http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 9

பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2020

அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 9

 ரொ… ரொம்ப தாங்க்ஸ் மேடம்! நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன். தாங்க்ஸ்!


இட்ஸ் ஓகே ப்ரியா! ஏன் இவ்ளோ எமோஷன் ஆகுற?

இல்ல மேடம் உங்களுக்கு தெரியாது. எப்ப என் குடும்பமே எனக்கு சப்போர்ட் பண்ணலியோ, அப்பியே எனக்கு மனசு விட்டுடுச்சு! நீங்களும் மாறியிருந்தா, எனக்கு வாழ்க்கை மேலியே நம்பிக்கை போயிருக்கும்!

ப்ரியா எந்தளவிற்கு மனதிற்குள் போராடியிருக்கிறாள் என்று ரம்யா உணர்ந்தாள். தனக்குனாச்சும், ஆதரவாய் தன் குடும்பமும், கணேசப்பாவும் இருந்தார்கள். ஆனால் இவளுக்கு??? அன்று முதல், ப்ரியாவின் மீதான ரம்யாவின் அன்பு கூடியது!

வழக்கு விசாரணைக்கு வரும் போது, ஒரு வருடம் ஆகியிருந்தது!

முதற்கட்ட விசாரணையில், ப்ரியாவிற்கு படு தோல்வி! கூட்டி வந்த தோழியே, தன் அண்ணனை பார்த்ததும், ப்ரியாதான் விரும்பிச் சென்றாள் என்று சாட்சி சொன்னாள். அவள் இப்படிப்பட்டவள்தான் என்று ப்ரியாவின் கேரக்டர் அசிங்கப்படுத்தப் பட்டது. ஸ்கூலிலேயே, இதற்காக ஒரு முறை கண்டிக்கப்பட்டதாக சாட்சி சொல்லப்பட்டது.

பணபலும், அதிகாரமும், வன்மத்தின் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் கூட்டத்தின் முன், ரம்யாவே கூட, கொஞ்சம் ஆடித்தான் போனாள்!

அன்று மாலை, ராம், ஒருவருடன் வீட்டுக்கு வந்த போது, ரம்யாவும், ப்ரியாவின் வக்கீலும் மிகத் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள். கோர்ட்டில் கேட்ட கேள்விகளாலும், நடந்து கொண்ட முறையாலும், ப்ரியா சோகமாக இருந்தாள்!ராமைப் பார்த்து புன்னகைத்த வக்கீலீடம் ராம் கேட்டான்!என்ன வக்கீல் சார், போன வாரம் ராடிசன்ல செம பார்ட்டி போல? புதுசா வண்டி கூட வாங்கியிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்!

தம்பி… அது வந்து…

நீங்க நாளைக்கு கேஸைப் பத்தி அம்மாகிட்ட பேசிக்கோங்க. இப்ப, நான் வேற முக்கியமான விஷயம் பேசனும்! கிளம்புங்க!

என்ன விஷயம் ராம்? இந்தக் கேசை விட என்ன முக்கிய விஷயம்? நாங்க சீரியசா பேசிட்டிருந்தோமில்ல…

இனிமே கேசைப் பத்தி பேசனும்னா, இவர்கிட்ட பேசுங்க! ஏன்னா, இவர்தான் ப்ரியாவுக்காக ஆஜராகப் போறாரு. அவர், நாளைக்கு வர மாட்டாரு!

ராம் வந்தவுடன் பேசிய முறைக்கும், இப்போது வேறு வக்கீல் என்பதற்க்கும் காரணம் ரம்யாவிற்கு புரிந்தது.

ராம்… வக்கீல்தான் காரணமா? ந… நம்ம சைட் ரொம்ப வீக் இல்லியே?!

அதற்கு பதில் சொல்லாதவன், ப்ரியாவிடம் திரும்பி கேள்வி கேட்க ஆரம்பித்தான்!

ப்ரியா, நான் சொல்லுறது எல்லாம் சரியான்னு மட்டும் பதில் சொல்லு!

நீயும், உன் ஃபிரண்டும் ஒண்னா கோவிலுக்கு கெளம்புனதுக்கு சாட்சி இருக்கு! மருதமலையில உங்களைப் பாத்ததுக்கு சாட்சி இருக்கு. நீ திரும்பி உன் ஃபிரண்டோட அண்ணன் கூட போனதுக்கு சாட்சி, உன் ஃபிரண்டு மட்டும்தான்! ஃபார்ம் ஹவுஸ் நடந்ததுக்கு உனக்கிருக்கிற ஒரே ஆதாரம் DNA டெஸ்ட் மட்டும்தான்! மத்தபடி, சாட்சி எதுவும் இல்லை. அந்த நேரத்துல யாரும் அங்க இல்லை! அப்டித்தானே?! அப்ப, நீயா விரும்பி போனியா, இல்ல பலவந்தப்படுத்துனாங்களான்னு நிரூபிக்க முடியாதுதானே? உன்னை எந்த அடிப்படையில நம்புறது?! இதானே ஸ்டேட்டஸ்?

ராமின் கேள்விகள், ப்ரியாவை சந்தேகப்படுவது போல் இருக்க, ப்ரியாவே அதிர்ந்தாள்.

என்ன சார், நீங்களே இப்டி பேசுறீங்க? அசிங்கமாப் பேசாதீங்க சார்!ம்ம்ம்… உன் மூஞ்சி! என் கேள்விக்கே பதில் சொல்ல முடியாட்டி, கோர்ட்ல, இதை விட அசிங்கமா கேட்டா என்ன பண்ணுவ?

ராம்… நீ என்ன பேசிட்டிருக்க? நீ பேசுற முறை தப்பு!

நான் பேசுறது தப்பில்லைம்மா! நீங்க செய்யுறதுதான் தப்பு.

அவங்க எவ்ளோ கேவலமானவங்கன்னு தெரிஞ்சும், அசிங்கமாத்தான் கேள்வி கேப்பாங்கன்னு தெரிஞ்சும், நீங்க ப்ரிப்பேர் ஆகலைன்னா, அது அவிங்க புத்திசாலித்தனமில்லை! உங்க முட்டாள்தனம்!

ராம்… சார்!

சரி ப்ரியா, நான் கேட்ட கடைசி கேள்வியை விட்டுடு! ஆனா, இப்போதைக்கு கேஸ் நிலைமை, நான் சொன்ன மாதிரிதானே இருக்கு!

ஏனோ, அந்த நிமிடத்தில், ராமின் மேல் ஒரு முழு நம்பிக்கை வந்தாற் போல் உணர்ந்தாள் ப்ரியா! இதுவரை நன்கு பழகிய பின், ரம்யாவின் மேல் வந்த நம்பிக்கை, அதிகம் பழகாமலேயே, ராமின் மேல் வந்தது!

ஆமா சார்! நீங்க சொல்றது சரிதான்! திடமாய் பதில் வந்தது ப்ரியாவிடமிருந்து!

நான் இன்னும் சில கேள்விகளை கேப்பேன். அது அசிங்கமா கூட இருக்கலாம்! ஆனா, பதில் சொல்லத் தயாரா?!

I am ready Sir! தைரியமாய் வந்தது ப்ரியாவின் பதில்!எஸ்! தட்ஸ் மை கேர்ள்! என்று பாராட்டிய ராம், சில கேள்விகள் கேட்டு, அதே திடமான பதிலைப் பெற்றவன், குட், இப்டியே தைரியமா எப்பவும் இருக்கனும்?! ஓகே?! என்று சொன்னவன் பின் திரும்பி வக்கீலைப் பார்த்தான்.

அவரோ, நம்ம ப்ளான், கரெக்ட்தான் சார்! என்றார்.!

என்ன ப்ளான் ராம்?!

நான் அன்னிக்கு சொன்ன பழமொழிதாம்மா (தனக்கு வந்தாதான் தெரியும், தலைவலியும் காய்ச்சலும்!) ப்ளான். கேஸ்ல சில Add on பண்ணனும்!

அப்டி என்னடா பண்ணப் போற?!

ம்ம்… அன்னிக்கு நடந்த பலாத்காரம் ஒண்ணில்ல, ரெண்டு!

ராம்!!!

எஸ்! பாதிக்கப்பட்டது ப்ரியா மட்டுமில்லை! அவளோட ஃபிரண்டும்தான்!

ராம்!!!

ஆமாம்மா!!! வந்ததுக்கு இருக்குற சாட்சி, திரும்பி போனதுக்கு இல்லை! அவிங்க போதைல இருந்ததுக்கு மெடிகல் ரிப்போர்ட் இருக்கு! ப்ரியாவோட மெடிகல் ரிப்போர்ட் படி அன்னிக்கு ரேப் அட்டெம்ப்ட் நடந்திருக்கு! அப்ப அன்னிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மை, சரிதானே?! அதிக பட்சம் அவிங்களால, ப்ரியாவே விரும்பி வந்தான்னுங்கதான் ப்ரூவ் பண்ணுவாங்க இல்லியா??

ஆ… ஆமா!

அப்ப, அன்னிக்கு நடந்த சம்பவத்துல, விருப்பட்டு நடந்ததோ, இல்லை பலவந்தமா நடந்துதோ, எதுவா இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்களும் சம்பந்தப் பட்டிருக்காங்கன்னு சொன்னா, அதுவும் அதுல, ஒரு அண்னனும், தங்கச்சியுமே சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு நாம பேசுனாலே, அவிங்க அடங்கிடுவாங்க! இன்னொரு பொண்ணுகிட்ட அசிங்கமா கேட்டாங்கள்ல? அவிங்க வீட்டு பொண்ணுக்கு, அசிங்கம்னா என்னான்னு காட்டுனா தெரியும், வலின்னா என்னான்னு!

இதை ப்ரூவ் பண்ண முடியாதுடா? அவளுக்கு டெஸ்ட் எடுக்கலைல்ல?

ஹா ஹா ஹா! அதுதாம்மா அவிங்க வீக் பாயிண்ட்டே! ப்ரியாவுக்கு டெஸ்ட் எடுத்தது, சம்பவம் நடந்ததுன்னு ப்ரூவ் பண்ண! அந்த பொண்ணுக்கு சம்பந்தம் இல்லைன்னு ப்ரூவ் பண்ண, அவிங்க டெஸ்ட் எடுத்து காமிச்சு ப்ரூவ் பண்ணனும்!

ராம்!

நாம, இதை ப்ரூவ் பண்ணனும்னுல்லாம் அவசியமில்லை! ஆனா, ப்ரியாவை கேட்ட கேள்விகளை, அந்தப் பொண்ணுகிட்ட கேக்கலாம்! அண்ணன் தப்புக்கு பொய் சாட்சி சொன்னால்ல, அவளே தப்பு பண்ணான்னு சொன்னா??? இல்ல அவளையும் சேத்து, சொந்த அண்ணன் ரேப் பண்ணான்னு சொன்னா?

ப்ரியா விருப்பப்பட்டு போனான்னு சொன்னா, ரெண்டு பேருமே அப்படித்தான்னு சொல்லுவோம். இல்லை நடந்தது பலாத்காரம்னு அவிங்க ஒத்துகிட்டா, தண்டனையை அனுபவிக்கட்டும். தங்கச்சிக்கு தண்டனையா, அண்ணனுக்கு தண்டனையான்னு பாத்துடலாம்!

இ… இது தப்பில்லையா சார்?!

இவளை எங்கிருந்துமா புடிச்சீங்க? குழந்தை மாதிரி பேசிட்டிருக்கா??

போடா போக்கிரி! எப்டியோ, இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு. குட் ஜாப் ராம்!

ரம்யாவும், வக்கீலும் கிளம்பினாலும் ப்ரியா அங்கேயே இருந்தாள். இது நாள் வரை, ராமிடம் அதிகம் பேசாதவள், இப்பொழுது இருப்பது ராமை ஆச்சரியப்படுத்தியது!

என்ன ப்ரியா?

என்னைக் கண்டா உங்களுக்கு கேவலமா இருக்கா சார்?!

லூசா நீ? நான் என்ன உன்னை தப்பா பேசுனேன்?!

இல்ல, முன்னல்லாம் நீங்க அதிகம் பேசுனதில்லை?! ஆரம்பத்துல வா, போன்னு பேசுனீங்க! இன்னிக்கு என்னான்னா, லூசுங்குறீங்க, உன் மூஞ்சின்னு திட்டுறீங்க? உங்க வீட்டுல இருக்கிறதுனால, எப்டி வேணா பேசுலாமா?

உன்னை திட்டுறது சரியாத்தான் இருக்கு! உன்கிட்ட அசிங்கமா நடந்துகிட்டவங்ககிட்ட, கருணை காட்டுற! உனக்கு நல்லது செய்யுற என்கிட்ட, சண்டைக்கு வர்ற! எங்க அம்மா உன்னை திட்டுனதில்லையா? நான் என் அம்மாவை கிண்டலுக்கு, வா போன்னு சொன்னதில்லையா?

அதுவும் இதுவும் ஒண்ணா சார்?! உங்க அம்மாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்!

எனக்கும் ஒண்ணைப் பத்தி நல்லா தெரியும்!

ஆனா, எனக்கு உங்களைப் பத்தி அதிகம்….

அது உன் பிரச்சினை ப்ரியா! நீ வேணும்ன்னா, என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கோயேன்! பின்னாடி தேவைப்படும்! முதல்ல சார்னு கூப்டுறதை நிறுத்து! ராம்னு கூப்டு?! ஓகேவா?! பை! நாளையிலருந்து ஒழுங்கா, என்னைப் பத்தி அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ!ராமின் பதிலில் விக்கித்து நின்றிருந்தாள் ப்ரியா! அவன் என்னமோ அதட்டலாகப் பேசினாலும், அவன் உதடுகளும், கண்களும் சிரித்துக் கொண்டிருந்தன. அது, ப்ரியாவுக்கு என்னவென்று சொல்ல முடியா ஒரு சலனத்தைத் தந்தது! 


ராமின் பதிலில் விக்கித்து நின்றிருந்தாள் ப்ரியா! அவன் என்னமோ அதட்டலாகப் பேசினாலும், அவன் உதடுகளும், கண்களும் சிரித்துக் கொண்டிருந்தன. அது, ப்ரியாவுக்கு என்னவென்று சொல்ல முடியா ஒரு சலனத்தைத் தந்தது!
கேசை நடத்துவதாக இருந்தால், வீட்டிற்கே வராதே என்று சொல்லியிருந்த ப்ரியாவின் குடும்பத்தினர், முதல் கட்ட விசாரணையில் ப்ரியாவை அசிங்கப்படுத்திய பின்பு, இன்னும் கோபமாகத் திட்டி, நீ என் பொண்ணே இல்லை என்று தலை முழுகியிருந்தனர்.

இன்னமும், நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு புரியலைம்மா! உண்மையா இருக்கிறது அவ்ளோ பெரிய தப்பா?! என்று வெறித்துப் பார்த்தவாறு, தோட்டத்தில் உட்கார்ந்து இருந்தவளைத் தாங்கியது ரம்யாவேதான்!ராமின் யோசனை கண்டிப்பாக வெற்றியைத் தரும் என்றாலும், இன்னொரு பெண்ணை அவமானப்படுத்துவதா என்று தயங்கியவளை, ராம் அதட்டலாகச் சொன்னான்!

நீ நல்லவளா இருக்கலாம் ப்ரியா! ஆனா, உன் எதிரிங்க அப்டியில்லை!

இருந்தாலும், அவளும் ஒரு பொண்ணு சார்… என்று தயங்கியவளையே ராம் பார்த்துக் கொண்டிருந்தான். எதிரிக்கும் காட்டும் கருணை, அதில் இருந்த ஒரு வெகுளித்தனம், அவனை மிகவும் கவர்ந்தது.

ஒரு பெருமூச்சு விட்டவன்…

சரி ப்ரியா, உனக்காக கடைசியா ஒரு சான்ஸ்! நீயே ஃபோன் பண்ணி, உன் ஃபிரண்டு கிட்டயோ, அவிங்க அப்பாகிட்டயோ பேசு! விஷயத்தைச் சொல்லாம, என்னால கேசையே மாத்த முடியும். தப்பை ஒத்துக்கோங்கன்னு கேட்டுப் பாரு. அப்புறம் எனக்கு முடிவைச் சொல்லு, ஓகே?!

ப்ரியாவும் பேசியிருக்கிறாள். மமதையின் உச்சத்தில் இருந்த கூட்டம், என்ன பயந்துட்டியா? உன்னை இன்னும் அசிங்கப்படுத்துறேன் பாருடின்னு மிகக் கேவலமாக பேசியிருக்கிறார்கள்.

அவளது தோழியோ, எனக்கு என் அண்ணந்தான் முக்கியம் ப்ரியா, அன்னிக்கு நடந்தது சத்தியமா எனக்கு தெரிஞ்சு நடக்கலை. ஆனா, உனக்காகல்லாம் என்னால பேச முடியாது. உனக்கும் இவ்ளோ திமிரு இருக்கக் கூடாது ப்ரியா! கொடுக்குறதை வாங்கிட்டுப் போயிருக்கலாம்ல என்று சொல்லியிருக்கிறாள்!

அவர்களுடைய பேச்சில் கோபமடைந்த ப்ரியா, உனக்கு கடைசி சான்சை கொடுத்தேண்டி, ஏண்டா இப்படி ஒரு சாட்சி சொன்னோம்னு நீ துடிக்கலை, என் பேரை மாத்திக்குறேண்டி! என்று வெடித்து ஃபோனை வைத்தாள்!

அடுத்த கட்ட விசாரணையில், ப்ரியா தரப்பின் வாதம், எதிராளிகளை அடியோடு துவம்சம் செய்தது! கோவையில் இது மிகப்பெரிய விஷயமாகியது. சோஷியல் மீடியா, லா காலேஜ், அவளுடைய பள்ளியில் எல்லாம் ப்ரியா ஒரு ஐகானாக மாறினாள். பாரதி கண்ட புதுமைப் பெண் என்று பலரும் பேசினார்கள்!

ஆனால், ப்ரியா அப்படியேதான் இருந்தாள்! உள்ளுக்குள் ராம் ஒரு ஆதர்ச நாயகனான். ஆனாலும், அவர்கள் பெரிதாகப் பேசிக் கொள்வதில்லை!

அந்த வாதத்திற்க்குப் பின் எதிராளிகளின் கொட்டம் சுத்தமாக அடங்கிப் போனது. கோர்ட்டில் அந்தக் கேள்விகளை, முதன் முதலில் எதிர்கொண்ட பொழுது, அவளுடைய தோழியை திக்பிரமை பிடிக்க வைத்தது!

இது போன்ற கேள்விகள், என் கட்சிக்காரரை அதிர்ச்சியடைய வைக்கிறது, அவரை பாதிக்கிறது, ஆகவே பதில் சொல்ல டைம் வேண்டும் என்று வாதிட்டவர்களை,என் கேள்விகள், இவருக்கு அன்று நடந்ததை ஞாபகப்படுத்தியதால் வந்த அதிர்ச்சி, என்ன இருந்தாலும் தப்பாக நடந்தது அண்ணன் அல்லவா?! இதே கேள்வியைதானே, ப்ரியாவையும் கேட்டார்கள் என்று ப்ரியாவின் வக்கீல் வாதிட்ட பொழுது, அவள் தோழி நடைபிணமாயிருந்தாள்!

அப்பொழுதும் மனம் கேளாமல், இப்டி என்னை பேச வெச்சுறாதேன்னு உன்கிட்ட கெஞ்சுனேனே, கேட்டியா என்று அவளுக்காக ப்ரியா விட்ட கண்ணீரில், தோழியின் அடிமனதிலிருந்த குற்ற உணர்ச்சி மேலோங்கி கண்ணீராக வெளிப்பட்டது. என்னை மன்னிச்சிரு ப்ரியா என்று சொன்ன பின், அத்தனை அவமானத்திற்குப் பின்பும், தோழியின் மனது கொஞ்சம் தெளிவாய் இருப்பதாய் அவள் உணர்ந்தாள்!

இதெல்லாம் முடிந்து சில வாரங்கள் கழித்து, ஒரு நாள் கணேசன் வந்திருந்தார். பெரும்பாலும் சென்னையிலும், டெல்லியிலும் இருந்தாலும், அவ்வப்போது கோவை வந்திருந்தாலும், சேர்ந்தாற்போல் தங்கியது இந்த முறைதான்!

அப்போது ப்ரியாவை நன்கு கவனித்து விட்டுதான், ரம்யாவிடம் சொன்னார்!

ப்ரியாவைப் பாக்குறப்ப, உன்னை பாக்குற மாதிரியே இருக்குமா!

ரெண்டு பேருக்கும் நடந்தது ஒண்ணுங்கிறதுனால சொல்றீங்களாப்பா?

இல்லம்மா… ரெண்டு பேருக்கும் ஒரே தைரியம், தப்புன்னா எதுத்து நிக்குற துணிச்சல், பணத்துக்காக மயங்காத நேர்மை, இதை வெச்சு சொல்றேன்… எல்லாத்தையும் விட, முதல்லல்லாம் நீ என்கிட்ட காமிச்ச, அதே குழந்தைத்தனம், ப்ரியாகிட்டயும் பாக்குறேன்! என்று பெருமூச்சு விட்டார்.

பெருமூச்சு விட்ட கணேசப்பாவையே, ரம்யா பாசமாய் பார்த்தாள். கணேசப்பாவிற்க்கு இன்னமும் மனதிற்க்குள் தன் நிலையைக் குறித்தும், அதற்குக் காரணம் சொந்த மகனே என்பதில் ஒரு குற்ற உணர்ச்சியும், வருத்தமும் உண்டு என்பதை ரம்யா அறிவாள்! அந்த வகையில், கணேசப்பா சொந்த அப்பாவை விடவும் உயர்ந்தவர்! அதனாலேயே, அவரது கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டுச் சொன்னாள்.

அதுனால என்னப்பா? நீங்க என்னை எப்டி மாத்தனும்னு நினைச்சீங்களோ, அப்டி, ப்ரியாவை நான் மாத்திடுறேன். ஓகே?

இதையெல்லாம் அவர் ராமிடமும் சொல்ல, அதை, யதேச்சையாகக் கேட்ட ப்ரியாவிற்கு, அப்போதுதான் தெரிந்தது, ரம்யாவின் கடந்த காலம்!

பயங்கர அதிர்ச்சியான ப்ரியா, கோபத்துடனும், உரிமையுடனும், தாங்க முடியாத் துயரத்துடனும், ரம்யாவிடம் நேராக வந்து, சாரி மேடம், சாரி மேடம் என்று அவள் மடியிலேயே படுத்து அழுதிருக்கிறாள்!இதுநாள் வரை, ரம்யா, ப்ரியாவை நன்கு கவனித்துக் கொண்டாலும், ப்ரியா ஏனோ, கொஞ்சம் தள்ளியே நின்றிருந்தாள். பாசத்தை விட, மரியாதை முன்னிலை வகித்தது.

ஆனால் இன்று, கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாயப் பிணைப்பு இருவருக்கும் இடையே உண்டாகியது! அது பரிதாப உணர்ச்சி அல்ல! உனக்கும் எனக்கும் ஒரே நிலை என்ற வருத்தம் அல்ல! மாறாக, ஒத்த அலைவரிசை எண்ணங்கள்! பேசமலேயே, உணர்வுகளைப் புரிந்து கொள்ளும், ஒரு சக்தி! எல்லாவற்றையும் தாண்டி, உங்களுக்கு நானிருக்கிறேன் என்ற சக துணை உணர்வு.

அதுவரை, ரம்யாவைப் போன்றே, தனக்குள் எல்லாவற்றையும் போட்டு அடக்கிக் கொண்டிருந்த, உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத ப்ரியா, அன்று முதல், ஒரு பட்டாம் பூச்சியாய் மாறினாள். இப்படி ஒரு சம்பவமே நடந்திராவிட்டால், எப்படி இருந்திருப்பாளோ, அவள் வயதுப் பெண்கல் எப்படி இருப்பார்களோ, அதே போன்று மாறினாள்!

இன்னும் சொல்லப்போனால், ரம்யா எப்படி இருக்கவேண்டும் என்று கணேசன் விரும்பினாரோ, அப்படி மாறினாள்!

அவளுடைய மாற்றம், அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது! சில வாரங்களிலேயே, கணேசன், ப்ரியாவுடன் நன்கு ஒட்டிக் கொண்டார். அதன் முக்கியக் காரணம்,

ப்ரியா, கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவையும் மாற்றத் தொடங்கியிருந்ததுதான்!

மேடம் என்று அழைத்தவள், ரம்யாம்மா என்று மாறியிருந்தாள். அந்த வயதிற்குரிய துறு துறு வால்தனங்களை, சில்மிஷங்களை எல்லாம் ரம்யாவிடம் வெளிப்படுத்தினாள்.

குழந்தையின் பெரிய மனுஷத் தனமும், பருவ வயதுப் பெண்ணின் அழகிய குழந்தைத்தனமும் மிகவும் ரசிக்கத்தக்கது!

அந்த ரசனை யாருக்கும் புன்னகையை வரவைக்கும்! ஆனால் ரம்யாவுக்கோ, சமயங்களில், அவளையும் அந்தச் செயல்களில் ஈடுபட வைத்தது! அவர்களிடையே வயது வித்தியாசமோ, ஏற்றத்தாழ்வோ எதுவுமில்லை.

வார இறுதிகளில், ப்ரியாவுடனான நேரத்தை, ரம்யாவே எதிர்பார்க்கத் தொடங்கினாள். ரம்யாவும், தன்னை மீறி ப்ரியாவின் வால்தனங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தாள்!

சாதாரணமாக, ரம்யாவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமாக, ப்ரியா கதை கேட்க ஆரம்பித்தவள், கொஞ்சம் கொஞ்சமாக, ரம்யாவின் அடி மனது ஆசைகளையும் தோண்டி எடுக்க ஆரம்பித்தாள்!

உங்களுக்கு புடிச்ச ஹீரோ யாரு? அப்ப, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம் என்ன? மவுன ராகமா? அதுல கார்த்தி புடிக்குமா, மோகன் புடிக்குமா? அம்மா புடிக்குமா, அப்பா புடிக்குமா? உங்க அப்பா, ஹெட்மாஸ்டராச்சே, வீட்லியும் கண்டிஷனா? யாரு க்ளோஸ் ஃபிரண்டு? நல்லா படிப்பீங்களா? என்று ஆரம்பித்தது, கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களுடைய தனிமையில், அந்தரங்கத்தையும் தொட்டது!

நீங்க கோ எட் லதானே படிச்சீங்க? எத்தனை பேர் ப்ரபோஸ் பண்ணாங்க?... ஐ, ஐ, இந்தக் கதைதானே வேண்டாங்கிறது? இப்பியே, செம ஃபிகரா இருக்கீங்க! அப்ப இன்னும் மின்னியிருப்பீங்களே?!

ஒருத்தர் கூடவா சொல்லலை?... ஒண்ணு கூட இல்லையா?! ச்சே, இந்தப் பசங்களுக்கு, வர வர தைரியமே இருக்க மாட்டேங்குது! அவிங்களை விட்டுத் தள்ளுங்க! சரி, நீங்க எத்தனை பேர்கிட்ட ப்ரபோஸ் பண்ணீங்க? ம்ம்ம்?

கண்ணைச் சிமிட்டி, ரகசியம் பேசுவது போல், தன்னிடம் சிணுங்கிக் கொண்டே கேட்பவளைப் பார்க்க, பார்க்க ரம்யாவிற்கு சிரிப்பாகவும், ஆசையாகவும் இருந்தது!ஆரம்பத்தில் அவளிடம் கோபப்பட்டாலும், தேவையில்லாத கேள்வில்லாம் வேண்டாம் என்றாலும், சமயங்களில் வேண்டுமென்றே உன் லிமிட் தாண்டுற ப்ரியா என்று கண்டித்தாலும், ப்ரியா அசரவேயில்லை!

கணேசனுக்கும், ராமிற்கும், என்னதான் ஆசையிருந்தாலும், வயது, உறவு, ஆண் என்று பல காரணங்கள் சேர்ந்து, ஒரு அளவிற்கு மேல் ரம்யாவை நெருங்க முடியவில்லை!

ஆனால் ப்ரியா அப்படியில்லை! அவள், குழந்தையாக, மகளாக, தோழியாக, சமயங்களில் தாயாகவும் மாறி, ரம்யாவை வெளிக்கொணர்ந்தாள்! ரம்யாவின் மனக்கதவுகளை, அவளையறியாமல் திறந்து விட்டாள்.

அவள் கையைப் பிடித்துக் கொண்டு, அவளருகே முட்டி போட்டு, மிகவும் அன்பாக, அ… அந்த டைம்ல ரொம்ப கஷ்டப்பட்டீங்களாம்மா? இத்தனை வருஷம் கழிச்சும், என்கிட்ட இவ்ளோ அசிங்கமா பேசுற உலகத்துல, அப்பியே, சின்ன வயசுலியே, தைரியமா நின்னீங்க பாருங்க, கிரேட்மா! அதான் எங்க ரம்யாம்மா!

நான் கூட, முதல்ல பாத்தப்ப, எவ்ளோ கம்பீரமா இருக்காங்க பாரேன்னு அட்மையர் பண்ணியிருக்கேன்! இப்ப, இவ்ளோ பணம், செல்வாக்குக்கு மத்தியில கம்பீரமா நிக்குறது பெருசில்லை!! ஆனா, இது எதுவுமே இல்லாம, அன்னிக்கே நின்னீங்க பாருங்க, அதுதான் கம்பீரம்! அது தைரியம்! சூப்பர்ம்மா!

ஐயோ, இப்ப, எனக்கு எப்டி இருக்கு தெரியுமா? சும்மா, ரஜினி படம் இண்ட்ரோ மாதிரி இருக்கு!

ஏய்… போதுண்டி, ஓவரா பில்டப் கொடுக்குற? என்னமோ கேசே ஜெயிச்சிட்ட மாதிரி குதிக்கிற?

அடப் போங்கம்மா, இனி கேசுல ஜெயிக்கிறேனா, தோக்குறேனாங்கிறதெல்லாம் எனக்கு மேட்டரே இல்லை! என் வாழ்க்கைல, நான் ஜெயிப்பேன்! உங்களை மாதிரி வந்து காமிப்பேன் பாருங்க!

பட படவென்று அவள் பேசிக் கொண்டே சென்றாள், அவளது ஜன்னல்களைத் திறந்து விட்டபடியே?! ப்ரியாவின் இந்த மாற்றம் ரம்யாவிற்க்கும் பார்க்க ஆசையாய் இருந்தது. அவள், இவ்வளவு எளிதில் அந்த பாதிப்பிலிருந்து வெளியே வர தான் காரணமாய் இருப்பது உள்ளுக்குள் மகிழ்ச்சியாய் இருந்தது. அந்த வகையில் இருவரும், ஒருவருக்கொருவர் உதவியாய் மாறினார்கள், அவர்களையறியாமல்!ப்ரியா மெல்ல, ரம்யாவின் உடைகளில் மாற்றம் கொண்டு வந்தாள். முன்பெல்லாம் தன்னை நெருங்குபவர்களை, கோபத்தின் துணை கொண்டு ரம்யா அடக்கினாள் என்றால், இப்போது ரம்யாவின் அழகை சுடர் விட்டு எரியச் செய்தாலும், அதை விடப் பிரகாசமாய், அவளது கம்பிரத்தை ஒளி வீசச் செய்தாள்! அந்த கம்பீரம், யாரையும் எட்ட நிற்க வைத்தது!

உடையிலும், மற்ற விஷயத்திலும், ரம்யாவின் மறுப்பினை ப்ரியா கண்டு கொள்ளவேயில்லை! ராம் கூட இந்த விஷயத்தில் ரம்யாவிற்கு சப்போர்ட் செய்யவில்லை!

நீ ரொம்பப் பண்ற ப்ரியா?!

வேணும்ன்னா, ரெண்டு அடி கூட அடிச்சிக்கோங்கம்மா! ஆனா, இதை நீங்க செஞ்சே ஆகனும் என்று சொல்லியே அவளை வழிக்குக் கொண்டு வந்தாள்.

இது எல்லாவற்றையும், ப்ரியா திட்டமிட்டோ, கணேசன், ராம் கேட்டோ செய்யவில்லை! மாறாக, மிக இயல்பாக, ரம்யா இதுவரை தேடிக் கொண்டிருந்த ஒரு வடிகாலாக ப்ரியா மாறவும், மாற்றம் இயல்பாக வந்தது!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக