http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 23

பக்கங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 23

 ப்ச்" என்றபடி ஃபோனை வெறித்தேன். இத்தோடு பத்தாவது முறையாக என் அழைப்பை துண்டித்துவிட்டாள். அனுப்பிய மெசேஜ்க்கும் பதில் இல்லை. படத்துக்கு போகலாம், நேரா தியேட்டர் வந்திடு என்று சொல்லியவள், படம் ஆரம்பிப்பதற்கு இன்னும் பத்து நிமிடமே இருக்க, இன்னும் வரவில்லை

, அழைத்தால் ஃபோனயும் எடுக்கவில்லை.


ஹாய்என்ற சத்த கேட்டு திரும்பிப் பார்த்தேன்என்னை பார்த்து ஒரு பெண் சிரித்துக் கொண்டிருந்தாள்எங்கேயோ பார்த்த முகம்ஆனால் நினைவில் வரவில்லைஅதை காட்டிக் கொள்ளாமல் நானும் திரும்ப ஒரு "ஹாய்சொன்னேன்.

மணி தான?” அவள் கேட்கநான் தலையாட்டினேன்.

ஜினாலி உன்ன பத்தி நிறைய சொல்லிருக்கா!!” எண்ணப்பத்தி இரண்டு பெண்கள் பேசியிருக்கிறார்கள் என்று அறிந்ததும்உற்சாகம் ஆனேன்ஆண்களின் இயல்பும் அதுதானே.

என்ன இந்த பக்கம்!!” நன்றாக தெரிந்தவள் போல பேசினாள்

மூவி பார்க்கதான்!! ஃப்ரெண்ட்ஸ்க்கு வெயிட்டிங்!!” ஒட்டுதல் இல்லாமல் பதில் சொன்னேன்சுற்றிலும் பார்வையை செலுத்தியபடி

என்ன மூவி?” சொன்னேன்.

நானும் அந்த மூவிக்குதான் டிக்கெட்ஸ் வாங்கினேன்!! பட் ஃப்ரெண்ட் வரலனு டிராப் ஆயிட்டான்!! அதுதான் படம் பார்க்கலாமாஇல்ல திரும்ப போகலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்!!” நான் எதுவும் கேக்கக்காமலே அவள் பதில் சொல்லஅப்பொழுது தான் நியாபகம் வந்ததுஅந்த பெண் ஜினாலியின் கஸீன்என் பிறந்தநாள் பார்ட்டி அன்று இவள் தான் என்னுடன் ஆடிக்கொண்டிருந்த ஜினாலியை அழைத்து சென்றது.

ப்ராப்ளம் எதுவும் இல்லனாஜாயின் அஸ்!!” அவள் யாரென்று தெரிந்ததும்சாதரணாமாக கேக்க,

ரியல்லி!! எனக்கு தனியா படம் பார்க்க புடிக்காது!! சேம்டைம்இன்னைக்கு இந்த படம் பார்த்தே ஆகணும்னு தான் அந்த டாக்-க நம்பி டிக்கெட்ஸ் புக் பன்னினேன்ஆர் யு சூர்உன் ஃப்ரெண்ட்ஸ் தப்பா எடுத்துக்க மாட்டாங்களே?” அவள் வாயெல்லாம் பல்லாக கேட்க,

நாட் அன் இஷ்யுஉங்க டிக்கெட்ஸ் குடுங்கஅவள் டிக்கெட்ஸ் வாங்கிஅவளும் எங்களுடன் சேர்ந்து அமர ஏதுவாக எங்கள் இருக்கையை மாற்றி வாங்கிக் கொண்டு வந்துஅதை அவளிடம் சொல்ல,

தாங்க்ஸ்!! ரியல்லி தாங்க யு!! ஐ ரியல்லி காண்ட் வாட்ச் அ மூவி அலோன்!!" என்று நன்றியைஉற்சாகமாக காட்டினாள்அவள் அப்படி உற்சாகம் கட்டிக் கொண்டிருக்கும் நேரம்தான் மதுவும்நேத்ராவும் வந்தார்கள்நான் மதுவைப் பார்த்து புன்னகை பூக்கஅது முழுதாக பூக்கும் முன்பே

கால் எடுக்கலனா பிசியா இருக்கேனு அர்த்தம்!! பொறுக்க முடியாதாநொய்யி!! நொய்யி!! திரும்ப திரும்ப கால் பண்ணுறே!!” பொறிந்து தள்ளியவள்நான் பதில் அளிக்கும் முன்பே

லேட் ஆச்சு!! போகலாம்!!” நேத்ராவைப் பார்த்து சொல்லநேத்ரா என்னைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தாள்அவர்கள் இருவரும் முன்னால் செல்லஎன் அருகில் நின்றவளோ கேள்வியாக என்னைப் பார்க்க, “இதெல்லாம் ஒண்ணுமே இல்லஎன்பது போல தோளை உலுக்கி காட்டிவிட்டுஅவளையும் அழைத்துக் கொண்டு தியேட்டர் உள்ளே சென்றேன்மது ஆன்லைனில் புக்கிங்க செய்த சீட்டில் அமரப்போகநான் புக்கிங்கை மாற்றியதை சொன்னேன்அப்பொழுத்து தான் எனது அருகில் இருந்தவளை கவனித்தனர்இருவரும்இவள் "ஹாய்சொல்லஇருவரும் "ஹாய்சொல்லிவிட்டுசீட்டில் சென்று அமர்ந்தோம்.

முதல் சீட்டில் மது அமரஅவளுக்கு அடுத்து நான் அமர்ந்து கொண்டேன்இவள் நேத்ராவை முந்திக்கொண்டு என் அருகில் அமரஎன்னைப் பார்த்து நாக்கலாக சிரித்துக் கொண்டே சென்ற நேத்ரா அடுத்து அமர்ந்து கொண்டாள்படம் ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில்என் கையை கிள்ளினால் மது.

யார் அந்த பொண்ணு?” நான் மதுவின் பக்கம் சாயஅவள் கேட்டாள்.

ஜினாலியோட கஸீன்!!” வேற வழி இல்லாமல் சொல்லும் போதுதான்எனக்கு நானே சூனியம் வைத்துக்கொண்டதை அறிந்தேன்அதற்கு பிறகு மது எதுவும் பேசவில்லை.

அவளோட ஃப்ரெண்ட் கடைசி நிமிஷத்துல வரலனு சொல்லிட்டானாம்அதுதான் நம்ம கூட ஜாயின் பன்னிக்கவானு கேட்டா!!” அவள் வேறு எதுவும் கேட்காததால் நானாக விளக்கம் கொடுக்கஅவள் நான் சொன்னதை கண்டுகொண்டாதாக கூட தெரியவில்லைஅப்பொழுத்து தான் மற்றொன்று நினைவுக்கு வந்ததுஜினாலியின் கஸீன் பெயர் கூட தெரியாது எனக்குஅவள் சொல்லவும் இல்லைநான் கேட்கவும் இல்லைஒரு பத்து நிமிடம் இருக்கும்பெயர் தெரியாத அவள் அலைபேசியில் அழைப்பு வரஎடுத்து பேசிவிட்டுஎன்னிடம் திரும்பியவள்டிக்கெட்-டை கேட்டாள்நான் கேள்வியுடன் பார்க்க

என் ஃப்ரெண்ட் வந்துட்டான்!!” என்றவளை மீண்டும் கேள்வியுடன் பார்க்கசிரித்தவள் ஃபோனை நோண்டிபின் என்னிடம் காட்டினாள்.

“Movie with a ******” அவள் சிரித்தவாறு எடுத்த செல்ஃப்பியில் நான் எங்கோ வெறித்தவாறு இருந்தேன். “இத எப்போ எடுத்தா?” என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதேஎன் கையில் இருந்து டிக்கெட்-டை பிடிங்கிக் கொண்டு வெளியே சென்றாள்நான் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்தலையில் "நாங்என்று விழுந்த கொட்டில்சுயநிலை உணரதலையை தேய்த்துக் கொண்டே மதுவைப் பார்த்தால்அவள் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்அவளும் பார்த்திருப்பாள் போலபின் நேத்ராவை அழைத்தவள்அவளை எனக்கு அடுத்து அமரச் செய்தாள்.

யார் டா அந்த பொண்ணு?” அருகில் அமறந்தவுடன் நேத்ராவும் கேட்கமதுவிடம் சொன்னதையே இவளிடமும் சொன்னேன்சிரித்தவள்,

ஃபோன எடுக்கலனுஉடனே ஒரு ஃபிகர கரெக்ட் பண்ணிட்டேபெரிய ஆலுதான் டா நீ!!” நக்கலடித்த நேத்ரவை பாவமாக பார்த்தேன்.

எனக்கு தெரியும்நேத்ரா நாக்கலாக சொன்னதைமது கடும் கோபத்தில் கேட்பாள் என்றுஅப்படி கேட்டாள் என்ன பதில் சொல்லவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதிரும்பி வந்தாள் ஜினாலியின் கஸீன்அவளை பின் தொடர்ந்து அவளை விட உயரம் கம்மியாக ஒருவன்இருவரும் எங்களை கடந்து சென்று அமர்ந்தனர்அவர்கள் கடந்து செல்லும் போதுஅவள் சும்மா போகாமல்என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு செல்லநேத்ரா சிரித்தாள்எப்படியும் மது பார்த்திருப்பாள் என்று நம்பியதால்அவள் புறம் திரும்பவில்லைநேத்ராவைப் பார்த்து முறைத்தேன்.

என்னடா ஜோடியா ரெண்டு பெரும் முறைக்கிறீங்க?” நேத்ரா கேட்கநான் திரும்பி மதுவைப் பார்த்தேன்மீண்டும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்ஏதாவது சொல்லி சமாளிப்போம் என்று வாயெடுக்கவாயில் விரல் வைத்துபடத்தை பார்க்கும் படி செய்கை செய்தாள்ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுபடத்தில் பார்வையை பதிக்கமீண்டும் நேத்ரா சிரித்தாள்சிறிது நேரம் கழித்துமெதுவாக கையை நகர்த்திமதுவின் கையை பற்றஎன் எதிர் பார்ப்புக்கு மாறாகவிரல் கோர்த்துக் கொண்டவள்நகர்ந்து என் தோளில் சாய்ந்து கொண்டாள்என் மனது கொஞ்சம் நிம்மதி கொண்டதுஓடிக்கொண்டிருந்த படத்தில் மனம் ஒட்டவில்லைமொபைல் எடுத்து நோண்டஅப்பொழுத்துதான் அந்த மெயில் வந்தது.

ஸ்பெயினில் உள்ள ஒரு மிக பிரபலமான டென்னிஸ் பயிற்சியாளர்பயிற்சியாளர் என்பதை காட்டிலும் அவர் ஒரு வழிகாட்டிஅக்கடமி வைத்து நடத்தாமல்ஒன் டூ ஒன் என்ற முறையிலேயே பயிற்சி அளிப்பவர்பயிற்சிக்கு கேட்டு வரும் அனைவரையும் ஒப்புக்கொள்ளவும் மாட்டார் என்று கேள்விஅவர் தேர்ந்தெடுக்கும்அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் அளவுக்கு விளையாடுபவர்களுக்கு தான் அவரிடம் பயிற்சி பெரும் வாய்ப்பு கிட்டும்எத்தனை நாட்கள்எந்த விதமான பயிற்சிஎன்று அனைத்தையும் அவர்தான் முடிவு செய்வார்எப்படி இருந்தாலும் அடுத்த கட்டமாக தொழில்முறை டென்னிஸ் தான் என்று முடிவு செய்துவிட்டதால்அவரிடம் பயிற்சி பெற முயற்சிக்கலாம் என்று முயற்சி செய்ததில்அவருக்கும் நான் ஆடும் முறை பிடித்துப் போனதால்அவரும் எனக்கு பயிற்சி தர சம்மதித்திருந்தார்விசா விதிமுறைகளுக்காகஅவரிடம் இருந்து வந்த கடிதத்தை தான் தாங்கி வந்திருந்தது அந்த மின்னஞ்சல்.



                                   


அந்த மின்னஞ்சலை படித்தும் சந்தோஷப்படுவதாஇல்லை வருத்தபடுவதாஎன்று தெரியவில்லைமதுவை விட்டு எப்படியும் ஒரு மாத காலமேனும் பிரிந்திருக்க வேண்டும்உண்மையில் அந்த சமயம் நான் இருந்த மனநிலையில் அவளைத்தவிர எதுவுமே பெரிதாக தோன்றவில்லைஇன்றும் தான்!!. மதுவை தொட்டு அழைக்க, “ப்ச்என்றவாறு என்னை முறைத்தவள்இருண்டு போயிருந்த என் முகத்தை கண்டவுடன்கொஞ்சம் பயத்துடன் என்ன என்று கேட்கநான் மொபைலை அவளிடம் கொடுத்தேன்வாங்கிப் படித்தவளின் கண்கள் கலங்கியது

ஆனால் நொடியில் சுதாகரித்துக் கொண்டவள்என்னைப் பார்த்து சிரித்தாள்அடுத்த கணம் அனைத்துக் கொண்டாள்.


என் முதுகில் தட்டிக் கொடுத்தவள்சில நிமிடம் கழித்து, “போலாம்என்று சொல்லி எழுந்து கொள்ளநடப்பது எதுவும் தெரியாமல், .

என்னாச்சு?” குழப்பமாய் கேட்டாள் நேத்ரா

சொல்றேன்!! போலாம்!!” என்று மது கூறஎழுந்து வெளியே வந்தோம்வெளியே வரும் பொழுதே மது நேத்ராவிடம் மின்னஞ்சல் பற்றி கூற,

சூப்பர் டா!!” என்று என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியவள்பின்

அதுக்கு எதுக்குபடத்த விட்டுட்டு பாதில வந்தோம்?” என்று கேட்டுவிட்டுஎங்கள் இருவரையும் பார்த்தவள்

எப்பா சாமி!! முடியல!!” சலித்துக் கொண்டவள்

"கொஞ்ச நாள் கூட பார்க்காம இருக்க முடியாதோ?” நாக்கலாக அவள் கேடக்கும் பொழுத்துபார்க்கிங்கில் இருந்த காரின் அருகே வந்திருந்தோம்நேத்ரா அப்படி கேட்கவும்என் அருகில் வந்துலேசாக அனைத்த மதுமுடியாது என்பது போல நெதராவைப் பார்த்து தலையாட்டஅவளை அனைத்துக் கொண்டு நானும் அதையே செய்தேன்எங்களின் செய்கையை பார்த்து சிரித்த நேத்ரா

நானும் பாக்குரென்எவ்வளவு நாள் இப்படியே கொஞ்சிக்கிட்டு இருக்கீங்கணு!!” என்றாள் இடுப்பில் கைவைத்து.

சாகுற வரைக்கும்!!” என்ற என்னை இன்னும் கொஞ்சம் இருக்கிக்கொண்டாள் மதுநெஞ்சில் கைவைத்துகண்களை மேலே சூழட்டிமயக்கம் வருவது போல அவள் நடிக்க,

உனக்கு பொறாமை!!” நானும் இருக்கி அனைத்துக் கொண்டேன்.

அய்யே!! ரெம்பத்தான்!! என்ன டிராப் பண்ணிட்டுஇந்த ஏழவ கன்டினியூ பண்ணுங்க!!”

முடியாது!! நடந்து போ!!” நான் சொல்லநேத்ரா என்னைப்பார்த்து முறைத்தாள்எங்கள் இருவரையும் பார்த்து சிரித்த மதுகாரை திறக்கஎன்னை முறைத்து கொண்டே எறினாள் நேத்ரா.

காரில் சென்று கொண்டிருக்கும் போதே மது அவள் அம்மாவிடம் கால் செய்து நேத்ராவுடன் தங்கிப் படிக்கப் போவதாக சொல்லமுதலில் மறுத்திருப்பார்கள் போலபின் நேத்ராவும் பேச ஒத்துக்கொண்டார்கள்நேத்ராவை டிராப் செய்து விட்டு கிளம்பும் போதுஅவள் மதுவின் காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டு சென்றாள்.

"என்ன சொன்னா?" கார் கிளம்பியாவுடன் மதுவின் கையை பற்றிக்கொண்டு கேட்க

உங்கிட்ட இருந்து தள்ளியே இருக்க சொன்னாஎன்னைப் பார்த்து சிரித்தாள்அவள் கையை விட்டுவிட்டுஅமைதியாக இருக்க,

எங்க போலாம்?” என் கையை பற்றி விரலோடு விரல் கோர்த்துக் கொண்டாள்

வீட்டுக்கு போலாம்வீட்ல தான் யாருமே இல்லையே!!” நான் சொல்லமறுப்பாக தலையசைத்தாள்.

இன்னும் நாலு நாள் இருக்குட்யூஸ்டே தான் திரும்பி வருவாங்கமீண்டும் நான் வற்புறுத்தினேன்.

வேண்டாம் டா!! உங்க வீட்ல வாட்ச்மேன்வேலக்காரங்க எல்லாம் இருக்காங்க!! தேவை இல்லாம டவுட் வரும்!!” அவள் மறுத்தாள்.

நான் மட்டும் உன் ரூம்ல தங்கினேன் இல்ல!!” என்றேன்அவள் சொன்னதின் அர்த்தம் புரியாமல்.

அது வேற!! இது வேற!!, புரிஞ்சுக்கோ!!” என்றவாறு காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினாள்நான் அமைதியாக அவளைப் பார்க்க

நம்ம ரூம் போலாமா?” அவள் புருவம் உயர்த்தி கேட்டாள்நான் குழப்பமாக அவளைப் பார்த்தேன்.

ரெஸிடென்சிரூம் நம்பர் 303?” குறும்பாக சிரித்தவள்என்னைப் பார்த்து கண்ணடித்தாள்.

கிடைக்கலானா?”

முதல்ல செக் பண்ணு!! இல்லன உன் வீட்டுக்கு போகலாம்!!

குதூகலம் ஆனனேன்அவள் சொன்னதில் எது நடந்தாலும் எனக்கு ஓகே தான்ரெஸிடென்சியில் எங்கள் ரூம் கிடைக்கவில்லைமதுதான் சின்ன ஏமாற்றம் அடைந்தாள்நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்அரைமணி நேரத்தில் என் அறையில் இருந்தோம்.

இந்தா இத போட்டுக்க!!” எனது பாக்ஸர் ஒன்றை எடுத்துக் கொடுக்கஎன்னை முறைத்தாள்.

சாத்தியமா பக்கத்துல கூட வர மாட்டேன்!! வேணும்னா கெஸ்ட் ரூம்ல தூங்கிக்கோஇன்னும் பாக்ஸரை நீட்டிக்க கொண்டே சொல்லமுறைப்பை நிறுத்தாமல்என்னை கொஞ்சம் தள்ளிவிட்டு என் வாட்ரோப் ஆராய்ந்தவள்ஒரு டிராக் பாண்ட்டும்டீ-ஷர்ட்டும் எடுத்துத்துவிட்டு என்னை ட்ரெஸ்ஸிங் ரூம்மில் இருந்து வெளியே தள்ளினாள்சிரித்துக் கொண்டே வெளியேறிய நான்அவளிடம் சொல்லிவிட்டு சாப்பாடு எடுத்து வந்தேன்அறைக்குள் வந்த நான் அவளை பார்த்து நாக்கலாக சிரிக்க,

“ என்ன சிரிப்பு?”

இல்ல யாரோ டிராக் பாண்ட் போடப்பபோறேன் சொல்லிட்டுவேண்டாம்னு சொன்ன என் பாக்ஸர போட்டுருக்காங்கநாக்கல சிரித்துக் கொண்டே

அது ஹாய்ட் ஜாஸ்திய இருக்குஎன்றாள்நான் கொண்டு வந்து வைத்த தோசையை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டே

மடிச்சு விட்டுக்கலாமே?" நக்கல் குறையாமல் நான் கேட்ககையில் இருந்த தட்டை காஃபி டேபிளில் வைத்துவிட்டுஎன்னைப் பார்த்து திரும்பி

நல்ல ஐடியா!!, இரு நான் போய் மாத்திட்டு வரேன்என்று குறும்பாக என்னைப் பார்த்து சொன்னவள்ட்ரெஸ்ஸிங் ரூம் கதைவை நோக்கி நடக்கபயந்து சென்று அவள் இடுப்பை பற்றி தூக்கிய நான்,

வேண்டாம்இதுவே நல்லாதான் இருக்கு!!” சோபாவில் அமர்ந்துஅவளை என் மடியில் அமர்த்திக்கொண்டுகாதோரம் சொல்ல,

இல்ல!! எனக்கு இது பிடிக்கல!!, நான் போய் டிராக் பாண்டே போட்டுக்குறேன்!!" அவளும் என்னுடன் குழையஅவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்து முத்தமிடமுதலில் சிணுங்கியவள்பின் துள்ளி எழுந்தாள்.
என்ன சொன்னேன்?” எழுந்தவள்என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு கேட்க,

என்ன சொன்ன?” திருப்பிக் கேட்டேன்அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டுமுறைத்தவள்,

கையும்காலையும் வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்ல!!.... கொன்றுவேன்!!” தூண்டிவிடுவது போல மிரட்டினாள்நான் நல்லபிள்ளை போல தலையாட்டசிரித்தவள்தோசை இருந்த தட்டை எடுத்துசட்னி வைத்துக் கொண்டுஎன் அருகில் வந்து அமர்ந்தாள்நான் அவளையே பாத்துக் கொண்டிருக்கதோசையை பிய்த்துசட்னி தொட்டு என்னை நோக்கி நீட்டநான் வாய் திறந்து வாங்கிக் கொண்டுஎழுந்தேன்,

எங்க போற?”

எனக்கும் பசிக்குது!! நானும் ஒரு பிளேட்ல எடுத்துட்டு வரேன்!!”

ஒண்ணும் வேண்டாம்!! வா!! நானே ஊட்டி விடுறேன்!!” அவள் சொல்லநெகிழ்ந்தேன்இருந்தும் அவள் சொன்னது காதில் விழாதது போல சென்றுதோசை இருந்த ஹாட் பாக்ஸ் மற்றும் சட்னியை எடுத்துக் கொண்டு திரும்பமுறைத்துக் கொண்டிருந்தாள்சிரித்துக் கொண்டே திரும்பவும் வந்து சோபாவில் அமர்ந்துஎடுத்து வந்ததை அருகிலேயே தரையில் வைத்துவிட்டுமுறைத்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து, “காட்டினேன்சிரித்தவள்அடுத்த வாய் ஊட்டினாள்நான் வேண்டும் என்றே அவள் விரல்களை கடிக்கதலையில் வலிக்காமல் கொட்டியவள்,

சின்ன பாப்பாகடிக்காம வாங்கு!!” அடுத்த வாய் ஊட்டினாள்.

அப்போ நான் உன் பாப்பா இல்லையா?” அவள் ஊட்டியதை வாங்காமல்உதடு சுளித்துவேண்டும் என்றே சோகமாக கேக்கலேசாக அணைத்தவள்ஐந்து விரல்களாலும் என் இரு உதடுகளையும் குவித்து பிடித்து கிள்ளிஅந்த விரல்களில் முத்தமிட்டவள்,

என் பாப்பாதான்!! ஆனா இப்போ கடிக்கமாக சாப்பிடு!!” மண்டும் ஊட்டினாள்.

நீயும் சாப்பிடு!!” நான் அவள் குடுத்ததை மென்று கொண்டே கொஞ்சசிரித்தவள்அவளும் சாப்பிட்டுக் கொண்டே எனக்கும் ஊட்டினாள்சாப்பிட்டுவிட்டுஅதே சோபாவில் அவள் மடியில் நான் தலைவைத்து படுத்திருக்கஎன் தலை முடியில் விரல்களை நுழைத்துஅதை வட்டமாக சுத்திக் கொண்டிருந்தாள்நீண்ட நேரம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

மது!!”

ம்ம்!!”

மதுதுது!!”

சொல்லு"

நீ அழகா இருக்க!!” நான் அவளைப் பார்த்து சொல்லஅதுவரை சோபாவில் தலை சாய்த்து படுத்திருந்தவள்குனிந்து என் முகத்தைப் பார்த்தால்.

அப்படியா?” கண்களில் குறும்போடுஉதட்டில் சின்ன நக்கல் சிரிப்போடு,

நிஜமா!! நீ செம்ம அழகா இருக்க!!”

அப்புறம்!!” அந்த நக்கல் சிரிப்பு இன்னும் கொஞ்சம் கூடியது.

போ!! உன்கிட்டே போய் சொன்னேன் பாரு!!” என்று அவள் முகத்தை பிடித்து பின்னால் தள்ளிவிட்டுஒரு சாய்ந்து அவள் வயிற்றில் முகம் புதைத்து படுத்துக் கொண்டேன்அவளின் வயிற்றின் அசைவில் அவள் சிரிப்பது தெரிந்ததுசெல்லமாக அவள் வயிற்றில் கடிக்க,

குசுது டா!! எரும!!” என்று சொல்லி என் தலையைப் பிடித்து தள்ளினாள்.

மீண்டும் அவள் வயிற்றில் முகம் புதைக்கஇந்த முறை கொஞ்சம் பலம் கொடுத்தே தள்ளினாள்அவள் தள்ளியதில் நான் தரையில் விழுந்தேன்விழுந்தவன் திரும்பி அவளை முறைக்கஅவளோ என் நிலையைப் பார்த்து மேலும் சிரித்தாள்பொய்யாக கோபம் கொண்டுஎழுந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.

ஓய்!!” அவள் அழைக்ககுப்புற புரண்டுதலையணையில் முகம் புதைத்தேன்.

ஓய்!!” மீண்டும் அழைத்தாள்போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டேன்.

சரி!! வேண்டாம்னா போ!!” போர்வையை விலக்கி எட்டிப் பார்த்தேன்அணிந்திருந்த டீ-ஷர்ட்டை தூக்கிப் பிடித்துஇடையை தாரளாகமாகவே காட்டினாள்நான் இமைக்கவும் மறந்து குழைவான அவள் இடையைப் பார்த்துக் கொண்டிருக்கபிடித்திருந்த டீ-ஷர்ட்டை கீழே இழுத்துவிட்டாள்நான் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்க்கஎன்ன என்பது போல அவள் புருவத்தை உயர்த்தி கேட்கநான் இருபுறமும் தலையாட்டினேன்என்னை அறியாமலே.

வழியுது!!” நாக்கலாக சொன்னவள்நாக்கால் ஒரு பக்க கன்னத்தை வெளியே தள்ளிபல் தெரியாமல் சிரித்தாள்.


                                   


அதெல்லாம் ஒண்ணும் வழியல!!”

என்றவள்தலையை மேலும் கீழும் ஆட்டியவாரே ஏதோ யோசனையில் சிறிது நேரம் நின்றவள்,

அப்போ சரி!! உன் நஷ்டம்!!”

,, எது?” அவள் எங்கே வருகிறாள் என்று புரிந்தாலும்அவள் விளையாடும் விளையாட்டில் நானும் கோதவில் இறங்கினேன்.

இல்ல!! ஜொள்ளு விட்டா அதுக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்னு நினைக்கச்சேன்!!” கட்டிலின் மறு பக்கம் நோக்கி நடந்தாள்.

ஒண்ணும் வேண்டாம்!!. இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லா ட்ரீட்மெண்டும்!!” சொல்லும் போதே கண்டிப்பாக இன்று ட்ரீட்மெண்ட் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

நான் சொன்னதும், "சரிஎன்பது போல தலையாட்டியவள்விளக்கை அனைத்து விட்டுநிறைய இடைவெளி விட்டே படுத்துக்கொண்டாள்எனக்கு முதுகு காட்டிவீட்டிற்க்கு தான் செல்கிறோம் என்று முடிவான போதேஒண்ணும் கிடையாது என்று சொல்லிவிட்டு தான்ஒத்துக்கொண்டாள்எனக்கு கூட அதில் உடன்பாடுதான்அவள் டீ-ஷர்ட்டை உயர்த்திஇடையை காட்டும் வரைஇருந்தாலும் "அவளுக்கு மட்டும்தான் டீஸ் செய்ய தெரியுமோ?” என்று உள்ளே இருந்து ஒரு கேன பய கேட்கநானும் விரைத்துக் கொண்டேன்


நெடு நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லைஅறையில் படர்ந்த அமைதி!!, என் அருகேஎன் அறையில் மது!! என் மனதை போட்டு பிழியஎன் விறைப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்ததுஇருந்தாலும் இல்லாத மன உறுதியை இழுத்து பிடித்து அமைதிகாக்கஇனிமேலும் முடியாது என்று தோன்றவேஒரு பெரு மூச்சை விட்டுவிட்டுஎன்ன சொல்லி ஆரம்பிக்கலாம் என்று யோசனையில் இருக்கும் போதுதான்அவள் கேட்டாள்



சார்க்கு இன்னைக்குதான் நான் அழகா தெரிஞ்சேனோ?” அவளே ஆரம்பித்தாள்



"அதென்னசார்ம்ம்??” மெலிதான புன்னகை என் உதடுகளில் குடி கொண்டது



திடீர்னு எப்படி உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்சேன்??!!” நான் கேட்டதை அவள் கண்டு கொள்ளவில்லை



திடீர்னு எல்லாம் இல்ல!! எப்போவுமே நீ அழகுதான்!!” நான் அவளப் பார்த்து ஒரு சாய்ந்து படுத்துக் கொண்டேன்



!!...... அப்போ நீ நாம லவ் பண்ணுறதுக்கு முன்னால என்னை சைட் அடிச்சிருக்கியா?”



நீ என்ன லவ் பண்ணுறதுக்கு முன்னாலையேஉன்ன சைட் அடிச்சிருக்கேன்!!” நான் விட்டேத்தியாக சொல்லபட்டென்று என்னைப் பார்த்து படுத்தவள்கண்கள் விரியஎன்னை விழுங்குவது போல பார்த்தாள்



"ஃபர்ஸ்ட் டைம் உன்ன பார்த்த அப்பவே உன்ன சைட் அடிச்சேன் தெரியுமா?" அவளைப் பார்த்து சொல்லிவிட்டு



"ஒரு ஒயிட் ப்லோரல் லாங் ஸ்கர்ட்மேரூன் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போட்டுருந்த!! அழகா இருந்த!! அப்புறம் நீ வேற என்ன தம்பியா தத்தெடுத்துக்கிட்டியா....” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் உதடுகளை கவ்வியவள்என் உயிரையே உறிஞ்சுவது போல முத்தமிட்டாள்என் மீது படர்ந்தவளை அனைத்துக்கொண்டு நானும் முத்தமிடஎன் கன்னங்களில் அவளது சூடான கண்ணீர்அவள் தோள்களைப் பற்றிஅவள் முகம் பார்த்தேன்அழுது கொண்டிருந்தாள்நான் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதேஎன் நெஞ்சில் முகம் புதைத்து மீண்டும் அழநான் அவளைப் புரட்டி போட்டுவிட்டுஎழுந்து அமர்ந்து அவளைப் பார்த்தேன்


அவள் அழுகிறாள் என்று தெரிந்த அடுத்த கணமே என் கண்களும் கலங்கியிருக்ககலங்கிய என் கண்களைப் பார்த்தவள்சிரித்துக் கொண்டே அவள் கண்ணீரை துடைத்துவிட்டுஎன்னை நோக்கி இரு கைகளையும் நீட்டினாள்நான் குழப்பத்தில் அவளப் பார்த்துக் கொண்டிருக்கஉதடு குவித்து முத்தமிட்டவள், "வாஎன்பது போல தலையாட்டமீண்டும் கலங்கிய அவள் கண்களைப் பார்த்துக் கொண்டேஅவள் அணைப்பிறக்குள் சென்றேன்அவள் தோள் வளைவில் என் முகத்தை புதைத்துக் கொள்ளஎன் கையை பற்றிஅவள் மேல் போட்டுக்கொண்டாள்அவள் மகிழ்ச்சியில் அழுதிருக்கிறாள் என்பது புரிந்ததால்நான் எதுவும் சொல்லாமல் அவள் கழுத்தினில் முகம் புதைத்துஒரு காலை அவள் மேல் போட்டு இன்னும் அனைத்துக் கொண்டேன்

ஒரு நீண்ட அமைதிஅவள் உடலின் கதகதப்பில் கிறங்கிக்கிடந்தேன்

மது!!” அவளிடம் இருந்து பதில் இல்லை

மது!!” தூங்கிவிட்டாளோ என்று நிணைத்துஅவள் தோளில் ஒரு விரலால் சுரண்டினேன்

ம்ம்!!” 

எதுக்கு அழுத?”

ஒண்ணும் இல்ல!!”

அதன் பின்பு நான் ஒன்றும் கேட்கவில்லைகேட்டாலும் இன்று சொலுவள் என்று தோன்றவில்லைமற்றொரு நாள் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்பேச்சை மாற்றலாம் என்று 

நம்ம வீட்ல எல்லோரும் அவ்வளவு மக்கா?!!” நிமிர்ந்து அவளைப் பார்த்து கேட்டேன். "ஏன்?" என்று பார்வையால் வினவினாள்

நாம பொண்டாட்டிபுருஷன் மாதிரி கொஞ்சிக்கிட்டு இருக்கோம்!! ஆனா அத கூட இன்னும் அவங்க கண்டுபிடிக்கல!!” நான் கேட்கலேசாக சிரித்தவள்சிறிது கிழே அவள் உடலை நகர்த்திஎன் முகத்துக்கு நேராக அவள் முகத்தை கொண்டுவந்தவள் 

அப்படியா?” என்றால் என் கண்ணோடு கண் கோர்த்து

இல்லையா?” திருப்பிக் கேட்டேன்அவள் பார்வையால் ஏற்பட்ட மோன நிலையில்

என்ன நினைத்தாலோ என் நெற்றியில் அழுந்த நீண்ட நேரம் முத்தமிட்டவள்அப்படியே என் முகத்தை இழுத்து அவள் கழுத்தில் அழுத்திஎன்னை இருக்கிக் கொண்டாள்மீண்டும் ஒரு நீண்ட அமைதிஅவளை அனைத்துக் கொண்டிருந்த ஒரு கையைஅவள் அணிந்திருந்த டீ-ஷர்ட் இடைவெளியில் விட்டு அவள் வெற்று முதுகை தடவஅவளிடம் இருந்து ஒரு சிறு முனங்கள்விரலால் அவள் முதுகெங்கும் கோலம் வரையலேசாக என் தலையில் கொட்டினாள்

அப்போ ஒண்ணும் கிடையாதா?” நான் பொருமையில்லாமல் புலம்ப

யாரோ கல்யாணத்துக்கு அப்புறம் தான் ட்ரீட்மெண்ட்னு சொன்னாங்க!!” என் தலையில் முத்தமிட்டாள்என்ன சொல்வதென்று தெரியாமல்அவள் முதுகில் ஒரு விரலால் சுரண்டிக் கொண்டிருக்க

கொஞ்சம் மேல சுரண்டுஅங்கதான் ஏதோ உருத்துதுகடுப்பான நான்அவள் சொன்ன இடத்தில்விரலில் அழுத்தம் கொடுத்துஅவளுக்கு வலிக்கும் படி சுரண்ட 

ஆஆ.... எரும!!” என்று என்னை மல்லாக்க தள்ளிஅடித்தவள் 

உன்ன என்ன பண்ணுறேன் பாரு!!” என்று என் மீது ஏறி அமர்ந்தாள்

அவள் பண்ணுவதாக சொன்னதை இருவரும் சேர்ந்து பண்ணிவிட்டுஇளப்பாறிய பின்புஎப்பழுதும் போல அவள் கையில் தலை வைத்து அடுத்த நிகழ்விர்க்கு தயாராக இருக்க 

“I Love You!!” காதலுடன் கொஞ்ச 

“me too!!” அதே காதலுடன் நான் மிஞ்சினேன்



“I Love You!!” அடித்தாள்

எதுக்கு இன்னைக்கு நான் கால் பண்ணினப்ப எடுக்கல?”

“I Love You!!” அடித்தாள்

எதுக்கு தியேட்டர் வந்த உடனே முகத்த தூக்கி வச்சுக்கிட்டு போன?”

“I Love You!!” அடியின் அழுத்தம் கூடியது

இப்போ எல்லாம் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவே மாட்டேங்குற!!”

“I Love You!!” மீண்டும் நிதானத்துக்கு வந்தது அடியின் அழுத்தம்

“I Love You!!” அடித்தாள்நான் அவளைப் பார்த்து சிரித்தேன்

“I Love You!!” அடித்தாள்

“I Love You!!” அடித்தாள்அவளின் இரு கண்களில் முத்தமிட்டுஅவளை இழுத்து அணைக்க

போடா எரும!! என்று என் முதுகெல்லாம் அடித்தாள்அவள் அடிகள் நின்றதும்அவளை விட்டுவிட்டுமீண்டும் அவள் கழுத்தில் முகம் புதைத்துஅவள அனைத்துக் கொள்ளஅவளும் அனைத்துக் கொண்டாள்

பாப்பா!!” என் முடிகளை கோதிக்கொண்டே 

ம்ம்கொட்டாமல் அவள் தொண்டை குழியில் முத்தமிட்டேன்

பாப்பா!! இது தான் லாஸ்ட்!!, இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்!!” 

ம்ம்உம்கொட்டினேன்

மின்னஞ்சல் தாங்கி வந்த எங்கள் பிரிவை மறந்துஎங்கள் காதல் பால் வெளியில்பள்ளி கொண்டோம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக