http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : காதல் கிறுக்கல்கள் - பகுதி - 2

பக்கங்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2020

காதல் கிறுக்கல்கள் - பகுதி - 2

பயிற்சி முடிந்து, கல்லூரியில் இரண்டாம் ஆண்டும் நன்றாக சென்றது. ஆனால் வழக்கத்தை விட கலா என்னுடன் அதிக நெருக்கமாக பழகினால். ஒருநாள் நண்பர்கள் சிலர் என்னுடன் படத்திற்கு செல்லலாம் என்று கேட்டுகொண்டிருன்தனர். அதை எங்கிருந்தோ கேட்டவள், என்னை பிடித்துகொண்டு, நானும் படத்திற்கு வரேன் என்று கூறி பிடிவாதமாக இருந்தாள். நான் போகவேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் இருந்தேன். இவள் இப்படி கேட்ட பின்பு, பிடிவாதமாக மறுத்துவிட்டேன். அதன் பின் என்மேல் கோபமாக இருந்த கலா, என்னுடன் ஒருநாள் பேசாமல் இருந்தாள். அவளுடன் பேசாமல் இருக்க முடியவில்லை பேசினாலும் இருக்க முடியவில்லை இரு தலை கொல்லி எறும்பு போல் நான் தவித்தேன். அவளோ அடுத்த நாளே என்னுடன் சரளமாக பேச தொடங்கினாள். காதல் என்கிற வார்த்தை சொல்லாமலே காதலர்களாக சுற்றி திரிய ஆரம்பித்தோம். கல்லூரியின் இரண்டாம் ஆண்டும் முடியும் தருவாய். ஒவ்வொருவரும் பல இண்டேர்விவ் அட்டென்ட் பண்ணி பணியில் சேர முயற்சித்து கொண்டிருந்தனர். அந்த இறுதி நாளும் வந்தது, நான் காதலை சொல்வேன் என்று எதிர் பார்த்து காத்திருந்தவள் அவளே சொன்னாள்.


எது வேண்டாம் என்று என்னை நானே கட்டுபாடுக்குள் வைத்திருந்தேனோ, அது நடந்தது. அவள் கைகளில் காதல் வாசகம் எழுதி இருந்த க்ரீடிங்க்ஸ் உடன் வந்திருந்தாள். அதனை என்னிடம் தந்துவிட்டு தந்து விட்டு மூன்று வார்த்தை மந்திர சொல்லை தனது செவ்விதழ்களால் சொன்னாள். நாங்கள் இருந்தது நூலகத்தில் அங்கு யாரும் வரவில்லை.

சொல்லிவிட்டு வார்த்தை முடியும் முன்னமே என்னை அனைத்து கொண்டாள். மனதில் ஆயிரமாயிரம் பூக்கள் மலர்ந்த மாதிரி, உலகத்தில் எங்கள் இருவரை தவிர வேறு யாரும் இல்லை என்கிற பிரம்மை. அந்த நிமிடம் எதை கேட்டிருந்தாலும், மறு பேச்சின்றி கொடுத்திருப்பேன் அப்படி ஒரு சந்தோசம்.

என் வாழ்நாளில் நான் அதிகம் மகிழ்ந்த நாள் என்று கூட சொல்லலாம். வாழ்க்கையாவது இலட்சியமாவது. இவள் தான் இனி எனது உலகம் என்று கூட நினைக்க தொடக்கினேன். நாங்கள் இருவரும் சுய நினைவுக்கு வர சில நிமிடங்கள் ஆனது


பின்னர் நிதானத்துக்கு வந்த இருவரும் ஏதேதோ பேசினோம், எதிர்காலம் பற்றி, ஏன் நான் எனது காதலை மறைக்க முயன்றேன் அடுத்து என்னப்பண்ணலாம் என்று பேசி முடிவு எடுத்தோம். எனது அம்மாவிற்கு கண்டிப்பாக உன்னை ரொம்ப பிடிக்கும், அதுபோல் உன்னது வீட்டிலும் என்னை பிடிக்கணும். மேலும் உங்க வீட்டில் நான் வந்து பெண் கேட்பதற்கு முன் நான் எனது வாழ்க்கை இலட்சியத்தை அடையணும். கண்டிப்பாக எனக்காக குறைந்தது இரண்டு வருடமாவது காத்திருக்க வேண்டு என்று கேட்டேன். நான் முடிக்கும் முன்பே, நீ மட்டும் இல்லை நானும் எங்க வீட்டின் சமதத்துடன் தான் நம்ம திருமணம் நடக்கணும். நாமே இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்து சீக்கிரம் எல்லாம் முடிக்கலாம் என்று ஆதரவாக சொன்னாள். நேரம் போவது கூட தெரியாமல் இருவரும் மணிக்கணக்காக பேசினோம்.

பின்னர் திட்டமிட்ட படியே நான் அடுத்த சில தினங்களில் சென்னையில் ஒரு பெரிய பன்னாட்டு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். எனது முதல் சம்பாத்தியத்தில் நான் வாங்கியது எனது அம்மாவுக்கு ஒரு புடவையுயம், காதலியுடன் பேச ஒரு மொபைல் போனும் வாங்கினேன் அதுவரை ஒரு ரூபாய் காயின் பூத்தில் பேசி வந்த நாங்கள் பிறகு சுதந்திரமாக பேசிவந்தோம், பகல், இரவு என பாராமல் பேசினோம். நான் சென்னையிலும். அவள் நாகர் கோவிலிலும் இருந்தாலும் தினம் இரவில் காற்றில் மின்னொலியில் தூதுவிட்டு பேசிவந்தோம். அப்பொழுதுதான் சில நாட்கள் நான் பணியின் நிமித்தமாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டி இருந்தது. அவளுடன் அதிகம் பேசமுடியாமல் போனது.

ஆறுமாத இடைவேளைக்கு பின் சென்னை திரும்பிய உடன் நான் நாககோயில் சென்றேன் ஆனால் அங்குதான் நான் எதிர் பார்க்காத அந்த அதிர்ச்சி காத்திருந்தது...
ஆறு மாதங்கள் நான் எப்படித்தான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன்னு எனக்கே ஆட்ச்சரியமாக இருக்கிறது. அம்மாவுடன் இரண்டோ அல்லது மூன்று முறையோ தொலை பேசியில் பேசி இருந்தேன். நண்பர்களுடன் அதிகம் அரட்டை அடிக்ககூட முடியவில்லை. இவை அனைத்திற்கும் மேல் என்னால் ஒருமுறைகூட கலாவுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளுக்கு பல மெயில்கள் அனுப்பியும், மொபைலுக்கு பலமுறை தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்தேன் ஆனால் எதுவும் பலனளிக்க வில்லை.

அவளை பார்க்கவோ, பேசவோ முடியாத ஏக்கம் என்னை மிகவும் பாதித்தது. அங்கு நான் பார்த்த ஒவ்வொரு அழகான பெண்ணும், அழகான ஒவ்வொரு பொருளும் அவளையே நினைவூட்டினாள். அந்த குளிரும், இதமான தட்பவெட்பமும் எனக்கு அவளை உடனே காணவேண்டும் என்கிற ஏக்கத்தை கூட்டியது. பத்து முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த ப்ரொஜெக்டை வெறும் ஆறு மாதங்களுக்குள் முடித்து கொடுத்தேன். எல்லாம் அவளும், அவளின் நினைவலைகள் செய்த மாயம். ஆனால் பாரட்டுகள் நான் பெற்றேன். பெரிய அளவில் ஊக்கதொகைகள் அளித்து நாடு திரும்ப அனுமதி அளித்தனர்.

ஊருக்கு திரும்புகிறோம் என்கிற ஆசையில், அம்மாவுக்கும் நண்பர்களுக்கும் பரிசு பொருட்களை வாங்கினேன். அவளுக்கு பிடிக்கும் என்கிற ஆசையில் ஒரு தங்க ஆபரணமும், சில சிகை அலங்கார பொருட்களும் வாங்கினேன். இந்த பொருட்களை கொடுத்தால் அவளின் பதில் எப்படி இருக்கும், இதற்காக அவளுடன் என்னென்ன கேட்கலாம் என்று மனதில் பல முறை ஒத்திகை வேறு பார்த்து கொண்டிருந்தேன்.

எனது கம்பெனியில் பதினைந்து நாட்கள் விடுமுறை எடுத்து கொண்டு நேரடியாக நான் நாகர்கோயில் சென்றேன்.


அதுவரை கலாவின் நினைவில் இருந்த நான். கொண்டு வந்த பொருட்களை அம்மாவிடம் கொடுத்தேன், அவள் ஆனந்த கண்ணீருடன் வாங்கி உச்சி முகர்ந்து நெற்றியில் ஒரு முத்தம் அளித்தால், இந்த அன்புக்காக நான் எதையும் செய்வதற்கு தயார் என்கிற ஓர் உன்னத உணர்வு என்னுள் எழுந்தது. ஆறு மாதங்கள், கண்ட கண்ட சுவை அற்ற உணவுகளை சாப்பிட்ட நான், முதன் முறையாக அம்மா ஊட்டிய அந்த சோதி சாப்பாடு என்னை கிறங்கடித்தது. அம்மாவின் கைமனத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எனது தாயின் கரங்களால் அமுதம் உண்ட மாதிரி ஒரு சந்தோசம்.. அப்படியே கொஞ்சம் நேரம் என்னோட அம்மாவின் மடியில் படுத்திருந்தேன்.. அவள் அன்பாய் எனது தலையை கொதி விட்டவாறு எனது பிரயாண கதைகளை கேட்டாள்.
உணவை உண்டதால் வந்த அரைமயக்கத்தில் உறங்கி போனேன். சிறிது நேரம் கழித்து என்னை தலையணையில் படுக்க செய்தாள்.

பின்னர் மாலை எனது நண்பர்கள் வந்துதான் என்னை எழுப்பினர். நாங்கள் ஒரு ஏழு பேர் இருப்போம். யார் எங்கே போனாலும் சரி, ஊர் திரும்பிய உடன் அன்று மாலையே ஒரு மீட்டிங் போட்டு இரவுவரை ஒரே அரட்டை ஆர்ப்பாட்டம்தான். இன்றும் அது போல்தான் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னென்னே வாங்கி வந்திருக்கிறேன் என்று எனது பேக்கை துளைத்து எடுத்தனர். அதுவரை சந்தோசமாக ஒவ்வொன்றையும் எடுத்தவர்கள் நான் கலாவிற்க்காக வாங்கி வந்த பொருட்களை கண்ட உடன் அதிர்சியாயினர். முதலில் வேலாதான் என்னுடன் பேசினான்.

வேலா: ஏலே மக்கா, உனக்கு விசயமே தெரியாதா !!!

அவனது கேள்விக்கு அர்த்தம் புரியாமலையே புருவங்களை உயர்த்தி 'என்ன மக்க ஆச்சு, என் திடீர்னு என்னை கேட்குற' அப்பாவியாய் கேட்டேன்.

வேலா: சரி சரி நான் உனக்கு அப்புறம் சொல்லுறேன் முதல்ல நாம நம்ம கிரௌண்டுக்கு போவோம் அங்க வச்சு விவரமா சொல்லுறேன் என்றான்.

நான் அதுவரை பொறுத்து கொள்ள முடியாமல் என்ன விஷயமுன்னு இப்போவே சொல்லு மக்கா, இல்லைனா என்னோட தலையே வெடிச்சுரும் பார்த்துக்கோ என்றேன்.

வேலா: நான் அங்க வச்சு விவரமா சொல்லுறேன், நீ விரசலா புறப்புட்டு வா என்றான்.

நான்: வர கொஞ்சம் லேட்டாவும் மக்கா, நீ முன்னே போங்க நான் பின்னாடியே வரேன். உன்னோட பைக் வச்சுட்டு போ என்றேன்.

அவர்கள் எனக்கென்று ஒரு பைக் வைத்து விட்டு சென்றனர். நான் முகம் கைகால் கழுவு விட்டு சுட சுட அம்மா தந்த டீ குடித்து விட்டு மீண்டும் கலாவிருக்கு கால் செய்து பார்த்தேன் எந்த வித பதிலும் இல்லை.


இதற்க்கு மேலும் பொறுத்து கொள்ள முடியாமல், அவளுக்கென்று வாங்கிய பொருட்களுடன் ஒரு காதல் கடிதமும் எழுதி பரிசு போல் பேக் செய்து அவளது வீட்டிற்கு சென்றேன். முப்பது நிமிட பைக் பயணம். வழியெங்கும் தென்னைகள் வரிசையாய் நின்று என்னை வாழ்த்தியது போன்றதொரு போலி தோற்றம். வாழை இலைகள் காற்றில் ஆட, அவை எனக்கே கைஅசைத்து வழி அனுப்புகின்றனவோ என்பது போன்ற பிரம்மை. சிறு இடைவேளைக்கு பின் நான் அவளை காண போகின்றேன் என்ற சந்தோசத்தில் பைக் கூட இறக்கை கட்டி பறந்ததா அல்லது நான் அவ்வளவு வேகமாக வந்தேனா தெரியவில்லை.

இதோ கலாவின் வீட்டிற்கு வந்து விட்டேன். மிக பிரம்மாண்டமா வீடு, வாசலில் இரு வண்டிகள் உள்ளே அவளது அப்பா வெள்ளை வேஷ்டி சட்டையில் மிக கம்பீரமாக சேரில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் அவரது கம்பெனியில் வேலை செய்பவர்கள் நின்று கொண்டே, அவர் கேட்கும் கேள்விகளுக்கு தலையை மாடுகள் போல ஆட்டி ஆட்டி பதிலளித்து கொண்டிருந்தனர்.

என்னுடைய வண்டி சத்தம் கேட்டு அனைவரும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர். அவர் என்னை சிலமுறை கல்லூரியில் பார்த்திருந்ததால், அறிமுகம் தேவை இல்லாமலே அடையாளம் கண்டு கொண்டார்.

வாப்பா, எப்படி இருக்கிற என்று நல விசாரணையுடன் என்னை வரவேற்றார். என்னுடைய கைகளில் இருந்த பரிசை பார்த்துக்கொண்டே இருந்தவர். என்னப்பா நீ கல்யாணத்திற்கு வரலேயா??? என்று கேட்டார்.

அவர் என்ன கல்யாணம் யார் கல்யாணம் எதுவுமே சொல்லவில்லை சும்மா மொட்டகட்டையா கேட்டார். நானும் யார் கல்யாணம் என்று கேட்க வாய் திறந்தேன், அதற்குள் அவளது அம்மா என்னை பார்த்து விட்டார்கள். அவர்களுக்கு சும்மா சம்பரதாய வணக்கம் சொன்னேன். நான் அவளது கல்லூரி தோழன் என்பதனால் என்னை உள்ளே அழைத்து சென்றேன். செல்லும் போதே, என்ன ஆண்டி, கலா இல்லையா என கேட்டேன்.

நின்று என்னை திரும்பி பார்த்தவர், என்னை ஒருமுறை நன்கு உற்று பார்த்தார். அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் எதுவும் புரியவில்லை. என்ன தம்பி வெளி ஊருக்கு எங்கேயும் போய் இருந்தீங்களா. என்று கேட்டார்.


அவரது கேள்வியில் உள் நோக்கம் தெரியாமலே, நான் ஆஸ்திரேலியா போய் இருந்ததை சொன்னேன். அதை கேட்டவர், சிரித்தவாறே கைகளை நீட்டி நான் கொண்டு வந்திருந்த பரிசை கேட்டார். அவர் எதற்கு இதை கேட்கிறார் என்று முழித்து கொண்டிருந்தேன். எனது பார்வைக்கு அர்த்தம் புரிந்தவராக, அவரே பதில் அளித்தார்கள்.

கலா கல்யாணம் முடிஞ்சதுமே ஒரு வாரத்துல லண்டன் போய்டாப்பா. இது அவளுக்கு கொடுக்க வாங்கினது தானே, என்கிட்ட கொடுத்துடு நான் அவளுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

அவரின் பதிலை கேட்டு எனது உள்ளம் சுக்கு நூறாக சிதறியது, என்னால் நிற்க கூட முடியாவில்லை. கை காலால் ஒன்றை ஓன்று பின்னி என்னை நிலை தடுமாற செய்தது போன்ற உணர்வு. என்ன ஆன்டி, என்று மீண்டும் ஒரு முறை கேட்டேன்.

பின் நான் என்ன செய்தேன் என்று எனக்கு உணர்வே இல்லை. கைகளில் இருந்த பரிசு பொருள் கீழே விழ போனது. அதனை லாபகமாக பிடித்த கலாவின் அம்மா, என்னப்பா பார்த்து பிடிச்சுக்க கூடாது. சரி சரி நீ அங்கே உட்காரு நான் காபி கலந்து கொண்டு வாரேன் என்று கூறிவிட்டு அடுக்களை சென்றார்கள். நிலை தடுமாறி நின்ற நான் அருகில் இருந்த சேரில் அமர்ந்தேன்.

அங்குதான் நான் அதனை கண்டேன். எனக்கு நேர் எதிராக சுவரில் அறையபட்டிருந்த ஆணியில் அப்புகைப்படம் தொங்கியது. பார்த்தவுடன் நானே அதில் தொங்கியது போன்ற ஒரு வலியுடன் கூடிய உணர்வு. ஆம், அதில் புன்னகைத்த படி இருவர். ஓன்று கலா, அவளுக்கு மிக அருகில் நெருக்கமாக அவளைவிட அதிக சிரித்தமாதிரி ஒரு ஆண்மகன். அவளது கணவன்.


இந்த காட்சியை பார்த்த என்னால் அங்கு அதற்க்கு மேல் இருக்க முடியவில்லை. யார் யார் என்னை அழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஓட்டமும் நடையுமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். நான் கொண்டு வந்த பைக் கூட எனக்கு நினைவில்லை. கண்களில் கண்ணீருடன், நடந்தேன் கால் போன திசையிலேயே நடந்தேன். நான் கடைசியாக அழுதது எனது தந்தையின் இழப்புதான், அதன் பிறகு இன்று தான் நான் அழுகிறேன். மாலை போய் இரவாக தொடங்கிய நேரம் அது. எனது அழுகையின் ஓலம் கேட்டு, நான் வரும் போது கைகள் அசைத்து வழியனுப்பியதோ என்று நினைத்த வாழை இலைகள் இப்பொழுது என்னைகண்டு எள்ளி நகையாடியது. ஒருவேளை முன்னமே அவைகள் அப்படித்தேன் செய்திருந்ததோ நான்தான் தப்பாக நினைத்தேனோ என்றதொரு உள் எண்ணம். இருபுறம் நின்ற தென்னைகள் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை, இறுதி ஊர்வலத்திற்கு நான் தாயார் என்பது போல் நின்று கொண்டிருந்தது.


எப்படி நினைத்த நான் இப்பொழுது இந்த உலகமே எனக்கெதிராக சுழந்தது போன்ற ஒரு எண்ணம் என்னை ஆட்டியது. இரவில் தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. நான் நடந்து சென்ற பாதையில் சாலை விளக்குகள் எதுவும் கிடையாது. அங்கு தெரிந்த வெளிச்சம் எனது கண்ணை கூசியது. எனக்கு முன்னே சற்று தொலைவில் இரு வாகன முகப்பு விளக்கு மின்னியவாறு என்னை நோக்கி வந்தது. பின்னால் அதீக ஓசையுடம் வண்டி ஹோர்ன் ஒலி எழுப்பிய வண்ணம் ஒரு மர லாரி வந்தது. வாழை இலையில் சிரிப்புகள், தென்னை கீற்றின் சலனங்கள், எதிரே வந்த வண்டியில் கண் கூசும் வெளிச்சம், பின் வந்த வண்டியில் கதை பிளக்கும் ஹோர்ன் சத்தம் இவை அனைத்திற்க்கு மேல் எனை விட்டு என்னுயிருக்கு மேல் நான் நினைத்து ஏங்கிய கலா எங்கோ பறந்து சென்றுவிட்டால் என்கிற மனவலி. நான் என்ன செய்தேன் என்று தெரிய வில்லை நினைவு கூட இல்லை. பாதங்கள் தடுமாறி கீழே விழுந்தேன் நாகர்கோயில் சாலைகள் மண் தரையில் இருந்து சுமார் ஐந்து அடி உயரம் இருக்கும், நான் சாலையிலிருந்து தடுமாறி இடப்புறமாக இருந்த பள்ளத்தில் விழுந்தேன்.ஊப்ஸ் நன்றாக எனது தலை எதோ தட்டியது. விமானத்தில் நான் சீட்டில் இருந்து நிலை தடுமாறி முன் இருந்த சீட்டில் முட்டி கொண்டேன். இதோ நான் வந்த விமானம் இப்பொழுது திருவனந்த புரம் வந்து விட்டது. சாரிங்க, நான் இப்போ நாகர்கோவிலுக்கு ஒரு வண்டியை பிடிக்கணும். போகும் போது விட்ட இடத்தில் இருந்து சொல்லுறேன்..


கடந்த கால நினைவுகளில் இருந்து மீண்ட நான், சுற்றும் முற்றும் பார்த்தேன் அனைவரும் சொந்த ஊரை அடைந்த மகிழ்ச்சியில் இருந்தனர், அது அவர்களின் கண்களில் நன்றாக தெரிந்தது. இறுக்கமான ஆடையில் ஒய்யாரமாக பவனி வந்து அனைவரின் பார்வைக்கும் மட்டும் அல்ல விமான பணி சேவையிலும் அனைவருக்கும் விருந்தளித்து கொண்டிருந்தனர் அந்த விமான பணி பெண்கள். அவர்களை கண் குளிர ரசித்து கொண்டிருந்தேன். நான் இறங்கும் வேலையும் வந்தது.

விமானத்தை விட்டு கீழிறங்க நான் வெளியே வந்த பொழுது, என்னதான் AC குளிர்ந்தாலும், அந்த குமரி கடலின் காற்றலைகள், தேடிவந்த மகனை ஓடிவந்து அனைத்து கொண்டது அந்த குளிர்ச்சிக்கு இணை எதுவும் இல்லை. இரவுநேர காற்று நான் மீண்டும் சொந்த ஊர் வந்த சந்தோசத்தை இரட்டிப்பாக்கியது. மேலும் இருள் என்னும் போர்வை போர்த்தி இருந்த இரவில், அங்காங்கே எட்டிப்பார்த்த விண்மீன்கள் உனக்கொரு வாரிசு வர போகிறான் என்று வாழ்த்தி கண் சிமிட்டியது. இயற்கை அனைத்தும் என்னை வாழ்கிறது போல் தோன்றியது.

விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வரும் பொழுது எனது மொபைல் போன் மறுபடியும் சிணுங்கியது. எடுத்து பார்த்தால், அதில் எனது நண்பன் வேலா வின் பெயர் தெரிந்தது. நான் அந்த அழைப்பிற்கு பதில் சொல்வதற்குள் இரு கரங்கள் எனது கண்களை மறைக்க மேலும் பலரது கைகள் என்னை செல்லமாகதட்டி ஒரு பெரிய கூச்சலையே ஏற்படுத்தினர். நான் திமிறி யார் எல்லாம் வந்திருகிறார்கள் என்று பார்த்தால், அதே அந்த ஏழு பேர் கொண்ட படை எனது வாழ்வில் என்றும் பிரியாத அந்த என்னுயிர் நண்பர்கள். அனைவருக்கும் நான் பதில் சொல்லுவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. நாங்கள் அந்த இடத்தை விட்டு பிரியும் முன் அனைவரின் பார்வையும் எங்கள் மீதே இருந்தது. அப்படி பேசிய சத்தம், நேற்று தான் கல்லூரி முடித்து வந்த வாலிபர்கள் போன்ற நடத்தை. ஒவ்வொருவருக்கும் திருமணம் முடிந்து பிள்ளைகள் இருந்தும், நண்பனை பார்த்த சந்தோசத்தில் அனைவருக்கும் அந்த பதின் வயது இளமை மீண்டும் திரும்பியது போல் இருந்தது. ஒருவழியாக அனைவருடன் பேசிவிட்டு அவர்கள் கொண்டு வந்த அந்த அம்பாசிடர் மற்றும் இன்னோவா வண்டிகளில் அனைவரும் ஏறினர். நான் அந்த அம்பாசிடரில் வேலா ஓட்ட முன் சீட்டில் அமர்ந்து கொண்டு வந்தேன். சிறிது நேரத்தில் நான் தூங்கியும் போனேன். அந்த ஆழ்ந்த உறக்கத்தில் நான் மீண்டும் அந்த பழைய நினைவுகளை புரட்டிப்பார்த்தேன்.

கலாவின் வீட்டில் இருந்து திரும்பிய பொழுது, அன்று நான் கீழே விழுந்ததில் எனது தலை நேராக அங்கே இருந்தே இரு பெரிய கரும் கல்களுக்கிடையே பலமாக மோதியது, நான் விழும் தருணத்தில் கூட அழைத்த பெயர்...கேட்டால் நீங்கள் கூட சிரிப்பீர்கள்.. ஆம் கலாதான். எனக்கு எதிர் திசையில் வந்த அந்த இரண்டு முகப்பு வெளிச்ச்சமுன் எனது நண்பர்கள் என்னை தேடிவந்த இரு பைக்-கின் வெளிச்சமே. நான் எழுப்பிய கலா என்கிற சத்தம் தான் அவர்களுக்கு நான்தான் கீழே விழுந்தேன் என உறுதியாக நம்ப செய்தது. கீழே கிடந்த என்னை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தனர், மேலும் நான் அங்கேயே விட்டு வந்த பைக்-கை எடுத்து வந்தனர். தலையில் பலமாக அடிப்பட்டதில், அரைமயக்கத்தில் இருந்தேன். அந்த இரண்டு நாட்கள் எனக்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது.

ஆனால் அங்கே நான் மருத்துவ மனையில் பெட்டில் கிடக்க என்னுடைய அம்மாவும் நண்பர்களும் பேசும் வார்த்தைகள் ஒன்றிரண்டு காதில் விழும் ஆனால் என்னால் கைகளை அசைத்தோ அல்லது வாய் பேசியோ எதுவும் கூற முடியவில்லை. கண்களில் கண்ணீரும், காதுகளால் கேட்கமட்டுமே முடிந்தது. சூழ்நிலை மிக மோசமாக தொடங்கியது. இரு தினங்கள் மயக்கத்தில் இருந்த நான் முணுமுணுத்த ஒரே வார்த்தை கலாதான். அதுவரை கலாவை எனது தோழி என்று நினைத்துவந்த என்னுடைய அம்மா நான் எவ்வளவு கலாவை காதலிக்கிறேன் என்று பார்த்து பார்த்து கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்கலாம். நான் நினைவு திரும்பிய பின் நண்பர்கள் சொல்லியது.

நான் ஏதேதோ மோசமான கனவுகள் கண்டேன் எதுவும் இப்பொழுது நினைவில்லை ஆனால் அந்த மோசமான கனவுகள் தான் என்னை மயக்கத்தில் இருந்து எழ செய்தது. அடிப்பட்ட இரண்டாம் நாள் இரவு 'கலா' என்ற பெரிய சப்தத்துடன் படிக்கையை விட்டு எழுந்தேன் ஒரு கைகளில் குளுக்கோஸ் ஏற மறு கைகளில் வழியாக எனது இருதய துடிப்பை பார்க்க வொயர்கள் பொருத்தி இருந்தனர். வேகமாக எழுந்ததில் வலது கைகளில் இருந்த குளுக்கோஸ் டுயுப் அறுந்து இரத்தம் வேகமாக தெறிக்க இடது கைகளில் இருந்த வொயர்கள் அறுந்ததில் அங்கே அடுக்கு வைக்கப்படிருந்த மருந்து, பழங்கள் கீழே உருண்டு ஓட பெரிய அதிர்ச்சியில் நான் கத்தினேன். தலை மற்றும் உடலில் பல பாகங்கள் வலிக்க மேலும் பலமாக அம்மா என்று கத்தினேன். அறையில் உறங்கி கொண்டிருந்த என்னுடைய அம்மாவும், நண்பன் வெங்கடேசும் என்னை பேரதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தனர்.
முதலில் சு தாரித்த வெங்கடேஷ் அங்கே இருந்த இரவு நேர டாக்டரையும், நர்சையும் அழைத்து வந்தான். அவர்கள் வரும் வரை என்னுடைய அம்மா என்னிடம் பேச்சு கொடுக்க முயன்றாள், நான் கலா என்று மட்டும் கத்திய பிறகு கண்ணீருடன் அழுது கொண்டே இருந்தேன் வேறு யாரிடமும் பேசவே இல்லை. சிறிது நேரத்தில் வந்த டாக்டர் என்னை மீண்டும் பரிசோதித்து. நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை அதனால் யாரும் என்னை தொந்தரவு செய்யாமல் நன்றாக தூங்க விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். நான் அப்படி செய்தது எனது சுயநினைவு இல்லாமலே செய்தேன்.

டாக்டர் கொடுத்த அந்த தூங்க செய்யும் மருந்தால் நன்றாக தூங்கிய நான் காலையில் நார்மலாக எழுந்தேன். நான் எப்பொழுது கண் திறப்பேன் என்று எதிர் பார்த்து எனது அம்மா எனருகிலேயே காத்து கொண்டிருந்தாள். நான் கண் திறந்ததும், என்னிடம் பேச்சு கொடுக்க தொடங்கினாள்.

அம்மா: எய்யா ராசா எப்படிப்பா இருக்கு, நீ எழுந்திர்க்க வேண்டாம்ப்பா. ஏதாவது வேணுமாய்யா என்று கண்ணீருடன் கேட்டாள்.

அம்மாவின் பேச்சை கேட்ட அங்கிருந்த வேலாவும், வெங்கடேசும் என்னருகில் வந்து ஏதோ கேட்டனர். ஆனால் நான் அவர்களுக்கு அளித்த பதில் ஒன்றே ஒன்றுதான்

நான்: என்னோட கலாவுக்கு கல்யாணம் முடிஞ்சிரிச்சாம் மக்கா. அவா என்னை விட்டு ரொம்ப தூரம் போய்டாடா என்றேன்.

எனது பதிலை கேட்ட இருவரும் தலை அடித்து கொண்டே கண்ணீருடன் அவளை நீ இன்னும் நினைச்சுடாடா இருக்கே என்று அழுது கொண்டே கேட்டனர். என்னை மேலும் அழவிடகூடாது என்பற்காக என்னுடைய அம்மா வேற ஏதையோ கேட்டாள், பேச்சை அப்படியே மாற்றினாள். பின்னர் டாக்டர்ஸ் வந்து என்னை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் அன்று அனுமதி அளித்து விட்டு சென்றனர்.

அதன் பின்பு வந்த அந்த ஆறு மாதமும் எனது வாழ்வின் மிக மோசமான கருப்பு பக்கங்கள் என்றால் கூட மிகையாகாது. எப்படி அந்த நாட்களில் நானும் அழுது சுற்றி இருந்த அனைவரையும் கஷ்டபடுத்தி கொண்டே இருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை நான் அப்படி நடந்து கொண்டதை பற்றி யாரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. அவர்களின் அந்த செயலே என்னை முழுமையாக மீட்டெடுத்தது.

நான் வீடு சென்ற பின்னர் யாரிடமும் பேசவே இல்லை, எல்லோரும் என்னிடம் என்னென்னமோ கேட்டுப்பார்த்தார்கள் நான் எதற்கு வாய் திறந்து பேசவே இல்லை. பொறுத்திருந்து பார்த்த என்னுடைய அம்மா.

அம்மா: நீ ஏதாவது பேசி தொலையேண்டா.. நீ அமைதியா இருந்து ஏன்டா எல்லோரையும் உயிரோட கொல்லுற என்று கண்ணீருடன் மிரட்டினாள். அதில் கோபம் இல்லை ஆதங்கமே இருந்தது. இதற்குமேல் அவள் அங்கே இருந்தால் மேலும் தாங்க மாட்டாள் என்று கருதி என்னுடைய நண்பர்கள் சிலர் அவளை வெளியே அழைத்து சென்றனர்.

பின்னர் என்னருகில் இருந்த ஆறுமுகம் மெதுவாக பேச்சு கொடுக்க தொடங்கினான்.

ஆறுமுகம்: ஏம்டா மக்க, இப்படி அமைதியா இருக்க, இங்க பாரு நீ அவளையே நினைச்சு நினைச்சு உன்ன பத்தி கவலைபடுரவங்களை கொஞ்சங்கூட யோசிக்க மாட்டேங்கிற.. நீ மூச்சு பேச்சு ஏதும் இல்லாமல் இருக்கும் போது உன்ன பக்கத்தில இருந்து இரண்டு நாளா தூங்காம பார்த்து பார்த்து அழுதுட்டு இருந்து உன்னோட அம்மாதாண்டா அதை ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று கேட்டு எனது சிந்தனை ஓட்டத்தை தடுத்தான்நான்: நீ கேட்டது எல்லாம் நியாயம்தான் எனது புத்திக்கு எட்டியது ஆனால் இந்த பாலாய் போன மனதிற்கு ஒன்றும் புரிய மாட்டேங்குதே மக்கா..தயவு செய்ஞ்சு என்கிட்ட யாரையும் பேச சொல்லாதே. நானே கொஞ்ச நேரத்துல்ல வந்து பேசுறேன்டா என்று கூறி அவனை என்னை தனியாக விடுமாறு கேட்டு எனது அறையை விட்டு வெளியே அனுப்பினேன்.

தனியாக அறையில் இருந்த நான் எவ்வளவு நேரம் இப்படியே இருந்தேன் என்று தெரியாது. மனதில் பல எண்ணங்கள் என்னை கலா கண்டிப்பாக ஏமாற்றி இருக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினேன். கொஞ்சம் நேரம் கழித்து எனது அறையை விட்டு வெளியே வந்து பார்த்தேன் அங்கே என்னுடைய அம்மா கவலையுடன் சுவற்றில் தலை சாய்ந்து அமர்ந்திருந்தாள். எனது நண்பர்கள் அனைவரும் தத்தம் வீட்டுக்கு சென்றிருந்தனர். நான் மெதுவாக அவளின் அருகே சென்று மடியில் தலை வைத்து படுக்க முயர்ச்சித்தேன் ஆனால் முடியவில்லை தலையில் அடி பட்ட இடத்தில் தையல் போட்டிருந்ததால் என்னால் முடியவில்லை. அம்மா பசிக்குதுமா. ஏதாவது சாப்பிட தாம்மா என்று கேட்டேன்.

அம்மா: இருடா கண்ணா, இப்போ எடுத்து வரேன் என்று கூறி உள்ள சென்றவள் சில நிமிடங்களிலேயே தட்டில் கொஞ்சம் சோறும் பருப்பும் போட்டு கொண்டு வந்தாள். எனக்கு கொஞ்சம் ஊட்டியவளை, நீயும் சாப்பிடுமா என்று கூறி அவளையும் கொஞ்சம் சாப்பிட செய்தேன்.

என்னால் முழுவதும் கலாவை மறக்க முடியாவிட்டாலும், அம்மாவுக்காக கொஞ்சம் நார்மலாக இருப்பதுபோல் நடிக்க தொடங்கினேன். அந்த வார இறுதியில் எனது தலையில் இருந்த தையலை பிரித்தனர். வீட்டில் உணவை உண்பதும், நண்பர்களுடன் எங்கேயாவது செல்வதுமாக நாட்களை கழித்தேன். எனக்காக லீவ் எடுத்தவர்கள் வேலைக்கு சென்ற பின்னர், நான் மட்டும் தனியாக வெளியே செல்ல தொடங்கினேன். நான் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது கலாவின் நினைப்பை மறந்திருந்தாலும் தன்னந்தனியாக இருக்கும் பொழுது அவளின் நினைவுகள் முழுவதுமாக வாட்டியது. இதற்கு இடையில் நான் எனக்களித்த விடுமுறையை தாண்டியும் விடுப்பில் இருந்ததால் நான் வேலை செய்த கம்பெனியில் இருந்து என்னை மொபைலில் அழைத்தனர். நான் வேலைக்கு வர கொஞ்சம் நாள் ஆகும் என்று கூறி அழைப்பை துண்டித்தேன். அதன் பிறகு என்னை அவர்கள் பலமுறை அழைத்தும் நான் பதில் அளிக்கவே இல்லை.

வீட்டில் மட்டும் அம்மாவுக்காக நான் நார்மலாக இருப்பதுபோல் நடித்தாலும், வெளியே நானும் அவளும் சென்று வந்த இடங்களை தேடி சுற்றி வந்தேன். ஒருநாள் கல்லூரி விளையாட்டு மைதானத்தை சுற்றுவேன், மறுநாள் நாங்கள் இருவரும் ஒரு கப் ஐஸ் க்ரீமை மாற்றி மாற்றி சுவைத்த கடையில் நாங்கள் வழக்கமாக அமர்ந்திருக்கும் மேசையில் அமர்ந்திருப்பேன். இப்படி ஒவ்வொரு இடத்திற்கா சென்றன். அப்படி ஒரு நாள் நான் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வேலா என்னை கவனித்து விட்டான். என்னை சத்தம் போட்டு வீடு போகுமாறு கூறினான். நான் மறுக்கவே, என்னை வேறு வழியின்றி அங்கே அருகில் இருந்த மது கடைக்கு அழைத்து சென்றான்.


மது கடையின் உள்ளே,

வேலா: ஏலே மக்கா ஹரி, ஏம்டா, இப்படி தெரு தெருவா சுத்திட்டு இருக்க..

நான்: முடியல மக்கா, வீட்ல என்னால ரொம்ப நேரம் நடிக்க முடியலைடா.

வேலா: ஏலேய் அந்த பொட்ட சிருகியே உன்னை தூக்கி வீசிக்கு போய்ட்டா, நீ ஏம்ல இப்படி சுத்துற... அவனவன் நாலஞ்சு பொண்ணுங்களை ஓட்டிடு போற நீ என்னடானா தொலைஞ்சி போன ஒருத்தியவே நினைச்சுட்டு இருக்க..நீ இப்படி பித்து பிடிச்சவன் மாதிரி இருகிறத பார்க்க சகிக்காம தான் நாங்க எல்லாரும் வேலைக்கே போறோம். நீ என்னடானா இப்படி தெரு தெருவா திரியிற..

நான்: மக்கா, என்னை நீ கூட முழுசா புரிஞ்சிகளைடா.. அவ என்கிட்ட எப்படி எல்லாம் பேசினா தெரியுமாடா.. என்னால இப்போகூட அவ அப்படி செய்தான்னு நம்பவே முடியலைடா. .

வேலா: உன்னை இப்படியே விட்டா அவமேல பைத்தியமாவே ஆய்டுவ... நீ என்னமோ வீட்டுல நடிச்சி அம்மாவை ஏமாத்துறதா நினைச்சுட்டு இருக்க.. உன்னோட அம்மாவோ தினசும் என்னோட அம்மாகிட்ட சொல்லி சொல்லி அழுறதா பார்க்க முடியலைடா.. உன்னை நீ மாத்திக்கோ இல்லைனா நீ அவங்களை கொஞ்சம் கொஞ்சமா உயிரை எடுத்துருவடா சொல்லு புட்டேன்..

அதற்குள் அங்கே வந்த செர்வரிடம் வேண்டிய பானங்களை ஆர்டர் கொடுத்து விட்டு மேலும் என்னிடம் என்னென்னமோ பேசினான்..
சிறுது நேரத்தில் பானமும் வந்தது.

வேலா: இந்த இப்போதைக்கு இதுதான் மருந்து.. ஆனால் இதையே பழக்கமா வச்சுக்காதே..என்று கூறி ஒரு கோப்பை பானத்தை என்னிடம் நீட்டினான்.

நான் அதை வாங்கி பானத்தை பார்க்கும் பொழுது எனது கண்ட கால நினைவுகள் மீண்டும் இம்சித்தது..

கல்லூரி நாட்களில் ஒருமுறை என்னுடைய நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள் அன்றிரவு பலர் அவனுடைய வீட்டில் இருந்தோம். அங்கே வீட்டில் யாரும் இல்லை. ஆகையால் ஒரே ஆட்டம் பாட்டம். விடிய விடிய மது, மாமிசம் மற்றும் புரிந்தும் புரியாத பாடல்களை இசைக்க செய்து ஆட்டம். நான் சற்று அதிகமாகவே மது அருந்தியதால் வாந்தி எடுத்து. காலை கல்லூரி சொல்ல முடியாமல் விடுப்பு எடுத்தேன்... என்ன நடந்ததுன்னு தெரியவில்லை.. மணி பதினொன்று இருக்கும் கலா மட்டும் அந்த நண்பனின் வீட்டிற்கு வந்தாள். நான் அதீக போதை தெளிந்து அப்பொழுதான் எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு வந்தேன். வீட்டின் வாசலில் கலா பார்க்க காளி போல் விகாரமா கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் உள்ளே வேகமாக வந்தவள். முடிந்த மட்டும் பலமாக என்னை அடித்தாள், அப்புறம் என்னை கட்டி பிடித்து அழுதே விட்டாள். பின்னர் காதல் வார்த்தைகள் பேசி என்னிடம் இனி குடிக்க கூடாதுன்னு சத்யம் வாங்கி கொண்டாள். அதன் பின்னர் நான் மதுவை தொடவே இல்லை...

நான் மதுவை கைகளில் வைத்து கனவு கண்டதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேலா..என்னலேய் அப்படி வெறிச்சு பார்த்துடு இருக்க..என்றான்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக