நீதான் என் காதலி - பகுதி - 18

அடுத்த நாள் விக்கி ஆபிஸ் போனான் .வழக்கம் போல மணி வந்தான் .அப்புறம் என்ன நேத்து நீயும் டேவிட்டும் நல்லா என்ஜாய் பண்ணிங்களா என கேட்டான் .மயிற என்ஜாய் பண்ணோம் என்று நினைத்து கொண்டு ம்ம் சூப்பரா என்ஜாய் பண்ணோம் என்று சொல்லிவிட்டு அடுத்த கேள்வி மணிய கேட்க விட கூடாது அவன் கேட்டா எப்ப பாத்தாலும் ஏன் டல்லா இருக்கேன்னு கேட்டு வாய புடுங்குறான் ,

நம்ம முந்திக்குவோம் என்று நினைத்து கொண்டு யே வள்ளிக்கும் உனக்கும் இருந்த சண்ட சால்வ் ஆகிடுச்சா என்றான் விக்கி ,எங்கடா எதுக்கு எடுத்தாலும் அப்பாவ பாக்கணும் அம்மாவ பாக்கணும் சொல்லி கிட்டு இருக்கா தமிழ் நாட்டுல பேயுர மழைக்கு தமிழ் நாட்டுக்குள்ளேயே போக முடியலையாம் இதுல அங்க இருந்து இங்க எப்படி அதுகள இங்க கூப்பிட்டு வரது குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ஒரு 3 நாள் லீவ் கேட்டு அங்க போயி என் அப்பா அம்மா அப்புறம் அவ அப்பா அம்மா எல்லாத்துக்கும் குழந்தைய காண்பிச்சுட்டு வரணும் என்றான் .
பின் ஒரு நான்கு நாட்கள் கழித்து மணி வீட்டிற்கு சென்றான் .போயி கதவை தட்டியதும் அங்கு மணி வந்து நின்றான் .என்னடா அதிசியாம ஞாயிற்று கிழமை அதுவும் காலைல வந்து இருக்க எங்கிட்டும் தமிழ் நாட்டுல பெய்யுற மழை மும்பைக்கு வர போகுதா என்று கிண்டல் அடித்தான் மணி .ஆமா வர போகுது நீ வள்ளி இருந்தா கொஞ்சம் வெளிய கூப்பிடு என்றான் .எதுக்குடா நீ உள்ள வாடா என்றான் மணி .நீ முதல கூப்பிடுடா என்றான் ,சரி வள்ளி இங்க வா என்றான் ,
என்னடா அதிசியாமா ஞாயிற்று கிழமை வந்து இருக்க மழை ஏதும் வர போகுதான்னு பாருங்க என்றாள் .

அத தான் நானும் சொன்னேன் என்று சொல்லி மணி சிரித்தான் ,அதலாம் இருக்கட்டும் வள்ளி உனக்கு ஒரு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்கேன் அதனால கொஞ்சம் கண்ண மூடு என்றான் விக்கி ,அப்படி என்னடா எனக்கு தீடிருன்னு சர்பரைஸ் கொண்டு வந்து இருக்க என கேட்டாள் ,கேள்வி கேக்காம கண்ண மூடு என்றான் .

ஓகே மூடிட்டேன் என்று கண்ணை மூடினாள் .சரி இப்ப கண்ண திற என்றான் .கண்ணை திறந்து போது வள்ளிக்கு ஆச்சரியமும் சந்தோசமும் தாங்கவில்லை .ஏன் என்றால் எதிரில் நின்று இருந்தது அவள் அம்மாவும் அப்பாவும் .அம்மா அப்பா என்று ஆச்சரியத்தோடும் அழுது கொண்டும் அவர்கள் இருவரையும் உள்ள கூப்பிட்டு போனாள் .பின் உள்ளே சிறிது நேரம் வள்ளி என்ன சொலவது என்றே தெரியாமலே இருவரிடமும் ஆனந்த கண்ணிர் விட்டு கொண்டு இருந்தாள் .என்னப்பா தீடிருன்னு சொல்லாம வந்துட்டிங்க எப்படிப்பா வந்திங்க என்றாள் .
3 நாளைக்கு முன்னாடி ஒரு லெட்டரும் பாம்பேக்கு ரெண்டு பிளைட் டிக்கட்டும் நம்ம வீட்டுக்கு வந்துச்சு அதுல நான் உங்க மாப்பிளையோட பிரண்டு உங்க பொண்ணு உங்கள பாக்கனும்னு ஆச பட்ரதால உங்களுக்கு பிளைட் டிக்கெட் எடுத்து அனுப்ப சொன்னாரு இதுல பிளைட் டிக்கெட் மும்பைக்கு இருக்கு நீங்க ஞாயிற்று கிழமை வந்து இருங்க போட்டு இருந்துச்சு அப்புறம் அதே மாதிரி வந்தோம் வந்ததும் இந்த தம்பி எப்படியோ எங்கள அடையாளம் கண்டு பிடிச்சு வீட்டுக்கு கூப்பிட்டு வந்தாரு தம்பிக்கு நன்றி சொல்லணும் அதே மாதிரி மாப்பிளையும் எங்கள ரயில வரவைக்க முடியலன்னு தெரிஞ்ச உடனே உனக்காக எங்களுக்கு செலவு பண்ணி பிளைட் டிக்கெட் எடுத்து எங்கள வர வைச்சதுக்கு ரொம்ப நன்றி மாப்பிள உங்களுக்கும் என்றார்
அப்பா நீங்க ஒரு நிமிஷம் விக்கி கூட பேசிகிட்டு இருங்க நான் இந்த வந்துருறேன் என்று மணியை கூப்பிட்டு தனியாக ஒரு ரூம் சென்றாள் வள்ளி .ஏங்க சொல்லவே இல்ல எனக்காக விக்கி கிட்ட சொல்லி நீங்க எங்க அப்பா அம்மாவுக்கு பிளைட் டிக்கெட் எடுத்து வர வைப்பிங்க்ன்னு நான் நினைக்கவே இல்லைங்க ரொம்ப தேங்க்ஸ்ங்க என்று சொல்லி கட்டி பிடித்தாள் .ஓகே ஸ்வீட்டி ஸ்வீட்டி உங்க அப்பா அம்மா வர போறது எனக்கும் தெரியாது நானும் உன்னையே மாதிரி இப்ப தான் அவங்கள பாத்தேன் .என்றான் மணி .
அப்ப யாரு அவங்களுக்கு டிக்கெட் எடுத்து வர வச்சது என கேட்டாள் .maybe விக்கிய இருக்காலம் என்றான் மணி .அதான பாத்தேன் நீங்களாச்சும் எங்க அப்பா அம்மாவுக்கு செல்வளிக்கிராவது என்று விலக பார்த்தவளை மீண்டும் கட்டி பிடித்து யே இருடி இப்ப கூட அவன் பண்ணாத மறைச்சு நான் உன் கிட்ட நல்ல பேர் எடுத்துருக்காலமே ஏன் உண்மைய சொன்னேன் என்று கேட்டான் .அதான் என் புருஷன் அதுனால தான் உங்கள எனக்கு பிடிக்கும் என்று சொல்லி விட்டு அவனுக்கு மீண்டும் ஒரு சின்ன முத்தம் உதட்டில் கொடுத்து விட்டு வெளியேறினார்கள் .
பின் வெளியே விக்கி மணி மணியின் மாமானர் என எல்லாரும் நன்கு சிரித்து பேசி கொண்டு இருந்தனர் .அதன் பின் வள்ளி விக்கியை கூப்பிட்டாள் .யே எதுக்கு நீ இத செஞ்ச என்றாள் .யே நான் ஒன்னும் பண்ணல எல்லாம் உன் புருஷன் தான் அவங்கள பிளைட்ல வர வச்சது என்றான் .யே அவனுக்கு இத பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாரு என்றாள் .ஓகே என் சிஷ்டருக்கு நான் இத கூட பண்ணாம இருந்தா நல்லா இருக்குமா என்றான் விக்கி .வள்ளி அழுதாள் .
யே எதுக்கு அழுகுர நான் எதுவும் தப்பா பண்ணலையே என்றான் விக்கி .இல்ல எனக்கு உண்மைல பிரதர் இருந்தா கூட இதலாம் செஞ்சு இருப்பாங்களாங்கிறது சந்தேகம் தான் ரொம்ப தேங்க்ஸ்டா என்றாள் வள்ளி .யே படத்துல வர செண்டிமெண்ட் டயலாக் எல்லாம் எதுக்கு இப்ப போயி உங்க அப்பா அம்மா கிட்ட போயி பேசு என்றான் .நீ ரொம்ப நல்லவாண்டா உனக்கு எல்லாமே நல்லது நடக்கணும் நீயும் எங்கள மாதிரியே கல்யாணம் முடிச்சு சீக்கிரம் குழந்தை பொண்டாட்டின்னு செட்டில் ஆகணும் என்றாள் வள்ளி .அப்படி நடந்தா தான் அது நல்லது இல்ல என்று சிரித்தான் விக்கி .
போடா லூசு என்றாள் .அப்போது அவனுக்கு சுவாதியிடம் இருந்து போன் வந்தது .ஒரு நிமிஷம் ஒரு முக்கியாமான போன் என்று சொல்லி விட்டு வெளியே போயி போனை எடுத்தான் .ஹலோ என்றான் .யே என்ன எங்க இருக்க என்றாள் .ம்ம் என்னாச்சு என்ன விஷயம் என்றான் .உன்னையே தேடி உன் ஸ்கூல் பிரண்ட் யாரோ ஒருத்தங்க வந்து இருக்காங்க என்றாள் .என்னது ஸ்கூல் பிரண்டா என கேட்டான் .


ஆமா என்றாள் .பேரு என்னன்னு கேட்டியா என்றான் .அதலாம் நீ வந்ததுக்கு அப்புறம் தான் சொல்வாங்களாம் ஆனா அவங்க ஒரு லேடி என்றாள் .என்னது லேடியா என்றான் .ஆமா சீக்கிரம் வீட்டுக்கு வா என்றாள் .ஓகே நான் இப்ப கிளம்பி உடனே வீட்டுக்கு வரேன் என்றான் .பின் உள்ளே வந்து ஓகே நான் கிளம்புறேன் என்றான் .இருடா மதியம் சாப்பிட்டு போடா என்றான் மணி .ஆமா தம்பி இருந்து சாப்பிட்டு போங்க என்றார் மணியின் மாமனர் .இல்லங்க என் வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க போயி பாக்கணும் என்று சொல்லி விட்டு
வள்ளி எங்கடா என்றான் .கிச்சன்ல இருக்கா என்றான் .ஓகே அவ கிட்ட சொல்லிடு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் .யாரா இருக்கும் என் ஸ்கூல் பிரண்ட் ,மூர்த்தியா இருக்கும்மா இருக்காது சுவாதி லேடின்னு சொன்னா அப்ப யார இருக்கும் ம்ம் நான் பத்தாவது வரைக்கும் தான் கோ எட் அப்புறம் அப்பா எங்கிட்டும் எவளையும் இழுத்துட்டு ஓடிடுவேன்னு நினைச்சு பாய்ஸ் ஸ்கூல சேத்தாரு பிளஸ் ஒன் பிளஸ் டூ பொண்ணுகள பாக்கவே முடியலையே அப்புறம் யார இருக்கும்
அப்படினாலும் நான் மும்பைல இருக்கிறது எப்படி தெரியும் என் அட்ரஸ் எப்படி தெரியும் இப்படி யோசித்து கொண்டே காரை வேகமாக ஓட்டினான் .பின் வீடு வந்து சேர்ந்ததும் வீட்டின் கதவு அருகே போன போது வீட்டிற்குள் சிரிப்பு சத்தம் கேட்டது .ஐயோ கடவுளே எங்கிட்டும் கூட படிச்ச சொந்த கார பொண்ண இருக்க கூடாது அப்புறம் சுவாதி மேட்டர் வீட்டுக்கு தெரிஞ்சுடும் என்று நினைத்து கொண்டு மெல்ல கதவை திறந்தான் .
அங்க இருந்தது சிமியும் ராக்கியும் சே இதுகளா கொஞ்ச நேரத்துல பயமுருதிருச்சுக கருமம் என்று நினைத்து கொண்டு உள்ளே வந்தான் .ஹலோ விக்கி எப்படி இருக்க என்னைய ஞாபகம் இருக்கா பாத்து கிட்டதட்ட பத்து வருஷம் ஆச்சுல என்றாள் .அடி பாவி பத்து நாள் கூட ஆகலடி ஏண்டி இப்படி புளுகுற என்று மனதில் நினைத்தான் .விக்கி ஒன்றும் சொல்லமால் சிரிக்க மட்டும் செய்தான் .நான் தான் சிமி நீயும் நானும் ஒண்ணா பிளஸ் ஒன் படிச்சோமே மறந்துட்டியா என்றான் .
நல்லா புளுகுரா என்று நினைத்து கொண்டு இல்ல இல்ல மறக்கல ஞாபகம் இருக்கு சிமி நீ நல்லா இருக்கியா என்றான் .ரொம்ப நல்லா இருக்கேன் இதான் என்னோட வருங்கால கணவர் ராக்கி ராக்கி இது விக்கி என்று சொன்னாள் .விக்கி ஹாய் என்று சொல்லி விட்டு உக்காந்தான் .என்ன விக்கி நம்மலாம் எப்படிபட்ட பிரண்ட்ஸ் உன் கல்யாணத்துக்கு என் கூப்பிடல என்றாள் சிமி .அது வந்து என்று விக்கி சொல்லும் முன் பேசாதடா நீ ஒன்னும் பேச வேணாம் இவளவு அழகான பொண்ணு உனக்கு மனைவியா வந்ததா என் கிட்ட நீ காட்டவே இல்ல
என்று சிமி சொல்லிவிட்டு சவாதியிடிம் சிமி போயி உண்மைலே நீங்க ரொம்ப அழகுங்க அதை கேட்டு சுவாதி வெட்கப்பட்டு சிரித்து கொண்டே தேங்க்ஸ் என்றாள் .அதுவும் நீங்க பிரங்க்ண்ட்டா இருக்காதால ரொம்ப அழகா இருக்கீங்க if you dont mind நான் லைட்டா உங்க வயித்த தொட்டுகிறவா என்றாள் ஒ சுயர் என்றாள் சுவாதி .வயிற்ரை மெல்ல தொட்டு கொண்டே எத்தன மாசம்ங்க என்றாள் சிமி .ம்ம் அஞ்சு மாசம் இல்ல இன்னும் 3 நாள்ல ஆறாவது மாசம் ஆரம்பிக்குது என்றாள் சுவாதி .
so sweet நல்லா உங்கள மாதிரியே அழகான பொண்ண பிறக்கட்டும் அந்த பொறுக்கி மாதிரி பையன் வேணாம் என்றாள் சிமி .எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே என்று மீண்டும் வெட்க பட்டு கொண்டே சொன்னாள் சுவாதி .பொறுக்கி என்ற வார்த்தையை கேட்டும் சிமியும் சுவாதியும் ஓவராக குலைவதை பார்த்து கடுப்பான விக்கி அவர்களை பிரிக்க நினைத்து யே போதும்டி பேசனது வந்த கெஸ்ட்க்கு எதாச்சும் சாப்பிட கொண்டு வா என்று விக்கி புருஷன் மாதிரி அரட்ட
சுவாதி ஒரு மாதிரி கண்களை உருட்டி அவனை மட்டும் பார்த்து கண்காலே மிரட்டினாள் .அதை கவனித்த சிமி பரவலங்க கண்ணாலே அவன அடக்கிட்டிங்கலெ உங்க கண்ணுக்காவே உங்கள விக்கி கல்யாணம் பண்ணி இருப்பான் போல என்று சிமி சொன்னாள் .மீண்டும் விக்கி கடுப்போடு அவங்களுக்கு எதாச்சும் சாப்பிட கொண்டு வா என்றான் .டேய் சும்மா இருடா அதலாம் அவங்க நாங்க ரெண்டு பேரும் வந்ததும் சாப்பிட எல்லாம் கொடுத்துட்டாங்க நீங்க வாங்க வந்து உக்காருங்க என்று சுவாதியை இழுத்து விக்கியின் அருகில் உக்கார வைத்தாள் .
விக்கிக்கும் சுவாதிக்கும் இருவரும் கணவன் மனைவி போல அருகருகே உக்காருவது பிடித்தும் பிடிக்கமாலும் சொல்ல முடியாத ஒரு உணர்வோடு உக்காந்தனர் பின் சுவாதி சிரித்து கொண்டே கேட்டாள் .நீங்க சொல்லுங்க நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜா இல்ல அறேஞ் மேரேஜா என கேட்டாள் .உடனே ராக்கி லவ் தான் சார் தான் எங்கள சேத்து வச்சாரு என்றான் ராக்கி .உடனே சிமி ராக்கியின் காலில் மிதித்து ராக்கி என்று அவன் காதில் மெல்ல கிசுகிசுத்தாள் கொஞ்சம் பேசாம இருக்கியா என்றாள் .
என்னது விக்கியா உங்கள சேத்து வச்சது என்று சுவாதி கேட்க அவன் சும்மா உளறாங்க நேத்து இருந்து அவன் பிரண்ட்ஸ் எல்லார் வீட்லயும் இதே மாதிரி சொல்லி சொல்லி இங்கயும் அப்படி சொல்றான் எங்க கதைய நாங்க அப்புறம் சொல்றோம் முதல நீங்க உங்க கதைய சொல்லுங்க விக்கி நீ சுவாதிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணியா இல்ல அரேஞ்சா என்றாள் .ஐயோ இவ ஏன் இப்படி வந்து உடைஞ்சத ஒட்ட வைக்க பாக்குறா ஒரு அஞ்சு நாளுக்கு முன்னாடி வந்து இருந்தா கூட நல்லா இருந்து இருக்கும் .
அது வந்து வந்து என்று விக்கி திணற லவ் மேரேஜ் நாங்க ரெண்டு பெரும் லவ் மேரேஜ் என்றாள் சுவாதி .


 நானும் விக்கியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்றாள் சுவாதி .ஒ லவ் மேரேஜ்ஜா விக்கி ஸ்கூல் படிக்கும் போது பச்ச பிள்ள மாதிரி இருப்ப லவ் எல்லாம் எப்ப பண்ண என்றாள் .

அத நான் சொல்றேன் என்று சொல்லி கொண்டு சுவாதி விக்கியின் அருகே இன்னும் நெருக்கமாக உக்காந்து அவன் உள்ளங் கைகளை பிடித்து கொண்டாள் .அவள் அவன் கையை தீடிரென பிடித்த போது விக்கிக்கு அது வேண்டாம் விலகி விடலாம் என்று நினைத்து விரலை விடுவிக்க நினைத்த போது சுவாதி விடமால் இறுக்கமாக பிடித்து கொண்டாள் . ஆக்டுசுவலா நானும் விக்கியும் காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணோம் என்றாள் .
இவ எதுக்கு இப்ப தேவை இல்லாம அவளுக்கு சமமா புளுகுரா என்று விக்கி நினைத்தான் .ஓகே உங்க லவ் ஸ்டோரிய ஆரம்பத்துல இருந்து சொல்லுங்க என்றாள் சிமி .ஆரம்பத்துல இருந்துன்னா எப்படி என்றாள் சுவாதி .அத எப்ப ரெண்டு பேரும் முத பாத்திங்க என்றாள் சிமி .ஒ அதுவா அது இவர என் காலேஜ் முத நாளே பாத்துட்டேன் .நான் அப்ப first இயர் இவரு அப்ப third இயர் இவரோட செட் பொண்ணுக எல்லாம் என்னைய ராகிங் பண்ணிகிருந்தாங்க
அவங்க என் கிட்ட என்ன சொன்னங்கன்னா அங்க வர பையன் கிட்ட மண்டி போட்டு பையன் மாதிரி என்னைய கல்யாணம் பண்ணுவிங்கலான்னு ப்ரோபஸ் பண்ணுன்னு சொன்னங்க எனக்கு பயமா இருந்துச்சு அதே மாதிரி அப்ப அந்த பக்கம் இருந்து வந்தவர் இவர் நான் தயங்கி கிட்டே இருக்க என் சீனியர்ஸ் என்னைய இவர் கிட்ட தள்ளி விட்டாங்க நானும் அவர் முன்னாடி போயி பயந்து கிட்டே மண்டி போட்டு இவர பாத்து will you marry me அப்படின்னு கேட்டேன் .
இவருக்கு அப்படி முத ஒரு தெரியாத பொண்ணு கேட்கவும் பயந்து கிட்டு என்னது என்றார் .நான் மறுபடியும் will you marry me plesase என்றேன் .அப்புறம் இவர் சுத்தி முத்தி பாத்துட்டு என்ன சொல்றன்னு கேட்டார் .நான் மறுபடியும் will you marry me plesaseன்னு சொன்னதுக்கு அப்புறம் யோசிச்சு ஒ ராகிங்கா நடக்கட்டும் நடக்கட்டும் அப்படின்னு என்னைய பாத்து சிரிச்சு கிட்டே of course i will marry you darling அப்படின்னு சொல்லி சிரிச்சு கிட்டே போனார் .அதுக்கு அப்புறம் இவர எங்க பாத்தாலும் வெட்க படுவேன் இவர் என்னைய பாத்து சிரிப்பாரு .
அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு ரெண்டு பேரும் ஓரளவு பழக ஆரம்பிச்சோம் அப்புறம் என்ன அதான் எங்க ரெண்டு பேர் லவ்வுக்கும் சாட்சியா என் வயித்துல வளருதே ஒன்னு என்றாள் சுவாதி .இல்ல கொஞ்சம் போரடிக்குது ஓகே உங்க ரெண்டு பேர் நடுவுல யாரு முத லவ்வ சொன்னது என்று கேட்டாள் சிமி .ம்ம் இங்க தான் நீங்க வித்தியாச பட போறீங்க அதாவது ஓரளவு எங்களுக்குள இருக்க லவ்வ நாங்க உணர்ந்தாலும் அத யாரு முத சொல்றதுன்னு எங்களுக்கு பயமா இருந்துச்சு
நாங்க சொல்லமாயெ பழகி கிட்டு மட்டும் இருந்தோம் .என்னோட ug third இயர் இவரோட pg பைனல் இயற் கிட்டத்தட்ட ரெண்டு பேரும் அதுக்கு அப்புறம் காலேஜ் விட்டு பிரியற மாதிரி ஆச்சு நானும் நம்ம பொண்ண ஆச்சே இவர வந்து சொல்லட்டும் அப்படின்னு நினச்சு இருந்தேன் ஆனா அவர் கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல .அப்புறம் செமெஸ்டர் எக்சாம் முடிஞ்சு farewell பார்டி நடந்தப்ப இவர் அன்னைக்கு ஆச்சும் சொல்வாருன்னு எதிர் பார்த்தேன் ஆனா சொல்லல .
என்னால முடியல இவர் கிட்ட நேரா போயி அதே மாதிரி ஒரு கால்ல மண்டி போட்டு இத யாரும் ராக்கிங் பண்ணி சொல்ல வைக்கல நானா தான் சொல்றேன் நான் உங்கள விரும்புறேன் உங்க கூடயெ இருக்கணும்னு ஆசப்படுறேன் சப்போஸ் நீங்க என்னைய பிடிக்காம என்னைய லவ் பண்ணாட்டியும் பரவல ஒரே ஒரு தடவ என்னைய பாத்து சும்மா காலேஜ் முத நாள்ல விளையாட்டுக்கு சொன்ன மாதிரி ஒரு தடவ மட்டும் I love youன்னு சொல்லுங்க அப்படின்னு சொன்னேன் .
ஓகே ஓகே போதும் உங்க பார்ட் முடிஞ்சுடுச்சு இனி அன்னைக்கு நீ அவ கிட்ட அன்னைக்கு என்ன சொன்னேன்னு இப்ப நீ சொல்லு என்றாள் சிமி .இது வேறயா இந்நேரம் வரைக்கும் சுவாதி பேசுனதே எனக்கு கேட்டு ஒரு மாதிரி இருக்கு இப்ப இது வேறயா என்று விக்கி தயங்க
சும்மா வெட்கப்படாம சொல்லுடா என்றாள் சிமி .எஸ் பரவல சும்மா சொல்லுங்க என்று அவன் பக்கம் திரும்பி சொல்ல அப்போது அவள் சிரித்த முகத்தையும் அவள் கண்களையும் கிட்ட பார்த்த விக்கி வழக்கம் போல் தடுமாறினான் .ஒ இந்த கண்ண மறுபடியும் கிட்ட இருந்து பாக்க முடியலையே அது மட்டும் இல்லாம அவள ரொம்ப கிட்ட இருந்து விக்கியால பாக்க முடிஞ்சுச்சு அவ கண்ணு மூக்கு உதடு எல்லாத்தையும் பாக்க விக்கிக்கு ஒன்னும் பேச வரல
சொல்லுடா நீ அவளுக்கு அன்னைக்கு என்ன சொன்ன என்று மீண்டும் சிமி கேட்க நான்அன்னைக்கு அன்னைக்கு என்று அங்கிட்டும் விக்கி முகத்தை திருப்பி கொண்டே இருக்க சுவாதி பரவல சும்மா சொல்லுங்க என்று சொல்ல நான் சுவாதிய தனியா கூப்பிட்டு போயி உன் கண்ண பாத்து எனக்கு ஐ லவ் யு சொல்ற தைரியம் இல்ல அப்படின்னு சொல்லிகிட்டே என்று அவளை பார்த்த விக்கி அதற்கும் மேலும் பொறுக்கமால் அப்படியே அவள் உதட்டை முத்தமிட்டான் .
சுவாதி முதலில் தீடிர் முத்தத்தால் திணறினாள் ஆனால் விக்கியின் கெஸ்ட் முன்பு அன்பாக இருப்பது போல் காட்டத்தான் இப்படி பண்ணுகிறான் என்று நினைத்து கொண்டு அவளும் முத்தமிட்டாள் பின் அவளாலும் அடக்க முடியமால் அவன் முத்தத்தை ஏற்று கொள்வது போல் அவனுக்கு உதட்டை கொடுத்தாள் .இருவரும் அவர்களுக்குள் இருக்கும் காதலை சொல்லமால் வெளிப்படுத்துவது போல முத்தமிட்டனர் .அப்போது ராக்கி அதை பார்த்து சிமியிடம் ஓகே நாம வெளிய போவோம் என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல


அப்போது தான் விக்கிக்கும் சுவாதிக்கும் சிமியும் ராக்கியும் இருப்பது தெரிந்தது விக்கி அதை கண்டு கொள்ளமால் சுவாதியின் கீல் உதட்டை சப்பி இழுத்து கொண்டே அவள் நாடியில் முத்தமிட சுவாதி அவனை தள்ளி விட்டாள் .போதும்ங்க கெஸ்ட் வந்து இருக்காங்க பத்தாதுக்கு உங்க பையன் வேற ஒதைக்கிறான் என்று சுவாதி சொல்ல ஒ இப்ப என்ன பையனுக்கும் ஒன்னு கொடுத்துறேன் என்று சொல்லி கொண்டே உடனே குனிந்து அவள் வயிற்றில் சின்ன முத்தம் கொடுத்தான் .சுவாதிக்கு அவன் பண்ணுவது ஏன் இப்படி எல்லாம் பண்றான் இந்த வாரமும் யாரும் கிடைக்காம இதான் சாக்குன்னு நம்ம மேல பாயுரனா என்று நினைத்தாள் .
பின் அவனை எழுப்பி விட்டாள் சுவாதி .இருவரையும் கவனித்த சிமி சிரித்து கொண்டே சோ சார் இப்படிதான் உங்க லவ்வ அன்னைக்கு சொன்னிங்களா என்று கேட்க ஆமா என்னைக்குமே இவ கண்ண பாத்து என்னைக்குமே என்னால லவ்வ சொல்ல முடியாது அதான் அப்படி சொன்னேன் என்றான் .உடனே சுவாதியும் ஆமாங்க இவரு இப்ப வரைக்கும் என் கிட்ட லவ் சொன்னது இல்லைங்க என்று சொல்லி சிரித்தாள் .
ஒ நைஸ் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நல்ல மூடுக்கு வந்து இருக்கீங்க சோ நாங்க கிளம்புறோம் என்றாள் சிமி .பரவல இவரு எப்பயுமே இப்படிதான் யார பத்தியும் கவலை படாம ஏதாவது பண்ணிடுவாரு இப்ப கூட பாருங்க நீங்க இருக்கிறத மறந்து இப்படி பண்ணிட்டாரு என்றாள் சுவாதி .பரவலங்க நம்ம ஊரும் எப்ப அமெரிக்கா மாதிரி இப்படி வெளிப்படையா அன்ப காட்டுறது இப்படி இருந்தா தான் நல்லா இருக்கும் சோ இத விடுங்க அப்புறம் உங்க ரெண்டு பேர் வீட்லயும் லவ்வுக்கு ஒத்து கிட்டு கல்யாணம் பண்ணிங்களா இல்ல என்று சிமி கேட்க .
இல்லங்க அவர் வீட்ல ஒத்துக்கல என்றாள் சுவாதி .அப்ப உங்க வீட்ல என கேட்டாள் சிமி ,எனக்கு வீடே இல்லையே என்று சொல்லி சிரித்தாள் .எனக்கு புரியலைங்க என்றாள் சிமி .இல்ல அதாவது நான் ஒரு அநாதை அதான் அவங்க வீட்ல ஒத்துக்கல ஆனா இவரு அத பத்தி எல்லாம் கவலை படாம அவங்க கூட சண்ட போட்டு என்னைய கல்யாணம் பண்ணாரு .எனக்காக அவங்கள எல்லாம் பிரிஞ்சாறு அதுனால இவருக்கு எப்படி எனக்கு நன்றி சொல்றதுன்னே தெரியல என்று மெல்ல வருத்தப்படுவது போல் சொல்லி கொண்டே
அவன் கன்னத்தில் முத்தமிட்டு thank you விக்கி இன்னைக்கு எனக்குன்னு ஒரு வீடு குடும்பம் குழந்தைன்னு இருக்குன்னா அதுக்கு விக்கி மட்டும் தான் காரணம் என்று சொல்லி கொண்டே அவன் தோளில் கை வைத்து அப்படியே சாய்ந்தாள் .பரவல நான் கூட இந்த பொறுக்கிய என்னமோன்னு நினைச்சேன் ஆனா உங்களுக்காக குடும்பத்தையே தூக்கி எறிஞ்சுட்டு வந்து இருக்கான் உண்மைலே கிரேட் தான் என் ஆள் எல்லாம் பாருங்க அவங்க அம்மா ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் கல்யாணம் சொல்லி ஒரு மாசம் ஆக்கிட்டான் என்று அவன் தலையில் செல்லமாய் ஒரு கொட்டு வைத்தாள் சிமி .
அதை பார்த்து சுவாதி சிரித்தாள் ,ஓகேங்க உங்க கதைய சொல்லுங்க என்றாள் சுவாதி .எங்க கதைய நாங்க இன்னொரு நாள் சொல்றோம் இப்ப முதல இந்த பத்திரிக்கையே பிடிங்க என்று இருவருக்கும் சிமி பத்திரிக்கையை கொடுத்து விட்டு கண்டிப்பா ரெண்டு பேரும் ஜோடியா வரீங்க என்றாள் சிமி .சுவாதி பத்திரிக்கையை பார்த்து விட்டு இல்லைங்க நீங்க கல்யாணம் அடுத்த மாசம் வச்சு இருக்கீங்க அதுவும் கோவாவுல என்னால வர முடியாது ஏன்னா அப்ப எனக்கு 7வது மாசம் ஆகிடும் அதுனால என்னால வர முடியாது மன்னிச்சுகோங்க என்றாள் சுவாதி .
அதலாம் நீங்க கவலை படாதிங்க என் மாமியார் அதாவது ராக்கியோட அம்மா இந்த கர்ப்ப specilist டாக்டர் தான் நீங்க வாங்க பாத்துக்கிருவோம் என்றாள் சிமி .ஓகே ராக்கி நீ கார ஸ்டார்ட் பண்ணி வை விக்கி நீ போயி ராக்கி கூட எதாச்சும் பேசி கிட்டு இரு நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கிறோம் என்றாள் சிமி .அதை கேட்டு விக்கி ஐயோ இவ எதுவும் ஒலரிடா போறாளோ என்று பயந்து கொண்டு அதலாம் இருக்கட்டும் என்று சொல்ல டேய் ஒரு ரெண்டு நிமிஷம் உன் பொண்டாட்டி கூட என்னைய பேச விட மாட்டியா ராக்கி சார கொஞ்சம் வெளிய கூப்பிட்டு போ என்று சொல்ல வாங்க சார் வெளிய போயி ஒரு தம் போடுவோம் என்று ராக்கி விக்கியை இழுத்து சென்றான் .
இங்க பாருங்க உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலை படாதிங்க நான் இனிமேல் விக்கி பிரண்டு இல்ல உங்க பிரண்டு தான் இது என் நம்பர் நீங்க எப்ப வேணும்னாலும் எதுக்கு வேணும்னாலும் என்னைய கூப்பிடலாம் நான் உங்களுக்காக வரேன் என்று சொல்லி விட்டு அவள் நெற்றியில் ஒரு சின்ன முத்தம் பாசமாக கொடுத்து விட்டு வயிற்ரை தடவி கொண்டே பத்திரமா இருங்க நான் வரேன் என்று சொல்லி விட்டு சிமி கிளம்பினாள் .
வெளிய வந்த உடன் விக்கி கோபத்துடன் ஏண்டி இப்படி கோர்த்து விட்ட என்று கேட்க உனக்கு ப்ரோபஸ் பண்ண வரல நான் ஒரு ரூட் போட்டு கொடுத்து இருக்கேன் அத போயி பிடிச்சுக்கோ என்றாள் .ஆமா பாஸ் எங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணிங்களே அதுக்கு கை மாறு என்றான் ராக்கி .விக்கி அமைதியாய் இருக்க போதும்டா விக்கி பொறுத்தது போயி விட்ட இடத்துல இருந்து கிஸ் கொடு அவளுக்கு என்று சொல்லி விட்டு சிமி கிளம்ப
விக்கியும் சிறிது யோசித்து விட்டு வேகமாக கதவை திறந்து உள்ளே போனான் .சுவாதி அவன் வேகமாக கதவை திறந்த சத்தம் கேட்டு பார்த்தாள் .விக்கியும் அவளை ஒரு காதல் பாரவையோடு பார்த்து கொண்டே அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தான் .சுவாதிக்கு இதயம் பட பட என அடித்தது .அவளை நெருங்கும் முன் சரியாக விக்கியின் செல் போன் அடிக்க அவன் நின்று அதை எடுத்து பார்த்தான் David calling ….
ஐயோ இவன் இப்ப கால் பண்றான் என்று நினைத்து கொண்டு போனை எடுத்து கொண்டு வெளியே போனான் .அவன் வெளியே போன உடன் சுவாதி வேகமாக அவள் ரூமிற்கு ஓடினாள் .

ஐயோ என்னால முடியலையே இப்ப என்ன பண்ண ஐயோ விக்கி கிட்ட நிஜமாவே நம்மாலா லவ்வ சொல்லிருவோமா இல்ல வேணாமா ஐயோ இப்ப என்ன பண்ண நீ என்ன உங்க அப்பன் உனக்கு முத்தம் கொடுக்குரான்னு உடனே துள்ளி குதிக்கிற
சுமக்கிறது நானு பாசம் உங்க அப்பன் மேலயா என்று செல்லமாக தன் வயிற்ரை மெல்ல ஒரு தட்டு தட்டினாள் .என்னடா பண்ண செல்லம் இப்ப அப்பா கூடவெ இருந்துருவோமா இல்ல வேணாமா ஆனா அம்மாவ உங்க அப்பாவுக்கு பிடிச்சு இருக்கா இல்லையானு தெரியலையே அது மட்டும் இல்லாம நான் கூட இருக்காதால அப்பாவுக்கு என் ராசியால எதாச்சும் ஆகிடுச்சுன்னா என்னடா பண்ண ஒரே குழப்பமா இருக்கே அம்மாவுக்கு இப்ப என்ன பண்ண என்று சுவாதி அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசி கொண்டு இருக்க
வெளியில் விக்கி போனை எடுத்து டேவிட் இடம் பேசி கொண்டு இருந்தான் .ஹே இன்னைக்கு சண் டே சோ எங்க இருக்க பப்லயா இல்ல மால்யா எங்க இருக்கன்னு சொல்லு உடனே நான் அங்க வரேன் நம்ம ரெண்டு பேரும் இப்படி சண்டே ஒண்ணா போயி ரொம்ப மாசம் ஆச்சு என்னடா இப்ப எங்க இருக்க என்றான் .ம்ம் அது வந்து நான் நான் என்று விக்கி திணற அட சீ எங்க இருக்கன்னு சொல்லுடா நான் அங்க வரேன் என்றான் டேவிட் .வீட்ல என்றான் .
நல்லது நானும் உன் புது வீட்ட பாத்ததே இல்ல அதுனால அட்ரஸ் சொல்லு வந்து உன் வீட்ட பாத்த மாதிரி இருக்கும் என்றான் .ஐயோ தவளை தன் வாயால கெடும்ங்கிர மாதிரி நான் வீட்ல இருக்கேன்னு உலரிட்டேன்னே என்று நினைத்து கொண்டு சரி சமாளிப்போம் என்று நினைத்து கொண்டு அதாவது நான் என் வீட்ல இல்லடா என்றான் .அப்புறம் யார் வீட்ல இருக்க என கேட்டான் .அது வந்து வந்துடா என்றான் .ம்ம் புரிஞ்சு போச்சு ஏதோ ஒரு பிகர் வீட்ல இருக்க கரெக்ட் தானே என்றான் .
ஆமாடா என்றான் விக்கி .நல்லா என்ஜாய் பண்னையா என்றான் .ம்ம்ம் என்றான் .சே இதுக்கு தான் பெச்சிலராவே இருக்கணும்ங்கிறது நல்லா உன்னையே மாதிரி என்ஜாய் ஆச்சும் பண்ணாலம் என்றான் .நான் எங்கடா என்ஜாய் பண்றேன் நொந்து வெந்து சாகுறேன் என்று விக்கி மனதில் நினைத்தான் .சரிடா நீ என்ஜாய் பண்ணு நாம அடுத்த வாரம் பாப்போம் என்றான் டேவிட் .
விக்கி சிறிது நேரம் யோசித்து விட்டு டேய் பொறு நான் இப்ப கிளம்பிட்டேன் நீ எந்த இடத்துக்கு வரணும்னு சொல்லு நான் அங்க வரேன் என்றான் .சரி வழக்கம் போல மாலுக்கு வா நான் உன் கிட்ட மட்டும் ஒரு முக்கியாமான விஷயம் பேசணும் என்றான் .சரி வரேன் என்று சொல்லி போனை வைத்து விட்டு பின்னே திரும்பி ஒரு முறை வீட்டை பார்த்தான் .ம்ம் சொல்றதுக்கு என்ன இருக்கு பழகி போச்சு உன் கிட்ட லவ் சொல்ல வரும் போது எல்லாம் இப்படி இடைஞ்சல் வர்றது
அட்லிஸ்ட் சிமியால ரெண்டு பேரும் சும்மாவாச்சும் லவ் சொன்னோமே அப்புறம் அந்த கிஸ் என்று நினைத்து பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு காரை எடுத்து கொண்டு வெளியேறினான் .கடுப்போடு காரை ஓட்டினான் .என்ன சொல்ல போறனோ எங்கிட்டும் ரெஜினாவ சுவாதிக்கு ஆக டைவர்ஸ் பண்ணிட்டேன் கூடிய சீக்கிரம் ஸ்வாதிய கல்யாணம் பண்ண போறேன்னு சொல்வனா என்ன சொல்ல போறனோ போயி பாப்போம்
பின் டேவிட் சொன்ன மாலுக்கு போனான் .அங்கே போன பின்பு டேவிட் சிரித்த முகத்தோடு வரேவேற்றான் ,ஹே பேச்சிலர் நைட் பிகர ஏங்க பிடிச்ச பார்டிலையா பப்லயா என்றான் .அது வழக்கம் போல பப் தான் என்றான் விக்கி .ம்ம் இன்னும் கொஞ்ச வருசத்துக்கு பேச்சிலரவே இருந்து இருக்காலம் எந்த தொல்லையும் இல்லாம இன்னும் கொஞ்ச வருஷம் நிம்மதியா என்ஜாய் பண்ணி இருக்காலம் என்றான் டேவிட் .
சரி அத விடு முதல எதாச்சும் சாப்பிட்டு கிட்டே பேசுவோம் என்று அவன் டேவிடை கூப்பிட்டு கொண்டு ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு இருவரும் ஒரு இடத்தில உக்காந்தார்கள் .சிறிது நேரம் போனது விக்கி நான் சொல்ல வந்த விசயத்தையே மறந்துட்டேனே என்றான் .சரி சொல்லு என்றான் விக்கி ,சுவாதி எங்க இருக்காங்கிறத கண்டு பிடிச்சுட்டேன் என்றான் டேவிட் .உடனே அதை கேட்டு விக்கி அதிர்ச்சியில் மெல்ல இருமினான் .போச்சு செக்ஸ் பண்ணது தெரிஞ்ச மாதிரி
அவ என் கூட இருக்கிறதும் தெரிஞ்சு போச்சா போச்சு இன்னைக்கு கொல்ல போறான் சரி நம்மால எதுவும் வாய கொடுத்து மாட்ட வேணாம் அவனா சொல்றத கேப்போம் என்று நினைத்து கொண்டான் .ம்ம் சொல்லுடா என்று மட்டும் சொன்னான் .சொல்றேண்டா ஆனா அதுக்கு முன்னாடி சுவாதி யாரு அவளோட வரலாறு என்ன இதலாம் இந்த ஒரு மாசம் தேடி கண்டு பிடிச்சு இருக்கேன் என்றான் .அட மூதெவி ரெண்டு வருஷம் அவள லவ் பண்ணிருக்க அப்பவே அவளா பத்தி எதுவும் தெரியாதா உனக்கு என்று விக்கி மனதில் நினைத்து கொண்டான் .
இத்தன நாள் என் கிட்ட சுவாதி அவ ஒரு அனாதைன்னும் அநாதை இல்லத்துல வளந்ததாதவும் சொன்னா ஆனா அது பொய் என்றான் .அப்ப நம்ம கிட்ட மட்டும் தான் உண்மைய சொல்லிருக்கா போல என்று நினைத்து கொண்டான் விக்கி .அவ யாரு தெரியுமா அவ அப்பா யாரு தெரியுமா என்றான் டேவிட் .யாருடா சொல்லு என்றான் விக்கி .சொன்னா நீ ஆடி போயிடுவா என்றான் டேவிட் .சொல்லுடா முதல யாருன்னு அப்புறம் பாப்போம் ஆடுறத என்றான் .
அவ பேரு மிஸ்டர் பிரகாஸ் மேனன் என்றான் டேவிட் .இந்த பேர எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே என்றான் விக்கி .கண்டிப்பா இருக்கும் ஏன்னா அவரு உன் கூட சம்பந்தப்பட்டவர் தான் என்றான் டேவிட் சிரித்து கொண்டே .அது எப்படிடா மேனன்கிறது கேரளாகாரங்கே பேரு அவங்கே எப்படிடா எனக்கு சொந்தமாக முடியும் என்றான் .உனக்கு சொந்தம் எல்லாம் இல்ல உனக்கு பாஸ் என்றான் டேவிட் .போடா யார் கிட்ட கதை விடுற எங்க பாஸ் பேரு சரண் சிங் என்றான் .


டேய் அந்த பஞ்சாப் காரன் இல்ல உங்க உண்மையான பாஸ் இந்த கேரளாக்காரன் தான் உங்க பாஸ் என்றான் .அதாவது பினாமியா சிங்கு என்றான் விக்கி .இல்ல உண்மைலே இந்த பிரகாஸ் தான் பாஸ் சிங் சும்மா அசிஸ்டன்ட் என்றான் ..அப்படின்னா நான் ஒரு நாள் கூட அவர மீட்டிங்ல பாத்தது இல்லையே என்றான் விக்கி .அவரு உலகம் முழுக்க சுத்துர்வாறு இந்த சின்ன கமபெனிக்கு எப்படி வருவாரு என்றான் டேவிட் .
என்ன நான் வேல பாக்குறதே சின்ன கம்பெனியா என்றான் விக்கி .டேய் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் நார்த்ல எப்படி அம்பானி அதானியோ அதே மாதிரி தான் சவுத்ல இந்த பிரகாசும் ஏகப்பட்ட சொத்து இருக்கு என்றான் .அப்படி எவளவு இருக்கும் சும்மா ஒரு 100 கோடி என கேட்டான் விக்கி .போடா 700 கோடி அவர் சொத்து மதிப்பு போன வருஷம் பணக்காரங்களா இவரு 4வது இடம் என்றான் டேவிட் .
சரி அதலாம் இருக்கட்டும் அவர் தான் சுவாதி அப்பான்னு எப்படி கண்டுபிடிச்சஎன்றான் விக்கி .சுவாதிய நினைச்சு எனக்கு ஒரு மாசமா தூக்கமெ இல்ல என்று அவன் சொன்ன போது எனக்கு 7 மாசமா தூக்கம் இல்ல என்று விக்கி நினைத்து கொண்டேன் .அதான் அவள தேடி அடிக்கடி ஹாஸ்டல் போனேன் அவ உண்மைலே அங்க இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவ அட்ரஸ் கேட்டேன் வார்டன் தரல ஆனா நான் உள்ள வேல பாக்குற வேலைக்காரிய வச்சு வாங்கி அவள தேடி தமிழ் நாடு போனேன் .
அப்புறம் அப்படி இப்படின்னு அலைஞ்சதுல அவ இப்படி பெரிய ஆளோட மக ன்னு தெரிஞ்சது .என்ன விஷயம்ன்னா சின்ன வயசிலே அவங்க அப்பாவும் அம்மாவும் டைவர்ஸ் வாங்கிட்டாங்க அதான் அவங்க பத்தி ஏதும் சுவாதி என் கிட்ட பேசல என்றான் .சரி இப்ப எதுக்குடா அவள பத்தி பேசி கிட்டு என்று பேச்சை மாத்த முயற்சி பண்ணான் விக்கி .இல்லடா இப்ப அவ முந்தி மாதிரியே அனாதையா இருந்தாலும் ஒன்னு சேந்து இருக்காலம் அவ கூட .ஆனா இப்ப சேர முடியாது என்றான் டேவிட் .
விக்கி ஒன்றும் சொல்ல வில்லை இப்ப என் நிலைமை எப்படி இருக்குன்னா சச்சின் பட ஜெனிலியா நிலைமைல இருக்கேன் என்றான் டேவிட் .அது என்ன படம்டா என்றான் விக்கி .அது விஜய் படம்டா பாத்தது இல்ல என்றான் டேவிட் .இல்லடா நான் எப்பயுமே இந்த விஜய் அஜித் படங்கள் ஏதும் பாக்க மாட்டேன் எரிச்சலா இருக்கும் சும்மா சண்ட மட்டும் போட்டு கிட்டு இருப்பாங்கே என்றான் விக்கி ,
சரி அத விடு அந்த படத்துல விஜய் ஆரம்பத்துல ஏழையா இருந்து ஜெனிலியா கிட்ட ப்ரொபோஸ் பண்ணுவாரு .ஆனா அவ ஏத்துக்க மாட்டா ,ஆனா ஒரு கட்டத்துக்கு மேல அவளுக்கு லவ் வரும் ஆனா அப்ப விஜய் அப்பா பெரிய பணக்கரான்னு தெரிஞ்சு இப்ப லவ் சொன்னா நல்லா இருக்காதுன்னு ஒதுங்குவா
இப்ப அதுக்கும் நீ பேசுறதுக்கும் என்ன சம்பந்தம் என்னடா பேசுற நீ நாளைக்கே நான் போயி கொஞ்சம் கெஞ்சுனாலெ போதும் சுவாதி மறுபடியும் என் கூட வந்துடுவா ஆனா அவ பணக்காரின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் வரேன் தெரிஞ்சா என்னைய கேவலமா நினைப்பா பணத்துக்காக வந்து இருக்கான்னு அதான் இப்ப என்ன பண்ணணு தெரில என்றான் .டேய் டேவ் இதலாம் என்று அவன் ஆரம்பிக்கும் முன் வேணாம் சொல்லாத தெரியும் நீ என்ன சொல்ல வருவேன்னு தெரியும் எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு அதுனால இன்னும் சுவாதிய நினைக்கிறது தப்பு அதானே
என்னால அவள மறக்கவே முடியல சரி அத விடு நான் பிரகாஸ் மேனன அதாவது சுவாதியோட அப்பாவ நேரடியாவே பாத்தேன் என்றான் டேவிட் .என்னடா சொல்ற எங்க என்றான் விக்கி .கேரளாவுல இருக்க அவர் ஆபிஸ்ல முத உள்ளேயே ஒரு ரெண்டு நாள் விடல அப்புறம் அவர் பொண்ண பத்தின்னு சொன்ன உடனே அவர் உள்ளே கூப்பிட்டு பேசுனாரு .அவர் பொண்ண அவர் பாத்து 7,8 வருஷம் ஆச்சு பாத்தாலே எரிஞ்சு விளுகுரா அதனாலே பாக்கல அப்படின்னு சொன்னார் .
அப்புறம் என் கதைய சொன்னேன் முதல கொஞ்சம் கோப பட்டாரு அப்புறம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாத்துட்டு ஓகேபா என் பொண்ணுக்கு உன்னையே பிடிச்சு இருந்தா நான் கண்டிப்பா சேத்து வைக்கிறேன்னு சொன்னார் .நானும் சரின்னு சொன்னேன் ஆனா இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல .நான் அவள எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போனப்ப எங்க அம்மா கொஞ்சம் கேவலமா வேற பேசிட்டாங்க என்றான் .
என்னது என்றான் விக்கி .அட ஆமாடா நீ ஒரு அநாதை என் பையன் படிச்சவன் இஞ்சினியர் அப்புறம் நாங்க பணக்கார குடும்பம் நாலா என் பையன மயக்கி கல்யாணம் பண்ணி வசதியா இருக்க பாக்குரியான்னு நேருக்கு நேராவே கேட்டாங்க என்றான் டேவிட் .அதுக்கு அவ என்ன சொன்னா என்றான் விக்கி .ஒன்னும் சொல்லல சிரிச்சுகிட்டே ஆமாங்க அப்படிதான்னு சொல்லிட்டு வீட்ட விட்டு வெளியேறிட்டா .அன்னைக்கே அவ யாருன்னு சொன்னா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து இருக்காலம் .
நான் உனக்கு பாஸ கூட வந்து இருக்கலாம் ம்ம் நாங்க பணக்கரங்க்லாம் இப்ப பாத்தா அவ வீட்ல ஒரு நாளைக்கு நாயுக்கு ஆகுற சாப்பாடு செலவு தான் எங்க வீட்ல எல்லாருக்கும் ஒரு மாசத்துக்கு ஆகுற செலவு எங்களுக்கு சொந்தமா ஒரு வீடு தான் இருக்கு .அவளுக்கு சொந்தமா பல அப்பர்த்மெண்டே இருக்கு இதுல 4 ,5 போட் ஹாவுஸ் வேற இருக்கு
எனக்கு அதலாம் வேணாம்டா எனக்கு என் பழைய சுவாதி மட்டும் எனக்கு கிடைச்சா போதும் .இந்த சொத்து பணம் எந்த மயிரும் வேணாம் என்றான் .அவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தான் .ஏதாவது பதில் பேசுறேன்னு உளறிட்டா என்ன பண்ணணு அமைதியா இருந்தான் .சுவாதி மட்டும் கிடைசுட்டான்னா ரேஜினா கிட்ட பேசி சமாதனம் பண்ணி டைவர்ஸ் வாங்கிடுவேன் அப்படியே வாங்கி போனாலும் சுவாதி என்ன சொல்லுவளோ என்ன என்னையே என்றான் .ஆனா கண்டிப்பா முடியாதுன்னு சொல்ல மாட்டா ஏன்னா 3 வருஷ லவ்வு அப்புறம் என்னைய அவளுக்கு பிடிக்கும் அதுனால முடியாதுன்னு சொல்ல மாட்டா
ஐயோ நீ பேசுறத என்னால தாங்க முடியலையே என்ன பண்ணாலாம் என்று யோசித்து கொண்டு செல்லை மேசையில் அடியில் வைத்து கொண்டு give a missed a call to me என்று சுவாதிக்கு sms அனுப்பினான் ,சிறிது நேரத்தில் அவளிடிம் இருந்து கால் வந்தது .இவன் டேவிட் இடம் ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு கொஞ்சம் தள்ளி நின்று ஹலோ என்றான் .அவளும் ஹலோ என்றாள் ,அதற்கு அப்புறம் இருவாராலும் பேச முடியவில்லை .
அதன் பின் சுவாதி அமைதியை உடைத்து எதுக்கு கால் பண்ண சொன்ன என்றாள் .சும்மாதான் ஒன்னும் இல்ல என் ஆபிஸ் மெண்ட் ஒருத்தர் பிடிச்சு வச்சு கிட்டு தோன தொணன்னு பேசிகிட்டே இருக்காரு இன்னைக்கு சண் டே வேற நான் பப்க்கு போனும் இவர் விட மாட்டிங்குராறு அதான் இப்படி ஒரு போன் வர வைச்சு முக்கியாமான விசயம்ன்னு சொல்லி எஸ்கேப் ஆகுறேன் ஓகே இப்ப நான் கிளம்புறேன் வைக்காவா என்று சொல்லி அவளை பேச கூட விடமால் போனை வைத்து விட்டு
டேவிட் இடம் போனான் டேவ் ஒரு முக்கியாமான விஷயமா நான் கிளம்பனும் என்றான் .என்னடா பொன்னா என்றான் டேவிட் .எ இல்லடா என்றான் .யே நான் கோப படல நீ போயி என்ஜாய் பண்ணு என்று அவனை அனுப்பி வைத்தான் .
அவனிடிம் இருந்து தப்பித்தால் போதும் என்று வேகமாக ஓடினான் .ஆனால் வீட்டில் சுவாதி விக்கிக்கு பப்க்கு போ போறேன் என்று சொன்னதை கேட்டு கொஞ்சம் வருத்தப்பப்ட்டாள் .அப்படின்னா இன்னும் விக்கி திருந்தலையா அப்ப என்னைய கிஸ் அடிச்சது லவ்வுல இல்ல போல செக்ஸ் மூடுல போல அப்ப அவனுக்கு என் மேல லவ் இல்ல என்று யோசித்து கொண்டு இருக்க
விக்கி பப்க்கு போகமால் சுவாதியும் அவனும் ஒரு மழை இரவில் ஒன்றும் பண்ணாமல் காதலை மனதில் வைத்து பேசி கொண்டு இருந்த அந்த பார்க்கிற்கு போனான் 


விக்கி பார்க்கில் உக்காந்து யோசித்தான் .ஓகே இப்ப முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துருச்சு .நமக்கு சுவாதி வேணாம் .காரணம்னு பாத்தா நிறையா இருக்கு அவள வேணாம்னு சொல்ல .முத அவளுக்கு என் மேல லவ் இருக்கான்னு தெரியல அடுத்து எனக்கு அவ மேல நிறைய லவ் இருக்கு ஆனா ஒவ்வொரு தடவ அவ கிட்ட லவ்வ சொல்ல நினைக்கும் போது எல்லாம் தடை மேல தடையா வருது

அப்புறம் இப்ப டேவிட் ஐயோ முடியல அவன் தொல்ல கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே சுவாதிய கூட்டி ஓடி போயி கல்யாணம் பண்ணி இருந்தா இந்நேரம் நான் நிம்மதியா இருந்து இருப்பேன் .இப்ப வந்து சுவாதிய தேடி கொடு அவள கல்யாணம் பண்ணனும் அவன் பொண்டாட்டிய டைவர்ஸ் பன்னன்னும்னு கேக்குறான் முட்டா பையன் .
டேவிட் வேனாம்னும் நினைக்க முடியல 7 வருசத்துக்கு முன்னாடி மும்பை வந்தப்ப டேவிட் தான் எனக்கு எல்லாம் பண்ணான் .வேலையே அவன் பிரண்டு ஒருத்தன் மூலம் வாங்கி கொடுத்தது .அது மட்டும் இல்லாம அவன் இடத்துல நான் இருந்தாலும் கோப படத்தான் செய்வேன் .எவனோ ஒருத்தன் லதா கூட அன்னைக்கு தியட்டர்ல தடவுனதுக்கே எனக்கு அந்த கோபம் வந்துச்சு .7 வருசமா ஒண்ணா பழகுனவேன் இப்படி அவன் லவ்வர் ஓகே முன்னாள் காதலி எதுவா இருந்தா என்ன
இன்னும் அவள நினைச்சு கிட்டு தான் இருக்கான் .நானே தமிழ் நாடு போகாம இருக்க காரணம் எங்கிட்டும் லதாவையோ இல்ல நான் ரொம்ப விரும்புன முதல் காதலி உமாவையோ அவளுக புருசங்க கூட பாத்துர கூடாதுன்னு தான் .ஆமா காதலையே ரொம்ப கொடுமையானது இது தான் நாம லவ் பண்ண பொண்ணுக நம்ம கண்ணு முன்னாடி இன்னொருத்தன் பொண்டாட்டியா வந்து நிக்கறது .
ம்ம் இப்ப என்ன பண்ண நாளைக்கே நான் சுவாதியோட போயி டேவிட் முன்னாடி நின்னா அவன் என்ன பண்ணுவான் அப்படியே மனசு ஒடிஞ்சு போயிட மாட்டான் .
போனா போகட்டும் என்றது .யாருடா அது என்றான் விக்கி .நான் தான் உன் மனசாட்சி என்றது .ஆரம்பிச்சுட்டிங்களா கொஞ்ச காலம் வராம இருந்திங்க இப்ப மறுபடியும் வந்திட்டிங்க சரி என்ன சொல்ல வரிங்கலொ அத சொல்லி தொலைங்க என்றான் .ஏன் டா டேவிட்க்காக உன் லவ்வ விட்டு கொடுக்கணும்னு நினைக்கிற நீ என்ன ஹீரோவா படத்துல வர மாதிரி பிரண்டுக்கு லவ்வ தியாகம் பண்ண
அது மட்டும் இல்லாம டேவிட் சென்ஸ் ஓட தான் பேசுறானா அவனுக்கு ஒருத்தி பொண்டாட்டிய வந்துட்டா இப்ப போயி எனக்கு அவள் பிடிக்கல இவள தான் பிடிச்சு இருக்குன்னு சொல்றான் .இல்ல சுவாதி பெரிய பணக்காரிங்கிர்தால கல்யாணம் பண்ண ஆச படுறனா என்றது மனம் .இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல அவன் இன்னும் அவள லவ் பண்றான் என்று நண்பனை விட்டு கொடுக்கமால் சொன்னான் .அப்படின்னா முதலே நீ எப்படி உமாவுக்கு ஆக உங்க அப்பா அம்மா கூட சண்ட போட்டு போனியோ அந்த மாதிரி இவனும் முதலே சுவாதி தான் முக்கியம்னு வந்து இருக்கணும் .
அத விட்டுட்டு இப்ப வந்து லவ்வு கிவ்வு கிட்டு இருக்கான் என்றது மனம் ,நீ என்ன சொன்னாலும் என்னால இதுக்கும் மேலயும் சுவாதி கிட்ட என் பீலிங்க சொல்ல என்னால முடியல .அவ கிட்ட சொல்ல நினைச்சு நினைச்சு ஒவ்வொரு தடவையும் முடியாம போறத நினைச்சா எனக்கே எரிச்சலா இருக்கு போதும் இன்னைக்கு ஒரு நாள் சிமி புண்ணியத்தால அவ கிட்ட ஒரு நாடகம் மாதிரி ப்ரொபோஸ் பண்ணாதே போதும் எனக்கு என்றான் .
அவ தான் ப்ரோபஸ் பண்ண நீ ப்ரொபோசா பண்ண என மனம் கேட்டது .ஓகே ஓகே என்னால உண்மைலே அவ கண்ண பாத்தா பேச முடியல என்னமோ என்றான் .எது எப்படியோ எனக்கு சுவாதி வேணாம் போதும் அவ என் நண்பனோட முன்னாள் காதலியாவே இருக்கட்டும் எனக்கு காதலியா ஆக வேணாம் அதே மாதிரி இன்னொரு தடையும் சேந்து இப்ப வந்துருச்சு
அது அவ பெரிய கொடிஸ்வரனோட மக அதுவும் இந்தியாவிலே 5 வது பணக்கரோனோட மக ஒரு வேல நம்ம லவ் சொல்லி அதுக்கு அப்புறம் அவளுக்கு அவங்க அப்பா தான் என் கம்பெனி பாஸ்ன்னு தெரிஞ்சு நான் ஒரு வேல பணத்துக்கு தான் ஆச படுரான்னு நினைச்சா என்னவோ எதுவா இருந்தாலும் அவ எனக்கு வேணாம் என்று நினைத்து கொண்டு பார்க்கில் இருந்து போக மனம் இல்லமால் வீட்டிற்கு போனான் .வீட்டின் வெளியே காரை வெளியே நிறுத்தி விட்டு வீட்டிற்குள் போகமால் காரில் இருந்து கொண்டு யோசித்தான் .
ஒரு வேல நான் அப்பத கிஸ் அடிச்சத மனசுல வச்சுட்டு நான் என்னமோ அவள விரும்பி கிஸ் அடிச்சேன்னு நினைச்சா என்ன பண்ண விரும்பி தான் அடிச்சேன் ஆனா அது அவளுக்கு தெரிய வேணாம் .அவள பொறுத்த வரைக்கும் நான் ஒரு பொம்பள பொறுக்கியாவே இருந்துட்டு போறேன் என்று நினைத்து கொண்டு அவன் சட்டையை ஒரு மாதிரி கசக்கினான் .முடியை கலைத்து விட்டான் .மூகத்தை கொஞ்சம் களைப்போடு இருப்பது போல் வைத்து கொண்டான் .
கிட்ட தட்ட இப்போது தான் யாருடனோ மேட்டர் செய்தது போல இருப்பது போல உள்ள போனான் .வழக்கம் போல் சுவாதி ஹாலில் உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .விக்கி கதவை திறந்ததும் சந்தோசமாக திரும்பி அவனை பார்த்தாள் .அவள் மூகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு ஓடு இருப்பது போல இருந்தது .விக்கி அதை பார்த்த உடன் புரிந்து கொண்டாலும் அதை கண்டு கொள்ளாதது போல ரொம்ப டயர்டாக இருப்பது போல வந்தான் .


இருந்தாலும் சுவாதி அவனை பார்த்து ஹாய் என்றாள் .இவனும் ஹாய் என்றான் .அப்புறம் என்றாள் அவளுக்கு கேட்க வர வில்லை அவனாக சொல்லட்டும் என்று எதிர்பார்த்தால் .சுவாதி உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என்றான் விக்கி .சொல்லுடா சொல்லு ப்ளிஸ் என்னைய காக்க வைக்காத என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே நார்மல் ஆக ம்ம் சொல்றா என்றாள் .
விக்கி அவள் கண்ணை பார்த்து வழக்கம் போல் தடுமாறினான் .சரி இதையே நாம இன்னைக்கு சாதகமா எடுத்துக்கிருவோம் என்று நினைத்து கொண்டு அதாவது சுவாதி இன்னைக்கு நான் உன்னையே வேணும்னு கிஸ் அடிக்கல என்னால முடியல கடைசியா போன வாரம் பூஜா கூட செக்ஸ் வச்சேன்னா அதுக்கு அப்புறம் வைக்கவே இல்ல எனக்கு நேத்து வொர்க் இருந்ததால நேத்து பப்க்கு போயி எவளையும் காரெக்ட் பண்ண முடியல .செக்ஸ் வைக்கவும் முடியல
இன்னைக்கு நீ ரொம்ப கைய பிடிச்சு கிட்டக்க உ க்காந்தாயா மூடு ஏறிடுச்சு அது மட்டும் இல்லாம உன் லிப்ஸ் வேற ரொம்ப கிட்ட கொண்டு வந்தியா அதான் கண்ட்ரோல் பண்ண மூடியாம கிஸ் அடிச்சுட்டேன் சோ சாரி பட் இப்ப பரவல இப்ப ஒருத்தி கூட அத பினிஷ் பண்ணிட்டு தான் வந்தேன் .அதை கேட்டு சுவாதிக்கு ஒரு மாதிரி ஆனது அப்ப நம்மள செக்ஸ் மூடுல தான் கிஸ் அடிச்சு இருக்கான் லவ்வுல இல்ல என்று நினைத்து கொண்டு ஒரு மாதிரி வருத்தமான குரலில் ஓகே பரவல எனக்கு தெரியும் நீ அதுனால தான் அடிச்சேன்னு என்றாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக