http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பூம்பொழில் - பகுதி - 3

பக்கங்கள்

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

பூம்பொழில் - பகுதி - 3

நான் ஆச்சரியபட்டேன். "எப்படி ஒரு வேளை நமக்கு முன் பஸ் ஏறிவிட்டாளா" நான் குழம்பிக்கொண்டே "மே ஐ கமின் மிஸ்" என்றேன். உடனே திரும்பினாள் மீண்டும் "லலல்லலா லல்லலல...லலலலல"ஒலித்தது.

அவள்"இதுதான் ஸ்கூலுக்கு வர நேரமா"என்றாள்.

"சாரி மேம் பஸ் லேட்"என்றேன்.

"எட்டரையில இருந்து பஸ் வரலையா"அவள் குரலில் கேலி தெரிந்தது.

நம்மை பார்த்திருக்கிறாள்.அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவள்"வெளியே நில்லு,ஒரு நாள் நிக்க வச்சா அடுத்த நாள் சீக்கிரம் வருவ"முகத்தில் அறைந்தாற் போல் கூறினாள். அவள் அப்படி சொல்வாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.நிலைகுலைந்தேன்."பூம்பொழில்.அடிப்பாவி உனக்காக தானடி எட்டரை மணியிலிருந்து நாயாக காத்திருக்கிறேன்.

அவள் கூறிவிட்டு விறுவிறுவென சென்றாள்.நான் இடிந்துபோய் நின்றேன்.நேற்று வரை உதட்டோரம் சிரித்து ஓரக்கண்ணால் பார்த்தவளா இவள்.இவளுக்காக தான் லேட்டாக வந்தோம் என்று இவருக்கு தெரிந்திருக்குமா,தெரியாதா.இது அவள் மனதில் இருந்து உதிர்த்த வார்த்தைகளா,இல்லை மாணவர்களுக்கு மத்தியில் கறாராக இருப்பது போல் நடிக்கிறாளா..?

நான் யோசித்துகொண்டிருக்கும் போதே மணி அடித்தது.தொடர்ந்து அவள் குரல்"ஸ்டூடண்ட்ஸ் நாளை வீக்லி டெஸ்ட்க்கு இன்னிக்கு நடத்துன போயம் நல்லா படிச்சிட்டு வந்தீடுங்க,அதில இருந்து எந்த கொஸ்டீன் வேணும்னாலும் நான் கேட்பேன்"என்று கூறிவிட்டு வெளியேறினாள். என்னை கவனிக்கவே இல்லை.

அதன் பிறகு இரண்டு முறை அவளை வராண்டாவிலும் ஒருமுறை கிரௌண்டிலும் பார்த்தேன் ஆனால் அவள் கவனிக்கவே இல்லை.


மாலை பெல் அடித்தது எறும்புகூட்டம் சிதறி ஓடுவது போல் மாணவர்கள் கலைந்து அவரவர் வீட்டிற்கு அம்மாவிடம் திட்டு வாங்க ஆர்வமாக சென்றனர்.வினோத் என்னை வெயிட் பண்ண சொன்னான் நான் பஸ் ஸ்டாப்பில் நிற்பாதாக கூறிவிட்டு வந்து ஒருமணி நேரம் ஆனது அவள் வரவேஇல்லை .பிறகு வினோத் வந்தான் "ஸாரிடா மாப்ள மேட்ஸ் ஸார்கிட்ட கொஞ்சம் டவுட் கேட்டுட்டு வர லேட்டாயிடுச்சி "என்றான்.
"அவ போயிட்டாளாடா"என்றேன் நான்.

"அவன்னா எவ...?.இங்க ஏகபட்ட அவ இருக்காளுங்க,ஏன் நம்ம கிளாஸ் மொக்க ஃபிகர் சரண்யா கூட அவ தான் நீ எவளடா கேக்குற"என்றான்.

"ஒதவாங்க போற உனக்கு எவன்னு தெரியாது"


"ஓ!நீ அவள கேக்குறீயா.அவ போயிட்டா"

"இப்போ நீ எவள சொல்ற"

"ப்ச்!ம்ம் நீ உன் ஆளதான கேக்குற"

"ம்..."

"அவளதான் சொல்றேன் அவ அப்பவே அந்த குந்தானி கூட அந்த ஓட்ட ஸ்கூட்டில ஏறி போயிட்டா"

"எப்போடா..?"

"நீ வெளியில வந்தில அப்பவே"

அப்பொழுதுதான் தெரிந்தது எனக்கு அவள் இவ்வளவு நாளாக அவள் ஸ்கூட்டியில் தான் சென்றிருக்கிறாள்.நாம்தான் அவள் வருவாள் வருவாள் என நினைத்து ஏமாந்திருக்கிறோம் "ச்சே என்ன ஒரு முட்டாள்தனம்"என என்னை நானே நொந்துகொண்டேன்.


பிறகு ஒரு நிமிடம் கூட தாமதிக்க வில்லை அடுத்த பஸ்ஸில் ஏறி இருவரும் சென்றோம்.

அவளை மறக்க முயன்றேன். அது முடியவில்லை.அவள் என்னை ஏமாற்றியும், ஏன்?என்று தெரியவில்லை ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு எனக்கு அவளை ஞாபகபடுத்தி கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்து என்னால் சும்மாக இருக்க முடிய வில்லை.அவள் ஞாபகமாகவே இருந்தது.அவளை மறக்க வேண்டும்,அதற்கு ஒரு வழிதான் உள்ளது முடிவு செய்தேன்.

நேராக ஒயின்ஷாப்புக்கு சென்றேன்.ஒரே ஒரு பியர்,அடிச்சிட்டு வந்துபார்த்தா அவ ஞாபகம் இன்னும் அதிகமாயிடிச்சி,அட இது என்னடா கொடுமை என்று நினைத்து கொண்டேன்.என் வேதனையை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது எனக்கு அதற்கு சரியான ஆள் நம்ம வினோத் தான் என முடிவு செய்து எனது சைக்கிளை எடுத்துகொண்டு வினோத் வீட்டை நோக்கி சென்றேன்.

வினோத் வீட்டை அடைந்தேன்.என்னை தடுத்த காம்பௌண்ட் கேட்டை ஒரு கையால் தள்ளி விட்டு உள்ளே சென்றேன்.

"வினோத்.!வினோத்"என்று கூப்பிட்டேன்.

அவன் வெளியே எட்டி பார்த்து."டேய் !வாடா உள்ள வா!"என்றான்.நான் சைகையால் தண்ணி அடிச்சிருக்கேன்,நீ வெளிய வாடா என்றேன்.என் நண்பன் என்னை புரிந்து கொண்டு வெளியே வந்தான்.இருவரும் சைக்கிளை எடுத்துகொண்டு வெளியே வந்தோம்.எப்பொழுதும் கூடிபேசும் இடமான பெரிய கோவில் அருகே இருக்கும் மண்டபத்தின் திட்டின் மீது அமர்ந்தோம்.

அவன் கேட்டான் "ஏன்டா திடீர்னு சரக்கு அடிச்ச அன்னிக்கு என்கிட்ட இனிமே சரக்கே அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்தே"என்று

"அவள நினைக்காம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல மச்சி"

தலையில் அடித்துகொண்டான்"டேய்!நீ திருந்தவே மாட்டியா அவதான் உன்ன கண்டுக்கவே மாட்டேங்கிறா அப்புறம் ஏன்டா அவ முந்தானையே பிடிச்சிகிட்டு அலையிற. "

"இல்லடா அவள மறக்க முடியலடா.எங்க பார்த்தாலும் அவ முகமாவே தெரியுது எனக்கு என்னாச்சினே தெரியலடா,ஆனா இந்த செகண்ட் ஒன்னு மட்டும் உண்மை டா அவ இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு நினைக்கிறேன்டா"என்றேன்.

"மச்சி!நீ ஒண்ண நல்லா புரிஞ்சிக்கோ அவ ஒண்ணும் நாலாவகுப்பு படிக்கிற பாப்பா இல்ல.நீ மிட்டாய் வாங்கி கொடுத்ததும் உன் பின்னாடியே வர,அவ நமக்கு டீச்சர் நீ என்னமோ இந்த வருஷம் 11TH பாஸாக மாட்டேன்னு நினைக்கிறேன்"

"நான் பாஸாகலன்னா கூட பரவாயில்லடா.நாளைக்கு போய் அவள பார்த்து ஏன் என் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம் னு "கேக்க போறேன்.

"மச்சி!நாளைக்கா அதுக்கு அவசியமே இல்ல.அதோ பாரு உன் ஆளு கோயிலுக்கு வந்துகிட்டு இருக்கா"என்றான்.

நான் திரும்பிபார்த்தேன்.அவளேதான் சிகப்பு கலர் காட்டன் சுடிதாரில் தலையில மல்லிகை பூவோடும் கையில் அர்ச்சனை தட்டோடும் ஒரு தேவதை போல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.


ஏற்கனவே போதையில் இருந்த நான் மேலும் போதையானேன்.

"ஏதோ கேக்கனும் னு சொன்னில்ல இப்ப போய் கேளு"என்றான்.

நான் அவனை பார்த்தேன்.அவளையும் பார்த்தேன்"எனக்கு என்னடா பயம் இப்ப போய் கேக்குறேன் பார்!"என சொல்லி அவளை நோக்கி சென்றேன்.

கோவிலில் அன்று அவ்வளவு கூட்டம் இல்லை.இரண்டு பிச்சைகாரர்கள் வலதுபுறமும் இடது புறமும் அமர்ந்திருந்தனர்.நான் இடதுபுறம் எனது செருப்பை அவழ்த்துவிட்டு உள்ளே சென்றேன்.இடதுபுறம் அமர்ந்திருந்த பிச்சைகாரன் என்னை நோக்கி தட்டை நீட்டினான்.அவனுக்கு பிச்சை போடும் எண்ணத்தை கை விட்டேன்,என்னவள் என்னை மீண்டும் ஏமாற்றி விட்டு வேறு வழியில் சென்றுவிடுவாள் என்ற பயத்தால் அவனை புறக்கணித்து விட்டு உள்ளே நடந்தேன்.அவள் வரவேற்பறையில் இருந்த பிள்ளையாரை கண்மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள்.

அவள் அழகுக்கு இந்த உலகில் ஈடு இணையே இல்லை எனக்கு தோன்றியது அவள் மூக்கின் நுனியில் இருந்த வியர்வை துளி ரோஜாவின் இதழில் இருக்கும் பனிதுளி போல் இருந்தது.

நான் அவளையே பார்த்து கொண்டிருந்தேன்.பின் கண்களை திறந்தவள் என்னை பார்க்கவே இல்லை.அப்படியே திரும்பி நடந்தாள் நான் அவள் பின்புறத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தேன்.வினோத் என்னருகில் நின்றிருந்தான்.

"என்னடா ஏதோ கேக்கபோறேன் சொன்னே அப்படியே வெறிச்சி போய்நின்னுட்ட எதையோ பார்த்து பயந்துட்டியா"என்றான்.

எனக்கு பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.முதலில் வினோத்தை பேச சொல்லலாம்.பிறகு அவனை சாக்காக வைத்து நாம் பேசலாம்.

நான் வினோத்திடம் சொன்னேன்.அவன்"அய்யய்யோ என்னால முடியாது.ஆளவிடு சாமி"என்று நழுவ பார்த்தான்.

"டேய்,நீ இப்ப போய் பேசலனா நான் உன் கூட எப்பவும் பேசமாட்டேன்" என்றேன்.
இதை சொன்னால் போதும் வினோத் எனக்காக எதை வேண்டுமானாலும் செய்வான் என் நண்பன்.ஏன் என்றால் அவனுக்கு என்னை அவ்வளவு பிடிக்கும்.
அவனும் நானும் அவள் பின்னாலே சென்றோம்.நாங்களும் அவள் ஒருமுறையாவது திரும்புவாள் என நினைத்து நினைத்து ஏமாந்ததுதான் மிச்சம்.அவள் திரும்பவே இல்லை அவள் கர்ப்பகிருகத்திற்கு உள்ளே சென்றாள்.நாங்களும் சென்றோம் அவள் அர்ச்சனை தட்டை ஐயரிடம் கொடுத்து கண்மூடி நின்றாள்.நாங்கள் அவள் முன்பு சென்று நின்றோம்.அவள் கண்களை திறந்தாள் எங்களை பார்க்கவேண்டும் என்பதற்காக.அவள் கண்களை திறந்து எங்களை பார்க்கவில்லை.திரும்பி சாமியை பார்த்து கன்னத்தில் தப்பு போட்டுகொண்டாள்.

அவள் எங்களை பார்த்தாளா இல்லை வேண்டுமென்றே நடிக்கிறாளா என்றே தெரியவில்லை.திரும்பி வந்த ஐயரிடம் அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டு திரும்பிபார்க்காமல் நடந்த அவள் மேல் எனக்கு கோபம்கோபமாய் வந்தது.

ஏன் இந்த மாற்றம்,இவளுக்கு என்னாயிற்று ஏன் என்னை வெறுக்கிறாள்.அதற்கு மேல் என்னால் அவள் பின்னால் செல்ல விருப்பம் இல்லை.வினோத்திடம் "வாடா போலாம்"என்றேன்.

நாங்கள் புறப்பட ஆயத்தமான போது சட்டென அவள் திரும்பினாள்.எங்களை நோக்கி வந்தாள்."நீ வினோத் தானே 11D "என்று வினோத்தை பார்த்து கேட்டாள்.நன்றாக கவனியுங்கள் வினோத்தை பார்த்து என்னை அவள் பார்க்கவே இல்லை.எனக்கே ஒரு சந்தேகம் நாம் அவள் கண்ணுக்கு தெரிகிறோமா என்று ஒரு ஒப்புக்கு கூட என்பக்கம் அவள் திரும்ப வில்லை.

வினோத் "ஆமா டீச்சர் உங்ககிட்ட பேசத்தான் நாங்கள் வந்தோம் ஆனால் நீங்கள் அப்ப பார்க்கவே இல்ல."என்றான்.

"ஸாரிப்பா நான் சரியாக கவனிக்க வில்லை.உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசித்து கொண்டே இருந்தேன் அப்புறம் தான் ஞாபகம் வந்தது"என்றாள்.
.
"இட்ஸ் ஓகே மிஸ்"என்றான்.அவள் என்னை பார்ப்பாள் ஏதாவது கேட்பாள் என்று நினைத்தேன் ஆனால் அவள் கண்டுகொள்ளவே இல்லை.நான் வினோத்திடம் "டேய் நான் கிளம்பறேன் நீ வரியா இல்லையா"என கேட்டேன்.

இப்பொழுதுதான் அவள் என்னை பார்த்தாள் கேவலமான பார்வை.வாசலில் இருந்த பிச்சைகாரனை நான் பார்த்தது போல்,தெருவில் குப்பையை மேயும் நாயை பார்ப்பது போல் "இவன் யாரு உன் ஃபிரண்டா நம்ம ஸ்கூல்லயா படிக்கிறான்"என்றாள்.

நான் அதிர வில்லை இதை அவள் கேட்பாள் என்று எனக்கு தெரியும்.அதற்கு முன் போய்விடலாம் என நினைத்தேன்.ஆனால் கேட்டுவிட்டாள் என் என்பது ரூபாய் வேலை செய்ய ஆரம்பித்தது. நான் கோபமாக அவளை பார்த்து கேட்டேன்."உங்களுக்கு என்னை நிச்சயமாய் தெரியாது..?"என்று கேட்டேன்.

அவள் "தெரியாததால் தான் கேட்டேன்" என்றாள்.உடனே நான்"நேற்று காலை பஸ்ஸில் உங்களை உரசிகொண்டு வந்தேனே அவன் நான்தான்.என் பெயர் ஜெய்.உங்களுக்கு என்னை தெரியும் ஆனால் நீங்க நடிக்கிறீங்க.டேய் !நான் போறேன் நீ வந்தா வா இல்லனா போ" என கூறிவிட்டு விறு விறு வென நடந்தேன்.


பூம்பொழில் டைரியிலிருந்து:

அலாரம் அந்த அமைதியை கிழித்து கொண்டு அலறியா அந்த அதிகாலை 5 மணி 30வது நிமிடம் அரைதூக்கத்தில் இருந்த நான் கண்களை கசக்கி கொண்டு எழுந்தேன். விடியாமலே இந்த உலகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.
ஓட்டின் மீது விழுந்த "தட்..தட்...தட்"என சத்தம் மழை நான் இன்னும் நிற்க வில்லை என சத்தியம் செய்தது சாரல்காற்று முகத்தில் அடித்து ஒரு வித சுகத்தை தந்தது.எழுந்து சென்று பல்துலக்கி, குளித்து விட்டு ,காபி போட்டு குடித்து அம்மாவுக்கு கொடுத்து விட்டு, சமையல் செய்து சாப்பிட்டு அம்மாவை சாப்பிட்ட சொல்லிவிட்டு,வாசலில் வந்து செருப்பை மாட்டிதிரும்பிய போது மணி எட்டு இன்னும் தூறல் போட்டு கொண்டிருத்தது. "ஸ்கூலுக்கு கிளம்பிட்டியாமா"பின்னால் அந்த குரல் கேட்டது திரும்பி பார்த்தேன்.சந்திரசேகர் அங்கிள் நின்று கொண்டிருந்தார்.

"வாங்க அங்கிள்...!"


"ஸ்கூலுக்கு கிளம்பிட்டீயாமா...?


"ஆமா அங்கிள்"


"ஒன்னும் இல்லம்மா.பக்கத்துல சொந்தகாரங்க வீடு இருக்கு அவங்கள பார்த்துட்டு அப்படியே உங்களையும் பார்த்து விட்டு போலாம்னு வந்தேன்.


சந்திரசேகர் அங்கிள் மிக நல்லவர்,அப்பாவின் உயிர் நண்பர்.எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.ரிட்டயர்டு ப்ரம் ஆர்மி.அப்பா இறந்த பின் எனக்கு அப்பா மாதிரி இருப்பவர்.கடன் காரர்கள் தொல்லை செய்த போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை புரியவும் இல்லை அந்த இக்கட்டான சமயத்தின் போது எங்களுக்காக பேச கூட ஆளில்லை எங்களுக்காக பேசி அந்த கொடுமையான நிகழ்வுகளிலிருந்து எங்களை வெளியே கொண்டு வந்தவர்.


"உள்ளே வாங்க அங்கிள்"


"இல்லம்மா நான் சும்மாதான் வந்தேன் அப்புறம் இந்தா..."என்று பாக்கெட்டில் கை விட்டு ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.


"அங்கிள் இது..."நான் தயங்கினேன்.


"வாங்கிக்கோமா உங்க செலவுக்கு வச்சிக்கோமா"


"அங்கிள் ரொம்ப நன்றி ஆனா இது வரை நீங்க செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல இதுல இது வேற வேண்டாம் அங்கிள் என்னை மேலும் மேலும் தர்மசங்கட படுத்தாதீங்க"


"இதுல என்னம்மா தர்மசங்கடம் நீ என் பொண்ணு மாதிரி உனக்கு உதவாம நான் வேற யாருக்கு உதவ போறேன்.உனக்கு ஹெல்ப் பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ஒரு ஆத்ம திருப்தி.உங்கப்பா..."


"அங்கிள் போதும்.நீங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டிங்க அப்புறம் நானும் உங்கப்பாவும் னு ஆரம்பிச்சிங்கனா இன்னிக்கு ஃபுல்லா பேசிட்டே இருப்பிங்க.கொடுங்க வாங்கிக்கிறேன்"


"ம்ம்...அப்படி வா வழிக்கு"
நான் வாங்கிகொண்டேன்.அங்கிள் வாங்க உங்கள வெளிய நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன்.

"இல்லம்மா.கொஞ்சம் வேல இருக்கு .நான் கிளம்பறேன் இன்னொரு நாளைக்கு நீ ஃபிரீயா இருக்கும்போது வரேன்.நீயும் ஸ்கூலீக்கு கிளம்பிட்ட"
"ம்ம்...சரி அங்கிள் நீங்க செய்ற உதவிக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்ய போறேனு தெரியல"

"அட விடுமா..இப்பதானே சொன்னேன்.நீ என் பொண்ணு மாதிரின்னு"


பின் அவரிடம் விடை பெற்று கொண்டு குடையை எடுத்துகொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தேன்.அவன் நின்றுகொண்டிருந்தான்.மழை இன்னும் நிற்கவில்லை அதனால் நான் அவன் நின்றுகொண்டிருந்த நிழற்குடைக்கு அருகில் இருந்த டீக்கடையின் கீற்று கொட்டகைக்குள் நுழைந்தேன்.கீற்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் அவனை பார்த்தேன்.அவன் எதைபற்றியோ தீவிரமாக சிந்தித்துகொண்டிருந்தான்.என்னை பார்த்ததாக தெரியவில்லை.நானும் வெளிபடுத்திகொள்ளவில்லை.


பேருந்து வந்தது நான் சென்று ஏறினேன் அவன் வரவில்லை ஏன் என் தெரியவில்லை நான் குடையை எடுத்து விரித்து பிடித்த படி மெதுவாக இறங்கி பஸ்ஸில் ஏறினேன்.அவன் யாருக்காகவோ காத்திருப்பது போல் இருந்தது.


குடை என் முகத்தை மறைத்திருப்பதால் அவன் என்னை பார்த்திருக்க வாய்ப்பில்லை.நான் ஏறியவுடன் பஸ் புறப்பட்டது.நான் ஜன்னல் வழியே பார்த்தேன் அவன் நொடிக்கொருமுறை தலையை வெளியே நீட்டி பார்த்துகொண்டிருந்தான் "யாருக்காக காத்திருக்கிறான் இவன்...?" 


நான் பள்ளிக்கு 9.00 க்கு தான் வந்தேன்.பிரின்ஸ்பால் ரூமிற்கு சென்று சைன் பண்ணிவிட்டு ஸ்டாப்ரூமிற்கு சென்று பேக்கை வைத்துவிட்டு மாலதியிடம் சிறிது நேரம் பேசிகொண்டிருந்த போது மணி ஒலித்தது.பின் இருவரும் பிரேயர் ஹாலுக்கு சென்றோம்.


அவன் வந்துவிட்டானா என பிரேயர் ஹாலில் அவன் முகத்தை தேடினேன். அவன் இன்னும் வரவில்லை "என்ன பண்ணிட்டு இருக்கான் இன்னும்"


"யாருக்காகவோ காத்திருந்தானோ வினோத் கூட இங்கதான் இருக்கான்.அப்புறம் யாருக்காக காத்திருந்தான். ஒருவேளை அது எனக்காக இருக்குமோ"என்று எண்ணினேன்.நினைக்கும் போதே கேவலமாகதான் இருந்தது.ஆனால் ஏன் நான் அப்படி நினைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

பிறகு பிரேயர் முடிந்தது.முதல் பீரீயட் அவன் கிளாஸ் தான் பார்த்துகொள்ளலாம் லேட்டா வந்தா வெளிய நிக்க வைக்கனும் அப்போதான் நான் யார்னு அவன் புரிஞ்சிக்குவான்.

ஸ்டாப் ரூமிற்கு சென்று நோட்ஸ்களை ஒருமுறை பார்த்துவிட்டு பிறகு விறுவிறுவென கிளாஸிக்கு சென்றேன்.அவன் இன்னும் வரவில்லை.

நான் வகுப்பெடுக்க தொடங்கி இருபது நிமிடம் கழித்து வந்தான்.மழையில் முழுதாக நனைந்திருந்தான்.என்னை பார்த்தது அதிர்ந்தது அவன் கண்களில் தெரிந்தது. அதிலிருந்து அவன் எனக்காக தான் காத்திருந்தான் என்பது தெளிவாக எனக்கு விளங்கியது.லேட்டாக வர காரணம் கேட்டேன் பஸ் வரவில்லை,லேட் என கதை சொன்னான்.

நான் உள்ளுக்குள் சிரித்துகொண்டேன்.அதை வெளிகாட்டிகொள்ளாமல் கேட்டேன்."எட்டரை மணியிலிருந்து பஸ்ஸே வரவில்லையா...?"என,அவன் திருதிருவென முழித்தான்.நான் அவன் தடுமாறுவதை ரசித்தேன்."இன்னைக்கு ஒருநாள் வெளியே நிக்க வச்சாதான்,இனிமே லேட்டா வரமாட்டே"என கூறியதும் அவன் முகத்தை பார்க்கவேண்டுமே பேயறைந்தது போல் ஆனான்.

பின் நான் வகுப்பெடுக்க சென்றுவிட்டேன்.அவ்வப்போது அவனை ஓரகண்ணால் பார்த்தேன்.அவன் பாவமாக நின்றிருந்தான்.ஆனால் அவன் மேல் எனக்கு இரக்கம் வரவில்லை ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமானவனை வதைக்கிறோம் என்ற குரூர மகிழ்ச்சிதான் எனக்குள் அதிகமாயிருந்தது.

முதல் பீரியட் முடிந்ததற்கு அடையாளமாக "ட்ரீங்"என்று ஒரு மணிசத்தம் கேட்டது.நான் நாளை வீக்லீ டெஸ்ட்க்கு படிக்க வேண்டியதை ஒருமுறை மாணவர்களுக்கு நினைவு படுத்திவிட்டு வெளியே வந்தேன். அவன் என்னையே பார்த்தான் நான் கண்டுகொள்ளாதது போல் முகத்தை ராணுவவீரன் போல் விறைப்பாக வைத்துகொண்டு ஸ்டாப்ரூம் நோக்கி நடந்தேன்.அதன் பிறகு அவனை அன்று இரண்டுமுறை பார்த்திருப்பேன்.அதன் பிறகு பார்க்கவில்லை.மாலை பள்ளி முடிந்ததும் மந்தாகினியுடன் ஸ்கூட்டியில் சென்றுவிட்டேன்.

வீட்டிற்கு வந்ததும் முகம் கழுவி காபிபோட்டு குடித்து அம்மாவுக்கும் கொடுத்துவிட்டு,காலையில் சமையல் செய்த பாத்திரங்களை கழுவினேன்.பின் யேதேச்சையாக காலண்டரை பார்த்தபோது இன்று சதுர்த்தி என்பது தெரிந்தது.முன்பெல்லாம் சதுர்த்தியின் போது குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வோம் அப்பொழுது ஏகபட்ட மகிழ்ச்சி இருந்தது ஆனால் இப்பொழுது வெறுமைதான் மிஞ்சியிள்ளது.அப்பா என் கையை பிடித்துகொண்டு "அம்மா இது சரஸ்வதி நல்லா கும்பிட்டுக்கோ,உனக்கு நல்லா படிப்பு வரும்" என்று ஒவ்வொரு தெய்வத்தின் பெருமையையும் கூறுவார். 


நானும்" அப்படியாப்பா"என கூறீ அவர் கூறும் ஒவ்வொரு சாமியையும் என் பிஞ்சு விரல்களை கூப்பி கும்பிட்ட நாட்கள் என் கண்முன் விரிந்தது.நான் இல்லன்னாலும் இந்த சாமியெல்லாம் உன்னை பாத்துக்கும்மா என்பார்.எங்கே போனது அந்த சாமியெல்லாம்.கண்களில் நீர் முட்டிகொண்டு வந்தது.கோவிலுக்கு சென்றால் தேவலாம் என தோன்றியது.

அம்மாவிடம் கூறிவிட்டு புறப்பட்டேன்.நான் சென்றபோது கூட்டமே இல்லை.உள்ளே நுழைந்ததும் பிள்ளையார் எதிர்பட்டார் அவருடன் கண்மூடி கொஞ்சம் ரகசியம் பேசினேன்.

கண்ணை திறந்தபோது அவன் நின்றிருந்தான்.எனக்கு தூக்கிவாரி போட்டது .
"அடப்பாவி !இவன் எங்கே இங்கே " வினோத்தும் கூடவே இருந்தான்.நான் கைகூப்பிகொண்டே கண்களை மூடியபடி அப்படியே அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

அவர்கள் என் பின்னாலே வந்தனர்.நான் அவர்களை கண்டுகொள்ளாதவாறு நடந்துகொண்டேன் அவன் என்னிடம் பேச வேண்டும் என வருகிறான்.நான் அதற்கு இடம் கொடுக்க கூடாது என எண்ணினேன்.

திடீரென இருவரும் திரும்பி நடக்க முற்பட்டனர்.அவனை "டீஸ்"பண்ணவேண்டும் என்ற என் எண்ணம் பாழாகிவிடுமோ என நினைத்தேன்.


பின் ஒரு யோசனை வந்தவளாய் சட்டென திரும்பி வினோத்தை மட்டும் பார்த்து "நீ வினோத்தானே 11D2 "என கேட்டேன்.


அவனும் "ஆமாம் மிஸ் நாங்க உங்க கூட பேசத்தான் இவ்வளோ நேரம் உங்க பின்னாடியே வந்தோம்.நீங்கதான் எங்கள பாக்கவே இல்ல"
"ஸாரிப்பா எனக்கு சரியா ஞாபகம் இல்ல அதான்"என்றேன்.நான் அவனை பார்க்காத மாதிரியே பேசினேன். .அவன் வினோத்திடம் "டேய்! நான் கிளம்பறேன்டா நீ பேசிட்டு வா "என கூறி செல்ல முற்பட்டான். 

அதற்குள் நான்"வினோத் இவன் யாரு உன் பிரண்டா என கேட்டேன்.மனதிற்குள் 
"மகனே சாவுடா இனிமே நீ என் பக்கமே திரும்ப பாக்க மாட்டே"என நினைத்து கொண்டேன்.

அவன் உடனே "நான் யாருன்னு உங்களுக்கு நிஜம்மா தெரியல"என கேட்டான்.

"ஞாபகம் இல்ல அதான் கேட்டேன்.நீயும் 11D2 ஆ"

"நீங்க பொய் சொல்றீங்க என்னை உங்களுக்கு நல்லா தெரியும் ஆனா நீங்க நடிக்கிறீங்க"என்றான்.
.
நான் மனதிற்குள் அடப்பாவி கண்டுபிடித்துவிட்டானே எண்ணினேன் ஆனால் அதை வெளிகாட்டாமல் "இல்ல உண்மையா எனக்கு ஞாபகம் இல்ல"எனகூற அவன் கோபமாய் "நான் யாருன்னு உங்களுக்கு தெரியலயா நான்தான் நேற்று உங்க கூட பஸ்ல வந்தேன் உங்கள உரசி கிட்டே வந்தேன் நீங்களும் என்னை முறைத்து பார்த்திங்க.என்ன அழகா நடிக்கிறீங்க"என கூறி பின் வினோத்திடம் "டேய்!நான் கிளம்பறேன் நீ வரியா இல்லையா" என கூறி பதிலை கூட எதிர்பார்காமல் விறு விறுவென சென்றான்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக