என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பிய வேலா,
மக்கா எழுந்திரில நடு நிசி ஆயிடுச்சு, இதுமேல போன சாப்பாடு எதுவும் கிடைக்காது. இப்போவேற மணி 10 தாண்டிருச்சு, நம்ம பாய் கடையிலேயே சாப்பிட்டு போடலாம் என்றான்.
ஆம், உண்மையில் அங்கிருந்து நாகர்கோயில் செல்ல எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம். எனக்கோ என்னுடைய மனைவியை பார்க்கவேண்டும் போல் இருந்தது. எனது உள் உணர்வோ விரைந்து செல் என்று தூண்டியது. என்னால் அதுக்குமேல் பொறுக்க முடியவில்லை. மனதில் எதோ குடைய
நான்: ஏலேய் மக்கா, அங்கே என் பொஞ்சாதி தனியா இருப்பால, நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துறேன்.
வேலா: எய்யா, பொண்டாடி மேல பாசத்த பாருடா, மூணு மாசமா இல்லாத பாசம் இப்போ பொங்கி வருதோ.
நான்: டேய், நான் அவகிட்ட போன்-ல கூட பேசலடா, எனக்கும் வேற பசியே இல்லை, என்று நானும் முடிந்த வரை சீக்கிரமாக செல்லலாம் என்று சொல்லி பார்த்தேன். ஆனால்,
வேலா: பொறு மக்கா, நாம எல்லோரும் ஒண்ணா போகலாம். என்ன நீ போன உடனவே பொண்டாடியை தலைக்கு மேல தூக்க போறியா, அங்கே நாலு மாமியார், ஏழு நாத்தனார் (அவர்களின் அம்மாவையும் மனைவியையும் குறிப்பிட்டான்) ஹோஷ்பிடல்-லையே இருக்காங்க.. நீ போய் எதையும் வெட்டி முறிக்க போறதுல்ல. அங்கே எத்தனை மணிக்கு கிளம்பினியோ மதியம் கூடா சாப்பிட்டு இருக்க மாட்டா வந்து ஒரு வாய் சாப்பிட்டு போகலாம் என்றான்.
இவன்கிட்ட பேசி நம்மலால ஜெயிக்க முடியாது, வழியே இல்லாமல் நானும் அவர்களும் போய் சாப்பிட தொடங்கினேன். அது அவர்கள் அடிக்கடி வந்து உண்ணும் கடை போல, அவர்களை பார்த்ததும் அனைவரும் எங்களை நன்றாக கவனிக்க தொடங்கினர். ஏதேதோ ஆர்டர் செய்தனர். கேரளா பரோட்டா சற்று பெரியதாகவே இருந்தது. சுடசுட கோழி வருவலும், அதன் லெக் பீஸ்-ஸும் நல்ல காரசாரமா இருந்தது. நான் சாப்பிடுவதை பார்த்தவர்கள்.
வேலா: பார்த்தியா மக்கா, கோழி காலை பார்த்த உடன், பொண்டாடியை மறந்துட்டான். நாம்ம பாய் கடை கோழின்னா சும்மாவா என்று ஏகபோகமாக என்னை கிண்டல் செய்தனர்.
நான்: டேய், சும்மா இருந்தவனை சாப்பிட கூப்பிட்டுடு நக்கல் வேற பண்ணுறியளோ, வச்சிருகேண்டி. நான் வாங்கிவந்த புல் நானே தனியா அடிச்சுறேன். உனக்கு ஒன்னும் கிடையாது போடா..
மற்ற நண்பர்கள் : ஏலேய் வேலா, நமக்காக என்னனமோ வாங்கிட்டு வந்திருக்குற பையனை இப்படி தப்புத்தப்பா பேசாதலே. நீ சாப்பிடு மக்கா, அவன்கிடக்கா கூறுகெட்ட பையன் என்று எனக்கு வகாலத்து வாங்கினர்.
ஆனால் என்னையே திரும்ப கவிழ்த்தனர் என்பது வேறு கதை.
வெங்கடேஷ்: ஏலேய், தப்புத்தப்பா பேசாதின்களே, அவன் ஒன்னும் பொண்டாடியை பார்க்க ஆசைபடலை. அந்த நர்ஸ் ஸ்டெல்லாவை பார்க்கணும்னு ஆசைடா. என்கிட்ட போன்-ல பேசும்போது கூட பொண்டாடியை பற்றி கேட்கவே இல்லை, நர்ஸ் நல்ல பார்த்து பாங்கலாதான் கேட்டான். அதுக்கு இப்படி ஒரு உள் குத்து இருக்குனு நான் நினைக்கவே இல்லை என்றான்.
அதற்கு ஆரவாரமாக அனைவரும் சிரித்தனர். என்ன செய்ய நானும் சிரித்து வைத்தேன். இல்லை என்றால், கோழிக்கு பதிலாக என்னை வைத்து இரவு உணவை கடத்தி விடுவர். கேலியும் கிண்டலுடன் உணவை சாப்பிட்ட பின்னர் அனைவரும் புறப்பட்டோம். இம்முறையும் நான் அம்பாசிடரில் வேலாவுடன் வந்தேன். சில நிமிடங்கள் பேசி வந்தோம், பின்னர் நான் மீண்டும் எனது நினைவலைகளை புரட்ட ஆரம்பித்தேன்.
ரயிலில் எனக்கெதிரே கலா அமர்ந்திருந்தாள். அவள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவளது பார்வையில் எந்த வித குற்ற உணர்ச்சியும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கோ அவளை இப்படி ஒரு இடத்தில் பார்ப்பேன் என்று சிறிதும் கூட நினைத்து பார்க்க வில்லை. அவளை பார்த்த உடன் கட்டுக்கடங்கா கோபம், முடிந்த மட்டும் வராத உறக்கத்தை வரவழைத்து கொண்டு கண்களை இருக்க மூடினேன், ஆனால் அங்கும் அவளே, அவள் என்னிடம் பேசிய பழைய நினைவுகள் ...
ஒரு முறை நாங்கள் இருவரும் கன்னியாகுமரி சென்றிருந்த பொழுது அவள் சொல்லிய வார்த்தைகள். அங்கே பல குழந்தைகள் சுற்றுலா வந்திருந்தனர். அவருக்கும் ஆறு வரை இருக்கும் சினந்சிறு குழந்தைகள். அவர்களை பார்த்த உடன்
கலா என்னிடம், ஹரி அவங்களை பார்த்தியா. எனக்கும் ஆசையா இருக்குடா எப்போ நமக்கு அதே மாதிரி குழந்தை வரும்னு. என்றாள்.
அதற்கு நான், நீ சரினா, நாம இப்போவே அதுக்கு முயற்சி செய்யலாம் என்ன சொல்லுற.. என்றேன்
கலா: சீ போடா, அசிங்கசிங்கமா பேசாத. நான் எப்போ கல்யாணம் பண்ணலான்னு கேட்டேன்..அதுக்குள்ள சாருக்கு வேற ஆசை வந்திடுச்சு.
நான்: எனக்கும் ஆசைதான் ஆனால். நான் அந்த பாக்டோரியைமட்டும் வாங்கிடேனா அடுத்த நாளே நம்ம கல்யாணம். என்ன சரியா என்றேன்.
எனது பதிலில் வெட்க பட்டவளாக எனது கரங்களை இருக்கு பிடித்த படி கடல் அலைகளை வெறித்து பார்த்தாள். பின்னர் இருவரும் ஒருவரயொருவர் அனைத்த படியே கடைவீதியில் உலா வந்தோம்.
அந்த பழைய நினைவுகளை நினைக்கையிலேயே எனக்கு கண்ணீர் தாரைதாரையாக வந்தது. மேலும் பொறுக்க முடியாமல் நான் எழுந்து ரயில் பெட்டியின் வாசலை நோக்கி சென்றேன்.
அங்கே நின்று கண்ணீருடன் வழியெங்கும் தெரிந்த மரந்செடிகளை பார்த்துக்கொண்டே வந்தேன். சற்று நேரத்தில் இன்னொரு உருவம் உள்ளே இருந்து வெளியே வந்தது. அது கலாதான். அதற்கு மேல் நகர முடியாமல் இருந்த நான் நகர்ந்தால் வெளியே குதிக்க வேண்டியதுதான். வழியில்லாமல் அங்கேயே நின்றேன். அவளோ அழுத்தம் திருத்தமாக அங்கே AC அட்டெண்டர் அமர இருந்த இருக்கையில் இருந்து என்னிடம் பேச தொடங்கினாள்
கலா: என்ன ஹரி, என்னை பார்த்து பார்க்காத மாதிரி இருக்க. நீ எப்படி இருக்க, அம்மா எப்படி இருக்காங்க.. என்று வரிசையாக கேட்டாள்
நான்: வெளியே வெறித்து பார்த்து கொண்டே, எல்லோரும் உண்ணும் உயிரோடதான் இருக்கோம் என்றேன்.
என்னை மேலும் சீண்டி பார்க்க, வேண்டும் என்றே அடுத்த கேள்வியை கேட்டாள்
கலா: ஓ அப்படியா!!! எனக்கு தெரியாம போச்சே. கீது கூட சொல்லவே இலையே என்றாள்.
நான்: ஏன்? தெரிஞ்சிருந்தா இருக்குற கொஞ்ச நஞ்ச உசுரையும் எடுத்துடு போயிருப்பியா...
கலா: ஏய், என்ன பேசுற நான் சும்மா கிண்டலுக்கு பேசினேன். நீ ரொம்ப சீரியஸ்-ஸா பேசுற..
நான்: உனக்கு எல்லாமே கிண்டலா போச்சுளா. நான் எல்லோருக்கும் சீண்டி பார்குற விளையாட்டு பொம்மை ஆயிடேம்லா...
கலா: என்ன ஹரி என்மேல் கோபமா இருக்கியா??
அதுவரை நான் அடக்கி வைத்த கோபத்தை அடக்க முடியாமல். வார்த்தைகளை அக்கினியாய் வீசினேன்.
நான்: ஏய், எழுந்திரிச்சி உள்ள போடி, பண்ணுறதெல்லாம் பண்ணிடு இப்போ பத்தினி வேஷம் போடுறியா.. என்கிட்ட இன்னொரு வார்த்தை பேசின உன்னை இல்லை நானே வெளியே குதிச்சுடுவேன்.. பேசாம போய்டு என்றேன்
எனது கடும் வார்த்தைகளை கேட்ட கலா உடனே மறுபேச்சு இன்றி உள்ளே சென்றாள். அவளை பார்த்து கெட்ட வார்த்தைகளால் கூட திட்ட மனமும் வார்த்தையும் வரவே இல்லை. ஒருவேளை நான் இன்னமும் அவளை நேசிகிறேனா.. அவளாக கேட்டால் மனம் மாறிவிடுவேனா என்ற எண்ணம் கூட என்னுள் எழுந்தது. என்னடா ஆண் ஜென்மம். ஒருத்தி உன்னை தூற்றி சென்று விட்டாள்.
ஆனால் இன்னமும் அவளை நேசித்து கொண்டிருக்கிறாய் என்ன மனமடா இது. நானே என்னை நொந்து கொண்டேன். அவள் மன்னித்துவிடு என்று ஒருவார்த்தை கேட்டால் மன்னிக்க கூட மனம் தயாராக இருந்தது. என்ன ஒரு பேடி மனம்.
நல்ல வேலை அவளே என்னை சீண்டி பார்க்கும் வார்த்தைகளை பேசினாள் இல்லையேல் என்ன நிகழ்ந்திருக்குமோ நினைத்து பார்க்கவே மிக கேவலமாக இருக்கிறது.
மீண்டும் அவளை பார்க்கும் சக்தி இல்லாமல் நான் ரயில் பெட்டியில் வாசலிலேயே நின்றேன், உணவகம் வரை சென்று உணவருந்தினேன். வழியில் வந்த அனைத்து ஸ்டேஷன்களிலும் இறங்கி ஏறினேன். மாலை மறைந்து இருள் சூழ்ந்தது. எனது வாழ்விலும் அதே சூன்நியம் சூழ்ந்தது.
மீண்டும் நான் எனது இருக்கைக்கு செல்ல வேண்டும். வேறு வழியே இன்றி வேண்டா வெறுப்பாக சென்றேன். நான் எனது கம்பாட்மென்டுகுள் சென்றேன், அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, இரவு நேர மங்கிய விளக்கு எரிந்தது. அனைவரும் தங்கள் இருக்கை திரையை மூடி இருந்ததனர். எனது இருக்கையிலும் அப்படியே. உள்ளே எட்டி பார்த்தேன்.
அங்கே கலாவுடன் வந்த பெண்மணி கைக்குழந்தையுடன் உறங்கி கொண்டிருந்தாள். கலா மேலே இருந்த இருக்கையில் அந்த பக்கமாக முகம்வைத்து தூங்கி கொண்ருந்தாள். நான் வெளியே சென்றிருந்த பொழுது யார் எனது அருகில் வந்து அமர போகிறார்கள் என்று நினைக்கவே இல்லை. இப்போது எனது இருக்கைக்கு மேலிருந்த பெர்த்தில் ஒரு இளைஞன் படுத்திருந்தான். அனைவரும் உறங்க. நான் சப்தமின்றி எனது இருக்கையில் சென்று அமர்ந்தேன். வராத உறக்கத்தை வரவழைக்க முயன்றேன். கண்கள் மூடினால், ரயிலின் சப்தம், AC யின் குளிர், இவை அனைத்திற்கும் மேல் சற்றே ஆற துவங்கிய மன புன்னை மீண்டும் சீண்டிப்பார்க்க வந்த என் வாழ்கையின் வில்லி கலா. எல்லாம் சேர்ந்து என்னை மேலும் சோதித்து.
கண்களை இருக்க மூடி, கண்ணீரால் எனக்கு நானே ஆறுதல் தேட முயன்ற நேரம், எனது அருகில் ஒரு நிழல், சிறு விசும்பலுடன் அமர்ந்திருந்தது. ஆம் கலாதான் என்னருகில் அமர்ந்திருந்தாள். இவ எப்போ இங்கே வந்தான், அவா வந்தது கூட தெரியாமல் இருந்துடேனே என்று என்னை நானே கடிந்து கொண்டு அவளை தள்ளிவிட்டு, சீ போ என்று விரட்டினேன். அவளோ அசையாமல் இருந்தாள். வந்த கோபத்தில் அவளது கன்னத்தில் ஒரு அரை விட்டேன். மேலும் அங்கிருக்க மனம் இல்லாமல் நான் வெளியே வந்தேன். எனக்காக வைத்தாற்போல் அந்த அட்டெண்டர் அங்கே இல்லை அவருக்கு படுக்க வசதியாக இருக்கும் பலகையை விரித்து நான் படுக்க போனேன். மீண்டும் அவளே வெளியே வந்தாள். அங்கிருந்த வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது எனது கைதடம் அவளது கன்னத்தில்.
ன்னிடம் அடி வாங்கியவள், வீங்கிய கன்னத்துடன் என்னைத்தேடி வெளியே வந்தாள். அவளை மீண்டும் பார்த்த உடன் கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினேன்.
நான்: ஏன்டி, என்னை பாடைல ஏத்தி அனுப்புற .....
நான் வாக்கியத்தை முடிக்கும் முன்னமே, ஓடிவந்து எனது வாயில் வலது கையால் முடி, என்னை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
நான் அனுபவிச்ச உண்மைங்க.. பெண்கள் சிரித்தால் மட்டும் அல்ல அழுதாலும் போச்சு...ஆமாங்க அவ்வளவு நேரம் அவள் மேல் கோபத்தில் இருந்த நான், அவள் கண்களில் கண்ணீரை கண்ட உடன் துடித்து போய்விட்டேன். எனது மனமும் குழப்பத்தில்தான் இருந்தது. என்னடா இவா, என் மனசை ரணமாக்கிவிட்டு போய்ட்டா இப்போவந்து அழுது கண்ணீரால் மருந்து போட வந்திருகிராளா. எனது குழப்பத்திற்கு அவளே விடை தந்தாள்.
ஹரி, ப்ளீஸ் இது மேல ஒருவார்த்தையும் பேசிடாதே. ஏற்கனவே நான் பாதி உயிரை விட்டுடேன். இன்னுமும் நான் உயிரோட இருகிறதே உன்னை எப்படி பார்பேன்கிற நம்பிக்கையில்தான். ப்ளீஸ் நான் சொல்லவர்றத கொஞ்சம் கேளு. எனக்காக ப்ளீஸ் என்று கெஞ்சி மன்றாடினாள்.
சரி இப்போ என்ன கதை சொல்லி என்னை ஏமாற்ற போற என்று ஏகத்தாளமாக கேட்டேன்.
நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ. எனக்கு தாலி மட்டும்தான் அவன் கட்டினான். ஆனால் நான் மனதளவில் இப்போவும் உன்கூடதான் வாழுறேன்.
நான் நக்கலாக கேட்டேன் 'ஏன்டி, காதலிச்ச பாவத்துக்கு என்னைத்தான் ஏமாற்றின, இப்போ தாலி கட்டுனவனையும் ஏமாற்றுரியா???' ரொம்ப நல்ல பொண்ட்டாடிடி நீ..
நான் சொன்னதை கேட்டு சிறிது கோப பட்டவள் என்னை விட்டு விலகி, சீ நீ ரொம்ப தப்ப பேசாதடா. தயவு செய்து நான் சொல்லவர்றத கொஞ்சம் கேட்டு அப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன் என்றாள்.
அவளது கோபத்தை பார்த்தவுடன், எனக்குள்ளேயே 'ச நான் ரொம்ப தப்ப பேசிடோமோ என்று தோன்றியது'. மனதிற்குள் இப்படி தோன்ற ஆனால் வெளியே நான் 'சரி அப்படி என்னத்தான் சொல்ல போற' என்று எரிச்சலில் கேட்டேன்.
கலா: ஹரி நான் சொல்லவர்றத கொஞ்சம் அமைதியா கேளேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. நீ என்கிட்ட பேசாம இருந்தால் நான் சத்தியமா உயிரை விட்டுவேன்.
நான்: அப்புறேன் ஏண்டி என்னை விட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணுன.. இப்போ இங்கே வந்து நீலி கண்ணீர் வடிகுற..
கலா: ப்ளீஸ் என்னை கொஞ்சம் பேசவிடு அப்புறம் உனக்கு எல்லாமே புரியும் என்று கூறி என்னை அவளருகில் அமர செய்தால். பின்னர் அவளே எல்லாத்தையும் சொல்ல தொடங்கினாள்.
உண்மையிலேயே உன்னோட அம்மாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு பொறாமையா இருக்கும். நீ என்னோட நெருங்கி பழகிய நாள்ல ஒருநாள் கூட உன்னோட அம்மாவை பற்றி பேசாமா இருந்ததே கிடையாது. உன்னோட அம்மாவும் அப்படிதான். காலேஜ்சுக்கு அவங்க இரண்டு மூணு தடவைதான் வந்திருப்பாங்க.. ஆனால் உன்னை பற்றி பேசும்போது மட்டும் அப்படி ஒரு சந்தோசமான முகத்தை பார்க்கலாம். உங்க இரண்டு பேரை பார்த்துதான் நானும் என்னோட அப்பா அம்மாமேலே அளவுக்கு அதிகமா எப்படி அன்பா இருக்கணும்னு கத்துகிட்டேன்.
ஹரி நீ ஆஸ்திரேலியா போயிருந்த நேரம் என்னோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துசு. அவருக்கு ரொம்ப சீரியஸ் ஆய்டுச்சு. ஹாஸ்பிடல்-ல சேர்த்தோம். அது அவருக்கு இரண்டாவது அட்டக்காம் எனக்கு டாக்டர் சொன்னது அப்புறமாதான் தெரிந்தது. அதுக்கு அப்புறம் அவர் ரொம்ப பலகினமாகிட்டார். கிட்டதட்ட ஒருவாரம் ஹாஸ்பிடலேயே இருந்தோம். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டு வந்தது அப்புறமா அவருக்கு என்னோட கல்யாணத்தை ரொம்ப சீக்கிரமா பண்ணனும்னு ஆசை வந்திருச்சு. அதனால எல்லோரும் அவசர அவசரமா கல்யாண வேலையில இறங்கிடாங்க. மாப்புளை வேறு யாரும் அல்ல என்னோட அத்தை மகன் ரிஜேஷ் தான். ஆவணும் என்மேல் ஆசையாய் இருந்தானாம். நாங்க எப்போதுமே நல்ல ப்ரெண்ட்ஸா பழகுறதா பார்த்து வீட்டில் எல்லோரும் நாங்க சரியா ஜோடின்னு முடிவு பண்ணிடாங்க.
எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை நானும் யாராவது எனக்கு ஆதரவா இப்போ இந்த கல்யாண ஏற்பாட்டை நிறுத்துவாங்கலானு ஒவ்வொருத்தரையா உதவிக்கு கேட்டு பார்த்தேன் யாரும் வரவே இல்லை. வேற வழியே இல்லாமல் நானும் என்னோட அம்மாவையே உதவிக்கு கேட்டேன். நம்மளோட காதலையும் அவங்க கிட்ட சொல்லி அப்பாகிட்ட சொல்ல சொன்னேன்.
அங்கேதான் என்னோட துரதிஸ்டம் ஆரம்பிச்சிது . அம்மாவும் என்னோட
லவ்வை அப்பாகிட்ட சொன்னங்க. என்னோட அப்பா, அம்மா சொன்னதே கேட்டு அவர் அதிர்ச்சி ஆகி நெஞ்சில கை வச்சு படுத்தார். எனக்கும் அம்மாவுக்கும் என்ன பண்ணுரதுனே தெரியலை. திரும்பியும் நாங்க ஹாஸ்பிடல்-ல அட்மிட் பண்ணினோம். டாக்டர் எங்ககிட்ட திரும்ப அவரோட மனசு கஷ்ட படுத்துற மாதிரியான விஷயம் எதையும் எப்போ சொல்லாதிங்க. அவரால இப்போதைக்கு எதையும் தாங்குற சக்தி இல்லைன்னு சொல்லிடு போய்டாரு. அதை கேட்டதும் நானும் என்னோட அம்மாவும் ஆடிபோயட்டோம்.
அதுக்கு அப்புறம் அம்மா வீட்டுக்கு வந்ததும் என்னோட கால்ல விழாத குறையா என்னிடம் நம்ம காதலை மறக்க சொன்னாங்க, அப்பா ஆசை படியே நான் ரிஜேஷை கல்யாணம் பண்ணும்னு கேட்டுகிடாங்க. என்னால சத்யமா உனக்கு துரோகம் பண்ண முடியலைடா நானும் உயிரை விட்டுரலாம்னு தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். என்னோட நடவடிக்கையை பார்த்த அக்கா நான் எதோ தப்பு பண்ண போறேன்னு என்னையே கவனிச்சுடு இருந்தாள்.
நான் அப்படி ஒரு காரியத்தை செய்ய போனத பார்த்து அவதான் என்னை தடுத்தாள். நான் செத்துட்டா மட்டும் என்னோட அப்பா அம்மா சந்தோசமா இருந்துடுவாங்களா, ஒன்னு நானே அவங்களுக்கு ஒரு முடியை கட்டனும் இல்லைனா என்னோட காதலுக்கு முடிவு கட்டனும் என்று அவள் எவ்வளோவோ எடுத்து சொன்னாள்
நான் என்னோட அப்பா அம்மாவை எதிர்த்து வந்தா கண்டிப்பா உன்னோட அம்மா என்னை ஏற்றுக்க மாட்டாங்க அப்படி அவங்க சரின்னு சொன்னாலும் நீ கண்டிப்பா என்னை ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்ட.
உன்னை பற்றி எனக்கு நல்ல தெரியும். நானும் வேற வழியே இல்லாம கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னேன்.
கல்யாணம் முடிஞ்சா ஒருவாரதுலேயே நானும் லண்டன் போய்டேன். நான் அங்கே போனதுக்கு அப்புறமாதான் நீ என்னோட வீட்டுக்கு போயிருக்க. அவங்களுக்கு நீதான் என்னோட காதலன்னு தெரியாது. அதனாலதான் நீ குடுத்த கல்யாண பரிசை என்னோட அம்மா பிரிச்சுகூட பார்களை அப்படியே எனக்கு அனுப்பி வச்சுடாங்க.
பிரிச்சு பார்த்த உடனே நான் செத்து போய்ட்டேண்டா. எனக்கு நீ முதன்முதலா கொடுக்குற காதல் கடிதம் என்னோட கல்யாண பரிசா அமைஞ்ச கொடுமை சத்தியமா இந்த உலகுத்துல வேற யாருக்கும் வர கூடாதுடா. அதுக்கப்புறம் நான் நடை பிணமாதான் வாழ்ந்தேன்.
நான் அப்படி இருக்குறதை பார்க்க சகிகாமதான் ரிஜேஷ் என்னை இந்திய அனுப்பு வச்சான். அவனுக்கும் என்னோட காதல் கதை எல்லாம் தெரியாது. நான் வீட்டை பிரிஞ்சிதான் இப்படி கஷ்ட படுறேன் என்று நினைச்சு என்னோட அக்கா வீட்டுக்கு மும்பைக்கு அனுப்பி வச்சான். நான் இங்கே வந்து மூணு வருஷம் ஆகுது. நீ என்னை நினைச்சு இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கேன்னு நான் கேள்வி பட்டேன். உன்னை பற்றி நான் அப்போப்போ கீதுகிட்ட கேட்டுப்பேன். அவளும் சொல்லுவாள்.
என்ன காதலிச்ச பாவத்துக்கே நீ கஷ்ட படும் போது நான் மட்டும் எப்படி அங்கே சந்தோசமா இருக்க முடியும். அதனாலே நான் மீண்டும் லண்டன் போகலை தெரியும் என்று சொல்லி முடித்து எனது மார்பில் படுத்து அழுதாள்.
அவள் சொல்ல சொல்ல கேட்ட என்னால் முடிய வில்லை, அவளை வாரி எடுத்து அனைத்து கொண்டேன். எனக்கு சொல்ல வார்த்தைகள் வர வில்லை கண்ணீரே மிஞ்சி இருந்தது.
கலா அவளது கல்யாண கதையை சொல்லி முடித்தவுடன் எனது மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.
கலா: 'I am very sorry ' ஹரி, என்னாலதானே நீயும் இப்போ கஷ்ட படுற.. நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னால யாருமே சந்தோசமாவே இல்லை. என்னை காதலிச்ச நீ இங்க கஷ்டபடுற, எனக்கு தாலிகட்டுன அவரும் அங்கே கஷ்டபடுறார் . நான் ஒரு பாவி!!! ஹரி, என்னை நீ மன்னிப்பாயாடா. நான் செஞ்ச பாவத்துக்கு எனக்கு சத்யமா மன்னிப்பே கிடையாது. என்று கூறி எனது மார்பில் அழுது கொண்டிருந்தாள்.
'ச என்ன மடையன்டா நான்'.. ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் நொந்து போன ஒருத்தியை மேலும் ரணமாக்கிடேனே என்னை நானே நொந்து கொண்டேன்.
நான் அவளை சமாதனம் படுத்த முயன்றேன். ஆனால் நானும் கண்ணீரில் மூழ்கி போயிருந்தேன்.
நான்: ஏய் கலா, நீதாண்டா என்னை மன்னிக்கணும். முழுசா விஷயம் என்னனு தெரியாம நான்தான் அவசபட்டு வார்த்தை விட்டுவிட்டேன். நீ எந்த தப்பும் செய்யலடா, நானா இருந்தாலும் அப்படிதான் செய்திருப்பேன். இப்போ எதுவும் குறைஞ்சு போகலை நீ முதல்ல கண்ணீரை துடைச்சுக்கோ என்று கூறி அவளது முகத்தை நிமிர்த்து பார்த்தேன். வழிந்தோடிய கண்ணீரை நான் துடைதெடுத்தேன். ஆறுதலாக அவளது நெற்றியில் முத்தம் குடுக்க சென்றேன்.
அப்பொழுதான் அதனை கவனித்தேன், அதுவரை அவள் என்னவள் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் அவளது நெற்றியில் அதனை பார்த்த உடன் அவளை விட்டு இரண்டடி நகர்ந்து பின்னோக்கி வந்தேன்.
நான் அவளை விட்டு விலகி வந்ததும் எதோ நிகழ்ந்த மாதிரி, என்ன ஹரி, என்ன ஆச்சு, நான் நீ தொடக்கூடாத பாவியாகிடேனா என்று கேள்விகளால் எனது நெஞ்சை மேலும் துளைத்தாள்.
அவள் கேட்டதோ நான் அவளை ஏன் விலகினேன் என்று. ஆனால் உண்மையில் நான்தான் அவளை தொடமுடியாத பாவியாகி போனேன்.
பின்னர் அவளிடமே நான் கூறினேன்: அப்படி இல்லைடா, நான் உன்னை தொடக்கூட முடியாத பாவியாகிடேன், நீ இப்போ என்னோட காதலி இல்லைடா, அடுத்தவன் மனைவி. உன்னை நான் 'டா' போட்டு பேசா கூட எனக்கு உரிமை கிடையாது. தயவுசெஞ்சு புரிஞ்சிக்கோ என்றேன்.
நான் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள் மறு பேச்சு ஏதும் இன்றி அந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள். நானும் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டேன். பின்னர் இருவருக்கும் இடையில் மௌனமே நிலவியது.
எங்களை சுற்றிலும் ரயிலின் சத்தம், Ac ஓட்டும் சத்தம் மட்டுமே கேட்டது. ரயிலின் கதவுகள் அடைக்க பட்டிருந்ததால் வெளியே நிலவிய இருள் எண்ணைகளை அண்டவில்லை ஆனாலும் அங்கே இருந்த வாஷ் பசனின் மேல் ஒளிர்ந்த விளக்கின் வெளிச்சம் மட்டுமே அங்கே இருந்தது.
எங்களை சுற்றி வேறு எவரும் இல்லை. அது என்னமோ நாங்கள் மட்டும் தனி உலகில் இருப்பது போன்றதொரு எண்ணம் என்னை சூழ்ந்து கொண்டது. மௌனத்தை கலைக்கும் விதமாக நானே முதலில் ஆரம்பித்தேன்
நான்: கலா நான் சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டியா??
கலா: என்னடா சொல்ல போற, நீ என்ன சொன்னாலும் கண்டிப்பா நான் கேட்பேன் என்று வேகமாக தலையை அட்டி பதில் அளித்தாள்.
நான்: நீ திரும்ப லண்டன் போய் அவர்கூட சந்தோசமா வாழனும் அதுதான் என்னோட ஆசை கண்டிப்பா செய்வியா?? எனக்கா!!!.
கலா: அப்புறம் !!! என்று புருவங்களை உயர்த்தி நக்கலாக கேட்டாள்
நான்: என்ன கலா இப்படி கேட்குற? நான்தான் கட்ட பிரமச்சாரி. உனக்கு கல்யாணம் ஆச்சு நீ இப்படி இருக்குறது கொஞ்சம் கூட நல்லாயில்லை.
கலா: அப்படினா, நீ எப்பொழுது கல்யாணம் செஞ்சுப?
நான்: தெரியலைடா, கொஞ்சம் நாள் இப்படி இருந்துட்டு, பிறகு யோசிக்கணும்.
கலா: நீ மட்டும் தாடி வச்சுகிட்டு தேவதாசா அலையபோற. நான் அங்கே அவர்கூட வாழனுமா. என்ன ஒரு ஓர வஞ்சனைடா உனக்கு??
கேட்குபோதே அவளின் ஆதங்கம் எல்லாம் விழியில் கோபமாக தெரிந்தது.
நான்:அதுக்கு இல்லடி, மனசு முழுசா நீதான் இருக்க, இப்போ நான் இன்னொருத்தியை கல்யாணம் செய்தால் கண்டிப்பா அவளும் நானும் சந்தோசமா வாழமுடியுமாகிறது சந்தேகம் தான் அதான் நான் அப்படி சொன்னேன்.
அடுத்து அவள் கேட்ட கேள்விதான் என்னை துண்டாடியது. ஒரு பெண் இவ்வளவுதூரம் வைராக்கியத்துடன் இருப்பாளா!!! எனக்கே ஆட்ச்சர்யமாக இருந்தது.
இங்கே பார் ஹரி, நீ மட்டும் இங்கே இப்படி வாழும்போது என்னால கண்டிப்பா அங்கே சந்தோசமா நினைசுகூட பார்க்க முடியலைடா. இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ. உனக்கு எப்போ கல்யாணம் நடக்குமோ அப்போதான் நான் என்னோட வாழ்க்கையை பற்றி நினைச்சு கூட பார்ப்பேன். இல்லைனா என்கிட்ட நீ பேசி பிரயோசனமே இல்லை பார்த்துக்கோ. என்று கட் அண்ட் ரைட்டாக கலா பேசினாள்.
அப்புறம் உன் இஷ்டம், நீ இங்கே இருக்கும் போதே உன்னோட வீட்டுகாரர் குஜாலா அங்கே இருக்க போறார் பார்த்துக்கோ என்று நக்கலாக சொன்னேன்.
என்னை பார்த்து முறைத்த வார, இங்க பாரு நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் என்னோட அவரை தப்பா பேசினே பல்லை கலடிடுவேன். ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசு என்று கட்டளையாக சொன்னாள்.
நான் நினைத்தது சரிதான், கணவன் மேல் இவ்வளவு பாசம் வைத்துகொண்டு எனக்காக அங்கே செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் வேறு பண்ணுகிறாள். இப்பொழுது அவள் காட்டும் அக்கறைக்கு என்னவென்று சொல்வது. இது காதலா இல்லை நட்பில் விளைந்த நேசமா அல்லது வேறு ஏதாவது பெயர் உள்ளதா என்னை நானே கேட்டுக்கொண்டேன். பின்னர் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு.
எப்படியும் என்னை கொஞ்சம் நாள் சந்தோசமா இருக்க விட மாட்ட. என்னோட வாழ்கையில் ஒரு பெண் வந்து இந்த பாடுபடுத்திட்ட இப்போ இன்னொருத்தியா. என்ன நட்டக்க போகுதோ என்று தலையில் கைவைத்து சோகமாக சொல்வது போல் நடித்தேன்.
அடேங்கப்பா இப்படி சலிச்சுக்கிற. டேய் எனக்காக இல்லாடியும் போறவா இல்லை. உன்னோட அம்மாவுக்காகவாவது கல்யாணம் பண்ணிகோடா. அப்புறம் பாரு நீ அம்மா பின்னாடி சுத்துரியா இல்லை என்னையே நினைச்சு பார்பியா இல்லை பொண்டாடியே உலகம்னு கிடக்க போறியா யார் கண்டா. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்றாள்.
அவள் சொல்லி முடிக்க இருவரும் சில நிமிடங்கள் மனம் விட்டு சிரித்தோம். சில நிமிடங்கள் பேசிவிட்டு மீண்டும், நாங்கள் எங்கள் இருக்கைக்கு சென்றோம் அதற்குள் அங்கே அவளது சகோதரி விழித்திருந்தாள். பின்னர் எங்களை நாங்களே அறிமுகம் செய்துகொண்டோம். அப்புறம் நிறைய பேசினாள். அவள் லண்டனில் பார்த்த இடங்கள், கணவனின் இல்லம் மற்றும் அவன் பணிபுரியும் இடம் இவை எல்லாத்தையும் விரிவாக சொன்னாள். என்ன மாமியார் கொடுமை இல்லை. அவர்கள் எப்போவோ இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அதனால்தான் இவள் எங்கே இப்படி சுதந்திரமாக சுற்ற முடிந்தது. அவள் பேசும்போது கணவன் மேல் அவளுக்கு இருக்கும் அந்த பாசம் அன்னியோனியம் தெளிவாக தெரிந்தது. நான் எனக்காக இல்லாவிட்டலும் இவள் மீண்டும் லண்டன் திரும்பவாவது திருமண பேச்சை வீட்டில் எடுக்க வேண்டி உள்ளது.
நாங்கள் பயணித்த கொங்கன் வழி ரயில் அப்பொழுது சரியாக திருச்சூரில் வந்து நின்றது. அதுவரை என்ன பேசினோம் என்று தெரியவில்லை. விழிகளில் வழிந்த கண்ணீர் துளிகளால் மீண்டும் பிரியாவிடை எனக்களித்தாள் அவர்களை அழைத்து செல்ல அங்கே அவளது உறவினர்கள் காத்திருந்தனர். அனைவரிடமும் பேச சென்று விட்டாள். நானும் அவளுக்கு விடை அளித்து விட்டு ரயிலில் ஏறினேன். ரயில் மெதுவாக புறப்பட தயாராக இருந்தது.
அப்பொழுதான் வேகமாக எனக்கு பின்னால் ஒரு உருவம் உள்ளே ஏற முயன்றது. நானும் வழிவிடவே, வேகமாக ஏறி உள்சென்று திரும்பி பார்த்தேன். மீண்டும் கலா, என்னை நெருங்கி எனது கன்னத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு முத்தம் அளித்து, 'Still I love ஹரி, i am mad at you டா.. என்று வேகமா சொல்லி ரயிலை விட்டு இறங்கி சென்றாள்.
அவளது இந்த திடீர் தாக்குதலில் மிரண்டு போன நான், மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ரயில் அந்த இடத்தை கடந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தது. மீண்டும் வெளியே தலை நீட்டி அவளுக்கு மட்டும் கையசைத்து விடையளித்து வந்தேன்.
என்ன பொண்ணுங்க இவள், என்னை நேசிகிராளா அல்லது அவளது கணவனை நேசிகிராளா. நான் அவனை பற்றி கிண்டல் செய்தாள் விட்டு கொடுக்க மாட்டாள். ஆனால் என்னிடம் இன்னமும் காதலுடன் இருப்பதாக சொல்கிறாள். இந்த பொண்ணுங்க மனச புரிஞ்சுகவே முடியவில்லை.
இப்படி குழப்பத்திலேயே நான் எனது வீடிற்கு வந்தேன். அங்கே எனது அம்மாவை பார்த்த உடன் நான் துடித்து போய்விட்டேன். இத்தனை நாளும் நான் சுயமாகவே சிந்தித்து இருந்தேன் அங்கே ஒரு ஜீவன் எனக்காக இன்னமும் கவலையுடன் இருப்பதை மறந்தே விட்டேன்.
ஆறு மாதங்கள் கழித்து நான் மீதும் இப்பொழுதுதான் என்னுடைய அம்மாவை பார்கிறேன். அவள் அங்கே முன்பை விட அதிகம் தேகம் மெலிந்து ஒரு நோய்வாய் பட்டவள் போல் இருந்தாள்.
என்னை கண்டதும் அவ்வளவு சந்தோசம் அவளது முகத்தில் ஆனாலும் உடல்தான் அதற்கு உத்துழைக்க வில்லை. அடுத்தநாள் மதிய உணவு வேளையில் அவளே மீண்டும் ஆரம்பித்தாள்.
ஹரி பக்கத்துக்கு வீட்டு அக்காவோட தூரத்து சொந்தமாம் பொண்ணு நல்ல படிச்சிருக்கா. உனக்கு சம்மதம்னா நாளைக்கே ஜாதகம் பார்க்கலாம் என்று பீடிகையுடன் கேட்டாள்.
இம்முறை மறுப்பேதும் இன்றி சரி என்று தலையை ஆட்டினேன்.
எனது சம்மதத்தில் சந்தோசம் அடைந்தவள். தலைகால் புரியாமல் வெளியே சென்று அந்த பக்கத்துவீட்டு அக்காளிடம், ஹரி சம்மதம் சொல்லிட்டான். நான் அந்த ஆத்த கிட்ட வேண்டினது வீண்போகலை என்று வானத்தை பார்த்து ஒரு முறை கையெடுத்து கும்பிட்டாள். இவளின் இந்த சந்தோசம் பலவருடம் கழித்து இன்றுதான் பார்கிறேன்.
அடுத்த சில மாதங்களிலேயே, இலையுதிர் காலத்தில் பட்டுப்போன மரமாக இருந்த எனது வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச பவானி வந்தாள்.
ஆம் அவள்தான் எனது மனைவி, என்னையும் எனது மனதையும் முற்றிலும் மாற்றியவள் அவள்தான். அவளை பற்றி நினைத்தாலே எனது இதழோரம் சிறு புன்னகை நீங்கள் பார்க்கலாம். அவள் அழகு, அமைதி, பொறுமை, வெட்கம், காதல் என பல குணங்களை கொண்டவள். எனக்காக எந்த எல்லைவரையும் போககூடியவள். இவளை மணக்கத்தான் நான் இந்த மூன்று வருட தவகோலம் பூண்டேனோ. எனக்கே வியப்பாக உள்ளது.
பயணித்து கொண்டிருந்த நான் மீண்டும் கண் விழித்த பொழுது நாங்கள் நாகர்கோவிலை அடைத்திருந்தோம். நேரம் இப்போது சரியாக 12 நெருங்கி இருந்தது.
ஹரி நாம விட்டுக்கு போய்டு போகலாமா இல்லைனா நேர ஹாஸ்பிடளுக்கே விடவா என்று வேலா கேட்டான்.
அப்படி கேட்டவனை ஒரு முறை முறைத்தேன்
.
சரி சரி, இப்போ என்ன கேட்டுடேன் இப்படி முறைகுற, பாவும் பையன் டையர்ட இருப்பானேன்னு கேட்டும். சரி நான் ஹாஸ்பிடளுக்கே விடுறேன் என்று வண்டியை வேகமாக செலுத்தினான்.
நாங்கள் மருத்துவ மனையை சேர்ந்ததும் அங்கே என்னுடைய அம்மா மட்டும் கைகளை பிசைந்தவாறு நடந்து கொண்டிருந்தாள். என்னை பார்த்து வேகமாக ஓடிவந்தாள்.
என்னம்மா ஆச்சு, என்று நான் கேட்டேன்.
டேய், இப்போ பேச நேரம் இல்ல நேர போய் அவளை பாரு என்று என்னை விரட்டினாள்.
மறுத்து பேசாமல் நான் வேகமாகே ஓடி சென்றான். அவள் முதல் தளத்தில் உள்ள மகபேறு வளாகத்தில் இருந்தாள் அவளுக்கென்று தனியறை. வெளியே அவளது பெற்றோர்கள் அமர்ந்திருந்தனர்.
என்னை கண்டதும். கண்களில் பயத்துடன். நீங்களே அவகிட்ட என்னனு கேளுங்க மாப்புளை என்று மாமனார் என்னிடம் கேட்டு கொண்டார். அனைவரும் இப்படி கேட்க நான் பயத்துடனே அவளது அறையின் உள் சென்றேன்.
அங்கே ஒரு பெண் மருத்துவரும் இரு செவிலியரும் இருந்தனர். என்னை பார்த்ததும். நீங்கதானே இவங்களோட கணவன். சீக்கிரம் பேசி விட்டு வெளிய வாங்க என்று அதிகாரமாக சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
அங்கே பவானி கண்களில் ஆனந்த கண்ணீருடன் இரு கைகளை நீட்டி என்னை அழைத்த மாதிரி படுத்திருந்தாள். எழ முயன்றவளை, வேண்டாம் ஏற்று கூறி நானே அவளுக்கு அருகில் சென்று நின்றேன்.
பவானி: என்னங்க நீங்க எப்படி இருக்கீங்க, உங்களை பார்க்காம நான் ஆபரேஷன் தியேடர் போக மாட்டேன்னு இங்கேயே இருக்கேன் தெரியுமா என்று சிறு குழந்தைபோல் கேட்டாள்
நான்: ஏம்மா, என்ன ஆச்சு.
பவானி: நீங்கதானே காலையிலேயே வந்திருவேன்னு சொன்னீங்க. எனக்கு என்னமோ உங்களை பார்க்காம போக விருப்பமே இல்லை. அவள் பேசி கொண்டிருக்கும் போதே வலிகளை அடக்கிய கொண்டிருந்தாள் என்பதை தெளிவாக அவளது முகத்தில் தெரிந்தது.
நான்: ஏய், ஏன் இப்படி பேசுற, என்று கூறிக்கொண்டே அவளை வாரியெடுத்து அணைத்து கொண்டேன்.
அவளது நெற்றி கண்கள் கன்னங்கள் என்று முத்தமழை பொழிந்தேன். இந்த அன்பின் ஏக்கத்திற்கு நான் என்ன செய்வேன் இறைவா என என் மனம் வேண்ட தொடங்கியது.
நான் அவளுக்கு முத்தம் அளிக்கும் போதே அவள் கத்த தொடங்கினால் 'அம்மாமா....'
அதுவரை அங்கே வெளியே நின்ற டாக்டர் , செவிலியர் விரைந்து செயல் பட்டு அவளை தியேட்டர் அழைத்து சென்றனர். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். அங்கே பின்னர் வந்து எனது தோல் தட்டி அம்மா என்னை அழைத்தாள்.
என்ன அழுத்தகாரிடா இவா, உள்ள இவ்வளவு வழியை வச்சுகிட்டு உன்னை பார்க்காம பிள்ளை பெற்றுக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு இருந்திருக்காளே பாரேன். என்று ஆட்ச்சரியமாக கேட்டாள்.
அவள் வடித்த கண்ணீர் துளிகளை கைகளில் ஏந்தியவாறு அங்கேயே நடந்து கொண்டிருந்தேன். அதுவரை படங்களில் மட்டும் பார்த்து பழகிய பதற்றம் என்னை முழுவதுமாக தொற்றி கொண்டது...
என் மனைவி பிரசவிக்க உள்ள இருக்க, நானோ அவளது கண்ணீரின் ஈரத்தில் கைகளை பிசைந்த மாதிரியே வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். எனது அம்மா சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை, அவளுக்கு என்னிடம் எது பிடித்ததோ தெரியவில்லை, என் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். இந்த நிமிடங்கள் வரை எனது மனதில் எதோ ஒரு ஓரத்தில் கலா இருந்திருந்தாள். ஆனால் இந்த நிமிடம் முழுவதும் பவானியே என்னுள் வசிக்கிறாள்.
ஒவ்வொரு ஆடவனுக்கும் அவனது மனைவி உணவு உண்ணாமல் காத்திருக்கிறாள் என்றாலே, ஒரு பொருப்புடன்கூடிய கவலை வரும் அந்த அக்கறையே காதலின் வெளிப்பாட்டை அதிகரிக்கும், ஆனால் இங்கே இவள் என்ன ஒரு காரியம் செய்திருந்தால். எனக்காகவல்லவோ அப்படி ஒரு வலியையும் பொறுத்திருந்தாள். அவள் வெளியே வந்த உடன் முத்தங்களால் அவளை முழுவதுமாக நனைக்க வேண்டும். மேலும் ஏதேதோ கற்பனை கோட்டை கட்டி கொண்டிருந்தேன். அவள் உள்ளே சென்று ஒரு மணி நேரம் கடந்திருந்தது. எனக்கு ஒரு பிரசவத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாது. ஆனாலும் அந்த ஒரு மணி நேரம் என்னமோ அதிக நேரம் ஆனா மாதிரி தோன்றியது. நானும் பயத்திலும், குழப்பத்திலும் என்னுடைய அம்மாவிடம் கேட்டேன்.
அவளோ என்னை எள்ளி நகையாடிய படியே 'எம்மா வீட்டம்மா மேல எவ்வளவு அக்கறைன்னு பாரேன், இவ்வளவு அக்கறை இருந்திருந்தா கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கணும்' என்று என்னை மேலும் குழப்பினால்.
நான் வந்த கோபத்தில் அவளை முறைத்த படியே 'எவ்வளவு நேரம் ஆகுனு கேட்ட சொல்லேன், ஏன் என்னை போட்டு இப்படி வதைகுறீங்க'. என்று சற்று கோபமாகவே கேட்டேன்.
நான் கூறியதை கேட்டு கொண்டிருந்த எனது மாமியார் என்னிடம் வந்து 'என்ன மாப்புள்ள ஆச்சு, அவளுக்கு ஒன்னு ஆகாது, சாதாரணமா எப்படியும் 40 நிமிடத்திற்கு மேல் ஆகும். எப்படியும் அவள் கொஞ்ச நேரத்துல்ல உங்களை மாதிரியே ஒரு அழகான பையனை பெற்று உங்க கைல கொடுக்க போறா அது வரைக்கும் நீங்க அங்க போய் உட்காருங்க என்று எனக்கு சமாதனம் கூறிய படி நான் அமர வேண்டிய இடத்தை காட்டினாள்.
நான் அங்கே அமர மறுத்து, இல்லை அதை நான் கொஞ்சம் காலாற நடக்குறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் எனது நடை பயணத்தை தொடர்ந்தேன்.
பின்னர் எனது அம்மாவும், மாமியாரும் அவர்களுக்குள் பேச தொடங்கினர்.
சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்தில், வெண்ணிற ஆடையில் எனது கண்களுக்கு அந்த நிமிடத்தில் தேவதை போல் ஒரு பெண் வெளியே வந்தாள். நானும் நற்செய்தி சொல்லத்தான் வந்தாலோ என்று அவளை நோக்கி ஓடி போயகேட்டேன். எனக்கு பதிலே அளிக்காமல்.ஓட்டமும் நடையுமாக அந்த வரண்டாவில் இருந்த டாக்டரின் அறைக்கு சென்றாள். சில நிமிடங்களில் வெளியே வந்தவள் மீண்டும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளே சென்றாள்.
எனக்கோ பயங்கர கடுப்பாக இருந்தது. கேட்ட ஒரு வார்த்தை சொல்லணும். இப்படி எதுவும் கூறாமலே உள்ள போராபாறு என்று அந்த நிமிடத்தில் மனதில் பட்ட வார்த்தைகளை சொல்லி அவளை திட்டி தீர்த்தேன். ஒரு பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், அனைவராலும் பெரிய டாக்டர் அம்மா என்று மரியாதையுடன் அழைக்கப்படும் தங்கம் டாக்டர் வந்து கொண்டிருந்தாள். இவர்கள்தான் நான் பிறக்கும் போது பிரசவம் பார்த்தவர்கள். ஒருவேளை இவர்களை அழைக்கத்தான் அந்த நர்ஸ் வெளியே வந்து சென்றாளா? என்னை நானே கேட்டு கொண்டேன்.
பின்னர் சில நிமிடங்கள் கழித்து அதே நர்ஸ் வெளியே வந்து என்னோட அம்மாவையும் மாமியாரையும் உள்ளே வருமாறு அழைத்தாள். நானும் அழையா விருந்தாளியாக உள்ளே செல்ல முயன்றேன். என்னை, நீங்க!! வெளியவே இருக்க இப்போ எல்லோரும் வெளிய வந்துருவாங்க என்று சொல்லி சென்றாள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் ஒரு குழந்தை வீல் என்று அழும் குரல் கேட்டது. அது கேட்ட உடனேயே என்னுள் ஒரு சந்தோசம், பேரானந்தம், கர்வம் அல்லது எதையோ சாதித்த திருப்தி அது என்ன உணர்வு என்று என்னால் வார்த்தைகளில் விளக்க முடியவில்லை. கண்களில் அளவில்லா ஆனந்தத்தில் கண்ணீருடன் அந்த தருணத்தில் இறைவனுக்கு முட்டியிட்டு நன்றி சொல்லி கொண்டேன்.
அழும் குரல் கேட்ட உடனேயே என்னருகில் நின்று கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் 'ஓஓ' என்று பெரிய சத்தத்தில் என்னை தூக்கி உற்சாகத்தில் சந்தோசத்தை வெளி படுத்தினர். இவர்களின் சத்தத்தில் வெளியே வந்த நர்ஸ் ஒருத்தி எங்களை சப்தமின்றி இருக்க சொன்னாள். பின்னர் அனைவரும் களைந்து சென்று அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த பெரிய டாக்டர் அம்மா முதலில் வெளியே வந்தார்கள் உடன் அவர்களின் மருமகள் அதாங்க முதலிளிருந்தே பிரசவம் பார்க்க இருந்த டாக்டர் அம்மாவும் வந்தார்கள்.
சின்ன டாக்டர்: ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. இப்படிதான் டெலிவரி அன்னைக்கும் லேட்டா வருவதா. உங்களால அதிகம் பாதிக்க பட போறது உங்களோட மனைவியும் குழந்தையும் தான் அதை கொஞ்சமாவது புரிஞ்சு நடந்துக்கோங்க. என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
அவள் சொல்ல சொல்ல எனக்கு பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு அந்த பெரிய டாக்டர் அம்மா என்னிடம் வந்து
'அவள் அப்படிதான், மனசுள்ள வச்சுகாதிங்க தாயும் சேயும் இப்போ நல்லா இருக்காங்க. உங்களுக்கு வெல்ல கட்டி மாதிரி ஆண் மகன் பொறந்து இருக்கான். முதல்ல அங்கே போய் பாருங்க. என்று வாழ்த்தும் ஆறுதலும் சொல்லி சென்றால்.
சிறிது நேரத்தில் எனது அம்மாவும் மாமியாரும் வெளியே வந்தார்கள். நான் அவர்களிடம் 'பவானி இப்போ எப்படி இருக்கா'. என்று கேட்டேன்.
அம்மா: இப்போ எல்லோரும் நல்ல இருக்காங்கடா. இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேரையும் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க நீ அங்கே போய் பாரு..
நான்: உங்களை மட்டும் எதற்கு உள்ள வர சொன்னாங்க..?
மாமியார்: அதுவா!! இவளோட பிடிவாததால தான். குழந்தை அப்போவே பொறந்துடுசாம். ஆனால் மூச்சு பேச்சு இல்லாம இருந்திருக்கும் போல. என்ன பண்றதுன்னு தெரியாம பெரிய டாக்டர் அம்மாவை வர சொல்லி இருக்காங்க... அவங்கதான் குழந்தையை அழவே வச்சாங்க..சும்மா சொல்ல கூடாது, பெரிய டாக்டர் அம்மா நல்ல கைராசியான டாக்டர்தான். அவா வெளியே வரட்டும். அவளுக்கு வச்சிருக்கேன் கச்சேரி..
நான்: ஐயையோ அதை, எதுவா இருந்தாலும் என்னை திட்டிருங்க..அவ ரொம்ப பாவம். நான்தான் சொன்ன நேரத்துக்கு வர முடியாம லேட்டா வந்தேன்.
அம்மா: அடே அப்பா!!! பொண்டாடி மேல பாசத்த பாரேன் என்று என்னை கிண்டல் செய்தால்.
மாமியார்: நான் சும்மா சொன்னேங்க. உங்களை எப்படி நான் போய். சரி சரி நீங்க போய் குழந்தையை பாருங்க என்று சொன்னார்கள்
அதேபோல் சிறிது நேரத்தில் பவானியையும் குழந்தையையும் அவளின் ரூமிற்கு மாற்றினார்கள். எனக்கு சிங்க குட்டி மாதிரி அழகான மகன் பிறந்திருந்தான். இப்பொழுது இந்த பெண்களுடன் அன்பை பகிர்ந்து கொள்ள மேலும் ஒரு ஆண் மகன். இதுவரை நான் மட்டும் பெற்ற அந்த அன்பை இவனும் பங்கு போட வந்துவிட்டான். அங்கே நான் குழந்தையை பிடிக்க தெரியாமல் தூக்க, என்னுடைய அம்மாவோ, பிள்ளை பெற்ற மட்டும் போதாது. தூக்கவும் தெரிஞ்சு இருக்கணும் என்றாள். அதனை கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
குழந்தையை கைகளின் ஏந்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டேன்..அப்பப்பா என்ன ஒரு பேரானந்தம். அனுபவித்தவர்கள் இதனை அறிவர்.
அனைவரும் வெளியே சென்றிருந்த பொழுது பவானியின் செவ்விதழில் ஒரு முத்தம் அளித்தேன், வெட்கத்தில் அந்த தாய்மை அடைந்த சிவந்த முகத்தை காண கண்கள் கோடி வேண்டும்.
ஹாஸ்பிடலில் இருந்து வீடு சென்ற பொழுது ஒரு பேரனை கவனிக்க இரு ஆச்சிமார்கள். என்னை கவனிக்க என் மனைவி, அவளை கவனிக்க நான் என எங்கள் குடும்பமே மகிழ்ச்சியில் முழு நிறைவை கண்டது.
the end