http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 20

பக்கங்கள்

திங்கள், 9 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 20

குணாவுக்கும்… நித்யாவுக்கும்.. திருமண நாள் நிச்சயக்கப்பட்டது..!! நித்யாவை முறைப்படி போய்.. பெண் கேட்டு.. முடிவு செய்தார்கள்..!! ஒரு வகையில் பெண் கேட்பதுகூட பொதுவான ஒரு சடங்குதான்..! மற்ற விசயங்கள் எல்லாம் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தன..!!
அந்த வாரத்தில் ஒரு மதிய நேரம்.. நான் உணவுக்குப் போனபோது…என் வீட்டில்.. நிலாவினியின் அம்மாவும் இருந்தாள்.
”எப்ப வந்தீங்க..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டேன்.
”இப்பதாம்ப்பா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால..! அவன் இருக்கானா.. ஸ்டேண்ட்ல..?” என்று குணாவைக் கேட்டாள்.
”இல்லிங்க..! சவாரி போயிருந்தான்..!!”
மெதுவாக எழுந்து.. நிலாவினியைப் பார்த்து..
” சரி… சாப்பிடுங்க..! நான் போறேன்..!!” என்றாள்.
நான் ”சாப்பிட்டு போங்க. .”என்றேன்.
”பரவால்லப்பா..! போய் அவனுக்கு ஏதாவது செஞ்சு வெக்கலாம்..! பசியோட வந்தான்னா…ஜங்கு.. ஜங்குன்னு குதிப்பான்…!!” என்று விட்டு விடைபெற்றுப் போனாள்.


நான் உடைகளைக் களைந்து… லுங்கி கட்டி பாத்ரூம் போய் வந்தேன். கதவைச் சாத்திவிட்டு வந்த.. நிலாவினி.. என் பக்கத்தில் வந்து நின்று… என் மார்பில் உரசியவாறு சொன்னாள்..!
”அம்மாவும்… நானும்.. டாக்டர்கிட்ட போய்ட்டு.. வந்தோம்…”
”எதுக்கு…?”
”டெஸ்ட் பண்ண…”
” என்ன டெஸ்ட்..? உங்கம்மாக்கு.. ஏதாவது..?”
”எங்கம்மாக்கு இல்ல..! எனக்கு..!!”
”உனக்கா…? உனக்கென்ன டெஸ்ட்…?”
”யூரின் டெஸ்ட்…” என்று சிரித்தாள்.
”யூரின் டெஸ்ட்டா..?”
” ம்..ம்..!! பாசிடிவ்..!!”
”அடிக்கள்ளி..” மகிழ்ந்து.. அவளைக் கட்டிப்பிடித்தேன்.
”இந்த தொப்பைக்குள்ள.. ஒரு ரோஜா.. பூ..!!” என்று முத்தம் கொடுத்தேன்.
”ம்ம்..” என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
வெட்கப்படுகிறாளோ..? அப்படித்தான் இருக்கும்..!!
”நிலா…” வாஞ்சையுடன் அவள் கூந்தலைத் தடவினேன்.
” ம்ம்…”
”சந்தோசமா இருக்கு..! உங்கம்மாக்கு தெரியுமில்ல..?”
” ம்ம்…”
அவள் முகத்தை நிமிர்த்தினேன். வெட்க விழிகளுடன் என்னைப் பார்த்தாள்.   அவள் முத்தமிட்டேன்
”லவ் யூ பொண்டாட்டி…”
”மெனி மோர் லவ் யூ… புருஷா..”
”என்ன வேனும்.. உனக்கு..?”
”நீங்க. ..”
” நான்தான் இருக்கேனே..? என்கிட்டருந்து என்ன வேனும்..?”
”எப்பவும்… உங்க அன்பும்.. அரவணைப்பும்…!!”
” இதெல்லாம் கேக்கனுமா..? வேற ஏதாவது..?”
”வேற எதுவும்.. எனக்கு பெருசில்ல…” என்று என் உதட்டில் முத்தமிட்டாள்.
அவளது மேடான வயிற்றைத் தடவினேன்..!
”தேங்க்ஸ்… நிலா..!!”
” ச்ச… என்னப்பா.. நீங்க..!! நான்தான் தேங்க்ஸ் சொல்லனும்..! அப்பறம்…”
”ம்..ம்..அப்பறம்…?”
”உங்க.. சிஸ்டர் போன் பண்ணிருந்தா..”
”சிஸ்டரா…?”
” ம்..ம்..! உங்க தங்கச்சி…”
”ஓ..!!”
” ரொம்ப நேரம் பேசினா..”
”ம்..” நான் கொஞ்சம் இருக்கமடைந்ததை உணர்ந்ததும்.. சட்டென அந்தப் பேச்சை நிறுத்தி விட்டாள்.
”சரி… சாப்பிட வாங்க..!!” என்று.. என்னை முத்தமிட்டு விலகிப் போனாள்…!
இரவில்.. உன்னை பஸ் வெச்சுவிட வந்தபோது.. உன்னிடம்..சொன்னபோது உன் முகம்.. அப்படியே பூரிப்பில் மலர்ந்து போனது..!
”ஐயோ.. ரொம்ப சந்தோசங்க..!! எத்தனை மாசம்ங்க…?”
”அது தெரியல..தாமரை..!! ஆனா மாசமா இருக்கா..!!” என்றேன்.
தீபா சிரித்து.. ”ஹூம்.. ஐயாக்கு மாசமா ஆக்கத் தெரிஞ்சுருக்கு… ஆனா எத்தனை மாசம் ஆச்சுனு தெரியல…” என்று கிண்டல் செய்தாள்.
சட்டென அவள் காதைப் பிடித்து திருகினேன்.
”உனக்கு ரொம்பத்தான்டி.. நீண்டு போச்சு…”
”ஆ…! என்னது…?” சிணுங்கலுடன் சிரித்தாள்.
”ம்.. உன் வாயி…” என்க சிரித்துக் கொண்டு விலகினாள்.
நீ மெதுவாகச் சொன்னாய்.
” எனக்கு.. என்னமோ.. அக்காவ பாக்கனும் போல இருக்குங்க…”
” அப்படியா…?”
” வரலாங்களா…?”
” நீயா…?” யோசித்தேன்.
தீபா குறுக்கிட்டாள்.
”வேனாங்களா..?” என்றாள்.
சமாளித்து விடலாம் எனத் தோண்றியது.
”ம்..ம்..! சரி.. வாங்க..!!”
நீ தயங்கி விட்டு..
”வம்பு வரும்னா.. வேண்டாங்க..!!” என்றாய்.
”வம்பெல்லாம் வராது..! உங்களத் தெரியும் அவளுக்கு..”
தீபா ”கல்யாணத்துல பாத்தாங்களே..” என்றாள்.
”ம்..ம். !! வாங்க.. ஒன்னும் பிரச்சினை இல்லை..!!” என்றேன்..!!
மறுநாள் காலை..!!
நான் கண்விழித்தது உன் முகத்தில்தான..!! கண்களைத் திறந்தவன்.. உன்னைப் பார்த்ததும்.. திடுக்கிட்டேன்..! நான் காணபது கனவல்லவே..? கண்களைத் தேய்த்து விட்டுப் பார்த்தேன்.! நீயேதான்…!!
”நாந்தாங்க..” என்று சிரித்தாய்.
”நீயா..? ”
நீ எப்படி.. இந்தக் காலை வேளையில்..? திகைப்புடன் எழுந்தேன்.
‘'நீ எப்படி இங்க…?”
”ஏங்க.. நான் வரக்கூடாதா..?” என்று கேட்ட உன் முகம் தீவிரமடைந்தது.
நான் சிரித்து..
”சே.. சே..! நான் கேட்டது.. அதில்ல…”
”இ.. இல்ல.. அக்காவ.. பாக்கலாம்ன்ட்டு…” என்று தணிந்த குரலில் சொன்னாய். ”சொல்லாம வந்தது.. தப்புங்களா..?”
நான்.. என் மனைவியைத் தேடினேன். அவள் சமையல் கட்டில் இருக்க வேண்டும்..!
”பரவால்ல..! எப்ப வந்த.. நீ..?”
”இப்பதாங்க…”
”நிலாவ.. பாத்துட்டியா..?”
” ம்..! பாத்தங்க..!!” உன்னிடம் உற்சாக உணர்வு இல்லை. முகத்தில் பயமே தெண்பட்டது.
”ம்..ம்..! உக்காரு…!!” என்று விட்டு எழுந்தேன்.
லுங்கியை இருக்கிக் கட்டிக் கொண்டு.. சமையல் கட்டை எட்டிப் பார்த்தேன். காபி கலக்கிக் கொண்டிருந்த.. என் மனைவி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
”உங்க.. கெஸ்ட் வந்துருக்காங்க..”
”ம்..! எழுப்பிருக்கலாமிலல. ?”
” அவங்கதான் வேண்டாம்னாங்க.. பேசிட்டிருங்க..! காபி கொண்டு வரேன்…!!” என்றாள்.
”ம்..ம்..” என்று விட்டு…பாத்ரூம் போனேன்.
அருகே போக… பாத்ரூம் கதவு திறந்து.. வெளியே வந்தாள் தீபா.
”அட..! நீயும் வந்துருக்கியா.?” என்றேன்.
”நான் வராம இருப்பங்களா..?”
இளஞ் சிவப்பு தாவணியில்.. பளீரெனச் சிரித்தாள். ஆனால் இப்போது.. அதைப் பற்றிப் பேசுவதற்கு.. சரியான சந்தர்ப்பம் இல்லை.
”அதானே..நீ யாரு…?” என்றேன்.
”இவ்ளோ நேரமா.. தூங்குவீங்க..?” என்று கேட்டாள்.
”ம்..ம்..! நட வரேன்..!” என்று விட்டு பாத்ரூமில் நுழைந்தேன்.
நான் முகம் கழுவிக் கொண்டு.. வீட்டுக்குள் போக.. என் மனைவி.. அவள்கள் இருவருக்கும்.. காபி கொடுத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் கொடுத்தாள். டேபிள் மீது… சிலவகை.. பழங்கள்.. ஸ்வீட்… பூவெல்லாம் இருந்தது.
”அட..! இதெல்லாம் யாரு வாங்கினது..?’ என்று கேட்டேன்.
” நாங்கதான்.!!” என்று சிரித்தாள் தீபா.
”இதெல்லாம் வாங்கனுமா..?”
நீ.. ”சும்மா.. எப்படிங்க.. வர்றது..?”என்றாய்.
நீ கொஞ்சம் பயத்துடனே இருந்தாய்..! ஆனால் தீபா.. மிகவும் சரளமாக வாயடித்தாள். உங்கள் வேலையெல்லாம் பற்றி விசாரித்தாள் நிலாவினி. நீங்கள் இருவரும் விடைபெற்றுப் போகும்வரை.. எனக்குக் கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது..!!
உங்கள் இருவரையும் நான் வீதிவரை வந்து அனுப்பிவிட்டு. வீட்டுக்குள் போக.. உதட்டில் குறுஞ் சிரிப்புடன் என்னைப் பார்த்தாள் நிலாவினி.
”போய்ட்டாங்களா…?”
”ம்..ம்..”
”ஹைட்டா.. இருந்த பொண்ணுதான… தாமரை..?” என்று என் பக்கத்தில் வந்து நின்றாள்.
”ம்..ம்..! அவதான்..!!” என்றேன் கொஞ்சம் இளித்து.
”குள்ளமா இருந்தது..?”
”தீபா…! தீபமலர்..!!”
”ம்..ம்..! எப்ப சொன்னீங்க..?”
”என்னது..?”
”ம்…நான் பிரக்னெண்ட்னு..?”
”நேத்து..! வழில பாத்து.. பேசினப்ப.. இப்படினு சொன்னேன்…”
”பரவால்ல..! ஒடனே பாக்க வந்துட்டாங்க..! பழம்.. ஸ்வீட்டோட…!!”
”இ..இல்ல..! இத.. நானே.. எதிர்பாக்கல..!!”
” அவங்க ரெண்டு பேரும்.. அக்கா… தங்கச்சியா..?”
”அதெல்லாம் இல்ல.. பிரெண்ட்ஸ்…!! பக்கத்து.. பக்கத்து வீடு..!!”
”ஒரே ஜாடைல இருக்காங்க..! அவங்க ரெண்டு பேரும்.. அக்கா.. தங்கச்சின்னே நெனச்சேன்..!!” என்றாள்.
”ம்..ம்..! பாக்ற எல்லாரும்.. அப்படித்தான் நெனைப்பாங்க..!!”
”அந்தப் பொண்ணு.. தீபா இல்ல..? அவ என்னமோ.. என்னை ஒரு அதிசய பிறவிய பாக்கற மாதிரி பாக்கறா..! நான் என்ன அவ்வளவு வித்தியாசமாவா இருக்கேன்..?”
” இல்ல.. நீ அழகா இருக்கியே.. அதை பிரம்மிச்சு பாத்துருப்பா..”
”ஏன்.. அவ அழகா இல்லியா..? கருப்பாருந்தாலும்.. என்ன.ஒரு ஸ்ட்ரக்ஸர் அவளுக்கு..!! நான் ஒரு அழகுன்னா.. அவ ஒரு அழகு..!!”
”நம்ம அகராதில.. அழகுன்னா.. அது நல்ல.. செவந்த நிறமா.. வெள்ளைத் தோலோட.. பாக்க பளபளனு இருக்கறதுதான்..!!”
நிலாவினி புன்னகைத்தாள் .
”அவ பாத்தத நெனச்சா.. எனக்கு இன்னுமே சிரிப்புத்தான் வருது..!”
”ஒரு.. ஆச்சரியம்தான்..”
” ஆனா.. தாமரை அப்படி பாக்கல..!!”
”ம்..ம்..!!”
”அனாதையா… அவ..?”
” ம்..! சொந்தம்னு ஒருத்தர்கூட இல்ல.. அவளுக்கு..”
”அதான்.. நீங்க இருக்கீங்களே..?” என்றாள்.
நான் துணுக்குற்று.. அவளைப் பார்த்தேன். அவள் குறும்புடன் சிரித்தாள்.
”நிலா.. இது… இது.. சும்மா… ஒரு பழக்கம்…” என சமாளித்தேன்.
”தெரியுமே… அதுவும்…” என்றாள்.
என் மனதில் ஒரு உறுத்தல்..! பயமாக இருந்தது..! இது என்னடா வம்பு..காலை எழுந்தவுடனே..? என கவலை வந்தது..!!!!!

"சரி.. சரி..! நான் குளிக்கனும்..!!” என்று பேச்சை மாற்றினேன்.
” போங்க..!! இங்க நின்னு வெட்டிக்கதை பேசாம..அத செய்ங்க..!!” என்று.. சிரித்தபடி என்னைத் தள்ளி விட்டாள் நிலாவினி.
”நீதான்.. குளிப்பாட்டி விடனும்…”
”பிரஸ் பண்ணியும் விடனுமா..?” என கிண்டலாகக் கேட்டாள்.
”ம்..ம்..! பண்ணி விட்டா.. நல்லாத்தான் இருக்கும்..”
”ம்..ம்..! கொழந்தை..! போய் பிரஷ் பண்ணுங்க..! நான் வந்தர்றேன்..!!” என்ற அவள் கையைப் பிடித்து.. இழுத்து என் மார்பில் அணைத்தேன். அவளை வாசம் பிடித்தேன்.
”நிலா…”
” ம்..ம்..!!”
” ஐ லவ் யூ..!!” அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
”சரிடா..! என் செல்லப் பையன் இல்ல…? இன்னொரு முத்தம் குடுத்துட்டு… நல்ல பிள்ளையா போய்.. பல்லு வெளக்குங்க..!!” என்று என் இடுப்பைக் கட்டிக் கொண்டாள்.
”ம்கூம்..!!” நான் தலையை ஆட்டினேன்.
”என்ன… ம்கூம்….?”
”நான் முத்தம் தரப் போறதில்ல..!!”
” நான் தரனுமா..?”
”ம்..ம்..!!”
மென்மையான பனிமலர் ஒன்று உரசுவது போல.. என் உதட்டில்.. அவளது சிவந்த.. உதட்டைப் பதித்து… முத்தமிட்டாள்.
”இன்னொன்னு…” என்றேன்.
அதேபோல… மென்மையான இன்னொரு முத்தம் கொடுத்தாள்.
” போங்க…”
”மாட்டேன்…!!” அவள் இடுப்பை இருக்கினேன்.
”இன்னும் வேனுமா..?”
”ம்..ம்…!!”
"ப்ச்ச்"  மறுபடி முத்தம் தந்து.. ”பத்தாதுதான..?” என்று.. என் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.
”இல்ல..! போதும்..!!” என்றேன்.
”இல்ல.. போதாது..!!” என்றாள்.
” போதும்… போதும்…!!”
” போதாது… போதாது..!!”
”இல்ல… போதும்.. போதும்..!!”
” போதுமா…?”
”ம்..ம்..”
”சரி..! அப்ப போங்க..!! எனக்கென்ன..?”
சட்டென அவள் உதட்டருகே.. என் உதட்டை வைத்து..
”வேனும் போலத்தான் இருக்கு..!!” என்றேன்.
”இல்ல… வேண்டாம்..!!” அவள் மறுத்தாள்.
” வேனும்..! வேனும்..!!”
”போங்க..! நீங்கதான.. போதும்னிங்க..!!”
”அது… அப்ப…!!”
”ஆ… இப்ப…?”
” அப்ப போதுமா இருந்துச்சு .”
”இப்ப..?”
”இப்ப பத்தல..! பத்தல..! கொஞ்சம் கூட பத்தல..!!”
”வேண்டாம்னு சொன்னிங்கள்ள.. ஸோ…?”
”வேண்டாம்னா சொன்னேன்..? மடையன்…!!” என்றேன்.
”அதும்.. சரியான.. வாத்து மடையன்..!!” எனச் சிரித்த.. அவளை இழுத்துப் பிடித்து.. அவளது இதழ் சுவைத்தேன்..!!
ஆழ முத்தத்துக்குப் பின்.. விலகி… குளிக்கப் போனேன்..!! நான் குளிக்கும் போது.. அவளும் வந்து விட்டாள்…!! இருவரும் ஒன்றாகவே… குளித்தோம்..!! ஒருவழியாக… காலை நேரப் பிரச்சினை முடிந்து விட்டது.! சாப்பிட்டபின்.. நான் ஸ்டேண்டுக்குப் போய்விட்டேன்..!!
அந்தப் பிரச்சினை அதோடு முடிந்து விட்டது என்றுதான் நம்பினேன்..! ஆனால் அது முடியவில்லை என்பது மதிய உணவுக்குப் போனபோதுதான் தெரிந்தது..!!
நான் போனபோது கதவு லேசாகத் திறந்தே இருந்தது. மேகலா என் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும்…
” ம்ம்..! வந்துட்டாங்க… உங்களவர்..!!” என்றாள்.
நான் சிரித்து..
”இன்னும் உங்களவர் வல்லியா..?” என்று கேட்டேன்.
புடவை மாராப்பை சரி பண்ணிக் கொண்டு
”ம்ம்.. வர்ற நேரம்தான்…!” என்று சிரித்தவாறு எழுந்தாள்.
”ஏன் எந்திரிச்சுட்டிங்க..? உக்காருங்க..!!”
”இல்ல.. அவரும் வந்துருவாரு..! நான் அப்றமா.. வரேன்..!”
”சரி..சாப்பிட்டுத்தான் போறது..?”
”காலைல சாப்பாடே.. பதினொரு மணிக்கு மேலதான் சாப்பிட்டேன்..! இப்ப பசி இல்ல. .. நீங்க சாப்பிடுங்க..!!” என்று விட்டு வெளியேறிப் போனாள்.
மேகலா போனதும்.. என் மனைவி..
”ஹ்ம்ம்..” எனப் பெருமூச்சு விட்டாள்.
”ஏன்.. என்னாச்சு.. இப்ப..?” என்று அவளை அணைத்தவாறு கேட்டேன்.
”நல்ல மனசு…” என்றாள்.
”யாருக்கு..?”
”இந்தக்காக்குத்தான்…”
”ம்.. ஆமா..! நானும் பாத்தேன்..!!” என்று சிரிக்க..
” யூ… யூ..!!” என என் மண்டையில் கொட்டினாள்.
”நான் அவங்க மனச சொன்னேன்..”
”நான் மட்டும் என்ன.. அவங்க மாங்காயவா சொன்னேன்..? நீ சொன்ன அதே மனசத்தான்..!!!”
”உங்கள….!” எனக் கிள்ள வந்தவளை அள்ளி.. அணைத்துக் கொண்டேன்.
என் மார்பில் தஞ்சம் புகுந்தவளை.. முத்தமிட்டு..
”ஐ லவ் யூ… என் அழகு பொண்டாட்டி…” என்றேன்.
”நானும்… புருஷா…”என்று எனக்கு முத்தம் கொடுத்தாள்.
அவளது வெண்பஞ்சு மார்புகள் என் நெஞ்சில் அழுந்த.. அவளை இருக்கி அணைத்து வாசம் பிடித்தேன்..!
”என்ன…என்னை கொல்றதுனே முடிவா..?” என்று சிணுங்கலோடு கேட்டாள்.
”ஆமா.. உன்னை அப்படியே சாப்பிடனும் போல.. அத்தனை பசி…”
”பசின்னா.. சாப்பிட வாங்க..” என்று லேசாக விலகினாள்.
சட்டென நினைவு வந்து..
”ஓ.. ஸாரி…!!”என்றேன்.
”எதுக்கு..?”
” உன் வயித்துல பாப்பா இருக்கறத மறந்துட்டேன்..!!” எனக் குனிந்து அவளது மணி வயிற்றுக்கு முத்தம் கொடுத்தேன்..!!
”ஏய்… பொண்டாட்டி…”
” என்ன புருஷா…?”
” நீ.. எத்தனை அழகு தெரியுமா..?”
”கேட்டு.. கேட்டு.. அலுத்துப் போச்சுடா.. புருஷ்ஷா..”
”ஆனாலும் சொல்லாம இருக்க முடியாதே.. அழகு பொண்டாட்டி…!!”
”ம்..ம்..!!”
மீண்டும் முத்தம்… தழுவல்..எல்லாம் முடிந்து… நான் விலகி.. கைலிக்கு மாறி..பாத்ரூம் போய் வந்தேன். இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம்..!!
சாப்பிட்ட பின் நான் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தேன். நிலாவினி வந்து.. என் பக்கத்தில் உட்கார்ந்து.. என் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
”என்னங்க..” என்றாள் மெல்ல.
”ம்..?” நான் டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
”நா.. ஒன்னு கேப்பேன்..”
”ம்..ம்.. கேளு..?”
”ஒரே வார்த்தைல பதில் சொன்னா போதும்..”
”ஒரே வார்த்தைலன்னா..?”
” வெறும் ‘ம்..’னு மட்டும் சொன்னா போதும்..!!”
” ம்..!” என்றேன்.
”தட்ஸ் குட்..” சிரித்தாள்
” பொய்யாருந்தாலும் பரவால்ல.. ஐ லைக் தட்…”
”ம்..”
” தாமரை.. உங்களுக்கு தங்கச்சி மாதிரிதான…?” என்று கேட்டாள்.
காலையில் விட்டுப்போன விபரீதம்.. இப்போது தொடர்கிறதோ..?
”என்ன… திடிர்னு..?” என யோசனையுடன் அவளைப் பார்த்தேன்.
”கேள்வி வேண்டாம்..! நா மட்டும்தான் கேப்பேன்..! நீங்க பதில் மட்டும் சொன்னா போதும்..! அதும் ஒரே வார்ததை.. ஒரே எழுத்து… ‘ம்..’ ?”
”ம்…!!”
”நல்லது..!! நீங்க அவளை தொட்டதே இல்லைதான..?”
அதிர்ந்தேன்.
”நிலா… நீ…?”
”நோ.. நோ…!! ஒன்லி… ம்..!!”
தயங்கி… ” ம்.. !!”
”நம்ம கல்யாணத்துக்கு முன்ன… ஒரு நாலஞ்சு நாளு.. இங்க வந்து… அவ தங்கலதான..?”
இது மேலும் என்னை அதிரச் செய்தது. இதெல்லாம் எப்படி இவளுக்கு..? அதிர்ந்த கண்களோடு அவளைப் பார்த்தேன். ஆனால் அவள் முகம் சாதாரனமாகவே தோன்றியது..!
”நிலா… இதெல்லாம்.. எப்படி… உனக்கு…?”
”இந்தக் கட்டில்.. இந்த போர்வை.. அதோ.. அந்த டேபிள்.. இதெல்லாம் சொன்ன கதைகள்…!! அப்ப.. நீங்க அவள ஒன்னுமே பண்ணலதான..?”
”நிலா.. இதெல்லாம்.. யாரு.. உன்கிட்ட…?”
” நாலு சுவரு..! நடூல தரை..!! சைடுல ஜன்னல்..!! சரி.. நீங்க.. ஜன்னல எல்லாம் தெறந்து வெச்சிட்டெல்லாம்.. எதும் பண்ணலதான..? அப்படி நீங்க முன்னெச்சரிக்கையில்லாம.. எதுமே பண்ண மாட்டிங்கனு எனக்கு தெரியும்..! ‘ ம் ‘னு மட்டும் சொல்லுங்க..! வேற கேள்விகளோ.. விளக்கங்களோ எதும் வேண்டாம்…!!”
அவள் பேச்சில் நிலை குலைந்து போனேன் நான். மறுபடி நிலாவினி..
”அவ உங்கள.. கல்யாணமெல்லாம் பண்ணிக்கச் சொல்லலதான..?” என்றாள்.


என் இதயம் படபடத்தது..! உடம்பில் என்னையும் மீறி.. மெலிதான ஒரு நடுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது..! சீராக மூச்சு வர மறுத்தது..!!
‘இப்போது.. இவளை எப்படி சமாளிக்கப் போகிறேன்..?’
அவள் விடாமல்..
”நீங்க.. என்னை கல்யாணம் பண்ணிட்டதுல.. அவளுக்கும் சந்தோசம்தான..?” என்றாள்.
”ம்..” என்றேன் தீவிரமாக யோசித்தவாறு.
”அவளுக்கு.. ஒருதுளி கூட வருத்தம்.. இல்லதான..?”
” ம்..!!”
” சந்தோசம்..!நானும் சொல்றேன்…தாமரை ரொம்ப நல்லவ..! நல்லவதான..?”
இப்போது நான் என்ன சொல்வது.?
” சொல்லுங்கப்பா… தாமரை நல்லவதான..?”
அவள் போக்குலேயேதான் போகவேண்டும். வெகுவாகத் தயங்கி…
”ம்…” என்றேன்.
”இது போதும்..! நான் தெரிஞ்சுக்க வேண்டியது அவ்வளவுதான்..!!” என்றாள்.
இது அவள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல..! அவளுக்குத் தெரியும்.. என்பதை.. எனக்கு உணர்த்தத்தான்… என்பது புரிந்தது…!!
பயந்தவாறே கேட்டேன்.
”இதெல்லாம்.. யாரு சொன்னது.. உனக்கு..?”
மெதுவாகச் சொன்னாள்.
”எந்தச் சுவருக்கும் பார்ககின்ற விழி இருக்கும்…!!”
நான் வாயை மூடிக் கொண்டேன். மேகலா மூலமாகத்தான்.. இவளுக்கு தெரிந்திருக்க வேண்டும்..!
‘ பாதகி..!’
ஆனால் நிலா… என்னுடன் சண்டை போடவோ… வாக்குவாதம் நடத்தவோ இல்லை..! மெதுவான குரலில் அவளிடம் கேட்டேன்.
”நிலா…”
” ம்ம்…?”
” மேகலாவா… சொன்னா..?”
”எனக்கும் கொஞ்சம் தெரியும். .!!”
”உனக்கு.. எப்படி…?”
”கோயில்ல… உங்களோட சேத்து.. அவளை மொத மொத பாத்தேனே.. அப்பவே.. அவ உங்களுக்கு எத்தனை நெருக்கம்னு புரிஞ்சு போச்சு..!! ஆனாலும் நீங்க சொல்ற பொய்கள நான் மறுக்கப் போறதில்ல..!! உண்மையைச் சொன்னா.. உங்ககிட்டேர்ந்து நான் எதிர்பாக்கறதும்.. அந்த பொய்களத்தான்..!! நீங்க சொன்னா.. நான் நம்பிக்கறேன்..!!”
என் குரல் எனக்குள்ளேயே ஒடுங்கியது.
”அப்ப… உனக்கு… தாமரை பத்தி… தெரியும்..?”
”ஆனா..! நான் அத நம்பப் போறதில்ல..!!” என்றாள்.
இது என்ன விந்தை..? எல்லாம் தெரிந்தும் நம்ப மாட்டாளா.... ????

என் மனைவி.. நிலாவினியின் முகத்தை உற்றுப் பார்த்தேன். அதில் புன்னகை மட்டும்தான் தெரிந்தது..!
”நிலா…நீ…”
”எனக்கு.. என் புருஷன் வேனும்..!!” என்றாள்.
” சரி..! ஆனா.. அதுக்கும்.. இதுக்கும்….”
”என் புருஷன் மட்டும்தான் எனக்கு வேனும்..!! அவனோட அன்பு.. அரவணைப்பு.. காதல்.. காமம்… குறும்பு… இதெல்லாம் எனக்கு எப்பவும் வேனும்..!!”
”அது.. சரி… ஆனா….”
”உண்மை… நம்ம ரெண்டு பேருக்கும் நடூல… ஒரு பெரிய பள்ளத்தை உண்டாக்கிரும்..!! அதனாலதான் நான் பொய்ய விரும்பறேன்…!!” என்றாள்.
என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
”நீ… ஒரு வித்தியாசமான பொண்ணுதான்…!!”
”ம்..ம்..!! இப்பக் கூட.. அந்த மேகலக்கா மேல… உங்களுக்கு.. எந்தவிதமான… தப்பான எண்ணமோ… சபலமோ… துளிகூட இல்லேன்னு சொல்லுங்க…! சத்தியமா.. அத நான்.. அப்படியே நம்பிப்பேன்…!!” என்றாள்.
‘மை காட்..! இதுவும் தெரியுமா.. இவளுக்கு..? இது.. எப்படி..?’
ஆனால்…செருப்பில் அடி வாங்கியது போலிருந்தது எனக்கு..!! இருப்பினும்…சமாளித்தாக வேண்டும்..!
”நிலா…! என்ன.. நீ… இப்படிலாம்… மேகலா… எனக்கு. . அக்கா மாதிரி…” என நான் தடுமாற்றத்துடன் சொல்ல…
”இது.. இது.. இது…!! இதத்தான்…நான்.. ரொம்ப… ரொம்ப.. லைக் பண்றேன்…!!” என்று சிரித்துக் கொண்டே… லேசாக எழுந்து உட்கார்ந்தாள்.
‘ சே.. வேஷம் கலைந்து விட்டது..!’
என் முகத்தில் ஈ ஆடவில்லை..! அல்லது.. என் முகம் வெளிறிப் போனது..! மேலும் என்ன பேசுவதெனப் புரியாமல்.. அமைதியானேன்..!
மீண்டும் புன்னகையுடன் என் தலையைத் தடவினாள்.
”புருஷா…”
” ம்..!!” என் தலை நிமிரவில்லை.
”இது மாதிரியே… பேசனும்… எப்பவும்…!!”
” ஸாரி… நிலா..!!” என் குரல் மிகவும் பலவீனமாக வெளிப்பட்டது..!
”எதுக்கு…?”
” இல்ல… நான்… இப்படி…”
”ச்சீ..!!” என சட்டென என் முகத்தை இழுத்து தன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.
”எதுக்கு இப்ப… ஃபீலிங்..? நா.. உங்கள தப்பா.. சொல்லவே இல்லையே..?”
அவளது மார்புகளுக்கிடையிலிருந்து மெல்லிய குரலில் முனகினேன்.
”நீ… தப்பா பேசிருந்தாக்கூட.. அது.. என்னை பாதிச்சுருக்குமா.. என்னன்னு தெரியல…!! ஆனா இப்படி பேசறது…”
”சீ… ச்சீ..!! நீ என் புருஷன்டா..!! நீ.. ஃபீல் பண்ணவே கூடாது..!!” என்று என் உசசியில் முத்தமிட்டாள்.
அவளை அப்படியே.. இறுக்கி.. அணைத்து.. என் முகத்தை அவள் மார்பில் புதைத்துக் கொண்டு… நெக்குருகிப் போய் சொன்னேன்..!
”ஐ லவ் யூ… நிலா…!!”
” இதே அன்போட இருடா… போதும்..!! ” என என்னை மூசசுத் திணறுமளவுக்கு இருக்கிக் கொண்டு சொன்னாள்.
” உங்கள.. நான் தப்பா பேசமாட்டேன்..! சண்டை போட மாட்டேன்..! உங்க ஆழ்மனச நோகடிக்க மாட்டேன்..! ஏன். .. உங்க விருப்பத்தக் கூட தடை பண்ண மாட்டேன்..!! ஆனா.. எனக்கு.. உங்ககிட்டருந்து தேவைப்படற.. ஒன்னே.. ஒன்னு…. உங்க அன்பு…!! ஐ லவ் யூ…!!”
”உன்ன மாதிரி ஒருத்தி.. எனக்கு பொண்டாட்டியா கெடைக்க… நான்.. ஏதோ ஒரு ஜென்மத்துல… நெறைய புண்ணியம் பண்ணியிருக்கனும்.. நிலா…!! ஐ லவ் யூ.. ஐலவ் யூ…என் மூச்சுக்காத்து… இருக்கறவரை… ஐ லவ் யூ…!!”
”நானும்… புருஷா..!!”
சில நிமிடங்கள்… எங்களது உணர்ச்சி மோதலால்… உணர்வுப் பறிமாறல்களால்… அமைதியாகக் கழிந்தது..!
வசதியாகப் படுத்து.. அவள் மார்பிலிருந்து முகம் விலகாமல்..
”நிலா…” என்றேன்.
” ம்..ம்..?”
”என்னைப் பத்தி.. இத்தனை தெரிஞ்சும்… நீ.. எப்படி… இப்படி…?”
மெல்லக் கேட்டாள்.
”உண்மை வேனுமா..? பொய் வேனுமா..?”
”நான்.. உன்ன மாதிரி… முழுக்க.. முழுக்க பொய்ய மட்டுமே நம்பறதில்ல… ஓரளவு உண்மையும் வேனும்..!!”
”முழுசுமா.. உண்மை வேனுமா..? இல்ல பாதி..பொய்…! பாதி உண்மை..?”
” இந்த ஒரு கேள்விக்கு மட்டும் முழு உண்மை..!!” என்றேன்.
பெருமூச்சு விட்டாள். அவள் விட்ட பெருமூச்சில்… அவள் மார்பு.. என் முகத்தை… தூக்கிப் போட்டது..!
”உண்மையைச் சொன்னா… நான் சண்டைக்காரி இல்ல..! அதேமாதிரி… யாரும் நல்லவங்களும் இல்ல.. கெட்டவங்களும் இல்ல..!! அவங்கவங்க.. சந்தர்ப்ப சூழ்நிலைகள பொருத்து… ஒவ்வொருத்தர்… ஒவ்வொரு மாதிரி…!! அதுல.. என் புருஷனும் ஒரு மாதிரி..!!” என்றாள்.
அவள் சொன்னது எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனாலும் அவளை மேலே தூண்டிவிட்டு… நான் இன்னும் வம்பில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை..! பேச்சை மாற்ற விரும்பினேன்..!!
”சரி… நீ.. என்கிட்ட பொய் சொல்லியிருக்கியா..?” என அவள் மார்பில் இருந்து.. முகத்தை விலக்கிக் கேட்டேன்.
என் கண்களைப் பார்த்தாள்.
”உண்மையான பதில் வேனுமா… இல்ல…?”
”எனக்கு… உண்மையான பதில்தான் வேனும்..!!”
”அப்படியா..?”
” ம்..ம்..!!”
” உண்மையை சொன்னா.. அதை.. ஏத்துப்பீங்கதான..?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
”ம்..ம்..! சொல்லு..!!” அவள் மார்பில் கை வைத்து.. மெதுவாக தடவிக் கொடுத்தேன்.
” தாமரை மேட்டரை… நான் ஏத்துட்ட மாதிரி…? நீங்க ஏத்துப்பீங்களா..?” என்று கேட்டாள்.
நான் திடுக்கிட்டேன். தாமரை மேட்டர் போலவா..?
”எ.. என்ன.. சொல்ற.. நிலா..?”
அவள் இதழ்கள்.. புன்னகையால் விரிந்தது.
.”இதான்..!! உங்களால முடியாது..!! என்னோட எடத்துல.. நீங்க இருந்திருந்தா… என்ன நடந்துருக்கும் இப்ப.. கொஞ்சம்.. யோசிச்சு பாருங்க..!!”
அவள் சொல்வதும் சரிதானோ..? என்னால் இவ்வளவு பெருந்தண்மையுடன் ஏற்றுக்கொள்ள முடியாதோ..? ஆனாலும்.. சமாளித்தேன்..!!
”சே…சே…! அப்டிலாம் இல்ல..! நீ தாராளமா.. சொல்லலாம்..!!”
சிறு அமைதிக்குப் பின்… ஒரு ஆழப் பெருமூச்சு விட்டுச்சொன்னாள்.
”நான் ஒரு பெரிய.. மோசக்காரி..!!”
”அப்படியா…? என்ன மோசம் பண்ண..?”
”பெரிய.. பொய் சொல்லியிருக்கேன்..!!”
”ம்கூம்..? என்ன பொய்..?”
”என்னால.. அத.. சொல்ல முடியாது..!!”
”ஏன்..?”
”ரியல் இஸ்…ஹாரிபில்..!! உண்மையைச் சொன்னா.. அத ஏத்துக்கற பக்குவம்.. உங்களுக்கு இருக்கலாம்..!! ஆனா.. அதை சொல்ற தைரியம்.. என்கிட்ட இல்லை..!!”
”ஏய்… இதபாரு.. நிலா… தாமரை விசயத்தையே நீ பெருசு பண்ணாதப்ப.. உன் விசயத்தை மட்டும் நான் பெருசு பண்ணுவனா.. என்ன..? தைரியமா.. சொல்லு..!!”
”ம்கூம்..! என்னால முடியாது..! அத்தனை மனத் தெம்பு எனக்கு கெடையாது..! அதான்… உண்மையைக் கண்டா.. எனக்கு அத்தனை பயம்..! உண்மை கொடூரமானது..! அது.. அது.. ஒரு அரக்க குணம்..!! ஹாரிபிள்…!! என் மனசு… என் வாழ்க்கை.. எல்லாத்தையுமே… தூள்.. தூளா.. சிதறிப்போக வெச்சிரும்..!!” என்றாள்.
”ஏய்.. உண்மையை.. இத்தனை மோசமாவா நெனைக்கற நீ..?”
” ஆமாம்..!! ஆனா..நான் நெனைக்கல.. அது அப்படித்தான்.. இருக்கு..!!”
மெதுவாகக் கேட்டேன்.
”ரொம்ப.. கஷ்டமான.. உண்மையோ..?”
”ரொம்ப… ரொம்ப.. கொடூரமானது…!!” என்றாள்.. நிலாவினி…!!
அதன்பிறகு.. அதைப் பற்றிப் பேசவில்லை..! கொஞ்சலும்.. குலாவலுமாக… மனநிலையை மாற்றிக் கொண்டோம்..!! இப்படிப்பட்ட ஒரு.. மன நிலைக்குப் பிறகு… நிகழும்… உடற் கலப்பு.. பொதுவாகவே மிகவும் மெல்லிய உணர்வலைகளில் மிதக்க வைக்கும்…!!
நான் அப்படியே கண்ணயர்ந்து விட்டேன்..!!
மாலை வேளை..!!
அக்கா வீட்டிற்குப் போனேன். கட்டிலில் உட்கார்ந்திருந்த பெரியம்மா எழுந்து வந்தாள்..!!
”புள்ள நல்லாருக்காளாடா..? ” என்று கேட்டாள்.
”ம்..ம்.! இருக்கா..!!” என்றேன்.
”என்ன பண்றா..?”
”அவ வீட்ல இருப்பா…!!”
இடையில் புகுந்த அக்கா சிரித்துவிட்டு கேட்டாள்.
”ஏன்டாஒரு மாதிரி டல்லா இருக்க..? சண்டையா..?”
”அதெல்லாம் இல்ல..!!” என்று பெரியம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.
”சிண்ணு எப்படி இருக்கா..?”
”நல்லாருக்கா..!”
” கொழந்தைங்கள்ளாம்..?”
” ம்..ரெண்டு பேரும் ஸ்கூல் போயிட்டு இருக்காங்க..!! அப்பறம் உன் பொண்டாட்டி ஏதாவது விசேசமா இருக்காளா..?” என்று கேட்டாள் பெரியம்மா.. !!


லேசாகப் புன்னகைத்தேன்.
”ம்..ம்..! இருக்கா…!!”
”அட நாயிமகனே.. சொல்றதுக்கு என்ன..? இதைக் கூட நாங்கதான் கேட்டுத் தெரிஞ்சுக்கனுமா..?” என்றாள் அக்கா.
”ஏய் லூசு..!! நானே அதச் சொல்லத்தான் வந்தேன்..!!” என்றேன்.
பெரியம்மா ..
”நல்ல விசயம்தான்டா.. உங்கப்பனுக்கு சொன்னியா..?” என்று கேட்டாள்.
”அவனுக்கு எதுக்கு சொல்லனும்..?”
”உங்கப்பன்டா… அவன்..?”
பெரியம்மாவை முறைத்தேன்.
”ஆமா..நீ ஏன் அவனுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்கற..?”
” அவனும் ஒரு நல்ல மனுஷன்தான்டா..நீ நெனைக்கற அளவுக்கு மோசமானவன் இல்ல..!” என்றாள்.
உடனே நான் எழுந்தேன்.
”சரி.. நான் கெளம்பறேன்..”
அக்கா ”கோபமா போறியா..?” என்று கேட்டாள்.
அவளைப் பார்த்தேன்.
”ஆமா.. ஏன்…?”
”சரி..போ..!! ” என்று சிரித்தாள் ”அவ ஆசைப்பட்டத வாங்கி குடு…”
நின்று முறைத்தேன்.
”என்னடா மொறைக்கற..? நல்லா பாத்துக்க.. அவள..?” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
”என் பொண்டாட்டிய பாத்துக்க.. எனக்கு தெரியும்…! நீ உன்…” வாயில் கை வைத்து ”மூடிக்கோ…!!” என்றுவிட்டு திரும்பி நடந்தேன்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக