http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நீதான் என் காதலி - பகுதி - 21

பக்கங்கள்

சனி, 18 ஜூலை, 2020

நீதான் என் காதலி - பகுதி - 21

எனக்கு ரெண்டுமே வேணாம் வெறும் ஸ்வாதியே போதும் என்றாள் சுவாதி .சரி அது இருக்கட்டும் உங்க அப்பா பேர் என்ன என்றாள் அஞ்சலி ,அக்கா நான் தான் அனாதைன்னு சொல்லிருக்கேன்லே அப்புறம் இப்படி ஒரு கேள்வி கேக்குறிங்க என்றாள் அஞ்சலி கோபமாக .ஒ சாரிப்பா தெரியாம கேட்டுட்டேன் என்னைய மன்னிச்சுடுப்பா என்றாள் அஞ்சலி .ஆஹா அஞ்சலி அக்காவ இத வச்சே இன்னைக்கு அவங்கள விக்கி பத்தின பேச்ச மறக்க வச்சுடுவோம்
அது எப்படி அக்கா நீங்க இப்படி கேக்க போச்சு எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சுவாதி வருத்ததோடு இருப்பது போல சொன்னாள் .ப்ளிஸ்டி ப்ளிஸ்டி என்னைய மன்னிச்சுடு ஓகே இனி மேல் இப்படி மறக்க மாட்டேன் அது மட்டும் இல்லாம உன்னைய அனாதைன்னு யார் சொன்னது அதான் அக்கா நான் இருக்கேளே என்று சொல்லி கொண்டே அவளை சமாதன படுத்தி விட்டு சரி பேச்ச நல்லாவே மாத்திட்ட நான் முத கேட்டதுக்கு இன்னும் பதிலே காணோம் என்று அஞ்சலி ஒரு போடு போடவும்
எப்படிக்கா இப்படி என்றாள் .ஏண்டி உன் கூட உன் ரூம் மெட்டா 3 வருசமா இருந்து இருக்கேன் உன்னைய பத்தி தெரியாதா எனக்கு என்றாள் அஞ்சலி .சுவாதி ஒன்னும் சொல்லமால் இருந்தாள் .சரி நான் விக்கி கிட்ட பேசவா என்று அஞ்சலி கேட்க ஐயோ விட மாட்டிங்கிரன்களே அக்கா என்று நினைத்து கொண்டு இருந்தாள் .சொல்லுடி குழந்தை வேற பிறக்க போகுது இன்னும் ரெண்டு பேரும் இப்படியே இருக்க போறிங்களா என அஞ்சலி கேட்டாள் .
ஆமா ரெண்டு பேர் கிட்டயும் லவ் இல்ல அப்புறம் குழந்தைக்காக மட்டும் சேர்ந்து வாழ சொல்றிங்களா என கேட்டாள் சுவாதி .ஆமா அதான நம்ம வழக்கம் கலாச்சாரம் என்றாள் அஞ்சலி .அப்ப ரெண்டு பேர் சேந்து வாழ்றதுக்கு காதல் தேவை இல்லை கலாச்சாரத்துக்காக பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பல்ல கடிச்சுகிட்டு வாழனும் இப்படி எல்லாம் இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே கட்டி கிட்டு அழுகுரதாலே தான் டைவர்ஸ், கள்ள காதல் சந்தேகம் ,பொண்டாட்டி புருஷன கொல்றது புருஷன் பொண்டாட்டிய கொல்றதுன்னு கண்ட கருமமும் இங்க நடக்குது அதுக்கு எங்கள மாதிரி பிரிஞ்சே இருக்காலம் என்றாள் சுவாதி .


சரிடி நீ சொல்றது எல்லாம் வாஸ்தவம் தான் ஆனா குழந்தை ? என்று அஞ்சலி கேட்க என்ன இப்ப குழந்தைக்கு குழந்தைய அழிச்சேனா இல்ல பிறந்ததும் அத குப்ப தொட்டில போட போறேனா நான் தானே வளக்க போறேன் அப்புறம் என்ன ஒரு வேல என்னைக்காச்சும் விக்கி வயசான பிறகு அவன் மனசு மாதிரி குழந்தைய பாக்க வந்தா பாக்க விடுவேன் அப்ப கூட நான் அவன் கிட்ட ஒரு பிரண்டா தான் பேசுவேன் லவ்வராவோ இல்ல வேற ஏதாவும் ஏத்துக்கிற மாட்டேன் .
விக்கிக்கும் சுவாதிக்கும் இடைல ஒன்னும் இல்ல அவளவு தான் இன்னும் ரெண்டு மாசத்துல கனடா போ போறேன் எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கை வாழ போறேன் என்றாள் சுவாதி .சோ அந்த மிசஸ் விக்னேஷ் பார்ட் என்ன ஆச்சு என்று அஞ்சலி கேட்டாள் .அது அவளவு தான் நடக்காத ஒன்னு என்றாள்
ஒரு வேல என்று அஞ்சலி ஆரம்பிக்கும் முன் சுவாதி அவளை நிப்பாட்டி ஒரு வேல மிஸ்டர் விக்னேஷ் அவர்கள் என்னை காதலிக்கிறதா சொன்ன என்ன பண்ணுவ அப்படிதானே கேக்க போறீங்க இப்ப சொல்றேன் மிஸ்டர் விக்னேஷ் சார் வந்து என்னைய பிடிச்சு இருக்குன்னு சொன்னாலும் ஒரு குழந்தைய அழிக்க சொன்னவன் நீ அது உன் குழந்தையான்னு இப்ப வரைக்கும் சந்தேக படுருவேன் நீ அப்படி பட்ட உன் கூட என்னால வாழ்க்கை நடத்த முடியாதுன்னு நேருக்கு நேரா சொல்லிடுவேன் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது அவளுக்கு போன் வந்தது .
யாரு உன் ஆளா என்றாள் அஞ்சலி .இல்ல புது நம்பரா இருக்கு 


 சுவாதிக்கு போன் வந்தது .ஹலோ யாரு என்றாள் .ஹலோ சுவாதி என்ன என்னையே அதுக்குள்ளே மறந்துட்டிங்களா என்றது எதிர் முனையில் ஒரு பெண் குரல் .என்ன சிமி எப்படி இருக்கீங்க கல்யாண ஏற்பாடு எல்லாம் எப்படி போகுது என்றாள் சுவாதி .

எப்படிங்க என் குரல இன்னும் ஞாபகம் வச்சு இருக்கீங்க என கேட்டாள் சிமி .ஏங்க நான் ரேடியோல வேல பாத்தவ உங்கள மாதிரி ஒரு நாளைக்கு எத்தன பேர் என்னைய யாருன்னு கண்டு பிடிங்க உங்க கிட்ட ஏற்கனவே பேசி இருக்கேன் அப்படின்னு பேசுவாங்க அவங்கள எல்லாம் கண்டு பிடிக்கனும் அதுனால எனக்கு வாய்ஸ் மெமரி அதிகம் என்றாள் சுவாதி
ஆமா நீங்க ரேடியால வொர்க் பண்ணிங்களா என கேட்டாள் சிமி .ஆமாங்க என்றல் சுவாதி .விக்கி என் கிட்ட அத பத்தி எதுவும் சொல்லவே இல்ல என்றால் சுவாதி .அது நான் இப்ப பிரங்கண்டா இருக்காதால வேலைய விட்டு நின்னுட்டேன் அதுனால விக்கி சொல்லாம இருந்து இருக்காலம் என்றாள் சுவாதி .சரி எந்த ஏப் எம்ல வேல பாத்திங்க சொல்லுங்க என்றாள் .ஒரு நிமிஷம் லைன்ல இருங்க என்று போனை கையால் மறைத்து கொண்டு அஞ்சலி இடம் அக்கா கார எடுங்க அப்படியே என்னைய வீட்டுல விட்டுட்டு நீங்க ஹாஸ்டல் போங்க என்றாள் மெல்ல .
பின் அஞ்சலியும் காரை எடுக்க சுவாதி போன் பேசி கொண்டே காரில் ஏறினாள் .ம்ம் சொல்லுங்க என்றாள் சுவாதி .நீங்க தான் சொல்லணும் எந்த ஏப் எம்ல வேல பாத்திங்க என கேட்டால் சிமி .அது மும்பை தமிழ் ஏப் எம்னு ஒரு ஏப் எம் அதுல வேல பாத்தேன் என்றாள் சுவாதி .அப்படி ஒரு ஏப் எம் இருக்கா எனக்கு தெரியாதே என்றாள் சிமி .அது தமிழ் ஏப் எம் இங்க இருக்க தமிழ் நாட்டு காரங்களுக்காக அந்த ஏப் எம் கொண்டு வந்தாங்க என்றாள் சுவாதி .
ம்ம் ஓகே இப்ப பிரங்க்ன்ட் லீவ்ல இருக்கிங்களா என கேட்டாள் சிமி .இல்லைங்க வேலைய விட்டுடேங்க என்றாள் சுவாதி .ஏன்ங்க விக்கி வேலைக்கு போ வேணாம்னு சொல்லிட்டேனா என்றாள் சிமி .ஐயோ அவர் அப்படி எல்லாம் சொல்லல இன்னும் சொல்ல போனா அவருக்கு நான் வேலைக்கு போறது தான் பிடிக்கும் பணத்துக்கு ஆக இல்ல வேலை இருந்தா தான் பொண்ணுகளுக்கு ஒரு தைரியம் வரும் அப்படின்னு சொல்வார் .
ஆனா எனக்கு தான் வேலைக்கு போக பிடிக்கல என்றாள் .ஏங்க என கேட்டாள் சிமி .எனக்கு இந்த பெண்ணியம் புரட்சி இதலாம் பிடிக்காதுங்க அதலாம் திமிர தான் கொடுக்கும் பாசத்த கொடுக்காது எனக்கு புருசனுக்கு அடங்குன பொண்டாட்டியா பிள்ளைகள கவனிச்சுகிட்டு வீட்ல மட்டும் வேலை பாத்து கிட்டு ஹவுஸ் வோயிப்பா இருக்க தான் பிடிக்கும் அதுல தான் ஒரு சுகம் இருக்கு
புருசனுக்கு காலைல எந்திருச்சு காப்பி போட்டு அதுக்கு அப்புறம் குழநதைகள ஸ்கூல்க்கு அவசர அவசரமா ஸ்சூலுக்கு தயார் பண்ணி அனுப்பி அப்புறம் எல்லார் துணி துவைச்சு பாத்திரம் விளக்கி வீட்ட பெருக்கி சுத்தம் பண்ணி எல்லாம் முடிச்சு மதியம் நிம்மதியா சீரியல் பாத்து அப்புறம் ஒரு குட்டி தூக்கம் போட்டு சாயங்காலம் பிள்ளக வர ஸ்கூல் பஸ்க்கு வெயிட் பண்ணி அதுகள செல்லமா கூப்பிட்டு வந்து அப்புறமா அவருக்கு வெயிட் பண்ணி அப்புறம் எல்லாருக்கும் காப்பி டின்னர் ரெடி பண்ணி மறுபடியும் தூங்க வைக்கிற வரைக்கும் மிக பெரிய பொறுப்ப கடவுள் பொண்ணுகளுக்கு கொடுத்து இருக்காரு


அத விட்டுட்டு வேலையாம் வேலை .இதுல இருக்க சுகம் அதுல இருக்குமாங்க காலைல புருசனுக்கு டை கட்டி விடுறப்ப உள்ள நெருக்கம் அப்புறம் தலையானை உரை போட்டு அவர் பக்கத்துல படுக்கிற நெருக்கம் இதலாம் கிடைக்குமா
அப்புறம் வெளிய போன கண் டவன் வாசனையும் ஸ்மெல் பண்ணனும் ஆனா வீட்ல அப்படி இல்ல துவைக்கும் போது பாத்திரம் விளக்கும் போது எல்லாம் என் புருஷன் வாசனையும் என் பிள்ளைக வாசனையும் மட்டும் தான் ஸ்மெல் பண்ணுவேன் இன்னும் ஹாவுஸ் வோயிப் இருக்கிற சுகத்த பத்தி சொல்லி கிட்டே போகலாம் என்றாள் .
ஐயோ போதும்ங்க என்றாள் சிமி .ஏங்க ரொம்ப அறுத்துட்டானோ என கேட்டாள் சிமி .அய்யோ இல்லைங்க கண்ணுல கண்ணிற் வர வச்சுட்டிங்க என்றாள் சிமி .ம்ம் சும்மா சொல்றிங்க கொஞ்சம் ரம்பம் போட்டுட்டேன்னு எனக்கே தெரியுது என்றாள் சுவாதி ஐயோ அப்படி இல்லைங்க உண்மைலே நீங்க சொன்னது எல்லாம் நல்லா இருந்துச்சு என்றாள் .
சரி சொல்லுங்க அப்புறம் கல்யாணம் வேலை எல்லாம் எப்படி போகுது என்றாள் சுவாதி .நாளைக்கு தான் கல்யாணம் மறந்துட்டிங்களா என கேட்டாள் சிமி .ஆமாங்க மறந்துட்டேன் என்றாள் சுவாதி .
உங்கள சொல்லி குத்தம் இல்ல நான் தான் அன்னைக்கு பெரிய இவ மாதிரி பேசிட்டு அதுக்கு அப்புறம் உங்களுக்கு போன் கூட பண்ணல அதான் நீங்க இப்ப மறந்துட்டிங்க ஐ அம் வெறி சாரிங்க கல்யாண வேலை ரொம்ப இன்னும் பத்திரிக்கையே கொடுத்து முடிக்கல அதான் அது மட்டும் இல்லாம ராக்கி ஓட அம்மா பக்கத்திலே என்னைய வச்சுக்கிட்டு விட மாட்டிங்கிறாங்க அதாங்க உங்க கிட்ட பேசவும் முடியல வந்து பாக்கவும் முடியல அதுக்காக எல்லாம் கோபிச்சு கிட்டு வராம இருந்திராதிங்க ப்ளிஸ் என்றாள் சிமி .
ஐயோ அப்படி எல்லாம் இல்ல எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு கர்ப்பமா இருக்கிறதால என்றாள் சுவாதி .எங்க நீங்க எதுக்கும் கவலை படாதிங்க ராக்கி குடும்பமே டாக்டர் குடும்பம் தான் .அவன் அக்கா அம்மா மாமா ஏன் இப்ப அவன் தங்கச்சி கூட டாக்டருக்கு படிக்கிறா இது மட்டும் தான் மெண்டல் பேசண்டா இருக்கு என்று சிமி கிண்டல் அடிக்கவும் ராக்கி அதை கேட்டு பின்னால் இருந்து அவளை செல்லமாக கிள்ளினான் அதனால் சிமி ஆவ் என்று கத்தினாள் .
என்ன ஆச்சுங்க என்றாள் சுவாதி .ஒன்னும் இல்லைங்க நீங்க அதனால கவலை படாம வாங்க அது மட்டும் இல்லாம மேரேஜ் கோவால இல்ல சர்ச் கிடைக்கல அதுனால மும்பைல தான் நான் வாட்ஸ் ஆப்ல எந்த சர்ச்ன்னு அட்ரஸ் அனுப்புறேன் நீங்க நாளைக்கு காலைல எல்லாம் கிளம்பி வந்துடுங்க என்றாள் .அப்புறம் உங்க வீட்டுக்கு ஒரு பையன் ட்ரெஸ் கொண்டு வருவான் மேறேஜ்க்கு நான் எடுத்தது அத போட்டு வாங்க என்றாள் சிமி .
எதுக்குங்க ட்ரெஸ் எல்லாம் என்றாள் சுவாதி .ப்ளிஸ் எனக்காக போட்டுகிட்டு மறக்காம வாங்க என்றாள் சிமி .சரிங்க என்று சுவாதி போனை வைக்கவும் அஞ்சலி கார் ஒட்டி கொண்டு வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது .ம்ம் நான் அது யாரு என்னன்னு எல்லாம் கேக்க போறது இல்ல ஆனா அந்த ஹாவுஸ் வோயிப் அது என்ன உண்மைலே உன் ஆசையா என கேட்டாள் அஞ்சலி .
சே அது நான் என்னைக்கோ ஏப் எம்ல ஒரு பொண்ணு என் கிட்ட சொன்னத அப்படியே போன்ல பேசுனவ கிட்ட சொல்லிட்டேன் என்றாள் சுவாதி .எங்க ஏன் கண்ண பாத்து சொல்லு என்றாள் அஞ்சலி .சுவாதி ஒன்றும் சொல்லமால் சோ என்று ஒரு சலிப்போடு தலை குனிந்தாள் .ஏன் சொல்லுடி உன்னால சொல்ல முடியாது எனக்கு தெரியும் ஏன்னா நீ அந்த போன்ல சொன்னது எல்லாம் உண்மைலே உன் ஆச அத என் கிட்டே நிறைய தடவ சொல்லிருக்க அப்புறம் ஏன் பொய்ன்னு நடிக்கிற என அஞ்சலி கேட்டாள் .
ஓகே ஓகே ஆமா எனக்கு உண்மைலே ஒரு குடும்பமா ஹாவுஸ் வோயிப்பா மட்டும் இருக்கணும்னு சின்ன பிள்ளைல இருந்து ஆச ஏன்னா நான் குடும்பம் இல்லாதாவ ஒரு அநாதை அதான் எப்பயுமே இப்படி எல்லாம் ஒரு குடும்பம் வேணும் பிள்ளைக வேணும் ஒரு புருஷன் அது அன்பானா புருசனா இல்லாட்டியும் பரவல எல்லாருக்கும் இருக்கிற மாதிரி என்னைய திட்டுற ஏன் அடிக்கிற புருசனா கூட இருந்தா போதும் அப்புறம் ஒரு சின்ன வீடு அது போதும் கார் வேணாம் ஒரு பாஜாஜ் பைக் போதும் எந்த வசதியும் வேணாம் எனக்குன்னு ஒரு அழகான குடும்பம் வேணும்னு நினைச்சு பாத்து பல நாள் ஏங்கி இருக்கேன் .


ஆனா நாம நினைக்கிறது எல்லாம் உடனே நடக்கிறதுக்கு இது என்ன சினிமாவா இல்ல வாழ்க்கை . வாழ்க்கைலே எப்பயுமே நாம நினைக்கிறதுக்கு மாறா தான் நடக்கும் அத ஏத்துக்கணும் அதான் வாழ்க்கை .
அட்லிஸ்ட் சொல்லி பாத்தோ நினைச்சு பாத்தொவாச்சும் நிம்மதி ஆயிக்கிறேன் அது மட்டும் தான் முடியும் என்றாள் சுவாதி .யே இது ஏன் நடக்காது இப்ப கூட நீ நினைச்சா நடக்கும் போயி அவன் கிட்ட உன் லவ்வ சொன்னா நீ நினைச்ச மாதிரி ஒரு ஹாவுஸ் வோயிப்பா இருக்காலம் ஏன் இப்படி பண்ற என கேட்டாள் அஞ்சலி .
என்னா அவனுக்கு என்னைய பிடிக்கல என்றாள் சுவாதி .எத வச்சு சொல்ற என்றாள் அஞ்சலி .ஒரு ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி அவன் கிட்ட ஓரளவில் மறைமுகமா என் பீலிங்க்ஸ் வெளிபடுத்தினேன் .அதுல இருந்து அவன் என் மூஞ்சிய கூட பாக்காம இந்த 1 மாசமும் அவையிட் பண்றான் .நைட் நான் தூங்குனதுக்கு அப்புறம் தான் வீட்டுக்கு வரான் .காலைல நான் ஹால்ல இல்லாம இருந்தா தான் ஆபிஸ் போறான் .
இதையும் மீறி நான் எதாச்சும் பேசுனா சுவத்து பக்கமே பாத்து பேசுறான் என் மூஞ்சிய பாத்து பேச மாட்டின்கிறான் இதாலம் எனக்கு தெரியாது புரியாதுன்னு வேற நினைக்கிறான் ஆனா அவன் அவையிட் பண்றது நல்லா புரியுது அப்புறம் எப்படி அவன் கிட்ட சொல்ல சொல்றிங்க என்றாள் இருந்தாலும் என்று அஞ்சலி சொல்ல முற்பட அக்கா வேணாம் அவன சொன்னாலும் இனி வேணாம் எனக்கு அத நான் முதலே சொல்லிட்டேன் இப்ப நான் கிளம்புறேன் நீங்க ஹாஸ்டல் போங்க என்றாள் சுவாதி .
பின் வீட்டிற்கு போன போது வாசலில் ஒரு பார்சல் இருந்தது அது சிமி கொடுத்த பார்சல் அதில் அவள் இருவருக்கும் வாங்கி கொடுத்த உடைகள் இருந்தன .ஏன் இது வெளியே இருக்கு இன்னும் அவன் வரலையா இல்லையே அவன் கார் நிக்குது ஒரு வேல தூங்கி இருப்பான் என்று நினைத்து கொண்டு இவள் சாவியை வைத்து கதவை திறந்தாள் .கதவை திறந்த சத்தம் கேட்டு விக்கி உடனே எழுந்து விட்டான்


அவள் கதவை திறந்ததும் எழுந்தான் விக்கி .மெல்ல கண்களை கசக்கி கொண்டே பார்த்தான் .அவன் எழுந்து விட்டதால் சாரி உன் தூக்கத்த கலைச்சதுக்கு என்றாள் சுவாதி .அவன் ஒன்றும் சொல்லமால் எழுந்து நின்றான் .சுவாதி அவள் ரூமுக்கு போக பார்த்தாள் .அதற்கு முன் விக்கி சுவாதியை நிப்பாட்டினான் சுவாதி ஒரு நிமிஷம் என்றான் .அவள் நின்றாள் .ஆமா நீ என்ன செஞ்ச என்றான் .

ஒ அதான் உன் தூக்கத்த நான் கலைச்சதுக்கு தான் அப்பவே சாரி கேட்டுட்டேன்லே அது உனக்கு கேக்கல அப்புறம் என்ன என்றாள் .நான் அத சொல்லல நேத்து நீ என்ன பண்ண என்றான் கோபத்தோடு .நேத்து என்ன பன்னனேன் எனக்கே தெரியலையே எதுவும் பொண்ணுகள நீ கூப்பிட்டு வரேன்னு மெசேஜ் பண்ணி அத ஏதும் பாக்காம விட்டுட்டனா இல்லையே என்றாள் .
விளையாடத நேத்து நான் சரக்கு அடிச்சு வாந்தி வந்து விழுந்து கிடந்தப்ப வருண் ஏதும் என் வாந்திய துடைச்சு எனக்கு ட்ரெஸ் மாத்தி விடல நீ தான் எனக்கு ட்ரெஸ் மாத்தி விட்டு வாந்திய துடைச்சு கிளின் பண்ணி இருக்க
ஒ அது வந்து என்று சுவாதி சொல்ல வரும் முன் பேசாத என்ன நினைச்சு கிட்டு இருக்க உன் மனசுல நீ எப்பயுமே நல்லவா மாதிரி தெரியுனுமா எல்லாத்துக்கும் அதுக்கு தான் இந்த மாதிரி எல்லாம் பண்றியா இல்ல தெரியாம தான் கேக்குறேன்
நான் வாந்தி எடுத்து ஒளப்பி கிட்டு இருந்தா உனக்கு என்ன இல்ல அதுலே படுத்து கிடந்தா உனக்கு என்ன நீ யாரு என் மேல இருக்க வாந்திய துடைச்சு விட்டு செஞ்சு எனக்கு ட்ரெஸ் மாத்தி விடுறதுக்கு நீ என்ன என் பொண்டாட்டியாடி சொல்லுடி
ஒரு வேல எனக்கு உதவி செய்றேன்னு நீ பாத் ரூம்ல அந்த ஈரத்துல வழுக்கி விழுந்து ஏதும் உனக்கு ஆச்சுன்னா உன் போலிஸ் கமிசனர் பொண்டாட்டி அக்கா என்னைய வந்து பிடிச்சு ஜெயில் போடணும்னு உனக்கு ஆச அப்படிதாண்டி என்று விக்கி கோபத்தோடு கத்தினான் .
ஒ ஒ மெல்ல திட்டுங்க சார் முதல உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு நான் உங்க பொண்டாட்டியா தான் இருக்கணும்கிற அவசியம் இல்ல உங்கள மாதிரி யார் இப்படி கிடந்தாலும் நான் ஹெல்ப் பண்ணுவேன் அது என் ஹேபிட் ஏன் இதே மாதிரி டேவிட் பல தடவ வாந்தி வந்து கிடந்தப்ப கூட நான் பண்ணி இருக்கேன் என்றாள் சுவாதி .உடனே விக்கிக்கு கோபம் வந்தது .
ஒ டேவிட் டேவிட் டேவிட் அவன இன்னும் நினைச்சு கிட்டு இருந்தா போயி தொலைஞ்சு இருக்க வேண்டியது தானே ஏன் இங்க இருந்து என் உயிர வாங்குற நான் ஆச்சும் நிம்மதியா இருப்பேன்
போடி போயி தொல என்று கத்தினான் .இப்போது சுவாதிக்கு கோபம் வந்து விட்டது .எனக்கு என்ன உன் கூட இருக்க பிடிச்சு கிட்டா இருக்கேன் .எனக்கும் டேவிட் தான் பிடிச்சு இருக்கு இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகாட்டியோ இல்ல உன் குழந்தைய வயித்துல சுமக்காட்டியோ நான் உடனே அவன் கூட தான் போயி இருப்பேன் .
ஏன்னா அவன் என்ன கெட்டவனா உன்னையே மாதிரி ரொம்ப நல்லவன்டா இப்ப கூட போனா என்னைய ஏத்துக்குவான் என்றாள் .ஒ தெரியுதுல நான் கெட்டவன்னு அப்புறம் என்ன மயிருக்குடி கூட இருக்க போ போயி அந்த டேவிட்க்கே ரெண்டாவது பொண்டாட்டியா போ யார் வேணாம்னு சொன்னா யார் உன்னைய பிடிச்சு வச்சு கிட்டு இருக்கா போடி போயி தொலைடி நாயே என்றான்
கோபத்தோடு .போறேன்டா போறேன் உன் குழந்தைய பெத்துட்டு அதுக்கு அப்புறம் போறேன் என்றாள் .பெரிய குழந்தை மயிரு முதல அது என்னால வந்த குழந்தையான்னு இன்னும் தெரியல அப்புறம் டேவிட் தான் ரொம்ப நல்லவன் ஆச்சே
அது யாரோட குழந்தையா இருந்தாலும் எத்துக்குவான் அப்படியே உன்னையும் கல்யாணம் பண்ணி அந்த குழந்தைக்கும் இன்சியல் கொடுப்பான் போ போயி நில்லு அவனும் உன்னைய தான் எதிர் பார்த்து காத்து கிட்டு இருக்கான் என்றான் விக்கி .அதை கேட்டு சுவாதி விக்கி என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு அத புரிஞ்சுக்கோ என்றாள் .
என்னது நீ பொறுமையா இருக்கியா நான் தாண்டி பொறுமையா இருக்கேன் நீ பண்றதுக்கு எல்லாம் உன்னால நான் தினம் தினம் இம்ச அனுபிவிக்கிறேன் நீ என் கூட இருக்கிறது எனக்கு பயங்கர எரிச்சலா இருக்கு உன்னைய எல்லாம் நான் இல்ல யாருமே வச்சு இருக்க மாட்டாங்கே
உன்னால தான் உங்க அப்பா அம்மா கூட பிரிஞ்சு இருப்பாங்க என்று விக்கி பேசி கொண்டே போக போதும் நிறுத்து டாஆஆஆஆஆ என்று கத்தினாள் சுவாதி .பேசி கொண்டு இருந்த விக்கி அமைதி ஆனான் .உனக்கு நான் இங்க இருக்க கூடாது அவளவுதானே என்றாள் கண்ணில் நீர் வடிய கோபத்தோடு .விக்கிக்கு அதை பார்த்து ஒன்றும் சொல்ல முடியவில்லை .அது வந்து இல்ல அப்படி இல்ல என்று திணற
கவலை படாத இன்னும் ஒரே வாரத்துல இல்ல இன்னும் 4 நாள்ல நான் உன் வீட்ட விட்டு போறேன் .நீ சந்தோசமா இரு போதுமா என்றாள் சுவாதி .அது வரைக்கும் எனக்கும் உனக்கும் ஒரு பேச்சும் கிடையாது சரியா என்றாள் .அவள் அவ்வாறு சொல்லி விட்டு கோபமாக அவனை முறைத்து பார்த்து விட்டு அவள் ரூமிற்கு போனாள் .
சே ஏண்டா இப்படி பேசுன விக்கி என்றது மனம் ,தெரியல கொஞ்ச நாளாவே எனக்குள்ள டேவிட் வந்ததுனால இருக்க டென்சன் இவ வேற அதுக்கு ஏத்த மாதிரி டேவிட் தான் பிடிக்கும்ன்னு சொன்னாளா அதான் அப்படி அவள கண்டபடி திட்டிட்டேன் என்றான் .போடா இப்ப அவ கோபிச்சுகிட்டு போ போறேன்கிரா என்ன பண்ண போற என்றது மனம் .
போனா போகட்டும் எனக்கு ஒன்னும் கவலை இல்ல என்றான் .இருந்தாலும் நீ ரொம்ப ஹார்சா பேசிட்ட என்றது மனம் .அப்படியா என்றான் .என்ன நோப்புடியா ஒரு புள்ள தாட்சி பொண்ண கொஞ்சம் கூட இப்படி இரக்கம் இல்லாமையா திட்டுவாங்க அதுனால அவளுக்கு ஏதும்
ஏதும் சொல்லாத அவளுக்கு ஒன்னும் ஆகாது என்றான் தன் மனதிடிம் நினைத்து கொண்டு பேசி கொண்டு இருக்கும் போது சுவாதி ரூமில் ஐயோ அம்மாஆ வலிக்குதே என்று அவள் அலறும் சத்தம் கேட்டு விக்கி அவள் ரூம் கதவை தட்டினான் .என்ன ஆச்சு என் கத்துற என்றான் .அவள் ஒன்னும் சொல்லமால் ஐயோ முடியலையே என்று கத்தி கொண்டு மட்டும் இருந்தாள் .விக்கி ரெண்டு மூனு தடவை கதவை தட்டி விட்டு ஓங்கி ஒரு மிதி மிதித்து திறந்தான் .
உள்ளே சுவாதி வயிற்ரை பிடித்து அழுது கொண்டு இருந்தாள் .என்ன ஆச்சு என்ன பண்ணுது என்றான் விக்கி .ஒன்னும் இல்ல நீ உன் வேலைய பாத்துட்டு போடா மயிரு என்றாள் சுவாதி .
ஐயோ முடியலையே அம்மா என்று வயிற்ரை பிடித்து கொண்டு அழுதாள் .யே என்னடி பண்ணுது சொல்லி தொல என்றான் .தயவு செஞ்சு போ நான் வேணும்னா என் சாவுக்கு காரணம் நீ இல்லன்னு லெட்டர் கூட எழுதி தரேன் ஆனா இப்ப நீ இங்க என் ரூம்ல இருக்காத ப்ளிஸ் என்று கத்தினாள் .
ஓகே நான் போறேன் போறேன் என்று சொல்லி மெல்ல கதவு வரை போனவன் அவள் அம்மா ஐயோ என்று கத்தி கொண்டே இருப்பதை பார்த்து அவனால் பொறுக்க முடியமால் திரும்பி வந்தான் .உன்னைய தான் ரூம விட்டு போ சொன்னேளே அப்புறம் ஏன் வர ஐயோ முடியலையே என்று முனகி கொண்டு இருந்தாள் .
விக்கி அவள் கத்தி கொண்டே இருக்க அவள் கிட்ட போனான் அவளை பார்த்தான் அழுது கொண்டு இருந்த அவள் முகத்தை பிடித்து தூக்கி நிறுத்தி Thats it எனக்கு வேற வழி தெரியல உன் வலிய போக்க என்று சொல்லி கொண்டே அவள் உதட்டில் முத்தமிட்டான் .
சுவாதி மீண்டும் ஒரு எதிர் பாரத முத்தத்தை அப்போது அவனிடிம் எதிர் பார்க்க வில்லை .விக்கி முழுதுமாக அவள் வாயை தன் வாயை கொண்டு அடைத்து விட்டான் .

வாயை கவ்வியாதால் சுவாதி கத்தமால் இருந்தாள் அதே நேரத்தில் அந்த எதிர் பாராத முத்தத்தால் அவள் வலியை மறந்து ஓரிரு நொடிகள் இருந்தாள் ஓரிரு நொடிகள் இருவரும் முத்தமிட்டு கொண்டு இருந்தனர் விக்கி அவள் உதட்டில் இருந்து அவன் உதட்டை சிறிது கூட இடைவெளி விடமால் சப்பி கொண்டு இருந்தான் .

இருந்தாலும் அவளுக்கு வயிறு வலித்து கொண்டு தான் இருந்தது .அதனால் வலியால் அவன் தோல்களை கை போட்டு அழுத்தி கொண்டு இருந்தாள் .பின் விக்கியாக அவள் உதட்டை கவ்வுவதை விட்டு ஓகே இனி கத்தாத நான் இப்ப உன்ன ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போறேன் என்று சொல்லி கொண்டே தூக்கினான் .

அவள் வேணாம் வேணாம் நீ போ இந்நேரம் ஹாஸ்பிட்டல் எல்லாம் இருக்காது என்றாள் .மணி பத்து தான் ஆகுது அதலாம் இருக்கும் என்று சொல்லி கொண்டு அவளை தூக்கி கொண்டு நடந்தான் .இருந்தாலும் நீ ஒன்னும் என்னைய காப்பத்த வேணாம் அஞ்சலி அக்காவுக்கு போன் என்று சொல்ல முடியமால் அவள் வலியில் கத்த விக்கி அவளை தூக்கினான் .
முதலில் அவள் 7 மாசம் என்பதால் கொஞ்சம் சிரம்பப்பட்டு தான் தூக்கினான் .ஆனால் தூக்கும் போது அழுது கண்ணீர் ஒழுகிய கண்களை பார்த்ததும் அவன் அவளை தன் உடலில் உள்ள வலு எல்லாம் கொண்டு தூக்கி கொண்டு காரில் கொண்டு போயி பின் சீட்டில் உக்கார வைத்து விட்டு இவன் வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்தான் .பின் வேகமாக ஆஸ்பத்திரிக்கு வண்டியை ஓட்டினான்


ஆஸ்பத்திரி வந்ததும் விக்கி சுவாதியை வேகமாக அவளை தூக்கி கொண்டு உள்ளே போனான் .ஆனால் அங்கு நர்ஸ் இருந்து கொண்டு டாக்டர் டுட்டி முடிஞ்சு கிளம்பிக்கிருக்காங்க அதுனால பாக்க முடியாது என்றாள் .ஐயோ என் வோயிப்புக்கு ரொம்ப வயிறு வலிக்குது தயவு செஞ்சு டாக்டர பாக்க விடுங்க என்றான் .

உங்க வோயிப்புக்கு எத்தன மாசம் என கேட்டாள் நர்ஸ் .7அரை மாசம் என்றான் விக்கி .அப்ப கண்டிப்பா பிரசவ வலியா இருக்காது பிரசவ வலின்னா தான் டாக்டர் உடனே பாக்கனும்னு அவசியம் இத கொண்டு வாங்க நாங்களே பாத்துறோம் என்றாள் நர்ஸ் .நோ அதலாம் வேணாம் ப்ளிஸ் டாக்டர் கிட்டே என் வோயிப்ப காட்டுங்க என்றான் ,சார் இதுக்கான டாக்டர் கிளம்பிட்டாங்க சார் அதுனால கொண்டு வாங்க நாங்க பாக்கிறோம் என்றாள் நர்ஸ் .
இப்ப தான் கிளம்பிக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னிங்க அப்புறம் இப்ப இல்லன்னு சொல்றிங்க ப்ளிஸ் அவங்க இருக்காங்க எங்கள அவங்களுக்கு தெரியும் ப்ளிஸ் உள்ள விடுங்க என்றான் .இல்ல சார் அவங்க இல்ல நாங்க தான் பாப்போம் எங்க கிட்ட பாக்க பிடிச்சா பாருங்க இல்லாட்டி கிளம்புங்க என்றாள் .ஐயோ பணம் எவளவு வேணும்னாலும் வாங்கிகோங்க அவளா மட்டும் டாக்டர வச்சு ட்ரீட்மென்ட் செய்ங்க என்று கெஞ்சினான் .
சார் எங்கள என்ன பணத்துக்கு அலையற ஆஸ்பத்திரின்னு நினைசிங்கிலா போங்க சார் வெளியே செக்கியுரிட்டி என்றாள் ,விக்கியால் அதற்கும் மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை அவனை மீறி அவனுக்கு கோபம் வந்தது ஈரக்கம் இல்லாத பாவிகளா நாய்களா நீங்கலாம் எதுக்குடா ஆஸ்பத்திரி வச்சு நடத்துரிங்க என்று அவன் கத்தி கொண்டு இருக்கும் போது விக்கி என்று ஒரு பெண் குரல் கேட்கவும் திரும்பினான் .
அங்கு சிமி நின்று கொண்டு இருந்தாள் ,சிமி என்றான் .என்ன ஆச்சு என்றாள் சிமி ,சுவாதிக்கு தீடிருன்னு வயிறு வலிக்குது டாக்டர பாக்கலாம்னு பாத்தா விட மாட்டிங்கிராலுகா ஆமா நீ என்ன பண்ற இங்க என்றான் .
ஒரு நிமிஷம் பொறு என்று நர்சிடிம் போயி உள்ள டாக்டர் ஜெனிபர் இருக்காங்களா என்றாள் .ஆமா மேடம் என்றாள் நர்ஸ் .ஓகே இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் என் பிரண்ட்ஸ் தான் உள்ள விடுங்க என்றாள் .பின் அவள் சரி என்றாள் .விக்கி சுவாதியை கை தாங்களாக உள்ள கூப்பிட்டு சென்றான் .அங்கு டாக்டரிடிம் அண்ணி கிளம்பிட்டிங்களா என்றாள் .நான் தான் வரேன்னு சொன்னேளே அப்புறம் ஏன் நீ வந்த என்றார் டாக்டர்
அது இருக்கட்டும் முதல இவங்கள பாருங்க என்றாள் சிமி .அங்கு சுவாதி வயிற்ரை பிடித்து கொண்டு வலியில் முனகி கொண்டு இருந்தாள் .விக்கி பக்கத்தில் பதற்றத்தோடும் வருத்தொடும் நின்று இருந்தான் .வாங்க மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் என்ன ஆச்சு என்றார் .தெரில டாக்டர் அவளுக்கு வயிறு ரொம்ப வலிக்குதுன்கிரா என்ன பண்றதுன்னு தெரில என்றான் .

சரி உள்ள கொண்டு வாங்க என்றார் .

சுவாதியை கையை பிடித்து மெல்ல உள்ளே கூப்பிட்டு போனான் நான் வேணும்னா வெளிய நிக்குறேன் டாக்டர் என்றான் .இல்ல உள்ளே இருங்க என்றார் .டாக்டர் அவள் சூடிதாரை தூக்கி விட்டு ஓகே ஏங்க வலிக்குது இங்கயே இங்கயே என்று கேட்டு கொண்டு இருக்க விக்கிக்கு அவள் 7 மாத வயிற்ரை பார்க்கவும் ஏதோ சொல்ல முடியாமல் நெஞ்சை அடைப்பது போல இருந்தது .இங்க தான் டாக்டர் என்ற பின் ஓகே என்று சொல்லி விட்டு விக்னேஷ் உங்க வோயிப் கைய கொஞ்சம் பிடிங்க இன்ஜெக்சென் போடணும் என்றார் .
நானா என கேட்டான் .ஆமா நர்ஸ் யாரும் இல்ல நானே கிளம்ப போறேன் சோ கைய பிடிங்க என்றார் .விக்கி சுவாதியின் அருகில் சென்று அவள் சுடிதாரை மெல்ல ஏத்தி கையை பிடித்தான் ,சுவாதி வலியில் கத்தி கொண்டு இருந்ததால் அவனை தடுக்க வில்லை .சுவாதியின் கையை இறுக்கமாக பிடித்து கொள்ள டாக்டர் அவளுக்கு ஊசி போட அவள் முத்தாச்சி என்று கத்தி கொண்டே விக்கியின் மார்பில் மெல்ல சாய்ந்தாள் .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக