ப்ராஜக்ட் பிளான்

ஹாலில் உட்கார்ந்து அடுத்த நாள் சமர்ப்பிக்க வேண்டிய அசைன்மென்ட் எழுதி கொண்டே டிவியில் சீரியல் அக்கா அழுவதை காதில் வாங்கி கொண்டிருந்தா சம்யுக்தா. அவ அம்மா இன்னொரு பக்கம் உட்கார்ந்து அடுத்த நாள் காய்கறியை வெட்டிக்கொண்டு அதே சீரியல் பார்த்து கொண்டிருந்தா. அப்பாவோ காலை வந்த ஆங்கில நாளிதழ் இப்போ தான் அலசி கொண்டிருந்தார். சம்யுக்தா மொபைல் அடிக்க சம்யுக்தா சாமியை வேண்டிகிட்டே எடுத்து பார்த்தா அவ வேண்டிகிட்டது கால் செய்யறது எவனாவது வகுப்பு பையனா இருக்க கூடாதுனு. அவ கல்லூரியில் கடுமையான விதிகள் இருந்தாலும் பசங்க பொண்ணுங்க நம்பர் வாங்கறதும் பொண்ணுங்க பசங்க கிட்டே நம்பர் குடுக்கறதும் சகஜமா நடக்கறது தான். பொதுவா மாணவ மாணவிங்க கல்லூரியை சபிக்கறதே இந்த விதிக்காக தான் அவங்க கல்லூரி சேரும் போது காண்கிற கனவே பள்ளியில் தான் பசங்க கூட சகஜமா பேச தடை இருந்தது. கல்லூரியில் பசங்க கூட கடலை போடலாம்னு கனவோடு போனா அங்கே இந்த விதியை சொல்லி பெற்றோர் கிட்டே கண்டிப்பா சொல்லும் போது வாழ்க்கையே தொலைந்து போனது போல தான் இருந்தது. ஆனா வகுப்புகள் ஆரம்பித்து சில மாதங்கள் ஆனதும் பசங்க இதுக்கு வழி முறைகளை கண்டு பிடிக்க பொண்ணுங்க முழு மனசோடு அதற்கு ஒத்து போனார்கள். ஆனால் பொண்ணுங்களை பொறுத்த வரை அந்த விதி வீட்டில் இன்னும் கடுமையா இருந்ததால் தான் சம்யுக்தா அந்த வேண்டுதலோடு போனை எடுத்தா. கால் செய்வது அவ தோழி சிந்துஜா .


சொல்லுடி சிந்து என்ன செய்யற என்று சம்யுக்தா கேட்க சிந்துஜா இப்போதாண்டி அசைன்மென்ட் முடிச்சேன். சஞ்சய் கால் செய்தான் என்றதும் சம்யுக்தா என்னடி நாளைக்கு பங்க் செய்ய போறியா என்று மெதுவா கேட்க சிந்து ஹே அதெல்லாம் இல்ல அவன் ப்ராஜக்ட் பத்தி பேசிகிட்டு இருந்தான் அதான் உன் கிட்டே கேட்கலாம்னு கால் செய்தேன் நீயும் உன் பார்ட்னர் முடிவு செய்துட்டீங்களா என்றதும் தான் சம்யுக்தாவுக்கு உரைத்தது. ப்ராஜக்ட் பத்தி யோசிக்கணும்னு சிந்துஜா கிட்டே இன்னும் இல்லைன்னு சொல்லிட்டு நாளைக்கு பஸ்ஸில் பேசலாம்னு கட் செய்தாள்.


பஸ்ஸில் வழக்கம் போல ஒரு ஆண்ட்டி மாம் முன் பக்கம் உட்கார்ந்து இருக்க பொண்ணுங்க பஸ்ஸின் முன் பக்கம் ஏற பசங்க பின் வழியாக ஏறி அமர்ந்து இருந்தனர். சிந்துஜா கை அசைக்க சம்யுக்தா அவ பக்கத்திலே சென்று உட்கார்ந்தா. முன் நாள் கடலை போட்டு முடிக்க சிந்துஜா சம்யுக்தாவிடம் ஹே உன் ஸ்டாப்பிலே ஒருத்தன் ஏறுவானே அவனுக்கு என் நம்பர் எப்படி கிடைச்சுதுனு தெரியலே நேத்து எனக்கு வாட்டஸ்ஆப் செய்தான் என்றாள். சம்யுக்தா யாருடி என் ஸ்டாப்பில் மொத்தம் மூணு பேர் வருவாங்க அதுலே ஒருத்தன் செம்ம அம்மாஞ்சி கண்டிப்பா அவனா இருக்க முடியாது இன்னைக்கு என்ன கலர் ஷர்ட் போட்டு இருக்கான் சொல்லு என்றா. சிந்துஜா இன்னைக்கு கருப்பு கலர் ஷர்ட் போட்டு இருக்கான் என்றதும் சம்யுக்தா ஹே அவன் பைனல் இயர் அவனுக்கு ரொம்ப தைரியம் தெரியுமா ஸ்டாப்பில் நம்ம காலேஜ் கருங்காலிங்க மறைஞ்சு இருந்து பார்க்கும் போதே தைரியமா ஸ்மோக் செய்வான் நானே அவன் நம்பர் வாங்கணும் இருந்தேன் என்றாள்.

சம்யு அவன் பெயர் தெரியுமா உனக்கு என்று சிந்துஜா கேட்க சம்யுக்தா அவனை எல்லோரும் ஸ்டாப்பில் தலைவான்னு தான் கூப்பிடுவாங்க ஏன் நேத்து சொல்லி இருப்பானே என்றதும் சிந்துஜா சொன்னான் உண்மையான பேர் தானான்னு தெரிஞ்சுக்க கேட்டேன். சிந்து அவன் நல்ல பசையான பார்ட்டி போல தான் தெரியுது ஸ்டாப்பில் நிற்கும் போது கூட இருக்கிற பசங்க இல்ல வர காலேஜ் பசங்க கேட்டா உடனே நூறு ரூபாயா எடுத்து குடுப்பான் என்றாள். சிந்துஜா உடனே இல்ல சம்யு அவன் நேத்து என்ன சொன்னான் தெரியுமா அவன் எங்கேயோ பார்ட் டைம் செய்யறானா அதுலே நல்ல காசு வருதாம் என்றாள் . சம்யு அது என்னடி அப்படி ஒரு வேலை நான் கூட தான் லீவ் நாளில் மாக்ல வேலை செஞ்சு இருக்கேன். மிஞ்சி போனா டிப்ஸ் சேர்த்து முன்னொரு ருபாய் கிடைச்சுது என்று சொல்ல சிந்து இல்ல சம்யு அவன் என்ன வேலைனு சொல்லலே ஆனா ஹிண்ட் குடுத்தான் பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அவன் செய்யற வேலை பிடிக்குமாம். அபப்டி என்னடி வேலை ஒரு வேளை நாயுடு ஹால் கடையிலே வேலை செய்யறானோ. பேசிக்கிட்டே இருக்க காலேஜ் உள்ளே பஸ் நுழைய அரட்டையை நிறுத்தி கொண்டு இறங்கி உள்ளே சென்றனர்.


வகுப்பறையில் பேச வாய்ப்பே கிடையாது. ரெண்டு அவர் முடிந்ததும் அடுத்த அவர் மாம் வரலே அதனாலே லைப்ரரி போக சொன்னார்கள் அங்கே போவது ஒரு நாலு அஞ்சு பேர் தான் இருப்பார்கள் அதுவும் தூங்குவதற்கு தான்,. சம்யுக்தாவும் சிந்துஜாவும் இன்னும் ரெண்டு தோழிகளோடு கான்டீன் பக்கம் நடையை கட்டினர். கான்டீன் கொஞ்சம் நிரம்பி இருந்தது. இந்த நால்வரும் அவர்களுக்கு வேண்டிய உணவை வணங்கி கொண்டு ஒரு ஓரமாக உட்கார்ந்தனர். கேன்டீனில் இருந்து பார்த்தா பைக் கார் ஸ்டாண்ட் நல்லா தெரியும். சம்யுக்தா கூட வந்த ஒருத்தி ஹே சம்யு அங்கே ஒருத்தன் நிக்கறான் பாரு அவன் தான் நம்ம காலேஜ் ரோமியோ தெரியுமா என்றாள்.


சிந்துஜா தெரியும் தெரியும் அவன் எங்க பஸ்ஸிலே தான் வாரான் நீ ஏன் அவனை சைட் அடிக்கற என்று அந்த பெண்ணை சிந்து கேட்க அவ அட நான் ஒண்ணும் சைட் அடிக்கலே என் ஆளு நாளைக்கு டேட்டிங் போலாம்னு சொன்னான் வீட்டிலே காசு கேட்டா செருப்பு தான் கிடைக்கும் அது தான் அவன் கிட்டே கேட்கலாம்னு யோசிச்சு கிட்டு இருக்கேன் என்றாள். பேசிகிட்டு இருக்கும் போது சொல்லாமல் எழுந்து சென்று அவன் அருகே சென்று ஏதோ சிரிச்சு பேசினா. அவனும் கொஞ்ச நேரம் பேசி விட்டு அவ முதுகில் தட்டி குடுத்து பர்ஸில் இருந்து ரூபாய் எடுத்து குடுத்தான். அவ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனை லேசா அணைச்சு விட்டு திரும்பி வந்தா.

மற்ற மூவருக்கும் ஆர்வம் எதில் இருந்தது என்றால் அவன் பணம் குடுத்தானா எவ்வளவு குடுத்தான் இவை எதுக்கு என்று கேட்டாள் என்பதை தெரிந்து கொள்வதில் தான். அவள் வந்து உட்கார கூட விடவில்லை. சிந்துஜா தான் ஆரம்பித்தா. என்னடி என்ன பேசின என்ன சொன்னான் என்று கேட்க அந்த பெண் அவள் கைப்பையில் இருந்து ரெண்டு ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து டேபிள் மேலே போட்டு அவன் தலைவன் தாண்டி நான் ஒண்ணுமே சொல்லல டெர்ம் பீஸ் கட்ட லேட் ஆயிடுச்சு வீட்டிலே குடுத்த பணம் செலவு செய்துட்டேன் இப்போ பையின் சேர்த்து கட்ட சொல்லறீங்க நீ தான் உதவி செய்யணும்னு கேட்டேன் அவன் வெறும் நீ எந்த வருடம் படிக்கற என்று மட்டும் கேட்டு உடனே எடுத்து குடுத்தான் கண்டிப்பா அவன் அப்பா ஒரு பெரிய அரசியல்வாதியா இருக்கணும் என்று முடித்தா. சம்யுக்தா சிந்துஜாவுக்கு ஆச்சரியம் தான் இருந்தது. வகுப்புக்கு திரும்பும் போது மற்ற இருவரை காட்டிலும் கொஞ்சம் மெதுவா நடந்து அவர்களுக்குள் இடைவெளி இருந்ததும் சம்யுக்தா சிந்துஜாவிடம் ஹே சிந்து இன்னைக்கு அவன் உன் கூட பேசினா நெறய விஷயம் கறக்க பாரு நானும் எங்க ஏரியாவில் அவனை பற்றி விசாரிக்கறேன் என்று சொன்னாள் .


வகுப்புகள் முடிந்து வீடு திரும்பும் போது சம்யுக்தா அவன் பஸ்ஸில் இருக்கிறானா என்று நோட்டம் விட்டா ஆனால் எப்பபோதும் போல மாலை நேர ட்ரிப் போது பசங்க எண்ணிக்கை குறைவாகவே இருந்தது காரணம் பாதி பேர் வகுப்பை கட் செய்து விட்டு நடுவே கிளம்பி விடுவார்கள்.அன்று வழக்கமா வரும் மாம் கூட பஸ்ஸில் இல்லை. அதனால் ட்ரைவர் கண்டக்டர் மட்டும் தான் போலீஸ் வேலை செய்வார்கள். ஆனால் இந்த சில நாட்களுக்காக பசங்க ட்ரைவர் கண்டக்டர் ரெண்டு பேருக்கும் அட்வான்ஸ் கவனிப்பு செய்து விடுவதால் அவர்கள் பசங்க பொண்ணுங்க பக்கத்தில் உட்கார்ந்து கடலை போட்டு கொண்டு வருவதை கண்டுக்க மாட்டார்கள். பஸ் காலேஜ் விட்டு வெளியே வந்து ஹைவே திரும்பியதும் பசங்க மெதுவா எழுந்து பொண்ணுங்க உட்கார்ந்து இருக்கும் முன் வரிசையை நோக்கி படை எடுத்தார்கள். அவர்களுக்கு இன்னொரு அதிர்ஷ்டம் அன்னைக்கு வெளியே மழை கொட்டி கொண்டிருந்ததால் ஜன்னல்கள் மூடி இருந்தன. பசங்களுக்கு மட்டும் இந்த மாதிரி வாய்ப்பு பிடித்த ஒன்று இல்லை பொண்ணுங்களுக்கும் பிடிச்சு தான் இருந்தது. ஆனால் அவர்கள் பசங்களை போல வெளியே காட்டி கொள்ளுவதில்லை. வேகமாக வரிசைகள் இடம் மாறின. பஸ்ஸில் மூன்று இருக்கைகள் நான்கு பேர் உட்கார இடம் உண்டானது. சம்யுக்தா சிந்துஜா இருக்கையில் அவர்கள் படிக்கும் அதே வருட ஆனால் வேறு குரூப் பசங்க சஞ்சய் ரந்தீர் சேர்ந்து கொள்ள பஸ் வேகத்தை விட இவர்கள் நெருக்கம் வேகமாக குறைந்து கொண்டு வந்தது.


சிந்துஜா தான் சஞ்சய் கிட்டே சஞ்சய் கடலை போடறதோட நிறுத்திக்கோ உன் கை என் கிட்டே வந்தது அப்புறம் நடக்கறது வேற என்று எச்சரிக்கை செய்ய சஞ்சய் நெருங்குவதை நிறுத்தி கொண்டான். உடனே ரந்தீர் புரிந்து கொண்டு அவன் வாலை சுருட்டி கொள்ள இருட்டில் நான்கு பேரும் கிசுகிசுத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஒன்று நிச்சயம் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் அவர்களுக்குள் மடத்தனமான காதல் என்ற எண்ணமெல்லாம் இல்லை. சஞ்சய் என்ன பேசுவதுனு தெரியாம சிந்துஜா கிட்டே சிந்து ப்ராஜக்ட் பத்தி பிளான் பண்ண ஆரம்பிச்சுட்டியா என்றதும் தான் சம்யுக்தா சிந்துஜா ரெண்டு பேருக்கும் நேத்து அவர்கள் பேசி கொண்டது நினைவுக்கு வந்தது. இருவரும் ஆனால் இப்போ படிப்பு பற்றி பேசும் மூடில் இல்லை அதனால் அந்த டாப்பிக்கை தவிர்த்து விட்டனர். ரந்தீர் ஹே ரெண்டு பேரும் ஸ்டடி டூர் வரீங்க தானே என்று கேட்க அவர்கள் முழித்தனர் அவர்கள் டிபார்ட்மென்ட் இன்னும் அது பற்றி சொல்லவில்லை. எங்களுக்கு தெரியாது என்றதும் சஞ்சய் விளக்கமாக சொல்லி இந்த டூர் கம்பல்சரி இலை ஆனால் பதினைந்தாயிரம் பீஸ் என்றான். சிந்துஜா அது உங்க டிபார்ட்மென்ட் மட்டும் இருக்கும் என்று சொல்ல ரந்தீர் இல்லடி எல்லோரும் ஒரே டூர் தான் அதுவும் இந்த முறை டார்ஜீலிங் நாலு நாள் என்றான்.


பொண்ணுங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது. நாலு நாள் ஜாலியா இருக்கலாம் என்று கனவு கண்டாலும் கண்டிப்பா ரெண்டு பேர் வீட்டிலும் கம்பல்சரி இல்லைனு தெரிஞ்சா விட மாட்டார்கள் என்று உறுதியா தெரியும்.

சிந்துஜா ஒரு ஏழு மணிக்கு கால் செய்தா. சம்யு நினைச்சா மாதிரியே பேச்சு எடுத்த உடனே என் அம்மா அதெல்லாம் போக கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க நீ வீட்டிலே பேசினியா என்றதும் நான் இல்லடி என் மாமி வந்து இருக்காங்க அவங்க இருக்கும் போது பேசினா கண்டிப்பா முடியாதுனு தான் சொல்லுவாங்க அவங்க எதிரே பொண்ணை எப்படி கண்டிப்பா வளர்க்கிறேன்னு காமிச்சுக்க என்றேன். சிந்துஜா ஹே அப்போ மேடம் மேலே கை வைக்க போறது மாமா பையன் தானா சொல்லவே இல்லை பையன் எப்படி என்று கேட்க நான் லூசு எனக்கு எங்க அமமா வீட்டு ஆளுங்களை சுத்தமா பிடிக்காது. எல்லாம் கருப்பா ஆப்பிரிக்கா இறக்குமதி போல இருப்பாங்க. அவன் ஒரு வாட்டி தான் பார்த்து இருக்கேன் வாந்தி வரும் சரி அப்புறம் பேசறேன்னு கட் செய்தேன்.


மாமி இன்னும் கிளம்பாததால் நான் அறைக்குள் தஞ்சம் புகுந்தேன். படுக்கையில் படுத்து முக்கிய பிரெச்சனை ஸ்டடி டூர் போக என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.அறையை திறந்து கொண்டு அம்மாவும் மாமியும் வந்து படுக்கையில் உட்கார்ந்து மாமி பேச ஆரம்பித்தார்கள். சம்யுக்தா இது உனக்கு மூணாவது வருஷம் அடுத்த வருஷம் படிப்பு முடிஞ்சுடும் அப்புறம் கல்யாணம் தான் அது தான் உங்க அம்மா கிட்டே பேசிட்டு போகலாம்னு வந்தேன். உனக்கு நரேஷ் தான்னு நீ பொறந்த போதே பேசியாச்சு அவனுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு. என்ன இந்த காலத்திலே பசங்க ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போக வர இருக்கறது இல்ல. அம்மா நீ சரி சொன்னா ஜாதகம் இப்போவே குடுக்க தயாரா இருக்காங்க ஜாதகம் ஒத்து போச்சுன்னா நிச்சயம் செய்துட்டு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வச்சுக்கலாம். மாமி பாட்டுக்கு பேசிக்கிட்டே போக நான் அம்மாவை முறைத்தேன். அம்மா என் கோபத்தை புரிந்து கொண்டு தலையை குனிந்து கொண்டார்.

நான் மாமி நரேஷ் என்னை விட ரெண்டு வயசு தான் பெரியவன் அவனுக்கு இன்னும் சரியா மீசை கூட வளறலே அது மட்டும் இல்ல நான் மேல் படிப்புக்கு லண்டன் போகலாம்னு இருக்கேன். அங்கே இருந்து வந்ததும் ஒரு வேளை நரேஷுக்கு மேசியா வளர்ந்து இருந்தா அப்போ யோசிக்கலாம் என்று சொல்லி விட்டு படுக்கையை விட்டு இறங்கி பாத்ரூம் உள்ளே சென்றேன்.திரும்பி வெளியே வரும் போது மாமி இல்லை. ஆனா நான் செய்த பெரிய தப்பு அம்மாவை பகைச்சுக்கிட்டேன். இப்போ அம்மா கிட்டே டூர் பத்தி சொன்னா கண்டிப்பா உதை தான் கிடைக்கும். இருந்தாலும் சாப்பிடும் போது அம்மா கிட்டே பேசினேன். அம்மா நான் குடுத்த அதே முறைப்பை திருப்பி எனக்கு குடுத்து விட்டு அதெல்லாம் இப்போ ஒண்ணும் போக வேண்டாம் என்று சொல்ல வழக்கம் போல அப்பாவும் தலையாட்டி பொம்மை போல தலை ஆட்டினார். தெரிஞ்ச பதில் தான் என்பதால் நான் பெருசா வருத்தப்படாமல் சாப்பிட்டு முடித்து அறைக்கு சென்றேன். சிந்துவுக்கு வாட்டஸ்அப் அனுப்ப அவ வந்து சொல்லுடி இங்கே மாதிரி அங்கேயும் முடியாதுனு சொல்லிட்டங்களா என்று அனுப்ப நான் சோக ஸ்மைலி அனுப்பினேன்.


கொஞ்ச நேரத்தில் சிந்து லைனில் வந்தா இருவரும் சொந்த கதை சோக கதையை பகிர்ந்து கொள்ள இறுதியில் உறுதியா ஒரு முடிவு எடுத்தோம். வீட்டில் அனுப்பவில்லை என்றாலும் டூருக்கு போவது என்று. ஆனால் அதுக்கு என்ன வழி என்பதை நாளைக்கு காலேஜில் பேசுவோம் என்று முடிவு எடுத்தோம். மறு நாள் ஸ்டாப்பில் சம்யுக்தா சென்ற போது ரெண்டு பெண்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். சம்யுக்தா கடிகாரத்தை பார்த்து கொண்டா ஒரு வேளை சீக்கிரம் வந்து விட்டோமா என்று அதே நேரம் ஒரு பைக் வந்து நிற்க அதில் இருந்து அவன் இறங்கி ஹெல்மட்டை கழட்டி பைக் ஒட்டி வந்தவனிடம் குடுக்க அவன் தலைவா அப்போ நான் கிளம்பறேன் இன்னைக்கு சாயிந்திரம் கிளப் மீட்டிங் இருக்கு சரியா வந்துடு கணக்கு சரி செய்யணும் என்றான். இவனும் சரி வரேன் நீ கிளப்பு என்று சொல்லி விட்டு வழக்கமா அவன் உட்காரும் கடை வாசல் அருகே செல்ல சம்யுக்தா டெஹ்வை இல்லாமல் அவன் பார்க்கும் முன்பே அவனை பார்த்து புன்னகை செய்ய அவன் கண்டுக்கொண்டதாக தெரியலே.

இது வரைக்கும் அவனை நான் கண்டுகொண்டதே இல்லை. ஆனால் இன்று அவன் என்ன செய்கிறான் என்று உன்னிப்பா கவனிக்க ஆரம்பித்தேன். வழக்கம் போல அவன் உட்காரும் கடை வாசலுக்கு சென்று உட்கார்ந்து சிகரெட் பத்த வைக்க அருகே இருந்தவன் தலைவா முதல் கழுகு வந்துகிட்டு இருக்கு என்று எச்சரிக்க அவன் ஹே அவ பல்லு புடுங்கின பாம்பு அவளுக்கு நான் பயப்படணுமா அதான் அவ கரஸ் கூட அடிச்ச கும்மாளத்தை வெளிச்சம் போட்டு காட்டியாச்சு இல்ல என்றான். அவன் அப்படி பேசியது எனக்கு கொஞ்சம் பயத்தை உன்டு செய்தது. இவன் எதற்கும் துணிந்தவன் என்பதால். மாம் வந்து என் பக்கத்தில் நிற்க நான் கொஞ்சம் ஒதுங்கி நின்றேன். மாம் அதை கவனித்து சம்யுக்தா உன் புடவை தலைப்பை சரி செய் பாரு ஒதுங்கி இருக்குனு சொல்ல நான் குனிந்து பார்த்தேன். உண்மையில் ஒதுங்கி இருந்தது மாம் தலைப்பு தான். சிரிப்பு வந்தது அடக்கி கொண்டேன். நான் தலைப்பை சரி செய்யாதது அவங்களுக்கு எரிச்சல் உண்டு செய்து இருக்கணும் அவங்களே என் தலைப்பை இழுத்து சரி செய்வது போல செய்ய பின்னால் இருந்து அவன் சிஸ்டர் இப்போ நீங்க மாமுக்கு செய்து விடுங்க பாருங்க பாதி தெரியுதுனு சொல்ல மாம் அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.

பஸ் வந்து விடவே பஸ்ஸில் ஏறினோம். நான் என் கைக்குட்டையை தவற விட்டது போல விட்டு அதை எடுத்து கொண்டு கடைசியாக ஏற பின் பக்கம் அவன் ஏறுவது தெரிய நான் அவனை பார்த்து முன்முறுவ இந்த முறை அவன் அதை அங்கீகரிப்பது போல தெரிய ஒரு வெற்றி களிப்போடு பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். அடுத்த ஸ்டாப்பில் சிந்து ஏறி என் பக்கத்தில் உட்கார பஸ் புறப்பட்டதும் அவளிடம் ஸ்டாப்பில் நடந்ததை கதையா சொல்லி முடித்தேன். சிந்து பிறகு அப்போ சம்யு உன் நம்பர் அவனுக்கு குடுக்கட்டுமா நேத்தே கேட்டான் என்று சொல்ல அவள் சொன்னது உள்ளுக்குள் எனக்கு ஒரு சுகம் குடுக்க நான் குடு வாட்ஸ்அப் தானே செய்ய போறான் வேண்டாம்னா எப்போ வேணும்னா இக்னோர் செய்து விடுகிறேன் என்று அனுமதி குடுத்தேன். ஆனா சிந்து உடனே இதை அவனுக்கு வாட்ஸ்அப் செய்யவான்னு நினைக்கலே.

நாங்க பேசி ரேணு மூணு நிமிஷத்தில் என் போன் வைப்ரேட் ஆக எடுத்து பார்த்தேன். வாட்ஸ்அப் புது நம்பரில் இருந்து யாருக்கும் தெரியாம யார் என்று பதில் அனுப்ப அவன் தலைவன் என்று பதில் அனுப்பினான். எனக்கு உடனே புரிந்தது அது யார் என்று. நான் ஹலோ என்று அனுப்ப அவன் தலைப்பு சரியா இருக்கான்னு கேட்டு ஒரு கிண்டல் சமைலி போட்டு அனுப்ப நானும் அதே கிண்டலில் அதை உன் மாம் கிட்டே கேளு என்று அனுப்பினேன். அவனும் விடாம மாம் நான் சொன்னா கேட்க மாட்டாங்க அது நம்ம கரஸோட பொம்மை அவங்கள விடு நீ ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினச்சேன் வாயாடி தானா என்று அனுப்பினான்.

நான் கொஞ்ச நேரம் என்ன பதில் அனுப்புவது என்று யோசித்து பிறகு சிந்து கிட்டே கேளு நான் எப்படி வாய் ஆடுவேன்னு என்று அனுப்ப அவன் சரி சரி காலேஜ் வந்துடுச்சு பைன்னு கட் செய்தான். இறங்கும் போது சிந்து ஹே சம்யு யாருடி அவ்வளவு நேரம் கடலை போட்டுக்கிட்டு இருந்தே எனக்கு தெரியாம ஏதாவது செட் அப் செய்து இருக்கியா என்று கேட்க நான் அவள் கையை கிள்ளி அதெல்லாம் இல்லை என்று சொல்லி கொண்டே வகுப்பை அடைந்தேன்.எப்போதும் போல நாங்க பின் வரிசையில் உட்கார சிறிது நேரத்தில் லெக்ச்சரர் வந்து வழக்கம் போல நோட்ஸ் டிக்டேட் செய்ய நானும் கொஞ்ச நேரம் எழுதுவது போல நடித்து பிறகு பையில் இருந்து மொபைல் எடுத்து மேஜைக்கு அடியில் வைத்து வாட்ஸ்அப் திறந்து பஸ்ஸில் நடந்த பரிவர்த்தனையை மீண்டும் ஒரு முறை படித்தேன். படிக்க படிக்க அவன் மேலே எனக்கு ஒரு பிடிப்பு உண்டானது. எனக்கும் சிந்துவுக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு ஒரு நாள் அவ எல்லா நோட்ஸும் எழுதி கொள்ளுவா அடுத்த நாள் நான் பிறகு அதை நகல் எடுத்து மாற்றி கொள்வோம். மாம் தண்ணி குடிக்க வெளியே செல்ல சிந்து என் போனை பிடுங்கி அப்படி என்னடி காலையில் இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்னு பார்க்க அந்த நம்பர் பார்த்ததும் அடிப்பாவி நீயும் ஆரம்பிச்சுட்டியா அவன் கிட்டே மெஸேஜ் பண்ண ஆரம்பிச்சா ஒரு மயக்கத்திலே மாட்டிக்குவோம். நான் மூணு நாளா ராத்திரி தூங்காம அவஸத்தை படறேன் என்று சொல்லி விட்டு போனை என்னிடம் திருப்பி குடுத்தா. அதற்குள் மணி அடிக்கவே வகுப்பு பசங்க பொண்ணுங்க பேச்சு சத்தத்தில் கலகலப்பானது. அடுத்த அவர் ஸார் வந்து அவருக்கு ஒரு முக்கிய மீட்டிங் இருக்கு என்று சொல்ல எல்லோரும் கேன்டீன் மைதானம் என்று படை எடுத்தோம். நானும் சிந்துவும் மைதானம் செல்ல முடிவு செய்தோம். அங்கே ஒரு நிழலான இடம் இருக்கு யாரும் பொதுவா வர மாட்டாங்க பசங்க மட்டும் சில சமயம் வந்து சிகரெட் பிடிப்பாங்க.ரெண்டு பேரும் உட்கார்ந்து பேச துவங்க கொஞ்ச நேரம் பொறுத்து ஒரு பையன் அருகே வந்தான் சிஸ்டர் உங்களை கான்டீன் வர சொன்னார் என்று சொல்ல நான் யார் சொன்னது நாங்க கான்டீன் போக விரும்பல என்றேன். அப்போ சிந்து போனில் வாட்ஸ்அப் சவுண்ட் வர அவ எடுத்து பார்த்தா அதில் அவன் தான் மெஸேஜ் அனுப்பி இருந்தான் சிந்து கான்டீன் வா என்று அவ உடனே சரி வாடி போகலாம்னு கிளம்ப நானும் கிளம்பினேன்.


கான்டீன் அருகே போகும் போதே தெரிந்தது அது காலியாக இருக்கு என்று. உடனே கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். அடுத்த வகுப்புக்கு நேரம் ஆகி இருந்தது. இனிமே போனா உள்ளே விட மாட்டாங்க அத்தோடு பயின் வேறு கட்ட வேண்டி இருக்கும். போகலேனா ஒரு வாரம் பொறுத்து கூட்டி அனுப்பி கேள்வி கேட்பாங்க அப்போ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்னு முடிவு செய்து சிந்து கிட்டேயும் சொன்னேன். அவ சரி வேற என்ன செய்ய கான்டீன் போகலாம் என்று இருவரும் உள்ளே சென்றோம். அவன் வழக்கம் போல அங்கே இருந்த மரத்தடியில் இருந்தான். ஆனால் கூட ரெண்டு பேர் தான் இருந்தார்கள். சிந்துவும் நானும் அவன் அருகே செல்ல அவன் எங்களை பார்த்ததும் அந்த ரெண்டு பசங்களையும் கிளம்ப சொன்னான்.

சிந்து தான் அவனிடம் பேசினா. ஹே உன் பெயர் சொல்லுப்பா எல்லோரும் தலைவர் தலைவர்னு சொல்லறாங்க எனக்கு அபப்டி சொல்ல பிடிக்கல என்றதும் அவன் சிரித்து கொண்டே நீ மட்டும் உன் பெயரை சொன்னியா என்ன இது வரைக்கும் வாட்ஸ்அப்பில் தோழின்னு தானே போடற அதுக்காக உன் பெயர் நான் கண்டுப்பிடிக்கலேன்னு சொல்ல மாட்டேன் சொல்லு சிந்துஜா என் பெயர் கங்கா இன்னைக்கு அறிமுகம் ஆன தோழி பெயர் தெரியும் ஹலோ சம்யுக்தா என்று சொல்ல மூவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம். நான் தான் எதுக்கு எங்களை வர சொன்னே இங்கே வந்ததால் இந்த அவர் கட் செய்ய வேண்டி இருக்கு என்றேன். அவன் என்ன சம்யுக்தா காலேஜ் வந்த பிறகு கிளாஸ் கட் செய்யலைன்னா நீ ஒரு கல்லூரி மாணவின்னு வெளியே சொல்லவே தகுதி இல்ல. சரி நேத்து சிந்துஜா அனுப்பி இருந்தா ஏதோ நீங்க காலேஜ் ஸ்டடி டூர் போக வீட்டிலே அனுமதி கிடைக்கலேன்னு அது தான் பேசலாம்னு கூப்பிட்டேன் என்றான்.

சிந்து உடனே ஆமாம் கங்கா எங்களுக்கு நேத்து தான் தெரியும் டூர் பத்தி வீட்டிலே ரெண்டு பேரும் பேசினோம் ரெண்டு பேர் வீட்டிலேயும் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள். அவன் டூர் தேதி சொல்லிட்டாங்களா என்று கேட்க நான் இல்லை அநேகமா அடுத்த மாசம் பூஜா லீவ் போது இருக்கும்னு கேள்விப்பட்டேன் ஆனா டூர் வரவங்க அடுத்த மாசம் முதல் வாரம் பணம் கட்டணும்னு சொல்லி இருக்காங்க என்றதும் அவன் சரி இன்னும் ரெண்டு முறை வீட்டிலே பேசி பாருங்க அப்புறம் என்ன செய்யறது யோசிக்கலாம்னு சொன்னான்.
ஒழுங்கா கிளம்பி இருக்கணும் ஆனா சிந்து இல்ல கங்கா எப்படியும் இந்த அவர் வகுப்பு போக முடியாது அடுத்த அவர் கூட அதே லெக்ச்சரர் தான் என்று சொன்னதும் அவன் சரி வாங்க என் நண்பன் ஹாஸ்டல் அறை இருக்கு அங்கே உட்கார்ந்து பேசலாம் பயப்படாதீங்க என் காய் உங்க ரெண்டு பேர் மேலே படாது என்றான். அவன் சொன்ன விதத்தில் ஒரு உண்மை இருந்தது அதனால் நான் தான் சரி வா போகலாம்னு கிளம்பினேன். காலேஜ் காம்பௌண்ட் சுவரில் ஒரு இடத்தில் ஒரு பெரிய ஓட்டை அதில் குனிந்து சென்றால் கல்லூரியின் ஆண்கள் விடுதியின் பின் பக்கம் வந்து விட்டது. முதல் மாடி ஏறி செல்லும் போது ஒரு அறையின் வாசல் மேலே கையை வச்சு கங்கா சாவியை எடுத்து இன்னும் நாலு ரூம் கடந்து ஒரு அறையை திறந்தான்.


காரிடாரில் யாரும் இல்லை. அறைக்குள்ளும் யாரும் இல்லை எனக்கு ஒரு சந்தேகம் நிஜமாவே இவன் இங்கே பேருக்கு ஒரு அறையை எடுத்து வச்சு இருக்கானா என்று. கட்டில் மேலே துணி புத்தகம் காலி பீர் பாட்டில் இன்னும் சொல்ல போனா ரெண்டு மூணு ஜட்டி கிடந்தது. கண்டிப்பா அந்த கட்டில் மேலே நான் உட்காரா மாட்டேன்னு முடிவு செய்தேன். என் மனசை புரிந்து கொண்டவன் போல கங்கா பக்கத்து கட்டில் மேலே இருந்து ஒரு போர்வையை இழுத்து தரையில் போட்டு உட்காருங்க என்றான்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக