குட்டித் தோழி - பகுதி - 2

 அந்த பிஸி சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார் பதினைந்து இருக்கும்.

“வண்டிய ஓரங்கட்டிட்டு லைசென்சு இன்சூரன்சு பேப்பர் எல்லாம் எடுத்தாடா!” என்று அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னார்.
“சரி சார்” என்று அவன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். வண்டிக்குள் பயணிகள் யாரும் இல்லை. பின்னர் கண்ணாடியில் கட்டித் தொங்கப் போட்டிருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து அவர் கேட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தான்.
அதைப் பார்த்த அவர் “ டேய்! இதுல ஆறுமுகமின்னு பேரு போட்டிருக்கு. ஆனா உன் போட்டோ இல்ல. ஆருடா இது?” என்றார்.
“அவரு என் அப்பாங்க….”
“அப்பாவா? வண்டிய எடுத்துட்டு வந்தது உங்கப்பாவுக்குத் தெரியுமா?”
அவன் மெளனமாக நின்றான். “அடக் களவாணிப் பயலே! சொல்லாமா எட்தாந்டிட்டியா?”
அவன் பதில் எதவும் சொல்லவில்லை. அதற்குள் வெகு வேகமாக ஒரு போலீஸ் கார் அங்கு வந்து நின்றது. அந்த ஏரியா ஸ்டேஷன் இன்சார்ஜ் இறங்கினார். சந்திரன் ஒரு சல்யூட் வைத்து விறைப்பாக நின்றார்.
கண்ணாலேயே ரிலாக்ஸ் ஆகச் சொன்ன சோமசேகர் (ஸ்டேஷன் இன்சார்ஜ்) பார்வை அந்தச் சிறுவன் மீது விழுந்தது.“யாருய்யா இவன்? என்ன செஞ்சான்?”
“ சார் வீட்டுல சொல்லாம அப்பாவோட ஆட்டோவ எடுத்துக்கிட்டு வந்திருக்கான் சார். அதான் நீங்க வர்ற வரையில பிடிச்சு வச்சேன்” என்று சொல்லி சோமசேகரிடம் லைசன்ஸ் வகையறாக்களைக் கொடுத்தார். அதைப் பார்த்த சேகர் அந்தப் பையனைப் பார்த்தார்.
அவன் பசியில் இருந்தது போல இருந்தான். அவர் ஏதோ சொல்ல வாயெடுத்த போது அவர் செல் போன் ஒலித்தது.
“ஹல்லோ, சோமசேகர் ஹியர்”
“சார்! நா ஸ்டேஷனிலிருந்து பேசறேன்! நம்ம GST ரோடு ப்ரிஜ் மேல ஒரு ஆக்சிடெண்டாம். ஹெட் க்வார்ட்டர்லேர்ந்து போன் வந்திச்சு. உங்கள ஒடனே அங்க போகச் சொன்னாங்க.”
“என்னய்யா ஆச்சு? எதுனா வெவரம் சொன்னாங்களா?’
“இல்ல சார். ஒங்கள ஒடனே போவச் சொன்னாங்க”
போனை கட் பண்ணிவிட்டு சந்திரன் பக்கம் திரும்பி, “நான் GST ரோடு வரைல போகணும். ஏதோ ஆக்சிடென்ட். இவன வந்து பாக்கறேன்” என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பினார்.
“ஒக்காருடா” என்ற சந்திரனுக்கு எந்தவொரு பதிலும் சொல்லாமல் அந்தச் சிறுவன் ஒரு கல்லில் உட்கார்ந்தான்.
சேகர் ஆக்சிடென்ட் ஸ்பாட்டை அடைந்த போது அங்கு நிறைய கூட்டம் இல்லை. இனிமேல் தான் கூடும் போல. ஒரு கறுப்பு நிற BMW ஒரு ஓரமாக நிறுத்தப் பட்டிருந்தது. அருகில் ஒரு நசுங்கிய நிலையில் ஒரு மொபெட். சற்று தள்ளி ஒரு ஆள் கீழே விழுந்திருந்தான். அவன் கால்களில் இருந்து ரத்தம் இன்னுமும் வழிந்து கொண்டிருந்தது. ஒரு ட்ராபிக் போலீஸ் வேடிக்கைப் பார்க்க வந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தார்.
காருக்குச் சொந்தக்கரனைத் சேகரின் கண்கள் தேடுவதைப் பார்த்து “உள்ளாற இருக்கார் சார்” என்று ட்ராபிக் போலீஸ் காரை நோக்கி சைகை செய்தான்.
கார் அருகில் சென்று அதன் ஏற்றப்பட்டிருந்த கண்ணாடியில் இரண்டு தட்டு தட்டினார் சேகர். உடனே ஜன்னல் கதவு கீழே இறக்கப்பட்டது. உள்ளிருந்த ஏசி குளிர் காற்று சேகர் முகத்தில் அறைந்தது.
“Oh, you took such a long time to reach man” என்றவனுக்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். வெள்ளி நிற டி ஷர்ட், வெளிர் நீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். டி ஷர்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐ போன் எட்டிப் பார்த்தது.
சட்டென்று பின் சீட்டில் இருந்து வந்த அசைவு அவர் கண்களை ஈர்த்தது. ஒரு பெண். இருவது வயதிருந்தால் ஜாஸ்தி. கும்மென்று சிம்லா ஆப்பிள் போல இருந்தாள். ஜீன்ஸ் பெண்கள் அணியும் ஷர்ட் போட்டிருந்தாள். அந்த ஷர்ட்டின் மேல் பட்டன்கள் திறந்து அவள் காஸ்ட்லி உள்ளாடையை விளம்பரப் படுத்திக்கொண்டிருந்தது. இது எதையும் பற்றிக் கவலைப்படாமல் அவள் தன் உதடுகளுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள்.
சேகரின் பார்வையைப் பின்பற்றிய அந்த இளைஞன் “லுக் மிஸ்டர்… லீவ் ஹர் அலோன். ஐ யாம் ஷிவ். மினிஸ்டர் …. சன். அப்பா ஐஜி அங்கிள காண்டாக்ட் பண்ணிப் பேசச் சொன்னார். அவரும் பேசிட்டாராமே! என் அப்பா செக்ரடரி இதோ வந்துடுவார். அண்ட் லெட்ஸ் பீ டன் வித் திஸ் மெஸ் asap. “ என்றான்.
அவனுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் கீழே விழுந்து இருந்த ஆளிடம் சென்றார் சேகர். அவனுக்கும் சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். சாதாரண ஆடை அணிந்த சாதாரணன். இடது கால் மிகவும் சேதமாகி இருந்தது. வலியில் துடித்துக் கொண்டிருந்தான். “ ஆம்புலன்சுக்குச் சொல்லியாச்சா? இவனுடைய குடும்பத்தாருக்குச் சொல்லியாச்சா?” என்று கேட்டார் டிராபிக்கிடம். “சொல்லியாச்சு சார்” என்றார் டிராபிக்.

கார் தப்பு தான் சார்” என்றான் கீழே விழுந்திருந்த குமரன். “திடீர்னு ஸ்பீடா வந்து மோதிட்டார் சார். நா பாட்டுக்கு ஓரமாத் தான் போயிட்டிருந்தேன்.” “ம்ம்ம்ம். நான் விசாரிக்கிறேன். இதோ ஆம்புலன்ஸ் வந்திடிச்சி. உன் போன் இருந்தா குடு. உன் பேமிலி மெம்பெர்ஸ் கூட பேசறேன்” என்றார் சேகர்.
“சரி சார்,” என்று ஒரு நம்பிக்கையுடன் அவரிடம் கொடுத்தான்.
பின்னர் அங்கு வந்த ஆம்புலன்சில் அவனை ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த ஒரு பெரிய ஆசுபத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
சேகர் மீண்டும் காரிடம் வந்தார். “லுக் மிஸ்டர் ஷிவ் … அந்த ஆள் ஏராளமா செதஞ்சிருக்கான். இது புக் பண்ண வேண்டிய கேஸ். ப்ளீஸ் உங்க லைசன்ஸ் அண்ட் பேப்பர்ஸ் ஹேண்ட் ஓவர் பண்ணுங்க” என்றார்.
“மேன்… டோன்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் ஹூ ஐ அம்? இந்த மெஸ் சீக்கிரம் கிளியர் பண்ணிக் குடுன்னா நீ கேஸ் புக் பண்றேங்கறே? லூஸா நீ?”
“மரியாதை குடுத்து மரியாதை வாங்கு மிஸ்டர் ஷிவ்”
“ ஒரு ஸ்டேஷன் இன்சார்ஜுக்கு என்னய்யா மரியாதை?” என்று அவன் சப்தமாக இரையும் போதே இன்னொரு BMW அவர்கள் அருகில் சரேலென்று வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடுத்தர வயது மனிதர் ஒரு பிரீப் கேசுடன் இறங்கினார். அதே சமயம் இரண்டு ஆட்டோக்கள் வந்து நின்றன. அதிலிருந்து நான்கைந்து பேர் தபதபவென இறங்கினர். ஒரு பெண்மணி “ஐயோ குமாரு! எங்கடா நீ” என்று ஓலமிட ஆரம்பித்தாள்.
சேகருக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்று புரிந்தது. செக்ரடரி அவரை நோக்கி வந்தார். “சார் நான் சண்முக சுந்தரம். மினிஸ்டர் பீ ஏ. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
“என்னய்யா பேசப் போற? இவன் மினிஸ்டர் மகன். இவன விட்ருங்க. எதுனாச்சும் கொடுத்து சமாளிச்சிரலாம்.. இது தானே?” என்றார் கோபமாக. தலை வலி இன்னும் அதிகமாயிற்று. ஷிவ் குரல்வளையை நெரித்து அவனை அந்த ஓவர் பிரிஜ்ஜிலிருந்து கீழே எறிந்து விடலாம் போல உணர்ந்தார்


நல்லதாப் போச்சு. நீங்க டைரக்டாவே மேட்டருக்கு வந்துட்டீங்க. உங்களுக்குத் தெரியாததில்லை. நீங்க என்ன தான் கேசு போட்டாலும் நாளைக்கு கோர்ட்டுன்னு வரும்போது சாட்சிகளக் கலச்சிர்வானுங்க. கேச ஒண்ணுமில்லாம ஆக்கிடுவாங்க. ஆருக்கு என்ன ப்ரோசனம்? நான் சொல்றத நல்லாக் கேளுங்க. இந்தப் பெட்டில அஞ்சு லட்சம் இருக்கு. அந்தக் குமாரு என்ன படிச்சிருக்கானோ அதுக்கு தக்காப்போல சார் கடைங்கள்ள எதுனாச்சியும் வேலை போட்டுக் கொடுத்திரலாம். ஆசுபத்திரி செலவும் எங்களது. ‘தப்பு என் மேலதான்’ன்னு குமார எளுதிக் குடுத்துறச் சொல்லுங்க. “ “உங்களுக்கே நியாயமா இருக்கா மிஸ்டர் செக்ரடரி?” என்றார் சேகர்.
“இல்லை தான். நானும் உங்கள மாதிரி நடுத்தர வர்க்கம் சார். ஆனா நிதர்சனத்த நெஜத்தச் சொல்றேன். உங்களுக்குத் தயக்கமா இருந்தா நானே அவன் அப்பா அம்மாகிட்டா பேசறேன். என்ன சொல்றீங்க?”
சேகரின் தலைவலி உச்சத்தை அடைந்திருந்தது. பின் கழுத்தெல்லாம் கூட வலிக்க ஆரம்பித்தது. “என்னவோ செய்ங்க. அவங்க ஒத்துகலேனா கேசு தான்”
செக்ரடரி குமார் குடும்பத்தார் அருகில் சென்று பேச ஆரம்பித்தார். சேகருக்கு அந்தக் காட்சியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பாக்கெட்டிலிருந்து சிகரெட் பாக்கெட் எடுத்துத் திறந்தார். ஒரு சிகரெட் தான் இருந்தது. அதைப் பற்றவைத்துக் கொண்டு புகை இழுத்து விட்டார்.
சுமார் பத்து நிமிடங்களில் செக்ரடரி அவரிடம் வந்தார். அவர் கையில் ஒரு பேப்பர். குமார் அப்பா கையில் அந்த பிரீப் கேஸ். அவர் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த முக பாவம்.
“இந்தாங்க சார் பேப்பர். பாத்து செஞ்சுடுங்க. மினிஸ்டர் கிட்ட சொல்லி ஐஜியோடப் பேசச் சொல்றேன். நல்ல எடமா ட்ரான்ஸ்பர் கேளுங்க.” என்று சொல்லியபடியே ஷிவ் இருந்த காரிடம் சென்றார். அவரைப் பார்த்ததும் ஷிவ் கண்ணாடியை இறக்கினான்.
“தாங்க்ஸ் அங்கிள். அப்ப நாங்க கெளம்பவா?” என்று கேட்டான்.
“ சரிங்க சின்னய்யா. நீங்க போங்க. எல்லாம் முடிச்சாச்சு.” என்றார் செக்ரடரி.
சேகர் அப்போது தான் கவனித்தார். அந்த சட்டையில் மேல் பட்டன்கள் போடாத பெண் முன் சீட்டுக்கு வந்திருந்தாள். அவள் முகம் சிவந்திருந்தது. கண்கள் செருகியிருந்தது. ஷிவ் முகம் கூட flushedஆக இருந்தது. சேகருக்கு வாந்தி வரும் போல இருந்தது.
அடுத்த இருவது நிமிடங்களில் அந்த இடத்தில் ஒரு ஆக்சிடென்ட் நடந்ததுக்கான சாத்தியக்கூறுகளே தென்படவில்லை. குமார் பெற்றோரை செக்ரட்டரி தன் காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். எல்லாரும் கலைந்து விட்டார்கள்.
ஆயாசத்துடன் சோமசேகர் தன் காரில் ஏறி திரும்பவும் அந்த சிக்னல் அருகே சென்றார். தன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கியவர் கண்ணில் அந்தச் சிறுவன் பட்டான்.
“யோவ் சந்திரன், இவன் இன்னும் என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்று இரைந்தார். சந்திரன் மீதான் தன் கோபம் நியாயமற்றது என்று அவர் மனசாட்சி சொன்னது.
“சார் நீங்க தான் இருக்கச் சொன்னீங்க…” என்று இழுத்தார் சந்திரன்.
“ ம்ம்ம் சரி சரி. டேய் இங்க வாடா” என்று அவனை அழைத்தார்.
சிறுவன் மிரண்ட படியே அவர் அருகில் வந்தான். அவன் தோளில் ஒரு கையைப் போட்டு “ உங்க அப்பாவுக்கு என்னடா ஆச்சு?” என்று கேட்டார்.
“அவருக்கு மூணு நாளா சொகமில்ல சார். கைல காசும் இல்ல. அதுனால தான் அவருக்குத் தெரியாம வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன். தப்புன்னா மன்னிச்சிரு சார்” என்றான்.
“இனிமே உன்ன இந்த மாதிரி வண்டியோட பார்த்தேன் கால ஓடச்சிருவேன். மெயின் ரோடுல போவாம இந்த சந்து வழியா வண்டிய எடுத்துக்கிட்டுப் போயிரு”
சரியென்று நகர்ந்தவனை “இங்க வாடா” என்றார்.
குழப்பத்துடன் வந்தவன் கையில் தன் பர்சிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளைத் தந்து “நீயும் சாப்புட்டுட்டு வீட்டுக்கும் வாங்கிப் போ. அப்பாவா டாக்டர் கிட்டயும் கூட்டிகிட்டு போடா” என்றார்.
சிறுவன் நன்றியுடன் ஆட்டோவை ஓட்டிச்சென்றான்.
சந்திரன் தன்னை வியப்புடன் பார்ப்பதை உணர்ந்த சோமசேகர், “யோவ், ஒரு சிகரெட் இருந்தா குடுய்யா” என்றார்.
சந்திரன் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டை அவரிடம் பயபக்தியுடன் நீட்டினான்.

சனிக்கிழமை என்று யார் முட்டாள்தனமாகப் பெயர் வைத்தார்கள்? சந்தோஷக்கிழமை என்று வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த சென்னைக்கு வந்து, பல ‘மன்னார் அண்டு மன்னார்’ கம்ப்யூட்டர் கம்பெனி களில் வேலை பார்த்த பிறகு, சனிக்கிழமை மட்டும்தான் நமக்குக் கை, கால், மூளை தவிர்த்து மற்ற சில உறுப்பு களும் இருப்பதே தெரியும். அப்படி ஓர் இனிய சனிக்கிழமை காலைப்பொழுதில் ஏ.சி. குளிரில் போர்வைக்குள் புதைந்திருந்தபோது தான் அந்த அசம்பாவிதம்… ”என்னங்க… எந்திரிங்க… மறந்தாச்சா?” என என் சகதர்மிணி அவள் இடது காலால் என் காலை மிதித்து உசுப்ப, ”ஏண்டி… இன்னைக்கு ஒரு நாளாவது தூங்குறேனே…” என்றேன் மிதமான குரலில்.
”ம்… கிளம்புங்க. லேபுக்குப் போகணும். இன்னைக்கு மாஸ்டர் செக்கப் உங்களுக்கு.”
நிஜத்தில் போர்வையையும் கனவில் தீபிகா படுகோனையும் உதறிவிட்டு எழுந்து, ”எதுக்கு? நான் நல்லாத்தானே இருக்கேன்!” என்றேன்.
”எல்லாம் எனக்குத் தெரியும். கிளம்புங்க” என்றாள் முன் தூங்கிப் பின் எழும் என் இனிய எதிரி.
நேற்று மாண்புமிகு மாமனார் வந்து போனப்பவே நினைச்சேன், ஏதோ சதித் திட்டம் அரங்கேறுதுன்னு. காணாக் குறைக்கு இவளோட எல்.கே.ஜி. ஃப்ரெண்ட் (அதுக்கப்புறம் அவ படிச்சாளான்னே தெரியாது!) ‘சேட்டிலைட் சாரதா’ வேற வந்து போயிருக்கா. ‘சரி… ப்ளட் டெஸ்ட் தானே போய்ட்டு வந்துடலாம்’ எனக் கிளம்பினேன்.
”காரை ஸ்டார்ட் பண்ணுங்க… வர்றேன்!”
குளிக்காமல், முகத்தில் பேஸ்மென்ட் போட்டு, பட்டி பார்த்து, க்ரீம் பூசி எதை எதையோ தெளித்துக்கொண்டு அவள் வண்டியில் ஏறியபோது எனக்குக் கிறக்கமாக வந்தது.
”என்னங்க… என்னாச்சு?”
”ஒண்ணுமில்ல… வெறும் வயிறுல்ல, அதான் புரட்டுது. போற வழியில கிருஷ்ணாபவன்ல காபி குடிச்சிட்டுப் போவோமா?”
”பச்சத் தண்ணிகூடக் குடிக்கக் கூடாதுனு டாக்டர் சொல்லிஇருக்கார்.”
”எந்த டாக்டர்?”
”எங்க ஃபேமிலி டாக்டர் ரங்க சுந்தரம்.”
”யாரு? அந்த ஃபேமிலியே டாக்டர் கூட்டமா இருக்குமே… அந்த ஃபேமிலி டாக்டரா?”
”டாக்டரை அப்படில்லாம் சொல்லாதீங்க. உங்க ஃபேமிலியைவிடக் குறைச்சுதான் அவங்க கொள்ளை அடிக்கிறாங்க. போன வாரம் என் லெஃப்ட் ஐப்ரோல முடி கொட்டுதுனு அவங்களைப் பார்க்கப் போனேன். அப்ப நீங்க ஒருநாள் ‘சுச்சா’ போறப்ப கஷ்டமா இருக்குனு சொன்னீங்கள்ல… அதைப் பத்திக் கேட்டேன். எதுக்கும் ஒரு தடவை மாஸ்டர் செக்கப் பண்ணிடுங்களேன்னார்.”
அவள் காட்டிய கலர் கலரான பேப்பரில் அத்தனை பாக்ஸிலும் டிக் செய்து, அந்த டாக்டர் நூத்துக்கு நூறு வாங்க முயற்சித்திருந்தார்.
”சார் பேரு… அப்பாயின்ட்மென்ட் இருக்கா?” ரொம்ப அழகாக இருந்த அந்த இளம் வரவேற்பாளினி கேட்டாள்.
”நேத்து போன்லயே அப்பாயின்ட்மென்ட் போட்டாச்சு. தில்லை நாயகம்னு இருக்கும் பாருங்க” என்றாள் என் இனிய எதிரி.
‘சதித் திட்டம் நேற்றே அமலுக்கு வந்து விட்டதுபோல’ என்று நினைத்துக்கொண்டே, நட்சத்திர ஹோட்டல் மாதிரியான அந்தப் பரிசோதனைக் கூடத்தின் வரவேற்பறையில் உட்காரச் சென்றேன். ”சார்… நீங்க உள்ளே போகலாம்!” என அந்த வரவேற்பாளினி சொல்ல, என் மனைவியோ, ”ஏங்க… நீங்க உள்ளே போய் எல்லா டெஸ்ட்டையும் எடுங்க. நான் எதிர்த்தாப்புல இருக்குற ஹோட்டல்ல சாம்பார் இட்லி சாப்பிட்டுட்டு வந்துர்றேன்” என்று அக்கறையாகக் கிளம்பினாள்.
அதன் பிறகு நடந்தவை அனைத்தும் அடடடா… சொல்லி மாளாது. சின்னக் குப்பியில் சுமாராக அரை லிட்டர் ரத்தத்தைச் சிரித்துக்கொண்டே என் உடம்பில் இருந்து உறிஞ்சினார்கள். நான் சுதாரிக்கும் முன், ”சட்டையைக் கழட்டுங்க… எக்ஸ்ரே எடுக்கணும்” எனச் சொல்லி எக்ஸ்ரே எடுத்தார்கள். அது முடிந்ததும் ”அந்தக் கட்டில்ல மல்லாக்கப் படுங்க” என வலுக்கட்டாயமாகப் படுக்கவைத்து, ஏதோ விளக்கெண்ணெய்போல ஒன்றை வயிற்றில் தடவி, ஸ்கேன் செய்து, அப்புறம் ஈ.சி.ஜி. எடுத்து, ”வாங்க… அந்த மெஷின்ல இருக்கிற ரப்பர் பட்டையில ஏறுங்க” என்று ஏற்றி விட்டு, அதன் மேல் ஓடச் சொன்னார்கள்.
”இது டிரெட்மில்தானே?” என்று நான் அதி மேதாவிபோல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.
”அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டுவிட்டு என்னை நுட்பமாகப் பார்த்தாள் நர்ஸ்.
”உடம்பைக் குறைக்கிறேன்னு சொல்லி, என் வீட்டம்மா நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என் கிரெடிட் கார்டுல இதை வாங்கியிருக்கா. இப்போ என் ஜட்டி, பனியன்லாம் அதுலதான் காயப்போடுறேன்… அவ்வளவு லேசுல மறந்துருவேனா என்ன?” என்றேன். எல்லாம் முடிந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. அப்போது பக்கத்தில் ஏதோ பழைய பீரோவை நகர்த்துவதுபோல ஒரு சத்தம் வந்தது. திரும்பிப் பார்த்தால் நாலு பிளேட் சாம்பார் இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, என் மனைவி சாதனா சர்ஹம் குரலில் ஏப்பம்விட்ட திகில் சத்தம் அது.
”ஏங்க… எல்லாம் முடிஞ்சுதா?”

இன்னும் கொஞ்ச நேரமானா ‘எல்லாமே முடிஞ்சிருக்கும்’. ஏண்டி, சுச்சா போறதுக்குக் கஷ்டமா இருக்குறதுக்கு இவ்வளவு டெஸ்ட்டா?


ரங்க சுந்தரம் டி.வி-யில நடுராத்திரியில் வர்ற டாக்டரா என்ன?” ”ம்ஹூம்… எங்க டாக்டர் ‘தரோவா’ செக் பண்ணாம க்ரோசின் மாத்திரைகூடக் கொடுக்க மாட்டார். டெஸ்ட் ரிசல்ட்ல ஏதாவது சிக்கல் இருந்தா, நாளைக்கு நீங்க வரணும். எதுக்கும் இருக்கட்டுமேனு நாளைக்கும் ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன். அது மட்டும் இல்லீங்க… எல்லாம் நல்லபடியா இருந்தா, எங்க ஊர் அம்மன் கோயிலுக்கு உங்களை அழைச்சுட்டு வந்து மண் சோறு சாப்பிடவைக்கிறதா வேண்டிஇருக்கேன்.”
”நான் சாப்பிடணுமா? நீ போய்க் கொட்டிக்க வேண்டியதுதானே. மண் சோறு சாப்பிட்டா, அருள் கிடைக்காதுடி. அமீபியாஸிஸ்தான் கிடைக்கும்!”
எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. நான் புலம்புவதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளாமல், ஏ.சி. குமிழை அதிகபட்சப் புள்ளிக்குத் திருப்பிவைத்தாள். எவ்வளவு கோபம் வந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாத ஒரே ஜீவராசி, மனைவிதான்.
கல்லூரியில் கண்டிப்பாகப் பலருக்கும் வருகிற மனோவியாதியான காதல் எனக்கும் தொற்றி, காதலித்துக் கல்யாணம் செய்தவன் நான். அதோடு தொலைந்தவன்தான். அரேஞ்ச்டு மேரேஜ் என்றால்கூட ‘மேனுஃபேக்சர் டிஃபெக்ட்’ என்று சொல்லி, இரு வீட்டாரையும் அழைத்து, பஞ்சா யத்து செய்து சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடலாம். ஆனால், ஸ்டோலன் பிராப்பர்ட்டியில் அந்த ஷரத்துகள்கூடக் கிடையாதே!
மாலையே இமெயிலில் அந்த தண்டக் கருமாந்திர டெஸ்ட் ரிசல்ட் வீட்டுக்கே வந்து சேர, ரொம்பப் பெருமையாக அதை பிரின்ட் எடுத்துவைத்துக்கொண்டு மறுநாளுக்குக் காத்திருக்கத் தொடங்கினாள் என் மனைவி. எனக்கு அப்போதே ஏதோ நோய் தாக்கியதுபோல உதறத் தொடங்கியது உடம்பு. தாடிகூடக் கொஞ்சம் வேகமாக வளர்ந்ததுபோல கண்ணாடியைப் பார்த்தபோது தெரிந்தது.
”எனக்கு ஏதாச்சும் வந்திருந்தா என்னடி பண்றது? எனக்குப் பயமா இருக்கு. அந்த டாக்டரை அடுத்த வாரம் பார்க்கலாமே!”
”ஒண்ணும் பயப்படாதீங்க. அஞ்சு வருஷமா கட்டின மெடிக்கல் இன்ஷூரன்ஸ் தேமேனு கிடக்கு. பைபாஸ் சர்ஜரியில இருந்து கிட்னி டிரான்ஸ்பிளான்ட் வரைக்கும் கவர் ஆகுதாம். எது வந்தாலும் பார்த்துரலாம்” என்று முடித்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
”அடிப்பாவி… இன்ஷூரன்ஸ் க்ளைமை செல்லுபடியாக்க நான்தான் சோதனைச் சுண்டெலியா?”
கார்ப்பரேட் அலுவலகம்போல இருந்த அந்தக் கட்டடத்தை மருத்துவமனை என்று நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ‘ஃபேமிலியே’ டாக்டர் இப்போது இன்னும் வளர்ந்திருந்தார்.
”கிரவுண்ட் ஃப்ளோர்ல நம்ம ஃபேமிலி டாக்டர். முதல் மாடில பையன் டயபடாலஜிஸ்ட், ரெண்டாவது மாடியில மருமகள் கைனகாலஜிஸ்ட்…”
”ஏன், மச்சினன் எவனும் இல்லையா?”
”இருக்காரே… கீழே கார் பார்க்கிங்ல பிசியோதெரபி க்ளினிக் பார்த்தீங்கள்ல… அது மச்சினனோடதுதான். எவ்வளவு இன்டெலிஜென்ட் ஃபேமிலி தெரியுமா?” என்று பெருமிதத்தில் அவள் முகம் பிரகாசிக்க, டாக்டர் அறை வர சரியாக இருந்தது.
”குட்மார்னிங் டாக்டர்!” என்று என் மனைவி சொல்ல,
”வாம்மா வா… எல்லா டெஸ்ட்டையும் பண்ணிட்டியா? நான் சொன்ன லேப்லதானே பண்ணினே?” என்று கேட்டுக்கொண்டே, பரிசோதனை ரிப்போர்ட்டில் தன் பெயர் இருக்கிறதா, இனிஷியல் சரியாகப் போட்டிருக்கிறானா என்றெல்லாம் பார்த்துவிட்டு, ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட்டபடி ஒரு மனக் கணக்குப் போட்டுக்கொண்டார்.
பின்னர் தேர்வுத் தாளைத் திருத்துவதுபோல உன்னிப்பாக ரிப்போர்ட்டைப் படிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவர் முகம் பளீர் என மலர்ந்த அதே நொடியில், உதடுகள் மட்டும் அதீத வருத்தத்துடன் ”அச்சச்சோ!” என்று உச்சரித்தன.
இந்தச் சூழ்நிலையில் ரியாக்ட் செய்வதற்கென்றே இந்த மருத்துவர்கள் பல வருடம் விடாமல் பிராக்டீஸ் செய்வார்கள்போல!

யாரு… இவர்தான் உங்க வீட்டுக்காரரா? ஒண்ணுக்குப் போறப்ப எரியுதுனு சொன்னியே… இவருக்குத்தானே?” என கோர்ட் குமாஸ்தா ரேஞ்சில் நின்றிருந்த என்னைப் பார்த்துக் கேட்டார். நான் ”யெஸ் சார்…” என்றவன், ”என்ன சார்… எல்லாம் சரியா இருக்கா?” என்றேன்.
”என்னத்த சரியா இருக்கு? ஷ§கர் ஏகத்துக்கு எகிறி நிக்குதே!”
”ஷ§கரா… எனக்கா..?” எனக்குத் தரை கால்களுக்குக் கீழே லேசாக நகர்வதுபோல் இருந்தது.
”பின்னே… பக்கத்து வீட்டுக்காரருக்கா? ஃபாஸ்ட்டிங்ல 103 இருக்கு… ஷ§கர் வந்தாச்சு!” என்று ‘ஹைய்யா… கரன்ட் வந்தாச்சு’ ரேஞ்சில் அவர் சொன்னார்.
”சார்… 110-க்கு மேலதானே ஷ§கர்… இன்னும் ஏழு பாக்கி இருக்கே..?” என்றேன்.
”ஹலோ… இங்க நீங்க டாக்டரா… இல்ல… நான் டாக்டரா? இப்பல்லாம் அந்த யூனிட்டைக் குறைச்சாச்சு. நூத்துக்கு மேல இருந்தாலே ஷ§கர் வர ஆரம்பிச்சாச்சுனு அர்த்தம். ஐ.ஜி.டி-னு பேரு. தெரியுமா?” அவர் பேனாவை ஆட்டி ஆட்டிச் சொன்னார். இப்படியெல்லாம்கூட அளவைக் குறைப்பார்களா? நான் பத்தாவது படிக்கும்போது 120 என்றார்கள். என் அப்பாவை அழைத்துச் சென்றபோது 110; இப்போ இன்னும் கீழேயா?
”சரி… இந்த மாத்திரையை ஆரம்பிங்க. சுச்சா எரிச்சலும் ஷ§கராலதான் இருக்கும். அப்படியே மேலே போய் என் பையன் டயபடாலஜிஸ்ட்… யு.கே-வுக்குப் போய் சர்க்கரை நோய்க் குப் படிச்சிட்டு வந்திருக்கான். அவன் உங்களை தரோவா செக் பண்ணி, சர்க்கரை அதிகரிக்காம இருக்க மருந்து தருவான்!” என்று சொல்லிவிட்டு… கதவைப் பார்த்து, ”நெக்ஸ்ட்…” என்றார்.
என்னது… இன்னொரு தரோவாவா? எனக்கு என்னவோ, ‘முதல்ல நாலு பேர் கும்முகும்முனு கும்முனாய்ங்க… அப்புறம் மீன்பாடி வண்டில போட்டு, இன்னொரு இடத்துக்கு அனுப்பிச்சாங்க… அங்க நாலு பேரு அடிஅடினு அடிச்சு வெளுத்துட்டு, அப்புறம் ஒரு ஆட்டோ புடிச்சு ஒரு முட்டுச் சந்துக்கு அனுப்பினாங்க’ என வடிவேலு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
என் தீவிர யோசனையை ”தேங்க்ஸ் டாக்டர்…” என்று உற்சாகமாக வந்த என் மனைவியின் குரல் கலைத்தது.
‘இவ எதுக்கு டாக்டருக்கு தேங்க்ஸ் சொல்றா?’ என்று எனக்குள் வெறியேறும்போதே, ”பார்த்தீங்கள்ல… எங்க டாக்டர் எப்படி கரெக்ட்டாக் கண்டுபிடிச்சிட்டார்!” என்று பெருமிதப் பூரிப்பு உதிர்த்து ”வாங்க… மேல போகலாம்” என்று என்னை அழைத்துச் சென்றாள்.
”எனக்கென்னமோ பயமா இருக்குடி. எதுக்கும் செகண்ட் ஒப்பீனியன் யார்கிட்டயாவது வாங்கலாம். வேற எங்கேயாவது போவோமா?”


”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எதுக்கு செகண்ட் ஒப்பீனியன்? சர்க்கரை நோய்தானே?” எனச் சொல்லி, அந்த ஜூனியர் டாக்டரிடம் சென்றாள்.
அவர் மெத்தப் படித்த மேதாவி தோற்றத்துடன் மணிரத்னம் பட ஹீரோபோல அழகாக இருந்தார். முழுதாக ஒரு வார்த்தைகூட வாய் திறந்து பேசவே இல்லை. ”ம்ம்ம்… ஹாங்…” என்று பந்தா காண்பித்துவிட்டு, மருந்துச் சீட்டில் எழுத ஆரம்பித்தார்.
”சரியாவே தூங்க மாட்டேங்கிறார் சார்!” என்று என் மனைவி இன்னொரு பிட்டைப் போட, உடனே நர்ஸை அழைத்து அடிஷனல் ஷீட் வாங்கி மருந்துகளை எழுதித் தள்ளினார். அப்புறம் ஒரு பிக் ஷாப்பர் பையில், 15 நாட்களுக்கான மருந்தை வாங்கிக்கொண்டு, நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.
உண்மையிலேயே அன்று இரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு உருண்டு கவலையில் தோய்ந்து ஒருவழியாக அதிகாலையில் அசந்து தூங்கியபோது,
”என்னங்க… எழுந்திருங்க” என்று அதே இடது காலால் என்னைக் கிட்டத்தட்ட எத்தினாள் என் இனிய எதிரி.
”ஏண்டி… இன்னைக்கு என்ன? அதான் நேத்தே எல்லாமும் முடிஞ்சுபோச்சே!”
”இன்னைல இருந்து நீங்க வாக்கிங் போறீங்க… வாக் போயிட்டுத் திரும்பி வர்றப்ப பால் பாக்கெட் வாங்கிட்டு வந்துடுங்க. இன்னிலேர்ந்து வீட்டு வாசல்ல பால் பாக்கெட் கொண்டாந்து போட வேண்டாம்னு சொல்லிட்டேன். ஒரு கமிட்மென்ட் இருந்தாதான் நீங்க தினமும் வாக்கிங் போவீங்க… கிளம்புங்க” என்றாள்.
தெரு நாய்களில் சில என்னைப் பார்த்து முறைத்தன. சில நாய்கள் குரைத்தன. இவற்றுக்கு இடையில் புகுந்து டவுசர் போட்ட திருடன் போல ஊரைச் சுற்றிவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தால், நிலவரம் கலவரமாக இருந்தது.
”இது என்ன சிகைக்காய் பவுடர்? இன்னைக்கு நான் தலைக்குக் குளிக்கல…”
”இது மூலிகைப் பவுடர். குளிக்கிறதுக்கு இல்லை. இதை சாப்பாட்டுக்கு முன்னாடி போட்டுக்கிட்டா, பின்னாடி இன்சுலின் போட வேண்டாம். நேத்து நெட்ல படிச்சேன்!” என்றாள். பாத்திரம் கழுவும் சபீனா பவுடர் மாதிரியே இருந்த அந்தப் பொடியை ரொம்பக் கஷ்டப்பட்டு, விக்கி விழுங்க முற்பட்டபோது, உடனே குடிக்க ஒரு குவளையில் தண்ணி கொடுத்தாள். அவசரமாக அதை கபக் கபக் என்று குடித்தேன். ‘உவ்வேய்..!’ – அது தண்ணி இல்லை.
”என்ன கருமாந்திரம்டி இது?”
”ம்… இது ஆவாரை கஷாயம். இனிமே தண்ணிக்குப் பதில் இதைத்தான் நீங்க குடிக் கணும்.”
என் உலகம் ஒரே நாளில் புரட்டிப் போடப் பட்டுவிட்டது. கொள்ளு சட்னி, குதிரை வாலி இட்லி, அருகம்புல் ஜூஸ் என்று நாளும் பொழுதும் புலர… எனக்குப் பின் பக்கம் லேசாக வால் முளைத்து, கால் பாதத்தில் குளம்பு வளர்வது போல இருந்தது.
”மாப்ள… சுச்சா போறப்ப எரிச்சல் வந்தா சின்னதா ஒரு கட்டிங் போடு. அட்லீஸ்ட் ஒரு டின் பீர்கூடச் சாப்பிடாம… என்னடா நீ சாமி யாராட்டம். அடப் போடா!” என உடன் பணி புரியும் சகாக்கள் எனக்குத் தூபம் போட்டுச் சென்றனர்.
‘கூகுள்’ பண்ணினால் ஷ§கருக்குச் சரியான மருந்து சிக்காதா என்ன? இணையம் திறந்து சர்க்கரையைக் குறைப்பதற்கான வழிகளைத் தேடத் துவங்கியபோதுதான், அந்த அழைப்பு வந்தது. மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதற்குச் சென்றிருந்த லேபில் பார்த்த வரவேற்பாளினி லைனில் வந்தாள். இவள் எதற்கு எனக்கு போன் செய்கிறாள்? பில்லில் சேர்க்க மறந்துபோன, செவன் தவுசண்டை உடனே வந்து கட்டுங்கள் என்பாளோ என்று நான் சிந்தனைகளைப் பறக்கவிட்டபோது, என் நெஞ்சில் பால் வார்க்கும் அந்தச் செய்தியைச் சொன்னாள்.
”ரொம்ப ஸாரி சார். உங்க ஷ§கர் லெவல் 97தான். 103-னு தப்பா அனுப்பிட்டோம். இப்பதான் ரீசெக் பண்ணோம்!”
மனசு றெக்கை கட்டிக்கொண்டது. என் இனிய எதிரியே… இரு வருகிறேன். இன்று இரவு மைசூர்பாகில் தேன் குழைத்து நான் சாப்பிடாவிட்டால், என் பெயரை நான் மாற்றிக்கொள்கிறேன் என்று கொக்கரித்தபடி வீட்டுக்குக் கிளம்பினேன்.
”ஹலோ மிஸ்டர் ஃபேமிலி டாக்டர்… வர்றேன்டா… கையில சரியான ரிசல்ட்டோட, அந்த பிக் ஷாப்பர் நிறைய உன் குடும்பம் கொடுத்த மருந்தை எல்லாம் உன் முன்னாடி கொட்டி பணத்தைத் திரும்பி வாங்கலை… இரு!” மனசெல்லாம் பூரிப்புடன் கணினியை ஷட் டவுன் செய்யக்கூட மறந்து கிளம்பினேன்.
அப்போது கணினித்திரை கூகுளில், ‘ஒரு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் ஃபாஸ்ட்டிங் பிளட் ஷ§கர் 95-க்கு மேல் இருந்தாலே ஆரம்ப சர்க்கரை நோய்தான்’ என்று மின்னியதை நான் சத்தியமாகப் பார்க்கவில்லை!

எப்போதும் வரும் ஒரு கனவு.
கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று… கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி அப்படியே அரக்கு நிறம் கலந்து கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, விரிந்து, விரிந்து அதன் இதழ்கள் அண்ட பெருவெளியை மறைத்து எழுந்து நிற்கும்போது, அதனுள் இருந்து வெளி வரும் ஒரு கசப்பின் மணம், என்னை கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு முட்ட முட்ட முட்ட வைத்து… அது தாங்காமல், அலறி எழும் நான், அந்த கனவு தந்த பயத்தில் இருந்து மீளாமல் கண்ணீர் வடிய நெடு நேரம் படுக்கையில் அமர்ந்திருப்பேன்.
“கெனா”ல இப்படி கெதக்’குனு பயப்படாதட்டி, யட்சி பிடிசுக்குவா”. ஒவ்வொரு முறை அலறி எழும்போது அம்மாச்சியின் இந்த வார்த்தைகள் மனசுக்குள் வந்து மேலும் பயத்தை அதிகரிக்கவே செய்யும். இப்படி அலறி அடித்து ஓடினாலும், யட்சிகள் மீதான பிரமிப்பு மட்டும் ஒரு போதும் குறைந்ததே இல்லை. “தண்ணீல நெழல பாக்காத” என்று அம்மாச்சி சொன்ன நாளில் தொடங்கி இருக்கும் என்று நினைகிறேன் யட்சிகள் மீதான காதல்.
யட்சிகள் சூழ் உலகம் அது.
“பாரிஜாதம் வீட்டுல முனி நிக்காம்ல”….
“ரயிலோட்டுல செவப்பு சேலைல மோகினிய பாத்துல்லா நம்ம வள்ளி பெய இப்படி காச்சல்ல கிடக்கான்”….
“அந்த கலேட்டர் (கலக்ட்டருக்கு படித்த பெயிலாகி போனாலும்…எங்களுக்கு மட்டும் கலக்கட்டராகவே தங்கி போன மோகன் மாமா) வீட்டுல தினமும நட்ட நடு சாமத்துல வரிசையா கல்லு வந்து விழுதாமே ! ஆத்துக்கு போன அவன் பொண்டாட்டி, திருப்பி வரும்போது அவகூடவே எதையோ இழுத்துட்டு வந்துருக்கா. இந்த பெய அத நம்ப மாட்டிக்கானே”. என்று வயல் வேலை முடிந்து வீடு வரும் ஒவ்வொருவரின் இரவையும் இப்படி யட்சிகளும், யட்சன்களும் மட்டுமே தின்று தீர்ப்பார்கள்.
படங்களில் வருவது போல பகலில் பரபரவென்று இருக்கும் அம்மாச்சியின் ஊர், இரவில் அதி அமானுஷ்யமாக இருக்கும். பத்து அடிக்கு ஒரு யட்சியும், இருபதாவது அடிக்கு ஒரு யட்சனும் வசிப்பதாக நம்பி கொண்டிருந்த ஊரில் மாலை ஆறு மணிக்கு மேல் பெரிதான போக்குவரத்துகள் இருக்காது. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு முன்னரே சொல்லி அனுப்படும் சேதி. “ஏலா…ச்சாமம் கீமம் வந்து தொலச்சுராதீய…விடிகால வாங்க” என்று.
சாயங்காலாத்திற்கு மேல் பூக்காரருக்கு ஊருக்குள் அனுமதி கிடையாது. பூ வாசத்திற்கு யட்சி அடிமை என்றும், மாலை நேரத்துக்கு பின் தெரியும் பூவை, அது எங்கிருந்தாலும், அவள் பின் தொடர்ந்து செல்லுவாள் என்பதும் அங்கு நிலவிய பயம் கலந்த நம்பிக்கைகளில் ஒன்று.
இதற்க்கெல்லாம் அடங்குமா பூ ஆசை கொண்ட பேய் மனது ?பூ வேண்டும் என்று அம்மாச்சி வீட்டு நடகூடத்தில் நான் புரளாத நாட்கள் குறைவு.
பூக்களை விட பூக்காரர் கொண்டு வரும் அந்த நார் குடலைக்கு நான் அடிமை. தன்னுடைய சைக்கிளின் வலது கை ஹேண்டில் பார் பக்கம் ஒரு பூ குடலையை தொங்க விட்டுருப்பார். தூக்கணாங் குருவிகூட்டின் பெரிய வடிவமாக, பனை நாரினால் பின்னப்பட்ட அந்த குடலையினுள் வாழை இலை வைத்து அதில் மல்லி, பிச்சி, கேந்தி, முல்லை என்று கலந்து கட்டியிருப்பார். அதில் இருந்து மல்லியோ பிச்சியோ எடுத்து, கூடையின் ஓரத்தில் தொங்க விட பட்டிருக்கும் சிறு கத்தியால் அழகாக நறுக்கி, தண்ணீர் தெளிக்கப்பட்ட வாழை இலையில் வைத்து, பூக்காரர் தரும் அழகே தனிதான். இதற்காக மட்டுமல்லாமல், பூ பின்னால் யட்சி வருவாள் என்று தெரிந்த பின், பூக்களின் மீது குறுகுறுப்புடன் கூடிய ஆர்வம் வந்திருந்தது.
பூக்களின் மீது பைத்தியமாக திரிந்த ஒரு வேனல் கால சித்திரை பின்னிரவில், சம்மந்தமே இல்லாமல் குளிர் காய்ச்சலும், வலிப்பும் வந்து தொலைக்க, யட்சியை பார்த்து நான் பயந்திருக்க வேண்டும் என்று தீவிரமாக யோசித்த அம்மாச்சி, யட்சியுடன் சமாதானமாக போக விரும்பினாள். நோய் குறைந்த கருக்கலில, யட்சி இருப்பதாக நம்பபட்ட, ஊர் முடியும் ஒரு செம்மண் சாலையின் முனையில் இருந்த ஒற்றை பனை மரத்தின் கீழ் கூட்டி சென்றாள்.
ஒரு பூ, ஒரு நொங்கு என்று எதுவுமில்லை. தூக்கணாங் குருவி கூடு கூட இல்லை. ஒரு கிளி சத்தம் கூட இல்லாமல் தலை விரித்து ஹோ-வென்று நின்றது பனை. சேலை கொசுவத்தினுள் சொருவி வைத்திருந்த சிவப்பு சட்டை துணி, கருப்பு வளையல்கள், சடை குஞ்சலம், கொலுசு, ஜாங்கிரி, ஸ்டிக்கர் பொட்டு என்று எல்லாவற்றையும் பனையின் கீழ் வைத்து வான் பார்த்தபடி சொன்னாள்.
“ஏதோ அறியா புள்ள….தெரியமா பூ வச்சுக்கிட்டு அங்கன இங்கன சுத்திருச்சு. உன் குடும்பத்து புள்ள. மன்னிச்சு விட்ரு தாயி. இனி அதெல்லாம் செய்ய மாட்டா.” என்றபடியே கை உசத்தி கும்புடு போட்டாள். அப்போது கூட யட்சிகளின் மீதான பயமோ, பீதியோ வரவில்லை எனக்கு. மாறாக அந்த சிவப்பு சட்டை, குஞ்சலத்தில் யட்சி எப்படி இருப்பாள் என்ற ஆர்வம் ஒட்டி கொண்டது. ஆனால் அந்த சிறு வயது கற்பனைக்குள் யட்சிகள் அடங்க மறுத்தார்கள். எப்படி இருப்பாள் யட்சி ???? என்பது மட்டுமே அந்த வயதின் ஏகாந்தமான கனவாக இருந்தது.

வெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால் உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவளா இப்படி? ஏன்? நான் பார்த்தது உண்மையாகவே அது தானா? அதெப்படி பொய்யாக இருக்க முடியும்? நான் தான் பார்த்தேனே. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு தெரியாமல்…
ஜெய*ந்த் மூர்த்தியின் ந*ண்ப*ன். இன்னும் திரும*ண*மாக*வில்லை. மூர்த்திதான் ஜெய*ந்த் அருகிலேயே இருக்க*ட்டும் என்று த*ன் வீட்டிற்கு பின்னாலேயே வீடு பார்த்துக் கொடுத்தான். த*னி வீடு. ஜெய*ந்த் த*னியாக*த்தான் வ*சிக்கிறான். அவ்வ*ப்போது அவ*ன் பெற்றோர் வ*ந்து பார்த்துவிட்டு செல்வ*ர். வார* முடிவுக*ளில் ஜெய*ந்த் மூர்த்தி வீட்டில் தான் இருப்பான்.
கமலாவின் தோழி மாலா மட்டும் கமலாவின் செல்ஃபோனுக்கு கால் செய்திராவிட்டால், இந்த விஷயம் தனக்கு தெரியவே வந்திருக்காது. மார்க்கெட் செல்வதாக சொல்லி வெளியேறினாள் கமலா. சிறிது நேரத்தில் மாலாவின் அழைப்பு கமலாவின் சென்ஃபோனுக்கு. மறந்து வைத்து விட்டு வெளியேறி விட்ட கமலாவிடம் நேரிலேயே கொடுத்து விடலாம் என மூர்த்தி செல்ஃபோனை எடுத்துக் கொண்டு பின்னாலேயே தெருவில் இறங்க, கமலா ஓட்டமும் நடையுமாய் பூனையிடம் சிக்காமல் ஓடும் எலி போல சென்றதைப் பார்த்ததும் துணுக்குற்றான். ஏன் இத்தனை பதட்டமாய் போகிறாள் என்று. சற்றே மறைவாய் பின் தொடர்ந்த போது, அவள் பக்கத்து தெருவில் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்க்குள் நுழைவது தெரிந்தது.
பக்கத்து தெருவானாலும் வலது வரிசையில் ஜெயந்தின் வீடு, மூர்த்தி வீட்டின் பின்புறம் தான் வரும். கொள்ளையிலிருந்து பார்த்தால் ஜெயந்த் வீடு தெளிவாகத் தெரியும். தோலுக்கு சற்று மேல் வரை நீண்ட மதில்சுவர் தான் இடையில். துப்பறியும் நோக்கில் அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்த மூர்த்தி மறைந்திருந்து ஜெயந்தின் வீட்டைப் பார்க்க, ஜெயந்தின் வீட்டு கொல்லைக் கதவு, சன்னல் என எல்லாமும் மூடப்பட்டிருந்தது. எப்போதும் மூடாத கதவுகள் அவை.

மூர்த்திக்குத் தான் நின்றிருக்கும் தரையில் பாதங்கள் சேராமல் வழுக்குவது போலிருந்தது. தன் காதல் மனைவியை அப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை. அவனுள் பல கேள்விகள். ஒன்றிற்கும் விடை இல்லை. இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். 2 மணிக்கு திரும்ப வந்தாள். அவளால் சரியாக நடக்க முடியவில்லை. மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்துக் கொண்டாள். ‘பொய் சொல்கிறாளே, இவளை…’ மனதிற்குள் கருவிக் கொண்டே அமைதி காத்தான் மூர்த்தி. அன்றிரவு மெல்ல மனைவியை அணைத்தான். வேண்டாமென்று தள்ளிப் படுத்துக் கொண்டே சோர்வாக இருப்பதாக காண்பித்துக் கொண்டாள். மூர்த்தி சுருங்கிய புருவத்தை சீராக்கினான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக் கூடாது. முதலில் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மறு நாளும் அதே 12 மணிக்கு மார்க்கெட் செல்வதாக சொல்லிவிட்டு வெளியேறினாள். மூர்த்தி ஜெயந்தின் வீட்டை கவனித்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. 2 மணி வாக்கில் கமலா வீட்டிற்கு சோர்வாய் வந்தாள் சில மளிகை சாமான்களுடன். அன்றும் மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்தாள். அன்றிரவு மூர்த்தியின் அணைப்பிற்கும் அதே சோர்வைக் காரணம் காட்டிப் புரண்டு படுத்தாள்.
மூர்த்தி முடிவு செய்து கொண்டான். நாளை கையும் க*ள*வுமாக* பிடிக்க* வேண்டும், முச்ச*ந்தியில் நிற்க* வைத்து நாற*டிக்க* வேண்டும். எத்த*னை பெரிய* துரோகி இந்த* ஜெய*ந்த். அவ*ன் முகத்திரையை கிழிக்க* வேண்டும்.
ம*று நாளும் 12 ம*ணிக்கு க*ம*லா மார்க்கெட் செல்வ*தாய் சொல்லிவிட்டு வெளியேறினாள்.


ஜெயந்த் வீட்டை பார்த்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. மூர்த்தி ச*ட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். ச*ரியாக* 5 நிமிட* இடைவெளி விட்டு அவ*ளை ம*றைவாக* பின் தொட*ர்ந்தான். அவ*ள் ஜெயந்த் விட்டிற்குள் நுழைந்தாள்

அவ*ள் உள்ளே சென்று சில* ம*ணித்துளிக*ள் க*ட*ந்த*தும் பின்னாலேயே மூர்த்தி பூனை போல* வீட்டு வாச*லுக்கு வ*ந்தான். வாச*லில் க*த*வு விசால*மாய் திற*ந்திருந்த*து. ‘கொல்லைக் க*த*வை சாத்தி விட்டு முன் க*த*வை சாத்த* ம*ற*ந்து விட்டார்க*ளா இன்று? இருக்க*ட்டும். என்ன*தான் ந*ட*க்கிற*து பார்ப்போமே’ என்று க*ருவிய*ப*டியே மெல்ல* உள்ளே எட்டிப்பார்த்தான்.
க*ம*லா, கிச்ச*னில் எதையோ கிண்டிக் கொண்டிருக்க*, ஜெய*ந்த் சில* இனிப்பு வ*கைக*ளை ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். தான் எதையோ நினைத்திருக்க வேறு ஏதோ ந*ட*க்கிற*தே என்று எச்ச*ரிக்கையான* மூர்த்தி க*த*விடுக்கில் ஒளிய*, க*ம*லா பேசும் ஓசை கேட்ட*து ‘அவ*ருக்கு ச*ர்க்க*ரை பாகு, கேச*ரி, அல்வானா ரொம்ப* புடிக்கும். நாளைக்கு இந்நேரம்லாம் மேரேஜ் ஆகி எங்க*ளுக்கு அஞ்சாவ*து வ*ருஷ*ம். அதான் அவ*ருக்கு ச*ர்ப்ரைஸா இருக்க*ட்டுமேன்னு உங்க* வீட்ல* செஞ்சேன். நாளைக்கு விடிகாலைல* 7 ம*ணிக்கு கொல்லைப்புற*மா இதையெல்லாம் குடுத்துடுங்க* ஜெய*ந்த். அப்ப*டியே நீங்க*ளும் 8 ம*ணிக்கு வீட்டுக்கு வ*ந்திடுங்க எங்க* அனிவ*ர்ச*ரிக்கு. உங்களுக்குதான் சிரமம் கொடுத்திட்டேன்’ என்ற*வ*ளிட*ம், *’அத*னால* என்ன* அண்ணி ப*ர*வாயில்ல*’ என்று ப*தில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெய*ந்த்.
அப்போதுதான் மறு நாள், தன் மாரேஜ் அனிவர்சரி என்பது மூர்த்திக்கு நினைவுக்கு வந்தது.
மூர்த்தி தான் வ*ந்த* சுவ*டே க*ள்ள*ங்க*ப*ட*மில்லாத* இந்த* இருவ*ருக்கும் தெரிந்து விட*க்கூடாது என* ப*த*ட்ட*மானான்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக