நீதான் என் காதலி - பகுதி - 6

அதற்கு அப்புறம் சுவாதி கருவை கலைக்கமால் எப்போதும் போல வந்து ஹோஸ்டலுக்கு வந்து விட்டாள் .அவள் விக்கியிடம் அபார்சன் பண்ணமால் விட்டதை பற்றி எதுவும் சொல்லவில்லை அவனும் அவள் அபார்சன் பண்ணி இருப்பாள் என நினைத்து கொண்டு அவளுக்கு போன் எதுவும் பண்ணவில்லை .

மேலும் விக்கிக்கு வார நாட்களில் அவன் கம்பெனியில் வேலை அதிகமாக இருக்கும் அதனால் அவன் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டான் .ஏன் அவன் பலவினமாக இருக்கும் பெண்கள் விசயம் கூட முன்பே சொன்னது போல் அவன் வார இறுதி நாட்களில் மட்டும்தான் வைத்து கொள்வான் .
அதனாலே அவன் மற்ற விசயங்களை ஞாபகம் வைத்து கொள்வதில்லை .
இப்படியாக ஒரு வாரம் சென்றது அவன் அன்று வழக்கம் போல வேலை முடித்து விட்டு வீட்டில் களைப்பில் படுத்து இருந்தான் .பின் அவன் வீட்டிற்கு வள்ளியும் மணியும் அவனை பார்க்க வந்தார்கள் .
என்ன இந்த பக்கம் ரெண்டு பேரும் வந்துருக்கிங்க என கேட்டான் விக்கி .சும்மாதாண்டா எனக்கு 6 மாசம் ஆச்சுல அதான் டாக்டர் கிட்ட போயி டெலிவரி டேட் கேட்டுட்டு வந்தோம் அப்படியே வர வழிலேயே உன் புது வீடு இருக்கறது ஞாபகத்துக்கு வந்துச்சு அதான் உன்னையே பாத்துட்டு அப்படியே அடுத்த மாச வளைகாப்புக்கு கூப்பிடலாம்னு வந்தேன் என்றாள் வள்ளி .
நல்லது என்னைக்கு டேட் சொல்லிருக்காங்க என கேட்டான் .அநேகமா ஜனவரி மாசம்னு சொல்லிருக்காங்க ஓரளவு கரெக்ட்டா எட்டாவது மாசம் சொல்லுவாங்க
ம்ம் என் பிள்ளை புது வருசத்துல பிறக்க போகுது என்று வள்ளி சிரித்து கொண்டு சந்தோசத்தோடு சொன்னாள் .
ஒரு வாரம் வேலைப்பளுவில் இருந்ததால் இந்த கர்ப்பம் ,குழந்தை என்கிற வார்த்தைகளை எல்லாம் சுத்தமாக மறந்து இருந்தான் விக்கி .இப்போது வள்ளி வந்து குழந்தை டெலிவரி என்று பேசவும் அவனுக்கு அப்போதுதான் சுவாதி ஞாபகம் வந்தது .அவள் இந்நேரம் கருவை கலைத்திருப்பாலா இல்லையா என்று யோசித்து கொண்டு இருந்தான் .கலைத்திருப்பாள் ஏன்னா என் மூலம் வர குழந்தையே எந்த பொண்ணு சுமப்பா அப்படின்னு நினைச்சு கிட்டு இருந்தான் .
மணி வந்து உன் வீட்ல திங்க எதாச்சும் இருக்கடா அப்படின்னு கேட்டப்பதான் அவன் நிஜ உலகத்துக்கு வந்தான் .கிச்சன்ல இருக்குடா சாப்பாட்டு ராமா என்றான் விக்கி சிரித்து கொண்டே


அவன் கிச்சன் போனதும் வள்ளி அவனிடிம் டேய் சுவாதி உன் ஆபிஸ்க்கு எல்லாம் வராலமே என்ன விஷயம் என்ன உங்க ரெண்டு பேருக்கும் லவ் வந்துருச்சா என்று கிண்டலடித்து சிரித்தாள் .

அத எல்லாம் ஒன்னும் இல்லை என்றான் வேகமாக .பின் அந்த பக்கம் இருந்து மணி எதையோ தின்னு கொண்டே வந்தான் . மணி வந்ததும் டேய் ஓட்ட வாயா சும்மா இருக்க மாட்ட எல்லா விஷயத்தையும் வீட்ல போயி உலறிடுவியா ரகசியமாவே எதையும் வச்சுருக்க மாட்டியா என்று அவனை திட்டினான் .
சாரி மச்சி ஆம்பிளக யார்கிட்ட வேணும்னாலும் ரகசியம் காக்கலாம் பொண்டாட்டிகிட்ட மட்டும் ரகசியம் காக்க முடியாது அது ரொம்ப கஷ்டம் என்று சொல்லி சிரித்தான் மணி .
சரி அவர விடு சுவாதி எதுக்கு உன் ஆபிஸ்க்கு வந்தா அத முத சொல்லு என்று வள்ளி ஆர்வமாக கேட்டாள் .
உண்மை விசயத்தை சொன்னால் வள்ளி ஆடி போயிடுவாள் .அதோடு சுவாதியை அபார்சன் பண்ண சொன்ன விஷயம் தெரிந்தால் எங்கிட்டும் வள்ளி கடுப்பில் பேசமால் கூட போயிடுவாள் என புரிந்து கொண்டு
ஒன்னும் இல்ல அவ பிரண்டுக்கு என் கம்பெனில ஏதும் வெகன்சி இருக்கான்னு கேட்டு வந்தா அதுவும் ஒரு தடவதான் வந்தா அவளவுதான் அதுக்கு அப்புறம் அவள நான் பாக்கவே இல்ல என்றான் .
நிஜம் சொல்றியா இல்ல பொய் சொல்றியா என்றாள் வள்ளி .நான் ஏன் பொய் சொல்ல போறேன் என கேட்டான் விக்கி .இல்ல உன் முகரைய பாத்தா ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கே என சந்தேகத்தோடு கேட்டாள் .
அதாலம் ஒன்னும் இல்லையே என்று விக்கி சமாளித்தான் .ஆனால் வள்ளி விடமால் சந்தேகத்தோடு இல்லையே என்று அவள் பேச ஆரம்பிக்கும் போது அவளுக்கு வாந்தி வந்து வேகமாக பாத் ரூம் போயி வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
அதை பார்த்த விக்கி என்னடா எதுவும் கெட்டு போனாத சாப்பிடாலா இப்படி வாந்தி எடுக்குறா என மணியிடம் கேட்டான் .டேய் லூசு அது கர்ப்ப வாந்திடா மாசமா இருக்கப்ப பொண்ணுக இப்படிதான் வாந்தி எடுப்பாளுக என்றான் .
ஒ அப்படியா எனக்கு இந்த கர்ப்பம் ,குழந்தை ,கண்றாவி இத பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுடா என்று விக்கி சொன்னான்.
விக்கி அவனுக்கு கர்ப்பம் குழந்தை பற்றி சொல்லி கொண்டு இருக்கும் வேளையில் அவன் குழந்தையை அவனுக்கே தெரியமால் சுமந்து கொண்டு கர்ப்பமாக உள்ள சுவாதி ஹோஸ்டலில் அதே கர்ப்ப வாந்தியை எடுத்து கொண்டு இருந்தாள்.


சுவாதி கருவை கலைக்கமால் ஹோஸ்டல் வந்து யாருக்கும் தெரியமால் ஒரு வாரம் சமாளித்து விட்டாள் .அதே போல் தன் வேலை பார்த்த பாம்பே தமிழ் ஏப் எமில் இருந்தும் ஒரு இரண்டு வாரம் மெடிக்கல் லீவ் எடுத்து கொண்டாள் .
ஹோஸ்டலில் சுவாதியின் ரூம் மெண்டான அஞ்சலி அக்காவும் அவங்க வீட்டுகாரறரையும் குழந்தைகளையும் பார்க்க டெல்லி போனதால் இவள் மட்டும்தான் அந்த ரூமில் இருந்தாள் .அதுவும் அவளுக்கு சாதகமாகவே இருந்தது
அதனால் அவள்மட்டும் தனியாக இருந்ததால் அவள் நினைத்த நேரம் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
ஆனால் அன்று அஞ்சலி அக்கா ஊரில் இருந்து வரவும் இவள் சரியாக அந்நேரம் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
அவள் வாந்தி எடுப்பதை பார்த்த அஞ்சலி என்னடி நேத்து ஏதும் பார்ட்டி போயி நிறைய குடிச்சுட்டியா என கேட்டார்கள் .
அஞ்சலி அக்காவிடம் வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே வாங்கக்கா நீங்க எப்பக்கா வந்திங்க என சுவாதி கேட்டாள் .
நான் வரரது இருக்கட்டும் நீ எந்த பார்ட்டில போயிட்டு கண்டதையும் குடிச்சுட்டு வந்து இப்படி ஹங் ஓவர் ஆகி கிடக்க என கேட்டார்கள் .அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று சுவாதிக்கு தெரியவில்லை .ஆனால் உண்மையை மட்டும் அவர்களிடம் சொல்லமால் மறைக்க நினைத்தாள் .
அதலாம் பார்டி போயி எதுவும் குடிக்கலாக்கா நேத்து ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னு நம்ம பாய் கடைல போயி பிரியாணி வாங்கி சாப்புட்டேன் அது உடம்புக்கு ஒத்துக்கல போல என்று பொய் சொன்னாள் .
உனக்கு ஏண்டி இந்த ஆசை அப்படியே பிரியாணி சாப்படனும்னு உனக்கு ஆச இருந்துச்சுனா லீவ் நாள்ல சாப்புட்ருக்க வேண்டியதுதானே .ஏன் இப்படி வீக் டேஸ்ல சாப்புட்டு வேலையவும் கெடுத்துகிற உன் உடம்பையும்கெடுத்துகிற என்று அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே சுவாதிக்கு மீண்டும் குமட்டல் ஏற்பட அவசரமாக பாத் ரூம் போனாள் .
கதவை புட்டி விட்டு வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கி கொண்டே வெளியே வந்தாள் .என்னடி ரொம்ப உடம்புக்கு முடியாட்டி வா ஹோஸ்பிட்டால் வேணும்னா போவோமா என கேட்டார்கள்.இல்லை வேணாம்க்கா என்று சொல்லி சமாளித்தாள் .
அதன் பின் ஒரு மூன்று நாட்கள் பூட் பாய்சன் ஆனது போல அஞ்சலி அக்காவிடம் சுவாதி நடித்தாள் .அஞ்சலி அக்காவும் வார நாட்கள் ஆனதால் வேலைக்கு போய் விடுவார்கள் .அதனால் ஓரளவு அவர்களுக்கு தெரியமால் மறைத்தாள் .
அன்று சனிகிழமை வந்தது அஞ்சலி அக்காவுக்கும் லீவ் என்பதால் ரூமில் அவளோடு இருந்தார்கள் .அன்றும் அவளுக்கு வழக்கம் போல வாந்தி வருவது போல இருந்தது .ஆனால் வாந்தி எடுத்தால் அஞ்சலி அக்கா கண்டுபுடித்து விடுவார்கள் என்று முடிந்த வரை அடக்கி கொண்டு இருந்தாள் .
சரி சுவாதி ரெண்டு வாரம் நான் ஊருக்கு போனதாலும் நீ உடம்புக்கு முடியாம இருந்ததாலும் நம்ம ரெண்டு பேரும் எதுவும் சரியா பேச முடியல .அதனால இன்னைக்கு ரெண்டு பேரும் எதாச்சும் ஷாப்பிங் மால் போயி ரெண்டு பேறும் ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே ஹிர்த்திக் ரோசன் நடிச்ச புது படம் ஒன்னு இந்த வாரம் இறங்கிருக்குன்னு ஆபிஸ்ல சொன்னாளுக நம்ம தியேட்டர் போயி நல்லா ஹிர்த்திக் ரோசன படம் பாத்துகிட்டே சைட் அடிப்போம் என்றார்கள் சிரித்து கொண்டே .
சுவாதிக்கு தெரியும் அவளால் வெளியே போனால் வாந்தி எடுக்கமால் இருக்க முடியாது என்று அதனால் நீங்க மட்டும் போயிட்டு வாங்கக்கா நான் வரல என்றாள் .ஏண்டி உங்க ஊர் சூர்யா ஆர்யாவ மட்டும்தான் சைட் அடிப்பியா எங்க ஊர் ஹிர்த்திக் ரோசனலாம் பாக்க மாட்டயா என்று கிண்டல் அடித்தார்கள் .

அதலாம் இல்லக்கா எனக்கு உடம்புக்கு முடி என்று சொல்வதற்கு முன் அவளால் வாந்தியை அடக்க முடியாமல் வாயை தன் கைகளால் பொத்தி கொண்டு வேகமாக பாத் ரூம் போனாள் .போயி நல்லா வாந்தி எடுத்து முடித்து விட்டு வெளியே மூச்சு வாங்கி கொண்டே தன் வாயில் உள்ள வாந்தி துளி களை துடைத்து கொண்டு வந்தாள் .

அவள் வந்தவுடன் அஞ்சலி அக்கா அவளை முறைத்து பார்த்தவாறே நின்று கொண்டு ஓகே யார் இதுக்கு காரணம் என்று கேட்க சுவாதி தீடிக்கிட்டு நின்றாள்

என்னாக்கா சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியலாக்கா என்று மீண்டும் பொய் சொல்லி மறைக்க பார்த்தாள் .

அதை கேட்டு சிறிது நேரம் எதுவும் பேசமால் அமைதியாக அஞ்சலி அவளை முறைத்து பார்த்துவிட்டு என்னயே என்ன நினைச்ச வந்ததுல இருந்து நான் மூனு நாளும் வேலைக்கு போயிட்டு வந்து தூங்கி கிட்டு மட்டும் இருக்கேன்னு நினைச்சியா

இல்ல நீ சொன்னத நான் அப்பிடியே நம்பிட்டேன்னு நினைச்சியா நானும் ரெண்டு குழந்தைக பெத்தவதான் எனக்கும் தெரியும் நீ எடுக்கறது பித்த வாந்தி இல்ல கர்ப்ப வாந்தின்னு சோ ஒழுங்கா சொல்லு யாரோட இது நடந்துச்சு என அஞ்சலி கோபமாக கேட்க

சுவாதி அவர்களுக்கு பதில் ஏதும் சொல்லமால் அமைதியாக இருந்தாள்


அன்று வார இறுதி நாட்கள் என்பதால் விக்கி ரொம்ப சந்தோசமாக இருந்தான் .கடந்த ஒரு மாதமாக அப்பர்ட்மெண்டில் அங்கு tamil உள்ளவர்களோடு ஏற்பட்ட சண்டை அதன் பின் சுவாதி அவனால்தான் அவள் கர்ப்பமானள் என்பதால் அவனுக்கு ஏற்பட்ட பயம் பின் அதை அபார்சன் பண்ண முடியாது

என்று சொல்லி டாக்டரும் இவனும் போட்ட சண்டை அதன் பின் கம்பனியில் இருந்த அதிகமான வேலைப்பளு இதனால் ரொம்ப மன உளைச்சலில் இருந்தான் .
அன்று சனிகிழமை லீவ் என்பதால் மிகவும் உற்சாகத்தோடு எழுந்து போயி ஒரு இங்கிலீஷ் பாட்டை மியூசிக் ப்ளேயரில் போட்டு விட்டு ஆடி கொண்டே உற்சகமாக ஷவரில் பாட்டு பாடி கொண்டே குளித்தான் .
பின் கண்ணாடியில் போயி தலையை துவட்டி கொண்டே தன்னை கண்ணாடியில் பார்த்து தனக்கு தானே பேசி கொண்டான் அப்படா விக்கி இன்னைக்குத்தான்டா உனக்கு நிம்மதி இந்த ரெண்டு வாரமா எத்தன பிரச்சின அத எல்லாம் மறந்து பிரஷ் ஆகுற மாதிரி இந்த ரெண்டு நாளும் புதுசு புதுசா பிகர்கள கரெக்ட் பண்றோம் என்ஜாய் பண்ணி மண்டே நார்மல் ஆகுறோம் .
என்று சொல்லிவிட்டு நைட் வரைக்கும் எல்லாம் வெயிட் பண்ண வேணாம் .நம்ம இப்பயே எதாச்சும் மாலுக்கு போறோம் எவலயச்சும் பிக் ஆப் பண்றோம் .மதியத்துக்குள நம்ம மேட்ச் ஸ்டார்ட் பண்ணி கலக்குறோம் என்று சொல்லி தனக்கு தானே சிரித்து கொண்டான் .பின் உடல் முழுதும் காஸ்ட்லி சென்ட் ஒன்றை அடித்துவிட்டு நல்ல சட்டை ஒன்றை அணிந்து கொண்டு The King Is Back என்று சொல்லிவிட்டு வெளியே போனான் .
பின் அவன் நினைத்த மாதிரியே ஒரு பெரிய மாலுக்கு போனான் .போயி முதலில் ஒரு ரவுண்டு அடித்தான் .அடித்து விட்டு பின் அங்கு உள்ள கேண்டினுக்கு போனான் .சரி இங்கு இருந்து நம்ம தேடுதல் வேட்டைய பாப்போம் .என்று அங்கு முழுதும் தன் பார்வையை சுற்ற விட்டான் .ஒவ்வொருத்தியும் பார்த்து அவனுக்கு அவனே சரி இல்லை என்று சொல்லி சரி பார்த்து கொண்டான் .
இவள் என்று மனம் ஒருத்தியை காட்ட இவள் வேணாம் என்றான் அப்ப அவள் என்று இன்னொருத்தியை காட்ட ம்ம் Not Bad ஆனா புது வீட்ல வச்சு போட போற பொண்ணு ரொம்ப நல்லா இருக்கணும் என்று சொல்லி கொண்டான் .அவன் சொன்னது போல அந்த அப்பார்ட்மெண்ட்டில் சண்டை போட்டு புது வீட்டிற்கு குடி புகுந்ததில் இருந்து அவன் எந்த பெண்ணையும் அந்த வீட்டிற்கு கூப்பிட்டு வந்து போடவில்லை .அதனால் புது வீட்டிற்கு வர போகிற பெண் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான் .
பின் அங்கு முழுதும் சுற்றி பார்த்து விட்டு ம்ம் சரி இங்க எவளும் நம்ம டேஸ்ட்க்கு சிக்கல அதனால நம்ம பேசாம தியேட்டர்க்கு போவோம் .அங்க எவள் ஆச்சும் சிக்குன தியட்டேர்லே வச்சு பாதி பண்ணிட்டு அப்புறம் நம்ம புது வீட்டிற்கு போவோம் .என்று நினைத்து கொண்டு அங்கு உள்ள தியட்டேருக்கு போனான் .பின் அங்கு என்ன என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தான் .
அதை பார்த்து விட்டு என்ன படத்திற்கு போகலாம் என்று யோசித்தான் .சரி இங்கிலீஷ் படத்துக்கோ இல்ல ஹிந்தி படத்துக்கோ போக வேணாம் .ஏன்னா பாச தெரியாதவள பேசி கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு அது மட்டும் இல்லாம இந்த சுவாதிக்கு அப்புறம் தமிழ் நாட்டுக்காரி எவளையும் தொடல அதனால இன்னைக்கு எப்படியும் நம்ம புது வீட்டுக்கு ஒரு நல்ல அழகான தமிழ் நாட்டுக்காரி கூட தான் போகணும் .அதனால தமிழ் படத்துக்கே போவோம் என்று முடிவு செய்தான் .
அது என்ன பேசும் போது சுவாதிய ஞாபாகபடுத்துற அவள மறந்து இன்னைக்குதான் நிம்மதியா இருக்கேன் அது பிடிக்கலையா உனக்கு என்று தன் மனதை திட்டினான் .சரி தமிழ என்ன படம் ஓடுது என்று பார்த்தான் ,ஓகே கண்மணி ,காஞ்சனா 2 ன்னு ரெண்டு படம் ஓடுது ஒகே கண்மணி போஸ்டர பாத்தா ஏதோ லவ் படம் மாதிரி இருக்கு நமக்குத்தான் லவ்வுன்னா அலர்ஜி ஆச்சே அதனால பேய் படத்துக்கே போவோம் அப்பதான் எவளாச்சும் பயந்து போயி பக்கத்துல இருக்க நம்ம மேல விழுவா அப்படியே கரெக்ட் பண்ணி கூப்பிட்டு போயிடலாம் .
விக்கி டிக்கெட் கவுண்டர்க்கு போயி காஞ்சனா 2 பட டிக்கெட் கேட்டான் .கவுண்ட்டரில் இருந்தவன் சாரி சார் காஞ்சனா 2 சட்டர்டே சண்டேன்னு ரெண்டு நாளும் புக்கிங் ஆகி ஹவ்ஸ் பூல் ஆகிடுச்சு சார் என்றான் .பாருடா பேய் படத்துக்கு மும்பை வரைக்கும் மவுஸ் இருக்கு என்று நினைத்து கொண்டு சரி வேற என்ன தமிழ் படம் Available ஆ இருக்கு என்று கவுண்டரில் இருப்பவன்டிம் கேட்டான் .அவன் ஓகே கண்மணி மட்டும் தான் சார் இருக்கு என்றான் .
அய்யே லவ் படமா என்று நினைத்து கொண்டு வேற எதுவும் தமில் படம் இல்லையா என்று கேட்டான் .அவன் இல்ல சார் என்றான் .சரி விக்கி முயற்சிய தளர விடாத பேசாம இந்த படத்துக்கே போயி எவலயாச்சும் பிடிப்போம் என்று நினைத்து கொண்டு சரி ஓகே கண்மணியே கொடுப்பா என்று வாங்கி கொண்டு உள்ளே சென்றான் .


எல்லாம் காஞ்சனா 2 விற்கு போனதால் கூட்டம் இருக்காது என்று நினைத்து கொண்டுதான் உள்ளே போனான் .ஆனால் அது காதல் படம் என்பதால் எல்லாம் ஜோடி ஜோடியாக வந்து குவிந்து இருந்தனர் .அதை பார்த்த விக்கி கண்டிப்பா இன்னைக்கு உனக்கு எவளும் சிக்க மாட்டா எல்லாம் ஜோடிய இருக்கதுக நீ சும்மா படம் மட்டும் தான் பாத்துட்டு போக முடியும் போல சரி வா எவள் ஆச்சும் தனியா சிக்குவா அப்ப பாத்துகிருவோம் என்று நினைத்து கொண்டு படம் பார்த்தான் .
படம் ஆரம்பமானது ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் செல் போன் நம்பர் ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொண்டனர் .ம்ம் இந்த காலத்துல ஏவ இப்படி கேட்ட உடனே நம்பர் தராளுக என்ன படம் எடுத்த்ருகாங்கே என்று அந்த படத்தை மனதிற்குள்ளே திட்டினான் .அதன் பின் ஒரு சில காட்சிகளுக்கு பின் நாயகனும் நாயகியும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்தனர் .
இதுக ரெண்டு பேரும் என்ன லூசா ரெண்டு பேருக்கும் லவ் பிடிக்காலேன்னு சொல்லுதுக ஆனா ஒரே வீட்ல இருக்குங்கலாம் அது எதுக்கு தேவை இல்லாம குறிப்பா ஹீரோ வேஸ்ட் ஒரு நாள் பேசி கரெக்ட் பண்ணி மேட்டர் பண்ணனால அப்புறம் என்ன அவள அத்து விட்டுட்டு என்னையே மாதிரி டெய்லி ஒருத்திய கரெக்ட்பண்ண வேண்டியதுதானே என்று அந்த படத்தை திட்டி கொண்டு இருந்தான் .
பின் இடைவேளை வந்தது சரி போயி எதாச்சும் திங்கவாச்சும் செய்வோம் என்று வெளியே போயி சாண்ட்விச்சும் பெப்சியும் வாங்கி கொண்டு வரும் போது பின்னால் இருந்து யாரோ வேகமாக வந்து மோதினார்கள் .அதில் இவன் கொண்டு போய் கொண்டிருந்த பெப்சி இவன் சட்டை மேல் விழுந்து விக்கி சட்டை முழுதும் இரமானது அவன் கடுப்பில் எவண்டா அது என்று கோபமாக திரும்பினான் .
அங்கு ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருந்தாள் .அவள் இவனை பார்த்து சாரி சார் ஏதோ தெரியாம நடந்து போச்சு மன்னிச்சுகோங்க என்று கெஞ்சி கொண்டு இருந்தாள் .அவளை பார்த்தும் சரி இன்னைக்கு நம்ம பசிக்கு உணவு கிடச்ருச்சு என்று நினைத்து கொண்டு அவளை பார்த்தான் .அவள் சாரி சார் சாரி சார் என்று இன்னும் கெஞ்சி கொண்டு இருந்தாள் .
இவன் பரவலங்க இருக்கட்டும் என்றான் .அதை கேட்டு அவள் சார் நீங்க தமிழா என்று ஆச்சரியப்பட்டு கேட்டாள் .இவனும் சிரித்து கொண்டே என்னாங்க தமிழ்ல பேசுறேன் .தமிழ் படத்துக்கு வந்து இருக்கேன் அப்புறம் ஏன் என்னைய பாத்து இப்படி ஒரு கேள்வி கேக்குரிங்கே என்று சிரித்து கொண்டே சொன்னான் .

அவளும் சிரித்தாள் அதன் பின் அவன் சிரித்து கொண்டே By the way ஐ ஆம் விக்கி விக்னேஷ் என்றான் .அவளும் ஐ ஆம் என்று அவள் பேரை சொல்லும் முன் விக்கி போன் அடித்தது .எந்த நாய்டா இந்நேரம் போன் பண்றதுன்னு கடுப்போடு எடுத்து பார்த்தான் .அது சுவாதியிடம் இருந்து வந்தது அதை பார்த்து விக்கி மேலும் கடுப்பாகி விட்டு இவ ஏன் இன்னும் என் நிம்மதிய கெடுக்குறா என்று மெல்ல முணுமுணுத்து கொண்டே போனை கட் பண்ணினான் .
பரவல சும்மா பேசுங்க என்றாள் .அது தேவை இல்லாத காலுங்க நீங்க சொல்லுங்க என்றான் அசடு வழிந்து கொண்டே .அவள் மறுபடியும் ஐ ஆம் என்று ஆரம்பிக்கும் முன் மீண்டும் விக்கி போன் அடித்தது .அதை பார்த்த அந்த பெண் நீங்க போயி பேசிட்டு வாங்க எதாச்சும் முக்கியமான போனா இருக்க போகுது என்றாள் .சரி வேற வழி இல்ல எடுத்து தொலைவோம் என்று நினைத்து கொண்டு அவளை விட்டு சிறிது தொலைவு போயி போனை எடுத்தான் .

என்ன சுவாதி நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் அப்புறம் கூப்பிடு என்றான் .எனக்கு தெரியும் நீ மீட்டிங்ல இல்லன்னு எத ஆச்சும் மால் இல்லாட்டி கிளப்ல இருப்ப அதனால நான் சொல்றத கேளு என்றாள் .அது இருக்கட்டும் நான் மீட்டிங்ல இல்லன்னு உனக்கு எப்படி தெரியும் என்றான் .கழுத கேட்டா குட்டி சுவரு இன்னைக்கு சனி கிழமை அதனால கண்டிப்பா எவலாயச்சும் தேடி எங்கயாச்சும் போயிருப்ப என்றாள் கடுப்போடு .

கரெக்ட் சுவாதி இப்ப கூட நீ பேசாட்டி ஒருத்திய பிக் ஆப் பண்ணிருப்பேன் .நீதான் கெடுத்துட்ட என்றான் .சரி நீ எவள வேணும்னாலும் பிக் ஆப் பண்ணி ஏங்க வேணும்னாலும் போயி எதாச்சும் பண்ணு ஆனா சாயங்காலம் ஒரு 5 மணி போல என்னையே பார்க்ல வந்து பாரு என்றாள் சுவாதி.

எதுக்கு உன்னையே வந்து பாக்கணும் நாந்தான் அன்னைக்கே நமக்குள்ள எதுவும் வேணாம்னு சொன்னேன்லே அப்புறம் என்ன இன்னும் என்றான் ஒன்னும் இல்ல ஒரு சின்ன விஷயம் என்றாள் .ஒரு விசயமும் வேணாம் தாயி என்னையே ஆள விடு என்றான் .இல்ல விக்கி என்று அவள் சொல்ல வரும் முன் ஹே சுவாதி நம்ம அப்புறம் பேசுவோம் நான் பாத்து பேசிகிட்டு இருந்த பொண்ண காணோம் ம்ம் இன்டர்வெல் வேற முடிஞ்சுடுச்சு நான் உள்ள போயி அவள தேடி பாக்குறேன் என்று அவள் போனை கட் பண்ணிவிட்டு உள்ளே சென்றான் விக்கி .

அங்கு சுவாதி அஞ்சலியிடம் சொன்னாள் இதலாம் சரியா வராதுக்கா அவன் இதுக்கு எல்லாம் ஒத்துக்கிற மாட்டான் என்றாள் .

நான் சொல்ற மாதிரி சொல்லு எல்லாம் சரியா வரும் .அப்புறம் இத விட்டா வேற வழியும் இல்ல உனக்கு என்றாள் அஞ்சலி .


அதன் பின் இடைவேளை முடிந்து படம் பாக்க உள்ளே போனான் விக்கி .அவன் படம் பார்க்கமால் தான் வெளியே அவன் பார்த்த பெண்ணை உள்ளே தேடி கொண்டு இருந்தான் .

தியேட்டர் இருட்டில் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை .அதன் பின் சே இந்த சுவாதி ஏன் எப்ப பாத்தாலும் எதையாச்சும் என்கிட்ட இருந்து புடிங்கிகிட்டே இருக்கா என்று அவளை மனதில் திட்டிக்கொண்டே படத்தை வெறுப்போடு பார்த்தான் .
பின் படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் தாங்கள் காதலை சொல்லி கொண்டு கல்யாணம் பண்ணி கொள்வார்கள் .ஆமா எல்லா படத்துலயும் கடைசில அந்த லவ்ல விளுந்துருங்கடா என்று திட்டிவிட்டு எழுந்து போனான் .வெளியே அந்த பெண் வருவாள் என்று காத்துகொண்டு இருந்தான் .
அவன் எதிர்பார்த்தது போல அந்த பெண் வந்தாள் .அப்பா நினைச்ச மாதிரியே வந்துட்டாடா என்று அவளை பார்த்து பல்லை காட்டி கொண்டு இருந்தான் .
ஹாய் சாரிங்க அப்ப போன் வந்ததனால சரியா பேச முடியல என்றான் பரவல இருக்கட்டும்ங்க என்றாள் /இன்னும் நீங்க உங்க பேர சொல்லவே இல்ல என்று கேட்டான் .அவள் ஒரு நிமிசம் என்று யாரையோ எதிர்பார்த்து கொண்டு இருந்தாள் .யாருக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா ஒரு வேலை இவளோட பிரண்டுன்னா அவளையும் கரெக்ட் பண்ணி அன்னைக்கு மாதிரி திரிசம் போடுவோம் என்று மனதில் நினைத்து இவனும் எதிர்பார்த்து கொண்டு இருந்தான் .
பின் அவள் ஒரு பையனை கூப்பிட்டு இவருதான் என் பாய் பிரண்ட் ரமேஷ் என்றாள் .அதை பார்த்து கடுப்பாகி கொண்டு மனதிலே விளங்கும் என்றான் .அப்புறம் என் பேரு கீரித்தி என்றாள் .இனி மேல் உன் பேரு கீரித்தியா இருந்தா என்ன ஸ்ரீ திவ்யாவ இருந்த என்ன என்று அவளையும் மனதிற்குள் திட்டிக்கொண்டு Nice metting Both of you என்று பொய்யாக சிரித்து கை குலுக்கி விட்டு அவர்களை விட்டு உடனே பிரிந்து வெளியே சென்றான் .
இன்னும் நம்ம Bad luck நம்மள விட்டு போகல போல என்று நினைத்து கொண்டு வெளியே காரில் போயி கடுப்போடு உக்காந்தான் .சரி பாட்டாச்சும் கேப்போம் என்று காரில் உள்ள ஏப் எம்மை தட்டினான் .

ஹலோ மும்பை இது உங்க பேவரைட் ப்ரோக்ராம் காதல் காதல் நான் உங்க ஆர் ஜே பிரியா வாங்க நம்ம முத காலர் பாப்போம் .வணக்கம் யார் பேசுறது

மேடம் நான் பிரபாகர் பேசுறேன் ஏன்னா மேடம் மூனு நாளா நீங்களே பேசுறிங்க எங்க மேடம் சுவாதி மேடத்த என்று கேட்டவுடன் கண்களை மூடி இருந்த விக்கி எழுந்து கேட்டான் .பரவ இல்ல அந்த லூசுக்கு ரசிகர்களாம் இருக்கா என்று நினைத்து சிரித்து கொண்டான் .அதன் பின் ரேடியோவில் அவளுக்கு பதில் பேசும் ஆர்ஜே அவங்க ஒரு வாரம் டைபாய்டு காய்ச்சல் வந்து இருக்காங்க சீக்கிரமே அவங்க குணமாகி வந்து உங்க கிட்ட பேசுவாங்க சரி நீங்க சொல்லுங்க உங்க காதல பத்தி என்று அந்த ப்ரோக்ராம் போனது .
ம்ம் என்ன இதுல அவளுக்கு உடம்புக்கு முடியல நாலு அஞ்சு நாளா வரலன்னு சொல்றாங்கே எங்கிட்டும் அபார்சென் பண்ணதுல அவளுக்கு ஏதும் செப்டிக் ஆகிடுச்சா ஒரு வேலை அதுக்குதான் கூப்பிட்டாலா ஐயோ அப்படி ஏதும் செப்டிக் ஆகி அவ மண்டைய போட்டுட்டுனா அவ பாடிய post moderm பண்ணி நம்மள கண்டுபிடிசுடுவாங்கேலே
போஸ்ட் மார்டம் கூட தேவை இல்ல ரெண்டு மூனு ஆஸ்பத்திரில நாம்தான் புருசன்னு பேரே கொடுத்துருக்கோம் .அது மட்டும் இல்லாம நாம சண்டை போட்ட அந்த கிழவியே நம்மள மாட்டி கொடுத்துடும் .ஜெயில்க்கு போனா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது .எவளையும் போட முடியாது அங்க இருக்க ரவுடிகதான் நம்மள போடுவாங்கே ஐயோ இப்ப என்ன பண்ண
சரி அவ என்னதான் சொல்ல வரான்னு கேப்போம் என்று போன் அடித்தான் .போன் அடித்ததும் அவள் எடுத்தாள் .ஹலோ விக்கி என்றாள் .என்ன போன் போட்ட உடனே எடுக்குற என் போன்குக்காக தான் வெயிட் பண்ணியா என்றான்
ம்ம் அப்படி இல்ல நான் யார் போன் போட்டாலும் உடனே போன் எடுத்து ரிசபன்ஸ் பண்ணிடுவேன் ஏன்னா எதிர்ல இருக்குவங்க ஒரு வேலை எதாச்சும் கஷ்டத்துலயோ இல்ல ஏதும் எமர்ஜென்சிலையோ இருக்கலாம் .அதனால நான் என்னைக்கும் யார் போனையும் உன்னையே மாதிரி avoid பண்ண மாட்டேன் .
ஓகே மேடம் நீங்க நல்ல பாலிசி வச்சுகோங்க அதுக்குன்னு என்னையே என் டெமஜ் பண்றீங்க என்றான் .சரி எதுக்கு கூப்பிட்ட என்றாள் .எதுக்கு கூப்பிட்டியா ஏண்டி நீதானா என்கிட்ட பேசணும்னு எனக்கு போன் பண்ண என்றான் .
ஆமா சார் ஏதோ ஒரு பொண்ணு கூட மீட்டிங்கல பிஸியா இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் என்றாள் .ம்ம் மீட்டிங் இப்பதான் முடிஞ்சுச்சு என்றான் .ஏன் அந்த பொண்ணு வேற ஒருத்தனோட ஆளா என்றாள் .எப்படி நம்மள பத்தி எல்லாம் இப்படி கரெக்ட்டா கெஸ் பண்றா என்று மனதில் நினைத்து கொண்டான் .அதலாம் இல்ல அந்த பொண்ணு என் டேஸ்ட்க்கு இல்ல என்றான் அவளிடிம் .
ம்ம் ஓகே நம்பிட்டேன் என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .ஓகே ஓட்டனது போதும் என்ன மேட்டர் அத சொல்லு சீக்கிரமா என்றான் .அத போன்ல சொல்ல முடியாது நேர்லதான் சொல்ல முடியும் அதனால அஞ்சு மணிக்கு பார்க் வா என்றாள் .
பார்க்குக்கு எல்லாம் என்னால வர முடியாது எதுவா இருந்தாலும் போன்லேயே சொல்லு என்றான் .அது முடியாது நீ நேர்ல வா ரொம்ப முக்கியமான விஷயம் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டாள் .விக்கி ஹலோ ஹலோ என்று கத்தி கொண்டு இருந்தான் 


சரி போயி தொலைவோம் எத்தனையோ பேர போட்ருக்கோம் ஆனா இவள போட்டுதான் ரொம்ப கஷ்டப்படுறோம் .கவர்மெண்ட் சொல்றத கேட்டு இனி மேல் எவளவு போதைல இருந்தாலும் காண்டம் மட்டும் மறக்காம வாங்கிரனும் .
அதன் பின் அவள் சொன்ன பார்க்கிற்கு போனான் .அவளும் வந்தாள் .ஹாய் விக்கி ஹாய் சுவாதி என்று சொல்லிவிட்டு இருவரும் சிறு நொடிகள் அமைதியாக இருந்தனர் .
ஒகே சுவாதி உன் உடம்புக்கு எதுவும் ஆகலலெ அபார்சென் பண்ணதால என கேட்டான் .அவள் அவனை முறைத்து பார்த்து விட்டு ஒன்னும் பேசமால் இருந்தாள் .என்ன சுவாதி சொல்லு உனக்கு ஒன்னும் இல்லல என மறுபடியும் கேட்டான் .
எனக்கு ஒன்னும் இல்ல விக்கி நீ வந்து உக்காரு நான் உன்கிட்ட நிறைய பேசணும் என்றாள் .அப்புறம் உனக்கு உடம்புக்கு முடியலன்னு நீ வேலை பாக்குற ஏப் எம்ல சொன்னாங்க .நாந்தான் ஒரு வேலை விசயமா ஒரு ஒரு வாரம் மெடிக்கல் லீவ் எடுத்துருக்கேன் என்றாள்
சரி சொல்லு ஆனா அன்னைக்கு மாதிரி எதுவும் அதிர்ச்சி ஆகுற மாதிரி சொல்லிராத என்று சிரித்து கொண்டே சொன்னான் .விக்கி நான் இன்னும் கொஞ்ச நாள்ல கனடா போயிடுவேன் .அதை கேட்டு ரொம்ப சந்தோசம் என்றான் .சரி சொல்றத கேளு விக்கு என்றாள் சரி சொல்லு என்றான் அங்க எங்க அக்கா எனக்கு வேலையும் பாத்து வச்சுருக்காங்க .அங்க போயிட்டேனா அப்புறம் செத்தா கூட நான் இந்தியா வர மாட்டேன் .
ஓகே அப்புறம் என்றான் .ஆனா எனக்கு இன்னும் பாஸ்போர்ட் விசா எதுவும் வரல என்றாள் ஒ நான் வேணும்னா அதுக்கு ஹெல்ப் பண்ணவா இல்ல money எதுவும் வேணுமா என்றான் .
உன் ஹெல்ப் வேணும் ஆனா இந்த ஹெல்ப் எல்லாம் வேணாம் வேற ஒரு ஹெல்ப் வேணும் என்றாள் .என்ன ஹெல்ப் வேணும் என்றான் .அது வந்து வந்து என்று தயங்கினாள் தயங்காம சொல்லு எந்த ஹெல்ப்னாலும் உனக்கு பண்றேன் என்றான் .நிஜமாத்தான் சொல்றியா என்றாள் .உன்னையே நாட்ட விட்டு அனுப்புறதுக்கு என்ன வேணும்னாலும் நான் பண்ணுவேண்டி இம்சை என்று நினைத்து கொண்டே சுயர் எதுனாலும் சொல்லு என்றான் .
விக்கி நான் கனடா போற வரைக்கும் என்னால என் ரூம்ல தங்க முடியாது .ஏன் என்ன ஆச்சு எதுவும் money ப்ரோப்லமா என்றான் .பணம் மட்டுமே பிராப்ளம்னு நினைக்காத விக்கி என்றாள் கடுப்போடு ,
சரி வேற என்ன பிராப்ளம் என்றான் .அவள் அது என்று தயங்கி கொண்டே இருந்தாள் .எதுவும் ஹொஸ்டல் வார்டன் கூட சண்ட போட்டியா என்றான் .அவள் இல்லை என்றாள் .வேற வசதி எதுவும் பத்தலையா என்றான் .இல்லை என்றாள் .அவன் கடுப்பாகி என்னதான் பிராப்ளம் சொல்லி தொல என்றான் .

அவளும் கடுப்பாகி அங்க பிரகன்ட் ஆனவாங்கள வச்சு இருக்க மாட்டங்க என்றாள் .என்னது நீ மறுபடியும் கர்ப்பமா இருக்கியா இந்த வட்டம் யார் காரணம் என்றான் புரியாமல் .

அவளுக்கு ரொம்ப எரிச்சலாகி போனது விக்கி நான் இன்னும் அபார்சன் பன்னல என்றாள் .வாட் என்றான் அதிரிச்சியோடு

ஏண்டி ஏன் பண்ணல அந்த ஆஸ்பத்திரிலயும் பண்ண முடியாதுன்னு சொல்லிருந்தா வேற ஆஸ்பத்திரிக்கு போயிருக்க வேண்டியதுதானே ஏன் இன்னும் அத சுமந்துகிட்டு இருக்க என்றான் .

என்னால எந்த ஆஸ்பத்திரிலயும் போயி பண்ண முடியாது என்றாள் .ஏண்டி இத வச்சு என்னையே மிரட்டி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்குறியா என்றான் .சுவாதி கடுப்பாகி சரி இது உன் குழந்தை இல்லை போதுமா என்றாள் .
உடனே விக்கி சந்தோசமாக சிரித்து கொண்டே அவள் கிட்ட போயி நிஜமாவே இது என் குழந்தை இல்லையா என்றான் .


எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்ன இங்கயே கொன்னு போட்ரலாம்னு இருக்கு என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே ஆமா இது உன் குழந்தை இல்ல என்றாள் .

அப்புறம் இது யார் குழந்தை என்று சிரித்து கொண்டே கேட்டான் .ம்ம் என் குழந்தை என்றாள் .ஓகே ஓகே இது உன் குழந்தைதான் ஆனா இதுக்கு அப்பா யாரு என்றான் .அதுவும் நான்தான் என்றாள் .என்னடி குழப்புற உன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்றான் .என் கர்ப்பத்துக்கு நீதான் காரணம் என்றாள் .

என்ன நீ வாழப்பழ காமெடி பண்ணிகிருக்க இத வச்சு என்னையே டென்ஷன் ஆக்காத என்றான் .இங்க பாரு விக்கி இது யாரு குழந்தையா வேணும்னாலும் இருந்துட்டு போட்டும் .இப்பதைக்கு இது என் குழந்தை இப்ப மேட்டர் அது இல்ல .

அப்ப என்னது என்றான் .ஓகே விக்கி நான் சொல்றத கவனமா கேளு .என்னால வயத்த தள்ளி கிட்டு ஹாஸ்டல் இருக்க முடியாது அதனால ஒரு 13 மாசத்துக்கு உன் கூட உன் வீட்ல இருந்துக்கிறேன் என்றாள் .

என்னது என் கூட என் வீட்ல இருக்க போறியா என்ன சுவாதி எனக்கு முன்னாடி போயி ஓகே கண்மணி படம் பாத்துட்டு வந்துட்டியா ஒண்ணா இருப்போம் மண்ணா போவோம்ன்னு பினாத்திகிட்டு இருக்க என்று அவளை கிண்டல் அடித்தான் .

இங்க பாரு விக்கி நான் சிரியஸா சொல்றேன் எனக்கு மும்பைல தங்க வேற இடம் தெரியாது அதே நேரத்துல கர்ப்பத்தோட என்னால பிளைட்ல போக முடியாது அதனால நான் குழந்தைய பெத்துட்டு ஒரு 3 மாசத்துல அதுக்கும் பாஸ் போர்ட் விசா எல்லாம் எடுத்துட்டு அத கூப்பிட்டு நான் கனடா போயிடுவேன் .உன் கண்லையே படமாட்டேன் சோ ப்ளிஸ் என்றாள் .

அதுக்குத்தான் உன்னையே அபார்சன் பண்ண சொன்னேன் என்றான் .இத பாரு விக்கி இது உன் குழந்தை ஒன்னும் இல்ல நீ அபார்சன் பண்ண சொல்றதுக்கு இது என் குழந்தை அதனால அத பத்தி நான்தான் முடிவு எடுக்கணும் என்றாள் .

சரி என்னமும் பண்ணு ஆனா என் கூட தங்க வைக்க முடியாது உன்னையே என்றான் .


என்னால உன்னையே என் கூட தங்க வைக்க முடியாது என்றான் விக்கி .அவள் பொறுமையாக இங்க பாரு விக்கி நான் உன்னையே என்னையே கல்யாணம் பண்ண சொல்லல என் குழந்தைக்கு உன்ன அப்பானவும் இருக்க சொல்லல .

உன்கிட்ட எதுவும் பணமும் கேக்கல .உன் கூட ஒரு 13 மாசம் உன் வீட்ல தங்கணும்னு கேக்குறேன் ப்ளிஸ் அதுக்கு மட்டும் ஒத்துக்கோ என்று கெஞ்சினாள் .
ஹே என்ன விளையாடுறியா என்னையே பத்தி உனக்கு தெரியும்ல அப்புறம் ஏன் என் கூட தங்கணும்ங்கிற என்றான் .இங்க பாரு விக்கி எனக்கு வேற வழி இல்ல .உனக்கே தெரியும் எனக்கு மும்பைல உங்க குரூப் தவிர வேற யாரையும் தெரியாது .உங்க குரூப்க்கு அப்புறம் தெரிஞ்சவங்கலாம் என் ஹாஸ்டல் தான் இருக்காங்க .
அப்புறம் என்ன அவங்களோட போயி தனியா ரூம் எடுத்து தங்க வேண்டியதுதானே என்றான் .நான் கேட்டுட்டேன் அவங்கலுக்கு தனியா ரூம் எடுக்க பயம் அதனால என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதான் உன்ன கேக்குறேன் என்றாள் .
வெயிட்ஒரு நிமிஷம் எனக்கு புரிஞ்சு போச்சு நீ என் கூட இருந்து என்னையே மயக்கி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்குற கரெக்ட் தானே என்றான் .அவள் மூச்சை இழுத்து விட்டு இங்க பாரு விக்கி நீயே என்னையே லவ் பண்றேன் கல்யாணாம் பண்ணிகொன்னு வந்தாலும் நான் உன்ன கல்யாணாம் பண்ணிக்க மாட்டேன்
எனக்கு ஆம்பிளைகனாலே எரிச்சாலா இருக்கு என்றாள் சுவாதி .ஏன் லெஸ்பியனா மாறிட்டியா என்று சொல்லி சிரித்தான் .அவள் கடுப்பாகி விட்டு You know viki You are a Moran என்றாள் .அவன் அதை கேட்டு yes I am என்றான் சிரித்து கொண்டே
சரி விடு நான் முடிவா உன்கிட்ட கேக்குறேன் என்னையே உன் கூட தங்க வைக்க முடியுமா முடியாதா என கேட்டாள் .முடியவே முடியாது சான்சே இல்ல என்றான் .
சரி இனி இவன் கிட்ட சாப்டா பேசி யூஸ் இல்ல அஞ்சலி அக்கா சொன்னத சொல்லித்தான் இவன வழிக்கு கொண்டு வரணும் என்று நினைத்து கொண்டே ஓகே விக்கி உனக்கு எப்பவுமே அடுத்தவங்கள ஹர்ட் பண்ற மாதிரி பேசிதானே பழக்கம்
இல்லையே நான் ஹர்ட் பண்ற மாதிரி எப்பவும் பேச மாட்டேன் கரெக்ட் பண்ற மாதிரி பேசித்தான் பழக்கம் என்று சொல்லி அவளை பார்த்து கண் அடித்தான் .


சரி விக்கி நான் இப்ப உன்னையே நான் ஹர்ட் பண்ற மாதிரி கொஞ்சம் பேசுறேன் என்றாள் .பேசு என்றான் .
இத நீ ப்ளாக்மெயிலா கூட எடுத்துக்கோ அத பத்தி எனக்கு கவலை இல்லை .என்னையே உன் வீட்ல தங்க வைக்காட்டி நான் போலிஸ் கிட்ட போவேன் ,
அது என் வீடு என் வீட்ல தங்க வைக்கறதும் தங்க வைக்கதாதும் என் உரிமை அதுக்கு போலிஸ் கோர்ட்ன்னு யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்றான் ,
அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது .ஆனா நான் சொல்ற மாதிரி சொன்னா நீ சென்ட்ரல் ஜெயில்தான் அடுத்த நிமிஷம் இருப்ப என்றாள் .என்ன சொல்ல வர்ற ஒன்னும் புரியல என்றான் .
விக்கி நான் போயி நீ என்னையே கெடுத்துட்ட அதனால நான் கர்ப்பமா இருக்கேன் அப்படின்னு சொல்ல போறேன் .
இது என்ன உங்க ஊர் கட்ட பஞ்சயாத்துன்னு நினைச்சியா கெடுத்தவனுக்கே கல்யாணாம் பண்ணி வைக்க என்றான் விக்கி .
கல்யாணம்லாம் பண்ணி வைக்க மாட்டாங்க .ஆனா உன் கிட்ட இருந்து என் குழந்தைய வளக்க அமௌன்ட்ம் அப்புறம் உன்னையே தூக்கி ஜெயில ஆயுள் தண்டனை கைதியாவும் ஆக்கிருவாங்க .அது மட்டும் இல்லாம நீ இந்தியா முழுக்க பேமஸ் ஆகிடுவ .எல்லா பொண்ணுகளும் உன்னையே தூக்குல போட சொல்லி பொம்பளைக எல்லாரும் உனக்கு எதிரா போராடுவாங்க .நீ ஜாமீன்ல வெளிய வந்தா கூட ஒருத்தியாவும் கரெக்ட் பண்ண முடியாது .
என்று அவள் சொல்லி கொண்டு இருக்க விக்கி பேய் அறைந்தது போல இருந்தான் ,விக்கி விக்கி என்று அவனை எழுப்பினாள் .
விக்கி எல்லாத்துக்கும் மேல இந்த குழந்தை யாருதுன்னு கேட்டு கிட்டே இருக்கேளே என்றாள் .அவன் ஆம் என்பதை போல தலை மட்டும் ஆட்டினான் .
நான் போயி போலிஸ் கம்பளைன் கொடுத்தா அவங்களே DNA test எடுத்து குழந்தை உன்னது தானா இல்லையான்னு கண்டுபிடிச்சு சொல்லுவாங்க .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக