நீதான் என் காதலி - பகுதி - 17

ஒரு நாள் முன்பு விக்கி டேவிட் ஆக்கிசிடன்ட் ஆன பின்பு அவன் அங்கே ஆஸ்பத்திரியில் இருந்ததால் அவன் சுவாதியிடம் அஞ்சலியை வர சொல்லி விக்கி இருந்து கொள்ள சொன்னதால் சுவாதியும் அஞ்சலி அக்காவை போன் பண்ணி வர சொன்னாள் ,அஞ்சலியும் வந்தாள் ஹலோ மதர் எப்படி இருக்கீங்க உள்ள உங்க குட்டி மக்கி எப்படி இருக்கான் என்றாள் அஞ்சலி .

வாங்க அக்கா அது என்ன புதுசா மதர் நான் என்ன கல்யாணம் முடிக்காம கன்னியாஸ்திரியவா போயிட்டேன் என்றாள் ,அது இல்லடி நீதான் ஒரு குழந்தைக்கு தாய் ஆகிட்டாலே அந்த மதர் சொன்னேன் என்றாள் அஞ்சலி .அப்புறம் அது என்ன குட்டி மக்கி என கேட்டாள் .அதான் உன் வயித்துல வளருதே அதான் குட்டி மக்கி என்றாள் .அக்கா first of all அவங்க அப்பா பேரு மக்கீ இல்ல விக்கி விக்னேஷ் இத நான் உங்க கிட்ட பல தடவ சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .
ஒ சாரி டியர் ம்ம் பரவல அவன பிடிக்கிலன்னு சொல்லிட்டு எல்லா பொண்ணுக மாதிரியும் பேசுற ஒரு குடும்ப பொண்ண மாறிட்ட கிட்டத்தட்ட என்றாள் அஞ்சலி .நீங்க சொல்றது ஒன்னும் புரியல என்றாள் சுவாதி .புரியலையா அதாவது நார்மலா கல்யாணம் ஆன பொண்ணுக கல்யாணம் ஆன புதுசுல புருஷன் பேர சொல்ல கூச்சபட்டுகிட்டு அவரு இவருன்னு சொல்வாங்க .அப்புறம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் யார் ஆச்சு புருஷன பத்தி கேட்டா குழந்தையோட பேர சொல்லி அவ அப்பா
for example என்னைய எடுத்துக்கோ நானும் உங்க அண்ணன starting ல அவங்க அப்படின்னு சொன்னேன் .அப்புறம் முதல் குழந்தை ராம் பிறந்ததுக்கு அப்புறமா அவர எங்கன்னு யாருச்சு கேட்டா ராம் அப்பா கடைக்கு போயிருக்காரு ராம் அப்பா குளிக்கிறாரு அப்படிதான் சொல்வேன் நீயும் அதே மாதிரி சொல்ல ஆரம்பிச்சு நார்மல் பொண்ண மாறிட்டியே என்றாள் அஞ்சலி .ஏதோ சொல்றிங்க போங்க எனக்கு இன்னும் புரியல என்றாள் .
சரி என்ன இவன் அப்பா எங்க போனாரு என்று சுவாதி வயிற்ரை செல்லமாக தொட்டு கொண்டே கேட்டாள் .

ம்ம் ஏதோ ஒரு மீட்டிங்காம் டெல்லி வரைக்கும் போயிருக்கான் நாளைக்கு தான் வருவானாம் என்றாள் ,ம்ம் என்ன உன்னையே எப்படி வச்சு இருக்கான் என்றாள் அஞ்சலி .ம்ம் அவன் என்ன என் புருசனா நல்லா வச்சு இருக்கிறதுக்கு அவன் ஒரு ரூம்ல இருக்கான் நான் ஒரு ரூம்ல இருக்கேன் .நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ரூம் மேத்ஸ் அண்ட் ஜஸ்ட் பிரண்ட்ஸ் அவளவு தான் என்றாள் .

ஒ அப்படியா என்று அவள் கண்களை ஊடுருவது போல் ஒரு மாதிரியாக அஞ்சலி கேட்க சுவாதி ஆமாக்கா அதுக்கு ஏன் இப்படி பாக்குறிங்க என்றாள் சுவாதி .ஒன்னும் இல்ல உன் கண்ணுல ஏதோ ஒரு மாறுதல் அதாவது சந்தோசம் பயம் ரெண்டும் கலந்த மாதிரி இருக்கு அதான் அப்படி பாக்குறேன் என்றாள் அஞ்சலி .ஒ அதுவா ஒரு வேல நான் கர்ப்பமா இருக்கிறதால அப்படி தெரியும் போல என்றாள் .
ம்ம் நிஜமாதானா என்று மீண்டும் அஞ்சலி ஒரு மாதிரியாக கேட்க அதற்கும் மேல் அந்த விசாரணை பார்வை பொறுக்க முடியாமல் ஓகே alright என்னால இதுக்கும் மேலயும் உண்மைய மறைக்க முடியல .யார்கிட்டயாச்சும் இதுக்கும் மேல சொல்லாட்டி எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு என்றாள் சுவாதி .சரி சொல்லு என்றாள் அஞ்சலி .எனக்கு விக்கி மேல என்று சொல்ல முடியாமல் அஞ்சலியை கட்டி பிடித்து அழுக ஆரம்பித்தாள் .
இவ ஒருத்தி எதையாச்சும் சொல்றதுக்கு முன்னாடி சீரியல் கதாநாயகி மாதிரி அழுக ஆரம்பிச்சுடுவா என்று சொல்லி அஞ்சலி அவளை தட்டி எழுப்பி சொல்லுடி உனக்கு அவன் மேல என்ன என்றாள் .ஏதோ சொல்ல முடியாத பீலிங் வர வர அவன ஏதோ பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு அவனும் அதுக்கு ஏத்த மாதிரி ரொம்ப நல்லவானா மாறிகிட்டு வரான் என்றாள் .இது எப்ப இருந்து அவன பிடிக்க ஆரம்பிசுச்சு மேடத்துக்கு என்றாள் அஞ்சலி .
தெரியல அன்னைக்கு எனக்கு மாங்கா வாங்க மார்க்கெட் புல்லா அலைஞ்சப்ப அப்புறம் அன்னைக்கே மழை பெஞ்சப்ப எனக்காக ஓடி வந்து என்னைய கூப்பிட வந்தது அப்புறம் ஒரு நாள் முழுக்க கார்ல அவன் கூட இருந்தது .இதலாம் என்னைய அவன் பக்கம் இழுத்துருச்சு அக்கா .அண்ட் உங்களுக்கு தெரியுமா இப்பலாம என் பையனுக்கும் அவன பிடிச்சு போச்சு போலக்கா நான் விக்கிய பாக்குறப்ப எல்லாம் அப்படியே உள்ள பயங்கரமா ஏதோ ரொம்ப சந்தோசமா துள்ளி குதிக்கிற மாதிரி உதைக்கிறான் .இருக்காதடி அவங்க அப்பன பாக்கும் போது அவனுக்கு உள்ள சந்தோசம் வர தான் செய்யும் என்றாள் அஞ்சலி
அண்ட் எனக்கும் இப்பலாம் அவன பாக்கும் போதெலாம் என் இதயம் ரொம்ப பட படன்னு அடிக்குது ஆரம்பத்துல அவன் கூட ரூம்ல இருக்கும் போது ஏண்டா இவன் கூட எல்லாம் இருக்கோம்னு தோணும் .சில நேரங்கள அவன் என்னைய ரொம்ப திட்டும் போது அப்படியே எதாச்சும் கடல குதிச்சு செத்துர்லாம்னு தோணும் .ஆனா என் குழந்தைக்காக பொறுத்து கிட்டேன் .ஆனா இப்பலாம் அவன் என்னையே திட்டவே மாட்டிங்குறான் என்று சொல்லி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு
ஏன் அக்கா உங்களுக்கு எப்பாயச்சும் உங்க வீட்டுகாரார் உங்கள திட்டாம இருந்தா எப்படி இருக்கும் என சுவாதி கேட்டாள் .ஒ அந்த பீலிங்க கேட்குறியா அவங்க நம்மள கொஞ்சாம இருந்தா கூட ஒன்னும் தெரியாது ஆனா ஒரு நாள் நம்மள திட்டாம அமைதியா இருந்தா அந்த நாளே ஏதோ ஒன்னு குறையுற மாதிரி இருக்கும் என்றாள் அஞ்சலி .உடனே சுவாதி ஆமாக்கா அதே தான் அக்கா அவன் இப்ப எல்லாம் என்னையே திட்டவே மாட்டிங்குறான் அது ஒரு மாதிரி இருக்கு
அட்லிஸ்ட் கோபம் ஆச்சும் படுவான் இப்ப அதுவும் பட மாட்டிங்குறான் எப்ப அவன் என்னைய திட்டுவான்னு ஏக்கமா இருக்கு என்றாள் சுவாதி .அப்புறம் என்ன பண்றான் என்று அவள் சொல்வதை ரசித்து கொண்டே கேட்டாள் அஞ்சலி .தெரியல திட்டவே மாட்டிங்குறான் ரொம்ப பிரண்ட்லியா பேசுறான் அண்ட் சில நேரத்துல என்னைய பாத்தா உடனே பேச மாட்டின்கிறான் அப்படியே கொஞ்ச நேரம் கம்முனு இருக்கான் என் முகத்தையே பாத்து கிட்டு இருக்கான் .எனக்கும் அவன பாத்தா என்னைய அறியாம என் வாய் சிரிக்குது சந்தோசத்துல ,
அதாவது உன்னையே பாத்து அவன் ஜொள்ளு வடிக்கிரான்னு அவன பாத்து நீ வழியிற சரி சொல்லு என்றாள் அஞ்சலி .அப்படியா அக்கா அவன் என்னைய பாத்து நிஜமாவே வழியிரனா என்றாள் மெல்ல ஒரு புன்னகையோடு சுவாதி கேட்க .அட ஆமாடி மேல சொல்லு என்றாள் அஞ்சலி .சொல்றதுக்கு என்ன இருக்கு இனி I think I am Love With VIKI என்று சொல்லி விட்டு அப்படியே ஒரு சின்ன வருத்ததோடு தலையை குனிந்தாள் .அது நல்ல விசயம் தாண்டி அத ஏன் வருத்ததோடு சொல்ற என்று கேட்டாள் அஞ்சலி .
அது வந்து நான் அவன முழுக்கவே லவ் பண்ணிருவநேனோ பயமா இருக்கு என்றாள் சுவாதி .ஏண்டி அதுல என்ன பயம் என்று அஞ்சலி கேட்க அது வந்து வந்து என்று சொல்ல முடியாமல் அஞ்சலியின் தோளில் சாய்ந்து அழுதாள் .ஏண்டி அழுகுர விக்கி பொம்பள பொறுக்கியா இருக்கிரதாலையா என கேட்டாள் ,இல்ல அக்கா அது ஒரு மேட்டரே இல்ல சொல்லபோனா விக்கி இப்ப ரொம்ப திருந்திட்டான் .எனக்கு தெரிஞ்சு அவன் இப்பகுள்ள எந்த பொன்னுகிட்டயும் போன மாதிரி தெரியல அப்படியே போயி இருந்தாலும் அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல .
அப்புறம் என்னதான்டி உன் கவலை என்றாள் அஞ்சலி .அதாவது விக்கிய நான் இழக்க விரும்பல அக்கா என்று சொல்லி மேலும் குலுங்கி குலுங்கி அழுதாள் .அப்புறம் என்னடி அவனுக்கும் உன்னையே பிடிச்சு இருக்கு உனக்கும் அவன பிடிச்சு இருக்கு அல்ரெடி ரெண்டு பேர் குழந்தையும் வளருது அப்புறம் என்ன குழந்தையோட சந்தோசமா கல்யாணம் பண்ணிகொங்க எந்த குழந்தைக்கும் கிடைக்காத பாக்கியம் அவங்க அப்பா அம்மா கல்யாண போட்டோல கூட இருக்க போற பாக்கியம் உன் குழந்தைக்கு கிடைக்க போகுது என்னடா மவனே பெரியம்மா சொல்றது சரிதானே என்று வயற்றை தொட்டு அஞ்சலி கேட்க
சுவாதி அதை கேட்டு மெல்ல சிரித்தாள் .சிரித்தும் அழுதும் கொண்டே சொன்னாள் கேட்க நினைச்சு பாக்க நல்லாத்தான் இருக்கு ஆனா இதலாம் நடக்குனுமே என்றாள் சுவாதி .முதல கண்ண தொடடடி முண்ட கண்ணி என்று அவள் கண்ணீரை அஞ்சலி துடைத்து விட்டு கேட்டாள் ஏன் நடக்காது உனக்கு சொல்ல பயமா இருந்தா சொல்லு நானே நீ விரும்புறத அவன் கிட்ட சொல்றேன் என்றாள் அஞ்சலி .
இல்லக்கா வேணாம் என்றாள் ,ஏண்டி வேணாம் என கேட்டாள் சுவாதி .இல்ல இது சரிபட்டு வராது என்றாள் சுவாதி .எதுக்குடி சரியா வராது என்றாள் அஞ்சலி .இல்லக்கா வேணாம் என்று மறுபடியும் சுவாதி சொல்ல அஞ்சலி கடுப்பாகி இப்ப என்ன தாண்டி சொல்ல வர என்றாள் அஞ்சலி .
ஏன்னா நான் ஒரு ராசி இல்லாதாவ என்று கத்தினாள் சுவாதி .அதை கேட்டு அஞ்சலி சிரித்தாள் அடீ போடி நான் கூட ஏதோ பெருசா சொல்ல போறேன்னு பயந்தா போயும் போயும் ராசிய போயி ஒரு காரணமா சொல்ற என்னைய கூடதான் இப்ப வரைக்கும் என் மாமியார் ராசி இல்லாதாவ விளங்காதவ அப்படின்னு சொல்றாங்க நான்லாம் அத இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்ருவேன் .போயும் போய் ராசிக்கு போயி பயப்புடிரியே நீ எல்லாம் என்ன மார்டன் காலத்து பொண்ணு என்று அஞ்சலி கிண்டல் அடித்து சிரிக்க
அக்கா நான் ஒரு கொலைகாரி என்றாள் சுவாதி .சிரித்து கொண்டு இருந்த அஞ்சலி சிரிப்பை நிப்பாட்டி விட்டு என்னது என்றாள் ,சுவாதி மெல்ல சொன்னாள் நான் ஒரு கொலைகாரி ….. 


 நான் ஒரு கொலைகாரி என்று சுவாதி சொல்ல அஞ்சலி அதிர்ச்சி ஆனாள் .என்னடி சொல்ற யாரடி கொன்ன என்று அதிர்ச்சியோடு கேட்டாள் அஞ்சலி .அக்கா நான் ஒரு ராசி இல்லாதாவ சின்ன பிள்ளைல இருந்து நான் யார் மேலயாச்சும் பாசம் வச்சு நேசிச்சேனா அவங்க எல்லாம் என்னைய விட்டு பிரிஞ்சுருறாங்க

சின்ன வயுசல என் அப்பா அம்மா ரெண்டு பேரையும் பிடிக்கும் .அவங்க என்னைய விட்டு பிரிஞ்சுட்டாங்க அப்புறம் என் பாட்டி கூட போயி இருந்தேன் அவங்க என்னைய விட்டு மட்டும் இல்ல இந்த உலகத்த விட்டே போயிட்டாங்க
என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஒ இத தான் கொலை பண்ணேன்னு சொல்றியா உங்க பாட்டிக்கு வயசு ஆகிடுச்சு அதுனால போயி சேந்துட்டாங்க அது என்னமோ உன் ராசியல இறந்ததா சொல்ற நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன் என்றாள் அஞ்சலி .
இல்லக்கா நான் நிஜமாவே ஒரு கொலை பண்ணி இருக்கேன் என்றாள் .யாரடி கொலை பண்ண உங்க பாட்டியாவ என்றாள் அஞ்சலி . இல்ல இன்னும் சொல்ல போனா நான் ஒரு கொலை இல்ல ரெண்டு கொலை பண்ணி இருக்கேன் ரெண்டு உயிரை கொன்னு இருக்கேன் என்று சொல்லி கொண்டு அழுதாள் ,கதறி கதறி அழுதாள் .அஞ்சலி அவளை சமாதான படுத்தி என் கண்ணுல அழுகாம விசயத்த சொல்லு
அப்ப தான் அதுல இருந்து தப்பிக்க எதுவும் வழி இருக்கான்னு பாக்க முடியும் என்றாள் அஞ்சலி .அதுல இருந்து என்னைக்கும் தப்பிக்க முடியாது என்று மெல்ல சொன்னாள் .யே முதல நடந்தத சொல்லுமா யார்தான் கொல பண்ண என்று அஞ்சலி கேட்க
ஸ்டெல்லா என்றாள் சுவாதி .
அது யாருடி என்று அஞ்சலி கேட்டாள் .என் பிரண்டு என்றாள் சுவாதி .ஒ நாபகம் வந்துருச்சு எனக்கு முன்னாடி உன் பெஸ்ட் பிரண்ட் உன் காலேஜ் பிரண்ட் என்று அஞ்சலி சொல்ல இல்லக்கா அவன் என் ஸ்கூல் பிரண்டு என்றாள் சுவாதி .
சரி என்னதான் ஆச்சு என்றாள் அஞ்சலி .அவளும் நானும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் ப்ளஸ் ஒன் படிக்கும் போது அவ சுரேஷ்ன்னு ஒரு பையன்ன லவ் பண்ணா ரெண்டு பெரும் நெருங்கி பழகுநதுல ஸ்டெல்லா கர்ப்ப்மாகிட்டா அத என் கிட்ட மட்டும் தான் சொன்னா முதல எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல சுரேஷ் கிட்ட கேட்டதுக்கு கருவ கலைச்சுடுவோம் இல்லாட்டி நம்ம அப்பா அம்மா நம்மள கொன்னுடுவாங்கன்னு சொன்னான் ,
எனக்கும் கருவ கலைக்கிறது தான் சரியா தோனுச்சு .நான் ஸ்டெல்லா கிட்ட அப்படியே பண்ணிடுவோம்னு சொல்ல அவ முடியாது ஒரு உயிர கொல்றது பாவம் நான் எங்கயாச்சும் போயி பிச்சை எடுத்தாச்சும் என் குழந்தைய வளத்துக்கிறேன் அப்படின்னு சொல்லி அழுது கிட்டே போயிட்டா அப்புறம் நான் மட்டும் அவ கிட்ட தனியா போயி இதலாம் வேணாம் நம்ம இன்னும் மேஜர் கூட ஆகல மைனர் தான்
நம்மளால நம்ம பேரண்ட்ஸ சமாளிச்சாலும் உனக்கு குழந்தைய பெத்துக்கிற அளவுக்கு சக்தி இருக்குமான்னு தெரியல அதுனால வேணாம்டி சொன்ன கேளுடி என்றேன் .
ஆனா அவ நீ என்ன சொன்னாலும் சரி நான் என் குழந்தைய கொல்ல மாட்டேன் ஏண்டி உனக்கு இந்த மாதிரி நிலைமை வந்து இருந்தா என்ன பண்ணுவன்னு கேட்டதுக்கு நான் சொன்னேன் நான்லாம் தயங்காம உடனே அபார்சன் பண்ணிடுவேன் அப்படின்னு சொன்னேன் .
சொல்ல எல்லாம் நல்லாத்தான் இருக்கும் அனுபவிச்சு பாத்தா தான் அந்த உணர்வு தெரியும் அப்படின்னு சொன்னா .
இங்க பாரு ஸ்டெல்லா நான் அப்பா அம்மா இருந்தும் இல்லாம இருக்கிற ஒரு அனாத நாய் ஆனா நீ அப்படி இல்ல உனக்குன்னு ஒரு நல்ல குடும்பம் இருக்கு .
உனக்குன்னு பாசமா பாத்துகிற ஒரு அப்பா இருக்காங்க ஒரு அம்மா இருக்காங்க அப்புறம் உன் குட்டி தம்பி உன் செல்ல தங்கச்சி அப்படின்னு இத்தன பேரு இருக்காங்க
நாளைக்கே நீ இப்படி மாசமா இருக்கிறது வெளியே தெரிஞ்சா உங்க அப்பா அம்மா நிம்மதியா இருக்க முடியுமா வெளியா தான் போக முடியுமா எல்லாம் எவளவு கேவலாமா பேசுவாங்க இவளவு ஏன் உன் சின்ன தம்பி தங்கச்சிகள கூட ஸ்கூல்ல அசிங்க படும்ங்க இதலாம் தேவையா அதனால அவங்களுக்காகவச்சும் ஆபார்சன் பண்ணிடு அப்படின்னு அவள சொல்லி சமாதானபடுத்துனேன் .
அவளும் அழுது கிட்டே சரின்னு சொன்னா அப்புறம் நாங்க பல ஆஸ்பத்திரிக்கு போயி ஒரு வழியா ஒரு ஆஸ்பத்திரில அவளுக்கு அபார்சன் பண்ணோம் .
ஆனா அவளுக்கு ஆபார்சன் பண்ணப்ப ரத்த போக்கு நிறய போயி ரத்தம் நிறைய வெளியேறி வெளியேறி என்று குனிந்து சுவாதி அழுது கத்தி கொண்டே அவ அதுனால இறந்துட்டா
என்று சொல்லி அழுதாள் .அவ எவளவோ வேணாம்னு சொன்னா நான் தான் கேக்கல நான் தான் அவளையும் கொன்னேன் அவ வயித்துல வளர குழந்தையும் கொன்னேன் .அவ என்னையே பிரண்டா மட்டும் நினைக்காம கூட பிறந்த சிஸ்டர் மாதிரி நினைச்சு பழகுனா அப்படி பட்டவள நானும் கொன்னுட்டேன் என் ராசியும் கொன்னுடுச்சு
அதுல இருந்து நான் யார் கூடயும் அவள் பழகுறதும் இல்ல பாசம் வைக்கிறதும் இல்ல .உங்களுக்கே பல நாள் என் கூட பழகுராதால உங்களுக்கு ஏதும் ஆகிரோம்ன்னு பயந்து இருக்கேன்
என்று அலுது கொண்டே இருந்தவள் தீடிரென்று அழுகையை நிறுத்தி விட்டு அஞ்சலியை பார்த்து அக்கா பேசாம என் கூட சண்ட போட்டு பிரிஞ்சுடங்க அக்கா என்றாள் சுவாதி .லூசாடி நீ ஏன் இப்படி எல்லாம் பேசுனா ஓங்கி கன்னத்துல அறைஞ்சுடுவேன் என்றாள் அஞ்சலி ,
அப்படிதான் என்னைய அடிங்க அக்கா அடிங்க என்று சொல்லி கொண்டே அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள் .அவளை தடுத்து நிறுத்தி அவளை கட்டி பிடித்து அமைதியா இரு அழுகாத என் செல்லம் இல்ல ஒன்னும் இல்ல என்று அவளை சமாதனபடுத்தி விட்டு அக்கா உன்னைய விட்டு எப்பயும் எங்கயும் போக மாட்டேன் .
சண்ட போட்டும் பிரிய மாட்டேன் இந்த உலகத்த விட்டும் போக மாட்டேன் .அது ஏதோ உன் பிரண்டுக்கு நடந்தது விபத்து
இல்ல கொலை நான் தான் பண்ணேன் என்று சுவாதி அவள் மார்பில் சாய்ந்ந்து கொண்டு மெல்ல சொல்ல பேசதாடி அப்புறம் அடிச்சுடுவேன் என்று அஞ்சலி சொல்ல அடிங்க என்றாள் .
சரி விடு அத மறந்துட்டு விக்கி கிட்ட உன் காதல சொல்லி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க ராசி எல்லாம் மூட நம்பிக்கை .எல்லாம் வெஸ்ட் அதலாம் நம்பாத என்றாள் அஞ்சலி
அக்கா எனக்கு ஒரு உதவி பண்ணுவிங்களா என கேட்டாள் சுவாதி .சொல்லுடி என்றாள் அஞ்சலி .எதுனாலும் என்று சுவாதி கேட்க என்னால முடிஞ்சத பண்றேன் என்றாள் அஞ்சலி உங்களால முடியும் என்றாள் சுவாதி அப்ப சொல்லு என்றாள் அஞ்சலி .நீங்க என் மேல முதல சத்தியம் பண்ணுங்க என்றாள் சுவாதி எதுக்குடி சத்தியம் எல்லாம் என்றாள் அஞ்சலி .
பண்ணுங்க என்றாள் சுவாதி .சரி சத்தியம் பண்றேன் என்றாள் .பின் சுவாதி அஞ்சலி கையை எடுத்து சுவாதி தன் தலையில் வைத்து நான் உங்க கிட்ட விக்கிய பிடிச்சு இருக்குன்னு சொன்னதையும் அவன விரும்பேன்னு சொன்னதையும் எக்காரணத்த கொண்டும் அவனுக்கோ இல்ல வேற யார் கிட்டயும் சொல்ல கூடாது இது என் மேலயும் என் பிள்ள மேலயும் சத்தியம் என்றாள் சுவாதி .
அடி பாவி என்னைய ஏண்டி இப்படி ஒரு சத்தியம் பண்ண வச்ச என்று அஞ்சலி அதிர்ச்சியோடு கேட்க நான் நேசிக்கிற விரும்புற விக்கி என்னைய விட்டு பிரிஞ்சு இருந்தாலும் உயிரோட சந்தொசமாவச்சும் இருக்கணும் அதுக்கு தான் என்றாள் .
அட போடி என்று அஞ்சலி சலித்து கொண்டாள் ,நிஜமாத்தான் அக்கா பாருங்க இந்த டேவிட் என்னைய விட்டு பிரிஞ்சான் நிம்மதியா ஒரு பொண்ணோட குடும்பம் நடத்திகிட்டு இருக்கான் .அந்த மாதிரி விக்கியும் நிம்மதியா இருக்கட்டும் என்றாள் சுவாதி ,
அட போடி உன்னையே எவன் பிரிஞ்சாலும் ஏன்டா பிரிஞ்சொம்னு தான் வருத்தப்டுவாங்கே ஏன்னா நீ அழகானவ நல்லவ உன் கேரெக்டர் நல்ல கேரெக்டர் என்று அஞ்சலி சொல்ல
யார் சொன்னது நான் நல்லவன்னு என் கேறேக்டரும் நல்ல கேரெக்டர் இல்ல என்றாள் சுவாதி .ஏண்டி நீ நல்லவதான் என்று அஞ்சலி சொன்னாள் .இல்ல நான் கெட்டவ என்றாள் சுவாதி .ஒ புரிஞ்சு போச்சு மறுபடியும் நீ அந்த கொலை மேட்டருக்கே வர யே அத விடுடி உன் பிரண்ட நீ கொல்லல அது ஒரு விபத்து அத மறந்துடு என்றாள் அஞ்சலி .
இல்லக்கா என் கேரெக்டர் சரி இல்லாத கேரெக்டர் ஏண்டி சஸ்பென்ஸ் வச்சே பேசுற என்று அஞ்சலி கடுப்போடு கேட்க
ஓகே ஓகே நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன் என்று சொல்லி சிரித்து கொண்டே அவள் தோளில் சாய்ந்தாள் .அக்கா உங்க கிட்ட இன்னொன்னு சொல்லட்டுமா என்று சுவாதி கேட்க தயவு செஞ்சு சஸ்பென்ஸ் இல்லாம சொல்லு என்றாள் அஞ்சலி.
அக்கா எனக்கு விக்கிய முத முத பாத்தப்பயே பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .எப்ப நீ டேவிட் லவ் பண்ணும் போதே சைடுல அவன லுக் விட்டாயா அவன் மேல எதுவும் கிரஸ் அந்த மாதிரி பிடிச்சு போச்சா என்று அஞ்சலி கிண்டல் அடிக்க
இல்லக்கா நான் டேவிட்ட பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்து இருக்கேன் .இன்னும் சொல்ல போனா உங்கள எல்லாத்தையும் பாக்குறதுக்கு முன்னாடியே விக்கிய பாத்தேன் . நான் மும்பை வந்ததும் விக்கிய எதார்தாமா பாத்தேன் அப்பவே எனக்கு அவன பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .
அப்படி எங்கடி பாத்தா அவன பப்லியா இல்ல பார்டிலையா என்றாள் அஞ்சலி ,இல்ல ரோட்டுல
நான் மும்பை வந்ததும் ரயில்வே ஸ்டேசன்க்கு வெளியே இருக்க ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு அடி பட்டு உயிருக்கு போராடிகிட்டு இருந்துச்சு எல்லாம் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிருக்கோம்னு சொல்லி வேடிக்கை பாத்து கிட்டு இருந்தாங்க
அப்ப எங்கயோ இருந்து கார்ல வந்த விக்கி எல்லாரையும் இப்படி ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வேடிக்கை பாக்குரின்களே நீங்களா மனுசங்க்லான்னு ஹிந்தில திட்டிட்டு அந்த குழந்தையே அவனே தூக்கி அவனோட கார்ல வச்சு ஆஸ்பத்திரி கொண்டு போனான் .
அப்பவே அவன எனக்கு பிடிச்சு போச்சு என்றாள் சுவாதி .ஏண்டி நல்லா பாத்தியா அது உன் ஆள் தானா என்று அஞ்சலி கேட்க அன்னைக்கு அந்த இடத்துல இருந்த யாருக்கும் அவன் முகம் மறக்காது என்றாள் சுவாதி .
நான் கூட உன் ஆளு வில்லன்னு நினைச்சேன் பரவல உன் ஆளு ஹீரோ தாண்டி என்றாள் அஞ்சலி .என் ஆளு என்னைக்குமே ஹீரோ தான் அக்கா என்று சிரித்து கொண்டே சுவாதி சொன்னாள் .
ம்ம் இந்த விசயத்த ஆச்சும் சஸ்பென்ஸ் வைக்காம முடிச்சியே என்றாள் அஞ்சலி .சுவாதி அதை கேட்டு சிரித்தாள் ,


அடுத்த நாள் சுவாதி தனியாக இருந்தாள் . மணி 9 ஆச்சு இன்னும் விக்கிய காணோம் ஒரு வேல இன்னும் டெல்லில வொர்க் முடியாம இருக்கலாம் அதுனலா அவனால அங்க இருந்து வர முடியாம போயி இருக்கலாம் என்று நினைத்து கொண்டாள் .

சரி எதுக்கும் இன்னொரு தடவ போன் போட்டு பாப்போம் என்று நினைத்து கொண்டு விக்கிக்கு போன் அடித்தாள் .விக்கியின் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது .என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்து கொண்டாள் .
விக்கி அதே நேரத்தில் சுவாதிக்கு போன் பண்ண எடுத்த போது செல் பேட்டரி சார்ஜ் இல்லமால் டெட் ஆகி இருந்தது .சே என்று ஸ்டேரிங்கை அடித்து விட்டு வேகமாக வண்டியை ஓட்டினான் .
சரி 9.30 வரைக்கும் பாப்போம் வராட்டி அஞ்சலி அக்காவிற்கு போன் அடிப்போம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது .யாரு என்றாள் .நான் தான் என்றான் .விக்கியின் குரல் சுவாதி ஒரு நிம்மதியோடு கதவை திறக்க விக்கி வெளியே ஒரு வேகத்தோடும் பதற்தொடும் வந்து இருந்தான் .
சுவாதியை பார்த்தும் அவனுக்கு ஒரு நிம்மதியும் .விக்கியை பார்த்ததில் சுவாதிக்கும் ஒரு நிம்மதி ஏற்பட்டது இருவரும் ஹாய் என்று சொல்லி கொண்டனர் .
பின் அமைதியாக உள்ளே போனார்கள் .விக்கி நினைத்தான் ஒரு நாள் முன்பு அதாவது அன்று ப்ரொபோஸ் செய்ய நினைத்த நாள் அன்று அவள் இதே போல் கதவை திறந்த உடனே அவளை கட்டி பிடித்து அவள் உதட்டில் லிப் கிஸ் அடித்து விட்டு அதன் பின் தன் காதலை அவளிடிம் கொண்டு வந்து இருந்த பிளவர்ஸ் கொடுத்து சொல்லி விட்டு அவளை அப்படியே கட்டி அணைத்து கொண்டு
தன் ரூமில் அவள் கட்டிலை கொண்டு வந்து போட்டு இருவரும் ஒரே ரூமில் தூங்கலாம் என்று நினைத்து இருந்தான் .ஆனால் கடைசி ஓவரில் சில நேரங்களில் மொத்த விளையாட்டே மாறுவது போல் கடைசி நிமிஷத்தில் வந்த அந்த டேவிட் ஆக்கிசிண்டன்ட் செய்தி அவன் ஆசையில் மண் அள்ளி போட்டு விட்டது .டேவிட் அவனிடிம் ஆஸ்பத்திரியில் பார்க்கமால் பேசமால் இருந்தால் கூட வருத்தப்பட்டு இருக்க மாட்டான் .
ஆனால் அவன் எப்போதும் போல அவன் நட்புடன் பேசியது இவன் வந்ததையே பெரிதாக நினைத்தது இதானால் தான் விக்கி என்ன பண்ணுவது என்று தெரியாமல் யோசித்தான் .
எல்லாவற்றிற்கும் மேலாக மணி சொன்னது தான் அவனுக்கு இடி விழுந்தது போல் இருந்தது .டேவிட் இன்னும் சுவாதியை நினைத்து கொண்டு இருக்கிறான் என்பது தான் .
ஐயோ இப்ப என்ன பண்ண என்று நினைத்து கொண்டு ஸ்வாதியவோ இல்லை அவள் கண்களையோ பார்த்தால் கண்டிப்பாக அவளிடிம் விழுந்து விடுவோம் அதனால் அவள் பாக்க வேணாம் என்று நினைத்து கொண்டு தலையை குனிந்தாவ்ரே சென்றான் .
நான் இப்ப தான் உன்ன நினைச்சேன் .உனக்கு போன் பண்ணி பாத்தேன் நீ எடுக்கல என்றாள் .ரெண்டு நாளும் மீட்டிங்க்னால சார்ஜ் போட மறந்துட்டேன் என்று அவளை பார்க்கமால் கீழே குனிந்தாவரே சொன்னான் .ம்ம் நீ வராட்டி அஞ்சலி அக்காவ கூப்பிடலாம்ன்னு பாத்தேன் பரவல நீயே வந்துட்ட என்றாள் .
விக்கி மீண்டும் அவளை பார்க்கமால் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்த்து கொண்டே பதில் சொன்னான் .என்ன ஆச்சு இவனுக்கு எப்பயும் நம்மள பாத்து ஒரு பத்து நிமிஷம் பாத்து கிட்டே ஜொள்ளு வடிப்பான் .
இன்னைக்கு நாம பக்கம் திரும்பவே மாட்டிங்குறான் என்று சுவாதி நினைத்தாள் .விக்கி are you alright என கேட்டாள் .ஒ நோ இல்ல எஸ் சுயர் ஐ அம் ஓகே ஐ அம் alright என்று அவளை பார்த்தும் பார்க்கமால் திணறினான் .ம்ம் பையன் நம்மள நல்லா avoid பண்றான் அது நல்லா புரியது என்று நினைத்தாள் .ம்ம் நான் நார்மலா தான் இருக்கேன் உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே என்றான் .


எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நீதான் ஒரு மாதிரி இருக்க என்றாள் .அது வந்து ரெண்டு நாள் வேற இடத்துல நடந்த மீட்டிங் டென்சன் அப்புறம் பிளைட்ல வந்த களைப்பு இதானால தான் நான் ஒரு மாதிரி இருக்கேன் .போயி ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும் என்றான் .ஓகே போயி ரெஸ்ட் எடு என்றாள் .அவன் ரூமுக்கு போகும் முன் ஏ ஒரு நிமிஷம் என்றாள் விக்கி அவளை திரும்பி பார்க்கமால் என்ன என்றான் .
சாப்பிட்டியா என்றாள் .ம்ம் சாப்பிட்டேன் குட் நைட் என்று சொல்லி விட்டு ரூமிற்கு போனான் .அவளும் குட் நைட் என்று சொல்லி விட்டு அவள் ரூமிற்கு போனாள் ,ஒ காட் என்னையே இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படி வாட்டி எடுக்க போறியோ என்று சொல்லி கொண்டு தன் ரூமில் உள்ள சுவற்றில் முட்டினான் .
பின் அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்ச நேரம் நடந்தான் .எப்படியும் தூங்குனா கனவுல இவ தான் வருவா அதுனால தூக்கம் வர வரைக்கும் ஹாலுக்கு போயி டிவி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஹாலுக்கு போனான் .
என்ன ஆச்சு இவனுக்கு உண்மைலே வொர்க் டென்சனா இல்ல நம்மள வேணும்னு avoid பண்றானா ஒன்னும் புரியலையே சரி நம்மள avoid பண்ணா நல்லது தான் அவன் உயிரோட நிம்மதியாவச்சும் இருப்பான் என்று சுவாதி நினைத்து கொண்டு இருக்கும் போது அவளுக்கு ஏதோ புகை வாடை வர என்னது ஏதோ கருகுற வாடை வருது என்று ரூமை ஒரு முறை சுற்றிலும் பார்த்தாள் .
எங்கிட்டும் கிச்சன்ல எதுவும் மறந்தாப்பல வச்சு இருக்கோமா அப்படின்னு நினைச்சு கிட்டு ரூம் கதவை திறந்து வெளியே வந்தாள் .
அங்கு விக்கி டிவி பார்த்து கொண்டு சிகரெட் பிடித்து கொண்டு இருந்தான் .சுவாதிக்கு கோபம் வந்தது .விக்கி என்று கத்தினாள் .என்ன பண்ற என்றாள் .டிவி பாக்குறேன் ஏன் சவுண்டு ஏதும் அதிகமா வச்சுட்டேனா இல்லையே கம்மியாதான் வச்சு இருக்கேன் என்றான் .நான் அத சொல்லல கையில என்ன வச்சு இருக்க என்றாள் .
ஒ இதுவா சிகெரட் என்று சொல்லி விட்டு விக்கி யோசித்தான் .இதான் சமயம் ஒரு நல்லா பெரிய சண்ட போட்டு அவள வீட்ட விட்டே அனுப்பிடுவோம் என்று நினைத்து கொண்டு
இது சிகரெட் ஏன் உனக்கு கண்ணு தெரியலையா என் வீட்ல எனக்கு சிகரெட் குடிக்க கூட உரிமை இல்லையா நீ யாருடி என் பொண்டாட்டியா இல்ல லவ்வரா என்று விக்கி கத்த
ஆஹா கோப பட ஆரம்பிச்சுட்டான் இதாண்டா கண்ணா உன் கிட்டநான் எதிர் பாத்தேன் சரி சரி நம்மளும் எரியிற தீயில கொஞ்சம் எண்ணெய் இல்ல பெட்ரோலே உத்துவோம் அப்படின்னு சுவாதி நினைத்து கொண்டு நான் ஒன்னும் உன் பொண்டாட்டியும் இல லவ்வரும் இல்ல உனக்கு எல்லாம் ஏவ பொண்டாட்டியாவோ லவ்வராவோ இல்ல அப்படி இருந்தா அத விட பெரிய துருதிர்ஷ்டம் எனக்கு வேற இல்ல என்றாள் .


ஆஹா இவளும் நாம நினச்சா மாதிரியே ரியாக்ட் பண்றா இதான் சரியான சமயம் அவள இன்னும் கொஞ்சம் திட்டி வெளிய அனுப்பிடுவோம் என்று நினைத்து கொண்டு சரிடி நீ என் லவ்வரும் இல்ல என் பொண்டாட்டியும் இல்ல அப்புறம் ஏன் நான் சிகெரட் பிடிக்க கூடாதுன்னு கத்துன்ன என கேட்டான் விக்கி .
நல்ல கேள்வி நல்ல கேள்வி என்று சுவாதி திணற பதில சொல்லுடி என்றான் .என்ன சொல்ல என்று நினைத்து கொண்டு ஏன்னா என் வயித்துல உன் குழந்தை வளருதுடா அதுக்கு சிகெரட் புகை எப்படி ஒத்துக்கிரும் இன்னும் வெளியேவே வராத குழந்தைக்கு அதுக்கு அந்த புகை ஒத்துக்காம எதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்ண என்றாள் சுவாதி .
அது எப்படிடி என் குழந்தையாகும் அது நீ எவன் கூட படுத்து உண்டான குழந்தையோ நீ நல்லா அத என் குழந்தைன்னு சொல்லி எனக்கு மிளகா அரைக்க பாக்குற என்று சொல்வான் அதற்கும் மேலும் கெட்ட வார்த்தைல கூட திட்டுவான் அப்படின்னு தான் சுவாதி நினைச்சா ஆனா குழந்தைங்கிற வார்த்தைய கேட்டதும் அவனுக்கு கோபம் வர வில்லை .என்ன தான் விக்கிக்கு குழந்தை பிடிக்காவிட்டாலும்
டாக்டர் அவனிடம் சொன்னது ஞாபகம் வந்தது அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு அதுனால அவங்கள எந்த காரணம் கொண்டும் ஆப்செட் ஆக்கிடாதிங்க என்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வர சுவாதியை பார்த்தான் ,ஐ ஆம் சாரி சுவாதி நீ கர்ப்பமா இருக்கிறது தெரியாம நான் சிகெரட் அடிச்சுட்டேன் இனி மேல நான் வீட்ல சிகெரட் அடிக்கவே மாட்டேன் என்று சொல்லி சிகரட்டை அணைத்து அதை வெளியே தூக்கி போட போனான் .
என்ன இது இவன் அப்படியே உல்டா ஆகிட்டான் என்ன ஆச்சு இவனுக்கு என்று சுவாதி நினைத்து கொண்டு இருந்தாள் .பின் உள்ள வந்த விக்கி சுவாதி ஐ அம் வெறி வெரி சாரி ரெண்டு நாள் ட்ராவால் அப்புறம் மீட்டிங் அப்புறம் வொர்க் டென்சன் இதுனால உன்னையே கண்டபடி திட்டிட்டேன் ஐ அம் சாரி இனி மேல் நான் வீட்ல எப்பயும் சிகெரட் குடிக்க மாட்டேன் ஓகே வா என்றான் .
ஐயோ ரொம்ப நைஸ் பாயா மாறுரானே எதாச்சும் சொல்லி சண்ட போடு என்று மனதில் சுவாதி நினைக்க ஆனால் வெளியில் அவனை திட்ட வாய் வார்த்தைகள் வர வில்லை .ஓகே ஓகே பரவல நானும் கொஞ்சம் ஓவராத்தான் கத்திட்டேன் of course இது உன் வீடு நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம் .பட் கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றாள் .சுயர் ஓகே குட் நைட் என்று மீண்டும் குனிந்தாவரே சொல்லி விட்டு ரூமிற்குள் போனான் .
whats wrong with me என்று இருவரும் அவரவர் ரூமில் உக்காந்து கொண்டு அவர்களயே திட்டி கொண்டனர் .ஏன் விக்கி கோப பட மாட்டிங்குறான் ஒரு வேல டாக்டர் சொன்னத கேட்டு பயந்து போயி திட்டாம இருக்கானா இல்ல வழக்கம் போல பொண்ணுகள போட ஆரம்பிச்சுட்டான் .ஓகே என்ன பண்ணாலும் எங்கு இருந்தாலும் வாழ்க அவன் என்று நினைத்து கொண்டு தூங்கினால் .
விக்கி வழக்கம் போல பல குழப்பங்களுக்கு இடையில் தூங்கமால் அரை குறை தூக்கதை போட்டான் .
ஓரிரு நாள் கழித்து வார இறுதியில் டேவிட்டுக்கு ஓரளவு குணமான பின் இருவர் மட்டும் தனியாக ஒரு பாருக்கு போனார்கள் .அப்பா ரொம்ப மாசம் கழிச்சு இன்னைக்கு தாண்டா பாருக்கே வரேன் என்றான் டேவிட் .என்னடா சொல்ற என்றான் விக்கி .ஆமாடா உன் கூட சண்ட போட்டதுக்கு அப்புறம் நான் பாருக்கே வரல என்றான் டேவிட் .ஏண்டா என்ன ஆச்சு என்றான் விக்கி .முதல பார்ல குடிக்க ஒரு நல்ல கம்பினியன் கிடைக்கல என்றான் .
ஏண்டா மணி கூட போயி இருக்கலாம்ல என்றான் விக்கி .யாரு நம்ம ஓட்ட வாயன் கூடவா அவன் பொண்டாட்டி மாசம் ஆனதால அவள விட்டு நகர கூட மாட்டின்கிறான் அது மட்டும் இல்லாம என் பொண்டாட்டி என்னைய தண்ணி அடிக்க விட மாட்டிங்குரா என்றான் டேவிட் .என்னடா அன்னைக்கு என்னமோ நான் மணி மாதிரி பொண்டாட்டி தாசன் ஆக மாட்டேன்னு சொன்ன இன்னைக்கு அப்படி ஆகிட்ட என்று விக்கி கிண்டல் அடித்தான் .
என்ன பண்ண எல்லாம் விதிடா என்று டேவிட் சொல்லி விட்டு சிறிது நேரம் அமைதி ஆனான் .maybe நான் ஸ்வாதிய கல்யாணம் பண்ணி இருந்தா அவ ஒரு பிரன்ட்லி வோயிப்பா இருந்து என்னையே சரக்கு அடிக்க விட்டுருப்ப என்றான் .இப்ப எதுக்குடா அவள பத்தி பேசுற என்று விக்கி மனதில் நினைத்து கொண்டான் . அவ உண்மைலே கிரேட்டா சே அவள நான் ஏன் மிஸ் பண்ணேன் என்று கோபமாக கத்தி விட்டு டேபிளில் ஓங்கி ஒரு குத்து விட்டான் .
டேய் பாத்துடா என்றான் விக்கி .டேய் எனக்கு ரெஜினா கூட வாழவே பிடிக்கல .சுவாதிய என்னால மறக்க முடியல என்றான் .போச்சு மணி சொன்னத உறுதி படுத்திட்டான் என்று விக்கி நினைத்தான் .இன்னும் சொல்ல போனா எனக்கு இப்பதைக்கு அவள பாத்தா மட்டும் கூட போதும் .ஆனா சுவாதி இப்ப மும்பைலே இல்லடா நான் அன்னைக்கு திட்டிட்டு ஒரு மூனு மாசம் கழிச்சு அவ ஹாஸ்டல் போனேன் .ஆனா அவ சரியா ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்டல காலி பண்ணிட்டு எங்கயோ போயிட்டா .அதுக்கு அப்புறம் விசாரிச்சதுல அவ வேலைய விட்டுட்டு தமிழ் நாட்டுக்கு போயிட்டா என்றான் .
பின் வேக வேகமாக விஸ்கியை எடுத்து அடித்து விட்டு எல்லாம் என் தப்பு உங்க ரெண்டு பேருக்கும் நடந்ததா நான் ஒரு விபத்தா நினைச்சு கண்டுக்காம விட்டு இருந்தா இந்நேரம் அவ மும்பை விட்டு போயிருக்க மாட்டா நானும் உன் குட சண்ட போட்ருக்க மாட்டேன் அட்லிஸ்ட் என் முன்னாள் காதலிய அப்ப அப்ப பாக்க்வாச்சும் செஞ்சு இருப்பேன் என்றான் .
பின் மீண்டும் கொஞ்சம் சரக்கை அடித்து விட்டு டேவிட் ரொம்ப போதையோடு வெளிப்படையா சொல்றேன்டா அவ உன் கூட ஒரு தடவ படுத்து இருந்தாலும் பரவல நான் அவள இப்ப இங்க பாத்தா கூட அவ கால்ல விழுந்து நான் அவள கல்யாணம் பண்ணிகிருவேன் .மூதெவி இத முதலையே செஞ்சு இருந்தின்னா யாருக்கும் எந்த பிரச்சினையும் இருந்து இருக்காது ஒருத்திய கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் சுவாதியோட அருமை புரியுதா என்று நினைத்து கொண்டு ஒன்றும் சொல்லமால் இருந்தான் .
எ யே நீ எதுவும் அவள லவ் பண்றியா என்று டேவிட் போதையில் தடுமாறி கொண்டே கேட்க இல்ல இல்ல நான் ஏன் லவ் பண்ண போறேன் என்றான் .அதான நீ தான் ஒரு தடவ ஒருத்திய மேட்டர முடிச்சுட்டா அவள திரும்பி கூட பாக்க மாட்டியே என்று சிரித்து கொண்டே சொன்னான் .அந்த பாவத்துக்கு தாண்டா இப்ப அனுபிவிக்கிறேன் என்று விக்கி நினைத்தான் .


ஆமாடா அப்படிதாண்டா என் வாழ்க்கை என்றான் விக்கி .கடைசில நீ என் ஆளு மேலே கை வச்சுட்ட நீ கில்லாடிடா என்று டேவிட் சிரித்து கொண்டே அவனிடிம் போதையில் தடுமாறினான் .ஐயோ மறுபடியும் திட்ட போறனோ என்று விக்கி பயந்தான் .பயப்படாத நான் உன்னையே திட்ட மாட்டேன் ஆனா நான் எப்படி ரெஜினாவ கழட்டி விட்டு அதாவது நீ கழட்டி விடுற மாதிரி இல்ல டைவர்ஸ் வாங்கிட்டு எப்படி சுவாதி கூட மறுபடியும் ஒன்னு சேருறது என்று டேவிட் கேட்க
ஐயோ என்னால சகிக்க முடியலையே என்று விக்கி நினைத்து கொண்டு ஒரு நிமிஷம் நான் பாத் ரூம் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு பாத் ரூமில் போயி கோபமாக கத்தினான் .அதன் பின் போதையில் இருந்த டேவிட்டை அழைத்து கொண்டு அவன் வீட்டில் கொண்டு போயி விடுவதற்கு முன் மணிக்கு போன் போட்டு வர சொன்னான் .என்னடா ஏன் இந்நேரம் வர சொன்ன என்றான் .
டேய் இவன வீட்ல கொண்டு போயி விடனும் நான் கீழ இருக்கேன் .நீ மேல போயி இவன இவன் அப்பர்டேமேன்ட்ல விட்டுட்டு வா என்றான் ,ஏண்டா நீயே விடலாம்ல என்றான் மணி .எதுக்குப்பா வந்த முத நாளே என் புருஷன குடிக்க வச்சு கூப்பிட்டு வந்துட்டான்ன்னு இவன் பொண்டாட்டி என்னைய திட்டவா நீ போயி விட்டுட்டு வா நான் அப்புறம் உன்னையே வீட்ல விடுறேன் .அதன் பின் அவன் மணியையும் வீட்டில் விட்டு விட்டு கடுப்போடு வீட்டிற்கு போனான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக