http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 14

பக்கங்கள்

வியாழன், 18 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 14

 அவனின் பதினெட்டாவது பிறந்தநாள் அன்று


காலையில் அஞ்சு மாணிக்கே, எழுந்து, நெதராக்கு ஃபோன் அடிக்க, எடுத்தவுடன் திட்டியவள், பின்பு

"டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள், என் பாப்பாவா இருக்கனுமாம் சாருக்கு,  நைட் சொன்னான், டீ"னு சொல்ல, சிரித்தவள்

“என்னடி ஆடு அதுவா வந்து அறுங்குது!”னு சொல்லி சிரிக்க

“அறுத்துருவோம்!”னு நான் பதிலுக்கு சொல்லி சிரிக்க, சிரிப்பு நின்றதும்



“பானு!, என்ன நடந்ததாலும் சரி, கண்ட்ரோல் ரொம்ப முக்கியம், பிளான் நல்லா நியாபகம் இருக்குல?”னு கேக்க,


“இருக்குடி!”

“இங்க பாரு பானு!, நானே லவ் பண்ணாக்கூட இப்படி பிளான் பண்ணுவனானு தெரியாது, ரெம்ப யோசிச்சுறுக்கேன், இன்னைக்கி மட்டும் நீ சொதப்புன, நான் மனிஷியாவே இருக்க மாட்டேன்!”னு சொல்ல, நான் நன்றியோடு

“தாங்க்ஸ் டீ"னு சொல்ல

“உன் தாங்க்ஸா, நம்ம பிளானா சக்ஸஸ் பண்ணிட்டு வந்து சொல்லு, அப்போ அக்சப்ட் பண்ணுறேன்”

“ஓகே"

“சரி, கிளம்பு, டைம் அச்சு!”அவ சொல்ல, ஓகேனு சொல்லி நான் வைக்கப் போக

“ஏய்"னு சத்தம் கேட்டு, திரும்பவும் ஃபோனை காதில் வைக்க

“இருக்கியா?”னு அவள் கேட்டதுக்கு, “ம்" கொட்ட

“முக்கியமான விஷயத்த மறந்துட்டேன், "ஹாப்பி கன்னி கழியிற டே!”னு சொல்லி அவள் சிரிக்க

“ச்சீ, கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவனுக்கு பொங்கல்!, இப்போ எனக்கே கான்ஃபிடன்ஸ் வந்துருச்சு, சோக பால் கூட தேவை இல்ல, பாச பால்னு, ஒரு புது பிளான் இருக்கு, அதவச்சே விக்கெட் எடுத்துருவேன்"னு சொல்லி, சிரிக்க

“ஹா,,,,,, ஹா,,,,, ஹா,,,,,, பார்டா , நீ எந்த பாலையும் யூஸ் பண்ணு, ஆனா தயவு செய்து விக்கெட் எடுத்துரு!. பானு, ஓவர் கான்ஃபிடன்ஸ் நமக்கே அப்படிக்கும், எதுக்கும் நீ எல்லாத்துக்கும் ரெடியா இரு, டேப்லெட் போட்டுக்கோ, ஒரு சேஃப்டிக்கு”னு அவள் சீரியஸ்ஸா சொல்ல  

“ம்" கொட்டி, ஃபோனை வைத்து விட்டு, வெட்கத்தோடு பாத்ரூம் சென்றேன்.

ஹேர் ரிமூவர், ஸ்ப்ரே வைத்து அடித்து, சிறிதாக முளைத்திருந்த முடிகளையும், ஷவர் திறந்து நீக்கி விட்டு, அதை உறுதி செய்து, திருப்தி ஆனதும், மீண்டும் ஷவரில் நனைந்து கொண்டு நேத்ராவின் பிளானை மனதில் ஓடவிட்டேன்.

குளித்து முடித்து, டிரஸ் பண்ணி, கொஞ்சமா மேக்கப் பண்ணி, ஓகேனு திருப்தி ஆனதும், கிளம்பினேன். அம்மா சாப்பிட சொல்ல, வேண்டாம்னு சொல்லிட்டு, சேஃப்பா டிரைவ் பண்ணு சொல்லியவளிடம், டாடா கட்டிவிட்டு, காரை ஸ்டார்ட் செய்து, கால் பன்னினேன் அவனுக்கு          

“ஹலோ"னு அவன் சுரத்தே இல்லாமல் சொல்ல, என்னவா இருக்கும் என்று நினைத்தவாறே  

“என்னடா பர்த்டே பேபி,,, ரெடியா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்"னு நான் சொல்ல

“15 மினிட்ஸ்"னு, எனக்கு முதல் சான்ஸே குடுத்தான், அவனை வறுத்தெடுக்க.    

“இன்னும் பதினஞ்சு நிமிசமா?”னு கோபத்தோடு கேக்க

“பின்ன, நீ சொன்ன மாதிரி வேஷ்டி கட்டனும்னா டைம் ஆகும்,,,, பாண்ட் ஓகேனு சொல்லு இப்போவே கீழ வாறேன்"னு அவனும் கோபத்தோடு சொல்ல, “கொஞ்சம் பொறுமை, அவசரம் கூடாதுனு" எனக்கு நானே சொல்லிக் கொண்டு  

“ஒண்ணும் வேண்டாம், கூட ஃபைவ் மினிட்ஸ் கூட எடுததுக்கோ, பட் வேஷ்டி தான்"னு சொல்ல, நான் ஃபோனை வைத்து காரை அவன் வீட்டை நோக்கி விட்டேன்.

ஐந்து நிமிடம் கழித்து, அவன் வீட்டுக்குள் நுழைய, சுமா ஆண்ட்டி தான் இருந்தார்கள், அங்கிள் பிஸினஸ் ட்ரிப் போயிருந்தார்.

“என்னமா?, இன்னைக்கு சரீ?”னு சுமா ஆண்ட்டி கேக்க

“மணி பர்த்டே ஸ்பெஷல், நல்லா இருக்கா?”னு கேட்டு, பவசே குடுக்க, என் அருகில் வந்தவள், இரு கைகளால் என் முகத்தை சுற்றி, நெட்டி முறிததவள்

“உனக்கே தெரியாத?, என் கிட்ட கேக்கணுமா?”னு சொல்ல, சந்தோஷமானேன், பசிப்பது போல இருக்க,

“ப்ரேக்ஃபாஸ்ட் ரெடியா?”னு கேட்டு, டைனிங் டேபிளில் அமர, அவர்களும் என் அருகில் அமர்ந்து கொண்டார்கள்.    

பத்து நிமிடம் கழித்து, விசில் சத்தத்தை கேட்டதும், அவன் தான் என்று தெரிந்து,  சிரித்தவாரே அவனைப் பார்த்தால், அடுத்த சான்ஸ், இத விடக்கூடாதுனு முடிவு பண்ணி
கோபமாக

“உன்ன நான் வேஷ்டி தான கட்டச் சொன்னேன்"னு, கேக்க,

கண்டுகொள்ளாமல் என் தலையில் தட்டிவிட்டு, டைனிங் டேபிளில் உட்கார்ந்து, இட்லிய எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, நிமிர்ந்து பார்த்தான், நான் அவனையே முறைத்துக்  கொண்டிருந்தேன் . ஒரு பெரும் மூச்சு விட்டவன்    

“பழனிக்கு போன உடனே கட்டுறேன், கோவிலுக்கு வேஷ்டியோட தான் வருவேன்"னு கெஞ்ச, தலையை இருபக்கமும் ஆட்டியவாறு முறைத்துக் கொண்டே இருந்தேன்,

“ஃபர்ஸ்ட் டைம் கட்டுறேன் மது!,,, அவுந்துருமோனு பயமா இருக்கு, அசிங்கமாயிரும்!”னு

அழுவதைப் போல சொல்ல, அதுக்கு மேலும் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியவில்லை, வந்த சிரிப்பை மறைக்க சாப்பிட ஆராம்பித்தேன். இருவரும் சாப்பிட்டு விட்டு, காரை நோக்கி செல்லும் போது    

“இந்த பட்டு சாரீல நீ ரெம்ப அழகாக இருக்க, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, அவன், அவன் அம்மாவைப் போலவே செத்தைப் போல செய்து எனக்கு நெட்டி முறிக்க, சந்தோஷம் தாளாமல் சிரித்தேன், ஆனால் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை,

“உன் சாரீயும் வயலெட், என் ஷர்ட்டும் வயலெட், சேம் பினச்", னு சொல்லி என்னைக் கிள்ளி அவன் குடுத்த அடுத்த சான்சையும் சரியா யூஸ் பணனேன், அவனைப் பார்த்து முறைத்து.  

“செம்ம கோவத்துல இருக்கேன், பேசாம மூடிக்கிட்டு கார்ல ஏறு!”னு சொல்ல,

முஞ்சை தொங்கப் போட்டுக் கொண்டு, மறு பேச்சு பேசாமல் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொள்ள, காரை பழனி நோக்கி விரட்டினேன். எதுவும் பேசாமல், பாவம் போல் அமைதியாக இருக்க, கொஞ்சம் அதிகமா போறோமோ? நினச்சுக்கிட்டு

“என்னடா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?”னு, கொஞ்சம் பேச்சுக் குடுத்தேன்  

“நீ தான மூடிக்கிட்டு இருக்க சொன்ன?”னு, அவன் எகிற, ஓகே பிளான் கரெக்ட்டா போகுது, கொஞ்சம் விட்டு பிடிப்போம்னு, மனசுல நினச்சுக் கிட்டு  

“மூடிக்கிட்டு கார்ல ஏறத்தான் சொன்னேன், கார்ல மூடிக்கிட்டு இருக்க சொல்லல!”னு  காரம் குறையாமல் திருப்பி அடிக்க

“நான் அந்த ஜினாலிய ட்ரை பண்ணுறத விட்டுறலாம்னு இருக்கேன்"னு அவன் சொல்ல, என் உள்ளம் கொண்டாட்டம் போட, "கண்ட்ரோல்! கண்ட்ரோல்!னு" சொல்லி என்னை அடக்கிக் கொண்டு,

“என்ன இந்த திடீர்னு இப்படி சொல்ற, அந்த புள்ளைக்கு தெரிஞ்ச ஏங்கிர மாட்டா? “னு நாக்கலாக கேட்டேன், அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க

“என்னடா பிறந்தநாளும், அதுவுமா அறிவு வந்துருச்சா?”னு மீண்டும் சீண்ட

“நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான்!, வயசு அதிகமா இருந்தா ஓவர் டாமினேஷன் இருக்கும்னு!!.., உன்ன கட்டிக்கிட்டே அழமுடியால!, இதுல லவ் பண்ணுற பொண்ணும் டாமினேட் பன்னா, நான் கிறுக்கு பிடிச்சுத் தான் சுத்தனும்!”னு சொல்ல, நேத்ராவோட ஃபர்ஸ்ட் பிளான் நல்ல வொர்க்அவுட் ஆகியிருக்குனு சந்தோஷப்பட்டு

“நீ நல்ல இருக்கணும்னு அட்வைஸ் பன்னினா? டாமினேஷன்னா?”னு சும்மா கிண்ட

“நீ அட்வைஸ் பண்ணி, அட்வைஸ் பண்ணி, என்ணையே லவ்வே பண்ணவிட மாட்டே போல!”னு அலுத்துக்கொண்டான்,

இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கோ பாப்பா!, நைட் உன்ன கண்டிப்பா மடக்கிருவேன், நாளைல இருந்து நம்ம ரெண்டு பெரும், ஒரே லவ் தான்,  கொஞ்சல் தான்! மனசுக்குள்ளே அவனை கொஞ்சிக் கொள்ள, அவனை அனைத்துக்கொள்ள வேண்டும் போல இருக்க, அடக்கிக் கொண்டு ஒரு கையை அவன் தோள்களில் வைத்துக் கொண்டு, வண்டியை ஒட்டினேன்.  
 
அதுக்கப்புறமும், அவனை சீண்டி வெறுப்பேத்த, ஒரு கட்டத்தில், நான் என்னா சொன்னாலும், பதிலே பேசமா இருக்க,    

“ஓய்"னு ஆசையா கூப்பிட, என்னைப் பார்த்து முறைத்தான், அவன் முறைப்பை பார்த்ததும்,  இன்னும் இவன் அடங்கல, கொஞ்சம் அடிக்கலாம்னு தோண  

“என்னதான் உன் பிரச்சனை?, சும்மா சும்மா முறைக்க?”னு நானும் முறைத்தேன், அவ்வளவுதான், படுத்தே விட்டான்.          

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லமா, பிறந்தநாளும் அதுவுமா உன்கிட்ட எதுக்கு மூக்குடைபட்டுக் கிட்டே இருக்கனும்னு, அமைதியா இருக்கேன், போதுமா! நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க!”னு சொல்லி, கை எடுத்து கும்பிட, அப்பவே காரை நிறுத்தி விட்டு, அவனை அனைத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க, மனசு முழுக்க காதலுடன்  

“அய்யோ,,,,,,,பாவம்,,,,,,,இன்னைக்கு ரெம்ப ஓவரா போறேனோ!”னு அவனை கொஞ்ச  

“தெரிஞ்ச சரி!”னு முனங்கினான். முத்தமிட வந்த ஆசையை அடக்கிக் கொண்டு, அவன் கன்னத்தை கிள்ளி  

“சரி, சரி,,,,,,பிறந்தநாளும் அதுவுமா முஞ்ச தூக்கி வச்சுக்காத!,,, என் செல்லம்ல!", கொஞ்ச, அவன் வழிந்து கொண்டே

“உண்மையிலேயே ஒரு பொண்ணு என்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொல்லி கேட்டுச்சா?”னு  கொஞ்ச நேரம் முன்னாடி எங்களுக்குள் நடந்த உரையாடலில், நான் சொன்னதை பிடித்து கொண்டு, அவன் கேக்க, கடுப்பானேன்,

"ஏண்டா, இங்க ஒருத்தி உன்னையவே நினச்சு சுத்தி சுத்தி வந்தா, அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதா?”னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு,      

“இன்னைக்கு நைட் அவள கூப்புடுவோம்,,, வந்தா இத நீ அவள்டா கேட்டுக்கோ!”னு  சிரித்தவாரே கூற, அமைதியானான்
   
"அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குனு நினைக்கேன்,,,யாருக்கு தெரியும் லவ் கூட பண்ணுறாளோ? என்னவோ?”னு நான் மறுபடியும் அவனை சீண்ட (அந்த அவளும்  நான்தான்!, மனசுக்குள்ள சொல்லி கொண்டு)

“அவ பேரு என்ன?”னு ஆர்வத்தில் அவன் கேக்க, (பானுமதி,, இல்ல இல்ல உன் பாப்பா!னு, மனசுக்குள்ள சொல்லி கொண்டு)

“இன்னைக்கு நைட், நீயே கேட்டு தெருஞ்சுக்கோ, இப்போ என்ன வண்டி ஓட்ட விடு"னு பொய் கோபத்தில் சொல்ல, அவன் வாயிக்குள் ஏதோ முணுமுணுத்தான்  

“என்ன?” நான் அதட்டும் தொனியில் கேக்க

“நீ கார் சூப்பரா ஓட்டுறேனு சொன்னேன், வேற ஒண்ணும் இல்ல!”னு பதில் வர, சிரித்துக் கொண்டேன்.

------------------------------------

வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தவனை, நான் ஜொள்ளு விட்டவாறு பார்க்க, அதை கூட கவனிக்காம

ஓகே வா"னு என்னைப் பார்த்து கேட்டான்அவன் அருகில் சென்ற நான்

பெரிய மனுஷன் ஆயிட்ட"னு கொஞ்சிஅவன் இரு கன்னங்களையும் கிள்ள

பெரிய மனுஷன் கன்னத்தஇப்படி தான் கிள்ளுவாங்களா"னு கேட்டவனை

ஹாப்பி பர்த்டே செல்லம்"னு சொல்லிகட்டிப் பிடித்துமுத்தமிடும் ஆசையை அடக்க முடியாமல் கன்னத்தில் முத்தமிட

ச்சீஎச்சி!”னு கன்னத்தை துடைத்துக்கொண்டு 

தாத்தாவேஷ்டி காட்டிட்டேன்", அவன் ஹாலைப் பார்த்து போகதலையில் அடித்துக் கொண்டுபின் நினைவு வந்தவளாக சுத்தி பார்தேன்நல்ல வேலையாக யாரும் இல்லை

கோவிலுக்கு சென்றோம்தாத்தா அர்ச்சனையின் போது என் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்ய சொல்லஎனக்கு கொண்டாட்டம் தாங்கலஇருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டுஅவனுக்கு கழுத்திலும்எனக்கு கையிலும் அர்ச்சகர்சாமி மாலையை குடுக்கபித்து பிடித்து போனேன்கோவிலை ஒரு சுற்று சுற்றலாம் நான் சொல்லஎங்களை இருவரையும் சுற்றி வர சொல்லி விட்டார் தாத்தா







பழனி மலையில் இருக்கும் போதேகொடைக்கானல் கிளைமேட்டில் மனசு இருக்கஇவன் கைகோர்த்துக் கொண்டு கோவிலை சுத்தினோம்தாத்தாஆச்சிகள் கண்ணை விட்டு 
மறைந்ததும்,

"வா ஒரு செல்ஃபி எடுப்போம்"னு நான் கேக்கஅவன் வாயை சுளித்துக் கொண்டு போஸ் குடுத்தான்அவன் தலையில் தட்டி 

ஒழுங்காநார்மல முஞ்ச வையி"னு சொல்லிபோட்டோ எடுக்கஇருஇருஎன்று என்னை தடுத்தவன் 

மாலைமரியாதையோடுசெல்ஃபி எடுப்போம்"னு சொன்னவன்அவன் கையில் இருந்த மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு

உனக்குமாலைமரியாதைவேண்டாமா?”னு என்னைப் பார்த்து கேட்டவன்என் கையில் இருந்த மாலையை எடுத்துஎன் கழுத்தில் போட்டு

ஃபோன குடுசெல்ஃபிலாம்எப்பவவுமே ஹெட்டா இருக்கவங்க தான் எடுக்கணும்"னு சொல்லி என கையில் இருந்து ஃபோனை பிடுங்கிஎன் தோளில் ஒரு கை போட்டுஅவன் செல்ஃபி எடுக்கநான் அவன் முகத்தைப் பார்த்தவாரு உறைந்து நின்றேன்என் தோளில் இருந்த கையால் வன என்னை கிள்ளஇயல்பு நிலைக்கு வந்த நான் ""னு கத்த

செல்ஃபிஎடுக்கும் பொது காமிராவைப் பார்க்கணும்வாய் பார்க்க கூடாது"னு சொல்லி திரும்பவும்என் தோளில் கைபோட்டு செல்ஃபி எடுக்கநான் அவன் இடுப்பில் கை போட்ட அவனுடன் சேர்ந்து போஸ் குடுத்தேன்ஒரு பத்து பதினைந்து போட்டோ எடுத்துவிட்டுபோதும் போலாம்னு சொல்லிஅவன் முன்னால் நடந்தான்ஏதோ இவனுடன் கல்யாணம் ஆகிவிட்டதைப் போலஉள்ளம் மகிழ்ந்தேன்

அண்ணாந்து கோபுரத்தை பார்த்து முருகானுநெக்குருகி நன்றி சொன்னேன்எனக்கு எங்கேயே டான்ஸ் ஆடனும் போல் தோன்றஇவனைப் தேடினால்இவன் பாட்டுக்குமுன்னால போறான்

எனக்கு கத்தி "டேய் புருஷா!” கூப்பிடனும் போல் இருக்க!, என்னை நினைத்து நானே வெக்கப்பட்டுக் கொண்டுஓடி அவனுடன் சேர்ந்து மாலையோடு நடக்கஅடக்க முடியாத வெக்கம்அவன் பார்த்து விடப் போகிறான் என்று குனிந்து கொண்டேன்மனம் பட படனு அடித்துக் கொள்ளஎனக்கு மயக்கம் வரும் போல் இருந்ததுஅப்போதான்இவன் 

மதுஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”னு திடீர்னு கேட்டான்என்னனு கண்ணலையே திருப்பி கேக்க 

நீ யாரையாவது லவ் பண்ணுரியா?”னு பட்டுனு கேக்கஒரு நிமிஷம், "ஆமாஉண்ணாத்தான் லவ் பண்ணுறேன்இங்க பாரு கல்யாணம் கூட ஆக்கிடுச்சு!”னு சொல்லுசொல்லுனுஎன் மனசு கிடந்து அடிக்கஇவன பார்த்தால்இவனிடம் நான் ஏற்கனவே பார்த்தநான் என்ன சொல்லப் போகிறேனோ என்ற "பரிதவிப்பு!,, பதட்டம்!", அது என்னை பட்டென்று இயல்பு நிலைக்கு கொண்டு வர 

என்ன திடீர்னுஇந்த கேள்வி?”னு முகத்த சாதரணமாக வைத்துக் கொண்டு திருப்பிக் கேட்க

இல்லஇன்னைக்கு திடீர்னு சாரீலாம் கட்டிருக்கஅதுதான்சும்மா கேட்டேன்!”னு ஏதோ சொல்லி மழுப்பினான்எனக்கு புரிந்ததுஇவன் மனதில் ஏதோ இருக்குனுமின்னல் போல ஒரு எண்ணம் பளிச்சிடஒரு வேல இவனும் நம்மள லவ் பண்ணுறானோனுதோணஆசையோடு

நீ கூடத்தான் வேஷ்டி கட்டிருக்கநீ யாரவாவது லவ் பண்ணுரியா?”னு கேட்க 

ஆமா"னு அவன் சொல்லஎனக்கு பறப்பது போல் இருக்க 

உண்மையாவா?, யாரு?”னு அடக்க முடியாத ஆவலோடு கேட்டு, "நான்தான் சொல்லுடாமனுசுக்குள்ள அவனை கெஞ்சினேன்

ஜினாலி ஜெய்ன்என் மைதா மாவு"னு சொல்லிஎன் தலைல இடிய இறக்கிட்டுஎன்னைப் பார்த்து கண்ணடித்துஅவன் ஓட 

“பண்ணி! திருந்தவே மாட்டியா?”னு கேட்டவாறே கொலைவெறியில் அவனை தூரத்தி, கண்ணில் தெரிந்த கோபுரத்தை பார்த்து, "முருகா, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டேனு" சாபமிட்டேன்

கார் கோயம்புத்தூர் நோக்கி பறந்தது கொண்டிருந்தது.

இவன் அந்த மைதா மாவு பத்தி பேசி என்னை கடுப்பேத்தினான் என்றால், இவன் தாத்தா "நீ இவன் கூடப் பிறகக்காத அக்கா மா"னு சொல்லி கிளம்புறதுக்கு முன்னாடி வெறுப்பேத்தினார். மொத்த கோபத்தையும், ரோட்டில் தான் காட்டினேன்.

ஒரு வேல, இவன் ஜினாலிய சீரியஸ்ஸா லவ் பண்ணுறானோ என்று மனம் என்னை கேக்க, பத்திக் கொண்டு வந்தது எனக்கு. காலையில இருந்து கண்ட்ரோல்!, கண்ட்ரோல்! இருந்துட்டு, இப்போ எல்லாமே என் கைய விட்டு போனது மாதிரி தோன்றியது. அப்போதான் முடிவு பன்னினேன், முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுவோம், சோக பால் வேலைக்கு ஆகலனா, சொர்க்க பால் போட்டு, விக்கெட் எடுக்குறதுனு. அதுதான் மாலைய போட்டுட்டானே, என்று எனக்கு நானே தெம்பு சொல்லிக்கொண்டேன்

-------------------------- 

வாங்கிய உடைகளில், நான் அணிய செலக்ட் செய்த டிரஸ் எடுத்துக் கொண்டு, அந்த லைப்ஸ்டைல் ஸ்டோரின், டிரைல் ரூம்க்குள் நுழைந்தேன். என்னதான் என்னை நான் தேற்றிக்கொண்டாலும், கொஞ்சம் சோர்வாகவே உணர்ந்தேன், ஃபோனை எடுத்து, மாலையோடு நாங்கள் எடுத்த செல்ஃபியை பார்க்க, கொஞ்சம் உற்சாகம் அடைந்தேன். மொத்த டிரஸ்ஸையும், கழட்டி விட்டு, கண்ணாடியில் என்னை பார்த்து, கண்டிப்பா மடங்கிருவான்னு, எனக்கு நானே சொல்லி, ஒரு தாங் டைப், பேன்டி எடுத்து அணிந்து கொண்டு, திரும்பி என் பின் புரத்தை கண்ணாடியில் பார்த்தேன். நேத்ரா சொன்னது உண்மைதான் என்று தோண, எடுப்பாக, கொஞ்சமே, கொஞ்சம் பேன்டி மறைக்க, 80 சதவிகிதம் அம்மணமாக இருந்த பின்புறத்தை கையால் தடவிவிட்டு, ஈசியா அவன் கழட்டுவதற்கு ஏதுவாக, ஒரு ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொண்டேன். கண்ணாடியில் எண்ணப் பார்த்து திருப்தியாக, மீதி உடைகளை அணிந்து கொண்டு, மீண்டும் கண்ணாடியில் எனைப்பார்த்து "இன்னைக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டா?” கேட்டு சிரித்துக்கொண்டேன். 

அவனிடம் போய், புருவம் உயர்த்தி, எப்படி?னு கேக்க, அவன் விசிலடித்து 

“அழகா இருக்க மது, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, மறுபடியும் , இரு கைகளால் என் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, "இதுக்கெல்லாம் மயங்கிராதனு" எனக்கு நானே சொல்லிக் கொண்டு, பார்க்கிங் நோக்கி, என் இடுப்பில் கூடுதல் நளினம் கொடுத்து நடந்தேன், அவன் பார்க்கட்டும் என்று.

----------------------------------

ஒரு அரை மணி நேரம் கழித்து, கார் தி ரெஸிடென்சியில் நுழைந்தது, ஏன் என்பதைப் போல அவன் பார்க்க, சிரித்தேன். காரை வேளட் பார்க்கிங்க்கு கொடுத்தவிட்டு, திரும்பி இவனிடம் 

“ரெம்ப நாளா கேட்டியே!, பப்புக்கு கூட்டிடு போக சொல்லி, போலாமா?”னு கேட்டு, அவன் கையோடு என் கை கோர்த்துக் கொண்டு, ஹோட்டல் உள்ளே சென்றோம். லாபியில் இவனை காத்திருக்க சொல்ல, ஏன் கேட்டவனிடம், வாயில் விரல் வைத்து கட்டிவிட்டு, ரிசப்ஷன் சென்று செக்-இன் செய்துவிட்டு

“போலாமா?”னு இவனை கேக்க, வாயெல்லாம் பல்லாக

“பீர் வாங்கித் தருவியா?னு கேட்டான்,

“வாங்கி தர்ற மட்டும் இல்ல, ஊத்தியும் கொடுகக்குறேன்!”னு மனசுக்குள்ள சொல்லிட்டு,

“வாங்கி மட்டும் தந்தா போதுமா?,, இல்ல, ஊத்திக் கொடுக்கணுமா?”னு முறைத்தவாறு கேட்டு, அவன் தோள்களில் அடிக்க

“ஊத்திலாம் கொடுக்க வேண்டாம், நான் அப்படியே குடிப்பேன்"னு சொன்னவனை கூட்டிக்கிட்டு பப்புக்குள் நுழைந்தேன். உள்ளே சென்று இருவரும் ஆடினோம், அவன் செம்ம ஜாலியா அடிக்கொண்டு இருந்தான். நான் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவாரே அடிக்கொண்டிருக்கும் போதுதான், பப்பினுள் நுழைந்தாள் ஜினாலி.

ஏற்கனவே கொஞ்சம் சோர்வடைந்து, நம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு, அவளின் வருகை, அடி வயிற்றில் புளியை கரைத்தது. இன்னைக்கு ஒண்ணும் நடக்காவிட்டாலும் பரவாயில்லை, இவனை அவள் கண்களில் படாமல் காப்பாற்றினால் போதும் என்று தோன்ற, என்ன செய்வது என்று தெரியாமல் மருகி நின்றேன். என் தாலி அறுப்பதற்கென்றே இவளைப் பெத்தார்கள் போலனு, என் விதியை நினைத்து நான் நொந்து கொள்ள, இவனை கண்டு கொண்டவள், எங்களைப் பார்த்து வந்தாள், நான் அழும் நிலையில் இருந்தேன். வந்தவள், இவன் தோளை தட்ட, இவன் திரும்பியதும்

“ஹே, வாட் அ சர்ப்ரைஸ்"னு கட்டிப்பிடித்தாள். நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்,

“ஹாப்பி பர்த்டே சாம்ப!”னு சொல்லி மீண்டு கட்டிபிடித்தாள், இவன் அவளை வாயைப் பிளந்து பார்க்க, எனக்கு பத்திக் கொண்டு வந்தது.

“ஹோவ் டு ஐ லுக்?”னு அவள் கேட்க,

“செம,,, வெறி ஹாட் அண்ட் செக்ஸி"னு இவன் வழிய, அவள், இவன் கைகளைப் பற்றிக் கொண்டு

“கம் லேட்-ஸ் டான்ஸ்"னு அவள் சொல்ல, இவனும் அவளுடன் சேர்ந்து ஆட,

எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, அவளை பார்த்துவிட்டால், நான் இருக்குறது கூட தெரியாத இவனுக்கு?, அவ்வளவுதானா நான்?, என்ற எண்ணத்தில் கூனிக், குறுகிப் போனேன். மனதெல்லாம் தாங்க முடியாத ரணமாய் இருக்க, கண்ணீருடன் ரெஸ்ட்ரூம் சென்று, ஒரு டாய்லெட் என்னை அடைத்துக் கொண்டேன். அடக்கமுடியாமல் அழ, கொஞ்ச நேரத்தில் மூச்சடைப்பது போல இருந்தது, செத்துருவேனோ என்று என்னம் தோன்ற, சாவு ஒன்றும் இவ்வளவு கொடுமையாய் இருக்காது என்றே தோன்றியது. இப்போவே யாராவது, இந்த டாய்லெட்ல சிமெண்ட் கொட்டி, எனக்கு உயிரோட சமாதி காட்ட மாட்டாங்களா!, என் காலுக்கு கீழ் உள்ள தரையில், ஒரு ஓட்டை விழுந்து, பூமி அப்படியே விழுங்கிறாத!னு பலவாறான எண்ணங்கள், அத்தனையிலும் என் மரணம் மட்டுமே மையாப்புள்ளி.

என் மொபைல் ரிங் அடித்து, என் மரண எண்ணங்களைக் கலைத்தது. நேத்ரா தான் கால் செய்தாள்,

“ஹலோ, ஏய் உனக்கு எத்தன தடவ ஃபோன் பண்ணுறது"னு எடுத்தவுடன் எகிறினாள்

நான் சத்தமில்லாமல் அழுகையை கட்டுப்படுத்த முயல

“ஹலோ, ஹலோ,” என்றவள்

“பானு, லைன்ல இருக்கியா?”னு கேக்க, நான் அடக்க முடியாமல் அழுதுவிட்டேன்

“ஏய், என்னாச்சு, என்னாச்சு பா?”னு பதறி கேக்க, பதில் சொல்ல முடியாமல் அழுதேன், பொது இடத்தில் அதிலும் ஒரு டாய்லெட்ல இருக்கேன், என்றெல்லாம் நினைக்கவில்லை.

“இப்போ எங்க இருக்க, சொல்லு நான் வர்றேன்?” என்றவள், நான் பதில் சொல்லாமல் அழுக, ரெம்பவே பதறி விட்டாள்.

“பானு, நீ இப்படி அழுதுக்கிட்டே இருந்த நான் என்ன பா பண்றது?, பிளீஸ் பேசு பா!? என்க, அழுகையை அடக்க முடியாவிட்டாலும்

“அவ்வளவுதான் டீ, எல்லாமே போச்சு!”னு அழுகையின் ஊடே நான் சொல்ல

“முடியாதுனு சொல்லிட்டானா?”னு சந்தேகத்தோடு கேக்க, நான் நடந்த அனைத்தையும் சொல்ல,

“பைத்தியமா டீ நீ?, இப்போ ஏத்துக்கு அழுற?, இதே விட நல்ல சான்ஸ் உனக்கு கிடைக்காது!”னு அவள் சம்பந்தம் இல்லாமல் பேச,

“பிளீஸ் டி, நான் ஃபோன் வைக்கிறேன்"னு சொல்ல

"ஏய் லூசு, ஆடு அதுவே வந்து அறுனு சான்ஸ் குடுக்கும் போது, இப்படி ஒப்பாரி வசக்குகிட்டு இருக்க?”னு என்னை திட்ட, குழப்பத்தில், அழுகை கொஞ்சம் குறைந்தது.

“என்னடி குழப்புற?”னு நான் கேட்க

“லூசு தான் நீ, பழம் நழுவி எல்லார்க்கும் பால்ல விழும்னா, உனக்கு அது வாயிலேயே விழுத்து, நீ என்னடானா, இப்படி குமுறி, குமுறி அழுதுக்கிட்டு இருக்க?”னு அவள் திரும்பவும் சலித்துக் கொண்டாள்,

“என்னடி குழப்புற?”னு நான் மறுபடியும் கேக்க

"நான் சொல்றத நல்ல கேளு, இப்போ சார் ஃபிகர் ஜோர்ல இருக்காரு! நிதானத்துக்கு வந்ததும் உன்ன தேடுவான், நீ பப்ல இல்லே தெரிஞ்சதும் கண்டிப்பா பதறுவான், அவன் உன்ன தேடி வரட்டும், அப்போ நீ, இப்போ அழுகுற மாதிரி, தேம்பி தேம்பி அழு, நீ போடப்போற சோக ஸீன்ல இன்னைக்கு அவன தெறிக்க விடனும்"னு சொல்லி சிரிக்க, நான் அவள் சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன்.

“ஏய், என்னாச்சு?”னு, நான் பதில் சொல்லாமல் இருக்கவும், கேட்டாள் 

“இல்லடி, அவனுக்கு அவளைத்தான் பிடிச்சுருக்குனு தோணுது"னு குரல் விம்மி சொல்ல

“லூசுடி நீ!, இப்போ நான் அங்க வந்தேன் வையி, நானே உன்ன சாவடிச்சுருவேன்!”னு கத்தியவள், நான் அமைதியாக இருக்க தொடர்ந்ததாள்

“நீ இல்லாம, அவன் சந்தோஷமா இருப்பானா?”னு கேக்க

“யாருக்கு தெரியும், இருந்தாலும் இருப்பான்"னு, அவன் நான் இருப்பதை கூட கவனியாமல் அவளுடன் சென்ற விரக்தியில், உண்மையான சந்தேகத்தில், சொல்ல, சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள்


                          


“சரி, விடு!, உன்னவிட அதிகமா, அவன யாராவது லவ் பண்ண முடியும்னு, உனக்கு தோனுதா?”னு கேக்க, சிறிது நேர அமைதிக்கு பின்

“முடியாது!"னு விம்மலுடன் கூற

“அவ்வளவுதான், முதல்ல இப்படி மனச தளராவிடாத!, அவன் உன்னோட ஆளு"னு சொல்ல

“ஆனா அவ தான், அவனோட ஆளு!”னு நான் விரக்தியில் கூற

“இந்த ஜோக்கு நான், நாளைக்கு சிரிக்கிறேன், இப்போ நீ நான் சொல்லுறத கேளு!”

“அவன் அந்த மைதா மாவையே கல்யாணம் பண்ணுறானு வையி, பின்னாடி அவன் கஷ்டப்பட மாட்டானு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?”னு கேக்க, அவனுக்கும் அவளுக்கும் கல்யாணமா? என்கிற எண்ணத்தில் விக்கித்து நிற்க

“சரி விடு, அவன் உன்ன கல்யாணம் பண்ணுறானு வையி, நீ அவன கஷ்டப் படுத்துவியா?”னு கேக்க, நான் கொஞ்சம் தெளிவானேன். என்னை எப்படி தெம்பூட்ட வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தாள்

“நான் சொல்றத நல்லா கேளு, இந்த லவ் உன்னவிட, அவனுக்கு ரெம்ப முக்கியம்!”னு சொல்ல, அவள் என்ன சொன்னாலும் நம்பும் மனநிலையில் நான்.

“இப்போ நீ எங்க இருக்க?”னு கேக்க, நான் பதில் சொன்னேன்.

“லூஸ நீ, பப்புக்குள்ள ரெஸ்ட்ரூம்லையா?, முதல்ல உள்ள போ! அந்த மைதா மாவு, அவன எங்கையாவது தள்ளிக்கிட்டு போய் சொர்க்க ஸீன் போட்டுட்டானா? என்ன பண்ணுவே?”னு அவள் கேக்க, நான் கொஞ்சம் பதறி விட்டேன்.

" நாமலே எவ்வளவு கதை கேட்டுருக்கோம்"னு அவள் தொடர,

“ஓகே டி, நான் உள்ள போறேன், பாய்"னு அவசரமாக சொல்ல,

“ஏய், ஒரு நிமிஷம் கேளு, உள்ள போய் நீயா எதுவும் பண்ணாத, அவங்கள உன் காண் பார்வைல இருந்து மட்டும் மிஸ் பண்ணாத. இப்பவும் சொல்றேன், பேசாம ஆட அறுத்து படையல், போட்டுறு, அதுதான் சேஃப். நீ இருக்கும் போதே, உன் நியாபகம் இல்லாம் அவ கூட போறான்னா, இன்னும் விட்டு வைக்கிறது எனக்கு சரியா படல!”னு அவள் சீரியஸ சொல்ல, நான் "ம்" கொட்டி ஃபோன் வைத்து விட்டு, முகம் கழுவினேன். கண்ணாடி பார்த்து எனக்கு நானே தெம்பு சொல்லிக்கொண்டேன், "அவன் நீ போட்ட முட்டை, கண்டவ எல்லாம் அடை காத்து குஞ்சி பொறிக்க, நீ ஒண்ணும் இளிச்சவாச்சி இல்ல!”.

உள்ளே சென்ற நான் அவர்களைத் தேட, அந்த ஜினாலி இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள், இவன் அருகில் இருந்தான். நான் இவனை பார்த்துக் கொண்டே சென்று ஒரு டேபிளில் அமர்ந்தேன். “உன் நியாபகம் இல்லாம் அவ கூட போறான்னா"னு நேத்ரா சொன்ன சொற்கள், என் மண்டைக்குள் ரீங்காரமிட, கடுப்பில் இவனை முறைத்தேன்.

அவள் செல்ல, இவன் கொஞ்சம் பரபரப்பானான், என்னைத்தான் தேடினான். கொஞ்ச நேரத்துல என்னை கண்டு பிடித்தவன், அமைதியாக வந்து என் எதிர் இருக்கையில் அமர்ந்தான். சிறிது நேரத்துக்கு பிறகு நிமிர்ந்து பார்த்து, கண்களால் கெஞ்ச, நான் முறைத்து விட்டு வெயிடரை அழைத்து, ஒரு பீர் சொல்ல,

சிறிது நேரதில் ஒரு டீன் பீர் வந்தது

என் அருகில் இருந்த பீரை எடுத்து, அவன் பக்கம் வைக்க, அவன் அமைதியாக முன்னால் இருந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தேன்,

“எடுத்துக் குடி!”னு நான் சொல்ல, அவன் குனிந்த தலை நிமிரவில்லை,

“பச்,,,,எடுத்துக் குடி, டைம் ஆச்சு, கிளம்பனும்!”னு கொஞ்சம் சத்தமாக சொல்ல, நிமிர்ந்து என்னைப் பார்த்து கெஞ்சினான். கொஞ்சம் பாவமா இருந்தாலும், அவனைப் பார்த்து முறைக்க, பீரை எடுத்து குடித்தவன், முகம் சுளித்து, டேபிளில் இருந்த கிளாஸில்,, குடித்த பீரை துப்பினான். வ்வோக்னு சொல்லி, வாயில் போட ஏதாவது கிடைக்குமானு தேட, அதைப் பார்த்து கொண்டு இருந்த என்னால், வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். அவன் நிமிர்ந்து பாக்க, சிரிப்பதை நிறுத்தி விட்டு, மறுபடியும் முறைத்தேன்.

மனதுக்குள் சொல்லிக் கொண்டேன், "அந்த பீர் தான் அந்த ஜினாலி, ஆசைப்படுறான், வாங்கி குடுத்த, இப்படிதான் வாயில வச்ச உடனே துப்பிட்டு கஷ்டபடுவான். அவன் கஷ்டப்படம் பாத்துக்குறது உன் பொறுப்பு!” என்று எண்ணிக்கொண்டிருக்க,

“சொ சாரி மது, பிளீஸ் இந்த ஒருதடவ மன்னிச்சிறு! நான் பண்ணது தப்புதான், என் பிறந்தநாளும் அதுவுமா, என் கூட பேசாம இருக்காதே,,,பிளீஸ்,,வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ"னு அவன் கெஞ்ச, எதுவும் பேசாமல் முறைத்தேன். அவன் தலையை குனிந்து கொண்டான்.

இதுதான் ரைட் டைமிங் என்று தோன்ற எழுந்து அவன் அருகில் சென்றேன்

“போலாம்!”னு நான் சொல்ல, அவன் குனிந்த தலை நிமிரவில்லை,

"எண்ணப் பாரு!”நான் மௌபடியும் சொல்ல, அவன் அசையாது இருந்தான்.

“டேய்,, இப்போ பார்க்க போறியா இல்லையா?”னு மிரட்ட

நிமிர்ந்து பார்த்தான், கன்னத்தில் பளார்னு அடிக்க, நான் எதிர் பார்த்ததை விட கொஞ்சம் பலமாகவே விழ, நானே கொஞ்சம் துடித்துத் தான் போனேன். ஆனா இவன் ரூம்க்கு பேசாம வரணும், அது வரைக்கும் இறக்கமே காட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

“உனக்கு பிறந்தநாள், அதனால இத்தொட விடுறேன், ஆனா நாளைக்கு முதல் வேலையா நீயே என்னத்தேடி வந்து, அடி வாங்குற!"னு நான் சொல்ல, பாவமாக தலையாட்டினான்,

“வா போலாம்னு" சொல்லி,,

அவன் எழுந்ததும், அவன் தோள்களில் கை போட்டு கூட்டிக் கொண்டு, பப் வாசல் அருகே வரும் போது,

“ஹே, நீயும் கிளம்பிட்டியா?” ஜினாலியின் சத்தம் கேக்க, திரும்பி சத்தம் வந்த பக்கம் இருவரும் பார்க்க, அவள் அப்போதுதான் ஃபிரெஷ்-ஆகி, ரெஸ்ட்ரூம் விட்டு வெளிய வந்தாள்.

“ஹே! பானு நீ எப்போ வந்தே?”னு சொல்லி, என்னை ஹக் பண்ணிட்டு,

“ஹாப்பி பர்த்டே எகைன் ஹேண்ட்ஸம்"னு சொல்லி இவன் கன்னத்தில், என் முன்னாலையே முத்தமிட, எனக்கு மண்டையில் ஏறிய சூட்டில், அவளை கொலை வெறியில் பார்க்க, அவள் இவனைப் பார்த்து "பாய்"னு சொல்லி கிளம்பினாள்.

உனக்கு இருக்குடி ஒரு நாள்னு மனசுல நினச்சுக்கிட்டு, இன்னைக்கி இவன பொங்க வச்சுரனும். இனிமேலும் தள்ளிப்போட்ட, முதலுக்கே மோசம் ஆயிரும்னு, எண்ணியவாரே, வேகமாக லிப்டுக்குள் சென்று தர்ட் ஃபுளோர், பட்டனை அழுத்த, அவனும் உள்ளே வந்தான். லிப்ட்டி எங்களைத்தவிர யாரும் இல்லை. டோர் அடைக்கவும், அவன் "பளார்" அறைந்தேன். அவன் கன்னத்தில் இருந்த அவளின் லிப்ஸ்டிக் கரைய கண்ட கோபத்தில் தான் அடித்தேன்.

அடித்த எனக்கே கை வலிக்க, அடுத்த நொடி, கலங்கிப் போனேன், அவள் முத்தம் குடுத்ததுக்கு இவன் என்ன பண்ணுவான். நான் தான் அவனை லவ் பண்ணுறேன், அவன் பண்ணலையே, ஒரு வேல இவனே, அவள கிஸ் அடிச்சா கூட என்ன தப்புனு என் எண்ணம் சிதற, அப்படி எல்லாம் யோசிக்க கூடாது, இவன் எனக்கு சொந்தமானவன்னு சொல்லி உடனே அதற்கு, கடிவாளம் போட்டேன். லிப்ட் நின்றதும் இறங்கி நடக்க

“மது, ஃபுளோர் மாறிட்டோம், இது தர்ட் ஃபுளோர்!"னு சொல்ல, 

அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, நேர ரூம்மை திறந்து உள்ளே சென்று, அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தேன். இவன் தயங்கியவாறு கதவருக்கே நிக்க முறைத்தேன். எதுவும் பேசாமல் உள்ளே வந்தவன் அங்கிருந்த சேரில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான். 

அப்பொழுது தான் கவனித்தேன், அவன் கன்னங்களில் என் விரல் தடம். துடித்து விட்டேன். ஏற்கனவே அவனை அடித்த குற்ற உணர்ச்சியில் இருக்க, விரல் தடம் பார்த்து, என் மீது எனக்கே கோபம் வர, என் கைளில் முகம் புதைத்து அழுதேன். கதவு திறக்கும் சத்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தால் அவன் ரூம்மில் இல்லை, பதறி அடித்து நான் வெளியே வந்து பாக்க, அருகில் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு நின்றான். 

கொஞ்சம் நிதானம் ஆனேன், கண்களைத் துடைத்து விட்டு, அவன் தோளில் தட்ட, நிமிர்ந்து பார்த்தான் பாவமாக!, உள்ளே போக சொல்லி கண்ணைக் காட்ட, என்னைப் பார்த்தவாறே அசையாமல் நின்றான், மறுபடியும் முறைத்தவாரே கண்ணைக் காட்ட, கெஞ்சலாக என்னைப் பார்த்தவாறே, உள்ளே சென்றான், கதவை அடைத்துவிட்டு, நேராக பாத்ரூம் சென்று முகம் கழுவிட்டு, சோபாவில் அவனைப் பார்த்தவாறு அமர்ந்தேன்.

“சாரி டா, என்ன இருந்தாலும் உன்ன பப்ளிக் பிளேஸ்ல அடிச்சிருக்க கூடாது, ஏன்னு தெரியல,,, இப்போ எல்லாம் என் கை ரெம்ப நீளுது, சாரிடா!”னு சொல்லி, அவன் இரு கன்னங்களையிம் கையில் ஏந்தி, அவன் முகத்தை என்னை பார்த்து திருப்ப, கலங்கி கண்களுடன் இருந்தான்.

“நான் தான் சாரி சொல்லணும், தப்பு என் மேலதான், நீ அடிச்சதெல்லாம் சரிதான்!”னு அவன் சொல்ல, கொஞ்சம் தடுமாறினேன்

“உண்மையிலேயே ஜினாலிய லவ் பண்ணுரியா?”னு கேட்டு, பின், நான் பண்ணிய மடத்தனம் எனக்கு உரைக்க, “ஆமானு மட்டும் சொல்லிடாத" மனுசுக்குள்ளேயே கெஞ்ச, அவன் பதில் சொல்லாமல் இருக்க, எதுவும் பேசாம இருப்பது எனக்கு ஆபத்து, ஒரு வேளை ஆமானு சொல்லிட்டா! என்ன பண்றதுனு தோன 

“சாரிடா, பிறந்த நாளுனு கூடப் பாக்காம,, ரெண்டு தடவ அடிச்சசுட்டேன்!”னு நான் உண்மையான வருத்ததுடன் சொல்ல

 


“அடிச்சத நினச்செல்லாம்,, நீ பீல் பண்ணாதே,, நீ தான அடிச்ச,,, இட்ஸ் ஓகே"னு சொல்லி அவன் என் கன்னத்தை கிள்ள 

“ரொம்ப வலிச்சதா?”னு என் கன்னங்களை தடவிக் கொண்டே, மீண்டும் கேக்க,

“வேற ஏதாவது பேசுவோமே, நீ அடிச்சதையே நினச்சு பீல் பண்ணாத!”னு அவன் என்னை தேற்ற, உதடு துடிக்க, கட்டுப் படுத்த முடியாமல்

“ஐ லவ் யு! டா!”னு வார்த்தைகள் என் கட்டுப்பாட்டை மீறி, வாயில் இருந்து வெளியேற

“மீ டூ,, மது"னு சிரித்தவாரே சொல்லி, அவன் என்னை கட்டிப் பிடிக்க வர, ஏதோ உள்ளுணர்வு தந்த உத்வேகத்தில், கைகளில் ஏந்திய முகத்தை நோக்கி பாய்ந்து சென்று, அவன் உதடுகளில் முத்தமிட்டேன்.

எங்களின் முதல் முத்தம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக