http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 26

பக்கங்கள்

செவ்வாய், 10 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 26

குழந்தை.. இறந்தே பிறந்தது என்பதை விட… என் மனைவி.. உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்து விட்டாள் என்பதே எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது..! அவளது பிரசவம் வீணாகிப்போனதில்.. அவள் கொஞ்சம் இடிந்துதான் போனாள்..!
அதைவிட இன்னொரு அதிர்ச்சி.. அவளது கர்பப்பைக்கு இன்னொரு குழந்தையைத் தாங்கும் சக்தி இல்லை.. என்பதால்.. அது.. அவளது உடம்பை விட்டு நீக்கப்பட்டதுதான்.. !!
எல்லாம் முடிந்து… அவள் குணமாகி.. வீட்டிற்கு வந்த பின்பும் சோகத்திலேயேதான் உழன்று கொண்டிருந்தாள். சில சமயங்களில்.. அவளைத் தேற்றுவதுதான்.. எனக்கு பெரும்பாடாக இருக்கும்..!!
துவண்டு போய் படுக்கையில் கிடந்தவளை.. வற்புறுத்தி சாப்பிட வைத்துக் கொண்டிருந்தாள் அவளது அம்மா..! கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு.. மறுபடி சுருண்டு படுத்து விட்டாள் நிலாவினி..!
அவளது அம்மா வெளியேறிய பின்னர்… அறைக் கதவைச் சாத்தி.. தாளிட்டு விட்டு.. அவள் பக்கத்தில் போய் கட்டிலில் உட்கார்ந்து… கலைந்து கிடந்த.. அவள் தலை முடியைக் கோதி.. ஒழுங்கு படுத்தினேன்..!!
”நிலா…”


அவளிடமிருந்து பதில் இல்லை. கண்களை மூடிப்படுத்திருந்தாள்.
”ஏய்… நிலா…” என அவள் கன்னத்தைத் தட்டினேன்.
கண்களைத் திறந்து என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் துளியும் ஜீவன் இல்லை.
”இப்ப என்ன நடந்துருச்சுனு.. இப்படி இடிஞ்சு போய் கெடக்க..?” என்றேன்.
மெல்ல.. வாடிய இதழ்களைப் பிரித்து… ”இதுக்கு மேல… என்னப்பா நடக்கனும்..?”என்று பலவீனமான குரலில் கேட்டாள்.
”இப்ப என்ன குடி முழுகிப்போச்சு.. ம்..? குழந்தை பெத்துக்க முடியாது.. அவ்வளவுதானே..? தேவையில்ல விடு.. நமக்கு அந்த பாக்கியம் இல்லேன்னு நெனைச்சுக்க..! எனக்கு நீ கெடைச்சதே போதும்…! உன்னை விட.. வேற எதுவும் பெருசில்லை..”
குரல் நெகிழ.. ”இது.. சினிமா இல்லப்பா.. வெறும் ஆறுதல் வார்த்தைகள மட்டும் வெச்சிட்டு.. வாழறதுக்கு..! நிஜம்..! எத்தனை வேதனை  தெரியுமா..?” என்றாள்.
அவள் முன்நெற்றி முடியைத் தடவினேன்.
” புரியுதுமா.. உன் வேதனை எனக்கு நல்லாவே புரியுது..! அதுக்காக நீ இப்படி.. உருக்குலைஞ்சு போய் கெடக்கனும்னு இல்லை..! நீ இப்படி இருக்கறதுனால.. இழந்தது திரும்ப கிடைக்கப் போறதும் இல்ல..! போனது போயாச்சு.. அதை விட்று..! நமக்கு இவ்ளோதான் குடுப்பினைனு.. உன் மனசை திடப்படுத்திக்கோ..! எனக்கு நீ ரொம்ப.. ரொம்ப முக்கியம்..!!”
இந்த ரீதியாக.. அவளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியாகி விட்டது. ஆனால் அவள் மனம் தேறியது மாதிரி இல்லை..!
வறட்சியாகச் சிரித்தாள். சிறிது நேரம் பேசவில்லை. ஒரு பெருமூச்சுக்குப பின்.. முனகலாகச்சொன்னாள்.
”தேவைதான்..! எனக்கு.. இது தேவைதான்…!!”
”என்ன… தேவை..?”
”சரியான தண்டனைதான். .!!” என தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
”என்ன தணடனை… என்ன தேவை..?” என நான் கேட்டும்.. அவள் எதுவும் சொல்லவில்லை.
மென்மையான  அவளது கன்னங்களை வருடினேன்.
”நீ.. அபபடி.. என்னம்மா.. தப்பு பண்ணிட்ட..?”
பதில் சொல்லாமல் அவள் கண்களை மூடிக் கொண்டாள். நான் அவளை வற்புறுத்த விரும்பவில்லை. நிலாவினியின் உடம்பு துவண்டிருந்தது.  பார்க்கவே பரிதாபமாகக் கிடந்தாள். அவளது ஆடை குலைந்து.. களைந்து… அவளின் அலங்கோலத் தண்மையைக் காட்டிக் கொண்டிருந்தது..!
‘எத்தனை அழகான.. பொண்ணுடல் இது..? என்னுடன் கொஞ்சிக் குலாவும்போது… எத்தனை பிரம்மிப்பை.. எனக்குள் ஏற்படுத்திய உடம்பு இது..? இப்பொழுது என்னவோ… பெரிய ஒரு இழப்பாக எண்ணிக் கொண்டு. .. இப்படித் துவண்டு போய்.. இந்த அழகிய உடம்பை வருத்திக் கொண்டு. . கிடக்கிறாளே…' என்கிற பரிதாப உணர்வில்… நான் கலங்கிக் கொண்டிருந்தேன்..!
”என்னங்க…” என்றாள். கண்களைத் திறக்காமலே.
”என்னம்மா..?”
”இப்பவும்.. என்னை நேசிக்கறீங்களா..?”
”என்ன கேள்விமா இது..?”
”ஆர்க்யூ பண்ணாம.. சொல்லுஙகளேன்.. ப்ளீஸ்..”
குனிந்து அவள் கண்களில் மென்மையாக முத்தமிட்டேன்.
”என்ன மடத்தனம்.. இது..?” என்றேன்.
கண்களைத் திறந்து.. என்னைப் பார்த்தாள்.
”இனிமே…உங்கள.. அப்பாவாக்க முடியாது.. என்னால..”
”சே..! அதனால என்னம்மா..? கவலப்படாத.. தத்து எடுத்துக்கலாம்..!!”
”என்மேல.. வெறுப்பு இல்ல.. உங்களுக்கு..?”
”ச்சி… என்னடா பேசற..?”
” இந்த அன்பு.. மாறிடாதே..?”
” லூசே..! இப்படி பேத்தலா பேசாத..! எனக்கு நீ கெடைச்சதே.. மிகப்பெரிய பொக்கிசம்..! என்னிக்கும் நீ.. என் காதல் தேவதைடா..! உன்னைப் போயி…? சே… என்ன ஒரு வேடிக்கை…..”
எதுவும் சொல்லாமல்… மெதுவாக விசும்பினாள். அருகே படுத்து.. அவளை அணைத்து.. சமாதானப்படுத்தத் தொடங்கினேன்..!!
மாலை..!! எனக்கு வெளியில் எங்காவது போக வேண்டும் போலிருந்தது. முகம் கழுவி வந்து… தலைவாரி.. உடை மாற்றும் போது… என் மனைவி கேட்டாள்.
”எங்க கெளம்பிட்டிங்க..?”
” ஸ்டேண்டுக்கு போய்ட்டு வரேன்..”
அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் புறப்பட்டு.. அவளருகே போய்.. பக்கத்தில் உட்கார்ந்து.. அவள் தோளில் கை போட்டு.. அணைத்தேன்.
”அதையே நெனைச்சிட்டிருக்காம..! நல்லா.. தூங்கி… ரெஸ்ட் எடு..” என்றேன்.
” இந்த நெனைப்பு… என்னை விட்டு போகாது போலருக்கு..” என்றாள்.
”அதையே நெனச்சிட்டிருந்தா…அப்படித்தான்..!” என அவள் உதட்டில் முத்தமிட்டேன் ”போய்… நித்யாகூட.. எதையாவது… பேசிட்டிரு..”
”ம்..! நீங்க எதையும் நெனைச்சுக்காம… ஜாலியா இருந்துட்டு வாங்க..” என அவள் சொன்ன போது… அறைக் கதவைத் தட்டி…
”அண்ணா…” என்றாள் நித்யா.
” வா… நித்தி..” நான் சற்று விலகி உட்கார்ந்தேன்.
கையில் காபி தட்டோடு உள்ளே வநதாள் நித்யா. அவளுக்கும் சேர்த்து.. எடுத்து வந்திருந்தாள். அவளோடு சிரித்துப் பேசியவாறு காபி குடித்து விட்டு நான் கிளம்பினேன்.
முதலில் ஸ்டேண்டுக்கு போகலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வெளியில் வந்ததும்.. மனதை மாற்றிக் கொண்டு.. என் வீட்டிற்குப் போனேன்..! நான் என் வீட்டுப் பக்கம்.. வந்தே இரண்டு வாரங்களாகியிருந்தது..! இந்த இரண்டு வாரங்களும் என் வீடு கவனிப்பற்றுத்தான் கிடந்தது..!
நான் வீட்டை அடைந்த போது.. வீட்டு வாசற்படியில்.. தெரு நாய் ஒன்று.. கால்கள் பரப்பி…தூங்கிக் கொண்டிருந்தது..! என் அரவம் கேட்டு.. ‘விருக் ‘கென்று எழுந்தது. நான் கையை ஓங்க.. வாலைச் சுருட்டிக் கொண்டு… ‘க்ய்ங்’ என்று கத்திவிட்டு. . ஓடியது..!!
வாசற்படியில்.. நாயின் முடிகள்… நிறைய உதிர்ந்து கிடந்தது. அதை கால் செருப்பால் தள்ளி விட்டு… பூட்டைத் திறந்தேன்..!
புழக்கமில்லாமல் வீடே வெறிச்சோடிக் கிடந்தது..! வீடு முழுவதும்.. தும்பும்.. தூசியுமாக இருந்தது.!! ஜன்னலை திறந்து வைத்துவிட்டு… மேலோட்டமாக… டி வி.. டேபிள் எல்லாம் படர்ந்திருந்த.. தூசியைத் தட்டினேன்..!
ஜன்னல் வழியாக முகம் காட்டி..
”அண்ணா..” என்றாள் கஸ்தூரி.
” கஸ்தூ…” என்றேன்.
” எப்ப வந்தீங்க..?”
” இப்பத்தான்…”
” என்ன பண்றீங்க…?”
” தூசி தட்றேன்…”
” நா.. வரட்டுமா..?” என்று ஜன்னல் பக்கத்தில் வந்து நின்று கேட்டாள் ”உங்களுக்கு.. ஹெல்ப் பண்றேன்..”
” ம்… ம்ம்..! வாயேன்..!!” என்றதும் ஜன்னலில் மறைந்து… அடுத்த நிமிடம்… கதவைத் திறந்து கொண்டு.. என் வீட்டுக்குள் வந்தாள்.
”வா…!!” என்றேன்.
” அந்தக்கா… நல்லாருக்காண்ணா..?” என்று கேட்டாள்.
” ம்.. ம்ம்..” என்றேன் ”உங்கம்மா என்ன பண்ணுது..?”
”ஊருக்கு போயிருக்கு..” என்றாள்.
” ஊருக்கா…?”
”ம்…!!” அவளும் தூசி தட்டினாள். உடனே ‘அச் ‘ சென்று தும்மினாள். மூக்கைத் தேய்த்துக் கொண்டு ”தம்பிய.. பாட்டி.. வீட்ல விடப்போயிருக்கு..” என்றாள்.
” ஏன்..?”
” ஸ்கூல் லீவ்.. விட்டாச்சில்ல…?”
” ஓ…! ஸ்கூல் லீவ் விட்டாச்சா..?”
”தெரியாதா.. உங்களுக்கு..?”
”தெரியாதே..! சரி.. ஏன்.. நீ போகல.. ஊருக்கு..?”
” ம்கூம்..” தலையாட்டினாள் ”போகல..”
” உனக்கும் ஸ்கூல் லீவ்தான..?”
” ஆமா..! ஆனா.. நான் போகல..”
”ஏன்…?”
”எங்கப்பாதான் போகவேண்டாம்னு சொல்லிருச்சு..” என்று கொஞ்சம் வருத்தமான குரலில் சொன்னாள்.
”ஏன் கஸ்தூரி…?”
” தெரியல..” என்றாள். பிறகு நிமிர்ந்து பார்த்து ”நான் வயசுக்கு வரமாதிரி… இருக்கனாம்..” என லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.
”ஓ…!!”
அவள் தோற்றத்தைக் கவனித்தேன். அநதச் சின்னப் பெண்ணிடம்.. மாறி வரும்.. பருவத் தோற்றங்கள் நன்றாகவே தென்பட்டன. மார்பில் புடைப்பு…! தோள்களில் சரிவு..! கன்னங்களில் மினுமினுப்பு..! உடம்பில் ஒருவிதமான.. மதமதப்பு..!!
”சரிதான்..” புன்னகைத்தேன் ”உங்கப்பா… இருக்காரா.. வீட்ல..?”
” இல்லேண்ணா… கடைக்கு போய்ட்டாரு..!!”
” வீட்ல தனியாத்தான் இருந்தியா…?”
” சிந்தியக்கா வீட்ல இருந்தேன்…! ”
” உங்கம்மா… எப்ப வரும்..?”
” தம்பிய விட்டதும்.. வந்துரும்..! இப்ப.. வந்துட்டிருக்கும்..!!” என்று விட்டு.. அவளே வீட்டைக் கூட்டிப் பெருக்கினாள்.
கை.. கால்..முகம் கழுவிய பின்னர் டி வி முன்பாக வந்து உட்கார்ந்து.. கொண்டு சொன்னாள் கஸ்தூரி.
” எங்கம்மா சொல்லுச்சு..”
அவளைப் பார்த்தேன்.
”என்ன சொல்லுச்சு..”
”அந்தக்காக்கு.. இனிமே கொழந்தையே பொறக்காதுனு..! அப்படியாண்ணா…?”
” ம்.. ம்ம்..! ஆனா.. இதெல்லாம் நீ பேசக் கூடாது..! முக்கியமா.. நிலாகிட்ட பேசவே கூடாது இதப்பத்தி…” என்றேன்.
”ம்… சரிண்ணா…!!” என்றாள் கஸ்தூரி…..!!!!! 

நீயும் குணமடைந்து விட்டாய். நிலாவினியைப் பார்க்க இரண்டு முறை… அவள் வீட்டுக்கே.. நீ வந்து போனாய்..! நீ குணமாகி வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டாய்..!!
மேலும் ஒரு வாரம் கழித்து.. நான் ஸ்டேண்டில் இருந்த போது.. ஒரு மாலை நேரத்தில்.. என்னைக் காண வந்தாய்..! உன்னைத் தனிமையில்.. அழைத்துப் போய் பேசினேன்.
நீ.. சுடிதார் போட்டிருந்தாய்..!
”அக்கா.. எப்படிங்க.. இருக்கு..?” என்று கேட்டாய்.
” ம்..ம்ம்..!” என்றேன் ”நீதான் கொஞ்சம் பிஸியா இருக்க போலருக்கு..”
”ஐயோ.. அப்படியெல்லாம் இல்லீங்க..”
” உன்னப் பாத்தே.. ஒரு வாரமாகுது..”
” வரலாம்னுதாங்க இருந்தேன்..”
”அப்றம் ஏன்.. வரல..?”.என நான் கேட்க.. நீ தயங்கியவாறு சொன்னாய்.
”நான் அடிக்கடி வந்தாக்கா… அக்கா வீட்ல ஒரு மாதிரி.. நெனச்சுக்குவாங்கன்னுதாங்க.. வல்ல…”
அதுவும் சரிதான்..!
”ம்… ம்ம்..! சரி.. பரவால்ல..! நீ எப்படி இருக்க..?”
”ஐயோ..! எனக்கென்னங்க..? அக்கா நல்லாருக்குங்களா..?”
” ம்… ம்ம்…!! இருக்கா…!!”
” நல்லா சாப்பிடுதுங்களா..?”
” எங்க..!” என பெருமூச்சு விட்டேன்.
”இன்னும் முழுசா.. தேறல..”
நிலாவினி பற்றி.. மிகவும் அக்கறையுடன் விசாரித்தாய். என்னை விடவும்.. அவளுக்காக நீ.. மிகவும் கவலைப்பட்டாய்..!!
”சரி.. டீ ஏதாவது குடிக்கறியா தாமரை..?” என்று கேட்டேன்.
” வேண்டாங்க..” என்றாய்.
” கூல்ட்ரிங்க்ஸ்..?”
” அதெல்லாம்.. ஒன்னும் வேண்டாங்க…”
”வேற.. என்ன குடிக்கற..? தண்ணியடிப்பமா..?” எனக் கேட்க… ”ஐயோ.. போங்க..!!” என்றாய் புன்னகையுடன்.
”சரி.. வா..! ஜூஸாவது குடிக்கலாம்..!!”
பக்கத்தில் இருந்த பழக்கடைக்குப் போனோம். ஜூஸ் குடிக்கும் போது கேட்டேன்.
”நீ கடைலருந்தா.. வந்த..?”
” ஆமாங்க..”
”மணி.. ஆறுகூட ஆகல..?”
” உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தங்க..! ஓனர்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன்..!!”
”அப்படியா..? தீபா என்ன பண்றா..?”
” அவ.. வந்துட்டு.. மறுபடி நேத்துதாங்க.. ஊருக்கு போனா..”
”ஓ..! நல்லாருக்காளா..?”
”.ம்.. நல்லாருக்காங்க..!!”
ஜூஸ் குடித்தபின் பணம் கொடுத்து விட்டு வெளியே வந்தோம்.
”தாமரை…”
” என்னங்க..?” என என்னைப் பார்த்தாய்.
” நீ.. மறுபடி கடைக்கு போகனுமா..?”
”ஏங்க…?”
” என்னமோ தெரியலடி..! மனசெல்லாம் ஒரு மாதிரி.. இருக்கு..”
” என்னாச்சுங்க…?”
” கஷ்டமா…!! கொஞ்சம்.. பாரமா இருக்கு..!!” என்க..
”தைரியமா இருங்க..” என்றாய்.
நான் அமைதியாக நடக்க… மெதுவாகக் கேட்டாய்.
”வேலை.. ஏதாவது இருக்குங்களா.. உங்களுக்கு..?”
”ஏன்…?” உன்னைப் பார்த்தேன்.
”நான் போய்… சொல்லிட்டு.. என்னோட பேக எடுத்துட்டு வரங்க..! எங்காவது போலாம்..!!”
”எங்காவதுன்னா..?”
”நீங்க.. இருக்கறதப் பாத்தா… எனக்கு கஷ்டமா இருக்கு..”
” ஏய்.. அதுக்கு.. நீ என்ன பண்ணுவ..?”
” ஏங்க..! நான்….” உன் எண்ணம் புரிந்தது.
”வேணான்டி..” என்றேன்.
” ஏங்க..?”
” ஆபரேசன் பண்ண.. ஒடம்பு உன்னோடது.! நான் சமாளிச்சிப்பேன்..! நீ கவலப்படாத போ..!!”
”ஐயோ.. பரவால்லங்க..! என்னால முடியும்..”
” ஏய்.. வேண்டாம் விடு..! வேனும்னா…வா.. உன்னை ட்ராப் பண்றேன்..! நேரத்துல போய் ரெஸ்ட் எடு..!!”
”செரிங்க..! நான் போய் சொல்லிட்டு வந்தர்றங்க..!!” என்று விட்டு நீ போக… நான் ஸ்டேண்டுக்குப் போய்… காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்..!
போன வேகத்திலேயே.. நீ வந்து விட்டாய்..!! காரில் போகும் போது.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நம்ம ஏரியாக்கு போலாங்களா…?”
”எதுக்கு..?”
” சும்மா… பேசிட்டு.. வரலாங்களே..?”
” ம்..! போலாம்..!!” என்றேன்.
காரை நேராக பத்ரகாளி அம்மன் கோவில் தான்டி ஓட்டினேன். புளிய மர ஏரியா போனபோது… இருள் கவிந்திருந்தது..!! காரை ஓரமாக நிறுத்தி விட்டு.. இருவரும் இறங்கினோம்..!
ஈரக்காற்று.. சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது..! இரவுப் பூச்சிகளின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது..! சாலையோரமாக இருந்த.. திண்டின் மேல் போய்.. அருகருகே உட்கார்ந்து கொண்டு… நிறையவே பேசினோம்..!
இந்த இயற்கைச் சூழலில்… எந்தவித காமக் கலப்பும் இலலாமல்.. நான்.. உன்னிடம் மனம் விட்டுப் பேசுவது.. இதுவே முதல் முறை..!! உன்னிடம் அவ்வாறு பேசியதில்.. என் மன பாரமெல்லாம் என்னை விட்டு நீங்கியது போலிருந்தது..!!


”மறுபடி… இதெல்லாம் நடக்கும்னு.. நான் நெனச்சே பாக்கலீங்க..!” என்றாய்.
” எதெல்லாம்..?”
” நாம ரெண்டு பேர் மட்டும்.. இப்படி.. வந்து.. இங்க உக்காந்து மனசு விட்டு பேசுவோம்னுதாங்க..”
” ஆமாடி… நான்கூட நெனைக்கல..!!”
” ஆனாக்கா… நான் பழசெல்லாம் அடிக்கடி நெனைச்சுப் பாப்பங்க..! நான் உங்கள.. மொத.. மொத பாத்தது..! உங்ககூட பேசினது… பழகினது..! எல்லாம்..!!” என்றாய்.
ஒரு மணிநேரம் கழித்து…
”போலாமா..?” என நான் கேட்டேன்.
” ம்… ”என்றாய் ”அக்காவ நல்லா பாத்துக்குங்க..”
” அவள நெனச்சாத்தான்டி.. மனசே கஷ்டமாகிருது..! சரியா சாப்பிடறதில்ல..! தூங்கறதில்ல…! பேசறதில்ல…!!சிரிக்கறதில்ல…!!” என நான் சொல்ல…
” பாவங்க..! அக்காவால.. தாஙகிக்க முடியல..!!” என்றாய்.
ஒரு பெருமூச்சுடன் நான் எழுந்து நின்றேன்.
”சரி… வா.. போகலாம்..!”
நீயும் எழுந்தவாறு கேட்டாய்.
”வேற எதுவும் வேண்டாங்களா .?”
”என்ன…?”
” இல்ல… நான்.. வேண்டாங்களா..?”
”என்னடி சொல்ற..?”
” பாவம்.. நீங்க..! அக்கா வேற… இந்த நெலமைல இருக்கப்ப..? அதான்.. என்னை வேணா…” என நீ தயங்க… உன் தோளில் கை போட்டு உன்னை அணைத்தேன்.
”வேணாம் தாமரை..! உன் உடம்பு இருக்கற நெலமைல… இதெல்லாம்.. நல்லதில்ல…”
” ஐயோ..! எனக்கெல்லாம் இப்ப.. நல்லாகிருச்சுங்க..!! உங்க சந்தோசத்தவிட.. என் ஒடம்பு பெருசில்லீங்க..”
”ஆனா.. எனக்கு நீ.. பெருசுதான்..! சொன்னாக் கேளு.. இப்ப எதுவும் வேண்டாம்..”
கவலையான குரலில் கேட்டாய்.
” மத்தபடி… கோபமெல்லாம் ஒன்னும் இல்லீங்களே..?”
” சே..! கோபமா… எதுக்கு..?”
”என்னமோ… கேக்கனும்னு தோணுச்சுங்க..”
” உன்மேல.. எனக்கு என்ன கோபம்..?” என.. உன் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்..!
உன்னைக் கூட்டிப் போய்.. உன் வீட்டில்.. விட்டு.. விட்டு நான் கிளம்பினேன்..!!
வீடு..!! காரைக் கொண்டு.. போய்.. செட்டில் நிறுத்தினான்..! வீட்டில் நுழைந்ததும்.. நித்யா கேட்டாள்..!
”உங்க மச்சான் என்ன பண்றாரு..?”
” தெரியலியே நித்தி..! நான் பாக்கல…!” என்றேன்.
”ஸ்டேண்டுலருந்துதான.. வரீங்க..?”
”இல்ல.. நா.. வாடகைக்கு போய்ட்டு.. இப்படியே வந்துட்டேன்..”
” இன்னும் வல்ல..! போன் பண்ணாலும் எடுக்கறதில்ல..!!” என்றாள்.
”ஏன்.. ஏதாவது சண்டையா..?”
” அதில்லண்ணா..! நாட் ரீச்சபலா இருக்கு..!!” என்று சிரித்தாள்.
”ஓ..!!” என்று விட்டு உள்ளே போனேன்..!
என் மனைவி டிவி முன்பாக உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கேட்டேன்.
”சாப்பிட்டியா..?”
” ம்.. ம்ம்..! உங்களுக்கு சாப்பாடு போடட்டுமா..?” என லேசாக அசைந்தாள்.
”ஏய்.. நீ பேசாம உக்காரு..! நித்தி இருக்கால்ல..” என்று.. நான் எழுந்து உடைமாற்றப் போனேன்…!! 

அதன் பின் தொடர்ந்தார் போல.. இரண்டு வாரங்களுக்கு மேலாக.. நீ.. நிலாவினியைப் பார்க்க வரவில்லை..! அது எனக்கு சற்று உறுத்தலாக இருந்தது..! அதை உன்னிடமே கேட்க நினைத்தேன்..!
இரவு.. உன்னை பேருந்து நிலையத்தில் வைத்துக் கேட்டேன்.
”நிலாவ.. பாக்கனும்னு.. ஒரு எண்ணமே வரலையா.. உனக்கு..?”
நீ.. திடுக்கிட்டு என்னைப் பார்த்தாய்.
”இந்த மாதிரி நேரத்துலதான்டி.. மன வருத்தத்துல இருக்கற ஒருத்தருக்கு.. ஆறுதல் தேவைப்படும்..! நிலா ரொம்பமே இடிஞ்சு போயிருக்கா.. அவள இப்படியே விட்டா.. அவ தனிமை நோய்லயே வாடி.. பைத்தியமாகிருவா போலருக்கா..! ஒரு எட்டு வந்து பாக்கறதுல.. உனக்கென்ன கஷ்டம்..?” என்றேன்.
” ஐயோ..” எனப் பதறினாய் ”அப்படி.. இல்லீங்க.. அது.. வந்து…”
” அவ ஒன்னும்.. மோசமானவ.. இல்லேன்னு.. உனக்கே தெரியும்..! அவ உன்ன எப்படியெல்லாம் பாத்துட்டா..? அப்பயும் நீ.. வராம இருக்கறது.. நல்லதில்ல..”
”நா… நாளைக்கு.. வரங்க..” என்றாய்.
” ம்..! சரி… வந்து பாரு..!!” என்றேன்.
”வர்றங்க…” என.. நீ மன வருத்தத்துடன்தான்.. விடைபெற்றுப் போனாய்..!!
மறுநாள் காலை பத்து மணியிருக்கும்.. என்னைப் பார்க்க… ஸ்டேண்டுக்கே வந்து விட்டாள் தீபா.! புடவையில் இருந்த.. அவளைப் பார்த்ததும்.. இரண்டு நிமிடம் பிரம்மித்து.. பின் சுதாரித்துக் கொண்டு… பேசினேன்.!
”ஹேய்..! கருப்பு…!! வா.. வா.. என்ன.. இங்க…?”
பற்கள் பளீரிடச் சிரித்தாள்.
”உங்கள பாக்கலாம்னுதாங்க வந்தேன்..!!”
” அப்படியா..? வா.. வா..!! எப்ப வந்த ஊர்லருந்து..?”
”நான்.. வந்து ரெண்டு நாளாச்சுங்க..”
”ஓ..! அவ.. எதும் சொல்லல..! சரி.. எப்படி இருக்கே..?”
” நான்.. நல்லாருக்கங்க..! அக்காக்கு எப்படிங்க இருக்கு..?”
” ம்.. ம்ம்..! தேவலை..!! உன் புருஷன்..?”
” ஊட்ல இருக்காப்லிங்க..!”
” நீ மட்டும்தான் வந்தியா..?”
” ஆமாங்க..!!”
” ஏதாவது.. ஜோலியா..?”
”ஆமாங்க…”
” உன் புருஷன விட்டுட்டு.. தனியா வர்ற அளவுக்கு.. அப்படி.. என்ன ஜோலி கருப்பு..?” என நான் கேட்க.. சுற்றிலும் பார்த்து விட்டு..
” உங்ககிட்ட.. கொஞ்சம் பேசனுங்க..” என்றாள்.
”என்கிட்டயா..?”
” ஆமாங்க..! நான் வந்ததே உங்ககிட்ட பேசனும்னு தாங்க..”
கொஞ்சம் திகைப்படைந்தேன்.
”என்கிட்ட பேசனும்னு.. வந்தியா…?”
” ஆமாங்க..”
” அப்படி.. என்ன பேசனும்..?”
”கொஞ்சம்.. தனியா…! ஏதாவது சாப்பிட்டே…பேசலாங்களே..?” என்றாள்.
”ம்..! சரி… நட..! என்ன சாப்பிடற..? காபி.. டீ…?”
”அது வேண்டாங்க..”
” ஜூஸ்…?”
” ம்..! வாங்க…!!” என முன்னால் நடந்தாள்.
சிறிது தள்ளி இருந்த… பழக்கடைக்குக் கூட்டிப் போனேன். இரண்டு ஜூஸ் சொல்லி விட்டு உள்ளே போய் உட்கார்ந்தோம்..!!
திருமணத்துக்குப் பிறகு… அவளது இளமை இன்னும் கொஞ்சம் மெருகேறியிருந்தது…! பருவக் கன்னங்களில் செழுமையும்.. கண்களில் சந்தோசமும் கூடியிருந்தது..!!
”சொல்லு.. அப்படி.. என்ன விசயம்..?” என்று கேட்டேன்.
” மொதல்ல.. என் மேல.. ஏதாவது கோபமானு சொல்லுங்க..” என்று கேட்டாள்.
”எதுக்கு..?”
”இல்ல.. அக்காவ பாக்க வரலேன்னு..?”
”ஏய்.. பரவால்ல விடு..!!”
” ஸாரிங்க..! நெனச்சேன்..! ஆனா வரமுடியல..!!”
” பரவால்ல விடு.. கருப்பு..! நீ வந்த விசயம் என்னன்னு சொல்லு..” என்றேன்.
ஜூஸ் வந்தது..! அவளிடம் ஒன்றைக் கொடுத்து விட்டு.. நானும் ஒன்றை எடுத்துக் கொண்டேன்.!
”ம்… குடி…”
ஸ்ட்ராவை வாயில் வைத்து கொஞ்சமாக உறிஞ்சி விட்டு.. என்னைப் பார்த்தாள்.
மெதுவாக.. ” செங்காளுக்கு.. ஒரு பிரச்சினை..” என்றாள்.
”என்ன பிரச்சினை..?”
”நேத்து.. அவள பாத்து.. சத்தம் போட்டிங்கன்னா..” என்றாள்.
”நானா..?”
”அக்காவ பாக்க வரலேனு..?”
”சத்தம் போடல..! ஆனா…”
”ராத்திரி பூரா.. ஒரே அழுகை..! தப்பு.. அவமேல இல்ல..” என்றாள்.
குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன்.
”என்ன சொல்ற.. தீபா..?”
”என்னைவே.. அவ.. உங்ககிட்ட சொல்லக் கூடாதுனுதான் சொன்னா..! ஆனா எனக்குத்தான் மனசு பொருக்கல..! இப்ப நான்.. உங்கள பாக்க வந்ததுகூட.. அவளுக்கு தெரியாது..! தெரிஞ்சா.. என்னை திட்டுவா..” என்றாள்.
இப்போதும் புரியவில்லை.
”நீ… என்ன சொல்றேன்னு.. புரியல..! கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு..!!” என்றேன்.
”அவ… ரெண்டு வாரமா.. எவ்ளோ கஷ்டப்படறா தெரியுங்களா..?”
”ஏன்..? இப்பத்தானே.. ஆஸ்பத்ரியெல்லாம் போய்… ஆபரேசன் எல்லாம் பண்ணி… மறுபடி ஏதாவது பிரச்சினையா…?”
”ஐயோ.. அதெல்லாம் இப்ப.. எந்த பிரச்சினையும் இல்லிங்க..” என்றாள்.
”அப்றம்.. வேற என்ன பிரச்சினை..?”
”அககாவ பாக்க அவளுக்கும் ஆசைதாங்க..! விட்டாக்கா.. அவ நாள் பூரா.. அக்கா கூடவே இருந்துருவா… ஆனா…” என தயங்கினாள்.
”ம்.. சொல்லு…!!”
”அவள… அந்த வீட்டுப் பக்கம்.. வரக் கூடாதுனு சொல்லிட்டாங்க..” என்றாள்.
திடுக்கிட்டேன்.  ”என்னடி சொல்ற..?”
”ஆமாங்க..!!”
” யாரு…. சொன்னது…?”
”உங்க… மச்சான்…”
”குணாவா..?”
” ஆமாங்க…”
” எப்ப…?”
”இது நடந்து ரெண்டு வாரமாச்சுங்க..! அவ.. என்கிட்ட வந்து.. சொல்லிட்டு… ஒரே ஒப்பாரி..!!” என்றாள்.
”இதை.. ஏன்.. மொதவே என்கிட்ட சொல்லல..?”
” இத.. எப்படிங்க… அவ வந்து உங்ககிட்ட சொல்ல முடியும்..? அதனால உங்க குடும்பத்துல.. ஏதாவது பிரச்சினை வந்துட்டா…? அதனாலதாங்க.. அவ சொல்லல..!!” என அவள் சொல்ல…. என்னுள் பொசுபொசுவென ஒரு கோபம் எழுந்தது… குணா மீது..!
தீபா தொடர்ந்து
”இதெல்லாம் விட… இன்னொன்னு சொல்லிருக்காருங்க..! அதைக் கேட்டுத்தான்… எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு..” என்றாள்.
”என்ன…?”
”உங்கள விட்றச் சொன்னாருங்களாம்..! உங்கள விட்டுட்டு.. உங்களுக்கு பதிலா.. அவரு வர்றதா சொன்னாருங்களாம்..! அதோட.. உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து… வாரத்துல ஒரு நாள்.. வெளில போலாம்.. நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரும் ஜாலியா இருக்கலாம்..! கமிட்டானா… உனக்கு நல்ல அமௌண்ட் தரோம்னெல்லாம் சொல்லியிருக்காருங்க..! அதத்தாங்க.. அவனால தாங்கிக்கவே முடியல…! பாவம்.. எப்படி அழறா தெரியுங்களா..? அவ ஒன்னும் உத்தமி இல்லதாங்க..! அப்படி இருந்தவதான்…! ஆனா நீங்க என்னிக்கு அவ வாழ்க்கலை வந்தீங்களோ.. அன்னிலருந்து அவ.. சுத்தமாவே மாறிட்டா..!!” என்றாள்.
அவள் சொனனதைக் கேட்டதும்.. மிகவுமே கொதிப்படைந்து விட்டேன் நான்..! குணா மீது.. ஒரு பக்கம் ஆத்திரம் கொப்பளிக்க.. மறுபக்கம்.. உன் மீது கோபமும்.. ஆதங்கமும் உண்டானது..!
எனக்கு உடனே.. உன்னைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது..! என் ஜூஸை.. ஒரே தம்மில் குடித்துவிட்டு தீபாவிடம் சொன்னேன்.
”ஜூஸ குடி..! நான் இப்பவே.. அவளப் பாத்து.. நாலு அறை விடனும்..!!”
தீபா உடனே பதற்றத்துடன் சொன்னாள்.
”இன்னிக்கு அவ வேலைக்கு வல்ல…”
”ஏன்…?”
”அவளுக்கு மனசு செரியில்லேன்னு வீட்லதான் இருந்தா..! நான் இங்க… மார்க்கெட் போறதா சொல்லிட்டு வந்தேன்..! ஆனா உங்கள பாக்கத்தான் வந்தேன்னு.. அவளுக்கு தெரியாது..!!”
”ஓ..! சரி.. இப்ப வீட்லதான இருக்கா..?”
”ம்… ம்ம்..!!” என்று விட்டு மீதி ஜூஸையும் குடித்தாள்.
நான் எழுந்தேன்.
”நீ என்ன பண்ற.. தீபா..! என் கூட வர்றியா… இல்ல…?”
”எங்கீங்க..?” என்று கேட்டுக் கொண்டே அவளும் எழுந்தாள்.
”அவள பாக்கத்தான்.. போறேன். .”
” வர்றங்க..! ஆனா.. மார்க்கெட் போகனுங்க..”
புதிதாக திருமணம் ஆனவள். ஒருவேளை என்னுடன் வருவதில்.. ஏதாவது பிரச்சினைகள் வரலாம் என்று தோன்றியது.
”சரி.. அப்ப நான் போகட்டுமா..?” என்றேன்.
”இப்பவே… அவள பாக்கனுங்களா..?” என்று கேட்டாள்.
”ஆமா..! இப்ப இருக்கற ஆத்திரத்துக்கு.. அவளப் பாத்து.. அவ காது ஜவ்வு கிழியற மாதிரி ஒரு அறை விடனும்..” என்றேன்.
உடனே..  ”ஐயோ.. வேணாங்க..! அவள அடிச்சிராதிங்க.. அவ தாங்க மாட்டா..! நானும் உங்ககூடவே வர்றேன்..” என்றாள்.
”மார்க்கெட்…?”
” அது… பரவால்லீங்க…”
”ம்.. சரி.. வா..!!” என வெளியேறினேன்.
” நீ இங்கயே நில்லு..! நான் போய் கார எடுத்துட்டு வந்தர்றேன்..!” என அவளை கடை முன்பாக நிறுத்தி விட்டுப் போய்.. காரை எடுத்து வந்தேன்.
கதவைத் திறந்து பின்னால் உட்கார்ந்தாள் தீபா.
” போலாமா..?” என்று கேட்டேன்.
”ஒரு நிமிசம்.. அப்படியே.. மார்க்கெட் பக்கம் போனீங்கன்னா…” என்று…சிரித்தாள்.
”ம்..!”
அவளுக்காக மார்க்கெட் போனேன். அவசரமாக இறங்கி.. ஓடினாள். கொஞ்சம் தக்காளி.. வெங்காயம்.. பூண்டு.. காய்கறியெல்லாம் வாங்கி வந்தாள். காரில் உட்கார்ந்து
”ம்.. போலாம்..” என்றாள்.
”நேரா போயிடலாமில்ல…?”
” ம்.. ம்ம்..! போலாங்க..!!”


பத்ரகாளி அம்மன் கோவில் ரோட்டில் கார் போக.. கொஞ்சமாக முன்னால் சாய்ந்து கேட்டாள்.
”கோபமா இருக்கீங்களா..?”
”ஏன் தீபா..?”
” பாவங்க..! அவள அடிச்சிராதிங்க..! எனக்காக.. ப்ளீஸ்…” என்றாள்.
”ஏன்டி.. இவ்ளோ நடந்துருக்கு..! அதுக்கப்பறம்.. என்னையும் பாத்துருக்கா..! அப்பவும் என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்கா.. அவளை அப்படியே விடச் சொல்றியா..?” என நான் ஆதங்கத்தோடு சொல்ல…
” ஐயோ.. வேண்டாங்க..! அப்படி உங்களுககு அடிக்கனும்னு இருந்தா.. என்னை வேணா அடிச்சிக்குங்க..! நான் வாங்கிக்கறேன்…!!” என்றாள் தீபா.. !!!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக