நீதான் என் காதலி - பகுதி - 5

யாரு சொன்னாலும் சில விசயங்கள் உண்மைதான் மச்சி என்று சொல்லி சிரித்தான் .டேய் இப்ப என்னடா பண்றது என்று புரியாமல் கேட்டான் விக்கி .ஆமாடா எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் யோசிங்க உங்கள மாதிரி ஆளுகளுக்குதான் நாம கவர்ன்மென்ட் போன் புத் மாதிரிலாம் வச்சு காண்டம் விக்கதே
படிக்கதவங்கே கூட அத இப்ப நல்லா யூஸ் பன்றாங்கே உன்னையே மாதிரி படிச்சவனுக்கு எங்க போச்சு புத்தி என்று திட்டினான் .
சரி சரி நடந்தாத விடு இப்ப இதுக்கு எதாச்சும் வழி சொல்றா என்றான் விக்கிம்ம் உனக்கு அந்த பொண்ணோட நாள் கணக்கு சரியா தெரியலைங்கிர .
எங்கிட்டும் மூணாவது மாசம் முடிஞ்சு நாலாவது மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னா கருவ கலைக்கிறதும் கஷ்டம் அதனால முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் கலைக்க பாரு என்றான் .அததாண்டா நானும் அவகிட்ட சொல்லிருக்கேன் என்றான் விக்கி .
விக்கி பொண்ணு அழகாவும் உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடுடா என்றான் அவன் டாக்டர் நண்பன் .டேய் எனக்கு அதாலம் ஒத்து வராதுடா என்றான் விக்கி .ஏண்டா இன்னும் நீ பழச மறக்கலையா என்றான் .
மறந்துரக்கூடாதுன்னு தான் கல்யாணம் வேணாம்ன்னு நினைக்கிறேன் என்றான் விக்கி வருத்ததோடு .டேய் எல்லா பொண்ணுகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டங்கடா அதனால நம்ம ஊரல நடந்தத மறக்கிரதுதான் நல்லது உனக்கு என்றான்
சரிடா எங்க அப்பா இன்னும் உன்கிட்டதான் செக்ஆப் க்கு வராரா என கேட்டான் விக்கி .ஆமாடா போன வாரம் கூட உங்க அப்பாவும் உன் தம்பியும் வந்தாங்க அதலாம் உங்க அப்பா நார்மலாதான் இருக்காரு என்றான் .
சரி என் விசயம் எதுவும் அவர்கிட்டே உளறி கொட்டிடாத என்றான் .டேய் நான் டாக்டர்டா ரகசியத்த எப்படி பாதுகாக்குறதுன்னு நல்லாவே தெரியும் எனக்கு நீ மட்டும் இனிமேல ஆச்சும் செப்டியோட பண்ணு என்றான் .
சரிடா என்று அவன் போனை வைக்கவும் .
மணி உள்ளே வந்தான் .என்னடா பிஸியா என்றான் .இல்ல சும்மா ஊர்ல ஒரு பிரண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்றான் .


அப்புறம் என்ன எதுவும் புதுசா என்றான் மணி .ஐயோ இந்த ஓட்ட வாயனுக்கு ஏதும் தெரிஞ்சுடுச்சா வந்து புதுசு கிதுசு கிரான் என்று யோசித்தான் .
இல்லடா எதுவும் புதுசு இல்ல அதே மாதரித்தான் என்றான் விக்கி .ம்ம் எனக்குதாண்டா இப்ப எல்லாமே புதுசா இருக்கு என்றான் மணி .என்னது என்று பயத்தோடு கேட்டான் .அதாண்டா வள்ளி கர்ப்பமா இருக்கதால எல்லாமே புதுசா இருக்கு என்றான் .
அந்த கர்ப்பம் என்ற வார்த்தையை கேட்டதும் விக்கிக்கு வயற்றை கலக்கியது போல இருந்தது . அவ கர்ப்பமா இருக்கதால புதுசா எனக்கு பொறுப்பு வந்தா மாதிரி இருக்கு.
வீட்ல குழந்தை வர போறதால இன்னும் நிறைய உழைக்கனும் போல இருக்கு என்று உற்சாகத்தோடு சொல்லி கொண்டு இருந்தான் மணி .
ஆனால் இந்த கர்ப்பம் ,குழந்தை போன்ற வார்த்தைகளை கேக்க கேக்க விக்கிக்கு அப்படியே இதயம் படக் படக் என்று அவனை அறியாமல் ஒரு பயத்தில் அடித்தது .அதனால் அவன் மணி பேசுவதற்கு வெறும் ம்ம் மட்டும் போட்டு கொண்டு இருந்தான் .

அவளுக்கு இப்ப ஆறவாது மாசம் ம்ம் இதே நம்ம ஊரா இருந்தா அவளுக்கு அடுத்த மாசம் கிராண்டா சொந்தகாரங்களோட வளைகாப்பு கொண்டாடி இருக்கலாம் அது மட்டும்தான் அவளுக்கும் எனக்கும் வருத்தமா இருக்கு என்றான் .

ஐயோ இவன் கிட்ட யாராச்சும் என்னயே காப்பாத்துங்களே என்று அவன் நினைத்த போது

விக்கியை தேடி பியூன் வந்தான் .அப்படா என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் விக்கி .ஆனால் பியூன் சார் உங்கள தேடி சுவாதின்னு ஒரு மேடம் வந்து இருக்காங்க என்றான் .அதை கேட்டதும் இதுக்கு இவன் கிட்டவே இருந்து இருக்கலாம் என்று நினைத்தான் .

சுவாதி பெயரை கேட்டதும் மணி சிரித்து கொண்டே என்னடா அன்னைக்கு லவ் இல்லேன்னா அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்க்கு எல்லாம் வரா என்ன விசயம் என்றான் மணி .

ஐயா BBC ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல சும்மா என்கிட்ட கொஞ்சம் பணம் கேக்க வந்துருக்கா நீ பாட்டுக்கு கண்டதையும் கறபனை பண்ணி ஆபிஸ் புரா பரப்பி விட்றாத உன்ன கெஞ்சி கேட்டுகிறேன் என்று சொன்னான் விக்கி .

சரிடா நீ சொன்னாத நான் நம்பிட்டேன் என்று சொல்லி சிரித்தான் .அவனை கோபத்தோடு முறைத்து விட்டு அவன் ரூமை விட்டு வெளியே வந்தான் .வெளியே அவன் ஆபிசில் இருக்கும் மற்றவர்களும் ஒரு கிண்டலாக சிரித்தனர் .

இவள யாரு ஆபிஸ்க்கு எல்லாம் வர சொன்னது என்று கோபத்தோடு போனான் .

உன்னையே யாரு இங்கலாம் வர சொன்னா என்று அவளை பார்த்ததும் கத்தினான் .உனக்கு ஒரு மணி நேரமா நான் போன் ட்ரை பண்ணேன் பிஸின்னே வந்துச்சு எவ கூடயாச்சும் கடலை போட்டுகிட்டு இருந்து இருப்ப

அதான் உன்னயே தேடி நானே வந்துட்டேன் என்றாள் சுவாதி ,
சரி என்ன விஷயம் என்றான் வெறுப்போடு .நீ சொன்ன மாதிரி அபார்செனே பண்ணிரலாம்டா என்று சொன்னதும் விக்கியின் முகம் மலர்ந்தது .


அதுக்கு நீ இன்னொரு தடவ என் புருசனா நடிக்கணும் சோ வரியா என்றாள் .
ஒ சுவாதி தாரளாமா வரேன் என்றான் சிரித்து கொண்டே .


எப்ப போவோம் என்றாள் .இப்பயே நான் போயி ஆபிஸ்ல பர்மிசன் வாங்கிட்டு வரேன் என் கார்லயே போவோம் என்றான் .

பின் இருவரும் மீண்டும் மருத்தவமனைக்கு போனார்கள் .


இரண்டு பேரும் மீண்டும் அதே மருத்தவமனைக்கு திரும்ப போனார்கள் ,அவர்களை பார்த்ததும் அந்த டாக்டர் பெண்மணி சந்தோசத்தோடு அவர்களை வரேவேற்றார் .வாங்க புது பேரெண்ட்ஸ் என்ன விசயம் எதுவும் சந்தேகமா என கேட்டார்

எதுல வேணும்னாலும் சந்தேகம் கேளுங்க சொல்றேன் ஆனா நான் முன்னாடியே சொன்ன மாதிரி எந்த குழந்தைன்னு மட்டும் வயத் துக்குள இருக்க வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி சிரித்தார் .
ஆனால் விக்கி சுவாதி ரெண்டு பேரும் சிரிக்கமால் அமைதியாக இருந்தனர் .என்ன மிஸ்டர் அண்ட் மிசஸ் சுவாதி ரெண்டு பேரும் டல்லா இருக்கீங்க என்ன விசயம் என்று டாக்டர் கேட்டார்.
டாக்டர் எங்க ரெண்டு பேருக்கும் இப்பதைக்கு குழந்தை வேணாம்னு நாங்க ரெண்டு பேரும் பீல் பண்றோம் அதனால என்று சுவாதி இழுத்தாள் .
அதனால என்னையே அபார்சென் பண்ண சொல்றிங்களா என்று டாக்டர் ஒரு மாதிரியாக கேக்க ரெண்டு பேரும் ஒன்றாக ஆமா டாக்டர் என்றார்கள் .
ரெண்டு பேரையும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு ஏன் ரெண்டு பேரும் என்ன வேலை பாக்குறிங்க என டாக்டர் கேட்டார் .
நான் இங்க இருக்க தமிழ் எப் எம்ல ஆர் ஜே வா இருக்கேன் .இவரு gnb கம்பெனில அசிஸ்ன்ட் மேனேஜரா இருக்காரு என்றாள் .

அப்புறம் என்ன ரெண்டு பேரும் நல்லாத்தானே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தை பெத்துகிரதள கஷ்டம் உங்களுக்கு
இந்த காலத்துல வெறும் ரெண்டாயிரம் மூனாயிரம் சம்பளம் வாங்குரவெங்கலெ சந்தோசமா குழந்தை பெத்துகிறாங்க உங்களுக்கு என்ன
நல்லாதனே சம்பாதின்கிரிங்கே அப்புறம் என்ன குழந்தைய வளக்க கஷ்டம் என்றார் டாக்டர் .

இல்ல டாக்டர் இப்பதைக்கு வேணாம்னு என்று சுவாதி மீண்டும் இழுத்தாள் .இப்பதைக்கு வேணாம்னா பின்ன எப்ப அறுபது வயசுலேயே பெத்துக்க போறீங்க ரெண்டு பேரும் .என்று கோபப்பட்டார் .
இங்க பாருங்க முத குழந்தைங்கிறது கிட்டத்தட்ட தெய்வம் மாதிரி அத வேணாம்னு சொல்லாதிங்க என்று டாக்டர் உருக்கத்தோடு சொல்ல .
இல்ல டாக்டர் என் ஹஸ்பண்ட தான் இப்பதைக்கு வேணாம்னு சொல்றார் .அது வரை வழக்கம் போல எங்கிட்டோ பாத்துகிட்டு இருந்த விக்கி இதை கேட்டதும் அடி பாவி இப்ப ஏண்டி இந்த கிழடிகிட்ட என்னயே மாட்டி விட்ட என்று நினைத்தான் விக்கி .
டாக்டர் உடனே விக்கி பக்கம் திரும்பி ஹலோ மிஸ்டர் விக்னேஷ் குழந்தைய என்ன நீங்கள சுமக்க போறீங்க உங்க வோயிப்தானே கஷ்டப்பட்டு சுமக்க போறாங்க உங்களுக்கு என்ன அதுல கஷ்டம் என்று கோபத்தோடு டாக்டர்
பிறந்ததுக்கு அப்புறமும் உங்க வோயிப்தான் கஷ்டப்பட்டு வளக்க போறாங்க நீங்க உங்க குழந்தைய நேரம் கிடைக்கிறப்ப பாத்தா மட்டும் போதும் அப்புறம் என்ன குழந்தை வேணாம்னு சொல்றீங்க என்று டாக்டர் கேக்கவும் விக்கி அது இல்லை டாக்டர் என்று சமாளிக்க பார்த்தான் .
இங்க பாருங்க விக்னேஷ் நான் பிரன்கா பேசுறேன் இந்த குழந்தை உங்க ரெண்டு பேர் உயிரனுவால உருவானது .இந்த காலத்துல எத்தனையோ பேர் குழந்தை இல்லாம இருக்காங்க தெரியுமா அவங்க படுற மன வருத்தம் என்னனு உங்களுக்கு புரியாது ஆனா நான் இந்த பில்ட்ல இருபது வருசமா இருக்கேன் எனக்குத்தான் புரியும் குழந்தை இல்லாததோட வேதனை என்று சொல்லிக்கொண்டே விக்கியை பார்த்து சொன்னார்.
விக்னேஷ் உங்கள மாதிரி எத்தனையோ ஆண்கள் அவங்ககிட்ட சரியான அளவுல ஸ்பெர்ம் இல்லன்னு ஸ்பெர்ம் டோனட்டர் மூலமா அவங்க மனைவிகள கர்ப்பம் ஆக்கி அது மூலம் புருஷன் பொண்டாட்டின்னு மனசு அளவுல எவளவு கஷ்டப்பட்ருக்காங்க தெரியுமா .
ஒரு ஆணுக்கு தெரிஞ்சே அவோனோட மனைவி கிட்ட இருக்க கரு வேறு ஒரு ஸ்பெர்ம் ஆல உருவானதுன்னு தெரிஞ்சு அந்த ஆண் படுற கஷ்டம் தெரியுமா

ஆனா உங்களுக்கு அப்படி இல்லை இது உங்க ரத்தம் உங்க ஜீன் உங்க ஸ்பெர்ம் மூலமா உருவான குழந்தை அத புரிஞ்சுகோங்க

அப்புறம் டாக்டர் சுவாதி பக்கம் திரும்பி நீ என்ன மாதிரி பொன்னுமா ஒரு பொண்ணுக்கு குழந்தை பெறந்தாதன் அவ பொண்ணு இல்லாட்டி அவ பொண்ணா பிறந்ததுக்கு அவசியமும் இல்ல ஒரு பொண்ணா இருக்க தேவையும் இல்ல .உன் கிட்ட ஒரு உயிர் இருக்கு ஒரு பொண்ணா இருந்துகிட்டு அந்த உயிர கொல்லப்போரியா

இப்படி அந்த டாக்டர் சுவாதிக்கு அறிவுரை சொல்ல சொல்ல சுவாதிக்கு ஏதோ ஒரு மாதிரி மனது உறுத்தியது .ஆனால் விக்கி அதற்கு மாறாக கடுப்பின் உச்சத்துக்கே போனான் .சொன்ன சொன்னத மட்டும் செய்யுமா இந்த கிழவி அத விட்டுட்டு ஸ்கூல் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கு என்று மனதிலே நினைத்து கோபப்பட்டான் .

என்ன நான் சொன்னது எல்லாம் புரிஞ்சுச்சா மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் என்று அந்த டாக்டர் சொல்லி முடிக்க விக்கி கோபத்தில் கத்தி விட்டான் .

First Of All டாக்டர் இவ ஏன் மிசசும் இல்ல நான் இவளோட மிஷ்டரும் இல்ல என்று அவன் சொல்லவும் அதை கேட்டு டாக்டர் What என்று அதிர்ச்சியாக கேட்க்க

ஆமா அதான் உண்மை இவ என் பிரண்டோட எக்ஸ் கேர்ள் பிரண்ட் இவளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு நைட் தெரியாம செக்ஸ் நடந்து போச்சு அதுல இந்த மாதிரி இவளுக்கு ஆகிடுச்சு .

எனக்கோ இல்ல இவளுக்கோ இந்த குழந்தை தேவை இல்ல சோ எந்த அறிவுரையும் சொல்லாம இவளுக்கு அபார்சென் மட்டும் பண்றீங்களா என்று அவன் சொல்லவும்

அதை கேட்டு டாக்டர் பெண்மணி கோபமாகி நர்ஸ் நர்ஸ் என்று கோபத்தோடு கத்தினார் .இந்த மாதிரி கல்ச்சர் மறந்த ஆளுகள எல்லாம் விடாதே ன்னு நான் எத்தன தடவ உன்கிட்ட சொல்லிருக்கேன் முதல்ல இவங்கள இங்க இருந்து வெளியே கூப்பிட்டு போ இடியட்ஸ் என்று கத்தினார் .

அதை கேட்டு விக்கியும் கோபப்பட்டான் ஒ நாங்க கல்ச்சர் மறந்த ஆளுக இன்னைக்கு நாட்டுல முக்கால்வாசி பேர் கல்ச்சர் மறந்து இப்படித்தான் இருக்காங்கே அத்தன பேருக்கும் இந்த மாதிரி முடியாதுன்னு சொன்னிங்கனா உங்க ஆஸ்பத்ரியும் சம்பாதிக்காது நீங்களும் சம்பாதிக்க மாட்டேன்கே என்று விக்கி பதிலுக்கு கத்தி கூச்சலிட்டான் .

ஆனால் அவனை பதில் பேச விடமால் கம்பவுண்டர் அவனை வெளியே இழுத்து சென்றார் .

அந்த பொண்ணையும் போ சொல்லுமா என்று டாக்டர் தலையில் கை வைத்தவாறு சொல்ல

நர்ஸ் சுவாதியிடம் சொல்ல சுவாதி அவளாகவே வெளியே போனாள் .

பின்னர் வெளியே கத்தி கொண்டு இருந்த விக்கியை சமாதானப்படுத்தி காருக்கு கூப்பிட்டு போனாள் .

ஏன் விக்கி இப்படி கோபம் படுற நீ கொஞ்சம் பொறுமையா இருந்த அவங்க கிட்ட நான் பேசி இன்னேரம் செஞ்சுருக்கலாம் .
இந்த கிழடி கிட்ட எல்லாம் எவளவு பேசுனாலும் ஸ்கூல் டிச்சர் மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் பாடம் நடத்திகிட்டு தான் இருக்கும் .ஒன்னும் பண்ணாது ,என்றான்


அவங்க வயசனாவங்க அப்படித்தான் பேசுவாங்க நீ அதுக்குன்னு அவங்க கிட்ட உடனே கோபப் பட்டு பேசுவியா என்றாள் .
என்ன வயசனாவங்க ஒழுங்கா சொன்னா சொல்றத மட்டும் செய்ய வேண்டியது தானே அத விட்டுட்டு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கு என்றான் .
நீ சொல்ற வேலைய சொன்னவுடனே கேக்கறதுக்கு அது என்ன உன் ஆபிஸ் பியுன்னு நினைச்சியா அவங்க டாக்டர் அப்படித்தான் பேசுவாங்க நீதான் பொறுமைய இருந்துருக்கணும் .
என்னையே நீ பொறுமையா இருக்க சொல்றியா நீ மட்டும் அன்னைக்கு பொறுமையா இருந்துருந்தா இன்னைக்கு இவளவு தூரம் வந்துருக்காதுடி என்று அவளிடிம் கோபப்பட்டான்
இங்க பாரு விக்கி சும்மா சும்மா நடந்ததே பத்தி பேசிகிட்டு இருக்காத அதால ஒரு பிரயோசனமும் இல்ல இனி என்ன பண்ணாலாம்னு பொறுமையா யோசிப்போம் என்றாள்
இதுல பொறுமையா யோசிக்க என்ன இருக்கு சீக்கிரம் நீ போயி அபார்சென் பன்னு அதான் நமக்கு நல்லது என்றான் .
அதான் அவங்க பண்ணமாட்டேன்னு சொல்லி அனுபிச்சு வச்சுட்டாங்களே விக்கி என்றாள் .
மும்பைல இது ஒன்னு மட்டும்தான் ஆஸ்பத்ரியா வா வேற எதுக்கு ஆச்சும் போவோம் என்று அவளை வேறு ஒரு ஆஸ்பத்ரிக்கு கூப்பிட்டு சென்றான் .
ஆனால் எல்லா ஆஸ்பத்ரியிலும் அவர்கள் கணவன் மனைவிக்கான சான்று கேட்டார்கள் .எந்த ஆஸ்பத்ரியிலும் யாரும் அவர்களுக்கு அபார்சென் பண்ண ஒத்துக்கவில்லை .
இறுதியாக ஒரு ஆஸ்பத்ரியில் விக்கி ஒரு ஆண் மருத்தவரிடம் பேசி அவரை சமாதனப்படுத்தி அபார்சென் பண்ண ஒத்துக்க வைத்தான் ஆனால் அன்று நேரமாகி விட்டதால் அடுத்த நாள் வர சொல்லி இருந்தார்கள் .
பாத்தியா கடைசியா ஒரு ஆம்பள டாக்டர் தான் ஒத்துகிட்டார் .அதான் ஒரு ஆணோட பீலிங் இன்னொரு ஆணுக்குதான் தெரியும் என்று சுவாதியிடம் சொல்லி சிரித்தான் .
உனக்கு எல்லாம் பீலிங்ன்னு ஒன்னு இருக்கா என்று கேட்டாள் கடுப்போடு .சரி சரி நான் பீலிங் இல்லாத மிருகமாவே இருக்கேன் .நீ வேணும்னா பிலிங் உள்ள தியாகிய இரு என்றான் பதிலுக்கு .
ஓகே நாளைக்கு அவங்க சொன்ன நேரத்துல சீக்கிரம் வந்து அபார்சென் பண்ணிடு என்றான் .
ஏன் நீ வரமாட்டியா என்றாள் .நாளைக்கு எனக்கு கம்பெனில ஒரு முக்கியாமான மீட்டிங் இருக்கு அதனால நான் நாளைக்கு வர மாட்டேன் நீயா போயிட்டு வா
நீ இத பண்ணதுக்கு அப்புறம் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்ல .எந்த போனும் பண்ண கூடாது என் ஆபிஸ் பக்கமும் வர கூடாது .புரிஞ்சுச்சா என்றான் .
அவன் அவ்வாறு கேட்க சுவாதி ஒரு வித பயத்தோடும் குழப்பத்தோடும் அமைதியாக இருந்தாள் ,அதை பார்த்த விக்கி என்ன சுவாதி நான் சொல்றது புரிஞ்சுச்சா என மறுபடியும் கேட்டான் .
அவள் ஒரு குழப்போதொடு சரி என்றாள் பின் அவனிடிம் விக்கி
என்னையே என் ஹோஸ்டல மட்டும் இறக்கி விட்ரு என்றாள் .அவனும் அவளை அழைத்து சென்றான் .அவளை இறக்கி விட்டு அப்பா இன்னைக்கோட இவ சங்காத்த முடிச்சுக்கணும் அப்படின்னு நினைச்சுகிட்டு கிளம்பினான் விக்கி .
ஆனால் சுவாதி மட்டும் ஒரு குழப்பமான நிலையில் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்


சுவாதி அஞ்சலி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லமால் அமைதியாக இருந்ததால் சரி நீ என்னையே அக்கான்னு கூப்பிடுரத வச்சு நீ உண்மைலயே என்னையே உன் அக்காவாதான் பாக்குறேன்ன்னு நினைச்சேன் .

ஆனா நீ அப்படி நினைக்கல போல சரி நான் வெளிய போயிட்டு வரேன் .இனிமேல் என்கிட்ட எதுவும் பேசாத என்று அஞ்சலி வருத்ததோடு சொல்லிவிட்டு கிளம்பும் முன்
சுவாதி அவர்களை தடுத்து அஞ்சலி தோளில் சாய்ந்து அழுதுகொண்டே அக்கா போகாதிங்க அக்கா என்று அவர்களை கட்டிபிடித்து அழுதாள் .சரி அழுகாதடி வந்து உக்காரு என்று அவளை சமாதனபடுத்தி அஞ்சலி உக்கார வைத்தார் ,அவள் இன்னும் அழுது கொண்டு இருந்தாள் .
சரி சொல்லு நீ கர்ப்ப்மாதான இருக்க என அஞ்சலி கேட்க சுவாதி ஆமாம் என்பது போல தலை மட்டும் ஆட்டினாள் .யார் உன் கர்ப்பத்துக்கு காரணம் உன் பழைய லவ்வர் டேவிட்டா என அஞ்சலி கேட்க்க உடனே சுவாதி அய்யோ இல்லக்கா என்றாள் .அப்ப யாரு என அஞ்சலி கேட்க சுவாதி தலையை குனிந்து கொண்டே விக்கி என்றாள் மெல்ல .என்னது மக்கியா என புரியமால் கேட்டாள் அஞ்சலி
மக்கி இல்லக்கா விக்கி விக்னேஷ் என்றாள் சுவாதிம்ம் ஏதோ ஒன்னு .ஓகே யாரு அவன் உன் கூட வேலை பாக்குரவனா என கேட்டார் அஞ்சலி .இல்ல என்றாள் .அப்ப யாரு அவன் என கேட்க அவன் டேவிடோட பிரண்டு என்று சுவாதி சொன்னாள் ,
ம்ம் என்ன நீங்க ரெண்டு பேரும் இப்ப லவ் பண்றிங்களா ரிலெசன்ஷிப்ல இருக்கிங்களா என அஞ்சலி கேட்க
இல்லக்கா என்றாள் சுவாதி .அப்புறம் எப்படிடி இப்படி ஆச்சு என கேட்டாள் .டேவிட் கல்யாணம் அன்னைக்கு நான் பிலிங் ஆகி பப்ல ஓவரா குடிச்சுட்டு கிடந்தேன் .அப்ப அவன் தான் என்னையே தாங்கி கூப்பிட்டு போனான் .இங்க நம்ம ஹோஸ்டலுக்கு குடிச்சதால வர முடியல அதனால அவன் ரூமுக்கு போனேன் அப்பதான் இது நடந்துச்சு என்றாள் சுவாதி .
என்ன நீ குடிச்சத வச்சுக்கிட்டு அவன் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டு இப்படி பண்ணிட்டனா என அஞ்சலி கேட்டாள் .இல்லாக்கா அன்னைக்கு அக்சுவலா அன்னைக்கு நான்தான் குடி போதைல அவன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன் .அவன் வேனாம்தான் சொன்னான் .
அதன் பின் சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்து விட்டு அஞ்சலி கேட்டாள் நீ இப்படி ஆயிருக்கது அவனுக்கு தெரியுமா என கேட்டாள் .ம்ம் தெரியும் என்றாள் சுவாதி.என்ன சொன்னான் என கேட்டார் அஞ்சலி .என்ன சொன்னான் அபார்சன் பண்ண சொன்னான் வேற என்ன சொல்வான் என்றாள் சுவாதி ஒரு விரக்தியோடு .
ம்ம் ஓகே நீ என்ன சொன்ன என கேட்டாள் அஞ்சலி .நான் அவன்கிட்ட சரின்னுதான் சொன்னேன் .அப்புறம் ஏன் இப்ப வாந்தி எடுத்துகிட்டு இருக்க என கேட்க என்னால அபார்சன் பண்ண முடியாது அக்கா என்றாள் .
ஏண்டி எதுவும் பயமா இருக்க ,பயப்படாம பண்ணுடி நம்ம ஹோஸ்டேல் இருக்கவளுக பாதிபேர் இப்படி ஆகி வாரவாரம் யாருக்கும் தெரியாம அபார்சன் பண்ணிக்கிட்டுதான் இருக்காளுக அதனால நீ ஏன் பயப்புடுற என அஞ்சலி சொல்ல அவள் பதில் ஏதும் சொல்லமால் அழுதுகொண்டு இருந்தாள் .
அவள் தோள் மேல் கை வைத்து என்னடி ஆச்சு சொல்லுடி என கேட்க அவள் தன் கண்களை துடைத்து கொண்டு என்னால என் குழந்தைய அழிக்க முடியாதுக்கா என்று அழுதாள் .
சொன்னா புரிஞ்சுக்கொடி கல்யாணத்துக்கு முன்னாடி நீ இப்படி வயுத்த தள்ளி கிட்டு இருந்தா இந்த சொசைட்டி என்ன சொல்லும்னு யோசிச்சு பாத்தியா இல்ல உன்னாலதான் இந்த குழந்தைய வளத்துடுவியா சொன்னா கேளுடா நானும் குழந்தை பெத்தவதான் ஆனா இப்ப உனக்கு இந்த குழந்தை வேணாம்டா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் பெத்துகொடி என்று அஞ்சலி கெஞ்ச

சுவாதி கோபப்பட்டு சொன்னாள் அக்கா எனக்கு இந்த பாழப்போன சொசைட்டி பத்தி எல்லாம் கவலை இல்லை .இந்த சொசைட்டி பெரிய பெரிய நல்லவங்கள எல்லாம் அசிங்கமா பேசுன சொசைட்டிதான் இந்த சொசைட்டிக்கு யார பத்தியாச்சும் டெய்லி கிசு கிசு பேசுனாதான் தூக்கம் வரும்

இந்த சொசைட்டி ஒரு பத்து நாள் என்னையே பத்தி பேசும் அப்புறம் என்னையே மறந்துட்டு வேற ஆள பத்தி பேச ஆரம்பிச்சுடும் அதான் சொசைட்டி .இந்த அழுக்கு பிடிச்ச சொசைட்டிக்கு எல்லாம் என் குழந்தைய அழிக்க முடியாது அது மட்டும் இல்லாம இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தைதான் அத என்னால கொல்லமுடியாது என்று அவள் கோபப்பட்டு பேசினாள்

சரிடா உனக்கு குழந்தை பிடிச்சு இருந்தா அந்த பக்கியா மக்கியா என அஞ்சலி தெரியமால் கேட்க சுவாதி முறைத்து கொண்டே விக்கி என்றாள் . ஆ அதான் அந்த விக்கி அவன்கிட்ட பேசி குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகொங்க உனக்கும் நல்லது அப்புறம் நீ இந்த சொசைட்டி கிட்ட இருந்தும் நீ தப்பிக்கலாம் என்றாள் அஞ்சலி .

அதுக்கு சான்சே இல்லக்கா என்றாள் சுவாதி ஒரு சலிப்போடு .ஏண்டி அந்த பக்கிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா என கேட்க .
அதலாம் இல்லக்கா என்றாள் சுவாதி .

அவள் சொல்லிய தோரனையை வைத்து பார்த்து அஞ்சலி கேட்டாள் ஏண்டி இன்னும் உன்னால டேவிட்ட மறக்க முடியலையா என கேட்க அவன நான் எப்ப விக்கி கூட சுயநினைவோட இருக்கும் போது விக்கிகிட்ட செக்ஸ் வச்சுகிட்டனோ அப்பவே அவன மறந்துட்டேன் என்றாள் .அவள் சொல்லியதை கேட்டு சிரித்து கொண்டே அப்ப இப்ப நீ விக்கிய லவ் பண்றியா என அஞ்சலி கேட்க ஆமா ஏன்னைக்கு என்னையே காப்பத்துனானொ அப்ப இருந்து லவ் பண்றேன் என்றாள் சுவாதி .அப்புறம் என்னடி அவன் கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துகிட்டு சந்தோசமா இரு என அஞ்சலி சொன்னாள் .ஆனா அவனுக்கு என்னையே பிடிக்கல அக்கா என்றாள் சுவாதி .உனக்கு என்னடி உன் கண்ணுக்கும் கலருக்குமே உன்ன எவன் பாத்தாலும் மயங்கிடுவான் .
ஏன் என் ஆபிஸ்லேயே உன் நம்பர் கேட்டு எத்தன பேரு என்னையே டார்ச்சர் பன்னிருக்கங்கே தெரியுமா நான் தான் அவ வேற ஒருத்தன லவ் பண்றான்னு சொல்லி அத்தன பேரையும் சமாதனபடுத்தி வச்சு இருந்தேன் .உன்னையே பிடிக்கலையா அந்த பக்கிக்கு என்றாள் அஞ்சலி .
அக்கா அவன் விக்கி என்றாள் சுவாதி .சரிடி ஏதோ ஒன்னு ஏன் பிடிக்கலாயாம் உன்னையே அவனுக்கு என அஞ்சலி கேட்க அவன் ஒரு வோமனைஷேர் அக்கா என்றாள் சுவாதி .என்னடி சொல்ற ஒன்னும் புரியலடி என அஞ்சலி கேட்க அவனுக்கு ஒரு பொண்ணோட இருக்க பிடிக்காதாம் என்று பதில் அளித்தாள் சுவாதி .
ஆமா அவன் பெரிய மகாராஜா பாரு பல பொண்ணுகளோடதான் இருப்பாரு பாரு அதாலம் கல்யாணம் பண்ண சரி ஆகிடுவான்டி என அஞ்சலி சொல்லஇல்லக்கா நானும் இப்ப அவன லவ் பண்ணால என்றாள் சுவாதி .ஏண்டி ஏன் அவன் பொம்பள பொருக்கிகிரதாலையே என்றாள் அஞ்சலி .
அது இல்லாக்கா எனக்கு இப்ப ஆம்பிளைகளே பிடிக்கலாக்கா முத ஒருத்தன் (டேவிட் ) என் மனச கொன்னான் .சரி இவன்(விக்கி ) ஆச்சும் அவன் கருவ சுமக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் என் மனச புரிஞ்சுகுவானு பாத்தேன் ஆனா இவனும் என் மனசையும் கொன்னான் அவன் உயிரையே அவன் அழிக்க சொன்னான் அதனால அவன இப்ப நான் வெறுத்துட்டேன் இனி அவனே வந்தாலும் நான் முடியாதுன்னு சொல்லிடுவேன் என்றாள் சுவாதி .
அப்புறம் எதுக்குடி இந்த குழந்தைய சுமக்குற என அஞ்சலி கேட்டாள் .நான் முன்னாடியே சொன்ன மாதிரி இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தை அக்கா அத தவிர இப்ப எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல அது மட்டும் இல்லாம இந்த குழந்தைய இப்ப நான் விக்கி குழந்தைய நினைக்கல இது இப்ப என் குழந்தை நான் வேணும்னா இது ஏதோ ஒரு ஸ்பெர்ம் டோனட்டேர் மூலமா உருவான குழந்தையா நினைச்சுக்கிறேன் .
இனி எனக்கு யாரும் தேவை இல்லை என் குழந்தை மட்டும் போதும் வேற எந்த சொந்தமும் தேவை இல்லை என்றாள் சுவாதி .
சரிடி இனி குழந்தைய சும்மகிறது உன் விருப்பம் .ஆனா இந்த ஹோஸ்டல உன்னால வயித்த தள்ளிகிட்டு இருக்க முடியாது என்று அஞ்சலி சொல்லுவும் அப்போதுதான் அதை யோசித்தாள் சுவாதி .

ஆமாக்கா இப்ப என்ன பண்ண என அவளே கேட்டுவிட்டு நான் வேணும்னா இந்த ஒரு வாரம் முழுக்க ரூமுக்குள்ளேயே இருந்த மாதிரி பத்து மாசமும் இருந்துருவா நீங்க வேணும்னா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுவாதி .

நான் எல்லாம் உனக்காக வாங்கிட்டு வருவேன் ஆனா எப்படியும் நீ மாசம் ஒரு தடவயச்சும் செக் ஆப் போனும் அப்புறம் எப்படினாலும் பிரக்ன்ட் டெலிவரிக்கு வெளியே போனும் அது மட்டும் இல்லாம உன் வாந்தி சத்தம் இப்பவே நாம ப்ளாக் புல்லா கேட்டு பக்கத்து ரூம் காரிக எல்லாம் கேட்டுதான் நானே உன்கிட்ட கேட்டேன் இனி அது வார்டன்க்கு தெரிஞ்ச கண்டிப்பா வெளிய அனுப்பிடுவா என்ன பண்ண போற என அஞ்சலி கேட்க

சரி அக்கா இப்ப என்ன அக்கா பண்ண பேசாம நீங்களும் நானும் தனியா ரூம் வெளியே எடுத்துடுவோமா என சுவாதி கேட்டாள் .என்னால முடியாதுப்பா இந்த மும்பைல தனியா உன் ரூம் எடுக்க அது மட்டும் இல்லாம நான் தனியா ரூம் எடுத்தேன் என் புருஷன் என்னையே கொன்னே போடுவாரு என்று அஞ்சலி சொன்னாள் .

அக்கா ப்ளிஸ் அக்கா இதுக்கு எதாச்சும் ஒரு வழி சொல்லுங்கக்கா ப்ளிஸ் என கெஞ்சினாள் சுவாதி .

அஞ்சலி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் அத நீ கேக்கணும் அதுப்படிதான் நீ நடக்கணும் அத விட்டா உனக்கு வேற வழியும் இல்ல என்றாள் அஞ்சலி .

பின் சுவாதி ஒரு வித குழப்பத்தோடு ஹோஸ்டல் போனாள் .அங்கு போனதும் அவளுக்கு அடுத்த நாள் அவள் அபர்சென் பண்ண போவதை எண்ணி பயந்து கொண்டு இருந்தாள் .அப்போது ஹாஸ்டலில் அவளுக்கு இருக்கும் தோழிகளில் ஒருவரான அஞ்சலி அக்கா வந்து பேசினார் .

என்னடி ரொம்ப டல்லா இருக்க இன்னும் உன் பழைய லவர் டேவிட்யே நினைச்சுகிட்டு இருக்கியா என கேட்டார்கள் .அவள் இல்லக்கா அவனாலாம் மறந்து பல மாசம் ஆச்சு என்றாள் சுவாதி .
அது அப்படின்னு இருக்கணும் பொன்னுகன்னா எதுக்கு எடுத்தாலும் அழுதுகிட்டு மட்டும் இருக்க கூடாது .அவன் முன்னாடி நீயும் ஒரு நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டின்னு சந்தோசமா வாழனும் என்றார் .
நல்ல பையனா என்று சொல்லி மெல்ல சிரித்து விட்டு நல்ல பையன்லாம் இந்த காலத்துல கிடைப்பானுகளக்கா என்றாள் ஒரு விரக்தியோடு .ஏண்டி அப்படி சொல்ற என கேட்டார்கள் .இல்லக்கா இந்த காலத்துல எல்லா பசங்களும் லேடிஸ் விசயத்துல கொஞ்சம் வீக்கா இருக்க மாதிரியே எனக்கு தோணுது என்று அவள் விக்கியை மனதில் நினைத்து கொண்டு சொன்னாள் .
அது இந்த காலத்துல மட்டும் இல்ல எப்பயுமே பசங்க அப்படித்தான் ஏன் மன்னர் காலத்துல எடுத்துக்கோ நாம இப்ப ஆஹா ஓஹோன்னு சொல்ற எந்த மன்னர் ஆச்சும் ஒரு பொண்டாட்டியோட இருந்து இருக்காங்களா அதுக்குன்னு ஒரு அந்தபுரம்ன்னு ஒன்ன வேற வச்சுருகாங்கேசரி அத விடு இந்த காலத்து பசங்கள பத்தி கேட்டியே இந்த காலத்து பசங்க ரொம்ப ஒன்னும் கெட்டவெங்கெ இல்லடி
அவங்கே நம்ம மேல காதல விளுகுரதுக்கு முன்னாடி வேணா அப்படி இப்படி இருப்பாங்கே நம்மள லவ் பண்ண ஆரம்பிசுட்டாங்கே அவளவு சீக்கிரம் நம்மள விட்டு கொடுக்க மாட்டேங்கே
நாம கூட நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம்ம பழைய லவர மறந்துருவோம் ஆனா அவங்கே கல்யாணம் பண்ண கூட நம்மள மறக்க மாட்டங்கே .
அப்புறம் இந்த பொண்ணுக விசயத்துல வீக்கா இருக்க எல்லா ஆம்பிளையும் அவனுக்கு குழந்தை பொறந்ததுக்கு அப்புறம் பொறுப்பா மாறிடுவாங்க .குழந்தைன்கிற வார்த்தையே கேட்டதும் சுவாதிக்கு ஆர்வம் தோற்றி கொண்டது .நிஜமாவே குழந்தை பிறந்ததும் மாறிடுவாங்களா ஆம்பிளைக என்றாள் .
என்னடி அப்படி கேக்குற குழந்தைகதாண்டி நம்ம புருசனா நம்ம கூட தக்க வைக்க ஒரே வழி குழந்தைக மட்டும் நமக்கு பிறக்காட்டி நம்மள நாய் கூட மதிக்காது என்றார் .
என்ன டாக்டர் சொன்ன அதே வார்த்தைய அக்காவும் சொல்றாங்கன்னு சுவாதிக்கு ஒரு மாதிரியாக மனம் இளகியது .
என் வீடுகாரரையோ எடுத்துக்கோ ஆரம்பத்துல அவருக்கு என்னையே பிடிக்கவே பிடிக்காது ஆனா குழநதைக பிறந்ததுக்கு அப்புறம் ஆளே மாறிட்டாரு இப்ப என்னைய ரொம்ப விரும்பராறுன்னா அதுக்கு காரணம் அவருக்கு நான் குழந்தை பெத்து கொடுத்துதான்
இன்னைக்கு நான் மும்பைலயும் என் வீட்டுக்காரார் டெல்லிலயும் தனிதனியா இருக்கோம் ஆனா இன்னைக்கும் என் வீட்டுக்காரர் நான் என் குழநதைக எல்லாரும் வாரத்துல ரெண்டு நாள் மீட் பண்ணாலும் நாங்க எவளவு சந்தோசமா இருக்கோம் தெரியுமா அதாண்டி வாழ்க்கை
அது எல்லாம் இந்த காலத்து பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் எங்க புரிய போகுது .உங்களுக்கு எல்லாம் பார்ட்டி செக்ஸ்ம் லவ்வும் மட்டும்தான் வாழ்கைன்னு நினைக்கிறிங்க சரி நான் போயி தூங்குரென் நீயும் தூங்கு என்று சொன்னார்கள் .
ஆனால் சுவாதிக்கு தூக்கம் வரவில்லை ,அவள் அந்த அக்கா சொன்னதையும் காலையில் ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்னதையும் நினைத்து அவள் குழம்பி போனாள் .கருவை அழிப்பதா வேண்டாமா என்று இரவு முழுதும் யோசித்தாள் .

அடுத்த நாள் அவர்கள் சொன்னது எல்லாம் வைத்து நைட் சுவாதி கருவை அழிக்க வேண்டாம் என்றுதான் நினைத்து இருந்தாள் .ஆனால் காலையில் எழுந்த போது அவள் விக்கி சொன்னதுபடி யோசித்தாள் அவன் சொன்னது
படியும் பார்த்தால் குழந்தை பெறுவதிலும் வளர்ப்பதிலும் உள்ள சிக்கலை யோசித்து பார்த்தால் ஏன் மாடர்ன் குந்தி தேவியாக மாற வேண்டும் என்று நினைத்து கொண்டு அவள் கருவை கலைக்க முடிவு செய்து ஆஸ்பத்திரி சென்றாள் .
ஆஸ்பத்திரிக்கு போனாள் .அங்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொன்னாதால் வெளியே காத்து இருந்தாள் .அவள் முதல் முறை அபர்சென் பண்ண போவாதால் பயத்தில் தலையில் கை வைத்தவாறே குனிந்து இருந்தாள் .
அப்போது யாரோ அவள் பின்னால் இருந்து அவள் முடியை மெல்ல பிடித்து இழுப்பது போல் இருந்தது யார் என்று அவள் கடுப்பில் திரும்பி பார்த்தாள் அங்கு ஒரு ஆறு மாத குழந்தை அவள் அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டு இவளின் முடியை அதன் பிஞ்சு கைகளால் பிடித்து இழுத்து கொண்டு இவளை பார்த்து சிரித்தது .
இவளும் பதிலுக்கு சிரித்தாள் ,அந்த குழந்தையின் கையில் சிக்கிய தன் முடிகளை விலக்கினாள் சுவாதி .அப்போது அந்த பிஞ்சு விரலின் சபரிசம் அவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத தாய் உணர்வை தந்தது
அப்போது அக்குழந்தையின் அம்மாவும் திரும்பி பார்த்தாள் ,என்ன உங்க முடியையும் பிடிச்சு இழுத்துட்டானா என்று சிரித்து கொண்டே அந்த குழந்தையை ரவுடி பையலே எத்தன தடவ சொல்றது அடுத்தவங்க முடிய பிடிச்சு இழுக்க கூடாதுன்னு என்று அந்த குழந்தையை அந்த தாய் கொஞ்சினாள் ,
பின் சுவாதி பக்கம் திரும்பி நீங்க என்ன முத தடவ கன்சீவ் ஆகிருக்கெங்கலா என கேட்டாள் .சுவாதி அவளிடம் உண்மையை மறைக்கவில்லை அதனால் ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்டாள் .
அவள் சிரித்து கொண்டே அதான் உங்க முகத்துல பய ரேகை தெரியுதே .இத பாருங்க முத குழந்தைக்கு எப்பவுமே நம்மள மாதிரி லேடிஸ்க்கு பயம்
இருக்கத்தான் செய்யும் ஆனா நீங்க கஷ்டப்பட்டு பத்தவாது மாசம் குழந்தை பெத்து கையில வாங்கிட்டேங்கேனா எல்லாம் மறந்து போகும் .ஏன் உங்க புருசன கூட மறந்துடுவீங்க அப்புறம் குழந்தை தான் நம்ம உலகம்ன்னு மாறிடுவோம் அதனால பயப்படாம இருங்க
இருந்தாலும் நீங்க பயப்படாம இருக்க ஒரு வழி சொல்றேன் . நீங்க ஸ்கேன் எடுத்துட்டின்களா என்றாள் .
ஸ்வாதி இல்லை என்றாள் .முதல அத எடுத்து பாருங்க அப்பதான் அதுல குழந்தையோடு மூவ்மென்ட் பாத்து உங்களுக்கே பிடிச்சு போகும் என்றாள் அந்த பெண் .
அதன் பின் மீண்டும் அந்த குழந்தை சுவாதியை பார்த்து சிரித்தது .இவளும்
பதிலுக்கு அந்த குழந்தையை பார்த்து சிரித்தாள் .பின் அங்கு உள்ள குழந்தைகள் படங்கள் எல்லாத்தையும் பார்த்தாள் .பின் அவள் சேரில் உக்காந்து தன் வயிற்றை தடவி பார்த்தாள்
அவள் வயற்றில் இருந்து ஒரு குழந்தையின் குரல் கேட்டது அவளுக்கு அம்மா என்னையே கொன்னுடாதம்மா ப்ளிஸ் என அக்குழந்தையின் குரல் அவளுக்கு கேட்டது.அதை கேட்ட அவள் மீண்டும் அவள் வயிற்றை தடவி கொண்டே யாருக்கும் தெரியாதவாறு மெல்ல கண்ணிர் விட்டாள் .
பின் அவளை உள்ளே கூப்பிட்டர்கல் .அவள் உள்ளே போகும் முன் தன் வயிற்ரை தொட்டு கொண்டு தன் குழந்தையிடம் அம்மா உன்னையே ஒன்னும் பண்ண மாட்டேன்டா செல்லம் நீதான் இப்ப இருந்து எனக்கு ஒரே சொந்தம் நீதான் எப்பவும் அம்மாவுக்கு உயிரு அதனால பயப்படாம இருடா தங்கம் என்றாள் மனதிற்குள்ளே 
பின் உள்ளே சென்றாள் அவள் உள்ளே போன போது முதல் நாள் விக்கியிடம் பேசிய ஆண் டாக்டர் இல்லை அவரின் மனைவியான பெண் டாக்டர்தான் இருந்தார் .
சுவாதி உள்ளே போனதும் அந்த டாக்டரிடம் டாக்டர் நான் அபார்சன் பண்ணல என்றாள் தன்னை மீறி அழுதுகொண்டே .டாக்டர் அபார்சன் பண்ணாம இருக்க எதுவும் புருஷன் அனுமதி வேணுமா என்றாள் .அதை கேட்டு டாக்டர் சிரித்தார் .
என்னம்மா முதல புருசனுக்கு பயந்து அபார்சன் பண்ண ஒத்துகிட்டு இப்ப வெளியே இருக்க குழந்தைகள பாத்ததும் மனசு மாறிட்டியா என்றார் சிரித்து கொண்டே
அவள் அழுதுகொண்டே ஆமாம் டாக்டர் ப்ளிஸ் எனக்கு அபார்சன் வேணாம் என்றாள் .அழுகாத அம்மா இந்த காலத்து புருசங்கே எல்லாம் பிள்ள பெத்துகிட்டா பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு அபார்சன்பண்ண சொல்றாங்கே.அவங்களுக்கு சந்தோசம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்
ஆனா பொண்ணுகளுக்கு அதுக்கு மனசு வராது தான் கருவ ஆழிக்க ஏன்னா அவ இரக்க குணம் படைச்சவ என்றார் .

சரி டாக்டர் நான் இப்ப குழந்தையே அழிக்காம என் வயித்துகுல்லேயே வளக்க புருஷன் சம்மதம் வேணும்மா என்றாள் .

இங்க பாரும்மா அழிக்கத்தான் புருஷன் சம்மதம் வேணும் வளக்க உன் சம்மதம் மட்டும் இருந்தா போதும் என்றார்/

அவள் தன் கண்ணீரை துடைத்து கொண்டு சரி டாக்டர் நான் வரேன் என்று கிளம்பினாள் .

பின் வெளியே அந்த பெண் சொன்னது நினைவில் வர டாக்டர் ஒரு சின்ன request என்றாள் .

என்னாம்மா என்றார் .நான் என் குழந்தைய ஸ்கேன் மூலம் பாக்கலாமா என்றாள் .ம்ம் தரளாமா வாம்மா பாப்போம் என்று அவளுக்கு ஸ்கேன் செய்து அவள் கருவை ஸ்கேனில் காட்டினர் .சுவாதி அதை பார்த்து ஒரே நேரத்தில் அழுகவும் சிரிக்கவும் செய்தாள் .

அதை பார்த்து டாக்டர் என்னாம்மா சந்தோசம்மா என்றார் ,ம்ம் என்றாள் .நேத்து நான் லீவ் ஆச்சே யாரு உனக்கு அபார்சன் பண்ண அப்பாயின்மெண்ட் கொடுத்தா என கேட்டார்கள் .

உங்க ஹாஸ்பண்ட் கிட்டதான் என் ஹாஸ்பண்ட் பேசி அனுமதி வாங்குனாரு என்றாள் .அதானே பாத்தேன் டாக்டரா இருந்தாலும் அந்த ஆளும் ஒரு ஆம்பிளைதானே அதான் ஒத்துகிட்டாரு . நர்ஸ் நாளைல இருந்து சார பிர்கன்ட் செக்சென்க்கு விடாத கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு என்று நர்சிடம் சொல்லிவிட்டு

மெல்ல சுவாதியிடம் இரு ஒரு ரெண்டு நாளைக்கு அவர நான் நைட் பட்னி போடறேன் அப்பத்தான் புத்தி வரும் என்று சிரித்து கொண்டே சொன்னார் .அதை கேட்டு சுவாதியும் சிரித்தாள்

அதன் பின் நீ கவலைப்படாம குழந்தைய சும .உன் புருசனோ இல்ல மாமியாரோ உன்ன அபார்சன் பண்ண கம்பல் பண்ணா போலீஸ்ல சொல்லு அவங்க பாத்துகிருவாங்க என்று சொல்லி சிரிக்க

சுவாதியும் ரொம்ப சந்தோசமாக ஒரு புது மனுசியை போல உற்சாகத்தோடு வெளியே வந்தாள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக