http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : காவியாவின் பயணம் - பகுதி - 3

பக்கங்கள்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

காவியாவின் பயணம் - பகுதி - 3

காவியா கவனமாக அதை பார்த்து சில இடங்களில் நூர்ஜஹானிடம் விளக்கங்கள்கேட்டுகொண்டாள்.அது முடிய அரைமணி எடுத்தது.முடிந்தவுடன் ஜெய்தீப்காவியா நிச்சயமாக இப்போ ஒரு இடைவேளை தேவை என்று தெரியும் வாங்க ஒரு கப்காபிக்கு என்று சொல்லி அவளை பக்கத்தில் இருந்த சோபாவில் அமர செய்ய அடுத்துரெண்டு பெண்கள் ஒரு ட்ராலியை தள்ளி கொண்டு வர அதில் ஸ்டீமிங் காபிஇருந்தது பக்கத்திலேயே ஒரு மிக உயர்ந்த மது பாட்டில் ஐஸ் ஜாடி மேல்வைத்திருந்தது. அந்த பெண்கள் காவியாவிடம் அவளின் விருப்பம் எது என்றுமிகவும் அடக்கமாக கேட்க காவியா ரெண்டு பப்ப் கிரீன் டீ எடுத்து கொள்ளஜெய்தீப் ஒரு ஸ்மால் எடுத்து கொண்டார். இந்த பிரேக் முடிந்து மீண்டும்இருவரும் அவர்கள் டிஸ்கஷனை தொடர்ந்து இந்த முறை புள்ளி விவரங்களுடன் பேசிமுடித்தனர்.காவியா முடிவுரையாக அவள் பங்கிற்கு ஜெய்தீப் கூறிய பலவிஷங்களுக்கு பொருத்தமான விளக்கங்களைதந்து அதற்கான மேலும் விவரமானவிளக்கங்களை அவளது மேல் அதிகாரிகளுடன் கலந்து பேசி அவருக்கு தெரிவிப்பதாகஉறுதி அளித்தாள். அவள் கூறியதை ஜெய்தீப் நுணுக்கமாக கேட்டு அவள் பேசிமுடிந்த பிறகு அவர் "காவியா நீங்கள் இன்று நிச்சயமாக உங்கள் அலசல்களால்என்னை பெரிதும் கவர்ந்து இருக்கறீர்கள் உண்மையை சொல்லனும்னா இதற்கு முன்இதை மாதிரி ஒரு முயற்சியில் உங்கள் சாரி நம்பலுடைய வங்கி முயற்சித்த போதுஅது என்னை கன்வின்ஸ் பண்ண வில்லை.ஆனால் இந்த முறை உங்களுடையவாக்குறுதிகள் அதை நீங்கள் எடுத்து வைத்த விதம் எனக்குநிச்சயமாக ஒருதாகத்தை ஏற்படுத்தி உள்ளது இட்ஸ் எ குட் ஸ்டார்ட் லெட்ஸ் ஹோப் பார் திபெஸ்ட் என்று சொல்லி நொவ் தி மீட் இஸ் அப்பிஷியல்லி ஓவர் ப்ளீஸ் ஜாயின் மீபார் டின்னெர் என்றார். காவியா தேங்க்ஸ் பார் தி இன்விடஷன் ஐ அம் ஹானர்ட்என்று சொல்லி அவள் அதை சம்மதித்தாள்


அவள் எதிர்பார்த்தது அந்த ஹோடேலில் தான் டின்னெர் இருக்கும் என்று ஆனால் ஜெய்தீப் அவளை அழைத்து கொண்டு ஹோட்டல் வெளியே செல்ல காவியா கொஞ்சம் புரியாமல் நடக்க ஜெய்தீப் காவியா உங்க குழப்பம் புரிகிறது டின்னெர் என் வீட்டில் ஏற்பாடு பண்ணி இருக்கேன் அதில் நீங்கள் கலந்து கொண்டு என்னை கௌரவ படுத்தனும் என்று சொல்ல காவியா சரி என்று ஒத்துகொண்டாள். ஜெய்தீப் கார் போர்டிகோவில் வந்து நிற்க அது ஒரு வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் மாடல் கார் . டிரைவர் இறங்கி கதவை திறக்க காவியா அங்கே ரெண்டு இருக்கைகள் தான் இருப்பதை பார்த்து கேள்வியோடு பார்க்க அதற்கு ஜெய்தீப் விடை சொல்லும் விதமாக டிரைவரிடம் சாவியை வாங்கி கொள்ள அவள் புரிந்து கொண்டாள் வேறு வழி இன்றி ஸ்டீரிங் அடுத்து இருந்த இருக்கையில் உட்கார ஜெய்தீப் ஸ்டீரிங் முன் இருந்த இருக்கையில் ஏறி அமர்ந்து காரை வேகமாக செலுத்திவெளியே சென்றார். உள்ளே வீசி கொண்டிருந்த குளிர் காற்றில் பரவும் சென்ட் வாசம் காவியாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜெய்தீப் கொஞ்ச தூரம் சென்றதும் காவியா என் சென்னை வீடு பக்கத்தில் போட் கிளப் ஏரியாவில் இருக்கு என்று கூறினார். ரெண்டு திருப்பங்கள் சென்ற பிறகு ஒரு பெரிய கதவுகள் கொண்ட காம்போண்டு உள்ளே சென்றது காவியா எதிரே தெரிந்த வீட்டை பார்த்து உண்மையிலே ஆச்சரிய பட்டாள். இந்த மாதிரி வீடு சென்னையில் இது வரை பார்த்ததே இல்லை. கார் போர்டிகோவில் நிற்க கதவை ஒரு மிக அழகான ஸ்லிம்மான காவியாவை விட உயரமாக இருக்கும் ஒரு பெண் கதவை திறந்து வெல்கம் ஹோம் காவியா என்று சொல்ல காவியா புன்னகைத்து தேங்க்ஸ் என்று சொல்லி அவளை சம்ப்ரதாய முறையில் ஹக் பண்ணினாள். பக்கத்தில் ஒரு குட்டி பெண் நிற்க காவியா அவளை தூக்கி கணத்தில் முத்தமிட்டு ஹலோ சொல்ல அந்த குழந்தை காவியாவின் கன்னத்தில் முத்தமிட்டு ஹலோ ஆன்டி என்று சொல்ல காவியா சிரித்து ஹலோ செல்லம் உன் பெயர் என்ன என்று கேட்க அந்த குழந்தை சுனந்தா என்றது.


எல்லோரும் உள்ளே செல்ல காவியாவின் பிரமிப்பு அதிகமாகி கொண்டே இருந்தது. வீட்டை மிகுந்த கலைநயத்துடன் படோபாபம் இல்லாமல் இருந்தது வீடு. காவியாவை அமர செய்து அவள் பக்கத்தில் அமர்ந்தாள் அத பெண். காவியா அவள் பக்கம் திரும்பி உங்க பேர் நான் சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்று நாசுக்காக அவள் பேரை கேட்க அந்த பெண் ஒ சாரி நான் என் பெயரை சொல்லவேயில்லை நான் மிச்செஸ் தனுஜா ஜெய்தீப் என்று சொல்ல காவியா ஹலோ தனுஜா நான் கிளம்பறதுக்கு முன்னே உங்ககிட்டே இருந்து ஒரு ரகசியத்தை தெரிஞ்சுகாமல் போக மாட்டேன் என்று சொல்ல அவள் என்ன என்று கேட்கும் விதத்தில் அவள் காவியாவை பார்க்க காவியா நீங்க ஜிம்முக்கு எப்போதாவது போவிங்களா இல்லை ஜிம்மிலிருந்து வீட்டுக்கு எப்போதாவது வருவிங்களா என்று கேட்க தனுஜா சிறிது கொண்டு காவியாவை கன்னத்தில் தட்டி நான் இந்த ஒரு வாரத்தில் ரெண்டு கிலோ அதிகமாகி இருக்கேன் அதனால் நான் கவலையோடு இருக்கேன் நீங்க வேறே என்னை கிண்டல் பண்ணறிங்க என்று திருப்பி சொல்ல இருவரும் பலமாக சிரித்தனர். உள்ளே சென்ற ஜெய்தீப் டிரஸ் மாற்றி தூய வெள்ளை பைஜாமா ஜிப்பா போட்டு வந்தார். அவர் தோளில் அமர்ந்து சவாரி செய்து வந்தாள் வாண்டு சுனந்தா. ஜெய்தீப் அவர் மனைவியிடம் டின்னெர் ரெடியா என்று கேட்டு அவள் எஸ் கம் என்று சொல்லி சுனந்தா பிரிங் காவியா ஆண்டி வித் யு போர் டின்னெர் என்று சொல்ல வாண்டு காவியாவின் புடவையை இழுத்து கம் ஆண்டி என்று மழலையில் அழைத்தது

காவியா ஒன்றை கவனித்தாள் காரில் ஏறினதில் இருந்து இது வரை ஜெய்தீப் பிஸ்னெஸ் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. அந்த பண்பு அவளை ரொம்ப கவர்ந்தது. டின்னெர் சாப்பிடும் போது ஜோக் அடித்து கொண்டும் அவர் மனைவியை வம்பு பண்ணி கொண்டும் குழந்தையை கொஞ்சிகொண்டும் அந்த சுழலை கலகலப்பாகி கொண்டிருந்தார் அதற்கு தகுந்த விதத்தில் அவர் மனைவியும் பங்களித்தார். காவியா இந்த இடத்தில புதியவள் என்பதை மறந்து அவளும் ஜோக்குகளும் கிண்டல்களும் பண்ண ஆரம்பித்தாள். டின்னெர் முடிய ஒரு மணி நேரம் மேல் ஆனது. டின்னெர் டேபில்லேயே தூங்கிவிட்டாள். ஜெய்தீப் அதை பார்த்து தான் டின்னெர் முடித்து கையை கழுவி குழந்தையை அரவணைத்து தூக்கி உள்ளே கொண்டு போய் படுக்க வைத்து வந்தார். காவியா கிளம்ப தயாரானதும் ஜெய்தீப் அவள் வீடு எங்கே என்று கேட்டு அங்கே இருந்த வேலையாளிடம் டிரைவரை அழைத்து வர சொன்னார். டிரைவர் வந்ததும் அவனிடம் தகுந்த கட்டளைகளை குடுத்து காவியாவிடம் ரொம்ப நன்றி காவியா நான் உங்க திறமையையும் உங்கள் பங்களிப்பையும் பெரிதும் பாராட்டுகிறேன். உங்களை மாதிரி இளம் நபர்கள் எங்கள் நிறுவனத்திற்கு ரொம்ப அவசியம் உங்கள் வங்கி உங்களை தேர்ந்தெடுத்தால் அது எங்கள் நிறுவனத்திற்கு இழப்பு என்று சொல்லி கொண்டிருக்கும் போதே தனுஜா கையில் ஒரு பெரிய கிபிட் எடுத்துவந்து காவியாவிடம் குடுக்க காவியா கொஞ்சம் சங்கடபட்டாள்.ஒரு கஸ்டமரிடம் பரிசு பொருள் வாங்குவது வங்கி விதிகளில் தவறு என்று இருக்கு ஆனால் இந்த இடத்தில் ஜெய்தீப் அவர்கள் பிஸ்னெஸ் மீட் போது அதை தரவில்லை அதற்கு பிறகு அவர் குடுத்த தனிப்பட்ட டின்னெர் முடிந்து அவர் மனைவி குடுக்கும் பரிசை வாங்குவதில் தவறில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து அதை வாங்கி பக்கத்தில் வைத்து தனுஜாவை ஹக் பண்ணி நன்றி என்று சொல்லி திஸ் இஸ் அன் இவினிங் ஐ வில் நாட் பார்கெட் போர் எ வெரி லாங் டைம் ஐ வெரி மச் என்ஜாயிடு தி டின்னெர் என்று சொல்லி ஜெய்தீப் கையை குலுக்கி விடை பெற்றாள்.

காவியா நேரத்தை பார்த்து இதற்கு மேல் ஸ்டெல்லாவை தொந்தரவு செய்ய கூடாது என்று டிரைவரிடம் அண்ணா நகர் அட்ரஸ் குடுத்தாள். போகும் வழியில் அன்றைய மீட்டிங் பற்றி யோசித்துக்கொண்டு வந்தாள். வீடு வந்ததும் அவள் இறங்க டிரைவர் ஓடி வந்து கதவை திறந்து நின்று அவள் உடமைகளை எடுத்து இறங்க முயற்சிக்க டிரைவர் மேடம் அதை நான் எடுத்து வருகிறேன் என்று பணிவுடன் சொன்னான். காவியா இறங்கியதும் டிரைவர் அவள் உடமைகளை எடுத்து கொண்டு அவள் பின் தொடர்ந்து வீட்டை திறந்து உள்ளே அவள் சென்றதும் அவன் அதை அங்கே வைத்து அவள் சொல்லும் வரை காத்திருந்தான். காவியா அவனிடம் நீங்க கிளம்புங்கள் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து உள்ளே வந்தாள்.

அன்று இரவு காவியா தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது அதற்கு காரணங்கள் இரண்டு அவள் தனியாக உறங்க போகும் முதல் இரவு மேலும் இன்று அவளுக்கு ஏற்பட்ட அனுபவம்.. காவியா தூக்கம் வராததால் அவள் லாப்டாப்பை எடுத்து அன்று அவள் எடுத்திருந்த ஜெய்தீப் நிறுவனத்தின் கோரிக்கைகள் பற்றி மீண்டும் அலசினாள். ஜெய்தீப் முன் நிறுத்தி இருந்த அணைத்து விருப்பங்களும் நியாயமானவை ஒரு வெற்றிகரமான நிறுவனத்தின் உறுதியான எதிர்பார்ப்புகள் மறுக்க கூடியவை அல்ல. இருந்தும் இதை அவள் எவ்வாறு அவள் மேல் அதிகாரிகளுக்கு எடுத்து வைப்பது அவர்களை கன்வின்ஸ் பண்ணுவது எப்படி என்று யோசிக்க துவங்கினாள். அவளுக்கு சரியென்று தோன்றிய குறிப்புகளை கவனமாக எழுதிக்கொண்டாள். அதே சமயம் வங்கிக்கு எந்த வகையில் அவை உதவும் அல்லது வங்கியின் வரைமுறைகளை அவை மீறுகின்றன என்று விவரமாக ஒரு பட்டியல் தயாரித்தாள். அவளுக்கே உரிய மதிப்பெண் வழங்கும் முறையை இதிலும் கையாண்டு அந்த பட்டியல் ஒரு முழுமை பெரும் போது அவள் நிச்சயம் அவளால் அவள் மேல் அதிகாரிகளை சம்மதிக்க வைக்க முடியும் என்று புரிந்து கொண்டாள். ஒரு வழியாக அவள் அந்த ரிபோர்டை முடித்து நேரம் பார்த்த போது மணி அதிகாலை என்று காட்டியது. இது வரை அவள் அலுவலக வேலைகளை வீட்டில் இவ்வளுவு நேரம் செய்தது இல்லை ஆனாலும் இன்று அவளுக்கே அவள் செய்த முயற்சி ஒரு மகிழ்வை அளித்தது.
காவியா அதற்கு மேல் தூங்குவது நடக்காது என்று உணர்ந்து காப்பி போட்டு எடுத்துக்கொண்டு ரொம்ப நாளைக்கு பிறகு அவள் படுக்கை அறையில் வைத்திருந்த டி வி டி கலக்க்ஷனை துருவி அவளுக்கு பிடித்த ஒரு ஆங்கில ரோமன்ஸ் படத்தை எடுத்துக்கொண்டு ஹாலில் இருந்த டி வி டி யில் போட்டு பார்க்க ஆரம்பித்தாள். முதல் சில நிமிடங்கள் ஓட விட்டாள். அந்த படத்தின் கதா பாத்திரங்கள் முதலில் அவர்களின் தொடல்களை ஆரம்பிக்கும் காட்சிகள் அவளுக்கு மிகவும் பிடித்தவை அவை விரசமில்லாமல் அதே சமயம் தேவையான அளவு சுவாரஸ்யத்துடன் எடுக்க பட்டிருக்கும் இந்த காட்சிகளை அவள் எத்தனை முறை பார்த்தாலும் அவளுக்கு அவை ஒரு விதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். மேற்க்கத்தியற்கு செக்ஸ் ஒரு பொழுது போக்கு அவர்கள் செக்ஸ் ஐ கலையாக அனுபவிப்பதில்லை என்பது பொதுவான கருத்து ஆனால் இந்த படத்தில் பௌர் ப்ளே என்று ஆங்கிலத்தில் சொல்ல்வார்களே அதை மிக இயற்கையாக அதற்கான இலக்கணத்துடன் அதை புரியாதவர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் படம் பிடித்திருப்பார்கள். காவியா அந்த சில காட்சிகளை ரிவைண்ட் பண்ணி பார்ப்பது வாடிக்கை அதுவும் அர்ஜுன் இருக்கும் போது ரிவைண்ட் செய்து அர்ஜுனை அவ்வாறு செய்ய சொல்லி அவள் பல முறை வற்புறுத்தி இருக்கிறாள். இன்று தான் அவள் தனியாக இந்த படத்தை காவியா பார்க்கிறாள். ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. பார்க்கும் போது அவளுக்கு சில ஆண் உருவங்கள் அவள் முன் நிழல் ஆட அவளையும் மீறி அந்த மிக சிலரில் யார் இந்த முறையை ஒரு அளவுக்கு பின்பற்றுகிறார்கள் என்று கணிக்க ஆரம்பித்தாள். அதில் வெற்றி பெற்றது உண்மைய ஒத்துகொள்ள வேண்டும் என்றால் அது சித்தார்த் தான்.
சித்தார்த் நினைவு வந்தவுடன் காவியாவிற்கு அவளுடையதனிமை வலித்தது. ஆண்கள் தனிமையை விரும்பும் போது பெண்களுக்கு மட்டும் அந்ததனிமை ஒரு இடற்பாடாகவே இருக்கே ஏன் என்று கேட்டுகொண்டாள் காவியா அவள்வார்ட்ரோம்பை திறந்து அவள் சித்தார்த் கூட இருந்த அந்த முதல் இரவில் அவள்அணிந்த உடையை தேடினாள் அது அடியில் இருக்க காவியா அதை எடுத்து பார்த்துஅவள் மேல் போர்த்தி கொண்டு கண்ணாடி முன் கொஞ்ச நேரம் நின்றாள். பிறகு அவளுக்கே அது சின்ன குழந்தை தனமா இருந்ததால் அவள் அந்த உடையை மீண்டும் பீரோக்குள் வைத்தாள். ச்சே தனியா இருந்தா இப்படி ஏன் மனம் அலையுது இதை வளர விட கூடாது என்று யோசித்து டவர் பார்க் போய் சும்மா ஒரு வாக் பண்ணி வரலாம் சென்று முடிவு பண்ணி கிளம்பினாள்.
அந்த பார்க்கில் அதற்குள் நெறைய கப்பில்ஸ் ஜாகிங் வாகிங் பண்ணி கொண்டிருந்தார்கள். பெண்கள் தனியா யாரும் வரவில்லை இவள் தான் இருந்தாள். காவியா நடக்க ஆரம்பிக்க கொஞ்ச தூரத்தில் அவள் பின் ஒரு வந்து கொண்டிருந்ததை காவியா கவனித்தாள் ஆனால் அதை பற்றி பெரிதும் யோசிக்காமல் அவள் நடந்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவன் அவள் பக்கத்திலேயே நடந்தான் அதை மற்றவர்கள் பார்பதற்கு இருவரும் ஒன்றாக நடை பயிற்சி பண்ணுவதாக தோன்றும். காவியா இப்போ கொஞ்சம் பின் தங்கி நடக்க அவனும் அவன் வேகத்தை குறைத்து நடந்தான். காவியாவிற்கு புரிந்தது அவன் அவளை வம்புக்கு இழுக்க முயல்கிறான் என்று காவியா அவனை உதாசீன படுத்த முடிவுக்கு வந்து அருகே இருந்த புல்வெளியில் அமர்ந்தாள். அவன் கொஞ்ச தூரம் நடந்து மீண்டும் இவள் இருந்த இடத்திற்கு அருகே வந்து வேறு பக்கம் பார்த்து நின்றான்.


காவியா இதற்கு மேல் இதை வளர விட கூடாது என்று அவனை ஹலோ என்று அழைத்தாள் அவன் திரும்பி பார்கவில்லை மீண்டும் அழைத்தும் அவன் திரும்பவில்லை அடுத்த முறை அவள் அழைக்க நடந்து கொண்டிருந்த ஒருவர் இவள் அழைப்பதை பார்த்து அவனிடம் அதை சொல்ல அவன் திரும்பி பார்த்து சொல்லுங்க மேடம் என்றான். இல்லை உங்களை எனக்கு தெரியாது நீங்க ஒன்று என்னை பின் தொடர்ந்து வரிங்க இல்ல நான் இருக்கும் இடத்தில் நிற்கறீர்கள் அது தான் ஏன் என்று கேட்பதற்கு கூப்பிட்டேன் என்றாள். அவன் அருகே வந்து மேடம் நானும் நீங்க இருக்க அதே அபர்த்மெனில் தான் இருக்கேன் நீங்க A ப்ளாக்ல இருக்கீங்க நான் C ப்ளாக் உங்களை நான் இங்கே பார்த்ததே இல்லையே அது தான் கேட்கலாமா கூடாத என்று யோசித்து கொண்டிருந்தேன். சாரி மேடம் என்று அருகே வந்தான். காவியா வேறு வழி இல்லாமல் அவன் பேரை கேட்க அவன் விஷால் என்று சொன்னான். அவள் புன்னகைத்து காவியா என்று சொல்ல அவன் உங்க பெயர் தெரியாமலா உங்க ப்ளாக் சொன்னேன் என்று இளிக்க அவள் விஷால் என்ன பண்ணறிங்க என்றாள். நான் ஆப்பிள் கம்பெனியில் சென்னை சேல்ஸ் பார்த்துகிறேன் இதற்கு முன் துபாயில் இருந்தேன் சென்னை வந்து ஒரு வருடம் ஆகிறது. மேடம் எனக்கு சின்ன ஹெஅழ்த் ப்ராப்ளம் என்று சொல்ல காவியா உண்மையிலே கொஞ்சம் அக்கறையுடன் என்ன என்று கேட்க என்னால் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது என்று சொல்ல காவியா அந்த ஜோக்கை ரசித்து எழுந்து மீண்டும் நடந்தாள் இந்த முறை விஷாலுடன் பேசிக்கொண்டு.
இருவரும் நடந்து கொண்டு பேசிக்கொண்டே செல்ல அவன் மேடம் ஒரு நிமிஷம் என்று சொல்லி அருகே இந்த ஒரு சைக்கில் வாலா அருகே சென்றான். திரும்பி கையில் ரெண்டு பிளாஸ்டிக் டம்ப்ளரை எடுத்து வந்தான். காவியா என்ன இது என்று கேட்க அருகம்புல் சாறு என்று சொல்லி அவள் கையில் ஒரு டம்பளரை நீட்ட காவியா இல்லை வேண்டாம் நான் இது வரை இதை குடித்தது இல்லை என்று சொல்ல விஷால் மேடம் இதை குடிப்பதால் பெண்கள் மேலும் பளிச்சென்று ஆவார்கள் என்று இதை விற்பவன் தினமும் கூவி விற்பான் அது என்ன பெண்கள் மட்டும் பளிச்சென்று ஆவது என்று நானும் தினமும் வாங்கி குடிக்கறேன் ஒரு பத்து நாளா என்று சொல்ல அவன் சமயோசிதத்தை ரசித்து வேறு வழி இல்லாமல் அவனிடம் இருந்து வாங்கி குடிக்க முயற்சிக்க அவளுக்கு அதில் இருந்த கசப்பு பிடிக்கவில்லை குடிப்பது போல் பாசாங்கு செய்து டம்பளரை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டாள். மணி என்ன என்று பார்க்க அவள் கையை பார்க்க அவள் வாச் அணியவில்லை என்று பார்த்தாள். அவள் பண்ணுவதை பார்த்து மேடம் மணி இப்போ ஆறு முப்பது என்றான். காவியா அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவன் கவனிக்கறான் என்று உணர்ந்தாள். அவள் சரி மிஸ்டர் விஷால் நான் கிளம்பறேன் என்று சொல்லி கிளம்ப அவன் மேடம் என் காரில் மொத்தம் ஐந்து பேர் போகலாம் ஆனால் நான் தனியாக தான் போகிறேன் அதனால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மீதம் உள்ள நான்கு இருக்கையில் ஒன்றிற்காவது அதிர்ஷ்டம் கிடைக்கட்டுமே என்றான் காவியாவிற்கு அவனின் அணுகுமுறை பிடித்து போக அவள் அவனுடன் காரில் ஏறினாள்.
காரில் அவளும் விஷாலும் அவர்கள் இருந்தஅபர்த்மெனில் இருந்த பல விதமான ஆட்களை பற்றி பேசி கிண்டல் பண்ணி பேசினார்.வீடு வந்ததும் காவியா இறங்கி தான்க் யு என்று சொல்லி அவள் வீட்டுக்குசென்றாள்.குளித்து பிரேக் பாஸ்ட் முடித்து வங்கி செல்ல தயாராக இருக்கடிரைவர் வர காவியா வழக்கம் போல் சென்றாள்.அவள்உள்ளே நுழையும்போது AGM உள்ளே வர காவியா அவருக்கு விஷ் பண்ணி அவள் இருக்கைக்கு சென்றாள்.கொஞ்ச நேரத்தில் அகம் ஸ்டெனோ அவளை அழைத்து AGM நேற்று ஜெய்தீப் மீட்டிங்பற்றி பெபெர்களை எடுத்து வர சொன்னத்ஹக சொல்ல காவியா அனைத்தையும் எடுத்து AGM காபின் சென்றாள் அங்கே ஏற்கனவே சீப் மேனேஜர் அமர்ந்திருந்தார்.

காவியா இருவரையும் விஷ் செய்து நேராக விவரங்களை விவரிக்க ஆரம்பித்தாள் அந்தநிறுவனங்களின் எதிர்பார்ப்பு அதற்கு பேங்க் அளிக்க கூடிய தீர்வுகள் என்றுஇரண்டையும் அடுத்து அடுத்து சொல்லி முழுமையான ஒரு ரிப்போர்டை அளித்தாள்.இருவரும் அவள் முடிக்கும் வரை நடுவே எதுவும் குறிக்கிடாமல் இருந்தனர். அவள்முடித்ததும் சீப் மேனேஜர் சில புள்ளி விவரங்களை எடுத்து அதில் பேங்க்இற்குஏற்ற மாதிரி மாற்றி குடுக்க முடியுமா என்று காவியாவை கேட்க காவியா அவர்கூறிய திருத்தங்களை அவள் கணனியில் குறித்து கொண்டாள். மேலும் மேனேஜர்பேசுகையில் இந்த குழுமத்தின் அணைத்து நிறுவனங்களும் நம் வங்கிக்கு வருவதால்வங்கிக்கு ஏற்பட கூடிய வேலை பளு கிடைக்க கூடிய அதிக வருமானம் அவர்கள்எதிர்பார்க்கும் துரித சேவை இவை பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்றுசொல்லி முடித்தார். AGM இந்த குழுமம் முழுமையா நம் வங்கிக்கு வர வேண்டும்என்பது தான் நம் கார்ப்பரேட் எதிர்பார்ப்பு ஆகவே அவர்கள் வருவதால் நமக்குஏற்படக்கூடிய வேலை சும்மையை பற்றி அதிகம் கவலை படாமல் இருப்பது அவசியம்என்று ஆரம்பித்து அவர் பல விஷயங்களை அலசி இறுதியில் காவியாவிடம் காவியா இதைஉங்கள் திறமைக்கு சவாலாக அளிக்கின்றேன் இன்று சனிகிழமை உங்களால் இந்தப்ரோபோசலை புதன்அன்று மும்பை கூட்டத்தில் உங்களால் ஒரு முழமையான ஏற்றுகொள்ளகூடிய விவரங்களுடன் சமர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்.காவியாஅவரிடம் முடியும் என்று சொல்லவதற்கு முன் அவளே இதை முழுமையாக மீண்டும் ஒருமுறை அலசி பார்த்து பிறகு உறுதி அளிக்கலாம் என்று நினது AGM இடம் ஒரு மணிநேரம் அவகாசம் கேட்டாள். அவர் தி டைம் இஸ் யூர்ஸ் என்று சொல்லி அவளை உற்சாகபடுத்தி அனுப்பினார்.


காவியா நேராக அவள் காபின் சென்று முதலில் ஸ்டெல்லாவை அழைத்து நடந்தவற்றை சொல்லி ஸ்டெல்லாவிடம் அவளை ஒற்ற பதவியில் இருக்கும் மற்ற மூவரும் இவ்வளுக்கு ஆலோசனைகள் சொல்லுவார்களா என்று கேட்க ஸ்டெல்லா அனைவரும் மிக சிறந்த நபர்கள் என்றும் நிச்சயம் அவர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை தர காவியா மூவரையும் இன்டெர் காமில் அழைத்து விவரத்தை சொல்ல மூவரும் உடனடியாக அவளுக்கு உதவுவதாக கூறினர். காவியா எங்கே சந்தித்து பேசலாம் என்று கேட்க மூவரும் பேங்க் கான்பரன்ஸ் ரூமில் பேசலாம் அங்கே தான் யாருடைய தொலையும் இருக்காது என்று கூற காவியா ஸ்டெல்லாவை அழைத்து கொண்டு அந்த ரூமிற்கு சென்றாள்.
மற்ற மூவரும் வர காவியா அவர்களுக்கு அனைத்தையும் எடுத்து கூற அவர்கள் சில மாற்றங்களை கூறி இதற்கான விளக்கங்களை நிறுவனத்திடம் வாங்கும் படி சொல்லி அது கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு முழுமையான ப்ரோபோசலை எங்களால் தர முடியும் என்று முடித்தனர். அந்த நம்பிக்கையுடன் AGM காபின் சென்று அவருக்கு அவளின் தேவைகளை சொல்ல அவர் காவியா இனி மேல் இது உன் குழந்தை அதற்கு நீ என்ன என்ன தேவையோ அவற்றை நீ தான் பெற்று ஒரு அழகான குழந்தையாக மும்பை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அந்த குழுமம் நம் வங்கியின் பிரதான கஸ்டமராக ஆக வேண்டும் என்று கூறினார். காவியாவிற்கு இந்த

சவால் ரொம்ப பிடித்து போக அவள் அதற்கான வேளைகளில் உடனடியா இறங்கினாள். ஜெய்தீப் அலுவலகம் கூப்பிட்டு நூர்ஜஹனிடம் பேச முயற்சிக்க அவள் அன்று வரவில்லை என்று தெரிவித்தனர். அடுத்து யாரிடம் கேட்டால் சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என்று விசாரிக்க ரெண்டு மூன்று பேரிடம் கை மாற்றப்பட்டு காவியாவிற்கு தேவையான விளக்கம் கிடைக்கவில்லை.காவியா தளராமல்நேராக ஜெய்தீப் பெர்சனல் நம்பருக்கு கால் பண்ணினாள். ஜெய்தீப் ஹலோ சொல்லகாவியா பதிலுக்கு ஹலோ சொல்லி காவியா இயர் என்று சொல்ல ஜெய்தீப் ஹலோ காவியாஹொவ் இஸ் யுவர் வீக் எண்டு த்ரீடிங் யு என்று கேட்ககாவியா உங்கநிறுவன வேலை என் வீக் எண்டுமொத்தத்தையும் எடுத்து கொள்ள போகிறது என்று சொல்லி அவள் அழைத்ததற்கானகாரணத்தை சொன்னாள். ஜெய்தீப் ஒ ஆமாம் இன்று நூர்ஜஹான் இஸ் ஆன் வீக்லி ஆப்.காவியா எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நான் ஏதாவது செய்கிறேன் என்று சொல்லிவைத்தான். காவியா ப்ரோபோசலுக்கு ஒரு இறுதி வடிவம் குடுக்க ஆரம்பித்தாள்.கொஞ்ச நேரத்தில் ஜெய்தீப் கூப்பிட்டு காவியா நான் என் ஆடிட்டர் கிட்டேபேசினேன் அவர் இவினிங் தான் டைம் தர முடியும் என்று சொல்லி இருக்கார் என்றுசொல்லி காவியாவின் பதிலுக்கு காத்திருந்தார் காவியா எதனை மணிக்கு என்றுகேட்க உங்களுக்கு ஐந்து மணி எப்படி சௌகரிய படுமா என்று கேட்டார். காவியா நோப்ராப்ளம் ஜெய்தீப் ஆனா இன்னைக்கு சனி கிழமை பேங்க் மூடிடுவாங்க உங்கஅலுவலகம் வரவா என்று கேட்க காவியா உங்களை சரியாக நான்கரை மணிக்கு என் கார்பிக் அப் பண்ணிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார். காவியா ஸ்டெல்லாவின்விலாசத்தை குடுத்து அங்கே இருப்பேன் என்றாள்.மதியம் மூன்று மணியளவில் காவியாவும் ஸ்டெல்லாவும் அவள் ஹாஸ்டல் செல்லகாவியா டிரைவரிடம் காரை அங்கேயே விட்டு செல்லும் மாறு சொல்லி ஸ்டெல்லா ரூம்போனாள்.அங்கேயும் அவள் ஸ்டெல்லாவிடம் ஜெய்தீப் நிறுவனத்தை பற்றியேபேசினாள். நான்கரை மணிக்கு ஜெய்தீப் கார் வர காவியா ஸ்டெல்லாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். அன்று வந்த அதே டிரைவர் என்பதால் இவளை பார்த்து எப்படிஇருக்கீங்க மேடம் என்று கேட்டு கதவை திரிந்து விட்டான்.கார் ஜெய்தீப்அலுவலகம் சென்றதும் காவியா இறங்க அங்கே நின்று இருந்தசெக்யுரிட்டிஅவளுக்கு லிப்ட் கதவை திறந்து ஜெய்தீப் மாடிக்கு பட்டன் அழுத்தி உதவினான்.லிப்ட் அருகே ஜெய்தீப் வந்து காவியாவிற்கு கை குடுத்து அவளை அவன்காபினுக்கு அழைத்து சென்றான்.உள்ளே யாரும் இல்லை காவியா ஆடிட்டர்வரவில்லையா என்று கேட்க ஜெய்தீப் காவியா ஒரு சின்ன மாற்றம் ஆடிட்டர் OMR அருகே ஒரு முக்கிய வேளையில் இருப்பதால் அவர் அங்கே இருக்கும் எங்க குரூப்கெஸ்ட் ஹௌஸ் இருக்கு அங்கே இருக்கும் அலுவலகத்தில் வருவதாக சொன்னார் காவியாகொஞ்சம் யோசிக்க சாரி காவியா உங்க கிட்டே கேட்டு தான் நான் அவருக்குசொல்லி இருக்கனும் என்று சொல்ல காவியா பரவாஇல்லை என்று சொல்லி நான்கிளம்பட்டுமா என்று கேட்க காவியா நானும் அந்த மீடிங்கில் கலந்துக்க போறேன்ஏதாவது முடிவுகள் எடுக்க ஆடிட்டருக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னார்.காவியாவிற்கு ஒரு விதத்தில் சந்தோசம் ஆடிட்டருடன் தனியாக இருக்க வேண்டியதுஇல்லை மேலும் ஜெய்தீப் பற்றிய அவளது பார்வை மிகவும் உயரந்ததாக இருந்தது.ஜெய்தீப் புறப்பட காவியாவும் தொடர்ந்தாள்.


கார் ஒரு மணி நேரத்தில் OMR சென்று அங்கிருந்து ஒரு சிறிய பாதையில்திரும்பி கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய காம்பௌண்டுக்குள் நுழைந்தது.கார்நின்றது காவியா ஜெய்தீப் இறங்கி உள்ளே சென்று ஒரு அழகாகஅலங்கரிக்க பட்டகதவுக்குள் சென்று கான்பரென்ஸ் ரூம் போல் இருந்த அறையில் சென்றனர்


சிறிது நேரத்தில் ஒரு நடுத்தர வயது நபர் உள்ளே வர ஜெய்தீப் எழுந்து அவரைவரவேற்றார்.பிறகு காவியாவிடம் இவர் தான் எங்கள் ஆடிட்டர் என்று அறிமுகபடுத்தினார். காவியாவும் எழுந்து நின்று அவரை விஷ் செய்தாள் ஒரு அட்டெண்டர்மூன்று பெரிய குடுவையில் பிரெஷ் ஆரஞ் ஜூஸ் எடுத்து வந்து குடுக்க அதைபருகி கொண்டே ஜெய்தீப் ஒரு சுருக்கமான அறிமுகமாக அந்த சந்திப்பின் காரணத்தைகூற ஆடிட்டர் அவரது லாப்டாப்பை எடுத்து புள்ளி விவரங்களை எடுத்து கொள்ளகாவியா அவளுக்கு வேண்டிய விளக்கங்களை எடுத்துரைத்தாள்.ஆடிட்டர் அதைகுறித்து கொண்டு சில கணக்குகளை போட்டு விவரங்கள் தர காவியா அவற்றைகுறித்து கொண்டாள்.இவ்வாறாக கூட்டம் மூன்று மணி நேரம் நடக்க இறுதியில்காவியா அவளுக்கு தேவையான விவரங்கள் கொடுக்கப்பட்டது என்று உறுதி செய்துகிளம்ப ஆயத்தம் ஆனாள். ஜெய்தீப் ஆடிட்டரிடம் டின்னெர் பற்றி கேட்க அவர்மறுக்க ஜெய்தீப் காவியாவிடம் நீங்களும் மறுத்து என்னை பட்டினிபோட்டுவிடாதீர்கள் ப்ளீஸ் ஜாயின் மீ பார் டின்னெர் என்று கேட்க காவியாபுன்னகைத்து சரி என்றாள். ஆடிட்டர் அவர் காரில் செல்ல ஜெய்தீப் காவியாகிளம்பினர்.

வழியில் ஜெய்தீப் அவளிடம் அவளுக்கு தேவையான விவரங்கள் கிடைத்ததா என்று விசாரித்து தெரிந்து கொண்டார். காவியா அவளுக்கு வேண்டிய விவரங்கள் கிடைத்ததை உறுதி செய்து ஒரு எச்சரிக்கை வார்த்தையாக மேலும் விவரம் தேவைபட்டால் அவரை ஞாயிற்று கிழமையும் தொந்தரவு செய்வேன் என்றாள் ஜெய்தீப் நிச்சயமாக நீங்கள் எந்த நேரமும் என்னை அணுகலாம் உங்களுக்கு விளக்கங்கள் கிடைக்கும் என்றார். அத்துடன் அலுவலக பேச்சு முடிய ஜெய்தீப் காவியாவிடம் அவளுக்கு விருப்பமான ரெஸ்டாரன்ட் எதாவது இருக்கா என்று கேட்க காவியா இல்லை என்று கூற அப்போ தி சாயிஸ் இஸ் மையின் என்று சொல்லி காரில் இருந்த ரூட் மப்பில் அவர் செல்லும் இடத்தின் பேரை குறித்து காரை செலுத்தினார்.

காவியா உங்களை பற்றி உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னிடம் சொல்லலாம் ஒரு பொதுவான ஆர்வம் தான் என்றார். காவியா அவரை பார்க்க ஜெய்தீப் அவளிடம் வரிசையாக கேள்விகளை அடுக்கினார். காவியா பதில்களை சொல்ல இறுதியாக காவியா சிங்கிளா இல்லை ஏற்கனவே யாராவது லக்கி கய் காவியாவை கண்டு பிடித்து விட்டாரா என்று கேட்க காவியா அர்ஜுன் பற்றி சொல்லி முடித்தாள். அப்போ நீங்க அண்ணா நகர்ல தனியாக இருக்கறீர்களா என்றதற்கு காவியா பதில் அளிக்க ஜெய்தீப் காவியாவிடம் ஏன் அவ்வளவு தூரத்தில் இருந்து வங்கிக்கு வருகிறீர்கள் என்று வினவ காவியா மாற்றுவதற்கு இடம் தேடுவதாக சொன்னாள். பிறகு ஜெய்தீப் "காவியா உங்கள் திறமைக்கு இந்த வேலை தகுதியானதா அல்லது நீங்கள் மாற்று வேலைகள் பற்றி சிந்திக்கறீர்களா என்று கேட்க காவியா அதை பற்றி இது வரை இதுவரை யோசிக்கவில்லை என்றாள் இருவரும் ரெஸ்டாரன்ட் சென்று டின்னெர் முடித்து வரும் பொது மணி ஒன்பது காவியா ஜெய்தீப்யிடம் அவளை வழியில் இறக்கி விடுமாறும் அங்கிருந்து அவள் ஆட்டோ பிடித்து செல்வதாக சொல்ல ஜெய்தீப் நோ ஐ கான்ட் டூ தட் பார் எ சார்மிங் லேடி லைக் யு மோர் ஓவர் ஐ எ பாச்சுலர் பார் திஸ் வீக் எண்டு என்று கிண்டலாக சொன்னார். தனுஜா அண்ட் சுனந்தா இல்லையா என்று கேட்க ஜெய்தீப் அவர்கள் தனுஜா பெற்றோர் வீட்டில் இருக்கறார்கள் என்றான். காவியா மப்பில் அவள் விலாசத்தை குறிக்க ஜெய்தீப் அண்ணா நகர் நோக்கி சென்றான் காவியா இடம் வந்ததும் ஜெய்தீப் நிறுத்த காவியாவிற்கு ஒரு குழப்பம் ஜெய்தீப் அவள் வீட்டிற்கு வருவானா அவனுக்கு அவள் அழைப்பு குடுக்கலாமா என்று இருக்க ஜெய்தீப் அதற்கு முற்றுபுள்ளி வைத்தார். காவியா கேன் திஸ் பெல்லோ கம் இன்சிடே யுவர் ஹௌஸ் என்று கேட்டான். காவியா நிச்சயமாக என்று சொல்லி அவனுக்கு காத்திருக்க ஜெய்தீப் இறங்கி காவியாவுடன் நடந்து உள்ளே சென்றனர் காவியா திறந்து ஜெய்தீப் உள்ளே வர வழி விடுத்தாள்.


ஜெய்தீப் நைஸ் ஹௌஸ் என்று சொல்லி சோபாவில் அமர்ந்தான் காவியாவிற்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை அவனுக்கு குடிக்க ஏதாவது குடுப்பதா அல்லது அவனாக கேட்டால் குடுக்கலாமா என்று முழித்தாள். ஜெய்தீப் அவள் சங்கடத்தை புரிந்தவன் போல காவியா உங்க ப்ரிட்ஜில் கூல் ஜூஸ் இருக்குமா என்று கேட்டு அதன் அருகே போக காவியா அதற்கு முன் ப்ரிடஜ் திறந்து அதில் இருந்த மாங்கோ ஜூஸ் எடுத்து ஒரு க்ளாசில் ஊற்றி அவனிடம் நீட்டினாள். அவன் வாங்கி குடித்து ரொம்ப நல்ல இருக்கு நீங்க ப்ரிபேர் பண்ணதா என்று சம்ப்ரதாய வார்த்தைகள் சொல்லி சரி காவியா ஐ அம லீவிங் தேங்க்ஸ் பார் தி சின்சியர் எப்பார்ட் யு ஹவ் டேகன் என்று சொல்லி கொண்டே வெள்ளியே சென்றான். காவியா ஒரு பேரு மூச்சு விட்டாள். இவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருப்பவர் அவள் வீட்டிருக்கு வருவார் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை.

அவன் சென்றதும் காவியா டைம் பார்க்க மணி பத்து ஸ்டெல்லா தூங்கி இருக்க மாட்டாள் என்று நினைத்து காவியா அவளுக்கு கால் பண்ண அவள் போன அடித்து கொண்டே இருந்தது. சரி தூங்கி இருப்பாள் என்று மீண்டும் அழைக்கவில்லை.. டிரைவருக்கு கால் பண்ணி நாளைக்கு நேராக மந்தவெளி சென்று காரை எடுத்து கொண்டு ஸ்டெல்லாவை அழைத்து வீட்டுக்கு வர சொன்னாள். கொஞ்சம் அசதியாக இருந்ததால் புடவையை மட்டும் கழட்டி விட்டு அப்படியே படுத்து தூங்கி விட்டாள். காலை ஐந்து மணிக்கு விழிப்பு வர எழுந்தாள் இன்று விடுமுறை என்று உணர சிறிது நேரம் ஆனது ஆனால் அவளுக்கு ஒரு முறை தூக்கம் கலைந்தால் மீண்டும் தூங்குவது முடியாத காரியம். அப்போதான் நேற்று டவர் பார்க் சென்றது நினைவுக்கு வர காவியா இன்றும் செல்வது என்று கிளம்பினாள். ஒரு சல்வார் டாப் போட்டு கிளம்பினாள்.


பார்க் சென்று அவள் கண்கள் நேற்று தேடியது போல் இன்று யாராவது தெரிந்தவர்கள் இருகிறார்களா என்பதற்கு பதில் விஷால் வந்து இருக்கிறானா என்று பார்த்தது. விஷால் ஒரு முதியவருடன் ஏதோ வாகுவதாம் செய்து அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தான். காவியா அவனை டிஸ்டர்ப் பண்ண விரும்பாமல் தனியாக நடக்க துவங்கினாள். அவள் விஷாலை கடக்கும் போது அவன் அவளை கவனிக்கறானா என்று ஓர கண்ணால் நோட்டம் விட்டாள். அவனை கடக்கும் வரை விஷால் காவியாவை பார்க்கவில்லை அவள் அவனை தாண்டும் போது பார்த்து அங்கிருந்தே ஹலோ காவியா மேடம் என்ன உங்க காதலனை கண்டுக்காமல் போகறீர்கள் என்று குரல் குடுத்தான். காவியாவிற்கு அது கொஞ்சம் அதிர்சியாயை இருந்தது ஒரு போது இடத்தில் அவன் இப்படி கூப்பிட்டது அவளுக்கு கொஞ்சம் எரிச்சலை கொடுத்தது. அவள் த்ரயும்பி பார்க்காமல் நடக்க அவன் பின்னாடி ஓடி வந்து அவள் அர்குஎ நின்று என்ன மேடம் ஒரு நாள் கூட ஆகலே அதற்குள் டைவேர்ஸ் பண்ணிட்டிங்க என்று சொல்ல காவியா அவனை முறைத்து பார்த்து விஷால் போது இடத்தில் எப்படி நடந்துக்கணும்னு முதலில் கத்துக்கோங்க என்று சொன்னாலும் உள்ளுக்குளே அவன் செய்த குறும்பு அவளுக்கு பிடித்துதான் இருந்தது.
விஷால் சாரி சொல்லி நீங்க என்னை மாதிரி ஜோவியல் டைப் என்று நினைத்து சொல்லிவிட்டேன் என்றான். மேலும் அவன் பக்கத்தில் இருந்தவர் வேறு யாரும் இல்லை அவனுடைய தாய் மாமன் தான் என்றும் அவர் தான் அவர் மகளை மணந்து கொள்ள அவனை தொந்தரவு செய்வதாகவும் இன்று இந்த நேரத்தில் அவனை இங்கே மடக்கி அறுப்பதாகவும் கூறினான். அப்போ நீங்க தமாஷாக சொல்லவில்லை ஒரு சுயநலத்துடன் தான் சொல்லி இருக்கீங்க என்று அவனிடம் சொல்ல அவன் அதை மறுக்காமல் அப்படியே வைத்து கொள்ளுங்களேன் ஒரு நண்பனுக்கு உதவுவது ஒரு சிறந்த செயல் என்று நம்ப வள்ளுவர் தாத்தா சொல்லி இருக்கார் இல்ல என்று மீண்டும் ஜோக் அடித்தான். காவியா இவன் இயல்பே இப்படிதான் என்று முடிவு பண்ணி அமைதியாக நடப்பதை தொடர்ந்தாள். கொஞ்ச தூரத்தில் அவள் கண்ணுக்கு அந்த அருகம்புல் விற்ப்பவன் கண்ணில் தெரிய காவியா அவசரத்தோடு எதிர் பக்கம் திரும்பி நடக்க விஷால் என்ன மேடம் இன்னைக்கு சண்டே நோ அருகம்புல் சேல் டுடே அவன் இன்னைக்கு அருமையான கரும்பு ஜூஸ் போட்டு எடுத்து வந்திருப்பான் இருங்க என்று சொல்லி சென்றான். காவியா மனதில் திஸ் பெல்லோ இஸ் இன்டெர்ரெஸ்ட்டிங் என்று சிரித்து கொண்டாள். அவன் இன்று நேற்றையத்தை விட இன்று கொஞ்சம் பெரிய டம்பளர் எடுத்து வந்தான். காவியாவிடம் குடுக்க அவள் அது அருகம்புல் ஜூஸ் இல்லை என்பதை உறுதி படுத்த டம்பளர் உள்ளே பார்த்தாள். இதை கவனித்த விஷால் என்ன மேடம் என்னை நீங்கள் மொத்தமாக நம்பவில்லையா இப்படி இருந்தால் நீங்க எப்படி என்னுடன் லைப் முழுக்க காலம் தள்ள போறீங்க என்றான். காவியா அவன் சொன்னதை இந்த முறை சீரியசாக எடுக்காமல் சிரித்து கொண்டே விஷால் இந்த மேடம் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்று சொல்ல அவன் விடாமல் தெரியும் மேடம் நேத்து நான் ஒரு வக்கீலை பார்த்து பேசினேன் அவர் இப்போதெல்லாம் விவாகரத்து வாங்குவது ரொம்ப சுலபம் என்று சொல்லி இருக்கார் என்றான். காவியா அவன் கையை தட்டி நீ ஒரு காமடி பீஸ் என்றாள். அவன் விடுவதாக இல்லை ஆமாம் மேடம் கமல் கூட நெறைய காமடி படங்கள் நடித்திருக்கார் ஆனால் அதில் கூட அவர் காதலிப்பார் தவறாமல் ரசிகர்களுக்கு சாரி ரசிகைகளுக்கு பிடித்த முத்தங்கள் குடுப்பார் என்று அவளை மடக்கினான்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக