http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 10

பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2020

அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 10

 3 வருடங்கள் ஆகியிருந்தது! ரம்யாவும், ப்ரியாவும் ஒன்று என்பது போல் மாறியிருந்தார்கள். பார்ட் டைம் வேலை தேடி வந்த ப்ரியா, வேலைக்குச் செல்லும் அவசியமே வரவில்லை! அவளின் எல்லாத் தேவைகளும், ரம்யாவால் தீர்க்கப்பட்டது!


ஆரம்பத்தில், இதற்காக மறுகிய ப்ரியா, இப்போதெல்லாம், அம்மா, இன்னைக்கு கடைக்கு போலாமா என்று கேட்கும் அளவிற்க்கு அந்த வீட்டில் ஒன்றியிருந்தாள். இது எத்தனை நாள் நீடிக்க முடியும், ப்ரியா அந்த வீட்டின் நிர்வாகியா, உறவா, என்ன மாதிரியான பிணைப்பு என்று யாரும் யோசிக்கவேயில்லை!

இன்னமும் வழக்கிற்கு தீர்ப்பு வரவில்லை என்றாலும், வழக்கில் ப்ரியா ஜெய்ப்பாள் என்பது உறுதியாகியிருந்தது. அதை விட முக்கியம், இந்த வழக்கு தனக்கு ஒன்றுமேயில்லை என்று ப்ரியா மாறியிருந்தாள். இப்படியாக 3 வருடங்கள் ஓடியிருந்தது!

இடைப்பட்ட காலங்களில், ரம்யா, ப்ரியாவின் நெருக்கம், ராமிற்கே பொறாமையை வரவழைத்தது!

ரம்யாவின் காதுகளில், ப்ரியா ரகசியம் பேசினாள்! ரம்யாம்மா, உங்க பாய்ஃபிரண்டு, என்னை முறைக்கிறாரு?!

ஏய், என்னடி சொல்ற?ம்ம், இந்நேரம், அவரு தோள்ல சாஞ்சி, கதை பேசிட்டிருந்திருப்பீங்க, அது நடக்காம, அவரு கேர்ள்ஃபிரண்டை நான் கடத்திட்டு வந்துட்டேன்ல! அதான் முறைக்கிறாரு!ஏய், என் பையனையே ஓட்டுறியா? வாயாடி!

ஓட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டா, பையன் என்னா, பேரன் என்னா? சரி, சரி, இதுக்கு மேல உங்களை புடிச்சு வெச்சா, அவரு பார்வையிலியே என்னை எரிச்சிடுவாரு! நான் போயி, என் பாய்ஃபிரண்டை கொஞ்சுறேன்! நீங்க, உங்க பாய் ஃபிரண்டுகிட்ட போங்க… இருந்தாலும் கடைசியா, அவரைச் சீண்டனுமே என்று சொன்ன ப்ரியா, ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்!

ஏய், உனக்கு வாலு அதிகமாயிட்டே போகுது! ஒரு நாள் வாங்கப் போற இரு! சரி, அது யாருடி உன் பாய்ஃபிரண்டு, புதுசா?

ம்ம்… மிஸ்டர் கணேசன் தான்! நேத்து, என் கையை புடிச்சிகிட்டு, இந்த முறை, சென்னைக்கு போறதுக்கு மனசே இல்லைன்னு எவ்ளோ ஃபீல் பண்ணாரு தெரியுமா? உங்ககிட்ட இதுவரைக்கும், அதுமாதிரி சொல்லியிருக்காரா? இல்லீல்ல? இப்ப தெரிஞ்சிக்கோங்க, இந்த ப்ரியாவோட பவரை என்று கண்ணைச் சிமிட்டியவாறே சொல்லிவிட்டுச் சென்றாள்!

ராமின் தோள்களில் சாய்ந்தாலும், அவளது பார்வை, ப்ரியாவின் மேலேயே இருந்தது.

என்னம்மா அவளையே பாத்துட்டு இருக்கீங்க?!

என்னை மாதிரியே இருக்காடா! என்று ரம்யா ஒரு பெருமூச்சு விட்டாள்!

ரம்யாவின் வார்த்தைகளை விட, அவளது பார்வையும், பெருமூச்சும் ஏதோ உணர்த்துவது போல் இருந்தது ராமிற்க்கு!

ஒரு நாள்!

ராம் உடன் படித்தவன், கல்யாணம் என்று பத்திரிக்கை வைத்திருந்தான்! ராம், அதையேக் கையில் வைத்து, யோசித்துக் கொண்டிருந்தான். ப்ரியா, ரம்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.

அங்க பாருங்க, உங்க பாய்ஃபிரண்ட், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்களேன்னு ஃபீல் பண்ணிட்டிருக்காரு!

ஏய் வாயாடி, உன் வீரமெல்லாம் என்கிட்டதான். ஆனா, அவனைக் கண்டாலே பம்முவ! இவ்ளோ பேசுறியே, தைரியமா அவன்கிட்ட போயி அவன் பேரைச் சொல்லி கூப்பிடு பாக்கலாம்! இன்னமும் சார் நு தானே கூப்பிடுற? 24 வயசெல்லாம் கல்யாணம் பண்ற வயசா?!

ஆங்… இந்தக் கதைதானே வேணாங்கிறது! உங்களுக்கு பயம், புதுசா வர்றவ, உங்க பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு…உன்னை என்று ப்ரியாவின் காதைத் திருகி ரம்யா விளையாடிய போது, ராம் சொன்னான்!

ப்ரியா சொன்னது சரிதாம்மா! நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னுதான் யோசிச்சிட்டிருந்தேன்!

(அய்யோ, நான் சொல்றதைக் கேட்டுட்டா இருந்தாரு! போச்சு!)

என்ன ராம் சொல்ற? உண்மையாவா?

ஆமாம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்! அவளுக்காக, நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்!

அவளுக்காக இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணனுங்கிற! என்கிட்ட ஒரு வார்த்தை உன் லவ்வைப் பத்திச் சொல்லலியேடா? அவ்ளோதானா? தன்னிடம் சொல்லாததிற்க்காக மிகவும் ஃபீல் பண்ணினாள் ரம்யா!

சிரித்தவாறே அருகில் வந்து ரம்யாவை தோளோடு சேர்த்து இழுத்தவன், ரொம்ப ஃபீல் பண்ணாத கேர்ள் ஃபிரண்டு! எத்தனை லவ்வர் வந்தாலும், நீதான் என் கேர்ள் ஃபிரண்டு! ஓகேவா!

போடா, வெறும் வாய்லதான். என்கிட்ட சொல்லலீல்ல நீ?!

அவசரப்படாதீங்க! நான் இன்னும் அந்தப் பொண்ணுகிட்டயே லவ்வைச் சொல்லலை! சொன்னாலும், அவ உடனே ஒத்துக்குவாளான்னும் தெரியாது! ஆனா, சீக்கிரம் கல்யாணம் நடக்கனும். அதான் யோசிக்கிறேன்!

என்ன ராம் சொல்ற? யாரு அந்தப் பொண்ணு? அப்டி என்ன பிரச்சினை? உன்னை வேணாம்னு சொல்லிடுவாளா? நீ யாருன்னு காமி? நான் பேசுறேன் அவகிட்ட!

உண்மையாவாம்மா?! என்ன ப்ரியா, நீயும் எனக்காக பேசுவியா?

கண்டிப்பா சார்! உங்களை வேணாம்னு சொல்ற பொண்ணு இருக்க முடியுமா? யாருங்க சார் அந்தப் பொண்ணூ? நானும் பேசுறேன் சார்!

நீதான் ப்ரியா அந்தப் பொண்ணு! உன்னைதான் லவ் பண்றேன்! என்றவன் ரம்யாவிடம் திரும்பி, நீங்க பேசி சம்மதம் வாங்குங்கம்மா என்றான்!

ப்ரியா, பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்!

நீ உண்மையாத்தான் சொல்றியா ராம்?

இந்த விஷயத்துல யாராவது விளையாடுவாங்களாம்மா? உங்களுக்கு சம்மதம்மாம்மா?

சம்மதமா??? எனக்கு, ரொம்ப ரொம்ப சந்தோஷம் ராம்! ப்ரியா நீ என்ன என்று திரும்பிய போதுதான் ரம்யா உணர்ந்தாள், ப்ரியா இன்னும் பிரம்மை பிடித்தவாறே இருந்ததை! அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன…

நான்…. கல்யாணமா…

’ப்ரியா’ என்ற ரம்யாவின் அதட்டலில் சுய நினைவு திரும்பியவள், கோபமாக ராமைப் பார்த்து கேட்டாள்!

பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்குறீங்களா சார்?

பரிதாபப்படுற அளவுக்கு உன்கிட்ட என்ன குறை ப்ரியா?

ஆங்… என்று விழித்தாள் ப்ரியா? பின் சுதாரித்தவள், எ… எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை சார்!

ஸ்ஸ்… நீ என்னை கல்யாணம் பண்றியோ, பண்ணலையோ, முதல்ல இந்த சாரைக் கட் பண்ணு! என்னம்மா, என்னை எந்தப் பொண்ணும் வேணாம்னு சொல்லாதுன்னு சொன்னீங்க?! உங்க கூட இருக்கிற பொண்ணுக்கே என்னை புடிக்கலியே?!

இல்ல சார்… நீங்க வேற நல்லப் பொண்ணாப் பாத்து… என்று பேசியவளை ராமின் கோபப்பார்வை நிறுத்தியது!

சரி ப்ரியா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம். ஆனா, உன் மனசைத் தொட்டுச் சொல்லு. நீ உன் வாழ்க்கைல கல்யாணம் பண்ணுவியா மாட்டியா?

கல்யாணாமா? நானா என்று வாய் பிளந்து நின்றாள் ப்ரியா!

தன்னையறியாமல் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த ரம்யா, என்ன சொல்ற ராம்? அவ கல்யாணம் பண்ணாம என்ன பண்ணப் போறா?

அதை அவளைச் சொல்லச் சொல்லுமா?

உ… உங்களுக்கு எப்டி தெரியும் சார்???

டாக்டர் சார்மிளா!

அப்போதுதான் ப்ரியாவிற்கும், ரம்யாவிற்க்கும் ஞாபகம் வந்தது! 

உ… உங்களுக்கு எப்டி தெரியும் சார்???

டாக்டர் சார்மிளா!

அப்போதுதான் ப்ரியாவிற்கும், ரம்யாவிற்க்கும் ஞாபகம் வந்தது! 
3 வருடங்களுக்கு முன்பு, வந்த புதிதில், ப்ரியாவின் மன உளைச்சல்களைப் பார்த்து விட்டு, ப்ரியா சில நாட்கள் ஒரு கவுன்சிலிங் செல்வது நல்லது என்று, ராம் அழைத்து வந்த மனநல மருத்துவர்தான் டாக்டர் சார்மிளா! அதன் பின் ப்ரியாவிடம் நல்ல மாற்றம் இருந்தது!

அதன் பின் ஒரு வருடம் கழித்து, டாக்டர் சார்மிளாவே மீண்டும் சில முறை ப்ரியாவைத் தேடி வந்தவர், ப்ரியாவிடம் கொஞ்சம் பேசி விட்டுச் சென்றார்! அதைத்தான் இப்பொழுது சொல்கிறான்.

உங்ககிட்ட டாக்டர் சொன்னாங்களா? பேஷண்ட்டைப் பத்தி, இன்னொருத்தர்கிட்ட சொல்ல கூடாதுன்னு தெரியாதா அவங்களுக்கு?ஹா ஹா… நான் இன்னொருத்தன் இல்லங்கிறது வேற விஷயம் ப்ரியா! ஆனா, ஒரு வருஷம் கழிச்சு, நீயா கேக்காம, கூப்பிடாம, டாக்டரே எப்டி வந்தாங்கன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கியா?

ஆங்… அதானே?

என்ன நடக்குது ராம்? நீ சொல்லிதான் சார்மிளா வந்தாங்களா? உனக்கு எப்டி தெரியும்?

ப்ரியாவுக்கு சில பயம் இருந்துதும்மா. தனியா, நம்ம டிரைவர் கூட போறதுக்கு கூட, உள்ளுக்குள்ள பயப்பட்டா! ஆம்பிளைங்க மேல ஒண்ணு பயமோ, இல்லாட்டி கோபமோ இருந்துகிட்டே இருந்துது! உங்க விஷயம் தெரிஞ்சு, அவ நார்மல் ஆகுற வரைக்கும், மருதமலை பேரைச் சொன்னாலே, டென்சன் ஆவா! என்னோட பர்த்டேக்கு, நான், நீ தாத்தா எல்லாம் அவளை அடம்புடிச்சி கூட்டிட்டு போற வரைக்கும், அங்க போகவே பயப்பட்டா! அன்னிக்கும், உங்கக் கையை புடிச்சிகிட்டு, கண்ணை மூடிகிட்டு, தூங்குற மாதிரி நடிச்சி, ரொம்பவே சிரமப்பட்டா! இப்டி சொல்லிட்டே போலாம்!

இதெல்லாம் கவனிச்சதுனாலத்தான், நான் டாக்டரையே கூட்டிட்டு வந்தேன்.

ரம்யாவிற்கு மட்டுமல்ல, ப்ரியாவிற்கும் உள்ளுக்குள் மலைப்பாக இருந்தது! இவ்ளோ கவனிச்சிருக்கானா என்று?!

ரம்யா வருத்தத்தோடு ப்ரியாவிடம் கேட்டாள்!

என்கிட்ட கூட சொல்லாம மறைச்சுட்டீல்ல ப்ரியா? என்று வருத்தமாகக் கேட்டாள்!

அப்பொழுதுதான், ப்ரியா அந்த வார்த்தையை விட்டாள்!

உங்ககிட்ட சொல்லனும்னு என்ன கட்டாயம்? உங்க வீட்ல இருந்தா, உங்களுக்கு அடிமைன்னு நினைச்சீங்களா??? என் வாழ்க்கையை, நான் முடிவு பண்ணிக்குவேன். தேவையில்லாம நீங்க தலையிடாதீங்க!அதில் கோபமடைந்த ராம், அவளை அடிக்கக் கை ஓங்க, அவனை முதலில் எதிர்த்தது ரம்யாவே!

ஒரு பொண்ணுகிட்ட அடிக்க கை ஓங்குற? இதான், நான் வளர்த்த முறையா?

ரம்யா தன்னைத் திட்டியதால், ‘இப்ப உனக்கு சந்தோஷம்தானே’ என்று ப்ரியாவைத் திட்டி விட்டு, ராம் அவனது அறைக்குச் சென்றான்!

ஒன்றாயிருந்த மூவரும், ஆளுக்கொரு திசையில்!

ஒரு மணி நேரம் கழித்து, ராமின் அறைக்கு வந்த ரம்யா,
சாரி ராம், ரொம்ப ஹார்ஷா பேசிட்…. என்று சொல்லிக் கொண்டு வந்தவளின் பேச்சு நின்றது! ஏனெனில், ராம், ரம்யாவைப் பார்த்து ஜாலியாகச் சிரித்துக் கொண்டிருந்தான்!

டேய், நான் உனக்காக எவ்ளோ ஃபீல் பண்ணிட்டு வந்தா, நீ சிரிச்சிட்டிருக்க!

சும்மா தேவையில்லாம, ஃபீல் பண்ணாத டார்லிங்! போயி, இதை சாக்கா வெச்சு, அவளை கன்வின்ஸ் பண்ற வழியை பாரு! போ! எலி வளையில மாட்டிருச்சி! நான் கூட கல்யாணத்துக்கு, அவளை ஒத்துக்க வைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, அவளே வந்து மாட்டிகிட்டா!

என்னடா சொல்ற?

ஆமா! உன்னைத் திட்டுனா பதிலுக்கு கோபத்துல, இவ இல்லாட்டி வேற பொண்ணே இல்லைய்யான்னு நீயோ, இல்ல, எங்கம்மாவைத் திட்டுற பொண்ணு எனக்கு தேவையில்லைன்னு நானோ, சொல்லுவேன்னுதான் அவ வேணும்ன்னே அப்டி பேசுனா! இப்ப, நானும் நீயும், இப்டி இருந்தா, மனசு கேக்காம, அவளே வந்து உங்ககிட்ட பேசுவா பாருங்க! அப்ப, கன்வின்ஸ் பண்ணுங்க!

அவ வேணும்ன்னே பேசுனாளா?

பின்ன? அவளாவுது, உங்களைத் திட்டுறதாவுது! நான் உன்னைத் திட்டுனாலே சண்டைக்கு வந்துடுவா! அவ போயி, உங்களைத் திட்டுறதா?! எல்லாம் பாவ்லா! அவ உன்கிட்ட தன்னோட பிரச்சினைகளைச் சொல்லாததுக்கு காரணம், தெரிஞ்சா நீ ஃபீல் பண்ணுவன்னுதான்! ஆனா, இங்க மாத்தி பேசிட்டிருக்கா! சாயங்காலமே வருவா பாருங்க!

ராம்...

அடிக்கடி ஷாக் ஆவுறதை நிறுத்துமா? உனக்கு இதுல விருப்பம்தானே? இல்ல, எல்லா அம்மா மாதிரியும், பெரிய இடம், அந்தஸ்துல்லாம் பேசப் போறியா?

போடா! எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? நான் மட்டுமில்லை, விஷயம் தெரிஞ்சா, கணேசப்பாவே ரொம்ப சந்தோஷப்படுவாரு!

அதெல்லாம் உன்கிட்ட இன்னிக்கு சொன்னவுடனே, அவருக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்!

ஆங்…

ஷாக்கை குறை! போயி கோபத்தை அப்டியே மெயிண்டெய்ன் பண்ணு! அவ பேச வந்தா கன்வின்ஸ் பண்ணு! போ!

சரியான எமாத்துக்காரண்டா நீ!

பார்ரா, லவ் பண்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ப்ளான் பண்றவன் ஏமாத்துகாரனா?! நேரந்தான்! என் கவலையெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!

என்னடா?

ம்ம்.. எல்லா வீட்டுலியும் வர்ற, மாமியார் மருமக சண்டையை என்னால பாக்கவே முடியாதுல்ல?! அதான்!

ஹா ஹா ஹா

காலையில் நடந்த சண்டை, மாலை வரை நீடிக்கவும், ப்ரியாவே, ராம் சார்பாக, ரம்யாவிடம், சண்டைக்குச் சென்றாள்! ராம் இருக்கும் போதே!

தப்பு பண்ணது நானு! நீங்க ஏன் உங்களுக்குள்ள பேசாம இருக்கீங்க? உங்களை யாராவது அப்டி பேசுனா, நானே சண்டைக்கு போவேன்! அப்ப நான் பேசுனா, அவரு சும்மா இருப்பாரா? அவரு செஞ்சது சரிதான் ரம்யாம்மா! எ… என்ன இருந்தாலும் நான் பேசுனது தப்புதானே?! சொல்லப் போனா, ஏண்டி இப்டி பேசுனன்னு, நீங்களே என்னை அறைஞ்சிருக்கனும்?இது எனக்கும், என் பையனுக்கும் இருக்கிற சண்டை ப்ரியா! இதுல தலையிட நீ யாரு? என் மருமகளா? ம்ம்ம்?

ரம்யாம்மா…

இங்க பாரு ப்ரியா, பிரச்சினைக்கு காரணமே அவன் கல்யாண விஷயம்தான்! அதுனால, அவன் கல்யாணம் நடக்குற வரைக்கும், நான் அவன் கூட பேச மாட்டேன்!

அம்மா, நான் ப்ரியாவைதான் கல்யாணம் பண்ணிக்குவேன். ப்ரியாவுக்கு விருப்பமில்லாட்டி, விட்டுடுங்க, 4.5 வருஷம் போகட்டும் பாக்கலாம்!அப்ப அதுவரைக்கும் என்கிட்ட பேசாத!

என்ன ரம்யாம்மா இப்டி பேசுறீங்க? அவருக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும்? ப்ளீஸ் ரம்யாம்மா!

என்ன, அவனுக்காக ரொம்ப ஃபீல் பண்ற? நீ வேணாம்னு சொன்னாக் கூடத்தான் கஷ்டப்படுவான். அதுனால நீ மனசை மாத்திகிட்டியா என்ன?

என்னம்மா நீங்களும் இப்டி பேசுறீங்க?! அதென்ன பொண்ணுங்கன்னா கல்யாணம் பண்ணியே தீரனும்? ஆண்கள் இல்லாம சாதிக்க முடியாதா? பொண்ணுங்கன்னா என்ன குறைச்சல்?

அப்ப, ஆம்பிளைங்க தங்களை உசத்தின்னு நினைச்சுக்கிறாங்க! பொண்ணுங்க சளைச்சவிங்க இல்லைன்னு நீ சொல்லுற? அப்டித்தானே ப்ரியா? கேட்டது ராம்!

ஆமா சார்!!! உண்மைதானே? நிறைய ஆண்கள் அப்டித்தானே யோசிக்கிறாங்க?

ஸ்ஸ்… சார் இல்லை! ராம்! ஏன் ப்ரியா, நாங்கதான் உயர்ந்தவங்கன்னு சொல்ற எந்த ஆம்பிளையாவுது, நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு பேசி பாத்துருக்கியா?

அவன்தான் உசத்தியாச்சே? அப்புறம் ஏன் தேடித் தேடி, குறைச்சல்னு நினைக்கிற ஒரு பொண்ணைப் போய் கல்யாணம் பண்ணனும்? ம்ம்?

ஆங்… (அதனே?!)

பொண்ணுங்கதான் ப்ரியா, ப்ரூவ் பண்ணனுங்கிறதுக்காக கல்யாணம் தேவையில்லைன்னுன்னு பேசிட்டிருக்காங்க! ஆனா எந்த ஆம்பளையும் அப்டி இல்லை! உலகத்துல இருக்குற எல்லா, ஆம்பிளையும், பொம்பிளையும் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சா, அடுத்த சந்ததின்னு ஒண்ணே இருக்காது!

ப்ரூவ் பண்றதுக்கு, உருப்படியா வேற எத்தனையோ விஷயம் இருக்கு! மத்தவிங்க எப்டியோ, அது அவிங்கவிங்க விருப்பம். ஆனா, நீ பேசுறதுக்கு காரணம் என்னான்னு உன் அடி மனசுக்கும் தெரியும்! எனக்கும் தெரியும்!

நீ பேசுறது பெண்ணுரிமையோ, சுதந்திரமோ இல்லை. ப்யூர் எஸ்கேபிசம்! வாழ்க்கையை எதிர் கொள்றதுல இருக்குற பயம்! அந்தப் பயத்தை மறைக்க, இந்தப் பேச்சு பேசி எல்லாத்தையும் ஏமாத்திட்டிருக்க! உன்னையும் சேத்து!

எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா, என்னை ஏமாத்த முடியாது! நான் சொல்றதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்! என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்!

ராமின் வார்த்தைகளும், அவன் பேசும் போது, அவளை ஆழமாகப் பார்த்த அவன் கண்களும் சொன்னது, ராம், அவளின் அடி மனதை படித்திருக்கிறான் என்று!

ரம்யாவிடம் கூட அவள் மூடி மறைத்திருக்கும் சில விஷயங்களை, அவன் தெரிந்திருக்கிறான் என்று! எந்தளவு தெரிந்திருக்கிறானோ என்று மலைத்து நின்றாள்!

மலைத்து நின்ற ப்ரியாவையே அன்பாய் பார்த்தாள் ரம்யா! தானும் கூட கண்டு கொள்ளாத ஒரு விஷயத்தில், தனியாக போராடியிருக்கிறாள் ப்ரியா. தனக்காக, வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள் என்றதும் ரம்யாவுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு! மெல்ல அவளை அசைத்தாள் ரம்யா!

ப்ரியா!

தன்னை அசைத்த ரம்யாவிடம் திரும்பிய ப்ரியா, உணர்ச்சி தாங்காமல் அவளது மடியிலேயே சாய்ந்தாள்!

என்ன ப்ரியா குழப்பம்? ராமை பிடிக்கலியா? அவன் மேல நம்பிக்கை இல்லியா? என்ன பிரச்சினை?

அவளது அன்பில் தெம்படைந்தவள், கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனுமாம்மா? நானும், உங்களை மாதிரியே இருந்துடுறேனே?! ப்ளீஸ்!

ப்ரியா! என்று கோபத்தில் கத்தினாள் ரம்யா!

அவளது கோபத்தில் ப்ரியாவே அதிர்ந்து நின்றாள்!
இங்க பாரு, நீ ராமைக் கல்யாணம் பண்றியோ, பண்ணலியோ, ஆனா, என்னை மாதிரியான ஒரு வாழ்க்கை உனக்கு வேணாம்? உனக்கு என்னடி தெரியும் என்னைப் பத்தி?

ரம்யாம்மா…

எத்தனை நாள், நான், தனியா ஃபீல் பண்ணியிருக்கேன்னு உனக்கு தெரியுமா? துள்ளி குதிக்குற வயசுலியே, எல்லாப் பொறுப்பையும் எடுத்துகிட்டு, திகைச்சு நின்னது எனக்குதான் தெரியும்! எல்லாத்தையும் மீறி சாதிச்சாலும், யார் கூட சேர்ந்து சந்தோஷப்படுறதுன்னு கூடத் தெரியாம, தனியா உக்காந்து சிரிச்சது தெரியுமாடி?

நான் அதட்டி வேலை வாங்க ஆயிரம் பேர் இருக்காங்க! ஆனா என்னை அதட்டி, இந்த வேலையைச் செய்னு அன்பா சொல்ல ஒருத்தரும் இல்லை! மனசுக்கு நெருக்கமானவிங்க, இதைச் செய்னு உரிமையா சொல்றப்ப கிடைக்கிற சந்தோசம் வேறெதுலியும் இல்லடி! ஆனா, எல்லாரும் என்கிட்ட தள்ளியேதான் நின்னாங்க!

பல வருஷம் கழிச்சு ராம் வர்ற வரைக்கும், மனசுக்கு நெருக்கமா யாருமே இல்லாம புழுங்கினது தெரியுமா? உள்ளுக்குள்ள இருக்குற சின்னச் சின்ன அல்பத்தனமான ஆசையைக் கூட நிறைவேத்திக்க முடியாம, என் அந்தஸ்த்து, சமூகம், பணம் இதுக்காக பாத்து பாத்து எதையும் நிறைவேத்திக்க முடியாம தவிச்சது தெரியுமா?
அன்னிக்குச் சொன்னியே, வேற ஒருத்தி மருமகளா வந்தா, என் பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு. உண்மையாலுமே, ராமுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம், நான் யார் தோள்ல சாய்வேன், வர்றவ, எங்களை நல்லாப் புரிஞ்சிக்கனுமேன்னு நான் தினமும் பயந்துட்டிருக்குறது உனக்கு தெரியுமா?

எல்லாத்தையும் தாண்டி, என்னதான் ராமோட தோள்ல நான் சாய்ஞ்சாலும், நைட்டு தனியா படுக்குறப்ப, அந்த நேரம் சாஞ்சுக்க ஒரு தோள் இல்லைன்னு நினைக்கிறப்ப வர்ற ஏக்கம், துக்கம், வெறி இதெல்லாம் உனக்கு தெரியுமா? 25 வருஷமா தனியாவே தூங்கிட்டு இருக்குறேண்டி! அது கொடுக்குற வலி என்னான்னு தெரியுமா உனக்கு?

என்கிட்ட நெருங்கிறவங்களை அடிச்சு விரட்டுனாலும், எவ்ளோ சுயக் கட்டுப்பாட்டுல நான் இருந்தாலும், என் வைராக்கியத்துக்கும், இளமை உணர்ச்சிக்கும் நடுவுல நான் போராடுனது உனக்கு தெரியுமாடி?

எத்தனை நாள் சலனப்பட்டிருப்பேன், அதைச் சொல்லி டிஸ்கஸ் பண்ணவோ, சஜசன் கேக்கவோ கூட யாரும் இல்லாம, எ… என்னதான் இ…இருக்குன்னு ஒரு தடவை பாத்துடலாமான்னு நினைச்சு, உள்ளுக்குள்ள தடுமாறி, அதையும் மீறி, இன்னமும் இவ்ளோ வைராக்கியமா இருந்திருக்கேன்னா, அது ராமுக்காக மட்டும் தாண்டி!

நான் ஏங்குனது வெறும் செக்சுக்காக இல்லடி!என் மேல தப்பு இருந்தாலும், நான் வீம்பு புடிச்சு நிக்கனும். அப்ப, என்கிட்ட வந்து என்னை ஒருத்தரு சமாதானப்படுத்தனும்! என் மேல எந்த தப்பே இல்லன்னாலும், இன்னொருத்தருகிட்ட போயி சாரிங்க, என்னை மன்னிச்சிருங்க, என்கிட்ட பேசுங்கன்னு, நான் வெக்கத்தை விட்டுக் கெஞ்சனும்! நான் ஒருத்தருகிட்ட குழந்தைத் தனமா நடந்துக்கனும்! என் மனசுக்கு புடிச்சவரு டயர்டா நிக்குறப்ப, ஒரு தாயா அவரைத் தாங்கனும்!

எல்லாத்தையும் தாண்டி, ஆயிரம் சண்டை போட்டாலும், கோபத்துல பேசாம நின்னாலும், நைட்டு, பக்கத்துல படுத்தி சமாதானப்படுத்திட்டு, அவருக்காக நானும், எனக்காக அவரும் உருகி, ஒரே ஒரு ஆழமான முத்தம் கொடுக்குறதுல இருக்குற சந்தோஷம், எந்தக் காசும், பெருமையும், அந்தஸ்த்தும் தந்துடாதுடி!

வெக்கத்தை விட்டுச் சொல்றேண்டி… ராம் மாதிரி ஒருத்தன் வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேட்டிருந்தா, கால்ல உழுந்துருப்பேண்டி! வந்தவன் எல்லாம் படுக்கறதுக்கும், காசுக்காகவும் தான் பாத்தானுங்க! நல்லதை சொல்லிக் கொடுத்து வளர்த்த எங்க அப்பா அம்மா, கொஞ்சம் சுயமரியாதை, தன்மானத்தையும் சேத்து சொல்லிக் கொடுத்து தொலைச்சிட்டாங்களே! எப்டி ஒத்துக்குவேன்? கேவலம் உடம்பு சுகத்துக்காக வந்தவன்னு என்னை பாக்க மாட்டான்? ம்ம்ம்?

என் பையன்கிறதுக்காச் சொல்லலடி! ராம் மாதிரி ஒருத்தனை உட்டுட்டு, அவன் கூட சேந்து சாதிக்கிறதை விட்டுட்டு, வேற என்னத்தைடி பெருசா, தனியா சாதிச்சிடப் போற பைத்தியக்காரி?

நான் இவ்ளோ ஃபீல் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா, ராமே தாங்க மாட்டான்! அவன்கிட்ட கூட நான் இதெல்லாம் சொன்னதில்லை! உன்கிட்ட மட்டும்தான் என்னைப் பத்தி சொல்லியிருக்கேன். இது தெரியாம, என்னை மாதிரி வாழ்க்கை வாழுறாளாம்! பெருசா பேச வந்துட்டா! அறிவு கெட்டவ!கோபமாக ஆரம்பித்தாலும், பேசப்பேச உணர்ச்சி தாங்காது, லேசான கண்ணீருடன் வெடித்த ரம்யாவின் உணர்வுகள் புரிய ஆரம்பித்த நொடியில், ப்ரியாவின் கண்களில் கண்ணீர் பயங்கரமாக வர ஆரம்பித்தது!

அவள் பேசி முடித்த உடன், ரம்யாவின் மடியிலேயே படுத்து, சாரிம்மா… சாரிம்மா… ஏம்மா, என்கிட்ட சொல்லவே இல்லை! சாரிம்மா! ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?! என்று புலம்பினாள்! ரம்யாவின் கஷ்டங்கள் எல்லாமே, தன்னால்தான் என்பது போல் உருகினாள்! ஆனால் அவளையறியாமல், ரம்யாம்மா, அம்மாவாக மாறியிருந்தது.

வெடித்தது என்னமோ ரம்யாதான் என்றாலும், அவள் கடந்து வந்த உணர்ச்சிப் போராட்டங்களுக்காக பெரிதும் உருகியது ப்ரியாதான்!

அப்பொழுதும் ரம்யாவின் உணர்வுகளை மிகச் சரியா ப்ரியா உள்வாங்கியிருந்தாள்! வேறு யாராவது இருந்திருந்தால், அதைச் சரியாக உணர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே? அதை ஒரு உடல் தேவையாக மட்டுமே பார்த்திருப்பார்கள்! ப்ரியாவால்தான், இதையும் புரிந்து கொள்ள முடிந்தது!

இவ்வளவு நாள் அடைத்து வைத்திருந்த உணர்வுகள், அத்தனையையும் கொட்டியதில், ரம்யாவிற்க்கும் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்தது! சிறிது நேரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள்!

பின் கண்களைத் துடைத்தவாறே நிமிர்ந்த ப்ரியா, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குறேம்மா!

ப்ரியா இப்பியும் சொல்றேன். நீ ராமைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியமில்லை! வேற யாரா வேணா இருக்கலாம். ஆனா, கல்யாணம் பண்ணிக்கனும். பொறுமையா கூட பண்ணிக்கோ. நல்லா யோசிச்சு முடிவெடு! நான் சொன்னது எல்லாமே, என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறதுக்காக இல்லை! புரியுதா?

உங்க பையன் மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க, நான் கொடுத்து வெச்சிருக்கனும்மா! அதுவும் என் நிலை தெரிஞ்சும், அவர் லவ் பண்றாருண்ணா….

நான் தயங்கினது வேற காரணம்மா! அதை விடுங்க, அதை நான் பாத்துக்குறேன்! முழு மனசா சொல்றேன்! எனக்கு சம்மதம்! வாழ்நாள் முழுக்க, இந்தக் குடும்பத்தோடத்தான், அதுவும் உங்களோடத்தான் இருப்பேங்கிறது எனக்கு எவ்ளோ பெரிய சந்தோஷம் தெரியுமா?!

ஆனா ஒரு கண்டிஷன்!

என்ன?

இனிமே இப்டி உள்ளுக்குள்ளியே ஏதாவது நினைச்சி ஃபீல் பண்ணீங்க, அப்புறம் நான் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்! நீங்கதானே சொன்னீங்க, அன்பா அதட்ட ஆளில்லைன்னு! ஏண்டா சொன்னோம்னு நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு திட்டிபுடுவேன்! ஓகேயா?! நல்லா யோசிச்சுக்கோங்க! உங்க வீட்டுக்கே வந்து, உங்களேயே அதட்டுற, என்னை மாதிரி ஒரு மருமக உங்களுக்கு வேணுமான்னு?! அப்புறம் நாளைக்கு ஃபீல் பண்ணீங்கன்னா, பிரயோஜனமேயில்லை! உங்களுக்கு கடைசி சான்ஸ் தர்றேன்! என்னச் சொல்றீங்க?

அன்பான, வெகுளித்தனமான, உரிமையான, தன்னைத் தேற்றப் பேசிய ப்ரியாவின் பேச்சிலும், சிரிப்பிலும், ரம்யாவின் மனமும் நிறைந்தது!

ஏய் வாயாடி என்று ப்ரியாவோடு சேர்ந்து ரம்யாவும் சிரித்தாலும், இருவரது மனதும் நிறைந்திருந்தது!

அடுத்த நாள், மாலை தோட்டத்தில்!

ரம்யாம்மா, அதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்ல?! அப்புறம் ஏன் அவசரமா கல்யாணம் பண்ணனும்? நானும் படிப்பை முடிச்சுடுறேன்! வயசும் கம்மிதானே? கேஸ் தீர்ப்பும் வந்துடட்டுமே?! ரெண்டு, மூணு வருஷம் போகட்டுமே?

ப்ரியா சொல்றதும் சரிதானே ராம்?

அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு, அன்னிக்கு பேச்செடுத்ததுக்கு காரணமே, கேஸ் தீர்ப்பு வர்றதுக்குள்ள, கல்யாணம் நடக்கனும்னுதாம்மா!

ஏன் ராம், கேஸ் நமக்கு சாதகமா தீர்ப்பு வராதுன்னு நினைக்கிறியா?

இல்லம்மா, கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்! அதுல எனக்கு டவுட்டே இல்லை. அதுனாலதான் சொல்றேன், தீர்ப்புக்கு முன்னாடியே, கல்யாணம் நடக்கனும்னு!

குழப்புற ராம்!

அம்மா, நான் ப்ரியாவும் உங்களை மாதிரியே, எல்லாருக்கும் முன்னுதாரணமா இருக்கனும்னு நினைக்கிறேன். தீர்ப்பு சாதகமா வந்த பின்னாடி நடக்குற கல்யாணம், கொஞ்சம் சாதாரணம்தான்!

இந்தக் கல்யாணம், தீர்ப்பு வந்தப்புறம், ப்ரியா தன்னை ப்ரூவ் பண்ண பின்னாடி, நடக்குற கல்யாணமாவோ, இல்லை பரிதாபத்துல நடக்குற கல்யாணமாவோ இருக்கக் கூடாது!

தீர்ப்புக்கு முன்னாடியே நடக்குற கல்யாணம், ப்ரியாங்கிற தனிப்பட்ட கேரக்டருக்காக, அவ நல்ல மனசுக்காக மட்டுமே நடக்குற கல்யாணம்!

எல்லாத்தையும் தாண்டி, இந்த மாதிரி சம்பவங்களைத் தாண்டி, வாழ்க்கை இருக்குங்கிறதையும், இது பெண்களுக்கு அசிங்கமில்லைங்கிறதுக்கும், ப்ரியா முன்னுதாரணமா இருக்கனும்னு நான் விரும்புறேன். ஓகேயா?

ஆரம்பத்தில் ப்ரியா புலம்பிய, இது எனக்கு எப்டிப்பா அசிங்கம் என்ற கேள்விக்கான பதிலை, எல்லாருக்கும் சொல்லவேண்டும் என்று நினைக்கும், ராமை நினைத்து, ரம்யா, ப்ரியா இருவருமே மலைத்து நின்றனர்!

ரொ… ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ராம்! உன்னை என் பையன்னு நினைக்கிறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்குடா! தாங்க்ஸ்டா! என்று ரம்யாவே உணர்ச்சி வயப்பட்டாள்! அவனை கன்னத்தோடு முத்தமிட்டாள்!ஆனால் ப்ரியாவோ, உள்ளுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் கரை புரண்டோடினாலும், உனக்கு நான் வேணாண்டா என்று கதறலோடு, அவன் தோள் சாய்ந்து, அவனை ஆவேசமாக முத்தமிட வேண்டும் என்று ஆவேசமடைந்தாலும், அதை முழுக்க காட்டாமல், ராமையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்!

ரம்யா சென்றவுடன், ப்ரியாவின் அருகில் சென்ற ராம்,ஏய் கண்ணைத் துடைடி, சும்மாச் சும்மா செண்டிமெண்ட்டா ஃபீல் பண்ணிகிட்டு! லவ் பண்றேன்னு சொல்றேன், ஒரு ரொமாண்டிக் லுக் விடுவன்னு பாத்தா, கண்ல தண்ணி விட்டுட்டிருக்கா?!

ஆக்சுவலா நீ கொடுக்க வேண்டிய முத்தத்தை, என் கேர்ள்ஃபிரண்டு கொடுத்திட்டு போயாச்சு! நீ என்னான்னா…

உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், அவன் சீண்டலிலும், டி என்ற அழைப்பிலும் கோபம் அடைந்தது போல், வெவ்வெவ்வே, ரொம்பத்தான்… என்று பழிப்பு காட்டி விட்டுச் சென்றாள்!

அதன் பின் காரியங்கள் துரிதமாயின! கணேசன் மட்டும், என்னை லவ் பண்ணிட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்குறியேம்மா என்று ப்ரியாவை சீண்டினார்! ப்ரியா மீண்டும் ஒரு முன்னுதாரணமாக மாற, ராம் நினைத்ததையே, அனைவரும் பேச, ஒரு நல்ல நாளில், ராமின் மனைவியாக, ப்ரியா மாறினாள்!

இத்தனை நடந்திருந்தாலும், ப்ரியாவின் மனதுக்குள் ஓடும் சில எண்ணங்களை, அவளின் சில தவிப்புகளையும் அவள் மறைத்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை அறிந்திருந்த ராமும், அமைதியாகவே இருந்தான்! 


இத்தனை நடந்திருந்தாலும், ப்ரியாவின் மனதுக்குள் ஓடும் சில எண்ணங்களை, அவளின் சில தவிப்புகளையும் அவள் மறைத்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை அறிந்திருந்த ராமும், அமைதியாகவே இருந்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக