http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : முத்தமிட்ட உதடுகள் - பகுதி - 1

பக்கங்கள்

திங்கள், 6 ஜூலை, 2020

முத்தமிட்ட உதடுகள் - பகுதி - 1

காலை..!  ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விட்டான் நவநீதன். தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான.. திருப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்த்து வரும் நவநீதன் தங்கியிருப்பது அவன் அத்தை வீட்டில் !!
வழக்கமாக ஆறரை.. அல்லது ஏழு மணிக்கு மேல் எழுபவன் இன்று ஐந்தரை மணிக்கே எழுவதற்கு ஒரு காரணம் இருந்தது.
கிருத்திகா !!
நவநீதனின் அத்தை மகள் !! அத்தையின் ஒரே மகள் !! அவன் உயிரை குடிப்பதற்கென்றே அழகாய் பிறந்து தொலைத்தவள் !! அவன் தூக்கம் கலைந்து எழுந்ததும் முதலில் கிருத்திகாவின் முகத்தில்தான் கண் விழித்தான். !!


அவள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். மார்புவரை போர்வை மறைத்திருக்க.. ஆழ்ந்து தூங்கும் அவளின் வட்ட முகம் மட்டும் அழகாக தெரிந்தது !! இன்று.. அவளுக்கு பிறந்த நாள் !!!
வெளியே வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. வீதியில் நடப்பவர்கள் எல்லோருக்கும் மிக அவசரமான காரியங்கள் இருந்தது. நடை பயிற்சி அறியா நகரம்.. ஆனால் இங்கு சாதாரனமாக நடப்பதே ஒரு நடை பயிற்சி போலத்தான் !!
நவநீதன் வாய் கொப்பளித்து.. முகம் கழுவிப் போனதும்.. அடுப்பின் முன்னால் நின்று சமையலில் ஈடு பட்டுக் கொண்டிருந்த அவன் அத்தை கேட்டாள்.
'' நேரத்துல போகனுமா ?''
'' இல்ல'' என்றான்.
அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அத்தை.
'' நீ நேரத்துல எந்திரிச்சத பாத்து நான் அப்படி நினைச்சிட்டேன்.''
''தூக்கம் தெளிஞ்சிருச்சு '' சிரித்து வைத்தான்.
'' காபி சூடு பண்ணி தரேன். உக்காரு. '' அடுப்பில் இருந்த ஒரு பாத்திரத்தை இறக்கி வைத்து விட்டு.. காபி பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள் அத்தை.
அப்பாவின் இளைய தங்கை இவள். வேறு ஒரு பெண்ணின் கணவன் விரித்த வலையில் விழுந்து..  கர்ப்பம் தரித்து.. அவனையே மணந்து கொண்டவள் !! ஆனாலும் கணவன் உறவு நிரந்ரமாக அமையப் பெறாதவள். எப்போதாவது வந்து போவான் அவ்வளவே.. !! நவநீதன் அறிந்தவரையில் அவர் நல்ல மனிதர்தான். ஆனால் அத்தைக்கு நல்ல கணவனாக இல்லை !!
  அத்தைக்கு சொந்தமான ஒரு சின்ன வீடு இது. இரண்டு  அறைகளை மட்டும் கொண்ட சாதாரண ஓட்டு வீடு.  முன்னறை, பத்துக்கு ஆறு என சமையற்கட்டு.! உள்ளே ஒரு அறை. பத்துக்கு பத்து..! ஹால்.. படுக்கை அறை எல்லாம் அது ஒன்றுதான் .!
உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்தான் நவநீதன். ஆழ்ந்து தூங்கும் கிருத்திகாவைப் பார்த்தான். அவளின் தடித்த உதடுகள் கொஞ்சமாய் பிளந்திருந்தது. தலை முடி கலைந்திருக்க.. அவள் விட்ட மூச்சுக்கு ஏற்றவாறு அவளின் மார்பு ஒரே சீராக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.
'' லைட் போட்டுக்கோ.. '' எதற்கோ உள்ளே வந்த அத்தை ஜீரோ வாட்ஸை அணைத்து விட்டு ட்யூப் லைட்டை போட்டு விட்டாள்.
'' இவ தூங்கறா.. '' என்றான்.
'' எழுப்பி விடு.. கழுதை விட்டா தூங்கிட்டே இருப்பா '' எனச் சொல்லி விட்டு அத்தை வெளியே போனாள்.
உதட்டில் மெல்லிய புன்னகையுடன் மீண்டும் கிருத்திகாவைப் பார்த்தான்.! பன்னிரெண்டாம் வகுப்புவரை படித்து விட்டு.. காலேஜ் போகாமல்.. இரண்டு வருடங்களுக்கு மேலாக.. அவளும் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறாள்.! ஒரே பெண் என்பதால் நிறைய செல்லம். பிடிவாத குணம்..!!
அத்தை ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். அவன் கையில் காபியை கொடுத்து விட்டு கிருத்திகாவை தோளில் தட்டி எழுப்பினாள்.
'' ம்ம்ம்ம். !!'' என நீண்டாத முனகிக் கொண்டு புரண்டு படுத்தாள் கிருத்திகா.
'' எந்திரிக்கிறாளா பாரு.. சனியன். ஏய் எந்திர்ரீ.. எருமை.. '' அத்தை திட்டினாள்.
'' விடுத்தே '' என்றான் நவநீதன் ''இன்னிக்கு அவ பொறந்த நாள். சனியன் அது இதுனு திட்டாத..''
'' ம்ம்ம்ம். . நல்ல்லா ஷொல்லு உங்கொத்தைக்கு.. '' என்று மூடிய  கண்களைத் திறக்காமலே முனகினாள் கிருத்திகா.
'' வா.. வாய்லயே சூடு போடறேன் !!'' அத்தை திட்டி விட்டு முன்னறைக்கு போனாள்.
அரைக் கண் திறந்து நவநீதனை பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் கிருத்திகா !!
'' ஹேப்பி பர்த் டே கிருத்தி !!!'' அவள் காது பக்கத்தில் குனிந்து  சொன்னான் நவநீதன்.
'' ம்ம்ம்.. தேங்க்ஸ் !!'' கண் விழித்து அவனை பார்த்துச் சிரித்தாள்.
அத்தை மீண்டும் கிருத்திகாவுக்கு காபி கொண்டு வந்தாள்.
'' நல்ல நாளும் அதுவுமா தூங்கி வழியாம கொஞ்சம் சுருசுருப்பா எந்திரி. இந்த காபி குடி ''
'' போம்மா.. ''
'' ம் குடுங்கத்தே '' நவநீதன் காபியை  கையில் வாங்கிக் கொண்டான். அதை எட்டி டிவி ஸ்டேண்டு மேல் வைத்தான்.
'' எந்திரி கிருத்தி.. ''
'' நீயுமா ?'' சிணுங்கி  முனகினாள்.
'' அடுப்புல கொழம்பு வெச்சிருக்கேன். பொங்குதானு பாத்துக்க நவநி. நான் கக்கூஸ் போய்ட்டு வந்தர்றேன் !!'' என நவநீதனிடம் சொல்லி விட்டுப் போனாள் அத்தை.
காபியை உறிஞ்சிக் கொண்டே கிருத்திகாவை எழுப்பினான்.
''எந்திரிங்க மேடம் ''
'' கொஞ்ச நேரம் தூங்க விடறியா '' முனகினாள். 
'' பொறந்த நாளும் அதுவுமா இப்படி தூங்கிட்டிருக்கலாமா ?''
'' வேற என்ன செய்ய சொல்ற. ?''
''காலைல நேரத்துல எந்திரிச்சு.. குளிச்சு நீட்டா ட்ரஸ் பண்ணிட்டு... கோயில் குளம்னு போய்ட்டு வர வேண்டாமா ?''
  புரண்டு படுத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
'' நீ அப்படித்தான் செய்வியா ?''
'' நான் பொறந்த நாளே கொண்டாடறதில்ல.. ''
'' ஏன் ?''
'' பழக்கமில்ல. '' என்றான்.
பாதி எழுந்து.. உடம்பை வளைத்து. . புரண்டு வந்து அவன் மடியில் தலைவைத்து படுத்தாள் கிருத்திகா !!!

அப்பா என்று ஒருவர் இருந்தும் அதிகமாக அவரது அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த பெண்.. கிருத்திகா.  அதோடு உடன் பிறப்பு என்று யாரும்  இல்லாமல் போனதால்  சகோதர பாசமும் அறியாதவள். !!
நவநீதன் அவள் வீட்டுக்கு வரும் முன் அவள் மனதில் குடி கொண்டிருந்த ஒரு பெரிய மனக்குறை இப்போது  அவன் மூலமாக காணாமல் போயிருந்தது. அவன் தன் முறைப் பையன் என்றாலும்.. அதையும் தான்டி அவனிடம் அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள் !!
அவனை வம்பிக்கிழுப்பது. அவனை சீண்டுவது அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்வது.. என அவள் செய்வது எல்லாம் முறைப் பையன் என்கிற காதலால் அல்ல என்பதை நவநீதனும் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தான். !!!
தன் மடியில் தலை வைத்து படுத்த கிருத்திகாவின் தலையைத் தடவினான் நவநீதன். அவளது கலைந்த தலை முடியை காதோரமாக ஒதுக்கி விட்டான்.
அந்த சுக உணர்வில் கண்களை மூடிக் கொண்டாள் கிருத்திகா !!
அவன் காபி டம்ளரை எட்டி தள்ளி  வைத்தான்.
'' காபி ஆறுது கிருத்தி.. எந்திரிச்சு குடி.. ''
'' ம்ம் ஆறட்டும் '' கால்களை மடக்கி  சுருண்டு படுத்தாள்.
சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன. அவன் கை மட்டும் அவள் தலையை ஒரு வாஞ்சையுடன்  தடவிக் கொண்டிருந்தது.
"ஏய் கிருத்து"
"ம்ம்ம்?"
'' எந்திரி."
'' எந்திரிச்சு ?''
'' என்ன கேள்வி இது ? இன்னிக்கு உனக்கு பொறந்த நாள் இல்ல? ''
'' அதுக்கு என்ன. ? வருசா வருசம் அது வந்துட்டுதான் இருக்கு. ?''
முனகிக் கொண்டே அவன் மடியில் மெதுவாக உருண்டாள்.
செல்லமாய்  அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் நவநீதன்.
'' தூங்காத சோம்பேறி !!''
'' நீயும் ஏன் என்னை வாதிக்கற.. ?''
'' இன்னிக்கு ஒரு நாளாச்சும் கொஞ்சம் சுருசுருப்பா இருந்து பாரு..''
'' ஆஆஆ..!!!!'' என சிணந்து கொண்டு மூடிய கண்களை திறந்தாள். தன் முட்டை கண்களை உருட்டி அவனை முறைத்தாள் ''உன்ன...'' என அவள் புரண்டு எழ.....
'' தொஸ்ஸ்ஸ்ஸ்...''என அடுப்பில் இருந்து குழம்பு பொங்கி அடுப்பில் வழியும் சத்தம் கேட்டது.
தன் மடியில் இருந்த கிருத்திகாவின் தலையை தூக்கி தலையணை மீது வைத்து விட்டு வேகமாக எழுந்து வெளியே போனான் நவநீதன். நல்ல வேளையாக அடுப்பு அணையாமல் இருந்தது. குழம்புச் சட்டி மீது இருந்த மூடியை அகற்றினான். அடுப்பு சிம்மில்தான் எரிந்து கொண்டிருந்தது.
அவன் அடுப்பை சீராக்கி விட்டு மீண்டும் உள்ளறைக்குள் போனபோது.. கட்டிலில் எழுந்து கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள் கிருத்திகா. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து காபியை பருகிக் கொண்டிருந்தாள் !!
'' ஏய்.. ஊத்த வாயி.. ''
'' ப்ச்...!!'' உதடு சுழித்தாள்.
'' புழு பூச்சி எல்லாம் வயித்துக்குள்ள போகும் ''
'' பாம்பு பல்லியே போனாலும் எனக்கு கவலை இல்ல.. '' 
'' என்ன பழக்கம் இது ?''
சிரித்தாள். அவனைப் பார்த்து உதட்டை லெப்ட் ரைட் காட்டி விட்டு மீண்டும் காபியை உறிஞ்சினாள். !!!
காலை ஏழு மணி !!!
குளித்து விட்டு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன். ஏழு நாற்பது மினி பஸ்க்கு போய் விடுவான். அவனது கம்பெனி கொஞ்சம் தூரம். இரண்டு மினி பஸ்கள் மாற வேண்டும் !!
வாயில் டூத் பிரஷ்ஷை கவ்வியவாறு உள்ளே வந்தாள் கிருத்திகா. அவள் உதடுகள் வெள்ளை நிறத்தை அப்பிக் கொண்டிருக்க.. அவளின் மூக்கு நன்றாக விரிந்திருந்தது ! அவனை கண்டு கொள்ளாமல் பீரோவை திறந்து கருப்பு நிற பிராவை எடுத்து தன்  தோளில் போட்டுக் கொண்டு பீரோவை சாத்தினாள். !!
'' என் பர்த்டேக்கு கிப்ட் எதுவும் இல்லையா ?''
வாயில் கவ்வியிருந்த பிரஷ்ஷை எடுத்து கையில் பிடித்துக் கொண்டு அவனிடம்  கேட்டாள் கிருத்திகா !!
புன்னகைத்தான்.
'' இருக்கு !!''
ஆர்வமானாள் ''என்ன? ''
அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
'' ஷாக் ஆகிருவ.. நான் குடுக்கற கிப்ட்ல.. ''
'' நா மாட்டேன் !!'' சிரித்தாள். ''குடு ''
'' இன்ப அதிர்ச்சில''
'' அப்படியா.. ? சரி குடு பாக்கலாம் அதையும் !'' அவள் முகத்தில் ஆவல் தெறித்தது.
அவள் தோள்களில் கை வைத்தான் நவநீதன். அவளை முத்தமிடுவதை போல அவன் முகத்தை அவள் முகத்துக்கு நெருக்கமாக கொண்டு போனான் !!
ஓரடி பின்னால் நகர்ந்தாள் கிருத்திகா.
'' ஏய் ச்சீ. என்ன பண்ற. ??''
அவள் பயம் கண்டு வாய் விட்டுச் சிரித்தான்.
'' பயப்படாத.. !''
எச்சரிக்கையாக நின்று அவனை முறைத்தாள்.
''ஏதோ கிப்ட் தரேன்னு சொன்னியேனு பாத்தா.. கிஸ் அடிக்க வரியே.. ஹே.. நல்ல ஆளுதான்.. இதான் இன்ப அதிர்ச்சியா.. நல்ல ஷாக்தான் !!''
'' ஹ்ஹா.. !! பொரு செல்லம் !!'' அவள் கன்னத்தில் தட்டிவிட்டு போய் பீரோவுக்கு மேல் வைத்திருந்த ஒரு துணிக்கடை கவரை எடுத்தான். அதை அப்படியே எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
'' என் அத்தை மகளுக்காக..!! ஸ்பெஷல் எல்லாம் இல்ல. அது நான் சும்மா சொன்னது. !!''
'' என்னது.. து.. ??''
'' பிரிச்சு பாரு.. !!''
உடனே பிரித்தாள். கையில் இருந்த பிரஷ்ஷை மீண்டும் வாயில் கவ்விக் கொண்டு அதற்குள் இருந்த உடையை வெளியே எடுத்தாள்.
'' வாவ்வ்வ்.. !!!!!'' அவள் முகம் பிரகாசமானது.
கிருத்திகா நீண்ட நாட்களாக ஆசைப் பட்ட உடை. ஜீன்ஸ் பேண்ட்டும் முழுக்கை பனியனும் !!!
'' ஹை.. சூப்பர்பா இருக்கு.. எனக்கு ரொம்ப ஆசை.. ஜீன்ஸ் பனியன் போடனும்னுட்டு.. ஆனா கூச்சப் பட்டுட்டு வாங்கலே.. '' விரித்து மார்பில் வைத்து பார்த்தாள்.  ''எவ்ளோ ??''
'' அன்புக்கு விலை முக்கியம் இல்லை கிருத்தி.. புடிச்சிருக்கா.. ?''
'' ரொம்ப புடிச்சிருக்கு. . தேங்க்ஸ்.. !!'' என பரவசம் பொங்கச் சொன்னாள் கிருத்திகா !!
நவநீதன் மனதில் இருந்த அவள் மீதான காதல் பொங்கி வழிய.. சட்டென அவளே எதிர் பாராத வகையில் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
'' மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப்த டே.. "

மினி பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே நிற்கக் கூட இடமில்லை. எப்போதும் அலுப்பைத் தரக்கூடிய.. அந்த கூட்ட நெரிசல் இன்று மிகவும் ஜாலியாக இருந்தது நவநீதனுக்கு.  அவன் மனது ஒரு உல்லாச பறவையாக மாறி.. சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.!!!
கிருத்திகாவை அவளது பிறந்த நாள் அன்று மகிழ்ச்சி படுத்திவிட்ட உற்சாகம் அவன் மனதில் தொற்றியிருந்தது. அது மட்டுமா..?
இன்றுதான் முதல் முறையாக  அவளை முத்தமிட்டிருக்கிறான். அந்த முத்தம் கொடுத்த ஒரு நொடி..  அவன் நெஞ்சில் அப்படியே உறைந்து நின்று விட்டதைப் போலிருந்தது. அதை நினைத்த போதெல்லாம் அவன் நெஞ்சம் ஜில்லென்று குளிர்ந்தது !!!
கண்களில் ஏராளமான கற்பனைக் காட்சிகளை ஓட விட்டபடி.. இரண்டு பேருந்துகள் மாறி மாறி பயணித்து  கம்பெனியைச் சென்றடைந்தான். ஆச்சரியமாக இருந்தது. கம்பெனியில் எந்த செக்சனும் இயங்கவில்லை. கம்பெனி மொத்தமும் அமைதியாக இருந்தது.!!
'' வாங்க பாஸ் '' சிரித்த முகமாக நவநீதன் பக்கத்தில் வந்தான் கர்ணா.
'' என்ன கர்ணா இது.. ? வேலை இல்லையா ??''
'' ஆர்டர் கேன்ஸல் ஆகிருச்சாம் பாஸ்.. இன்னிக்கு நோ வொர்க். நாளைக்குத்தான் மெட்டீரீயல் எல்லாம் வருதாம் ''
'' அட.. ச்ச.. ! என்ன பண்ணலாம். ?''
'' சினிமா போலாமா பாஸ்.?''
நவநீதனிடம் பணம் குறைவாகத்தான் இருந்தது. அவன் கொஞ்சம் யோசிக்க..
'' என்ன பாஸ் பணம் இல்லையா ? பரவால்ல வாங்க. நான் பாத்துக்கறேன். நமக்குள்ள என்ன இருக்கு. ? காண்ட்ராக்ட்காரர்கிட்ட ஆட்டைய போட்டுட்டேன். எவ்ளோ வேணும்.. ஐநூறு..? ஆயிரம்.. ? வாங்க போலாம் எல்லாம் நம்ம செலவு.. !!''
  கம்பெனிக்கு ஒவ்வொராக வந்து பின் வேலை இல்லை என்று தெரிந்து  திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். !
காலைக் காட்சி !! ஆங்கிலப் படம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. !! டிக்கெட் வாங்கி உள்ளே போய் உட்கார்ந்த பின் கேட்டான் கர்ணா !!
'' அப்பறம் பாஸ்.. என்ன சொன்னாங்க உங்க ஆளு.. ?''
நவநீதன் , கர்ணாவை யோசனையுடன் பார்த்தான் !
'' என்ன பாஸ் முழிக்கறிங்க? நேத்து ட்ரஸ் எடுத்துட்டு போனிங்கள்ள உங்க ஆளு.. அதான் அத்தை பொண்ணுக்கு.. குடுத்திங்களா.. ?''
'' ஹோ.. அதுவா ?'' உடனே மலர்ந்தான் நவநீதன்.  ''ம்ம்.. குடுத்தேன் கர்ணா. சூப்பரா இருக்குன்னா.. !!''
'' புடிச்சிதா அவங்களுக்கு ??''
'' ம்ம். . ரொம்ப புடிச்சிருக்குன்னா ''
'' அப்பறம் உங்க தெறந்த மனச கொஞ்சம் காட்னிங்களா ?''
'' என்ன? ''
'' உங்க மனச தொறந்து காட்னிங்களானு கேட்டேன் பாஸ்..! என்ன பாஸ் எது பேசினாலும் சட்னு பிக்கப் பண்ணிக்குவிங்க.. இன்னிக்கு ஒவ்வொண்ணலயும் இப்படி முழிக்கறிங்க.. ? என்ன ஆச்சு.. ?''
'' ஓ.. அது.. இல்ல கர்ணா.. சொல்லல.. ''
'' அட.. என்ன பாஸ் நீங்க. ? அவங்க மனச டச் பண்றப்பவே இதெல்லாம் சொல்லிடனும். அப்பத்தான் ஓகே ஆகும். சரி.. பரவால்ல இன்னிக்கு போய் சொல்லிருங்க. அவங்க பொறந்த நாளும் அதுவுமா.. ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்.. என்ன சொல்றிங்க.. ?''
'' ம்ம்.. சரிதான் கர்ணா !!''
'' இன்னிக்கு அவங்களும் உங்க மேல ஒரு அன்போடதான் இருப்பாங்க.. ''
'' ஆமா கர்ணா. அவ இன்னிக்கு தூங்கிட்டிருக்கப்ப.. காலைல நான் எழுப்பின உடனே.. அவளா வந்து என் மடில தலை வெச்சு படுத்தா. அப்பறம் கடைசியா நான் கிளம்பறப்பதான் அவளே கிப்ட் இல்லையானு கேட்டு வாங்கினா. கிப்ட் குடுத்துட்டு.. கடைசியா அவ கன்னத்துல ஒரு முத்தமும் குடுத்து 'ஹேப்பி பர்த்டே ' சொன்னேன். !!''
'' வாவ்.. அசத்திட்டிங்க பாஸ்.. கை குடுங்க.. !!!'' என்று  உற்சாகமாகி  நவநீதனின் கை பற்றிக் குலுக்கினான் கர்ணா !!!
கர்ணா... நவநீதனை விட இரண்டு மூன்று வயது சின்னவன். ஆனால் நவநீதனுக்கு இங்கு வந்த பின் அவன் மட்டும்தான் நல்ல தோழன். குள்ளமாக.. கொஞ்சம் கருப்பாக இருக்கும் இந்த கர்ணா. மிகவும் எதார்த்தமானவன். பழகுவதற்கு ஜாலியானவன் !! தர்மபுரிக்காரன். சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் குடும்பம் அவனுடையது. !!
'' ஜமாய்ங்க பாஸ்.. அதுக்காக உங்க மனச சொல்லாமயும் விட்றாதிங்க. அத்தை பொண்ணாவே இருந்தாலும் 'ஐ லவ் யூ ' சொன்னாத்தான் இப்பத்த பொண்ணுங்க அத லவ்வா ஏத்துக்குவாங்க.. !''
'' ஆனா.. அத சொல்லத்தான் கர்ணா ரொம்ப பயமா இருக்கு.. ''
'' அட போங்க பாஸ்.. மடில தலை வெச்சு படுக்கற சொந்த அத்தை பொண்ணுகிட்ட போய் ஐ லவ் யூ சொல்ல யாராச்சும் பயப்படுவாங்களா. ? காமெடி பண்ணாதிங்க பாஸ் !!''
'' அட.. இல்ல கர்ணா ! சொந்த அத்தை பொண்ண நேரடியா போய் பொண்ணுகூட கேட்ரலாம்.. அதுக்கு உரிமை போதும். !! ஆனா லவ் அப்படி இல்லையே. அது மனசுல இருந்து இல்ல வரனும். நான் 'ஐ லவ் யூ ' சொல்லி.. ஒருவேளை அவ அத ஏத்துக்கலேன்னா.. ?''
'' அட என்ன பாஸ் நீங்க? உங்கள புடிக்காமயா உங்க மடில தலை வெச்சு படுத்திருப்பாங்க? இதுகூட புரியலேன்னா நீங்க வேஸ்ட் பாஸ்.. பயப்படாதிங்க. போனதும் மொத வேலையா.. தைரியமா போய் ' ஐ லவ் யூ ' அத்தை மகளேனு அவங்ககிட்ட சொல்லிருங்க. ! அப்பறம் பாருங்க பாஸ்.. என்ன நடக்குதுனு.. !!!'' கர்ணா உற்சாகமாகச் சொல்ல... நவநீதனும் தீர்மானித்தான்.!
மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் !!
'' ஐ லவ் யூ.. மை டியர் கிருத்தி.. !!''
தியேட்டரில் இருந்து நேராக கர்ணனின் ரூம்க்கு போய் விட்டான் நவநீதன். வீட்டுக்கு போனாலும் அவன் மட்டும்தான் தனியாக இருக்க வேண்டும். அதனால் கர்ணாவுடன் ஜலியாக பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தான் !!
அப்பறம் மீண்டும் அவன் பஸ் பிடித்து வீட்டுக்கு போனபோது மாலை ஐந்து மணிக்கு மேல் ஆகி விட்டது.  வானம் இருண்டு லேசாக மழை தூரத் தொடங்கியது !! பாத்ரூம் பலகையில் சோப்பு டப்பாக்கு அடியில் இருந்த வீட்டுச் சாவியை எடுத்து பூட்டைத் திறந்து.. உள்ளே போனான் !!
வானம் இருட்டுக் கட்டியிருந்ததால் வீட்டுக்குள் இருட்டாக இருந்தது. லைட் ஸ்விட்சை போட்டான். பவர் கட்டாகியிருந்தது.! ஜன்னலை திறந்து வைத்தபோது  சடசடவென  மழை பெய்யத் தொடங்கியது. கதவைச் சாத்தி தாள் போட்டு விட்டு ஜன்னல் ஓரமாக போய் நின்று மழையை ரசிக்கத் தொடங்கினான். !!
'' வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..'' என்று  அவன் கை பேசியில் பாடல் அழைக்க.. ஜன்னலில் இருந்து விலகிப் போய் எடுத்துப் பார்த்தான். புது எண். !
'' ஹலோ ?'' காதில் வைத்துக் கேட்டான்.
'' நான்தான் நவநி. அத்தை பேசுறேன்"  அத்தையின் குரல்.
'' ஆ.. சொல்லுத்தே.. ?''
'' கம்பெனிலயா இருக்க? ''
'' இல்லத்தே.  வேலை இல்ல இன்னிக்கு நோ வொர்க் குடுத்துட்டாங்க. அப்படியே சினிமா போய்ட்டு இப்பதான் வந்தேன். வீட்லதான் இருக்கேன். ஏன்த்தே.. ??''
'' என்னமோ கூப்பிட்டு பாக்கலாம்னுதான் கூப்பிட்டேன் நவநி.  பின்னால கொஞ்சம் துணிகள தொவைச்சு காயப் போட்றுக்கேன். மழை பெருசா வர மாதிரி இருக்கு. எல்லாம் எடுத்து உள்ள போட்றுடா.. அப்பறம்.. மறக்காம டிவி கேபிள புடுங்கி விட்று.  மின்னால் இடி வந்தாலும் வரும் !!''
'' சரித்தே ''
'' எனக்கு இன்னிக்கு ஓ டி இருந்தாலும் இருக்கும்னு நெனைக்கறேன். எதுக்கும் கிருத்தி வந்தான்னா.. அவள சாப்பாடு செய்ய சொல்லிரு. நான் வரதுக்கு ஒம்பது மணி ஆகிரும் ''
'' சரித்தே.. ''
'' சரி வெச்சிரட்டுமா என் போன்ல பேலன்ஸ் இல்ல. இது தெரிஞ்ச பொண்ணுது. ''
'' சரித்தே.. வெச்சிரு ''
போனை வைத்து விட்டு வெளியே போய் மழையில் லேசாக நனைந்தவாறே.. கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த உடைகளை எல்லாம் அவசரமாக உருவிக் கொண்டு வந்தான். எல்லா துணிகளையும் கட்டில் மீது குவியலாக போட்ட பின் டிவி கேபிளை பிடுங்கி விட்டான். மீண்டும் கதவை சாத்திவிட்டு ஒரு சேரை எடுத்து ஜன்னல் ஓரமாக போட்டு உட்கார்ந்து மழையை ரசிக்கத் தொடங்கினான் நவநீதன். !!
காற்று பலமாக இல்லை. இடி, மின்னல் என எதுவும் பலமாக இல்லை. ஆனால் மழை மட்டும் கொஞ்சம் பலமாக.. 'சோ !' வென நின்று பெய்தது. சாக்கடைகள் எல்லாம் நீர் நிரம்பி ஓடத் தொடங்கியது !!
நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது படபடவென கதவு தட்டப் பட்டது. கிருத்திகாவாகத்தான் இருக்க வேண்டும். எழுந்து போய் கதவைத் திறந்தான் !!
கிருத்திகாதான் !! தொப்பலாக நனைந்திருந்தாள். தலையில் துப்பட்டாவை போட்டு மூடியிருந்தாலும் முற்றிலுமாக நனைந்து சொட்டச் சொட்ட நின்றிருந்தாள் !!

தொப்பலாக நனைந்து போய்.. நீர் சொட்டச் சொட்ட.. கருநீல நிற சுடிதாரில் நின்றிருந்த கிருத்திகாவை அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன். !!
அவன் கண்கள் அவளின் இளமை வனப்பை மிக ஆவலாக அள்ளிப் பருகிக் கொண்டிருந்தது. நெஞ்சில் ஒட்டிய ஈர உடையை மீறிக் கொண்டு தெரியும் அந்த இளமையின் விம்மல்....
ஹ்ஹா.. !!!! என் அத்தை மகள் எவ்வளவு அழகு.. ????
''அப்பப்பா.. என்ன மழை.. ஒரு நொடில நனைஞ்சாச்சு.. !!!'' தலையில் முக்காடாகப் போட்டிருந்த துப்பட்டாவை உருவி.. இரண்டு கைகளிலும் அதன் ஈரத்தை முறுக்கிப் பிழிந்தாள் கிருத்திகா. !
அவள் தலை முடியை மழை நீர் நனைத்திருக்க.. அவளின் மூக்கு நுணியில் ஒரு துளி மழை நீர் தேங்கி நின்றிருந்தது. கன்னங்கள் வழியாக மெல்லிய நீர்க்கோடு ஒன்று உருவாகியிருக்க.. அவளின் ஈர உதடுகள் செக்கச் சிவப்பாக மாறிப் போயிருந்தது. !!!
சங்கு கழுத்து.. அந்த கழுத்தின் கீழ் நனைந்த ஈரத் தாமரை மொக்குகள்... அதன் வடிவம்...
'' பிஸ்.. பிஸ்ஸ்... !!!'' அவன் கண் முன்னால் கை ஆட்டி சொடக்குப் போட்டாள் கிருத்திகா.
''ஹேய்.. நவநி..!!''
சட்டென உணர்வுக்கு மீண்டான். அவள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடனே சிரித்து முழுப்பினான் !!
'' உள்ள வா !!''
'' உன் அத்தை மகள இதுக்கு முன்ன நீ பாத்ததே இல்லையா என்ன. ? இப்படி வெறிச்சு பாத்திட்டிருக்க.. ? ம்ம்.. ?'' அவள் ஈரப் புருவம் தூக்கி கேட்டாள்.
நவநீதன் வழிந்தான்.
'' இ.. இல்ல கிருத்தி... சரி.. மழைல நிக்காத உள்ள வா.. '' தடுமாறி பின்னால் கொஞ்சமாக நகர்ந்து நின்றான்.!
'' அது என்ன.. பொண்ணுங்க மழைல நனைஞ்சா மட்டும் பசங்களுக்கு அப்படி ஒரு ஃபீலிங் வருது. ? இப்படி வெறிச்சு வெறிச்சு பாக்கறிங்க.. ?'' முறுக்கி பிழிந்த துப்பட்டாவை பட்டென அடித்து உதறினாள். தெறித்து வந்த ஈரம் அவன் மேல் பட்டு அவன் உடம்பை சிலிர்க்க வைத்தது !!
'' ச்ச.. அப்படி எல்லாம் இல்ல கிருத்தி.. நான்.. வேற ஏதோ யோசனைல.... ''
'' அலோ.. போதும். சமாளிக்காத! ம்ம். ? நீ பாக்காத நானா. ? என்னை நீ எப்படி எல்லாம் பாத்துருப்ப.? அரைகுறை ட்ரஸ்லகூட.. அப்ப கூட நீ இப்படி வெறிச்சு பாத்ததில்ல... ''
'' அய்யோ ஸாரி கிருத்தி...ப்ளீஸ் விடு.. உள்ள வா.. !!''
'' அது.. !!!''
இரண்டு.. மூன்று முறை துப்பட்டாவை உதறியபின்.. அந்த ஈர துப்பட்டாவால் தலை ஈரம் துடைத்தாள். முகம்.. கை எல்லாம் துடைத்துக் கொண்டு கால் ஈரத்தை நன்றாக தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
'' கரண்ட் இல்லையா ?''


'' இல்ல.. ''
'' எப்ப போச்சு..?''
'' தெரியல.. ''
'' ஏன்.. நீ எப்ப வந்த..?''
'' இப்பதான்.. ஒரு கால் மணி நேரம் முன்னால... ''
''ஓ.. !! ஆமா என்ன இன்னிக்கு நேரத்துலயே வந்துட்ட போலருக்கு..? பீஸ் இல்லையா ?''
'' நோ வொர்க்.. ''
'' அப்ப காலைலருந்து எங்க போன.. ?''
'' சினிமாக்கு ''
'' ஓ.. என்ன படம் ?''
'' இங்கிலீஸ்.. ''
'' அது சரி.. அதான் இப்படி பாத்தியா என்னை ? யாருகூட.. ?''
'' கர்ணாவும்.. நானும்...''
'' ஓ.. அந்த கருவாயனா. ? எப்படி இருக்கான் ? வளவளனு பேசிட்டே இருப்பானே.. மொக்கை சாமி.. ?'' கதவோரமாகவே நின்று விட்டாள் கிருத்திகா.
அவள் உடையிலிருந்து இன்னும் மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ! கட்டில் மீது போட்டிருந்த துணிக் குவியலில் இருந்து ஒரு துண்டு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான் நவநீதன்.
'' மழை வருதில்ல.. எங்காவது நின்னு வந்துருக்கலாமில்ல. ?''
'' எவ்ளோ நேரம் நிக்கறது ? மழைய பாரு.. இப்போதைக்கு விடாது போலருக்கு. !''
துண்டால் அழுத்தி அழுத்தி ஈரம் துடைத்தாள். தலையை துவட்டினாள். கூந்தலில் இருந்த பூவை எடுத்து ஜன்னல் மீது மெதுவாக வீசினாள். அது தவறி கீழே விழு.. நவநீதன் அதை எடுத்து ஜன்னல் மீது வைத்தான்.!!
நீளமாக முல்லை. ஒரு விரிந்த ரோஜா !! பூக்கள் இரண்டும் மழையில் நனைந்து எழுப்பிய அதன் நறுமணம்.. அவன் மனதை கொள்ளை கொண்டது. !! இப்போது அந்த பூவின் வாசணையை ஆழமாக முகர வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படிச் செய்தால்.. அதையும் தப்பாக புரிந்து கொண்டு ஆங்கிலப் படத்தை குற்றம் சொல்லுவாள் கிருத்திகா !!
சூழ்நிலை கருதி  தன்னை  மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான்.!!
ஈரம் துடைத்த கிருத்திகா.. வெளிச்சம் இல்லாத அந்த அரையிருட்டிலும்.. பளிச்செனத் தெரிந்தாள். அவள் கழுத்துக்கு கீழே இருந்த விம்மலில் பாயும் அவன் விழிகளை மிகச் சிரமப்பட்டு திசை மாற்றிக் கொண்டிருந்தான் நவநீதன்.!!
மெதுவாக நகர்ந்து ஜன்னல் பக்கத்தில் போய் நின்று வெளியே பார்த்தாள் கிருத்திகா. !
'' செம்ம மழை.. இல்ல? துளி காத்துகூட இல்லாம நின்னு பெய்யுது. ! டிச்செல்லாம் பாரு.. எவ்ளோ சுத்தமா ஓடிட்டிருக்குனு..!''
அவள் பக்கத்தில் போய் நின்று.. சாக்கடை நீரை எட்டிப் பார்த்தான் நவநீதன். அவன் மனம் அங்கு போகவே இல்லை. அவன் நாசியில் ஏறிய அவளது ஈர வாசணையை நுகர்ந்து கிறங்கிக்  கொண்டிருந்தது அவன் மனம்!
அவள் அணிந்திருக்கும் சுடிதார் புதுசு. அந்த புது உடை மழையில் நனைந்து எழுப்பிய மணம்.. அவளின் பருவப் பூ மேனி மணம்.. ஜன்னல் மீது வைத்த மழையில் நனைந்து பூக்களின் மணம்.. எல்லாமாக சேர்ந்து.. அவனை கனவுலகில் சஞ்சரிக்க வைத்துக் கொண்டிருந்தது !!
'இஷ்க் ' என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். '' ரொம்ப நாள் ஆச்சு. இப்படி நல்லா நின்னு மழை பேஞ்சு. இந்த மழைல நனைஞ்சி விளையாட எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா ? இப்படியே போய்.. மறுபடி மழைல நனையனும் போலருக்கு.. '' என்று ஒரு வித கிறக்கத்தில்  சிலாகித்துச் சொன்னாள் கிருத்திகா.
'' ம்ம்.. நனைஞ்சப்பறம்.. வீட்டுக்குள்ள வர வேண்டாம். அப்படியே நேரா ஆஸ்பத்ரி போய்ட வேண்டியதுதான்.! பெட்ல போய் படுத்து....''
' பட் ' டென அவன் தோளில் அடித்தாள்.
'' ச்சீ. போ. ! உனக்கெல்லாம் ரசனையே கிடையாது. !''
மீண்டும் சில நொடிகள் கழித்து மெதுவாக கேட்டான் நவநீதன்.
'' சுடி புதுசா ?''
'' ம்ம்ம்..!!!'' அவன் முன் நேராக நின்றாள். ( ம்ம் இப்ப நல்லா பாத்துக்கோ நானே காட்றேன் )
'' அளவு குடுத்து தெச்சேன்.. நல்லாருக்கா ?'' எடுப்பாய் நிமிர்ந்து நிற்கும்  அவள் தாமரையின்  வடிவழகை பார்வையால் வருடினான்.
'' ம்ம்.. சூப்பரா இருக்கு. அசத்தல்.. !!''
'' நெக் டிசைன் நல்லாருக்கில்ல.. ??''
'' ம்ம்.. !!'' அவன் பார்வை தடுமாறியது.
'' திட்ட மாட்டேன். நல்லா பாத்து சொல்லு. நான்  உன் அத்த மகதான..? ஏன் இப்படி பயந்து பயந்து திருட்டு பார்வை பாக்கற... ?'' அவள் மெல்லிய சிரிப்புடன் அவனைச் சீண்டினாள்.
நவநீதன் மெலிதாகப் புன்னகைத்தான்.
'' இந்த பொண்ணுங்க மனச கெஸ் பண்ணவே முடியாது போலருக்கு.''
'' ஹ்ஹா.. டென்ஷனாகிட்டியா நான் அப்படி சொன்னதுக்கு...?''
'' ம்கூம்.. !''
'' ஆனா எனக்கு கோபம் வந்துச்சு. நீ என்னை அப்படி பாத்ததுல.. ''
'' ஸாரி. ''
'' இனிமே அப்படி வெறிச்சு பாக்காத அறைஞ்சாலும் அறைஞ்சிருவேன்.!''
'' ம்ம்.. !!''
'' எனக்கு அப்படி பாத்தா மசக் கடுப்பாகுது தெரியுமா ?''
'' சரி விடு.. பாக்கல. !! ஆமா ஜீன்ஸ் போடலியா ?''
'' ஸாரி.. கோச்சுக்காத.. அத போட எனக்கு ரொம்ப வெக்கமா இருந்துச்சு. கம்பெனிக்கு அத போட்டுட்டு போயிருந்தா.. எல்லாரும் என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டியே.. அழ வெச்சிருப்பாங்க. அதான் போடல.. '' அவன் கை பிடித்து அவள் சமாதானம் சொல்ல.. அவளது கையின் குளிர்ச்சியில் அவன் சிலிர்த்துக் கொண்டான்.
'' ம்ம்.. பரலால்ல.. ''
'' சரி.. இப்ப போட்டு காட்டட்டுமா ?நீ மட்டும் பாரு.. ஓகே வா.. ??''

வெளியே நல்ல மழை. அந்த மழையில் நனைந்து வரும் ஈரக் காற்றின்  குளிர்ச்சியை விட.. கிருத்திகா சொன்னது இன்னும் அதிகமான குளர்ச்சியைக் கொடுத்தது நவநீதனுக்கு. உள்ளமும்.. உடலும் இன்பச் சிலிப்பில் நெகிழ.. கண்களில் பொங்கிய காதலை அடக்க முடியாமல் நெகிழ்ந்த குரலில்  மெதுவாகக் கேட்டான்.
'' எனக்கு மட்டும் ஸ்பெஷலா போட்டு காட்ட போறியா ?''
'' ம்ம்ம்.. ஏன்.. ?'' மெல்லிய புன் சிரிப்புடன் அவனையை பார்த்தாள்.
''நான் மட்டும் பாத்தா போதுமா?"
'' என் பர்த்டேக்குனு நீ வேற ரொம்ப ஆசையா கிப்ட் பண்ணிருக்க. இப்ப நான் அத போட்டுட்டு வெளில போகலேன்னாலும் உனக்காச்சும் போட்டு காட்னாத்தான உனக்கு சந்தோசமா இருக்கும் ??'' என்று  மெல்லிய புன்னகையுடன் சொல்லி விட்டு சர்ரென மூக்கை உறிஞ்சியபடி  ஜன்னல் பக்கத்தில் இருந்து நகர்ந்து போனாள். !!
இன்னும் அவள் உடையிலிருந்து லேசான நீர் சொட்டிக் கொண்டிருந்தது.  நகர்ந்தவள் சில அடிகள் தள்ளிப் போய் லேசான இருட்டில் நின்றாள். நவநீதன் ஒரு ஆர்வ மிகுதியோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
'' நா ட்ரஸ் சேஞ்ச் பண்றேன். என்னை திருட்டுத்தனமா சைட்டடிச்ச... தொலைச்சிருவேன். திரும்பி நில்லு.!'' என சிரித்தபடி சொன்னாள்.
சட்டென உறைத்தது.
'' ஓ .. ஸாரி !!!'' என்று திரும்பி  ஜன்னலுக்கு வெளியே பார்வையை வீசியபடி.. அவளைப் பார்க்காமல் நின்றான்.
உதட்டில் மெல்லிய புன்னகை தவழ.. நவநீதனை பார்த்துக் கொண்டே ஈர உடைகளைக் களைந்தாள் கிருத்திகா. அவன் திருட்டுத் தனமாக தன்னை திரும்பி பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன் ஈரமாக இருந்த  சுடிதார் டாப்ஸை தலை வழியாக  உறுவி எடுத்தாள். அவளின்  உள்ளாடை நனைந்து போயிருந்தது. ஈரமான ஸ்லிப் மார்புடன் ஒட்டிக் கொண்டிருந்தது. ஈரம் பட்டு நனைந்த அவளின் மார்புகள் விம்மி இறுகியிருந்தது. ஸ்லிப்பை மார்பு தெரிய மேலே தூக்கியவள் பிறகு கழற்றிக் கொள்ளலாம் என்று மீண்டும் கீழேயே விட்டாள்.
பின்னர் இடுப்பில் கட்டியிருந்த பேண்ட் நாடா முடிச்சை பிடித்து  இழுத்து அவிழ்த்தாள். ஈரமான பாட்டத்தையும்  தன் உடம்பை விட்டு அகற்றிய பின்  மேலே போட்டிருந்த ஸ்லிப்பையும் உருவி எடுத்தாள்.
ஜட்டி, பிராவுடன் பீரோவை நோக்கிப் போனாள். பீரோ திறந்து ஜட்டி பிரா எடுத்தாள். தயக்கத்தை உதறி.. ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த  நவநீதனைப் பார்த்தபடி உள்ளாடைகளை களைந்தாள். பின் புது  உள்ளாடைகள் அணிந்து..  அவன் எடுத்து கொடுத்த ஜீன்ஸ், பனியனை எடுத்து.. பீரோ கண்ணாடியில் தன் அழகை ரசித்தபடி உடம்பில் அணிந்தாள்.
ஜீன்ஸ், பனியன் அவளுக்கு கச்சிதமாக இருந்தது. அவள் உடலை கவ்விப் பிடித்த உடை.. அட்டகாசமாக இருப்பதாக அவளுக்கே தோன்றியது.
  ' வாவ்வ்வ்.. கலக்குடி கலக்கு.'
ஈர முடியை உதறி அதை முதுகில் படர விட்டுக் கொண்டு அவன் பக்கத்தில் வந்து வெளிச்சத்தில் நின்றாள் கிருத்திகா.
'' நவநி."
நவநீதன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் கவனம் முழுவதும் அவளிடம்தான் இருந்தது. அவள் அழைக்க.. அவள் பக்கம் திரும்பினான். ஜன்னலுக்கு வெளியே இருந்த பார்வையை அவள் மீது வீசினான்.! விம்மும் அவளது இளமைப் புடைப்பு அவன் கண்களை பளிச்சென தாக்க.. உள்ளுக்குள் ஒரு அனல் மூண்டது. அவள் உடம்பை கவ்விப் பிடித்திருப்பது போல.. செம  ஃபிட்டாக இருந்தது.
'' ம்ம் எப்படி இருக்கு ???'' முகத்தில் லேசான ஒரு வெட்கச் சாயை படர.. நவநீதனைக் கேட்டாள்.
'' ம்ம்ம்ம்.. அசத்தலா இருக்கு !! உனக்கு எப்படி இருக்கு. ??''
'' சூப்பர்.! ஐ லவ் மை செல்ப். உனக்கு ஓகேவா சொல்லு.. ???''
'' அசத்தலா இருக்க..!''
இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டும் போல்தான் இருந்தது. ஆனால் அதைச் சொல்லும் துணிவு அவனுக்கு வரவில்லை !! அவள் மெல்ல நடந்து  அவன் பக்கத்தில் வந்து அவனை உரசிக் கொண்டு நின்றாள்.
''தேங்க்ஸ்!''
'' எதுக்கு ??''
'' நான் என்னிக்கோ சொன்னத மனசுலயே  வெச்சிருந்து.. இன்னிக்கு எனக்கு கிப்ட் பண்ணதுக்கு.. !!!''
'' உனக்கு புடிச்சிருக்குதான.. ?? கலர்.. டிசைன் எல்லாம். . ???''
'' ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு.  நல்லா செலக்ட் பண்ணிருக்க.. என் சைஸ்லாம் எப்படி தெரியும் ???''
'' பனியன் கம்பெனில வேலை செய்றேன்.. இது கூட தெரியாதா ??''
'' பனியன் ஓகே. !! ஜீன்ஸு...?? என் ஹிப் சைஸ் எப்படி. ... ??''
'' ஒரு யூகத்துல வாங்கினதுதான்.!''
'' நைஸ்...!!!!'' மகிழ்ச்சி பொங்க.. அவன் கையைப் பிடித்தாள் கிருத்திகா.
ஜன்னலுக்கு வெளியோ 'சோ ' வென பெய்யும் மழை !!! ஜன்னல் வழியாக ஊடுருவும் ஜில்லென்ற குளிர்க் காற்று..!!! உள்ளே கிருத்திகா தொட்ட கை.. மழையின் குளிர்ச்சியை அள்ளி.. ஒட்டு மொத்தமாக நவநீதன் உடம்பின் மேல் தெளித்து விட்டதை போலிருந்தது !!! அவன் உடல் சிலிர்த்து.. மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றன !!!
'' இப்பக் கூட எனக்கு எப்படி இருக்கு தெரியுமா ? இப்படியே ஓடிப் போய்.. ஜோனு கொட்ற மழைல.. வானத்த பாத்து.. கைகள விரிச்சு நின்னு.. நனையனும் போலருக்கு. !!'' அவன் கையை மெல்லக் கோர்த்துப் பிடித்து.. அவன் இடது தோளில் தன் வலது தோள் உரசச் சொன்னாள் கிருத்திகா.
உதட்டில் படர்ந்த மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தான்.
'' ம்ம்ம்.. போயேன்.. !! போய் நல்லா நனையேன்.. என்ன கெட்டு போச்சு.. ? என்ன உடம்பு முடியாம போகும்.. அவ்வளவுதானே..? ''
அவனைப் பார்த்தாள்.
''ஹே.. என்ன.. இது நெக்கல் பண்ற மாதிரி இருக்கு.. ?''
'' ச்ச.. இல்ல கிருத்தி.. மழைல நனையற உன்னோட ஆசைக்கு சப்போர்ட் பண்ணினேன் !!''
'' மழைல நனைறதுலாம் ஓகேதான்.. பட் .. அப்பறமா ஒடம்புக்கு வரப்போறத நெனைச்சாதான்... ம்கூம்... ஊசிலாம் போடனும்.. வேணாம்பா.. மழைய ரசிக்க மட்டும் செய்யலாம்.. என்ன சொல்ற...??''
'' ம்ம்ம்.. உனக்கு பயமாருந்தா வாயேன்.. நானும் சேந்து உன்கூட நனையறேன்.. ''
'' ஓஹ்ஹ்... ஹா.. !!! ஹை..!!!'' சிணுங்கலாக சிரித்து அவனை தோளால் இடித்தாள்.
''எனக்காகவா..??''


'' ம்ம்ம்... என் அத்தை மகளுக்காக.. ''
'' அய்ஸ்ஸ்.. ப்பா.. ஆல்ரெடி ஜில்லுனு.. உள்ளல்லாம் சிலுத்துகிட்டு நிக்கறேன். இதுல நீ ஒரு பக்கம்.. ஐஸ் வெச்சு என்னை கொல்லாத.. !!!'' கழுத்தைச் சாய்த்து.. கூந்தலை ஒரு பக்கமாக எடுத்து உதறி விட்டுக் கொண்டாள்.
'இந்த மகிழ்ச்சியான மன நிலையில் இருக்கும்போதே அவளிடம் காதலை சொல்லிவிடலாமா ? பொரு மனமே பொரு !' நவநீதன் வெளியில் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும்.. உள்ளுக்குள் ஒரு மனப் பிரளயமே நடந்து கொண்டிருந்தது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக