http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 36

பக்கங்கள்

சனி, 20 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 36

 சுத்தமாக, தூக்கம் தொலைத்த இரவாகி போனது அன்று எனக்கு. கொட்டும் மழையென தன் வலியை கொட்டித் தீர்த்தவன், அதற்காக என்னிடம் மன்னிப்பும் கேட்டவன், அதன் பின்பு எதுவுமே பேசவில்லை. கல்லூரி விடுதியின் வாயிலில் வைத்து அவனுக்கு நான் நன்றி சொல்ல.


"ஆக்சுவலாநான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்!! Infact, I feel better now!! ரெம்ப நாளுக்கு அப்புறம்என்றவன்சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்

.


அவன் சிரிப்பில் இன்னும்வலியின் மிச்சம் ஒட்டிகொண்டிருந்ததுஏனோஅதுவரை பார்த்திராத வெண்ணிலாவின் மேல்கடும் கோபம் வந்தது எனக்குஎங்களை போலவேஇன்னொரு பரிதாபகரமான ஜீவனாகவே தோன்றினான் ரஞ்சித்இவ்வளவு வலியை தாங்கிக் கொண்டிருந்தவன்அவள் மீது துளி கோபம் கொள்ளாமல்தன்னை விட்டுச் சென்றவள் நிம்மதியாகசந்தோஷமாக வாழ்வதற்குதன்னை வருத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித்உண்மையிலேயே ஒரு புரியாத புதிர் தான்.

முன்னிரவு மொத்தமும்ரஞ்சித்தை பற்றிய சிந்தனைகளில் தூக்கம் தொலைத்து இருந்தேன் என்றால்மீதி இரவைஅவனின் "சேர்த்து வாழ்வதற்கு ஏதாவது வழிஎன்ற சொற்கள்என்னை தூங்க விடவில்லைமணியுடன் சேர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்களை யோசித்துஒன்றும் புலப்படாமல் போகதவிப்பாய் இருந்தாலும்அது பற்றிய சிந்தனையே என்னை உணர்ச்சிப் பிழம்பாய் மாற்றியிருந்ததுஅவனை கடும் துன்பத்திற்கு உள்ளாக்கிய குற்ற உணர்ச்சியோ இல்லை ரஞ்சித்தின் தூண்டுதல் வார்த்தைகளோஅவனுடன் சேர்ந்து வாழ்வதற்கானகடுகிலும் கடுகளவாகஒரு வாய்ப்பு இருந்தாலும்அதை முயற்சி செய்வது என்று உறுதி கொண்டேன்உண்மையிலேயே என் வாழ்க்கையில் நிகழ்ந்த அதிசயம் தான் இந்த ரஞ்சித்.

**************

இரண்டு வாரங்களுக்குப் பின்டென்னிஸ் விளையாடி விட்டுஎன் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தோம் நானும் ரஞ்சித்.

"இந்தியாவில் எந்த மூலையில் நாங்க ஒளிஞ்சு இருந்தாலும்ரெண்டே நாள்ல கண்டுபிடிச்சுடுவாங்க!!" அந்த ரெஸ்டாரண்ட்டில் பேசுயதற்கு பின்அந்தப் பேச்சை எடுக்காமல் இருந்த ரஞ்சித்திடீரென்று "ஏன் நாங்க கல்யாணம் செய்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில்ஏதாவது பெயர் தெரியாத ஊருக்கு சென்றுவிட கூடாது" ரஞ்சித் ஐடியா கொடுக்கஅதை மறுத்தேன் நான்.

"அப்போ எங்காவது வெளிநாடு போயிருங்க?" இயல்பாய் அவன் சொல்லஅதுவரை நான் அப்படி யோசித்து இருக்கவே இல்லை.

அவன்அம்மாகோயம்புத்தூர்அதைத்தாண்டிய ஒரு வாழ்வினை யோசிக்க வேண்டிய தேவைஅந்த ட்ரெயின் நிகழ்விற்கு முன் எனக்கு வந்ததே இல்லைஎன் அம்மாவின் துரோகத்தால் விலக இருக்க வேண்டும் என்று நினைத்தபோது கூடஅதிகபட்சமாக டெல்லி வரை தான் என்னால் யோசிக்க முடிந்ததுரஞ்சித் அப்படி சொன்னதுமே அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய,

"அவங்க ரெம்ப பெரிய ஆளுங்கஇன்ஃப்ளூயென்ஸ் யூஸ் பண்ணிஎங்கள் திரும்ப இந்தியா கொண்டு வந்துருவாங்க!!" ஒரு நிமிடம்நம்பிக்கை அளித்த அவனது எண்ணம்இந்தியாவிற்கு திரும்பி கொண்டுவதுவிட்டாள்என் தாயின் முகத்தையும் அவனது தந்தையின் முகததையும்பார்த்துக் கொண்டு வாழ்வது என்னால் இயலாது என்பதை உணர்ந்தேன்.

"See, இந்தியா கூட நடுகடத்தும் ஒப்பந்தம் இல்லாத நாட்ல இருந்துஉங்களோட சம்மதம் இல்லாமல் திருப்பி அனுப்ப மாட்டாங்க!!" அவன் நம்பிக்கை விதைத்தான்.

வாழ்க்கையின் பெரும் சோதனைகளுக்கான விடைகள் எல்லாம் மிக எளிதானதாகவே இருக்கும்சூழ்நிலையின் காரணமாகஉணர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாகஎளிதாக சிந்திக்கும் திறனை இழந்துஒரு பிரச்சனையை அணுகும் போதுஅந்தப் பிரச்சினையின் உண்மை தன்மையை காட்டிலும்அது பெரிதாகவும்குழப்பமானதாகதீர்க்க முடியாத சிக்கல் வாய்ந்ததாகவும் தோன்றலாம்.

***************

அதன் பின்னான நாட்களில்என்னைக்காட்டிலும்எனக்காக அதிகம் சிந்தித்தான் ரஞ்சித்வாழ்க்கையின் அத்தனை நெருக்கடியிலும்என்னை தாங்கிதூக்கிவிடும் நண்பர்கள் வாய்க்கப் பெற்றது எனது வாழ்வின் கொடுப்பினைநேத்ராபிரதீப் என்று கோயம்புத்தூரிலும்இப்போது இங்கே ரஞ்சித்.

அவனது திட்டப்படி தான்ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் நான் படிப்பை தொடர்வதும்அதற்கு முன்எந்தவித சான்றுகளும் தேவைப்படாத டென்மார்க்கில் கல்யாணம் செய்து கொள்வது என்றும் திட்டமிட்டோம் (நிறைய நாடுகளில்தங்கள் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்கள் செய்து கொள்ளபின் சார்ந்த நாட்டின்வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்)என் அம்மாநான் உபயோகப்படுத்திய வங்கி கணக்கில்இன்னமும்ஒவ்வொரு மாதமும் பணம் போட்டு வந்தாலும்அதை உபயோகப்படுத்த கூடாது என்ற முடிவில்என் பெயரில் இருந்தவைப்பு தொகையை கணக்கைஉடைத்துத்தான்என் செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன்மணிக்குஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் விசா எடுத்திருந்ததால்திரும்ப எடுப்பது மிகவும் எளிதான காரியம் என்பதால்முதலில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு கல்லூரியில்எனக்கான அட்மிஷன் பெற்றுக் கொண்டுஅதைவைத்தேஎளிதாக எனக்கான விசா எடுத்தவுடன்மணிக்கு மொத்த விபரங்களையும் சொல்லிஇந்தியாவை விட்டு பறந்து விடுவதுஎன்பதுதான் எங்கள் திட்டம்.

ஒரு மாதத்திற்கு முன்அவன்னுடனான வாழ்க்கை என்பதுஇந்த பிறப்பில் எனக்கு விதிக்கவில்லை என்று உறுதியாக நம்பிய நான்கைகூட போகும் என் காதலைஎண்ணி பூரித்துப் போயிருந்தேன்எனக்கு இருந்த ஒரே ஒரு சின்ன நெருடல்கையில் இருந்த பணத்தில்என் படிப்பு செலவு போகஅதிகபட்சம் நான்கு வருடங்கள் தாக்கு பிடிக்கலாம்அதற்குள் தகுதித் தேர்வுகள் எழுதிமருத்துவராக பயிற்சி செய்வதற்கு லைசன்ஸ் வாங்கி விட்டால்ஆடம்பர வாழ்க்கை வாழ விட்டாலும்மகிழ்ச்சிக்கு குறைவில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும்அவனது கனவை கண்டிப்பாக தியாகம் செய்யத்தான் வேண்டும்.

ஸ்பான்சர் இல்லாமல் தொழில்முறை டென்னிஸ் ஆடுவதற்குகுறைந்தபட்சம் நாற்பதில் இருந்து அறுபது லட்சங்கள் வரைவருடத்திற்கு செலவு செய்ய வேண்டும்எனக்காக அவன் அந்தத் தியாகத்தை செய்ய சிறுதும் தயங்கமாட்டான் என்று எனக்கு தெரிந்திருந்தாலும்ஒரு சின்ன நெருடல்அந்த நெருடலை என் சுயநலத்தை கொண்டுதுடைத்தெறிந்துஅந்த நெருடல் தான் இப்படியான ஒரு யோசனையைமுடிவையாருடைய தூண்டுதலும் இல்லாமல் என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு காரணமாக இருக்குமோ என்று கூட தோன்றியது.

********************

மணியுடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் பொழுதேஉணர்ச்சிப் பிழம்பாய் இருந்த நான்அதற்கான வழி தெரிந்ததும்அவனைப் பார்க்காமல்அவனுடன் பேசாமல் இருப்பது மூச்சுக் கூட விடமுடியாத இன்ப அழுத்தத்தில் தவித்தேன்என் உணர்வுகளின் பிடியில் நானும்என் பிடியில்என் உணர்வுகளும் இல்லாமல்கனவிலும் கற்பனையிலுமே வாழ்ந்திருந்தேன்.

"என்ன மேடம்டூயட் ட்ரீமா?" எதுவும் பேசாமல்டென்னிஸ் விளையாடிவிட்டுஎன் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருக்கநெடுநேரம் கவனித்திருப்பான் போலசிரித்துக் கொண்டே கேட்டான் ரஞ்சித்வழிந்தேன்.

"அவன் கிட்ட பேசாமரொம்ப கஷ்டமா இருக்கு!!" நான் என் உணர்வைச் சொல்ல

"அந்த "அவனோடபெயர் என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்!!" நக்கல் அடித்த அவனிடம்பதில் சொல்ல வாய்யெடுக்கஎனது மொபைல் சத்தமிட்டது.

"ஹலோ!!" தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்து காதுக்கு கொடுக்கஎங்கள் ஆடிட்டர் தான் பேசினார்அவரிடம் பேசிவிட்டு வைத்தவுடன்என் முக மாறுதலை கவனித்த ரஞ்சித்,

"என்னஏதும் ப்ராப்ளமா?" கேட்டவனிடம்இல்லை என்று தலையாட்டி விட்டுவிடுதியை நோக்கி நடந்தோம்.

*****************

"பட்ட காலிலேயே படும்என்பதற்கு ஒப்பாககிட்டத்தட்டகடந்த ஒரு வருடமாக வாழ்வில்  கொடும் துன்பத்தை மட்டுமே  அனுபவித்து வந் எனக்கு, "கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சுகிட்டு கொடுக்கும்என்பதைப் போல தோன்றியது ஆடிட்டரிடமிருந்து வந்ததஅந்த அழைப்பு.

எப்பொழுதும் முன்கூட்டியே வருமான வரி செலுத்தும் பழக்கம்என் அம்மாவிற்கு இருந்ததுஅடுத்த வருடத்திற்கானஎன் பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் முதலீடுகளுக்குமான வருமான வரி செலுத்துவதற்குத்தான்அவர் அழைத்திருந்தார்கோயம்புத்தூருக்கு வர முடியுமாஎன்று கேட்டவரிடம்எனது முகவரியை கொடுத்துநான் கையெழுத்து போட வேண்டிய படிவங்களை அனுப்பச் சொன்னேன்அவரும் அவ்வாறே செய்திருந்தார்அவர் அனுப்பிய படிவங்களில் கையெழுத்திட்டு முடித்தபின் தான்எனக்கு அந்த யோசனை தோன்றியதுஏன்என் பெயரில் இருக்கும் ஏதாவது ஒரு சொத்தை விற்றுஅதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றஅதற்கான வேளைகளில் இறங்கினேன்.

ஆடிட்டர் அனுப்பிய கணக்கு வழக்குகளைரஞ்சித்தின் உதவியோடுஇங்குள்ள ஒரு ஆடிட்டரிடம் கொடுத்து அலசிணோம்மணியின் குழுமத்திள் ஒரு அங்கமாக இருக்கும் கார்மெண்ட்ஸ் தொழிலில் சதவீத பங்குகள் என் பெயரில் இருந்ததுஅதைத்தான் இருப்பதிலேயேநல்ல தொகைக்கு விற்கமுடியும் என்று தெரிந்ததும்பிரதீப்பிடம் பேசிவெளியில் யாருக்கும் தெரியாமல் அதைச் செய்துமுடிக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கினேன்பிரதீப்பும்அவன் அப்பாவிற்கு தெரிந்தவர்கள் மூலம்விஷயம் வெளிய தெரியாமல்மணியின் அப்பாவின்தொழில் போட்டியாளர் ஒருவரிடமேவிற்பதற்கு ஏற்பாடு செய்யபேரம் படியாமல் கொஞ்ச நாள் இழுத்துக் கொண்டிருந்ததுஅவர் கேட்ட விளைக்கே கொடுத்து விடலாம் என்று முடிவு செய்துஅந்த சொத்திற்கான டாக்குமெண்டை எப்படி எடுப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான்வருமான வரித்துறை சோதனையில் என் அம்மா சிக்கிதலைமறைவாக இருந்தாள்அவளது கஷ்டம்எனக்கு துன்பத்தையும் கொடுக்கவில்லைஇன்பத்தையும் கொடுக்கவில்லைமாறாகஅவளுக்கு வந்த சோதனைஎனக்கு அதிர்ஷ்ட கதவுகளைத் திறந்துவிட்டதுஅவள்தலைமறைவாய் இருந்த சமயத்தை உபயோகப்படுத்திக் கொண்டுவீட்டுக்குச் சென்றுஎனக்கு தேவையான டாக்குமென்ட்களைஎந்த சந்தேகமும் வராதபடி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்எடுத்துக்கொண்டு வந்த சில நாட்களிலேயேஒரு வாரத்தில் எழுதிக்கொடுக்க முடிந்தால்நாங்கள் பேரம் பேசிய தொகையை விடவும்அதிகமாக 5% சதவீதத்திற்கு வாங்கிக்கொள்ளநாங்களும் பேரம் பேசிக் கொண்டிருந்தவர் சம்மதிக்கஅதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது எனக்குஎனக்கும்என்னவனுக்கும் இழைத்த அநியாயத்திற்குதுன்பத்திற்குகடவுளே பரிகாரம் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

                                     *******************

எங்கள் மொத்த திட்டமும் மாறியிருந்ததுமூன்று நாட்களில்பங்குகளை எழுதிக் கொடுப்பது என்று முடிவு செய்துஅதற்கான அக்ரிமண்ட் அடுத்த நாளே தயாரிக்கப்பட்டுபிரதீப் அவன் பங்கிற்கு அவனுக்குத் தெரிந்த வக்கீல் மூலம் சரிபார்க்கரஞ்சித்அவனது அண்ணன் கம்பெனியின்லீகல் டீமிடம் கொடுத்துஅவன் பங்கிற்குஅதை சரி பார்த்தான்மணி பயிற்சி பெற்ற ஸ்பெயின் அக்காடமியிலேயே அவனை பயிற்சி பெறவைக்கும் நோக்கத்தோடுஸ்பெயினிலேயேஏதாவது ஒரு கல்லூரியில்நானும் படிப்பது என்று முடிவு செய்துஎனக்கான ஆறுமாத சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பமும் கொடுத்தாகிவிட்டது. 15 நாட்களுக்குள் கண்டிப்பாக வீசா வந்துவிடும் என்றுடிராவல்ஸ் ஆட்களும் உறுதி சொல்லமிஞ்சிப் போனால் இன்னும் ஒரு மாதம்தான்நானும் மணியும்கணவன் மனைவியாகஐரோப்பாவில் இருப்போம் என்ற கனவுடன்கோயம்புத்தூர் பறந்து கொண்டு இருந்தேன் நான்.

எனது அலைபேசியின் தொடுதிரையில்என் கழுத்தை கட்டிக் கொண்டுகள்ளம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான்பதினானக்கே வயதான மணிடெல்லியில்நாங்கள் கலந்துகொண்ட ஜூனியர் நேஷனல்ஸின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்தொடுதிரையில் இருந்தஅவன் முகத்தின் மீதுபெருவிரலால் நீவிக்கொண்டேஅவனை கொஞ்சிக் கொண்டிருந்தேன் கண்களால்.

"பேசாமநாளைக்கே உன்னை என் கூட கூட்டிட்டு போய்டவா?"

"என் கழுத்துல இருக்கற தாலியப் பார்த்தாஎன்ன செய்வே?"

"உன்ன கூட்டிட்டு ஓடிப்போனதும்ஒரு பத்து நாள்இல்ல!! இல்ல!! போதும்!! போதும்னுதோணுற வரைக்கும் இருக்க கட்டிப்புடிச்சுக்கணும்!! உன் வாசத்த அப்படியே நுகர்ந்தது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அடச்சு வச்சுக்கணும்

!!"


"உன்னைகண்ட இடத்துல எல்லாம் கடிச்சு வைக்கப் போறேன்!!"

"நீ டென்னிஸில பெரிய ஆள் ஆகிறாய்யோஇல்லையோ!!, நான் படிக்கிறனோஇல்லையோஅங்க போன உடனே இரண்டு குழந்தை பெத்துக்கணும்!!" என்று ஆசை தீர அவனை கொஞ்சி கொண்டிருந்தாலும்

"ப்ளீஸ் பாப்பா!! நல்ல வலிக்கிற மாதிரிஒரு பத்து அடியாவதுஅடி!!" அவனுக்கு நான் தந்த வேதனைகளைஅவன் கையால் திரும்பப் பெறாமல்எனது காயம் ஆறவே ஆறாதுஅவன் என்னை காயப்படுத்துவது நடக்கவேநடக்காது என்று தெரிந்தும்மனம் அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்ததுகண்களைப் போலவேஎன் இதயமும் ஈரம் செறிந்த இருக்கவருத்தமும்குற்றஉணர்வும் இருந்தாலும்அதயெல்லாம் தாண்டியஅவன் மேலான காதலில்திளைத்துக் கிடந்தேன்.

"விமானம் இன்னும் சற்று நேரத்தில் கோயம்புத்தூரில் தரை இறங்கப்போகிறது" என்ற அறிவிப்புஎன்னைமோன நிலையிலிருந்து வெளிக்கொணரகை கால்கள் பரபரத்ததுஅதைவிட அதிகமாகஎன் உள்ளம் பரபரத்ததுவந்ததுவியாபார நோக்கமாக இருந்தாலும்அதை முடித்துவிட்டு"எப்படா அவனை கண்குளிர பார்ப்பேன்!!" என உள்ளம் துடித்து கிடந்தது.

விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்ததும் "டிங்என்று என் மொபைல் சத்தம் எழுப்பபிரதீப்பாய்த் தான் இருக்கும் என்று நினைத்தவாறுமொபைலை நோண்டினேன்தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வந்திருந்தது.

"The sun doesn't rise and set on your ass!!" மெசேஜைப் படித்ததுமேஎன் இதயத் துடிப்பு எகிறபதட்டம் தொற்றிக்கொண்டதுஎன் மூளை ஏதோ அபாயம் என்று உணர்த்தஉள்ளங்கைகள் வேர்த்ததுமீண்டும் "டிங்என்ற சத்தத்துடன்அதே எண்ணிலிருந்துஒரு வீடியோ வரஅதைத் தொடர்ந்து Enjoy” என்ற மெசேஜும் வந்ததுஇதயத்தின் துடிப்புஎன் காதுகளுக்கு கேட்கஆளை விழுங்கும் பயம் என்னை அப்பிக்கொண்டது"அந்த வீடியோவ பிளே பண்ணாத!! டெலிட் பண்ணு!!அந்த நம்பரை பிளாக் பண்ணு!!" என்று என் உள்ளுணர்வு சொல்லஅருகிலிருந்த கழிப்பறைக்குள் நுழைந்தேன் நான்.

உடம்பெல்லாம் வேர்க்க துவங்கியிருந்ததுகையிலிருந்து மொபைல் நழுவுவது போல் இருக்கஅதை இறுகப் பற்றிக்கொண்டுஅந்த வீடியோவை பிளே செய்தஅடுத்த நொடிஎன் வாழ்வுஇருண்டுவிட்டது.

***************

மழையில் நீண்ட நேரம் தொப்பலாக நனைந்து இருந்தாலும்உள்ளமும் உடலும் கொதித்துக் கொண்டிருந்தது மணிக்குகுற்ற உணர்வும்தன் செயலினால் தன்னைத் தானே அவன் அவமானகரமாக பார்க்கஉள்ளம் கூசும் அசிங்கத்திலிருந்துதன்னை இந்த மழை மட்டுமல்லஇன்னும் இதுபோன்ற மழையில்ஆயிரம் ஆயிரம் முறை நனைந்தாலும்தன் அசிங்கத்தைகழுவவோதுடைக்கவோ முடியாது என்ற எண்ணத்தில்மழை நின்ற பின்பும் அப்படியே உட்கார்ந்துவிட்டான்ஒரு மனிதனுக்கு ஏற்படும் குற்ற உணர்வும்தன்னை தானே அசிங்கமாக பார்க்கும் நிலையும் ஒன்று போல் தோன்றினாலும்சம்பந்தப்பட்டு இருந்தாலும்இரண்டும் வெவ்வேறு நிலைகள்.

"Fuck toy" என்ற மதுவின் சொல்லடிபட்ட போதும்தொடர்ந்து அவளின் நிராகரிப்பின் விரக்தியிலும்அவளை காயப்படுத்தி இருந்தாலும்அதனால் அவனுக்கு ஏற்பட்டது குற்ற உணர்வேதனி மனிதனின் வாழ்வியல் மதிப்பீடுஎது சரி!! எது தவறு!! என்ற அனைத்தும்அவன் வாழும் சமூகமும்அதன் கலாச்சாரமுமே அவனுக்கு கற்றுத் தரும்பொதுவாக ஆணையோ பெண்ணையோஅவர்களது சம்மதம் இல்லாமல் புணர்வதுஅசிங்கப்பட கூடியதுதான் என்றாலும்இங்கு ஆண்கள் கற்பழிப்பு புகார் செய்ததால்பரிகாசிக்க படுவார்கள்நாம் சமூகத்தின் வாழ்வியல் முரண்பாடு அதுமணிமதுவைபலவந்த படுத்தியிருந்தாலும்அவள் தன்னவள்ஏதோ ஒரு கோபத்தில் செய்ததுஅதற்கு மன்னிப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான்அதை நினைத்து குற்றஉணர்வு கொண்ட அவனால்அதற்காக அசிங்கப்படாமல் இருந்ததற்கு காரணம்.

ஆனால் இப்பொழுது அப்படியில்லைமுதன்முதலாக அவன் சிவகாமியின் மார்பை பிடித்ததுபாலியல் ரீதியான செயல்தான் என்றாலும்ஆத்திரத்தில் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட செயல்இந்த செயலின் குற்ற உணர்ச்சியோடுதன் செயலுக்காக தன்னையே அருவருத்தான்அவன் அப்படி துடித்துப்போய் இருந்த வேளையில் தான்அவளிமிருந்து "செத்துடலாம் போல இருக்கு" என்று மெசேஜ் வரதன் செயலுக்காக தன்னை அசிங்கமாக நினைத்தவன்அவள் மீது தான் கொண்ட கோபத்துக்கு நியாயம் கரப்பிகதூக்க கொள்ள முடியும் என்றாலும்அவள் முகத்தில் விழிக்க அசிங்கப்பட்டுக் கொண்டுமதுவின் வீட்டிற்கு செல்வதற்கு தயங்கினான்அதே நேரம் தன் செயலால் தான் அவள்தன்னைத்தானே மாய்த்துக்கொள்வாளோ என்ற குற்ற உணர்வில் தவித்தான்அந்த குற்றஉணர்வே அந்த வேளையில் அவனை சிவகாமியிடம் அழைத்து சென்றதுஒரு மனிதன் குற்றவுணர்ச்சியில் இருந்து வெளி வரஅதைத் திருத்திக் கொள்ளவோதிருத்திக் கொள்ள முடியாத தவறாக இருந்தால்அதற்காக மன்னிப்புக் கோரியோ அல்லது தன் செயலுக்காக நியாயங்களை கற்பித்தோ அதிலிருந்து வெளியே வரலாம்மன்னிப்பு கோரவே முதலில் சென்றவன்பின் அவளை முதன் முறையாக சிவகாமியைப் புணர்ந்தபின்மன்னிப்பு கூறுவதோ அல்லது திருத்திக் கொள்வதற்கு வழியில்லாத காரணத்தால் தான்மணியின் மனம் அதற்கான நியாயங்களை வைத்துக் கொண்டுஇந்த குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்ததுசுயநலம் பிடித்த மனதை காட்டிலும் ஒரு மனிதனுக்கு பெரிய எதிரி என்று எதுவும் இருந்துவிட முடியாது.

குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்த மனமேஅவனை அடுத்தடுத்து தவறு செய்ய தூண்டியது என்றால்தன் தந்தையின் செயலால்சிவகாமியின் துயரை கண்டபின்தந்தையின் பிடியிலிருந்து அவளைக் காப்பாற்றிதன் குற்ற உணர்வுக்குஏதாவது ஒரு வகையில் சமாதானம் செய்துவிட அவனை இயக்கியதும் அதே மானநிலைதான்முதலில் ஆத்திரத்தாலும்பின் குற்றஉணர்வினாலும் இயங்கிய மணிஅவன் எண்ணம்எல்லாம் நிறைவேறிய பின்அவனது மனசாட்சி விழித்துக் கொள்ளஅவமானகரமானஅசிங்கமானஅருவருக்கத்தக்க பிம்பமேதன்னைப்பற்றி எஞ்சி இருந்தது அவனுக்கு.

மன்னிப்பு கூட கோர முடியாத பாவத்தின் பிடியில்அதிலிருந்து மீள வழி தெரியாமல் புழுங்கி கிடந்தவனுக்குகடந்த இரண்டு மாதமாக நடந்தது கனவு என்றுஉறங்காத உறக்கத்தில் இருந்துயாரேனும் எழுப்பி விட மாட்டார்களா என்று ஏங்கி தவித்து கிடந்தான்அடுத்தடுத்த நாட்களில்உயிர் தின்னும் வெறுமையில் உழண்டு கொண்டிருந்தவனுக்குஅடுத்தடுத்த நாட்களில் சிவகுருவின்அமைதியான போக்கும்பார்க்கும் போதெல்லாம்சிவகுருவின் முகத்தில் தெரியும் சிரிப்பை போன்ற ஏதோ ஒன்று ஆயிரமாயிரம் எச்சரிக்கைகளையும்பயத்தையும் விதைத்தது மணிக்குஇருந்தும்சிவகாமியை தொடர்பு கொள்ளும் தைரியம் கூட இல்லாமல்எப்பொழுதும் மனதை நிறைத்திருக்கும் பயத்துடனே கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தான்அவன் மனதில் எல்லாம் ஒரே ஒரு எண்ணம்தான்சிவகாமி கூறியதைப் போலசிவகுரு ஒரு கோழையாக இல்லாமல்அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்குஏதாவது ஒரு வகையில்தன்னை கொலை செய்துவிட மாட்டானாபின் அந்த குற்றத்திற்கான காரணகர்த்தா என்று கண்டுபிடிக்கப்பட்டுஅதற்கான தண்டனை பெற்று விடமாட்டானா என்பதுதான்அப்படி மட்டும் நடந்து விட்டால்மதுவுக்கு இழைத்த துரோகத்திற்கு குறைந்தபட்ச தண்டனையாகவும்சிவகாமிக்கு தன்னால் விடுதலை கிடைத்தாக தனக்கு கிடைக்கும் சிறு சமாதானம்அவன் வாழ்விற்கு போதுமானதாக இருந்தது.

***************

அந்த சாவு கூட நான் கொடுத்த தண்டனையிலிருந்து விடுதலையாகி தான் இருக்க வேண்டும் என்று சிவகுரு சபதம் அடுத்த அடுத்த நாள்

"எங்க...., தம்பிக்கு வர்ற வெள்ளிக்கிழமை பர்த்டே!!, இந்த வருஷம் கொஞ்சம் கிராண்டா பண்ணலாமா?" அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தசிவகுருவிடம் கேட்டாள் சுமாதன் மனைவியை கேள்வியாக சிவகுரு பார்க்க

"இல்லங்ககொஞ்ச நாளாவே அவன் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிற மாதிரி தோணுது!!" தன் கணவனின் இந்த எதிர்வினையை உணர்ந்திருந்தாலும்தனது கோரிக்கையை நிராகரிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் கேட்டாள்சிறிது நேரம் யோசித்தவனின் முகத்தில் புன்னகை படரஅதுவரை எங்கே நிராகரித்து விடுவானோ என்ற சஞ்சலத்தில் இருந்த அவளின் முகம் மகிழ்ச்சியானது.

"கண்டிப்பாரொம்ப கிராண்டா பண்ணலாம்!!" தன் மனைவியின் கண்ணம் கில்லிகண்ணடித்து சொன்ன சிவகுருசுமாவின் இடுப்பின் இருபுறமும் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து,

"உன் மகனுக்கு கிராண்டா பர்த்டே கொண்டிடலாம்!! ஆனாஅதனால எனக்கு என்ன லாபம்?....ம்ம்??" சுமாவின் காதோரம் கிசுகிசுத்தவன்பின் அவள் முகம் பார்த்து கண்ணடித்து கேட்கநாணமுற்றவள்

"அய்யே!! இது என்ன பிசினஸ் டீலா?" பொய்யாக முகம் சுளித்தவளை இருக்கி அணைத்து

"எனக்கு எல்லாமே பிசினஸ் டீல் தான்!! சொல்லுஉன் பையனுக்கு கிராண்டா பர்த்டே செலிபிரேட் பண்ணா!!.. எனக்கு என்ன கிடைக்கும்?....ம்ம்??"" என்றவன்அவளின் வளைவான கழுத்தில் முத்தமிட.

"சாருக்கு என்ன வேணும்?" கணவனின் அணைப்பில் அவளும் கசிந்து உருகமுத்தத்தை தொடர்ந்தவனின்தலையில் லேசாக கொட்டியவள்

"அவன் உங்க பையனும் தான்!!" என்றதும்அதுவரை குறும்புடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தவனின்முகம் மாறியதுவஞ்சனையே உருவம் எடுத்தது போல்சிவகுருவின் முகம் மாற, "ரொம்ப கிராண்டா கொண்டாடலாம் உன் புள்ளையோட பொறந்த நாளை!! அவனோட இறந்த நாளா!!. இந்த வருஷம் மட்டுமல்லஇனி எல்லா வருஷமும்!!" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன்அவளை இறுக அணைத்தான்தன் கணவனின் அந்த முகத்தை அறியாதவள்கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்காதலுடன்.

****************

மணி

மதுவுக்கு மெசேஜ் வந்த அன்று காலை.

"என்னப்பா சீக்கிரமே கிளம்பிட்டா போல?" என் அப்பாவின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்நான்எனக்குள் கடந்த சில நாட்களாக திகிலை தரும் சிரிப்புஅவன் முகத்தில் ஒட்டியிருந்ததுஎன் அப்பாவை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவேசீக்கிரமே எழுந்து கல்லூரி சென்று விடஅவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னிடம்இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பேசினான்நான் பதிலேதும் சொல்லாமல் எழுந்து கொள்ள

"தட்டில சாப்பாடு அப்படியே இருக்கு!!, நல்லா சாப்பிடு!!, நிறைய வேலை இருக்கும் உனக்கு!!" என்றவன்என் தோளில் கைவைத்து உட்கார வைக்க அழுத்தம் கொடுத்தவாறேமீண்டும் சிரிக்கதோளில் இருந்த அவன் கைகளை தட்டிவிட்டுகையைக் கழுவிக் கொண்டு வர

"உனக்கு ஒரு ஸ்பெஷல் பர்த்டே கிப்ட் இருக்கு!!” என்று சொல்லி கண்ணடித்தவனை கண்டு கொள்ளாமல்அங்கிருந்து கிளம்பினேன்.


20 நிமிடம் கழித்து,

என் கல்லூரி அருகில் இருந்த ஒரு கடையில் புகைத்துக் கொண்டு இருந்தேன்என் அப்பாவின் செயலுக்கு பதிலடி கொடுக்காமல்அப்படி எழுந்து வந்ததில் என் மீது எனக்கு இருந்தா ஆத்திரமாஅல்லது அவனை அவமானப் படுத்த வேண்டும் என்று நான் செய்ததற்கான பலன்கிட்டாமல் போனதன் விரக்தியாஎன்று தெரியவில்லைஎன் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்கஎன்ன செய்வதென்று தெரியாமல்அவனின் செயலுக்கான காரணமும் புரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன்.


                                     


*************

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்துதியேட்டருக்கு வந்திருந்தேன்படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லைகாலையில் இருந்தேஎன் தந்தையின் செயலால் ஏற்பட்ட குழப்பத்தில்கல்லூரியில் இருக்க மனம் ஒப்பவில்லைமதியத்திற்கு மேல் கிளம்பியவன்வீட்டிற்கு போக மனமில்லாமல்சிவகாமி ஆன்ட்டியிடம் பேசலாமாஎன்று நீண்ட நேரம் சந்தித்துவேண்டாம் என்று முடிவு செய்தேன்என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றித் திரிந்துதியேட்டர் கண்ணில் படவேஇங்கே வந்து உட்கார்ந்து விட்டேன்பெரிதாக கூட்டம் இல்லைமொத்தமே பதினைந்து அல்லது இருபது பேர்தான் இருந்தார்கள்படம் இன்னும் ஆரம்பிக்கவில்லைஎன்ன படம் என்றும் தெரியவில்லைநிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மனதை ஒரு நிலைப்படுத்தமொபைலை எடுத்து நோண்டினேன்நம் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்த மெசேஜ் வந்தது.

"When is the next show?" (அடுத்த ஆட்டம் எப்பொழுது?) எனது தொடர்புகளில் பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்துஅந்த மெசேஜை பார்த்ததும்குழப்பமும்எரிச்சலும் வரஅதே நேரம் பார்க்க படமும் ஆரம்பித்ததுதொடுதிரையை அணைத்துவிட்டுபடம் பார்க்கலாம் என்று எண்ணுகையில் தான்அதே எண்ணில் இருந்துஒரு வீடியோ வந்ததுஎரிச்சல் அடைந்தாலும்தன்னிச்சையாய் அந்த வீடியோவை பிளே செய்யஅதிர்ந்துவிட்டேன் நான்என் தொடுதிரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் சிவகாமியே புணர்ந்து கொண்டிருந்தேன் நான்மீண்டும் அதே எண்ணில் இருந்து வந்த அடுத்த மெசேஜ்என்னை அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்கசுற்றும் முற்றும் பார்த்தேன்யாரும் என்னை கவனிக்கவில்லை என்று தெரிந்து கொண்டதும்அந்த மெசேஜை படிக்க

"When is the next show?" மீண்டும் அதே கேள்விகுழம்பிப் போனேன்சில நொடிகளில் அந்த குழப்பம் பயம் ஆனதுஎழுந்து விறுவிறுவென்று தியேட்டரை விட்டு வெளியே வந்தேன்வெளியே வந்த அடுத்த நொடி சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன்அழைப்பு எடுக்கப்படாமல் போகமீண்டும் மீண்டும் அழைத்தேன்பின் எதோ எண்ணம் கொண்டவனாகஅவளது மருத்துவமனைக்கு அழைத்தேன்அவள் அன்று வரவில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்த அழைப்பிலிருந்து தெரிந்து கொண்டதும்என் பயம் பதட்டம் ஆனதுஎன் கைகள் நடுங்கியதுஎனக்கு சிவகாமி ஆன்ட்டியை உடனே பார்த்தால் நலம் என்று தோன்றஅதே நேரத்தில்இப்படி மனக்கட்டுப்பாடு இல்லாமல் சென்றதுதான்எனது இன்றைய நிலைக்கு காரணம் என்று தோன்றநடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் தியேட்டரினுள் நுழைந்தேன்.

சீட்டில் அமர்ந்து இரண்டு நொடி கூட இருக்காதுமீண்டும் வெளியேறினேன்பைக்கை எடுத்த இருபது நிமிடங்களில்மீண்டும் மதுவின் வீட்டின் முன் நின்றேன்உள்ளே செல்ல மனம் தயங்கமீண்டும் சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன்இருமுறை அழைத்தும்அழைப்பு எடுக்படாமல் போகமனதை திடப்படுத்திக் கொண்டுவீட்டினுள் நுழைந்தேன்கதவு சாத்தப்பட்டிருந்தாலும்லாக் செய்யப்படவில்லைஹாலில் அவர்கள் கண்ணுக்குப் படாமல் போகவேமாடியில் இருக்கும் அவர்களது அறை நோக்கி விரைந்தது எனது கால்கள்அங்கும் அவர்கள் இல்லாமல் போகவேஎன் மனம் தாறுமாறாக துடித்ததுமீண்டும் தொலைபேசியில் அவளுக்கு அழைக்கஅவர்களது தொலைபேசியின் ரிங்டோன் கேட்டதுஅதன் சத்தம் ஹாலில் இருந்து கேட்கவேகுழப்பத்தில் படிகளில் இறங்கினேன்சத்தம் வந்த சமையலறை நோக்கி ஓடஅங்கே நான் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் என் உயிரே ஆட்டம் கண்டுவிட்டது.

அங்கேஇரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள் சிவகாமி ஆன்ட்டிநிறை இரத்தம்எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று எனக்கு தெரியவில்லை. "ஹான்ஈனஸ்வரத்தில் அவர்களிடமிருந்து வந்த வலியின் முனங்கல்என்னை சுயநினைவுக்கு கொண்டுவரசற்றென்று என் ஷூ-லேஸை உருவிவெட்டுப்பட்டு இருந்த அவள் கையில் கட்டிரத்தம் வெளியேறுவதை நிறுத்தினேன்முதலில் பார்த்ததும் இறந்து விட்டார்கள் என்று நினைத்த அவர்உயிரோடு இருப்பது தெரிந்ததும்என் மூளை சுறுசுறுப்படைகிறதுஉடனேசிவகாமி ஆன்ட்டியின் மருத்துவமனைக்கு அழைத்துஆம்புலன்சை வரச் சொன்னேன்என்ன ஏது என்று கேட்டவர்களுக்குஉயிர்போகும் அவசரம் என்பதைக் கூறிதாமதிக்காமல் வரச்சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்ததேன்ஏற்பட்ட அதிர்ச்சியில்சிவகாமி ஆண்ட்டியின் நிலைகண்டுஅழுகை கூட வரவில்லை எனக்கு.

எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்துஅவர்களைஎன் மடியில் போட்டு தண்ணீரை தெளிக்கசற்று முகம் சுளித்தவர்கள்கண்ணைத் திறக்கவில்லைஅவர்களது சிறு முக அசைவு எனக்கு நம்பிக்கை கொடுக்கஅவரின் கணத்தில் தட்டியவாறு "ஆன்ட்டி!! ஆன்ட்டி!!” என்று அழைக்கசுத்தமாக எந்தவித அசைவும் இல்லை அவர்களிடம்மீண்டும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவர்களது முகத்தில் தெளிக்கலேசாக கண் திறந்தவர்கள்என்னைப் பார்த்ததும் அழுதார்கள்எனக்கும் கண்கள் கலங்கநான் அழத் துவங்கிய வேலைகளில் தான்,

"ஏன்டா இப்படி பண்ண?" அவளின் கேள்வியில் அதிர்ந்தேன் நான்நான் செய்யவில்லை என்று தலையை ஆட்டஅதுவரை பிணம்போல் இருந்தவள்வெட்டு பட்ட கையால்என் சட்டையை கொத்தாகப் பிடித்தவள்,

"தரங்கெட்டவனே!! உன்ன நம்பினேன்னடா?” அழுதவள்அந்த நிலையிலும் இதை நான் செய்திருப்பேன் என்ற அவளின் நம்பிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"உங்கப்பன் சந்தேகப்படுறது சரிதான்!!, கண்டிப்பா நீ அவனுக்கு பிறந்திருக்க மாட்ட?" அவளின் சொற்கள் அடுத்த அதிர்ச்சியை தரஉலகமே அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டது போல் ஒரு பிரம்மைவிரிந்த விழிகளுடன் அவளையே நான் பார்த்திருக்க

"என்னடா பாக்குறஉங்க அப்பா உன்னை ஏன் வெறுக்கிறான் தெரியுமா?" இமைக்க கூட மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நீ உங்க சாமியார் பெரியப்பாவுக்கு பிறந்தவன்னுஅவன் நம்புறான்இப்ப நான் கூட அதான் உண்மைனு நம்புறேன்கண்டிப்பா உங்க அப்பனுக்கு பிறந்திருந்தாஇப்படி இனத்தனமாண காரியம் பண்ணிருக்க மாட்ட!!" என்றவள்என் கன்னத்தில் அடிக்கஅடுத்த நொடிஅவள் உடலை விட்டு உயிர் பிரிந்தது போல்பிணம் விழுந்தாள்என் மடியிலிருந்துஎன் மீதான இவளின் அவ நம்பிக்கையை காட்டிலும்என் அப்பாவின் மீது இவளுக்கு இருக்கும் நம்பிக்கை என்னை ஏதோ செய்ததுசில நொடி சிலையென இருந்தவன்பின் அவளின் நிலை உணர்ந்துஅவள் மார்பில் என் காதுகளை பொருத்தினேன்அவள் உயிருடன் இருப்பதுஅவளது இதயத் துடிப்பில் இருந்து தெரியஅவளின் கார் சாவியை எடுத்துக்கொண்டுஅவளை தூக்கிக்கொண்டு வெளியே நான் வெளியே வரவும்ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்ததுவந்தவர்களை ஆம்புலன்சில் அவளை ஏற்றி கொண்டு போகதிரும்ப வீட்டினுள் புகுந்தேன் நான்நேராக, CCTV பகுவுகளைபதிவு செய்யும் கம்ப்யூட்டர் இருந்த அறைக்கு சென்று, CCTV பதிவுகள் இருக்கும் ஹார்ட் டிஸ்கை கழற்றி எடுத்தேன்இது நான் ஏற்கனவே இங்கு பைக்கில் வரும்போது உதித்த சிந்தனைஇங்கு வரும்போதேஎல்லா வகையான வாய்ப்புகளையும் சிந்தித்துக் கொண்டுதான் வந்தேன்.

எனக்கு வந்ததைப் போலவே அவளுக்கும் மெசேஜ் வந்திருந்தால்கண்டிப்பாக அவள் தற்கொலைக்கு செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியதுஅப்படி ஏதேனும் நடந்து விட்டால்போலீஸ் விசாரணையில்கண்டிப்பாக CCTV பதிவும் ஆராயப்படும்அப்படி ஆராயப்பட்டால்அன்று நடந்த சம்பவத்தின் போதுஎன் அப்பா வெகு நேரமாக வீட்டின் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்ததும்தெரியவரும்என் அப்பாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லைஒருவேளை அது போலீசின் கையில் கிடைத்துஅந்தத் தகவல் வெளியேறினால்என்னுடைய முட்டாள்தனத்திற்காகஇறந்த பின்னும் சிவகாமி ஆண்டியின் மானம் பறிபோகும்அதைத் தவிர்ப்பதற்கே இந்த ஹார்ட் டிஸ்க்கை அழித்துவிடுவது என்று முடிவு செய்து எடுத்துக்கொண்டு அதை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்அப்போதுதான் அவளது மொபைலை கண்ணில் பட்டதுஅதையும் எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.

என் பைக்கின்பின் சீட்டில் உள்ள முதலுதவி பெட்டி வைக்கும் ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்டில்அந்த ஹார்ட் டிஸ்கை வைத்து பூட்டினேன்பின்அவளது மொபைலை எடுத்துப் பார்க்கஎனக்கு மெசேஜ் வந்திருந்த அதே எண்ணிலிருந்து அவளுக்கு மெசேஜ் வந்திருந்ததுஎனக்கு அனுப்பப்பட்ட அதே வீடியோஅதைத்தொடர்ந்து போட்டோபின் "You just saw the trailer, whole movie is sent to your daughter, let her enjoy how well I fucked you" நான் அனுப்பிய இருந்தா மெசேஜைப் பார்த்ததும்சர்வமும் அடங்கியது எனக்குஅந்த போட்டோ ஒரு மெஸேஜ் இன் ஸ்கிரீன் ஷாட். "The sun doesn't rise and set on your ass" தொடர்ந்து ஒரு வீடியோவும்அடுத்ததாக "enjoy" என்ற மெசேஜ்மதுவின் எண்ணிறக்குகாலையில் என் தந்தையின் செயலுக்கான காரணமும்அவன் சொன்ன ஸ்பெஷல் கிப்ட்டும் எனக்கு இப்பொழுது தெளிவாக விளங்கியதுதிட்டமிட்டு மொத்தமாக அழித்துவிட்டான் எங்களை.

பைக்கை எப்போது ஸ்டார்ட் செய்தேன்எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல்ஏதோ ஒரு சாலையில் சென்று கொண்டு இருந்தேன்என் மூளைஅப்போது தான் சிவகாமி ஆன்ட்டி சொன்னதை கிரகித்தது

தந்தை என்று நினைத்தவன்என் தந்தையே இல்லையாஎன் ஈனத்தனமான செயல் மதுவுக்கு தெரிந்துவிட்டதாஎன்னால் இன்று ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதாஎன்ற எண்ணங்கள் தோன்றஎன் வாழ்க்கையின் அத்தனை அஸ்திவாரமும்வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருப்பதை உணர்ந்தேன்சாலையின் எந்த இரைச்சலும் விழவில்லை என் காதில்என் இதயத்துடிப்பு மட்டுமே என் காதில் கேட்ககண்கள் இருட்டிக் கொண்டு வந்ததுவலுவிழுந்து கொண்டிருந்த என் உடலில் மீதமிருந்த சக்தி எல்லாம் ஒன்று திரட்டிஎன் பைக்கை திருப்பினேன்எதிரில் வந்து வந்து கொண்டிருந்த லாரியை நோக்கிஇந்த வாழ்வென்னும் சாபத்திலிருந்து விடுதலையை நோக்கி
.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக