http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நீதான் என் காதலி - பகுதி - 19

பக்கங்கள்

சனி, 18 ஜூலை, 2020

நீதான் என் காதலி - பகுதி - 19

ம்ம் தேங்க்ஸ் புரிஞ்சுகிட்டதுக்கு என்றான் .யே அத விடு நீ ஸ்கூல் மும்பைலயா படிச்ச என கேட்டாள் .ம்ம் உசிலம்பட்டி கவர்மென்ட் ஸ்கூல படிச்சேன் ஆனா இந்த சிமியால இப்ப மும்பைல படிச்சேன்னு சொல்லணும் என்று நினைத்து கொண்டு ஆமா ஒரு ரெண்டு வருஷம் இங்க தான் ஸ்கூல் படிச்சேன் என்றான் .ஒ ஸ்கூலே மும்பையா அப்ப நீங்க பெரிய பணக்காரங்களா என்றாள் .
பணக்காரங்களா அடி பாவி அதுக்கு எல்லாம் எனக்கு மீனிங் கூட தெரியாது நீ தான் பெரிய பணக்காரி ஆனா அத வெளிக்காட்டாம எவளவு சிம்பிளா இருக்க என்று மனதில் நினைத்து கொண்டு இல்ல நாங்க பணக்காரங்களாம் இல்ல நார்மல் மிடில் கிளாஸ் தான் எங்க அப்பா ஒரு ரெண்டு வருஷம் இங்க மேனேஜரா இருந்தாரு அதுக்கு அப்புறம் திரும்ப தமிழ் நாட்டுக்கே போயிட்டோம் மத்தப்படி உன் அளவுக்கு எல்லாம் நான் பணக்காரன் இல்ல என்றான் .
என்னது என்றாள் .ஐயோ உளறிட்டானா என்று நினைத்து கொண்டு அதான் என்றான் .அதானா என்ன என் அளவுக்குன்னா அப்ப நான் என்ன பணக்காரியா என கேட்க இல்ல அப்படி இல்ல ஓகே ஆமா நீ தான சொன்ன உங்க அப்பா நீ சின்ன பிள்ளைல இருக்கும் போதே பெரிய பிசினஸ் மென் உங்க அம்மா சப் கலெக்டர்ன்னு அப்ப நீ பெரிய பணக்காரி தானே என்றான் .


இங்க பாரு விக்கி நீ என்னைய அசிங்கமா திட்ட கூட செய் ஆனா என்னைக்கும் எனக்கு ஒரு அப்பா அம்மா இருக்கிறத ஞாபக படுத்தாத என்று சொல்லி விட்டு வருத்ததோடு அவள் ரூமிற்குள் போனாள் .ஓகே குட் நைட் என்றான் .சுவாதி ரூமிற்குள் போயி வருத்ததோடு உக்காந்தாள் .அவளை அறியாமல் அவளுக்கு கண்ணீர் வந்தது .ஓகே ஓகே நான் அழுகல என்று கண்ணை துடைத்து விட்டு
ஏன் அழுகுறேன்னா உங்க அப்பாவுக்கு என் மேல லவ் இல்லையாம் லஸ்ட் தான் இருக்காம் .ஓகே உங்க அப்பாவுக்கு என்னைய பிடிக்கவே வேணாம் அத நினைச்சு நான் வருத்தம் எதுவும் படல ஏன்னா என்னைய விட்டு எல்லாரும் பிரியுறது வழக்கம் தானே அதுனால எனக்கு வருத்தம் இல்ல சந்தோசம் உங்க அப்பா நிம்மதியாவச்சும் இருக்கட்டும் என்று தன் வயிற்ரை தொட்டு தன் வயிற்றில் உள்ள குழந்தையிடம் அழுது கொண்டே பேசினாள் .
விக்கி தன் ரூமில் வழக்கம் போல் தலைகாணியை போட்டு அடித்து கொண்டு நான் நிம்மதியா இல்ல நான் நிம்மதியா இல்ல என்று சொல்லி கொண்டு இருந்தான் .நான் உன்னையே ரொம்ப லவ் பண்றேன் சுவாதி ஆனா அத சொல்ல தான் என்னால முடியல என்று சொல்லி அவனும் அழுதான் .
இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த முடியாமல் மனதிற்குள்ளே அடைத்து வைத்து சிரம பட்டார்கள் .
இனி இரண்டு மாதங்களுக்கு பிறகு ……..
விக்கி வழக்கம் போல ஆபிஸ்ல் உக்காந்து எரிச்சொலடும் வருத்தொடும் உக்காந்து இருந்தான் .மணி வேகமாக வந்தான் மச்சி வள்ளி போன் போட்டாடா தண்ணி குடம் ஒடைஞ்சு இருச்சாம் என்றான் .உடைஞ்சா வேற வாங்க சொல்லுடா என்றான் விக்கி புரியமால் .டேய் லூசு அது இல்லடா அவளுக்கு குழந்தை வெளிய வர போகுதாம் என்றான் .ஓகே அப்ப இந்தா கார் சாவி நீ முதல போ நான் பாஸ் கிட்ட சொல்லிட்டு ஒரு அரை மணி நேரத்துல ஆஸ்பத்திரிக்கு வந்துடுறேன் என்றான் .சரிடா என்று சொல்லுவிட்டு மணி வேகமாக பதற்றோதொடு கிளம்பினான்


மணி மீண்டும் உள்ளே வந்து மச்சான் பயத்துல எனக்கு வண்டிய ஸ்டார்ட் பண்ண கூட வர மாட்டிங்குது வந்து நீயே கூட வந்து ஓட்டுடா என்றான் .

ஓகேடா இந்தா ஒரு நிமிஷம்டா என்று சொல்லி விட்டு வேகமாக விக்கி மணியோடு வெளியேறி வண்டியை ஓட்டினான் .இனி அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு போவதற்கு முன் இந்த ரெண்டு மாதங்களில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் பாப்போம் .
இந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலும் விக்கி சுவாதியை தவிர்த்தே வந்தான் .ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் அவள் தூங்கிய பிறகு தான் வீட்டிற்கு வருவான் .அதே போல் காலையில் அவள் ஹாலில் இல்லமால் இருக்கும் சமயம் பார்த்து ஆபிஸ்க்கு போயி விடுவான் .அதையும் மீறி அவள் இருந்தால் ஹாய் குட் மார்னிங் பாய் என்று அவள் முகத்தை கூட பார்க்கமால் சொல்லி விட்டு வேக வேகமாக கிளம்பி போயி விடுவான் .அதே போல் தான் சாயங்காலமும் அவள் இருந்தால் உடனே எவளையோ அப்போது தான் மேட்டர் பண்ணி விட்டு வந்தது போல
ரொம்ப டயர்டா இருக்கு அப்பா என்ன பிகருடா அவ என்று சொல்லி கொண்டே அவள் ரூமிற்கு போயி விடுவான் .ஆனால் நிஜத்தில் இந்த ரெண்டு மாதத்தில் அவன் ஒரு நாள் கூட பப்ற்கோ பார்டிக்கோ போக வில்லை .எவளையும் போடவும் இல்லை .வருண் கூட அடிகடி இவனை பார்டிக்கு கூப்பிடுவான் .ஆனால் விக்கி வர பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவான் .ஆனால் அவன் தினமும் மறக்கமால் ஒரு இடத்திற்கு தினமும் சென்று விடுவான் .
அது அந்த பார்க் சுவாதியும் விக்கியும் ஒரு நாள் முழுதும் காரில் பேசி கொண்டு இருந்த அதே பார்க் அங்கு விக்கி மட்டும் சென்று ஏதாவது ஒரு இடத்தில உக்காந்து தினமும் சுவாதியை பற்றி நினைத்து கொண்டு இருப்பான் .அதே போல் டேவிட் கூட செல்வான் .அவன் என்ன பேசினாலும் எல்லாம் என் நேரம் பொண்ணுகளுக்கு நான் செஞ்ச தொரகம் டேவிட் உருவத்துல வந்து டார்ச்சர் பண்ணுது என்று நினைத்து கொண்டு அவன் பேசுவதை சகித்து கொள்வான் /.
அவ்வபோது மணி வீட்டிற்கு போயி வள்ளியை நலம் விசாரித்து விட்டு வருவான் .சிமியிடம் கல்யாண வேலைகள் எப்படி போகிறது என்று போனில் விசாரிப்பான் .எப்போதாவது தண்ணீ அடிப்பான் வீட்டில் போயி படுத்து கொண்டு எல்லா காதலும் இப்படி போயிடுச்சே என்று நினைத்து அழுவான் .
ஆனால் சுவாதி அப்படி இல்லை என்னைக்கு விக்கி ப்ரொபோஸ் பண்ணுவான் என எதிர்பார்த்து பண்ணமால் விட்டானோ அப்போதே அவனை மறந்து விட்டாள் .அவளுக்கு எப்போதும் போல அவள் குழந்தை மட்டும் போதும் அதுவே உலகம் என்று நினைத்து கொண்டு வாழ்ந்து வந்தாள் .அஞ்சலி உதவியோடு அவ்வோப்து ஆஸ்பத்திரி போயி செக் ஆப் பண்ணி கொள்வாள் .டாக்டர் எங்க கணவரை என்று விக்கியை கேட்டால் அவள் ஏதாவது ஒரு பொய் சொல்லி சமாளிப்பாள் .மற்ற படி அவளுக்கும் விக்கி தன்னை அவாயிட் பண்ணுவது புரிந்தாலும் அதை ஒரு ஓரமாக வைத்து கொண்டு தன் குழந்தை எப்போது பிறக்கும் எப்போது கனடா போகலாம் என்று மட்டுமே நினைத்து கொண்டு இருந்தாள் .
இனி நிகழ் காலத்திற்கு மீண்டும் வருவோம் …
விக்கி வேகமாக காரை ஒட்டி ஆஸ்பத்திரி முன்பு நிப்பாட்டினான் வண்டி நின்றவுடன் மணி வேகமாக ஆஸ்பத்திரிக்குள் ஓடினான் .பின்னாலே விக்கியும் போனான் .அங்கு மணியின் மாமனார் மற்றும் மாமியார் .முன்னாதாகவே டேவிட்ம் வந்து இருந்தான் .மணி போயி அவர்களிடம் பேசினான் .இன்னும் பிரசவ வலி வரலாயம் அதான் உள்ள கொண்டு போகல என்றார்கள் .விக்கி டேவிட்டை பார்த்து ஹாய் என்றான் .
பின் வள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட அவள் அலறி கொண்டு கத்த வள்ளியை ஸ்டர்க்சரில் வைத்து உள்ளே கொண்டு போயி கொண்டு இருந்தார்கள் .கூடவெ மணியும் வள்ளியின் அப்பா அம்மாவும் போயி கொண்டு இருந்தார்கள் .விக்கியும் டேவிட்ம் ரிசப்சனில் இருந்து கொண்டார்கள் .அப்போது வள்ளி பிரசவ வலியில் ஊரே கேட்பது போல் மணியை திட்டினாள் .டேய் மணி நாசமா போறேவேனே எல்லாம் உன்னால தாண்டா என்னால வலி தாங்க முடியலடா இப்ப .
எல்லாம் உன்னாலதாண்டா பாவி ஐயோ வலி உயிர் போகுதே அப்பா அம்மா ஒரு வேல நான் இதுல செத்து போயிட்டா குழந்தைய நீங்க கொண்டு போயிடுங்க இவன் கிட்ட கொடுத்தா இவங்க அம்மா ராட்சசி கிட்ட கொடுத்துடுவான் .அவ கிட்ட வளரதுக்கு என் குழந்தை என்று இன்னும் அவள் என்ன என்னமோ கத்த அவளை உள்ளே கொண்டு போனார்கள் .
அப்பா என்னடா வள்ளி இப்படி திட்டுறா என்றான் விக்கி ,வள்ளி மனசுல இருக்கிறது எல்லாம் நல்லா இத சாக்கு வச்சு திட்டிட்டா என்றான் டேவிட் .ஆமாடா எதுக்குடா பாவம் நல்ல பையன் மணிய இப்படி திட்டுறா என்றான் விக்கி .ஏன் உனக்கு தெரியாதா என்றான் டேவிட் சிரித்து கொண்டே .ஏண்டா நல்ல ஆஸ்பத்திரில செக்கலன்னு திட்டுராலா என கேட்டான் விக்கி .
அப்படி இல்லடா அத எப்படி சொல்றது சரி நமக்குள்ள என்ன சரி இப்ப வள்ளி ஆரம்பத்துல என்ன திட்டுனா என்றான் டேவிட் .அவ நிறய திட்டுனா அதலாம் ஞாபகம் இல்ல என்றான் .அது வந்து அவ மணிய டேய் மணி நாசமா போறேவேனே எல்லாம் உன்னால தாண்டா என்னால வலி தாங்க முடியலடா இப்ப அப்படின்னு திட்டுனா அத உன்னால புரிஞ்சுக்க முடியாதா என்றான் .
இல்ல புரியல என்றான் விக்கி .இதுக்கு தான் சும்மா போட்டு கிட்டே மட்டும் இருக்காம சீக்கிரம் கல்யாணம் பண்ணுனும் கிறது என்றான் ,சரி அத விடு என்றான் விக்கி .டேய் இப்ப வள்ளி ஏன் கத்துரான்னா அவ பிரசவ வலிக்கு யார் காரணம் என கேட்டான் ,அவ கர்ப்பம் என்றான் விக்கி .ஐயோ மர மண்டை சரி கிட்ட வா நாம தான் மும்பைல தான இருக்கோம் அதுனால அவலவா எவனுக்கும் தமிழ் தெரியாது நீ வா என்றான் .


டேய் அவ கற்பத்துக்கு காரணம் நம்ம மணி தான என்றான் டேவிட் ,ஆமா என்றான் விக்கி.அதான் அவன திட்டுறா புரிஞ்சுச்சா என்றான் டேவிட் .ம்ம் புரிஞ்சுச்சு என்றான் .உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன் என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போது வள்ளி கத்துவதை கேட்ட விக்கி மச்சி அவ கத்துறது ஒரு மாதிரி இருக்கு வெளியே போயி ஒரு தம் போடுவோமா என்றான் விக்கி .
நானும் அத தான் நினைச்சேன் என்று டேவிட் சொன்னான் .இருவரும் வெளியே போனார்கள் .பின் இருவரும் சிகெரெட் அடித்து கொண்டே இருக்கும் போது மச்சி இந்த பிரசவத்த வச்சு நிறய A ஜோக் இருக்கு அது மூலமா உனக்கு புரிய வைக்கேறேன் என்றான் டேவிட் .சரி சொல்லு என்றான் விக்கி ,ஒரு தடவ ஒரு பொண்ணு பிரசவ வலில டேய் குமரேசா நாயே எல்லாம் உன்னால தாண்டா எல்லாம் இப்படின்னு கத்துச்சாம் அப்ப அத பாத்து புருஷன் ஷாக் ஆனானம் .
அதுக்கு டாக்டர் சொன்னன்கலாம் நீங்க ஒன்னும் பெருசா எடுத்துகாதிங்க பிரசவ வலில பொண்ணுக எப்பயுமே புருஷன திட்டுறது வழக்கம் ஏன்னா நீங்க தானே இதுக்கு காரணம் அப்படின்னு சொன்னங்க்லாம் .அதுக்கு புருஷன் சொன்னானாம் இல்ல டாக்டர் என் பேரு ராஜேந்திரன் என் பக்கத்து வீட்டுக் காரன் பேரு தான் குமேரேசன் அதுக்கு தான் இப்ப ஷாக் ஆனேன்னு சொன்னாம் எப்படி இருக்கு பாரு என்று சொல்லி டேவிட் சிரிக்க விக்கியும் சிரித்தான் .
அதாண்டா இந்த பிரசவ வலில இவளுக யார திட்டுராளுகளோ அத வச்சே நம்ம தெரிஞ்சுக்கலாம் குழந்தை யாரோடதுன்னு என்றான் டேவிட் ,நிஜமாவேவா டா என்றான் விக்கி .சில பேர் கத்துவாலுக சில பேர் இதுலயும் கமுக்கமா இருந்துருவாலுக என்றான் .அப்போது விக்கிக்கு அவன் மனதில் ஒரு காட்சி இல்லை இரண்டு விதமான காட்சிகள் ஓடியது .
ஒன்று டேய் விக்கி படு பாவி உன்னால தாண்டா இதலாம் உனக்கு எல்லாம் காண்டம்னா என்னனே தெரியாதா இப்ப எனக்கு வலி உயிர் போகுதே என்று சுவாதி ஒரு காட்சியில் அப்படி கத்த
இன்னொரு காட்சியில் ஐயோ டேவிட் இது உன் குழந்தை நான் தெரியா தனமா பாவப்பட்ட விக்கிய ஏமாத்திட்டேன் என்று இன்னொரு காட்சியில் அவள் கத்துவதும் போல அவன் மன காட்சியில் ஓட
எதுவா இருந்தாலும் சரி முத இது நடந்தாலும் சரி இல்ல ரெண்டாவது இது நடந்தா அவள நல்லா அசிங்கமா திட்டிட்டு நம்ம பழைய மாதிரி ஆக வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு இருந்தான் .
டேய் விக்கி விக்கி மணி மாமனார் கூப்பிடுராரு என்று சொன்ன பின் தான் விக்கி நார்மல் ஆனான் .பின் இருவரும் போக அவர் சந்தோசத்தோடு எனக்கு பேத்தி பிறந்து இருக்கு தம்பி என்றார் .ரொம்ப சந்தோசம் சார் தாய் சேய் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா என கேட்டான் டேவிட் ,ம்ம் நல்லா இருக்காங்க தம்பி என்றார் .நாங்க பாக்க போலாமா என கேட்டான் டேவிட் .ம்ம் தாரளாமா போயி பாருங்க தம்பி என்றார் .
வாடா போவோம் என்று விக்கியை இழுத்து கொண்டு உள்ளே போனான் .விக்கி சரியாக அந்த ரூம் வருவதற்கு முன் டேவிட் காதில் மட்டும் கிசுகிசுத்தான் .டேய் நீ மட்டும் போயி பாத்துட்டா வா என்றான் விக்கி .ஏன்டா நீயும் வாடா என்றான் .இல்லடா எனக்கு எப்பயுமே குழந்தைகள பாக்க பயம் ஒரு மாதிரி இருக்கும் எங்க அக்கா குழந்தையாவே நான் 6 மாசம் கழிச்சு தான் பாத்தேன் இது வேற பிறந்த குழந்தையா அதுனால ரொம்ப பயமா இருக்கு என்றான் .
அப்ப நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தாலும் பாக்க போ மாட்டியா என்றான் டேவிட் .எனக்கு தான் கல்யாணமே ஆகலையே என்றான் விக்கி .ஆனதுக்கு அப்புறம் என்றான் டேவிட் .அது அப்ப பாப்போம் என்றான் விக்கி .சரி அத அப்ப பாரு இத இப்ப பாரு என்று சொல்லி கொண்டே அவனை உள்ளே இழுத்து சென்றான் .
உள்ளே மணி வள்ளியின் தலைமுடியை ஒதுக்கி விட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு சொன்னான் .ரொம்ப தேங்க்ஸ் எனக்கு ஒரு தேவதைய பெத்து கொடுத்ததுக்கு என்றான் .அவள் கொஞ்சம் கண்ணீர் விட்டு கொண்டே ஐ அம் சாரி என்றாள் .எதுக்கு என்றான் மணி .உங்கள நான் அப்பத திட்டனதுக்கு நான் ஒன்னும் வேணும்னு திட்டல என்றாள் .யே நீ இந்த நிலைமைல இதுக்கு மேல என்னயவோ இல்ல எங்க குடும்பத்தையோ கெட்ட கெட்ட வார்த்தைல அசிங்கமா திட்டுனா கூட கவலை பட்டு இருக்க மாட்டேன்
எனக்கு என்ன கவலைன்னா உனக்கு ஒன்னும் ஆகிட கூடாதுன்னு தான் குழந்தைக்கு கூட ஏதும் ஆனாலும் உனக்கு ஒன்னும் ஆக கூடாது என்றான் .அப்படி எல்லாம் சொல்லாதிங்க என்றாள் .சரி இனி மேல உன்னையே இப்படி கஷ்ட படுத்த மாட்டேன் நமக்கு இவ மட்டும் போதும் என்றான் .இல்ல எனக்கு நிறைய வேணும் இந்த வலியும் கஷ்டமும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சொல்ல போனா செக்ஸ்ல வர வலி சுகத்த விட இந்த வலியும் கஷ்டமும் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு என்றாள் .
ஹும் என்று டேவிட் தொண்டையை செறும இருவரும் திரும்பினர் .நீங்க எப்படா வந்திங்க என்றான் மணி .அது கிடக்கட்டும் ஏங்க என் மரு மகள என்று டேவிட் சொல்லி கொண்டே குழந்தையை தேடி போனான் .உடனே மணி தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து டேவிட் இடம் கொடுத்தான் .டேவிட்ம் மணியும் குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க விக்கி மெல்ல கட்டிலில் படுத்து கிடந்த வள்ளியிடம் போனான் .
யே நீ எப்படி இருக்க என்றான் .ம்ம் நல்லா இருக்கேண்டா நல்ல வேல சுக பிரசவம் ஆச்சு இல்லாட்டி என்னால ஒரு மாசத்துக்கு அசைய கூட முடியாது என்றாள் ,ம்ம் நல்லது என்றான் .யே நீ என் பொண்ண பாக்கலையா என கேட்டாள் .இல்ல அது வந்து என்று திணறினான் .எனக்கு தெரியும் உனக்கு குழந்தைகன்னா பயம்ன்னு பரவல நீ வந்தியே அதுவே போதும் அண்ட் உனக்கும் தேங்க்ஸ் நீ மட்டும் இல்லாட்டி இந்நேரம் எங்க அப்பாவும் அம்மாவும் இங்க என் பக்கத்துல இருந்து இருக்க மாட்டாங்க அதுனால என் பொண்ணு உன் பையன்னுக்கு தான் என்றாள்
அதலாம் முடியாது நான் தான் இவள முத தூக்குனென் அதுனால இவ என் வீட்டுக்கு தான் மருமகளா வரணும் என்றான் டேவிட் .சரி சரி அதலாம் அப்புறம் பாப்போம் விக்கி வந்து நீ கொஞ்சம் குழந்தைய பாரு என்றான் மணி .இல்லடா என்றான் .அட வாடா என்றான் மணி .விக்கி கொஞ்சம் பயந்து கொண்டே போனான் அங்கு மணியின் கையில் இருந்த அந்த புது ஜீவனை பார்க்க அவனுக்கு என்னவோ போல் இருந்தது
அதன் பிஞ்சு கைகல் இவன் மேல் லைட் ஆக பட்டது /அதன் மேல் இருந்த ஒரு வாசனை இதலாம் விக்கிக்கு என்னவோ போல் இருந்தது .அவனால அங்கு நிற்க முடியவில்லை .ஓரளவு சமாளித்து கொண்டு அதை பார்க்கமால் பேச்சை மாற்றுவது போல மணி உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டியா என்றான் விக்கி .ம்ம் அத பத்தி தான் பேசணும்னு நினைச்சேன் மச்சி ஒரு நிமிஷம் வெளிய வா என்று அவனை கூப்பிட்டு போனான் .
மச்சான் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா என்றான் மணி .என்னடா எதுவா இருந்தாலும் சொல்லு என்றான் விக்கி .மச்சி எங்க அப்பா அம்மா இங்க வரணும்னு ஆச படுறாங்க ஆனா ரயில் எதுவுமே தமிழ் நாட்டுக்கு போகல பிளைட்ல வர வைக்கலாம்னு பாத்தா அது ரொம்ப ரஸ் ஆவும் ரேட் அதிகமாவும் இருக்கு அதான் என்ன பண்ணலாம்ன்னு பணம் என் கிட்ட இருக்கு ஆனா டிக்கெட் எதுவும் இருக்க மாட்டிங்குது ஏதாசும் வழி இருந்தா சொல்லுடா என்றான் .
நீ ஒன்னும் கவல படாத உள்ள எங்க ஊர் பையன் ஒருத்தன் அங்க ஏர்போர்ட் போலீசா இருக்கான் அவன் மூலமா உங்க அப்பா அம்மாவ நாளைக்கோ இல்ல அதுக்கு அடுத்த நாளோ வர வைக்கிறேன் என்றான் விக்கி .ரொம்ப தேங்க்ஸ்டா என்றான் .சரி உள்ள வா என்றான் .இல்லடா மச்சி கோபிசுக்கிடாத எனக்கு ஆஸ்பத்திரினாலும் இங்க அடிக்கிற மருந்து வாசனையும் ஒரு மாதிரி இருக்கு நான் இவளவு நேரம் இங்க இருந்ததே பெரிய விஷயம் அதுனால நான் கிளம்புறேன் நான் வள்ளியவும் குழந்தையவும் வீட்ல வந்து பாக்குறேன் அது மட்டும் இல்லாம ஆபிஸ்ல இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு அங்க போயி கொஞ்சம் வொர்க முடிக்கிறேன் என்று சொல்லி விட்டு வேகமாக போனவனை மணி கூப்பிட்டான் .
ஆபிஸ்ல எல்லாத்துக்கும் ஸ்வீட் வாங்கி கொடு இந்த பணம் என்றான் மணி .டேய் இதுக்கு நீ காசு கொடுக்கனுமா நானே வாங்கி கொடுத்துருவேன் என்று காசை திருப்பி கொடுக்க போனான் விக்கி .இல்ல மச்சி இது உனக்கு புரியாது இத என் காசுல வாங்கி கொடுத்தா தான் நல்லா இருக்கும் என்றான் மணி .ஓகே டா என்று சொல்லி விட்டு ஆபிஸ் போனான் .பின் மணிக்கு பெண் குழந்தை பிறந்தததாக எல்லாருக்கும் ஸ்வீட் ஆபிஸ்ல் இருப்பவர்கள் எல்லாருக்கும் கொடுத்து விட்டு
விக்கி அவன் கேபினுக்கு போனான் ஆனால் அவனால் வேலை பார்க்க முடியவில்லை அவனுக்கு வள்ளி பிரசவ வலியில் கத்தியது கூட பெரிதாக தெரியவில்லை .ஆனால் வள்ளியும் மணியும் குழந்தை பிறந்த பின் ஒரு நேசத்தோடும் பாசத்தோடும் காதலோடும் கொஞ்சி கொண்டும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக பேசியதையும் நினைத்து அவனுக்கு ஒரு ஏக்கம் ஏற்பட்டது அப்புறம் குழந்தையை வேற கிட்ட இருந்து பார்த்தது இதலாம் அவனால் போருக்க முடியவில்லை .
அவன் ஆபிஸ் முடிந்ததும் வேகமாக வீட்டிற்கு போக இருந்த வருணை கூப்பிட்டான் .அவன் வந்தான் பாஸ் நீங்க எதுக்கு கூப்பிடிரிங்கன்னு தெரியும் நீங்க எதுவும் பேச வேணாம் உங்கள ஏங்க கூப்பிட்டு போனும்னு எனக்கு தெரியும் வாங்க என் கூட என்றான்


எங்கடா போறோம் என கேட்டான் விக்கி .பாருக்கு பாஸ் என்றான் .என்னது பாருக்கா என்று சிறிது நேரம் யோசித்தான் .

ஏன் என்றால் சுவாதி இருக்கும் வரை குடிக்கவே கூடாது என்று முடிவு செய்து இருந்தான் ,அதனால் கடந்த 3 மாதங்களாக அவன் சுத்தமாக சாராயம் ஒரு துளி கூட எடுக்க வில்லை .எப்போதாவது டேவிட் குடிக்க சொன்னாலும் எதாச்சும் சொல்லி சமாளிச்சு குடிக்காம விட்டுடுவான் .
சிகெரட் மட்டும் வேற வழி இல்லாம அடிப்பான் .இருந்தாலும் இன்னைக்கு குடிக்கனும்னு அவனே நினைச்சான் காரணம் வள்ளிக்கும் மணிக்கும் இருக்க ஒரு வாழ்க்கை நமக்கு இல்லன்னு ஒரு ஏக்கம் .பாஸ் என்ன யோசிக்கிறிங்க என்ன சரக்கு அடிப்பமோ வேணாமானு எனக்கு கூட ஓகே இன்னைக்கு சரக்கு அடிகாட்டி பரவல ஆனா உங்களுக்கு கண்டிப்பா இன்னைக்கு அடிக்கணும் போல இருக்குமே என்றான் .
எப்படிடா உனக்கு தெரியும் என கேட்டான் .என்ன பாஸ் இன்னைக்கு நீங்க போன இடம் அப்படி என்றான் ..அப்படி எங்கடா போனேன் என்றான் .என்ன பாஸ் வள்ளி மணி குழந்தை அழகா இருந்துச்சா என்றான் .ம்ம் இருந்துச்சு என்றான் விக்கி .அத பாத்த உடனே உங்களுக்கு ஒரு மாதிரி இருந்து இருக்குமே என்றான் .விக்கி ஒன்னும் சொல்லமால் இருந்தான் .சொல்லுங்க பாஸ் என்றான் .ஆமா இருந்துச்சு என்றான் விக்கி .நம்மளும் கல்யாணம் முடிச்சு இதே மாதிரி குழந்தை பேரனும் போல இருந்து இருக்குமே என்றான் .
அட ஆமாடா சரி விடு எனக்கு அத நினைச்சாலே மண்ட வலிக்குது வா முதல சரக்கு அடிப்போம் என்றான் விக்கி .

பின் இருவரும் பாருக்கு போயி சரக்கு அடித்தனர் .விக்கி நிறைய குடித்தான் பின் சொன்னான் டேய் வருண் எல்லாம் இருந்தும் இல்லாத மாதிரி உனக்கு தொனி இருக்கா என கேட்டான் விக்கி .என்ன பாஸ் சொல்றிங்க ஒன்னும் புரியல என்றான் வருண் .உனக்கு புரியாது ஏன்னா இன்னும் நீ அந்த நிலைமைக்கு வரல என்றான் .

பாஸ் உங்க பீலிங் புரியுது எனக்கும் கூட இதே மாதிரி என் பிரண்ட்ஸ் குழந்தை பெத்துகிட்டப்ப இப்படி தோணிருக்கு என்றான் .ஒ அது இல்லடா இது வேற என்றான் .என்ன பாஸ் அது சொல்லுங்க என்றான் வருண் .அது அது அது என்னமோடா தெரியல என்று போதையில் உளறினான் விக்கி ,சரி விடுங்க பாஸ் உங்க கதைய நீங்க சொல்ல வேணாம் என் கதைய நான் சொல்றேன் .என் ஆளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்றான் வருண் .
எப்படா சொல்லவே இல்ல என்றான் விக்கி .நீங்க எங்க இந்த 3 மாசமா ஒழுங்காவே பேச மாட்டிங்கிரிங்க அப்புறம் எப்படி சொல்ல என்றான் .ஓகே சாரிடா சொல்லு என்றான் விக்கி .என்னத்த சொல்ல அவ வீட்ல கல்யாணம் பிக்ஸ் பண்ணி அவளுக்கு கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க அப்புறம் என்ன பண்ண என்றான் .அவ என்னடா சொன்னா என கேட்டான் விக்கி .அவ என்னத்த சொல்லுவா எங்க அப்பா தான் முக்கியம் என்னைய மறந்துடுன்னு சொல்லிட்டு போயிட்டா என்றான் .
அது என்னடா உலகம் முழுக்க இப்படி ஒரு டைப் பொண்ணுக இருக்காளுக போல என கேட்டான் .அவள சொல்லி தப்பு இல்ல நான் தான் அவளுக்கு உண்மையா நடந்துக்கிரள எப்பயுமே அவ அங்கிட்டு போனா இந்த பக்கம் பார்டி பப்ன்னு போயி ஏவ கூடயாச்சும் படுத்ததுக்கு தான் எனக்கு அந்த கடவுள் இப்படி ஒரு தண்டனையே கொடுத்துட்டார் போல என்று சொல்லி அழுதான் .விளங்கும் இவன் நமக்கு சமாதானம் சொல்வான்னு பாத்தா இப்ப இவன் அழுது இவனுக்கு நாம சமாதனம் சொல்லணும் போல என்று நினைத்து கொண்டு சரி அழுகதா இன்னும் கொஞ்சம் சரக்கு அடி என்றான் .
அப்புறம் இந்த பொண்ணுகள ஏண்டா உலகத்துல கடவுள் படைச்சாரு என்றான் .தெரியலையே பாஸ் என்றான் .எனக்கும் தெரியல ஆனா நம்மள கஸ்டபடுத்த மட்டும் படைச்சு இருக்காருன்னு தெரியும் என்றான் விக்கி .அது உண்மை பாஸ் என்றான் வருண் .அப்புறம் பாஸ் உங்க பிரண்ட்ஸ் எல்லாரும் கல்யாணம் முடிச்சுட்டாங்க நீங்க எப்ப கல்யாணம் முடிச்சு மணி அண்ணே மாதிரி குழந்தை பெத்துக்க போறீங்க என கேட்டான் வருண் .
நான் கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டேன் ஆனா எனக்கு மூனு மாசத்துல குழந்தை பிறக்க போகுது என்றான் .போங்க பாஸ் சரக்கு அடிச்சதால என்ன என்னமோ போதைலே உலருரிங்க என்றான் வருண் .அது என்னமோ நான் சொல்றத சொல்லிட்டேன் நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ என்றான் விக்க .சரி பாஸ் அத விடுங்க நீங்க கல்யாணம் சீக்கிரம் பண்ணுங்க என்றான் வருண் .எதுக்குடா என்றான் விக்கி .
ஏன்னா உங்களுக்கு வயசு ஆகிடுச்சு என்றான் வருண் .ஏன் நீ கல்யாணம் பண்ண வேண்டியது தானே உன் வயசு என்ன என்றான் .எனக்கு 26 தான் காலேஜ் முடிச்சதும் கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டேன் உங்க வயசு என்ன என்றான் வருண் .ம்ம் 31 இல்ல இந்த ஜனவரி இல்ல டிசம்பர் இல்ல என் பிறந்த நாள் மறந்து போச்சு என்று உளறினான் ,சரி எது எப்படியோ உங்களுக்கு வயசு ஆகிடுச்சு சீக்கிரம் கல்யாணம் முடிங்க என்றான் .
எனக்கு ஒரு மயிரும் வேணாம் பட்டது எல்லாம் போதும் நீ இன்னும் ரெண்டு பேக் ஆர்டர் பண்ணு என்றான் விக்கி .பாஸ் ஏற்கனவே நிறைய குடிச்சுட்டிங்க போதும் என்றான் ,அதுவும் ரைட் தான் இந்த மாதிரி ஒரு தடவ அதிகமா சரக்கு அடிச்சதால தான் என் வாழ்க்கையே திசை மாறுச்சு சோ வா போகலாம் என்று தள்ளாடி கொண்டே வெளியேறினான் .விக்கி போதையில் கார் கதவை கூட திறக்க முடியாமல் சாவியை வைத்து போதையில் நொண்டி கொண்டே இருந்தான் .
அத கொடுங்க பாஸ் நானே உங்கள வீட்ல கொண்டு போயி விடுறேன் என்றான் வருண் .நோ நோ தம்பி நானே போயிக்கிறேன் என்றான் .அட நீங்க இருக்க நிலைமைல வேற எங்காச்சும் தான் போவிங்க என் கிட்ட கொடுங்க நான் கொண்டு போயி விடுறேன் என்றான் வருண் .அப்படியாச்சும் போயி சேருறேன்டா என்னைய யாருக்கும் பிடிக்கல நான் ஒரு கெட்டவன் என்று அவன் ஒளரி கொண்டு இருக்க வருண் அவனிடிம் சாவியை வாங்கி காரை திறந்து அவனையும் உள்ளே தள்ளி காரை ஒட்டி கொண்டு போனான் .
அவன் வீட்டிற்கு போயி நிறுத்தினான் .சாவியை விக்கியிடம் இருந்து கதவை திறந்தான் .உள்ளே சுவாதி உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்ததும் சாரிங்க நான் வீடு மாறி வந்துட்டேன் என்றான் வருண் .சுவாதி விக்கியை பார்த்ததும் இல்ல கரெக்ட் தான் அவன உள்ள கொண்டு வா என்று சொல்லி கொண்டு எழுந்தாள் .அப்போது தான் அவள் வயிற்ரை பார்த்தான் வருண் .


பாஸ் என்ன பாஸ் உங்க டேஸ்ட் இது பிரக்ன்ட் லேடிஸ் எல்லாம் வீட்டுக்கு வர வைச்சு செக்ஸ் பண்றீங்க போல இப்ப என்றான் வருண் .விக்கி ஒன்றும் சொல்லமால் போதையில் தடுமாறி கொண்டு இருந்தான் .டேய் அவன விட்டுட்டு நீ கிளம்பு என்றாள் சுவாதி .இருந்தாலும் நீங்க யாரு இவருக்கு என்று வருண் ஒன்னும் புரியாமல் குழம்பி கொண்டு இருந்தான் .இருந்தாலும் நீங்க யாருன்னே தெரியல அப்புறம் எப்படி உங்க கிட்ட என் பாஸ விட்டுட்டு போறது என்றான் .
சுவாதி கடுப்போடு நான் யாருன்னு அவசியம் தெரிஞ்சே ஆகணுமா உனக்குஎன்றாள் .ஆமா அவசியம் தெரிஞ்சே ஆகணும் என்றான் என்றாள் நான் உங்க பாசொட வப்பாட்டி போதுமா என்றாள் ,இருந்தாலும் என்று சொல்லி கொண்டே இருந்தவனை சரி போதும் கிளம்புடா போ என்று பிடித்து தள்ளினாள் .அதன் பின் கதவை சாத்தி விட்டு வந்து பார்த்த போது விக்கி தரையில் படுத்து விட்டான் .
இவனுக்கு என்ன ஆச்சு என்னைக்கும் இல்லாத மாதிரி இப்படி சரக்கு அடிச்சுட்டு வந்து இருக்கு இந்த விக்கி பக்கி ஏன் ஏதும் பழைய லவ்வர் எவளையும் மும்பைல பாத்துருச்சா என்று நினைத்து கொண்டு சரி சாப்பிட்டனான்னு ஆச்சும் கேப்போம் என்று நினைத்து கொண்டு அவன் பக்கம் போனாள் யே விக்கி விக்கி என்றாள் .அவன் ம்ம் என்றான் .யே சாப்பிட்டயாடா என்றாள் .யே வருண் என்னடா பாஸ டா போட்டு கூப்பிடுர என்றான் போதையில் .
விக்கி அவன் எப்பயோ போயிட்டான் இப்ப நம்ம வீட்ல இருக்க என்றாள் .உன் வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்டு வந்த என்றான் .டேய் நான் சுவாதிடா என்றாள் .டேய் அவள பத்தி மட்டும் கேக்காத எனக்கு சுவாதிய பிடிக்கல பிடிக்கல பிடிக்கல என்றான் .ஹும் இதுல மட்டும் தெளிவா இரு போதைல இருந்தாலும் என்னைய பிடிக்காது தெளிவா இருந்தாலும் என்னைய பிடிக்காது சாருக்கு எப்படியோ போ என்று நினைத்து கொண்டு உள்ளே போனாள் .
பின் ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு திரும்ப வந்தவள் அவனை பார்த்தாள் .அவன் தரையில் படுத்து கிடந்தான் .தரை முழுதும் வாந்தி எடுத்து கிடந்தான் .அதிலே படுத்து அதை ஒளப்பி கொண்டு இருந்தான் போதையில் .அதை பார்த்த சுவாதிக்கு அவன் மீது ஒரு பரிதாபம் ஏற்பட அவனை எழுப்பினாள் ,அவனால் எந்திரிக்க முடியவில்லை ,ரெண்டு மூனு தட்டு தட்டியும் சிறிது தன்னிற் தெளித்தும் எழுப்பி விட்டாள் .
அவனும் மெல்ல எழுந்தாள் போதையில் விழ போனவனை பிடித்து தாங்கி கொண்டாள் ,மெல்ல அவனை பாத் ரூம் கொண்டு போனாள் ,அவன் சட்டையை மெல்ல கலட்டி எறிந்தாள் .தண்ணியை தொட்டு பார்த்தாள் .தண்ணி ரொம்ப குளிராக இருந்தது .சரி ஷவர் வேணாம் லைட்டா மேல மட்டும் இவன் மேல தொளிப்போம் என்று தண்ணிரை வைத்து கொஞ்சம் மேலே தொளித்து விட்டாள் .மீண்டும் அவனை கட்டிலில் கொண்டு போயி போட்டாள் .
பின் அவன் பேன்ட்டை கலட்டி விட்டு அவன் பிரோவில் இருந்த ஒரு கைலியை எடுத்து கட்டி விட்டாள் .பின் அவனை சிறிது நேரம் பார்த்தாள் .அவன் வாயில் எச்சில் ஒழுக குழந்தை போல தூங்கி கொண்டு இருந்தான் .அதை பார்த்து சுவாதி ரசித்தாள் .பின் அவன் கிட்டே போயி அவன் தலை முடிகளை சிறிது நேரம் கொதி விட்டு கொண்டே அவன் நெற்றியில் சின்ன முத்தமிட்டாள் .தேங்க்ஸ் விக்கி தேங்க்ஸ் பார் எவெரி திங் என்று சொல்லி அவனை பார்த்தாள் .ஆனால் இதலாம் போதையில் இருந்த விக்கிக்கு சுத்தமாக தெரியவில்லை
சுவாதிக்கு அவளை மீறி அழுகை வரவும் வேகமாக அவள் ரூமிற்கு போயி கதவை அடைத்து கொண்டு அழுதாள் .எனக்கு இது போதும் ஒரு பொண்டாட்டி மாதிரி அவனுக்கு இப்ப பணிவிடை செஞ்சது அவன் கூட இருந்த 7 மாசமும் இனி இருக்க போற நாள்களுமே போதும் என்று நினைத்து அழுதாள்


விக்கி காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தான் .அப்போது தான் அவனுக்கு வீட்டில் இருப்பது தெரிந்தது .மேலும் அவன் சட்டை இல்லமால் வெறும் கைலியோடு இருப்பது தெரிந்தது ரொம்ப குடித்தாதால் அவனுக்கு எவளவு யோசித்து பார்த்தும் நடந்தது சுத்தமாக ஞாபகம் வரவில்லை .அவனுக்கு வருண் கார் சாவியை அவனிடிம் இருந்து வாங்கியது மட்டும் தான் ஞாபகம் இருந்தது .

ஹலோ ஹெலோ என்று வெளியே ரூம் கதவை சுவாதி தட்ட ரொம்ப சிரமபட்டு எழுந்து கதவை திறந்தான் .அங்கு சுவாதி அவனுக்கு காப்பி கப்போடு நின்று கொண்டு இருந்தாள் .இந்தா காப்பி என்றாள் .விக்கி அதை அங்க வை இந்த வரேன் என்று சொல்லி கொண்டு சட்டையை போட்டு விட்டு வந்தான் .ஹே நைட் என்ன நடந்துச்சு நான் எப்படி வந்தேன் என கேட்டான் .ஒ அதுவா யாரோ ஒரு பையன் உன் ஆபிஸ்ல வேலை பாக்கிறவன் கொண்டு வந்து போட்டான் என்றாள் .
யாரு வருணா என்றான் .அது எனக்கு தெரில என்றாள் .ம்ம் உன்னையே பாத்தானா என்றான் விக்கி .ம்ம் பாத்தான் என்றாள் .என்ன எதுவும் சொன்னானா என கேட்டான் .ஆமா நீங்க யாருன்னு கேட்டான் என்றாள் சுவாதி .ஓகே நீ என்ன சொன்ன என்றான் விக்கி .நான் உன் வப்பாட்டின்னு சொன்னேன் என்று சுவாதி அசால்ட்டாக சொல்லவும் வாட் என்று அதிர்ச்சியோடு கேட்டான் .
ஏன் எதுக்கு அப்படி சொன்ன என்றான் விக்கி .ம்ம் அவன் அந்நேரத்துல சும்மா நீங்க யாரு நீங்க யாருன்னு கேட்டு தொல்லை பண்ணான் அதான் வேற வழி இல்லாம அப்படி சொன்னேன் என்றாள் .ஏன் உனக்கு சொல்றதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா என்றான் .அந்நேரம் வேற எதுவும் தோனல என்றாள் .ஏன் அப்படி சொன்ன என்றான் .வேணும்னா உன் பொண்டாட்டிட்டுன்னு சொல்லவா என்றாள் இளக்காரமாக .
ஏன் சொல்ல வேண்டியது தான அப்படித்தான ஆஸ்பத்திரில எல்லாம் சொல்ற ஏதோ அது என்ன மேரேஜ் சார்டிபிகட் அந்த கன்றாவில எல்லாம் அப்படி போட போற என்றான் விக்கி .வேணும்னா வேற ஆளா பாத்துக்கிராவா என்று அவள் கேட்க விக்கிக்கு கோபம் அதிகமானது இருந்தாலும் டாக்டர் சொன்னதை மனதில் வைத்து கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டு கடுப்போடு வேகமாக ரூமுக்குள் போனான் .
அங்கு பாத் ரூமில் இவன் சட்டையும் பேண்டும் வாந்தியாக இருப்பதை பார்த்து வெளியே மீண்டும் வந்தான் நான் நைட் வாந்தி எடுத்தேனா என்றான் .ஆமா என்றாள் .அப்ப என்னைய ரூம்ல கொண்டு போயி போட்டது அப்புறம் என் சட்டை பேன்ட எல்லாம் கழட்டி துடைச்சு விட்டது நீ தானா என கேட்டான் .நான் எதுக்கு உனக்கு துடைச்சு விடுறேன் அந்த பையன் தான் உனக்கு துடைச்சு விட்டது எல்லாம் என்றாள் .
ஒ அப்படியா நிஜமாவா என கேட்டான் .ஆமா நீ வரும் போதே வாந்தி எடுத்து தான் வந்த அதான் அவன துடைச்சு இருக்கணும் என்றாள். ஓகே நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு போனான் .சரி இந்த வருண் பையல பிடிப்போம் என்று நினைத்து கொண்டு வெளியே போனான் .பின் மணியிடம் இருந்து போன் வந்தது .என்னடா என்றான் ,இன்னைக்கு சனி கிழமை ஆபிஸ் இருக்கா இல்ல லீவா என்றான் .
இல்லடா 4 வது சனி கிழமை அதுனால லீவ் என்றான் விக்கி ..ஓகே அப்ப நம்ம பிரண்ட்ஸ் வட்டாரம் எல்லாம் குழந்தைய பாக்க ஆஸ்பத்திரிக்கு வரணும்னு சொல்றாங்க ஆனா நாங்க இப்ப வீட்டுக்கு போயிடுவோம் என்றான் மணி .ஏண்டா அதுக்குள்ளே போறீங்க என்றான் .இல்லடா சுக பிரசவம்நால வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க இப்ப கிளம்பிகிட்டு இருக்கோம் என்றான் .ம்ம் குட் கார் எதுவும் வேணுமா கொண்டு வரவா என கேட்டான் விக்கி .
இல்லடா எல்லாரும் போற மாதிரி சுமோ வர சொல்லி இருக்கேன் அதுல போயி இருக்கோம் இப்ப அது இல்ல நீ எல்லாத்தையும் வீட்டுக்கு வர சொல்லு அப்புறம் நீயும் வா நம்ம ஸ்டாப்கல தனியா என்னால சமாளிக்க முடியாது அதுனால நீயும் வா என்றான் .நம்ம ஸ்டாப்க யாருக்கும் நான் பொம்பள பொறுக்கினால பிடிக்காதே என்றான் .அத அப்புறம் பாத்துக்குவோம் நீ வா முதல சரி நேத்து சாய்ங்காலம் ஏங்க போன என்றான் மணி .
வேற ஏங்க பாருக்கு சரக்கு அடிக்க என்றான் .டேய் ஏண்டா என்றான் மணி .டேய் எல்லாம் உனக்கு குழந்தை பிறந்தத செளிபெரெட் பண்ணத்தான் சரக்கு அடிச்சோம் என்றான் .சரி நீ ஒரு 4 மணி போல வா என்றான் .பின் விக்கி கடுப்பில் காரை எடுத்து கொண்டு கண்ட இடங்களில் சுற்றி விட்டு 3 மணியை போல் மணி வீட்டிற்கு சென்றனர் .அங்கு எல்லாம் அவன் ஆபிஸ் ஸ்டாப்க வந்து மணி குழந்தையை பார்த்து கொண்டு இருந்தனர் .
அதை பார்த்து விக்கிக்கு எரிச்சல் தான் வந்தது சே பேசாம ஆள் இல்லாத தீவுக்கு ஓடி போயிடலாம் போல என்று நினைத்து கொண்டு உள்ளே போனான் .அங்கு சுற்றும் முற்றும் பார்த்தான் அங்கு டேவிட் இல்லை அப்பா ஒரு ஆறுதலான விசயம் ஆச்சும் இருக்கே என்று நினைத்து கொண்டு போயி வள்ளியை பார்த்தான் .என்ன எப்படி இருக்க என்றான் .ம்ம் ஓகே நீ ஏன் நேத்து சீக்கிரம் போயிட்ட என கேட்டாள் .
அது நேத்து ஆபிஸ்ல வொர்க் இருந்துச்சு அதான் என்றான் .பின் மணி வந்து அவனை தனியாக கூப்பிட்டான் மச்சி அந்த பிளைட் டிக்கெட் என்று அவன் சொல்ல ஒ சாரிடா நேத்து சரக்கு ஓவர் அதுனால மறந்துட்டேன் இப்பவே உன் கண் முன்னாடியே போன் பேசுறேன் பாரு என்று போனை எடுத்து டேய் முருகா நான் தான் விக்னேஷ் அண்ணே பேசுறேன் எனக்கு அன்னைக்கு மாதிரி ரெண்டு டிக்கட் ஏற்பாடு பண்ண முடியுமா என்றான் .என்னது ம்ம் சரி ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஆச்சும் பாரு ரொம்ப முக்கியம் டா என்றான்
மச்சான் பிளைட் ரொம்ப ரஸ் ஆம் எப்படியும் டிக்கெட் எடுக்க 4 நாள் ஆகும்ன்கிறான் அதுனால கோபிக்காதடா என்றான் .டேய் இதுக்கு எதுக்குடா கோபிக்க போறேன் சரி பரவல நிலைமை சரி ஆனதுக்கு அப்புறம் வரட்டும் என்று சொன்னான் .
அப்போது அங்கு வருண் வர அதை பார்த்த விக்கி ஐயோ இவன் ஸ்வாதிய நேத்து பாத்துட்டானே இவன் ஏதும் மணி மாதிரி உடனே ஒளர மாட்டான் இருந்தாலும் சில நேரம் உலருனாலும் உளறுவான் அதுனால இவன தனியா கூப்பிட்டு போயி சொல்வோம் என்று அவனிடிம் போனான் .அவன் குழந்தையை பார்த்து கொண்டு இருந்தான் டேய் தம்பி ஒரு நிமிஷம் இங்க வா என்றான் விக்கி .
இருங்க பாஸ் கொஞ்ச நேரம் குழந்தைய கொஞ்சிக்கிறேன் அப்படியே மூக்கு மட்டும் தனியா நம்ம மணி அண்ணே மாதிரி இருக்குல என்று சொல்லி அதை கொஞ்சி கொண்டு இருந்தான் .சரி இங்க வா மாடிக்கு ஒரு நிமிஷம் என்று அவனை கூப்பிட்டு போனான் .எங்கடா போறீங்க என்றான் அவர்களை பார்த்து மணி .அவன்டிம் மேலே போயி தம் அடிக்க போவதாக செய்கையால்அவனுக்கு காட்டி விட்டு விக்கி அவனை கூப்பிட்டு மாடிக்கு போனான் .


மாடிக்கு போன பின் இருவரும் ஆளுக்கு ஒரு சிகரட் எடுத்து அடிக்க ஆரம்பித்தனர் .டேய் நேத்து என் வீட்டுக்கு வந்தேளே அங்க ஒரு பொண்ண பாத்தியா என்றான் விக்கி .அட ஆமா பாஸ் மறந்தே போயிட்டேன் இப்ப தான் ஞாபகம் வருது யார் பாஸ் அவங்க உங்க வீட்ல என்ன பண்றாங்க அப்புறம் கர்ப்பமா வேற இருக்காங்க நான் கேட்டதுக்கு ரொம்ப கோபமா என்னைய திட்டுனங்க யாரு அவங்க என்றான் வருண் .
வருண் முதல என்னால இத்தன கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது ஏன்னா நானே அதுக்கு பதில் தேடி கிட்டு இருக்கேன் கிடைக்கல என்றான் .என்ன பாஸ் வர வர சாமியார் மாதிரி பேசுறிங்க என்றான் வருண் .வருண் நீ என் கிட்ட எல்லாம் வெளிப்படையா சொல்ற ஆனா என்னால அப்படி சொல்ல முடியல சோ சாரி என்றான் விக்கி .பரவல பாஸ் இருக்கட்டும் உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க என்றான் .
இப்ப எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றான் .என்ன பாஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்றான் வருண் .நீ அவள என் வீட்ல பாத்தாத யார் கிட்டயும் சொல்ல கூடாது .குறிப்பா மணி கிட்ட என்றான் .இத நீங்க சொல்லனுமா நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் என்றான் வருண் .
தேங்க்ஸ் என்றான் விக்கி .இருக்கட்டும் பாஸ் என்றான் .டேய் அப்புறம் இன்னொன்னுக்கும் தேங்க்ஸ் என்றான் விக்கி .எதுக்கு பாஸ் என்றான் வருண் .நேத்து வீட்ல கொண்டு போயி செப்பா விட்டது அப்புறம் எனக்கு வாந்திய கீளின் பண்ணி எனக்கு ட்ரெஸ் மாத்தி விட்டது இதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்றான் விக்கி .பாஸ் வீட்ல கொண்டு போயி விட்ட வரைக்கும் தான் நான் நீங்க வாந்தி எடுத்ததாலம் எனக்கு சம்பந்தம் இல்ல என்றான் .
அப்புறம் யார் அத பண்ணது என்றான் விக்கி .ம்ம் பேய் பண்ணி இருக்கும் ஏன் பாஸ் வீட்ல வேற யார் இருக்கா உங்கள தவிர அவங்க தான் பண்ணி இருக்கணும் என்றான் .ஒ அப்ப நீ பண்ணலையா என்றான் .சத்தியமா பன்னல எனக்கு அடுத்தவங்க பண்ணதுக்கு கிரடிட் வாங்க பிடிக்காது என்றான் .ஒ அப்ப அவ தான் பண்ணி இருக்கணும் அவ ஏன் அப்படி பண்ணா என்றான் அத நீங்க அவங்க கிட்ட தான் கேக்கணும் என்றான் .
கேக்குறேன் இப்பயே கேக்குறேன் என்று சொல்லி விட்டு வேகமாக கிளம்பினான் .அப்போது கீழே போன போது அங்கு டேவிட் அவன் பொண்டாட்டியோட வந்து இருந்தான் .

போச்சுடா இப்ப இவன தாண்டி எப்படி போ போறோம் என்று நினைத்து கொண்டு மெல்ல நடந்தான் .அவனை பார்த்ததும் டேவிட் பிடித்து கொண்டான் .நீ எப்படா வந்த என்ன மாடில இருந்து வர என கேட்டான் .

நான் அப்பதையே வந்துட்டேன் சும்மா தம் போட மேல போனேன் என்றான் .ம்ம் சரி இருடா கொஞ்ச நேரம் பேசிட்டு போவோம் என்றான் டேவிட் .இல்லடா நான் கிளம்புறேன் என்றான் விக்கி .என்னடா நீ வர வர ரெண்டு நிமிஷம் கூட நிக்க மாட்டிங்குற என்னதான் ஆச்சு டேய் மணி வந்து இவன் என்னன்னு கேளுடா என்றான் டேவிட் .என்னடா என்ன விஷயம் என்றான் மணி .
யே ஒன்னும் இல்ல மச்சான் உன் விசயமா தான் இப்ப நான் ஏர்போர்ட்ல வேலை பாக்குற எனக்கு தெரிஞ்சவன பாக்க போகணும் அதான் சீக்கிரமா போறேன் என்றான் .ஒ அப்பன்னா போடா என்றான் மணி .என்ன விஷயம்டா என்றான் டேவிட் .டேய் அவன் பிளைட் டிக்கெட் விசயமா போறான்டா என்றான் மணி .ஓகே விக்கி நீ கிளம்பு முடிஞ்சா இவினிங் இல்ல நாளைக்கு எங்கயாச்சும் போவோம் என்று அவன் காதில் கிசுகிசுத்தான் .
சரிடா என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான் .பின் காரில் ஏறிக்கொண்டு வேகமாக காரை ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு போனான்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக