http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 24

பக்கங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 24

 


திரும்பத் திரும்ப அழைத்து சோர்ந்து விட்டேன்சரி குளித்து விட்டு வரலாம் என்று குளியல் அறைக்குள் புகுந்து கொண்டேன்தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஹைட்ரபாத் வந்து இருந்தேன்நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதில் இருந்து மதுவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறேன்இறுதிப்போட்டிக்கு வரச்சொல்லிஆனால்எனக்கு ஏதோ சர்ப்ரைஸ் வைத்திருப்பதாகச் சொல்லி வர மறுக்கிறாள்என்னைத் தவிர அத்தனை கேட்டகிரியில் இருந்த தமிழக வீரர்கள் அனைவரும் வெளியேறி இருக்ககோச்சிங் ஸ்டாப்பை தவிர எல்லோரும் ஏற்கனவே கிளம்பி சென்றிருந்தனர்

அந்த தனிமை கூட காரணமாக இருக்கலாம்மதுவை இவ்வளவு தூரம் வற்புறுத்தஎனக்கும் தெரியும் அவ்வளவு முக்கியமானதாக இல்லாவிட்டால்அவள் வரமாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டாள் என்றுஇறுதிப் போட்டியை விடவும்அவள் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ் என்னவென்று தெரிந்துகொள்ளவே இப்பொழுது ஆவலாய் இருந்தேன்.


குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டு இருக்கும் போதுஎன் போன் அடித்ததுஅழைத்தது மது தான்எப்படியும் விடாமல் அழைத்ததுக்கு திட்டுவாள் என்று தெரிந்துஅதற்கும் சேர்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அட்டெண்ட் செய்தேன்.

"சாரிடா இப்பதான் வந்தேன்!!” என்று என் எதிர்பார்ப்புக்கு மாறாக சாந்தமாகவே பேசினாள்.

"இல்ல!! தூங்குறதுக்கு முன்னாடி உன்கூட பேசலாம்னு பார்த்தேன்!!” என்று நானும் விட்டோத்தியாக பதில் சொன்னேன்.

"டின்னர் ஆச்சா?”

"வரும்போதேசாப்பிட்டு வந்துட்டேன்!! தூங்க வேண்டிய தான்!!” என்றவாறு மொபைலை எடுத்துக்கொண்டு மெத்தையில் விழுந்தேன்.

எப்பொழுதும் எங்கள் உரையாடலில் இருக்கும் காதலோகுழைவோகொஞ்சலோ கொஞ்சமும் இல்லைசிறிது நேரம் அவளும் பேசவில்லை நானும் பேசவில்லை வெறுமனே மொபைலை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"ஏன்டா இப்படி பண்ற!!” புன்சிரிப்புடன் கேட்டாள்

"நான் என்ன பண்றேன்?” உணர்ச்சி இல்லாத முகத்துடன் திருப்பி கேட்டேன்.

"டேய்!!.... புரிஞ்சுக்கோடா!! ரொம்ப கஷ்டம் டா!!” கெஞ்சினாள்.

"இப்போ நான் எதுவுமே சொல்லலையே!!” இப்போது என் குரலில் கொஞ்சம் வருத்தம்

"பாப்பா!!”

".............…" பதில் சொல்லவில்லை நான்

"பாப்பா!!” கொஞ்சினால் மீண்டும்,

".............…" பதில் சொல்லவில்லை

"ஏன்டா இப்படி படுத்துற!!” என்று சொன்னவள்ஒரு பெருமூச்சு விட்டாள்.

"நான் எதுவுமே சொல்லலையே!!” என்றேன்முறைத்தாள்நானும் முறைத்தேன்கண்களை மூடி மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள்.

"ப்ளீஸ் பாப்பா!!.... நாளைக்கு எனக்கு எக்ஸாம்!!....மூட் அவுட் பண்ணாத....நல்ல பாப்பா இல்ல!!....கொஞ்சம் சிரிச்சு பேசேன்!!” கெஞ்சினாள்கொஞ்சினாள்

"எனக்கும்தான் நாள் கழிச்சு பைனல்ஸ்!! என்னையும் மூடு அவுட் பண்ணாத!! ப்ளீஸ் எக்ஸாம் முடிஞ்ச உடனே கிளம்பி வந்துட்டேன்!!” நானும் கெஞ்சினேன்சிரித்தாள்நான் மீண்டும் முறைத்தேன்.

"மவனே....நேர்ல மட்டும் இருந்தேன்!!....அந்த முறைக்கிற கண்ண நோண்டி எடுத்துடுவேன்!!” அவள் விரல்களால் என் கண்ணை தோண்டி எடுப்பது போல சைகை செய்யஅதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் சிரித்து விட்டேன்அவளுடன் இருக்கமாக பேச எனக்கு தெரியவில்லை.

"ஹப்பா!!” இரு கைகளையும் நெஞ்சில் வைத்து சொன்னவள்முத்தங்களை பறக்க விட்டாள் என்னைப் பார்த்து.

"பிரிபரேஷன் முடிஞ்சிடுச்சா?”

"கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கு!!” என்றாள்கீழ் உதடை கடித்தாள்.

"எக்ஸாம் முடிச்சிட்டு வந்த உடனே எனக்கு கால் பண்ணு!!” என்றேன்,

"தூக்கம் வருதா?”

"இல்ல!! பட் கொஞ்சம் டயர்டா இருக்கு!!” உண்மையிலேயே அசதியாக தான் இருந்தது.

"கொஞ்ச நேரம் பேசலாமா!!”

"நீ மட்டும் எக்ஸாம் எழுதி முடிச்சதும்இங்க கிளம்பி வரேன்னு சொல்லு!! நைட் ஃபுல்லா பேசலாம்!!” நான் புருவத்தை உயர்த்திபற்களை காட்டினேன்.

"எனக்கு மட்டும் உன்கூட இருக்கணும்னு ஆசை இருக்காதாஅன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா!!”

"அப்படி என்ன முக்கியமான வேலை?”

"அதுதான் சொன்னேனே!! ஒரு சர்ப்ரைஸ் உனக்குகண்ணடித்தாள்

"எனக்கு ஒரு சர்ப்ரைஸ் மண்ணும் வேண்டாம்!! நீ தான் வேணும்!!”

"பாப்பா!!”

"ம்ம்!!”

"ஐ லவ் யூ!!” நான் பதில் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க

"டேய் me too ஆவது சொல்லுடா!!” கெஞ்சினாள்நான் மாட்டேன் என்று தலையசைத்தேன்.

"போடா எருமை!!” சிரித்தேன்

"பாப்பா!! குட் நைட்!!” என்று நான் சொல்ல

"வேண்டாம்!! வேண்டாம்!! போன வைக்காத!!” அவசர அவசரமாக சொன்னாள்

"பாப்பாடயர்டா இருக்கு பாப்பா!! உண்மையிலேயே எனக்கு தூக்கம்!!” கண்ணை
கட்டிக்கொண்டு வந்தது தூக்கம்

"சரி நீ அப்படியே வச்சுட்டு தூங்கு!! நான் பார்த்துகிட்டே இருக்கேன்!!” அவள் ஆசையாக சொல்லமொபைல் சார்ஜரில் போட்டுஎன் முகம் தெரியுமாறு வைத்துவிட்டுநானும் அந்த ஸ்கிரீனில் தெரியும் அவள் முகத்தைப் பார்த்துகொண்டு இருந்தேன்எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிவிட்டேன்.

********

மறுநாள் மதியம் மணி.

அன்று பயிற்சி கட்டாயம் இல்லாவிட்டாலும் கூடகாலையிலே சென்று பயிற்சி செய்துவிட்டுசிறிது நேரம் நான் இறுதி போட்டி ஆடப்போகும் கோர்ட்டில் நின்றுவெறுமனே அதன் நீள அகலங்களை கண்களால் அளந்துவிட்டுஅறைக்கு வந்தேன்.

ஏன் என்று தெரியவில்லை காலையில் இருந்தே உள்ளம் கொஞ்சம் படபடப்பாகவே இருந்ததுநாளை போட்டியின் போதுயாராவது உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனம் எங்கியதுஅந்த "யாராவதுஎன்ற கட்டத்துக்குள் மதுவையும்தாத்தாவையும் தவிர யாரையும் மனம் அனுமதிக்கவில்லைதாத்தாவை தொந்தரவு செய்ய மனதில்லைமதுவை அழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும்அவளும் வரமுடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

என் மனதின் ஏக்கத்தில் இருந்து விடுபடவே கட்டாயம் இல்லாவிட்டாலும்காலையில் பயிற்சிக்கு சென்றேன்திரும்ப அறைக்கு வந்துகதவை அடைத்துக் கொண்டிருக்கும் போதேஎன் மொபைல் சிணுங்கியதுமுகத்தில் புன்முறுவலுடன் அழைப்பை எடுக்க,

"என்னடா பண்ணுறே?" என்றாள் மது.

"இப்போதான் ரூம்க்கு வந்தேன்!! எக்ஸாம் நல்ல எழுதினியா?”

நினைச்சத விடநல்லா எழுதியிருக்கேன்!!”

சரி!! வீடியோ கால் வா!!” என்று நான் சொல்ல

"வேண்டாம்!! வேண்டாம்!!” அவசர அவசரமாக மறுத்தாள்நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே

"டேய்!! இப்ப தான்டா வந்தேன்!! குளிக்க போறேன்!! பாத்ரும்ல இருக்கேன்!!” குரலில் வெட்கம்.

"அப்ப கண்டிப்பா வீடியோ கால் பண்ணனும்!!” அவளின் வெட்கம் என் எண்ண ஓட்டங்களை திசைதிருப்பசிரித்தேன்

"எருமை!! எருமை!!” என்று அவள் திட்டியதற்கும் சிரித்தேன்

"எத்தன மணிக்கு மேட்ச் உனக்கு?”

"நேத்தே சொன்னேனே!! மறந்துட்டியா?”

"அதெல்லாம் ஞாபகம் இருக்கு!! எப்பவுமே ஈவினிங் தானே இருக்கும்!!, எந்த லூசுப் பய 9மணிக்கு மேட்ச் வச்சான்அதுதான் சின்ன டவுட்!!”

"மெடல் டிஸ்ட்ரிபியூஷன் பண்றதுக்கு ஏதோ லோக்கல் மினிஸ்டர் வர்றாராம்!! அவருக்கு ஈவினிங் வேற எங்கேஜிமெண்ட் இருக்குதாம்அதான் ரெண்டு மணிக்கு ஃபங்ஷன் ஆரம்பிச்சு நாலு மணிக்குள்ள முடிச்சிடுவாங்கனு நினைக்கிறேன்!!”

என்னிடம் பேசிக்கொண்டே குளித்தவள்டிரஸ் மாற்றிவிட்டு வீடியோ கால் செய்தாள்

.


அதுக்குள்ள குளிச்சிட்டியா?” தொடுதிரையில் தெரிந்த அவளின் முகத்தை ரசித்துக் கொண்டே கேட்டேன்.

சும்மா ஜஸ்ட் வாஷ்!!” என்றாள்மெத்தையில் படுத்து கன்னத்தில் கைவைத்தவாறுநான் அவளை கண்களால் விழுங்கிக் கொண்டிருக்க

நீ குளிக்களையாயு லுக் டேர்டி!! பாத்தாலே தெரியுது!!” என் வியர்வைக் கரை படிந்த டீ-ஷர்ட்டைப் பார்த்துமுகம் சுழித்தாள்.

அதுக்குள்ள உன் கால் வந்துருச்சு!!”

ம்ம்!! நீ குளி!! நான் பாக்குறேன்!!” கண்ணடித்தாள்.


                                   


நடிப்பாக முறைத்தேன்குறும்பாக பார்த்தவள்புருவங்களை உயர்த்தி "என்னஎன்று கேட்கநான் இரு புறமும் தலையாட்டினேன்.

நல்ல பிள்ளையா இப்போ போய் நீ குளிப்பியாம்!! நீ ஒழுங்கா குளிக்கிறையானு நான் செக் பண்ணுவேணாம்!!” ஏதோ சிறு குழந்தைக்கு சொல்லுவதைப் போல் அவள் சொல்ல

ம்ம்!! அப்புறம்?”

குளிச்சுட்டு வந்துஎன்ன கொஞ்சுவியாம்!!” குறும்பு மாறாமல் கொஞ்சினாள்அவளின் கொஞ்சலில் என் மனது அவளது அரவணைப்பை தேடஏற்கனவே காலையில் இருந்து என் மனதில் இருந்த ஏக்கம் அதிகமானதுஅதே ஏக்கத்துடன்

மது!!”

ம்ம்"

இங்க கிளம்பி வா!! லோன்லியா ஃபீல் பண்ணுறேன்!! பிளீஸ்!!” கெஞ்சினேன்.

மறுபடியும் ஆரம்பிக்காத!!” சலித்துக்கொண்டாள்இரண்டு நொடிக்கு முன்வரை கொஞ்சிக் கொண்டிருந்தவள்இப்பொழுது சலித்துக்கொள்ளஎனக்கு எரிச்சலானதுதிரையை விட்டு பார்வையை அகற்றி அமைதியானேன்.

பாப்பா!!” என் முக மாறுதலை உணர்ந்தவள்கொஞ்சினாள்.

“..................” அவளது கொஞ்சல்இப்பொழுது எனக்கு எரிச்சலை தந்தது.

பாப்பா!!” மீண்டும் கொஞ்சினாள்குரலில் கூடுதல் குழைவுடன்.

சரி மது!! குளிக்க போறேன்!! அப்புறம் பேசுறேன்!!” உணர்ச்சி அற்ற குரலில் கூறினேன்குளிர்ந்த தண்ணீர் என் மன ஏக்கங்களை குறைக்கும் என்று எண்ணி.

ஓகே!! குளிச்சிட்டு கூப்பிடு!!”

ம்ம்வெறுமனே கொட்டினேன் 

ஐ லவ் யு!!” கொஞ்சினாள்

நான் அப்புறம் பேசுறேன்!!” என்றேன் வெறுமையாய்.

இப்போ உனக்கு என்ன ப்ராப்ளம்?” கொஞ்சிக் கொண்டிருந்தவள் எரிச்சலானாள்.

நான் பேசுறேன்என்று சொல்லிவிட்டுஇணைப்பை துண்டித்தேன்.

நான் துண்டித்த பத்து நொடிகளில் மறுபடியும் அழைத்தாள்மொபைலை எடுத்து சைலன்ட் மோடில் போட்டுவிட்டு குளிக்க சென்றேன்எண்ணியதைப் போலவே குளிர்ந்த நீர் என் மனதை கொஞ்சம் அமைதிக்கொள்ள செய்ததுகுளித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்டுஅப்படியே மெத்தையில் விழுந்தேன்தூங்கிப்போனேன்.

தூங்கி எழுந்ததும் மொபைல் எடுத்து பார்க்கஅது சார்ஜ் இல்லாமல் உயிரற்று கிடந்ததுஅதை சார்ஜரில் போட்டுவிட்டுடேபிளில் இருந்த கடிக்காரத்தைப் பார்க்கமணி என காட்டியதுவெளியே சென்றுஒரு சின்ன நடை போட்டுவிட்டுஒரு மணி நேரம் கழித்து அறைக்கு திரும்பினேன்மொபைலை உயிர்ப்பித்த அடுத்த நொடியில் இருந்து, "டிங்டிங்என்ற சத்ததுடன் மெசேஜும்தவற விட்ட அழைப்புகளின் நோட்டிபிகேஷன்ஸ்ஒன்றிரெண்டை தவிர அனைத்தும் மது என்றே இருக்கசின்ன புன்னகை என் உதட்டில் தோன்றியது. “டிங்!! டிங்!!” சத்தம் ஓய்ந்ததும்மதுவிடம் இருந்த வந்த கடைசி மெசேஜைதான் முதலில் படித்தேன்என் விரல்களின் சதியால்.

“don’t act like a kid!!” என்னை பாப்பா!! பாப்பாஎன்றவள் அனுப்பியிருந்த மெசேஜை படித்ததும்சற்று முன்என் உதடுகளில் இருந்த சிரிப்பு காணாமல் போகமீண்டும் எரிச்சலானேன்அங்கிருந்த சேரில் அமர்ந்து கண்களை மூடினேன்நாளைய நாளின் முக்கியத்துவத்தை எனக்கே நினைவு படுத்தி மனதை அமைதியாக்க செய்த முயற்சியைமொபைலின் ரிங்டோன் முறியடித்ததுமதுவாகத்தான் இருக்கும்என்னை சமாதானம் செய்யத்தான் அழைத்திருப்பாள் என்ற எதிர்பார்ப்போடு எடுத்தால்திரையில் "தாத்தாஎன்று பிரதிபலிக்கவேறு வழியில்லாமல் எடுத்து பேசினேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகுவழக்கத்துக்கு மாறாக நெடு நேரம் பேசினேன் தாத்தாவுடன்இறுதி போட்டியை காண நேரில் வர முடியதாதற்கு "சாரிசொன்னவர்நாளை இரவே எனக்காக கோவையில் வந்து காத்திருப்பதாக சொன்னதுகொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்ததுமறுநாள் இறுதி போட்டி என்பதால் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு வந்துவிட்டேன் தூங்குவதற்குமெத்தையில் விழுந்த சில நேரங்களுக்குள்என் மொபைல் அடித்ததுமது தான் அழைத்திருந்தாள். “don’t act like a kid” என்று அவள் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வரமீண்டும் மொபைலைசைலன்ட் மோடில் போட்டுவிட்டுபெரும் முயற்சி செய்து உறங்கிப்போனேன்.

**********

முழு மூச்சுடன் வாமப்பில் நான் ஈடுபட்டிருந்தாலும்என் செவி பறைகள் என் மொபைலில் எப்பொழுது ரிங்டோன் அடிக்கும் என்று காத்துக் கிடந்ததுநேற்று பேசும் பொழுதுஅவளை வரச்சொல்லி நான் வீம்புபிடிக்கஅவள் மறுக்கவும்சண்டையிட்டுவிட்டு ஃபோனை வைத்தவன்தான்அதன் பின்அவள் எவ்வளவோ முறை அழைத்தும் எடுக்கவில்லைகடைசியாக நேற்று இரவு ஏழு மணிக்கு அழைத்தாள்நான் எடுக்கவில்லைஅதன்பின் அழைக்கவும் இல்லை.

மது வேறு எப்படி சொல்லி திட்டியிருந்தாலும் எனக்கு வலித்திருக்காது. “ don’t act like a kid” என்று அவள் மெசேஜைப் படித்ததும் எனக்கு வந்தே ஒரே எண்ணம் "அப்போ நான் அவ பாப்பா இல்லையா? “ என்பதுதான்அவள் அனுப்பியிருந்த அர்த்தம் வேறு என்றாலும்அதை உணர்ந்துகொள்ள என் மனம் தெளிவில்லாமல் இருந்ததுஇப்பொழுது அந்த தெளிவு வந்திருந்தாலும்ஏனோ என் மனம் அவளே அழைக்கட்டும் என்றுவீம்பு பிடித்ததுஅதற்கு இரண்டு காரணம்ஒன்று நானே அழைத்தாள் கண்டிப்பாக என்னை வாட்டி எடுத்துவிடுவாள்இரண்டு இன்று இறுதிப்போட்டி என்பதால்எவ்வளவு கோபம் இருந்தாலும் கண்டிப்பாக கால் செய்வாள்அப்படி செய்யும் பொழுது இன்னும் கோபத்தில் இருப்பது போல் விரைப்புடன் நடித்தால்நேற்றைக்கு நடந்ததை பெரிது படுத்தாமல் என்னை சமாதானம் செய்வதிலேயே குறியாய் இருப்பாள்.

"இநாப்!!, ரிலாக்ஸ்!!” என்று கோச் சொல்லசிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டுகிட் பேக்கை எடுத்துக்கொண்டு ஸ்டேடியத்தை நோக்கி நடந்தேன்.

ஆட்டம் தொடங்க இன்னும் அரைமணிநேரம் இருக்கநான் ஆடவேண்டிய கோர்ட்டுக்குள் நுழைந்து சுற்றிலும் பார்வையை படர விட்டேன்அரங்கில் பத்து சதவிகித இருக்கைகள் கூட நிரம்பவில்லைஅந்த ஆட்டத்தில் எதிராளி மகாராஷ்டிராவைச் சார்ந்தவனாக இருக்க நானோ தமிழ்நாடுதன் மண்சார்ந்த வீரர்கள் அனைவரும் வெளியேறி இருக்கஇந்த ஆட்டத்தை காண பெரிதாக யாருக்கும் விருப்பமில்லை போலும் என்று நினைத்தவாறு எனக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தேன்.

மதுவிடம் பேசாமல் இருப்பது மனதை உருத்தவேமொபைலை கையில் எடுத்து மதுவுக்கு அழைத்தேன் சுவிட்ச் ஆப் என்றே வரகோபம் தலைக்கேறியதுஇரண்டு பெருமூச்சுகள் இழுத்து விட்டு என்னை சமன் படுத்தி கொண்டு நடக்க இருக்கும் போட்டியில் முழுதாக என் கவனத்தை திருப்பினேன்.

பரஸ்பர அறிமுகத்திற்காக அழைக்கப்படும் போதுதான்என் மொபைலில் "டிங்என்ற சத்தம் வந்ததுஎடுத்துப் பார்த்தால் நேத்ராதான் மெசேஜ் அனுப்பியிருந்தாள் வழக்கமாக எனக்கு வாழ்த்துக்கள் சொல்லிமெசேஜை படித்துவிட்டு அது மதுவிடம் இருந்து இல்லை என்ற ஏமாற்றம் தந்த எரிச்சலில், "ப்ச்என்றவாறு தலையை ஆட்டிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தேன்மது கண்டிப்பாக எங்களது சண்டையில் கோபமாக இருப்பதை நேத்ராவிடம் சொல்லியிருப்பாள்நேத்ராதான் மனது கேட்காமல் மதுவுக்கும் சேர்த்து எனக்கு மெசேஜ் அனுப்பிவிட்டுமதுவை சமாதானம் செய்துகொண்டிருப்பாள் என்று புரிந்தது.

ஒரு மணி நேரம் கழித்து,

ஹோவ் டூ யு ஃபீல் நோவ்?” என்று கேட்ட ரேபரீயிடம்கட்டை விரலை உயர்த்திக் காட்ட,

இட்ஸ் டைம்!!” என்று மணிக்கட்டை காட்டிவிட்டுமேட்ச் கோர்ட் நோக்கி சென்றார்.

எழுந்தது இருபுறமும் இடுப்பை வளைத்துவலி குறைந்திருப்பதை உறுதி செய்து கொண்டுஉடலின் ஒவ்வொரு பாகத்தையும் நீட்டி மடக்கிமீண்டும் ஆடுவதற்கு என்னை தயார் செய்தேன்முதல் இரண்டு சுற்றுக்களை மிகவும் எளிதாக இருபது நிமிடங்களிலேயே வென்றுவிடஇரண்டாம் சுற்றின் பிற்பகுதியில் நான் அடித்த பந்தை அது எதிராளின் கோர்ட்டில் பிட்ச் ஆகும் முன்பே (a volley shot), அவன் முன் வந்துஎன் பக்கத்து மற்றொரு முனைக்கு லாவகமாக திருப்பிவிடஎன் உடலின் விசைக்கு எதிராக உடனே திரும்பிபந்து இரண்டாவது முறை தரையை தொடும் முன்பேஎதிராளி திருப்பி அடிக்க முடியாத விதத்தில்அவனது baselineக்கு நெருக்கத்தில் தரையை தொடுமாறுபலம் கொண்டு அடிக்கஅது அப்படியே நிகழந்தது.

அந்த ஷாட்டை ஆடுவதற்குநான் எடுத்த அதிக சீரத்தையின் காரணமாகஇடுப்பில் வலது பக்கத்தில் மிகவும் லேசாக ஆரம்பித்த வலிஅடுத்த சுற்றில் என் ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக பாதிக்கமிகவும் போராடி அந்த சுற்றை தோற்றுவிட்டேன்வலியும் அதிகமாகவேஇஞ்சூரி பிரேக் எடுத்துக்கொண்டுஅணியின் பிஸியோவின் சிகிச்சையின் பலனாக மீண்டும் விளையாட கோர்ட்க்குள் வந்தேன்.

ஆர் யு ரெடி எங் மேன்ரேபரீ மீண்டும் கேட்கஅவரைப் பார்த்து சிரித்தேன்.

குட்!! தி கேம் இஸ் கெட்டிங் இன்டரேஸிட்டின்க்!! ஐ ஹேட் இஞ்சூரி டிசைடிங்க தி வின்னர்!!” என்றார்

நான் என் கோர்ட்டில் என் பக்கத்துக்கு செல்லும் போதுஎதிராளியின் டீம் மெம்பர் ஒருவர்ஏதோ நான் வேண்டும் என்றே காயமாகிவிட்டது போல் நடிப்பதாகவும், opponent-இன்ஃபார்ம் தடைபடுவதரக்கே நான் அப்படி நாடக்கமாடுவதாகவும் சொல்லபொறுக்க மாட்டாத நான்இருபது நிமிடங்களில் அவன் இரண்டு சுற்றுக்களை என்னிடம் தோற்றதை அவனுக்கு நினைவு படுத்தசொற்கள் சிலம்பம் வீசசலசலப்பானதுஎதராளி மஹாராஷ்ட்ரா என்பதாலும்கடந்த ஒரு பத்து வருடங்களாக மஹாராஷ்ட்ராவின் ஆதிக்கம் தான்இந்தியா டென்னிஸ் களத்தில் வேரூன்றி இருந்ததாலும்அவர்கள் பக்க கூச்சலே மேலோங்கி இருந்ததுரேபரீன் குறிக்கிடுக்கு பின்பே நிலைமை கட்டுக்குள் வந்தது.

மீண்டும் ஆட்டம் துவங்கசிறிது நேரத்துக்கு முன் நடந்த சலசலப்புஎன் உடலின் வெப்பத்தை ஏகபோகமாக ஏற்றிவிட்டிருந்ததுமுதல் இரண்டு சுற்றுக்களை என்னிடம் எதிர்ப்பே இல்லாமல் இழந்துவிட்டுமூன்றாவது சுற்றில் காயத்துடன் ஆடிய என்னிடம் முப்பது நிமிடம் போராடி வென்றுவிட்டுஅபாண்டமாக பழிபொடும் எதிராளியைஏளனாமாக ஒரு பார்வை பார்த்தேன்அவன் பந்தை என்னை நோக்கி அடிக்கும் முன்பு.

“don’t place too much stress in your lower back!!” என்று பிஸியோவும்

“just place the ball, don’t go too hard on yourself!! play smart” என்று கோச்சும் குடுத்தஅறிவுரைகள் எல்லாம் காற்றில் பறக்க,

எதிராளி என்னை நோக்கி பந்தை அடித்த பதினைந்துஐந்து நிமிடங்களில்ஒரு புள்ளி கூட விட்டுக் கொடுக்காமல் வென்றிருந்தேன்இதற்கும் அவன் வேண்டும் தன் காலனியின் கயிற்றை வேண்டும் என்றேபிரித்து கட்டஇல்லாத வியர்வையை துடைக்கஇரண்டு முறை ராக்கெட் மாற்ற எனஎப்படி எல்லாம் முடியுமோஅப்படியெல்லம் காலதாமதம் செய்தான்நான் ஒவ்வொரு முறை புள்ளிகளை வெல்லும் போதும்அவனது நோக்கமெல்லாம் நான் எடுத்துக்கொண்ட வலி நிவாராணியின் தாக்கம் குறைந்தால்மீண்டும் என் ஆட்டம் ஆட்டம் காணும் என்பதுதான்கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடையூறு செய்யாமல் தொடர்ந்து ஆடினான்அதுவும் ரேபரீயின் எச்சரிக்கைக்கு பின்.


                                   


ஆட்டம் முடிந்த அடுத்த நொடிபெரும் பரபரப்புகிக்கிடையேபார்வையாளர்களை தவிர அனைவரும் அவசர அவசரமாக கோர்ட்டில் இருந்துஅங்கிருந்த கிளப் ஹவுஸிற்கு அழைத்து செல்லப்பட்டோம்பரஸ்பர கை குலுக்கலுக்கு கூட அனுமதிக்கவில்லைஅன்றைக்கு முக்கிய விருந்தினராக வரவேண்டிய அமைச்சர் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டதால்ஆளும் அரசின் சார்பாக அனைத்து அரசு விழாக்களும் ஒத்தி வைக்கப்பட்டுவிடஇந்திய டென்னிஸ் அசோசியேசன் பொறுப்பாளர்களே பரிசுகளை வழங்கினார்

முதலில் இருந்த பரபரப்புக்கு காரணம் அறிந்தவுடன் வெற்றி பெற்றுவிட்டேன் என்றது நினைவுவர உள்ளம் குதூகலித்தது. "எவன் செத்தால் எனக்கென்ன?” என்ற எண்ண ஓட்டத்தில் நான் இருக்கஎன் எண்ணம் எல்லாம் வெற்றி பெற்று விட்டதை மதுவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மட்டும்என் சிந்தையில் இருக்கஎன் பையில் இருந்த மொபைலை எடுத்து மதுவுக்கு அழைத்தேன்முழுதாக "ரீங்சென்ற போதிலும் அவள் எடுக்கவில்லைநானும் விடாமல் திரும்பத் திரும்ப அழைக்கஅதற்குள் பரிசு பெறுவதற்காக நான் அழைக்க படவேசென்று மேடையில் வெற்றி கோப்பையும்மேடலையும் வாங்கிவிட்டுமறுநாள் பத்திரிகை செய்திக்கான புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் வந்து மொபைலை எடுத்தேன்.

தாத்தாஅம்மாநேத்ராஅகடமிக் ஆட்கள் எனத் தெரிந்த அனைவரிடம் இருந்தும் அழைப்போ அல்லது வாழ்த்து செய்தி வந்திருக்கமதுவிடமிருந்து மட்டும் அழைப்பும் இல்லைமெசேஜும் இல்லைசிறிது ஏற்றம் இருந்தாலும்அதை ஒதுக்கிவிட்டுவெற்றி பெற்றதை என் வாயால் அவளிடம் தான் முதலில் சொல்ல வேண்டும்அவளிடம் இருந்துதான்முதல் வாழ்த்தைப் பெற வேண்டும்என்ற ஆசையில்கிளப் ஹோவுஸில் இருந்து வெளியே வந்தபடியே மீண்டும் அவளுக்கு அழைத்தேன்மீண்டும் மது அழைப்பை எடுக்கவில்லைகண்கள் கலங்க ஆரம்பித்தது ஏமாற்றத்தில்

"கிளம்பலாமா பா?” என்று அழைத்த கோச் மற்றும் மீதம் இருந்த டீம் ஆட்களைநான் பின்னால் வருவதாக சொல்லஅவர்கள் ஹோட்டலை நோக்கி நடந்தனர்நாங்கள் தங்கியிருந்த ஹோட்டேல் ஸ்டேடியத்திற்கு நடக்கும் தொலைவுதான்மீண்டும்மீண்டும் மதுவுக்கு அழைக்கஅவள் எடுக்கவில்லைஎன் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறியதுநான் வென்றுவிட்ட செய்தியை என் வாயால்அவளை தவிர்த்து வேறு யாருக்கும் முதலில் சொல்ல எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.

வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டுமீண்டும் அவளுக்கு கால் செய்யஅப்பொழுது அங்கு வந்த மகராஷ்டிரா அணியினர் மீண்டும் நான் வேண்டுமென்றே நாடகம் போட்டு இறுதிப்போட்டியில் வென்றதாக குற்றம் சாட்டஅவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லாமல்வாயிலை நோக்கி நடையை கட்டினேன்.

"கங்கிராஜுலேசன்!! சாம்பியன்!!” என்ற மதுவின் சத்தம்என் பின்னால் இருந்து வரநம்பமுடியாமல் திரும்பி பார்த்தால்மது என்னை பார்த்து வாயெல்லாம் பல்லாக சிரித்துக்கொண்டு இருந்தாள்ஓடி சென்று அவளை சந்தோசத்தில் கட்டிப்பிடிக்கஎன்னை கட்டிக் கொண்டாள்சிறிது நேரம் கழித்து

"என்ன ரொம்ப மிஸ் பன்னியா.... பாப்பா?” என்னை இருக்கிக்கொண்டு

கால் கட் பண்ணு டாஇன்னும் எனக்கு ரீங் அடிக்குது!!” சிரித்தாள்.

அப்போதுதான்முந்தின நாள் அவளுடன் சண்டை போட்டதும்மகாராஷ்டிரா அணியினர் கிளப்பிவிட்ட எரிச்சலும்சற்று முன்வரை நான் திரும்பத் திரும்ப அழைத்தும் வேண்டும் என்றே கால் எடுக்காமல்அதற்காக நான் அழுததும் நினைவுக்கு வரகோபத்தில்அவளை விலக்கி விட்டு விறுவிறுவென்று ஹோட்டலை நோக்கி நடந்தேன்முதலில் அதிர்ச்சியுடன் "என்னாச்சுடா?!! என்னாச்சுடா?” என்று கேட்டவள்பின் நான் கோபத்தில் இருக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டு "சாரி டா!! சாரி டா!!” என்று கெஞ்சியவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் என் நடையின் வேகத்தை கூட்டினேன்.

*************

ஹோட்டல் அறை திறந்துஅவளை உள்ளே செல்லச் சொல்லி நான் கண்களை காட்டகெஞ்சும் விழிகளுடன் ஏக்கமாக அவள் என்னை பார்த்தாள்கண்களை மூடி ஒரு பெருமூச்சு விட்டேன்என்ன நினைத்தாலோ அமைதியாக சென்று அங்கிருந்த மெத்தையில அமர்ந்தாள்அவளைத் தொடர்ந்து நானும் உள்ளே சென்றுஎன் கிட் பேக்கை வைத்துவிட்டு முகம் கழுவசென்றேன்திரும்பி வருகையில் என் மொபைல் அடித்தது.

தாத்தாதான் அழைத்திருந்தார்வாழ்த்துச் சொல்லஅதை தொடர்ந்து அம்மாஅகாடமி ஆட்கள் என தொடர்ந்து வாழ்த்து சொல்லஅனைவருடனும் பேசிவிட்டு போனை வைக்கும்போதுகோச் கால் செய்தார்அவரது அறைக்கு வரச் சொல்லி அழைத்தார்ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு உடை மாற்றினேன்மதுவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

"டென் மினிட்ஸ்ல வர்றேன்!!” என்று எங்கோ பார்த்தவாறு சொல்லஎன் கையைப் பற்றினாள்என் கையை பற்றியிருந்த அவள் கைகளை முறைத்தேன்.

"பிளீஸ்!! நான் சொல்றத கேளு!!” கெஞ்சினாள்உதறி என் கைகளை விடுவித்துக் கொண்டேன்.

"சாரி!!..பாப்பா!!” அழுகுரலில் கெஞ்சினாள்.

"ப்ச்!!........ i am not a kid!! don’t call me, பாப்பா!!” என்று நான் அவள் முகம் பார்த்து கத்தமிரண்டுவிட்டாள்கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டுவந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டுஅருகில் இருந்த சேரில் அமர்ந்து அவளைப் பார்த்தேன்கண்ணீரைத் துடைத்தவள் என் அருகில் இருந்த மற்றொரு சேரில் அமர்ந்துரொம்பவும் தயங்கி தயங்கியே என் ஒரு கையைப் எடுத்துஅவளது இரு கைகளால் பிடித்துக் கொண்டாள்கையில் சிறு அழுத்தம் கொடுத்து

"அதான் நீ சொன்ன மாதிரி வந்துட்டேன்ல!!.. இன்னும் எதுக்கு டா கோவப்படுற?” கம்மிய குரலில் அவள் கெஞ்சநிமிர்ந்து அவளைப் பார்த்து முறைத்தேன்.

"காலையில் மேட்ச் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு போன் பண்ணி விஷ் பண்ணனும்னு கூட உனக்கு தொணலஇல்ல?” என் கையை உருவிக் கொண்டேன்

"மொபைல்ல சார்ஜ் இல்ல டா!!, கோயம்புத்தூர் ஏர்போர்ட்லயே சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு!!” நம்பவில்லை என்பது போல் அவளைப் பார்க்க

"நெஜமா டா!! சென்னை டூ ஹைதராபாத் ஃப்ளைட்ல தான் ஒருத்தர்கிட்ட ரெக்குவஸ்ட் பண்ணிக் வாங்கி சார்ஜ் போட்டேன்அவசரத்துல சார்ஜர் எடுத்துட்டு வரல!!”

அவள் என்னை தொட தயங்கியபோதேஅவள்மீது பரிதாபம் வந்துவிட்டதுஇப்பொழுத்து எந்தவித முன் ஏற்பாடும் இல்லாமல் ஹைதராபாத் வரை அவள் வந்திருக்கிறாள் என்று உணர்ந்தாலும்பிடித்த விம்பை விட ஏதோ ஒன்று தடுத்து.

"சரி இங்க எப்ப வந்த?” குற்றவாளி போல் அவள் இருக்கநான் கேள்வி கேட்டேன்.

"உன் மேட்ச் ஸ்டார்ட் ஆன அஞ்சு நிமிஷத்துல எல்லாம் வந்துட்டேன்” ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்பதுபோல் சட்டென்று பதில் அளித்தாள்

.


"பிளைட்ட விட்டு இறங்கின உடனே கால் பண்ணி இருக்கலாமே?” என் அப்படி கேட்டேன் என்றெல்லாம் தெரியவில்லை

"நேர்ல வந்து உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்!! டிராஃபிக்கில் மாட்டி ஸ்டேடியம் வர ரொம்ப லேட் ஆயிடுச்சு!! சாரி டா!!” அவள் சர்ப்ரைஸ் என்று சொன்னதும் மீண்டும் கடுப்பானேன்.

சரி!!, இப்போ நான் கால் பண்ணும் போது ஏன் எடுக்கல?” அவ்வளவு எளிதில் அவளை விடுவதாக இல்லை,

அது.....” என்று தயங்கியவளைநான் முறைக்க

நான் எடுக்கலாம்னு நினைக்கும் போதுதான் நீ வெளிய வந்த!!” மீண்டும் என்னைப் பார்த்து தயங்கியவளைசொல்லிமூடி என்பது போல் பார்த்தேன்.

இல்ல!!....நான் கால் எடுக்கலனு நீ ரெம்ப ஃபீல் பண்ணி அழுதியா!!.... அத பார்த்ததும் நீ என்ன எவ்வளவு மிஸ் பண்ணுறனு பாக்குறதுக்காக....” என்று அவல சொல்லிக் கொண்டிருக்கும் போதேஇடைவெட்டி

நான் அழுகுறத பார்த்து சந்தோஷப் பாட்டுருக்க?” என்று எகிறமுதலில் ஆமோதிப்பதாக தலையாட்டியவள்பின் இல்லை என்று வேகமாக தலையசைத்தவள்,

என்ன பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!” கண் கலங்கினாள்.

"மொபைல் எங்க?” பேச்சை மாற்றினேன்எழுந்து சென்று மொபைலை எடுத்துவந்து என் கையில் கொடுத்தாள்வாங்கிய மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு

"பத்து நிமிஷம்!! வர்றேன்!!” என்று சொல்லியவாறேஅறையிலிருந்து வெளியேறி கோச்சின் அரை நோக்கி சென்றேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக