http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : ஆண்மை தவறேல் - பகுதி - 22

பக்கங்கள்

புதன், 24 ஜூன், 2020

ஆண்மை தவறேல் - பகுதி - 22

அதற்கு அடுத்த நாள் முழுவதும் அசோக்கிற்கு பெரும் சோதனை காத்திருந்ததுமுதல்நாள் அசோக் தந்த முத்தத்தினால்நந்தினி மிகவும் தைரியம் பெற்றவள் ஆனாள்தன் மனதில் இருந்த சின்ன சின்ன ஆசைகளை அடுத்த நாளே நிறைவேற்றிக்கொள்ள முனைந்தாள்அசோக்தான் பாவம்..!! செய்வதறியாது.. திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி திகைத்தான்..!!


காலையில் அசோக்கை தூக்கத்தில் இருந்து எழுப்புகையிலேயேஅவனுடைய மீசை மயிர்களை பற்றி வெடுக்கென இழுத்துத்தான் நந்தினி எழுப்பினாள்திடுக்கிட்டு விழித்தெழுந்த அசோக்கை பார்த்து குறும்பாக சிரித்தாள்தூக்கத்தில் இருந்து எழுந்த அசோக் தன் அருகே நெருக்கமாகவாசனையாக அமர்ந்திருந்த நந்தினியை பார்த்து திகைத்தான்.

"..என்ன..??" என்றான் மிரட்சியாக.

"எவ்வளவு நேரம் தூங்குவீங்க..?? எந்திரிங்க.." என்றாள் அவள் போதையாக.

"ம்ம்.. எந்திரிக்கிறேன்.. நீ போய் குளி போ.." அசோக் எரிச்சலாக சொல்ல,

"குளிச்சாச்சு.. பாத்தா தெரியலை..??" என்று அவள் குறும்பாக உடம்பை அசைத்து காட்டினாள்.

அவனுடன் பால்கனியில் நின்று காபி அருந்துகையில்... திடீரென சொன்னாள்.

"மொரடன்..!!"

"யா..யாரை சொல்ற..?" அசோக் உதறலாய் கேட்டான்.

"ஆங்.. பக்கத்து வீட்டுக்காரனை..!! நேத்து எங்கிட்ட எந்தப்பய மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டானோ.. அந்தப்பயலை சொல்றேன்..!!"

"நா..நானா..??"

"பின்ன.. வேற யாரு..??"

"நா..நான் என்ன பண்ணுனேன்..?"

"அப்பா.. பச்சப்புள்ள.. ஒண்ணுமே பண்ணல..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. என்னா புடி.. இன்னும் வலிக்குது தெரியுமா..?? மொரடன்..!!"

சிணுங்கலாக சொன்ன நந்தினி அசோக்கின் பக்கமாக திரும்பி நின்றாள்அவளுடைய புடவைத்தலைப்பு ஒருபுறமாக ஒதுங்கியிருக்கநேற்று அவன் இறுகப்பற்றிய மார்பு இப்போது தனியாக ப்ளவுசுக்குள் பளிச்சிட்டதுநந்தினி அசோக்கை குறும்பாக பார்க்கஅவன் அவளை பரிதாபமாக பார்த்தான்.
அப்புறம் அசோக் குளித்துவிட்டு ஆபீஸ் கிளம்புகையில்.. அயர்ன் செய்துவைத்த ஆடைகளை அணிந்து கொண்டிருக்கையில்.. பனியனை உடுத்திவிட்டு மேல்ச்சட்டை அணிந்துகொள்வதற்கு இடையிலான இடைவெளியில்.. நந்தினி அவனை பின்புறமாக வந்து அணைத்துக் கொண்டாள்.

"ம்ம்ம்ம்ம்ம்... நைட்டு நீங்க பண்ணுனதுதான்

 ஃபுல்லா மைன்ட்ல ஓடிட்டு இருக்கு.. அப்படியே பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு அசோக்.."

என்று சிணுங்கினாள்அவளுடைய முகத்தை அவனுடைய விரிந்த தோள்ப்பட்டையில் வைத்து தேய்த்தாள்நொந்துபோன அசோக் உடும்பாக பிடித்திருந்த அவளது பிடியில் இருந்து விலகிக்கொண்டே,

"..ஆபீசுக்கு லேட் ஆயிடுச்சு நந்தினி.. கெளம்பனும்..!!" என்று அவளிடம் இருந்து தப்பிக்க வேண்டியதாயிருந்தது.

மதியம் அடையாறு ஆபீசுக்கு சென்று அவனுக்கு உணவு பரிமாறுகையில்.. மோர்க்குழம்பை பிசைந்து அவன் வாய்க்குள் அனுப்பிக்கொண்டிருக்கிற வேளையில்..

"முருங்கைக்கா சாம்பார்தான் வைக்கலாம்னு இருந்தேன்.. அப்புறம் எதுக்குடா வம்புன்னு தோணுச்சு.. வேணாம்னு விட்டுட்டேன்..!! ஏடாகூடமா ஏதாவது சமைச்சுப்போட்டு.. அப்புறம் நாந்தான அனுபவிக்கனும்..?" அவள் குறும்பாக சொல்லிவிட்டு கண்சிமிட்ட,

"ப்ளீஸ் நந்தினி.. இப்படிலாம் பேசாத..!!" என்று எரிச்சலானான் அசோக்.

"ஓஹோ.. ஸாருக்கு பேசுறது பிடிக்காதா.. பண்றது மட்டுந்தான் பிடிக்குமோ..??"

அவள் போதையாக கேட்ட தோரணையில் அசோக்கிற்கு அப்புறம் சாப்பாடே இறங்கவில்லைஅன்று இரவு உணவு பரிமாறுகையில் வேறுவிதமான தாக்குதல்...!! கரண்டியில் ரசத்தை அள்ளி சாதத்தில் ஊற்றிக்கொண்டே..

"நேத்து வச்ச குலோப் ஜாமூன் இன்னும் கொஞ்சம் இருக்கு.. சாப்பிடுறீங்களா..??" என்று உதட்டை நாவால் தடவிக்கொண்டே கேட்டாள் நந்தினி.

"..இல்ல.. வேணாம்.. நீயே சாப்பிடு.." என்றான் அசோக் நடுக்கமாய்.

'ஒருநாள் சாப்பிட்டதே ஜென்மத்துக்கும் போதும்..' என்று சொல்லிக்கொண்டான் மனதுக்குள்.

அன்று இரவு படுக்கையறையில் அவனுக்கு பெரும் சோதனை காத்துக்கொண்டிருந்ததுசாப்பிட்டு முடித்து.. மாடிக்கு சென்று புகை பிடித்து திரும்பி வந்த அசோக்.. தனது அறைக்குள் நுழைந்தான்அதற்குள்ளாக சாப்பிட்டு முடித்திருந்த நந்தினி.. இப்போது கட்டிலில் மிக ஒய்யாரமாக படுத்திருந்தாள்அவளுடைய கூந்தல் புதிதாய் மல்லிகைப்பூ சூடியிருந்ததுஉதட்டில் ஒரு புன்னகை.. கண்களில் கொள்ளை கொள்ளையாய் குறும்பு..!!

"ஹேய்.. ..என்ன இது..??" அசோக்குக்கு வாய் குழறியது.

"என்ன என்ன இது..??"

"மே..மேல படுத்திருக்க..?"

"ஏன் படுக்க கூடாதா..?? இனி நான் இங்கதான் படுத்துக்க போறேன்.."

"ஏன்.. கீழ படுத்தா கொசு கடிக்குதா..?"

"இல்ல.. எதுவும் கடிக்க மாட்டேன்னுது..!!" சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்டினாள்.

"வெ..வெளையாடாத நந்தினி.."

"யாரு.. நான் வெளையாடுறனா..?? நேத்து நைட்டு நீங்க வெளையாண்டதை விடவா..?? வெளையாண்டது பத்தாதுன்னு இப்போ நடிப்பு வேற..?"

"..நடிப்பா..?? நான் என்ன நடிக்கிறேன்..??"

"பின்ன என்ன..?? மனசுக்குள்ள அவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு.. வெளில ஒண்ணுமே இல்லாத மாதிரி நடிக்கிறீங்கள்ல..?"

"..அதுலாம் ஒண்ணுல்ல.." அசோக் தடுமாற்றமாய் சொல்லநந்தினி இப்போது கட்டிலில் இருந்து எழுந்தாள்.

"ஐயோ..!!! ஏன் இப்படி பண்றீங்க..?? இன்னுமா உங்களுக்கு புரியலை..?? நீங்க எதுக்கு இப்படி தயங்குறீங்கன்னு எனக்கு புரியுது..!! 'என்னடா.. அக்ரீமன்ட் போட்டு மேரேஜ் பண்ணிக்கிட்டு.. இப்படிலாம் நடந்துக்கிட்டோமே.. அவ என்ன நெனைப்பாளோ'ன்னுதான..?? இங்க பாருங்க.. நேத்து நீங்க பண்ணுன எதையும் நான் தப்பா எடுத்துக்கலை..!! இன்னும்.. வெக்கத்தை விட்டு உண்மையை சொல்லப்போனா.." என்றுவிட்டு ஓரிரு வினாடிகள் நிறுத்திய நந்தினிஅப்புறம் தலையை குனிந்தவாறே வெட்கத்துடன் சொன்னாள்.

"நீங்க திரும்ப அந்த மாதிரி நடந்துக்க மாட்டீங்களான்னு எனக்கு ஏக்கமாத்தான் இருக்கு..!! எனக்கு சம்மதங்க.. அந்த அக்ரீமன்ட்லாம் உடைச்சு எறிஞ்சுட்டு.. ஒரு உண்மையான பொண்டாட்டியா உங்க கூட வாழ எனக்கு சம்மதம்..!! நீங்களும் இனிமே எனக்கு ஒரு உண்மையான புருஷனா நடந்துக்குவீங்களா..?? ம்ம்..?? இனிமேயும் உங்க காதலை மூடி மூடி வைக்காம.. எங்கிட்ட தைரியமா காட்டுவீங்களா..??"

நந்தினி அந்தமாதிரி ஏக்கமாய் கேட்கஅசோக் இப்போது தலையை பிடித்துக் கொண்டான். 'ச்சே.. அவசரத்தில்ஒரு ஆசையில் நான் செய்த காரியம் எங்கெல்லாம் சென்று நிற்கிறது..?? இல்லை.. இதை இப்படியே வளர விடக்கூடாது..!! வளரவிட்டால்.. அது இதைவிட பெரிய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும் வாய்ப்பு உள்ளது..!! உண்மையை சொல்லி விட வேண்டியதுதான்..!!' ஒரு முடிவுக்கு வந்த அசோக்தடுமாற்றமான குரலிலேயே ஆரம்பித்தான்.

"..இங்க பாரு நந்தினி.. நீ எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!"

"என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..??"

"நான் நேத்து உன்னை கிஸ் பண்ணினது.."

"ம்ம்ம்..??"

"உன் மேல இருக்குற லவ்னால இல்ல.."

"..அப்புறம்..??" நந்தினி இப்போது தன் நெற்றியை சுருக்கினாள்.

"இட்ஸ் ஜஸ்ட் லஸ்ட்.. ஒரு அட்ராக்ஷன்..!!"

அசோக்கின் வார்த்தைகளை நந்தினியால் நம்பமுடியவில்லைஅவனையே திகைப்பாக பார்த்தாள்.

"பொ..பொய்தான சொல்றீங்க..?"

"இல்ல நந்தினி.. உண்மைதான்..!!"

"இல்ல.. நான் நம்பமாட்டேன்.. உங்க முத்தத்துல நான் ஃபீல் பண்ணினது லவ்தான்..!!" நந்தினி நம்பமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

"ப்ளீஸ் நந்தினி.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.."

"சொல்லுங்க.."

"நேத்து நைட்டு நான் மேட்ச் பாக்க போகலை.. ஒரு பொண்ணை கூட்டிட்டு கெஸ்ட் ஹவுஸ் போயிருந்தேன்.. லாஸ்ட் மொமன்ட்ல அந்தப்பொண்ணை திருப்பி அனுப்ப வேண்டியாகி போயிடுச்சு..!! ஆனா.. எனக்கு உள்ள இருந்த அந்த செக்ஸுவல் தர்ஸ்ட்.. அது அப்படியேதான் இருந்தது..!! அதோட வீட்டுக்கு வந்து.. உன்னை பாத்ததும்.. என்னையும் அறியாம அந்த செக்ஸுவல் தர்ஸ்ட் வெளிப்பட்டு.. உன்னை கிஸ் பண்ணிட்டேன்..!! சத்தியமா இது நான் ப்ளான் பண்ணி பண்ணலை.. இட் ஜஸ்ட் ஹேப்பன்ட்...லைக் அன் ஆக்ஸிடன்ட்..!! ப்ளீஸ் நந்தினி.. அதை நேத்தோட அப்படியே மறந்திடலாம்.. ஒரு கெட்ட கனவு மாதிரி நெனச்சுக்கோ..!! சரியா..??"

அசோக் சொல்லி முடிக்கநந்தினி அப்படியே சப்த நாடியும் ஒடுங்கிப் போனவளாய் நின்றிருந்தாள்அவன் சொன்ன விஷயத்தை இன்னுமே நம்பமுடியாதவளாய் அவனையே பரிதாபமாக பார்த்தாள்அவனது நேற்றைய செய்கைக்கு காதல் என்று அர்த்தம் கற்பித்த தனது அறியாமையை எண்ணி அவளுக்குள் ஒரு சுய பச்சாதாபம்அந்த அறியாமையினால் காலையில் இருந்து அவனிடம் வெக்கங்கெட்டதனமாய் நடந்துகொண்டதை எண்ணி ஒரு வேதனை வேறு அவளை வாட்டியதுசோர்ந்து போனவளாய் அப்படியே மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்.

கொஞ்ச நேரம் அப்படியே தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்அவளுடைய மனதுக்குள் ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்பு..!!! அப்புறம் தனது முகத்தை மெல்ல நிமிர்த்தி அசோக்கை ஏறிட்டாள்அவளுடைய கண்களில் இப்போது பொலபொலவென கண்ணீர் வடிந்து கொண்டிருந்ததுஅழுகிற விழிகளுடனே இறுக்கமான குரலில் கேட்டாள்.

"அப்போ.. என்னை கிஸ் பண்ணினது.. என் மேல இருக்குற லவ்னால இல்ல..?"

"..இல்ல..!!"

"உங்க செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த முடியாம.. அதை என்மேல வந்து கொட்டிட்டீங்க..?" நந்தினியின் கேள்வியில் இருந்த உக்கிரத்தில் அசோக் திகைத்தான்.

"..நந்தினி.. நான் சொல்றதை கொஞ்சம்.." அவன் தடுமாற்றமாய் சொல்லநந்தினி இப்போது சீறினாள்.

"பேசாதீங்க..!!!! போச்சு.. எல்லாம் போச்சு..!! என் புருஷனுக்கு என் மேல லவ் வந்துடுச்சுன்னு நம்பினேன்.. அந்த நம்பிக்கை போச்சு..!! எனக்கு இனிமே லைஃப்ல எந்தக்குறையுமே இல்லன்னு சந்தோஷப்பட்டேன்.. அந்த சந்தோஷம் போச்சு..!! எல்லாம் போச்சு..!!" என்று புலம்பினாள்.

"நந்தினி ப்ளீஸ்.. சொல்றதை கேளு..!! ..இது.. இது ஒண்ணுல்ல.. இப்படி நீ பொலம்புற அளவுக்கு.. இப்போ பெருசா எதுவும் ஆயிடலை..??"

"..!! நடந்தது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாவே தோணலைல..?? இது.. ஜஸ்ட் லைக் தட்.. அப்படியா..?? ஆமாம்.. உங்களுக்கு எப்படி அது பெரிய விஷயமா தோணும்..?? டெயிலி ஒருத்தி கூட படுத்து எந்திரிக்கிறவருதான நீங்க..?? உங்களுக்கு இதுலாம் சாதாரணம்தான்..!! சொல்லுங்க.. எத்தனை பேரை இந்த மாதிரி புடிச்சிருக்கீங்க.. ம்ம்ம்..?? நான் எத்தனாவது அந்த லிஸ்ட்ல..?? டபுள் டிஜிட்டா.. ட்ரிபிள் டிஜிட்டா..??" நந்தினி வெடித்து சிதறஅசோக் மிரண்டு போனான்.

"..நந்தினி ப்ளீஸ்.." என்றான் கெஞ்சலாக.

நந்தினி அவனுடைய கெஞ்சலை பொருட்படுத்தவில்லைதிடீரென படுக்கையில் இருந்து எழுந்தாள்அந்த அறைக்குள்ளேயே அவளுடைய பொருட்கள் எல்லாம் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியை நோக்கி சென்றாள்அந்த பொருட்களை எல்லாம் கலைத்து இழுத்து போட்டாள்எதையோ தேடினாள்எதுவுமே புரியாத அசோக் அவளை நெருங்கினான்கவலை தோய்ந்த குரலில் கேட்டான்.

"..நந்தினி.. நந்தினி என்ன பண்ற..?"

அவள் அவனுடைய அழைப்பை கண்டுகொள்ளவில்லைஒரு அரை நிமிடம் செலவழித்து அவள் தேடியதை கைப்பற்றினாள்கையில் எடுத்ததை அசோக்கின் முகத்தில் விட்டெறிந்தாள். 'அது என்ன..?' என்று பார்த்த அசோக் ஒருகணம் குழம்பிப் போனான்அது.. நந்தினியின் புகைப்படம்..!!

"ஏய்.. ..என்ன இது..??"

"என் ஃபோட்டோ..!!"

"..இது எதுக்கு..??"

"என் உடம்பையும் அனுபவிச்சுட்டு.. உங்க ஆல்பத்துல இந்த ஃபோட்டோவையும் சேர்த்துக்கங்க.."

நந்தினியின் வார்த்தைகள் அசோக்கின் மீது சாட்டை சொடுக்கினஅந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வலியில் துடித்துப் போனான்அதே நேரம் அந்த வார்த்தைகள் அவனுக்குள் ஆத்திரத்தையும் கிளப்பி விட்டனஉடனே குரலை உயர்த்தி கத்தினான்.

"அப்படியே அறைஞ்சிருவேன் நந்தினி.. என்ன பேச்சு பேசுற..??"

"ஏன்.. நான் பேசுனதுல என்ன தப்பு..?? அவளுககிட்ட காட்டவேண்டிய ஆசையைத்தான.. தவறிப்போய் எங்கிட்ட காட்டிருக்கீங்க..?? அந்த ஆல்பத்துல இருக்குறவளுக மாதிரித்தான என்னையும் நெனச்சிருக்கீங்க..?? அப்புறம் என்ன.. இன்னைக்கே என் மேட்டரையும் முடிச்சுட்டு.. என் ஃபோட்டோவையும் சேத்துக்கங்க..!!" நந்தினி சீறஅசோக் தலையை பிடித்துக் கொண்டான்.

"ப்ளீஸ் நந்தினி.. அப்டிலாம் பேசாத.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!! எனக்கு அவளுகளும் நீயும் ஒன்னு இல்ல.. இது சத்தியம்..!!" கெஞ்சுகிற குரலில் சொன்னான்.

"அப்போ நான் யாரு..?? சொல்லுங்க.. நான் யாரு..??? பொண்டாட்டி இல்லைன்னு எப்போவோ சொல்லிட்டீங்க..!! இத்தனை நாளா ஃப்ரண்டுன்னு சொல்லிட்டு இருந்தீங்க.. ஃப்ரண்டை எவனும் இங்க புடிச்சு கசக்க மாட்டான்..!! பொண்டாட்டியும் இல்ல.. ஃப்ரண்டும் இல்லன்னா.. அப்புறம் நான் யாரு..??? அந்த மாதிரி பொண்ணுதான..???" நந்தினி வெடித்து சிதறினாள்.

"ப்ளீஸ் நந்தினி.. அப்படி சொல்லாத.."

"ஆமாம்.. அப்படி கூட சொல்லக்கூடாது..!! அட்லீஸ்ட் அந்த பொண்ணுகளுக்காவது.. இவன் தொடுறது லவ்னால இல்லன்னு முன்னாடியே தெரியும்.. எனக்கு அது கூட தெரியலையே..?? நீங்க என்ன நெனைப்புல என்னை தொட்டீங்கன்னு கூட புரியாத முட்டாளா இருந்திருக்கேனே..?? அந்தப் பொண்ணுகளை விட கேவலமானவ நான்..!!"

சொல்லிவிட்டு நந்தினி அப்படியே தரையில் அமர்ந்தாள்குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்அசோக் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்என்ன செய்வதென்றே புரியாமல் செயலாற்றுப் போய் நின்றிருந்தான்நந்தினி அந்த மாதிரி உடைந்து போய் அழுவதுஅவனுக்கு இதயத்தில் ஊசி செருகியது போலிருந்ததுமெல்ல நடந்து சென்று அவளை நெருங்கினான்.

"அழாத நந்தினி.. ப்ளீஸ்.." என்றவாறே அவளுடைய தோளை தொட்டான்.

"ச்சீய்.. கையை எடுங்க.. எனக்கு அப்படியே அருவருப்பா இருக்கு..!!"

என்று நந்தினி அவனுடைய கையை பட்டென தட்டிவிட்டாள்அவளுடைய செய்கை தந்த வேதனையில் அசோக் துடித்துப் போனான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக