நீதான் என் காதலி - பகுதி - 23

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விக்கி மற்றும் சுவாதியின் மனங்களில் ராக்கியும் சிமியும் இருந்த இடத்தில தங்களை வைத்து நினைத்து பார்த்து ஏங்கினார் .விக்கிக்கு ராக்கி இடத்தில அவன் நின்று கொண்டு இருக்க எதிரே சுவாதி நிற்க பாதர் ok you may kiss the bride என்று சொன்ன உடன் அவன் சுவாதியின் கன்னத்தில் முத்தம் கொடுக்கமால் ஸ்ட்ரைட் ஆக உதட்டில் கொடுப்பது போல நினைத்து பார்த்து மெல்ல சிரித்தான் ,பின் அவனுக்கு திரும்பி சுவாதியை பார்க்க வேண்டும் போல இருந்தது ஆனால் முடியவில்லை .அதே தான் சுவாதியும் சரியாக இந்நேரம் மேடையை பார்க்கமால் இவனை பார்த்தால் இவன் புரிஞ்சுக்கிருவான் அது வேண்டாம் என்று கைகளை பிசைந்து அடக்கி கொண்டாள் .அவளுக்கு கண்ணிற் வருவது போல இருந்தது அதையும் அடக்கி கொண்டாள் .
பின் திருமணம் முடிந்தது .கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் வெளியே சென்றார்கள் ,சுவாதி எந்திரிக்க பார்த்தாள் ,இரு எல்லாரும் போன பிறகு போவோம் இல்லாட்டி இடிச்சு விட்டுருவானுக என்றான் .ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல ஐயோ விக்கி எனக்கு உன்னையே கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் ஆச இல்லடா ஆனா உன் கூடவெ இப்ப இருக்க மாதிரி ஒரு ரூம் மெட்டா கடைசி வரைக்கும் இருக்கணும் போல இருக்கு .ஆனா என்னால முடியல அட்லிஸ்ட் ஒரு 3 மாசமாச்சும் இருக்காலம்ன்னு பாத்தா
சண்ட போட்டு இப்பவே போக வைக்கிரியெடா ப்ளிஸ் என்னைய இருக்க வைடா என்று அவன் அந்த பக்கம் திரும்பி எல்லாரும் போகிறர்களா என பார்த்து கொண்டு இருக்கும் போது சுவாதி மனதில் நினைத்தாள் .
ஓகே ஓரளவு கூட்டம் போயிடுச்சு சோ லெட்ஸ் மூவ் …..
ஓகே வா போவோம் என்று விக்கி மெல்ல சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு வெளியேறினான் .வெளியே எல்லாரும் ஒரு இடத்தில ஆடி பாடி கொண்டு இருந்தனர் ,இன்னொரு பக்கம் கல்யாண ஜோடிக்கு என்று ஒரு மேடை போட்டு அவர்களோடு வந்தவர்கள் கிப்ட் கொடுத்து போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர் .

ஹ கிப்ட் கொடுத்துட்டு கிளம்பிடுவோமா என கேட்டாள் சுவாதி .கிப்ட் ஏதும் வாங்கி இருக்குமோ என்ன என கேட்டான் .நீ வாங்க மாட்டேன்னு தெரியும் அதான் நான் நேத்தே காலைல ஆஸ்பத்திரி போகும் போது வாங்கிட்டேன் என்றாள் .ம்ம் ரொம்ப நல்லது சரி வா போயி கொடுத்துட்டு கிளம்புவோம் இன்னைக்கு ஞாயிற்று கிழமை வேற இங்க இருந்தா நல்லாவா இருக்கும் வா போவோம் என்றான் .
இருவரும் மேடைக்கு அருகே வரை போனார்கள் .பின் சுவாதி நின்று விட்டாள் .வா போவோம் ஏன் நிக்குறே என்றான் .அந்த டாக்டர் அம்மா இருக்காங்க அவங்க நம்மாலேயே முறைச்சு பாக்குறாங்க சோ எப்படி போறது என்றாள் .நடந்து தான் போனும் என்றான் விக்கி .விளையாடதாடா எனக்கு அவங்க முறைக்கிரத பாத்தா எனக்கு பயமா இருக்கு என்றாள் .
என்னது பயமா இருக்கா அடச்சீ வா போயி கொடுத்துட்டு போவோம் என்றான் .இல்ல நான் வரல நீயே போயி கொடுத்துடு நான் இங்க நிக்குறேன் என்றாள் .அவர்கள் அங்கே தயங்கி கொண்டு இருப்பதை பார்த்து மேடையில் இருந்து சிமி வாங்க என்பது போல் சுவாதியை பார்த்து கை அசைத்தாள் .இல்ல இருக்கட்டும் என்பது போல சுவாதி சொல்ல மீண்டும் அவள் சைகையில் வர சொன்னாள் .
அதன் பின் டாக்டர் ஜெனிபர் மீண்டும் வந்தார் .என்ன உங்க ரெண்டு பேரையும் அடிக்கடி ஓர் ஆள் வந்து கூப்பிடனுமா வாங்க மேல போட்டோ எடுக்கலாம் என்றார் .இல்ல டாக்டர் அது வந்து ஒரே கூட்டமா இருக்கு அதான் என்று சுவாதி சொல்ல ஒன்னும் இல்ல என் கூட வாங்க என்று டாக்டர் சுவாதியின் கைகளை பிடித்து கொண்டு நடக்க அப்பா நம்ம தப்பிச்சோம் என்று ஒன்றும் தெரியாதது போல விக்கி அந்த பக்கம் திரும்பி போன் பேசுவது போல நடிக்க ஹலோ விக்னேஷ் நீங்களும் வாங்க உங்க வோயிப் மட்டும் தனியாவா போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க சோ நீங்களும் வாங்க என்றார் .
இல்ல போன் என்றான் .அட ஞாயிற்று கிழமை கூடவா போன்லே வொர்க் பண்ணுவிங்க அதான் உங்க கூட சுவாதி சண்ட போட்டு இருக்க வாங்க அப்புறம் போன் பேசலாம் என்று டாக்டர் சொல்ல வேறு வழி இல்லமால் சுவாதி பின்னே சென்றான் .பின் சுவாதியும் விக்கியும் மேடை ஏற மேடையில் இருந்த ராக்கியின் அம்மா டாக்டர் மேரி இவர்களை பார்த்து கோபத்தோடு முறைத்து விட்டு அந்த பக்கம் முகத்தை திருப்பி கொள்ள விக்கிக்கும் சுவாதிக்கும் புரிந்து விட்டது .
இருந்தாலும் இருவரும் கிப்ட்டை ராக்கி மற்றும் சிமியிடம் கொடுத்து விட்டு இருவருக்கும் வாழ்த்து சொன்னார்கள் .பின் போட்டோவிற்கு நிற்க சொல்ல வேண்டாம் என்று சொன்னார்கள் ஆனால் டாக்டர் மற்றும் சிமி கட்டாயப்படுத்த விக்கியும் சுவாதியும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் .இருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு நிற்க போட்டோ கிராபர் நல்லா நெருக்கமாக நிற்க சொன்னான் .அப்போதும் இருவரும் ஓரளவே நெருங்கினர் .
இன்னும் கொஞ்சம் பக்கம் போங்க சார் என்று போட்டோ கிராபர் சொல்ல சும்மா நெருக்கமா நில்லுங்க மிஸ்டர் விக்னேஷ் என்றார் டாக்டர் .இருவரும் நன்கு நெருங்கி நின்றனர் .இருவரும் ஒன்றாக பக்கத்து பக்கத்தில் நின்று போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை .அதனாலே இருவருக்கும் உள்ளும் ஒரு பரசவமும் சந்தோசமும் ஏற்பட்டது .சுவாதி அவன் பக்கத்தில் நின்றதால் அவன் தோள் பட்டைகளையும் தன் தோள் பட்டையையும் வைத்து கண்களிலே இருவரின் உயரத்தையும் அளந்து பார்த்தாள் .


பரவல இந்த விக்கி பயபுள்ள என்னைய விட உயரமா தான் இருக்கான் என்று அவன் பக்கம் திரும்பி மனதில் நினைத்து கொண்டு இருக்க மேடம் இங்க பாருங்க என்று சுவாதியைபோட்டோ கிராபர் சொல்லவும் அது வரை அவன் பக்கம் அவனுக்கே தெரியமால் பார்த்து கொண்டு இருந்தவள் அவன் பார்த்து விடுவான் என்று உடனே முன்னே பார்க்க அதற்குள் விக்கி பார்க்க அவளும் பார்க்க இருவரும் ஒரு நொடி பார்த்து கொண்டு முன்னே போடோவுக்கு போஸ் கொடுத்தனர் .விக்கி சுவாதி தன்னை அது வரை பார்த்து விட்டு உடனே திரும்ப முடியமால் திணறியதை நினைத்து சிரித்தான் .
அது சுவாதிக்கும் புரிந்து விட்டது .பின் இருவரும் போட்டோ எடுத்து விட்டு சிமியிடம் நாங்கள் கிளம்புறோம் என்றாள் சுவாதி .அதலாம் முடியாது இந்தா இன்னும் 10 நிமிசத்துல சாப்பாடு ரெடி ஆகிடும் அத சாப்பிட்டு போங்க என்றாள் .இல்லைங்க நான் இருக்கிறதுல சாப்பிடலாமான்னு தெரியல அதான் நாங்க கிளம்புறோம் என்றாள் .இருங்க ஒரு நிமிஷம் அண்ணி சுவாதி நம்மதுல சாப்பிடற மாதிரி ஏதும் அயிட்டம் இருக்கா என கேட்டாள் .ம்ம் அதலாம் வெஜ் ஐட்டம் சாப்பிடலாம் இரு சுவாதி ஒரு கால் மணி நேரம் இருந்து சாப்பிட்டு போ என்றார் ,
சரி என்று சொல்லி விட்டு இருவரும் கீழே உள்ள சேரில் போயி உக்காந்தனர் .அங்கு பின் மணமக்களை வாழ்த்தி சிலர் மைக்கில் பேசினார்கள் .அப்புறம் போட்டோவுக்கு மனமக்களோடு போஸ் கொடுத்தனர் .விக்கி ஒரு பக்கம் அதை கண்டுகொள்ளமால் மொபைல் நோண்ட சுவாதி மேடையை பார்த்து கொண்டு இருந்த்தால் .ஒரு அரை மணி நேரம் அமைதியாக பார்த்து கொண்டே இருந்தவள்
தன்னை மீறி ரொம்ப போர் அடிக்குது உனக்கு எப்படி இருக்கு இதலாம் பாக்க என்றாள் .யாரு மேடம் என் கிட்ட தான் பேசினிங்களா என கேட்டான் விக்கி .ஆமா தமிழ தான பேசுனேன் இங்க வேற யாரும் தமிழ் பேசுறவங்க இருக்காங்களா என்ன என்றாள் .அது தெரியல எனக்கு மேடம் என் கிட்ட தான் பேசுனிங்களா என கேட்டான் .ஆமாடா லூசு உன் கிட்ட தான் பேசுனேன் என்றாள் .இல்ல நேத்து என் கிட்ட யாரோ பேசாத பேசாதன்னு கத்தி சண்ட போட்டாங்க அதான் இப்ப அவங்க பேசுற மாதிரி இருக்கேன்னு கேக்குறேன் என்றான் .
என்ன பண்ண ரொம்ப போர் அடிக்குதே அதான் மூனவது மனுசனா நினைச்சு பேசுறேன் என்றாள் . ஒ அப்படியா என் பேர் விக்கி விக்னேஷ் உங்க பேர் என்று அவள் பக்கம் திரும்பி கை குலுக்குவது போல நிட்ட சுவாதி சிரித்தாள் .ம்ம் ஓகே என் பேர் சுவாதி என்று சொல்லி அவளும் கை குலுக்கினாள் .அப்புறம் என்ன பண்றீங்க என்றான் .நான் இங்க தமிழ் ஏப் எம்ல ஆர் ஜேவா வொர்க் பண்றேன் நீங்க என்றாள் .
ஒ நீங்க தான் அந்த ஆர்ஜே சுவாதியா நான் உங்க பெரிய பேன்ங்க என்று விக்கி சொல்ல அதை கேட்டு சுவாதி சிரித்தாள் .சும்மா கிண்டல் பண்ணாதிங்க என்றாள் .இல்லங்க நிஜமாதாங்க என்று சொல்லி விட்டு விக்கி அவளே தேர்ட் பிரசன் மாதிரி பேச சொல்றா நம்மளும் அப்படியே மூவ் பண்ணி சொல்லிற வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு நான் உங்க குரலுக்கு மட்டும் பேன் இல்லைங்க உங்கலேக்கே தான் ஏன்னா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அப்புறம் என்று சொல்லும் போதே போன் வரஎவண்டா அந்த விளங்கதாவன் டேவிட் ஆ தான் இருக்கும் என்று நினைத்து கொண்டு போனை பார்த்தான் அது மணி இவன் இந்நேரம் போன் பண்றான் போயி பிறந்த குழந்தைய கொஞ்ச வேண்டியது தானே என்று நினைத்து கொண்டு போனை எடுத்து ஹெலோ ஹெலோ என்று சொல்ல அங்கு ஒரே இரைச்சலாக இருக்க அவன் பேசுவது கேக்கவில்லை இரு ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு சுவாதியை பார்த்து நான் ஒரு போன் பேசிட்டு வந்துறேன் என்றான் .ஓகே என்றாள் .
விக்கி போனை வைத்து கொண்டு கொஞ்சம் தள்ளி போனான் .அதன் பின் சுவாதி தனியாக உக்காந்து இருந்தாள் .என்னடா ப்ளைட் டிக்கெட் பேசிட்டேன் கிடைச்சுடும் என்றான் விக்கி மணியிடம் .டேய் நான் அதுக்கு கூப்பிடல என்றான் .பின்ன எதுக்கு கூப்பிட்ட என்றான் விக்கி .நாளைக்கு ஆபிஸ்ல ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு நம்ம பாசே வராராம் அதுனால பப்பு பார்டினு போயி தூங்கமா இருந்து நாளைக்கு கம்பனில வந்து தூங்கிடத என்றான் மணி ,சரிடா என்றான் விக்கி ,
அது இருக்கட்டும் என்ன தீடிருன்னு பாஸ் வராரு என கேட்டான் .தெரியல என்றான் .பின் இருவரும் ஆபிஸ் விசயங்களை பேசி கொண்டு இருக்க அங்கு தனியாக உக்காந்து இருந்த சுவாதி கொஞ்சம் எரிச்சல் ஆனாள் .அப்போது அங்கு மேரி டாக்டர் வந்து எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டார் .அப்போது எல்லாரையும் போக சொல்லி கொண்டு இருந்தார் .சுவாதி எந்திரிக்க வில்லை .நீ வா என்று சுவாதியை பார்த்து கூப்பிட சுவாதி பரவல இருக்கட்டும் என்றாள் .
வா என்று மெல்ல அதிகாரமாக சொல்ல சுவாதி மெல்ல எழுந்தாள் .டாக்டர் அவள் கையை பிடித்து கொண்டார் .கருவ அழிக்காம இருந்ததுக்கு சந்தோசம் என்றார் .சுவாதி ஒன்றும் சொல்ல வில்லை .அப்புறம் கல்யாணம் பண்ணிங்களா இல்ல இன்னும் லிவிங் டு கெதர் தானா என கேட்டார் .
அது வந்து வந்து என்று சுவாதி சொல்ல முடியமால் திணற போதும் பொய் சொல்ல ட்ரை பண்ணாத இன்னும் ரெண்டு பேரும் மேரேஜ் பன்னலலெ என கேட்டார் .ஆமா டாக்டர் என்றாள் .ம்ம் நீங்க மத்தவங்கள ஏமாத்துறதா நினைச்சு உங்கள நீங்களே ஏமாத்தி கிட்டு இருக்கீங்க அதான் உணமை சரி நீ போயி சாப்பிடு குழந்தைய நல்ல படியா பெத்து எடு என்று சொல்லி விட்டு போக சுவாதி அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்


விக்கி போன் பேசி விட்டு வந்தான் .என்ன சாப்பிட போலையா இன்னும் இங்கயே நிக்குற என்றான் .இல்ல எனக்கு என்னமோ மாதிரி இருக்கு என்றாள் ,ஹ எதுவும் உடம்புக்கு ஏதும் முடியலையா சொல்லு உடனே போயி டாக்டர் கிட்ட பேசுவோம் என்றான் .உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு அது அது வந்து என்று அவள் அவனிடம் பேசி கொண்டு இருந்தே போதே டாக்டர் வந்தார் .

ஹே சுவாதி நீ இன்னும் சாப்பிடலையா என டாக்டர் கேட்டார் .இல்ல டாக்டர் ஒரே கூட்டமா இருக்கு பபெ சிஸ்டம் வேறயா அதான் போகல என்றாள் .ஓகே மிஸ்டர் விக்னேஷ் நீங்க போயி உங்க வோயிப்புக்கு சாப்பாடு வாங்கிட்டு வாங்க அப்புறம் வெஜிடரியன் அயிட்டம் மட்டும் வாங்கிட்டு வாங்க அது மட்டும் தான் இப்பதைக்கு இவ சாப்பிடனும் என்றார் .சரி நான் போயி வாங்கிட்டு வரேன் என்று சொல்லி விட்டு விக்கி போன பின் இங்க வா உன் கிட்ட ஒன்னு கேக்கணும் என்றார் டாக்டர் ஜெனிபர் .
சொல்லுங்க டாக்டர் என்றாள் .வா உக்காந்து கிட்டே பேசுவோம் என்று இருவரும் உக்காந்தார்கள் .சரி என்ன எங்க அம்மா உன்னையே முறைச்சுகிட்டே இருக்காங்க என்ன விசயம் இதுக்கு முன்னாடியே அவங்கள தெரியுமா என கேட்டார் .ம்ம் தெரியும் டாக்டர் நான் முத முதல செக் பண்ணது உங்க அம்மா கிட்ட தான் என்றாள் .அப்புறம் ஏன் பிடிக்கலயா ஏன்னா ஆச்சு என கேட்டார் .அது வந்து டாக்டர் ஆரம்பத்துல ரெண்டு பேருக்கும் குழந்தை பெத்துகிரதல பயம் இருந்ததால இப்பதைக்கு குழந்தை வேணாம்னு அவங்க கிட்ட ஆபர்சன் பண்ண சொன்னோம் அவங்க கோபிச்சுகிட்டாங்க என்றாள் .
அது சரி ஆபர்சன்னு நீ இல்ல யார் போனாலும் ஏன் நானே எனக்கு அபார்சன் பன்னுமான்னு போனாலும் அவங்க கோப படத்தான் செய்வாங்க என்றார் டாக்டர் .ஏன் டாக்டர் அப்படி என்றாள் சுவாதி .அது வந்து எனக்கும் ராக்கிக்கும் முன்னாடி எங்க கூட பிறந்த மூத்த அக்கா ஒருத்தவங்க இருந்தாங்க அவங்க படிச்ச காலத்துல ஒரு முஸ்லீம் பையன் ஒருத்தர் லவ் பண்ணி அதுனால கன்சீவ் ஆனாங்க எங்க அம்மா லவ்வுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க அதோட அவங்க கருவையும் கலைக்க சொன்னங்க
ஆனா எங்க அக்கா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க ஆனா எங்க அம்மா எங்க அக்காவுக்கே தெரியாம மருந்து கொடுத்து கருவ கலைச்சுட்டாங்க அப்புறம் மேல் அது தெரிஞ்ச எங்க அக்கா மாடில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டாங்க அது எங்க அம்மாவுக்கு ரொம்ப குற்ற உணர்சிய கொடுத்தால அப்ப இருந்து எங்க அம்மா யாருக்கும் கருவ கலைக்கவும் மாட்டாங்க லவ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மாட்டாங்க
அதுனால தான் என் ஹாச்பண்ட் ஹிந்து அதுக்கும் அவங்க எதிர்ப்பு தெரிவிக்கல அண்ட் சிமி வந்து சிங் அதுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கல ஆனா எங்க அம்மா எப்பயுமே யாருக்கும் அபார்சன் மட்டும் பண்ண மாட்டாங்க என்று ஒரு வித சோகத்தோடு சொன்னார் .சாரி டாக்டர் தேவை இல்லாம உங்க அம்மாவையும் உங்களையும் பழச ஞாபக படுத்தி மனச கஷ்ட படுத்திட்டேன் அண்ட் ஆய் அம் வெரி வெரி சாரி டாக்டர் என்றாள் .
ஹ அதலாம் ஒன்னும் இல்ல இப்ப எங்க அம்மா உன்னைய பாத்ததுல உள்ளுக்குள்ள சந்தோசம் தான் படுவாங்க ஏன்னா நீதான் கருவ கலைக்காம இருக்கேளே அதுனால நீ பயப்படாத அதலாம் இருக்கட்டும் ஏன் ரெண்டு பேர் கருவ கலைக்கனும்னு முடிவு பண்ணிங்க என டாக்டர் கேட்டார் .இல்ல டாக்டர் அது வந்து இப்ப குழந்தை பெத்துக்கிறது கொஞ்சம் பயமா இருந்துச்சு எப்படி வளக்க எப்படி அதுக்கு எல்லாம் செய்யன்னு தான் கருவ கலைக்க முடிவு பண்ணினோம் .
சும்மா பொய் சொல்லாத என்று டாக்டர் சொல்லவும் சுவாதிக்கு திக் என்று ஆனது .எங்கிட்டும் நானும் விக்கியும் சும்மா ஹாச்பந்த் அண்ட் வோயிப்பா நடிக்கிறது தெரிஞ்சு போச்சா என நினைத்து பயந்தாள் .உண்மைய நான் சொல்லட்டுமா என டாக்டர் சுவாதியின் காதில் வந்து உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பெத்துகிட்டா செக்ஸ் வைக்க முடியாதுன்னு பயம் அதான் கருவ கலைக்க ரெண்டு பேரும் முடிவு பண்ணி இருக்கீங்க காரெக்டா என டாக்டர் மெல்ல கிசுகிசுக்க
என்ன டாக்டர் நிங்களே இப்படி என சுவாதி சொல்ல யே நான் சொன்னது உண்மையா பொய்யா அத மட்டும் சொல்லு என்றார் .உண்மைதான் டாக்டர் இன்னும் ஒரு வருஷம் சந்தோசமா இருக்கனுன்னு ரெண்டு பேருக்கும் ஆச அதான் கருவ கலைக்க முடிவு பண்ணேன் என்றாள் .வேற வேலையே இல்ல இந்த காலத்து எங்க்ச்டர்ஸ்க்கு எப்ப பாத்தாலும் செக்ஸ் செக்ஸ்ன்னு கிட்டு செக்ஸ் தாண்டி வேற எதையும் யோசிக்கிறது இல்ல செக்ஸ் இருக்க வேண்டியது தான் இருந்தாலும் அதையும் தாண்டி அனுபவிக்க என்ன என்னவோ இருக்கு குறிப்பா குழந்தைக
அது இல்லாம வாழ்க்கையே நல்லா இருக்காது குழந்தைக்காக செக்ஸ் தியாகம் பண்ணாலம் ஆனா செக்ஸ்க்கு ஆக குழந்தைய தியாகம் பண்ண கூடாது செக்ஸ் 50 வயசுல கூட வைக்க முடியும் ஆனா குழந்தை இப்ப பெத்து கிட்டா தான் உண்டு எனிவேஸ் உன் புருசன மீறி நீ தைரியாமா குழந்தைய சுமக்கிறதா நினைச்சா எனக்கு சந்தோசமாவும் உன் மேல ஒரு நல்ல எண்ணமும் ஏற்பட்டு இருக்கு சரி எனக்கு வேல இருக்கு நான் போயிட்டு அப்புறம் வரேன் என்றார் .
சரி டாக்டர் போங்க என்றாள் சுவாதி .டாக்டர் ஒரு நிமிஷம் என்றாள் .எஸ் சுவாதி என்றார் .அது எப்படி கண்டுபிடிச்சிங்க என்றாள் .எத கண்டு புடிச்சேன் என்றார் .அதான் டாக்டர் அது என்றாள் .ஒ நீ கருவ கலைக்காததுக்கு காரணமா என கேட்டார் .ஆமா டாக்டர் என்றாள் .அது உங்க ரெண்டு பேருக்கும் உள்ள கெமிஸ்ட்ரிய வச்சு சொன்னேன் என்னதான் நீங்க ரெண்டு பேரும் சண்ட போட்டாலும் உன் ஹாச்பந்த் உன்னைய பாக்கும் போதும் சரி நீ அவர பாக்கும் போதும் சரி ஒரு லவ்வோட தான் பாக்குறிங்க அத வச்சு தான் சொன்னேன் நீங்க நல்ல cute couples சரி இப்ப நான் போட்டா என்றார் .சரி டாக்டர் என்றாள் .
பின் விக்கி சாப்பாடு கொண்டு வந்தான் .டாக்டர் சொன்னதை நினைத்து கொண்டு அவனை பார்த்தாள் .உண்மைலே இவன் லவ்வோட தான் என்னைய பாக்குரனா என நினைத்து அவனை பார்த்து கொண்டு இருந்த போது அவள் அப்படி பார்ப்பதை பார்த்த விக்கி அவளிடிம் வாட் என்ன அப்படி பாக்குற என கேட்டான் ,அது ஒன்னும் இல்லடா எனக்கு ரொம்ப பசி அதான் எங்க பாக்குறேன்னு எனக்கே தெரியல நீ சிக்கிரம் சாப்பாடு கொடு என்று சமாளித்தாள் .இந்தா சீக்கிரம் சாப்பிடு கிளம்பனும் என்றான் ,நீ சாப்பிடல என கேட்டாள் .இல்ல நான் பிரண்ட்ஸ் ஓட வெளிய போ போறேன் போயி சரக்கு அடிச்சுட்டு சாப்பிடனும் என்றான் .பிரண்ட்ச்னா என்ன மணி அப்புறம் டேவிட் என சுவாதி இழுக்க


விக்கி அதை கண்டு கொள்ளமால் சே அவங்கே தான் கல்யாணம் முடிச்சு பொண்டாட்டி தாசங்க்லா ஆகிட்டங்கள அதுனால நான் வருண் கூட போகணும் என்றான் .ஆனாள் உண்மையில் டேவிட் தான் மணி போன் பேசி முடித்த பிறகு விக்கியிடம் போன் பேசினான் அவன் உடனே விக்கியை பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தான் .
ம்ம் சரி போயிட்டு வா என்றாள் .பின் இருவரும் வீட்டுக்கு வந்தனர் .அதன் பின் விக்கி அவளை இறக்கி விட்டு வேகமாக போனான் .வழக்கம் போல ஒரு மாலுக்கு போக அங்கு டேவிட் நின்று கொண்டு இருந்தான் .சரிடா ஒரு கல்யாணம் அதான் லேட் ஆகிடுச்சு என்றான் .
இருக்கட்டும்டா வா உக்காந்து கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசுவோம் என்றான் .எப்படியும் சாக் ஆகுற மாதிரி தான் பேசுவான் சரி போயி கேப்போம் என நினைத்து கொண்டு போனான் .என்னடா விஷயம் சொல்றா என்றான் டேவிட் .நான் ஸ்வாதிய மறந்துட்டு என் பொண்டாட்டிய லவ் பண்ண போறேன் என்றான் டேவிட் .என்னது என்றான் .ஆமாடா கல்யாணத்துக்கு அப்புறமும் அவள நினைச்சு கிட்டு இருக்கிறது தப்புன்னு இப்ப தான் புரிஞ்சுச்சு
எல்லாம் ஆஸ்பத்திரில மணியும் வள்ளியும் கொஞ்சி கிட்டத பாத்து தான் எனக்கு புத்தி வந்துச்சு மணியும் என்னைய மாதிரி தான் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணான் ஆனா இப்ப அவள மறந்துட்டு வள்ளிக்கு உண்மையா இருக்கான் இன்னும் சொல்ல போனா நான் ஆச்சும் ஸ்வாதிய 2 வருஷம் தான் லவ் பண்ணேன் ஆனா மணி ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் லவ் பண்ணான் அதையே மறந்துட்டு வள்ளிய இப்ப லவ் பண்ணி நிம்மதியா இருக்கான் அண்ட் நானும் அதே மாதிரி ஆக போறேன் .என்னைய நம்பி வந்தவள ஏமாத்தம அவள் நல்லா படியா வச்சுக்க போறேன்
அண்ட் எனக்கும் குழந்தை பெத்துகிரனும்னு ஆச வந்துடுச்சு அதனால நானும் ஒரு குடும்பஸ்தான மாற போறேன் என்றான் .அப்பா இன்னைக்கு தான் நல்லா பேசி இருக்கான் இருந்தாலும் இவன நம்ப முடியாது போட்டு வாங்குனாலும் வாங்குவான் சோ அமைதியா அடக்கி வாசிப்போம் என நினைத்து கொண்டு சரிடா நீ எது பண்ணாலும் எனக்கு சந்தோசம் தாண்டா என்றான் ,சரிடா நான் கிளம்புறேன் இனி மேல் ரெஜினா கூட டைம் அதிகமா செலவழிக்க போறேன் சோ கோபிக்காத அண்ட் கூடிய சீக்கிரம் நீயும் யாரையாச்சும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகு என்று அவசர அவசரமாக சொல்லி கொண்டு போனான் .
சரி ஒரு வில்லன் போயிட்டான் ஆனா புது வில்லன் சித்தார்த் எப்ப என்ட்ரி ஆக போறனோ சரி எல்லாம் விதி படி நடக்கட்டும் என்று விக்கி நினைத்து கொண்டே ஓகே நம்மளும் வீட்டுக்கு போவோம் ….


விக்கி வீட்டிற்கு வந்து நன்கு தூங்கி விட்டான் .அடுத்த நாள் ஆபிசில் முக்கியமான மீட்டிங் இருப்பதால் சீக்கிரம் எந்திரிக்க வேண்டும் என்று தூங்கி விட்டான் .அடுத்த நாள் எழுந்த போது முதல் நாள் மணி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது .அன்னைக்கு மீட்டிங்குக்கு பாஸ் வராருன்னு சொன்னதும் அப்புறம் அன்னைக்கு ஒரு நாள் அவன் கம்பெனியோட உண்மையான பாஸ் சுவாதி அப்பா தான் டேவிட் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்துச்சு .

ஒரு வேல இன்னைக்கு வர பாஸ் நேம் வச்சு சுவாதியோட அப்பா தான் நம்ம கம்பெனி பாசா இல்லையான தெரிஞ்சுக்காலம் ஆனா சுவாதி அப்பா பேர் மறந்துடுச்சே என்னமோ பேர்ல ம்ம் என்று யோசித்தான் .ம்ம் ஞாபகம் வந்துடுச்சு ,ம்ம் ஏதோ மேனன்னு ஆரம்பிக்கும்னு மட்டும் தெரியுது சரி அவ கிட்டே கேப்போம் என நினைத்து கொண்டு குளித்து முடித்து ஆபிசுக்கு கிளம்பினான் .பின் ரூமை விட்டு வெளியேறும் போது ஹால சுவாதி உக்காந்து இருக்கணும் ஹால சுவாதி உக்காந்து இருக்கணும் என மனதில் நினைத்து கொண்டே வெளியேறினான் .
ஆனால் அவள் ஹாலில் இல்லை சே பேட் லக் பேட் லக் தொடர்ந்து இப்படியே இருந்தா என்ன பண்ண என்று நினைத்து கொண்டு வெளியேறினான் .கார் வரை போனவன் சரி எதுக்கும் ஒரு தடவ உள்ள போயி பாப்போம் என நினைத்து கொண்டே உள்ளே பைல் எடுக்க செல்வது போல் உள்ளே போனான் .அங்கே சுவாதி கண்களை கசக்கி கொண்டே வெளியே வந்து காப்பி போட்டு குடித்து கொண்டே பேப்பர் படித்து கொண்டு இருந்தாள் .
ஹே குட் மார்னிங் என்றான் .குட் மார்னிங் காப்பி வேணுமா என்றாள் .இல்ல என்று சொல்லிவிட்டு யோசித்தான் .எப்படி கேக்குறது இவளுக்கு தான் அப்பா பத்தி பேசுனா பிடிக்காதே சரி கேக்க வேணாம் என்று கதவு வரை போனவன் ஹ சுவாதி உன்னைய ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே என்றான் .நீ என்ன கேப்பன்னு தெரியும் குழந்தை யாருதுன்னு கேப்ப இத விட்ட உனக்கு வேற என்ன கேக்க தெரியும் வெண்ண என்று மனதில் நினைத்து கொண்டு அவனை பார்க்கமால் காப்பியை உறிஞ்சு கொண்டே கேளு என்றாள்.
அது வந்து உங்க அப்பா பேர் என்ன என்றான் .சுவாதி காப்பி குடிப்பதை நிறுத்தி விட்டு விக்கியை முறைத்தாள் .ஏன் அது எதக்கு உனக்கு எங்க அப்பா யாருன்னு கண்டுபிடிச்சு அவர் கிட்ட கொண்டு போயி விட போறயா எ நான் தான் சித்தார்த் அபர்ட்மெண்ட்க்கு சிப்ட் ஆகிக்கிறேன்னு சொன்னேளே அப்புறம் ஏன் என்றாள் .
ஹ நீ தான உங்க அப்பாவ பாத்து பத்து வருஷம் ஆச்சு அப்படின்னு நேத்து சொன்ன அப்புறம் உங்க அப்பா வேற பெரிய தொழில் அதிபர்ன்னு வேற சொன்னேளே அதான் இன்னைக்கு எங்க ஆபிஸ்ல ஒரு பெரிய கான்பெரன்ஸ் அதுல இந்தியா முழுக்க இருக்க தொழில் அதிபர்க கலந்துக்கிறாங்க அதான் உங்க அப்பா பேர் சொன்னா பாத்து சொல்றேன் என்றான் .ஒன்னும் வேணாம் நீ போ என்றாள் .
யே சும்மாவாச்சும் ஒரு ஜெனரல் நாலெஜுக்கு கேட்டேன் என்றான் .ஒரு மயிரு நாலெஜும் வேணாம் நீ போ என்றாள் ,ஓகே ஐ அம் சாரி என்றான் .சரி போ என்றாள் .சரி இதுக்கு மேல இவங்க அப்பா பேர் கேட்டு இவள கோப படுத்த வேண்டாம் கிளம்புவோம் டேவிட் கிட்ட கேக்கலாம் ஆனா அவன் திரும்ப சுவாதி மேல லவ் வந்துருச்சு நான் போயி அவர பாக்கணும் அப்படின்னு ரிவர்ஸ் அடிச்சுட்டானா என்று நினைத்து கொண்டு சரி ஆபிஸ் போவோம் யாராச்சும் சவுத் இந்தியால இருந்து வந்தா நமக்கு நல்லா தெரிஞ்சுடும் அப்புறம் அத பாப்போம் என்று நினைத்து கொண்டு ஆபிஸ் போனான் .
அங்கு ஆபிசில் எல்லாரும் எப்போதும் வருவதற்கு முன்பே வந்து இருந்தார்கள் ,மேலும் அங்கு welcome boss என்று தோரணங்களும் அலங்காரங்களும் இருந்தன .எப்பா பயங்கரமா தான் அலங்காரம் பண்ணி இருக்காங்கே என்று நினைத்து கொண்டு உள்ளே வந்தான் .நல்ல வேல நீ சீக்கிரம் வந்த என்றான் மணி .டேய் நான் என்னைக்குமே லேட்டா வர மாட்டேண்டா நைட் புல்லா குடிச்சா கூட காரெக்டா ஆபிஸ்க்கு வந்துடுவேன் என்றான் .


யே உன்னையே பத்தி எனக்கு தெரியும் இருந்தாலும் புது பாஸ் வராருல அதான் உன்னையே கொஞ்சம் அலர்ட் பண்ணிக்கிற தான் சொன்னேன் என்றான் மணி .அது சரி யாருடா அது புது பாஸ் என கேட்டான் விக்கி .தெரியல மச்சான் ஆனா யார் வந்தாலும் நீ பிரசென்டேசன் பண்ண வேண்டியது இருக்கும் என்றான் மணி .ஏண்டா அப்படி என்றான் விக்கி .ஏன்னா நீதான் ஆபிஸ்ல முக்கியமானவங்கள அஞ்சு பேர்ல நீயும் ஒருத்தன் என்றான் மணி என்னமோ போடா என்றான் விக்கி .
பின் விக்கியின் தற்போதைய பாஸ் சிங் வந்தார் ,ஓகே பார்ஸ்ட் புது பாஸ் வரதுக்கு முன்னாடி சில விஷயம் சொல்லிறேன் ,இப்ப வரவர் இந்தியாவ்லே பெரிய பணக்காரங்கள 7 வது இடத்துல இருக்காரு ,இதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கம்பெனிய அவர் பிரண்டுக்கு கொடுத்து நடத்தி கிட்டு இருந்தாரு இப்ப இவர் டேக் ஓவர் பண்ண போறாரு சரி அதுக்கு முன்னாடி நான் சொல்ற ஆள்க மட்டும் வாங்க என்றார் ,
அதில் மணியும் விக்கியும் இருந்தனர் ,ஓகே இன்னைக்கு நீங்க அஞ்சு பேரும் பிரசெண்டசன் பண்ண போறீங்க அண்ட் மிஸ்டர் விக்னேஷ் அண்ட் மிஸ்டர் மணிகண்டன் வர போறவாறு சவுத் இந்தியன் அதுனால மெய்யனா உங்கள தான் எதிர்பார்ப்பருன்னு நினைக்கிறேன் சோ பீ ரெடி பாய்ஸ் என்று சொல்லி விட்டு போக
வர போரவாறு நம்ம ஏரியா காராராம் சோ ஓரளவு இனி நம்ம தப்பிச்சோம் என்றான் மணி .டேய் அவர் சவுத் இந்தியான்னு தான் சொன்னாரு உடனே நம்ம எரியான்கிற சவுத்ல தமிழ் நாட்டுல இருந்து வராம வேற ஸ்டேட்டா வந்தா என்ன பண்ணுவ என்றான் விக்கி .அதலாம் சமாளிச்சுடலாம் என்றான் மணி .ஒரு வேல நமக்கு தண்ணி தராத கர்னடாகமா வர போற பாஸ் இருந்த என்ன பண்ணுவ என்றான் விக்கி .ம்ம் ரொம்ப கஷ்டம் சரி பாப்போம் என்றான் மணி .
பின் பாஸ் வந்தார் ஆபிஸ் முழுதும் கை தட்டி அவரை வரேவ்ற்றனர் வந்தவர் சிங் பூங்கொத்து கொடுத்து வரேவேற்றார் .அவர் எல்லாத்தையும் சிரித்தாவ்ரே ஏற்று கொண்டு உள்ளே போனார் .ஒரு அரை மணி நேரம் ஆபிசில் இருந்து விட்டு பின் ஸ்டாப் மீட்டிங் கூட்டினார் .
ஹலோ எவெரிபடி இவர் தான் நம்ம புது பாஸ் மிஸ்டர் பிரகாஸ் மேனன் என்று சிங் எல்லாருக்கும் அறிமுகப்படுத்த எஸ் ஆமா டேவிட் சொன்ன அதே ஆளு இவர் தான் அது இவர் தான் சுவாதியோட அப்பாவா எங்க எதாச்சும் சாயல் இருக்கான்னு பாப்போம்ன்னு விக்கி அவரை பார்த்து கொண்டு இருக்க அவர் ஒரு பக்கம் தன் சொற்பொழிவை ஆற்றி கொண்டு இருந்தார் .


பின் பிரசென்டேசன் வந்த பின் விக்கி முதலில் திணறினாலும் அதன் பின் சிறப்பாகவே செய்தான் .மீட்டிங் முடிந்த பின் எல்லாருக்கும் கை கொடுத்துவிட்டு அவர் சென்றார் .பாத்தியா நான் சொன்ன மாதிரி அவர் நல்லா டைப்பா தான் இருக்காரு என்றான் மணி .ஒ காட் இப்ப என்ன பண்ண இவர் தான் சுவாதி அப்பாவா ஒரு வேல அப்படி இருந்த என்ன பண்ண என்று விக்கி நினைத்தான் .
அன்று சாயங்கலாம் ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு ரொம்ப அலுப்போடு போனான் .அங்கு ஹாலில் சுவாதி காப்பி குடித்து கொண்டு இருந்தாள் .ஹ காலைல இருந்து இன்னும் அதே காப்பியாவா குடிக்கிற என்று கிண்டல் அடித்தான் .ஹா ஹா பயங்கரமான ஜோக் சிரிச்சுட்டேன் போதுமா என்றாள் .ஓகே கொஞ்ச நேரம் அந்த ரிமோட் கொடு ரொம்ப எரிச்சலா இருக்கு என்றான் .சுயர் உனக்கு காப்பி வேணுமா என கேட்டாள் .இல்ல இருக்கட்டும் என்றான் .யே நீ பாரு நான் போட்டு வரேன் என்று சொல்லி விட்டு போனாள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக