http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : முத்தமிட்ட உதடுகள் - பகுதி - 4

பக்கங்கள்

திங்கள், 6 ஜூலை, 2020

முத்தமிட்ட உதடுகள் - பகுதி - 4

டிவி ஓடிக் கொண்டிருந்தது. நவநீதன் டிவியில் கவனமானான். கொஞ்ச நேரம் கழித்து அவனைப் பார்த்து  திடுமெனக் கேட்டாள் கவிதா.
'' நீ வேலைக்கு போக மாட்டியா மாமா? "
நவநீதன் அவளைப் பார்த்தான். அவள் முகம் மட்டும் தெரிந்தது.
''ஏன்டி.. ?''
சிரித்தாள். '' சும்மாதான் கேட்டேன். ''
'' அன்புகிட்ட சொல்லியிருக்கேன். அவன் கூடத்தான் போவேன்.''


'' திருப்பூருக்கு போக மாட்டியா ? பனியன் கம்பெனிக்கு..?''
'' ம்கூம். . ''
'' அச்சச்சோ.. '' என்றாள்.
'' ஏன்டி.. இதுல உனக்கு என்ன பிரச்சனை? "
'' அப்பன்னா இனி நான் ஜட்டி சிம்மீஸ்க்கு எல்லாம் என்ன பண்றது..?'' என அவள் கேட்க.. அவனுக்கு முதலில் குழப்பமாகத்தான் இருந்தது.
'' என்ன.. ?''
  '' ஜட்டி.. சிம்மீஸு..? எல்லாம் நீதான கொண்டு வந்து குடுப்ப..? இனி எல்லாம் காசு போட்டுத்தான் வாங்கிக்கனுமா.? என்னோடது எல்லாமே பழசாகிப் போச்சு.. ''என அவள் அப்பாவியாகச் சொல்ல... பொங்கி வந்த சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை.
'' ஹ்ஹா.. ஹா !!'' என வாய் விட்டு சத்தமாகச் சிரித்தான்.
''ஏய்.. லூசு..''
'' ம்.. என்ன''
'' ஏன்டி இன்னும் நீ சின்ன புள்ளைனு நெனப்பா ?''
'' ஏன்.. ?'' அதே அப்பாவித் தனத்துடன் கேட்டாள்.
'' ஜட்டி சிம்மீஸ்னெல்லாம் என்கிட்ட கேக்கற..?''
'' அப்பறம். நீ தான வரப்ப எல்லாம் எங்களுக்கு கொண்டு வருவ..?''
'' அடி லூசு.. அது சரி. ஆனா இனிமே நீ கடைலதான் வாங்கிக்கனும். சரியா. ? அத விட்டுட்டு இப்படியெல்லாம் ஒரு பொட்ட புள்ள பேசக் கூடாது. !''
'' வேற எப்படி பேசறது..? அதுலாம் எனக்கு வேணுந்தான..?''
'' ம்.. வேணுந்தான். அத உங்கம்மாகிட்ட கேளு. ''
'' ஏன் உன்கிட்ட கேக்க கூடாதா..?''
'' ம்கூம். கேக்க கூடாது.''
'' ஏன் கேக்க கூடாது.? கேட்டா நீ வாங்கித்தர மாட்டியா..?''
அவன் சொல்வது அவளுக்கு புரியவில்லை என்பது நன்றாகப் புரிந்தது. அவள் மண்டை மேல் கொட்ட வேண்டும் போல் இருந்தது.
'' நான் வாங்கி தரனோ இல்லையோ.. ஆனா இனி நீ டிசண்டா பேச கத்துக்கனும். பசங்ககிட்ட இப்படி ஜட்டி பிரானெல்லாம் பேசிட்டு இருக்க கூடாது''
'' நான் பிரானு சொல்லவே இல்ல. சிம்மீஸ்தான் சொன்னேன் '' எனச் சிரித்தாள். '' அது எனக்கும் தெரியும். நான் ஒண்ணும் பசங்ககிட்ட பேசல.. உன்கிட்டதான் பேசினேன்.'' என்றாள் கவிதா.. !!
என்ன அர்த்தத்தில் அவள் இப்படி பேசுகிறாள் எனப் புரியாமல் அமைதியானான் நவநீதன். ஒரு மணி நேரம்  கழித்து  அவனுக்கு தூக்கம் வந்தது.  டிவியை ஆப் பண்ணலாம் என்று நினைத்தபடி எழுந்து  உட்கார்ந்து கவிதாவைப் பார்த்தான். அவள் தூங்கியிருந்தாள். அவள் போர்வை அவளை விட்டு விலகிப் போயிருந்தது. அவள் நைட்டி மேலேறி கொலுசணிந்த கெண்டைக்கால் தெரிந்தது.
அவன்  எழுந்து பாத்ரூம் போய் வந்து தண்ணீர் குடித்தான். பின் விலகிய போர்வையை இழுத்து கவிதாவை மூடி விட்டு டிவி ஆப் பண்ணி விட்டுப் போய் படுத்தான்.
அடுத்த நாள் காலை. நவநீதன் கண் விழித்த போது.. அவன் வீட்டுக்குள் மாமாவின் சின்னப் பெண் அமுதாவும்.. அவள் தம்பியும் உட்கார்ந்து காபி குடித்தக் கொண்டிருந்தார்கள். அவன் விழித்து விட்டதைப் பார்த்துப் புன்னகையுடன் கேட்டாள் அமுதா.
'' மாமா.. காபி.. ?''
'' ம்.. குடி..'' என்றான்.
பையன் பிஸ்கெட்டை காபியில் முக்கி எடுத்து வாயில் திணித்துக் கொண்டிருந்தான். கவிதா இன்னும் பாயில் சுருண்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள். நவநீதன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.
'' அவ இன்னும் தூங்கறாளா..?''
'' ஆமா மாமா..! காபி கொண்டு வரட்டா..?'' என அவனுக்கு பதில் சொல்லி விட்டுக் கேட்டாள் அமுதா.
''நீ குடி '' என்றான். அவள் தம்பியை பார்த்து.  ''என்னடா இன்னிக்கு நேரத்துலயே எந்திரிச்சிட்ட போலிருக்கு..?''
அமுதா.  ''அவன் செகண்ட் ரவுண்டு '' என்றாள்.
''என்னது.?''
'' காபி. அங்க அம்மா ஆறு மணிக்கே வெச்சு குடுத்துச்சு. அங்கயும் குடிச்சிட்டு இப்ப இங்க அத்தை வெக்கறத பாத்துட்டு இங்கயும் வந்துட்டான் ''
சிரித்து விட்டு எழுந்து பாத்ரூம் போனான் நவநீதன். சூரியன் இன்னும் முகம் காட்டியிருக்கவில்லை. அவன் அம்மா அடுப்படியில் வேலையாக இருந்தாள். நவநீதன் முகம் கழுவி உள்ளே போனான்.
'' எழுப்பி விடு அவளை..'' என அமுதாவிடம் சொன்னான்.
அமுதா தன் அக்காளை தட்டி எழுப்ப.. அவன் அம்மா சமையற்கட்டில் இருந்து அமுதாவை அழைத்து அவள் கையில் காபியை கொடுத்து விட்டாள். கவிதாவுக்கும் சேர்த்து இரண்டு கப்களைக் கொண்டு வந்தாள் அமுதா.!!
தூக்கம் கலைந்து பரட்டைத் தலையுடன் எழுந்து உட்கார்ந்த கவிதா, அமுதா கொண்டு வந்த காபியை வாங்கி அப்படியே குடிக்கப் போனாள். எட்டி அவள் தலை மேல் தட்டினான் நவநீதன்.
''ஏய்..போய் வாய் கொப்பளிச்சிட்டு வந்து காபி குடி.''
'' என்ன மாமா..'' என சிணுங்கினாள்.  ''நான்லாம் இப்படியேதான் குடிப்பேன்..''
'' வாய் மேல தட்றதுக்கு முன்னால மரியாதையா எந்திரிச்சு போய் வாய் கொப்பளிச்சிட்டு வந்துரு..'' என்றான் கொஞ்சம் கண்டிப்பாக.
அமுதா சிரிக்க.. அவள் தலை மேல் ஒரு கொட்டு வைத்து விட்டு ஏதோ முனகிக் கொண்டே எழுந்து போனாள் கவிதா.!!!
'' டிவி போடு அம்மு..'' என அவன் சொன்ன பின் எழுந்து டிவியைப் போட்டு விட்டாள் அமுதா.
முகம் கழுவி வந்த கவிதா அவள் தம்பி வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டை லபக்கென தூக்கிக் கொண்டு காபியுடன் வந்து நவநீதன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவன் அக்காளை முறைக்க.. அமுதா இடை புகுந்தாள்.
'' அவனுத ஏன்டி புடுங்கின. குடுத்துரு.. பாவம் சின்ன பையன்.''
நான்கு பிஸ்கெட்களை உருவி எடுத்து விட்டு மீதி இருந்த ஒரு பிஸ்கெட்டை கவருடன் கொடுத்தாள்.
அமுதா கோபமாக..
'' இவ மட்டும்.. '' என்றாள்.
கவிதா அலட்சியமாக சிரித்தாள்.
''ஆமா போடி. இவ மட்டும் திங்கவே மாட்டா '' என்றாள்.
'' ஆனா நான் ஒண்ணும் உன்னை மாதிரி புடுங்கி திங்க மாட்டேன். அப்படி திண்ணு திண்ணு பாரு.. எழும்பும் தோலுமா இருக்க.. பீனி.. !!''
'' ஆமா.. இவ பெரிய குண்டு.. போடி..'' அக்கா. தங்கை சண்டையைப் பார்த்து நவநீதனுக்கு சிரிப்புத்தான் வந்தது..!!! 

அமுதா சொல்வது உண்மைதான். கவிதா மிகவும் ஒல்லியாகத்தான் இருந்தாள். கொஞ்சம் நிறம் மட்டும் கூடியிருந்தாள். ஆனால் உடம்பில் ஊட்டம் தேவையான அளவு இல்லை.!! அவளது மார்பு கூட அவளின் வயதுக்கு உரிய வளர்ச்சியை எட்டவில்லை என்பது மிகவும் நன்றாகவே தெரிந்தது..!!!
ஆனால் அமுதா அப்படி இல்லை. இப்போது அவள் உடம்பு நல்ல ஊட்டம் பெற்றிருந்தது. பருவத்தின் செழிப்பு அவள் மேனியை வனப்பாகக் காட்டிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் அமுதா நிச்சயம் கலக்குவாள் என்று தோன்றியது..!!!
பையன்களின் பார்வை.. கவிதாவைக் காட்டிலும் அமுதாவின் மேல் தான் அதிகம் இருக்கும்.. அந்த விஷயத்தில் கவிதாவைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அமுதாவைப் பற்றி மிகவும் கவலைப் பட்டாக வேண்டும். கண்ணுக்கு லட்சணமான பெண்ணை மடக்கத்தான் ஒரு கூட்டமே காத்திருக்கும்.. !!!
கவிதாவைப் பார்த்து சிரித்தபடி கேட்டான் நவநீதன்.
'' நீ மட்டும் ஏன்டி இப்படி இருக்க..?''
'' போ.. நான் இப்படித்தான்..'' என்றாள்.
'' ஒடம்பு ரொம்ப லீனா இருக்கியே.. சாப்பிடறதே இலலையா ?''
அமுதா ''யாரு இவளா.. விட்டா ஒரு சட்டி சோறு திம்பா..'' எனச் சிரித்தாள்.
'' ஆமா நான் மட்டும்தான் திம்பேன். இவ தொட்டு மட்டும்தான் பாப்பா.. ? உனக்கு ஏன்டி பொறாமை எங்கப்பா சாம்பாரிச்சு போடுது.. நான் திங்கறேன்.'' கவிதா.!
நவநீதன்.. அமுதாவைப் பார்த்துக் கேட்டான்.
'' ஆனா இவள பாத்தா.. நீ சொல்ற மாதிரி திங்கற ரகமா தெரியலியே அம்மு ''  கவிதாவை தட்டி '' திங்கறதெல்லாம் எங்கதான் போகுது..? கொஞ்சமாவது உடம்பு தேத்திருக்க வேண்டாமா..?'' என்றான்.
'' க்கும்.. அவ வெந்து போனவ. அதுக்கெல்லாம் என்னை மாதிரி நல்ல மனசு வேணும். '' எனச் சிரித்தாள் அமுதா.
'' அய்யோ... ரொம்ப நல்ல மனசு.. மூஞ்சிய பாரு..'' கவிதா.
'' பின்ன என்னவாம்.. நாங்கள்ளாம் சொக்க தங்கம்.. ''
'' நாங்க வைரம்.. ''
'' தெரியுதே.. கருகருனு.. வைரம்..''
'' போடீ நீதான் கருப்பி.. குண்டு பன்னி..''
'' நீதான்டி எழும்பி.. பீனி.. ''
இப்படி அக்கா தங்கை இரண்டு பேரும் வீம்புக்கு முட்டிக் கொள்ள நவநீதன் அவர்கள் இரண்டு பேரையும் அடக்கினான்.
'' ஏய் போதும் விடுங்க.. என்ன இது சண்டை போட்டுகிட்டு..?''
அமுதா.  ''பாரு மாமா.. அவதான் என்னை திட்னா..''
'' யாரு நானா.. நீதான்டி என்னை வம்பிக்கிழுத்த..'' கவிதா.
'' ஏ.. மொதல்ல என் தலைல கொட்னது யாரு..?''
கவிதா தன் தங்கையை முறைத்தாள்.
'' ஏய்.. என்ன பழக்கம் இது.. அக்காளும் தங்கச்சியும் இப்படி மொறைஞ்சுகிட்டு.. இன்னொரு தடவை ரெண்டு பேரும் சண்டை போடறதை பாத்தேன்.. ரெண்டு பேருக்கும் ஒதை கிடைக்கும் சொல்லிட்டேன். போய் கிளம்புங்க ரெண்டு பேரும்...!!!'' என இருவரையும் அடக்கி.. அனுப்பி வைத்தான் நவநீதன்..!!!
மாலை நேரம்.!!! ஊரில் இருந்து அண்ணன் வந்திருந்தான்.!!! திருமணமானவன். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அண்ணி செய்த பிடிவாதத்தால் அவள் ஊரிலேயே போய் செட்டிலாகி விட்டான்.!!! பதினைந்து கிலோ மீட்டர் தொலைவு தள்ளி இருக்கிறது அண்ணியின் ஊர்.!!!
நலன் விசாரிப்புகள் முடிந்து அண்ணனைக் கேட்டான் நவநீதன்.
''அண்ணி குழந்தைங்கள எல்லாம் கூட்டிட்டு வந்துருக்கலாம் இல்ல?''
'' நான் வேலைக்கு போய்ட்டு இப்படியே வரேன்டா. நீ வேணா வா போகலாம்.'' என அழைத்தான் அண்ணன்.
'' ம்.. நாளைக்கு வரேன் ''
'' உங்கண்ணி உன்னை வரச் சொன்னாடா..''
'' சரி நாளைக்கு வரேனு சொல்லு..''
'' அப்றம் அத்தைங்கள்ளாம் நல்லாருக்காங்களா ? கிருத்திகுட்டி என்ன பண்றா..? வேலைக்கு போறாளா ? அவளுக்கு மாப்பிள்ளை ஏதாவது பாக்கறாங்களாமா ? கம்பெனி எல்லாம் ஓடுதா ? அப்பறம் இனிமே நீ இங்கதான் இருக்க போறியா ? சரி இரு. என்ன பண்ணலாம்னு இருக்கே..?'' என நிறையக் கேள்விகளை கேட்டான் அண்ணன்.
அவன் கேள்விகள் அனைத்திற்கும் பொருமையாக பதில் சொன்னான் நவநீதன்.!!!
ஒரு வழியாக பேசி முடித்து..
''சரி.. நாளைக்கு மறக்காம கண்டிஷனா வாடா.'' எனச் சொல்லி விட்டு.. இருட்டுவதற்கு முன் தன் டிவிஎஸ்ஸில் கிளம்பிப் போனான் அண்ணன்..!!!
அண்ணன் போனதும் திண்ணை மேல்  அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கவிதா சிரித்தபடி சொன்னாள்.
'' எங்க.. நீ இப்பயே போய்ருவியோனு நினைச்சேன்.''
காலேஜ் விட்டு வந்து உடைகூட மாற்றாமல் இருந்தாள் கவிதா. முகமும் கழுவாமல் லேசான வியர்வை வழியும் முகத்துடன் இருந்தாள்.
'' ஏன்..?'' என அவளை பார்த்துக் கேட்டான்.
'' நாளைக்குன்னா.. எனக்கும் காலேஜ் லீவு.. நானும் உன்கூட வரலாம்னு நினைச்சேன்..'' என்றாள்.
'' என்கூட வரியா ?''
'' ம்.. வரேன்.''
'' சரி.. போலாம்..'' என்று விட்டு எழுந்தான். ''இப்ப போய் மொதல்ல ட்ரஸ் சேஞ்ச் பண்ணு. நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்..!!'' எனச் சொல்லிவிட்டு அன்புவின் வீட்டை இலக்காக வைத்து நடந்தான்..!!! .

அன்புவின் வீட்டுக்கு போனான் நவநீதன். அவன் தங்கை திவ்யாவும்.. அவள் தோழி பிரமிளாவும் வீட்டுக்குள் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
நவநீதனைப் பார்த்த பிரமிளா.
'' அட...வாங்க சார்.. ஹீரோ சார்.'' என கிண்டலாகச் சிரித்து வரவேற்றாள்.
''ஊருக்கு வந்துருக்கிங்கனு கேள்விப் பட்டேன். பாக்கவே முடியல..''
'' யாரு நாங்க ஹீரோவா..?'' நவநீதன் கேட்டுக் கொண்டே உள்ளே போய் சோபாவில் உட்கார்ந்தான்.
''உங்கள பாத்தாதான் ஹீரோயின் மாதிரி தெரியுது..''
'' ஆஹா.! தேங்க் யூ.. தேங்க் யூ..! எங்களையும் பாத்து ஹீரோயின்னு சொல்லவும் ஒரு ஆள் இருக்கறதுல எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..!! அப்பறம் எப்படி இருக்கிங்க.. ?''
'' இருக்கேன்..!! ஏதோ உங்கள மாதிரி நல்லவங்க புண்ணியத்துல.. இந்த நாட்ல நாங்களும் கொஞ்சம் இருக்கோம்னு.. '' என அவன் சிரித்தபடி சொன்னான்.
'' ஆஆஆ.. திவ்யா இதை பாருடி கொஞ்சம். என் முடி எல்லாம் எப்படி சிலித்துக்குச்சினு பாரு.. !!! புல்லரிச்சு போச்சு..!!!'' என்று தன் தோழியிடம் கைகளை நீட்டிக் காட்டினாள் பிரமிளா.
மூவரும் சிரித்த பின் திவ்யாவை கேட்டான் நவநீதன்.
'' அன்பு இன்னும் வரலையா..?''
''வரலை..!! காபி வெக்கட்டுமா ?''
''இல்ல அதெல்லாம் வேண்டாம். அப்ப நான் போகட்டுமா..?''
'' அலோ என்ன..  வந்ததும் ஓடறீங்க..? இருங்க.. எவ்வளவு பேச வேண்டியிருக்கு..'' என்றாள் பிரமிளா.
'' இல்ல நீங்க ரெண்டு பேரும் ஏதாவது பர்ஷ்னலா பேசிகிட்டிருக்கலாம்.. இதுல நான் எதுக்கு நடுல நந்தி மாதிரி...''
'' நீங்க நந்தி இல்ல.. உங்காருங்க..!! ஊருக்குள்ள திடீர்னு வரீங்க.. திடீர்னு போறிங்க.. ஒரு ஹீரோ மாதிரி.. பாக்கவே முடியறதில்ல..''
திவ்யா.  ''சாரு இனி போக மாட்டாரு. இங்கதான் ''
'' என்னாச்சு ஹீரோ சார்.. வேலை இல்லையா..?''
'' போதும் பிரமி.. இந்த ஈரோ சார் போட்டா.. அப்பறம் நான் உன் பேச்சு கா விட்றுவேன்.''
'' சரி.. சரி.. ஈரோ சார் இல்ல.. !! சொல்லுங்க என்னாச்சு..?''
'' வேலை டல்லாகிருச்சு . அதான் வந்துட்டேன்.''
வேலை பற்றின பேச்சு கொஞ்ச நேரம் ஓடியது..!!
பிரமிளா.. திவ்யா அளவுக்கு அழகி இல்லை. சுமார்தான்.!
அதற்காக திவ்யா பிரமாத அழகி என்று எண்ணிவிட வேண்டாம். மாநிறத்தில்... அளவான அங்க அமைப்புகளுடன்.. நல்ல முக லட்சணத்துடன் பெண்மைக்கே உரிய நளினத்துடன் இருப்பவள்தான் திவ்யா.!!!
ஆனால் பிரமிளா அப்படி இல்லை. கொஞ்சம் கருப்பு. கொஞ்சம் பொசுபொசுவென உடம்பு. தடித்த உதடுகள். குண்டு மூக்கு.. என லட்சணமா.. இல்லை அவலட்சணமா என சட்டென கணிக்க முடியாத நிலையில் இருந்தாள். அது இல்லாமல் அவள் கொஞ்சம் வழியும் டைப் என்பதால்.. திவ்யா அளவுக்கு பிரமிளா நல்ல பெயர் எடுக்கவில்லை..!!!
பிரமிளா பேசும் போது நவநீதனை நன்றாக சைட்டடிக்கிறாள் என்பது அவனுக்கே தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் அவளின் பருத்து  கனத்த மார்புகளை மூடிய துப்பட்டாவை ஒரு பக்கமாக சரிய விட்டுக் கொண்டு அவனுடன் பேசியதில் அவளது சேட்டையும் தெரிந்தது. .!! இதை எல்லாம் திவாயாவும் கவனிப்பதாக தோன்ற.. நவநீதன் மிகவும் நாகரீகம் கடை பிடித்தான்.!!
அரை மணி நேரம் ஆகியும் அன்பைக் காணாமல் அவனுக்கு கால் செய்தான் நவநீதன்.
எடுத்து ''ஏன்டா மாப்ள..'' என்றான் அன்பு. 
'' எங்கடா இருக்க? ''
'' வந்துட்டிருக்கேன்டா. நீ எங்க இருக்க. ?''
'' உன் வீட்லடா. உனக்காகத்தான் வெய்ட்டிங்.''
'' அங்கயே இரு வரேன். திவ்யா இருக்காளா..?''
'' ம்.. பிரமியும் இருக்கா..''
'' அந்த கருவாச்சியும் இருக்காளா..? சரி பேசிட்டு இரு வந்தர்றேன்..'' என காலை கட் பண்ணினான்.
'' என்ன சொன்னான் ?'' எனக் கேட்டாள் திவ்யா.
'' வந்துட்டிருக்கேன்னான்..''
பிரமிளா அவன் மொபைலை வாங்க கை நீட்டினாள்.
''செட்டு புதுசா ?''
'' பழசுதான். சைனா செட்டு ''
'' என்ன ரேட்டு வருது..?''
'' ஏன்..?''
'' நான் ஒண்ணு வாங்கனும். டச் ஸ்க்ரீன் செட்டு.. லேட்டஸ்ட்டா..''
'' ம்.. வாங்கிக்க..'' அவள் கையில் கொடுத்தான்.
'' ஆனா எனக்கு நல்லதா பாத்து வாங்க தெரியாது. என் கூட வரீங்களா.? வந்து வாங்கி தர முடியுமா.?'' 
'' ம்.. அதுக்கென்ன.. காசு இருந்தா போனா வாங்கிட்டு வர வேண்டியதுதான் ''
'' சரி.. எனக்கு சம்பளம் போட்றுவாங்க. சொல்றேன்.என் கூட வாங்க.. நல்லதா பாத்து ஒண்ணு வாங்கி குடுங்க..! இப்ப இருக்கற இந்த டர்ரு செட்ட தூக்கி வீசனும்.. மொதல்ல..!!'' என்றாள் சிரித்தபடி.!!! .

நவநீதன் விடை பெற்றுப் போன பின் தோழிகள்  இருவரும் பேச ஆரம்பித்தனர்.
"நம்ம ஊர் பசங்கள்ளயே இவன் ஒருத்தன்தான்டி ரொம்ப டீசண்ட்டு..'' என்றாள் பிரமிளா.
'' ம்.. அவன் வெளியூர்ல போய் இருந்ததால இப்படி இருக்கான். நம்ம ஊர்க்குள்ள இருந்துருந்தான்.. அவனும் நாசம்தான். இப்ப பாரு.. இங்க வந்து இந்த பொறுக்கிகூட சேந்துட்டானா.. இனி என்ன மாதிரி ஆவானு சொல்ல முடியாது '' என்று நவநீதனுக்காக மிகவும் கவலைப் பட்டாள் திவ்யா.. !!!
''ம்.. சரிதாண்டி.. இனி எவளுக்கு குடுத்து வெச்சிருக்கோ..'' பிரமிளா கொஞ்சம் துணிந்தே தன் பீலிங்கை வெளியிட்டாள்.
'' எதுக்குடி.. ?''
'' வேற எதுக்கு.. ? அவனுக்கு பொண்டாட்டியா வரதுக்குத்தான்..'' என்று சிரித்தாள்.
'' நீ ஏங்கற போலிருக்கு.?''
'' ம்.. ஆசை இருக்கு.. ஆனா என்ன பண்றது.. யோகம் வேணுமே..''
'' ஓஓஓஓ.. அவ்வளவு தூரம் வந்தாச்சா.. ? ரொம்ப நல்லாருக்குடி.. !!! சரி.. ட்ரை பண்ணித்தான் பாரேன்..!!!''
''யாரு.. நானா.. ??? நல்லா சொன்ன போ. அவனுக்குலாம் என்னை புடிக்குமாடி. ?''
'' ஆமா.. அவனுக்குன்னு இல்ல.. எவனுக்குமே உன்னை புடிக்காது..''
'' ஏ.. போடி ரொம்பத்தான் போற..? நான் அவன் ரேஞ்சை சொன்னேன்.! ஏன் உன் அண்ணன் இப்ப கூட என்னைப் பாத்து அந்த வழி வழிஞ்சிட்டுத்தான்  போறான் பாத்தே இல்ல?"
'' ச்சீ.. அவனையெல்லாம் நான் ஒரு மனுசனாவே மதிக்கறதில்ல. அவனுக்கு உன் மூஞ்சி.. மொகறைனு ஒரு மசுரும் தேவை இல்ல. நீ ஒரு பொட்டச்சி அது போதும் அவனுக்கு..! உனக்கு பல்லு நீண்டிருந்தா என்ன... கண்ணே இல்லாம போனா என்ன..?'' என்று திட்டினாள் திவ்யா.
'' ஹா.. ஹா..! சரி உனக்கு ஏன்டி உன் அண்ணன் மேல இப்படி ஒரு வெறுப்பு..?''
'' அவனல்லாம் மனுஷனாடி.. ? ஒரு தங்கச்சிகிட்ட பேசற மாதிரியா என்கிட்ட பேசுவானு நினைக்கறே. நீயே பாத்துருக்க இல்ல. படு சில்லறை மாதிரிதான் பேசுவான். அதான் அவனை எனக்கு புடிக்காமயே போயிருச்சு.. !! பத்தாதுக்கு அந்த சிறுக்கிய போய் லவ் பண்றானே.. த்தூ கருமம். இவனை விட அவளுக்கு வயசு பெருசு.. எப்படித்தான்.. கருமம்.. நெனச்சாலே எனக்கு குமட்டுது.. ''
'' யாரு ரேவதியை சொல்றியா..? நெஜமா அவளை லவ் பண்றானாடி உன் அண்ணன்..?''
'' ஆமா டெய்லி நைட்ல வேற போன் பண்ணி கொஞ்சறா மாதிரி இருக்கு. இவனும் சிரிச்சு சிரிச்சு கொஞ்சுவான் பாரு.. எனக்கு அப்படியே அடி வயிறு எல்லாம் பத்திகிட்டு எரியும். ''


'' எனக்கென்னமோ நம்பிக்கை இல்லைடி. இன்னும் கொஞ்ச நாள்ள.. நீ வேணா பாரு.. மேட்டர் முடிச்சிட்டு அவளை கழட்டி விட்டற போறான் அன்பு..''
'' தூ.. கருமம்.! வெக்கமா இல்ல..? நீ என்னடி இப்படி பச்சையா பேசற..?''
'' ஹே.. நீதான்டி என்னை விட பேசற..? சரி.. சரி அதை விடு.. நாம என்ன பேச ஆரம்பிச்சோம்.. ? ம்ம்ம்.. இந்த நவநி பத்தி.. அப்ப இனிமே ஆளு இங்கதானா.?''
'' ஆமான்டி.. இங்கதான். அதும் கே ஜிக்கு வேலைக்கு போகப் போறானாம் அதான் எனக்கு கவலையா இருக்கு..''
'' என்னடி இப்ப..  நீ பீல் பண்ற போலருக்கு.. ?''
'' ஏன்.. பண்ணக் கூடாதா.. ?'' என சிரித்தபடி கேட்டாள் திவ்யா.
'' யேய்.. எப்பருந்துடி.. ?'' எனக் கண்டு பிடித்து விட்டதைப் போலக் கேட்டாள் பிரமிளா.
'' ஏய் ச்சீ.. இது அந்த பீலிங்லாம் இல்லை. அவன் கெட்டுப் போயிரக் கூடாதேன்ற பீலிங்ஸ்.. ''
''நம்பிட்டேன்.. ''
'' நம்பாட்டா போ மூடிட்டு. ''
'' ஆஹ்.. ஹா.. வாழ்த்துக்கள்டி நீ ட்ரை பண்ணு.. உனக்குலாம் ஓகே ஆக சான்ஸ் இருக்கு...''
'' அட ச்சீ.. போடி பேசாம.. இது வெறும் அக்கறைதான்.. '' திவ்யா நன்றாகவே வெட்கப் பட்டாள்.
''மத்தபடி எதுவும் இல்ல. ''
'' மத்தபடி எதுவும் இல்லேன்னாலே இருக்குனுதான் அர்த்தம்டி கண்ணு..!! ரொம்ப சீன் போடாத.. ஆமானு ஒத்துக்க.. நான் ஒண்ணும் சொல்லலை.. ''
'' சரி சரி விடு.. அதான் நான் சீன் போடறேனு தெரியுதில்ல. இனி நவநி என் ஆளு.. ஓகேவா.? நீ ஏதாவது வாலை ஆட்டினே.. மவளே அறுத்துருவேன்.. '' என்றாள் திவ்யா.. !!!

ஆட்டுக்கல்லில் அரிசியை போட்டு மாவறைத்துக் கொண்டிருந்தாள் கவிதாவின் அம்மா. வெளியில் இருந்து வந்த கவிதாவைப் பார்த்து..
'' ஒரு கை புடி வா..'' என அழைத்தாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் 'போம்மா ' என ஒரே வார்த்தையில் உதறித் தள்ளியிருப்பாள். ஆனால் இன்று.. இப்போது அவள் அப்படி சொல்லாததற்கு ஒரு காரணம் இருந்தது..!
அம்மா பக்கத்தில் போய் நைட்டியை சுருட்டி பிடித்து உட்கார்ந்தாள். அம்மாவுக்கு மாவாட்ட உதவினாள்! !
'' ஏம்மா.. '' என ஆரம்பித்தாள் கவிதா.
'' ம்..?'' என்றாள் அவள் அம்மா.
'' மாமா நல்ல கலராம்மா ?''
'' எந்த மாமா..?''
'' நம்ம மாமாதான். நவநி மாமாவோட அப்பா..?'' என விளக்கம் கொடுத்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தாள் அம்மா.
''ஏன்டீ. ?''
அம்மா பார்த்த பார்வையும் கேட்ட தோரணையும் கவிதாவுக்கு கூச்சத்தைக் கொடுத்தது.
''இல்ல.. நவநி மாமா நல்லா கலராத்தான் இருக்கு.. பெரிய மாமாதான் கொஞ்சம் கலரு கம்மி.. அதான் கேட்டேன். நவநி மாமா அவங்கப்பா மாதிரியானு.. ?''
'' ஆமா.. அவங்கப்பன் கொஞ்சம் கலருதான். ஆளும் பாக்க நல்ல வாட்ட சாட்டமா.. இருக்கும் நவநி அவங்கப்பன உருச்சு வெச்சு பொறந்துருக்கானுதான் எல்லாரும் சொல்லுவாங்க. அப்பனும் மகனும் அப்படியே அச்சுல வாத்த மாதிரி இருந்தா அப்பனை புள்ளை முழுங்கிருவானு சொல்லுவாங்க.. அப்படித்தான் ஆச்சு... கடைசில..''
நவநீதனின் அப்பா இறந்த கதை கவிதாவுக்கும் தெரியும். இருந்தாலும் இப்போதும் அதை தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள்.
'' எப்படிம்மா மாமா ஏமாந்துச்சு.. ?''
'' மப்புல வீர விளையாட்டு.. விளையாடி ஏமாந்ததுதான். ஆத்துல தோட்டா போட போய் திரிய பத்த வெச்சிட்டு  கடைசிவரை தண்ணிக்குள்ள வீசாம கைலயே புடிச்சிட்டுருந்து.. கடைசி நுணில வெச்சி.. ரஜினி வீசறாப்பல வீசறது உன் மாமானுக்கு கை வந்த கலைனு சொல்வாங்க. ஆனா அன்னிக்கு கெட்ட நேரம் திரி சரியில்லயோ என்னமோ.. பத்த வெச்சதும் சர்ருனு புடிச்சு.. டமால்னு வெடிச்சிருச்சாம்.. அப்பவே ஆளும் காலி..''
'' அப்ப.. நவநி மாமாக்கு என்ன வயசுமா இருக்கும் ?''
'' ஒன்றை வயசு.. சரியா..! ஒன்றை வயசுல அப்பன முழுங்கிட்டான். அவன் ஜாதகத்துலயே அப்படி இருக்கு.''
'' மா.. பெரிய மாமா பண்ண தப்புக்கு நவநி மாமா என்னமா பண்ணும்.. ?''
'' ம்.. அதும் சரிதான்.. '' என்றுவிட்டு மெல்லக் கேட்டாள் அம்மா.  '' உனக்கு உன் மாமன புடிச்சிருக்காடி ?''
'பக்' கென்றிருந்தது கவிதாவுக்கு. திகைப்பாக அம்மாவைப் பார்த்தாள்.
'' என்ன நீ.. இப்படி கேக்கற..?''
'' ஏன்டி நான் கேட்காம வேற யாரு கேப்பா..? அவன் உனக்கு மொறைதான. ?''
'' மா.. '' எனக் கத்திச் சிணுங்கினாள்.
''போ பேசாம..''
'' கட்டிக்கறியா அவனை .?'' அம்மா மிகவும் இயல்பாகக் கேட்டாள்.
'' ச்சீ.. ஏம்மா இப்படி லூசாட்ட பேசற..?''
'' ஏன்டி அவனுக்கு என்ன குறைச்சல்..?''
'' அய்யோ...! போ லூசு அம்மா..! மாமா என்னை எல்லாம் அப்படி நினைக்கவே இல்ல. ''
'' உன்கிட்ட சொன்னானா.. ?''
'' இல்ல.. ஆனா மாமா கிருத்திய லவ் பண்ணுச்சு அது வேணா தெரியும்''
'' அடக் கருமமே.. சொன்னானா அவன்.. ?''
'' ம்.. ஆனா பாவம். மாமா மட்டும்தான் ஒன் சைடா லவ் பண்ணுச்சு. அவ பண்ணவே இல்லையாம்..''
'' அட கண்றாவியே.. அது வேறயா.. ? ஆனா நானும் நினைச்சேன்தான். அங்கயே போய் செட்டிலாகி அவளையே கட்டிக்குவானோனு. சரி இப்ப என்ன சொல்றான் ?''
'' இப்பல்லாம் ஒண்ணுல்ல.. எல்லாம் விட்டாச்சு.. ''
'' உன்னை ஏதாவது லவ் பண்ற மாதிரி தெரியுதா.. ?''
'' அம்ம்ம்ம்மாமா...!!'' கத்தினாள் கவிதா.
'' ஏன்டி கத்தற.. சனியனே..? என்ன சொல்லிட்டேன் இப்ப..? சரி நீயே அவன கட்டிக்க.. அது உங்கப்பனோட ஒரு பெரிய கனவு.. !!'' என அம்மா சொன்னதைக் கேட்ட கவிதா ஆத்திரத்தில் ஆட்டு உரலை அம்மா பக்கம் தள்ளி விட்டு சட்டென எழுந்து நின்றாள்.
'' நீயே ஆட்டித் தொலை. என்னை கூப்பிடாத.. '' எனச் சொன்னவள் வேகமாக வீட்டுக்குள் போய் விட்டாள்.. !!!

இரவு எட்டரை மணிக்கு வீட்டுக்குப் போனான் நவநீதன். அவன் போனபோது ஊர் மொத்தமும் இருளில் மூழ்கி இருந்தது. வீட்டுக்குள் திரி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அம்மா ஆட்டுச் சாலையை ஒட்டிய திண்ணை மேல் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா பக்கத்தில் கீழே தொங்கிய கால்களை ஆட்டியபடி உட்கார்ந்திருந்த கவிதா கேட்டாள்.!
'' எங்க மாமா போன. ?''
'' பசங்களோட பேசிட்டிருந்தேன் '' அவள் பக்கத்தில் போய் திண்ணையில் உட்கார்ந்தான்.
'' சாப்பிடறியா. ? போடட்டுமா..?'' என்று அவனைப் பார்த்தாள்.
'' இல்ல இரு.. கரண்ட் வரட்டும். நீ.. அம்மா எல்லாம் சாப்பிட்டிங்களா..?''
''ம்.. நாங்கள்ளாம் எப்பவோ..''
நவநீதனைப் பார்த்து விட்டு தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த கவிதாவின் அம்மா எழுந்து வந்தாள். அவனது மாமா வாசலில் ஒயர் கட்டிலை போட்டு குறட்டைச் சத்தத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
'' சாப்பிட்டாச்சா அத்தை..?'' நவநீதன் தன் அத்தையைப் பார்த்துக் கேட்டான்.
'' ஆச்சு நவநி. நீ சாப்பிடலியா ?''
'' கரண்ட் வரட்டும் அத்தை. அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்க..?''
'' அதுக ரெண்டும் தூங்கிருச்சுனு நெனைக்கறேன். பாரு.. இது ஒண்ணு இருக்கே.. இதுதான் தூங்காம கோட்டான் மாதிரி உக்காந்துட்டிருக்கு..'' என்று கவிதாவை கிண்டல் செய்தாள் அத்தை.
'' அம்மா '' எனக் கத்தினாள் கவிதா ''நான் கோட்டான்னா. நீ.. நீ தேவாங்கு..''
சிரித்தபடி கீழே தரையில் உட்கார்ந்தாள் அத்தை.
'' இப்படி எல்லாம் பேசறதுக்குத்தான் பள்ளிக் கொடத்துல சொல்லித் தராங்க போலருக்கு. ''
'' ஆமா.. போ.. !!''
நவநீதன் குறுக்கிட்டுச் சொன்னான்.
'' இவ காலேஜ்ல ஏதோ டூர் போறாங்களாமே அத்தை..''
'' ஆமா சொன்னா..! உன்கிட்ட சொல்லி கேக்க சொன்னாளா.?''
கவிதா உடனே அவனை ஒட்டினாள்.
''பாத்தியா மாமா. இதான் எங்கம்மா கிட்ட எனக்கு சுத்தமா புடிக்காது. யாரு எது சொன்னாலும் உடனே ஒரு பழி போட்றனும்.''
நவநீதன் சிரித்துவிட்டு அத்தையிடம் சொன்னான்.
'' இல்லத்த.. அவள்ளாம் அப்படி சொல்லல. நான்தான் அவள போகச் சொன்னேன்.''
'' உங்க மாமன்தான் போக வேண்டாம்.. அப்படி இப்படினு சொல்லுச்சு நவநி..''


'' அவ போய்ட்டு வரட்டும்த்தே... மாமாகிட்ட நான் பேசிக்கறேன்..''
'' ம்.. சரி என்னமோ.. நீயாச்சு. உன் மாமனாச்சு.. உன் மாமன் மகளாச்சு..! நீங்க முடிவு பண்ணா சரி.. '' என அத்தை சொல்ல..
நவநீதன் அதை சாதாரனமாகத்தான் நினைத்தான். ஆனால் தன் அம்மா எதைச் சொல்கிறாள் என்பது கவிதாவுக்கு தெரிந்தது. 
'' லூசு அம்மா. சும்மா ஒளறாத. பேசாம இரு..'' என்றாள்.  ஆனாலும்  அவள் மனசுக்குள் ஏதோ ஒன்று நிகழவே செய்தது.!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக