http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 29

பக்கங்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 29

 மது உடனான எனது கடைசி உரையாடலும், மதுவும், அவள் அம்மாவும் பேச, நான் கேட்ட உரையாடலும் என் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தன. தெளிவில்லாத பித்து நிலையில் இருந்த, எனக்கு ஏதோ ஒன்று தெளிவாக புரிவது போல் இருந்தது. மதுவுக்கும் அவள் அம்மாவுக்கு நடந்த உரையாடல் எனக்கு முழுதாக புரியாவிட்டாலும், மது என்னை விட்டு விலகுவதற்கு அந்த உரையாடலுக்குப் பின்னாலுள்ள உண்மைதான் காரணம் என்பது மட்டும் தெளிவாகத் புரிந்தது

. அதை உணர்ந்துகொண்ட அடுத்த நொடி இதுவரை என் வாழ்க்கையில் இல்லாத தெளிவு, எனக்கு, உண்டானதை போல உணர்ந்தேன். இதுவாக இருக்குமோ? அல்லது அதுவாக இருக்குமோ? என்று யோசிக்க ஆரம்பித்த மனதிற்கு உடனே கடிவாளம் போட்டு அடக்கினேன். என் அனுமானங்களை விட்டுவிடு மதுவிடம் பேசுவதுதான் சரியாக இருக்கும். மதுவுடன் இதைப்பற்றி பேசினால், அனைத்தையும் சுலபமாக தீர்க்கலாம் என்பது மட்டும் புரிந்தது எனக்கு.


எழுந்து சென்று முகத்தைக் கழுவினேன்ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுஎந்த சூழ்நிலையும் உணர்ச்சி வசப்படக்கூடாது கோபப்படக்கூடாது என்பதை மந்திரம் போல் எனக்கு நானே சொல்லி கொண்டேன்!!. இதுவரை உணர்ச்சிவசப்பட்டும் கோபப்பட்டும்தான்நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்பதையும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்முதலில் மதுவிடம் தெளிவாக பேசிவிட வேண்டும்அவள் எப்படி மழுப்பினாலும்மறுத்தாலும் இந்த இரண்டு உரையாடல்களின் பின்னால் இருக்கும் மொத்த உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்பின் அதற்கேற்றவாறு என்ன செய்வதென்று முடிவு செய்து கொள்வோம் என்று எனக்கு நானே தெளிவுபடுத்திக்கொண்டேன்.

மதுவுக்கு அழைத்தேன்ரொம்ப நேரம் காத்திருக்க வைக்கவில்லைநான்காவது ரீங்கிலேயே எடுத்துவிட்டாள்.

"ஹலோ!!” என்றேன் சாந்தமான குரலில்

"சொல்லு!!” அவளின் குரல்என்னை காட்டிலும்மிகவும் தெளிவாக இருந்ததுஅது எனக்கு கொடுத்த நடுக்கத்தை உதறித் தள்ளிவிட்டு

"மது எங்க இருக்க?” செயலில் இறங்கினேன்புதிதாக வந்த நம்பிக்கையோடு

"என்ன வேணும்னு சொல்லு?” பிடிகொடுப்பதாக இல்லை

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!!” நானும் விடுவதாக இல்லை.

"சொல்லு!! கேட்டுகிட்டுதான் இருக்கேன்!!”

"இல்ல!! நேர்ல பேசணும்!!”

"முடியாது!! நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்!! எதுவா இருந்தாலும் போன்லயே சொல்லு!!” அவள் பிடிகொடுப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தாள்அவளது இந்த பிடிவாதத்தில்இழந்துகொண்டிருந்த பொறுமையைஇழுத்து பிடித்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்தேன்

"பாப்பா!! என்ன பிரச்சனை இருந்தாலும் நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்!! எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்!! நான் தாத்தாட்ட பேசுறேன்!!” ஃபோனில் இதைபற்றி பேச மனம் இல்லாவிட்டாலும்வேறு வழி தெரியவில்லை எனக்கு.

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை!!” அதற்கு மேலும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை

"நீ பார்க்கிங்ல ஆண்ட்டி கிட்ட பேசிட்டு இருந்த நான் கேட்டேன்!!”

அமைதியானாள்ஒரு நிமிடத்துக்கு மேலும் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை

"மது!!” மொபைலின் தொடுதிரையை பார்த்து கால் கட்டாகவில்லை என்று தெரிந்துகொண்டுமீண்டும் அவள் பேர் சொல்லி அழைத்தேன்.

"சொல்லு!!” அவள் குரலில் திரும்பியிருந்த தெளிவுஇப்பொழுது என் மனதின் அழுத்தத்தை அதிகரிக்க ஆரம்பித்து.

"நீ தான் சொல்லணும்!! என்னால முடியல!!” உறுதியெல்லாம் இழந்திருந்தேன்.

"சரி!! சொல்றேன்!! குறுக்கே பேசக்கூடாது!! எமோஷன் ஆகக்கூடாது!!
எல்லாத்துக்கும் மேலமுட்டாள்தனமா எதுவும் பண்ணிக்க மாட்டேன்னுஎனக்கு ப்ராமிஸ் பண்ணு!!” அவளின் இந்த கூற்று என் உயிர்வரை தொட்டு ஆட்டியதுமனதில் ஏற்பட்ட அழுத்தஎனக்கு மூச்சு தினரலை உண்டு பண்ணுவது போல் இருந்ததுஅவளை பேசசொல்லி வற்புறுத்திய எனக்குஅவல பேச ஆரம்பித்ததும் உதறல் எடுத்து.

"ம்ம்!!" கொட்டினேன்வார்த்தைகள் வாயில் இருந்து வரவே இல்லை

"தெளிவா வாய தொறந்து சொல்லு!!” அவள் விடவில்லைஎனக்கு துணிவில்லைகொஞ்ச நேரம் பொருத்தவள்அதற்கு மேலும் முடியாமல் அவளே ஆரம்பித்தால்.

"முதல்ல, I have moved on in my life, அதுதான் உண்மை!!. இப்போ என் வாழ்க்கைல இன்னொருத்தன் இருக்கான்!!. இரண்டாவது எங்க அம்மாகிட்ட நான் போட்ட சண்டைக்கும்,
இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைபுரிஞ்சுக்கோ!! எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்!!. உன்ன கெஞ்சி கேக்குறேன்முட்டாள்தனமா எதுவும் பண்ணிஎன்ன வாழ்க்கை ஃபுல்லா வருத்தப்பட வச்சிராத!!”.

"பாய்!!” என் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டாள்.

மீண்டும் பித்து பிடித்தது போல் ஆனேன்அவள் வாழ்க்கையில் இன்னொருத்தனபொத்துக் கொண்டு வந்த கோபத்தை கட்டுப்படுத்த முயன்றேன்ஆறு மாதத்துக்கு முன்னால் இதையே அவள் சொல்லி இருந்தாள்நொடியில் மிருகமாய் மாறியிருப்பேன்அவள் கொடுத்த வலியும்கடந்த ஆறு மாதமாக எங்கள் தொழிலில் நான் காட்டிய ஈடுபாடும்என்னை கொஞ்சம் பக்குவப்படுத்தி இருக்கின்றது என்று நினைக்கிறேன்அழகாமாக மூச்சை இழுத்து விட்டுஎன் மனதில் இருந்த அழுத்தத்தை வெளியேற்றினேன்.

"கோபப்படாத!! கோபப்படாத!! இவ ஏதோ கேம் ஆடுறா!! அவ உன்னோட மது!! உன்ன விட்டு அவளே நினைச்சாலும் போக முடியாது!!”. போனில் பேசுவது வேலைக்காகாது என்று முடிவு செய்துவிட்டுஅவளை நேரில் பார்ப்பது என்று கிளம்பினேன் அவள் வீட்டுக்கு.

************

பத்து நிமிடம் கழித்துஅவளது வீட்டின் அருகே இருந்த பார்க்கிங் வாயிலில் நின்றிருந்தேன்அவள் அம்மாவின் முன்னால் அவளிடம் பேச விருப்பமில்லைசிவகாமி ஆன்ட்டியின் முன்னால் உணர்ச்சிவசப்பட்டுஉண்மை என்னிடம் மறைக்கத்தான் முயல்வாள் என்று நம்பினேன்அவளைப் பார்க்க வரச் சொல்லிஅழைக்கலாம் என்று போனை எடுத்தேன்முதல் ரீங்கிலேயே எடுத்தாள்எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்பாள் போல.

"சீக்கிரம் சொல்லு!! டைம் இல்ல எனக்கு!!” என்றாள் எரிச்சலுடன்.

"வெளிய வா!! உங்க வீட்டு முன்னாடி தான் இருக்கேன்!! என்றவாறு அவள் வீட்டை நோக்கி நடந்தேன்என் முகத்தப் பார்த்து அவளால் அவள் வாழ்க்கையில் இன்னொருத்தன் இருக்கிறான் என்று பொய் சொல்ல முடியாது என்று தோன்றியது.

"அங்க எதுக்கு போனஅங்க உன்ன போக கூடாதுணு சொல்லி இருக்கேன்ல!!” அவளது குரலில் சிறிய பதற்றம்.

"சரி!! பக்கத்துல இருக்குற பார்க்குல இருக்கேன் வா!!” அவளது பதட்டம் என் நம்பிக்கையை ஏகபோகமா கூட்டியதுஏனோ உதட்டில் ஒரு சிறுநகை.

"நான் வீட்ல இல்ல!! வெளிய இருக்கேன்!!” போய் சொன்னாள்.

"முதல் இப்படி பொய் சொல்லாதே!! உன் கார் வீட்லதான் இருக்கு!! பாத்துட்டு தான் வர்றேன்!!” முன்பு அவல குரலில் இருந்தா உறுதியும்தெளிவும் இப்பொழுது என் குரலில்.

"இப்ப என்ன உன் பிரச்சனை!!” மீண்டும் எரிச்சலானாள்.

ஒண்ணும் இல்லஎன் முகத்தப் பார்த்து சொல்லுநீ என்ன லவ் பண்ணலஉன் வாழ்க்கையில இன்னொருத்தன இருக்கானு!! திரும்பி பார்க்காம போய்கிட்டே இருக்கேன்!!” அவளது உதறல் பேச்சு கொடுத்த தைரியம் என்று நினைக்கிறேன்திமிராகவே சொன்னேன்.

எப்பொழுது என்னிடமே அவ வாழ்க்கையில் இன்னொருத்தன் இருக்கிறான்னு சொன்னாளோஅப்பவே முடிவு பண்ணிட்டேன்இந்த குழப்பத்துக்கு இன்னைக்கே முடிவு கட்டுறதுனுஅவ என்ன சொல்லி சமாளிக்க பாத்தாலும் விடக்கூடாதுகட்டாயப்படுத்தியாச்சும் இப்போவே அவளை இரவோடு இரவாக தாத்தாவிடம் அழைத்துச்சென்றுமொத்தத்தையும் சொல்லிமுடிந்தால் சீக்கிரமே கல்யாணம் பன்னிக்கணும் என்று உறுதியாய் இருந்தேன்அதுக்கு முதல்ல அவளை பார்க்கணும்.

"சரி!! நான் சொல்ற நம்பருக்கு கால் பண்ணி கான்பிரன்ஸ்ல போடு!!” அவல நம்பர் சொன்னாள்குழப்பத்துடன் அவள் கொடுத்த நம்பருக்கு கால் செய்தேன்,

"ஹலோ!!” ஒரு ஆணின் குரல்நொடியில் சர்வமும் அடங்கியதுவிவரிக்க முடியாத பயம் என்னை தொற்றிகொண்டது.

"ப்ளீஸ்!! hold on!! mathu wants to talk to you!!” குரலில் நடுங்க சொல்லிவிட்டுமதுவையும் அழைப்பில் இணைத்தேன்.

"ஹலோ!! ஹலோ!!” மீண்டும் அந்த ஆணின் குரல்.

"ரஞ்சூ!! it's me!!” பெயரை கூட சொல்லாமல் நான்தான் என்றாள்இதயத்தின் துடிப்பு எனக்கே கேட்பது போலிருந்தது.

"ஹே மதி!!, மூன்!!, இன்னும் நீ பிளைட் ஏறல?” இதயம் துடிக்கவாஅடங்கவா என்றது.

"இல்ல!! இனிமேதான்!! போர்டிங் முடிஞ்சிடுச்சு!!”. நானும் அந்த அழைப்பில் இருக்கிறேன் என்பதையே மறந்து இருவரும் பேசிக்கொண்டார்கள்.

"கம் சூன்!!, மிஸ் யூ ஆல்ரெடி!!”

"தரீ ஹவர்ஸ்!! டெல்லியில் இருப்பேன்!!”

"ஆமா!! நீ பேசுறதுக்கு முன்னாடி வேற யாரோ என்கிட்ட பேசினது யாருயாரோ....” 

"ரஞ்சூ!!, நாம எவ்வளவு நாளா லவ் பண்றோம்!!” பேசிக்கொண்டிருந்தவனை இடைமறித்து கேட்டாள்.

"ஹேய்!! என்ன ஆச்சு?” அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்றுஎன் காதுகளில் ஆசிட் ஊற்றியது.

"ப்ளீஸ்!! பதில் மட்டும் சொல்லு!!”

"நீ ஓகே சொல்லி 123 டேஸ்நான் உன்னை பார்த்த ஃபர்ஸ்ட் செகண்ட்ல இருந்து!!” என்று சொன்னவன்ஏதோ பெரிதாக ஜோக் சொன்னதைப்போல சிரித்தான்எனக்கு என் வாழ்க்கையே என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.


                                    



"ரஞ்சூநீ கால் கட் பண்ணிக்க!!”

"ஏன்என்னாச்சு?”

"ப்ளீஸ் ரஞ்சூகால் கட் பண்ணு!! பத்து நிமிஷத்துல உனக்கு கூப்பிடுறேன்!!”

“who is the other guy in the line?”

“..........” மது பதில் சொல்லாமல் இருக்க,

“the tennis guy?” அவன் குரலில் ஒரு பதட்டம்.

ம்ம்கொட்டினாள் மது.

“are you okay?” பதட்டமல் குறையாமல் கேட்டான்.

ரஞ்சூகால் கட் பண்ணு!!” அவன் கால் கட் செய்தான்.

"லைன்ல இருக்கியா?” இரக்கமே இல்லாமல் கேட்டாள் மதுஉயிர் மட்டும் தான் இருந்தது என்னிடம்.

"இன்னும் கால் டிஸ்கனெக்ட் ஆகல!!, அதனால நீ கேட்டுக்கிட்டு கேட்டிருப்பேன் நம்புறேன்!!” அவல உரலில் கொஞ்சம் கூட கருணைஇல்லைஏனோ நான் இன்னும் செத்துவிடவில்லை என்று அவளுக்கு உணர்த்த வேண்டும் என்றுஎனக்குத் தோன்றவே தொண்டையை செருமிக் கொண்டு

"சொல்லு!! லைன்ல தான் இருக்கேன்!!” என் உடலிலும்மனதிலும் இருந்த நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டுஎங்கிருந்து அந்த உறுதி வந்ததோஎனக்கு தெரியாது?, ஆனால் மொத்த உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் அவளிடம் பேச விரும்பினேன்அதைத் தெரிந்து கொள்ளாமல் விடுவது இல்லை என்பதில் உறுதியாய் இருந்தேன்அவள் "ரஞ்சூ!! ரஞ்சூ!!” என்று ஆடவன் ஒருவனை கொஞ்சும்போதேஎன் மொத்த உணர்வுகளும் செத்திருந்தது.

"நான் சொன்னது உண்மைனு இப்ப நம்புவன் நினைக்கிறேன்!! உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னுதான்நான் இவ்வளவு நாள் ட்ரை பண்ணுனேன்நீ புரிஞ்சுக்கல!! உன்ன கஷ்டபடுத்த வச்சுட்டநீ எவ்வளவோ வருத்தபடுறியோ!! அதைவிட அதிகமாகவே நான் வருத்தப்படுறேன்!!. இதுல உன் மேல தப்பே இல்லஃபர்ஸ்ட் நீ அதை புரிஞ்சுக்கோ!!. தப்பு எல்லாம் என் மேலதான்!!”

"எப்படி மது எனக்கு புரியல?” அவள் என்னவள் இல்லை என்ற என்னைத்தைக் காட்டிலும்அவள் என்னிடம் காட்டும்இந்த கனிவு என்னை இரணப்படுத்தியது.

நீண்ட அமைதி அவளிடம்அவள் பெருமூச்சு விடும் சத்தம் எனக்குக் கேட்டது.

"உனக்கு தெரியல நீ எவ்வளவு பெரிய பணக்காரன்னு!! அதுவும் இல்லாம என்னோட நாலு வயசு சின்னப் பையன்!! இந்த இரண்டும் ஒரு பொண்ண எவ்வளவு இன்செக்குர்டா பீல் பண்ண வைக்கும்னு உனக்கு தெரியாது!! மறுபடியும் சொல்றேன்தப்பு உன்னோடு கிடையாது!! என்னோடது தா......!!”

"நீசொன்ன ரெண்டு காரணமும்நம்புற மாதிரியே இல்லை!!. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாருஅது உனக்கே புரியும்!!” இடைவெட்டி பேசினேன்உணர்வுகள் மரத்துப் போன நிலையிலும்உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தேன்.

"உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைக்கிறேன்!!” அவள் குரலில் இருந்த கனிவுக்குஎன்னை அறியாமல்ஒரு வரட்டுச் சிரிப்பு என்னிடம்.

"நான் அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சு மது!!. உனக்கு தெரியுமானு தெரியலகிட்டத்தட்ட ஆறு மாசமா எங்க கம்பெனில பார்ட் டைமா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்!! இன்னும் நீ நெனைக்கிற "பாப்பா!!” கிடையாது நான்!!” ஏனோ அவள் சொற்களில் தெரிந்த தரிசனம் என்னை உசுப்பேற்றியது.

“You want to take it in a hard way!!”

"பரவால்ல!! என்ன வேணும்நாலும் சொல்லுஆனால் உண்மையைச் சொல்லு!! கண்டிப்பா முட்டாள்தனமாக எதுவும் பண்ண மாட்டேன்!! கவலைப்படாதநீ உன் வாழ்க்கை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்!! நீயே சொன்னியே நான் பெரிய பணக்காரன்னுஅந்த சொத்தை எல்லாம் அனுபவிக்காம சாக எனக்கு என்ன கிறுக்கா?” ஏனோ சிறிது நேரத்திற்கு முன் இருந்த நடுக்கம் என் உடலிலும் இல்லை என் மனதிலும் இல்லைஅவளேஇல்லை என்றான பின்அவளின் கனிவு என் துச்சமேன தூக்கி எறிந்தேன்.

"கடைசியா நான் உன்ன எப்ப கிஸ் பண்ணேன்?” ஆரம்பத்தில் இருந்தா தெளிவு

"தெரியலநீயே சொல்லு!!” அவளை விடவும் தெளிவாக இருந்தேன்.

"இங்க டெல்லியில் காலேஜ் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி!!”.

"......…" பதில் பேசவில்லைஅவளை தொடர்ந்து பேசட்டும் என்று இருந்தேன்.

"நீ நேஷனல் விளையாடுறதற்குமூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தேஇந்த இன்செக்யூரிட்டி எனக்கு வந்துடுச்சுநீயே யோசிச்சு பாருஅக்கா மாதிரி உன் கூட பழக ஆரம்பிச்சுஇப்போ உன்னை உன்னை லவ் பண்றேன்எனக்கு உன்ன கல்யாணம் பண்ணி வைங்கஅப்படின்னு நான் கேட்டாஉன் காசுக்காகதான் உன்னை மயங்கிட்டேன் ஊர் சொல்லும்!!. ஆனாஉன்னை கஷ்டப்படுத்த என்னால முடியலஅதான் உண்மை!! இதெல்லாம் சரியாயிரும்னுஉனக்குச் சொன்ன மாதிரியேஎனக்கு நானும் சொல்லிக்கிடேன்!!. அது எல்லாமே இங்கே டெல்லி வர்ற வரைக்கும்தான்ரஞ்சூவ பார்க்கிறது வரைக்கும் தான்!!. அவன் கூட பழகுனதுக்கு அதுக்கப்புறம்தான் நமக்குள்ள இருந்தது லவ் இல்லன்னு எனக்கு புரிஞ்சது!!”

"உனக்கே தெரியும் என் அண்ணன் நான் பிறந்த மூணு மாசத்துலயே இறந்துட்டான்னு!! சிங்கிள் சைல்ட வளர்ந்த எனக்குநீ கிடைச்சதும் உன் மேல பாசம் வச்சேன்!!. திடீர்னு ஜினாலிய லவ் பண்றனு நீ சொன்னதும்எனக்குள் ஒரு பயம்எங்கே நீ யாரையாவது லவ் பண்ணுனாஎன்ன விட்டு விலகி போயிருவியோனு!!. என்ன செய்றதுன்னு தெரியாமஉன் மேல இருந்த பொசசிவ்னஸ் லவ்வுன்னு நானே முடிவு பண்ணிகிட்டேன்!!. அதே மாதிரிதான் உனக்கும்நான் சொல்ற வரைக்கும் நீ என்ன அப்படி பார்த்தது கிடையாதுனு எனக்கு தெரியும்!! தேவையில்லாம நான் தான் உன்னை குழப்பிவிட்டுட்டேன்!!. உண்மையைச் சொல்லணும்னா பிளான் பண்ணி உன்னை என்ன லவ் பண்ண வச்சேன்!! நீ ரெஃப்யூஸ் பண்ணக்கூடாதுனு தான் அன்னைக்கே உன்கூட ...... .” அவள் விட்ட இடைவெளி என்னை தின்று தீர்த்து.

"அதனால வந்த வினை தான் இதுஉனக்கு தோணும்பின்ன எதுக்கு எங்க அம்மாகூட நான் சண்டைபோட்டேன்னுஃபர்ஸ்ட் நான் டெல்லியில் ஜாயின் பண்ணினது அவங்களுக்கு பிடிக்கலஎங்கே நான் அவங்களை விட்டு விலகிபோயிருவேனோனு பயந்துஎனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கணும் முடிவு பண்ணிட்டாங்க

!!. ரஞ்சூ ஃபேமிலி நிலைமை சரி இல்லைஇப்போதைக்கு கல்யாணம் பண்ண முடியாது!!. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம அப்படி அம்மாகிட்ட கோபப்பட வேண்டியதாப்போச்சு!!. எனக்கு தெரியுதுநான் ரொம்ப சுயநலம் பிடிச்சவஆனால் உண்மையிலேயே சொல்றேன்உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு தான் நினைச்சேன்!!”


"என்ன தப்பானவளா காட்டிஎன்ன நீ வெறுக்கனும்னு நினைச்சேன்!!. என்ன நீ போர்ஸ் பண்ணு அன்னைக்குகூடஉங்கிட்ட எப்படியாவது உட்கார்ந்து தெளிவா பேசணும்னு நினைச்சு தான் வந்தேன்!!. ஆனா என்னனாமோ நடந்திருச்சு!!. இப்பவும் நான் உன்ன லவ் பண்றேன்!! ஒரு பிரண்டா!! என் வாழ்க்கையில் எப்பவுமே உனக்கு ஒரு ஸ்பெஷலான இடம் இருக்கும்!!. ஏற்கனவே அம்மாவை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்!! நீயும் போய் அவங்ககிட்ட ஏதாவது கேட்டு அவர்களை இன்னும் கஷ்டப்படுத்தாதே!!. ப்ளீஸ் அங்கிருந்து போயிடு!!. வீட்டுக்கு போ!!. சாரி டா!!” என்று குரல் தழுதழுக்க முடித்தாள்.

"பாப்பா!!” அழுகையை அடக்கிக்கொண்டு அழைத்தேன் அவளைஅவள் பேச ஆரம்பித்த பொழுது இருந்த உறுதியெல்லாம் இல்லை எனக்கு,

"இங்க போடிங் பண்ண கூப்பிடுறாங்க!! கிளம்புறேன்!! டைம் ஆச்சு!!” கம்மிய குரலில் அவசர அவசரமாக காலை தூண்டிக்க முயன்றாள். .

"அவ்வளவுதானா?” அடக்க மாட்டாமல்நடுத்தெருவென்றும் பாராமல் கதறினேன்.

அவளிடமிருந்து பெருமூச்சுத் தவிர வேறு பதில் வரவில்லைஎவ்வளவு நேரம் என்று தெரியாது

"இறுதி அழைப்பு, IX 013, AIR INDIA EXPRESS, டெல்லி செல்லும் பயணிகளுக்கான இறுதி அழைப்பு ....” என்ற அவள் பறக்க போகும் அழைப்பு கேட்டமூச்சைப் பிடித்து அழுகையை அடக்கினேன், “இல்ல டாநான் சொன்னதெல்லாம் பொய்எனக்காக காத்திருனு!!” அவள் சொல்லிவிட மாட்டாளா என்ற ஏக்கம்.

"இட்ஸ் ஓவர் மணிகண்டன்!!. புரிஞ்சுக்கோ!!” வைத்துவிட்டாள்.

சர்வமும் அடங்கிவிட்டது எனக்குமீண்டும் அவள் குரலில் அவ்வளவு தெளிவுமது ஒருவனை "ரஞ்சூ!!” இன்று கொஞ்சும் பொழுதே மொத்தமாக உடைந்து போயிருந்த நான்மணிகண்டன் என்று அவள் என்னை அழைத்த அழைப்புஉயிரையே பிடுங்கி வெளியே எறிந்திருந்ததுஏனோ ஆத்திரமும் வரவில்லைஅழுகையும் வரவில்லைஉணர்வு என்ற ஒன்று இருப்பவனுக்கு தான் ஆத்திரம் வரும்!! அழுகை வரும்!!

ஒரு பிணத்தைப் போல அங்கே நின்று கொண்டிருந்தேன்!!.

பெற்றோருக்கு என்மேல் பெரிதாக பாசம் இல்லைதாத்தாவும் ஆச்சிகளும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இருப்பார்கள் என்று தெரியாதுஎனக்கென்று வாழ்க்கையில் இருந்த பிடித்தம் மது மட்டும்தான்ஆனால் இன்று அவளே தன் வாழ்க்கையில் இன்னொருத்தன் இருக்கிறான் என்று சொல்லஉயிரற்ற உணர்வற்ற ஒரு பிணமாய் அங்கு நின்று இருந்தேன்எவ்வளவு நேரம் நின்று இருப்பேன் என்று தெரியவில்லையாரோ ஒருவர் வந்து

"யாருப்பா நீ எதுக்கு இங்க நிக்குற?" அந்த தெருவில் வசிப்பவர் ஆக இருக்கலாம்.

கலங்கியிருந்த கண்களைத் துடைத்துவிட்டுஅவரை பார்க்கஎன் மேல் பரிதாபம் கொண்டு மேலும் கேள்வி கேட்காமல் திரும்பிச் சென்றுவிட்டார்இப்படி யாரென்று தெரியாதவர்கள் எல்லாம்என் மேல் கரிசனம் காட்டஅதற்கு காரணம் நான் உயருக்கு மேலாய் நினைத்த மது தான் காரணம் என்று எண்ணம் என் பித்தம் ஏறியது.

மூச்சு முட்டிவது போல் இருக்கபைக் எடுத்துக்கொண்டு கிளம்பினேன்ஏதோ ஒரு கடையில் நிறுத்தி சிகரட் பாக்கெட் ஒன்று வாங்கினேன்ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்துஉள்ளிழுத்த அடுத்த நொடி உள்ளிலுத்த வேகத்தைவிடஇருமடங்கு வேகத்தில்நுரையீரல் புகையைஇருமலோடு வெளியே தள்ளஉச்சயில் பிடித்ததுநெஞ்சில் கைவைத்து நான் இருமகடைக்காரன் சிரித்தான்அவமானமாக இருந்ததுஅவனை முறைத்து விட்டுகையில் இருந்த சிகரெட்டை தூர எரிந்துவிட்டுபைக்கை எடுத்தேன்அந்த கடைக்காரனின் கண்ணில் படாத தூரம் சென்றதும்வண்டியை நிறுத்தேன்.

மீண்டும் அவள் எண்ணம்மணிகண்டன் என்று என் முழு பெயரை சொல்லி மது அழைத்ததாக எனக்கு நினைவே இல்லைகடந்த இரண்டுமூன்று வருடங்களாக மணி என்று கூட அழைத்ததாக நினைவில்லை. "டேய்!!, டா!!, வா!!, போ!!” தான். "பாப்பா!! பாப்பா!!” என்னை கொஞ்சிக் கொண்டிருந்தவள், "மணிகண்டன்!! அவ்வளவுதான்!! முடிஞ்சு போச்சு!!" என்று மிகவும் சாதாரணமாக சொல்லிவிட்டாள்அதை விடவும்அந்த ரஞ்சூவும்அவளும் பேசிக்கொண்டதை நினைத்தால் என் மனதெல்லாம் தீயாய் சுட்டது.

ஏனோ எனக்கு சிகரட் புகைத்தே ஆகவேண்டும் போல் இருந்ததுமீண்டும் ஒரு சிகரட் எடுத்து பற்ற வைத்தேன்பற்ற வைத்தவுடன்சிகிரெட் புகை கண்களை தீண்டஇரண்டு கண்களும் எரிந்ததுகண்ணீர் வந்ததுஇருந்தும் விடவில்லைசிகிரெட் புகை தந்த எரிச்சலில் கண்கள் சூடாக இருக்கமீண்டும் சிகிரெட்டை வாயில் வைத்து புகை உள்ளிழுத்தேன்முன்னைக்காட்டிலும் இருமல் அதிகமாக வரதலையெல்லாம் "வின்!! வின்!!" என்று தெறித்ததுஎன் சுவாச குழாயை மொத்தமாக உருவி எடுப்பது போல் வலிக்கஎன் கண்களில் நட்சத்திரம் மின்னியதுஒழுகிய மூக்கை சீந்தி தூர எறிந்துவிடுவிரல்களை பாண்ட்டில் துடைத்துக்கொண்டுகண்களில் வழிந்த கண்ணீரை சட்டையில் துடைத்துக் கொண்டேன்.

என்னை ஆசுவாசப் படுத்தினேன்அடுத்த புகையை இழுக்கஇன்று இரண்டில் ஒன்று பார்க்காமல் விடுவதில்லை என்று உறுதியாய் இருந்தேன்ஆழமாக ஐந்தாறு முறை மூச்சு விட்டேன்ஆழமாக மூச்சு விட்டதற்கே இருமல் வரமூக்கின் வழியாக இல்லாமல் வாய்வழியாக காற்றை உள்ளிழுத்துஎன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்வாயெல்லாம் ஏதோ துருப்பிடித்த இரும்பை தின்றது போன்ற சுவைபுகையை உள்ளே இழுப்பதற்கு என் உடல் தயார் என்று தோன்றவேகண்களை மூடிக்கொண்டுமூச்சு விடுவதை நிறுத்திசிகரெட்டைமீண்டும் என் உதடுகளை பொருத்தினேன்ஏற்கனவே புகையை உள்ளிழுத்து பட்ட வலியின் காரணமாகமெதுவாகநிதானமாககொஞ்சமே கொஞ்சம்புகையை உள்ளிழுத்தேன்சிகரெட்டை உதடுகளில் இருந்து எடுத்த அடுத்த நொடிஅந்த புகை வெளியேறியதுஅதற்கே என் முதல் puff வெற்றிகரமாக இழுத்தது போல் ஒரு சந்தோஷம்மீண்டும் ஒரு முறை மூச்சை இழுத்து விட்டு மீண்டும் சிகரெட்டை உதடுகளின் இடுக்கில் வைத்தேன்புகையை உள்ளிலுத்தேன்.

இந்த முறைகவனமாக சிகரெட்டை எடுத்தவுடன் வாயை மூடிக்கொண்டேன்மூச்சை உள்ளிழுத்துபுகை சுவாசக்குழாயில் தள்ள ஏனோ தோன்றவில்லைஇழுத்த புகையை அப்படியே ஐந்து நொடிவாயிலிருந்து வைத்திருந்தேன்பின் உதடுகளை பிரித்து நான் ஊதும் முன்பேபாதி புகை வெளியேறி இருக்கமீதியை நான் ஊதி தள்ளினேன்என் வாழ்வும்சாவும்அந்த ஒரு puff-ல் இருந்ததை போலவும்அதை வெற்றிகரமாக செய்து முடித்துஎன் உயிரே நான் காப்பாற்றிக் கொண்டது போலநான் இருந்தா சூழ்நிலைக்கு பொருந்தாத ஒரு வெற்றிக் களிப்பு என்னிடம்யாராவது என்னை கவனிக்க கவனிக்கிறார்களா என்று சுற்றி பார்த்தேன்அந்த தெருவில் உயிர் என்று சொல்லஎன்னை தவிர வேறு யாருமில்லை என்று அறிந்ததும் ஒரு சிறிய ஏமாற்றம்.



                                    


முகம் முழுக்க ஆனந்தத்தின் ரேகையுடன் ஒரு சிரிப்பு எனக்குஉடனே என்னை பார்த்து நக்கலாக சிரித்த அந்த கடைக்காரரின் முன்புஇதே போன்று புகையை இழுத்துஅவர் முகத்திலே ஊத வேண்டும் என்று ஒரு அடங்காத வெறிமொத்த சிகரெட்டையும் தின்றுவிட்டுபஞ்சு வரை பற்றி இருந்த நெருப்புஎன் விரலை தீண்டவேகைகளை உதறியதில் சிகரெட்டை கீழே விழுந்ததுஅந்த நெருப்புத் தந்த எரிச்சலில்என்னை நிகழ் உலகிற்கு கொண்டுவந்தது.

அதுவரை மரத்துப் போயிருந்த என் நெஞ்சம் உணர்வு கொள்ளஎனக்கு யாதுமாகி நின்றவள் என் வாழ்வில்இனி இல்லை என்று உணரஎன் காதல் மனம் கதறி துடித்ததுவாங்கிய அடியெல்லாம் மறந்து.

"நீ பொண்டாட்டினு சொன்ன ஒரு வார்த்தைக்காகபாய்ந்து அனைத்தவள்!! நீ கோபப்பட்ட ஒரே காரணத்துக்காகதூக்கமில்லாமல் சாப்பிடாமல் உன்னை தேடி வந்தவள்!! நீ விளையாட்டாக அவளுக்கு மாலையிட்டு எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டிஅவள் சிலிர்த்து பேசியது!! ஓராயிரம் முறை காதோரத்தில் "லவ் யூ!! லவ் யூ!!“ என்று இசைத்தவள்!! நீ அழுத போதெல்லாம் மடியில் தாங்கியவள்!! ஆசைப்பட்டதெல்லாம் அவளையே கொடுத்தவள்!! உன்னை என்னதான் அவள் எண்ணப்படி ஆட்டி வைத்தாலும், "லவ் யூ!!” என்ற சொற்களுக்காக உன்னிடம் கெஞ்சி மன்றாடியவள்!!” என் நினைவலைகளில் இருந்து பொக்கிஷங்களாக பொறுக்கி பொறுக்கி எடுத்துஎன் முன் நின்று வேண்டியதுஅவள் மேல் காதல் கொண்ட மனது.

"அவளுக்குகண்டிப்பா வேற ஏதோ பிரச்சனை இருக்குகண்டிப்பா உனக்காக தான்நீ இதைவிட கஷ்டப்படுவேன்னு தான்இப்படி பண்ற!!. பொசசிவ்னஸ் என்று சொல்வதெல்லாம் பொய்!!, நேத்ராவும்நீயும்மாறி மாறி டார்லிங்!!டார்லிங்!!னு சொல்லும் போது வராத பொசசிவ்னஸ பொய்யா காரணம் காட்டுறா!!. அவ நம்ம மதுஅவள விட்டுவிடாதே!!" மன்றாடியதுஅவள் மேல் காதல் கொண்ட மனது.

"ஆமா!! ஆமா!! அவ என் மது!!, போன்ல பேசினதுதான் தப்பு!!, நேர்லயே போய் பேசிக்கொள்ளலாம்!! என்று புது ரத்தம் பாய்ந்தது போல் புறப்பட்ட என்னை,
"ஒருவேளை அவள் சொன்னது போலஅவள் வாழ்க்கையில் இன்னொருவன் இருந்தால்அதை நேரில் பார்க்கும் நெஞ்சுறுதி உனக்கு இருக்கா?” என்னை ஆட்டி வைத்த மிருகம் கேட்டஒரே கேள்வியின் உதறலில்என் உடலையும்உயிரையும் தாண்டிஆன்மாவரை ஒரு ஆட்டு ஆட்டியதுஎன்னை திரும்பத் திரும்ப காயப்படுத்தும் காதல் மனதின் செஞ்சலை நிராகரிக்க முடியாமல்என்னை அவள் கொடுத்த வலியில் இருந்து மீட்டெடுத்து காக்கும்மிருகத்தின் கேள்வியில் இருக்கும் நிதர்சனத்தை உணர முடியாமல் தவித்து இருந்தேன்.

சாகப்போகும் மனிதனின் கடைசி விண்ணப்பம் போன்றஎன் காதல் மனத்தின் கதறல் தாங்கமாட்டாமல்அந்த மிருகத்திடம் கெஞ்சஅரை மனதுடன் ஒத்துக்கொண்டது வலியை ஏற்கப் போகும் அந்த மிருகம்குற்றுயிராய் கிடந்த என் காதலை காப்பாற்றுவதற்குஎன்னை நானே இழக்கத் தயாரானேன்உடனே மொபைலில் எடுத்து மதுவுக்கு அழைக்க, "நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்என்ற கணிப்பொறியுடன், "உயிர் போகும் அவசரம்எப்படியாவது தொடர்பு எல்லைக்குள் கொண்டு வா!!” என்று கரைந்த மனதை கட்டுப்படுத்திவிட்டுஅடுத்து என்ன செய்யலாம் என்று எண்ணினேன்.

கூகுளை மன்றாடியதில்அவள் தரையிறங்கி நிமிடங்கள் ஆயிற்று என்று சொல்லியதுகுறைந்தது மூன்றிலிருந்துநான்கு மணி நேரம் இலக்கில்லாமல்வெறுமையுடன்அங்கேஇங்கே என்று நின்று இருக்கிறேன் என்பதை கூட என் மனது உணரவில்லைஎன் மனதின் மொத்த எண்ண ஓட்டமும்அவள் எப்பொழுது அழைப்பை எடுப்பாள் என்பதிலேயே இருந்ததுஏறக்குறைய 40 நிமிடங்கள் திரும்பதிரும்பஅழைத்தும் கணிப்பொறியே பதில் சொல்லிக்கொண்டிருக்கஅதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் விரக்தியில்கைபேசியை விட்டெறிந்தேன்அப்படியே சோர்ந்துஅங்கேயே அமர்ந்துவிட்டேன்.

தரையில் அமர்ந்த அடுத்த நொடிஎன் கைபேசிசத்தமிட ஓடிச் சென்று கையில் எடுத்தேன்மது தான் அழைத்து இருந்தாள்விட்டெறிந்ததில்தொடுதிரை பல கீறல் விட்டிருக்கநான் எவ்வளவோ போராடியும் அழைப்பை எடுக்க முடியவில்லைகால் கட்டானதுஎன்னை நானே நொந்து கண்டேன்ஐந்து நொடி தான்மீண்டும் அவளிடமிருந்து அழைப்பு வந்ததுஅழைப்பை ஏற்க மீண்டும் தொடுதிரையுடன் போராடிக் கொண்டிருந்தேன்அதுவே என் தவிப்பின் மீது இரக்கப்பட நொடியில் அழைப்பு ஏற்கப்பட்டதுஉள்ளமெல்லாம்உயிர் தின்னும் பயம் அப்பிய இருக்கமொபைலை காதில் பொருத்தினேன்.

"ஹலோ!!”

“...................” என் நா எழவில்லை

"ஹலோ!!”

“...................” மீண்டும் என் நாக்கு ஒட்டிக்கொண்டது.

"ஹலோ!!.... டேய்!! ஹலோ!!” பொறுமையில்லாமல் பதறினாள்அவளது குரலில் அப்படிஒரு தவிப்பு

“...................”

"ஹலோ!! ஏன்டா என்னை இப்படி சித்திரவதை படுத்துற!!” என்றவள்அழு ஆரம்பித்தாள்ஏனோ அவளது அழுகைஎனக்கு ஆறுதலாய் இருந்ததுபுதிதாக நம்பிக்கையை விதைத்தது.

"ஹலோ!!” அவளது அழுகைஎன் நாவிலிருந்து சொற்களை என்னை அறியாமல் எடுத்துக்கொண்டது.

"ஹலோ!!” சுத்தமாக அழுகை இல்லை அவளிடம்,

"தங்கியிருக்கிற அட்ரஸ் சொல்லு!!” நெஞ்சை கவிய பயத்துடன்

"இப்போ எங்க இருக்க?” பதட்டமாக கேட்டாள்

"இன்னும் ஊர்ல தான் இருக்கிறேன்!!, அட்ரஸ் சொல்லுகாலைல வர்றேன்!! உன்னை நேர்ல பாக்கணும்!!”

"ப்ளீஸ்!! its over!! புரிஞ்சுக்கோ!!” நிதானமாகவருத்தம் தேய்ந்த குரலில் சொன்னாள்.

"மது!! என்னால முடியல மது!!” வெட்கம்விட்டு கெஞ்சினேன்.

“...................”

"நீ இல்லாம.... எப்படி பாப்பா!!” உடைந்து அழுதேன்.

“...................”

அவளிடமிருந்து ஆறுதலுக்கு கூடஒரு வார்த்தை இல்லைஎனக்கு தெளிவாயிற்றுஅவளிடம் இருந்தா பதற்றம்தவிப்பு எல்லாம் எங்கே நான் என்னை மாய்த்துக் கொள்வேனோ என்றுதான்அதிலும் அவளுக்கு குற்றஉணர்வு ஏற்படும் என்ற சுயநலம் தான்.

"நெ....நெஜமாவேமுடிஞ்சு போச்சா!!” ஆற்ற மாட்டாமல் கேட்டேன்.

"ம்ம்!!” கொட்டினாள்இரக்கமில்லாமல்

"எப்படி மது,.… எனக்கு புரியல!!” அவளை காயப்படுத்தவிடுவது என்று உறுதிபூண்டேன்.

“...................” அவளிடமிருந்து பதிலில்லை

"எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்!!” விடுவதாய் இல்லை

"என்ன தெரியணும்?” அவளது கோபம் என்னை மிருக்கமாக்கியது.

"இதுக்கு ஒரு முடிவு!!, I want a proper closure!! நீ இப்ப தெளிவா இருக்கிற மாதிரியேஎன்னையும் தெளிவாக்குபோதும்!!” முடித்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டேன்.

மீண்டும் ஒரு நீண்ட அமைதி இருவரிடமும்ஒரு பக்கம் மரணம்மறுபக்கம் பேரின்ப வாழ்வு என்னும் இடத்தில் மதில் மேல் புனையாகமரணத்தின் பக்கம் வழுக்கிக் கொண்டிருக்கும் உயிரின் வலியுடன் நான்.

"ஏன்நீ என்கிட்ட "ஐ லவ் யூ!!” சொன்னதே இல்லன்னு யோசிச்சு பாத்துருக்கியா?” அவள் கேட்டதுமேஎன் உயிர் அறுந்து விட்டதுஎன்னை அப்பியிருந்த பயம் உண்மையாக போவதை உணர்ந்து

"நேர்ல பேசலாம்!! நீ...... நீ தங்கியிருக்க அட்ரஸ் அட்ரஸ் சொல்லு!!” அவளை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் இல்லை என்று தெரிந்தும்உலறினேன்அழைப்பை துண்டித்து விட மாட்டாளா என்று ஏங்கியது என் மனம்.

"நேர்ல வந்தாலும் எதுவும் மாறப் போறது இல்ல!!” இரக்கமே காட்டவில்லை அவள்.

"பரவால்ல,கடைசியாஉன்ன ஒரு தடவ பார்க்கணும்!! என் முகத்த பார்த்து இதேயே சொல்லுஅது போதும் எனக்கு!!” மானமில்லாமல் மன்றாடினேன்.

"உன்ன கஷ்டபடுத்த கூடாதுன்னு பாக்குறேன்!!, உனக்கு அது புரிய மாட்டேங்குதுசரி நல்ல கேட்டுக்கோநான்உன்ன லவ் பண்ணுனேனாஇல்லையாங்குறது இருக்கட்டும்!!, நீ என்னை உண்மையாவே லவ் பண்ணுனியா?”

“...................” அவல கேள்வியில் துடித்துக் கொண்டிருந்தஒரு நொடி சேத்து மீண்டதுநான் பதில் சொல்லும் முன்அவளே ஆரம்பித்தாள்.

"நான் எத்தனையோ தடவ கெஞ்சியும்உன் வாயிலிருந்து ஒரு தடவையாவது "ஐ லவ் யூ!!”ன்னு வந்துருக்கா?, நான் லவ்வ சொன்னதுக்கு அதுக்கப்புறமும்!!, நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட!!, என் பக்கத்துல இருக்குறதுக்கே கில்டியா பீல் பண்ணவன் தான நீ?” உதடு துடிக்கஅடக்க மாட்டாமல்சத்தமில்லாமல் அழுதேன்.

யாரவது என்ன சைட் அடிச்சா கூடஎனக்கு பத்திகிட்டு எரியும்அப்படி பாக்குறவங்கள பார்வையாலேயே எரிச்சுறுவேன்!!. ஆனா நீஎவ கை கொடுத்தாலும்அவ கைய புடிச்சி குலுக்கிகிட்டுஎவ பார்த்தாலும்திருப்பி பல்ல காட்டிகிட்டு தான் தெரிஞ்சயாராச்சும் லவ் பண்ற பொண்ண பப்ளிக் பார்க்கிங்கில வச்சுநீ கை வச்ச இடத்தில கை வைப்பானாஇதுக்கு மேலயும் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல!!” ஒரு வேகத்தில் நான் முட்டாள்தானமாக நடந்து கொண்டதை அவள் சொன்ன அடுத்த நொடி எனக்கு புரிந்தது

எல்லாம் முடிந்து விட்டதென்று. "சாவு!!,சாவு!!சாவு!!சாவு!!சாவு!!” அது மட்டுமே என் மனதில்.


"போ..........போதும்!!” வைராக்கியம் எல்லாம் விட்டொழித்துகாதேலே வேண்டாம் என்ற என்னிடம்அவள் கருணை காட்டுவதாய் இல்லை.

"இல்லநான் இன்னும் பேசிமுடிக்கலஇன்னும் ரெண்டு நாள் கழிச்சு உனக்கு நான் சொன்னதுல நம்பிக்கை இல்லணு தோணும்இன்னைக்கே இத முடிச்சுக்கலாம். I too want proper closure too this!! மூணு மாசமா நாங்க லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருக்கோம்இன்னும் பத்து நிமிஷத்துலநான் வீட்டுக்கு போயிடுவேன்!! வீடியோ கால் பண்றேன்!! உன் கண்ணால பாத்து தெரிஞ்சுக்கோ!!, அது ரெக்கார்ட் பண்ணி என்ன வேணாலும் பண்ணிக்கோ!! உனக்கு நான் பண்ண தப்புக்கு தண்டனையா நெனச்சுக்கிறேன்!!” இரக்கமே இல்லாமல் பேசியவள்துண்டித்து விட்டால் மொத்தமாக.

உன்னைப் போன்ற ஒரு இழி பிறவியின் உடலில் இருக்கஎனக்கு விருப்பம் இல்லை என்பது போல்என் இதயம் தாறுமாறாகத் துடித்ததுசத்தமிட்டு கதறி அழத்தொடங்கியசில நொடிக்குள்தெருவில் இருக்கிறேன் என்ற நினைவுவரகண்ணீரை துடைத்துக்கொண்டுபைக்கை எடுத்தேன்எனக்கு என் அறையில் சென்று என்னை அடைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்ததுஇறநூறு மீட்டர் கூட ஓட்டியிருக்க மாட்டேன்அழுகையை அடக்க முடியாமல்பைக்கை நிறுத்தியவன்ஸ்டண்ட் கூட போட தெம்பில்லாமல் அப்படியே போட்டுவிட்டுபிளாட்ஃபார்மில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்நடுத்தெருவில் நிற்கிறேன் என்ற நாணம் இல்லாமல்.

மொபைல் சத்தம் எழுப்பதீடிர் என்று வந்த சத்ததில் உடல் தூக்கிப்போட்டது எனக்குசரிந்து விழுந்தேன் ரோட்டில்எழுந்து நின்றேன்பத்து நிமிடம் என்றவள்ஐந்தே நிமிடத்தில் கால் செய்தாள்தொடுதிரையில் அவள் பெயர் பாரத்துமேஅதுவரை கட்டுக்குள் இருந்த மிருகம் என்னை முழுதாய் ஆட்கொள்ளமொபைலை விட்டெறிந்தேன்அது அங்கிருந்த மின் கம்பத்தில் பட்டு மூன்று நான்கு துண்டுகளாக சிதறியதுஎன்னைப் பீடித்திருந்த மிருகத்தை நான் கட்டியாக பிடித்துக்கொள்ளஎன் காதல் மனது தன்னைத் தனே மாய்த்துக் கொண்டது.

தன்னிச்சையாகஏதோ பல நாள் பழக்கம் கொண்டவன் போல்ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன்வேண்டாம் என்று மறுத்த உடலின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்து கட்டாயமாக புகையை உள்ளிழுத்தேன்நாலு முறை தொண்டைக்குள் இறங்கிஎன் சுவாசக் குழாயை தழுவிய புகையைகுறைந்தது நூறுமடங்கு இருமலுடன்வெளியேற்றியது என் உடல்என் நெஞ்சுக்குடு ரணமாய் வலித்ததுலேசாக தலை சுற்றுவது போல் இருந்ததுதூரத்தில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்கு என்னை எரிக்க அருகே வருவதுபோல் தோன்றியதுவாயிலிருந்த துருப்பிடித்த இரும்பின் சுவை ஏனோ ஓங்கரிப்பை தரவில்லைநெஞ்சம் அதைவிடவும் கசங்கது கிடந்தது.

என் நெஞ்சமெல்லாம் இறுகிமண்டை சூடானதுஎன்னை ஆட்கொண்ட மிருகமோவெறி ஏறி நின்றதுஇது எனக்கு போதவில்லை இன்னும் கொடு என்று அவளது ஒவ்வொரு சொற்களையும் நினைத்துப் பார்த்து இன்னும் வலியை வேண்டியதுஅவள் கொடுத்த வலியின் அழஅகலங்களை அளந்து பார்க்காமல் விடமாட்டேன் என்றதுஆறு மாதகாலமாக சிறிது சிறிதாக திட்டமிட்டே அவள் என்னை விலக்கியிருக்கிறாள்அவள் என்னை காதலிக்கவில்லை என்று சொன்னதையேஏற்றுக்கொள்ள முடியாத என்னிடம்என் காதல் பொய் என்று சொன்ன அவளைமுதன் முதலாக முற்றிலும் வெறுத்தேன்அதற்கு அவள் சொன்ன காரணங்கள் என் மனதை கூறு போட்டன.

அதற்குள் இன்னொரு துணையை தேடிக்கொண்டு துரோகி என்று சபித்தேன். என் காதலை அவள் சந்தேகப்படுவதற்கு அவளுக்கு எந்த உரிமையுமில்லைஅப்படி சந்தேகப்படும் அவள் இனி எனக்கு தேவையும் இல்லை என்று சீரில்லாமல் என்னை சீர் செய்ய முயன்றது என் எண்ணம்எல்லவற்றையும் ஆமோதித்தேன்அவள் துரோகத்தை எண்ணிய அடுத்த நொடி என் மனதில் வந்தது சிவகாமி ஆண்ட்டிதான்என்னைப்போலவே அவளால் துன்பப்படும் இன்னொரு ஜீவன்என்னையும் அவர்கள் பிள்ளை போல் நினைத்துஅவரது வாழ்விலும்வீட்டிலும் இடமளித்த அவர்களின் மகளையே காதலித்துஅவர்களுக்குச் செய்த துரோகத்தை எண்ணி துடித்துப் போனேன்எனக்கு கிடைத்த தண்டனை சரிதான் என்று தோன்றியது எனக்குமது எனக்கிழைத்த துரோகத்தை காட்டிலும்நான் சிவகாமி ஆண்டிக்கு இழைத்த துரோகம்என்னை கண்டதுண்டமாக கூறு போட்டதுஏனோ உடனே அவர்களைப் பார்க்க வேண்டுமென்றும்அவர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்அவளால் துன்பப்படும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றநேராக அவர்களது வீட்டுக்கு சென்றேன்.

ஐந்து நிமிடத்தில் அவர்கள் வீட்டின் கேட்டீன் முன் சென்று வண்டியை நிறுத்தியதும்சிறு தயக்கம் என்னில்நான் இருந்த நிலை அப்படிஅழுது வீங்கிய கண்களுடன்அர்த்த ராத்திரியில்அவர்கள் வீட்டு கதவை தட்டினால்என்ன வென்று நினைப்பார்கள்ஆறுமாத காலமாக அவளின் பேச்சை கேட்டு அவர்களை நிராகரித்தரக்கு காரணம் கேட்டாள்என்னவென்று சொல்லுவேன்?, எதை சொல்லுவேன்?. பின் அவள் என்னை போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வரகண்டிப்பாக சென்றே தீருவது என்று முடிவுக்கு வந்தேன்.
உடனே அருகில் இருந்த பார்க்கிற்கு சென்றேன்கேட்டை தாண்டி குதித்தேன்அங்கிருந்த குழைாய் தண்ணீரில் முகம் கழுவிதுடைத்துக்கொண்டேன்கைகளால் தலைமுடியை முடிந்த மட்டிலும் சீர் செய்தேன்.

P.S 
அவன் அழிவுக்கு, அவனே அவனை அலங்காரப் படுத்திக்கொண்டிருக்கிறான் என்று அறியாமல்.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக