குட்டித் தோழி - பகுதி - 4

 என்னம்மா சொல்ற?ஏன் இந்த கல்யாணம் வேண்டாமாம்?” “பையன் எப்ப பாத்தாலும் வொர்க் ல இருக்கிறப்ப போன் பண்ணி மொக்கை போடறார்..சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறார்..எனக்கு பிடிக்கிலை, இந்த கல்யாணம் வேனாம்..நான் பண்ணிக்க மாட்டேன் ன்னு உன் தங்கச்சி அடம் பிடிக்கிறா.நாங்களும் எவ்வளவோ சமாதானம் செஞ்சு பார்த்தோம்.வேற மாப்பிள்ளை பாக்க சொல்றா…நீயே சொல்லு”

“நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் இப்படி சொன்னா எப்படிமா?அவளுக்கு என்ன திமிரா?…நான் அவ கிட்ட பேசி பாக்கிறேன்” போனை வைத்தேன்..
அடுத்து தங்கைக்கு போன் போட்டேன்…விஷயம் கேட்டதும் பிடிவாதமாய் மறுத்தாள்.


அவள் முடிவில் அழுத்தமாக இருந்தாள்..கார்ப்பரேட் கம்பனி கை கொள்ளா சம்பளம்…அவளை பேச வைக்கிறது…பெரு மூச்சு விட்டேன்
எனக்கு வசு சித்தி ஞாபகம் வந்தது…
என் அம்மாவின் ஒரே தங்கை வசுந்த்ரா நாங்கள் வசு சித்தி என்று கூப்பிடுவோம்….தாத்தா பாட்டி இறந்ததும் எங்கள் வீட்டில் அடைக்கலம் வந்து சேர்ந்தாள்..எனக்கும் என் தங்கைகளுக்கும் சாதம் ஊட்டி விடுவது கதை சொல்வது என சகலமும் எங்கள் சித்தி தான்..எனக்கு கூடதலாக என் சித்தியை பிடிக்கும் ..எல்லாரும் என்னை ரவி,குமாரு என கூப்பிடும் போது என் சித்தி மட்டும் என்னை பப்பு என கூப்பிடுவாள்..காரணம் கேட்டால் கொழுக் மொழுக் கென இருகிறதால் அப்படி கூப்பிடனும்னு போல இருக்கு என்று சொல்வாள்….
மருதாணி கைகள் தாவணி பாவாடை,தலை முடியை எப்பொழுதும் தாழ்ந்து சடை பின்னி அதில் ஒற்றை சரமாக முல்லைப் பூ வைத்துக் கொல்வாள்..அது வாடியதும் அவள் ஏற்கனவே கட்டி வைத்திருந்த மற்றொரு சரத்தை வைத்துக் கொள்வாள்…முகம் எப்பொழுதும் இரவு கூட பளிச் என்று வைத்திருப்பாள்..அது எனக்கு பிரியத்தை மேலும் கூட்டியது…அவள் மாலை நேரம் தவறாமல் கோவிலுக்கு செல்வாள்..அவளுடன் நான்தான் கூட செல்வேன்..தரிசனம் முடிந்ததும் தெப்பக் குளத்தில் உட்காந்து நிறைய பேசுவாள்..அவளுக்கென்று இருக்கும் கனவுகளை ஆசை ஆசையாக சொல்வாள்…மிக ரசனையாக பேசுவாள்..அவள் பேச்சை கேட்கவே ஆசையாக இருக்கும்…
அவளுக்கு என் அப்பாவை கண்டாலே பயம்..என் அப்பா வீட்ட்ற்கு வர இரவு பத்தாகி விடும்..நாங்கள் சாப்பிடும் நேரத்தில்,அந்த நிமிடங்களை என் சித்தி முழுவதும் ஆட்கொண்டு விடுவாள்..அக்கம் பக்கத்து இருப்பவர்களை போலவே அவர்கள் பேசுவது போல் நடப்பது போல் அப்படியே பாவனை செய்து காண்பிப்பாள்.எங்களுக்கு சிரித்து புரை ஏறிவிடும்….என் அப்பா வந்து விட்டால் என் சித்தி இருக்குமிடம் தெரியாது ..சத்தமில்லாமல்தான் பேசுவாள்….
சாப்பிட பின் அவரவர் தூங்க சென்றுவிடுவார்கள்.. நானும் என் சித்தி மட்டும் மொட்டை மாடிக்கு செல்வோம்..அவளுக்கு ட்ரான்சிஸ்டரில் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் பாட்டு கேக்க ரொம்ப பிடிக்கும்..அவளை போல வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்ந்ததை நான் இது வரை பார்த்ததில்லை..மென்மையாய் செடியிலிருந்து பூக்களை பறிப்பாள்..அவசரம் என்பதே கிடையாது…பாட்டு பாடிக் கொண்டே சமையல் செய்வாள்…நாசூக்காய் எப்படி சாப்பிடுவது என நான் அவளிடம்தான் கற்றுக் கொண்டேன்…..அவளும் அம்மா போலவே எல்லா வேலைகளும் செய்வாள் சமையல் செய்வதிலிருந்து பாத்திரம் விலக்கி வீடு பெருக்கி துடைத்து கொல்லைப்புறம் சுத்தம் செய்து துணிகளை துவைத்து என சகலமும் செய்வாள் கொஞ்சமும் கூட முகத்தில் சலிப்பு தெரிந்ததில்லை…
என் அம்மாவிடம் சொல்வேன்
“ஏம்மா சித்தியும் தானே வேலை செய்யறா..உன்னை விட அதிகமாவே செய்யறா..ஆனா நீ மட்டும் ஏம்மா சிடுசிடு ன்னு இருக்கிற”
“ம்ம்ம்..உன் சித்திக்கு இன்னும் கல்யாணம் ஆகல அதான் அவளுக்கு எல்லாமே பதுவிசாதான் இருக்கும்”
ஒரு வரியில் முடித்துவிடுவாள்
ஆனால் என் சித்தி திருமணம் ஆனாலும் அப்படித்தான் இருப்பாள் ரசனை என்பது பிறவியிலேயே இருக்கும்.எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ரசித்து வாழ்தல் என்பது யோகி நிலை..அந்த தன்மை என் சித்தியிடம் இருக்கிறது…அது எந்த காலத்திலும் சூழ் நிலையால் மாறாது என திடமாக நம்பினேன்..அவளுக்கு திருமணம் ஆனதும் எப்படி வாழ்கிறாள் என பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது…ஆனால் திருமணம் அவள் வாழ்க்கையில் கைகூடாது என அப்பொழுது எனக்கு தெரிந்திருக்கவில்லை…
எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் மேலே ஒரு அறையில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்தனர்…அதில் ஒருவன் என் சித்தியை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தாக எனக்கு பட்டது…
தெப்பக் குளத்தில் இருக்கும் பொழுது ஒரு நாள்..
“சித்தி நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கிற பசங்கல்ல ஒருத்தன் அடிக்கடி உன்னையே பாக்கிறான் தெரியுமா?
சித்தி அவசரமாக மறுத்தாள்
“ஏய் என்ன நீ இப்படி எல்லாம் கேக்கற…வீட்டுல தெரிஞ்சா நம்ம ரெண்டு பேரையும் வெளிய விட மாட்டாங்க புரிஞ்சுதா?”
சித்தி சொன்னாலும் அவள் மனதிலும் அப்படி ஒரு சந்தேகம் இருந்தது
அவள் வெளியெ வரும் போதெல்லாம் அவன்
“பூ மாலையே தோள் சேர வா”
பாட்டை டேப்பில் வைப்பான்..
இரவு மொட்டை மாடிக்கு சித்தி வரும் போது
“கண்மணி நில்லு காதலை சொல்லு
காதல் கிளியே கோபமா”
பாடலும் ஒலிக்கும்…
அதற்காக சித்தி மொட்டை மாடி வருவதை தவிர்க்கவில்லை…
கோவிலுக்கு செல்லும்போது பின்னாடியே வருவான்
“சித்தி சொன்னேன்ல..அங்க பாரு நம்ம பின்னடியே வர்றான்”
“பேசாம வாடா பப்பூபூ” என் பெயரை இழுத்தபடி வெட்கம் கலந்து சொன்னாள்..
ஆனால் கோபத்தில் சொல்வது போல் காட்டிக்கொண்டாள்..
ஒரு நாள் நான் பள்ளி விட்டு வரும் நேரத்தில் அவன் கூப்பிட்டான்..இதை நான் எதிர் பார்த்ததுதான்..
“என்ன படிக்கிற?”
“சிக்ஸ்த் படிக்கிறேன்”
“அது யாரு உங்க அக்காவா?”
“இல்ல சித்தி ”
“பேரு என்ன?”
“ரவி குமார்”..நான் வேண்டுமென்ற என் பெயரை சொன்னேன்.
சரி உன் சித்தி பேரென்ன
சொல்ல மாட்டேன் என்று தலை ஆட்டியபடி வேகமாக வந்தேன்
வந்ததும் என் சித்தியிடம் ரகசியமா சொன்னேன்..அவள் முகம் அப்படி சிவந்து நான் பார்த்தே யில்லை..
என் சித்தி இப்படி இருந்தது எனக்கு பிடித்தது..அவளது ரசனை அவளது அழகு போல அவள் காதலிக்கவும் வேண்டும்..அந்த உணர்வையும் அவள் ரசிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்..
ஒரு நாள் கோவிலில் சித்தியிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான்..என்னைப் பார்த்தும் அவனிடம் விடைப் பெற்று என்னை நோக்கி வந்தாள்.
“சித்தி அவன் என்ன கேட்டான்”?
“ஒன்னுமில்லைடா”…சிரிப்போடு சொன்னாள்
“சொல்ல்லு சித்தி..சொல்லைனா நான் போய் அவங்கிட்டையே கேட்டிடுவேன்” எனக்கு தெரிந்து கொள்ள வேண்டுமென துடிப்பு..
என் பேரு கேட்டான்..சொன்னேன் பப்பு”
அவ்வளவுதானா..அவன் பேரு சொல்லி இருப்பானே
“பிரபு வாம்..” சிரித்தாள்.
அதன் பிறகு அவர்களின் சந்திப்பு தெப்பக்குளத்திலும் இரவு மொட்டை மாடியில் சைகை மொழியிலும் அவ்வப்போது என் மூலமாக கடித தொடர்பிலும் வளர்ந்து கொண்டிருந்தது..என் சித்தி அவன் பெயரை ரகசியமாக நோட்டில் எழுதிப் பார்த்து அதே வேகத்தில் அழித்தும் விடுவாள்..அதில் அவளுக்கு ஒரு சந்தோஷம்
“தூங்காத விழிகள் ரெண்டு-உன்
துணை தேடும் நெஞ்சம் ஒன்று”


அதன் பின் இந்த பாடலே அடிக்கடி அவன் டேப்பில் ஒழிக்க ஆரம்பித்தது..
வீட்டில் எல்லாரும் இருக்கும் நேரம் ரேடியோவில் இந்த பாடல் கேட்கும்போது நானும் என் சித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ரகசியமாக சிரித்துக் கொள்வோம்…
ஒரு நாள் எப்படியோ என் அம்மாவிற்கு விஷயம் தெரிந்து விட்டிருந்தது..என் சித்தியை காய்ச்சி வறுத்து எடுத்திருந்தாள்..என்னை வெயிலில் முட்டி போடச் செய்தாள்…இரு முட்டிகளும் வெயில் பழுத்த போதிலும் என் சித்தியை என் அம்மா திட்டியது என்னால் தாங்கிக்க இயலவில்லை…என் சித்தி அழுது பார்த்ததில்லை…பெற்ற அம்மா அப்பா இல்லாத போதிலும் ஒரு நாளும் சுய பச்சாதாபம் கொண்டதில்லை என் சித்தி…ஆனால் இப்பொழுது?…..காதல் எல்லாவற்றையும் செய்யுமா?
என் சித்தியை காதலை மறந்துவிடும்படி என் அம்மா அழுதாள்..மீறினால் தான் தற்கொலை செய்வதாகவும் மிரட்டினாள்
என் சித்தி அமைதி ஆனாள்..அதன் பிறகு அவள் கோவில் செல்வதும் மொட்டை மாடி செல்வதும் தவிர்த்தாள்..அவளின் இயல்பற்ற வாழ்க்க்கை பிடிக்கவில்லை எனக்கு..
அவளுக்கு மாப்பிளை பார்ப்பதில் அம்மா துரிதமாக செயல்பட்டாள்..ஒரு நாள் சித்தி என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து பிரபுவிடம் கொடுக்க சொன்னாள்..எனக்கு அதில் என்ன எழுதி இருக்கும் என தெரியும்
நான் அவளுக்கு தெரியாமல் கிழித்துப் போட்டேன்..
பிரபுவிடமும் வீட்டில் நடப்பதை கூறினேன்..எப்படியாவது இவர்கள் ரெண்டு பேரையும் சேர்த்துவிட வேண்டும் என உறுதி கொண்டு எப்படி செய்யலாம் என கனவு கண்டேன்..
ஒரு நாள் சித்தியிடம்
“சித்தி பிரபுவுக்கு இன்னையோட எக்ஸாம் முடிஞ்சுதாம்.. ..இன்னைக்கு அவர் சாயங்கலம் உன்னை கோவிலுக்கு கண்டிப்பா வரச் சொன்னார்…உங்கிட்ட பேசனுமாம்..ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடுங்க சித்தி”
“சப்ப்”
என் கன்னத்தில் அறைந்திருந்தாள்
புரியாம பேசாதடா ரவி…நான் போயிடுவேன்..அப்புறம் உன் அம்மா நிலைமையை யோசிச்சியா?மாமா பயங்கர கோபக்காரர்.அவருக்கு விஷயம் தெரிஞ்சா என்ன நடக்கும்னு நினைச்சுப் பாத்தியா….அக்கா என்னை கூட்டி வந்து இங்க வச்சுகிட்டதுக்கு நான் அவன் கூட ஓடிப் போனா அது துரோகம் ஆயிடாதா …அவளுக்கு செய்யற கைமாறு இப்படிதானாசொல்லு “..
ரவி என்று அவள் என்னை சொன்னதில் அந்நியப்பட்டு போனேன்..பின்ன எதுக்கு அவனை காதலிக்கனும்..இதெல்லாம் காதலிக்கும்போது தெரியலையா..உலகமகா பொது கேள்வி ஆகிப் போன இந்த கேள்வி எனக்கும் தோன்றியது..
அதன் பிறகு அவன் அடிக்கடி தென்பட்டான்.அவன் என்னை கூப்பிடும்போது சித்தி அடித்த அறை ஞாபகத்துக்கு வரும் நிக்காமலேயே ஓடி வந்துவிடுவேன்..பின் ஒரு நாள் காணாமல் போனான்..என் சித்தி வெகு சுலபத்தில் தன் இயல்புக்கு வந்தாள்.. நிஜமாகவே இயல்புக்கு வந்தாளா இல்லை அப்படி நடிக்கிறாளா என புரியவில்லை..பெண்களை புரிந்து கொள்வதில் நிஜமாகவே கஷ்டம்தான்..

என் சித்திக்கு நிறைய மாப்பிள்ளை பார்த்தாயிற்று..எதுவும் கூடவில்லை…வரதட்சணையால் தட்டிக் கொண்டே போனது….வயது ஏற ஏற வரதட்சணையும் அதிகமாயிற்று..எங்களின் பள்ளி செலவுகள் வீட்டு செலவுகள் இதில் என் சித்தியின் கல்யாணத்திற்கு எதுவுமே பண்ண முடியாத இயலாமையில் என் அப்பா இருந்தார்….என் சித்திக்கு மாப்பிள்ளை பார்த்தல் படலம் மெள்ள குறைந்து அடியோடு நின்றுவிட்டிருந்த நேரத்தில் நாங்களும் வளர்ந்து விட்டிருந்தோம்..எல்லாரும் படித்து சென்னையில் வேலையில் சேர்ந்து இங்கே வந்தோம்..என் சித்தி மட்டும் எங்கள் ஊரிலேயே எங்கள் வீட்டில் தங்கி விட்டிருந்தாள்..ஏறக்குறைய நாங்கள் எவ்வளவு சுய நலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என புரிந்தது…என் அம்மாவிற்கு இப்பொழுதும் என் சித்தியின் முகத்தை பார்த்து பேச முடியாது….மனிதனின் எல்லா நல்ல, கெட்ட குணங்களுடன் கூடவே குற்ற உணர்வையும் சேர்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தாள்…
என் குடும்பத்தினர் சித்தியை பார்த்து வருடங்கள் ஆயிற்று..இங்கே வேலைப் பளு குடும்பம் என ஆன பிறகு ஊருக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து போனது..ஆனால் நான் மட்டும் ஒவ்வொரு வருடமும் போய் சித்தியை பார்த்துவிடுவேன்…
சித்தியை போய் பார்க்க வேண்டுமென இருந்தது…வார இறுதியில் கிளம்பினேன்.
வீட்டை நெருங்கியதும்..மனதில் துக்கம் தானாகவே அடைத்தது…வழக்கம் போலவே எதிர் வீட்டு மாடி அறையை என் கண்கள் தானாக பார்த்தது..கதவு திறந்ததும் சித்திக்கு இன்ப அதிர்ச்சி
“பப்பூபூ என்னடா சொல்லாம கொள்லாம வந்து இருக்க..” கண்களில் கண்ணீர் தேங்கியது…அவளது வறண்ட கைகளால் அழுத்திப் பிடித்தாள்..
“சும்மாதான் சித்தி உன்ன பாக்கனும்னு இருந்துச்சு அதான் வந்தேன்”…
சுருக்கங்கள் என் சித்தியின் முகத்தில் மெல்ல வருகை புரிந்தது கண்கூடாக தெரிந்தது…
சூடாக டீயும் பக்கோடாவும் செய்து கொடுத்தாள்..மதியம் சாப்பிட்டு விட்டு என் தங்கையின் கல்யாணம் பற்றி கேட்டாள்..
பணம் சம்பாதிக்கும் மமதையில் இவன் இல்லைனா என்ன வெறொருவன் வராமலா போயிடுவான் என நினைக்கும் தங்கையின் எண்ணம்,கல்யாணமே நடக்காமல் முதிர்கன்னியாக இருக்கும் என் சித்திக்கு வலிக்கும் என அதைப் பற்றி பட்டும் படாமல் சொன்னேன்..அவளுக்குப் புரிந்தது..
சித்தி சாயங்காலம் கோவிலுக்கு போலாமா? பழைய பப்புவாக கேட்டேன்..அவளும் ஆர்வமாக தலை ஆட்டினாள்..
பழையபடி மாயம் ஏதாவது நடந்து அவளின் ஒற்றை முல்லைசரம்,பாவாடை தாவணி ,மருதாணி பளிச் முகம் என வந்துவிடக் கூடாதா என இருந்தது.
கோவிலுக்குகு செல்லும் பொழுது சித்தி கேட்டாள்
“ஏன் பப்பு உன்னை ஒன்னு கேக்கட்டுமா?
“கேளு சித்தி”
நீ சின்ன பையன இருக்கிறப்ப ஒரு நாள் நீ சொன்னியே பிரபு கூட ஓடி போக சொல்லி..ஞாபகம் இருக்கா?..பேசாம, நீ சொன்ன மாதிரி நான் அவங்கூட போய் அவனையே கல்யாணம் பண்ணிருக்கலாம்ல”..
சுரிரென இருந்தது..அவளது மொட்டை மாடி ட்ரான்சிஸ்டர் ,அடுப்படி பாடல்,தெப்பக்குள கற்பனைக் கதைகள்,மருதாணி என ஏனோ அடுத்தடுத்து பின்னோக்கி சுழன்றது போல ஒரு பிரம்மை..
நான் என்ன பேசுவது என தெரியாமல் அடி வாங்கிய மனதுடன் நடந்து சென்றேன். கதையாசிரியர்:ஹேமி கிரிஷ்.

வெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால் உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவளா இப்படி? ஏன்? நான் பார்த்தது உண்மையாகவே அது தானா? அதெப்படி பொய்யாக இருக்க முடியும்? நான் தான் பார்த்தேனே. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு தெரியாமல்…
ஜெய*ந்த் மூர்த்தியின் ந*ண்ப*ன். இன்னும் திரும*ண*மாக*வில்லை. மூர்த்திதான் ஜெய*ந்த் அருகிலேயே இருக்க*ட்டும் என்று த*ன் வீட்டிற்கு பின்னாலேயே வீடு பார்த்துக் கொடுத்தான். த*னி வீடு. ஜெய*ந்த் த*னியாக*த்தான் வ*சிக்கிறான். அவ்வ*ப்போது அவ*ன் பெற்றோர் வ*ந்து பார்த்துவிட்டு செல்வ*ர். வார* முடிவுக*ளில் ஜெய*ந்த் மூர்த்தி வீட்டில் தான் இருப்பான்.
கமலாவின் தோழி மாலா மட்டும் கமலாவின் செல்ஃபோனுக்கு கால் செய்திராவிட்டால், இந்த விஷயம் தனக்கு தெரியவே வந்திருக்காது. மார்க்கெட் செல்வதாக சொல்லி வெளியேறினாள் கமலா. சிறிது நேரத்தில் மாலாவின் அழைப்பு கமலாவின் சென்ஃபோனுக்கு. மறந்து வைத்து விட்டு வெளியேறி விட்ட கமலாவிடம் நேரிலேயே கொடுத்து விடலாம் என மூர்த்தி செல்ஃபோனை எடுத்துக் கொண்டு பின்னாலேயே தெருவில் இறங்க, கமலா ஓட்டமும் நடையுமாய் பூனையிடம் சிக்காமல் ஓடும் எலி போல சென்றதைப் பார்த்ததும் துணுக்குற்றான். ஏன் இத்தனை பதட்டமாய் போகிறாள் என்று. சற்றே மறைவாய் பின் தொடர்ந்த போது, அவள் பக்கத்து தெருவில் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்க்குள் நுழைவது தெரிந்தது.
பக்கத்து தெருவானாலும் வலது வரிசையில் ஜெயந்தின் வீடு, மூர்த்தி வீட்டின் பின்புறம் தான் வரும். கொள்ளையிலிருந்து பார்த்தால் ஜெயந்த் வீடு தெளிவாகத் தெரியும். தோலுக்கு சற்று மேல் வரை நீண்ட மதில்சுவர் தான் இடையில். துப்பறியும் நோக்கில் அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்த மூர்த்தி மறைந்திருந்து ஜெயந்தின் வீட்டைப் பார்க்க, ஜெயந்தின் வீட்டு கொல்லைக் கதவு, சன்னல் என எல்லாமும் மூடப்பட்டிருந்தது. எப்போதும் மூடாத கதவுகள் அவை.
மூர்த்திக்குத் தான் நின்றிருக்கும் தரையில் பாதங்கள் சேராமல் வழுக்குவது போலிருந்தது. தன் காதல் மனைவியை அப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை. அவனுள் பல கேள்விகள். ஒன்றிற்கும் விடை இல்லை. இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். 2 மணிக்கு திரும்ப வந்தாள். அவளால் சரியாக நடக்க முடியவில்லை. மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்துக் கொண்டாள். ‘பொய் சொல்கிறாளே, இவளை…’ மனதிற்குள் கருவிக் கொண்டே அமைதி காத்தான் மூர்த்தி. அன்றிரவு மெல்ல மனைவியை அணைத்தான். வேண்டாமென்று தள்ளிப் படுத்துக் கொண்டே சோர்வாக இருப்பதாக காண்பித்துக் கொண்டாள். மூர்த்தி சுருங்கிய புருவத்தை சீராக்கினான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக் கூடாது. முதலில் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மறு நாளும் அதே 12 மணிக்கு மார்க்கெட் செல்வதாக சொல்லிவிட்டு வெளியேறினாள். மூர்த்தி ஜெயந்தின் வீட்டை கவனித்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. 2 மணி வாக்கில் கமலா வீட்டிற்கு சோர்வாய் வந்தாள் சில மளிகை சாமான்களுடன். அன்றும் மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்தாள். அன்றிரவு மூர்த்தியின் அணைப்பிற்கும் அதே சோர்வைக் காரணம் காட்டிப் புரண்டு படுத்தாள்.
மூர்த்தி முடிவு செய்து கொண்டான். நாளை கையும் க*ள*வுமாக* பிடிக்க* வேண்டும், முச்ச*ந்தியில் நிற்க* வைத்து நாற*டிக்க* வேண்டும். எத்த*னை பெரிய* துரோகி இந்த* ஜெய*ந்த். அவ*ன் முகத்திரையை கிழிக்க* வேண்டும்.
ம*று நாளும் 12 ம*ணிக்கு க*ம*லா மார்க்கெட் செல்வ*தாய் சொல்லிவிட்டு வெளியேறினாள். ஜெயந்த் வீட்டை பார்த்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. மூர்த்தி ச*ட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். ச*ரியாக* 5 நிமிட* இடைவெளி விட்டு அவ*ளை ம*றைவாக* பின் தொட*ர்ந்தான். அவ*ள் ஜெயந்த் விட்டிற்குள் நுழைந்தாள்
அவ*ள் உள்ளே சென்று சில* ம*ணித்துளிக*ள் க*ட*ந்த*தும் பின்னாலேயே மூர்த்தி பூனை போல* வீட்டு வாச*லுக்கு வ*ந்தான். வாச*லில் க*த*வு விசால*மாய் திற*ந்திருந்த*து. ‘கொல்லைக் க*த*வை சாத்தி விட்டு முன் க*த*வை சாத்த* ம*ற*ந்து விட்டார்க*ளா இன்று? இருக்க*ட்டும். என்ன*தான் ந*ட*க்கிற*து பார்ப்போமே’ என்று க*ருவிய*ப*டியே மெல்ல* உள்ளே எட்டிப்பார்த்தான்.
க*ம*லா, கிச்ச*னில் எதையோ கிண்டிக் கொண்டிருக்க*, ஜெய*ந்த் சில* இனிப்பு வ*கைக*ளை ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். தான் எதையோ நினைத்திருக்க வேறு ஏதோ ந*ட*க்கிற*தே என்று எச்ச*ரிக்கையான* மூர்த்தி க*த*விடுக்கில் ஒளிய*, க*ம*லா பேசும் ஓசை கேட்ட*து ‘அவ*ருக்கு ச*ர்க்க*ரை பாகு, கேச*ரி, அல்வானா ரொம்ப* புடிக்கும். நாளைக்கு இந்நேரம்லாம் மேரேஜ் ஆகி எங்க*ளுக்கு அஞ்சாவ*து வ*ருஷ*ம். அதான் அவ*ருக்கு ச*ர்ப்ரைஸா இருக்க*ட்டுமேன்னு உங்க* வீட்ல* செஞ்சேன். நாளைக்கு விடிகாலைல* 7 ம*ணிக்கு கொல்லைப்புற*மா இதையெல்லாம் குடுத்துடுங்க* ஜெய*ந்த். அப்ப*டியே நீங்க*ளும் 8 ம*ணிக்கு வீட்டுக்கு வ*ந்திடுங்க எங்க* அனிவ*ர்ச*ரிக்கு. உங்களுக்குதான் சிரமம் கொடுத்திட்டேன்’ என்ற*வ*ளிட*ம், *’அத*னால* என்ன* அண்ணி ப*ர*வாயில்ல*’ என்று ப*தில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெய*ந்த்.
அப்போதுதான் மறு நாள், தன் மாரேஜ் அனிவர்சரி என்பது மூர்த்திக்கு நினைவுக்கு வந்தது.
மூர்த்தி தான் வ*ந்த* சுவ*டே க*ள்ள*ங்க*ப*ட*மில்லாத* இந்த* இருவ*ருக்கும் தெரிந்து விட*க்கூடாது என* ப*த*ட்ட*மானான்.


ஓடிப் போய் விடலாமா?

மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி கேட்டாள்.
“ என்னால் இனியும் வீட்டில் சமாளிக்க முடியாதுங்க!….நாம இந்த ஊரை விட்டே எங்காவது போயிடலாமுங்க!….”
“ஏண்டி!…அர்த்தமில்லாம பேசறே?…யாரிடமும் சொல்லாம நாம ஊரை விட்டுப் போனா…ஊர் உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?”
“ உங்களுக்கு என்னைப்பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லே!….நான் அவங்க கிட்டே மாட்டிக்கிட்டா அவங்க என்னை சின்னா பின்னப் படுத்திடுவாங்க!…”
“நான் இல்லேனு சொல்லலே!….நல்லா யோசித்து நாம ஒரு முடிவு எடுக்கலாம்!…”

சாருமதி சொல்வதிலும் நியாயம் இருந்தது. யோசிப்பதற்குள் காலாண்டு தேர்வு முடிந்து எல்லா ஸ்கூலும் லீவு விட்டு விடுவாங்க..
உள்ளூரிலேயே இருக்கும் மூன்று மகன்களும், மருமகள்களும் வேலைக்குப் போகிறவங்க…தனியாக இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டில் அவங்க குழந்தைகளை லீவுக்கு கொண்டு வந்து, விட்டு விட்டுப் போயிடுவாங்க…பாவம் வயசான காலத்தில், சாருமதி ஒருத்தியால் எப்படி குறும்பு செய்யும் ஏழு குழந்தைகளையும் ஒரே சமயத்தில் பார்த்துக் கொள்ள முடியும்?
அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை

இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு… வெறுப்பு… வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த திருமணத்தை ஒரு துர்சகுனமாகவோ அல்லது விபத்தாகவோதான் நினைத்திருக்கக் கூடும். ஆனாலும், அம்மா அவரை நேசித்தாள். கோடானுகோடி இந்தியப் பெண்களைப் போலவே எல்லா துரதிர்ஷ்டமான காயங்களுக்குப் பின்னும்கூட அவரை நேசித்தாள்.
‘நீ ஏம்மா இப்பிடி இருக்க? அந்த ஆள் இத்தனை கொடுமை பண்ணியும் அவனுக்காக சாமிகிட்ட வேண்டிக்கிற… ச்சை!’ – ராம் எத்தனையோ முறை திட்டியிருக்கிறான். அம்மா, அமைதியாக அவனைக் கடந்துபோவாள் அல்லது சின்னதாகச் சிரிப்பாள்.
அவளுக்கு ‘இளமை’ என்று தனியாக ஒரு காலம் இல்லை. பெரியம்மா, அவளைப் பார்க்க வரும்போதெல்லாம் சொல்லும், ‘எங்க வாழ்க்கை எப்பிடியோ ஒருவழியாச் சரியாகிடுச்சு. ஒரு காலம் இல்லாட்டியும் இன்னொரு காலம் நீ நல்லா இருப்பேனுதான் காலம்பூரா சாமியைக் கும்பிடுறோம். இன்னும் உன் கருமாயம் தீரலையேடி!’ எனும் பெரியம்மாவுக்கு எல்லாவற்றுக்கும் அழுகைதான்.
அம்மா அப்படி இல்லை. அவள் எதற்கும் அழுதவள் அல்ல. ராமுக்கு விவரம் தெரிந்து, ஒரே ஒருமுறை மட்டுமே அம்மா அழுதிருக்கிறாள். அதுவும் மிகச் சில நிமிடங்கள். லாரியில் லோடு ஏத்திச் சென்றிருந்த அப்பா வடக்கே சூரத்துக்கு அந்தப் பக்கமாக ஏதோ ஒரு கிராமத்தில் விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்ற தகவல் வந்த இரவில் அழுதாள். இத்தனைக்கும் அப்பா இந்தக் குடும்பமே வேண்டாம் என எப்போதோ விட்டுவிட்டுப் போயிருந்தார். ஆனாலும் அம்மா அவரை மறக்கவில்லை.
ஊரில் இருக்கும் நாட்களில் குடித்தார் என்றால், அப்பாவின் பொழுதுபோக்கு அம்மாவைத் தேடி வந்து அடிப்பதுதான். அவள் வேலை செய்கிற இடங்களைத் தேடி வந்து அங்கும்கூட அடிப்பார். அவள் எதற்குமே பதில் சொல்ல மாட்டாள்.
‘இந்தச் சனியனை என்னைக்கு என் தலையில கட்டினாய்ங்களோ அன்னைல இருந்து என் வாழ்க்கை நாசமாப்போச்சு. த்தூ… உனக்கெல்லாம் ஒரு சாவு வராதாடி!’ – காறித் துப்புவதைக்கூட அவள் கடந்து போகப் பழகியிருந்தாள். அரிதாக சிலமுறை அவளும் பதிலுக்குப் பதில் பேசுவது உண்டு. ஆனால், அது ஆவேசமாகவோ கதறலாகவோ இருக்காது. ஓர் எளிய முனகல் அல்லது சினுங்கல் என்ற அளவில்தான் இருக்கும்.
அம்மா, அவமானங்களைச் சகித்துக்கொள்வதை ராம் வெறுத்தான். இதனாலேயே அப்பாவை அதீதமாக வெறுத்தான். தான் அப்படி வெறுப்பதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதாக நம்பவும் செய்தான்.
ஜெனியைக் காதலிக்கத் தொடங்கிய பிறகான இந்தக் கொஞ்ச நாளில், ராமுக்கு அந்த மனிதரின் மேல் முதல் முறையாக வெறுப்புக்கு மாறாக சின்னதோர் அனுதாபமே மிஞ்சி நிற்கிறது. இத்தனை ஆண்டுகள் வாழ்க்கை மீது இருந்த ஆவேசமான நம்பிக்கைகள் அவ்வளவும் சிதறிப்போய், தன்னை மிகவும் இலகுவான மனிதனாக உணர்ந்தான். எல்லோருக்கும் தன்னால் புன்னகையைப் பரிசளிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஒருவகையில் இந்தக் கனிவுக்குக் காரணம், ஜெனிதான்
அன்று ஜெனி வந்து சேர்வதற்கு சில நிமிடங்கள் தாமதமானதால் கொஞ்சம் கோபமாகவே அவளைப் பேசிவிட்டான். ஆனால் ஜெனி, எப்போதும் போல் சிரித்தாள். அவளது சிரிப்பு அலாதியானது. தன் முன் இருப்பவர்களை மிக எளிதில் வீழ்த்தி விடுவாள். அதற்கு, பேச வேண்டும் என்பதுகூட இல்லை. ஒரு பரிகாசம் போதும். ‘உங்க அப்பா ஆவேசமான வர்னு சொல்றியே ராம், நீ மட்டும் என்னவாம்..?’
அவனுக்குப் பதில் சொல்ல நா எழவில்லை.
‘தன் புருஷனுக்காக காலம் முழுக்கக் காத்திருந்த அம்மாவுக்குப் பொறந்தவன் நீ. உன்னால நீ நேசிக்கிற பொண்ணுக்காக 10 நிமிஷம் காத்திருக்க முடியலல்ல… உங்க அப்பாவுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?’
‘இல்ல ஜெனி… நீ முன்னாடியே கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லி இருந்தா… சின்ன வேலை இருந்துச்சு, அதை முடிச்சிட்டு வந்திருப்பேன்!’
ஜெனி, அதற்கும் சிரிக்கவே செய்தாள்.
‘ம்ம்ம்… எல்லோருக்கும் வேலை இருக்கத்தான் செய்யிது ராம். நீ உங்க அம்மாவோட வாழ்க்கையில இருந்தும், உன் வாழ்க்கையில இருந்தும் எதையுமே கத்துக்கலை. உனக்கு வாழ்க்கையோட வலிகள் அவ்வளவும் ஆவேசத்தைக் கத்துக்கொடுத்த அளவுக்கு நிதானத்தைக் கத்துக் கொடுக்கலை.’
ராம், தலையைக் குனிந்து அவளைப் பார்க்க முடியாதவனாக நின்றிருந்தான். அவளுக்கு, கொஞ்சம் கூட அவன் மீது கோபம் இல்லை. தலையைத் தூக்கிப் பார்த்தாள். இப்போதும் அவள் முகத்தில் அதே புன்னகை. அவனால் அதை அவ்வளவு சாதாரணமாக எதிர்கொள்ள முடியவில்லை.
‘ப்ளீஸ்… வேணும்னா செருப்பால ரெண்டு அடி அடிச்சிடு. இந்த மாதிரி சிரிக்காத… ப்ளீஸ்.’
‘ஏன் ராம்? இந்தச் சிரிப்புப் பிடிச்சிருக்குனுதானே என்னைக் காதலிக்கிறதாச் சொன்ன. இப்ப என்ன?’
‘இல்ல… அப்போ அதுல ஒரு சிநேகம் இருந்துச்சு.’
‘இதுலேயும் சிநேகம் இருக்கு ராம். உங்க அப்பா குடிக்கிறப்ப எல்லாம் ஆவேசம் வந்து உங்க
அம்மாவைத் திட்டுவார்னு சொன்னியே, ஏன்னு தெரியுமா?”
ராம், ‘தெரியாது’ எனத் தலையாட்டினான்.
‘உங்க அம்மாவோட புன்னகைக்கு முன்னால உங்க அப்பாவோட ஆவேசம் ஒண்ணுமே இல்லை. அவர் அதுல ஒவ்வொரு தடவையும் தோத்துப்போயி அவமானப்படறதாலதான் அவர் கோவம் குறையாமயே இருந்திருக்கு. பதிலுக்குப் பதில் ஆவேசமாச் சண்டை போடுறது மட்டும் இல்ல ராம்… ‘நீ என் நிதானத்துக்கு முன்னால ஒண்ணுமே இல்லடா’னு சொல்றதும் ஒருவித எதிர்ப்புதான்.
அந்த மாலையில்தான், ‘இனி என்றென்றைக்கும் ஜெனியுடனே வாழ்வது’ என முடிவு எடுத்தான். அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். மன்னிப்புக் கேட்டான். பதிலுக்கு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். இத்தனை அழகான மன்னிப்பை காதலியிடம் இருந்து மட்டும்தான் பெற முடியும் எனப் பூரித்தான்.
‘மன்னிப்புக் கேட்கிறப்போ மட்டும்தான் ஆம்பளைங்ககிட்ட அற்புதமான ஒரு சாந்தம் இருக்கு ராம். தன்னோட ஆம்பளத் தனத்தை விட்டுட்டு ஒருத்தன் யார் முன்னால நிக்கிறானோ அவங்களுக்கு உண்மையா இருப்பான். நீ எனக்கு உண்மையா இருக்க ராம்!’
தன்னை இத்தனை வருடங்களில் இத்தனை தீவிரமாக எந்தப் பெண்ணும் புரிந்துகொண்டது இல்லை என்ற நிஜம், அவனை ஆறுதல்படுத்தியது. ஒரே ஒருமுறை தன் அப்பா தன் அம்மாவின் முன்னால் இப்படி ஒரு மன்னிப்பைக் கேட்டு நின்றிருந்தால், இதுமாதிரி ஆயிரம் முத்தங்களை அவருக்கு அம்மா தந்திருப்பாள். அவள், தன் வாழ்க்கை முழுக்கக் காத்துக்கொண்டு நின்றதும் அப்படியான ஒன்றுக்குத்தான். தன்னுடைய எந்தத் தவறுக்கும் எப்போதும் யாரிடமும் மன்னிப்புக் கேட்காதவன், தன் மரணத்துக்குப் பின்னாலும் அதன் துயரத்தைத் தூக்கிக்கொண்டு அலைகிறவனாகத்தான் இருக்கிறான். அப்பா, குறைந்தபட்சம் தன் மரணத்துக்கு முன்பாகவேனும் அதைப் புரிந்துகொள்வார் என அவன் நம்பினான்.
அம்மா, இப்போதும் வேலைக்குப் போகிறாள். அவளுக்கு சக மனிதர்களின் மீது எப்போதும் வெறுப்போ, புகார்களோ இருந்தது இல்லை.


எல்லோரையும் முழுமனதோடு நேசித்தாள்; ஏற்றுக்கொண்டாள். ராம், முதல் தடவையாக ஜெனியை அம்மாவிடம் காட்டியபோது, அவன் எதுவும் சொல்வதற்கு முன்பாகவே அம்மாவுக்குப் புரிந்திருந்தது. தான் நேசிக்கும் பெண்ணுக்கு முன்பாக ஆண் எப்போதும் இயல்பாக இருக்க முடிந்தது இல்லை. அம்மா, அவனது தயக்கத்தை ரசித்தாள். ஜெனியை அணைத்துக்கொண்டு முத்தமிட் டவள், தேநீர் கொடுத்தாள். ஒரு தேநீர், அபூர்வமாகத்தான் பல்வேறு சுவை கொண்டதாக இருக்கும். அதற்கு, தேநீர் குடிக்கும் நேரமும், கொடுப்பவர் யார் என்பதும் முக்கியமானது. அந்தத் தேநீர், ஜெனிக்கு அபூர்வமானது.
‘உங்க பையனை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு விரும்பறேம்மா!’
ராமுக்குப் பதற்றமாக இருந்தது. தான் சொல்வதற்கு முன்னால் இவள் ஏன் அவசரப்பட்டாள்? அம்மாவின் மீது பயம் என்று எதுவும் இல்லை. ஆனால், அவள் என்ன நினைத்துக்கொள்வாளோ புரிந்துகொள்ள முடியாமல்போகுமோ… எனத் தயங்கினான். ஆனால், ஜெனி, சொல்லாமல் போயிருந்தால்கூட அம்மா கேட்டிருப்பாள்.
அம்மா, அவளை நிதானமாகப் பார்த்துவிட்டு, ‘உங்க அம்மா-அப்பாகிட்ட சொல்லிட்டியா பாப்பா?’
அவள் ‘இல்லை’ எனத் தலையாட்டிவிட்டு, ‘முதல்ல உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு! அதான் நானே வம்பா கூட வந்தேன். உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’
அம்மா சிரித்தாள். எழுந்து உள்ளே போனவள், சாமி படத்துக்கு முன்னால் வைத்திருந்த குங்கும டப்பாவையும், கொஞ்சம் மல்லிகைப் பூவையும் எடுத்து வந்தாள். ஜெனியின் நெற்றியில் பொட்டு வைத்துவிட்டவள், பூவை அவள் கையில் கொடுத்து, ‘இனிமே இது உன் வீடு. நீ எப்ப வேணும்னாலும் வரலாம். சீக்கிரமா அம்மா அப்பாகிட்ட சொல்லிடு!’
ராமுக்கு வியப்பாக இருந்தது. அம்மா அவளின் சாதி, குடும்பம் எதையும் விசாரிக்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொண்டாள்.
அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தான் ராம். அவள் எதுவுமே பேசாமல் உள்ளே போய்விட்டாள். மௌனத்தையும் புன்னகையையும் தவிர, ஆகச்சிறந்த பதில் அந்த நேரத்தில் அவளிடம் இல்லை.
அதன்பிறகு எல்லாமே ராம் விருப்பப்படிதான் நடந்தன. ஜெனிதான் அவனிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள்.
‘நல்லவரோ கெட்டவரோ, உங்க அப்பாவை நம்ம கல்யாணத் துக்குக் கூப்பிடணும் ராம்!’
முதல் தடவை அவள் சொன்ன போது அவனுக்குக் கோபம் வந்தது, காட்டிக்கொள்ளாமல், ‘வேணாம் ஜெனி. எனக்கு அதுல விருப்பம் இல்லை. அந்த ஆள் ‘அப்பா’னு வந்து நின்னா, நான் என்னை புழு மாதிரி ஃபீல் பண்ணுவேன்.’
அவள் அப்படிச் சொல்வதைக் கொஞ்ச நாட்கள் விட்டிருந்தாள். பின்பு மீண்டும் சொன்னபோது, முன்னைவிடவும் அழுத்தமாகச் சொன்னாள். அவனால் பதில் சொல்லவும் முடியவில்லை; அவளைக் கோபித்துக்கொள்ளவும் முடியவில்லை. கடைசியாக ஒப்புக்கொண்டான். ஜெனியும் அவனோடு வருவதாக அடம் பிடித்தாள். இருவருமாகச் சேர்ந்து அவருக்குப் அழைப்பிதழ் கொடுக்கக் கிளம்பினார்கள்.
அப்பா, அவன் ஊரில் இருந்து 40 கிலோமீட்டர் தள்ளி சிவகாசியில் இருந்தார். நீண்ட காலம் ஆகிப்போனது, அவர் பற்றிய செய்திகளை இவன் கேள்விப்பட்டு.
”சொந்த மகனோட கல்யாணத்துக்கு அப்பாவுக்கு இன்விட்டேஷன் கொடுக்கப்போற துயரம் என்னைத் தவிர வேற யாருக்கும் நடக்கக் கூடாது ஜெனி.’ – பேருந்தில் அவள் தோள்களில் சாய்ந்துகொண்டான். அவள் புன்னகைத்தபடியே அவன் தலை கோதிவிட்டாள்.
சிவகாசியில் சித்துராஜபுரம் தாண்டி சிறிய காலனியில் இருந்தது அவர் வீடு. இவர்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போய்ச் சேர்ந்தபோது, வெயில் ஊரை உக்கிரமாக எரித்துக்கொண்டிருந்தது. வெயில், அந்த ஊரின் பிரத்யேக அடையாளம். கதவு, திறந்தே கிடந்தது. துருப்பிடித்த தகரக் கதவு. அவர்கள் போனபோது அவர் வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தவரிடம் விசாரித்தான்.
”கடைக்குப் போயிருப்பாரு. செத்த இருங்க வர்ற நேரம்தான்’ அவன், வாசலிலேயே உட்கார்ந்தான்.
அப்பாவைப் பற்றி அவனுக்குள் இந்த நொடி வரை இருந்த பிம்பம் எல்லாம், எப்போதும் குடி போதையில் அம்மாவையும் தன்னையும் அடிப்பதையே தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைத்த ஒரு கொடூர மிருகம். அவ்வளவுதான். வெயிலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திணறினான். தூரத்தில் கானல் நீரினூடாக ஒருவர் இந்த வீட்டை நோக்கி நடந்து வருவதைப் பார்த்ததும் இவனுக்கு ஒரு மாதிரியாகப் புரிந்தது. அவர்தான். வயதாகி விட்டாலும் அந்த உடலில் இன்னும் அதே திமிரும் கொழுப்பும் இருப்பதற்கான நடை.
காரணமே இல்லாமல் அவனுக்கு அடிவயிற்றில் ஒரு பயம் உருண்டது. அது, அவரைப் பார்க்கிறபோதெல்லாம் பால்யத்தில் பழக்கப்பட்டுவிட்ட பயம். அதிலிருந்து அவனால் ஒருபோதும் மீள முடியாது. எழுந்து அங்கிருந்து ஓடிவிடலாம் என நினைத்தான். ஜெனி, அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்தாள்.
அவரும் இவர்களைக் கவனித்திருக்க வேண்டும். ஆனால், நிதானமாகத்தான் வந்தார். ராமையும் ஜெனியையும் ஒருசில நொடிகள் பார்த்தவர், வீட்டுக்குள் போய் ஒரு சேரை எடுத்துவந்து வெளியில் போட்டு உட்கார்ந்தார்.

”நாங்க கஞ்சா விக்கிற ஆளில்லே…”
”பின்னே பவுடரா… ஆளப்பாரு…”
”அக்கா அந்தக் குண்டன் அம்சமா இருக்கான்லே” என்றாள் நம்ம பயில்வான் பொம்பளை கூட வந்தவள்… ”விட்றி… நாம பாக்காததா… ஏட்டக்கா பையனை ஒன்னும் செஞ்சிடாத என்றாள் பேச்சி.
“டீய்” என்று போலிஸ்காரி கையிலிருந்த பிரம்பை பேச்சி மேல் விசிற அவர்கள் ரெண்டு பேரும் சிரித்துக்கொண்டே வெளியே ஓடினார்கள்…
“டேய் மூன்று பேரும் அங்க ஐயா கூப்பிடுறாறு போங்க…” என்று உத்தரவு வர மூன்று கேடிகளும் ஓடினார்கள்.
ரெண்டு நிமிஷம் கழித்து மூன்று பேரும் நொண்டிக்கொண்டே வந்தார்கள்… ரொம்ப சிதிலமடைந்த ஒருத்தன் “ஐயோ அப்பா” என்று நிறுத்தாமல் அலறினான்.
இன்னொருத்தன் “அவுக்கச் சொன்னா அவுத்துடறோம்…” அதுக்காக இந்த அடியா? யோவ்… பாத்தீங்களே… பேண்டை அவுத்துட்டு ஜட்டியோட அங்க உட்காருங்க… நீங்க எங்க மாதிரி அடி தாங்குவீங்களா… அந்தக் கொலகாரன் எடம் பார்த்து அடிக்றான்… டீக்கடையிலே இருந்து அவன் வந்ததும் உங்களுக்கும் இருக்கு…”
“டேய் ராஜா என்னடா செய்யறது புரியலியே… அடியா அம்மணமா…”
“ஜட்டி இருக்லாம்லே” என்று சந்தேகம் கேட்டான் ராஜாராமன்.
“அது இருக்கலாம் தப்பில்லே… சட்னு மூனு சொல்றதுக்குள்ளே அவுத்து கக்கத்திலே வச்சிகிட்டு ஓரமா உட்காருங்க…” என்றான் ஒரு கேடி.
“நாங்க ஒண்ணுமே பண்ணல்லியே… ”
“கரெக்ட்ய்யா… போலிஸ் ஸ்டேஷன்லே நாங்ககூட அப்படித்தான் சொல்லுவோம்… பாரு அனுபவஸ்தன் சொல்றேன்… ஒரு ஸெகண்ட் வேஷ்டி அவுக்கல… கும்மி எடுத்துட்டான்… ஒங்கள இப்படிப் பார்த்தா குமுறிடுவான்யா… பாவயன்யா… நீங்க சின்னப்பசங்க அடிதாங்க மாட்டீங்க… ஒரு பாரிதாபத்துக்குச் சொல்றேன்… அப்புறம் உங்க இஷ்டம்…”
“டேய் ராஜா அந்தப் போலிஸ் வந்து அடிச்சு அவுக்கறதை விட அவுத்து அடிக்கிறது மேல் இல்லையா…”
“அவுத்தாலும் அடிக்கலாம் அதுக்கெல்லாம் கியாரண்டி கிடையாது” என்றான் ஒருத்தன்.
“சரிடா பரகாலா… நம்மளாலே முடிஞ்சதை நாம செஞ்சிடலாம்… அவுத்துடலாம்…”
“நல்ல யோசனை என்று பரகாலன் ஆமோதித்த போது அவன் ஜட்டி தவிர மத்த எல்லா சமாச்சாரமும் கழட்டிவிட்டு கைம்பெண் மாதிரி நின்றிருந்தான்.
“இதேல்லாம் எங்கேடா வைக்கிறது…” ஒரு கேடி குற்கிட்டான்… “இது கூடத்தெரியாது அங்க வைங்கய்யா… எல்லாம் கேட்டு உயிரை எடுத்துட்டு… அந்த நாய் வந்தா எங்க மேல விழுவான்… நீங்க அவுக்காம போயிருந்தா ஏண்டா அவனுங்களுக்கு சொல்லலின்னும் அடிப்பான்… எல்லாம பழகிக்கணும்யா”
“என்னடா அங்க சத்தம்…”
“ஒண்ணுமில்லைங்கய்யா.. இந்த புதுப்பசங்களாலே தொல்லை… ஏன்யா இப்படி பெருமாள் மாதிரி ஜட்டியோட நிக்கறே…’
பெருமாள் இப்படி ஜட்டியோடு நிற்கிறது எங்கே என்று ராஜாராமனுக்குத் தெரியவில்லை் விஸ்வரூப தரிசனம் என்பது இதுதானோ… என்னவோ… அப்போதுதான் அந்த சந்தேகம் வந்தது.
“ஏண்டா பரகாலா… மண்டகப்படிக்கும் சாத்துப்படிக்கும் என்னடா வித்தியாசம்…”
“நடுமண்டையிலே அசடி்சா அது மண்டகப்படி… கீழே அடிச்சா அது சாத்துப்படி”.
“நம்ம மூளிக்காது போலிசுக்காரனுக்கு எல்லாமே அத்துப்படி” என்றான் ஒரு பட்டாபட்டி உன் டிராயர்-பரகாலனுக்கு உள்ளே புளி கரைந்தது…
“பரகாலா… நம்மளை இப்படி பார்த்தா ஆபிஸ்காரங்க என்னடா செய்வாங்க…”
“வாட்ஸ்ஸப்பிலே போட்டு வஸ்திரப் பிச்சை கேப்பான்… சும்மா நச்சு நச்சுன்னு ஏதாவது கேட்டுக் கலக்காத… வாயைப் பொத்திட்டு உட்காரு… ஏண்டா ஏதவாது பிகர் இருக்காடா உனக்கு…”
“இதுவரை எவளும் இல்லே…” என்றான் ராஜாராமன்.
“கவலைப்படாத இதப் பார்த்தா பெரிய கூட்டமே சேரும்…” என்றான் பரகாலன் ஒரு நப்பாசையுடன் ஒரு கேடியின் பக்கம் திரும்பினான்…
“ஏம்பா ஸெல் இருக்கா…”
“இருக்கே மூணு ஸெல் இருக்கு… ஐயா இந்தப்பசங்க ஸெல்லுக்குப் போகணுமாம்…”
“சரி… எல்லாருமா ஸெல்லுக்குப் போங்க நேரமாச்சி…”
“யோவ்… நாங்க கேட்டது… ஸெல் போன்யா…”
“அந்த ஸெல் கேட்டாலும் இந்த ஸெல்லுக்குத்தான்யா அனுப்புவாங்க…”
“பாவி… ஏண்டா ஸெல் கேட்டே என்று ராஜாராமன் கடித்தான்… அதெல்லாம் லாக்அப் ரூம்டா.. ஏண்டா அங்க வச்சி என்ன செய்வாங்க…”
பரகாலனே பதில் சொன்னான்… “அங்க வச்சித்தான் ஆப்பு அடிக்கிறது”
“வாங்க தம்பி ஐயா ஸெல்லுக்குப் போகச் சொன்னாருல்ல… வாங்க… வரல்லே அதுக்கும் வாங்க வேண்டியிருக்கும்…”
”நாங்க எதுவம் வாங்காம வந்துடறோம்” என்று பரகாலன் ஸெல்லுக்கு எழுந்தான்…
செம்மறி ஆடு மாதிரி எல்லாரும் வரிசையாக எழுந்தார்கள்… பரகாலன் புலம்பினான்…
“நாங்க ஒண்ணுமே செய்யலியே…”
“ஐயா… மந்திரிங்க உட்பட இங்க வர்ற சக்கல ஜனங்களும் இதேதான் சொல்றாங்க… சும்மா வா… கவலைப்படதே… பழகிக்கோ… புலம்பாதே… எது நடக்க இருக்கிறதோ அது நல்லதாகவே நடக்கும் என்றான் ஒரு சோமாறி…”
“யோவ் கீதையா…”
“பாரு தம்பி லாக்அப் வேற… ரிமாண்ட் வேற ஜெயில் வேற… பெயில் வேற… இங்க சொல்றத அங்க சொல்லதே… அங்க சொல்றத இங்க சொல்லதே… மாத்தி சொன்னே… மாத்து மாத்துன்னு மாத்திடுவாங்க…
“லாக்அப்னா என்ன” என்றான் ராஜாராமன்.
“ஆடு கோழி வெட்டும்போது தண்ணி தெளிப்பாங்க இல்ல… அது மாதிரி வச்சிக்கோ… இப்ப நமக்குத் தண்ணி தெளிச்சாச்சு… வெட்டு அடுத்த சடங்கு…”
“ஓ”
“அப்புறம் நாளைக்கு கோர்ட்டுக்கு கொண்டு போவாங்க… அங்க பெரியவரு எது கேட்டாலும் ஆமான்யா.. நீங்க சொல்றது சரிங்கய்யான்னும் சொல்லணும்…”
“நான் சொல்ல மாட்டேன்” என்றான் ராஜாராமன்.
“உனக்கு தலையிலே கோட்டான் ஏறிடுச்சு…. பாரேன் காலையிலே உன்ன எது கேட்டாலும் ஆமான்கய்யான்னு ஒரு ஜபம் மாதிரி சொல்லுவே…”
”என்ன சொல்ல வைக்க முடியாது…”
”முடியுமே… குனிய வச்சி அந்தப் பெரிய லட்டி அரை அடி உள்ளே உடுவான்… அப்ப முதுகிலே விழும்பாரு அடி அலை அலையா… அந்த அனுபவமே தனி…”
“பரகாலா நான் கலையிலே டாய்லட் போகலைடா… அந்த லட்டி கழுவுவாங்களா… டாய்லட் வந்துட்டா என்ன செய்யுறது…”
டிராயர் காரன் குறுக்கிட்டான்…
“இங்கயே போய்க்கலாம்… அதான் வழக்கம்… அங்க பார்… பார்த்தியா சுவரெல்லாம் மூத்திரம்…போலிஸ் ஒரு தடவை அடிப்பான்… அடிபட்டவன் ஒவ்வொரு அடிக்கும் மூச்சா அடிப்பான்
டேய் பரகாலா அங்க கருப்பா என்னமோ தெரியுதே அது என்னடா…” “அது பெருச்சாளிப் புழுக்கையா இருக்கும்” என்றான் பரகாலன்.
“அது பெருச்சாளிப் புழுக்கை இல்லேய்யா மனுஷப்புழுக்கை…”
“மனுஷங்க இங்க புழுக்கையெல்லாம் போடுவாங்களா…”
”லத்தியே போடுவாங்க… அப்படி அடி உளுவுமில்லே…”
“சரி அதை யாரு எடுப்பாங்க…” என்றான் ராஜாராமன்.
“போட்டவன்தான் எடுப்பான்…”
“மனுஷக்கழிவை மனுஷன் எடுக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டாச்சே… தெரியாதா உனக்கு…”
“அப்ப நீ லத்தி போடுவே… கரடி வந்து எடுக்குமா… என்னய்யா நியாயம்”
“பரகாலா… இவன் கரடி வரும்… புலிவரும்கறான்… பயமா இருக்குடா…”
ஆமா நீங்க எதுக்கு இங்க வந்தீங்க…
”என் மேலே ஏற்கனவே பத்து கேசு இருக்கு… போடப்போறது பதினொன்னாவது…”
“என்ன கேசு?” என்றான் பரகாலன்
“நாளைக்கு கோர்ட்ல சோல்லுவான் அப்பத்தான் தெரியும்… இங்க இருக்கிற எவன் மேல என்ன கேசுன்னு யாருக்கும் தெரியாது… ஆமா உங்க மேலே என்ன கேசு…?”
“தெரியாதே…” என்றார்கள் இருவரும்.
“அதுதான் போலிஸ்… பேப்பர் எடுக்கிறவரைக்கும் அவனுக்கே கேஸ் தெரியாது”
“அட ஒரு சமாச்சாரம் கேளு… போன மாசம் நடந்தது. இங்க ஒரு பெரிய மனுஷன் வந்து ஒரு ஆள் மேலே கற்பழிப்பு கேஸ் குடுக்கிறான்… சும்மா பீச்ல நடந்துகிட்டிருக்கிற ஆளை இங்கே கொண்டு வர்ராங்க… அவனும் யதார்த்தமா வந்துட்டான்… அவன் யார்னு அடையாளம் தெரியல்யே… அவன்தான் கற்பழிப்பு செஞ்சவன்னு அடையாளம் காட்டினாங்க… அப்புறம் என்ன ஏதுன்னு கேட்காம அவனை சும்மா மாத்து மாத்துன்னு மாத்துறாங்க… ஐயோ நான் ஐ.ஜி.யான்னு அலற்றான் அவனை… விட்டாதானே தண்ணி குடுத்து தண்ணி குடுத்து அடிக்கிறாங்க… நாலு நாளா அடிக்கிறாங்க… அவன் ஒரு தப்பும் செய்யலிங்கிறான்… விடுவானுங்களா… சாத்துறாங்க… சாத்துறாங்க… சாத்திகிட்டே இருக்காங்க… அப்புறம்தான் தெரியுது அந்தாளு நிஜமாவே ஐ.ஜிதான்னு…
“ஐயோ அந்த ஆள் என்னவானான்”
”அது அந்த ஆளுக்கே தெரியல… அப்படி ஒரு அடி… இவங்க அந்த ஆள் ஐ.ஜின்னு ஒத்துக்குற போது அடிபட்டவன் தான் ஐ.ஜி.யே இல்லேன்னு கத்துறான்…
இப்ப அந்த ஆள் எங்க….?
“அவன் இப்போ பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருக்கான். அவன் போட்ட இந்தப் புழுக்கையை அவன் ஞாபகமா விட்டு வச்சிருக்காங்க…”
“இந்த விஷயம் பரவாயில்ல. மனுஷன் கற்பழிச்சான்னு ரிப்போர்ட்… ஒரு ஸ்டேஷன்லே யானை கற்பழிச்சதா ஒரு கம்பிளைன்ட் வந்து போட்டுத் தாக்கியிருக்காங்க…
“யானையையா?”
“இல்லை யானைப்பாகனை”
அப்புறம்…..
“அந்தப்பாகனை மிதிச்சதாலே ரெண்டு எலும்பு நொறுங்கிப்போச்சாம்…”
“யாரு போலிஸ் மிதிச்சதா…”
“இல்லே யானை மிதிச்சதாலே”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன… யானை தப்பிச்சிருக்கு… யானையை வலைபோட்டு போலிஸ் தேடுதாம்…”
“டேய் யானை கற்பழிச்சது… பூனை காதலிக்குது இதா நம் பிரச்சனை… ராஜா நீ எவ்வளவு புத்திசாலி… வெளியே போக வழி பண்ணுடா..”
“ராஜாராமனிடம் அவன் புத்திசாலி என்று ஒரு பிட் போட்டால் எதுவும் சாதிக்கலாம்… அப்படி ஒருத்தன் பத்தாயிரம் லவட்டிவிட அவன் கிரடிட் காரட்டு அக்கா வசம் போய் விட்டது…”
“அப்படியா சொல்றே” என்று பரகாலனை அவநம்பிக்கையுடன் பார்த்தான் ராஜாராமன்…
“ஆமா பின்னே நீ எம்.டெக். இல்லே…” அடுத்த பிட்டில் ராஜாராமன் தொபுக்கடீர் என்று விழுந்து விட்டான்.
“சரி ஒரு ரெண்டு நிமிஷத்திலே முடிவு பண்ணிடறேன்…” கால்களை சம்மணமிட்டு கண்களை மூடிக்கொண்டான் ராஜாராமன்…
“என்னய்யா உன் பிரண்ட் உட்கார்ந்துகிட்டே தூங்குறானா… ஐடியா கேட்டே…” என்றான் ஒரு கேடி.
“இப்போ பாருங்களேன்…” பரகாலன் ராஜாராமனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனா்…
“அசட்டுப்பயலை நம்ப முடியாது…

சட்டென்று ஒரு ஐடியா கூடக் கொடுத்து விடுவான்…”
சட்டென்று கண்களைத் திறந்தான் ராஜாராமன்…
“பக்தா.. உன் பக்திக்கு மெச்சினேன்… உனக்கு என்ன வரம் வேண்டும்”
“என்னை ஒரு ராத்திரி பூரா செருப்பாலே அடிக்கணும்…” ஏண்டா இதுதான் உன் ஐடியா லட்சணமா… மானம் போக வக்கிறியேடா.. இவனுங்கள்ளலாம் சிரிக்கிறாங்க…”
“அமைதி… அமைதி… இப்போ நாம வெளிய போகணும் அதானே உன் பிரச்சனை… சரி கதவைத்திற… வெளியே நட…” என்றான் ராஜாராமன்.
“டேய் அசட்டுப்பயலே…லாக்அப் கதவு பூட்டியிருக்குடா…” என்று அலறினான் பரகாலன்.
“யோவ்… ஊளையிடாத… லாக்கப் கதவை எப்பவும் பூட்டமாட்டாங்க…. எங்க மேல அவ்வளவு நம்பிக்கை போலிசுக்கு…” இது ஒரு கேடியின் ஸ்டேட்மெண்ட்…
“போ பரகாலா போ… வெளியொ நட… பரகாலன் எழுந்து லாக்கப் கதவைத் தள்ள அது கிழவி இருமின மாதிரி சத்தத்துடன் திறந்தது… பரகாலனுக்கு உயிரே இல்லை…
“ராஜா எதுக்கும் நீ முன்னாலே நட எனக்கு நடக்கவே வரல… கால் பின்னுது…”
ராஜா பெயருக்கு ஏத்த மாதிரி ராஜா மாதிரி எழுந்து பரகாலனுக்கு முன்னால் கால் எடுத்து வைத்து நடந்தான்…
“டேய் ஜட்டிதான் போட்டிருக்கோம் மறக்காதே“
“கவலைப்படதோ… நம்ம பேண்ட் சட்டை நாம எடுத்துப் போட்டுக்கிறது…
அது என்ன போலிஸ்காரனா வாங்கிக் கொடுத்தான்… அவன் அப்பன் சரவணா ஸ்டோர்ஸிலே வாங்கினதா… அலட்டாமல் நடந்த ராஜாராமன் பேண்ட் சட்டைகள் எடுத்துப் போட்டுக்கொண்டான். பரகாலனும் அப்படியே…
“அப்ப அடுத்து என்னடா செய்யட்டும்” என்றான் பரகாலன்… அவனுக்கு ஸ்மரனையே இல்லை…
“என்ன செய்யறதா… வெளிய போறது…”
“உசிருக்கே துணிஞ்சிட்டியாடா ராஜா”
“நடடா” என்று முன்னால் நடந்தான் ராஜாராமன்
யாரும் தடுக்கவில்லை. ஒரு சப் இன்ஸ்பெக்டர் எதுவும் கவனிக்காமல் மும்முரமாக கண்ணை மூடிக்கொண்டு காதைக் குச்சியால் குடைந்து கொண்டிருந்தான்…

 கதவைத்திற என்று ஒரு பெங்களுா் சாமியார் சொன்னதை அந்த சப் இன்ஸ்பெக்டர் காதைத்திற என்று கேட்டிருந்தான் போல… காது குடைவதை ஒரு கைங்கர்யமாகவே கொண்டிருந்தவன் என்று தெரிந்தது… ஆஹா என்ன ஒரு சுகம்… இவர்கள் இப்படி சர்வ சாதாரணமாக நடந்து வெளியே வந்திருந்தார்கள்.

“டேய்… ராஜா வெளியே வந்துடடோம்… தப்பிச்சி ஓட வேண்டியதுதான் பாக்கி…” “ஏண்டா நம்மள ஒரு நாயும் கேக்காதா… என்னடா ஸ்டேஷன்”
“அதத்தான் நான் இப்ப கேட்கப்போறேன்… உள்ளயே வா…” என்றான் ராஜா.

“டேய் இதோட ஓடிலாண்டா” என்றான் பரகாலன்.
“அது முடியது வா.. உள்ளே” என்ற ராஜாராமன் எஸ்.ஐ. மேஜை முன்பு நின்று “ஆபிஸர்” என்று அதிகாரமாக விளித்தான்.
அப்போதுதான் தன் காது குறும்பியை லாவகமாக எடுத்திருந்த எஸ்.ஐ. தன் இன்ப லாகிரியைக் கெடுத்த ராஜாராமனை ஆச்சரியத்துடன் பாத்தான்.
“என்னையா கூப்பி்ட்டே ஆபிஸா்ன்னு”
“ஆமாம் நீங்க ஆபிஸா் இல்லையா”
“திங்கிற சோத்திலே மண்ணைப் போடாதேய்யா… எவனாவது ஆபிஸா் கேட்டிருந்தா நான் பேண்ட இல்லாம நிக்கணும்… ஆப்பு வைக்க மாட்டான்… அணுகுண்டே வச்சிடுவான்… உனக்கு என்னய்யா வேணும்…”
“ஸிம்பிள்… எங்க மேலே என்ன கம்ப்ளைண்ட்… ஏன் எங்களக் கூட்டி வந்தீங்க…”
எஸ்.ஐ. வினோதமாகப் பார்த்தார்…
“வெளியே போறவன் அப்படியே போக வேண்டியதுதானே… ஏன் உள்ளே வந்த…’
திடீர் என்று பேச்சி உள்ளே வந்தாள்…
“யாருப்பா என் புள்ளஙை்கள உள்ளே வச்சது… உடமாட்டேன் என் புள்ளிகளை எவனும் தொட உட மோட்டேன்..”
“வா தாயி… வா… ஒரு தொந்தரவு ஆரம்பிச்சது… இப்ப ரெண்டாவது… ஆமா உனக்கு புருஷனே இல்லை.. புள்ள எப்படி வந்தது… அதுவும் ஒரே நாள்ல…”
“ஹாய் எஸ்.ஐ… அது என் விவகாரம்… என் புள்ளைங்க எங்க.. எங்க…”
நாலு ஆட்களுடன் வந்திருந்த பேச்சி ஸ்டேனையே துழாவினாள்… ”யாரும் காணமே… ஏய் எஸ்.ஐ. எங்க என் புள்ளைங்க…?”
“அறிவு கெட்ட முண்டம்… போய்த்தொலையுதுன்னு விடறேன்… உன் புள்ளைங்க யாருன்னு எனக்கெப்படித் தெரியும்…”
“அதானே… எனக்கே என் புள்ளைகளைத் தெரியாதே…”
“அப்படிப்போடு” என்றான் எஸ்.ஐ. “அந்த மூணுபேர்ல யார் உன்னோட புள்ளைங்க…”
“விளையாடுறியா அவனுங்க ஜில்லா கேடிங்க… ஐயோ என் புள்ளைங்களக் காணோமே…”
“இவனுங்க ரெண்டு பேருதான் இப்ப ஸ்டேஷன்ல எக்ஸ்ட்ரா… இவனுக உன் புள்ளைகளான்னு பாரு… சாமிகளா… இது உங்க அம்மாவா…”
பேச்சி குறுக்கே புகுத்தாள்… “பெத்ததான் புள்ளையா.. ஏட்டக்கா நீ சொல்லு…
“பெக்கமா புள்ள எப்படி வரும்டி… சனியனே உன் தொந்தரவு தாங்கவே முடியல… யார்தாண்டி உன் புள்ளைக… அடையானம் காட்டித் தொலையேன்…
“டேய் கண்ணு… உங்கக்கா யாருடா”
“பிரியதர்ஷினி நாச்சியார் ஐ.பி.எஸ். மத்திய உளவுத்துறை அதிகாரி.
அக்கா நான் உன் ராஜாராமன்… எனக்கு ஞாபகம் வந்திருச்சு…”
“இந்த நாய்தான் பரகாலனா…”
“அக்கா நான்தான் பரகாலன்…” ஐயோ என் ராசா… இந்தக் கருவாடு பரகாலனா…
“அக்கா” என்று அலறினான் பரகாலன்… நான்தான் பரகாலன்… என்னைக் காப்பாத்து…
“எஸ்.ஐ. இவங்களை நான் ஜாமின்லே எடுக்ணும்… இவங்கதான் என் புள்ளைங்க… கண்டுபிடிச்சிட்டேன்…”
“ஜாமீனும் வேண்டாம்… வெங்காயமும் வேண்டாம்… தாராளமா கூட்டிப்போ தாயி… மெதல்ல எடத்தைக் காலி பண்ணு… வந்துட்டா ஆட்டிகிட்டு… போடி” என்றாள் ஏட்டக்கா… இப்போது ராஜாராமனுக்கு மரண தைரியம் வந்திருந்தது…
“அதெல்லாம் முடியாது… நான் வெளியே போக முடியாது… என் மேலே என்ன புகார் அதச் சொல்லுங்க… ஏன்யா இப்படி ரோட்ல போன எங்களை ஸ்டேஷன் கூட்டிட்டு வருவிங்க… துணிகளை அவுப்பீங்க… லாக்அப்புல வைப்பீங்க… நீங்க கூப்பிட்டா வரணும்… போன்னா போகணும்… நான் என்ன இளிச்ச வாயனா…”
“யோவ் நீ இளிச்ச வாயனா சப்ப மூக்கனான்னு எனக்குத் தெரியாது… ஆனா நான் உன்னைக் கூட்டி வரலை அவ்வளவுதான்…”
“அப்ப பேண்டைக்கழட்டுனது யாரு”
“நான் உன்ன பேண்டைக் கழட்டச் சொன்னனா” இது சப் இன்ஸ்பெக்டர்.
“லாக் அப்புல வச்சியே”
”நான் உன்னை லாக் அப்ல வைக்கிலயே…”
“ஊய்” என்று ஊருக்கே கேக்கிற மாதிரி அலறினான் ராஜாராமன்.
என்னய்யா இது கொடுமை… அப்ப நாங்க எதுக்கு இங்க வந்தோம்… என்று ராஜாராமன் கூவினான்.
“அதான் நானும் கேட்கிறது… ஏன்யா ரெண்டு பேர் ஸ்டேஷன் வருவீங்களாம்.. மாப்பிள்ளைகள் மாதிரி சட்டை பேண்ட்டைக் கழட்டுவீங்களாம்… லாக் அப்பிலே போய் ஓய்வு எடுப்பீங்களாம்… கைதிகளை பேட்டி எடுப்பீங்களாம்… அப்புறம் நீங்களா போவீங்களாம்… ஏன்யா இது போலிஸ் ஸ்டேஷனா உங்க மாமியார் வீடா..?”
“இதோ பாருங்க… எனக்குக் கல்யாணமே ஆகல…”
“அது என் பிரச்னை இல்லே”. ”ஏய் இவள் என்ன குடிகாரன் மாதிரியே பேசறான்… இவனுக்கு நான் சரிப்படாது சாமி வரட்டும்” என்றான் எஸ்.ஐ.
எஸ்.ஐ. சொல்லிக் கொண்டிருந்தபோது ஒரு அதிகாரி மாதிரி தோரணையில் ஒருவர் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான்… சுமார் ஏழடி உயரம் மூணடி அகலம்…
“டேய் பரகாலா அந்த ஆள் கை உலக்கைடா.. அது எதுக்குடா… அடிக்கவா… இப்ப தூக்கிலே எல்லாம் போடறதில்லையா…”
“த்தூ… உலக்கையில்லேடா… அது பேருதான் லட்டி… அந்தாள் சைசுக்கு அது கரெக்ட்..”
“ஆளும் பெரிசு… லட்டியும் பெரிசுதான்…” என்றான் ராஜாராமன்.
“டேய் பசங்களா.. வெளிய போகப் பாருங்கடா… அதவிட்டு போலிஸ்காரன் லட்டி பெரிசு… ஜட்டி பெரிசுன்னு பட்டிமன்றம் நடத்தாதீங்க… ஐயோ சாமி என்ன கேக்கப்போறாரோ…” என்றாள் பேச்சி.
“சாமி காவு கேப்பாரோ” என்றான் ராஜாராமன்…
“சாமி வரம் கொடுப்பாரு… லட்டியிலே மந்திரிச்சும் விடுவாரு…” என்றான் எஸ்.ஐ. எளக்காரமாக…..
புரியல்ல என்றான் ராஜாராமன்.

கொஞ்சம வெலாவரியா சொல்றேனே… அந்த லட்டியை வாய்க்குள்ளே விடுவாரு அப்ப நாங்க முதுகிலே வரிசையா மாத்துவோம்…” “அப்ப சத்தம் போட முடியதே“
“அதுக்குத்தான் வாயிலே லட்டியை விடறது”
“அவன் பின்னலே விடுவாங்கன்னுதான் சொன்னான்” என்று ஒரு கேடியைக் காட்டினான் ராஜாராம்.
“அவன் படிக்காதவன்… நீ படிச்சவனில்லையா… உனக்கு ஏத்த வைத்தியம்… யார் கண்டது… உனக்கும் பின்னாலே விடலாம்… அதெல்லாம் குறை வைக்க மாட்டாரு…”
“அந்த லட்டி சுத்தமா இருக்குமா…” என்றான் ராஜாராமன்.
“ஏண்டா பசங்களா… ஏண்டா சாகடிக்கிறீங்க… வெளிய போறதைப் பாருங்கடா… போயும் போயும் சாமி கிட்டயா சிக்கணும்…” என்று புலம்பினாள் பேச்சி.
எஸ்.ஐ. என்று உள்ளேஇருந்து சத்தம் வந்தது.
“சரி…நான் உள்ளே போயிட்டு வர்றேன்… தர்பார் ஆரம்பிக்கப் போகுது… எல்லாம் சாமி கும்பிட்டுக்கங்கப்பா…”
எஸ்.ஐ. சாமி அறைக்கு உள்ளே போய் வெளியே வந்தான்.
“எல்லாம் உள்ளே போங்க… ம் வரும் வினை வந்தே தீரும்… போங்கய்யா…”
சாமி எதிரில் மூன்று பேரும் நிற்க மூன்று பேரையும் ஏறிட்டார்.
“ம்… சொல்லு பேச்சி…”
“இவங்க என் புள்ளைங்க சாமி”
“அப்டியா… இவன் அவசரத்திலே பொறந்த மாதிரி இருக்கான்… அவன் பரவாயில்ல… பதினைஞ்ச மாசம் கழிச்சு ஆற அமரப் பொறந்திருக்கான் போலத் தெரியுது…”
“இவன் அம்மா போட்ட சோறுதான் இந்த ஒடம்பு”
“சோறு போட்டாங்களா… எருமைப் புண்ணாக்கு வச்சாங்களா…”
“அந்த அம்மா கையில சோறு வாங்கித் தின்னாலே யாரும் இம்மாம் சைஸ் வந்துடுவாங்க… இவன் அக்கா அந்தக் காலத்திலே குடுத்த புடவைதான் நான் இன்னமும் கட்டுறது…”
“நீ புடவை கூடக் கட்டறியா என்ன”
“நான்தான் சாமி இவனைக் குளிப்பாட்டுவேன்… இவனை அப்படியே அம்மணமா நிக்க வச்சிக் குளிப்பாட்டுவேன்… இவங்க அம்மா திட்டுவாங்க… அடிப்பாங்க கேட்க மாட்டேன்… எனக்கு இவன் மேல ஆசை…
“கொஞ்ச நேரம் முன்னே ரெண்டு பசங்க அம்மணமா இருந்தாங்கன்னு சொன்னாங்க… வாட்ஸ்அப்லே போட்டு வந்ததாம்”
”ஐயோ எங்களை வாட்ஸ்அப்ல போட்டாச்சா” என்று அலறினான் ராஜாராமன்.
”ஆமா பேச்சி… உன் புள்ளைகள ஏன் இங்கே கூட்டியாந்தே… நான் ராத்திரி அங்க வரும்போது காமிச்சிருக்கலாம்ல…
“சும்மா இருங்க… உங்களுக் நான்னா கேலி… சாமி நான் இவங்களை கூட்டிப் போயிடட்டுமா…”
“நீதானே கூட்டிவந்தே… கூட்டிட்டுப் போ…”
“அப்ப எஸ்.ஐ. எதுக்கு என்னைக் கூட்டி வந்தாரு…” என்றான் ராஜாராமன்.
“ஐயா… நான் இவனுங்களைக் கொண்டாரல…” கேஸ் போடு போடுன்னு அந்த குண்டன் ரகள பண்ணான்.
“எஸ்.ஐ.சும்மாயிருங்க. என்று குறுக்கே விழுந்தாள் பேச்சி… அது சும்மா தமாசுங்க சாமி…”
“சரி தமாஸா ஒரு கேசு எழுதிக்கோய்யா…” என்றார் சாமி.
“சரிங்கய்யா…” என்று பேப்பா் பேனா சகிதமாய் நின்றான் எஸ்.ஐ.
”சாமி அது என் புள்ளைங்க…”
“ச்சீ… வாயை மூடு… ஏண்டா நீ யாரு…”
”என் அக்கா பிரியதர்சினி நாச்சியார், ஐ.பி.எஸ், உளவுத்துறை.
“சரி”
“எங்க அத்தை புருஷன் ரிட்டயர்டு சீப் ஜட்ஜ்”. .. ….. காலமாயிட்டாரு…”
”ஐயோ பாவம்… ஆமா நீ யாரு…”
“அதான் சொன்னேனே”
“என்ன சொன்னே… ஏண்டா நீ யாருன்னா அக்கா பேரு அத்தை புருஷன் பேரு சொல்றே… டேய் கருவாடு நீ யாரு..
”ஐயா என் பேரு பரகாலன்… என்ஜினியர்ன்னு சொல்லுவாங்களே அதுக்கு படிச்சிருக்கேன்… அப்படியே கம்பியூட்டர் தடவுற கூலி வேலை செய்றேன். மயிலாப்பூா்ல குடி.. எங்கப்பா நேவியில மேஸ்திரிங்கிற கூலி வேல.”
”கப்பல்ல ஏதுடா மேஸ்திரி வேல?”
”கேப்டன்னு சொல்லுவாங்க ஐயா…”
”கரெக்ட்…இவன் மேல எந்த கேசும் இல்லையா… பேரு பரகாலனா.. விட்டுரு”
“சரிங்கய்யா என்று பவ்யமாக பதில் சொன்னான் எஸ்.ஐ.
அப்ப என் மேல கேஸ் இருக்கா… நான் எதுக்கும் யாருக்கும் பயப்படமாட்டேன்.. பத்து கேஸ் போட்டாலும் கவலையில்ல…
பத்தா… உன்மேலே பதிமூணு கேஸ் இருக்குடா முட்டாப்பயலே… என்றார் சாமி.
“எம்மேலே”
“ஆமா”
“பதிமூணுகேஸ்”
“ஆமா”
”நீங்க போடப்போறீங்க… ஓகே ஆபிஸர் ஐ வாண்ட் டு நோ வாட்…”
”எனக்கு மராட்டி தெரியாதுடா முண்டம்…”
”நான் பேசுனது இங்கிலீஸ்…”
”பாரு இங்கிலீஸ்லே பேசினா கெட்ட வார்த்தையிலே திட்டினேன்னு கேஸ் போட்ருவாங்க… வாயை மூடு…”
“எழுதிக்கோய்யா… ஓவர் ஸ்பீடு… வண்டிக்கு ஆர்.ஸி.இல்லை… திருட்டு வண்டி.. இவனுக்கு லைசன்ஸ் இல்ல… அப்புறம் முக்கியமா போலிஸ் சார்ஜன்ட் ஒருத்தன் மேல பைக் விட்டு…”
”மேலே இல்லை நடுவிலே” என்று திருத்தினான் ராஜாராமன்.
“சரி நடுவில விட்டதிலே அந்த ஆள் ஆண்மை முழுசும் இழந்துட்டாரு”

என்னது… முழு ஆண்மையும் இழந்துட்டாரா… அவருக்கு அம்பத்தியேழு வயசு… எப்படி சார் முழு ஆண்மை இருக்கும்…” “சரிய்யா… முக்காலே மூணு வீசம் ஆண்மை இழந்துட்டாருன்னு எழுதிக்கோ…”
”நான் இதை ஒத்துக்க முடியாது…”
”அவரு ஆண்மை இழக்கறதை நீ ஏன்யா ஒத்துக்க மாட்டே” …”நான் அவரு மேலே இடிக்கல்லியே”
நடுவிலே உட்டே… பயத்திலே அவரு மூச்சா டேங்க் பிச்சிகிச்சு… பேண்ட்ட அவுத்தா அவரு பீச்சாவும் பிச்சிகிச்சு…
”பீச்சான்னா?”
“முன்னாலே போனா மூச்சா.. பின்னாலே போனா பீச்சா… இது கூடத்தெரியாம என்ன ஆளுடா நீ… முன்னாலே, பின்னாலே நடுவிலே எல்லாமே அவனுக்கு போயிடுச்சு அதுவும் முழுசா…”
“அவரோட முழு ஆண்மை போயிடுச்சுன்னு வேற சொன்னீங்க.. எப்படி சார் போகும்?
“பைக் ஏறிப்போச்சு.. என்னைக் கேட்டா எனக்கு எப்படித் தெரியும் அவரு சொல்லிட்டாரே…
எத வச்சி சொன்னார்?”
“அவரு எத வச்சி எப்படி டெஸ்ட் எடுத்தாருன்னு எனக்குத் தெரியாது… ஆனா அவருக்கு முழு ஆண்மை போயிருச்சாம்… புலம்புறாருய்யா… விடுவமா… யோவ் எழுதுய்யா.. அவ சம்மாரம் ரோட்ல விரிச்சிப்போட்டு அழுவுறா…”
“விரிச்சிப்போட்டு” என்று கேள்வி எழுப்பினான் ராஜாராமன்.
”தலையை விரிச்சுப் போட்டு” என்று சாமி விளக்கமளித்தார்.
“அந்த ஆளுக்கு முழு ஆண்மை போனதா சொல்றதை நான் விடமாட்டேன்” என்கிறான் ராஜாராமன்.
“லேகியம் வாங்கிக் கொடுத்து சரிபண்ணப் போறியா. செக்சன் 303, செக்சன் 304, 306 போடுங்யா… அவன் பம்பர் போச்சி… டிக்கி போச்சு” என்றார் சாமி.
பேச்சி அலறினாள்… “சாமி சாமி… டேய் வாங்கடா…” என்று இருவரையும் வெளியே தள்ளிக் கொண்டு போய் தள்ளினாள் பேச்சி… சொத்தென்று ராஜாராமன் கீழே விழுந்து கிட்க்க பேச்சி பேசிக்கொண்டே உள்ளே போனாள்… “ஓடிடுங்கடா… கொலக்கேஸ் போட்டு உள்ளே வச்சிடுவாங்க… உள்ளே ஓடினாள்.
“சாமி சாமி… அவங்க ரொம்ப பெரிய எடம்.. ஏழு காம்ப்ளக்ஸ்… ஆறு பங்களா…. அத்தைகாரி மனிதஉரிமை கமிஷன்லே…”
சரோஜா உள்ளே வந்தாள்… “பொட் என்று தலையில் போட்டாள்…“அடங்குடி… நீயாங்காட்டியம் சாமி சும்மாயிருக்கார்… இவனை உள்ள வைக்கச் சொன்னதே இவன் அக்காகாரிதான்… ஏங்க ரொம்பப் படுத்தராங்க… இவ தொந்தரவு தாங்க முடியல…ட்டீய்… அவரு லட்டி பாத்திருக்கே இல்ல”.
“அவருது எல்லாம் எனக்குப் பழக்கம்தான்… நீ கூவாதே…” என்றாள் பேச்சி.
“ஏய் நீ போ” என்று சரோஜாவை வெளியெ அனுப்பினார் சாமி…
”ஏண்டி எருமை… போலிஸ்காரண் எலிப்புழுக்கையும், எள்ளுப் புண்ணாக்கும் விக்குறதுக்கு வரான்னு நெனச்சியா… மூணு நாளா இவன் அட்டகாசம் தாங்க முடியல… இவன் அக்கா சொல்லி காத்திருந்து பிடிச்சோம்… நடுவிலே வந்துட்டு கழுத்தை அறுக்கிறே”.
“எனக்கு உங்க ரகசியமெல்லாம் தெரியாதுப்பா…”
“ஆமா இந்த போலிஸ்காரி எனக்கு ஏன் சொல்லல… அத்த உடுங்க.. ராத்திரி நேரத்திலே இவளுக்கு உங்க கூட என்ன டூட்டி…?”
“நீ முதல்ல வெளியே போ…”
“பாரு… அவனுங்களுக்கு சப்போர்ட் பாண்ணா கொன்னுடுவேன்… அவனுங்க விஷயத்தை சரோஜா பேசுவா…” நீ குறுக்கு சால் ஓட்டாதே…..
“பேசுவா…பேசுவா… ஒரு நாளைக்கு வச்சிக்குறேன்… ரெண்டு பேருக்கும் இருக்குடி… சக்களத்தி… டீ…”
”பேச்சி முகத்தை நொடித்துவிட்டு வந்தாள்.
”டேய் நீங்க இன்னமும் போகலியா… ஏய் ஆட்டே இவங்களை மைலாப்பூர்ல விடு”
”நாங்க உங்க புள்ளைங்க அக்கா”
“நீங்க என் புள்ளைங்களே இல்லே… ஆள் மாறிப்போச்சு… உங்களை விட்டாச்சில்லே நீங்க போங்க… கிளம்புங்கடா…”
“இது அந்தர் பல்டி அநியாயம்” என்றான் ராஜாராமன்.
“போங்கடா என்று ராஜாராமனையும், பரகாலனையும் ஆட்டோவிற்குள் முரட்டுத்தனமாய்த் தள்ளித் திணித்துத் துரத்தினாள் பேச்சி.
பின்னால் கேலிச்சிரிப்புடன் சரோஜா நின்றிருந்தான்.
ஆத்திரத்துடன் தாழ்ந்த குரலில் பேச்சி கடுகடுத்தாள். ”பாரு… சாமியை நீ கைக்குள்ளே போட்டுக்கலாம்னு நினைச்சே மவளே சாவுதான்… சங்கு ஊதிடும்… குப்பத்திலே வச்சு பொதச்சிடுவுன்… வேலையை மாத்திரம் பாரு…”
“ட்டீங் கொய்யால… சவுண்டு உட்ரே… கவனிக்கிறேன்டி… எங்கைல சிக்கினே அன்னைக்கு இருக்குடி உனக்கு… அறுத்துடுவேன்… அறுத்து சாமி சொன்னாலும் விடமாட்டேன்… என்னையா மிரட்ரே… நான் போலிஸ்காரிடி” என்று முஷ்டியை உயர்த்தினாள் சரோஜா…
”அங்க என்ன சத்தம்” என்று சாமி சத்தம் போட்ட போது எல்லாருமே ஓடியிருந்தார்கள்.
* * * * * * *
இந்தப் போட்டோவைப் பாருங்க அத்தே…… பத்மாவதி பிரியாவின் கையில் இருந்த செல்லை வாங்கினாள்… “ஜட்டியோட கூட ராஜா மாதிரிதான் இருக்கான்டி…”
“எல்லாம் சரி ஸ்டேஷன்லே ரகளையாம்… முதல்ல வண்டியை வித்துடணும்… இல்லே புள்ள நமக்கில்லே…”
“விடுடி அவன் வர்ற நேரம்… இவர்கள் பேசிக்கொண்டிருந்போதே புயல் மாதிரி உள்ளே வந்தான் ராஜாராமன்.
“அக்கா… அக்கா… ஒரு சம்பவம் நடந்து போச்சு… இந்த பீச் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இருக்கானே…”
“இர்றா… இரு… இதென்ன உடம்பு இந்த நாத்தம் நாறுது… நீ கம்பியூட்டா் வேலைக்கு போனியா… இல்ல கக்கூஸ் கழுவப் போனியா..?”
“இல்லக்கா இதக் கேளேன்… அந்த பீச் ஸ்டேஷன்”
”ஏண்டா பதற்றே… எதுவா இருந்தா என்ன… பாரு முதல்ல குளி… அத்தை நாத்தம வரல்லே… சோபாவிலே உட்காரதேடா சனியனே…”
”போடா கண்ணு… அக்கா சொல்றாள்ல அவ் இப்பத்தான் குளிச்சா… இவளைத் தொடதே… போய் குளிச்சி பெருமாளசை் சேவிச்சிட்டு வந்து பேசு… ராத்திரி பூரா பேசு.. உன்னை யாரு கேக்குறது… போ… ராஜா… கண்ணு இல்ல…”
”அத்தை …. உன்னைச் சொன்னே்… அவன் மதிக்கல… திமிர் பிடிச்ச ஆளு…”
“அத விட்ரா.. நீ மொதல்ல பாத்ரூம்போடா…”
அவனை பாத்ரூம் வரை தள்ளிக் கொண்டு போய் உள்ளே தள்ளினாள் பிரியா…
ஹாலுக்கு வந்தாள். “எமப்பயல்… செய்யறதெல்லாம் இவன் மத்தவன் மேலே தப்பு சொல்றது… கொய்யால வச்சிக்கரண்டா…”
“ச்சீ… என்ன பாஷைடி இது….”
அடுப்படியிலிருந்து தாயாரு வெளியில் வந்தாள்.
“பிரியா ஒரு சமாச்சாரம்… அந்த சாமி இன்னைக்கு மார்கட் வந்திருந்தான்… இவன்தான் இங்க இன்ஸ்பெக்டராம்… எவ்வளவு ஆசையா இருக்கான் தெரியுமா… உன்னையப் பாக்குறதுக்கு”.
“கெட்டது குடி என்றாள் அத்தை. இது ஒரு ஜோக்கர்டி… கரெக்டா சீன் குறுக்கே வந்துடுவாள்…”
“அம்மா… அந்த பால்காரி நாலு நாளா கூப்பிடுறாளே போகக்கூடாது…”
“அதாண்டி புறப்பட்டேன்… அவன் வெளியில் வந்ததும் கவனிச்சுக்கோ… மேலேயும் கீழேயும் குதிப்பான்…”
“நடுவிலே விட்டு கலகம் கூடப் பண்ணுவான்…”
“நீ என்னடி சொல்றே…”
“நீ போயிட்டு வாம்மா நான் பாத்துக்குறேன்”
“சமயத்துல நீ பேசறது எதுவும் புரியறதில்லேடி”
தாயாரு வெளியே போக இருவருக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது…
”மேடம்” என்ற சத்தம் கேட்க இருவரும் வெளியே வந்தார்கள்…
ஒரு எஸ்.ஐ. ”அடுத்த கஷ்டம்“
“என்ன சார்”
ஒரு விரைப்பான சல்யூட்டிற்குப் பின் அந்த போலிஸ்காரன் ஒரு கவரை நீட்டினான்.
“வண்டி சாவிங்க மேடம்”
பின்னால் திரும்பி வீட்டிற்குள் பார்த்தாள் பிரியா. சுனாமி வந்தால்கூட ராஜாராமன் கால்மணிநேரம் கழித்துதான் வெளியே வருவான்.
”ஐநூறு ரூபா அபராதம். போட்டுக் கட்டியாச்சு மேடம்…”
“நாலு சாத்தறது…”
ஐயோ… தொடுவமா… மேடம் உள்ளே வைக்கவே சாமிக்கு மனசில்லே… அவன் குழந்தைனார்…”
“துள்ளுவானே””வேற எவனாவது இவர் மாதிரி பேசியிருந்தா சாமி தோலையே உரிச்சிருப்பார்…”
”சரி நீங்க போங்க…”
போலிஸ் சல்யூட்டோடு பின் வாங்கினான்…
இன்னொருத்தன் உள்ளே வந்தான்…
யார்ரா நீ…
“அம்மா வண்டி கொடுக்கிறதா சொன்னீங்களாம்… மெக்கானிக் அனுப்பினாரு…”
”நாலு நாள் கழிச்சுதானே வரச் சொன்னே்… ஏன் முன்னே வந்தே… ஓடிரு… வண்டி அது இதுன்னு எவனும் வந்திராதீங்க…”
அவன் ஓடிப்போக பிரியா திரும்பியபோது ராஜாராமன் ஹாலுக்கு வந்திருந்தான்.
”குளிச்சியா…பெருமாளைச் சேவிச்சியா… அங்க தளிகை வச்சிருந்தேன் எடுத்துக்கோ…”
“அக்கா அங்க ஸ்டேஷன்லே”
“மொதல்ல தளிகையை எடுத்துக்கோடா… இதோ காப்பி கலந்துட்டு வந்துடறேன்… பாவம் சுத்திட்டி வர்றே.. காப்பி சாப்புட்டு அத்தைகிட்ட பேசிட்டீரு…”
பிரியா உள்ளே போக பத்மாவதி சாதாரணமாக ஆரம்பித்தாள்.
“சொல்லுடா… உனக்கு என்ன பிரச்சனை… மொல்ல எங்க பிரச்சனைனாலும் என் பேர சொல்லு… இல்ல உங்கக்கா பேரச் சொல்லு விஷயம் முடிஞ்சிரும்… இல்லையா…” என்று பத்மாவதி ஆரம்பிக்க ராஜாராமன் தளிகை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
”நெய் வழிய ஊத்தியிருப்பாளே…”
“இரு அத்தை சாப்பிடும்போது குறுக்கே பேசாதே… என்றான் ராஜாராமன்.
அப்படி இறங்கு என்று கருவிக் கொண்டாள் கிழவி… நூத்தி முப்பதுலேயே உட்ரே… அவ வந்து உட்ரா பாரு… “ஏண்டா… ஏதாவது பிரச்சனைன்னா எங்களுக்கு போன் பண்ணக் கூடாது…?
“என் ஸெல்லுலே சார்ஜ் இல்லே… அவன் ஸெல்லுலே காசில்லே…”
”சிம்மை மாத்திப் போடறது… அதுகூடத் தெரியாது உனக்கு..”
“ஆமாம் இல்லே… என்று சாப்பிடுவதை நிறுத்தினான்… எனக்கு ஞாபகம் வரலை… ஒரே டென்சன்… அதான்… அப்படி செஞ்சிருக்கலாம்… இல்லத்தே…”
பிரியா ஒரு காபியுடன் திட்டிக்கொண்டே வந்தாள்…”நாசமாய்ப்போனவனே எதுக்கு எம்டெக் படிச்சே… ஒரு சின்ன விஷயம் மூளைக்கு எட்டலை… இதுலே உனக்கு கல்யாணம் வேற பண்ணணும்… எவ சிக்கப்போறாளோ… எவளுக்கு விதிச்சிருக்கோ… பெருமாளே… இவன் எனக்கு வாய்ச்சானே…”
புயல் போலிஸ் ஸ்டேஷன் தாண்டி வீட்டையும் தாண்டிவிட்டதால் அது திரும்பி சரியான திசைக்கு மாற்றப்படாது என்று திட்டமாக ரமணன் சொல்லிக் கொண்டிருந்தார். பரியாவும், கிழவியும் இவன் பேசின எதுவும் காதில் வாங்காமல் மூச்சு விடாமல் அர்ச்சனை பண்ண ஆரம்பிச்திருந்தார்கள். சன்டீவியின் தெய்வத்திருமகள் பிரகாஷ் மாதிரி ராஜாராமன் “அத்தே நானு…” “அக்கா நானு…” என்பது தவிர வேறு எதுவும் பேசத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்… இரண்டு பேரின் டெக்னிக்கைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவனுக்கு புத்தியில்லை… ஏனென்றால் அவன் அம்மாஞ்சி…
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக