எங்கிருந்தோ வந்தாள் - பகுதி - 4

 என்னடி சொல்ற நிஜமாத்தனா என்றாள் ஜெனியின் மூத்த அக்கா ஜாஸ்மின் .ஆமாடி நிஜமாத்தான் என்றாள் ஜெனி .சூப்பர்டி யார் கூட கார்த்திக் கூடயா என்றாள் ஜாஸ்மின் .கார்த்திக் கல்யாணம் ஆகி 1 வருசத்துக்கு மேல ஆக போகுது என்றாள் ஜெனி .அப்ப யார் கூடடி என கேட்டாள் ஜாஸ் .ராஜ் கூட என்றாள் ஜெனி .அது யாருடி ராஜ் ,எத்தன நாளா பழக்கம் என கேட்டாள் .ராஜ் ஒரு நாள் தான் பாத்தேன் அதுல இப்படி ஆகிடுச்சு என்றாள் ஜெனி ,ஏண்டி ஒரு நாளே அவன் உன்னைய மயக்குனனா இல்ல நீ அவன் கிட்ட மயங்கிட்டியா என்றாள் ஜாஸ்மின் சிரித்து கொண்டே .இங்க பாரு ஜாஸ் இப்ப அது மேட்டர் இல்ல நான் என்ன பண்ண என கேட்டாள் ஜெனி எரிச்சலாக .

உன் பேவரைட் அக்கா ஜெசி மேடம் என்ன சொன்னங்க என்றாள் ஜாஸ் .அவ சொன்னது தேவை இல்ல நீ சொல்லு என்றாள் ஜெனி .நீ அவ சொன்னத சொன்னாதான் நான் சொல்வேன் என்றாள் .ஓகே அவ என்ன சொன்னன்னா கருவ ஆபார்சன் பண்ண சொன்னா என்றாள் ஜெனி .நினைச்சேன் அதான் ஒரு பொருளோட அருமை தெரியாதவங்களுக்கா தான் அது கிடைக்குமாம் என்றாள் ஜாஸ்மின் .புரியல என்றாள் ஜெனி .


சரி நீ என்ன யோசிச்சு வச்சு இருக்க என்றாள் ஜாஸ்மின் .எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஒரே குழப்பமா இருக்குடி என்றாள் ஜெனி .குழந்தைய கொல்லாத ஜெனி ப்ளிஸ் என்றாள் ஜாஸ் .பட் எனக்கு பிடிக்கலையா குழந்தை இப்ப பெத்துக்கிறது இது என்னோட கேரியரைய பாதிச்சாலும் பாதிக்கும் என்றாள் ஜெனி .
இங்க பாரு ஜெனி உனக்கு என்னைய பத்தி தெரியும் கல்யாணம் முடிச்சு 7 வருஷம் ஆக போகுது இப்ப வரைக்கும் குழந்தை இல்ல அவருக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு பட் எனக்கு தான் ஒரு கரு கூட தங்க மாட்டிங்குது நான் கூட அவர வேற கல்யாணம் பண்ணிக்க சொன்னேன் இன்னும் பிரங்கா சொல்ல போனா உன்னைய கூட அவருக்கு கட்டி வைக்கலாம்னு நினைச்சேன் என்றாள் ஜாஸ் ,

அடி பாவி என்றாள் ஜெனி ,ஆனா அவரு நான் உன்னய பொண்ணு பாக்க வரும் போது அவ ஸ்குள் பொன்னா இருந்தா அப்ப அவள என் மகளா தான் நினைச்சேன் அப்படி பட்டவள என்னால முடியாதுன்னு சொல்லிட்டாரு என்றாள் ஜாஸ் .

எனக்கு தெரியும் மாமாவ பத்தி என்றாள் ஜெனி .அதுக்கு அப்புறம் அவர் ஒரு ஐடியா சொன்னாரு நாம ஏன் ஒரு பொண்ண இல்ல பையன தத்து எடுத்து வளக்க கூடாதுன்னு எனக்கும் அது பிடிச்சு இருந்துச்சு அதுக்கு ஏத்த மாதிரி கடவுளா உன் மூலம் ஒரு வழி கொடுத்து இருக்கார் என்றாள் ஜாஸ்மின் ,ஒ அப்ப நான் உனக்கு குழந்தை பெத்து கொடுக்கன்ம்னு நினைக்கிறியா என்றாள் ஜெனி .

இங்க பாரு ஜெனி நான் எனக்கு குழந்தைய பெத்து தான்னு கட்டயாபடுத்தள ஒரு உயிரா கொல்லாதன்னு தான் சொல்றேன் என்றாள் ஜாஸ்மின் .அதுக்கு 10 மாசம் கஷ்டபட சொல்றியா என்றாள் ஜெனி .போடி இவளே அது கஷ்டமாடி அதாண்டி பொண்ணா பிறந்ததுக்கு அர்த்தமே அது கிடைக்காம என்னைய மாதிரி எத்தன பேர் இருக்காளுக தெரியுமா உனக்கு கேரியர் ரொம்ப முக்கியம்னா குழந்தைய என் கிட்ட கொடு நான் அத தங்கமா வளக்கிறேன் ,

ஒரு வேல உன் குழந்தை உனக்கு பிடிச்சு இருந்தா நீ எப்ப வேணும்னாலும் வாங்கிகிலாம் இங்க பாருடி ஒரு வேல நாளைக்கு நீ பிடிச்சவனையே கல்யாணம் பண்ணி அப்ப குழந்தை உண்டாக லேட் ஆச்சுன்னா அந்த மாதிரி அனுபவம் உள்ள ஆள் எனக்கே தெரியும் என்றாள் ஜாஸ்மின் ,யாரு நீயா என்றாள் .இல்ல என் புருஷன் அவர் காலேஜ் படிக்கும் போது அவர் லவ்வர் கூட இப்படி ஆகி ஆபர்சன் பண்ண வச்சுட்டாரு அந்த பாவத்துக்கு தான் அவர் இப்ப எனக்கு குழந்தை பிறக்கலைன்னு அழுகாராறு .

நீ ஏன் அந்த பாவத்த செய்யுற என்றாள்.என்னடி சொல்ற அதுக்குன்னு ஊர் ,பேர் தெரியாதவன் பிள்ளைய வயித்துல சுமக்க சொல்றியா என்றாள் ஜெனி .சரி அப்ப போயி பழகு அவன் கூட பிடிச்சு இருந்தா கல்யாணம் பண்ணிக்கோ என்றாள் ஜாஸ்மின் .என்ன காமெடி பண்றியா என்றாள் ஜெனி .யே நான் சீரியசா சொல்றேன் பிடிச்சு இருந்தா அவன கல்யாணம் பண்ணி குழந்தையோட சந்தோசமா இருங்க என்றாள் ஜாஸ்மின் .


யே அவன் வேலை இல்லாத வெட்டி பையன் என்றாள் ஜெனி .அதுனால என்ன ஜெசி ஆள் கூட தான் வேலை இல்லாம இருக்காரு என்றாள் ஜாஸ்மின் ,அதான் ஜெசி நிம்மதி இல்லாம இருக்கா என்றாள் ஜெனி .ஒ நிம்மதி இல்லாம தான் ரெண்டு குழந்தைய பெத்துருக்கலொ என்றாள் ஜாஸ் .அதுகலாலயும் தான் நிம்மதி இல்லாம இருக்கா சும்மா என்றாள் ஜெனி .சும்மா கத விடாதடி என்றாள் ஜாஸ் .

நிஜமாத்தான் என்றாள் ஜெனி .சரிடி எல்லாததையும் மறந்துடு உன்னால ஒரு உயிர கொல்ல முடியுமா என்றாள் ஜாஸ் .இது உயிர் இல்லையே கரு தானே என்றாள் ஜெனி .ஒ அப்படியா சரிடி இனி நான் என்ன சொன்னாலும் எனக்காகன்னு சொல்வ அதுனால நீ கிளம்பு உனக்கு எல்லாம் பட்டாதான் புத்தி வரும் என்றாள் ஜாஸ்மின்

ஜெனி குழப்பத்தோடு வீட்டிற்கு கிளம்பினாள் .காரை ரிவர்ஸ் எடுக்கும் போது ஒரு நாய் குட்டியின் மீது அவள் தெரியாமல் ஏற்றி விட பதறி அடித்து வெளியே வந்தாள் .அந்த நாய் குட்டியை தூக்கி கொண்டு வேகமாக கால்நடை மருத்துவமனைக்கு ஓடினாள் .

டாக்டரிடிம் சேர்த்து விட்டு பப்பிக்கு ஒன்னும் இல்லையே ஒன்னும் ஆகதுல வயித்துலேயே ஏத்திட்டேன் இடியட் இடியட் என்று அவள் தன்னை தானே திட்டி கொண்டாள் .ஒன்னும் ஆகாதுங்க வெளியே போயி கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க டிரிட்மெண்ட் முடிச்சுட்டு கூப்புடுரென் என்றார் .பின் ஜெனி வந்து வெளியே உக்கார பின்னாலே ஜாஸ்மின் வந்தாள் .

என்ன மேடம் எதுக்கு இங்க வந்திங்க என்றாள் .நம்ம பப்பியே நான் தெரியாம ஏத்திட்டேன்டி என்றாள் ஜெனி மெல்ல அழுது கொண்டே .சரி தெரியாம தான எத்துண அப்படியே விட்டு இருக்கலாம்ல என்றாள் ஜாஸ் .என்னடி சொல்ற செத்து இருக்கும்டி என்றாள் ஜெனி ,செத்தா செத்துட்டு போகட்டும் என்றாள் ஜாஸ் .

என்னடி சொல்ற அது ஒரு உயிர்டி வாய் இல்லாத ஜீவன் அதுவும் நம்ம பப்பிடி இன்னும் சொல்ல போனா அது உன் பப்பி ஏண்டி இப்படி பேசுற என்றாள் ஜெனி .ஜாஸ்மின் சிரித்து கொண்டே அவள் அருகே உக்காந்தாள் .ஓகே மேடம் அது உயிருன்னா இது என்ன என்று ஜெனி வயிற்ரை தொட்டு ஜாஸ்மின் கேட்க ஜெனிக்கு என்ன சொல்வது என்று புரியமால் முழித்தாள் .

இதுவும் வாயில்லா ஜீவன் தான் ஆனா இதயத்துடிப்புல உன் கிட்ட பேசும் கை வச்சு கேட்டு பாரு .இது உனக்கு மட்டும் தான் சொந்தம் நீ எனக்கு குழந்தைய தர வேணாம் ,ஆனா கொன்னுடாத இவளவு தான் நான் சொல்வேன் இப்பதைக்கு எனக்கு சொந்தமான அந்த வாயில்லா ஜீவன நான் எடுத்துட்டு போறேன் ,உனக்கு சொந்தமான ஜீவன நீ வச்சு இருக்கனுமா வேணாமான்னு நீயே யோசிச்சுக்கோ என்று சொல்லி விட்டு ஜாஸ்மின் நாயை வாங்கி கொண்டு கிளம்பினாள் .ஜெனியும் அழுது கொண்டே வீட்டிற்கு வந்தாள் .வீட்டிற்கு வந்து ரூமை சாத்தி கொண்டாள் .நீண்ட நேரம் அழுது விட்டு பிறகு கண்ணாடி முன் போயி நின்று தன் சூடியை தூக்கி தன் வயிற்ரை தடவி பார்க்க அப்போது மெல்ல குழந்தையின் இதய துடிப்பு அவள் கைக்கு உதைப்பது போல் உணர என்ன என்ன உதைக்கிற அதுக்குள்ள உனக்கு கால் முளைசுடுச்சா இங்க பாரு இந்த மாதிரி உதைச்சு எல்லாம் என் மனச மாத்தணும்னு நினைக்காத நான் ஒன்னும் நல்லவ இல்ல,என்னைய மாதிரி ஒருத்தி உனக்கு அம்மாவா கிடைக்கிறதுக்கு நீ பிறக்கமையே இருக்கலாம் அண்ட் உங்க அப்பன் அவன் எல்லாம் ஒரு ஆளே இல்ல சோ சாரி பேபி என்னைய மன்னிச்சுடு என்று ஜெனி இங்கு அழுது கொண்டு இருக்க அங்கு ராஜை தூக்கி வைத்து கத்தி கொண்டு இருந்தார்கள் .டேய் விடுங்கடா முதல இந்த விக்கிய அடிக்கணும் இதுக்கு தான் பொண்டாட்டி தாசன் கிட்ட எந்த ரகசியமும் சொல்ல கூடாது என்றான் ராஜ் .எது எப்படியோ சாதிச்சுட்ட என்றான் பிரபு .டேய் நான் என்னமோ ஆல்ப்ஸ் மலைல ஏறி கொடி நட்டுன மாதிரி சொல்ற என்றான் ராஜ் .இல்லையா பின்ன இந்த காலத்துல குழந்தை உருவாக்குறது தான் பெரிய சாதனையே நாம கூட அத வச்சு எவளவு கிளுகிளுப்பான கதை எல்லாம் எழுதி இருக்கோம் என்றான் மதி .


அட சீ முண்டம் எந்த நேரம் எத பத்தி பேசுது பாரு என்றான் பிரபு .எழுதுனதே அந்த முண்டம் தான் அதே கத்துது என்று மெல்ல முனக என்னடா சொன்ன என்று பிரபு கத்த ஒன்னும் இல்ல என்றான் மதி .டேய் நீ என்ன யோசிச்சு வச்சு இருக்க என்றான் பிரபு .எனக்கு யோசிக்க தெரியாம தான் எங்க அண்ணன் விக்கி கிட்ட கேட்டேன் என்றான் ராஜ் .

உங்க அண்ணன் என்ன சொன்னாரு என்றான் பிரபு . அவன் என்ன சொன்னான் அந்த பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணி குழந்தையோட சந்தோசமா இருன்னு சொன்னான் என்றான் ராஜ் .எப்படிடா ஏதோ ஒரு தடவ நடந்து போச்சு அத வச்சு லவ்வுன்னு சொன்னா நல்லவா இருக்கும் என்றான் ராஜ் .டேய் நீங்க ரெண்டு பேர் தான் சேரணும்னு அந்த விதியே குழந்தையா உருவாகிருக்கு உன் கதை போல என்றான் பிரபு .

போடா இவனே கதைக்கு வேணும்னா நல்லா இருக்கும் வாழ்க்கைக்கு நல்லா இருக்காதுடா என்றான் ராஜ் .ஏன் நல்லா இருக்காது என்றான் பிரபு .ஏனா அவ இஞ்சினியர் ஐடில வேலை பாக்குறா நான் சாதாரண வரலாறு வெட்டியா இருக்கேன் என்றான் ராஜ் ,அதுனால என்னடா என்றான் பிரபு .

ஏண்டா தமிழ் டிப்பர்ட்மெண்ட் ப்ரியாவே என்னைய பாக்கல இவ எப்படிடா என் கூட சேருவா என்றான் ராஜ் .அதுனால என்னடா அவ வயித்துல உன் குழந்தை வளருது அது ஒன்னே போதும் என்றான் பிரபு .டேய் நீ எந்த காலத்துல இருக்க அவ இந்நேரம் கருவ அழிச்சு இருப்பா என்றான் ராஜ் .ஏண்டா என்றான் பிரபு .

இது என்ன 80 ஆ இல்ல நான் எழுதுற ப்ரியா என் காதலி கதையா அதலாம் அவ இந்நேரம் பண்ணி இருப்பா அது மட்டும் இல்லாம என் மாதிரி ஆள் கருவ எல்லாம் ஏவ வச்சு இருப்பா சொல்லு என்றான் ராஜ் .டேய் அவள ஆபார்சன் பண்ண விடாதடா என்றான் பிரபு .டேய் அது அவ இஷ்டம்டா என்றான் ராஜ் .

அப்படி விடாத மச்சி அது உன் குழந்தையும் தான் சரி உனக்கு தான் குழந்தைக ரொம்ப பிடிக்கும்ல என்றான் பிரபு .பிடிக்கமையா எல்லா கதைலயும் குழந்தை கொண்டு வரேன் என்றான் ராஜ் .அப்புறம் என்ன அவ கிட்ட பேசி லவ் பண்ணி ஒரு அண்டர் ஸ்டேன்டிங் வாங்க என்றான் பிரபு .அட போடா என்று சொல்லி விட்டு கதவை சாத்தினான் ராஜ் .உள்ளே சென்ற பின் அவனுக்கு பிரபு சொன்ன வார்த்தைகள் கேட்டது .

உனக்கு குழந்தைக பிடிக்காதா என்று அவன் சொன்னது ஞாபகம் வர அயோ குழந்தைக பிடிக்காம எவன் ஆச்சும் இருப்பனா ம்ம் என்று அவன் குழந்தைகளை நினைத்து கொண்டு தூங்க அவனுக்குள் பாட்டு ஓடியது உனக்கு என்ன வேண்டும் சொல்லு என்று என்னை அறிந்தால் அஜித் போல அவன் அவள் கற்பனை மகளோடு செல்ல

அடுத்து ஈனா மீனா டிக்கா பேபி மம்மி நான் தானே டாடி நான் தானே என்று தேறி விஜய் போலவும் அவன் கற்பனை செய்து அதை தூக்க கலக்கத்தில் பாட அங்கு வந்த அவன் நண்பர்கள் எல்லாரும் சிரித்தனர் .எழுந்த ராஜ் எதுக்குடா சிரிக்கிறிங்க என்றான் ராஜ் .உனக்கென வேணும் சொல்லு என்று ஜான் பாட தேறி பேபி என்று மதி கத்தினான் .போங்கடா என்று ராஜ் வெட்கப்பட்டான் .

சரி சரி அடுத்து என்ன பண்ணணுமோ பண்ணு என்றான் பிரபு சிரித்து கொண்டே .ஓகேடா நான் இப்பவே கிளம்புறேன் என்று குளித்து விட்டு நீட் ஆக இன் செய்து கிளம்பினான் .பின் சென்ட் அடித்து கொண்டான் .இப்படி போயிருந்தா என்னைக்கோ வேலை கிடைச்சு இருக்கும் என்றான் மதி ,நீ போ மச்சி வாழ்த்துக்கள் என்று பிரபு சொல்ல எல்லாரும் அதே போல் கத்தினார்கள் .

பின் வெளியே சென்ற ராஜ் ஒரு ரோசை வாங்கி கொண்டு என்ன என்னவெல்லாம் பேசுவது என்று யோசித்து கொண்டே கிளம்பினான் ,
ராஜ் ஜெனி வீட்டு கதவை தட்டினான் .டேவிட் வந்து கதவை திறந்தான் .அவன் இருக்கும் தோற்றத்தை பார்த்து யார் பாஸ் நீங்க ஏதும் விக்க வந்து இருக்கிங்களா என்றான் டேவிட் .இல்ல சார் இது ஜெனிபர் வீடு தானே என்றான் .இல்ல இது என் வீடு என்றார் .அப்ப ஜெனிபருன்னு யாரும்அப்படி யாரும் இல்லப்பா என்றான் .ஓகே சார் வீடு மாறி வந்துட்டேன் என்று சொல்லி வீட்டு கீழே இறங்க யே யே இங்க வாப்பா சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன் .ஜெனிபர் என் பொண்டாட்டி சிஸ்டர் இங்க தான் இருக்கா நீ யாரு அவ கூட வொர்க் பண்ற பையனா என்றார் .இல்ல சார் சும்மா தெரிஞ்சவன் என்றான் ராஜ் .பேசி கொண்டு இருக்கும் போதே ஜெசி வர யார் இந்த பையன் என்றாள் .உன் தங்கச்சிய தேடி வந்து இருக்காரு என்றான் .


யாருங்க நீங்க என்றாள் ஜெசி .நான் தான் ராஜ் அன்னைக்கு மேரேஜ் அப்ப கூட மீட் பண்ணோமே என்றான் ராஜ் .ஒ நீதானா அது இவன பிச்சைக்காரன்னு சொன்னா பாக்க பணக்காரன் மாதிரி வந்து இருக்கான் .அது சரி நாய் பர்மா பஜார்ல டிரஸ் எடுத்து போட்டு டிப் டாப் ஆகி வந்து இருக்கு போல என்று நினைத்து கொண்டு இருந்தாள் .என்ன மேடம் என்னைய ஞாபகம் இல்லையா இப்படி யோசிக்கிறிங்க என்றான் ராஜ் .


இல்ல கொஞ்சம் ஞாபகம் இருக்கு அவளவு தான் சரி என்ன விஷயம் என்றாள் ஜெசி .இல்ல ஜெனிய பாக்கணும் என்றான் .ம்ம் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு ஜெனி ஜெனி உன்னைய தேடி ஒரு கெஸ்ட் வந்து இருக்காங்க என்றாள் ஜெசி .யாரு இந்த வரேன் என்று கண்ணை கசக்கி கொண்டே அவள் வர என்ன இவ எப்பயுமே சூடிதார்ல வரா பரவல அப்படியே மடனா செபாஸ்டின் மாதிரி தான் இருக்கா என்று நினைத்து கொண்டு சைட் அடித்தான் .

ஜெனிக்கு அவனை பார்த்தும் வாடா உன்னைய தான் தேடி கிட்டு இருந்தேன் இன்னைக்கு நீ செத்தடா என்று ஜெனி நினைத்து கொண்டு பொய்யாக சிரித்தவாறு வாங்க ராஜ் என்ன இந்த பக்கம் வாங்க உள்ள வாங்க ஜெசி காப்பி இருந்தா கொண்டு வா என்றாள் ஜெனி .இல்லைங்க பரவல என்றான் ராஜ் .

சரி ஜெசி காப்பி வேணாமா அவருக்கு என்றாள் .என்ன இது ஒரு பேச்சுக்கு சொன்னா நிஜமாவே உள்ள கொண்டு போயிட்டா என்று நினைத்தான் .சரி சொல்லுங்க ராஜ் என்ன விஷயம் என்றாள் .அது கொஞ்சம் உங்க கிட்ட தனியா பேசணும் என்றான் .ஓகே வாங்க பின்னால தோட்டத்துக்கு போவோம் என்றாள் .சரிங்க என்றான் .

இருவரும் தோட்டத்திற்கு செல்ல ராஜ் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று தெரியமால் 10 நிமிடம் அமைதியாக இருந்தான் .என்னங்க சொல்லுங்க என்றாள் ஜெனி .அது வந்து

ஒரு நிமிசம்ங்க என்று ஜன்னல் வரை சென்றாள் ஜெனி .யே ஜெசி கண்ணாடி சன்னல் வழியா எட்டி பாக்காத போடி உள்ள என்றாள் ஜெனி .சும்மா ஒரு பாதுகாப்புக்கு தான் என்றாள் உள்ளே இருந்து கொண்டு .எனக்கு எதுக்குடி பாதுகாப்பு என்றாள் ஜெனி .பாதுகாப்பு உனக்கு இல்ல அவனுக்கு என்றாள் ஜெசி ,அதலாம் ஒன்னும் இல்ல நீ போ என்றாள் ஜெனி ,ம்ம் அவன இன்னைக்கு கடவுள் தான் காப்பத்தனும் என்றாள் ஜெசி .


அக்கா எப்பயுமே இப்படி தான் நீங்க சொல்லுங்க என்றாள் ஜெனி .அது எப்படி சொல்றதுன்னு தெரியலைங்க என்றான் .பரவல எதுனாலும் சும்மா சொல்லுங்க என்றாள் .இல்ல அது அது என்று அவன் திணற சரி ராஜ் அப்ப நான் ஒன்னு சொல்றேன் என்றாள் ஜெனி .சொல்லுங்க என்றான் ராஜ் .

எனக்கு குழந்தை வேண்டாம் நான் ஆபார்சன் பண்ண போறேன் என்றாள் ஜெனி .இதை கேட்டு அவன் அதிர்ச்சி அடைவான் என்று நினைத்தாள் ஆனால் அவன் கூலாக ஓகேங்க எதுனாலும் உங்க விருப்பம் என்றான் .உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையா என்றாள் ஜெனி .வருத்தம் ஒரு ஓரமா இருக்கு பட் குழந்தை நீங்க தான் சுமக்க போறீங்க நான் சுமக்க போறது இல்ல சோ அது உங்க இஷ்டம் தான் .நான் வீட்ல அப்புறம் பசங்க சொல்ற மாதிரி எல்லாம் நடந்துக்க மாட்டேன் என்றான் ராஜ் .

சரி நீங்க என்ன சொல்ல போறீங்க என்றாள் ஜெனி .ம்ம்ம் நான் இனி சொல்ல வந்தத சொல்லி ஒரு பிரயோசனமும் இல்ல என்றான் ராஜ் .பரவல சொல்ல வந்தத சொல்லிட்டு போங்க என்றாள் ஜெனி .ஒ நீங்க சொல்றதும் சரி தான் என்று சொல்லி விட்டு பாக்கெட்டில் இருந்த ரோசை எடுத்து இந்தாங்க ஐ லவ் யு என்றான் ராஜ் .அதை கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைந்தாள் .

ம்ம் ரொம்ப சாக் ஆகாதிங்க எனக்கு உங்க மேல முழுசா எல்லாம் லவ் இல்ல நீங்க குழந்தைய சுமக்கிற மாதிரி இருந்தா ரெண்டு பேரும் பேசி பழகி லவ் பண்ணி குழந்தைக்காக ஒன்னு சேரலாம்னு பாத்தேன் அதான் இப்ப நீங்க குழந்தைய சுமக்கலைன்னு தெரிஞ்சு போச்சு அப்புறம் என்ன லவ் ஏதோ ரூம் மேட்ஸ்ம் அப்புறம் எங்க லூசு அண்ணன் விக்கியும் சொன்னத கேட்டு தான் வந்தேன் மத்த படி எனக்கு எதுனாலும் ஓகே தாங்க நான் வரேன் எப்பாயச்சும் எதாச்சும்னா போன் போடுங்க நான் வரேன் என்று சொல்லி விட்டு அவன் நடக்க


ஜெனிக்கு ஆச்சரியமாக இருந்தது .என்ன இவன் கருவ கலைக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் வேணாம் கலைக்காதிங்க நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படி சொல்வான் அதுக்கு அப்புறம் அவன பிடிச்சு திட்டலாம்னு நினைச்சா அவன் கூலா ஓகே சொல்லிட்டு லவ் யு ஆனா லவ் இல்லைன்னு சொல்றான் ஒன்னும் புரியலையே
ஆனா இப்ப இவன திட்டியே ஆகணுமே என்று நினைத்து கொண்டு வீட்டின் முன் பக்கம் ஓடினாள் .

டேய் நில்லுடா என்று கத்தினாள் .ராஜ் நின்றான் .வேகமாக நடந்து வந்த ஜெனி அவன் வாங்கி கொடுத்த ரோசை தூக்கி அவன் முகத்தில் எறிந்தாள் .அது அவன் முகத்தில் பட்டு கீழே விழுந்தது .ரோசை குனிந்து எடுத்தான் அது சேறாகி இருந்தது .அய்யே அய்யே எங்க உங்களுக்கு ரோஸ் பிடிக்காட்டி கைல கொடுத்து இருக்கலாம்ல கொண்டு போயி வீட்ல வச்சு இருப்பேன் நல்ல ஸ்மெல் ஆச்சும் வரும் என்றான் .


டேய் அப்ப நீ வேணும்னு தான பண்ண என்றாள் ஜெனி .என்னதுங்க வேணும்னு பண்ணேன் சொல்லுங்க என்றான் ராஜ் .சும்மா நடிக்காதடா என்றாள் ஜெனி .ஐயோ உண்மைலே நீங்க என்ன சொல்றிங்கன்னு புரியலங்க என்றான் ராஜ் .டேய் நீ வேணும்னு தானே அன்னைக்கு காண்டம் போடல என்றாள் ஜெனி .


இல்லைங்க நான் வேணும்னு எல்லாம் பண்ணல அன்னைக்கு ரெண்டு பேருக்கும் உச்ச கட்டம் நெருங்கிருச்சு உங்களால நான் மாட்டுற வரைக்கும் வெயிட் பண்ண முடியல அதான் அப்படி நடந்து போச்சு என்றான் ராஜ் .சும்மா கண்டதையும் சொல்லி குழப்பாத நீ வேணும்னு தான் பண்ணி இருக்க என்னைய மாதிரி 1 லேக் செலரி வாங்குற ஐடி பொண்ண பிரகன்ட் ஆக்கிட்டா நான் நம்ம இந்தியன் கல்சர் படி உன்னைய கட்டிகிருவேன் .


உனக்கு பணமும் ஆச்சு சுகமும் ஆச்சு அப்படி தானே அதுக்கு தான நீ அன்னைக்கு அப்படி பண்ண என்றாள் ஜெனி .ராஜ் ஒன்றும் சொல்லமால் சிரித்து கொண்டு இருந்தான் ,என்னடா லூசு மாதிரி சிரிக்கற பதில் சொல்லு என்றாள் ஜெனி கோபமாக .இல்ல ஜெனி கோப படும் போது உங்க கன்னம் நல்லா சிவக்குது அப்புறம் உதடு கொஞ்சம் துடிக்குது நல்லா அழகா இருக்கீங்க என்றான் ராஜ் .

டேய் மறுபடியும் என்னைய காரெக்ட் பண்ண பாக்குறியா என்று கத்தினாள் .அப்படி எல்லாம் இல்ல ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னிங்க பாருங்க ஒரு மேட்டர் செம கற்பனைங்க பேசாம் நாவல் எதாச்சும் எழுதுங்க நான் வரேன் என்று சொல்லி விட்டு நடந்தான் .டேய் பதில் சொல்லுடா இடியட் என்றாள் .அவன் திரும்பி அவளை பார்த்தாவரு நடந்து கொண்டே அன்னைக்கு உன் கூட பண்றப்ப உன் பேர் கூட எனக்கு முழுசா தெரியாது அப்புறம் அடுத்த நாள் தான் நீ ஐடிநே தெரியும் அதலாம் கொஞ்சம் ஞாபக படுத்தி பாரு என்று சொல்லி விட்டு பாய் என்று திரும்பி நடந்து போயி கொண்டு இருந்தான் .


போடா போ உன் குழந்தைய எல்லாம் நான் சுமக்க மாட்டேன் என்று அவள் கத்த ராஜ் திரும்பமால் டாட்டா காட்டுவது போல் செய்து விட்டு கூலாக போனான் .ஐயோ என்று பக்கத்தில் இருந்த பூந்தொட்டியை போட்டு உடைத்தாள் ஜெனி .என்னடி ரொம்ப திட்டிட்டனா என்றாள் ஜெசி .இல்லடி திட்டவே இல்லடி அவன் பாட்டுக்கு கூலா போறான் என்றாள் ஜெனி .அட வேலை இல்லாத நாய்ன்னா அப்படி தான் எதனாலும் கூலா தான் எடுத்துகிரும் என் புருசனையும் பாரு வேலை இல்ல அதுனால நான் என்ன திட்டுனாலும் எத்துகிராறு என்றாள் ஜெசி .யே வந்தேன் உதைக்க போறேண்டி என்று புருஷன் குரல் கேட்க அட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டேவிட் நீங்க போங்க என்றாள் .சரி சரி சீக்கிரம் வா ஒரு மாதிரி இருக்கு என்றான் .இந்தா வந்துடுறேன் என்றாள் .சரிடி அவன் திட்டாம போனது நல்லது தான் நீ என்ன பண்ண போற என்றாள் ஜெசி .தெரியல ஒரே குழப்பமா இருக்கு என்றாள் ஜெனி .இதுல என்னடி குழப்பம் நாம ஏற்கனவே பேசி வச்சது தானே அது படி ஆபர்சன் பண்ணிடுவோம் என்றாள் ஜெசி .


இருந்தாலும் ஒரு உயிர கொல்றது பாவம் இல்லையா என்றாள் ஜெனி .என்னடி பாவம் இந்த காலத்துல ஆபர்சன் எல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்குது ஏன் உன் ஆபிஸ்ல எவளும் பண்ணலையா இவளவு ஏன் நான் ரெண்டு மாசத்துக்கு முன்னால கூட போயி பண்ணிட்டு வந்தேன் கழுத வீட்லே இருந்து எப்பாடியாச்சும் என்னைய மயக்கி பண்ணிடுது அதுல கரு பிடிக்க நான் 3 தடவ பண்ணிட்டேன் அதான் இப்ப எல்லாம் நிரோத் கடையே மேல இருக்கு

யே சும்மா இருடி உங்க செக்ஸ் புராணம் எனக்கு எதுக்கு எனக்கு ஒரு சொலுசன் கொடு என்று கத்தினாள் .ஹ முத தடவ ஆபார்சன் பண்ணும் போது மனசு உடம்பு ரெண்டுமே கஷ்டமா தான் இருக்கும் அப்புறம் பழகிடும் என்றாள் ஜெசி .என்னடி இப்படி சொல்ற என்றாள் ஜெனி .உக்காந்து நைட் முழுக்க கூட தூங்காம யோசி இது உனக்கு சரியா வருமான்னு நான் போறேன் என்றாள் .

ரூம்மிற்கு வந்தான் ராஜ் .வந்து யாரிடமும் ஏதும் சொல்லாமல் அவன் ரூமிர்கு சென்று கதை எழுதி கொண்டு இருந்தான் .பிரபு வந்தான் .மச்சி என்னடா ஆச்சு ஓகே சொன்னாளா என்றான் பிரபு .மச்சி வா வா நான் நம்ம ப்ரியா என் காதலி கதை தான் எழுதி கிட்டு இருக்கேன் என்றான் ராஜ் .கதைய விடுடா அவ என்ன சொன்னா என்றான் பிரபு .


ஏவ என்ன சொன்னா என கேட்டான் ராஜ் .அதாண்டா அவ அவ பேர் தெரியல ஆனா உன் ஆளு என்றான் பிரபு .ராஜ் சிரித்தான் அவ பேர் ஜெனிபர் மச்சி என்றான் .சரி ஜெனிபர் என்ன சொன்னா சொல்லு என்றான் பிரபு ஆர்வமாக .

ராஜ் ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு ஓகே இன்னைக்கு ஆப்டெட் எழுதி முடிச்சுட்டேன் .மச்சி நம்ம ஹீரோ ராகுல் அமெரிக்கால இருக்க மாதிரி தான் எழுதி இருக்கேன் இன்னும் ப்ரியாவ பாக்கல சோ இந்த ஆப்டெட்ளையும் ஹீரோ ஹீரோயின் சேரல என்றான் ராஜ் .


சரி அந்த கதைய விடு உன் கதை என்ன ஆச்சு என்றான் பிரபு .ம்ம் அந்த கதைல இருக்க ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே லவ் பண்றாங்க ஆனா ரெண்டு பேரலாயும் சொல்ல முடியல என் கதைல ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருக்குமே லவ் இல்ல ஆனா ஹீரோ லவ் சொல்லிட்டான் .ஹீரோயின் ரிஜெக்ட் பண்ணிட்டா சோ இப்பதைக்கு ரெண்டு ஆப்டெட்ளையுமே ஹீரோ ஹீரோயின் ஒன்னு சேரல புரிஞ்சுச்சா நான் குளிச்சுட்டு தூங்க போறேன் ஓகேவா என்றான் ராஜ் .

ஒன்னும் புரியலடா நாயே அவ என்ன சொன்னான்னு கேட்டா நீ கமல் மாதிரி சொல்ற என்னதாண்டா சொன்னா என்று பிரபு கத்த அந்த டேபிள பாரு அவ சொன்னது புரியும் என்று சொல்லி சிரித்து விட்டு பாத் ரூம் போனான் .பிரபு அங்கே பார்த்தான் அங்கு ஜெனி ராஜின் முகத்தில் விட்டு எறிந்து கீழே விழுந்து சேற்றில் முழ்கி எடுத்து வந்த ரோஸ் இருந்தது அதில் அந்த சேறு காய்ந்து போயி இருந்தது .அதை பார்த்து பிரபு புரிந்து கொண்டான் .ஜெனிக்கு தலையே வெடிப்பது போல் இருக்க அவள் தோழி சீமா போன் செய்தாள் .என்னடி என்றாள் .படத்துக்கு போறோம் வரியா என கேட்டாள் .என்னடி மணி 9 ஆக போகுது இப்ப போயா என்றாள் ஜெனி .அது நம்ம கிருஷ்ணா லூசு இருக்கு பாரு அது நம்ம ஜெயாவ காரெக்ட் பண்ண டிக்கெட் எடுத்து இருக்குது அதான் நாங்க 10.30 சோ போறோம் நீ வரியா என்றாள் .இல்லடி நான் வரல என்றாள் ஜெனி .

வாடி சும்மா வா மாசத்துல ஒரு நாள் ஆச்சும் இப்படி ரிலாக்ஸ் ஆனா தான் உண்டு என்றாள் .ஜெனி யோசிக்க சரி நீ ரெடியா இரு நாங்க வந்து பிக் ஆப் பண்ணிக்கிறோம் என்றாள் .பிறகு மனதை லேசா ஆக்க இப்படி போவோம் என்று நினைத்து கொண்டு கிளம்பினாள் .
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக