http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 8

பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2020

அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 8

 இந்தக் கதையை, ராமிடம் கணேசன் சொல்லும் போது, ராமின் வயது 16.


உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ரம்யா, ராமின் 5 வயது வரை மட்டுமே, அவனுடன் மிக நெருக்கமாக இருந்தாள். அதன் பின், பாசம் இருந்த அளவிற்கு, கண்டிப்பும் இருந்தது.

ராமிற்கு தாயும், தந்தையுமாக ரம்யா இருந்ததால், எந்த குழந்தைக்கும் 15, 16 வயதில் வரும் அப்பாவின் மீதான கோபம், தன் சுதந்திரம் பறிக்கப்படுவதாக வரும் எண்ணம், ராமிற்கு வந்த பொழுது, அதற்கு காரணம் ரம்யாதான் என்று எண்ணினான்.

இடைப்பட்ட காலங்களில் ரம்யா, படிப்பை முடித்திருந்தாள். கோவையின் தொழிலதிபர் ஆகியிருந்தாள். அவள் அழகையும், நிலையையும் நினைத்து, அவளை அணுக முயன்றவர்களிடம், அவள் நெருப்பு என்று நிரூபித்திருந்தாள்.நேரடியாக வெல்ல முடியாவிட்டால், அவர்களைப் பற்றி கிசுகிசுக்களையும், அவதூறுகளையும் பரப்பும் கூட்டம், ஒரு பெண், அதுவும் அழகான பெண் ஜெயிக்கிறாள் என்றால் சும்மா இருக்குமா?ஆனால், எந்தப் பேச்சுக்களும், அவளுடைய வெற்றியை பாதிக்கவேயில்லை! அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளவும் இல்லை! ரம்யா ஒரு ஐகானாக மாறியிருந்தாள்.

கணேசனோ, அரசியலில் இன்னும் செல்வாக்கு பெற்றிருந்தார். ரம்யாவிற்கு துணையாக இருக்க, அரசியலில் இருந்து ஒதுங்க நினைத்தவரை, ரம்யாதான் விடவில்லை! இப்போது மாநில அரசியலில் இருந்து, மத்திய அரசியலுக்கு சென்றிருந்தார். கோவையின் சில தொகுதிகளில் இவர் நினைப்பவர்தான் சட்டமன்ற உறுப்பினர்.

எந்தக் குழந்தைக்கும் முதலில் வரும், அப்பாவின் மீதான ஏக்கம் ராமிற்கும் வந்தது. உள்ளுக்குள் எவ்வளவு அன்பு இருந்தாலும், முழுதாக காட்டாத ரம்யாவின் பாசத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் ராமிற்கு வரவில்லை. அவனது தனிமை உணர்வு, அவனுக்குள் கொஞ்சம் கோபமாக மாறியது.

பதின்ம வயதுகளில் வரும் தடுமாற்றம், கண் முன்னே இருக்கும் காசு, அதிகாரம் கொடுக்கும் திமிர், அதே பணக்காரத் திமிரில் வளைய வரும் கூட்டத்தின் நட்பு, இவை எல்லாவற்றையும் தாண்டி அப்பா மீதான ஏக்கமும், அவரையும், ரம்யாவையும் பற்றி வெளியே பேசும் சில பேச்சுக்களும் இவன் காதில் விழ, இவனது கோபமும், பிடிவாதமும், அந்த வயதிற்குரிய தடுமாற்றமும் சேர்ந்து இவனை, லேசாகத் தடம் மாற வைத்தது.

தன்னுடைய 16வது பிறந்த நாளுக்கு வெளியே சென்றவன், திரும்பி வரும் போது குடித்திருந்தான்! அதை விட முக்கியம், இதுல என்ன தப்பு என்று ரம்யாவிடம் கேட்டதுதான்!

தன் மகனுடைய செயலைக் கண்டு வெகுண்டவள், முதன் முதலாக அவனை அறைந்தாள். அவள் அறைந்த பின் தான், ராமிற்கு ஒன்று உறைத்தது! அது,

பாசமே காமிக்கவில்லை என்று குற்றம் சொன்ன தன் அம்மா, இதுவரை நினைவு தெரிந்து, தன்னை அடித்ததேயில்லை என்று?!

அடித்ததானால் முதலில் அவனுக்கு கோபம் வந்தது. பின் அவனுக்கு அவமானமாய் இருந்தது. ஆனால் நிதானமடைந்து பார்க்கையில்தான் அவனுக்கு இன்னொன்றும் புரிந்தது. அது,

அவ்வளவு கோபத்திலும், வேலைக்காரர்கள் முன்னிலையில் அடிக்காமல், ராமின் அறைக்கு கூட்டி வந்து அடித்தாள் என்பதும், அடித்த பின்பும், ரம்யாவின் கண்களில் இன்னும் கண்ணீர் மீதமிருந்ததையும்!

அவள் இடையில் புலம்பியது ஒன்றுதான்.

நீயும் என்னை ஏமாத்துறியேடா?!அவளது அடி கொடுக்காத வலியை, அவளது சொற்களும், கண்ணீரும் கொடுத்தது. ராம், ரம்யாவின் வளர்ப்பு என்பதால், உடனே சுதாரித்துக் கொண்டான். தவறு தன்னுடையது என்று புரிந்தவன், நேராகச் சென்று நின்றது, தாத்தா கணேசனிடம்!

ஆனால் அவரோ, ரம்யா அழுததைக் கேட்டு, மிகவும் சந்தோஷமடைந்தார்!

என்ன தாத்தா, நான் தப்பு பண்ணிட்டேன்னு சொன்னதுக்கு, கோபப்பட மாட்டேங்குறீங்க? அம்மா அழுததுக்கு சந்தோஷப்படுறீங்க?

இல்லடா கண்ணா, மனுஷன்னா சிரிக்கனும், அழனும், தப்பு பண்ணனும், செஞ்ச தப்பை உணரணும், அதுலருந்து பாடம் கத்துக்கனும்.

எப்ப நான் தப்பு பண்ணிட்டேன்னு நீயா வந்து சொன்னியோ, அதுவே எனக்கு சந்தோஷம்! உன் வயசுக்கு, செஞ்ச தப்பை ஒத்துகிட்டது ரொம்பப் பெரிய விஷயம்!

ஆனா, உங்க அம்மா, அழுதோ, சிரிச்சோ, சந்தோசம், துக்கம் எதையும் வெளிகாட்டியோ இந்தப் 16 வருஷமா பாத்ததேயில்லை!

நீ குழந்தையா இருக்குறப்ப, அவளும் குழந்தையா உன் கூட விளையாடுனா! உனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சதுக்கப்புறம் அதையும் குறைச்சுகிட்டா! என் காது படவே என்னென்னமோ பேசுற கூட்டம், உங்க அம்மா காது பட, என்னென்ன பேசியிருப்பாங்க?! அதுவே, அவளை பாதிச்சிருக்கும்! எல்லாத்துக்கும் ஒரே மாதிரி இருக்க பழகிட்டா!

இந்த வயசுல உனக்கு, உன் அப்பாவைப் பத்தி பேச்சு கேக்குறதே கஷ்டம்னா, அவ என்னென்ன கேட்டிருப்பா? உன்னை வயத்துல சுமந்தப்ப, அவளுக்கு உன்னை விட வயசு கம்மிடா! என்னதான் என் பதவி, செல்வாக்கு அவளுக்கு துணையா இருந்தாலும், கருவை அழிக்க மாட்டேன்னு அவ முடிவு எடுத்தப்ப, கல்யாணமும் நடக்கலை, என்னோட சப்போர்ட் கிடைக்குமான்ன்னும் அவளுக்கு தெரியாது! அவ வாழ்க்கைல ஃபேஸ் பண்ண கஷ்டத்தை விடவா, நீ ஃபேஸ் பண்ணிட்ட?

இந்தக் கஷ்டமே தாங்க முடியலைன்னு நீ குடிக்கிறன்னா, உங்க அம்மாதாண்டா நிறைய குடிக்கனும்!

எல்லாத்துக்கும் அமைதியா இருந்தவ, இன்னிக்கு அழுதான்னா, அதுதாண்டா உன் மேல வெச்சிருக்கிற பாசம்! இப்பிடியே உணர்ச்சியை அடக்கி, அடக்கி, அவளுக்கு ஏதாவது ஆயிருமோன்னு கூட பயந்திருக்கேன்!

உன் மேல இருக்கிறது வெறும் பாசம் மட்டுமில்லை! முழு நம்பிக்கை! அதை நீ காப்பாத்துனாலே போதுண்டா! அவ, சந்தோஷமா இருப்பா! நீதாண்டா அவளுக்கு சந்தோஷத்தைத் தரணும்!

தாத்தாவின் பேச்சு, அன்று ராமை முழுக்க மாற்றியிருந்தது. இதுவரை அவனுக்கு அவமானமாய் இருந்த விஷயம், இப்போது மிகவும் பெருமையாய் மாறியிருந்தது! ரம்யாவின் மீதான அவன் பாசம், பன் மடங்கு உயர்ந்திருந்தது!

இயல்பிலேயே மிகவும் புத்திசாலியான, நல்லவனான ராம் இன்னொன்றும் கவனித்திருந்தான். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ரம்யாவிடம், வெறும் அன்பு சாதிக்காததை, அன்பு கலந்த அதட்டல் எப்போழுதும் சாதிக்கும்!

ராம் மீண்டும் போய், பாசத்தை மட்டும் காட்டியிருந்தால், ரம்யாவும், தன் கூட்டுக்குள் சென்றிருப்பாள். ஆனால் ராம் காட்டியது பாசம் மட்டுமல்ல! Man of the House என்று சொல்லப்படும், அன்பையும், அதிகாரத்தையும் காட்டினான்!

அவனை அறைந்த பின், அடுத்த நாள் முழுதும் அவனிடம் பேசாதவள், உள்ளுக்குள் வருத்தத்துடனும், கோபத்துடனும் இருந்த சமயத்தில்தான், ராம் அந்தச் செயலை செய்தான்!

குளித்து முடித்து, சோஃபாவில் அவளருகே சென்று அமர்ந்தவன், அவளது தோள்களைச் சுற்றி கைகளைப் போட்டு, அவளைத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டான்! அதுவும் பட்டப் பகலில், நடு ஹாலில்!

ராமின் செயலைக் கண்டு அவள் விலக நினைத்தாலும், அவனது பிடி அவளை விடவேயில்லை! அவளைப் போலவே, அவனும் வெளிப்படையாக அன்பு காட்டியதில்லை! அப்படியிருக்கையில்….

என்ன பண்ற ராம்?

என் அம்மாகிட்ட சாரி கேக்குறேன்! இனி இப்டி நடக்காதுன்னு சொல்லுறேன்! என் அம்மா இவ்ளோ ஃபீல் பண்ண வேணாம்னு சொல்றேன்! இனி எங்க அம்மாவுக்கு நான் இருக்கேன்னு சொல்றேன்! அவளை நான் பாத்துக்குவேன்னு சொல்றேன்!

இவ்வளவு நேரம் வருத்தத்தில் இருந்தவளின் மனம் பூரித்தது. ராமையே பார்த்தாள். தன்னையறியாமல் அவனது தோள்களில் சாய்ந்தாள்!

எப்பேர்பட்ட தைரியசாலியும், தனியாக எதையும் சந்தித்து விட முடியாது! திருமணம் என்ற பந்தமே, இந்த நம்பிக்கையைத்தான் கொடுக்கிறது! வலிமையான ஆணுக்கு, மென்மையான பெண்ணின் மார்புகளுக்கிடையில் கிடைக்கும் நம்பிக்கையும், மென்மையான பெண்ணுக்கு, உறுதியான ஆணின் கைப்பிடிக்குள், அவனது தோள்களில் சாயும் போது கிடைக்கும் நம்பிக்கையும் ஒன்றே!

என்னதான் வெளியில் மிகவும் திடமாக இருந்தாலும், அவளும் என்றாவது ஓய்ந்து சாயும் போது, தோள்கள் இல்லையே என்று உள்ளுக்குள் ஏங்கியிருக்கிறாள்!

அன்பாய், ஆறுதலாய், சமயங்களில் அதிகாரமாய் ஒரு பெண்ணை அணைக்கும், ஆணின் தோள்களை விட சுகமான தூக்கத்தை, எந்தப் படுக்கையும் கொடுத்து விடாது.

அந்த நாளிலிருந்து, ராம், அந்த வீட்டின் தலைவனாக மாறினான்! எந்த இடத்திலும் ரம்யாவின் முக்கியத்துவத்தைக் குறைக்காதவன், ரம்யாவே, உள்ளுக்குள் களைப்பாகவும், பலவீனமாகவும் உணரும் சமயத்தில், அவளைத் தோள் தாங்கினான்.

என்னதான் உணர்வுகளை வெளிக்காட்டாவிட்டாலும், என்னை எப்படி புரிந்து கொள்கிறான் என்று ரம்யாவிற்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது!

அவனது முடிவுகள் தெளிவாக இருந்தன. ரம்யாவின் மீதான அன்பு மிகவும் வெளிப்படையாக இருந்தது. ரம்யாவிற்கு இருந்த அதே பக்குவம், இவனுக்கும் வந்திருந்தது!

சமயங்களில் ரம்யாவே, மிகவும் குழப்பமாகவோ, வருத்தமாகவோ இருக்கும் சமயங்களில் அவனுக்கு அழைப்பாள். அவனிடம் சும்மா பேசுவதே, அவளுக்கு தெளிவைக் கொடுத்தது. அவளது குரலை வைத்தே, அவளுடைய மனநிலையை அவன் புரிந்து கொள்வான். அதற்கேற்றார் போல், இலகுவாகவோ, கிண்டலாகவோ பேசி அவளது மனநிலையை மாற்றுவான்!

மிகச் சில சமயங்களில், அவளது குரலைக் கேட்டவுடன், அவனுக்கு புரிந்து விடும். அவள் சாய்ந்து கொள்ள அவன் தோள்கள் தேவை என்று! அடுத்த நிமிடம், அவன் ரம்யாவின் அருகில் இருப்பான்! அவனது கைகள், அவளது தோள்களைச் சுற்றி இருக்கும்!

ஆனாலும் ராமிற்கும் ஒரு குறை இருக்கும்! என்னதான் தன் தோள்களில் மட்டும் அவள் நிம்மதியைக் கண்டாலும், தன்னுடைய அன்பை அவள் பெரிதும் விரும்புகிறாள் என்றாலும், அவள் இன்னும் மனதைப் பூட்டிதான் வைத்திருக்கிறாள் என்ற வருத்தம்தான் அது!

ரம்யாவின், பூட்டி வைக்கப்பட்ட மனக்கதவுகளின் பூட்டை உடைத்தது ராம் என்றால், அந்தக் கதவுகளை, முழுக்கத் திறந்து விட்டது ப்ரியாதான்! ப்ரியா, ஒருவகையில், இன்னொரு ரம்யா!
ராம் கல்லூரியை முடித்து விட்டு, தன் நிறுவனத்தில், அம்மாவுடன் பொறுப்பெடுத்த நேரம். அம்மாவுடன் இருப்பதற்காகவே, கோவையின் மிகச் சிறந்த கல்லூரியில், மெக்கானிக்கல் முடித்திருந்தான்.

மீசை முளைக்கும் முன்பே, Man of the House ஆக விளங்கியவன், இப்பொழுது, அடர் மீசையுடன், வயதிற்குரிய உடற்கட்டுடன், சிரிக்கும் கண்களுடன், எல்லாவற்றையும் தாண்டி, நேர்மையும், பண்பும் அவனுடைய அழகையும், கம்பீரத்தையும், பறைசாற்றுகையில், ரம்யாவிற்கு எல்லாமுமாக மாறியிருந்தான்.

அவர்களுடைய அன்பு கூடியிருந்தது. அவன் தோள் சாய்வது, ரம்யாவின் தினசரியாகியிருந்தது. ரம்யாவின் அழகும் பல மடங்கு அதிகமாகியிருந்தது!

அழகு என்பது ஒரு ஒப்புமைச் சொல்!

தனக்காக எதையும் செய்யும் உயிர், தன் சக துணையின் கண்களின் முன் எப்போதும் பேரழகுதான்! உலக அழகியாய் இருந்தாலும், அன்பில்லாத துணையிருந்தால், அழகு தெரியாது. குரூரம் மட்டுமே தெரியும்!

ராம், ரம்யாவின் அன்பு பன்மடங்கு கூடியிருந்தாலும், எந்த இடத்திலும் அங்கு காமம் கலக்கவேயில்லை.

அவன் தோள்களில், அவள் சாய்ந்திருந்தாலும், அவள் மடியில், அவன் படுத்திருந்தாலும், எப்போதாவது, கன்னங்களில் இருவரும் முத்தமிட்டிருந்தாலும், சமயங்களில் அவனுக்காக மாடர்ன் உடைகளை, அவள் அணிந்திருந்தாலும், இருவரும் மட்டும் இணைந்து, வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றிருந்தாலும், அவன் ஆண்மையான உடலைக் கண்டு, அவள் பெருமைப்பட்டாலும், கேர்ள் ஃபிரண்டு கூட சுத்துற வயசுல என் கூட சுத்திட்டிருக்க, வயசுப் பையனாட்டமா நடந்துக்குற என்று அவனிடம் அன்பாய் சீண்டினாலும், நீதாம்மா என் கேர்ள் ஃபிரண்டு, அதான் உன் கூட சுத்துறேன் என்று அவன் பதிலுக்கு சீண்டினாலும், அனைத்துமே, அன்பின் அடிப்படையில் மட்டுமே நடந்தது. காமம் துளி கூட இல்லவே இல்லை!

அவனுடன் சேர்ந்து தனியாக இருக்கும் சமயத்தில்தான் அவள் கொஞ்சம் விளையாட்டாய் நடந்துகொள்வாள். மற்றவர்கள் முன்னிலையில், அதே பழைய ரம்யாதான்!

சமயத்துல ராமே, இப்ப நீங்க பாட்ஷாவா இருக்கீங்களா, இல்ல மாணிக்கமா இருக்கீங்களா என்று தனியாக இருக்கும் போது ஓட்டுவான்!இரவு 8 மணி. நிறுவனத்தில் இருந்த ராமுக்கு, ரம்யாவின் அழைப்பு வந்தது!

சொல்லுங்கம்மா… மருதமலை போயிட்டு, வீட்டுக்கு வந்துட்டீங்களா???

ர்ர்…ர்ராம்! இந்தக் குரல் சரியில்லையே!

அம்மா… என்ன ஆச்சு? எங்க இருக்கீங்க?!

ராம்… கொஞ்சம் XXXX ஹாஸ்பிடலுக்கு வரமுடியுமா?

வர்றேம்மா, உங்களுக்கு ஒண்ணுமில்லையே?

எனக்கு ஒண்ணுமில்லை! ஆனா, நீ சீக்கிரம் வா!

வெகு விரைவில் ஹாஸ்பிடலை அடைந்தான். போவதற்குள் டிரைவர் மூலமாக நடந்ததை தெரிந்து கொண்டான்! ரம்யாவைப் பார்க்கும் போது, அவள் மிகவும் தவிப்பாய், கலங்கியிருந்தாள். அவளது உடல் இவனைப் பார்த்ததும் நடுங்கியது! அவனது கையை தவிப்பாய் பிடித்துக் கொண்டாள்.

அவளை அணைத்து தேற்றினான். அம்மா ஒண்ணுமில்லை! தைரியமாயிருங்க!அங்குதான் அவன், முதன் முதலில் ப்ரியாவைக் கண்டான்!

17 ஏ வயது நிரம்பியிருந்த ப்ரியா, +2 வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதற்க்காக, தனது தோழியுடன் மருதமலைக்குச் சென்று, திரும்பும் சமயத்தில், 3 மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்! செய்தது வேறு யாருமல்ல, தன்னுடன் வந்த தோழியின் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களால்.அவர்கள் குடிபோதையில் எல்லாம் செய்யவில்லை. முழு பணத்திமிரில், திட்டமிட்டு செய்தார்கள். மருதமலைக்கே வந்த தோழியின் அண்ணன், ப்ரியாவின் அன்னைக்கு விபத்து, ஹாஸ்பிடலில் இருக்கிறார் என்று சொல்லி அவளைக் கூட்டிச் சென்றவன், அருகிலுள்ள அவர்களது ஃபார்ம் ஹாவுசில் நண்பர்களுடன் சேர்த்து அவளைச் சீரழித்தான், பின் வெற்றியைக் கொண்டாட, அவர்கள் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்!

அந்தச் சமயத்தில் தப்பியவள், தள்ளாடி, ரம்யாவின் காரின் முன் மயங்கி விழுந்திருக்கிறாள்! நிலைமையைப் புரிந்த ரம்யா, உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறாள். கையோடு, போலீசும் வந்தது!

ரம்யாவின் பின்புலமும், ராமின் பக்கபலமும், போலீசை விரைவுபடுத்த, ப்ரியாவின் வாக்குமூலத்தை வைத்து அந்த மிருகங்கள் இரவோடிரவாக கைது செய்யப்பட்டார்கள்!

ப்ரியாவின் பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்லி, அன்றே அவர்களிடம் அவளை ஒப்படைத்தாலும், ரம்யா இன்னும் ப்ரியாவிடம் பேசியதில்லை. ரம்யா, போலீசுடன் பேசி குற்றவாளிகளை கைது செய்வதில் முனைப்பு காட்டியிருந்தாள். இருந்தாலும், இரு நாட்களாக, ப்ரியாவின் நினைவாகவே இருந்தது ரம்யாவிற்கு! இரண்டு நாட்கள் கழித்து, ஒரு தெரியாத எண்னிலிருந்து அழைப்பு வந்தது!

ஹாலோ…

ஹ… ஹ… ம்கும்… ர.. ரம்யா மேடமா?

மறுமுனையிலிருந்து கேட்ட தீனக்குரல், ரம்யாவை ஒரு மாதிரி உலுக்கியிருந்தது. அந்தச் சமயத்தில் ராமும் உடனிருந்தான்.

ஆமா… நீங்க!

நா… நான் ப்ரியா!

ப்ரி… ப்ரியா… சொல்லுமா! எப்டிம்மா இருக்க?

ரொ…. ரொம்ப தாங்க்ஸ்மா! எ… என்னைக் காப்பாத்துனதுக்கு மட்டுமில்லை, அ… அ… அவிங்களை அரெஸ்ட் பண்ண வெச்சதுக்கு…

ப்ரியா பேசப் பேச விசும்பினாள்! அவளது அழுகை, ரம்யாவையும் பாதித்தது!

ஏய்… அழாத! கண்ணைத் தொட?! நீயா தப்பு பண்ண?! அப்புறம் எதுக்கு அழுவுற? நீ போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு! இதுக்கெல்லாம் இடிஞ்சிடக் கூடாது! 21 வருடங்களுக்கு முன்பு, தன்னிடம் சொல்லப்பட்டதை, தன்னையறியாமல் ப்ரியாவிடம் சொன்னாள் ரம்யா!

இரண்டு நாட்களாக, தன் மேல் பாசமாக இருந்தவர்கள், அழுது புலம்பியவர்கள், பரிதாபத்துடன் பார்த்தவர்கள் மத்தியில், தன்னை அதட்டிய, அன்பு காட்டிய ரம்யாவை, பார்க்காமலேயே, பழகாமலேயே மிகவும் பிடித்து விட்டது ப்ரியாவிற்கு!

ப்ரியாவிடம் பேசிய பின், மனது கேளாமல், ராமுடன் மருத்துவமனைக்கு சென்ற போதுதான், அவளுடைய பெற்றோர், அவளை கேஸை வாபஸ் வாங்கச் சொல்லிக் கொண்டிருந்தனர்!

அதிகாரமும், பணமும் இரண்டு நாட்கள் கழித்து வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது!

ப்ரியாவுடையது மிடில் கிளாஸ் குடும்பம். ஒரு அக்கா, ஒரு தம்பி! அக்காவிற்கு, திருமணம் ஆகிவிட்டது! அப்பா, அரசாங்கத்தில் அடிமட்ட ஊழியர்.

காலையில் ப்ரியாவின் பெற்றோரைச் சந்தித்த திமிர் பிடித்த கூட்டம், அவர்களிடம் பேசியிருக்கிறது!

விஷயம் பெருசானா, உங்களுக்குதான் அசிங்கம். கோர்ட்ல கண்டபடி கேள்வி கேப்பாங்க. எங்களுக்கு இருக்கிற பவருக்கு, கேசை எப்டி வேணா வளைப்போம். உங்களால எதுத்து நிக்க முடியாது! கேசை வாபஸ் வாங்குனா, 5 லட்சம் தர்றோம். உங்களுக்கு பிரமோஷன் வாங்கித் தரோம். எது புத்திசாலித்தனம்னு முடிவு பண்னிக்கோங்க!

கேசை வாபஸ் வாங்கச் சொன்னதைக் கூட ஜீரணித்த ப்ரியாவிற்க்கு, வெளில தெரிஞ்சா நமக்கு அசிங்கம் என்பதையும், உன் மேலியும் தப்பு இருக்கு என்றாற் போல், தன் குடும்பமுமே பேசியதையும்தான் தாங்க முடியவில்லை!

சரியாக அந்தச் சமயத்தில்தான் ரம்யா, ராமுடன் வந்தாள்.

காலையில காப்பாத்துனதுக்கு தாங்க்ஸ் சொன்னேன். இப்ப, ஏன் காப்பாத்துனீங்கன்னு தோணுது மேடம் என்று சொன்ன ப்ரியாவில் குரலில் அத்தனை வலி!

நீங்க பெரியவங்க, நீங்களே புத்தி சொல்லுங்க மேடம்! இது வெளிய தெரிஞ்சா அசிங்கம்தானே?! யாருக்கும் தெரியுறதுக்கு முன்னாடி, மறைச்சிடலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்குறா! ப்ரியாவின் அப்பா முறையிட்டார்!

எனக்கு தெரியுமேப்பா?! இது, எப்டிப்பா நமக்கு அசிங்கம்?

பல வருடங்களுக்கு முன் தான் சொன்ன பதிலை, ப்ரியா ஞாபகப்படுதுவது போலிருந்தது ரம்யாவிற்கு! இருந்தும் சொன்னாள்.

உன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னாலும், இன்னும் உனக்கு வாழ்க்கை இருக்கு ப்ரியா! உனக்கு கல்யாணமே நடக்காமப் போலாம் ப்ரியா! இதைப் பேசாம மறந்துடேன்! ரம்யாவின் பேச்சு, ராமிற்கே பிடிக்கவில்லை என்றாலும், அமைதியாய் வேடிக்கை மட்டும் பார்த்தான்.

மறக்கச் சொல்றீங்களா இல்லை மறைக்கச் சொல்றீங்களா மேடம்?! இதை மறைச்சுட்டு, நான் கல்யாணம் பண்ணா, இப்ப தப்பு பண்னவங்களுக்கும், எனக்கும் என்ன மேடம் வித்தியாசம்?!ஏய், பெரிய இவளாட்டம் பேசாத?! உன்னால, எனக்கும், எங்க வீட்ல பிரச்சினை. என் மாமியார் என்னை கேவலமாப் பாக்குறாங்க! ஒழுங்கா திருந்தி, கேஸை வாபஸ் வாங்கு!

சுயநலம் என்ற ஒற்றை விஷயம், மனிதனை எந்தளவு குரூரமாக்குகிறது?! ப்ரியாவின் பெற்றோரிடம் பேசியவர்கள், அவளது அக்காவிடமும், கணவரிடமும் பேரம் பேசியதன் விளைவு, சொந்த அக்காவே விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தாள்! 


ஏய், பெரிய இவளாட்டம் பேசாத?! உன்னால, எனக்கும், எங்க வீட்ல பிரச்சினை. என் மாமியார் என்னை கேவலமாப் பாக்குறாங்க! ஒழுங்கா திருந்தி, கேஸை வாபஸ் வாங்கு!

சுயநலம் என்ற ஒற்றை விஷயம், மனிதனை எந்தளவு குரூரமாக்குகிறது?! ப்ரியாவின் பெற்றோரிடம் பேசியவர்கள், அவளது அக்காவிடமும், கணவரிடமும் பேரம் பேசியதன் விளைவு, சொந்த அக்காவே விஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தாள்!

ப்ரியாவின் அக்காவை முறைந்த ரம்யா,

இங்க பாரு ப்ரியா! இதுதான் நிதர்சனம்! கேஸ் போடுறது பெருசில்ல?! கூடப் பொறந்தவளே இப்டி கண்டபடி பேசுனா, வெளி உலகம் என்னென்ன பேசும்?! உங்க அக்கா மாதிரி ஆட்கள்தான் வெளிலியும் இருக்காங்க. அதையெல்லாம் சந்திக்க தைரியம் இருந்தா கேஸ் போடு… இல்லாட்டி இதை, அப்டியே மறந்துட்டு, அடுத்த வேலையைப் பாரு! என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்!

ராமிற்கு மனசு கேட்கவில்லை. செல்லும் போது, ரம்யாவிடம் கேட்டான்.

நீங்க, இன்னும் கொஞ்சம், அந்தப் பொண்ணுக்கு சப்போர்ட்டா பேசிருக்கலாம்மா?!

ராமையே பார்த்தவள், நம்ம சப்போர்ட்டால, அவ முடிவு எடுக்கக் கூடாது ராம்! அவ எடுக்குற முடிவுக்குதான், நாம சப்போர்ட்டா இருக்கனும்!

சரியாக இரண்டு நாள் கழித்து அவர்கள் வீட்டில், ப்ரியா, ரம்யாவைச் சந்தித்தாள்.என்ன விஷயம் ப்ரியா?!

எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா மேடம்? ….. வந்து, உங்க கம்பெனில ஏதாச்சும் பார்ட் டைம் வேலை தர முடியுமா? ப்ரியாவின் கேள்வி, ரம்யாவை ஆச்சரியப்படுத்தியது!

ஏன் ப்ரியா?!

நான் மேல படிக்கனும் மேடம். அ… அவிங்க மேல கேஸ் போடனும்னும் முடிவு பண்ணிட்டேன். ஆனா… என் முடிவு என்… கு… குடும்பத்துல யாருக்கும் பிடிக்கலை! இதான் முடிவுன்னா, வீட்டுக்கே வர வேணாம்னு சொல்லிட்டாங்க. அதான்…

அப்பிடி குடும்பத்தை எதுத்துகிட்டு இதைச் செய்யனுமா ப்ரியா? நீ மோதுறது பெரிய இடம் வேற! உன்னால ஜெயிக்க முடியுமா?

நான் ஜெயிப்பேனான்னு எனக்கு தெரியாது மேடம். ஆனா, விட்டுக் கொடுத்தேன்னா, கண்டிப்பா தோத்துட்டேன்னு அர்த்தம். அட்லீஸ்ட் ட்ரை பண்ணி பாத்துட்டு தோக்குறேனே!

இதுதான் உன் முடிவா?! அப்புறம் நாளைக்கு உங்க அம்மாவோ, அப்பாவோ செண்டிமெண்ட்டா பேசுனா, இல்ல யாராச்சும் மிரட்டுனா மாற மாட்டியே?!
கேட்ட ரம்யாவை ஆழமாகப் பார்த்த ப்ரியா, நான் எப்டி உங்களுக்கு ப்ரூவ் பண்றதுன்னு தெரியல மேடம்! என் குடும்பமே எனக்கு உதவாதப்ப, என்னன்னு சொல்றது. நான் ஒரு சாதாரண, எல்லா பயமும் இருக்குற பொண்ணுதான் மேடம்! ஆனா, என்னால, திட்டம் போட்டு இப்பிடி ஒரு தப்பை பண்ணிட்டு, வெளில மூணு பேரு நீங்க, எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாம சுத்திட்டிருக்காங்கங்கிறதை ஜீரணிக்கவே முடியலை மேடம்! பணம் இருந்தா எந்தத் தப்பும் பண்ணலாமா மேடம்? நான் கேட்ட வேலையை நீங்க கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும் மேடம்!

என்கிட்டயும் பணம் இருக்கு ப்ரியா? எந்த நம்பிக்கைல நான் உதவி செய்வேன்னு இங்க வந்த?

தெ… தெரில்ல மேடம்! என்னைக் காப்பத்துனதை கூட யதேச்சையா நடந்துதுன்னு எடுத்துக்கலாம். ஆனா, அவிங்களை அரெஸ்ட் பண்ண காரணமா இருந்தது நீங்கதான்னு எனக்கு தெரியும். எல்லாத்தையும் விட, ஃபோன்ல அன்னிக்கு திட்டுனப்பவும் சரி, ஹாஸ்பிடல்ல இதுதான் உண்மைன்னு சொன்னப்பவும் சரி, உங்ககிட்ட ஒரு நேர்மை இருந்துது! அந்த நம்பிக்கைலதான் மேடம் வந்தேன்…

நீயா ஏதோ தப்பா நினைச்சுகிட்ட ப்ரியா! நான் வேலை கொடுக்க மாட்டேன்னா???

வேற யார்கிட்டயாவுது வேலை தேடிப் போவேன் மேடம்?

உன்கிட்ட தப்பா நடந்துக்கப் பாப்பாங்க ப்ரியா?!இதுக்கு மேலயா மேடம்?!

ப்ரியாவின் கண்களில் இருந்த நேர்மை, அவளது உண்மையான பதில்கள், எல்லாவற்றையும் தாண்டி, இன்னமும் வெளிப்படும் அவளது வெகுளித்தனம், ரம்யா, ராம் இருவரையும் கவர்ந்தது. அதன் பின் தான் ரம்யா செயல்பட ஆரம்பித்தாள்.

ப்ரியாவை, கேஸ் முடியும் வரை, தன்னுடனே கெஸ்ட் ஹவுசில் தங்கச்சொன்னாள்.

கோர்ட்டில் கேஸ் ஃபைல் செய்யப்பட்டது. மாட்டியவர்கள் பெரிய இடம் என்பதால், மீடியாவில் இது பிரபலமானது. கேஸினைத் தடுக்க எல்லா விதங்களில் முயன்றவர்கள், ப்ரியாவையும் ஃபோனில் மிரட்டினர்!

அவளுக்கு சப்போர்ட்டாக ரம்யா இருக்கிறாள் என்பதை உணர்ந்த கூட்டம், கொஞ்சம் தயங்கினாலும், கடைசி முயற்சியாக, ரம்யாவிடம் பேச்சு வார்த்தைக்கு தூது விட்டது! அதற்கு ஒத்துக் கொண்ட ரம்யாவும், அவர்களை குடும்பத்தோடு தனது வீட்டிற்கு அழைத்தாள்!

இடைபட்ட காலத்தில், ரம்யா, ப்ரியாவிற்கிடையேயான புரிதல் அதிகமாகியிருந்தது. . ராம் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்தான். அவன் ப்ரியாவிடம் பேசியது ஒரே முறை, அதுவும் வீட்டுக்கு வந்த ரெண்டாம் நாள்! அது,

எல்லாம் சரி ப்ரியா, நீ +2 ல என்ன மார்க் வாங்குன?

1,125 சார்!

வாவ்… செம மார்க்காச்சே! அடுத்து என்ன படிக்கப் போற?

முன்னல்லாம் இன்சினியரிங் படிக்கனும்னு நினைச்சிட்டிருப்பேன் சார். ஆனா இ… இப்ப, லா படிக்கலாம்னு இருக்கேன்!

ப்ரியாவின் பதில், அவள் எந்தளவு தீவிரமாய் இருக்கிறாள் என்று காட்டியது!

ப்ரியாவை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பேச்சு வார்த்தைக்கு, ரம்யா ஒத்துக் கொண்ட போது, ப்ரியா உடனிருந்தாள். ரம்யா, ஓகே சொன்னதை அவளால் தாங்க முடியவில்லை!

நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு நினைச்சு கூட பாக்க முடியலை மேடம்! என் ஃபாமிலி ஆளுங்களை விட, உங்க மேல பெரிய மரியாதை வெச்சிருந்தேன்.

ப்ரியா, என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா?

இ… இருக்கு மேடம்!

அப்ப அமைதியா வேடிக்கை பாரு. இப்ப மட்டுமில்லை, நாளைக்கு அவிங்க முன்னாடி நான் கேக்குற கேள்விக்கும் தலையாட்டு! ஆட்டத்தை நான் ஆடுறேன். நான் கேக்குறது உனக்கு சம்மதமில்லாம கூட இருக்கலாம். ஆனா, நீ சம்மதிக்கனும்! சரியா?!

முழுதும் புரியாவிட்டாலும், சம்மதமில்லா விட்டாலும் ஓகே என்றாள் ப்ரியா!

அடுத்த நாள்!

சொல்லுங்க என்ன பண்ணலாம்?!

அதான் ரம்யா மேடம், அவிங்க வீட்டாளுங்ககிட்ட சொன்ன மாதிரி, 5 லட்சம்…

அதெல்லாம் அப்ப… இப்ப கேஸ் ஃபைல் பண்ணியாச்சு. விஷயம் மீடியாவுக்கும் தெரிஞ்சிடுச்சி. பொண்ணு மைனர் வேற… பெரிய இஷ்யூ! அன்னிக்கே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்னதுனால, DNA டெஸ்ட்ல இருந்து எல்லாம் எடுத்தாச்சு. பாத்த சாட்சி வேற இருக்கு. உங்க பக்கம் செம வீக்கு! இப்பச் சொல்லுங்க, என்ன பண்ணலாம்?

மேடம்…

நீங்க கொஞ்சம் தணிஞ்சு போயிருக்கனும்? உங்களுக்கும் இவ வயசுல பொண்ணு இருக்கால்ல! குறைந்தபட்சம் இவகிட்ட மன்னிப்பு கேட்டிருக்கனும்! ஆனா நேரா, மிரட்டதானே செஞ்சீங்க?!

சரி, ஒரு 10 லட்சம்….

இது வேலைக்காகாது! நான் ஒரு தீர்வை சொல்றேன். அதுக்கு ஓகேன்னா பேசலாம்! என்ன ப்ரியா, நான் என்ன சொன்னாலும் கேப்பியா?

சிறிது தவிப்பாய், ரம்யாவையே பார்த்தவள், பின் சொன்னாள். கேப்பேன் மேடம்!தப்பு பண்னது உங்க பையனும், அவன் ஃபிரண்ட்சும்! நீங்க கொடுக்குற 5, 10 லாம் எந்த மூலைக்கு? அதுனால, பேசாம, மூணு பேருல யாராவது ஒருத்தரை, ப்ரியாவைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க. உங்க பையனா இருந்தா இன்னும் பெட்டர்!

ஆங்... அதிர்ந்து நின்றார்கள் வந்தவர்கள். ப்ரியாவிற்கு ஆட்டம் பிடிபட ஆரம்பித்தது.

அது எப்டி மேடம்…. பேச ஆரம்பித்தவர்களை தடுத்தாள் ரம்யா!

என்ன யோசிக்கிறீங்க? இது கூட, போனா போவுதுன்னு ப்ரியாவை கன்வின்ஸ் பண்ணியிருக்கேன். இல்லாட்டி, உங்க பையன் மாதிரி ஒரு ஆளுக்குல்லாம், ப்ரியா மாதிரி நல்ல பொண்ணு கிடைக்கிறது, பெரிய விஷயந்தான்…ப்ரியாவுக்கு அசிங்கம் என்று சொன்னவர்களை, ரம்யா அசிங்கப் படுத்தினாள்!

மேடம் என்ன இருந்தாலும், நாமல்லாம் ஒரே ஆளுங்க! அதுனால… பணம் முடியாது என்றவுடன் ஜாதியைக் கொண்டு வந்தார்கள்!

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ராம், அப்போது செயல்பட்டான்.

தன் இடத்திலிருந்து எழுந்தவன், வந்ததிலிருந்து தலை குனிந்திருந்த, ப்ரியாவின் தோழியின் அருகில் சென்று அமர்ந்து, அவள் தோள்களில் கை போட்டான்!

அதைப் பார்த்து கோபமான அவளது தந்தையிடம் கேட்டான்!

அதான், நாமல்லாம் ஒரே ஆளுங்களாச்சே, இதை ஏன் கண்டுக்கறீங்க?! ம்ம்?

பேச்சு வார்த்தை ஒத்து வரப்போவதில்லை என்று உணர்ந்தவர்கள், தங்கள் முகத்தைக் காட்டினர். திட்டி விட்டு கிளம்பினர்!

அவர்கள் சென்ற பின் ரம்யாவே, ராமைத் திட்டினாள்!

நீ பண்ணது தப்பு ராம்! ஒரு பொண்ணுகிட்ட, இப்டி…

ஒரு பழமொழி இருக்கு தெரியுமாம்மா!

என்ன?

தனக்கு வந்தாதான் தெரியும், தலைவலியும் காய்ச்சலும்!

அப்டீன்னா?!

ம்ம்... இதை நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க. இது, இப்ப மட்டும் இல்ல, கேஸ் நடக்குறப்பியும் இதுதான் உதவப் போகுது! சும்மா போய் தூங்குங்க! இவங்கள்லாம் ஒரு ஆளுங்கன்னு பேசிகிட்டு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக