ஓகே கண்மணி - பகுதி - 1

 கல்யாண மண்டபத்தில் இருக்கும் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள்.அனைவரின் முகத்திலும் கல்யாணத்திற்கான மகிழ்ச்சி காணபட்டது.ஆனால் ராஜியின் முகத்தில் மட்டும் ஏனோ வெறுப்பு,கவலை,துக்கம்,சோகம்.அவளை கண்ட அவளது அம்மா லட்ச்மிக்கு பொண்ணு ஏதோ நம்மள விட்டு பிரிய போறோம்னு கவலையா இருக்காணு நினைசுகிட்டாங்க.மணமகன் கார்த்திக்கிர்கோ தான் சிறுவயதில் இருந்து காதலித்த.தனக்கு கிடைக்க மாட்டாள் என்று நினைத்த பெண் இன்று மனைவியாய் வர போகிறாள் என்று சந்தொசபட்டலும் ராஜியின் சோகத்திற்கு காரணம் அவனும் ராஜியும் அறின்தவர்கலாய்.

அய்யர் மந்திரம் சொல்லி கெட்டிமேளம் முழங்க ராஜியின் கழுத்தில் தாலி கட்டி அவளை தனதக்கினான்.அந்த மணித்துளியில் ராஜியின் மனதில் இனிமேல் என்னுடன் வாழ போகும் ஒவ்வொரு நொடியும் உன்னை காயபடுத்துவேன் என்று நினைத்து கொண்டால்.பின்பு கார்த்திக்கின் தங்கை லீலா மைனிக்கு தாலி முடிச்சு போட அனைவர் முகத்திலும் கல்யாணம் முடிந்த சந்தோசம்.பின்பு பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.கார்த்திகோட குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம்.அவனோட அப்பா கூட பிறந்தவங்க 4 தங்கை.2 தம்பி.முதல் தங்கைக்கு மூன்று பெண்கள்.ரெண்டாவது தங்கைக்கு மூன்று பெண்கள்.நான்காவது தங்கைக்கு மூன்று பசங்க.நாலாவது தங்கைக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.
ரெண்டாவது தங்கையின் ரெண்டாவது பெண் தான் ராஜி @ ராஜ லக்ஷ்மி.கார்த்திக்கிற்கும் அவளுக்கும் மூன்று வருட வித்யாசம்.சிறு வயதில் இருந்தே கார்த்திக் அப்பா அம்மா கூட இருந்து வளந்தத விட பாட்டி.தாத்தா.அத்தை.சித்தப்பா கூட இருந்து வளந்தது தான் அதிகம்.அதனால கார்த்திக்கிற்கு எப்போதும் அப்பா அம்மாவை விட அத்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.ஆனால் முதல் அத்தையை அவனுக்கு பிடிக்காது.அதனால் அவர்கள் குடும்பத்துடன் அதிகமாக பேச மாட்டன்.மற்ற மூவரும் கார்த்திக்கை தனது மூத்த பிள்ளை போல பார்க்க தொடங்கினர்
லக்ஷ்மியின் மூத்த மகள் பிரியா.கார்த்திகை விட ஒறு வயது மூத்தவள்.இருவரும் நல்ல நண்பர்கள்.மூன்றமவள் சக்தி.இவளை சீண்டி சண்டை போடுவது கார்த்திக்கிற்கு அலாதி ப்ரியம்.
பின்பு திருமண சடங்குகள் இனிதே நிறைவேற கார்த்திக்கின் அறையில் சாந்தி மூஹூர்ததிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.கார்த்திக் அறையில் காத்திருக்க ராஜி கதவை திறந்து அறையினுள் நுழைந்தால்.கார்த்திக் ஒன்றும் பேசாமல் சோபாவில் அமைதியாக இருக்க மெத்தையில் அவள் அமர்ந்தால்.சிறிது நேர மௌனத்திற்கு பிறகு கார்த்திக் ஏதோ சொல்ல எத்தனிக்க ராஜியின் கண்களில் இருந்து நீர் கசிவதை உணர்ந்தான்.அவளுடைய மொத்த கோவமும் அழுகையாக மாற கோவத்தில் மாலை அலங்காரத்தை பிய்த்து எறிந்தால்.அவளுடைய செய்கையை பார்த்த கார்த்திக் அவனாகவே ஆரம்பித்தான்.
எனக்கு நல்லா தெரியும் உனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்லன்னு.நா உனக்கு பண்ணின துரோகத்துக்கு என்மேல எவ்ளோ வெறுப்பு இருக்குனும் எனக்கு தெரியும்.உனக்கு தாலி கட்டின அடுத்த நொடியே என்ன சந்தோசமா இருக்க விட கூடாதுன்னு நீ மனசுல நினைச்சுருப்ப.உலகத்துக்கு வேணும்னா நாம புருஷன் பொண்டாட்டி.இந்த நாலு சுவத்துக்குள நீ யாரோ.நான் யாரோ.என் நிழல் கூட உன்மேல படாது.என்ன நீ எவ்ளோ torture பண்ணனும்னு நினைக்றியோ பண்ணிக்கோ.அப்ப ஏன் இந்த கல்யாணம்னு நினைக்கிறியா.நீ எனக்கு கிடைக்கவே மாட்டேனு நினைச்சேன்.பட் உன்கூட சந்தோசமா இருக்காட்டாலும் உன்கூட இருந்தா போதும்.எனைக்கவது ஒரு நாள் உன் கோவம் குறையும் அன்னைக்கு வரைக்கும் நா வெயிட் பண்றேன்.ப்ளீஸ் அழாம தூங்கு.நா சோபால படுதுகிட்றேன்.குட் நைட்.என்று கூறி முடித்தான்.
இதை கேட்ட ராஜிக்கோ ஆச்சர்யம்.என்ன இது நாம் மனதில் நினைத்ததை நாம் சொல்ல வந்ததை இவன் சொல்லிட்டு போறான் என்று.ஆனால் அவனை வாழ் நாள் முழுவதும் அவனை காயபடுத்த வேண்டும் என நினைத்து கொண்டு கண் மூடி தூங்கி போனால்.
மறுநாள் காலை 7 மணியளவில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க கண் விழித்த ராஜிக்கும் கார்த்திக்கிற்கும் நேற்று தங்களுக்கு முதல் இரவு என்பதை உணர சிறிது நேரம் தேவைபட்டது.உடனே ராஜி சேலையை கசக்கி விட்டு நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துவிட்டு தலையில் இருந்த பூவை உதிர்த்து விட்டால்.கதவு அருகே சென்று கதவை திறக்கும் சமயம் தன புடவை முந்தியை சரி செய்வது போல் நடித்தால்.வெளியே கார்த்திக்கின் அம்மா சாந்தா அவளை பார்த்து சிரித்து கொண்டு சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வாமா.எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருகங்கனு சொல்லிட்டு உன் புருசனையும் வர சொல்லுனு சொல்லிட்டு போனாங்க.அதற்குள் கார்த்திக் பாத்ரூம் சென்று குளித்து முடித்து வெளியே வந்தான்.உடனே ராஜி ஒரு டவெலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றால்.அங்கு சென்ற உடன் தான் தெரிந்தது.தன்னுடைய ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எதுவும் இங்க எப்படி இருக்கும்னு.இந்த கோலத்துல அம்மாட்டையும் கேக்க முடியாதுன்னு நினைச்சுட்டு கண்ணாடி முன்னாடி நின்னுட்டு இருக்கும் போது ஷெல்ப்ல புது ப்ரெஷ்.சோப்பு.ஷாம்பூ எல்லாம் இருந்துச்சு.brand கூட எல்லாம் அவ யூஸ் பண்றதா இருந்துச்சு.இது யாரோட வேலையா இருக்கும்னு குழப்பத்துல குளிச்சிட்டு வெளிய வந்தாள்.அவள் டிரஸ் மாத்தும் வரை கார்த்திக் பக்கத்து ரூமில் இருந்து டிவி பார்த்து கொண்டிருந்தான்.கதவை திறந்து வெளியே வந்த ராஜியை பார்த்த கார்த்திக் ஒரு நிமிடத்தில் உலகையே மறந்தான்.

தனக்கு பிடித்த பச்சை நிறத்தில் அழகான காட்டன் சேலையில் ப்ரீ ஹேர் விட்டுஎ ஏஞ்செல் போல அவனை கடந்து சென்றால்.அங்கு டிவியில் ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவெ உன் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என பாடல் ஒலித்து கொண்டிருந்தது.கீழே சென்ற ராஜியை அழைத்த அவளுடைய அம்மா.அக்கா.சித்தி எல்லோரும் அவளை கிண்டல் செய்ய அவளும் ஒருவாறு சமாளித்தாள்.பின்பு கார்த்திக்கிற்கு காபி கொடுக்க சொல்ல அவள் காபி உடன் அவனைகே பார்க்க சென்றால்.அவனிடம் சென்று காபி டம்ளரை டீபாயில் வைக்க அதை எடுத்து கொண்டான்.எதுக்காக இப்படி பண்ற.நேத்து என்ன பேச விடாம எல்லாத்தையும் நீ பேசிட்டா நீ நல்லவன்னு நினைக்காத.என்ன பொறுத்த வரைக்கும் என் வாழ்க்கைய சீரளிச்சவன் நீ.என்ன நம்ப வச்சு ஏமாத்திணவன்.இன்னைக்கு பாத்ரூம்ல திங்க்ஸ் வச்சமாதிரி எனக்கு ஹெல்ப் பண்றேன்ங்கற பேருல என்ன நெருங்க நினைக்காத.அப்புறம் அசிங்கமா ஆகிடும்.என்று சொல்லி விட்டு கண்களின் ஓரம் துளிர்த்த நீரை துடைத்தாள்.இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த கார்த்திக் சிரித்து கொண்டே எழுந்து கீழ போகலாமா எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கனு சொல்லிட்டு சென்றான்.அவன் சென்ற உடன் எல்லாரும் இருக்கும் வரைக்காவது இவனுடன் அன்னியோன்யமாக இருப்பது போல நடிக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.

வீட்டில் அனைவரும் கேலியும் சிரிப்புமாக கார்த்திக்கை சீண்ட சமாளித்தான்.

பின்பு மதியம் வரை இப்படியே செல்ல மதிய உணவிற்கு பின் கார்த்திக் அவனுடைய அத்தை.அத்தை குழந்தைகள் எல்லாரும் இருந்து பேசி கொண்டிருந்தனர்.கார்த்திக் தனது மூன்றாவது அத்தையின் மடியில் படுத்திருக்க கல்யாண அலுப்பில் தூங்கி போனான்.அப்போது நான்கு அத்தைகளும் ராஜியிடம் பொறுப்பாக இருக்குனும்.கோவபட கூடாது.பொறுமை ஒரு பொண்ணுக்கு ரொம்ப முக்கியம்.உன் மாமியார் குணம் கொஞ்சம் மோசம் தான்.அதனால பொறுமையா அனுசரிச்சி போகணும்.கார்த்திக் அவ வயித்துல போயா பிறக்கணும்.இந்த வயசுல எவ்ளோ கஷ்டம்.அவனோட மனசுக்கு தான் இப்ப நல்லா இருக்கான்.நல்லபடியா அவனை பாத்துக்கோனு சொல்லி முடிச்சாங்க.அதற்கு ராஜி கண்டிப்பா சித்தி.கார்த்திக் மாதிரி ஒருத்தன் கிடைக்க நா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.அத்தையை பத்தி கவலை படாதிங்க.அவுங்கள நா சமாளிச்சிப்பேன். என்று கூறினால்.

மகளின் இந்த பேச்சை கேட்ட தாய் லக்ஷ்மிக்கோ ரொம்ப சந்தோஷம்.கடைசியில் அன்று இரவே அனைவரும் கிளம்ப ராஜியை தனியாக சந்தித்த லீலாவும்.ப்ரியாவும் கார்த்திக் உன்ன சின்ன வயசுல இருந்து ரொம்ப லவ் பண்றான்.அப்புறம் ஏன் இப்படி செஞ்சான்னு தான் எனக்கு தெரியல.தயவு செஞ்சு அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுனு சொல்லவும் அக்கா எங்களுக்குள எந்த பிரச்சனையும் இல்ல.நாங்க எல்லாத்தையும் நேற்றே எல்லாத்தையும் பேசி தீத்து எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டோம் என்று கூறினால் ராஜி.அவளின் இந்த வார்த்தையை கேட்ட இருவரும் மகிழ்ச்சியில் அவளை கட்டி தழுவினர்.சந்தோசமா இருன்னு சொல்லிட்டு கணவருடன் சென்றனர்.அவர்கள் சென்ற உடன் நாம் பேசியதை கார்த்திக் தான் அவர்களிடம் சொல்லி இருக்க வேண்டும்.அதனால் தான் இருவரும் தனியாக கூப்பிட்டு சொல்லி விட்டு போவதாக அவளுடைய மனம் தவறாக கணக்கு போட்டது.அவனுடைய charecter இப்படிதான்.என்ன செஞ்சாவது அவன் நினைச்சத அடைஞ்சிடனும்.ஆனால் நான் அவனுக்கு கிடைக்க மாட்டேன் என்று நினைத்து கொண்டு அனைவரும் சென்ற பின் இரவு தனது துணிகளை எடுத்து வைக்க ஆயத்தமானால்.

ரூமிற்கு சென்று தனது சூட்கேசை எடுத்து சேலைகளை ஒவ்வொன்றாக பெடில் எடுத்து வைத்தாள்.பின் கப்போர்டில் இடம் இருகிரதாணு பார்த்தவளுக்கு ஆச்சர்யம்.அங்கு அவளுடைய துனிகளுக்கென இரண்டு ஷெல்ப் காலியாக இருந்தது.ஏன் இப்படி பண்றான்னு குழம்பினால்.இவன் ஏன் இப்படி நடிக்கிறான்னு எண்ணி கொண்டே துணிகளை அடுக்கி வைத்தால்.
அன்று இரவு இருவருக்கும் பேசா இரவாய் அமைய அப்படியே தூங்கி போனார்கள்.மறுநாள் இருவரும் திருசெந்தூர் கோவிலுக்கு சென்று வருமாறு கூற இருவரும் செல்வதாக முடிவானது.ஆனால் ராஜிக்கோ கார்த்திக்குடன் தனியாக செல்வதை நினைத்தாள் கடுப்பாக இருந்தது.தவிர்க்கவும் முடியவில்லை.போதாதற்கு லக்ஷ்மி வேறு கண்டிப்பாக செல்ல வேண்டும்.இதுவும் ஒரு விதசம்பிரதாயம் என்று போன் செய்து கூறினால்.கார்த்திக்கும் ராஜியின் மனதை அறிந்தவனாக வேலையை காரணம் காட்டி தவிர்க்க முயன்ற போது பெரியவர்கள் கட்டாயம் செல்ல வேண்டும் என கூற வேறு வழி இல்லாமல் கிளம்பினான்.இறுதியில் அவர்களுடன் கார்த்திக்கின் சித்தப்பா மகன் மகேஷும் உடன் வருவதாக முடிவானது.ராஜி கேரளா டைப் சேலையில் மேக்அப் இல்லாமல் தலையில் மல்லிகை பூ வைத்து வகுடில் குங்குமம் வைத்து,நெற்றியில் சிறிது சந்தன கீற்றை வைத்து வரும் போது கார்த்திக் அப்படியே மெய் மறந்து நின்றான்.ஒரு சிலர் மட்டும் தான் எல்லா விதமான உடையிலும் அழகாக இருப்பார்கள்.எல்லாவிதமான உணர்வுகளை வெளிபடுத்தும் போதும் அழகாக இருப்பார்கள்.என்னவள் அந்த ரகம்.சிறு வயதில் சுடியில் மட்டுமே பார்த்த அவளை தற்போது இந்த கோலத்தில் பார்ப்பது மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போல்.

அப்போது தான் அவன் ஒன்றை கவனித்தான்.அவள் உடித்தியிரிந்த சேலை கார்த்திக் காலேஜ் முடித்து வேலைக்கு சென்ற போது அவனுடைய முதல் மாத சம்பளம் பத்தாயிரம் ருபாய்.அவன் முதல் மாத சம்பளத்தில் ராஜிக்கு எதாவது வாங்கி கொடுக்க வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது.என்னவ வாங்கி கொடுக்கலாம் என்று யோசித்த போது தான்.அவனுக்கு தோன்றியது.ராஜி சேலை கட்டி பார்க்க வேண்டும் என்பது அவனது ஆசை.எவ்வளவு மொக்கையான பெண்ணும் சேலை கட்டி வரும் போதும் அது அவர்களை அழகாக காட்டும் என்பது கார்த்திக்கின் எண்ணம்.அப்போது அவன் வேலை பார்த்த இடம் திருவனந்தபுரம்.அங்கு இருக்கும் போத்திஸ்க்கு சென்று சேலை செலக்ட் செய்யும் போது அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை.அப்போது தான் அவன் கண்ணில் பட்டது கேரளா சாரீஸ் செக்சன்.அங்கு பொய் தேடிய போது இறுதியில் பச்சை நிற பார்டரில் அழகான எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட சேலை அவளுக்கு சூப்பராக இருக்கும் என்று அதை பில் போட சொன்னான்.

அந்த சேலையை தன்னுடைய திருமண நாள் அன்று அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அவன் அதை பத்திரமாக வைத்திருந்தான்ஆனால் அதை கடைசி வரை அதை அவளுக்கு கொடுக்கவே இல்லை.ஒரு ஆண் தனது தாய்க்கு மட்டுமே தனது முதல் மாத சம்பளத்தில் சேலை வாங்கி தருவான்.மற்றவர்களுக்கு கொடுத்தாலும் வேறு எதாவது நகையோ பொருளோ கொடுபானே தவிர சேலை கொடுக்க மாட்டன்.அதனால் அந்த சேலை கார்த்திக்கிற்கு ரொம்ப ஸ்பெஷல்.அது எப்படி நாம் கொடுக்காமலே இவளிடம் அந்த சேலை என்று யோசித்து கொண்டிருந்தான்.அப்போது தான் நினைவுக்கு வந்தது.அவள் நேற்று துணிகளை கப்போர்டில் எடுத்து வைக்கும் போது அவனுடைய துணிகளுடன் இருந்த சேலையை அவளுடையது என்று நினைத்து எடுத்திருக்க வேண்டும் என்று.எது எப்படியோ யாருக்காக பார்த்து பார்த்து வாங்கினோமோ அது அவளிடமே போய் சேர்ந்ததில் கார்த்திக்கிற்கு ரொம்ப சந்தோசம்.ஆனால் அது எதுவும் இன்று நீடிக்க போவதில்லை என்பதை அறியாமல்......

காரை கார்த்திக் ஓட்ட முன் சீட்டில் மகேஷும் பின்னால் ராஜியும் இருக்க கார் சென்றது திருசெந்துருக்கு.மூவரும் அமைதியாக செல்ல மகேஷ்தான் காரில் பாட்டு எதாவது போடலாம் என்று சவுண்ட் சிஸ்டத்தைஒன் ஆன் செய்ய மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ என்று எஸ்.பி.பி உருக கார்த்திக் கண்ணாடி வழியாக ராஜியை பார்த்தான்.அவளோ சட்டென்று தன் முகத்தை திருப்பி கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்க்க தொடங்கினால்.ஏனோ ராஜிக்கு அந்த பாடல் பிடித்திருந்தாலும் அதை கேட்கும் மணநிலையில் அவள் இல்லை.திருசெந்தூர் சென்ற உடன் காரை பார்க் செய்து விட்டு மூவரும் கோவிலுக்கு சென்றனர்.உள்ளே சென்று முருகனை வேண்டினான் கார்த்திக்.ஒவ்வொரு வருடமும் உன்னை வந்து பார்க்கும் போதெல்லாம் எனக்கு ராஜி வேணும்.அவளோட தான் என் வாழ்க்கை அமையனும்.அவ எனக்கு மட்டும் தான்னு உங்கிட்ட சுயநலமா வேண்டிகிட்டேன்அதே மாதிரி நீயும் கொடுத்துட்ட.அதே மாதிரி அவ கூடிய சீக்கிரமே என்ன புரிஞ்சிகிடனும்னு வேண்டிகிட்டான்.ராஜியோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.அப்பா.அம்மா சந்தோசத்துக்காக நான் ஏன் இப்படி நிம்மதி இல்லாம வாழனும்.எனக்கு எப்படியாவது இந்த கல்யாண வாழ்க்கைல இருந்து விடுதலை கொடுன்னு மனமுருகி வேண்டிக்கிட்டு இருக்க அவள் கண்கள் ஓரம் நீர்த்துளி கசிந்திருந்தது.அவள் கண்களை திறந்து பார்க்கும் போது அவள் பெயருக்கு அர்ச்சனை கொடுத்து கொண்டிருந்தான் கார்த்திக்.

இவனுக்கு எப்படி நம் ராசி நட்சத்திரம் தெரியும் என்று குளம்பினால்.பின்பு சாமி கும்பிட்டு விட்டு வெளியே வர அங்கு வரிசையாக கல்யாணம் நடை பெற்று கொண்டிருந்தது.அதை பார்த்த ராஜிக்கோ இவர்களும் நம்மை போல தான் என்று நினைத்து கொண்டால்.பின்பு கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் அலைகளில் கால் நனைத்து கொண்டிருந்தனர்.ராஜிக்கு கடல் அலையில் கால் நனைத்து கொண்டு விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.ஒவ்வொரு முறையும் அவள் அப்பா உடன் வரும்போது நீண்ட நேரம் அப்படி விளையடுவாள்.ஆனால் இன்று எப்போது இங்கு இருந்து கிளம்புவோம் என்று இருந்தது.


அப்போது ஒரு போடோகிரப்பர் வந்து போட்டோ எடுத்துகோங்க சார் ப்ளீஸ் என்று கூற வேண்டாம் என்றனர்.அவர் விடாது வற்புறுத்த இவர்களும் ஒத்துகொண்டனர்.அந்த நேரம் மகேஷிற்கு போன் வர அவன் பேச சென்றான்.இவர்கள் இருவரும் சற்று இடைவெளி விட்டு நிற்க போடோக்ராபர் ஒட்டி நிற்க சொல்ல இருவரும் ஒரு இன்ச் கேப் விட்டு நிற்க மீண்டும் ஒட்டி நிற்க சொல்ல இருவரது தோள்களும் உரசிகொண்டன.உடனே அமிலம் பட்டது போல ராஜி விலக பொது இடம் என்று கருதி மீண்டும் அருகில் நின்று கொண்டால்.போட்டோ எடுத்த உடன் இருவரும் விலக அப்போது அங்கு வந்த மகேஷ் மைனி உங்க தோளில் கை போட்ருக்க மாதிரி ஒரு போட்டோ எடுங்கனு சொல்ல தர்மசங்கடத்தில் நெளிந்தாள்.

அவள் கார்த்திகை பார்க்க அவன் கண்களால் சாரி கேட்டு கொண்டான்.சரி இந்த ஒரு போடோவோடு நிறுத்தி கொள்வோம் என்று நினைத்த ராஜி வராத சிரிப்பை வரவழைத்து கொண்டு தலை ஆட்டினாள்.அவள் தோளில் காதலுடன் கை போட்டு கொண்டு சிரித்தவாறு நின்றான் கார்த்திக்.போடோக்ராபர் போட்டோ எடுக்க மகேஷ் தான் வைத்திருந்த கார்த்திக்கின் ஹன்டிகாமில் படம் பிடித்தான்.ராஜியோ உடல் முழுவதும் நெருப்பில் எரிவதை போல் உணர்ந்தால்.அவளுக்கு கோவம் பீறிட்டு வந்தது.எங்கே நாம் கத்திவிடுவோமோ என்று பயந்த அவள் சூழ்நிலையை மாற்ற எண்ணி சாப்பிட போகலாமா என்று கேட்டாள்.போட்டோவை வாங்கிகொண்டு ஹோட்டல் சென்று சாபிட்டனர்.பின்பு மூவரும் மணப்பாடு சென்று அங்கு இருக்கும் சர்ச் சென்றனர்.மனப்ப்படை சுற்றி பார்த்து விட்டு மூவரும் 7 மணியளவில் வீடு வந்தனர்.

வீட்டிற்கு வந்த இருவரும் பெட் ரூமிற்கு வந்தனர்.உடனே ராஜி கட்டிலில் பொத்தென விழுந்து அழ தொடங்கினால்.இதை கண்ட கார்த்திக் சாரி ராஜி என்று சொல்ல வெடுக்கென எழும்பிய அவள் என்ன சாரி நேத்து என்ன சொன்ன உன் நிழல் கூட என்மேல் படாதுன்னு,உரிமையா கிட்ட வந்து உரசுற,தோல் மேல கை போடற.நீ என்ன தொடும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா.உடல் பூரா அமிலத்தை ஊத்தின மாதிரி இருந்துச்சு.அசிங்கமா இருக்கு நீ இப்படி பண்றதுனு சொல்ல.நா வேணும்னு பன்னல அந்த போடோக்ராபரும்,மகேஷும் சேர்ந்து சொன்னதல தான் அப்படி செய்ய வேண்டியதா போச்சு என்று கூறினான்.அவுங்க சொன்னா நீ இத அவைட் பன்னிருக்கலாம்ள.அது சரி உனக்கும் இதெல்லாம் ஆசைதான.நீ ஏன் சொல்லபோற.ஒரு பொண்ணோட மனச புரிஞ்சிகிட முடியாதவன் தான நி அப்படினு சொன்னால்.

செருப்பால் அடி வாங்கியதை போன்ற வார்த்தைகளை கேட்ட கார்த்திக் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் கீழே சென்றான்.அங்கு சாப்பாடு செய்து கொண்டிருந்த அவனது அம்மா சாப்பிட சொன்னங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மேலே சென்று பெட்ரூமில் சோபாவில் தூங்க சென்றான்.அதற்குள் உடை மாற்றி வந்த ராஜி நேராக அத்தையிடம் சென்று சாப்பாட்டை எடுத்து வைக்க உதவினால்.அப்போது என்னமா போன இடத்தில் எதாவது பிரச்சனையா இவன் ஏன் இப்படி அமைதியாக இருக்கான்.சாப்பாடும் வேண்டாம்னு சொல்லிட்டான்னு சாந்தா கேட்க இல்ல அத்தை ரொம்ப நேரம் அங்க சுத்திருகொமா அதான் அசதியா இருக்கும்.இருங்க நான் என்னனு கேட்டு தைலம் தேச்சு விட்டுட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ரூமிற்கு சென்றால்.கார்த்திகை பார்த்து ஏன்எ சாப்பிட வரல.என்னால யாரும் சாப்பிடாம இருக்க வேண்டாம்னு சொல்ல கார்த்திக் ஒன்றும் பேசாமல் அவளை பார்த்தான்.அவளிடம் பதில் ஏதும் கூறாமல் கீழே சென்று அம்மாவிடம் சகஜமாக பேசிக்கொண்டு பெயருக்கு சாப்பிட்டான்.கூடவே ராஜியும் அவனுடன் சேர்ந்து ஏங்க கோவில்ல நல்ல தரிசனம்,மணப்பாடு சூப்பரா இருந்துச்சுனு கார்த்திக்கிடம் பேசி கொண்டு இருந்தால்.கார்த்திக்கிற்கு அவள் நடிக்கிறாள் என்பது தெரிந்தாலும் இவனும் அன்னியோன்யமாக இருப்பது போல நடித்தான்.அவர்களை பார்த்த சாந்தா இருவரும் சந்தோசமாக இருப்பதை கண்டு மகிழ்ந்தாள்.

பின் இருவரும் தூங்க சென்றனர்.ராஜி கட்டிலில் படுத்து கொள்ள கார்த்திக் சோபாவில் படுத்து கொண்டான்.கார்த்திக் சிறிது நேரத்தில் தூங்கி விட ராஜி தூக்கமின்றி தவித்தால்.கார்த்திக்கிடம் இன்று நாம் ரொம்ப கோவப்பட்டு பேசி விட்டோமோ என்று வருந்தினால்.அவள் கார்த்திகையே பார்த்து கொண்டிருக்க அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.அப்போது ராஜி 11th படித்து கொண்டிருந்தாள்.அவள் படித்தது ஒரு லேடீஸ் ஸ்கூல்.அதற்கு பக்கத்தில் இருக்கும் இன்னொரு ஜென்ட்ஸ் ஸ்கூலில் படிப்பவன் தான் ரமேஷ்.அவனும் ராஜியும் 8th வரை ஒன்றாக படித்தவர்கள்.ஒரு நாள் பஸ்சில் வரும் போது பார்த்து கொள்ள இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.ஒரு நாள் ராஜேஷ் ராஜியிடம் ப்ரொபோஸ் செய்ய இவளுக்கு என்ன பதில் சொல்வது என்கின்ற குழப்பத்தில் இருந்தால்.ஆனால் அவளுடைய பிரெண்ட்ஸ் அனைவரும் அவளை லவ் பண்ண சொல்ல இவளும் 80 சதவிகிதம் மனதை பறிகொடுத்தாள்.இது சில மாதங்கள் போய் கொண்டிருக்க பஸ்சில் வரும் மற்ற மாணவர்கள் ஒரு நாள் ராஜியை கிண்டல் செய்ய ரமேஷ் அதை தட்டி கேட்க அவனிடம் சரணடைந்தால்.அப்போது இருவரும் 11th சென்றிருக்க காதல் மயக்கத்தில் செல்போன்.மெசேஜ் சாட் என்று தினசரி காதலிக்க அவளுடைய மார்க் குறைந்து போனது.ராஜி முழுமையாக ரமேஷை விரும்பினால்.அவனும் ராஜியை உயிருக்கும் மேலாக காதலித்தான்.இருவரும் ஸ்கூல் முடிந்து காலேஜில் சேர ராஜி பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்லும்,ரமேஷ் டிப்ளோமா மெக்கானிகலும் சேர்ந்தனர்.அவர்களுக்கு இரண்டு வருடங்கள் செல்லும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.அப்போது தான் ரமேஷ் வேலைக்கு செல்லும் நேரம் அவனுக்கு திருமணம் செய்ய அவனது பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.ரமேஷின் குடும்பம் கோடிகளில் கொழித்தவர்கள்.அவனுடைய அப்பாவிற்கு மொத்தம் 7 தங்கைகள்.அவர்கள் தங்களது பெண்ணிற்கு தான் ரமேஷை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஒன்றுகூடி முடிவெடுத்து அண்ணனிடம் பேச அண்ணனும் ஒத்துக்கொண்டார்.அப்போது ரமேஷ் ராஜியை காதலிப்பதை கூறி கல்யாணத்தை நிறுத்துமாறு கூற அவனுடைய அப்பா மறுத்து விட்டார்.இதனால் மனமுடைந்த ரமேஷ் பொய்சன் சாப்பிட அவனை தக்க சமயத்தில் காப்பாற்றினர்.

இங்கோ ராஜியின் விஷயம் அவள் அக்காவிற்கு தெரிய வர ராஜியை கண்டித்திருகிறாள்.இதை ரமேஷிடம் கூற அவன் ப்ரியாவிடம் தான் பேசி சரி பண்ணுவதாக உறுதி அளித்திருந்தான்.அதை உடனே செயல் படுத்தவும் செய்தான்.ப்ரியாவிற்கு போன் செய்து தான் ராஜியை காதலிப்பதாகவும் அவளும் என்னை விரும்புவதாகவும் எங்களை சேர்த்து வைக்க உதவுங்கள் என்று கேட்டான்.அவள் ஒரே பிடியாக மறுத்துவிட்டால்.அவனும் டெய்லி கால் செய்து அவளை கேட்க அவளோ அவனை பிளாக் செய்து விட்டால்.அவனும் வேறு வேறு நம்பர்களில் இருந்து அவளிடம் பேச.ரமேஷின் அக்காவோ தன் தம்பி விஷம் சாப்பிட ராஜிதான் காரணம் என்றும்,அவனை அவள் ஹாஸ்பிடல் வந்து ஒருதடவையாவது பார்த்தாளா என்று அவளிடம் சண்டை போட அவளோ கார்த்திக்கிடம் இதை கூறி அவனிடம் பேச சொன்னால்.

கார்த்திக் ரமேஷிற்கு கால் செய்து நடந்தவற்றை கூற ரமேஷ் ஆமாம்.எனக்கு கல்யாணத்துக்கு பேசி வீட்ல ஏற்பாடு பண்றாங்கன்னு ராஜிட்ட சொல்றேன் அவ எந்த பதிலும் சொல்ல மாட்டேன்றா.அவ என்னை ஏமாத்திடுவாலோன்னு பயமா இருக்கு.அதான் எங்க அக்கா அப்படி பேசிட்டனு சொன்னான்.அதற்கு கார்த்திக் உன் லவ் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.முதல்ல ஒரு பொண்ண லவ் பண்ணிங்கன்னா அவளோட சேர்த்து அவ குடும்பத்தையும் சேர்த்து நேசிங்க.நீ விஷம் குடிச்ச உடனே அவ ஏன் உன்ன வந்து பாக்கணும்.நீ விஷம் குடிச்சதால சின்னதா இருந்த பிரச்சனை இப்ப பெருசாகிடுச்சு தெரியுமா.அவ வீட்ல அவளுக்கு அக்கா,தங்கச்சின்னு ரெண்டு பேரு இருக்காங்க.அவுங்கள விட்டுட்டு உன்ன பாக்க ஓடி வந்து இருக்க சொல்றியா.அவ அக்காக்கு எதுக்கு தேவை இல்லாம டிஸ்டர்ப் பண்ற.அவளுக்கு உன்ன சும்மாவே பிடிக்காது.இப்ப உன்ன சுத்தமா வெறுக்க ஆரம்பிச்சிட்டா.பர்ஸ்ட் நீ நல்ல வேலைக்கு போ.உனக்கும் அவளுக்கும் 24,23 வயசு வரும்போது வந்து சொல்லுங்க நாங்க இன்னும் லவ் பண்றேன்னு.அப்ப நானே உங்கள கூட்டிட்டு பொய் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்ல சரி நான் உங்கள நம்புறேன் இவ்ளோ சொல்றிங்க நான் உங்கள மதிக்கிறேன்னு சொன்னான்.

கார்த்திக் இதில் தலையிட்டு பேசியது இருவர் வாழ்விலும் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதை அறியாமல் போனை துண்டித்தனர்.
கார்த்திக்கிடம் பேசிய ரமேஷ் அவனுடைய அப்பாவிடம் சென்று தனக்காக ராஜியின் வீட்டிற்கு சென்று அவளுடைய அப்பாவிடம் பேசும்படியும் ராஜி இல்லாமல் தான் செத்து விடுவதாகவும் கூறினான்.மகனின் இந்த வார்த்தையை கேட்ட அவனது அப்பா அவனுக்காக ராஜியின் அப்பாவிடம் சென்று பேசினார்.இருவரும் ஒரே ஜாதி என்பதால் மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார் என்று நினைத்துகொண்டு சென்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.மூத்த மகள் இருக்கும் போது இளையவளுக்கு முடித்தால் நன்றாக இருக்காது அதனால் மூத்தவளுக்கு முடிந்த பின்பு பார்க்கலாம்.இன்னும் நான்கு வருடம் கழித்து வாங்க பாக்கலாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.மகனினின் வாழ்க்கையை மனதில் கொண்டு அவர்கள் வீட்டில் ஒத்துக்க மாட்டேன்றாங்க,அவுங்க உறுதியான பதிலா சொல்ல மாட்டேன்றாங்க.நீ அவளை மறக்குறது தான் ரெண்டு குடும்பத்துக்கும் நல்லதுனு சொல்லி விட்டார்.இதை கேட்டு கொண்டிருந்த அவனது அத்தைகள் இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு அவர்களுடைய மகள் ஒருவருக்கு ரமேஷை திருமணம் செய்து வைக்க சொல்லி அவரை கட்டாய படுத்த அவரும் வேறு வழி இல்லாமல் ஒத்துகொண்டார்.

ராஜியின் அக்கா அவனை வெறுப்பதாக சொன்னதை ராஜிதான் தன்னை வெறுப்பதாக தவறாக புரிந்து கொண்ட ரமேஷ் அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று அவளிடம் மேற்கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.அடுத்த வாரமே அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டு அதற்கடுத்த வாரம் திருமணம் முடிவானது.திருமணத்திற்கு முந்தின நாள் இரவு கால் செய்து எனது அப்பாவிடம் பேசி நான் சம்மதம் வாங்குகிறேன் ப்ளீஸ் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.எனக்கே இப்பதான் உன்னோட மேரேஜ் விஷயமே தெரியும்.ப்ளீஸ் என்று அழுது கொண்டே அவனிடம் பேச எல்லாம் கை மீறி போய் விட்டதாகவும் இவ்வளவு நாள் பேசாதவ இப்ப பேசி என்ன பண்ண.விடு மறந்துடலாம்.என்று கூறி கட் செய்து விட்டான்.மறுநாள் இருபதை கடந்த ரமேஷுக்கும் இருபதை தாண்டாத அவனது முறைபெண்ணுக்கும் திருமணம் முடிந்தது.அவனுடைய அத்தைகளுக்கு தங்கள் குடும்ப சொத்தை தங்கள் குடும்பமே அனுபவிக்கலாம் எவருக்கும் பங்கு கொடுக்க வேண்டாம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இங்கு ராஜியோ இரண்டு நாட்களுக்கு யாரிடமும் பேசவில்லை.சரியாக சாப்பிடவில்லை.அவள் இயல்பு நிலைக்கு வர இரண்டு மாதங்கள் ஆனது.கார்த்திக்கால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்று அவனை வெறுக்க ஆரம்பித்தவள் இன்று வரை வெறுக்கிறாள்.பின்பு ஒரு வருடத்தில் அவளுடைய படிப்பு முடிய வீட்டில் இருந்து கொண்டு அம்மாவிற்கு உதவியாக சிறு வேலைகள் செய்வது தையல் என்று நான்கு வருடங்களை ஓட்டினால்.அந்தநேரம் தான் அவளுடைய அக்காவிற்கு திருமணம் முடிந்திருக்க அடுத்து இவளுக்கு வரன் தேடும் படலம் நடை பெற்று கொண்டிருக்க அந்த நேரம் கார்த்திக்கும் highways department ல் ஜூனியர் இஞ்சினியராக வேலை பார்த்து கொண்டிருந்தான்.அவன் அப்பா ராஜி வீட்டிற்கு சென்று கார்த்திக் ராஜியை விரும்புவதாகவும் அவனுக்கு ராஜியை கட்டி கொடுக்க சம்மதம் தெரிவிக்கும் படியும் தங்கையிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.இதை கேட்ட ராஜிக்கோ உலகமே நின்று விடுவது போல்.யாரை வாழ்நாள் முழுவதும் பார்க்க கூடாது என்று இருந்தோமோ அவனுடனே நம் வாழ்வா.கடவுளே இது நடக்க கூடாது என்று மனதார வேண்டினால்.ராஜியின் அம்மா லக்ஷ்மிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை.அவளுக்கு ராஜியை கார்த்திக்கிற்கு கொடுக்க விருப்பம் தான்.ஆனால் தன் குடும்பத்துடன் சண்டை போட்டு இருபது வருடங்கள் பேசாமல் இருக்கும் தன் கணவனை எப்படி சம்மதிக்க வைப்பது என்று எண்ணி சரி அண்ணே கூடிய சீக்கிரமே நல்ல பதிலா சொல்றேண்ணே என்று கூறி அனுப்பி வைத்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக