கல்லூரி முதுகலை இறுதியாண்டில் இருந்த வசந்த் இளங்களை முதல் ஆண்டில் சேர்ந்திருக்கும் ரம்யாவை கவனித்தான். ராகிங் களைகட்டி நடந்து கொண்டிருந்தபோது அவளுடைய நீளமான முடி அவனை கவர்ந்தது.

அவளை அழைத்து ராகிங் செய்து பயமுறுத்தினான். அவனுடைய கம்பீரமான குரலும் தோற்றமும் ரம்யாவை பணிய வைத்தது. அவளுடைய முடியை ரசித்துக்கொண்டே அவளை கலாட்டா செய்வான். வசந்த் ரம்யாவை ராகிங் செய்வது முதல்நாளோடு நின்றுவிடவில்லை. அடிக்கடி அவளை வம்பிழுப்பான். கல்லூரியில் வசந்த் ரம்யாவை ராகிங் செய்ய அழைத்து ஏதேனும் செய்ய சொல்வான். அவள் தயங்கினால், அவளின் பின்னால் சென்று அவளுடைய ஜடையை கையில் எடுத்து “உன்னோட முடியை கட் பண்ணிடலாமா?” என மிரட்டுவதுபோல கேட்பான். அவளும் எங்கே அவளுடைய முடியை கட் பண்ணி விடுவானோ என பயந்து அவன் சொல்வதை செய்வாள். அவள் செய்து முடித்த பின் அவளை அழைத்து “உன்னோட முடி அழகா இருக்கு.. பயப்படாத.. உன்னோட முடியை கட் பண்ணல” என்று சிரித்துக்கொண்டே அனுப்பி வைப்பான். நாட்கள் செல்ல செல்ல நிறைய சின்ன சின்ன விஷயங்களுக்குகூட அவளுடைய முடியை வெட்டி விடுவதாக கூறி பணிய வைப்பான். ஒரு கட்டத்தில் இருவருக்குமே அது விளையாட்டாக மாறிப்போனது. சில நேரங்களில் ரம்யா அவளாகவே வந்து, “சீனியர், நாளைக்கு நான் இதை செய்யலைனா.. நீங்க என்னோட முடியை வெட்டிக்கோங்க” என்று சொல்லுவாள். ஆனால் சொன்னதை செய்துவிடுவாள். ஆனால் வசந்த் அவளை வம்புக்கு இழுப்பான். “இன்னைக்கு உன்னோட முடி என்கிட்ட இருந்து தப்பிச்சுருச்சு.. ஆனால் கண்டிப்பா ஒருநாள் உன்னோட முடியை கட் பண்ணுவேன்” என்று சீண்டுவான். ராகிங் போன்ற வெறுப்பேற்றும் வேலைகளை எப்போதுமே செய்துகொண்டிருந்தாலும் அந்த சீனியர் ஜூனியர் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. அந்த ஓராண்டு முடிந்ததும் வசந்த் கல்லூரியை விட்டு கிளம்பிக்கொண்டிருந்தான். விடுதியில் அவன் தன்னுடைய அறையில் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். அப்போது ரம்யா அங்கே வந்தாள்.

ரம்யா:என்ன சீனியர்… என்கிட்ட சொல்லாம கிளம்பிட்டீங்களா?
வசந்த்:(அவளை மீண்டும் வம்புக்கு இழுத்தான்). ஆமா கிளம்பிட்டேன்… உன்மேல கோவம்.. அதான் எதுவுமே சொல்லல
ரம்யா: என்ன ஆச்சு சீனியர்.. என்மேல என்ன கோவம்?
வசந்த்: மத்த டிபார்ட்மென்ட்-ல எல்லாம் சீனியர்க்கு நினைவுப்பரிசு கொடுத்து அனுப்பி இருக்காங்க.. நீ என்ன பரிசு கொண்டு வந்த?
ரம்யா: அவ்ளோதானா சீனியர்… உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க.. கண்டிப்பா தரேன்
வசந்த்: உனக்கு என்னை ஒரு வருஷமா தெரியும்.. எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா?
ரம்யா: அய்யோ நீங்க எப்பொவும் என்னை மிரட்டிகிட்டே இருப்பீங்க.. அதுல இருந்து உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு எப்படி தெரியும். எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு என்னை அழுக வைக்கிறது பிடிக்கும்.
வசந்த்: எனக்கு உன்னோட நீளமான முடி தான் பிடிக்கும்
ரம்யா: என்னோட முடியா…என்கிட்ட சொல்லவே இல்ல. நான் உங்களுக்கு என்னோட முடி நீளமா இருக்கிறது பிடிக்காதுனு நினைச்சேன்.
வசந்த்: ஏன் அப்படி நினைச்ச?
ரம்யா: பின்ன எப்போ பார்த்தாலும் என்னோட முடியை கட் பண்ணி விடப்போறேன்னு சொல்வீங்களே…
வசந்த்: ஆமா… எனக்கு பிடிச்சிருக்கு…. அதான் கட் பண்ணி நான் எடுத்துக்க போறேன்னு சொன்னேன்.
ரம்யா: ஹாஹா… ஆசை தான்…
வசந்த்: சரி… நீ ஒண்ணும் தர வேணாம்… கிளம்பு… இனிமேல் என்கிட்ட பேசாத..
ரம்யா: கோவீச்சுக்காதிங்க சீனியர்…. இப்போ என்ன வேணும் உங்களுக்கு…
வசந்த்: சரி… இப்படி வா.. இங்க உட்காரு.

ரம்யா அங்கு சென்று அமர்ந்தாள். வசந்த் அருகில் வந்தான். முதல் முறையாக ரம்யாவின் மிக அருகில் வந்தான். வழக்கமாக வசந்த் அருகில் வந்தால் இருக்கும் பயம் இப்போது ரம்யாவிடம் இல்லை. அவளுடைய உச்சந்தலையில் கைவைத்து மெல்ல அவளுடைய முடியை தடவினான். ரம்யாவிற்கு வசந்த் செய்வது புதுமையாக இருந்தது. மெல்ல அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடையை கையில் எடுத்து தடவிப்பார்த்துக்கொண்டே வந்தான். ஜடையின் அடிப்பகுதியை பிடித்ததும், அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். ரம்யா அதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இனிமேல் வசந்த்தை எப்போது பார்ப்போம் என்பது தெரியாது அதனால், கடைசியாக ஒருமுறை அவனுக்கு பிடித்ததுபோல அவளுடைய முடியை தொட்டுப்பார்க்கட்டுமே என அமைதியாக இருந்தாள். அதுமட்டும் இல்லாமல் இப்போது தான் முதல் முறையாக அவளுடைய முடியை பிடிக்கும் என நேரடியாக கூறியிருக்கிறான். அதனால் தன்னுடைய தலைமுடியை வசந்த் கையில் கொடுத்துவிட்டு அவனை கவனித்துக்கொண்டிருந்தாள் ரம்யா. அவளுடைய தலைமுடியை அவிழ்த்து விட்டு கோதிவிட ஆரம்பித்தான். அவள் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னுடைய பாக்கட்டில் இருந்து ஒரு கத்தரிக்கோலை எடுத்தான்.

வசந்த் கையில் கத்தரிக்கோலை எடுத்ததை பார்த்து ரம்யா அதிர்ச்சியானாள். உண்மையிலேயே வசந்த் அவள் முடியை இப்போது வெட்டப்போகிறான் என உணர்ந்தாள். வசந்த் ஒரு கையில் அவள் தலைமுடியை சேர்த்து இறுக்கி பிடித்தான். இன்னொரு கையால் கத்தரிக்கோலை அவள் முடியின் அருகே கொண்டு வந்தான். ரம்யா பதறிப்போனாள். அவள் கண்கள் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. “வேணாம் சீனியர்.. என்னோட முடியை வெட்டாதிங்க.. ப்ளீஸ்” என கதறினாள். ஆனால் வசந்த் நிறுத்தவில்லை. கத்தரிக்கோலை அவளுடைய கழுத்தின் அருகில் வைத்தான். “வேண்டாம்” என கத்திக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள் ரம்யா. இன்னும் சில நொடிகளில் தொடைவரை இருக்கும் அவளுடைய அழகிய தலைமுடி வெட்டப்படபோகிறது என முடிவுக்கு வந்தாள். திடீரென இறுக்கிப்பிடித்திருந்த அவளுடைய தலைமுடி தளர்வாக மாறுவதை உணர்ந்தாள். கண்களை திறந்தபோது வசந்த் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் கைகளில் கத்தரிக்கோல் இல்லை. விளையாட்டாக அவளை வம்பிழுத்ததாக கூறி அவள் கண்களை துடைத்து விட்டான். பின்னர் அவள் அருகில் அமர்ந்தான். அவளை அழ வைத்ததற்கு மன்னிப்பு கேட்டான். இனிமேல் அவளை சீண்டிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் இப்படி விளையாடியதாக கூறினான்.
ரம்யா சற்று சமாதானமானாள். அவளை மென்மையாக கட்டி அணைத்தான். பின்னர் கடந்த ஒரு ஒரு வருடமாக அவள் மனது புண்படும்படியாக வம்பிழுத்து அழவைத்ததற்கு மன்னிப்பு கூறினான். அவள் பரிசு எதுவும் கொடுக்கவில்லை என்றாலும், அவன் அவளுக்காக ஒரு பரிசு வைத்திருப்பதாக கூறினான். ரம்யா இதை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. பின்னர் அவள் கையில் ஒரு போட்டோ ஆல்பத்தை கொடுத்தான். ரம்யா அதை திறந்து பார்த்து வியந்துபோனால். வசந்த் கல்லூரி விழாக்களில் போட்டோ எடுக்கும்போதெல்லாம் அவளையும் போட்டோ எடுத்திருக்கிறானா என எதிர்பார்த்து ஏமாந்து இருக்கிறாள். ஆனால் அவளுக்கு தெரியாமல் அவன் ரம்யாவை எடுத்த அழகான புகைப்படங்களை ஒரு ஆல்பமாக தயாரித்து வைத்திருந்தான். அவள் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. அதிலும் அவளுடைய நீளமான தலைமுடி அழகாக இருக்குமாறு நிறைய படங்கள் இருந்தது. ரம்யா கண்களில் இப்போது ஆனந்தகண்ணீர் எட்டிப்பார்த்தது. அவள் வசந்த்தை கட்டிப்பிடித்துக்கொண்டாள். இருவரும் சிறிது நேரம் மனம்விட்டு பேசினார்கள். அதன்பின் வசந்த் அங்கிருந்து கிளம்பினான்.
சில ஆண்டுகள் கடந்தது. வளர்ந்து வரும் அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் கண்ணாடி கதவுகளை திறந்துகொண்டு மிடுக்காக நடந்து வந்தான் வசந்த். 29 வயதுதான் என்றாலும் சமீபத்தில் அந்த நிறுவனத்தின் மேலாளராக பதவியில் அமர்த்தப்பட்டான். மிகவும் திறமைசாலி. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் வசந்த், அலுவலகத்திலும் எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவான். தன்னுடைய வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அவனுக்கு கீழே வேலை செய்பவர்களின் இடத்திற்கு சென்று கவனிப்பான். அவர்களை வேலை செய்ய உற்சாக படுத்துவான். எல்லோருக்கும் தேவைப்படும் உதவிகளை செய்வான். வசந்த் இருக்கும் இடம் எப்போதும் சுறுசுறுப்பு மற்றும் கலகலப்பாக இருக்கும். அனைவரும் அறியாத ஒரே விஷயம் அவன் ஒரு என்பது. அலுவலகத்தில் உள்ள பெண்களிடம் பேசுவதுபோல நின்று அவர்களுடைய தலைமுடியை அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் தலைமுடியை புகைப்படம் எடுப்பான். சில நேரங்களில் வீடியோகூட எடுப்பான். ஆனால் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்வான்.
அவனை மிகவும் கவர்ந்த சில பெண்கள் நந்தினி, ஷைலஜா மற்றும் ரம்யா. நீளமான கூந்தலால் அவனை கவரும் நாகரீக மங்கைகள். இவர்களில் ரம்யா வசந்தின் கல்லூரியில் அவனுடைய ஜூனியர். இதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்கிறாள்.

கல்லூரி காலத்தில் இருந்ததை போலவே இன்னமும் நீளமான முடியை பராமரிக்கிறாள். ஜடைபின்னாமல் அவிழ்த்து விட்டால் அவளுடைய முடி முழங்கால்களை தொடும். ரம்யாவை அங்கே பார்த்ததும் இருவருக்குமே வியப்பு மற்றும் மகிழ்ச்சி. அவனைப்பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டுவிட்டு அவனைபார்த்து சிரிப்பாள். வசந்த் அவள் என்ன சம்பவத்தை நினைவு கூறுகிறாள் என்று புரிந்து கொண்டு சைகையாலேயே விரல்களை வைத்து “முடியை கட் பண்ணிடுவேன்” என்று சொல்லி பதிலுக்கு சிரிப்பான்.கல்லூரியில் அவளுடைய கூந்தலுக்காகவே அவளை அழைத்து பேசுவான். ரம்யா வேலை நேரம் போக மீதி நேரங்களிலும், அவனை தனியாக சந்திக்கும் போதும் வசந்த்தை “சீனியர்” என்றே அழைப்பாள். மற்ற நேரங்களில் “ஸார்” என அழைப்பாள்.
நந்தினி , வயது 28. திருமணமான இளம் பெண். ஐந்து ஆண்டுகளாக பணியில் இருக்கிறாள். தொடை வரை நீளமான ஜடை பின்னிக்கொண்டு அலுவலகத்திற்கு வரும் அழகு மங்கை.

நான்கு ஆண்டுகளாக திருமணத்திற்கு காத்திருந்து வேறு வழியின்றி தன்னுடைய உறவுக்காரன் ஒருவனை திருமணம் செய்தாள். அவளுடைய கணவன் சமீபத்தில் வேலை இழந்து வீட்டில் இருக்கிறான். அதனாலேயே மாலை நேரங்களில் ஓவர்டைம் பார்த்து அதிகமாக சம்பளம் பெற விரும்புகிறாள். இதே வேலைக்கு வெளியில் சம்பளம் கம்மியாக இருப்பதால் இன்னமும் இதே நிறுவனத்தில் தொடருகிறாள். இவளுடைய இருக்கை வசந்த் இருக்கும் கண்ணாடி அறைக்கு எதிரே இருப்பதால், இவளுடைய தலைமுடியை அடிக்கடி ரசிப்பான். சில நேரங்களில் வசந்த் இவளுடைய பின்புறம் நின்று ரசிப்பதை கவனித்து இருக்கிறாள். ஆனால் அவன் அவளுடைய தலைமுடியை மட்டும் தான் ரசிக்கிறான் என்பதை சில நாட்கள் கழித்துதான் புரிந்து கொண்டாள். தன்னுடைய தலைமுடியை வைத்து இவனை சமாளித்து விடலாம் என அவளுக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.
ஷைலஜா, வயது 34. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய். கணவன் இல்லை. தனியாக இருக்கிறாள். வயது ஏறினாலும் தனது உடற்கட்டை சரியாக கவனித்துக்கொள்வாள்.

அடர்த்தியான தன்னுடைய தலைமுடியை பின்புட்டம் வரை நீளமாக வளர்த்து வைத்திருந்தாள். மிருதுவாக பட்டுப்போல இருக்கும் அவளுடைய தலைமுடி, வளைவு நெளிவு இல்லாமல் நேராக இருக்கும். இன்னும் சற்று நிறமாக இருந்திருந்தால், ஷைலஜா ஏதாவது ஷாம்பூ விளம்பரத்திற்கு மாடலாக சென்றிருப்பாள். அவ்வளவு அழகான தலைமுடிக்கு சொந்தக்காரி. கணவனை இழந்த சில நாட்களில் தனக்கு தொந்தரவு செய்யும் ஆண்களை தவிர்ப்பதற்காக அவளுடைய நீளமான முடியை மொட்டை அடித்துக்கொண்டாள். சுமார் ஒன்றரை ஆண்டுகள் மாதமொருமுறை மொட்டை அடித்துக்கொள்வாள். பின்னர் அலுவலகத்தில் உள்ள மற்ற தோழிகள் அறிவுரை கூறி உதவியாக மாறியபின் மொட்டை அடிப்பதை நிறுத்திக்கொண்டாள். இப்போது தன்னுடைய முடியை மீண்டும் நீளமாக வளர்த்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்கிறாள்.
ரம்யா, ஷைலஜா இருவரும் “Marketing & Sales” பிரிவில் வேலை செய்தனர். நந்தினி “Accounting” பிரிவில் வேலை செய்கிறாள். அந்த நிறுவனத்தின் “Inventory” தனியாக இருந்தது. “Inventory” மற்றும் “Accounting” பிரிவின் ஒருங்கிணைப்பாளராக பார்த்திபன் இருந்தார். பன்னிரெண்டு ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணி புரிக்கிறார். ஒரு சாதாரண மேற்பார்வையாளராக சேர்ந்து இன்று இந்த பதவியில் இருக்கிறார் பார்த்திபன்.பார்த்திபனுக்கு வயது 37. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தன்னைவிட பத்து வயது சிறிய அத்தைமகளை திருமணம் செய்து கொண்டார்.
வசந்த் வேலைக்கு சேர்ந்து ஐந்து மாதங்கள் ஆகியிருந்தது. முதல் இரண்டு மாதங்களில் கம்பனியின் ஒவ்வொருவரையும் அழைத்து பேசி, அவர்களின் தினசரி வேலைகளையும், அலுவல்களையும் ஆராய்ந்து பின்னர் சில மாற்றங்களை செய்தான். அடுத்த காலாண்டு ஆச்சரியமூட்டும் வகையில் லாபமடைந்து இருந்தது. அவனுடைய உயர் அதிகாரிகள் அவனை அழைத்து வெகுவாக பாராட்டினார்கள். இதேபோல் தொடர்ந்து லாபம் அதிகரிக்க வைத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு ஒரு உயர் பதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். வசந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். ஆனாலும், அவன் எதிர்பாத்ததை விட சில லட்சங்கள் குறைவாக லாபம் இருந்ததால் சற்று குழம்பியிருந்தான். எனினும் அடுத்த காலாண்டு இலக்கை முடிவு செய்து வேலையை துவங்கினான்.
வசந்த் தன்னுடைய அறையில் இருந்து தற்செயலாக பார்த்தபோது நந்தினி எழுந்து திரும்பி நின்று அருகில் இருந்த மேஜையில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

அவளுடைய நீளமான ஜடை அவன் கண்களுக்கு விருந்தாக தெரிந்தது. அவளுடைய தலைமுடி அவனுக்குள் போதை ஏற்றுவதுபோல இருந்தது. சில நேரங்களில் தெரிந்தே நந்தினி அவன் முன்னால் தன்னுடைய தலைமுடியை அவன் கண்களில் படுவதுபோல செயல்படுவாள். நந்தினியை பொறுத்தவரையில் அவளுடைய கூந்தல் வசந்த்தை கவர்ந்து திசை திருப்பும் ஒரு கேடயம். தலைமுடியை ஆயுதமாக வைத்திருந்தாள். சிறிது நேரம் அவள் முடியை ரசித்துக்கொண்டிருந்த வசந்த் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் மீண்டும் வேலையை பார்க்க துவங்கினான்.
இடையில் பார்த்திபன் அந்த அலுவலகத்திற்கு வந்தார். ” Accounting” பிரிவில் இருந்த நந்தினியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் பேசும்போது அவர் ஏதோ சொல்ல நந்தினி சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். பார்த்திபன் மீண்டும் ஏதோ சொல்ல நந்தினி தன்னுடைய ஜடையை கையில் எடுத்து தடவிப்பார்த்துக்கொண்டே அவளுடைய முடியை கவனித்தாள். பார்த்திபன் நந்தினியின் அருகில் நின்று கொண்டு அவளுடைய உச்சந்தலையில் தலைமுடியை சீவி குத்தியிருந்த ஹேர்பின்களையும், அவள் ஜடை பின்னியிருந்த அழகையும் ரசித்துக்கொண்டிருந்தார். வசந்த் இதை அவனுடைய அறையில் இருந்து கவனித்தான். ஒரு வேலை பார்த்திபனும் தன்னைப்போலவே Hair Fetish ஆக இருப்பாரோ என யோசித்தான். பார்த்திபன் அங்கிருந்து சென்றதும் நந்தினி தன்னுடைய முடியை பின்னால் எடுத்துப்போட்டு தன்னுடைய வேலையை பார்க்க துவங்கினாள். பார்த்திபனுக்கும் நந்தினிக்கும் இடையில் ஏதோ ஒரு விஷயத்திற்கு நந்தினியின் தலைமுடி பாலமாக இருக்கிறது என வசந்த் புரிந்து கொண்டான்.
ரம்யா ஷைலஜாவின் பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறாள். இந்த அலுவலகம் வந்த பின்னர் ஒரே பிரிவில் வேலை செய்வதால், இருவருக்கும் ஒரு நல்ல நட்பு இருந்தது. ரம்யா ஷைலஜாவை அக்கா என்றுதான் அழைப்பாள். மாலை வேலை நேரம் முடிந்து கிளம்பி தன்னுடைய அறையை விட்டு வசந்த் வெளியே வந்தபோது ரம்யாவும் கிளம்பி வந்து கொண்டிருந்தாள். நந்தினி ஓவர்டைம் பார்ப்பதாக கூறி இன்னமும் அவளுடைய இருக்கையிலேயே இருந்தாள். “ஓகே சீனியர்…. நாளைக்கு பார்க்கலாம்” என ரம்யா சிரித்துக்கொண்டே செல்வதை நந்தினி கவனித்தாள். ரம்யா கல்லூரியில் வசந்த்தின் ஜூனியரா என மனத்திற்குள் நினைத்துக்கொண்டாள். ஏதோ ஒரு பெரிய ராணுவ ரசகசியத்தை தெரிந்துகொண்டதுபோல மனத்திற்குள் ஒரு மகிழ்ச்சி. வசந்த் ஓரிரண்டு நிமிடங்கள் கழித்து அங்கிருந்து கிளம்பினான். போகும்போது நந்தினியை பார்த்து ஒரு புன்னகையை தவழவிட்டு சென்றான். அவன் சென்றபின் போனை எடுத்து யாருக்கோ சுழட்டினாள். யாரும் இல்லாத நேரத்தில் அலுவலக போனை தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவாள் நந்தினி. இன்றும் அதே கதை தொடர்ந்தது. வசந்த் அலுவலக வாசலுக்கு வந்தபோது அங்கே ரம்யா திருதிருவென முழித்துக்கொண்டு நின்றிருந்தாள். எதற்காக இப்படி நிற்கிறாள் என புரியாமல் வசந்த் அவளருகே சென்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக