மறுநாள்
காரில் இருந்து இறங்க, எனக்காகவே காத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா
“என்ன மேடம்! என்ன சொல்றான் உன் தம்பி?”னு சொல்ல,,
“தம்பினு சொல்லி,, மானத்த வாங்காதடி,, பாவி!”னு வெக்கத்தோடு சொல்லி, திடுக்கிட்டு சுத்தி பார்க்க, என் அருகில் வந்தவள்
“பதறாத! யாரும் இல்ல!”னு சொன்னவள், என் கன்னதில் இடித்து
“எங்கள தம்பி சொல்ல விடாம தடுக்குறதுல, பைசாக்கு பிரையோஜனம் இல்ல!, முதல்ல அவன சொல்லுறத நிறுத்து!”னு சொல்ல
“இன்னைக்கு கூட, காலைலேயே ஃபோன் பண்ணி, வேணும்னே அக்கா, அக்கானு சொல்லி உயிர எடுக்குறான்டி! பாவி!”னு நான் புலம்ப
“ஓ, அதான், அக்கா இன்னைக்கு காலைலேயே லவ் மூட்ல இருக்கீங்களோ?”னு இவளும் என் உயிரை எடுக்க, என் நிலையைப் நினைத்து, கையில் இருந்த நோட்டால், தலையில் அடித்துக் கொண்டு, கிளாஸ் ரூம் நோக்கி நடந்தேன்.
“பானு?”னு, என்னை தடுத்து நிறுத்தியவள்
“ஆர் யு சூர் தட் திஸ் இஸ் நாட் அ இன்ஃபெக்க்ஷூவேஷன்?”னு சீரியஸ்ஸா கேட்டவள், என் கண்களில் இருந்த உறுதியாய் பார்த்திருப்பாள் போல
“கூல், ஜஸ்ட் வாண்டெட் டூ கன்பர்ம் தட்ஸ் ஆல்"னு சொல்ல, இருவரும் கிளாஸ் ரூம் நோக்கி நடந்தோம்.
அதன் பின்பும் ஓரிரு முறை என் காதலைப் பற்றி சீரியஸ்சாக விவதித்தோம், புரிந்து கொண்டாள்.
---------------------------------
இரண்டு வாரங்கள் கழித்து
நேத்ராவை கட்டிக் கொண்டு குதித்தேன்!
“என்ன? மேடம் இன்னைக்கு செம்ம ஜாலி மூட்ல இருக்கீங்க?”னு எனக்கிருந்தே அதே சந்தோஷத்துடன் கேட்க, அவளை தனியே அழைத்துச் சென்று
“என் பேர் சொல்லி கூப்பிட ஒத்துக் கிட்டாண்டி,, இன்னைக்கு பேர் சொல்லித்தான் கூப்பிட்டான்!”னு சொல்லி, மறுபடியும் கட்டிப் பிடிக்க
“ட்ரீட்?”னு அவள் கேக்க
“ட்ரீட் எல்லாம் ஒரு விஷயமா?,,தாங்க்ஸ்டி,, நீ சொன்ன ஐடியா வொர்க்அவுட் ஆக்கிடுச்சு!”னு சொல்லி கேன்டீன் நோக்கி நடந்தோம்.
“தாங்க்ஸ்டி,, உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுனே தெரியல!!, எல்லாம் உன்னாலதான்!”னு நான் வாஞ்சையாக, எதிரில் இருந்த நேத்ராவின் கை பற்றி சொல்ல, வாயில் இருந்த பஜ்ஜியை முழுங்கியவள்,
“என்ன மேடம்?,, நன்றி உணர்ச்சியா?,, ரொம்ப எல்லாம் பீல் பண்ணாதீங்க, அவன் ஒண்ணும் உங்கள லவ் பண்ணுரேனு சொல்லல!,, அக்கானு சொல்ல மாட்டேனுதான் சொல்லிருக்கான்,,, ஆனா இன்னும் அக்காவா தான் நினச்சு பழகுறான்!”னு அவள் சொல்ல, அவள் சொல்வதின் உண்மை புரிய, என் முகம் வாடியதை கவனித்திருப்பாள் போல,
“என்ன இதுக்கே, மூஞ்சிய தொங்கப் போட்டா எப்பூடி? நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் எல்லாத்துக்கும் சேத்து பீல் பண்ணு!”னு சொல்ல, குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன்
“நாங்க ஒண்ணும் உன்மேல உள்ள அக்கரைல ஐடியா குடுக்கல,, நீ உன் லவ்வா சொல்லி,,, புட்டுக்குச்சகுனா,, இப்போ நான் ஒதுங்கி ஹெல்ப் பண்ணுற மாதிரி,,, நீ ஒதுங்கி எனக்கு ஹெல்ப் பண்ணனும்!!” சொல்லி, நாக்கலாக கண்ணடிக்க,,, அவளை முறைத்தேன்,, செல்லமாக.
அப்போதான் சுமேஷ் வந்து என் லவ் பண்ணுவாதாக சொல்ல, நொந்து போனேன் நான். "ஏண்டா,, என்ன கொஞ்ச நேரம் கூட சந்தோஷமா இருக்க விட மாட்டிங்களானு”, மனசுக்குள்ள சொல்லி நேத்ராவை பார்க்க,, அவள் சிரிப்பை அடக்க முயற்சி பண்ணினாள்,, முடியாமல் சிரிக்க,,, சுமேஷ் அவளைப் பார்த்து டென்ஷன் ஆனான். சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டு,, சுமேஷிடம்
“நீங்க கொஞ்சம் லேட் பன்னிட்டிங்க சுமேஷ், இன்னைக்கு மார்னிங் தான் இவ ரொம்ப நாளா லவ் பண்ண பையன்,,, ப்ரபோஸ் பண்ண,,, இவளும் அக்சப்ட் பண்ணிட்டு வந்துருக்கா,,, இந்த ட்ரீட் கூட அதுக்குத்தான்"னு நேத்ரா சொல்ல, முகம் செத்துப் போன சுமேஷ் குனிந்து டேபிளில் இருந்த இரண்டு பஜ்ஜி பிளேட்களைப் பார்த்து விட்டு, “என்னது பஜ்ஜி எல்லாம் ஒரு ட்ரீடா"னு நம்பாமல், உண்மையானு? கேக்குற மாதிரி எண்ணப் பார்க்க,, நான் ஆமாம் என்பது போல தலையாட்டி விட்டு,, எழுந்து கிளாஸ் ரூம் நோக்கி போக,, சிறிது தூரம் சென்ற பிறகு,, திரும்பிப் பார்த்த நேத்ரா,,, வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்
“பாவம் பா,,, இருந்தாலும் நீ ரொம்ப மோசம்,,, இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டே!”னு சொல்லி சுமேஷ் மீது பரிதாபப் பட
“என்ன லவ் ஃபெய்லியர்க்கு,, லவ் ஃபெய்லியர் சப்போர்ட்டா?”னு,, கேட்டு மீண்டும் திரும்பிப் பார்த்தவள்
“ரெமோ மாதிரி வந்தவன்,,, இப்போ அம்பி மாதிரி நிக்கிறான் பா"னு சொல்லி சிரிக்க,, நானும் கூட சேர்ந்து சிரித்தேன். கிளாஸ் ரூம் நெருங்கும் போது கேட்டாள்
“டீல் ஓகே வா?”னு, குழம்பியவாரே
“என்ன டீல்?”னு கேக்க,, என்னை இரு கைகளையும் பிடித்து நிறுத்தியவள்
“அடிப்பாவி!, மறந்திட்டியா , சரி நல்ல கேட்டுக்கோ,, அன்னைக்கு கார்ல சொன்னதுதான்,,, உன் லவ் ஓகே ஆச்சுனா,, உங்களுக்கு பொம்பளப் பிள்ளை பிறந்த என் பேரு வைங்க,,, ஒருவேல பூட்டுக்குச்சுனா,, எனக்கு ஹெல்ப் பண்ணு,,, எங்களுக்கு பொம்பளப் பிள்ளை பிறந்த உன் பேருதான் கண்டிப்பா வப்பேன்!”னு சொல்லிட்டு,, கிளாஸ்க்குள் ஓடி விட்டாள்.
நான் அவள் ஆட்டிக்கொள்ளும் பின் புறத்தை முறைத்தவாறு சென்றேன்.
---------------------------
அந்த சுமேஷ் லவ் சொன்னத அன்னைக்கு சாயங்காலமே ,,, வீட்டுக்கு வந்தவனிடம் சொன்னேன். "நீ என்ன சொன்ன" திரும்ப திரும்ப அவன் கேட்க, பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் காய விட, அவ்வளவுதான் அவன் முகத்தில் பரிதவிப்பு,, பதட்டம்,, "நான் முடியாது"னு சொல்லிட்டேன் என்று சொன்னதும் தான் அவன் மூச்சே விட்டான். அவனின் பதட்டத்தில்,, பரிதவிப்பில்,, என் லவ் மீட்டர் கண்ண பின்னணு எகிற ரெண்டு நாள்,,, ரொம்ப நம்பிக்கையா,, ஜாலி இருந்தேன்
ரெண்டு நாள் கழித்து, சாயுங்காலம் வந்தவன்,
“மது,, நான் சொன்னேன்ல அந்த கீர்த்தி,, என் கிளாஸ் மேட்?”னு சொல்ல,, நான் எதுக்கு இப்போ எவளையோப் பத்திப் பேசுறான்னு நினச்சு, குழப்பமாகி பாக்க
“லூசு,, அதான் சொல்லிறுக்கேன்ல,,, எப்போ பாத்தாலும் லுக்கு விடுவானூ?” அவன் சொல்ல, நான் என்ன செய்வதென்று தெரியாமல் தலையாட்ட
“இன்னைக்கு,, எங்க கிளாஸ்ல எல்லோருக்கும் ராக்கி கட்டினாள்,, எனக்கு மட்டும் கட்டலே?,, பசங்க எல்லாம் லவ்னு சொல்றாங்க! நீ சொல்லு லவ்வா இருக்குமோ?”னு கேட்டு ஆர்வமா பாத்து என் சந்தோஷத்துல சங்கு ஊதுவான்.
அதுக்கப்புறம் வந்த நாட்களில்,,இப்படித்தான் ,, எனக்கு இருக்கும் லவ்க்கு நம்பிக்கை கொடுப்பது போல, ஏதாவது ஒண்ணு நடக்கும், என் லவ் மீட்டர் எகிறும். நான் சந்தோஷத்தில் பூரித்துப் போய் திரியும் போது, அதே ஸ்பீட்ல ,, வேற ஏதாவது ஒண்ணு எதிர்மறையா நடக்கும், என் பூரிப்பெல்லாம் புஸ்வானாமாகி விடும்.
-----------------------------
இப்படி ஏற்றமும், இறக்கமுமாக, போய்க் கொண்டிருந்த வாழ்வில், "எந்த இறக்கமானாலும் சகித்துக் கொள்ள, தாங்கிக் கொள்ளக் கூடிய, இவன் உனக்குத்தான், உனக்கு நிகராக இவன் வாழ்க்கையில் வேறு யாரும் வரமுடியாது" எனக்கு நம்பிக்கை கொடுத்த சம்பவம் ஒன்று நடந்தது.
என் மடியில் புதைந்து அழுது கொண்டிருந்தான் மணி. சொல்ல முடியாத ஆனந்தத்தில் நான்.
ஸ்கூல் ஃபைனலியர்யின் பொது நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினேன், காயம் காரணமாக, ஹம்ஸ்ட்ரிங் லிக்மெண்ட் கிழிந்திருந்தது. நான் ஓடோடிச்சென்றேன் அவனைத் தேற்றலாம் என்று சென்றாள், கண்டிப்பாக மனமுடைந்து இருப்பான் என்ற பரிதவிப்பில் தான் ஏர்போர்ட் சென்று இருந்தேன். ஆனால் அவன் தோற்றதைப் பற்றி கவலைப் படாமல், தெம்பாக இருந்தான், என்னை தேற்றினான். நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்காத மாற்றம். கால் குணமடைந்து, முதல்முதலாக கொஞ்ச நேரம் டென்னிஸ் ஆடிவிட்டு வந்தவன் தான் இப்படி என் மடியில் முகம் புதைத்து அழுகிறான், சாம்பியன்ஷிப்பில் வெளியேறியதற்காக!
அவன் அழுகை எனக்கு சொன்னது ஒண்ணே ஒண்ணுதான், இவன் வாழ்க்கையின் அச்சாணி நான் தான். சந்தோஷத்தில் அப்படியே, என் மடியில் படுத்து அழுகிறவனின் முதுகில் சாய்ந்தேன். கிட்டதட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த கிடைத்த நெருக்கம். அழுகை ஓயும் வரை காத்திருந்து விட்டுத்தான், அவனத் தேற்றினேன்.
அந்த நம்பிக்கைக்கு அப்பப்போ அவனே உரம் எற்றினான்!
கொஞ்ச நாள் கழித்து அவன், நான், நேத்ரா மூவரும் சினிமாவிற்கு சென்றிருந்தோம், இண்டர்வெலில்
“மது, இந்தானு" கையில் இருந்த ஐஸ் கிரீமை, மணி குடுக்க
“அதென்ன ஊரே, இவள பானுனு கூப்பிடும், போது நீ மட்டும் மதுனு கூப்பிடுறே?”னு நேத்ரா அவன் கையில் இருந்து ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டே கேக்க
“எல்லாரையும் மாதிரி கூப்பிடறதுக்கு, நானும், மத்தவங்களும் ஒண்ணா? நான் ஸ்பெஷல், அதுதான்!, இல்ல மது!"னு, அவன் என்னைக் பார்த்து கொஞ்ச,
அவ்வளவுதான் நான் உருகி, அவன் இடுப்பில் கை போட்டு ஓட்டிக் கொள்ள, அவனும் என் தோளில் கை போட்டுக் கொண்டான், இவன் பார்க்காத சமயம் "நீ நடத்து!”னு கண்ணைக் காட்டினாள் நேத்ரா.
கொஞ்ச நாள் கழித்து அவன், நான், நேத்ரா மூவரும் சினிமாவிற்கு சென்றிருந்தோம், இண்டர்வெலில்
“மது, இந்தானு" கையில் இருந்த ஐஸ் கிரீமை, மணி குடுக்க
“அதென்ன ஊரே, இவள பானுனு கூப்பிடும், போது நீ மட்டும் மதுனு கூப்பிடுறே?”னு நேத்ரா அவன் கையில் இருந்து ஐஸ் கிரீம் வாங்கிக் கொண்டே கேக்க
“எல்லாரையும் மாதிரி கூப்பிடறதுக்கு, நானும், மத்தவங்களும் ஒண்ணா? நான் ஸ்பெஷல், அதுதான்!, இல்ல மது!"னு, அவன் என்னைக் பார்த்து கொஞ்ச,
அவ்வளவுதான் நான் உருகி, அவன் இடுப்பில் கை போட்டு ஓட்டிக் கொள்ள, அவனும் என் தோளில் கை போட்டுக் கொண்டான், இவன் பார்க்காத சமயம் "நீ நடத்து!”னு கண்ணைக் காட்டினாள் நேத்ரா.
இவனும் கோயம்புத்தூர்லையே காலேஜ் சேர்ந்தான். சும்மா அவனிடம் என் அப்ராட் போலனு கோவித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் கொண்டாடினேன்.
அதுகுறித்து ஒருநாள் மெசேஜ் பண்ணிக் கொள்ளும் போது, அவன் என்னை "பாப்பா"னு, அழைக்க பூரித்துப் போனேன்.
“என் பாப்பாவுக்காக"
“பாப்பாவா? யாரு அது"
“அது ஒரு லூசு, என் கூட இப்போ சேட் பண்ணிக்கிட்டு இருக்கு", னு அவன் ரிப்ளை பார்த்ததும், என் காதல் மனம் குத்தாட்டம் போட, "பாப்பா, பாப்பா"னு டிஸ்ப்ளே பாத்து நான் கொஞ்ச,
அவனுக்குத்தான் பொருக்காதே
“சாரி அக்கா"னு மெசேஜ் போட்டு அந்த சந்தோஷத்துக்கு உடனே வேட்டு வச்சான்.
நான் கோப ஸ்மைலிய, அவன திட்டிக்கிட்டே அனுப்ப
“சாரி பாப்பா"னு அவன்ட இருந்து ஒரு மெசேஜ்
அவ்வளவு தான், மறுபடியும் பட்டாம் பூச்சி பறக்க, இந்த முறை கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம்னு மனசு சொல்ல
“luv u,
ஏனோ luv uக்கு முன்னாடி "ஐ"யை வேண்டும் என்றே தவிர்த்திருந்தேன். அவனிடம் இருந்து ரிப்ளை வரவில்லை, நெஞ்சம் படபடக்க "அய்யயையோ! கொஞ்சம் பொருத்து இருக்கலாமோனு!” தோண, அவனே ஏதாவது கேக்கும் முன்ன சமாளிப்போம்னு
நீ தான் என் பாப்பா"
ஒரு மெசேஜ் தட்ட,
“உனக்கு நான் பாப்பானா, எனக்கு நீயும் பாப்பாதான்"னு, அவனிடம் இருந்து ரிப்ளை
போடு!, தகிட தகிட"னு இங்க என் மனசு, என் கட்டுக்கடங்காம கண்ட படி ஆட, மறுபடியும் ஒரு
“luv you", தட்டி விட்டேன்
இந்த முறையும் "ஐ"-யை வேண்டும் என்றே தவிர்த்திருந்தேன், அனுப்பிவிட்டு டிஸ்ப்ளேவையே பார்த்துக் கொண்டிருக்க
“me too"
தாளமுடியாத மகிழ்ச்சி, அப்புறம் அவன நினச்சு டூயட் பாடி, எப்போ தூங்கினேன்னு தெரியாம தூங்கிப்போனேன்.
மறுநாள் காலை எழுந்ததும், பதறி அடித்து மொபைலில் அவன்கூட நேத்து நைட் பண்ணின உரையாடலை திரும்ப படித்தேன். கனவு அல்ல, நிஜம்தான் உறுதிபடுத்திக் கொண்டவுடன், மனசு, நைட் விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் அவனுடன் டூயட் பாடியது. இத நேத்ரா கிட்ட சொல்லியே ஆகணும்னு தோண, கிளம்பி காலேஜ் வந்தேன். அவள் இன்னும் காலேஜ் வந்திருக்கவில்லை. அவளுக்காக காத்திருந்த சமயத்தில்
நைட் பண்ணின சேட்டீங்ககை திரும்ப, திரும்ப, படித்து கனவில் மிதந்தேன்.
"என்ன மேடம், இன்னும் தூக்கமா?”னு கேட்டு நேத்ரா என் அருகில் உக்கார, அவளை இழுத்துக் சென்று கடைசி பெஞ்சில் அமர்ந்து, நேத்ராவிடம் மெசேஜை காட்டினேன், வாசித்து விட்டு அவள், என்னைப் பார்க்க, நான் ”எப்பூடி?” என்று புருவத்தை உயர்த்திக் காட்டி, கண்ணடிக்க,
“நீ ரெம்ப ஓவர் ரியக்ட் பண்ணுறே!”னு அவள் சொல்ல, எனக்கு அவள் சொல்லவது புரியவில்லை, என் முகத்தைப் பார்த்தவள்
“முதல்ல அவன் இன்னும் “luv u”னு அனுப்பல “me too”னு தான் அனுப்பியிருக்கான், அப்படியே அவன் "luv u” அனுப்பினாக் கூட, அது அக்காவுக்கு அனுப்புற "luv u” தான்!, என்னா இப்போ நீங்கதான காலிங்"னு சொல்லி சிரித்து, தரைல கால் படமா, மிதந்துக் கிட்டு இருந்த எனக்கு, நிஜத்தை புரிய வைக்க, நான் அப்படியே சோர்வாகி முன்னால் இருந்த டேபிளில் கை வைத்து படுத்தேன். கொஞ்சம் நெருங்கி என் முதுகில் கை போட்டு, என் காதருக்கே வந்து
“ஆனா, பரவா இல்ல, முன்னைக்கு இப்போ கொஞ்சம் முன்னேற்றம் இருக்கு!”னு சொல்ல
நான் கொஞ்சம் சந்தோசத்தோடு அவளைப் பார்க்க "ஆமா!” என்பது போல தலையாட்டி, கண்ணடித்தாள். என் கால்கள் தரையில் இல்லை.
-----------------------------
இப்படி எல்லாமே எனக்கு சாதகமாக போகும் போதுதான், ஒற்றைத் தலைவலியாய் வந்தது, ஜினாலி ஜெய்ன் மீதான அவனின் ஈர்ப்பு. மற்றதைப் போல் இல்லாமல் அவளின் மீது ஒரு மையலிலேயே, என்னிடம் அவன் புலம்ப, அதை நான் மறுநாள் நேத்ராவிடம் சொல்லி புலம்புவது வாடிக்கையானது.
முன்பெல்லாம் அக்கடமி செல்வதை தவிர்த்த நான், அவளிடம் இருந்து இவனைப் பாதுகாக்கவே தினமும் செல்ல ஆரம்பித்திருந்தேன். முடிந்த அளவு இவனை அவள் கண் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப் பார்த்தாலும், விடமாட்டாள் அந்த சக்களத்தி! அவளே வலிய வந்து
“ஹேய், மணி! லேட்ஸ் பிளே அ கேம்!”
“ஹேய், மணி! ஹவ் இஸ் யுவர் இஞ்சூரி ஹீலிங்க!”
இப்படி நிறைய ஹேய் மணி! கடங்காரி, என்ன வெறுப்பேத்தனும்னு வேண்டிக் கிட்டு வருவா போல!
“ஹேய், மணி, யு ஆர் கெட்டிங் மேன்லி டே பை டே!, பியர்டு சூட்ஸ் யு!” - நான் ஆசையா கேட்டு, அவன் சலித்துக் கொண்டே வளர்த்த, அஞ்சுநாள் தாடியா பாத்து, அவள் கொஞ்ச, இவனும் 'ஈ"னு இளிச்சுக்கிட்டு
"தாங்க்ஸ், யு லைக் இட்?”னு கேக்க, பத்திக் கொண்டு வந்தது எனக்கு.
காதில் ஃபோனைக் கொடுத்து, அவர்கள் பேசியதை கவனியாதது போல், அவர்களை நோக்கி நடக்க
“ஓகே பாய்!, பாய் பானு!”னு எனக்கும் சேர்த்து பாய் சொல்லி விட்டு, அவள் கிளம்ப, பத்து நிமிடம் கழித்து, ஒரு சலூன் முன்பு, என் கார் நின்றது
“நீ தான, தாடி வைக்க சொன்ன?, இப்போ எதுக்கு எடுக்கணும்?”னு எண்ணப் பார்த்து கெஞ்சினான்,
“நீ எடு, எதுக்குனு அப்புறம் சொல்றேன்!”னு நான் அமைதியாக சொல்ல, எண்ணப் பார்த்து கொஞ்சம் அசடு வழிந்தவாரே
“பிளீஸ்!, மது, நீ வர்றதுக்கு கொஞ்சம் நேரம் முன்னாடிதான், என் தாடிய பாத்து "யு லுக் மேன்லி, ஜினாலி சொன்ன!", நாளைக்கே தாடி எடுத்துட்டு போய் நின்னா, நல்லாவா இருக்கும்?!”னு அவன் சொல்ல, எனக்கு வந்த ஆத்திரத்தில் காதில் புகை போவது போல் இருக்க, இவனை முறைத்தேன்,
“புரிஞ்சுகக்கோ மது!,, பிளீஸ்!,, இப்போதான் அவ கொஞ்சம் இன்டரஸ்ட் காட்டுற மாதிரி இருக்கு!,, பிளீஸ்!, ஒரு ரெண்டு கழிச்சு ஏடுக்குறேன்!, பிளீஸ்!”னு அவன் கெஞ்ச, அதை கண்டுக்காமல், இறங்கி, அவன் உட்காரந்திருந்த பக்கம் போய் கதவை திறந்தேன். பாவமாக பார்வையாலேயே என்னைப் பார்த்து வேண்டாம் என்று கெஞ்ச!, நான் அவனைப் பார்த்து முறைத்தேன், எதுவும் சொல்லாமல், இறங்கி சலூன்க்குள் சென்றான்.
இது என்னோட ஸ்பெஷல் ஆயுதம்!. நான் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து முறைத்தால் போதும், அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட, நான் என்ன சொன்னாலும் செய்வான். அவனத் தோடர்ந்து, நானும் உள்ளே செல்ல, இவன் ஒரு சேரில் அமர்ந்திருந்தான், கண்ணாடியில் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு
“சார், கட்டிங்? ஆர் ஷேவிங்?, என்ன ஸ்டைல்?”னு அந்த சலூன் பையன் கேக்க
“மொட்ட போடுங்க! மொத்தமா வழிச்சு விட்டுருங்க!”னு இவன் கோவம சொல்ல, அந்த பையன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான். ஏசில சலூன் ஜில்லுனு இருக்க, இவன் மட்டும் ரெம்ப சூடா இருந்தான்.
“ஹி இஸ் ஜோக்கிங்!, ஜஸ்ட் ஷேவ் கிம் கிளீன்!”னு நான் அந்த பையனைப் பார்த்து சொல்ல, கொஞ்சம் இலகுவாகி என்னைப் பார்த்து சிரித்தான் அந்த பையன். இவன் கண்ணாடி வழியே என்னைப் பார்த்து மறுபடியும் கெஞ்ச, நான் சிரித்தவாரே முடியாதுனு தலையாட்டினேன். கடைப் பையன் கொஞ்சம் தயங்கியவாரே, என்னைப் பார்த்து
“மேம், ஆர் யு சூர்?, ஐ திங்க் ஹி இஸ் நாட் சூர்!”னு, குழம்பிப் போய் கேக்க, திரும்பி நான் இவனை முறைத்தேன்.
“ப்ரதர், என்னைய எல்லாம் ஒரு ஆளாவே மதிக்காதீங்க, எல்லாம் அவங்க சொல்லுறதுதான்!, மொட்ட அடிக்க சொன்னக் கூட யோசிக்காம தைரியமா அடிங்க!, நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!”னு அவன் கோபமா சொல்ல, கடைப் பையன் கொஞ்சம் தயக்கமாகவே அவன் வேலையை ஆரம்பித்தான்.
சிறிது நேரம் கழித்து
அவன் வீட்டின் முன்பு கார் நிக்க, இறங்காமல் உம்மென்று இருந்தான். தாடிய ஷேவ் பண்ணிய கோபம் இன்னும் இருந்தது.
“ஓய்"னு நான் கூப்பிட, கேளாதவன் போல், கார் கதவில் கை வைத்து திறந்தான்
“டேய்!” இந்த முறை அதிகாரமாய் கூப்பிட, வேறு வழி இல்லாமல் என்னைப் பார்த்து திரும்பினான், நான் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்ததும், பாவமாக இருந்த அவனின் முகம் கோபமாக மாறியது. என்னை முறைத்தவனின் முகத்தை, என் இரு கைகளிலும் ஏந்த, கோபம் திரும்பவும் பாவமாக மாறியது!
“சும்மா, தாடில எப்படி இருப்ப-னு பாக்கணும் போல இருந்துச்சு, அது தான் தாடி வைக்க சொன்னேன், ஆனா தாடியோட பாத்த நீ யாரோ மாதிரி இருக்க!, எனக்கு தாடி, மீசை, இல்லாத, இந்த மூஞ்சிதான் பிடிச்சுருக்கு!”னு சொல்ல, பாசமாக என்னைப் பார்த்து விட்டு
"எனக்கும் தாடி வளத்தது கொஞ்சம் சங்கடமாத் தான் இருந்துச்சு!"னு சொல்லிட்டு இறங்கிப் போனான், போனவனை கூப்பிட்ட நான்,
“கவலைப் படாத, தாடி இருந்தாலும், இல்லாட்டலும், எல்லோருக்கும் உன்ன பிடிக்கும்"னு சொல்ல சந்தோஷமாமனது அவன் முகம், கையை காட்டி விட்டு சென்றவனை பார்த்தவாறு உதடு குவித்து முத்தமிட்டேன்.
----------------------
மறுநாள் நடந்ததை நேத்ராவிடயம் சொல்லி சிரிக்க
“இருந்தாலும் ரெம்ப மோசம் பா! நீ"னு சொல்லி அவளும் கூட சேர்ந்து சிரித்தாள்
“ஆனா, நீ ஒரு சின்ன தப்பு பண்ணிட்டே!”அவள் என்னை குழப்ப,
“இங்க பாரு, லவ்னு வந்தாச்சுனா யாருக்குமே கரிசனம் காட்டக் கூடாது, அது லவ்வராவே இருந்தாலும் சரி!”னு சொல்ல, இன்னும் புரியாமல் பார்த்தேன் அவளை.
“தாடி இருந்தாலும், இல்லாட்டலும், அவளுக்கு உன்ன பிடிக்கும்!, நீ சொல்லிருக்க கூடாது!”னு அவள் சொல்ல,
“ஏய், நான் அவளுக்கு புடிக்கும்னு எல்லாம் சொல்ல, எல்லோருக்கும் பிடிக்கும்னு தான் சொன்னேன்!”னு நான் மறுக்க, சிரித்தவள்
“நீ என்ன சொன்னாய் என்பது முக்கியம் இல்லை மகளே!, அவன் காதில் எப்படி விழுந்தது என்பது தான் முக்கியம்!”னு அவள் சாமியார் மாதிரி பேச
"போடி லூசு!”,னு சொல்லிட்டு கிளம்பினேன்.
-------------------------
அன்று மாலை, சும்மா ஒரு கேம் விளையாடிட்டு, என் சக்களத்தி கண்ணில் படாமல் இவனை இழுத்துக் கொண்டு கார் பார்க்கிங் போக,
“ஹேய் மணி, கிளம்பியாச்சா?” பின்னால இருந்து ஒரு சத்தம், அவதான், என் சக்களத்தி!
நாசாமா போக!னு மனசுல நினச்சுக்கிட்டு “எஸ்"னு இவனுக்கு முன்னால, நான் அவளுக்கு பதில் சொல்ல, அவள் இவனையே பார்த்தவாறு, பக்கத்தில் வந்து,
“ஹேய், ஹேண்ட்ஸம், இன் கிளீன் ஷேவ், யு லுக் செக்ஸி, இல்ல?!”னு சொல்லி என்னைப் பார்க்க
“ஆமா!”னு நான் இவளைப் பார்த்து இளித்தவாரே சொல்லிக் கொண்டு காரில் ஏறினேன். அவளிடம் இவன் ஏதோ பேச, என்க்கு இருந்த வயித்தெரிச்சலில், என் காதில் ஒன்றும் விழ வில்லை. வாயெல்லாம் பல்லாக காரில் எறியவனைக் கண்டதும், கொலைவெறியானது எனக்கு. அப்பொழுது தான் நேத்ரா சொன்னது புரிந்தது எனக்கு.
இப்படி நான் என்ன செய்தாலும், இவனை அவள் உசுப்பேத்தி விட்டாள் என்றாள், இவன், அவளையும் தாண்டி ஒரு படி மேல போய், அவளை மடக்க என்னிடமே ஐடியா கேட்டான், ஒரு நாள்.
முந்தின நாள் தான், நான் கூப்பிட்டும் வராமல் அவலுடன் கேம் ஆடினான். அது மட்டும் இல்லாமல் முடிஞ்சு வரும் போது டபுள் மீனிங்ல வேற கொஞ்சிக்கிட்டாங்க. கொல வெறியாகிப் போனேன். கோபத்தில் அவளை மைதா மாவுனு திட்ட, இவன் ஈனு இளிச்சுக்கிட்டே, மைதா மாவுதான் புடிக்கும்கிறான்.
கொஞ்சம் கலங்கித்தான் போனேன் அன்று.
மறுநாள் நேத்ராவிடம் நடந்ததை சொல்லி ஒப்பாரி வைக்க,
“எதுக்குடி அவனுக்கு?, அவ மேல அப்படி ஒரு கிறுக்கு?” னு நான் புலம்ப
"அவ ரெம்ப அழகோ?”னு நேத்ரா கேக்க, பேஸ்புக்ல ஓபன் பண்ணி அவளோட போட்டோவைக் காட்டினேன்.

வாங்கிப் பார்த்தவள், உதட்டைப் பிதுக்கி,
“சும்மா சொல்லக்கூடாது, நல்ல கொழு கொழுனு, வெண்ண கட்டி மாதிரி தான் இருக்கா”னு, சொல்ல, எனக்கு அழுகை வரும் போல் இருந்தது. என் மனசை படித்து போல
“ஹேய், என்னச்சு பா!”னு கேட்டு, இன்னும் கொஞ்சம் என்னை நெருங்கி அமர்ந்தவள்
“லூசா டீ, நீ?, இவளெல்லாம் உன் பக்கத்துல கூட நிக்க முடியாது!, என்ன ஃபிகர் நீ!”னு சொல்ல, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“உன் சைஸ் என்ன?”னு அவள் திடீரென்று கேட்கவும்,
“எதுக்கு பா?”னு தயங்க
“எல்லாம் காரணமாத் தான்!”னு சொல்ல
“34”
“கப் சைஸ் என்ன?”னு அவள் திரும்பவும் கேக்க
“D”, சொல்லி அவளை கேள்வியுடன் பார்க்க
“உனக்கு தெரியுமா? தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன், ஏண்டி உனக்கே தெரியாத, உன் ஹவர் கிலாஸ் ஃபிகர்க்கு, உன்னோட ஸ்லிம் பாடிக்கு, முன்னாடியும், பின்னடியும் வேற கும்முணு வச்சிருக்க, அவ ஒரு ஷேப்பே இல்லாம உருண்டையா இருக்கா!, உன் பக்கத்துல கூட நிக்க முடியாது!”னு அவள் சொல்ல, கேட்பதற்கே இதமாக இருந்தது.
"அழகெல்லாம் ஒரு மேட்டர் இல்ல! தப்பு என் மேலதான்! உன் மேல உள்ள நம்பிக்கையில கொஞ்ச அசாலட்டா இருந்துட்டேன், நானே களத்துல இறங்குறேன்!” அவள் எதோ சினிமா டயலாக் பேசுற மாதிரி பேச, மறுபடியும் குழப்பத்தோடு அவளைப் பார்த்தேன். என்னை நோக்கி திரும்பியவள்
“நம்ம இதுவரைக்கு படிச்ச படிப்புக்கு இப்பதான் வேலை வந்துருக்கு, உன் லவ்வ ஒரு பேசண்ட் மாதிரி ட்ரீட் பண்ணனும்"னு அவள் ஏதோ தீர்க்கமான முடிவுக்கு வந்தவள் போல் பேசினாள்.
“ஒரு பேசண்ட், காய்ச்சல்னு வாரான், நாம் என்ன செய்வோம்?, ஒரு ஊசியப் போட்டு, நாலு ஆன்டி-பையாட்டீக் டேப்லெட்ஸ் குடுத்து அனுப்புவோம்!. சரி ஆகிட்டா ஓகே, இல்லனா?, அது நார்மல் காய்ச்சல் இல்ல, வேற என்னமோ ப்ராப்ளம் இருக்குனு அர்த்தம் இல்லயா?. அந்த மாதிரி தான் நானும், உன்ன மட்டும் தூண்டி விட்டா, உனக்கு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும், உன் லவ் செட் ஆகிரும்னு நெனச்சேன், ஆனா நடக்கல. சோ, வேற ஏதோ ப்ராப்ளம் இருக்கு. அந்த ப்ராப்ளத்த அக்கு வேற, ஆணி வேறனு, அலசி ஆராயந்து , ஒரு பக்கா ட்ரீட்மெண்ட் குடுத்தா, உன் காதல் காய்ச்சல் சரி ஆகிரும்“னு சொல்லி என் தோளில் தட்டி, கிளாஸ்க்கு போலாம்னு அவள் அழைக்க, இருவரும் கிளாஸ்க்கு சென்றோம்.
“எதுக்குடி அவனுக்கு?, அவ மேல அப்படி ஒரு கிறுக்கு?” னு நான் புலம்ப
"அவ ரெம்ப அழகோ?”னு நேத்ரா கேக்க, பேஸ்புக்ல ஓபன் பண்ணி அவளோட போட்டோவைக் காட்டினேன்.

வாங்கிப் பார்த்தவள், உதட்டைப் பிதுக்கி,
“சும்மா சொல்லக்கூடாது, நல்ல கொழு கொழுனு, வெண்ண கட்டி மாதிரி தான் இருக்கா”னு, சொல்ல, எனக்கு அழுகை வரும் போல் இருந்தது. என் மனசை படித்து போல
“ஹேய், என்னச்சு பா!”னு கேட்டு, இன்னும் கொஞ்சம் என்னை நெருங்கி அமர்ந்தவள்
“லூசா டீ, நீ?, இவளெல்லாம் உன் பக்கத்துல கூட நிக்க முடியாது!, என்ன ஃபிகர் நீ!”னு சொல்ல, கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
“உன் சைஸ் என்ன?”னு அவள் திடீரென்று கேட்கவும்,
“எதுக்கு பா?”னு தயங்க
“எல்லாம் காரணமாத் தான்!”னு சொல்ல
“34”
“கப் சைஸ் என்ன?”னு அவள் திரும்பவும் கேக்க
“D”, சொல்லி அவளை கேள்வியுடன் பார்க்க
“உனக்கு தெரியுமா? தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன், ஏண்டி உனக்கே தெரியாத, உன் ஹவர் கிலாஸ் ஃபிகர்க்கு, உன்னோட ஸ்லிம் பாடிக்கு, முன்னாடியும், பின்னடியும் வேற கும்முணு வச்சிருக்க, அவ ஒரு ஷேப்பே இல்லாம உருண்டையா இருக்கா!, உன் பக்கத்துல கூட நிக்க முடியாது!”னு அவள் சொல்ல, கேட்பதற்கே இதமாக இருந்தது.
"அழகெல்லாம் ஒரு மேட்டர் இல்ல! தப்பு என் மேலதான்! உன் மேல உள்ள நம்பிக்கையில கொஞ்ச அசாலட்டா இருந்துட்டேன், நானே களத்துல இறங்குறேன்!” அவள் எதோ சினிமா டயலாக் பேசுற மாதிரி பேச, மறுபடியும் குழப்பத்தோடு அவளைப் பார்த்தேன். என்னை நோக்கி திரும்பியவள்
“நம்ம இதுவரைக்கு படிச்ச படிப்புக்கு இப்பதான் வேலை வந்துருக்கு, உன் லவ்வ ஒரு பேசண்ட் மாதிரி ட்ரீட் பண்ணனும்"னு அவள் ஏதோ தீர்க்கமான முடிவுக்கு வந்தவள் போல் பேசினாள்.
“ஒரு பேசண்ட், காய்ச்சல்னு வாரான், நாம் என்ன செய்வோம்?, ஒரு ஊசியப் போட்டு, நாலு ஆன்டி-பையாட்டீக் டேப்லெட்ஸ் குடுத்து அனுப்புவோம்!. சரி ஆகிட்டா ஓகே, இல்லனா?, அது நார்மல் காய்ச்சல் இல்ல, வேற என்னமோ ப்ராப்ளம் இருக்குனு அர்த்தம் இல்லயா?. அந்த மாதிரி தான் நானும், உன்ன மட்டும் தூண்டி விட்டா, உனக்கு சப்போர்ட்டா இருந்தா மட்டும் போதும், உன் லவ் செட் ஆகிரும்னு நெனச்சேன், ஆனா நடக்கல. சோ, வேற ஏதோ ப்ராப்ளம் இருக்கு. அந்த ப்ராப்ளத்த அக்கு வேற, ஆணி வேறனு, அலசி ஆராயந்து , ஒரு பக்கா ட்ரீட்மெண்ட் குடுத்தா, உன் காதல் காய்ச்சல் சரி ஆகிரும்“னு சொல்லி என் தோளில் தட்டி, கிளாஸ்க்கு போலாம்னு அவள் அழைக்க, இருவரும் கிளாஸ்க்கு சென்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக