா: எதுக்கு இப்போ என்னை பார்த்ததும் கொண்டை போட்டுகிட்ட?
ரேணு: உங்களுக்கு தெரியாதா? நீங்க எப்போ பார்த்தாலும் என்னை “மொட்டை பாப்பா”னு கிண்டல் பண்றீங்க. அதான் உங்ககிட்ட என்னோட முடியை காட்டகூடாது-னு கொண்டை போட்டேன்.
சிவா: ஹாஹாஹா…. என்ன ரேணு இன்னும் சின்னபொண்ணு மாதிரி பேசுற. நான் உன்னோட முடியை பார்க்காமலா இருக்கேன்?
ரேணு: அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கிண்டல் பண்றதை நிறுத்துற வரைக்கும் நான் இப்படிதான் உங்க முன்னாடி என்னோட முடியை காட்ட மாட்டேன்.
சிவா: சரி. இனிமேல் உன்னை நான் கிண்டல் பண்ணலை. போதுமா?
ரேணு: உண்மையாவா இல்ல விளையாட்டுக்கு சொல்றீங்களா?
சிவா: இல்ல ரேணு உண்மையா சொல்றேன். இனிமேல் உன்னை நான் கிண்டல் பண்ணலை.
ரேணு: தாங்க்ஸ் அண்ணா. சரி இப்போ சொல்லுங்க என்ன வேணும்.
சிவா: அதான் சொன்னேன்-ல இனிமேல் கிண்டல் பண்ணலை-னு. உன்கிட்ட அதை சொல்லத்தான் வந்தேன்.
ரேணு: என்ன திடீர்னு இப்படி ஒரு ஞானோதயம்?
சிவா: ஞானோதயம் எல்லாம் ஒண்ணும் இல்ல. காலை-ல உன்னோட ஜடையை பார்க்கும்போதுதான் இவ்ளோ நீளமான முடி இருக்கிற உன்னைப்போய் நான் “மொட்டை பாப்பா”னு சொல்றேனேனு தோணுச்சு. அதான் வந்தேன்.
ரேணு: அப்பாடா.. ஒருவழியா எனக்கு நீளமான முடி இருக்குனு ஒத்துக்கிட்டீங்களே. அது போதும்.
சிவா: நான்தான் இனிமேல் கிண்டல் பண்ணலை-னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் ஏன் இன்னும் கொண்டை போட்டு இருக்க?
ரேணு: உண்மையை சொல்லணும்னா உங்க முன்னாடி என் கொண்டையை அவிழ்க்க கொஞ்சம் தயக்கமா இருக்கு. ஏதோ உங்ககிட்ட மொட்டை அடிக்கிறதுக்காக என்னோட முடியை விரிக்கிறமாதிரி இருக்கு.
சிவா: அடிப்பாவி. நீ இன்னும் அதை மறக்கலையா?
ரேணு: எப்படி அண்ணா மறக்கமுடியும். ஆனா, இதுவரைக்கும் இன்னும் என்னோட அம்மாகிட்டகூட சொல்லலை.
சிவா: நானும் இன்னும் அதை மறக்கலை ரேணு. அப்பப்போ நினைச்சு பார்ப்பேன்.
ரேணு: நல்லவேளை.. அன்னைக்கே நீங்க என்னை மொட்டை அடிக்க ஒத்துக்க வச்சிட்டீங்க…. இல்லைனா இப்போ எனக்கு இருக்கிற நீளமான முடியை மொட்டை அடிக்கணும்-னு சொன்னா அவ்ளோதான். நான் செத்தேபோயிருவேன்
சிவா: ஆனா, உண்மையை சொல்லு.. அன்னைக்கு மொட்டை அடிக்கும்போது உனக்கு எப்படி இருந்தது.
ரேணு: அது சூப்பரா இருந்துச்சு அண்ணா.
சிவா: எப்போவாவது மறுபடி மொட்டை அடிக்கணும்-னு உனக்கு தோணுச்சா?
ரேணு: தோணும் அண்ணா. இது மாதிரி கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து, என்னோட முடியை விரிக்கும்போதெல்லாம், மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்-னு தோணும். ஆனா நீளமான முடி இல்லாம இருக்கிறததை நினைச்சுப்பார்த்தா கஷ்டமா இருக்கும்.
சிவா: உனக்கு பிடிச்சிருந்தா, உன்னோட முடியை பத்தியும், அப்புறம் மொட்டை பத்தியும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ ஃப்ரீயா இருந்தா மேல என்னோட ரூம்க்கு வா. பேசலாம்.
ரேணு: சரி அண்ணா. அப்பா இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்புறார். அவர் போனதுக்கு அப்புறமா அம்மாகிட்ட சொல்லிட்டு வறேன்.
சிவா: அம்மாகிட்ட சொல்லப்போறியா?
ரேணு: பயப்படாதீங்க அண்ணா. இதைப்பத்தி சொல்லமாட்டேன். வேற ஏதாவது சொல்லிட்டு வறேன்.
சிவா: சரி. நானும் அத்தைகிட்ட சொல்லிட்டு போறேன். நீ வா.
சொல்லிவிட்டு சிவா ரேணுவிண் அறையை விட்டு வெளியேறினான். ரேணுவோடு பேசும்போது அடிக்கடி அந்த மேஜையின் மேல் இருந்த கத்தரிக்கோலை பார்த்தான். ஆனால் இப்போதே பேசி ரேணுவை சம்மதிக்கவைத்து முடி வெட்டுவது கஷ்டம் என அவனுக்குத்தோன்றியது. தவிர ரேணு அவனிடம் சந்தோசமாக பேசினாலும் அவள் கொண்டையை கழட்டாமல் பேசியது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. அவள் சம்மதம் இல்லாமல் அவள் முடியை தொடுவது அநாகரிகம் என்று கருதினான். சாந்தி எப்பொழுதும் அவனிடம் வந்து முடியை ட்ரிம் பண்ணுவது அவன்மேல் உள்ள நம்பிக்கையில் தான். அதே நம்பிக்கையை ரேணுவிடமும் பெறவேண்டும் என்று நினைத்தான். கடவுளிடம் முழுநம்பிக்கை உள்ள பெண்கள் மட்டுமே தங்கள் கூந்தலை காணிக்கையாக கொடுப்பார்கள். அதேபோல் அதற்கு இணையான நம்பிக்கையை பெற்று, அதற்குபின்னர் அவர்களின் விருப்பதிற்கு உட்பட்டு மட்டுமே பெண்களின் தலைமுடியை வெட்டவேண்டும் என்று சிவா உறுதியாக இருந்தான்.   சிவா அப்படி உறுதியாக இருப்பதற்கு ஒரு வழுவான காரணம் இருந்தது. எந்த நிலையிலும் அதில் இருந்து பின்வாங்ககூடாது என்று நினைத்தான். மீண்டும் சமயலறையில் சென்று பார்த்தபோது, சாந்தி சமையலை முடித்துவிட்டு ஒதுங்கவைத்துக்கொண்டிருந்தாள்.
சாந்தி: என்ன சிவா, ரேணுவை சமாதானம் பண்ணிட்டயா?
சிவா: கொஞ்சம் சமாதானம் பண்ணிட்டேன். ஆனா இன்னும் அவகிட்ட பேசணும். அப்புறமா மேல என்னோட ரூம்க்கு வரச்சொல்லி இருக்கேன். பார்க்கலாம்.
சாந்தி: சரி.. சரி. அப்போ இனிமேல் அத்தையோட முடியை கண்டுக்கமாட்டே.
சிவா: என்ன அத்தை இப்படி சொல்றிங்க. என்னை நம்பி எப்பவுமே முடியை கொடுக்கிறது நீங்க மட்டும்தான்.
சாந்தி: சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா சிவா.
சிவா: நான் இன்னைக்கு ரேணுகிட்ட பேசினதுக்கு அப்புறம் உங்களுக்கு ரெண்டு சர்பிரைஸ் இருக்கு.
சாந்தி: அப்படியா. சரி நான் காத்திருக்கேன். உனக்கும் ரெண்டு சர்பிரைஸ்  இருக்கு.
சிவா: சூப்பர் அத்தை. நானும் காத்திருக்கேன்.
சிவா சாந்தியிடம் சொல்லிவிட்டு அவனுடைய அறைக்கு சென்றான். மதியம் ஒரு வண்டியில் சுதாகர் கிளம்பிச்சொல்லும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். சாந்தியும் ரேணுவும் வீட்டின் கேட்முன் நின்றிருந்தார்கள். ரேணு நேராக மாடிக்கு வருவாள் என எதிர்பார்த்தான். ஆனால், இருவரும் நிமிர்ந்துகூட பார்க்காமல் வீட்டுக்குள் சென்றனர். சிவா ஜன்னல் அருகே ரேணு வருவாள் என்று நினைத்து பதினைந்து நிமிடங்கள் வரை நின்றிருந்தான். ஆனால் ரேணு வரவில்லை. இன்று ரேணு வருவது கடினம்தான் என்று நினைத்துக்கொண்டான். சிறிதுநேரம் கட்டிலில் படுத்து இருந்தான். பின்னர் வெளியே செல்ல தன்னுடைய பைக் சாவியை எடுத்துக்கொண்டு கீழே வந்தான். பைக்கை ஸ்டார்ட் செய்தபோது ரேணு அழைத்தாள்.
ரேணு: என்ன அண்ணா, என்னை வரச்சொல்லிவிட்டு எங்க போறீங்க?
சிவா: கொஞ்சம் வெளிய ஒரு வேலை இருக்கு. அதான்.
ரேணு: நான் இப்போதான் மேல வரலாம்-னு பார்த்தேன். சர்பிரைஸா மேல வரலாம்-னு பார்த்தா நீங்க வெளிய போறீங்க. சரி விடுங்க. உங்களுக்கு என்னோட சர்பிரைஸ தெறிஞ்சுக்க கொடுத்துவைக்கல. அவ்ளோதான்.
சிவா: என்ன….. நீயும் எனக்கு சர்பிரைஸ் தரப்போறியா?
ரேணு: நீயும்-னா? வேற யார் உங்களுக்கு சர்பிரைஸ் தரப்போறா?
(சிவா மாட்டிக்கொண்டோம் என மனத்திற்குள் நினைத்தான். பின்னர் மெல்ல சமாளித்தான்)
சிவா: அதில்ல ரேணு,  நான்தான்  உனக்கு ரெண்டு சர்பிரைஸ் கொடுக்கணும் நினைச்சேன். ஆனால் நீயும் அதையே சொன்னதும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்.
ரேணு: வாவ்… நானும் உங்களுக்கு ரெண்டு சர்பிரைஸ் வச்சிருக்கேன்.
*****
(சிவா மனதில் நினைத்துப்பார்த்தான்.
சிவா சாந்திக்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது
சாந்தி சிவாவிற்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது
சிவா ரேணுவுக்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது
ரேணு சிவாவுக்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது)
*****
சிவா: அப்போ இன்னைக்கு எல்லாருக்கும் ஒரே சர்பிரைஸ்தான். சரி வா. நாம மேலபோய் என்னோட ரூம்-ல பேசுவோம்.
இருவரும் பேசிக்கொண்டே மேலே படிக்கட்டில் ஏறிச்சென்றனர். ரேணுவை முன்னே நடக்கவிட்டு சிவா பின்தொடர்ந்தான். ரேணு கொண்டை போடாமல் ஜடையை நீளமாக தொங்கவிட்டு வந்தது அவனுக்கு சந்தோசமாக இருந்தது. ரேணுவை சம்மதிக்க வைப்பது கடினமில்லை என புரிந்துகொண்டான். ரேணுவும் ஒரு காரணத்தோடுதான் முன்னாடி நடந்தாள். தன்னுடைய நீளமான முடியை சிவா பார்க்கவேண்டும் என நினைத்தாள். அவ்வாறு நீளமான முடியை பார்த்தபின் எப்படி தன்னுடைய முடியை புகழ்ந்து பேசுவான் என கேட்கவேண்டும் என தோன்றியது. நடக்கும்போது மெதுவாக தன்னுடைய ஜடையை முன்னாடி எடுத்துப்பார்த்து மீண்டும் பின்னால் தூக்கிப்போட்டாள். ரேணு தன்னை சீண்டுவதற்காக இப்படி ஜடையை தூக்கிப்போடுகிறாள் என்பதை புரிந்துகொண்டான். அறைக்குள் நுழைந்ததும் ரேணு சிவாவின் நாற்காலியில் அமர்ந்தாள். சிவா அருகில் இருந்த மேஜையில் அமர்ந்தான். ரேணு மறுபடி அவளுடைய கையை எடுத்து கழுத்தின் பகுதியில் இருந்து ஜடையை பிடித்து இழுத்து முன்னாடி தூக்கிப்போட்டாள். அப்போது அவளுடைய ஜடை சிவாவின் மேல் பட்டு அவள் மடியில் வந்து விழுந்தது.
ரேணு: சாரி அண்ணா… என்னோட முடி நீளமா இருக்கா.. அதான் உங்கமேல கொஞ்சம் இடிச்சது.
சிவா: (சிரித்துக்கொண்டே) நல்லா தெரியுது. இன்னைக்கு உன்னோட முடி நீளமா இருக்குனு எனக்கு காட்டணும் அவ்ளோதான.
ரேணு: பரவாயில்லையே.. கண்டுபிடிச்சுடீங்க.
சிவா: அதான் நீ வரும்போதே பார்த்தேனே. உன்னோட ஜடையை நல்லா ஆட்டிக்கிட்டே வந்ததை.
ரேணு: சும்மா உங்களை கலாட்டா பண்ணலாம்-னு பார்த்தேன்.
சிவா: நான் இனிமேல் உன்னை கலாட்டா பண்ணலை-னு சொன்னதும் நீ இப்போ என்னை கலாட்டா பண்ற.
ரேணு: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. எவ்ளோநாள் நீங்க என்னை கலாட்டா பண்ணி இருக்கீங்க. அதான் இன்னைக்கு ஒரு நாள் உங்களை நான் என்னோட முடியை வச்சு சீண்டிப்பார்த்தேன்.
சிவா: சரி சரி. ஏதோ எனக்கு சர்பிரைஸ் இருக்குனு சொன்னியே என்ன அது.
ரேணு: நான் சொல்றேன் அதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட என்ன பேசணும்.
சிவா: சரி சொல்றேன் கேளு. நான் உன்னை எப்போவும் எதுக்கு “மொட்டை பாப்பா”-னு கிண்டல் பண்ணுவேன்-னு தெரியுமா?
ரேணு: ஏன்னா… எனக்கு மொட்டை போட்டதுக்கு அப்புறம் யாராவது என்னை மொட்டை-னு சொன்னா கோவம் வரும். என்னை வெறுப்பேத்த அப்படி சொல்லுவீங்க.
சிவா: இல்ல.
ரேணு: அப்புறம்
சிவா: எனக்கு முடி நீளமா இருந்தா பிடிக்கிற மாதிரி மொட்டையும் பிடிக்கும். நான் யார்கிட்டயும் இவ்ளோ தைரியமா மொட்டை-னு கிண்டல் பண்ண முடியாது. அதான் சும்மா உன்னை மொட்டை-னு கூப்பிட்டு பார்த்தேன்.
ரேணு: அய்யோ.. உங்களுக்கு மொட்டைனா அவ்ளோ பிடிக்குமா.
சிவா: அது மட்டும் இல்லை ரேணு, எனக்கு ரொம்பநாளா யாருக்காவது மொட்டை அடிக்கணும்-னு ஆசை.
ரேணு: யாருக்கு மொட்டை அடிக்கப்போறீங்க?
சிவா: அதை இன்னும் முடிவு பண்ணலை. ஆனால் கண்டிப்பா சீக்கிரம் மொட்டை அடிப்பேன்.
ரேணு: நீங்க சொல்ற வேகத்தை பார்த்தால்… யாருக்கு மொட்டை அடிக்கப்போறீங்கனு தெரியல. பாவம் அவங்களோட தலைமுடி.
சிவா: நீ எப்போவாவது ஏன் பெண்கள் கோவில்-ல அவங்களோட தலைமுடியை காணிக்கையா கொடுக்கிறாங்கனு யோசிச்சு பார்த்திருக்கியா?
ரேணு: தெரியலை அண்ணா. எனக்கு சிலநேரம் இவ்ளோ நீளமான முடி வேண்டாம். கொஞ்சம் முடியை கத்தரிச்சு விடணும்-னு தோணும். ஆனால், அப்போவே… முடியை வெட்டிட்டா திரும்பிவளர ரொம்ப நாள் ஆகும்னு பயம் வரும். அதனால முடியை வெட்ட மாட்டேன். கோவில்-ல போயி மொத்த தலைமுடியையும் காணிக்கையா கொடுக்க ரொம்ப தைரியம் வேணும்.
சிவா: தைரியம் மட்டும் போதாது ரேணு. கூடவே நம்பிக்கையும் வேணும். அது மட்டும் இல்ல தலைமுடியை காணிக்கையா கொடுக்கும்போது முழுமனசோட தரணும்.
ரேணு: உண்மைதான் அண்ணா. சின்ன வயசுல மொட்டை போடும்போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போ எங்க அம்மாவும்தான் மொட்டை போட்டாங்க. அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்.
சிவா: நீ எப்போவாவது உங்க அம்மாகிட்ட மொட்டை போட்ட அனுபவம் பத்தி பேசியிருக்கியா?
ரேணு: இல்லை அண்ணா. நான் கேட்டா அப்புறம் அம்மாவும் என்கிட்ட கேட்பாங்க. அப்புறம் எனக்கு மொட்டை போட்டுவிட்டது நீங்கதான்-னு சொல்லிடுவேனோனு கொஞ்சம் பயம். அதான் கேட்கலை.
சிவா: சரி உங்க அம்மாகிட்ட கேட்கலை.. என்னை கேட்கலாம்-ல
ரேணு: அட.. ஆமா.. அன்னைக்கு அம்மா மொட்டை போடும்போது நீங்க கூட இருந்தீங்கனு விஜி அத்தை சொன்னாங்க. நான் மறந்துட்டேன். அப்போ அன்னைக்கு என்னோட அம்மா மொட்டை போடும்போது நீங்க நல்லா ரசிச்சு இருப்பீங்க. அதுவும் அப்போ எங்க அம்மாக்கு நல்ல நீளமான முடி. (இப்போவும்தான்). உண்மையை சொல்லுங்க நீங்க எங்க அம்மாவுக்கு மொட்டை அடிக்கும்போது சந்தோஷப்பட்டீங்களா இல்லை இவ்ளோ நீளமான முடியை இழக்குறாங்கனு வருத்தப்பட்டீங்களா?
சிவா: ரெண்டுமேதான். எனக்கு அவங்களோட நீளமான முடி பிடிக்கும். தினமும் காலைல அவங்க வாசல்ல கோலம் போடும்போது அவங்களோட ஜடையை ரசிப்பேன். ஆனால் மொட்டை அடிக்கும்போது நான் அவங்க உனக்காக செய்ற வேண்டுதலை நினைச்சேன். அப்போ எனக்கும் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. அப்போ எனக்கு அவங்க நீலாதேவியா தெரிஞ்சாங்க.
ரேணு: நீலாதேவியா? அது யாரு அண்ணா?
சிவா: இன்னைக்கு திருப்பதி-ல மொட்டை அடிக்கிற வழக்கம் கடவுளுக்கு இல்ல. அவங்களுக்கு தான்.
ரேணு: என்ன அண்ணா சொல்றீங்க?
சிவா: ஆமா ரேணு, ஶ்ரீவிஷ்ணு ஒருதடவை மானுடஅவதாரம் எடுத்து பூமிக்கு வந்தபோது, அவர் யாருன்னு தெரியாம ஒரு மாட்டுக்காரன் அவரை தாக்கிட்டான். அப்போ அவருக்கு தலைல ஏற்பட்ட காயத்துல அந்த இடத்துல முடி வளராம போயிருச்சாம். அப்போ அவரைப்பார்த்த ஒரு கந்தர்வ இளவரசி நீலாதேவி, “அடடா… இத்தனை அழகான முகத்தில் வழுக்கை ஒரு குறையாக இருக்குதே”னு நினைச்சு அவங்களோட கூந்தலை வெட்டி விஷ்ணுவின் வழுக்கையில் ஒட்டி முடி வளரச்செய்தாங்களாம். கண் விழித்து பார்த்த மகாவிஷ்ணு அவளது பக்தியையும் தியாகத்தையும் கண்டு மெச்சி இனி தன்னை காண வரும் பக்தர்கள் தரும் முடி காணிக்கைகள் அனைத்து நீலா தேவியையே சேரும்-னு வரம் கொடுத்தாராம். அவளது பெயரில் இருக்கும் மலைதான் நீலாத்திரி
ரேணு: அடேங்கப்பா… மொட்டை அடிக்கிறதைப்பத்தி ஒரு பெரிய ஆராச்சியே பண்ணி இருக்கீங்க போல.
சிவா: இது கொஞ்சம்தான். இன்னும் நிறைய இருக்கு.
ரேணு: சரி அதையும் சொல்லுங்க கேட்போம்.
சிவா: அதுக்குமுன்னாடி.. நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. உன்மேல இருக்கிற பாசத்துலதான் உங்க அம்மா மொட்டை அடிச்சாங்க. நாளைக்கு உங்க அம்மாக்காக மொட்டை அடிக்க சொன்னா நீ மொட்டை அடிப்பியா?
ரேணு: என்ன அண்ணா இப்படி கேட்குறீங்க? எங்க அம்மாவைவிட எனக்கு எதுவும் பெரிசு இல்ல. எங்க அம்மா சொன்னா இப்போவும் என்னோட தலையை மொட்டை அடிப்பேன்.
சிவா: சரி… எனக்காக உன்னோட முடியை கொடுப்பியா?
ரேணு: நான் ஏற்கனேவே உங்ககிட்ட தான் என்னோட தலையை கொடுத்து மொட்டை அடிச்சு இருக்கேன். உங்களுக்கு இல்லாமலா… கண்டிப்பா உங்களுக்காகவும் என்னோட முடியை கொடுப்பேன். ஆனால் இன்னைக்கு நீங்க எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொல்லமாட்டீங்கனு நினைக்குறேன்.
சிவா: கண்டிப்பா இன்னைக்கு உன்னை மொட்டை அடிக்கமாட்டேன். ஆனால் எனக்கு ஒரு ஆசை.
ரேணு: என்ன அண்ணா.
சிவா: உன்னோட முடியை நான் தொட்டுப்பார்க்கணும்.
ரேணு: இவ்ளோதானா… நான்கூட என்னவோனு நினைச்சேன். உங்க பக்கத்திலதான இருக்கேன். என்னோட ஜடையை எடுத்துதொட்டுப்பாருங்க.
சிவா: தாங்க்ஸ் ரேணு.
ரேணு: உங்களுக்கு நான் கொடுக்கிற முதல் சர்பிரைஸ் இதுதான். இப்போ நீங்க என்னோட முடியை தொட்டாமட்டும் போதாது. எனக்கு நீங்க ட்ரிம் பண்ணி விடணும்.
சிவா: வாவ்.. சூப்பர் ரேணு. நீ உன்னோட முடியை தொட விடுவியா-னு யோசிச்சேன். ஆனால் நீ உன்னோட முடியை ட்ரிம் பண்ற வாய்ப்பை கொடுத்திருக்க. தாங்க்ஸ்.
ரேணு: நீங்க காலைல வரும்போது நான் ட்ரிம் பண்ணனும்னு தான் நினைச்சேன். உங்ககிட்ட பேசும்போது நீங்க அடிக்கடி அந்த கத்தரிக்கோலை கவனிச்சீங்க. அதைப்பார்த்ததும் எனக்கு தோணுச்சு. இனிமேல் நீங்க என்னை கிண்டல் பண்ணலைனு சொல்லிட்டீங்க. எனக்கும் உங்க முன்னாடி முடியை விரிக்க கொஞ்சம் கூச்சமா இருந்தது. அதன் உங்ககிட்ட முடியை ட்ரிம் பண்ண கொடுத்தா எனக்கும் அந்த கூச்சம் குறையும். உங்களுக்கும் என்னோட முடியை தொட்டமாதிரி இருக்கும்னு நினைச்சேன்.
சிவா: நீ உண்மையிலேயே கீரெட் ரேணு.
ரேணு: ரொம்ப யோசிக்கம சீக்கிரம் என்னோட முடியை ட்ரிம் பண்ணுங்க.
சிவா: சரி…. அப்புறம் காலேஜ்ல இப்படித்தான் எல்லாரையும் உன்னோட நீளமான முடியை வச்சு கலாட்டா பண்ணுவியா?
ரேணு: அண்ணா.. இங்க நான்மட்டும்தான். அங்க என்னோட பிரெண்ட்ஸ்-க்கும் நீளமான முடிதான். நாங்க ஒண்ணா சேர்ந்து குட்டையான முடி இருக்கிற பொண்ணுங்களை எல்லாம் செம்மையா கலாட்டா பண்ணுவோம்.
சிவா: யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்களா?
ரேணு: சிலநேரம் ரொம்ப ஜாஸ்தியா கலாட்டா பண்ணிடுவோம். அப்புறம் எங்க பிரின்ஸிபால் கூப்பிட்டு திட்டுவா… இனிமேல் இதேமாதிரி சேட்டை பண்ணினா எங்க முடியை கட் பண்ணிடுவேண்னு மிரட்டுவா. நாங்களும் கொஞ்சநாள் எங்க ஜடையை சுருட்டிவச்சிட்டு அமைதியா இருப்போம்.
 சிவா: சரி.. இப்போ நான் ரெடி. ட்ரிம் பண்ணலாமா?
ரேணு: நானும் ரெடிதான். இந்தாங்க நீங்க ஆசையா பார்த்த கத்தரிக்கோல். இதைவச்சு என்னோட முடியை ட்ரிம் பண்ணுங்க.
சிவா: ஹாஹாஹா… இதையும் எடுத்துட்டுதான் வந்தியா? சரி கொடு.
ரேணு சிவாவிடம் கத்தரிக்கோலை கொடுத்துவிட்டு திரும்பி நின்றாள். திரும்பி நின்றவுடன் ஜடையை தூக்கி பின்னால் போட்டாள். அவள் தூக்கிப்போட்ட ஜடையை சிவா பிடித்தான். தன்னுடைய ஜடை சிவாவின் கையில் சென்று அகப்பட்டதை ரேணு கவனித்தாள். சிவா ரேணுவிண் ஜடையை கையில் பிடித்து அவள் முடியின் அடர்த்தியை ஆராய்ந்தான். சாந்திக்கு மொட்டை அடிக்கும்முன் அவள் ஜடையை பிடிப்பது போல இருந்தது. ஒரு நிமிடம் கண்களை மூடி ஏதோ நினைத்தான். பின்னர் அவள் கழுத்திலிருந்து ஜடையை தடவிக்கொண்டே ஜடையின் அடிப்பகுதிவரை வந்தான். சிவா கழுத்தருகில் ஜடையை பிடித்தபோது ரேணுவுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. பின்னர் அவன் அவளுடைய ஜடையை தடவி அனுபவித்தபோது கொஞ்சம் பெருமையாக இருந்தது. தன்னுடைய நீளமான முடியை நினைத்து கர்வம் கொண்டாள். சிவா ரேணுவிண் ஜடையில் இருந்து பேண்டை உருவினான். அதை ரேணு கையில் வாங்கிக்கொண்டாள். அவள் ஜடையை அவிழ்க்கும்போது சிவா கவனித்தான். அவள் முடி நல்ல ஆரோக்கியமாக இருந்தது. கிட்டத்தட்ட நேராகத்தான் இருந்தது. அவள் முடியை ட்ரிம் பண்ண அவசியமே இல்லை. இருந்தும் ரேணு ட்ரிம் பண்ணனும் என்று கூறியது வியப்பாக இருந்தது. அவள் கூந்தலை சிவா தொடவேண்டும் என்பதற்காகவே ட்ரிம் பண்ணவேண்டும் என்று காரணம் சொல்லி கத்தரிக்கோலுடன் வந்து தலைமுடியை அவனிடம் கொடுத்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டான். மனதில் சிரித்துக்கொண்டே அவள் ஜடையை பிரித்துவிட்டான். அவள் ஜடையை அவிழ்க்கத்துவங்கியதும் அவள் பின்னல் விடுவித்து விழ ஆரம்பித்தது. ரேணுவின் ஜடையோடு சேர்ந்து சிவாவின் உணர்ச்சிகளும் விரிந்தது. தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு ஜடையை அவிழ்த்தான். ரேணுவின் கழுத்தருகில் இருந்த பின்னலை அவிழ்த்தபோது ரேணுவிண் அடர்த்தியான தலைமுடி முற்றிலுமாக விரிந்தது. ரேணு தன் பழைய நினைவுகளுக்கு போனாள். சிவா அவளுக்கு மொட்டை அடித்தபோது இப்படித்தான் அவள் உணர்ந்தாள். ஆனால் அப்போது இருந்த பயம் இப்போது இல்லை. காரணம் இப்போது சிவா கையில் கத்தி இல்லை. இன்னொரு காரணம் மொட்டை அடிக்கும்போது இருக்கும் சுகம் என்னவென்று இப்போது அவளுக்கு தெரியும். சிவா ரேணுவின் தலைக்குள் கையை விட்டு அவள் முடியை கோதினான். சிவா ரேணுவின் முடியை தொட்டு அனுபவித்துக்கொண்டே அவள் முடியை சீவிவிட்டான். ரேணுவுக்கு சிவாவின் கைகள் அவள் முடிக்குள் நுழைவது ஜிவ்வென்று இருந்தது. தன்னையும் மீறி அவள் கூந்தல் ஸ்பரிசத்தை ரசித்தாள். எப்பொழுது சிவாவின் கைகள் தலைமுடியை கத்தரிக்கும் என்று ஆவலாக காத்திருந்தாள். அந்தக்கத்தரிக்கோல் தலைமுடியை கத்தரிக்கும் சத்தத்தை கேட்க ஆசையாக இருந்தது. மீண்டும் ஒரு முறை சிவாவின் கைகளால் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. சிவா ரேணுவின் முடியை ஒன்றாக சேர்த்து பிடித்தான். அவள் இடுப்பு வரையில்உள்ள முடியை  அளவு வைத்து ரேணுவிடம் “இந்த அளவு போதுமா?” என்றான். ரேணு அதை கவனித்துவிட்டு, “உங்களுக்கு வேணும்னா எவ்ளோ முடியை வேணும்னாலும் வெட்டுங்க. ஆனால், கொஞ்சமாக முடி வெட்டி விட்டால்தான் என்னால் அடிக்கடி உங்களிடம் முடி வெட்டிக்கமுடியும்” என்றாள். சிவா கவனித்தான். அவிழ்த்துவிட்ட ரேணுவின் முடி அவள் முழங்கால்வரை இருந்தது. பின்னர் மறுபடி ஐந்து இன்ச் அலுவு வைத்து பார்த்துவிட்டு ரேணுவிடம் எதுவும் கேட்காமல் அவள் முடியை வெட்ட ஆயுத்தமானான். கையில் இருந்த கத்தரிக்கோலை அவள் முடியில் வைத்து வெட்ட ஆரம்பித்தான். அந்தக்கத்தரிக்கோல் ரேணுவின் முடியை “ஸ்க்ரீச்…ஸ்க்ரீச்…” என்ற சத்தத்துடன் வெட்ட ஆரம்பித்தது. சிவா முடியை வெட்டும்போது தன்னுடைய தலைமுடியின் நீளம் குறைவதை ரேணு உணர்ந்தாள். ஒருபுறம் தன் முடியை வெட்டினாலும், இன்னொருபுறம் அந்த முடியை வெட்டும் சத்தத்தை ரசித்தாள். சிவா அவள் முடியை வெட்டி முடித்தபோது அவளுடைய முடி சிவாவின் கைகளில் இருந்து விடுபட்டு முதுகில் விரிந்தது. வெட்டிய ரேணுவின் முடி சிவாவின் கையில் இருந்தது. ரேணு சிவாவின் கைகளில் இருந்த முடியை பார்த்தபோது கொஞ்சம் அதிர்ச்சியானாள். பின்னர் கண்ணாடியில் சென்று பார்த்தாள். இவ்வளவு முடியை வெட்டிய பிறகும் தன்னுடைய முடி நீளமாக இருப்பதாகவே ரேணு உணர்ந்தாள். பின்னர் சிவாவின் அருகில் வந்தாள்.
ரேணு: என்ன அண்ணா…. சந்தோசமா… உங்க ஆசைப்படி என்னோட முடியை கொஞ்சம் வெட்டியாச்சு.
சிவா: ஆமா ரேணு சந்தோசம்தான். உனக்கு எப்படி இருந்தது? நான் உன்னோட முடியை நல்லா வெட்டி இருக்கேனா?
ரேணு: சூப்பரா வெட்டி இருக்கீங்க அண்ணா. நீங்க அப்போவே எனக்கு மொட்டை அடிச்சுவீட்டீங்க. இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம்.
சிவா: எனக்கு ரெண்டுமே சந்தோசம்தான்.
ரேணு: உண்மையை சொல்லணும்-னா எனக்கு நீங்க என்னோட முடியை வெட்டும்போது மறுபடியும் உங்க கையாள மொட்டை அடிச்சுக்கலாமா-னு தோணுச்சு. உங்களுக்கு என்ன தோணுச்சு.
சிவா: எனக்கு இப்போ நான் “மகேந்திரவர்மன்” மாதிரி மன்னனா இருந்திருக்கலாம்-னு தோணுச்சு.
ரேணு: அது யாரு அண்ணா அந்த “மகேந்திரவர்மன்”.
சிவா: அவனும் என்னை மாதிரி ஒரு Hair Fetish தான். ஆனால் அவனுக்கு நிறைய மந்திரம் தெரியுமாம். நீளமான கூந்தல் உள்ள பெண்களை மொட்டை அடிச்சு தன்னோட மந்திரத்தை வைச்சு மறுபடியும் அந்த பெண்களோட கூந்தலை பழையபடி வளர வைப்பானாம்.
ரேணு: ஹாஹா….. நீங்க நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க. ஒரு டைம் மிசின் கண்டுபிடிச்சு போய் அவன்கிட்ட அந்த மந்திரத்தை கத்துக்கிட்டு வாங்க. நீங்க தினமும் நிறைய பொண்ணுங்களுக்கு மொட்டை அடிக்கலாம். நானே என்னோட முடியை உங்ககிட்ட மொட்டை அடிக்க தருவேன்.
சிவா: விளையாடாத ரேணு…..
ரேணு: நான் ஒண்ணும் விளையாடலை.. உண்மையைதான் சொன்னேன். அதெல்லாம் சரி சர்பிரைஸ்-னு சொன்னீங்களே… என்ன அது?
சிவா: நீ எனக்கு ரெண்டு சர்பிரைஸ்-னு சொன்ன… ஒண்ணு இப்போ உனக்கு முடியை ட்ரிம் பண்ணியாச்சு.(சாரி.. கட் பண்ணியாச்சு) இன்னோணு என்ன?
ரேணு: நான் ஒண்ணு சொன்னேன்ல.. அப்போ நீங்களும் ஒண்ணு சொல்லுங்க.
சிவா: இல்ல.. நீதான் சொல்லணும். நான் அதுக்கு அப்புறமா சொல்றேன்
ரேணு: சரி சொல்றேன்.. என்னோடகாலேஜ்-ல நான் எப்போவும் உங்களைப்பத்தி பெருமையா பேசுவேன். எங்க க்ளாஸ்-ல ஒரு பொண்ணு உங்களைப்பார்க்கணும்-னு சொன்னா.
சிவா: ஓ.. அப்படியா… யாரு அது?
ரேணு: அலையாதீங்க.. சொல்றேன். அது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. அப்போ நான் அவகிட்ட “எங்க சிவா அண்ணாக்கு நீளமான முடி இருக்கிற பொண்ணைத்தான் பிடிக்கும்.. உனக்கு இப்போ அவ்ளோ நீளமான முடி இல்ல. நீ எப்போ உன்னோட முடியை என்னைமாதிரி நீளமா வளர்கிறையோ அப்போ உன்னை கூட்டிட்டுபோறேன்” னு சொல்லிட்டேன்.
சிவா: அடிப்பாவி. அவளுக்கு எவ்ளோ முடி இருந்தது.
ரேணு: என்னோட முடியை இடுப்பு அளவுள வச்சு வெட்டட்டுமா-னு கேட்டீங்களே. அவ்ளோதான். ஆனால் போனவாரம் அவளைப்பார்த்து ஷாக் ஆயிட்டேன். இப்போ என்னை மாதிரியே நீளமா முடியை வார்த்துட்டு வந்திருக்கா. அவளையும் என்னோட பிரெண்ட்ஸ் லிஸ்ட்-ல சேர்த்துக்கிட்டோம். அவளுக்கு உங்களை பார்க்கணுமாம். அவளை ஒருநாள் இங்க கூட்டிட்டு வறேன். அதுதான் ரெண்டாவது சர்பிரைஸ்.


சிவா: என்னை பார்க்காமலே எனக்காக நீளமா முடியை வளர்திருக்காளா? யாரு அது.
ரேணு: அதெல்லாம் அவளை நேரில பார்த்து நீங்களே கேளுங்க. நான் இப்போ சொல்ல மாட்டேன். இப்போ நீங்க எனக்கு என்ன சர்பிரைஸ் வச்சிருக்கீங்க?
சிவா: சரி சொல்றேன் கவனி. நான் உன்னோட அம்மாக்கு ஒரு சர்பிரைஸ் தரேன்-னு சொல்லி இருக்கேன். அதுக்காக நான் சொல்றதை உங்க அம்மாகிட்ட போய் அப்படியே சொல்லு. அப்போ அவங்களும் உன்கிட்ட ஒண்ணு சொல்லுவாங்க. அதுதான் உனக்கு முதல் சர்பிரைஸ்.
ரேணு: எங்க அம்மாவுக்கும் சர்பிரைஸா… சரி என்ன சொல்லணும்?
சிவா: நீ கீழ போகும்போது கொண்டை போட்டுகிட்டு போ. உங்க அம்மாகிட்ட போயி உன்னோட சின்ன வயசுல நான்தான் உனக்கு மொட்டை அடிச்சேன்-னு  உண்மையை சொல்லு. அப்புறம் இன்னைக்கு உனக்கு முடியை ட்ரிம் பண்ணி விட்டேன்-னு சொல்லு. ஆனால் உன்னோட கொண்டையை அவிழ்காத.
ரேணு: அம்மாகிட்ட நீங்கதான் மொட்டை அடிச்சுவீட்டீங்க-னு சொன்னா திட்டமாட்டாங்களா?
சிவா: திட்டமாட்டாங்க. என்னை நம்பு.
ரேணு: சரி சொல்றேன். ரெண்டாவது சர்பிரைஸ் என்ன?
சிவா: முதல்ல நீ இதை போய் சொல்லு. உனக்கு என்னோட முதல் சர்பிரைஸ் கிடைக்கும். அதுக்கு அப்புறம் சொன்னாதான் அது ரெண்டாவது சர்பிரைஸ்.
ரேணு: சரி சொல்றேன். சொல்லிட்டு வந்து ரெண்டாவது என்னனு பார்க்கிறேன்.
ரேணு சிவாவிடம் சொல்லிவிட்டு அவளுடைய தலைமுடியை கொண்டை போட்டாள். அப்போது ரேணுவின் வெட்டிய தலைமுடியை மேஜைமேல் வைத்தான். பின்னர் ரேணுவின் கொண்டையை தன் கைகளால் பிடித்து தொட்டுப்பார்த்தான். கொஞ்சம் முடியை வெட்டிய பிறகும் அவள் முடி கனமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. சிவா எதுவும் சொல்லாமல் தன்னுடைய கொண்டையை பிடித்துப்பார்ப்பான் என ரேணு எதிர்பார்க்கவில்லை.  அவளுடைய தலைமுடி சிவாவை கவர்ந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். இவ்வளவு அருகில் இருந்தும் சிவா தன்னிடம் கவனமாக நடந்துகொண்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரேணு, சிவா தன்மீது வைத்திருக்கும் பாசத்தையும், தன் நீளமான தலைமுடியையும் நினைத்து பெருமைப்பட்டாள். இனிமேல் எப்பொழுது சிவா கேட்டாலும் தான் தலைமுடியை அவனிடம் நம்பிக்கையுடன் கொடுக்கலாம் என நினைத்தாள். சிவா தன் கொண்டையிலிருந்து கையை எடுக்கும்வரை அங்கேயே நின்றாள். உண்மையில் ரேணு என்ன சொல்லுவாள் என எதிர்பார்த்துதான் சிவா ரேணுவின் கொண்டையை பிடித்தான். ஆனால் அவள் எதுவும் பேசாமல் அவன் அவளுடைய கூந்தலை ஸ்பரிசிப்பதை ரசிக்கின்றாள் என புரிந்துகொண்டான். தன் முயற்சியில் பாதி வெற்றி பெற்றுவிட்டதாக உணர்ந்தான். மேஜையில் அவளுடைய வெட்டிய முடியின் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு, வெட்டிவைத்த முடியை பார்த்துவிட்டு ரேணு கீழே சென்றாள்.முடியை வெட்டியது தெரிந்தால் அம்மா என்ன சொல்லுவாளோ என தயக்கத்துடன் வெட்டில் நுழைந்தாள்.  ரேணு உள்ளே நுழையும்போது சாந்தி டீவீ பார்த்துக்கொண்டிருந்தாள். ரேணு கொண்டை போட்டுக்கொண்டு செல்வதை பார்த்த சாந்தி ரேணுவை அழைத்தாள்.
சாந்தி: என்ன ரேணு… காலைலதான ஜடை பின்னி இருந்த… இப்போ என்ன கொண்டை போட்டிருக்க?
ரேணு: அது ஒண்ணும் இல்லமா. சும்மாதான்.
சாந்தி: என்னடி சும்மா… கொண்டையை கழட்டு.
ரேணு: சரி இரு. நான் கொண்டையை கழட்டுறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒண்ணு சொல்லுவேன். நீ கோவப்படக்கூடாது.
சாந்தி: சரி கோவப்படலை. நீ விஷயத்தை சொல்லு.
ரேணு: அது ஒண்ணும் இல்லமா. கொஞ்சமா முடியை ட்ரிம் பண்ணலாம்-னு தோணுச்சு. அதான் சிவா அண்ணாகிட்ட போய் என்னோட முடியை ட்ரிம் பண்ணிட்டு வறேன். அவங்கதான் எனக்கு முடியை இப்போ கட் பண்ணி விட்டாங்க.
சாந்தி: என்ன ரேணு சொல்ற,.. சிவா உனக்கு முடியை கட் பண்ணி விட்டானா?
ரேணு: ஆமா. ஏன் உனக்கு சர்பிரைஸா இருக்கா?
சாந்தி: ஆமாடி… நீங்க ரெண்டுபேரும் இந்த முடி விஷயத்தில எலியும் பூனையுமா இருந்தீங்க. எப்போ சமாதானம் ஆச்சு?
ரேணு: இப்போதான். அந்த சமாதான நடவடிக்கையின் ஒரு பகுதி தான் இந்த ட்ரிம். உனக்கு சர்பிரைஸா இருக்கணும்னு தான் இப்போ இதோ சொல்லசொன்னார்.
சாந்தி: ஓ… இதுதான் அவன் சொன்ன சர்பிரைஸா?
ரேணு: ஆமாம்மா…. ஆனா நான் உன்கிட்ட சொல்ல இன்னொரு விஷயம் இருக்கு.
சாந்தி: என்னடி சொல்லு.
ரேணு: எனக்கு கடைசியா ஒரு மொட்டை அடிச்சோம்-ல…. அப்போ எனக்கு மொட்டை போட்டு விட்டது சிவா அண்ணாதான். நான் ரொம்பநாளா இதை உன்கிட்ட சொல்லாமல் மறைச்சு வச்சிருந்தேன்.
சாந்தி: இதையும் இன்னொரு சர்பிரைஸ்-னு சிவா சொல்ல சொன்னானா?
ரேணு: இல்லமா. முதல்ல சொன்னது மட்டும்தான். ஆனால் இதையும் உங்ககிட்ட சொல்ல சொன்னார்.
சாந்தி: அதான பார்த்தேன்.
ரேணு: எனக்கு அப்போ சிவா அண்ணாதான் மொட்டை அடிச்சுவிட்டங்கனு சொல்றேன் நீ ஒண்ணுமே சொல்லமாற்ற. இதெல்லாம் உன்கிட்ட சொன்னதும் நீ எனக்கு ஒரு சர்பிரைஸ் சொல்லுவே-னு சிவா அண்ணா சொன்னாங்க. ஆனால் நீ இப்படி ரியாக்சனே இல்லாம இருக்க.
சாந்தி: அடப்பாவி.. என்னையே சொல்ல சொல்றானா? சரி சொல்றேன் கேளு. ஆனால் ரொம்ப ஷாக் ஆகாத. உனக்கு சிவாதான் மொட்டை அடிச்சான்-னு எனக்கு எப்போவோ தெரியும். அன்னைக்கு அவன் உனக்கு மொட்டை போட ஆரம்பிச்சபோது நான் ஜன்னல் வழியா பார்த்துட்டுதான் இருந்தேன்.
ரேணு: என்னம்மா சொல்ற.. உனக்கு இது ஏற்கனவே தெரியுமா? அப்போ உனக்கு தெரியும்-னு சிவா அண்ணாக்கு தெரியுமா?
சாந்தி: அவனுக்கும் தெரியும். அதுக்கு அப்புறம் அவன் ஒரு Hair fetish-னு எனக்கு தெரிஞ்சது. அவனுக்கு என்னோட முடி ரொம்ப பிடிக்கும்னு சொன்னான்.  அன்னைக்கு நீ மொட்டை போட்டு விஜி கூட குளிக்கப்போனதுக்கு அப்புறம், சிவாதான் எனக்கும் மொட்டை அடிச்சுவிட்டான்.
ரேணு: அய்யோ அம்மா.. இவ்ளோ பெரிய சர்பிரைஸா. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.
சாந்தி: இன்னும் இருக்கு சொல்றேன் கேளு. என்னோட முடியை நானேதான் ட்ரிம் பண்ணிக்கிறேன்-னு உன்கிட்ட சொல்லுவேன். ஆனால் என்னோட முடியை சிவாதான் ட்ரிம் பண்ணி விடுவான். சில நாட்கள் அவன் எனக்கு தலைவாரி ஜடைகூட பின்னி விடுவான். அவன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதனால எப்பவுமே நான் அவனை நம்பி என்னோட தலைமுடியை அவன்கிட்ட கொடுப்பேன்.
ரேணு: எனக்கு தெரியாம ஏழு வருஷமா இப்படி ஒரு ரகசியமா? நான் பரவாயில்லை. ஒரு தடவை நடந்த விஷயத்தைதான் மறைச்சேன். நீங்க ரெண்டுபேரும் எத்தனைமுறை இப்படி முடியை வச்சு நடந்த விஷயத்தை என்கிட்ட மறைச்சுட்டீங்க.
சாந்தி: ஆமாடி… ஆனா எப்போவுமே அதை வெளியே சொல்லக்கூடாதுனு சொன்னவன் இப்போ சொல்ல சொல்றான். சரி அதைவிடு.. எனக்கு ரெண்டாவது சர்பிரைஸ் என்னனு சொன்னான்.
ரேணு: என்னது.. உனக்கும் ரெண்டாவது  சர்பிரைஸா. அது எதுவும் என்கிட்ட சொல்லல…. எனக்கு ரெண்டாவது ஒரு சர்பிரைஸ் இருக்குனு சொன்னார். ஆனால் அதுவும் என்னனு சொல்லலை.
சாந்தி: அடப்பாவி.. அவன் ஏதோ விளையாடுறான். நீ வா நம்ம ரெண்டுபேரும் சேர்ந்துபோய் அவன்கிட்ட என்னனு கேட்போம்.
ரேணு: இவ்ளோ நாளா நீங்க ரெண்டுபேரும் என்கிட்ட இருந்து மறைச்சுவச்சிருக்கீங்க. இருக்கட்டும்  மேலபோய் சிவா அண்ணாவை பார்த்துக்கிறேன்.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிவிட்டு சிவாவைப்பார்க்க மாடிக்கு சென்றனர். சாந்தி முதலில் செல்ல, ரேணு பின்தொடர்ந்தாள். சாந்தியின் ஜடை ஆடிக்கொண்டு வருவதை ரேணு ரசித்தாள். ஒருநிமிடம் தன்னை சிவாவின் நிலைமையில் இருந்து யோசித்துப்பார்த்தாள். சாந்தியின் அடர்த்தியான ஜடையை பிடித்து இழுக்கவேண்டும் அல்லது அவள் தலைமுடியை அப்படியே ஜடையாக மொத்தமாக வெட்டவேண்டும் என்று தோன்றியது. இவ்வளவு நாளாக தன்னிடம் சொல்லாமல் மறைத்ததற்காக அம்மாவின் முடியை வெட்டவேண்டும் என நினைத்தாள். அப்படி அவள் முடியை வெட்டினால், அவள் முடியை வெட்டும்போது வரும் சத்தத்தையும், வெட்டிய அவளுடைய முடி அப்படியே கைகளில் பிரிந்துவருவதையும் கற்பனை செய்தாள். ஒரு பெண்ணான எனக்கே நீளமான முடியை வெட்ட ஆசை வருகிறது. அப்படியானால் சிவாவுக்கு எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டாள். இன்னமும் ரேணுவின் கைகளில் அந்த கத்தரிக்கோல் இருந்தது இப்போதுதான் அவள் நினைவுக்கு வந்தது. பேசாமல் அவள் அம்மாவின் முடியை கொஞ்சம் வெட்டி விடலாமா என மனத்துக்குள் எண்ணினாள். அவளையும் அறியாமல் ரேணுவின் கைகள் சாந்தியின் ஜடையை பிடிப்பதற்கு எத்தனித்தது. ரேணுவின் கைகள் சாந்தியின் ஜடையின் அருகில் வந்தது. அவர்கள் வருவதை சிவா எதிர்பார்த்தான். மாடியிலிருந்து ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் சற்றும் எதிர்பார்க்காதது ரேணு செய்த காரியம். ரேணு கையில் இருந்த கத்தரிக்கோலால் சாந்தியின் முடியை வெட்ட முயற்சி செய்ததை அவன் கவனித்தான். ரேணு இப்போது முடியை வெட்டுவதில் ஆர்வமாக இருப்பதை புரிந்துகொண்டான். ரேணு சாந்தியின் ஜடையை பிடிப்பதற்குள் இருவரும் மாடிக்கு வந்துவிட்டனர். சிவா அவசரமாக தன்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தான். சாந்தியும் ரேணுவும் சேர்ந்து உள்ளே வருவதை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே உள்ளே அழைத்தான். உள்ளே வந்த ரேணு முதலில் சிவாவின் முதுகில் செல்லமாக ஒரு குத்து விட்டாள்.
சிவா: ரேணு, என்ன ஆச்சு.. எதுக்கு இப்படி கோவப்படுற…. உனக்கு நான் சர்பிரைஸ்தான கொடுத்தேன்.
ரேணு: இது சர்பிரைஸா… எனக்கு செம்ம ஷாக். எவ்ளோநாளா என்கிட்ட ரெண்டுபேரும் இந்த விஷயத்தை மறைச்சு வச்சிருக்கீங்க. இதெல்லாம் சர்பிரைஸா நான் ஒத்துக்கமாட்டேன். அந்த ரெண்டாவது சர்பிரைஸ் என்ன….. ஒழுங்கா சொல்லுங்க…. அதுவாவது சர்பிரைஸா இல்லை அதுவும் இதே மாதிரி ஷாக்கா-னு பார்க்கிறேன்.
சிவா: சரி சொல்றேன். பொறுமையா இரு. என்ன அத்தை… ரேணு இவ்ளோ கோவப்படுறா. உங்களுக்கு என்னோட முதல் சர்பிரைஸ் எப்படி இருந்தது.
சாந்தி: டேய் சிவா, உண்மையை சொல்லணும்னா எனக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான். நீ இவ்ளோ சீக்கிரம் ரேணுவோட மனசை மாத்தி இருப்பனு நான் நினைக்கலை.
சிவா: ஹாஹாஹா…. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அத்தை. சரி நீங்க எனக்கு சொல்றேன்-னு சொன்ன சர்பிரைஸ் என்ன?
சாந்தி: சிவா, நீ காலைல என்கிட்ட முடியை கட் பண்ணனும்-னு சொன்னதும் எனக்கும் தோணுச்சு. அதான் உனக்கு எவ்ளோ முடியை வெட்டனும்-னு தோணுதோ அவ்ளோ முடியை நீ கட் பண்ணிக்கோ. நான் உனக்காக என்னோட முடியை தர  தயாரா இருக்கேன்.
சிவா: வாவ்.. சூப்பர் அத்தை. நான் இன்னைக்கே நீங்க ரெடியா இருப்பீங்க-னு எதிர்பார்க்கலை.
ரேணு: என்னம்மா சொல்ற.. நீ உன்னோட நீளமான முடியை வெட்டப்போறியா?
சாந்தி: ஆமா ரேணு… ரொம்ப நாளா சிவா என்கிட்ட சொல்லிட்டே இருந்தான். எனக்கும் இந்த முடியை வெட்டிக்கணும்-னு ரொம்பநாளா ஆசை இருக்கு. அதான் என்ன ஆனாலும் பரவாயில்லை-னு இன்னைக்கு சிவா கையாள என்னோட முடியை வெட்டிக்கலாம்-னு முடிவு பண்ணிட்டேன். இது நான் சிவாவுக்கு சர்பிரைஸா வச்சிருந்தேன்.
சிவா: சரி அத்தை.. இப்போவே உங்க முடியை வெட்டலாமா?
சாந்தி: கண்டிப்பா சிவா… உனக்காகத்தான இப்போ நான் மேலவந்தேன். நான் ரெடியாதான் இருக்கேன்.
சிவா: அப்போ திரும்பி நில்லுங்க. நான் உங்க முடியை வெட்டி விடுறேன்.
சிவா சொன்னதும் சாந்தி திரும்பி நின்றாள். ரேணுவை பார்த்து புன்னகைத்துவிட்டு தன்னுடைய நீளமான கூந்தலை இழக்க தயாரானாள். ரேணுவுக்கு அங்கு நடப்பது கனவா இல்லை நிஜமா என புரியுவில்லை. காலையில் இருந்து நடந்ததை நினைத்துப்பார்த்தாள். சிவா இனிமேல் கிண்டல் பண்ணமாட்டேன் என சொன்னது. அவனுடைய மொட்டை அடிக்கும் ஆசைகள் பற்றி சொன்னது. நீலாதேவி, மகேந்திரவர்மன் பற்றி சொன்னது. அப்புறம் அவளுடைய முடியை கொஞ்சம் கட் பண்ணிவிட்டது. அவள் கொண்டையை பிடித்து சிவா அனுபவித்தது. சாந்தி மொட்டை அடித்த விஷயங்களை சொன்னது. இப்போது சாந்தி சிவாவின் ஆசைக்காகஅவளுடைய நீளமான முடியை வெட்ட ஒத்துக்கொண்டது. அனைத்தையும் நினைத்துக்கொண்டே கவனித்தபோது சாந்தியின் ஜடை இப்போது சிவாவின் கைகளில் இருந்தது. சிவா சாந்தியின் ஜடையை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தான். ரேணுவின் கண் முன்னால் சாந்தியின் தலைமுடி ஜடையில் இருந்து விடுபட்டுக்கொண்டிருந்தது. சிவாவின் கைகள் சாந்தியின் தலைமுடியில் விளையாடியது. சாந்தியின் தலைமுடி இப்போது ப்ரீயாக இருந்தது. சாந்தியின் முடியை சிவா மொத்தமாக பிடித்து கோதி விட்டான். சிவாவின் கைகளில் சாந்தியின் மொத்த முடியும் இருந்தது ரேணுவை ஏதோ செய்தது. சாந்தியின் முடியை பிடித்திருந்தாலும், சிவா ரேணுவை கவனித்தான். சாந்தியின் முடியை முதுகின் அளவில் வைத்து பார்த்தான்.
சிவா: அத்தை.. இந்த அளவு போதுமா? கொஞ்சம் பாருங்க.
சாந்தி: டேய் சிவா… உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி விடுடா.
ரேணு: அம்மா.. உன்னோட முதுகுவரைக்கும் அளவு இருக்கு. எவ்ளோ முடியை வெட்டப்போறாங்கனு பாரு.
சாந்தி: ரேணு.. எனக்கு தெரியும்டி. இதே அளவு முடியை மொட்டை அடிச்சிக்கோ-னு சிவா முன்னாடிதான் நான் என்னோட முடியை விரிச்சுப்போட்டு உட்கார்ந்தேன். இதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.
சிவா: அத்தையோட முடியை நான் வெட்டிவிடப்போறேன். நீ ஏன் பதட்டப்படுற ரேணு?
ரேணு: அதில்ல அண்ணா…. எங்க அம்மா திடீர்னு இவ்ளோ முடியை வெட்டிக்கப்போறேன்-னு சொன்னது கொஞ்சம் அதிர்ச்சிதான்.
சிவா: உண்மையை சொல்லு ரேணு…. உனக்கு உங்க அம்மாவோட முடியை கட் பண்ணனும்-னு ஆசை இருக்குல்ல? நான் நீ மாடிக்கு வரும்போது பார்த்தேன்.
சாந்தி: என்ன ரேணு உனக்கும் என்னோட முடியை வெட்டனும்-னு ஆசையா? எப்போ இருந்துடி உனக்கு இப்படி ஒரு ஆசை?
ரேணு: ஆமாம்மா.. எனக்கு உன்னோட முடியை வெட்டிவிடணும்-னு இன்னைக்குத்தான் தோணுச்சு. என்கிட்ட சொல்லாம இருந்த கோவம் வந்தது. ஆனால் நீ மாடிக்கு வரும்போது உன்னோட ஜடையை பார்த்ததும், சிவா அண்ணா மாதிரி யோசிச்சு பார்த்தேன். என்னோட கை என்னை அறியாம உன்னோட ஜடையை பிடிக்கவந்தது.
சாந்தி: அப்போ உனக்கும் சிவாகிட்ட இருந்து அந்த Hair fetish வந்திருச்சா?
ரேணு: அப்படித்தான் எனக்கும் தோணுது.
சிவா: ஹாஹா… சரி அப்போ இன்னைக்கு நீயே வந்து உங்க அம்மாவோட முடியை கட் பண்ணு.
சாந்தி: என்ன சிவா… ரேணுவை கட் பண்ண சொல்ற. நீ என்னோட முடியை கட் பண்ணலயா?
சிவா: பாருங்க அத்தை. அவ கையில இன்னும் அந்த கத்தரிக்கோலை வச்சிருக்கா. அவளுக்கு உங்க முடியை வெட்டனும்-னு ஆசை இருக்கு. சின்னப்பொண்ணு…. அவளே கட் பண்ணட்டும்.
சிவா சாந்தியின் முடியில் இருந்து கையை எடுத்துக்கொண்டு ரேணுவுக்கு வழிவிட்டான். ரேணு, கத்தரிக்கோலை சிவாவிடம் கொடுத்துவிட்டு, சாந்தியின் பின்னால் வந்து நின்று அவள் முடியை கையில் மொத்தமாக பிடித்தாள். சாந்தியின் முடியை கழுத்தின் அருகில் மொத்தமாக பிடித்துக்கொண்டு சிவாவிடம் பேசினாள்.
ரேணு: அண்ணா, அந்த கத்தரிக்கோலை இங்க கொடுங்க.. நான் எங்க அம்மாவோட முடியை மொத்தமா வெட்டிவிடுறேன்.
சாந்தி: உனக்கு ஏண்டி என்மேல இவ்ளோ கோவம்.
ரேணு: பின்ன என்ன? சிவா அண்ணாவே உன்னோட முடியை நான் வெட்டடும்-னு சொல்றாங்க. நீ ரொம்ப யோசிக்கிற? அவங்களுக்கு மட்டும் எவ்ளோ முடியை வேணும்னாலும் வெட்டிக்கோ-னு சொன்னீங்க. இப்போ நான் உங்க முடியை மொத்தமா வெட்டினா என்ன?
சிவா: கோவப்படாத ரேணு. மொத்தமா முடியை வெட்டினா நல்லா இருக்காது. கொஞ்சம் அளவை கீழ இறக்கிவை.
ரேணு: அம்மா… இப்போ பாரு உன்னோட இடுப்பு வரைக்கும் இருக்கு. போதுமா? இல்ல இன்னும் கொஞ்சம் வெட்டி விடவா?
சாந்தி: போதும் ரேணு.. அதே அளவுல கட் பண்ணி விடு.
ரேணு சிவாவிடம் கத்தரிக்கோலை வாங்கி காற்றில் ஒருமுறை வெட்டிப்பார்த்தாள். அந்த கத்த்திரிக்கோலின் சத்தம் மூவரின் மனத்திலும் ஒரு சந்தோஷத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ரேணு சாந்தியின் முடியில் கத்தரிக்கோலை வைத்து வெட்டத்துவங்கினாள். சாந்தியின் நீளமான தலைமுடி இப்போது அதன் நீளத்தை இழக்கத்துவங்கியது. ரேணு  முடியை வெட்ட வெட்ட, சாந்தியின் முடி விடுபட்டு வெளியே வந்தது. முடியை வெட்டும் சத்தம் மற்றும் சாந்தியின் முடி விடுபட்டு வருவதை பார்த்ததும் ரேணுவுக்கு ஜிவ்வென்று உணர்ச்சி பெருகியது. இவ்வளவு நாளாக உண்மையை மறைத்ததற்காக அம்மாவின் முடியை வெட்டி தண்டனை தருவதுபோல உணர்ந்தாள். சாந்தியின் முடியை வெட்ட வெட்ட ரேணுவின் கண்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தன. ரேணுவை கவனித்துக்கொண்டிருந்த சிவா அவள் ஒரு ஆக மாறிவிட்டாள் என புரிந்துகொண்டான். சாந்தியின் முடியை ரேணு வெட்டி முடித்தாள். வெட்டிய முடியை கையில் எடுத்து பார்த்தபோது ரேணுவின் கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது. சாந்தியின் முடியை சுமார் இரண்டு அடி வரை வெட்டியிருந்தாள் ரேணு. சாந்தி பின்னால் திரும்பியதும் அவளுடைய வெட்டிய முடியை காட்டினாள் ரேணு. அப்படியும் முடியை வெட்டப்போகிறோம் என்ற எண்ணத்துடன் வந்ததால், சாந்தியிடம் பெரிய ஆச்சரியம் ஒண்ணும் இல்லை. ஆனா சிவா கைகளால் முடியை வெட்டவில்லை என்ற வருத்தம் இருந்தது.
ரேணு: இந்தாங்க அண்ணா. எங்க அம்மாவோட முடி, இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே.
சிவா: எனக்கு டபுள் சந்தோஷம். ஒண்ணு அத்தை முடியை வெட்டிக்கிட்டது. இன்னோனு நீயே அவங்க முடியை வெட்டிவிட்டது. நீயும் நல்லாத்தான் முடி வெட்டி இருக்க.
சாந்தி: எப்படியோ ரெண்டுபெரும் சேர்ந்து என்னோட முடியை வெட்டிடீங்க.
ரேணு: கவலைப்படாதமா… எனக்குத்தான் இன்னும் நீளமான முடி இருக்கே. நீ எப்போ வேணும்னாலும் என்னோட முடியை பிடிச்சிக்கோ. உனக்கும் சீக்கிரமா முடி வளர்ந்திரும்.
சாந்தி: சரி.. நீ ஏன் இன்னும் கொண்டை போட்டு இருக்க. அதை கழட்ட வேண்டியதுதான?
ரேணு: இருமா… இன்னும் சிவா அண்ணா ரெண்டாவது சர்பிரைஸ் என்னனு சொல்லவே இல்ல. அப்புறமா நான் என்னோட கொண்டையை அவிழ்க்கிறேன்.
சாந்தி: என்ன சிவா… எங்களோட ரெண்டாவது சர்பிரைஸ் என்ன?
சிவா: நீங்க எனக்கு தரேன்-னு சொன்ன ரெண்டாவது சர்பிரைஸ் என்ன…. லேடீஸ் பர்ஸ்ட். நீங்கதான் சொல்லணும்.
சாந்தி: சரி சொல்றேன். இன்னைக்கு காலைல உன்கிட்ட சொன்னேன்ல.. ரேணுவோட அத்தை விஜி…. அவ நாளைக்கு இங்க வருவாள். எப்போவுமே என்கிட்ட என்னோட மொட்டை அனுபவம் பத்தி கேட்டுகிட்டே இருப்பா. அவகிட்ட நீதான் எனக்கு மொட்டை போட்டுவிட்டது-னு சொல்லிட்டா இனிமேல் அவளே உன்கிட்ட வந்து மொட்டை பத்தி நிறைய பேசுவாள். உனக்கு வேணும்-னா அவகிட்ட பேசி அவளை மொட்டை அடிச்சிக்கோ.
சிவா: வாவ். இது எனக்கு போனஸ்தான்….. சூப்பர்
ரேணு: என்னம்மா சொல்ற… விஜி அத்தை உன்கிட்ட மொட்டை பத்தி பேசுவாங்களா? அவங்களும் Hair Fetish தானா?
சாந்தி: ஆமா ரேணு.. எனக்கு அப்படித்தான் தோணுது. இப்போ அதுல என்ன விஷயம்-னா…. ஒருவேளை அவ முடியை வெட்டுறதுக்கோ, மொட்டை அடிக்கவோ சரினு சொல்லிட்டா… நாமளும் நல்லா என்ஜாய் பண்ணலாம்.
ரேணு: கரெக்ட். இப்போ விஜி அத்தைக்கும் நல்ல நீளமான முடி இருக்கு. சூப்பரா இருக்கும்.
சிவா: விஜி அக்காவை நாளைக்கு பார்க்கலாம். இப்போ நீங்க ரெண்டு பேரும் என்கூட வாங்க. உங்களோட ரெண்டாவது சர்பிரைஸ் என்னனு சொல்றேன்
சிவா சாந்தியின் தலைமுடியை வாங்கி ரேணுவின் முடியின் அருகில் வைத்தான். ரேணுவுக்கு வெட்டிய முடியைவிட சாந்தியின் வெட்டப்பட்டமுடி நிறைய இருந்தது. மேஜையில் ரேணுவின் வெட்டிய முடியைப்பார்த்தாள் சாந்தி. சிவா இன்னொரு அறையை நோக்கி நடந்தான். அவன் பின்னால் இருவரும் நடந்தனர். நடந்துபோகும்போது சாந்தி தன்னுடைய இடுப்பளவு கூந்தலை கொண்டையாக போட்டாள். ரேணு சாந்தியின் கொண்டையை பார்த்தாள். முடி வெட்டியபின் சாந்தியின் கொண்டை வழக்கமாக இருப்பதை விட சின்னதாக இருந்தது.
அந்த அறைக்குள் நுழைந்ததும், சிவா விளக்கை போட்டான். அறைமுழுக்க சிவாவின் புத்தகங்கள் கிடந்தன. அவன் அறையை பார்த்ததும், சாந்தியும் ரேணுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். சிவா அவர்களை தரையில் உட்காரச்சொன்னான். இருவரும் குழப்பத்துடன். அமர்ந்தனர். சிவா அருகில் இருந்த மேஜையில் ஒரு பேப்பரை எடுத்து பார்த்தான். பின்னர் அதை தன்னுடைய பாக்கட்டில் வைத்துவிட்டு அருகில் இருந்த ஒரு டம்ளரில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து ரேணுவின் தலையிலும், சாந்தியின் தலையிலும் தெளித்தான். ரேணுவுக்கும் சாந்திக்கும் ஒன்றும் புரியவில்லை. இருவரும் மனத்துக்குள் சிவா இப்போது இருவரையும் மொட்டை அடிக்கப்போகிறான் என நினைத்தனர். இருவரும் புரியாமல் முழிப்பதை பார்த்துவிட்டு சிவா பேசினான்.
சிவா: நான் சொல்றதை விளையாட்டா நினைக்காம கவனமா கேளுங்க. இப்போ நான் சொல்றதை நீங்க வெளிய சொல்லக்கூடாது. நான் உங்க ரெண்டுபேர்கிட்டயும் தனித்தனியா “மகேந்திரவர்மன்” பத்தி சொல்லி இருக்கேன். அவனோட மந்திர சக்தி பத்தியும் சொல்லி இருக்கேன்.  அவனோட மந்திரத்தை வச்சு அவனால ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிச்சு மறுபடியும் முடி வளர வைக்க முடியும். அதெல்லாம் வெறும் கதை இல்ல. உண்மையா நடந்தது. அவன் என்ன மந்திரம் பயன்படுத்தினானோ அதை நானும் கத்துக்கிட்டேன்.
சாந்தி: என்னடா சிவா. விளையாடாம சொல்லு….
(ரேணு மெல்ல சாந்தியின் கொண்டையை பார்த்தாள். சாந்தியின் கொண்டை சின்னதாகவே இருந்தது)
ரேணு: அண்ணா…. இப்போ என்ன சொல்லவறீங்க….. நீங்களும் முடியை வெட்டி மறுபடி பழையபடி வளரவைக்க முடியும்-னு சொல்றீங்களா?
சிவா: ஆமா ரேணு. உண்மைதான். ஆனால் அதுக்கு நீங்க என்னை முழுசா நம்பணும். உங்க விருப்பத்தோட மொட்டை அடிச்சாதான் என்னால மறுபடி உங்க தலைமுடியை கொண்டுவர முடியும்.
சாந்தியும் ரேணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் இருவரும் சிவாவை பார்த்தனர். சிவா இருவரையும் பார்த்து சிரித்தான். ரேணுவுக்கு புரிந்தது. அவள் சாந்தியிடம் கூறினாள்.
ரேணு: அம்மா… இப்போ அவங்க என்ன சொல்லவறாங்க-னு உனக்கு புரியலையா?
சாந்தி: என்னடி சொல்றான்.
ரேணு: இந்த கதையெல்லாம் சொல்லி உனக்கும் எனக்கும் மொட்டை அடிக்க ப்ளான் பண்றாங்க.
சாந்தி: சிவா.. உண்மையாவா டா? நீ எனக்கும் ரேணுவுக்கும் மொட்டை அடிக்கவா இப்படி சொன்ன?
சிவா மெல்ல சிரித்தான். அறையைவிட்டு வெளியேற ஆரம்பித்தான். சிவா சர்பிரைஸ் தருவதாக சொல்லிவிட்டு இருவரையும் உட்காரவைத்து மொட்டை அடிக்க ப்ளான் பண்ணினான் என்று புரிந்துகொண்டு ரேணு எழுந்து அவனை துரத்தினாள். சாந்தியும் பின்னாடியே எழுந்து “அவனை விடாத ரேணு.. பிடி” என்று கூறிக்கொண்டே அறையைவிட்டு வெளியே வந்தாள். சிவா சிரித்துக்கொண்டே ஓடினான். “சர்பிரைஸ்-னு சொல்லி எங்களை ஏமாத்துறீங்களா” என்று சொல்லி ரேணு அவனை பிடித்தாள். ரேணு சிவாவை பிடித்ததும் சாந்தியம் வந்து அவனை பிடித்தாள். இருவரும் ஆளுக்கு ஒருபுறம் அவனை பிடித்தனர். சிவா சொல்வதை உண்மையென்று நினைத்துக்கொண்டிருந்த சாந்திக்கு அவன் விளையாடுகிறான் என்று யூகிக்க சிறிது நேரம் பிடித்தது. ரேணுவும் முதலில் சிவா உண்மையாகதான் சொல்கிறான் என நினைத்தாள். பின்னர் அவன் சிரித்தபோது கண்டுபிடித்துவிட்டாள். சிவா இருவரையும் பார்த்து.. “இன்னும் சர்பிரைஸ் வேணுமா” என்று கேட்டுவிட்டு சிரித்தான். சாந்தி, ரேணு இருவருக்கும் அவன் விளையாடினாலும், அவன் செய்த குறும்பு பிடித்தது. இருவரும் அருகில் இருப்பதால், இரண்டு பேரின் கொண்டையையும் மாறி மாறி பார்த்தான். பின்னர் தன் கைகளால், இரண்டு பேரின் கொண்டையையும் பிடித்து தொட்டுப்பார்த்தான். இருவரின் கொண்டையும் மெத்துமெத்தென்று பந்துபோல இருந்தது. சாந்தியின் கொண்டை வழக்கத்தைவிட சின்னதாகவும், ரேணுவின் கொண்டை நல்ல அடர்த்தியாகவும் இருந்தது. சிவா தங்கள் கொண்டையை பிடித்து அனுபவிப்பதை சாந்தியும் ரேணுவும் புரிந்துகொண்டனர். இருவரும் கண்களால் சைகை செய்துகொண்டு சிவாவின் கையை உதறிவிட்டு விலகி நின்றனர். சிவா அவர்களின் கொண்டையை அழுத்தமாக பிடித்து இருந்ததால், அவர்கள் அவன் கையை உதறியதும், இருவரின் கொண்டையும் ஒரே நேரத்தில் அவிழ்ந்தது. ஒரே நேரத்தில் கொண்டை அவிழ்ந்ததில், அடர்த்தியான தலைமுடியை விரித்துவிட்டவாறு சாந்தியும் ரேணுவும் எதிர்எதிரே நின்றிருந்தனர். ரேணுதான் முதலில் கவனித்தாள். சாந்தியின் தலைமுடி சிறிது நேரத்துக்குமுன் எவ்வளவு நீளமாக இருந்ததோ அதே அளவு இப்போதும் இருந்தது. இடுப்பு அளவு முடிதான் இருந்தது என நினைத்த சாந்தி, இப்போது தொடைவரை முடி இருப்பதுபோல் உணர்ந்து தன்னுடைய முடியை பார்த்தாள். சாந்தியால் நம்பமுடியவில்லை. ரேணு தன்னுடைய முடியை பார்த்தாள். அவளுடைய தலைமுடியும் சிவா வெட்டிவிடுவதற்கு முன் எப்படி இருந்ததோ அதே அளவு இருந்தது. இருவரும் ஆச்சரியமாக சிவாவை பார்த்தனர்.
சிவா: என்ன….உங்க ரெண்டுபேருக்கும் இந்த சர்பிரைஸ் போதுமா?
சாந்தி: சிவா.. என்னடா நடக்குது இங்க? இதெல்லாம் உண்மையா இல்லை கனவா?
ரேணு: அண்ணா… என்ன பண்ணுனீங்க? எப்படி எங்களோட முடி மறுபடி வளர்ந்தது?
சிவா: நான்தான் சொன்னேன்-ல. எனக்கு இப்போ அந்த மந்திரம் தெரியும்-னு. இப்போவாவது நீங்க என்னை நம்புறீங்களா? ஆனா ஒரு  விஷயம். நான் உங்களுக்கு சொன்னது பெரிய ரகசியம். இதை வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னா… உங்க தலைல இருக்கிற மொத்த முடியும் கொட்டிடும். மறுபடி வளராது.
சாந்தி: இதெல்லாம் உனக்கு எப்படிடா சிவா தெரியும்.
சிவா: உங்களுக்கு எப்படி சொல்றதுனு தெரியல. அது ஒரு பெரிய கதை.
ரேணு: பரவாயில்லை.. சொல்லுங்க… நாங்க கேட்கிறோம்.
சிவா: நான் சொல்றதை நம்பிக்கையா கேட்கிறதுனா சொல்றேன்.
ரேணு: நான் உங்களை நம்புறேன். சொல்லுங்க.
சிவா: நீ எனக்காக இப்போ மொட்டை அடிக்க ரெடியா.


சிவா கேட்ட கேள்விக்கு ரேணு பதில் சொல்லவில்லை. திரும்பி அவள் அம்மாவை பார்த்தாள். சாந்தி இன்னமும் இது கனவா இல்லை நிஜமா என்ற குழப்பத்தில் இருந்தாள். ரேணு மெல்ல தன்னுடைய ஜடையை முன்னால் எடுத்துப்போட்டு அவிழ்க்க ஆரம்பித்தாள். அவள் ஜடையை ஒவ்வொரு பின்னலாக அவிழ்க்கும்போது சிவாவின் கண்கள் விரிந்தன. ரேணு தான் தலைமுடியை மொத்தமாக அவிழ்த்துவிட்டாள். அவள் மடியில் அவளுடைய தலைமுடி போர்வைபோல விரிந்துகிடந்தது. சிவாவின் முன் தலையை குனிந்து “எடுத்துக்கோங்க அண்ணா… என்னோட முடியை முழுசா எடுத்துக்கோங்க. என்னோட தலையை மொட்டை அடிச்சு விடுங்க”  என்றாள். சிவா தன் பாக்கெட்-ல் இருந்து ஒரு சவரக்கத்தியை எடுத்தான். சிவாவின் முன் ரேணுவின் அடர்த்தியான தலைமுடி சிரைப்பதற்கு தயாராக இருந்தது. தன்னுடைய மகளின் அடர்த்தியான நீண்ட கூந்தல் எப்படி மொட்டை அடிக்கப்படப்போகிறது என சாந்தி ஆர்வமாக பார்த்தாள். சிவாவின் கைகளால் மீண்டும் ஒருமுறை மொட்டை அடிக்கும் சுகத்தை அனுபவிக்க ரேணு தயாரானாள். சிவா தன் இடது கையை ரேணுவின் தலையில் வைத்து, வலது கையில் இருந்த சவரக்கத்தியை ரேணுவின் தலைமுடியை நோக்கி கொண்டு வந்தான்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக