கால் கேர்ள் ரேவதி - பகுதி - 5

அருண் அங்கிருந்து புறப்பட்டு செல்லுமுன் நர்ஸிடம் "ஏதாச்சுன்னா .. " என்று ஆரம்பித்த்வனை முடிக்க விடாமல் "உடனே டாக்டர் வந்தனா அப்பறம் டாக்டர் விசாலாக்ஷியை காண்டாக்ட் பண்ணனும்ன்னு சொல்லியிருக்காங்க ..." என்றாள் "ஒகே ... தாங்க்ஸ் " என்றவாறு விடை பெற்று சிறிது லேசான மனத்துடன் புறப்பட்டு அத்தையின் வீட்டை அடைந்தான். அங்கு அத்தை நின்று பரிமாறிக்கொண்டிருக்க அவனது மாமா தண்டபாணி மகள் வினிதாவுடன் உணவருந்திக் கொண்டிருந்தார் ..

ஒரு கணம் அருண் தன் அத்தையைப் பார்த்து மனதுக்குள், 'இங்கு கணவனுக்கும் மகளுக்கும் பதவுசுடன் பரிமாறிக் கொண்டிருப்பது நேற்று ஒரு முடி சூடா அரசியைப் போல் ஹாஸ்பிடலில் வலம் வந்த அதே அத்தையா? மாமா எவ்வளவு லக்கி?' என்ற எண்ணிய அதே மூச்சில் 'என் ரேவதியும் இப்படித்தான் இருப்பா .. ' என்று முடித்தான். அவனை அத்தை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்க மாமா "வாங்க மாப்பிளே, எப்படி இருக்கீங்க?"
"நான நல்லா இருக்கேன் மாமா .. நீங்க எப்படி இருக்கீங்க" என்று சம்ப்ரதாயத்துக்கு கேட்டவாறு

"ஹாய் அத்தை ... ஹாய் வினி" என்றவாறு காலியாக் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான் அவனது மாமா "உங்களுக்கு லீவு காலைல மெதுவாத் தான் சாப்பிடுவீங்க .. " என்று தன்னையும் தன் மகளையும் காட்டி "நாங்கெல்லாம் வேலைக்கு போறவங்க ...அதான் சீக்கரம் சாப்பிட உக்காந்துட்டோம் .. மருமகனுக்கு கம்பெனி குடுக்கணும்னு உங்க அத்தை வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்றார்

 அதற்கு அருண் "ஐய்யோ, ஏன் அத்தை எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க? நீங்களும் அவங்க கூட உக்காந்திருக்க வேண்டியதுதானே?" என்றதும் "பரவால்லடா, நானே மெதுவாத்தான் சாப்பிடலாம்னு இருந்தேன் .. " என்றவர் தொடர்ந்து தன் ஆசைக் கணவனுக்கும் அன்பு மகளுக்கும் தன் சேவையில் குறை வைக்க வொண்ணாமல் அதே சமயம் தன் செல்ல மருமகனுக்கும் தனிக் கவனம் செலுத்த எண்ணி "நீ இரு இவங்க எப்படியும் சாப்பிட்டு முடிக்கப் போறாங்க .. இவங்க கெளம்பட்டும் அப்பறம் நம்ம ரெண்டு பேரும் ஒக்காரலாம் ... " என்ற ஆதே மூச்சில் அவன்மேல் இருந்த அக்கறையால் "ஒனக்கு ரொம்ப பசிக்குதா ?" என்றார்

 "நாட் அட் ஆல் ... இவங்க சாப்பிட்டுட்டு கெளம்புட்டும்... அப்பத் தான் என்ன நீங்க ஸ்பெஷலா கவனிக்க முடியும் .. " என்று வினிதாவை வெறுப்பேத்தினான் அவனது மாமா சாப்பிட்டு முடித்து காஃபி அருந்தியவாறு அருணிடம், "அப்பறம் என்ன மாப்பிளே, அரசியல்ல சேராலாம்ன்னு இருக்கற மாதிரி இருக்கு?" என்று கிண்டலாக கேக்கவும் "மாமா, சும்மா கிண்டல் பண்ணாம, நேரா விஷயத்துக்கு வாங்க " "இல்ல, அமெரிக்காவுல இருந்து வந்ததும் கோவைல ஆரவாரமான ஒரு வெளிநடப்பு; திரும்பி இங்க சேன்னையில யாரோ கேன்ஸர் பேஷண்டுக்கு மனிதாபிமான சேவை,

அடுத்த ரெண்டு நாளுல தற்கோலை செய்யப் போன போண்ண நம்ம புரட்சித் தலைவர் படத்துல வர்றமாதிரி காப்பாத்துனது; இதையெல்லாம் பாத்தா அரசியல் பிரவேசத்துக்கு ஒத்திகையோன்னு தோணுச்சு; அதான் கேட்டேன்" என்று மேலும் நக்கலடித்தவாறு அவர் முதலில் தன் அலுவலகத்திற்கு கிளம்பினார் "உங்களுக்கு இந்த மாதிரியெல்லாம் ஐடியா வர்றதப் பாத்து தான் வினி DGO படிச்சுட்டு அம்மா கூட சேந்து பிரசவம் பாக்கறதுக்கு பதிலா உங்களுக்கு பிற்காலத்துல ஒதவும்ன்னு DPM படிச்சுட்டு இருக்கா" என்று பதிலுக்கு அருணும் வினிதா மனோதத்துவ மருத்துவம் படிப்பதற்கு அவரைக் காரணம் காட்டிக் கிண்டலடித்து வழியனுப்பினான்.

 "என்னை எதுக்கு இழுக்கறீங்க? ... " என்றவாறு கிளம்பிய வினிதா "இருப்பீங்கல்ல? நான் மூணு மணிக்கெல்லாம் வந்துருவேன் ..." என்றாள் "ம்ம்ம் தெரியலெ .. பட், கொஞ்ச நாளைக்கு சென்னைல தான் இருப்பேன் ..வீ வில் காட்ச் அப் .. " என்றபிறகு நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, "அப்பறம் மேடம் இப்ப எங்க? அதான் இன்-டெர்ன்ஷிப் முடிஞ்சுது இல்லயா?" என்று அவளது தற்போதைய வேலையைப் பற்றிய தன் அறியாமையை பறைசாற்றினான். "எப்பவாவுது ஒரு தடவை காண்டாக்ட் பண்ற உனக்கு இங்க நடக்கறது எங்கடா தெரியப் போகுது" என்று அவனது அத்தை கடிந்து கொள்ள எப்படிப் பேச்சை மாற்றுவது என்று விழித்தான் ..

 அவனுக்கு சமாதானம் சொல்லும் வகையில் "இன்-டெர்ன்ஷிப் முடிஞ்சுது .. இப்ப நான் இன்-டெர்ன்ஷிப் பண்ணுன சைக்கியாட்ரிஸ்ட் கிட்டயே ஜூனியரா சேந்துருக்கேன் .." என்று விளக்கியவாறு தன் காரை நெருங்கிய வினிதா அருகே நிறுத்தப் பட்டிருந்த அவன் கொண்டு வந்திருந்த காரைப் பார்த்து ஒரு கணம் அவள் தடுமாறியது அருணுக்கு நன்கு தெரிந்தது ..'பாஸ்கர் கிட்ட என்ன விஷயம்னு கேக்கணும் ...' என்று மனதில் நினைத்தவாறு அவளை அர்த்தத்துடன் பார்க்க வினிதா அவன் கண்களை தவிர்த்து தன் காரில் ஏறினாள்.

 அடுத்து சுடச்சுட இட்லி தோசையை "உங்களுக்கு போதுமா? ஷ்யூர்? ..." என்றவாறு அவனுக்குப் பிடித்த நிலக்கடலைச் சட்னியுடன் ஒரு பிடி பிடித்த அருணை கண்களின் ஓரத்தில் நீர் ததும்ப பார்த்துக் கொண்டு இருந்த விசாலாக்ஷி தானும் சாப்பிட்டு முடித்து "காஃபிய எடுத்துட்டு ஹாலுக்குப் போ .. நான் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்" என்றார். சிறிது நேரத்தில் ஹாலை அடைந்த டாக்டர் விசாலாக்ஷி சோஃபாவில் அவன் அருகில் அமர்ந்து "ம்ம்ம் சொல்லு .." என்றார் "என்னது .. " "விளையாடாதடா ... என்னாச்சு ஊர்ல .. ஏன் அந்த மாதிரி பெரியண்ணன் கிட்டயும் ராம் அண்ணன் கிட்டயும் பேசிட்டு வந்தே ?" தலைக் குனிந்து சிறிது நேரம் மௌனம் சாதித்தபின், "பின்ன என்னத்தே, எப்ப போனாலும் எங்கிட்ட பேசற ஒரே டாபிக் பிஸினஸ்ல அப்பாவுக்கும் ஷேர் இருந்துது அவரு ஒண்ணும் பண்ணுல இப்ப நானும் ஒண்ணும் பண்ணமாட்டேங்கறேன் அப்படீங்கறதுதான்" "உண்மைதானே .. " "அதான் இனிமேல் எனக்கு ஒரு ஷேரும் வேண்டாம் நீங்களே அனுபவீங்கன்னு ஆடிட்டர் அங்கிள் கிட்ட எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்

.." "அத அவங்க அன்னைக்கே கிழிச்சு போட்டாச்சு" "ஏன்?" சற்று வியந்து கேட்டான். "மொதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கோ, அந்த பிஸினஸ்ஸ நம்பி பெரியண்ணனோ ராம் அண்ணணொ பொழைச்சுகிட்டு இல்ல ... அவங்களுக்கும் தோட்டம் வீடு எல்லாம் இருக்கு, ரெண்டு பேரோட பொண்டாட்டிங்களும் சொத்து நிறைய கொண்டாந்திருக்காங்க .. இந்த பிஸினஸ் எங்க அப்பா ஆரம்பிச்சது அதனால அவங்களுக்கு ஏன் எனக்குமேகூட ஒரு ஸென்டிமென்டல் அட்டச்மென்ட் இருக்கு. அந்த ஆதங்கத்துல தான் அப்படி பேசுனாங்க .."

 "ஆதங்கம் இருந்தா நான் என்ன பண்ண முடியும் .. " "நீ கோவப் படாம அந்த மாதிரி அவங்க கிட்ட கேட்டிருந்தேன்னா ஒரு லிஸ்டே குடுத்திருப்பாங்க .." என்று அவனை திகைக்க வைத்தார். பிறகு தொடர்ந்து, "டெக்ஸ்டைல் மெஷினரீஸுங்கறது முன்ன மாதிரி இல்ல இப்ப ஏகப்பட்ட அட்வான்ஸ்மென்ட்ஸ் வந்திருக்கு. கஸ்டமர்ஸை நல்லா தெரிஞ்சாலும் புதுசு புதுசா வர்ற மெஷினரி பத்தி ரெண்டு பேருக்கும் தெரிய மாட்டேங்குது. சம்பளத்துக்கு இருக்கறவங்களக் கேட்டு தெரிஞ்சுக்க வேண்டி இருந்தா எந்த மொதலாளிக்கும் எங்க ஏச்சுக் கட்டீருவாங்களோங்கற ஆதங்கம் இருக்கும். நீ நல்லா படிச்ச்வன் .. உலகத்தையே சுத்தி வந்தவன் ..

ஒரு ஃபாரின் கம்பெனிகூட எப்படி கான்ட்ராக்ட் போடறதுங்கற மாதிரி விஷயமெல்லாம் உனக்கு தெரியும் .. இல்லேன்னாலும் உன்னால சீக்கரம் தெரிஞ்சுகிட்டு செயல்பட முடியும் .. அப்பறம் அவங்க ரெண்டு பேருக்கும் இந்த ஈமெயில் இன்டெர்னெட் அப்படீன்னா என்னன்னு கூட தெரியாது. ஆனா இப்பல்லாம் பிஸினஸ்ஸுக்கு தேவப் படுது. அதையெல்லாம் எப்படி பிசினல்ல கொண்டு வர்றதுன்னு அவங்களுக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது. நீ கொஞ்சம் பிஸினஸ்ல இன்வால்வ் ஆனேன்னா இப்ப நல்லா நடக்கற பிஸினஸ்ஸை இன்னும் நல்லா முன்னுக்கு கொண்டு வரமுடியும்னு அவங்க நெனைக்கறதுல என்ன தப்பு?" என்று நீளமாக விசாலாக்ஷி சொல்லி முடித்ததும் அவனுக்குள் பெரும் குழப்பம் ..

 "இல்லயே அந்த மாதிரி அவங்க ஒண்ணும் சொல்லவே இல்லயே .. எடுத்ததும் அப்பாவுக்கும் ஷேர் இருந்துது அவரு ஒண்ணும் பண்ணுல இப்ப நானும் ஒண்ணும் பண்ணலன்னு தான ஆரம்பிச்சாங்க .. " "அப்படித்தான் ஆரம்பிச்சு இருப்பாங்கடா .. ஆனா அவங்கள அதுக்கு மேல பேச விட்டயா .." என்றதும் அருண் தலை குனிந்து மௌனம் சாதித்தான். "நீ உன்னோட ஃபீல்டுல பண்ணற சாதனைய அவங்க பாராட்டலையேன்னு உனக்கு கோவம் .. அவங்களுக்கு நீ என்ன வேலை பண்ணறேன்னு தெரியாதுடா .. ஆனா சொந்தக் காரங்க கிட்ட உன்னப் பத்தி எப்படி பெருமை அடிச்சுக்குவாங்கன்னு உனக்கு தெரியாது .. "

 "சரி, நான் பெரியப்பா சித்தப்பா கிட்ட பேசி மன்னிப்பு கேக்கறேன் .. '


"நீ மன்னிப்பெல்லாம் ஒண்ணும் கேக்க வேண்டாம் ... திரும்பி யூ.எஸ் போறத கொஞ்ச நாள் தள்ளி வெச்சுட்டு கொஞ்சம் பிஸினஸ்ல ஹெல்ப் பண்ணு .. நீ வேணும்னா இங்க சென்னை ப்ரான்ச்சுல இருந்தே பண்ணிகிட்டு தேவைப் படும்போது மட்டும் கோயமுத்தூர் போயிட்டு வந்தா போதும் .. " என்றதும் திரும்ப யூ.எஸ் செல்வதை ரேவதிக்காக தள்ளிப் போடுவதென்று அவன் ஏற்கனவே முடிவு செய்திருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் "அப்பறம் என்னோட வேலை போயிடும் ..." என்று பொய் சொன்னான்.

 "அப்படியா .. நீ ரெஸிக்னேஷன் லெட்டர் கொடுத்தது .. அதை உங்க மேனேஜ்மென்ட் அக்ஸப்ட் பண்ணாம எவ்வளவு நாளைக்கு வேணும்னாலும் ப்ரேக் எடுத்துட்டு திரும்பி வான்னு சொன்னது எல்லாம் எனக்கு தெரியும் .. " என்றார். "சே, அந்த ஆனந்த் பய சொன்னானா?" என்ற அருணிடம் "நீ கோயமுத்தூர்ல இருந்து கிளம்பி இங்க வராமெ உன்னோட அடையார் அப்பார்ட்மென்டுக்கும் போகலேன்னதும் நான்தான் அவனுக்கு ஃபோன் பண்ணி உனக்கு வேற ஏதாவுது ப்ரோக்ராம் இண்டியால இருக்கான்னு கேட்டேன். அப்ப சொன்னான்" என்றார்.

 "சரி, இப்ப சொல்லு யார் அந்த பொண்ணு? எதுக்கு நீ அந்த பொண்ணுக்காக இவ்வளவு பண்ணறே?" என்று ரேவதியைப் பற்றி கேட்க அருண் ரேவதியின் சரித்திரத்தை விசாலாக்ஷிக்கு சொன்னான். கேட்டவர் "ரொம்ப பாவம்டா அந்த பொண்ணு .. ஆனா, இந்த மாதிரி ஒரு பொண்ணுக்கு உதவி தேவைன்னு தெரிஞ்சுதுன்னா நல்லவங்க நெறைய பேரு உதவ முன் வருவாங்களே, ஏன் அந்த பொண்ணு அந்த மாதிரி உதவி தேட முயற்சி எதுவும் எடுத்துக்கல?" என்றதற்கு அருண் "தெரியல அத்தை, அவளைத்தான் கேக்கணும். முதல்ல அவ பார்ட்-டைம் வேலைக்கு ட்ரை பண்ணி ஒண்ணும் கெடைக்கலன்னு அன்வர் பாய் சொன்னார்.

ஐ திங்க் அவளுக்கு இருந்த அவசரப் பணத்தேவைக்கு வேற வழி எதுவும் தெரியலைன்னு நெனைக்கறேன். மோர் ஓவர், அவங்க அம்மா அந்த தொழில் பண்ணிட்டு இருந்ததுனால அந்த ப்ரோக்கரோட பழக்கம் ஏற்பட்டு இருக்கு, உங்க அம்மா கூட பண்ணிட்டு இருந்ததுதான் உனக்கு இன்னும் நெறைய காசு வரும்ன்னு அவன் தான் இழுத்து விட்டு இருக்கான். அப்ப வேற உதவியை நாடணும்ன்னு அவ இருந்த சூழ்ல்ல தோணல போல இருக்கு .. " என்று அவன் அறிந்தவற்றை வைத்து தன் கணிப்பைக் கூறினான். "அது சரி, உனக்கு அவளை எப்படிப் பழக்கம்?" என்று விசாலாக்ஷி கேட்டதற்கு தலை குனிந்தான்

.. திடுக்கிட்ட விசாலாக்ஷி முகம் சிவந்து "சீ, உனக்கு இந்தப் பழக்கமெல்லாம் உண்டா .." என்று அருவருப்புடன் கேட்டதற்கு "ஐய்யோ அத்தை, அது கிட்டத்தட்ட ஒரு ஆக்ஸிடென்ட் அப்ப நான் இருந்த மூட்ல ஓகேன்னுட்டேன். அது தான் எனக்கு முதல் தடவை ... அதுதான் எனக்கு கடைசியுங்கூட .. " என்றவனை நம்ப மறுத்த விசாலாக்ஷி அவனிடம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவர் மூக்கு சிவந்து கண்களின் ஓரத்தில் நீர் தேக்கத்தைக் கண்டு அவரது அன்பில் உருகிய அருண் எழுந்து அவர் முன்னால் மண்டியிட்டு

அவர் கையை தன் கைக்குள் வைத்தவாறு, "அந்த மாதிரியெல்லாம் போற பழக்கம் எனக்கு இல்லை, என்னை நம்புங்க .. " கையை உதறி அவன் கன்னத்தில் நோகாமல் வெறுப்பை மட்டும் காட்டுமாறு அறைந்து பின் அவன் தலைமுடியை பற்றி உலுக்கியவாறு "ஓஹோ ஐய்யா இதுல பழக்கம் வேணும்னு இருந்தீங்களோ? ..அப்படி என்னடா ஒரு கன்ட்ரோல் இல்லாம? ஒரு தடவை போனா என்ன நூறு தடவ போனா என்ன .. நாளைக்கு உன்னை கட்டிக்க போற பொண்ணுக்கு தெரிஞ்சா உன்னைப் பத்தி என்ன நினைப்பா ... பிடிக்கலேன்னா டைவர்ஸ் பண்ணிடுன்னு நானே அவளுக்கு அட்வைஸ் பண்ணுவேன் .. சே, ஐ அம் ஹைலி டிஸ்ஸப்பாயிண்டட் வித் யூ" என்று மேலும் அவனை கடிந்தார்

 மனதுக்குள் 'என்ன நினைப்பா நல்ல எக்ஸ்பீரியன்ஸான ஆளுன்னு நெனைப்பா? anyway நான் கட்டிக்க போறவ கிட்டதானே போனேன்' என்று நினைத்தான். அவன் காதலைப் பற்றி சொல்ல இன்னும் நேரம் வரவில்லை என்று மௌனம் சாதித்தான் .. சிறிது நேர மௌனத்திற்கு பிறகு "மறுபடி இந்த மாதிரி போக மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணு .. " என்றதும் அருண் 'அப்பாடா ஒரு வழியா கோவம் தீந்துதே ..' என்று நினைத்து "உங்க மேல சத்தியமா இனிமே போக மாட்டேன் அத்தை" என்று சத்திய வாக்களித்ததும் அவர் முகம் ஓரளவு பழைய நிலைக்கு வந்து.

 இது போன்று சத்தியம் வாங்குவது தாய்களுக்கே உரித்தான ஒரு தனித்துவம் .. ஒரு தந்தை மகனிடம் எதற்கும் சத்தியம் வாங்குவது இல்லை .. சத்தியத்தின் மேல் ஆண்களுக்கும் இருக்கும் (அவ) நம்பிக்கையாலோ? ஒரு காலத்தில் மனைவிகள் அப்படி செய்திருப்பார்களோ? அதுவும் தெரியவில்லை, ஆனால் இக்கால மனைவிகள் எவரும் இந்த ஒரு அஸ்திரத்தினால் கணவனைக் கட்டி வைக்க முடியும் என்று கனவிலும் நினைப்ப்தில்லை. சத்தியம் பண்ணிக் குடுத்து இருக்கே மறந்துடாதே .. ப்ளீஸ்டா கண்ணா .. இதெல்லாம் உனக்கு வேண்டாண்டா ..

வேணும்னா ஒரு கல்யாணம் பண்ணிட்டு கட்டுனவ கூட ஜாலியா இரு .. ஒரு வார்த்தை சொல்லு ... நாளைக்கே உனக்கு பொண்ணு நான் ரெடி பண்ணறேன்.." என்றவரிடம் "ஐய்யோ அத்தை, ப்ளீஸ் .. கல்யாணத்தைப் பத்தியெல்லாம் எனக்கு எந்த நினைப்பும் இல்ல .." என்றவன் தொடர்ந்து தனது ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள "அத்தை உங்ககிட்ட ஒண்ணு கேப்பேன் .. உண்மையா பதில் சொல்லணும்" என்ற முஸ்தீபுடன் "பெரியப்பா மாதிரி நீங்களும் நான் வினிதாவை கட்டிக்கணும் ஆசைப் படறீங்களா? ஆனா எனக்கு அதில இஷ்டம் இல்லை " என்றதும்

 "உனக்கு இஷடம் இருந்தாலும் எம்பொண்ணை கண் காணாத தூரத்துல கட்டி குடுக்கப் போறதில்லைங்கறது நானும் உன் மாமாவும் எப்பவோ எடுத்த முடிவு ... வினிதாவுக்கும் உன் மேல அந்த மாதிரியெல்லாம் ஒரு நினைப்பும் இல்லை ... " என்றபிறகு லேசாக சிரித்து தான் சகஜ நிலைக்கு வந்ததை மேலும் பிரகடனப்படுத்த "ஆனா, இப்ப சொல்றேன், இந்த மாதிரி போறவனுக்கு அவளே வேணும்னாலும் நான் குடுக்க மாட்டேன் .. " என்றதும் பதிலுக்கு அருணும் "சரி சரி நானும் பாக்கத்தான போறேன் எந்த மாதிரி மாப்பிளையப் புடிக்க போறீங்கன்னு .." என்று நக்கலடித்தான்.

 பிறகு சிறிது மௌனம் சாதித்த அருண், "அத்தை, இந்த பொண்ணைப் படிக்க வெச்சு ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வ்ருவேன்னு அவ அம்மாகிட்ட வாக்கு குடுத்திருக்கேன்" என்றான். பெருமையில் அவர் முகத்தில் லேசான சந்தோஷ ரேகை படர்ந்தாலும் அவனை கூர்ந்து பார்த்த விசாலாக்ஷி , "ஒரு நாள் பண்ணுனதுக்கு பரிகாரம் தேடறாயா " என்றதும் உண்மையாகவே கோபப்பட்டு "அத்தை, ஆமா அவகிட்ட போனேன். ஆனா இப்ப அவளுக்கு உதவணும்னு நான் நெனைக்கறது நான் அவ கிட்ட போனேங்கறதுக்காக இல்ல. எனக்கு அவளுக்கு உதவணும்னு இருக்கு.

 நீங்களே சொன்னீங்களே நல்லவங்க நிறைய பேரு முன்வருவாங்கன்னு .. அதுல ஒருத்தனா என்ன நினைச்சுக்குங்க" என்றான். "தெரிஞ்சுது, உன்னை ஆழம் பாக்க அப்படி கேட்டேன் '' தொடர்ந்து அருண், "அவ ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் அவளுக்கு மத்த டெஸ்ட் எல்லாம் பண்ணி அவ நார்மலா இருக்காளான்னு ஒரு செக்-அப் பண்ண முடியுமா?" "யூ மீன் அவளுக்கு STD (Sexually Transmitted Deseases - பாலுறவால் வரும் நோய்கள்), எய்ட்ஸ் மாதிரி எதாவுது வந்திருக்கான்னு பாக்கணுமா .. ஏன், ப்ரிகாஷன் இல்லாம் இன்டர் கோர்ஸுக்கு ஒத்துக்குவாளா" என்ற சர்வ சாதாரணமாக கேட்கவும் இது போன்ற விவரங்களை தன் அத்தையுடன் எப்படி பேசுவது என்று முதலில் சிறிது தடுமாறிய அருண் பிறகு அவர் குரலின் தொனியிலிருந்து அவர் டாக்டர் விசாலாக்ஷியாக கேட்பதை உணர்ந்தான்.

 "நெவர் .. காண்டம் யூஸ் பண்ணாட்டி அவ ஒத்துக்க மாட்டான்னு அவ ப்ரோக்கரே சொன்னான் .. " அவன் உற்சாகமாக சொல்வதை கண்டு மறுபடி அத்தையாக மாறி முகம் சுளிக்கும் அவரது கண்களைத் தவிர்த்துத் தலை குனிந்து தொடர்ந்து "அவளும் இன்ஸிஸ்ட் பண்ணுனா .. " என்றான். தொடர்ந்து மனதுக்குள் அவளுடன் தனது இரண்டாவது சேர்க்கையின் போது காண்டம் உபயோகிக்காததை எண்ணி, 'கடவுளே, ஒண்ணும் ஆகக் கூடாது .. இருக்கற ப்ரெச்சினைகளுக்கு நடுவே கன்ஸீவ் ஆனான்னா ...' என நினைத்தாலும் உடனே, 'கன்ஸீவ் ஆனா என்ன? ஒடனே கழுத்துல தாலியக் கட்டிட வேண்டியதுதான் .. அவ பீ.ஈ முடிக்க முடிக்க குழந்தையும் பொறந்துடும் ..ரெண்டு பேரையும் கூட்டிட்டு கெளம்ப வேண்டியதுதான்' என்று கற்பனைக் கோட்டை கட்டினான்.

 "நீ சொல்ற மாதிரி ப்ரிகாஷன் எடுத்துகிட்டு இருந்தான்னா அவ ஒடம்புல ஒரு ப்ராப்லமும் இருக்காது. எதுக்கும் வேணும்கற டெஸ்ட் எல்லாம் பண்ண ஏற்பாடு பண்ணறேன். ஆனா ... " என்று இழுக்கும் போது அவர் மொபைல் ஃபோன் ஒலித்த்து. எடுத்து பேசி முடித்த விசாலாக்ஷி "கெளம்பு, அந்த பொண்ணுக்கு நினைவு திரும்பியிருக்கு ... ஹிஸ்டரிகலா (வெறி பிடிச்ச மாதிரி) பிஹேவ் பண்றாளாம் .. " "என்னாச்சு ?" என்ற அவன் பதட்டத்தில் சிறிது வியப்புற்று "அதத்தான் நான் சொல்லவந்தேன் ... அதுக்குள்ள ஃபோன் வந்துருச்சு ... வா கார்ல பேசிட்டே போகலாம்" என்று மேலும் புதிர் போட்ட படி கிளம்பினார் விசாலாக்ஷி கிளம்பி தனது காரை ட்ரைவரிடம் ஹாஸ்பிடலுக்கு வர பணித்து அருணுடன் அவன் காரில் வந்தார்.

வழியில் அவர்கள் சம்பாஷணை தொடர்ந்தது "ம்ம்ம் சொல்லுங்க அத்தை .. " "ம்ம்ம் .. ஒடம்புல ப்ராப்லம் எதுவும் இருக்காதுன்னு சொன்னேன் .. சொன்ன மாதிரி ஃபோன் வந்துது .. " "புரியலே .. " "அந்த வாழ்க்கையில இருந்தவங்குளுக்கு உடம்பை விட மனசுல தான் அதிகம் பாதிப்பு இருக்கும்.. " என்றார் "என்ன பாதிப்பு .. " "நிறைய விதத்துல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் .. ஈஸிலி க்யூரபுல் தோ இட் டேக்ஸ் டைம் ஃபார் தெம் டு பீ ஃபுல்லி க்யூர்ட் (எளிதில் குணமாக்கக் கூடியவை ஆனால் பூர்ண குணமாவதற்கு பல நாட்கள் ஆகலாம்)" என்றார் மனதில் தோன்றிய நடுக்கத்தை கட்டுப் படுத்தியவன், "பாதிப்புன்னா எந்த மாதிரி பாதிப்பு அவளுக்கு என்ன ப்ராப்லம் வரும் .." என்றதும் "அவ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினது, இப்ப வெறி பிடிச்ச மாதிரி கத்திட்டு இருக்கறது இதெல்லாம் அந்த பாதிப்புனால தான்னு நான் நினைக்கறேன் ..

 பட் தென் .. ஐ அம் நாட் என் எக்ஸ்பர்ட் இன் தட் ஃபீல்ட் (ஆனால் திட்டவட்டமாக கூற நான் அந்த துறையில் நிபுணி அல்ல)" என்று தற்பணிவுடன் சொல்லவும் அவர் எப்படி இவ்வளவு பிரபலமான ஒரு மருத்துவர் ஆனார் என்பது அருணுக்கு விளங்கியது .. விசாலாக்ஷி பிறகு தன் ஃபோனில் தன் மகளை அழைத்து தனது மருத்துவமனைக்கு வரச் சொன்னார். கேட்டுக் கொண்டிருந்த அருணிடம் "வினிதா ஜூனியரா இருக்கற சைக்கியாட்ரிஸ்ட் நிறைய பொதுநலச் சேவையெல்லாம் செய்வாரு .. அவர் டெஸ்டிட்யூட் விமன் ரீ-ஹாபிலிடேஷன் (அபலைப் பெண்களுக்கு மறுவாழ்வு) கொடுக்கற ஒரு NGGOக்கு ஃப்ரீ கன்ஸல்டேஷனுக்கு போறாரு .. கூட வினிதாவும் போறா ... அவளை வந்து இந்தப் பொண்ணை பாக்க சொல்றேன் .." என்றதும்

'இப்பத் தான் அவ DPM முடிச்சா .. கத்து குட்டி அவளுக்கு இதெல்லாம் தெரியுமா' என்று மனதில் எரிச்சலடைந்தான் ஆனால் அத்தையிடம் எதுவும் சொல்லவில்லை. 'வினிதா வரட்டும் அவ கிட்டயே சொல்லி அவ சீனியரை வந்து பாக்க சொல்லலாம் ...' என்று முடிவெடுத்தான் ரேவதியிருந்த அறைக்கு வேளியே முனியம்மா கண்ணீருடன் சுவரில் சாய்ந்து நின்று அழுதுகொண்டிருந்தாள் ... டாக்டர் விசாலாக்ஷி நேராக உள்ளே செல்லவும் அருண் முனியம்மாவிடம் "என்னாச்சு? ..." என்றான் "ஒரு பத்து மணி வாக்குல முயிச்சுது சார் .. கூப்டா பதில் சொல்லாம கொஞ்ச நேரம் அப்படியே கூறையப் பாத்துகினு படுத்துகினின்சு ... திடீர்னு சுத்தியும் முத்தியும் பாத்திச்சு .. அப்பறம் வேகமா கையில மாட்டியிருந்த ஊசிய கயட்டி வீசுட்டு ஏந்திரிக்கப் பாத்துச்சு ...

நான் நர்ஸ கூட்டியாந்தேன் .. டாக்டரும் வந்தாங்க .. இப்ப இன்னா இன்னாவோ சொல்லி கத்திகினு கீது சார் .. " என்றாள்


உள்ளிருந்து ஒரு நர்ஸ் வர கதவு திரந்ததில் உள்ளிருந்து .."விடுங்க .. பார்ட்டி வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க .. நான் போகணும் ..." என்று ரேவதியின் குரல் ஒலிக்க, அதிர்ந்து போனான் அருண்.

 பிறகு திரும்பவும் அந்த நர்ஸ் உள்ளே செல்கையில், ".. சோலாவுல எதோ கான்ஃபரன்ஸாம் நெக்ஸ்ட் வீக் ஃபுல்லா ஃபுல் நைட் ஒத்துகிட்டேம்மா .. உனக்கு மருந்துக்கு எனக்கு ஃபீஸ் கட்ட எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல .. ஹி ஹி ஹி" சிறிது நேரத்தில், வெண்ணிறக் குறுந்தாடி வைத்த பார்த்தால் உடனே எழுந்து நிற்கத்தோன்றும் சற்று வயதான் ஒரு டாக்டர் வந்து ரேவதியின் அறைக்குள் பிரவேசித்தார் .. மறுபடி ரேவதியின் குரல் அழகான ஆங்கிலத்தில் "data structures and algorithms .. " என்றபிறகு தமிழுக்குத் தாவி "அந்த பெங்காளூர்க்காரன் வராம இருந்தா அன்னைக்கே நல்லா படிச்சு இருப்பேம்மா ... இப்ப ஒண்ணும் புரியல ... " நெஞ்சக் குமுறல் தாங்காமல் அருண் கைகளுக்குள் முகத்தை புதைத்து கண்ணீரை மறைத்தான் ...

 ஒவ்வொரு முறை கதவு திறக்கும்போதும் அனுபவித்த சித்திரவதையை தவிர்க்க சற்று தூரத்தில் போட்டிருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்தான் .. சிறிது நேரத்தில் அங்கு வந்த வினிதா முதலில் அருணைப் பார்த்து பிறகு அவன் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டு துணுக்குற்று அருகில் வந்து "என்ன ?" என்று கேட்க தலையை உதறி "நத்திங்க் .. ஐ திங்க் உனக்காக உள்ளே வெயிட் பண்ணிட்டு இருக்காங்க " என்று அவளை மேலும் கேள்வி கேட்க விடாது அவளை அங்கிருந்து அனுப்பினான்.

 வெகு நேரத்திற்குப் பிறகு தாயும் மகளும் அவருக்கு இருபுறமும் அம்மூத்த மருத்துவர் சொல்வதைப் பணிவுடன் கேட்டவாறு நடந்து வந்தனர் .. சிறிது நேரம் வெளியில் நின்று பேசிக் கொண்டு இருந்தபின் வினிதாவின் கன்னத்தை தட்டி ஏதோ சொன்னவாறு விடை பெற்றுச் சென்றார். அருண் கண்களையும் முகத்தையும் கைக்குட்டையால் அழுந்தத் துடைத்துக் கொண்டு எழுந்து அவர்களருகே சென்றான் ...

 அருண் கண்களையும் முகத்தையும் கைக்குட்டையால் அழுந்தத் துடைத்துக் கொண்டு எழுந்து அவர்களருகே சென்றான் ... வந்தபோது இருந்த பதட்டம் தன் அத்தையின் முகத்தில் இல்லாததைக் கண்டு ஆறுதலடைந்தான் டாக்டர் விசாலாக்ஷி கண்கள் சிவந்து முகம் வெளுத்து அருகில் நின்றவனை கண்களில் அன்புன் ஆறுதலும் தளும்பப் பார்த்து, ""ம்ம்ம் .. பயப்படற மாதிரி இல்லடா ... அவ மனசுதான் உடம்பவிட பாதிக்கப் பட்டு இருக்கு ... ரொம்ப ஹிஸ்டரிகலா இருந்தவளை தூங்க வைக்கணும்னா மயக்க மருந்து கொடுக்கணும் ஆனா அவ இருந்த நிலைமைல அவள செடேட் பணணலாமான்னு தெரியல அதனாலதான் எங்க நியூராலஜிஸ்ட் இப்ப போனாறே, டாக்டர் சந்த்ரசேகரை வரவெச்சேன் ..

அதுக்குள்ள இவளும் வந்தா .. ஒரு ஸ்பெஷல் செடேட்டிவ் குடுத்து இருக்கு .. நல்லா தூங்குவா .. ட்ரிப்ஸையும் கண்டின்யூ பண்ணிட்டு இருக்கு .. அவளுக்கு உடம்புக்கு ஓரளவு தெம்பு வந்ததும் வினிதாவோட ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கும் ... அதுக்கு முன்னாலயே நீ கேட்டபடி மத்த டெஸ்ட் எல்லாம் பண்ண சொல்லியிருக்கேன்" என்ற பிறகு கிண்டலாக அருணிடம் "Be prepared to pay through your nose for all this before you start spending on her studies (அவ படிப்புக்கு செலவு செய்வதற்கு முன்னால் இது எல்லாத்துக்கும் எக்கச் சக்கமா காசு செலவு பண்ண தயாரா இரு .. )" என்றார்.

 "Thats not an issue .. (அது ஒரு பிரச்சினை இல்லை ..)" என்றவனைப் பார்த்து "விளையாட்டுக்கு சொன்னென்டா .. இதுக்கெல்லாம் நீ பே பண்ணத் தேவையில்ல ..அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கறதுல என்னோட கான்ட்ரிப்யூஷன்னு வெச்சுக்கோ" என்றதும் அருணுக்கு மனதில் 'அவ ஒண்ணும் பிச்சக்காரியில்லை ...' என்று கத்த வேண்டும் போல இருந்தது .. சமயோசிதமாக அமைதி காத்தான். விசாலாக்ஷி தொடர்ந்து "மேற்கொண்டு அவளோட ட்ரீட்மென்ட் பத்தி வினி சொல்லுவா ...இனி நீயாச்சு இதோ இவளாச்சு .. என்னை விடுங்கப்பா ..

ஏற்கனவே ரெண்டு ப்ரசவம் நான் இல்லாமையே நடந்திருக்கு ..." என்றவாறு அவனிடம் "அப்பறம் நீ எங்க இருப்பே? ஹொட்டலுக்கு காச அழுகறதுக்கு பதிலா உன்னோட அடையார் ஃப்ளாட்லயாவுது போய் தங்கு .. க்ளீன் பண்ணி ரெடியா இருக்கு .. ஒரு ஹௌஸ் கீப்பர் கம் குக்குக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தடவையாவுது வீட்டுக்கு வா" என்று அவனைக் கேட்காமல் அவன் ஆமோதிப்பானென்ற நம்பிக்கையில் செய்திருந்த ஏற்பாடுகளை சொல்லி விடைபெற்றார்.

 அவர் சென்றதும் வினிதா, "அம்மா சொன்ன மாதிரி இப்ப அந்த பொண்ணுக்கு மைல்ட்ஆ ஆனா நல்லா தூங்க வெக்கற செடேட்டிவ் குடுத்திருக்கு .. நாளைக்கு காலைல வரை தூங்குவா .. கூடவே ட்ரிப்ஸ்ல போற க்ளூகோஸ்ல வேற மருந்தும் மிக்ஸ் பண்ணியிருக்கு .. அது அவளோட மைண்டை கொஞ்சம் அமைதிப் படுத்தும் .. இந்த மருந்தெல்லாம் தொடர்ந்து குடுக்க கூடாது .. அவளோட உடம்புக்கு கொஞ்சம் சக்தி வர்றவரைக்குதான் .. அப்பறம் சைக்கியாட்ரிக் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணனும் .. " என்றாள்

 அருண் "சரி, வெளில போய் ஒரு காஃபி சாப்பிட்டுட்டே பேசலாமா? நீ இங்க இருக்கணுமா?" என்றதற்கு "இப்ப நான் இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல .. " இருவரும் அருகில் இருக்கும் சென்னையில் புதிதாக முளைக்கத் தொடங்கியிருந்த காஃபீ டே ரெஸ்டாரண்டுகளில் ஒன்றிற்குள் சென்று அமர்ந்தனர். அருண்,"ஏய், சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே? உனக்கு பதிலா உன்னோட சீனியர் அவளை அட்டென்ட் பண்ணினா பெட்டெர் இல்லையா?" என்றதும் வினிதா, "மன நோய் மருத்துவத்துல பேஷன்ட்கூட அவங்க மன நிலைய புரிஞ்சுக்க நிறைய பேசணும். என்னோட சீனியர் ஒரு ஆம்பளை அவர விட எங்கிட்ட இந்தப் பொண்ணு ஃப்ரீயா பேசும் அதனால என் சீனியர் சொல்லித் தான் இங்க வந்தேன்" என்றவள்

 "அப்ப எப்படி கொஞ்ச நேரத்துக்கு முன்னால எந்த செடேட்டிவ் குடுக்கலாம்னு அத்தை யோசிச்சப்ப நீயே மருந்தெல்லாம் சஜ்ஜெஸ்ட் பண்ணுனே?" என்று குற்றம் சாட்டினான். வினிதா சிரித்து விட்டு "அருண் மாமா " என்று (அவனை எரிச்சல் மூட்ட அவள் அப்படித்தான் கூப்பிடுவாள்) தொடர்ந்து " நான் இங்க வர்றதுக்கு முனனாலயே டாக்டர் சந்த்ரசெகர் அங்கில் சஜ்ஜஸ்ட் பண்ணதுதான் அந்த மருந்து. நானும் என் சீனியர்கிட்ட கேட்டு கன்ஃபர்ம் பண்ணினேன். " என்று முடித்தாள்.

 "ம்ம்ம்ம் அப்ப இனிமேல் அவளுக்கு உன் ட்ரீட்மென்ட்தானா" என்ற கேட்ட அருணை கிண்டலாகப் பார்த்து "அந்த பொண்ணு மேல உங்களுக்கு ரொம்ப அக்கறை போல இருக்கு?" கேட்டதும் அவனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அதை சரிக் கட்டும் வகையில் "ஒரு ரெண்டு மூணு நாள்ல அவ உடம்பு ஓரளவு பழையபடி சரியாயிடும் அதுக்கு அப்பறம் தான் எங்க ட்ரீட்மென்ட்" என்றாள்.

 " பழைய படி ஆகணும்னா .. அவ இப்ப இருக்கற நிலைமைல சாப்பிடுவாளா? இல்ல ட்ரிப்ஸ் மட்டும் தான?" "நைட்டு அவளுக்கு இன்னொரு மருந்து கொடுப்பாங்கக .. அது நல்லா பசிக்க வெக்கும் ... தூக்கம் தெளிஞ்சதும் சாப்பிடக் கொடுத்தா அவளே சாப்பிட்டுக்குவா .. நான் இருப்பேன் கவலைப் படாதீங்க" என்று ஆறுதலளித்தாள். "சரி, அவளுக்கு என்ன ப்ராப்லம் ... எப்படி வந்திருக்கும் .. எப்படி குணப் படுத்துவீங்க .." என்று கேள்விகளை அடுக்கினான். "நீங்க கேட்ட மூணு கேள்விக்கு பதில் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தான் சொல்ல முடியும்" என்றபின் தொடர்ந்து "இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு அப்பறம் நாங்க," என்றபின்

அவனைப் பார்த்து சிரித்தபடி "அதாவது எங்க சீனியரும் நானும்" என்றவாறு, "அவளை எங்க சீனியரோட ஸ்பெஷாலிடி நர்ஸிங்க் ஹோமுக்கு ஷிஃப்ட் பண்ணப் போறோம் .. அங்க வெச்சுதான் அவளுக்கு ட்ரீட்மென்ட் .. இன் ஃபாக்ட் அம்மா உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க .. நீங்கதான் அவளுக்கு இப்ப கார்டியன் மாதிரியாமே?" "ம்ம்ம் .. You can assume so .. அப்பறம் உங்க ட்ரீட்மென்ட் செலவெல்லாம் நான் பாத்துக்கறேன் என்ன? நீ அம்மா கிட்ட ஒரு பைசா வாங்கக் கூடாது" "சரி, அதை அப்பறம் பாப்போம் .." என்றாள் "உங்க ட்ரீட்மென்ட்ன்னா? எந்த மாதிரி?"

 "அவ கடந்த காலத்துல நடந்த விஷயங்களால தான் அவ இந்த நிலமைக்கு வந்து இருக்கா .. அவளையே அவ கடந்த காலத்தை அலச வெச்சு புரிஞ்சுக்க வெக்கறதுதான் எங்க ட்ரீட்மென்ட். மொதல்ல எங்க சீனியர் அவளை ஹிப்னடைஸ் பண்ணி ஹிப்னாடிஸம் மூலமா அதிக பட்சம் மன வலியை கொடுக்கற விஷயங்களை தெரிஞ்சுகிட்டு அப்பறம் அவளுக்கு தகுந்த மாதிரி பேசி சகஜ நிலைக்கு கொண்டு வந்து அவளையே பாக்கிய சொல்ல வெச்சு அவளுக்கு நடந்தத புரிஞ்சுக்க வெப்போம் ..

இதுக்கு பேரு cognitive behavioral therapy" "அவளுக்கு என்ன ப்ராப்லம்னே உங்களுக்கு தெரியாதுன்னே. அப்பறம் எப்படி இந்த மாதி ட்ரீட்மென்ட்ன்னு உறுதியா சொல்றே" "கடந்த காலத்துல நடந்த சம்பவங்களால் வர்ற முக்காவாசி மன நோய்க்கு இந்த தெரபிதான் முதல் சாய்ஸ் .. கண்டிஷன் ரொம்ப சிவியரா இருந்தா முதல்ல மருந்து கொடுத்து மன பதட்டத்தைக் குறைச்சுட்டு அப்பறம் தெரபி ஆரம்பிப்போம் .. இவ கண்டிஷன் அப்படி சிவியர் இல்ல .. சோ, உடனோ தெரபி ஆரம்பிச்சுடுவோம்" என்றதும் "என்ன சொல்றே நீ? சிவியர் இல்லையா? பைத்தியம் பிடிச்ச மாதிரி பேசிகிட்டு இருந்தா .... " "பைத்தியம்னா என்னங்க அருண்? கோர்வையா யொசிக்காம இருக்கறதுக்கு பேர் தான் பைத்தியம் .. அவ இப்ப இருக்கற நிலமைல என்னைக் கேட்டா ரொம்ப கோர்வையா பேசினா .. அவ மனசுல எல்லாம் ஒரு ஃப்ளாஷ் பாக் மாதிரி ஓடிகிட்டு இருக்கு ..

உண்மையை சொல்லணும்ன அவ சீக்கரம் குணமாகறதுக்கு அது ஒரு அறிகுறி ..அதுமட்டும் இல்ல மூணு நாள் முன்னால அவ மென்டலி ஓரளவு ஸ்டேபிளா இருந்து இருக்கா. ஆறுமாசமாத்துக்கு முன்னாலதான் தொழிலுக்கு வந்திருக்கா .. சோ, அவளுக்கு ஆறுமாசமாத்துலதான் இந்த மன நோய் வந்து இருக்கணும். இதையெல்லாம் வெச்சுத்தான் சிவியர் இல்லைன்னு சொல்றேன் .. " ஆதங்கத்தைக் கட்டுப் படுத்தமுடியாமல், "ஆர் யூ ஷ்யூர்? ரேவதி பூர்ண குணமாயிடுவா இல்ல?"


"நிச்சயம் .. எங்க ட்ரீட்மென்ட் ஆரமிச்சு ஒரு வாரத்தில அவளை ஓரளவு நார்மல் கண்டிஷனுக்கு கொண்டாந்திடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு .. அதுக்கு அப்பறம் she should get back to non-stressful day-to-day life (அவளை மன அழுத்தம் தராத அன்றாட வாழ்க்கையில ஈடுபடுத்தணும்) அவ கேஸ்ல ..

இதுக்கு முன்னால காலேஜ் போயிட்டு இருந்ததால .. அவ இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சு காலேஜ் போக ஆரம்பிக்கட்டும் .. அதுக்கப்பறமும் வாரத்துக்கு ஒண்ணு அல்லது ரெண்டு சிட்டிங்கோட எங்க ட்ரீட்மென்ட் தொடரும் .. " தன் உடனிருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், அருண் அடுத்த சில நாட்களை எதற்கு வீணாக்குவதென்று ஹொட்டல் ரூமை காலி செய்து அடையார் ஃப்ளாட்டிற்கு குடியேறிய பின் கோவை புறப்பட்டான். பெரியப்பா சித்தப்பாவிடம் சமரசமாகப் பேசி பிஸினஸ்ஸில் எந்த வகையில் தான் உதவ முடியும் என்று அறிந்து கொண்டான்.

அத்தை சொன்னது போல் புதிதாக சில வெளி நாட்டு கான்ட்ராக்டுகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் சில கான்ட்ராக்ட்டுகளை புதிப்பித்தல் .. மற்றும் .. எப்போதும் தபால் அல்லது டெலெக்ஸ் என்று வெளியுலகத்துடன் தொடர்பு கொண்டிருந்த நிறுவனத்திற்கு ஒரு வலைதளம் அமைத்து அதில் விசாரிப்பவர்களுக்கு வியாபார ரீதியான விவரங்கள் தருவது ..

எல்லோருக்கும் மின்னஞ்சல் விலாசம் அமைத்து எல்லோரையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளக் கற்றுக் கொடுப்பது போன்ற வேலைகளை முதலில் எடுத்துக் கொள்ள சம்மதித்தான். அவனது பெரியப்பா சித்தப்பவுக்கு இவன் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்த தலை கால் புரியாத மகிழ்ச்சியில் சென்னையிலிருந்தே அவன் ஏற்ற பொருப்புக்களை கவனித்து தேவையான் போது மட்டும் கோவை செல்வது என்ற முடிவுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

பிறகு வியாபாரத்தின் தற்போதைய நிலவரம், அவர்கள் டீல் செய்யும் மெஷினரீஸ், சப்ளையர்ஸ், கஸ்டமர்ஸ் இவைகளைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள தன் மிச்ச நேரத்தை ஒதுக்கினான். அவ்வப்போது வினிதா அவனிடம் ஃபோனில் தொடர்பு கொண்டு ரேவதி அவள் எதிர்பார்த்தபடி குணமாகி வருவதை அறிவித்தாள். நினைத்த வேலைகள் அனைத்தையும் முடித்து பத்தாம் நாள்தான் சென்னைக்கு திரும்ப முடிந்தது.


புறப்படும் தினத்தன்று கோவையிலிருந்தே வினிதாவிடம் தொடர்ப்பு கொள்ள "நிறைய ப்ரோக்ரெஸ் அருண் மாமா" என்றவளை "கடுப்பேத்தாதே .. என்னன்னு சொல்லு .. " "இப்ப ஏறகுறைய பழைய ரேவதி ஆயிட்டா .. அவங்க அம்மா சாகறதுக்கு முன்னால இருந்ததைவிட இப்ப அவ மன நிலை பெட்டரா இருக்கு ..

அடுத்த சில நாளில அவ காலேஜ் போக ஆரம்பிக்கணும் .. கூடவே உங்க உதவியோட அவ ட்ரீட்மென்டையும் தொடரணும் .. " "என்னது? என் உதவியா?" "நான் சாயங்காலம் விவரமா சொல்றேன்" என்றாள் "எங்க உன்ன பாக்கறது வீட்டுலயா? " என்றதற்கு "சரி ஒரு ஆறு மணி வாக்குல வர்றீங்களா? வீட்டுலயே டின்னர் முடிச்சுட்டு நேரமாச்சுன்னா ஸ்டே பண்ணிட்டு போலானம்னு அம்மா சொல்லச் சொன்னாங்க." என்றவளிடம்

 "சரி, இப்ப ரேவதி எங்க இருக்கா? நான் அவளைப் பாக்கலாமா?" "நீங்க அவளைப் பாக்கறதுக்கு முன்னால நம்ம டிஸ்கஸ் பண்ணனும் .. ஏன்னா இனிமேல் அவளுக்கு கொடுக்க போற ட்ரீட்மென்டுல நீங்களும் கலந்துக்கணும்.. அதைப் பத்தி நீங்க முழுசா தெரிஞ்சுகிட்டதக்கு அப்பறம் அவளை மீட் பண்ணறது பெட்டர்" என்று புதிர் போட்டாள்.

 "என்ன சொல்றே நான் கலந்துக்கணுமா?" என்றவனிடம் .. "ஆமா .. எங்களாலயே நம்ப முடியல மொதல்ல .. சாயங்காலம் விவரமா சொல்றேன்" என்றவாறு அவன் குழப்பத்தை அதிகரித்து விடை பெற்றாள். மாலை அவன் அத்தையின் வீட்டை அடைந்ததும் வினிதா "வாங்க, அப்பா அம்மா வர இன்னும் ஒரு மணி நேரமாவுது ஆகும் .. நம்ம மொட்ட மாடிக்கு போய் பேசிட்டு இருக்கலாம்" என்றவாறு அவனை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு இருந்த அழகான ரூஃப் கார்டனில் போட்டிருந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்தபின் சொல்லத் தொடங்கினாள்.


"ரேவதிக்கு ரெண்டு வித மனநோய் இருக்கு அருண். ஓண்ணு PTSDன்னு ஷார்டா சொல்ற Post Traumatic Stress Disorder அடுத்தது Dissociative Disorder ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணு தொடர்புடையது .. " "ஏய், இந்த PTSD ஆக்ஸிடன்டல சிக்குனவங்க அப்பறம் கற்பழிக்கப் பட்ட பெண்களுக்கு வர்றது தானே?"

 "PSTD மனதுக்கும் உடலுக்கும் அதிக பட்சமா வலிக்கற எந்த சம்பவத்துல இருந்து மீண்டாலும் வரும். அது ஒரு சம்பவமா இருக்கணும்னு இல்ல மறுபடியும் மறுபடியும் ஒரு வெறுக்கத் தக்க சூழலில் இருக்க வேண்டியிருந்தாலும் வரும் .. " "இந்த ரெண்டு நோயினால அவளுக்கு என்ன ஆகும் .. " "யூ மீன் ட்ரீட்மென்ட் குடுக்காம விட்டாலா?" என்று கேட்டபின் "இது ரெண்டும் சேத்துப் பாத்தா லேசான பைத்தியம்னு சொல்லலாம். அன்னைக்கு ஆன மாதிரி வெறிபிடிச்ச மாதிரி நடந்துக்கறது ..

அப்பறம் பிரமை பிடிச்ச மாதிரி இருப்பாங்க .. சாப்பட மாட்டாங்க .. ஒவ்வொரு சமயத்துல சிலர் வேற ஏதாவுது விதத்துல மன அமைதியை தேடி போதைப் பொருளுக்கு அடிமை ஆகறது .. இப்படி நிறைய பின் விளைவுகள் ஏற்படலாம். முக்கியமா ட்ரீட் பண்ணாட்டி நிச்சயம நார்மல் லைஃபுக்கு திரும்பவே மாட்டாங்க" "ம்ம்ம் ... அவளுக்கு எப்படி PTSD வந்துது?"

 "ரேவதியோட கடந்த காலத்தைப் பத்தி தெரிஞ்சா உங்களுக்கே தன்னப் போல புரியும் .. ." என்று புதிர் போட்ட் பின் "ஆக்சுவலா, இதெல்லாம் டாக்டர் பேஷன்ட் ரிலேஷன்ஷிப்ல மத்தவங்க கிட்ட பேசக்கூடாது .. நீங்க இப்ப அவளுக்கு கார்டியனா இருக்கறதாலயும் உங்க உதவி இந்த ட்ரீட்மென்டுக்கு தேவைப் படறதாலயும் தான் சொல்றென்... "

 "அப்ப அத்தை கிட்டகூட சொல்லலையா" "நான் இப்ப் சொல்லப் போற எல்லா விவரமும் சொல்லல .. உங்க உதவி தேவை அது எதனால்ங்கறதை மட்டும் சொல்லி இருக்கேன்" "ம்ம்ம்ம் .. சொல்லு" "ரேவதி சின்ன வயசில இருந்து நல்லா படிச்சு இருக்கா .. அவளொட அம்மா அவளை கான்வென்ட் ஸ்கூல்ல சேத்தி படிக்க வெச்சு இருக்காங்க .. அவளொட அம்மாவுக்கு அவ மேலயும் அவளுக்கு அம்மா மேலயும் ரொம்ப நெருக்கம் இருந்து இருக்கு ..

இருந்தாலும் சின்னக் கொழந்தைல இருந்து யாராவுது ஒரு வேலைக்காரி பொறுப்பில நிறைய ராத்திரி தனியா படுத்து தூங்க வேண்டி இருந்திருக்கு ... அப்பெல்லாம் தனிமையை, பயத்தை போக்கறதுக்கு அவ மனசுல நிறைய ரம்யமா எதாவுது கற்பனை செஞ்சுக்குவா ..ஒரு விததில எந்த ஒரு விஷயத்தையும் சீக்கரம் புரிஞ்சுக்கறதுக்கும் அவ நல்லா படிக்கறதுக்கும் அவளோட கற்பனா சக்திதான் காரணம் ..

அஞ்சாவுது படிக்கும் போதே அவளுக்கு அவளோட அம்மா எப்படி பணம் சம்பாதிக்கறாங்கன்னு தெரிஞ்சு இருக்குன்னா பாத்துக்குங்களேன் .. " என்றவள் அருணின் முகம் சென்ற கோணலைக் கண்டு நிறுத்தினாள். மனதுக்குள், 'என்னெல்லாம் கஷ்டப் பட்டு இருக்கே .. ' என்று நினைத்தவாறு "ப்ளீஸ் கண்டின்யூ.." என்றான். "அவங்க அம்மா தொழில் பண்றதுல வந்த இன்ஃபீரியாரிடு காம்ப்லெக்ஸ்னால அவளுக்கு க்லோஸ் ஃப்ரெண்ட்ஸுன்னு யாருமே கிடையாது ..

ஆனா அவளுக்கு எல்லர்கூடயும் பேசி பழகணும்னு ரொம்ப ஆசை. அவளொட ரொம்ப ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்டுன்னா அவங்க அம்மாதான். முதல் தடவை வந்த கேன்ஸர்ல சேமிப்பு எல்லாம் செலவாகி கையில நாப்பதாயிரத்துக்கு மேல இருக்கும் போது தான் அவங்களுக்கு ரெண்டாவது இடத்துல வந்துருக்கு .. அவங்க அம்மா தன்னை எதாவுது ஒரு ஆசிரமத்துலயோ அனாதை விடுதிலயோ சேத்திட்டு ஹாஸ்டல்ல சேந்து படிப்ப முடிக்க சொல்லியிருக்காங்க ..

இவ ஒத்துக்க்ல .. பார்ட்-டைம் வேல கெடச்சுடும்ங்கற நம்பிக்கைல மறுபடி ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ண சொல்லியிருக்கா .. கொஞ்ச நாள்லயே பார்ட்-டைம் வேலை ஒண்ணும் கெடைக்காது .. கெடச்சாலும் அவ எதிர்பாத்த அளவுக்கு சம்பாதிக்க முடியாதுன்னு அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி .. ஆபரேஷன் முடிஞ்சு அடுத்து ட்ரீட்மென்டுக்கெல்லாம் நிறைய பணம் தேவைப் பட்டு இருக்கு .. முருகெசன் கிட்டயே கடன் வாங்கியிருக்கா ..

அவன் தான் தொழில் பண்ணினா ஈஸியா சமாளிச்சுடலாங்கற ஐடியாவை கொடுத்து இருக்கான் ... படிப்பையும் நிறுத்த வேண்டாம்னு சொல்லியிருக்கான் ... தொழில்ல இறங்கருதுக்கு முன்னால அவ அம்மாகிட்ட சொல்லி ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை வந்திருக்கு .. எப்படியோ அவளொட அம்மாவை கன்வின்ஸ் பண்ணியிருக்கா .. "

 "இதெல்லாம் எனக்கு ஓரளவு தெரிஞ்சதுதான்" "அவளோட மன நிலை பாதிப்பு இதுக்கு அப்பறம்தான .. தொழில் பண்ணறதுன்னா என்னன்னு தெரிஞ்சவளுக்கு மத்தபடி வயசுப் பொண்ணுங்களுக்கு இருக்கற காம இச்சை அவளுக்கு ரொம்ப கம்மி .. ஒரு விதத்தில வெறுப்புன்னு கூட சொல்லலாம் ... தொழில்ல இறங்குன மொதல் நாள்ல இருந்து ஒவ்வொரு நாளும் நரக வேதனை ...

மொத மொதல்ல செக்ஸ்ல கலந்துக்கும் போது எந்த பொண்ணுக்கும் வர்ற வலில இருந்து உடல் ரீதியான வலி ஒவ்வொண்ணும் சின்ன சின்ன மன அழுத்தத்தை (stress) உண்டாக்கி இருக்கு .. சில சமயங்கள்ல கொஞ்சம் அதிகமாவே கஷ்டப் பட்டு இருக்கா .. சாதாரணமான உடலுறவுலயே அருவருப்பு இந்தவளுக்கு .. falatio .. blow-job தெரியும்ல ?" என்று அவன் கண்களைத் தவிர்த்து பெண் ஆணுருப்பை வாயில் எடுத்து இன்பமளிப்பதை குறிப்பிட்டாள்

 அருண் "ம்ம்ம் .." என்றதும் "அப்படி கஸ்டமர் பண்ண சொன்ன அன்னைக்கு வீட்டுக்கு வந்து ராத்திரி முழுக்க வாந்தியெடுத்து இருக்கா .. கஸ்டமர் பின்னால இருந்து சாதாரண செக்ஸ் பண்ணுனதையே ரொம்ப கேவலமா நினைச்சவளுக்கு ஒரு கஸ்டமர் பலவந்தமா அவளை anal sex (ஆசனவாயில் புணர்வது) பண்ணியிருக்கான் ..எந்த பெண்ணுக்கும் முதல்ல ரொம்ப வலிக்கற ஒரு விஷயம் அது, உடம்புல அப்ப அவளுக்கு வந்த வலியை வேற வழியில்லாம வாயை மூடி பொறுத்துகிட்டது ரொம்ப பெரிய ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கி இருக்கு .. அதுக்கு அப்பறம் அவ மொதல்லயே கஸ்டமர்ஸ்கிட்ட ஒத்துக்க மாட்டேன்னு சொல்லியும் மறுபடி சில சமயம் அது நடந்து இருக்கு ... இவ்வளவு நாளும் எதுனனாலும் அம்மா கூட ஒளிவு மறைவில்லாம சொல்லிட்டு இருந்தவ தான் படற கஷ்டத்தை சொல்லல... மனசுக்குள்ளயே பொதச்சு வெச்சுறுக்கா ..

இந்த மாதிரி உடல் ரீதியான வலிகள் .. அப்பறம் பிடிக்காத விஷ்யங்கள்ல வேற வழியில்லாம ஈடுபடறது ... தொடர்ந்து படிப்பு தடைபடறது .. இதெல்லாம் தான் அவளுக்கு PTSDக்கு காரணம்" மனக் கொந்தளிப்பில் அருண் " கிவ் மீ அ மினிட் .. ம்ம்ம் எனக்கு ஒரு காஃபி வேணும் தர்றயா?" என்றவாறு அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து வேகமாக டாய்லட்டை அடைந்து அங்கு இருந்த வாஷ் பேசினுக்கு இருபுறமும் கையூன்றி குமுறிக் குமுறி அழுதான் ..

பிறகு குழாயைத் திறந்து கை நிறைய நீரை பிடித்து முகத்தில் வேகமாக தெளித்துக் கொண்டான் .. அறைந்து கொண்டான் என்றும் சொல்லலாம். திரும்பி வருவதற்குள் வினிதா கொண்டு வந்திருந்த காஃபியை எடுத்து "தேங்க்ஸ் .. ஐ டெஸ்பரேட்லி நீடட் இட் .. ம்ம்ம் ப்லீஸ் கண்டின்யூ" என்றவாறு அருந்தினான். "வர்ற கஸ்டமர் சந்தோஷமா இருந்தாதான் டிமாண்ட் இருக்கும் ப்ரோக்கர்களும் வைச்ச ரேட்டுக்கு ஒத்துக்குவாங்க அப்படீங்கறது ..

அது அவங்க அம்மாவோ முருகேசனோ சொல்லியிருக்காங்க .. அதுவும் அவ மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு .. படிப்பில எதையும் ஒரு சாலஞ்சா எடுத்து பழக்கப் பட்டவளுக்கு இதையும் ஒரு சாலஞ்சா எடுத்துகிட்டா ஆனா அதேசமயம் எப்படியாவுது மனசுல இருந்த அழுத்தத்தை குறைச்சுக்க தன் ஒடம்புக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லைன்னு நெனைச்சுகிட்டு கஸ்டமரோட மேலோட்டமா சிரிச்சு செக்ஸுல கலந்துகிட்டா.

அதனால தான் அவளுக்கு இருக்கற அடுத்த கோளாறு. its called Dissociative Disorder இது ஒரு விதத்துல நிறைய சினிமால எல்லாம் வந்திருக்கே Multiple-Personality Disorder அது மாதிரி " என்று நிறுத்தியவள் "யூ மீன் .. ஒரு ஆள் சில சமயம் தூக்கத்தில இருக்கறதா நினைச்சுகிட்டு வேற ஒருத்தர் மாதிரி நடந்துக்கறது .. " "ம்ம்ம் கிட்ட தட்ட அப்படித்தான் ... ஒரே உடம்புக்குள்ள ரெண்டு பேர் இருக்கற மாதிரி ..

ஆனா ரேவதிக்கு இருக்கறது அவ்வளவு சீரியஸானது இல்லை .. அவ உடம்பு அந்த தொழிலுக்கு கொஞ்சம் கொஞ்சமா அட்ஜஸ்ட் ஆக ஆக தொழில் பண்ணாத மத்த நேரத்தை அவ மன வலியில்லாம கழிக்க முடிஞ்சுது .. "உடல் ரீதியா பழக்கமாயிட்டுச்சுன்னா? அவ உடம்பு செக்ஸுல முழுசா ஈடுபடுமா .. ?" "பொம்பளைங்க மனசுல முழுசா ஈடு படாமயே செக்ஸுல கலந்துக்க முடியும் .. எப்பவும் இருக்கற லூப்ரிகேஷன்கூட உடம்புல செக்ஸ் பண்ணும் போது தன்னைப் போல லூப்ரிகேஷன் கொஞ்சம் அதிகம் ஆகும் ..

கூடவே காண்டம் உபயோகிச்சா ஒரு வலியும் தெரியாது .. ஒவ்வொரு சமயம் அவங்க மன நிலையைப் பொருத்து அவங்களுக்கு அவங்களையும் மீறி ஆர்காஸம் அப்படின்னு சொல்ற உச்சமும் வரும் .. இன் ஃபாக்ட் ரேவதி கேஸ்ல அவளுக்கு மொதல்ல அந்த மாதிரி ஆர்காஸம் வரவேயில்ல ..ஒவ்வொரு சமயம் சில கஸ்டமருங்க அவளை ரொம்ப மென்மையா ஹாண்டில் பண்ணினப்ப அவளுக்கு தன்னைப் போல ஆர்காஸம் வந்து இருக்கு .. அதை அவ இயற்கைன்னு எடுத்துக்கல .. வெறுத்து இருக்கா ..

அதுக்கும் ரொம்ப கவலைப் பட்டிருக்கா .. அதுக்கும் அவ ஒரு மருந்த தேடிகிட்டா .. அது தான் நீங்க " "நானா .. என்ன சொல்றே ..." "எங்க சீனியர் ஒரு ஜீனியஸ் தெரியுமா? அவளுக்கு ட்ரீட்மென்ட் தொடங்கினதுல இருந்து நாங்க அவ அனுபவிச்ச வெவ்வேறு கஷ்டமான சூழல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துட்டு இருந்தோம். இப்படி ட்ரீட் பண்ணிட்டு இருக்கும் போது சில விஷயங்கள் முரண்பாடாத் தெரிஞ்சுது ... ஒவ்வொரு சமயம் செக்ஸ் பண்ணும் போதும் அதிகரிச்சு இருக்க வேண்டிய அவளோட மன அழுத்தம் ஒரு மூணு மாசமா தொழில் பண்ணறதால் துளி கூட அதிகம் ஆகலே.

அம்மாவோட உடம்பு கண்டிஷனும் அப்ப ரொம்ப எல்லாம் நல்லா இருந்துன்னு சொல்ல முடியாது .. படிப்பிலயும் அதிக கவனம் செலுத்த முடியாத நிலைமை.. அப்படி இருந்தும் அவ தொழிலுக்கு போயிட்டு வந்தா முன்ன மாதிரி ரொம்ப கஷ்டப் படல .. ஓரளவு சகஜமாவே இருந்த மாதிரி எங்களுக்கு பட்டுது .." "ஏய் வினி, நீங்க என்ன அவ மனசத் தொறந்து சினிமா பாத்தமாதிரி பேசறே?" "அமாம்... கிட்ட தட்ட அப்படித்தான் .. நான் ஏற்கனவே சொன்னேனே ..

முதல்ல ஹிப்னடைஸ் பண்ணி சில முக்கியமான விஷயங்கள தெரிஞ்சுட்டு அவளை சகஜ நிலைக்கு கொண்டுவந்து அதைப் பத்தி பேச்சுக் கொடுத்து மேலும் விவரங்களை அவ மூலமாவே சொல்ல வெச்சு அவ கடந்த காலத்தை கோர்வையா புரிஞ்சுக்க வெக்கறதுன்னு" என்றபடி தொடர்ந்தாள், "ஒரு நாலு அஞ்சு மாசத்துக்கு முன்னால அதாவது அவ தொழில்ல இறங்கி ஒண்ணு ரெண்ணு மாசம் கழிச்சு என்ன நடந்துதுன்னு அலசினோம் .. அப்பதான் ஒரு கஸ்டமர் அவளை ரொம்ப மென்மையா ஹாண்டில் பண்ணியிருக்கான் .. அன்னைக்கு அவளுக்கு ஆர்காஸம் வந்ததுக்கு ரொம்ப வருத்தப் பட்டு இருக்கா .. அவளோட வார்த்தையிலேயே சொல்லணும்னா ...

'எனக்கு புடிச்ச ஒருத்தங்கூட மனசார கிடைக்க வேண்டிய அந்த சுகம் .. முன்ன பின்ன தெரியாதவன் கூட வருதே'.. அதுக்கப்பறம் அந்த மாதிரி நடந்தா அவ மனசுக்குள்ள தன்னோட காதலன் கூட இருக்கற மாதிரி நினைச்சுகிட்டா .. அப்ப ஒரு நாள் காலேஜ் லாபில நெட்டை ப்ரௌஸ் பண்ணிட்டு இருந்தப்ப உங்க கம்பெனி வெப்-சைட்டை பாத்து இருக்கா .. "

"என் கம்பெனி வெப்-சைட்டா" என்று அருண் தன் ஆச்சர்யத்தை அடக்க முடியாமல் இடைமறித்த பிறகு தனக்குள் "ஹே, என்னோட விடியோகூட அதுல இருக்குதே .. பாத்தாளா" என்று கேட்க

 "ம்ம்ம்ம் .. ஆமா .. இருங்க முழுசா சொல்லறேன் .. அனா அருண், இந்த மாதிரி கோ-இன்ஸிடென்ஸைத்தான் கடவுள் செயல்ன்னு சொல்றது .. " என்றவாறு தொடர்ந்து

"அந்த வெப்-சைட்டில இருந்த வீடியோவை பாத்து உங்க மேல் ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டா .. அதுக்கு அப்பறம் அவ தொழில் ப்ண்ணும்போது அவ காதலனோட இருக்கற மாதிரி நினைக்கும் போதெல்லாம் உங்க முகம் மனசுல தோணியிருக்கு .. உங்களையே அவ கற்பனைக் காதலனா ஸ்வீகரிச்சுகிட்டா ..." கல்லாய் உறைந்து இருந்தான் ..

கடந்த இரண்டு வாரங்களாக அவள் த்ன்னை காதலிக்கிறாள் என்று யூகித்து வந்தவனுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் அவள் தன்னை கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வருகிறாள் என்பதை அறிந்து திக்கு முக்காடி நின்றான் .. பின்பு நடந்தவைகளை நினைத்துப் பார்த்து .. "கடைசில எங்கூடவே ... " என்று நாக்கைக் கடிக்க ..

 "ம்ம்ம் தெரியும் .. நீங்களே அவளுக்கு ஒரு கஸ்டமரா வந்து இருக்கீங்க ..." "சரி, இன்னும் அவளுக்கு என்ன ட்ரீட்மென்ட் .. நான் என்ன செய்யணும்?" என்றவனைக் கூர்ந்து நோக்கி, "அவளே இப்ப ஓரளவு உணர்ந்து இருக்கா ... இருந்தாலும் .. நீங்க அவளுக்கு அவ காதல் வெறும் கற்பனை .. நிஜமில்லைன்னு தெளிவு படுத்தணும் ..

" அவளே இப்ப ஓரளவு உணர்ந்து இருக்கா ... இருந்தாலும் .. நீங்க அவளுக்கு அவ காதல் வெறும் கற்பனை .. நிஜமில்லைன்னு தெளிவு படுத்தணும் .. " அருணுக்கு அவள் சொன்ன வார்த்தைகள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல் விழுந்தன. "என்ன அருண்? ஒரு பதிலும் இல்லே?" "ம்ம்ம்? எதுக்குன்னு யோசிச்சுட்டு இருந்தேன்?"

 "எதுக்கா? அப்ப நிஜ வாழ்க்கையிலும் உங்களை காதலனா நெனைச்சுக்க சொல்றீங்கள?" சிறிது நேர மௌனத்திற்கு பிறகு

 "வெறுமெ நினைச்சுக்க சொல்லலே வினி, அவ நிஜமாவே என்னை காதலிக்கட்டுமே?" பல கணங்கள் வினிதா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தாள். பிறகு, "இது அவளுக்கு வாழ்வு குடுக்கணும்னு எடுத்த முடிவா?" என்றாள் "இல்ல வினி, நானும் அவளை காதலிக்கறேன். சரியான சமயம் வரும் போது உங்க எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு இருந்தேன்" சற்று ஏளனமாக சிரித்து,

 "என்ன அருண் மாமா? கண்டதும் காதல் மாதிரி இது ..." என்ற ஆரம்பித்தவள் அருணின் முகத்தில் தோன்றிய இறுக்கத்தை கண்டு பயந்து பாதியில் நிறுத்த அவளிடம் அருண் "இதுக்கு நான் உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல .. இருந்தாலும் .. கண்டதும் காதலுன்னோ இல்ல படுத்ததும் காதலுன்னோ எப்படி வேனும்ன்னாலும் நீ வெச்சுக்கலாம் .. எனக்கு கவலை இல்லை .. (I dont have to answer you .. still, why not .. its love at first sight .. or first night as you prefer to take it ...I care my foot)" என்றதும் வாயடைத்துப் போனாள் ...

இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர் .. தீவிர யோசனைக்கு பின் அம்மௌனத்தை அகற்றியவாறு வினிதா "அவளுக்கு ட்ரீட்மென்ட் தொடரணும் .. அதுல உங்களுக்கு எதாவுது சந்தேகம் இருக்கா?" என்று அருணை தன் வழிக்கு கொண்டு வரும் தர்க்கங்களை தொடங்கினாள் "நாட் அட் ஆல்! நிச்சயம் அவளை பழைய நிலைக்கு கொண்டு வரணும் ..."

 


"பழைய நிலைன்ன எது? அவ தொழில் பண்ண வரதுக்கு முன்னால இருந்த மாதிரிதானே? "ம்ம்ம்" "அப்பொ, நீங்க அவ வாழ்கையில் இல்ல அருண் ... அப்படியே நீங்க அவளுக்கு வாழ்வு ... சாரி ... அவளை காதலிக்கறதா இருந்தாலும் .. அவளுக்கு உங்க மேல எப்ப காதல் வந்துதுன்னு யோசிச்சு பாத்தீங்களா?" "என்ன, அவ மைண்டை ரீவைண்ட் பண்ணப் போறீங்களா?" என்று அருண் ஏளனமாகக் கேட்டான்.

இம்முறை அருண் வாயடைத்துப் போகும்படி வினிதாவின் முகத்தில் கோபக் கனல் தெறித்தது .. "உங்களுக்கு புரியலைன்னா பரவாயில்லை அதுக்காக நாங்க மெனக்கெட்டு நேரம் செலவழிக்கறதை கேவலப் படுத்தாதீங்க ..." பிறகு தொடந்து "லிஸ்ஸன் .. இந்த ட்ரீட்மென்டோட குறிக்கோள் அவ மனசை தெளிவு படுத்தறதுதான் .. அதுக்கு ரீவைண்ட் பண்ணற மாதிரிதான் அவளை யோசிக்க வெக்கணும் .. அப்படி யோசிக்க வெக்கும் போது .. அவ கற்பனைன்னு நெனெச்சுட்டு இருக்கற ஒரு காதலன் நிஜமா வந்த ஒரு தற்செயல் நிகழ்ச்சின்னு புரிய வெக்கலாம் ...

ஏறக்குறைய நாங்க அவளுக்கு புரிய வெச்சாச்சு ... ஆனா அவனும் அவளைக் காதலிக்கறான் அப்படின்னா அது தற்செயலையும் தாண்டி ... லாட்டரில பரிசு விழற மாதிரி .. அவ இருக்கற மன நிலைல அவளை குழப்பக் கூடாது .. இப்போதைக்கு அவளுக்கு நீங்க உதவி பண்ணினது, அவ படிப்புக்காக பண்ணப் போறது எல்லாம் தெளிவா இருக்கு. அவளே இது ஒரு தெய்வச் செயல்னு நம்பறா. உங்க மேல அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வெச்சு இருக்கா .. உண்மையா சொல்லணும்னா ..

அவகூட படுத்த கஸ்டமர்ன்னு அவ உங்களை கேவலமா பாக்கல .. " "கூடப் படுத்த கஸ்டமர்னா கேவலமா பாப்பாளா? அவங்கள சந்தோஷப் படுத்தறத ஒரு சாலஞ்சா எடுத்துகிட்டான்னு சொன்னே?" "சாலஞ்சா எடுத்துகிட்டது அவ தொழில்ல வெற்றி அடையறதுக்காக .. ஆனா அவளுக்கு அவகிட்ட வர்ற கஸ்டமர்ஸ்ஸைப் பத்தி எப்பவும் நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்ல, அவ வார்த்தையிலேயே சொல்லணும்னா , 'தெனவு எடுத்து திரியறவனுக'" என்றாள் ... அருண் சில கணங்கள் தன்னை வெறுத்தான் .. குழம்பினான் .. "வினி, இதை உங்கிட்ட சொல்லியே ஆகணும் ..

அவ எங்கிட்ட அன்னைக்கு ராத்திரி அந்த மாதிரி நடந்துக்கல .. உண்மையா காதலிக்கற மாதிரிதான் நடந்து கிட்டா .. " "அவளே எங்கிட்ட சொன்னா .. அன்னைக்கு ராத்திரியைப் பத்தி தீர்க்கமா அலசியாச்சு .. முதல்ல அவ உங்களைப் பாத்ததும் அவ மனசுல உங்களைப் பத்தி கட்டி வெச்சு இருந்த கோட்டையெல்லாம் ஒடையப் போகுதோன்னு பயந்து இருக்கா ..."

 "அப்படீன்னா?"

 "ஒரு கட்டத்துக்கு அப்பறம், அவ கஸ்டமர்ஸ்கூட செக்ஸ்ல கலந்துக்கும் போது, கூடப் படுக்கறது நீங்கதான்னும் நீங்க அவளை மென்மையா ஹாண்டில் பண்ணறதாவும் மனசுக்குள்ள நினைச்சுக்க ஆரம்பிச்சா .. அதனால அவளுக்கு மனசுக்குள்ள இருந்த பாரமும் தன் மேலேயே வந்த அருவறுப்பும் குறைஞ்சுது .. இது ஒரு போதைப் பொருளுக்கு அடிமையாகற மாதிரி .. " என்றவள் தொடர்ந்து "அப்படி இருக்கும் போது நீங்களே அவ முன்னால வந்து நின்னதும் எங்க நீங்க அவளுக்கு பிடிக்காத விஷயங்களைப் பண்ணச் சொல்லுவீங்களோன்னு பயந்தா ..

அப்படி நீங்க சொல்லி இருந்தா .. அவ உங்களைப் பத்தி நினைச்சதெல்லாம் பொய்ன்னு ஆயிடும் இல்லயா? ஆனா நீங்க அவளை ரொம்ப மென்மையா ஹாண்டில் பண்ணி இருக்கீங்க .. இன்னும் சொல்லப் போனா அவ மனசுல கற்பனை பண்ணின மாதிரி ஹாண்டில் பண்ணி இருக்கீங்க " என்று வினி சொல்ல சொல்ல 'இதுவும் தெய்வச் செயலா?' என்று அருணின் மனம் வினவியது .. அவன் சிந்தனையை படித்தவள் போல் வினிதா சற்று நிறுத்தியதும் அருண் "ம்ம்ம் அப்பறம்?" என்று அவளை தொடரப் பணித்தான். "அப்படி நீங்க ஹாண்டில் பண்ணினதும் .. அவளுக்கு இத்தனை நாள் கற்பனை பண்ணுனது நிஜமா நடந்து கிட்டு இருக்கு ஆனா நீங்களும் அவளுக்கு ஒரு கஸ்டமராதான வந்து இருந்தீங்க? அடுத்த நாள் எப்படியும் எவன் கூடயாவுது படுக்கணும் ... she wanted to cherish those moments and hold them in her memories for the days of hardship to come ..so (அப்படி நடக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவ இனி வர்ற நாளெல்லாம் மனசுல இருக்கணும்னு) அவ உங்ககூட முழு மனசோட செக்ஸுல கலந்துகிட்டா ...

 இந்த மாதிரி நடந்துக்கறத நாங்க நிறைய பேர்கிட்ட கவனிச்சு இருக்கோம் .. அவங்களுக்கெல்லாம் ரேவதி மாதிரி கற்பனைக் காதலன் இல்ல ஆனா அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கற கஸ்டமர் யாரையவுது மனசால காதலிப்பாங்க .. அவங்க கூட இருக்கறது அவங்களுக்கு ஒரு emotional outlet. ஆர்வமா செக்ஸுல அவங்ககூட கலந்துக்குவாங்க" "ரேவதி விஷயத்துல அன்னைக்கு நிறைய தற்செயல் நிகழ்ச்சிகள் ஓண்ணா வந்து இருக்கு .. அவங்க அம்மா சிரியஸ்னு ஃபோன் வந்த அந்த நிமிஷத்துல உங்களை சுத்தமா மறந்துட்டா ..

அதுக்கப்பறம் நீங்க அவளுக்கு உதவினப்பத்தான் அவளுக்கு உங்ககிட்ட ஒரு நெருக்கம் வந்து இருக்கு .... உடல் ரீதியான நெருக்கம் இல்ல .. ஒரு நல்ல ஃப்ரெண்ட் கூட துணைக்கு இருக்கற மாதிரி ஃபீல் பண்ணி இருக்கா .. ஆக மொத்தம் அவ மனசுல நீங்க ஒரு கற்பனைக் காதலனா அவதாரம் எடுத்து கொஞ்ச நேரம் நிஜக் காதலனாவே இருந்து அதுக்கு அப்பறம் ஒரு நல்ல நண்பனா இருந்து இருக்கீங்க. அடுத்து வந்த அவ அம்மாவோட சாவு அவங்க உயிர் போன அந்த கடைசி சில மணி நேரங்கள் அவ மனசுல ஒரு பிரளயமே வந்து இருக்கு .. ஒரு பெரிய குழப்பத்தை உண்டாக்கியிருக்கு .. அதன் விளைவுகளைத்தான் பாத்தீங்க இல்ல?

இப்ப அவ மனசல மறுபடியும் நீங்க ஒரு நண்பனா இருக்கீங்க .. இன்னும் ஒண்ணு நீங்க புரிஞ்சுக்கணும் .. உங்கமேல அவளுக்கு இருந்த காதல் முழுக்க முழுக்க செக்ஸ் சம்பத்த்ப் பட்டது .. எந்த அளவுக்கு அவ காதல் மனசால காதலிக்கற ஒரு platonic love அப்படின்னு சொல்ல முடியாது.." என்றவள் சிறிது நிறுத்தி "ஒரு வருஷத்துக்கு முன்னாடி வசந்த்ன்னு ஒருத்தனை ரேவதி காதலிச்சு இருக்கா. ரேவதிக்கு ரெண்டு வருஷம் சீனியர். அவனோட சென்ட் ஆஃப் பார்டியப்ப அவன் ஃபிரெண்ட் ஒருத்தன் இவளோட அம்மாவை பத்தி கமென்ட் அடிச்சு இருக்கான்.

அதுக்கு அப்பறம் ரெண்டு பேருக்கும் பேச்சு வார்த்தை இல்லையாம் ..." சிறுது நேரம் இதயம் நொறுங்கி உடல் உறைந்து போயிருந்தவன் கண்களில் பனித்த நீரை தலையை உதறி அகற்றி, "சரி, நான் என்ன பண்ணனும் .. " "ஒரு நல்ல ஃப்ரெண்டா நடந்துக்கணும். ஏற்கனவே ஃபெயில் ஆன மூணு பேப்பர் அதை தவிர இந்த செமஸ்டர்ல படிக்க வேண்டியது இது எல்லாமா சேந்து அவ மனசுக்குள்ள படிப்பைப் பத்தி ஒரு பயத்தை உண்டாக்கி இருக்கு .. அவ படிக்கற சப்ஜெக்ட் எல்லாம் நீங்க கரைச்சு குடிச்சதுதானே?

சோ, நீங்க அவளுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா அவளுக்கு படிக்க பணம் செலவு செய்யறதோட கொஞ்சம் நேரமும் செலவு செஞ்சு அவ படிப்பிலயும் உதவுங்க. சீக்கரம் அவ மனசுல இருக்கற அழுத்தம் போய் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வரும் .. அவளுக்கு தன்னம்பிக்கை வரும் .. அதுக்கு அப்பறமும நீங்க அவளை காதலிச்சா அவ கிட்ட உங்க காதலை சொல்லுங்க .. " வெகு நேரம் மௌன்ம் காத்தவனிடம் வினிதா,

 "யோசிச்சு பாருங்க நான் சொல்றது உங்களுக்கே சரின்னு படும் ... " என்று அவனிடம் விண்ணப்பித்த பிறகு "அம்மா அப்பா வர்ற நேரமாச்சு கீழ போலாமா?" "நீ கீழ போ நான் வர்றேன் .. " வெறும் கற்பனைக் காதலனா?' சில நிமிடங்கள் அவன் மனதில் அவன் ரேவதியை சந்தித்தபோதிலிருந்து நடந்த பல காட்சிகள் ஒரு ஸ்லைட் ஷோ போல் தோன்றி மறைந்தன .

. அவன் தன் தாயின் மறைவைப் பற்றி சொன்னபோது குளமான அவள் கண்கள் .. அவன் எந்த சட்னி வேண்டுமாலும் தொட்டுக் கொள் என்றபிறகு அவனை திசை திருப்பும் வண்ணம் பேசியவாறு அவன் தொட்டுக் கொண்ட சட்னியையே அவளும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டது ... அவர்களின் இரண்டாவது சேர்க்கையின் போது அவன் மேலிருந்தவள் மூச்சு வாங்க அவனை இழுத்து எழவைத்து இருவரும் மண்டியிட்ட படி இதழோடு இதழ் சேர்ந்து ஒருசேர உச்சம் அடைந்தது ...

 அது முடிந்தபின் ரேவதி அவன்மேல் படுத்தவாறு அவன் முகத்தை தன் இருகைகளால் ஏந்திப் பார்த்த ஏக்கப் பார்வை ... டாக்டர் அவள் தாய் இன்னும் சில நாட்களில் இறப்பது உறுதி என்றபின் வெளியில் வந்து அவன் நெஞ்சில் முகம் புதைத்து குலுங்கியது ... அவளை தன தாயிடம் சிரித்து பேசவேண்டும் என்று அவன் சொன்ன போது அவள் பார்வையில் இருந்த அன்னியோனியம் ... அவள் தாயின் கடைசி சில மணி நேரங்கள் அவன் தோளில் சாய்ந்து சத்தமில்லாம் கண்ணீர் வடித்தது ...

 'கற்பனை காதலன்னா இந்த மாதிரி ஒரு அன்னியோன்யம் எப்படி வரும்?' என்று நினைத்தவன் மறுபடியும் வினிதா சொன்னவைகளை முதலிலிருந்து மனதுக்குள் ஆராய்ந்தான். ஒரு விதத்தில் வினிதா சொன்னது உண்மையே என்று தோன்றியது. இருந்தும் 'அவ கற்பனையா காதலிச்சு என்னை நிஜமா காதலிக்க வேச்சுட்டாளே' என்று அவன் மனம் புலம்பியது. 'நிஜ வாழ்க்கையில அவ காதலிச்சது அந்த வசந்த் ... நான் அவளுக்கு ஒரு மெண்டல் சப்போர்ட் அவ்வளவுதான் ... அதுவும் அவுளுக்கு பிடிக்காத செக்ஸ்ல அவ கலந்துக்கும் போது' என்று மனதுக்குள் குமுறினான்.

 நேரம் போனது தெரியாமல் உறைந்திருந்தவனை அவன் அத்தையும் மாமாவும் மாடிக்கு வந்த காலடிச் சத்தம் இவ்வுலகுக்கு கொண்டுவந்தது இருவரும் இருபுறமும் அமர்ந்தபடி விசாலாக்ஷி "என்னடா? ஊர்ல எப்படி இருந்துது? அண்ணன் ஆஹா ஓஹோன்னு உன்னை பத்தி சொல்லிட்டு இருந்தாரு?" என்றார். வினிதா அவர்களிடம் நிச்சயம் அவனிடம் பேசியதை, முக்கியமாக அவன் ரேவதியை காதலிப்பதை பற்றி சொல்லியிருப்பாள்.

ஏதோ சொல்லி பேச்சை தொடங்க வேண்டும் என்று தொடங்குவதை கவனித்த அருண் "ம்ம்ம் ... things are moving as expected .." என்ற பிறகு மௌனம சாதித்தான் விசாலாக்ஷி, "அருண் வினிதா உன்கிட்ட பேசிட்டு இருந்ததை பத்தி சொன்னா ... எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாதுன்னு உனக்கு தெரியுமில்ல?" என்றதும் சிறிது சகஜ நிலைக்கு வந்திருந்த அருண் "என்ன நான் ரேவதியை லவ் பண்றதைப் பத்திதானே பேசப் போறீங்க?

அத்தை, அவ என்னை எப்படி காதலிச்சாளோ எனக்கு தெரியாது ஆனா நான் அவளை உண்மையா காதலிக்கறேன். அதே சமயத்துல அவளுக்கு பூரண குணமாகனும், அவளுக்கு தன்னம்பிக்கை வரணும், நல்ல படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வரணும். அதுக்கப்பறமும் நான் அவளை காதலிச்சா அவ கிட்ட சொல்லுங்கன்னு வினிதா சொன்னா" என்றவன் தழதழத்த குரலில், "Let me tell you now. நான் எப்பவும் அவளை லவ் பண்ணிட்டுதான் இருப்பேன் ...

அவளா வேற யாரையாவுது தேர்ந்து எடுத்துகிட்டாலும் என்னால அவளை மறக்க முடியாது அந்த அளவுக்கு என்னை பாதிச்சு இருக்கா" என்றான். அவனை கூர்ந்து நோக்கிய விசாலாக்ஷி "நான் சொல்ல வந்தது அது இல்லை... அந்த பொண்ணு உன்னை பாக்கறதுக்கு முன்னால வரைக்கும் கற்பனையா காதலிச்சு இருக்கலாம் .... ஆனா ... what ever my psychiatrist daughter may say, call this a woman's instinct ... உன்கூட நிஜ வாழ்க்கைல பழகினதுக்கு அப்பறம் அவ உன்னை எப்பவும் மறக்கப் போறதில்லை ..."

 "அப்பறம்?" "நான் பேச வந்தது நீ அவளை காதலிக்கறதை பத்தி ... அது எனக்கு பிடிக்கல ... எனக்கு மட்டும் இல்ல இங்க யாருக்கும் பிடிக்காது... அதை பத்தி எல்லாம் நீ கவலை பட மாட்டேன்னு எனக்கு தெரியும் .. இருந்தாலும் அதன் பின் விளைவுகளை பத்தி எல்லாம் யோசிச்சியான்னு கேக்க வந்தேன் .." "என்ன அத்தை, என்ன பின் விளைவு?" என்று கோபத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவனுக்கும் தன் மனைவிக்கும் இடையில் புகுந்த

தண்டபாணி "விசாலம், நீ கொஞ்சம் சும்மா இரு ..." என்றபின் "அருண், இவ சொல்றத விடு ... நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு .. சரியா?" "ம்ம்ம்" "நீ உண்மையா காதலிக்கறேன்னா? கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்தற நோக்கத்துலதானே?" "ஆமா .. " "எங்க குடும்பம் நடத்தலாம்னு இருக்கே?" "ஏன்? யூ. எஸ் ல" "அதாவது, அவளை பத்தி தெரிஞ்சவஙக யாரு கண்ணும் படாத ஒரு கண்காணா இடத்துக்கு அவளை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த போறியா?" என்றதும் சற்றே குறைந்து இருந்த அவன் கோபம மறுபடி வட துருவம் நோக்கிச் செல்ல "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.." என்றான்

 "அப்படித்தான் ... " என்று ஆணித்தரமாக ஆணையிடும் குரலில் சொன்னவர் சிறிது நேரம் அவன் கோவம் தணிய அவகாசம் கொடுத்தபின், "இப்ப என் மனசுல ஒரு நாலஞ்சு கேள்விகள் இருக்கு எல்லாத்தையும் உன் முன்னால வெக்கறேன் ... இதுக்கெல்லாம் நீ இப்பவே பதில் சொல்லனும்னு இல்ல ... நீ யோசிக்கறதுக்காக மட்டும்தான் சரியா?" வெளுத்த முகத்துடன் அருண் "ம்ம்ம்" என்றதும் தொடர்ந்தார் ..

 "உன் ஃப்ரெண்ட்ஸ்ல யாராவுது உங்கிட்ட காசுகுடுத்துட்டு போய் படுத்துட்டு வர்றதுக்கு பதிலா ஏண்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன்னு கிண்டலா கேட்டா என்ன பதில் சொல்லுவே? இப்படி கொதிப்படையாம, அப்படி கேக்கறவங்களுக்கு புரிய வெப்பயா? இல்ல சாந்தமா கேக்கறவங்கள இக்நோர் பண்ணற மனப் பக்குவம் உனக்கு இருக்கா?"

 "கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு நாள் நீயும் அவளும் எங்கயாவுது கடை வீதிக்கு போறீங்கன்னு வச்சுக்கோ. அப்ப எவனாவுது ஒரு ப்ரோக்கர் உங்கிட்ட வந்து இப்ப இவ ரேட் என்ன சார்ன்னு கேட்டான்னா? இல்ல உன் முன்னாலயே அவகிட்ட நாளைக்கு நீ ஃப்ரீயான்னு கேட்டான்னா? அதை தாங்கிக்கற தெம்பு உன் மனசுல இருக்கா? இல்ல அதுக்காக கேட்டவன் மேல கோவப் படுவெயா?

இல்ல அதை விட கொடுமையா உன் பொண்டாட்டி மேலயே கோவப் படுவெயா? " "நீங்க எல்லாம் சொல்லி எனக்கு தெரிஞ்சவரையிலும் அவ ஒரு ஆறு மாசமா இந்த தொழில் செஞ்சு கிட்டு இருந்திருக்கா .. கணக்கு பண்ணிப் பாத்தா இது வரைக்கும் குறைஞ்சது ஒரு நூறு பேராவுது அவளை கூட்டிட்டு போயிருப்பாங்க ..

அதுவும் அவளொட ரேட் அதிகங்கறதால ஓரளவு பணக்காரங்கதான் அவளை கூட்டிட்டு போயிருப்பாங்க .. the whole world is five hand shakes away அப்படீம்பாங்க .. எங்கயாவுது ஒரு இடத்துல அவ கூடப்படுத்த ஒரு கஸ்டமரை நீயும் அவளும் ஒரு சோஷியல் அக்கேஷன்ல மீட் பண்ண நிறைய வாய்ப்புகள் இருக்கு. அப்ப அவன் உங்கிட்ட எதுக்கு இந்த மாதிரி இடத்துக்குன்னு இவளை நீ கூட்டிட்டு வந்து இருக்கீங்கன்னு கேட்டான்னு வை .. அந்த கேள்வியை எப்படி எடுத்துக்குவே? என்ன பதில் சொல்லுவே?"

 


"கல்யாணத்துக்கு அப்பறம் சகஜமா அவளோட கடந்த கால அனுபவத்தைப் பத்தி ஏதாவுது ஒரு கான்டெக்ஸ்டுல அவ உங்கிட்ட சொன்னா நீ அதை அருவறுப்பு இல்லாம அவ மேல அன்போட எடுத்துக்க முடியுமா? இல்ல எப்ப உன் கூட பேசும் போதும் மனசுல பட்டதை கொஞ்சம் யோசிச்சு ஃபில்டர் பண்ணித்தான் அவ பேசணுமா?" "இன்னும் ஒரு பச்சையான விஷயம் .. இந்த மாதிரி சந்தேகம் பொதுவா பொம்பளைங்களுக்கு வராது .. தங்களோட உறுப்பு தேவையான அளவு இருக்கா, அவங்க மனைவிக்கு தேவையான அளவுக்கு சந்தோஷம் குடுக்க முடியுதா ..

இபப்டீன்னெல்லாம் ஆம்பளைங்களுக்குத்தான் அடிக்கடி சந்தேகம் வரும் .. உனக்கும் வரலாம் .. அதை நிவர்த்தி செய்ய அவ உனக்கு என்ன பதில் சொன்னாலும் அதை நீ நிஜம்ன்னு நம்புவையா?" "நாளைக்கு உங்க ரேண்டு பேருக்கும் பொறக்கப் போற குழந்தைங்க கிட்ட அவங்க புரிஞ்சுக்கற வயசுக்கு வந்தப்பறம் அவளோட கடந்த காலத்தைப் பத்தி சொல்லி புரிய வெக்கற தைரியம் உனக்கு இருக்கா?"

 ஒவ்வொரு கேள்வியும் அவன் தலையில் சம்மட்டியால் அடித்ததுபோல் விழுந்தது ... வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான் .. இருப்பினும் அவனுக்கு அவள் மேல் இருந்த காதல் இம்மியளவும் குறையவில்லை .. தன் மனப் பக்குவத்தை மட்டும் ஒரு தராசில் எடைபோட்டுப் பார்த்தான் .. "அவகிட்ட நீ உன் காதலை சொல்லறதுக்கு முன்னால இதையெல்லாம் யோசிச்சுட்டு அதுக்கப்பறம் அவ கிட்ட உன் காதலை சொல்லு .. ஏ

ன்னா இதுக்கெல்லாம் உன் கிட்ட பதில் இல்லைன்னா அதைவிட பெரிய கொடுமை நீ அவளுக்கு செய்ய முடியாது .. இப்போதைக்கு வினிதா சொன்ன மாதிரி அவளுக்கு ஒரு ஃப்ரெண்டா நடந்துகிட்டா மட்டும் போதாது .. நீயே அவகிட்ட நீ அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட், ஃப்ரெண்ட் மட்டும்தான்னு சொல்லு ... அத அந்த பொண்ணு நிச்சயம் புரிஞ்சுக்குவா .. உனக்கு எப்ப இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் எதிர்கொள்ளற அளவுக்கு மனப்பக்குவம் வருதோ அப்ப உன் காதலை சொல்லு ...

அப்பவும் உன் காதலை அவ நிச்சயம் ஏத்துக்குவா " "என்ன சொல்றீங்க?" என்று பதறிய விசாலாக்ஷிக்கு பதிலேதும் சொல்லாமல் "உன் அத்தைக்கே இதுல விருப்பம் இல்லதான் இருந்தாலும் நீ அப்படி சொன்னா உனக்கு சப்போர்ட்டுக்கு முதல் ஆளா நான் இருப்பேன்" எழுந்து நின்றவர் வாயடைத்துப் போன அத்தையையும் மருமகனையும் பார்த்து, "இப்ப வாங்க, ரெண்டுபேரும் போய் சாப்படலாம்;

எனக்கு ரொம்ப பசிக்குது" என்று முடித்தார்.

பின் குறிப்பு: இந்த பகுதியில் தண்டபாணி அருண் முன் வைக்கும் கேள்விகளை அவனை தனியே அழைத்துப்போய் கேட்டது போல் அமைத்து இருக்கலாம். என்னதான் தனது மனைவியும் ஒரு மருத்துவர் என்றாலும் நடைமுறையில் அக்கேள்விகள் ஒரு பெண்ணை முன்னாள் வைத்துக் கொண்டு கேட்கப் படுபவை அல்ல .. இந்தப் பிழைக்கு வாசகர்களை மன்னிக்கக் கோருகிறேன் உணவருந்தும் போது, எப்போதும் கல கல வெனறு இருக்கும் விசாலாக்ஷி-தண்டபாணி சாப்பாட்டு மேசையில் நிலவிய இறுக்கமான அமைதி நால்வரும் வெவ்வேறு மனநிலையுடன் இருப்பதை பறைசாற்றியது ...

ஒவ்வொருவரும் தேவைக்கு மேல் ஓரிரு வார்த்தையே பேசி உணவை முடித்தனர். சாப்பிட்டு முடித்தபின் அருண் வினிதாவிடம் "சரி வினி, ரேவதி காலேஜுக்கு போக ஆரம்பிக்கணும்னு சொன்னியே, எப்பவரைக்கும் அவ உங்க க்ளினிக்ல இருக்கணும்? அவளை எப்ப ஹாஸ்டல்ல சேக்கறது?" என்று கேள்விகளை அடுக்கினான்.

 "அதைப் பத்தியும் பேசணும்னுதான் இருந்தேன் ... இன்னும் கொஞ்ச நாளைக்கு அவளுக்கு பழக்கப் பட்டவங்க மத்தியிலேயே இருந்தா பரவாயில்லைன்னு எங்க சீனியர் நினைக்கிறார் .. அதேசமயம் அவளொட வீட்டுல இருக்க வேண்டாம் . வீணா அது பழைய நினைவை தூண்டும் .. இதப் பத்தி அம்மா அப்பா கிட்ட பேசுனேன் ..

அவ இங்க இருக்கறதப் பத்தி அவங்களுக்கோ எனக்கோ எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா அவ காலேஜ் இங்க இருந்து ரொம்ப தூரம் என்ன தான் சென்னையை நல்லா தெரிஞ்சவன்னாலும் தனியா ரொம்ப நேரம் அவ வெளில இருக்க வேண்டாம்னு தோணுது" என்றவளையும் அருகே இருந்த விசாலாக்ஷியையும் அவர் அவளை தங்கள் வீட்டில் தங்க அனுமதித்ததை வியப்புடன் பார்த்தான் ...

அவன் மனத்தை படித்தவராக, "டேய், எங்களுக்கும் அவளுக்கு உதவணும்னு இருக்கு ... don't mistake that" என்றபடி சமயலறைக்குள் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக