ஓகே கண்மணி - பகுதி - 3

 ஒரு வழியாக அவன் நண்பனின் உதவியுடன் ரமேஷை கண்டுபிடித்துவிட்டான்.அவனை பார்த்ததும் கார்த்திக்கிற்கு கோவமாக வந்தது.ஆனால் கட்டுப்படுத்தி கொண்டான்.


அவனை பற்றி ராஜியிடம் தெரிந்து கொள்ள அவளுக்கு கால் செய்தான்.போனை எடுத்த ராஜி சொல்லு கார்த்திக் என்றாள்.நான் ரமேஷை பார்த்தேன்.அவன் நம்பர் கூட என்கிட்ட இருக்குன்னு சொன்னான்.நீ பொய் சொல்றன்னு சொன்னால் ராஜி.

உடனே அவனுடைய நம்பரை சொன்னான் கார்த்திக்.இப்ப நம்புறியான்னு கேட்டான்.உடனே பதறிய ராஜி நீ எதுக்கு அவனை பார்த்த.அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்குதுன்னு கேட்டாள் ராஜி.

பயப்படாத ராஜி நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்.ஆக்ச்சுவலா அவன் ரொம்ப லக்கி ராஜி.அவனை நீ லவ் பண்றல்ல.உலகத்துல ரொம்ப அழகான விஷயம் ஒரு பொண்ணால விரும்பப்படுறது தான்.அது உன்னை மாதிரி ஒருத்தி விரும்புனா அவன் எவ்ளோ பெரிய அதிர்ஷ்டசாலி.இதை சொல்ல தான் அவனை தேடி போனேன்.ஆனால் அவன்கிட்ட பேச எனக்கு தோணலை.அதான் வந்துட்டேன்னு சொன்னான்.
இப்பவாவது நம்புறியா கார்த்திக்.தயவுசெஞ்சி என் பின்னாடி சுத்தாம வேலையை பாருன்னு சொன்னாள் ராஜி.

ஓகே ராஜி பாய்ன்னு சொல்லி போனை வைத்தான் கார்த்திக்.அன்றில் இருந்து அவளுடன் அதிகமாக பேசுவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.அப்போது ராஜியின் அக்கா ப்ரியாவும் படிப்பு முடிந்து வீட்டிலேயே இருந்தததால் அவளுடன் பேசுவதை தவிர்த்தான்.

ராஜி வேறு ஒருவனை காதலித்தாலும் அவளை கார்த்திக்கும் காதலித்தான்.அவனுடைய மனம் அவள் மேல் உள்ள காதலை அதிகபடுத்தியதே தவிர அவளை வெறுக்க தோன்றவில்லை.

இப்படியாக 1 வருடம் சென்றது.ஒரு நாள் கார்த்திக்கின் வீட்டிற்கு ப்ரியா வந்திருந்தாள்.இரண்டு நாட்கள் அவள் அங்குதான் தங்குவதாக இருந்தது.முதல் நாள் இரவு அவளுடன் கார்த்திக் பேசிகொண்டிருக்கும் போது அவள் ராஜியின் லவ் மேட்டரை பற்றி கார்த்திக்கிடம் சொன்னாள்.

ரமேஷ் பிரியாவிற்கு கால் செய்து தங்கள் காதலுக்கு சப்போர்ட் செய்யுமாறு தொல்லை செய்வதாகவும்,அவனை எப்படி ஹாண்டில் பண்ணுவதுனே தெரியலன்னு சொன்னாள்.நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணணும் கார்த்திக்ன்னு சொன்னாள் ப்ரியா.

அவங்க ரெண்டு பேரையும் பிரித்தால் ராஜிக்கு செய்யும் துரோகம்.ப்ரியாவிடம் எல்லாத்தையும் சொல்லாவிடில் பிரியாவிற்கு செய்யும் துரோகம் என்று நினைத்த கார்த்திக் உன்கிட்ட அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் பேசணும்.நானும் ராஜியை லவ் பண்ணேன்.இந்த விஷயமெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும்.நீதான் அவுங்க ரெண்டு பேரும் சேருவதற்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னான் கார்த்திக்.

நினைச்சேன் கார்த்திக்.நீ இதை உன் வாயால சொல்லணும்னு தான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.ச்சீ நீ இவ்ளோ சீப்பா இருப்பன்னு நான் நினைக்கவே இல்ல.எப்படி கார்த்திக் என் தங்கச்சிய லவ் பண்ண முடிஞ்சுது.நாம ரெண்டு பாமிலிக்கும் இருக்குற பிரச்சனைலா உனக்கு தெரியும் தான.அப்ப எப்படி உன்னால லவ் பண்ண முடிஞ்சுது.எங்க அம்மா உன்மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தாங்க.அவ்ளோத்தையும் கெடுத்திட்டியேன்னு சொல்லிட்டு கோவமாக சென்று விட்டாள்.

இதை கார்த்திக் எதிர்பார்த்தது தான்.சரி அவளை சமாதானபடுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டான்.அங்கு இருந்த இரண்டு நாட்களும் அவனுடன் ப்ரியா பேசவில்லை.

அவள் அங்கு அவளுடைய ஊருக்கு சென்ற இரண்டு மணி நேரத்தில் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.உன்மேல செம கோவத்துல இருக்கேன் கார்த்திக்.அங்க இருக்கும் போது கோவத்துல ஏதாவது கத்திடுவேனோனு பயத்துல தான் நான் பேசாம இருந்தேன்.என் தங்கச்சி லவ்வ்க்கு என்னையே ஹெல்ப் பண்ண சொல்லுவியா.அதெப்படி நீ லவ் பண்ண பொண்ண இன்னொருத்தன் கூட சேத்துவைக்க எப்படி முடியுது.சரியான மெண்டல் நீ.

என் தங்கச்சி லவ்வ சேர்த்து வைக்க நீ யாரு.உன் தங்கச்சிக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் சேர்த்து வைப்பேன்னு சொல்லவியான்னு கேட்டாள் ப்ரியா.
அவளது இந்த பேச்சை கேட்டு சூடான கார்த்திக் பதிலுக்கு அவனும் கோவமாக பேசிவிட்டான்.ஒருகட்டத்தில் சமாதானமான ப்ரியா அவனுடன் இனி பேச மாட்டேன்னு கூறி முடித்தால்.

கடைசியாக அவள் போனை வைக்கும் முன்பு கார்த்திக் சொன்னான் நாளைக்கு என் தங்கைக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் கண்டிப்பா நான் குறுக்க நிக்கமாட்டேன்.ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசி உண்மையா லவ் பண்றங்கன்னு தெரிஞ்சா எங்க அப்பா,அம்மாவை கன்வின்ஸ் செய்து நானே அவங்களை சேர்த்து வைப்பேன்னு சொன்னான் கார்த்திக்.

நீ வேணும்னா அப்படி இருப்ப.நான் அப்படி இல்லை.இனி நான் உன்கூட பேசமாட்டேன்னு சொல்லிவிட்டு சென்றாள் ப்ரியா.

அதற்கு பின் ரமேஷ் விஷம் குடிக்க,பிரச்சனை பெரிதாக,கார்த்திக் ப்ரியாவிடம் சேர்த்து வைக்க சொல்லி போராட,அவள் மறுக்க,ரமேஷிற்கு அவனுடைய அத்தை பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது.

டிங் டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்க நினைவில் இருந்து களைந்து கடிகாரத்தை பார்க்க மணி இரண்டாகி இருந்தது.எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு போர்வையை இழுத்து போர்த்தி தூங்கினான் கார்த்திக்.
மறுநாள் காலை கார்த்திக் அவள் படுக்கையில் இல்லை.அவன் எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு கீழே சென்ற போது அவள் சமையல் செய்து கொண்டிருந்தாள்.

நெற்றியில் அழகாக குங்குமம் வைத்து சேலை கட்டி,துண்டை தலையில் சுற்றி வைத்து இருந்தாள்.அவன் நியூஸ் பேப்பர் எடுத்து கொண்டு சோபாவில் இருந்தான்.ராஜி காபி எடுத்து கொண்டு டீபாயில் வைத்தாள்.

அவள் முகத்தை பார்க்காமல் அதை எடுத்து குடிக்க தொடங்கினான்.பின் வேலைக்கு செல்ல கிளம்பினான்.அவனுக்கு டிபன் பாக்ஸில் சாப்பாடை எடுத்து வைத்து அவனுடைய பேக்கை தயார் செய்தால் ராஜி.

அவன் ரூமிற்கு சென்று குளித்து விட்டு வந்து ட்ரெஸ் எடுத்து போட்டு கொண்டு சாப்பிட வந்தான்.டைனிங் டேபிளில் இருந்து சாப்பிட அவனுக்கு பரிமாறினாள் ராஜி.

சாப்பாடு வைக்கும் போது அதிகமாக வைத்து விட அவளிடம் பேசாமல் சைகையாலே போதும் என்று சொன்னான்.ராஜிக்கு அவன் அப்படி பேசாமல் சொன்னது ஒரு மாதிரியாக இருந்தது.சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென்று அவனுக்கு விக்கல் வர ராஜி தண்ணீர் எடுத்து வருவதற்குள் அவன் எழுந்து சென்று கை கழுவ சென்றான்.

இலையில் பாதி சாப்பாடு அப்படியே இருந்தது.நாம் நேற்று அவனிடம் அவ்வாறு பேசி இருக்க கூடாது.ரொம்ப கோவமா பேசிட்டோம்னு நினைத்து வருந்தினாள்.அதனுடைய வெளிப்பாடு தான் அவனின் இந்த மாற்றம் என்று உணர்ந்து கொண்டாள்.

கார்த்திக் ஓபிஸ் சென்ற போது அனைவரும் அவனை கிண்டலும் கேலியுமாக கலாய்த்து எடுத்தார்கள்.பின்னர் சைட்டிற்கு சென்று வேலைகளை பார்த்தான்.

அதிக வேலைகள் பெண்டிங்கில் இருந்தது.ஒரு வழியாக அனைத்தையும் நெருக்கி விட்டான்.அப்போது அவனுடைய A.D அழைக்க அவருடைய ரூமிற்கு சென்றான்.சொல்லுங்க சார் கூப்பிட்டீங்களாமேன்னு சொன்னான் கார்த்திக்.

முதல்ல உக்காருப்பா.அப்புறம் கல்யாணம்லா சிறப்பா முடிஞ்சுதா.எப்படி போகுது மேரேஜ் லைப் என்றார்.நல்லா போகுது சார்.ரெண்டு நாள் தான சார் ஆகுது போக போகத்தான் தெரியும் என்றான் கார்த்திக்.அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும்.சரி ஒரு நாள் நீயும் உன் ஒய்ப்பும் சேர்ந்து என் வீட்டுக்கு வாங்க விருந்ததுக்கு அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்னு சொன்னார்.

சரி சார்.கண்டிப்பா கூட்டிட்டு வரேன் சார்.நான் வேலையை பார்க்கிறேன் சார்ன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அன்று அதிகமாக வேலை இருந்ததால் ராஜியை பற்றி மறந்து போயிருந்தான்.பின் ஈவினிங் வீட்டிற்கு சென்ற போது அவனுக்கு தலை வலிப்பது போல் இருந்தது.ரூமிர்க்கு சென்று பிரெஷ்அப் ஆகி விட்டு கீழே வந்தான்.ராஜி டிவி பார்த்து கொண்டிருந்தாள்.

அவளிடம் காபி கேட்கலாம் என்று யோசித்தான்.ஆனால் அவளுடன் இனி பேசகூடாது என்று முடிவெடுத்திருந்தான்.அதனால் அவன் நேராக கிட்சன் சென்று காபி எடுக்க சென்றான்.,

அவன் கிட்சன் செல்வதை கண்ட ராஜி எழுந்து கிட்சன் சென்று காபி தானக்.நீ போ.நான் போட்டு தரேன்னு சொன்னால்.ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாத கார்த்திக் காபி ரெடி பண்ணினான்.

ராஜிக்கு அவனுடைய இந்த செய்கை கஷ்டமாக இருந்தது.என்னதான் இருந்தாலும் நாம் நேற்று அப்படி பேசியிருக்க கூடாதுன்னு வருந்தினாள்.அந்த நேரம் கோவிலுக்கு சென்றிருந்த சாந்தா வந்துவிட என்னப்பா ஏன் நீ காபி போட்டுட்டு இருக்க.என் மருமக எங்கன்னு கேட்டாள்.

கார்த்திக் அவன் பின்னால் நின்று கொண்டிருந்த ராஜியை பார்த்தான்.பார்த்துவிட்டு ஏன் நான் போட்டு குடிச்சா என்ன.என் பொண்டாட்டி போட்டு தரேன்னு தான் சொன்னா.நான்தான் அவளை போட வேண்டாம்னு சொல்லிட்டு அவளுக்கும் எனக்கும் சேர்த்து நானே போட்றேன்னு சொல்லி அவளை இருக்க வச்சேன்னு சொன்னான்.

அதுக்குள்ள பொண்டாட்டி வந்த உடனே மாறிட்டயடா.கல்யாணத்துக்கு முன்னாடி காபி குடிச்ச டம்ளர கூட எடுத்துட்டு வர மாட்டியேடா.இப்ப காபியே போட்டு குடிக்கிற.சூப்பர்டா என்று சொல்லிக்கொண்டு சென்றால் சாந்தா.

தயார் செய்த காபியை எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றான் கார்த்திக்.இங்கு ராஜி அத்தையிடம் சென்று அதை நைட் சாப்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்னு கேட்டாள்.

சப்பாத்திக்கு மாவு ரெடி பண்ணிவச்சிருக்கேன்மா.அதை செஞ்சுக்கிடலாம்.சட்னி மட்டும் செய்யணும்.அதை நான் பாத்துகின்றேன்.நீ மேல போமான்னு சொன்னால் சாந்தா.

ரூமில் கார்த்திக் தலை வலிக்கு தைலம் தேய்த்து விட்டு தான் வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்கு சென்றான்.அவனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைப்பதற்கு முன் அவன் தனியாக ஆஃபீஸ் வைத்து ஒரு சின்ன கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்திருந்தான்.இப்போது அதை தன் சித்தப்பா பையன் மகேஷிடம் ஒப்படைத்து அதை கார்த்திக் கவனித்து கொண்டான்.

அங்கு மகேஷ் கிளைண்ட்ஸ் இடம் பேசி கொண்டிருக்க இவன் உள்ளே சென்றான்.பின் அவர்களிடம் பேசி கணக்குகளை சரி பார்த்தான்.இவ்வாறாக இரவாகி விட வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு தூங்கினான்.ராஜிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நாம் இவனை நிம்மதியாக இருக்க விடகூடாதுன்னு நினைச்சோம்.ஆனால் இவன் நம்மகூட பேசாம நம்மள அவைட் பன்றான்.எது எப்படியோ நம்மை அவன் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டாள்.
இப்படியாக நாட்கள் செல்ல அன்று வெள்ளிக்கிழமை.வழக்கம் போல கார்த்திக் வேலைக்கு சென்றுவிட்டான்.மதியம் போல ராஜியிடம் இருந்து போன் வந்தது.என்னங்க இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடுறிங்களா.ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போய்ட்டு வரலாம்.சரின்னு சொல்லுங்கன்னு சொன்னாள் ராஜி.


அவனுக்கு குழப்பமாக இருந்தது.திடீர்னு ராஜியின் இந்த மனமாற்றம் எப்படின்னு.என்ன நடந்ததுன்னு தெரியலையே.சரி நல்லது நடந்தா சரிதான்னு சரி வரேன்.சீக்கிரமா வந்துடுறேன்னு சொன்னான் கார்த்திக்.

இங்கு ராஜியோ கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த அத்தையிடம் அத்தை சொல்லிட்டேன் அத்தை.சாயங்காலம் வரேன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னாள் ராஜி.சரிம்மா அவன் வந்தவுடன் நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க.மறக்காம சேலை கட்டிட்டு போம்மான்னு சொன்னாங்க.

இதை எதையும் அறியாத கார்திக்கிற்கோ நிமிடங்கள் வருடங்களை கழிய எப்போது நேரத்தை கழிக்க என்று யோசித்து கொண்டிருந்தான்.சரியாக 4 மணிக்கு கடிகாரம் ஒலிக்க ஆபிஸில் சொல்லிவிட்டு கிளம்பினான் கார்த்திக்.

வரும்போது பூக்கடை பார்க்க அங்கு சென்று இரண்டு முழம் மல்லிகை பூ வாங்கிக்கொண்டான்.அவன் பைக்கில் கடந்த ஒவ்வொரு கிலோமீட்டர் தூரமும் ஒவ்வொரு மைலாக கடக்க ஒருவழியாக வீடு வந்தான்.அவன் வந்ததும் ராஜியை பார்க்க அவள் சாந்தாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்.ராஜியிடம் வந்து பூவை கொடுக்க பூவை வாங்கிக்கொண்ட ராஜி சீக்கிரம் கிளம்புங்க நேரம் ஆகுது.நான்.காபி கலந்து எடுத்துட்டு வரேன்.நீங்க மேல போங்கன்னு சொன்னாள்.

ம்ம்ம்ம் சரின்னு சொல்லிட்டு சென்றான் கார்த்திக்.அவனுக்கு காபி கலந்து எடுத்துட்டு ரூமிற்க்கு சென்றால் ராஜி.அங்கு கார்த்திக் ட்ரெஸ் மாற்றிவிட்டு தலை சீவிக்கொண்டிருந்தான்.அவன் அருகில் சென்று ம்ம்ம்க்கும் என்று செருமினால் ராஜி.

அவன் திரும்பி காபி எடுத்துவிட்டு தாங்க்ஸ் என்று சொல்ல வரும் முன் கார்த்திக் இன்னைக்கு பேசுனது.நீ எதுவும் பீல் பண்ணிக்காத.அத்தைதான் கோவிலுக்கு போக சொன்னாங்க.நானும் சரின்னு சொன்னேன்.அப்ப உடனே கார்த்திக்க்கு போன் பண்ணி சொல்லுன்னு பக்கத்துலையே இருந்தாங்க.அதான் நான் அப்படி பேசினேன்.மத்தபடி நான் அன்னைக்கு சொன்னது தான்னு சொன்னாள் ராஜி.

ச்ச நம்மள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்குறதுல என்னதான் சந்தோஷமோ.இதை கோவிலுக்கு போய்ட்டு வந்து சொல்லலாம்ல என்று நினைத்து கொண்டு அவள் முகத்தை பார்க்காமல் ரூமை விட்டு வெளியே வந்தான்.

கீழே அவளுக்காக வெயிட் செய்து கொண்டிருந்தான் அப்போது அங்கு வந்த சாந்தா டேய் கோவிலுக்கு போர இப்படி ஜீன்ஸ் போட்டுட்டா போவ போய் மாத்திட்டு போடான்னு சொன்னாள்.என்னம்மா நீ என்று சலித்துக்கொண்டு வேகமாக ரூம் சென்றான்.அப்போது தான் சாரி மாற்றிவிட்டு ராஜியும் வெளியே வர இருவரும் மோதிக்கொண்டார்கள்.டக்கென்று சுதாரித்து கொண்ட இருவரும் சாரி சாரின்னு ஒரே நேரத்தில் சொன்னார்கள்.பின் ராஜி அத்தையிடம் சென்று பூஜைகூடையை வாங்கிகொண்டாள்.

கார்த்திக் வேஷ்டியும் பிளைன் ஷர்ட்டும் மாற்றிக்கொண்டு கிளம்பினான்.அவனை கண்ட ராஜி ஒருநிமிடம் திக்கித்து போனாள்.ஆறடி உயரத்தில்,அடர்த்தியான மீசையும்,ட்ரிம் செய்த தாடியுடன்,நெற்றியில் சிறிய விபூதி கீற்றுடன் அவனை பார்த்த போது ஆண்மைக்குரிய அத்தனை அம்சங்களும் அவனிடம் இருப்பதை உணர்ந்தாள்.

இதுநாள் வரை அவனை பேண்ட்,ஷர்ட்டில் மட்டுமே பார்த்த ராஜி,இன்று வேஷ்டி சட்டையில் பார்த்த போது மேன்லியாக தெரிந்தான்.அதை அவனிடம் சொல்லலாம் என்று வாயெடுத்த போது வேண்டாம் அவன் இதனால் அட்வான்டேஜ் எடுத்து கொள்வான் என்றது அவளது மனம்.

பின் இருவரும் பைக்கில் கோவிலுக்கு செல்ல அவன் மீது அவள் கை படாதவாறு சற்று விலகியே இருந்தால் ராஜி.அதற்கு வேறொரு காரணமும் இருந்தது.ஸ்பீட் பிரேக்கில் வேண்டும் என்றே பிரேக் அடித்தால் இடிக்க நேரிடும் என்று சற்று கேப் விட்டே இருந்தாள் ராஜீ.

அவளின் பயத்தை உணர்ந்தவனாக ஸ்பீட் பிரெக்,பள்ளங்களில் செல்லாமல் சைடு வழியாக வண்டியை ஓட்டினான்.கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு பூஜைக்கு கொடுத்தனர்.வழக்கம் போல கார்த்திக் இருவர் பெயருக்கும் அர்ச்சனை கொடுக்க பூஜை முடிந்து பிரகாரத்தை சுற்றி வந்தனர்.பி

பின் கோவில் பிரகாரத்தில் சிறிது நேரம் இருவரும் உக்கார்ந்து கொண்டிருந்தனர்.இருவரும் ஒன்றும் பேசவில்லை.அமைதியாக இருந்த நேரத்தில் திடீரென்று ஒரு ஆறு வயது குழந்தை கார்த்திக்கின் அருகில் விளையாடி கொண்டிருந்தது.அதை ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்.

அந்த குழந்தையை பார்த்து அவன் கண்ணடிக்க அதுவும் பதிலுக்கு கண்ணடித்தது.பின் ராஜியின் பின்னால் மறைந்து கொண்டு மீண்டும் அந்த குழந்தையை பார்க்க அதுவும் அதே மாதிரி மறைந்து வெளியே வந்தது.

பின் சைகையால் அதை பார்த்து வா என்று அசைக்க அந்த குழந்தையும் பதிலுக்கு நீ இங்க வான்னு கை நீட்டி ஒரு விரலை அசைத்து கூப்பிட்டது.ஓடி சென்று குழந்தையை தூக்கி முத்தமிட்டான்.

அங்கிளுக்கு ஒரு கிஸ் கொடுங்க என்றான்.பதிலுக்கு அதுவும் கன்னத்தில் முத்தம் கொடுத்தது.இங்க என்று இன்னொரு கன்னத்தையும் காட்ட அங்கும் தன் பிஞ்சு உதடுகளால் ஒத்தி எடுத்தது.

நீங்க என்ன படிக்கிறிங்க செல்லம்ன்னு கேட்டான் கார்த்திக்.அதற்கு எல்கேஜி என்று மழலை குரலில் சொன்னது அந்த குழந்தை.அப்படியா சரி அப்பா,அம்மா எங்கடா இருக்காங்க குட்டின்னு கேட்டான் கார்த்திக்.அங்க என்று கை நீட்டிய திசையில் இருவர் சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர்.

சரி உங்களுக்கு எத்தனை பிரெண்ட்ஸ்டா குட்டின்னு கேட்டான் கார்த்திக்.எனக்கு 4 பிரெண்ட்ஸ் என்று 5 விரல்களை காட்டியது.சரி அப்ப என்னையும் உன் பிரெண்டா சேர்த்துக்கிடுறிங்களா என்றான் கார்த்திக்.சரி சேர்த்துக்கிடறேன்.உன் என்ன என்றது குழந்தை.கார்த்திக்ன்னு சொன்னான்.உங்க பேரு என்னடா குட்டின்னு கேட்டான் கார்த்திக்.ராஜி என்றது குழந்தை.உடனே ராஜியை பார்த்தான் கார்த்திக்.

இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த ராஜி குழந்தை பெயர் சொன்ன உடன் அதை கவனிக்காதது போல இருந்து கொண்டாள்.குழந்தையை பார்த்து ராஜின்னு பேரு வச்ச எல்லாரும் ரொம்ப அழகை இருக்கிங்கடா குட்டின்னு சொல்லிவிட்டு மீண்டும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அப்போது ராஜி,ராஜி என்று ஒருவர் தேடிக்கொண்டு வர அப்பா என்று கூப்பிட்டது குழந்தை.நீ இங்க இருக்கியா.எங்க எல்லாம் உன்னை தேடுறதுன்னு சொல்லிக்கொண்டு அருகில் வந்தார் குழந்தையின் அப்பா.
அப்பா இது என்னோட புது பிரென்ட்.கார்த்திக் என்று அப்பாவிடம் அவனை அறிமுகப்படுத்தியது குழந்தை.சாரி சார்.குழந்தை கொஞ்சம் வாலு. அதான்பி கொஞ்சம் ஓவெரா பேசுவான்னு சொன்னார் குழந்தையின் அப்பா.

ஏன் சார் வாலுன்னு சொல்றிங்க சுட்டின்னு சொல்லுங்க என்று சிரித்து கொண்டே சொன்னான் கார்த்திக்.சரி சார் அப்ப நாங்க கிளம்புறோம் போலாமா ராஜி.அங்கிளுக்கு பாய் சொல்லுன்னு சொன்னார் குழந்தையின் அப்பா.

ஓகே கார்த்திக்.பாய் என்று டாட்டா காட்ட கார்த்திக்கும் பதிலுக்கு பாய் ராஜி டேக் கேர்.என்று டாட்டா காட்டினான்.பின் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.அப்போது பக்கத்துவ வீட்டில் இருப்பவர்கள் இவர்கள் பைக்கில் சென்றுவருவதை பார்த்தனர்.

அப்போது கார்த்திக்கிடம் எப்போதும் வேடிக்கையாக பேசும் நண்பனின் அம்மா ஒருவர் அவனிடம் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு.சொன்ன மாதிரியே அத்தை பொண்ண தூக்கிட்டு வந்துட்டியே.மகாலட்ச்சிமியட்டும் இருக்கா.வீட்டிக்கு போனதும் சுத்தி போட சொல்லுன்னு சொல்லிட்டு போனாங்க.

அவங்க கிட்ட ஒன்னும் பேசாமல் சிறிது கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்...

வீட்டுக்கு வந்த பின் கார்த்திக் சாப்பிட்டு விட்டு லேப்டாப்பில் பேஸ்புக் பார்த்து கொண்டிருக்க ராஜி பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டு டம்ளரில் பால் எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றாள்.
கொண்டு வந்த பாலை டேபிளில் வைக்க கார்த்திக் அதை எடுத்துக்கொண்டு லேப்டாப்பில் மூழ்கினான்.லைட்டை ஆப் செய்துவிட்டு பெட்டில் படுக்க சென்றாள்.
கார்த்திக் லேப்டாப்பில் குறைந்த சத்தத்தில் பாடல் ஓடவிட்டு இருந்தான்.கூடவே அவனும் பாடிக்கொண்டிருந்தான்.அதை பார்த்துக்கொண்டிருந்த ராஜிக்கு சிரிப்பாக வந்தது.கோவிலில் கார்த்திக் அந்த குழந்தையுடன் விளையாடியதை பார்த்த போது அவனும் குழந்தையுடன் குழந்தையாக மாறிப்போனதை உணர்ந்தாள்.எப்படி இவன் எல்லோரிடமும் எளிதில் ஒட்டிக்கொள்கிறான் என்று வியப்பாக இருந்தது.
ரமேஷிற்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது.அதை ராஜியிடமே கூறி இருக்கின்றான்.ஆனால் ராஜிக்கு குழந்தைகள் என்றால் அவ்ளோ பிடிக்கும்.

அவளுடைய வீட்டிற்கு அருகில் நிறைய குழந்தைகள் உண்டு.லீவ் நாட்களில் அவர்களை வைத்து விளையாடுவது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.கார்த்திக் இன்று விளையாடியதை பார்த்த போது அவளுக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது.
ஏன் கார்த்திக் எனக்கு மட்டும் இப்படி செஞ்ச.நாம ரெண்டு பேரும் நல்லாத்தானே பழகினோம்.உன்மேல ஏன் நீயே வெறுப்பை உண்டாக்கி கொண்டாய்ன்னு அவளுடைய மனம் அவளுக்காக பேசியது.

பின் அப்படியே அவள் தூங்கிவிட கார்த்திக்கும் அவள் தூங்கியவுடன் உறங்கி போனான்.மறுநாள் லீவ் என்பதால் லேட்டாக எழுந்தான் கார்த்திக். அன்று சைட்டிற்கு சென்று வேலைகள் எந்த அளவில் உள்ளது என்று தன் தம்பியுடன் சென்று பார்க்க சென்றான்.
வருடத்திற்கு 12 வீடுகள் அவர்கள் கம்பெனி மூலம் கட்டி கொடுக்கின்றனர்.வருடாவருடம் அதன் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாமல் பார்த்துக்கொள்வான்.அவன் கஷ்டப்பட்டு உருவாக்கிய கம்பெனி அது.அதனால் தான் அவனுக்கு கவர்மெண்ட் வேலை கிடைத்த பின்னும் அதை மூடாமல் டிப்ளோமா முடித்த தன் தம்பியிடம் ஒப்படைத்து அதை கவனித்து கொண்டிருந்தான்.அ
புதுப்புது ஐடியா,மற்றும் இன்டீரியர் டிசைன்களிலும் நன்றாக பண்ணிகொடுப்பதால் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது.பெரும்பாலும் பாங்கில் வேலை செய்பவர்கள்.கவர்மெண்ட் ஸ்டாப்ஸ்,வசதி படைத்தவர்கள் இவர்களே பெரும்பாலும் அவனுடைய கிளைன்ட் லிஸ்டில் இருந்தனர்.

அன்று சைட் விசிட்டிங் சென்று பார்த்த போது எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.அன்று முழுவதும் வீட்டிற்கு செல்வதை தவிர்த்திருந்தான் கார்த்திக்.சாப்பிட மட்டும் சென்று வந்தான்.
அன்று ஈவினிங் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு ஆபிஸில் இருந்தான் கார்த்திக்.கூடவே அவனுடைய தம்பியும் இருக்க அப்போது அவனுடைய நண்பர்களும் வந்திருந்தனர்.
வாங்கடா எப்படி இருக்கீங்க இப்போதான் தான் எங்கள உங்க கண்ணுக்கு தெரியுதா.கல்யாணத்துக்கு கூட வராம போய்ட்டீங்கன்னு கேட்டான் கார்த்திக்.
அப்படி இல்லடா.உனக்கென்ன உள்ளூர்ளையே இருந்து கஷ்டப்பட்டு செட்டில் ஆகிட்ட.நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்டேட்ல இருக்கோம்.அதாண்டா வர முடியல.சரி எப்படி இருக்கா எங்க தங்கச்சின்னு கேட்டார்கள்.
அவளுக்கென்னடா ராணி மாதிரி இருக்கான்னு .சரிடா அப்றம் என்ன பிளான் இன்னைக்குன்னு கேட்டான் கார்த்திக்.
இன்னைக்கு ஒன்னும் இல்லடா.நீதான் மேரேஜ் டிரீட் கொடுக்கணும்.எப்போ தரபோறன்னு கேட்டார்கள்.இன்னைக்கே கொடுத்துடலாம் என்னடா வேணும் மகேஷ் இங்க வான்னு கூப்பிட்டான் கார்த்திக்.
என்னடா வாங்கலாம் சொல்லுங்கன்னு கேட்டான்.டேய் என்னடா உடனே சொல்லிட்ட ம்ம்ம் சரி பட் ஒரு கண்டிஷன் நீயும் எங்களோட சேர்ந்து லைட்டா சாப்பிடணும்
ஓகேவான்னு கேட்டான் அவனுடைய நண்பன் ராம்.
டேய் அதெல்லாம் முடியாது.அவளுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.அதனால நீங்க சாப்பிடுங்க.நான் கம்பெனி கொடுக்கிறேன்னு சொன்னான் கார்த்திக்.
ம்ஹும் அட்லீஸ்ட் ஒன் பீர் இல்லனா நோ ட்ரீட் அப்படின்னு அவர்கள் சொல்ல சரி ஓகேடா என்று கார்த்திக் ஒத்துக்கொண்டான்.
மகேஷிடம் காசை கொடுத்து வாங்கிவர சொல்ல ஆஃபீஸ்க்கு வெளியே உள்ள ஸ்டோர் ரூமில் பார்ட்டி ஆரம்பம் ஆனது.ஹாப்பி மேரீட் லைப் கார்த்திக் என்று சொல்லி பீரை ஒப்பன் செய்து கார்த்திக்கிடம் கொடுக்க எல்லோரும் சேர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தனர்.
அப்போது கார்த்திக்கிற்கு போன் வர ஒரு நிமிடம் என்று சொல்லி அவன் போனை எடுத்துகொண்டு வெளியே வந்தான்.அந்த நேரம் பார்த்து பீரில் சரக்கை மிக்ஸ் செய்து வைத்து விட்டனர்.
இதை அறியாத கார்த்திக் அதை எடுத்து புல் பாட்டிலையும் காலி செய்தான்.ஒருவராக ஜாலியாக பார்ட்டி முடிந்தது.அனைவரும் கிளம்பி செல்ல கார்த்திக்கிற்கு போதை அதிகமானது.
மகேஷ் இரண்டு பீர் மட்டும் அடித்திருந்ததால் அவனுக்கு மிதமாக இருந்தது.இருவரும் சிறிது நேரம் ஜாலியாக பேசி கொண்டிருந்தனர்.மகேஷ் கார்த்திக்கின் மேல் அதிகமாக மரியாதை வைத்திருந்தான்.அதனால் அவனிடம் அதிகம் பேசமாட்டான்.
வேலை விஷயமாக ஏதாவது கேட்பான்.மற்றபடி அவனாக கார்த்திக்கிடம் எதுவும் பேசமாட்டான்.டேய் நீ யாரையாவது லவ் பன்றயாடா.அப்படி ஏதாவது இருந்தால் அண்ணன் கிட்ட சொல்லுடா.நான் ஹெல்ப் பன்றேன்ன்னு கார்த்திக் சொன்னான்.
அப்படிலாம் ஒன்னும் இல்லன்னா.நம்ம மூஞ்சிய எல்லாம் எவளும் பாப்பாளுகளா.அதுவும் இல்லாம எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா வீட்டையே ரெண்டாக்கிடுவா.அதனால எனக்கு அதில இன்டெரெஸ்ட் இல்லன்னான்னு சொன்னான் மகேஷ்.
நீயெல்லாம் வேஸ்ட்டா.முதல்ல உனக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணா பாத்து லவ் பண்ணு.அப்பதான் வாழ்க்கைல ஏதாவது முன்னேற முடியும்.உனக்காக இல்லாட்டாலும் அவளுக்காகவாச்சும் ஏதாச்சும் பண்ணனும்னு ஒரு உந்துதல் இருக்கும்னு சொன்னான் கார்த்திக்.


சரின்னா.ஏண்ணே உனக்கும் மைனிக்கும் ஏதாவது பிரச்னையான்னு கேட்டான் மகேஷ்.அப்படில்லா ஒன்னும் இல்லடா.உனக்கு யாரு சொன்னா எங்க ரெண்டுபேருக்கும் நடுவுல பிரச்சனைன்னுன்னு கேட்டான் கார்த்திக்.

இல்லன்னா.அன்னைக்கு கோவில்ல வச்சி உங்க ரெண்டுபேரையும் பாத்தேன்.மைனி முகத்துல சந்தோசமே இல்ல.போட்டோ எடுக்கும் போதெல்லாம் உண்ண விட்டுவிட்டு Vவிலகியே போனாங்க.அதான் ஏதாவது பிரச்சனையா இருக்குமோன்னோ கேட்டேன்.உனக்கு ஒன்னும் சொல்லி தெரிய வேண்டியது இல்லன்னா.மைனிகிட்ட பேசி எதுவா இருந்தாலும் சமாதானபடுதுன்னான்னு சொன்னான் மகேஷ்.

டேய் எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல.என்கிட்ட கேட்ட மாதிரி தேவை இல்லாம வீட்ல யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்காதஸ்.சரி நேரம் ஆகிவிட்டது.டோரை லாக் பண்ணிட்டு வா.நான் கிளம்புறேன்னு சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றான் கார்த்திக்.

வீட்டில் கார்த்திக் வராததை கண்டு அத்தையுடன் இருந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள்.கார்த்திக் வந்தவுடன் யாரிடமும் ஒன்றும் பேசாமல் படுக்க சென்றான்.அவன் சாப்பிடாமல் செல்வதை கண்ட ராஜி அவனிடம் சென்று சாப்பிடலையான்னு கேட்டாள்.

அதற்கு அவன் ஒன்றும் சொல்லாமல் ட்ரெஸ் மாற்றிவிட்டு போர்வை எடுத்து மூடிக்கொண்டு படுத்துவிட்டான்.அவனிடம் ட்ரிங்க்ஸ் வாடை வருவதை கண்ட ராஜி ஒன்றும் சொல்லாமல் கிச்சன் சென்று சாப்பாடை மூடிவைத்துவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச்சென்றாள்.

மறுநாள் பொழுது விடிந்ததுவிடிந்தது.லேட்டாக எழுந்த கார்த்திக்கிற்கு தலைவலி கடுமையாக இருந்தது.சூடாக டீ குடித்தாள் நல்லா இருக்கும்னு நினைத்தான் கார்த்திக்.எழுந்து பிரெஷ் ஆகிவிட்டு முகத்தை துடைத்துவிட்டு வரும்போது கைகளை கட்டிக்கொண்டு எதிரில் நின்று கொண்டிருந்தாள் ராஜி.அவளுக்கு அருகில் டீபாயில் ஆவி பறக்க டீ இருந்தது.

கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருக்க, கார்த்திக் இப்போது எப்படி அவளை சமாளிக்க.அடபாவிகளா உங்களுக்கு என்னடா பாவம் பண்ணேன்.என்னத்தையோ கலந்துகொடுத்து இவ வேற கண்டுபிடிச்சிட்டாலே.ஆமா அவங்கள சொல்லி எதுக்கு.நீதானே நேத்து குடிச்ச இப்ப அனுபவி.சரி எதுவா இரு இருந்தாலும் சமாளிப்போம்னு மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவளை கடந்து சென்று டீ கப்பை எடுத்து உறிஞ்ச தொடங்கினான்.

அதை பார்த்த ராஜி குறும்பாக சிரித்துக்கொண்டு அவனை நோக்கி ம்ம்க்கும் என்று இருமினாள்.அதை கேட்ட கார்த்திக் அவளை பார்க்க நேத்து ஓவர் குடியோ.செம ஹாங்கோவேர் போல.மெதுவா மெதுவா குடின்னு சொன்னாள் ராஜி.
சிறிதுநேரம் கழித்து பீரா,ஹாட்டான்னு கேட்டாள் ராஜி.இந்த முறை அவனுக்கு புரை ஏறிவிட்டது.அவன் இருமிக்கொண்டிருக்க அவன் தலையில் தட்டிவிட்டாள் ராஜி.அவன் முழுவதுமாக குடித்து முடித்த பின்.ஒரு நிமிஷம்.நீ குடி இல்ல.குடிக்காம போ.எனக்கு அதை பற்றி கவலை இல்ல.ஆனால் குடிச்சிட்டு இந்த ரூமுக்குள்ள வரக்கூடாது.அப்படியே தூங்கணும்னா ரூமை விட்டு வெளியில் படுத்துக்கோ.புரியுதான்னு சொன்னாள் ராஜி.

அவன் பதில் பேசாமல் இவளிடம் தப்பித்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே வெளியேறினான்.பின் அவன் அம்மாவிடம் வந்து அம்மா இன்னைக்கு சிக்கென் வாங்கிட்டு வரவா.ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டுன்னு சொன்னான் கார்த்திக். நல்
நானே சொல்லணும்னு நினைச்சேன்.நீயே சொல்லிட்ட.வீட்டுக்கு வந்த பொண்ணும் ஒரே காய்கறியாதான் சாப்பிடுது அதனால வாங்கிட்டு வாப்பான்னு சொன்னால் சாந்தா.

பின் சிக்கென் வாங்க அவன் கடைக்கு சென்றான்.அத்தையிடம் சென்ற ராஜி அத்தை எனக்கு நான் வெஜ்லாம் செய்ய தெரியாது அத்தைன்னு சொன்னாள்.பரவல்லம்மா.நான் சொல்லி தரேன் நீ கூட இருந்து கத்துக்கோனு சொன்னாள் சாந்தா.

அன்று ராஜியின் கைமணத்தில் சாப்பாடு நன்றாக வந்திருக்க ஒருபிடி பிடித்தான் கார்த்திக்.அம்மாவிடம் சென்று ம்மா சாப்பாடு சூப்பர்.செஞ்ச கைக்கு மோதிரம் போடணும்னு சொன்னான் கார்த்திக்.அப்படினா உன் பொண்டாட்டிக்கு போடு.அவதான் இன்னைக்கு என்கிட்ட கேட்டு செஞ்சான்னு சொன்னாள் சாந்தா.

அவன் ராஜியை பார்க்க அவள் சாந்தாவை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்.அப்போதுதான் அவன் ஒன்றை கவனித்தான்.அவளுக்கு கல்யாணத்தன்று அவள் அம்மாவிடம் சீதனம் ஒன்றும் வேண்டாம் என்றும் நகை போடவேண்டாம் என்றும் சொல்லி இருந்தான்.அவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிப்போட்டு அழகு பார்ப்பேன்.நான் சம்பாதிச்ச காசுல அவளுக்கு நகை வாங்கித்தரணும்னு ஆசைப்படறேன் அதனால வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருந்தான் கார்த்திக்.

அதற்கு பின் அதை மறந்திருந்த கார்த்திக்க்கு இப்போது தான் சொன்னது நியாபகம் வந்தது.சரிம்மா அவளும் நகை இல்லாம தான் இருக்கா.அதனால நாளைக்கு எல்லோரும் நகை கடைக்கு போறோம்.அவளுக்கு என்ன பிடிச்சிருக்கோ வாங்கிக்க சொல்லுங்கன்னு சொன்னான் கார்த்திக்.

சரிப்பா.கேட்டுக்கிட்டியம்மா.போகணுமாம் என்று கிண்டல் செய்தாள் சாந்தா.மறுநாள் கார்த்திக்கும் ராஜியும் நகை வாங்க காரில் சென்றனர்.போகும் வழியில் ராஜியின் தங்கை சக்தியையும் கூட்டி சென்றனர்.நகை கடைக்கு சென்ற பின் நகைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு நகைகளையும் ராஜிக்கு கழுத்தில் வைத்து பார்க்க எல்லாமே அவளுக்கு அழகாக இருந்தது.பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப நகைகளை எடுத்து வைக்க சொல்லிவிட்டு கார்த்திக் மோதிரம் பார்க்க சென்றான்.அப்போது ஒரு செக்ஷனில் பென்டென் ஒரு செயினுடன் இருந்தது.அதை பார்த்த கார்த்திக் சேல்ஸ்மேனிடம் சென்று அதை வாங்கி பார்த்தான்.பிளாட்டினத்தால் மயில் இறகு போன்று அழகாக டிசைன் செய்யபட்டு தங்கசெயினில் மாட்டப்பட்டு இருந்தது.அதை பார்த்ததும் அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது.

அதை ராஜி அணிந்திருப்பது போல கற்பனை செய்து பார்த்தான்.லூஸ் ஹேர் விட்டு பச்சை கலர் சேலை கட்டி அந்த பென்டென் அணிந்து நெற்றியில் சிறிய போட்டு ஒன்று வைத்து,அவனை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் ராஜி.திடீரென கார்த்திக்.கார்த்திக் என்று அவனை பின்னால் இருந்து கூப்பிட நினைவுக்கு வந்தான் கார்த்திக்.ஹாம் சொல்லு சொல்லு என்று அவன் தினற நாங்க ரெண்டு டிசைன் பாத்திருக்கோம்நீ வந்து எது நல்லா இருக்குன்னு சொல்லுன்னு சொன்னால் ராஜி.

ரெண்டுமே பில் போட சொல்லுங்க.நான் இப்ப வந்துடுறேன்னு சொன்னான் கார்த்திக்.அவர்கள் போன பின் மறைத்து வந்திருந்த பெண்டெனை கொண்டு சென்று பில் போட்டு வாங்கினான் கார்த்திக்.

பின் ராஜிக்கு இரண்டு செட் வளையல்,சக்திக்கு மோதிரம் ஒன்று பார்த்து அதையும் பில் போட்டு வாங்கினான்.அதை அவர்களுக்கு தெரியாமல் காரில் கொண்டு வைத்தான்.பின் அவர்கள் செலெக்ட் செய்த நெக்லஸையும் வாங்கிக்கொண்டு செல்ல மதியம் ஆகி இருந்தது.
ரெஸ்டாரண்டிற்கு சென்று சாப்பிட சென்றனர்.அப்போது என்ன அத்தான்.பொண்டாட்டிக்கு நகை எல்லாம் போட்டு அழகு பாக்குறீங்க.பாத்து ரொம்ப நகை போட்டு கழுத்து சுளுக்கிக்க போகுது என்று சொன்னால் சக்தி.ஹேய் என்ன எம்புருஷண கிண்டல் பண்றியா.எம்புருஷன் எனக்கு வாங்கித்தராறு.உனக்கு என்னடி.வாலுன்னு சொன்னால் ராஜி.

இங்க பாருடா புருஷன சொன்னா பொண்டாட்டிக்கு கோவம் வரத.இப்படி தெரிஞ்சுருந்தா நானே உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன் அத்தான்.இட்ஸ் டூ லேட்.எப்படியோ நல்லா இருங்க என்று சொன்னால் சக்தி.இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்ல.இப்பவும் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி தான்.உங்க அக்காவுக்கு ஓகேவான்னு கேளு என்றான் கார்த்திக்.

பாத்தியாக்கா.உன் புருஷன் என்ன சைட் அடிக்கிறத.பட் நான் அப்படிலாம் பண்ண மாட்டேன்க்கா.போ அத்தான் எங்க அக்காவுக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன் என்று சொன்னால் சக்தி.

அடி பாவி இப்படி பல்டி அடிச்சிட்டியேடி.ஹேய் நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்மா.இவ நம்ம ரெண்டு பெருக்கும் சண்டை இழுத்து விடுறா ராஜிnன்னு சொன்னான் கார்த்திக்.அவனை முறைத்து கொண்டிருந்த ராஜி ஹேய் வாலு நல்லா கோத்துவிடுரடி.ஆனால் என்புருஷண பத்தி எனக்கு நல்லா தெரியும்.பேசாம சாப்பிடுன்னு சொன்னால் ராஜி.

அய்யோன் என்ன அக்கா நீ.கோவத்துல அத்தானை திட்டுவேன்னு பார்த்த இப்படி புஸ்ஸுன்னு ஆக்கிட்டியே நீ என்றாள் சக்தி.பின் மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.கைகழுவி விட்டு டேபிளில் இருந்த சக்தியை கண்களை மூட சொன்னான் கார்த்திக்.

என்ன பண்ற கார்த்திக்.ஏன் அவளை என்று ராஜி சொல்லி முடிக்கும் முன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.பேசாமபேசாம கண்ணை மட்டும் மூடுங்க ரெண்டு பேரும்ன்னு ராஜியிடம் சொன்னான் கார்த்திக்.பி ராஜியின் கைகளை பிடித்து அவளுக்கு வாங்கி வைத்திருந்த வளையல்களை அவளுக்கு மாட்டிவிட்டான்.ராஜி கண்களை திறக்க முயல ஷ்ஷ்ஷ் கண்ணை திறக்க சொன்னான் கார்த்திக்.பின் மோதிரத்தை எடுத்து சக்தி விரலில் மாட்டிவிட்டான்.

பின் இருவரும் கண்களை திறந்து பார்க்க இருவருக்கும் அதை பார்த்து இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அத்தான் எனக்கு எதுக்கு மோதிரம் எல்லாம்.அக்காக்கு மட்டும் போதாதா.அம்மாக்கு தெரிஞ்சா திட்டும்.அதனால வேண்டாம் அத்தான்ஏ என்றாள் சக்தி.

ஒய் அதெல்லாம் ஒன்னும் சொல்லாது.என் தங்கச்சிக்கு நான் எடுத்து கொடுக்குறேன்ல.அதே மாதிரிதான் இதுவும்.அப்படி இல்லனா உங்க அக்கா எடுத்து கொடுத்ததா சொல்லு ஒன்னும் சொல்லாதுன்னு சொன்னான் கார்த்திக்.இல்ல அத்தான் அது வந்து என்று சக்தி இழுக்க ஹேய் அம்மான் ஒன்னும் சொல்லாது அப்படியே எதுவும் சொன்னாலும் நான் அம்மாகிட்ட பேசிக்கிடுறேன்னு சொன்னால் ராஜி.

எதுக்குங்க இப்ப வளையல் எல்லாம்.காச போட்டு வேஸ்டா செலவு பண்றிங்கன்னு கார்த்திக்கிடம் kடீ
கேட்டாள் ராஜி.ஹேய் என்னப்பா.என் பொண்டாட்டிக்கு நான் செலவு செய்றேன்.இதுல என்ன வேஸ்டா போகுது.நீ பீல் பண்ணிக்காத.சரி ஐஸ்கிரீம் சாப்பிடலாமா.என்று சொல்லி விட்டு பேரர் மூணு ஐஸ் கிரீம் கொடுங்கன்னு ஆர்டர் செய்தான் கார்த்திக்

அவர்கள் இருவரும் நடிப்பது தெரியாமல் அக்காவும்.அத்தானும் ரொம்ப சந்தோசமாக இருப்பதை கண்டு சந்தோஷப்பட்டாள் ஷக்தி.ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு ஷக்தி கிலம்பிவிட அவர்கள் இருவரும் காரில் வீட்டிற்கு புறப்பட்டனர்.

 காரில் போகும்போது தேங்ஸ் கார்த்திக்.எனக்கு கூட தோணல.நீ பண்ணிருக்க என்றாள் ராஜி.அவன் எதுக்கு என்பது போல ராஜியை பார்க்க எல்லாத்துக்கும்.சக்திக்கு ரிங் வாங்கி கொடுத்ததுக்கு.அப்பறம் அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி நடிச்சதுக்கும் என்றாள் ராஜி.


அதை கேட்டு சிரித்த கார்த்திக் சாரி என்றான்.அதற்கு ஏன் என்று ராஜி கேட்க இல்ல உன் பெர்மிஷன் இல்லாம உன் கைய புடிச்சி வளையல் போட்டு விட்டதுக்கு.உனக்கு வேற ஆசிட் பட்ட மாதிரி இருந்துருக்கும்.அதனால தான் சாரி சொன்னேன்.அப்புறம் நான் யாரையும் இம்ப்ரெஸ் பண்றதுக்காக இதை பண்ணல.அவளை நிஜமாவே என் தங்கச்சியாத்தான் நினைக்குறேன்னு சொன்னான் கார்த்திக்.

சுருக்கென வந்த அவனது வார்த்தையை கேட்ட ராஜி ஒருநிமிடம் அதிர்ந்து போனாள்.நாம் அன்று அவனிடம் பேசிய வார்த்தைகள் அவனை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை அப்போது தான் உணர்ந்தாள்.

வீட்டிற்கு செல்லும் வரை அவர்கள் இருவரும் அதோட பேசிகொள்ளவில்லை.பின்பு வீட்டிற்கு சென்ற பின் சாந்தாவிடம் நகைகளை காட்டி விட்டு ரூமிற்கு சென்று ட்ரெஸ் மாற்ற செல்லும் போது கண்ணாடி முன்பு ஒரு பார்ஸல் இருந்தது.அதை எடுத்து பார்த்த போது பார்ஸலின் மேல் சாரி.இட்ஸ் பார் யுவர் ஆஸம் குக்கிங்.என்று எழுதி இருந்தது.

அதை பார்த்துவிட்டு கார்த்திக்கை தேட அவன் பால்கணியில் நின்று கொண்டிருந்தான்.ஏற்கனவே கோவத்தில் இருந்த ராஜி அதை தூக்கி பெட்டில் வீசினாள்.

அவனிடம் பேசாமல் ரூம் கதவை சாத்திவிட்டு ட்ரெஸ் மாற்றிக்கொண்டால்.அவள் சென்றபின் தான் வாங்கி வைத்திருந்த பென்டென் செயின் கீழே கிடப்பதை பார்த்த கார்த்திக் அதை எடுத்து மீண்டும் கண்ணாடி முன்பு வைத்துவிட்டான்.அவர்கள் இருவருக்கும் இடையே அமைதியாக ஒரு பணிப்போர் ஆரம்பம் ஆனது.

இப்படியாக ஒருவாரம் சென்றிருக்க சாந்தாவும்.அவளது கணவனும் 20 நாட்களுக்கு காசி வரை சென்று வர முடிவெடுத்திருந்தனர்.கார்திக்த்தான் ட்ராவல்ஸ் மூலம் ஏற்பாடு செய்திருந்தான்.அன்று அவனுடைய அப்பாவும்,அம்மாவும் காலை கிளம்ப கார்த்திக்கும் ராஜியும் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

அவர்கள் சென்ற பின் ராஜிக்கு பெரும் சோகமாக இருந்தது.கார்த்திக்கோட மூன்று வாரம் தனியாக இருக்கணும்.என்ன சண்டை வருமோ,பிரச்சனை வருமோனு நினைத்துக்கொண்டாள்.சரி எப்படியும் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் வீட்டில் இருப்பான்.மற்ற நாட்களில் இரவு மட்டும் தான்.சமாளித்து கொள்ளலாம் என்று சமாதானம் அடைந்தாள்.

இந்த ஒருவாரத்தில் அவள் அந்த செயினை தொடவே இல்லை.அது கண்ணாடி முன்பு கார்த்திக் வைத்திருந்ததை போலவே இருந்தது.தினமும் கார்த்திக் தலை சீவும் போதெல்லாம் அதை பார்ப்பான்.அவனும் அதை தொடமாட்டான்.

இப்படியாக இரண்டு நாட்கள் சென்றிருக்க அன்று காலைர் கார்த்திக் எழுந்திருக்கும் போது ராஜி இன்னும் தூங்கி கொண்டிருந்தாள்.அதை பார்த்த கார்த்திக் இவள் ஏன் இன்னும் எந்திருக்கவில்லைன்னு யோசித்தான்.சரி அப்பா,அம்மா வேற ஊர்ல இல்லை.அவுங்க இருந்தா ஏதாவது தப்பா நினைப்பாங்கன்னு சீக்கிரம் எந்திச்சிருப்பா.இப்ப அவுங்க இல்லாததனால தூங்கிட்டு இருக்கா.

திமிறுல உன்னை அடிச்சிக்க எவளாலும் முடியாதுடி குண்டாத்தி.தூங்குறத பாரு.குழந்தை தூங்குறமாதிரியே விரலை மடக்கி வச்சிருக்கா.சரி நம்ம அவளை சைட் அடிக்கிறத பாத்து அதுக்கு வேற ஏழரைய கூட்டினாலும் கூட்டிடுவா.எந்திருச்சு போடா கார்த்திக் என்று அவன் உள்மனம் சொல்ல வழக்கம் போல அவன்அவ பிரெஷ் ஆகிவிட்டு பேப்பர் படிக்க சென்றான்.

பால் பாக்கெட் எடுத்து காபி கலந்து அவனுக்கு ஒரு கப்பும்,ராஜிக்கு ஒரு கப்பும் எடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்றான்.ரூமில் ராஜி இன்னும் தூங்கி கொண்டிருக்க காபியை மூடி டேபிள் மீது வைத்துவிட்டு அவன் காபியை உறிஞ்ச தொடங்கினான்.

ஆஃபீஸிற்கு வேறு போக வேண்டி இருந்ததால் சாப்பிட ஏதாவது டிபன் செய்ய அவளை எழுப்பலாமா என்று யோசித்தான் கார்த்திக்.சிறிது நேர யோசனைக்கு பிறகு தூங்குகிறவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று எண்ணி அவனே களத்தில் இறங்கினான்.

அவன் வெளி இடங்களில் வேலை பார்த்த காலத்தில் சமையல் செய்து பழகியதால் நன்றாக சமைக்கவும் செய்வான்.கிட்சன் சென்று பிரிட்ஜில் மாவு எடுத்து இட்லி குக்கரில் இட்லி ஊற்றி அடுப்பில் வைத்தான்.பின் தக்காளி,வெங்காயம் நறுக்கி வைத்து விட்டு அதை மிக்ஸியில் அரைத்து சட்னி தயார் செய்தான்.

பின் தேங்காய் எடுத்து நறுக்கி,வேர்க்கடலை சேர்த்து அரைத்து தேங்காய் சட்னி தயார் செய்தான்.அதற்குள் இட்லி ரெடி ஆகி இருக்க அதை எடுத்து ஹாட்பாக்ஸில் வைத்து விட்டு குளிக்க சென்றான்.குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு ஆபிஸிற்கு கிளம்பினான்.

அப்போது ஒரு பேப்பரில் குட் மார்னிங்.பக்கத்துல கப்ல காபி இருக்கு.குடிச்சுக்கோ.அப்புறம் சாப்பாடு செய்ய வேண்டாம்.நான் சாப்பிட்டேன்.ஹாட் பாக்ஸில் உனக்கு எடுத்து வச்சிருக்கேன்.மறந்துடாம சாப்பிடு.என்மேல உள்ள கோவத்தை சாப்பாடு மேல காட்டாத.பாய் என்று எழுதி கண்ணாடி முன் வைத்து விட்டு கிளம்பி சென்றான்.

அவன் சென்ற 15 நிமிடம் கழித்து எழுந்த ராஜிக்கு கண் எல்லாம் ஒரே எரிச்சலாக இருந்தது.உடம்பு அனலாக கொதித்தது.எழுந்தவள் மணியை பார்க்க 9.15 ஆகி இருந்தது.ச்ச கார்த்திக்கு சாப்பாடு வேற செஞ்சு கொடுக்களையே என்று சொல்லிக்கொண்டு எழுந்தவள் அப்படியே தலையை பிடித்து கொண்டு உக்கார்ந்து கொண்டாள்.தலைவலி வேறு பயங்கரமாக இருந்தது.

சரி ஒரு காபி போட்டு குடிப்போம் என்று நினைத்துக்கொண்டு பிரெஷ் ஆகிவிட்டு கண்ணாடி பார்த்து முடியை கொண்டை போட்டாள் ராஜி.அப்போது அவன் கொடுத்த செயின் அப்படியே இருந்தது.அருகில் இருந்த பேப்பரை எடுத்து படித்து பார்த்தாள்.

5கிம் கூட சென்றிருக்காத கார்த்திக் மனம் முழுவதும் ராஜியையே நினைத்து கொண்டிருந்தது.இன்று ஏன் அவள் எழுந்திருக்கவில்லை.அவள் முகத்தை பார்த்தபோது சோர்வாக இருந்தது.ஒரு வேலை உடம்பு சரி இல்லாம இருக்குமோ.அம்மா வேற ஊர்ல இல்ல.கண்டிப்பா அப்படி இருந்தா நம்மகிட்ட சொல்லமாட்டா.என்ன பண்ணலாம் என்று யோசித்தான்.இன்னைக்கு ஆபிஸ் லீவ் போட வேண்டியது தான்.இல்லன்னா அவளை பற்றிஅ நினைத்துக்கொண்டு வேலை செய்ய முடியாது என்று முடிவெடுத்து ஆபிஸிற்கு போன் செய்து இன்பார்ம் செய்தான்.

அவன் எழுதியதை பார்த்தவள் இவன் எப்படி சாப்பாடு செய்தான் என்று நினைத்துக்கொண்டு காபியை எடுத்து குடித்தாள்.காபி வழக்கம் போல இல்லாமல் கார்த்திக் கலந்தது சற்று வித்யாசமாக இருந்தது அவளுக்கு.அதன் சுவை அவளுக்கு பிடித்திருந்தது.

கீழே சென்று சாப்பாடை பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.இட்லி சுட்டு ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்திருந்தான்.ரெண்டு வகை சட்னி செய்து வைத்திருந்தான்.இவனுக்கு எப்படி இந்த வேலை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான்.காபி குடிச்சா கப்பை கூட எடுத்து தரமாட்டான்.இவ்ளோ பொறுமையா செஞ்சிருக்கான் என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென வயிற்றை குமட்டிக்கொண்டு வாமிட் வந்தது.

கைகளால் வாயை பொத்திக்கொண்டு வாஷ் பேசின் சென்று வாமிட் எடுத்தாள் ராஜி.சிறிது நேரத்தில் களைப்படைந்த ராஜிக்கு டாக்டரிடம் சென்றால் நல்லா இருக்கும் என்று இருந்தது.

வரும் வழியில் பாமிலி டாக்டரை பார்த்து அவரை அழைத்து வந்தான் கார்த்திக்.
யாரை துணைக்கு கூப்பிட என்று யோசித்து கொண்டிருந்தாள்.எக்காரணத்தை கொண்டும் கார்த்திக்கிடம் உதவி கேட்க கூடாது என்று உறுதியாக இருந்தாள் ராஜி.உடல் சோர்வடையும் போது நமது மனமும் சோர்வடையும்.அந்த நேரம் உடல் சொல்வதை மனம் கேட்கும்.பேசாமல் கார்த்திகை கூப்பிட முடிவெடுத்தால்.அதற்கு முன் மகேஷிற்கு கால் செய்து கார்த்திக்கிடம் விஷயத்தை சொல்ல சொல்லிவிடலாம்.நாம் பேச வேண்டாம் என்று நினைத்தாள்.

இப்படியாக யோசித்து கொண்டிருந்தவளுக்கு தன்னுடைய இயலாமையை நினைத்து அழுகையாக வந்தது.அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்க அங்கு டோரை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அங்கு கார்த்திக் டாக்டருடன் நின்று கொண்டிருந்தான்.வீட்டில் சோபாவில் ராஜி இருக்க டாக்டர் அவளை செக் செய்துவிட்டு காய்ச்சல் மட்டும்தான்.பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல.டேப்லெட் சாப்பிட்ட சரி ஆகிடும்.நான் ரெண்டு நாளைக்கு டேப்லெட் தரேன் அதை கொடுங்க.கேக்கலான ஹொஸ்பிடல் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னார்.

ராஜியை பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக் உடம்பு சரி இல்லாததை கூட என்கிட்ட சொல்ல மாட்டியா.இப்ப உண்ண எப்படி கோத்து விடுறேன் பாருன்னு அவளை பார்த்து தலை aஆட்டிக்கொண்டு டாக்டர் வேணும்னா ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கிடலாமா.எனக்கு என்னமோ பயமா இருக்குன்னு சொன்னான்.

உடனே பதறிய ராஜி அய்யயோ அதெல்லாம் வேண்டாம் டாக்டர்.டேப்லெட் மட்டும் போதும்.ப்ளீஸ்ன்னு சொன்னால் ராஜி.சிறு வயதில் இருந்தே இன்ஜெக்ஷன் என்றால் ராஜிக்கு பயம்.அதனாலே உடம்பு சரி இல்லை என்றால் ஊசி போடாமல் டேப்லெட் மூலமே குணப்படுத்தும் டாக்ட்டரிடம் செல்வாள்.கார்த்திக்கை பார்த்து கோத்து விடுறியா.உன்னை என்ன பன்றேன் பாரு லூசு என்று அவளும் பதிலுக்கு தலை aஆட்டினாள் ராஜி.
என்னமா இதுக்கு போய் பயப்படற.சின்ன குழந்தையாட்டும்.உனக்கு உடம்பு சரி இல்லனா உன் ஹஸ்பேண்ட் வாக்கிங் போய்ட்டு திரும்ப வந்துட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்துருக்கான்.நீ என்னடான்னா சின்ன ஊசிக்கு போய் பயப்படுற.இப்போ ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கோ.கேக்கலன்னா அப்புறம் பாத்துக்கலாம்.கை காட்டுங்க என்று இன்ஜெக்ஷனை நீட்டினார்.

கை நீட்டி தலையை திருப்பி கொண்ட ராஜின் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.ஊசியை லேசாக வைக்கும் போதே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்றால் ராஜி.என்னமா இன்னும் போடவே இல்லை.அதுக்குள்ள இப்படி கத்துற.என்ன கார்த்திக் வீட்டம்மா பயந்த சுபாவம் போலன்னு கேட்டார் டாக்ட்டர்.

கார்த்திக் சிரித்து கொண்டு ராஜியை பார்க்க குழந்தை போல இருந்தாள்.ஊசிஓ போட்டு முடித்த பின் டாக்ட்டர் சென்று விட உனக்கு என்ன திமிரா.ஊசி எல்லாம் போட்டு விட சொல்ற.உனக்கு ஒரு நாள் இருக்கு பாருன்னு சொன்னாள் ராஜி.

டைனிங் டேபிளில் பிளேட்டில் மூன்று இட்லி வைத்து கொஞ்சம் சட்னி வைத்தான் கார்த்திக்.இவன் சாப்பாடு வைத்தால் சாப்பிட கூடாது.நாமே போட்டு சாப்பிட வேண்டியது தான் என்று ராஜி அதை கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

ஆனால் அவன் சாப்பாடு வைத்து 5 நிமிடம் ஆகியும் அவன் வராததை கண்டுவ கார்த்திக்கை பார்க்க அவன் சாப்பாடை காலி செய்து கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக