http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 37

பக்கங்கள்

சனி, 20 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 37

 டிஸ்கி


(கதை சொல்லியின் புலம்பல்)

எச்சரிக்கை:

எப்பொழுது பதிப்பின் கடைசியாககொத்தமல்லி போல கொசுராக வரும் டிஸ்கிவரலாற்றில்முதன் முறையாக(ஹி!!ஹி!!) முன்னறிவிப்பாக வருகிறது

இந்த பகுதியை படிக்காமல்பாகம் - 55 படித்தாலும்கதையின் தொடர்ச்சியில் எந்தவித மாற்றமும் இருக்காது.


கதை சொல்லியின் மனசாட்சி : "டேய் கதை எழுதும் போது அதுக்கு தேவையானதை மட்டும்தான் எழுதணும்இப்படி மனசுல தோன்றத எல்லாம் எழுதுறது சரியில்லகாமக்கதை எழுதிய வந்துட்டுகாதல் கதை எழுதுறதே தப்புஇதுல உனக்கே சரியா புரியாத அறிவியலை பத்தி எழுதுறது எல்லாம் பெரும் பாவம்" னு நான் எவ்வளவோ சொல்லியும் இவன் கேட்க மாட்டேன் என்கிறான்அதனால இந்த பகுதியை படித்துவிட்டுவாசகர்கள் கடுப்பானால்கம்பெனி பொருப்பாகாதுஎன்று சொல்லிக்கொண்டு............................

****************

வாழ்வில்நல்லவன் ஒருவன் துன்பப்பட்டாலும் அல்லது கடைந்தெடுத்த அயோக்கியன் ஒருவனின் வளம் பெற்றாலும்பார்ப்பவர்கள் விரக்தியில் "எல்லாம் தலைஎழுத்துஅவன் விதி படிதான் நடக்கும்" என்பது நமது சமூகத்தில் பொதுவாக வழங்கப்பட்டு வரும் சொல்லாடல்பொதுவாக ஒருவனுக்கு ஏற்படும் வினையின் காரணம்காரியம்புரியாமல் போகும் போதுஅதை எல்லாம் கடவுளின் சித்தம் "மனுஷ பய கையில என்ன இருக்கு" என்று கடவுளின் பெயரில் அனைத்தையும் சுமத்திவிட்டுவாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகரும் சமூகக் கூட்டம்நம்முடையதுஆனால் மதத்தின் மீதும்கடவுள் மீதும்நம்பிக்கை இல்லாத அறிவியல் நம்பிக்கையுள்ள கூட்டம்எதையுமே கடவுளின் சித்தம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்அண்டத்தின்நிகழ்வுகள் அனைத்தும்ஒரு அறிவியல் விதி அல்லது கோட்பாட்டின் படியே நடக்கிறது என்பது அவர்களின் எண்ணம்.

அறிவியல் விதிகள் அல்லது தத்துவங்கள் என்பது பொதுவாகஉலகின் ஏதாவது ஒரு அம்சம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட விளக்கம் ஆகும்ஆனால் அறிவியல் தத்துவங்கள் பல சமயம்அதுசார்ந்த அம்சத்தை தாண்டிவாழ்க்கைக்கும் பொருந்தி விடும்அறிவியல் தத்துவங்களின் அழகியலே அதுதான்அதற்கு மிக பிரபலமான எடுத்துக்காட்டுநியுட்டனின் மூன்றாம் விதி"எந்த ஒரு விசைக்கும்அதற்க்கு சமமான எதிர் விசை இருக்கும்”. இந்த விதிஅறிவியல் சார்ந்ததுஒரு பொருளின் மீதுஒரு விசை தாக்கும் போதுஅப்பொருளின் இயக்கத்தில் ஏற்படும் விளைவைப் பற்றிய விதி என்றாலும்அது வாழ்க்கைக்குமான தத்துவமாகவும் பொருந்தும்.

அப்படி இந்த கதையின் ஆசிரியருக்கு (ஹி!!ஹி!!) பிடித்த அறிவியல் ததுவங்களில் ஒன்று Chaos Theoryதமிழில்குழப்ப வீதி அல்லது ஒழுங்கின்மை விதி/கோட்பாடுபெயரப் போலவே சற்று குழப்பமானதுதான்கணக்கீட்டுதுல்லியமாக வானிலை மாற்றங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட Edward Norton Lorenz, இந்த கோட்பாட்டின் முன்னோடி.

குழப்ப விதி
ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு.

ரொம்ப எளிமையா சொல்லணும்னாஅபூர்வ சகோதரர்கள் படத்தில்அப்பு கமல்டெல்லி கணேஷிடம் "இந்த கோலிக்குண்டு தான் நீ செஞ்ச வினைஇப்ப அது செய்யும் விளையாட்டை பாக்குறியா?” என்று கேட்டுஅதை உருட்டிசங்கிலி தொடராக நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளின் முடிவில்கொல்லப்படுவார்அந்த படத்தில்அப்பு கமல் ஏன் எதிரிகளை நேரடியாக கொல்லாமல்டிசைன்டிசைனாதிட்டம் போட்டுக் கொல்கிறார்ஏன்னாஎதிரிகள் கொடுத்த விஷத்தால்முழுமையாக வளர்ச்சியடையாதஅவரது உடல்தான் காரணம் (எங்க யாருக்கும் இது தெரியாதா நீங்க கடுப்பாவது தெரியுதுஅதுக்குத்தான் முதல்லயே எச்சரிச்சேன்)அந்தப் படத்தில் அப்பா கமலஹாசன் ஒரு நேர்மையான அதிகாரியாக இருக்காமல் இருந்திருக்கலாம்!! இல்லஸ்ரீவித்யா அந்த விஷம் குடித்ததும் மரணித்திருக்கலாம்!! அது போல் தான் வாழ்க்கையும்இப்படி எத்தனையோ "க்கலாம்-கள் அனைவரது வாழ்விலும் வந்திருக்கும்இனியும் வரும்அறிவியல் கூற்று படிநடக்கும் எதுவுமே தற்செயலான நிகழ்வு இல்லைஎல்லா நிகழ்வுகளுக்கு பின்னாலும்காரணமும் காரியமும்உண்டு. தசாவாதரம் படத்தில் பெருமாள் சிலையை கடலில் போட்டதின் விளைவு தான் கிளைமாக்ஸ் வரைக்குமான காட்சிகள்இதை குழப்பவிதி/ஒழுங்கின்மை கோட்பாட்டின் படிபட்டாம்பூச்சி விளைவு என்று அறியப்படுகிறதுஉலகில் எங்கோ ஒரு மூலையில் தன் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியின் தாக்கத்தால்உலகின் வேறு ஒரு மூலையில் சூறாவளி காற்று உண்டாகும்எல்லா பட்டாம்பூச்சியின் அசைவுக்கும்சூறாவளி காற்று உண்டாகுமா என்றால்ஆகாது!! ஆனால் அதற்கான விளைவுகள் இருக்கும்காலச் சூழலில் ஏற்படும் ஒரு சின்ன மாற்றம்அதற்கான விளைவுகளைகாலத்தின் போக்கில் நிகழ்த்தி விட்டு செல்லும் என்பது திண்ணம்.அப்பு கமல்உருட்டிவிட்ட கோலிக்குண்டுஅப்புவின் எதிர்பார்ப்பிற்கு மாறாகதவறி கீழே விழுந்துடெல்லி கணேஷ் இடம் சென்று இருந்தாலும்!! அல்லது கொஞ்சம் வேகமாக உருண்டு இருந்தாலும்!! அல்லது கொஞ்சம் மெதுவாக உருண்டு இருந்தாலும்!! அல்லது கோலிக்குண்டு தாக்கத்தால்அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளில்ஏதேனும் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டு இருந்தால்!! அந்தப் படத்தின் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும்அதே போல் தான் இந்த கதை எழுத ஆரம்பிக்கும்போதுபெற்றோரால் பாசம் காட்டப்படாமல் வளர்க்கப்படும் மணிதன் தந்தையின் காமுகியையும்அவளது மகளையும் மடக்கிதாயுடனும் மகளுடனும்ஒன்றாக கூடிதன் பெற்றோரை அவமானப்படுத்திபழிவாங்கும் மணியாக இருந்தவன்கதை ஆசிரியரின் சறுக்கலால்மதுவின் மீது காதல் கொண்டுகாமகதைகாதலில்அதன் நீட்சியான காமத்தில் திளைக்கும் காதலர்களின் கதையாக மாறியதுஒரு வன்காம கதையாக ஆரம்பிக்கப்பட்டபத்து அல்லது பதினைந்து பதிவுகளில் முடிந்திருக்க வேண்டிய கதைஐம்பது பதிவுகளையும் தாண்டிவாசகர்களின் வயிற்றெரிச்சலையும் சாபத்தையும் வாங்கிக்கொண்டுஇன்னும் ஒரு பத்து பாகங்கள் வரை போகும் போல.

***************

தன்னைக்காட்டிலும் பேரன்புடன் அவனை யாராலும் காதலிக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையில்நீ என்னைத்தான் காதலித்தாக வேண்டும் என்று கட்டளையிட்ட மதுஅதே நம்பிக்கையுடன்வாழ்வின் அடுத்த அத்தியாயத்தையும் எதிர்கொண்டிருக்கலாம்அல்லது மணியின் எண்ணப்படி எதுவும் ஆகாது என்று எதிர்காலத்தை எண்ணி வருந்தாமல்நிகழ்காலத்தில் இன்பமாய் இருந்திருக்கலாம்எப்போதும் தங்கள் உறவின் ஆளுமையாக இருந்த மதுமணி ஹைதராபாத்தில்தனியாக தவித்துதன்னை தவிர்த்த போதும்அதே ஆளுமையுடன் செயல்பட்டுஅங்கு செல்லாமல் இருந்து இருக்கலாம்அவனை சமாதானப் படுத்துவதற்காகஅந்த ட்ரெயின் டிக்கெட் புக் செய்யாமல்அவனுடன் விமானத்திலேயே கோயம்புத்தூர் வந்திருக்கலாம்ஹைதராபாத்தில்அவனுக்கு உதவும் என்று நினைப்பில்சிவாகுருவின் நம்பரைமுன்பின் அறியாதவர்களிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாம்தன் தாயிடம் சொன்னதைப் போலரயில் நிலையத்திலிருந்துவீட்டுக்கு வராமல்நேத்ராவிடம் சென்றிருக்கலாம்அதுவரைதங்கள் உறவு வெளிஉலக்கிற்கு தெரியாமல்ஏன் தங்கள் குடும்பத்துக்கே தெரியாமல்சர்வ ஜாக்கிரதையாக இருந்துவந்தசிவகாமியும்சிவகுருவும்இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாம்ஹைதராபாத்தில்மதுசந்தித்தவர்கள் மூலம்சிவகுருவுக்குமதுமணியின் காதல்தெரியாமல் இருந்திருக்கலாம்தன்னுடன் மனைவி போல் வாழ்ந்தவளிடம்கொஞ்சம் கருணையுடன்தன் இச்சை புத்தியை கட்டுப்படுத்திக் கொண்டுமதுவைப்பற்றி சிவகுரு பேசாமல் இருந்திருக்கலாம்சிவகுருவின் சாமியார் அண்ணன்சாமியாராக போகாமல்ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்சாமியாராய் போன பின்பும்சிவகுருவுக்கு சுபாவிற்குமானதிருமணத்தைஎதிர்க்காமல் இருந்திருக்கலாம்சிவகுருவும்சுபாவும்மணியைஒரு சராசரி பெற்றோரைப் போல பாசம் காட்டி வளர்த்து இருக்கலாம்மணியைமதுகடைசிவரை தம்பியாகவே பார்த்திருக்கலாம்மணிமதுவிற்கு முன்பாக பிறந்திருக்கலாம்.

வாழ்வின் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில்நமக்கு கிடைத்த உதவியோகிடைக்காமல் போன உதவியோநம்மை வெகுவாக பாதித்து இருக்கும்அப்படி ஒரு நிகழ்வுஎல்லோரது வாழ்விலும் வந்திருக்கும்இங்கு வாழ்க்கையில்எதுவுமே தன்னிச்சையாக நடப்பதில்லைநமக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவிக்குஅதன் பின்னாலான சங்கிலி தொடர்களில்எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்திருக்கும்நமக்கு கிடைக்காமல் போன உதவியின் பின்னால் ஏதோ ஒரு இடையூறு நிகழ்ந்திருக்கும்அப்படிஇவர்களின் வாழ்க்கையில் நடந்த இடையூறும் காரணமாகத்தான்விதியின் செயலால்இல்லை!! இல்லை!! குழப்ப விதியின் கோட்பாட்டால்தங்கள் வாழ்வின் அஸ்திவாரம் என நம்பியிருந்த நம்பிக்கை அனைத்தும் பிடிங்கி எறியப்படமது டெல்லியில்வாழ்க்கையே வெறுத்துவெம்பி போய்கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்மணியோஇங்கு கோயம்புத்தூரில்உயிர்வாழவே விருப்பம் இல்லாமல்தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்துஉணர்வில்லாமல் கிடக்கிறான் மருத்துவமனையில்.

***************

சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து,

அன்று கல்லூரிக்கு விடுமுறைஎன்பதால் தாமதமாகவே எழுந்தால் மதுகுளித்து முடித்து உடை மாற்றுவதற்காகஉள்ளாடை அணியும் போது தான் கண்ணில் பட்டது அதுதங்கள் காதலின் முத்திரையாகஅவள் குத்திக் கொண்ட டேட்டூவலது பக்க மார்பில்மணியின் பற்களின்உதடுகளின் அச்சுதனது மார்பில் குத்தப்பட்டிருந்த பச்சைஅவள் காதலின் முத்திரையைவெருமையாக பார்த்துக் கொண்டிருந்தவள்அப்படியேஒடுங்கி உட்கார்ந்துஅழ ஆரம்பித்தாள்.

மனதெல்லாம் காதலோடும்கனவுகளோடும் கோயம்புத்தூர் சென்றவளுக்குபச்சை மரத்தில் விழுந்த இடியாக வந்தது அந்த வீடியோஅது பற்றவைத்த நெருப்பில்அவள் காதலும் கனவுகளும் அழிவு போகபித்துப்பிடித்ததுபோல் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவள்

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு பிரதீப்!!" அழைத்துப்போக வந்த பிரதீப்பிடம் கேட்கஅவனும் தலையாட்டினான்.

"இதஎங்க அம்மா பெயருக்கு மாற்றி எழுதணும்விற்க முடிவு செய்திருந்த பத்திரத்தை அவனிடம் நீட்டகுழம்பிப்போன அவன் என்ன ஏது என்று கேட்டதற்கு,

"ப்ளீஸ்என்ன நேத்ரா வீட்டுல ட்ராப் பண்ணு!! பிளீஸ்!!" மதுவின் முகம் பார்த்தேஏதோ சரியில்லை என்று அவனுக்கு தோன்றநேத்துராவுக்கு "லீவ் எடுத்துக்கொண்டு உடனே உன் வீட்டுக்கு வா" என்று மெசேஜ் அனுப்பிவிட்டுமது கேட்டுக் கொண்டதைப் போலவே நேத்ராவின் வீட்டில் அவளை இறக்கி விட்டான்.

"முடிஞ்சா இன்னைக்கு ஈவினிங்குள்ள இத முடிச்சு கொடு!!" பத்திரத்தைக் நீட்டியவளிடம் அதை வாங்கிக் கொண்டுநேத்ராவிடம் கண்ணைக் காட்டிவிட்டுமது பணித்த பணியை செய்ய கிளம்பினான்பிரதீப்.

"என்னாச்சு பானுஏன் டல்லா இருக்க?" என்று கேட்ட நேத்ராவிடம்,

"சொல்றேன்!!” தலையாட்டிய மது.

"எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு!!, நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா?" கேட்டவாறே படுக்கையறைக்கு சென்ற மதுபோர்வைக்குள் தன்னை புதைத்துக்கொண்டாள்.

வெம்பி புழுங்கும் மதிய வேளையிலும்போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கும் மதுவின் அருகில் வந்த நேத்ராஅவளது நெற்றியை தொட்டுப் பார்த்துகாய்ச்சல் இல்லை என்று உறுதி செய்து கொண்டதும்ஏசியை போட்டு விட்டு வெளியே வந்துபிரதீப்புக்கு அழைத்தாள். "விற்க வேண்டும் என்று சொன்ன சொத்தைதற்போது அம்மா பெயருக்கு மாற்ற சொல்கிறாள்" என்று பிரதீப் சொல்லகுழம்பிப்போனவள்தன் தோழிக்காக வருந்தினாள்மாலை எழுந்து வந்த மதுதனக்கு பசிப்பதாக கூறஅவளின் பசி தீர்க்கஉணவு சமைத்துக் கொடுத்த நேத்ராஅவள் சாப்பிட்டு முடித்ததும் என்ன ஏது என்று கேட்கமீண்டும் தனக்கு சோர்வாக இருக்கிறது என்ற மதுபடுக்கை அறைக்குச் சென்று போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்

.


மறுநாள் நினைத்ததைப் போலதான் விற்க நினைத்த சொத்தைசிவகாமியின் பெயரில் எழுதி விட்டுதன் பெயரில் வங்கிக் கணக்கில் இருந்தஅனைத்து தொகையையும் சிவகாமியின் பெயருக்கு காசோலையாக எழுதிஇரண்டையும் சிவகாமிக்கு கொரியர் அனுப்பிவிட்டுநேத்ரா வீட்டுக்கு வந்தால் மதுவந்தவள்தனது உடமைகளை பேக் செய்யஅதுவரை பொறுத்துக் கொண்டிருந்த நேத்ராபிரதீப்பிடம் கண்ணை காட்டஅவன் புரிந்து கொண்டு வெளியே சென்றதும்

"என்ன தாண்டி ஆச்சு?, ஏன் இப்படி இருக்க?, ஏதாச்சு சொல்லுசொன்னாதானஏதாவது பண்ண முடியும்?" சற்று அதட்டலாகவேமதுவின் தோளைப் பிடித்து உலுக்க

தன் மொபைலை எடுத்து நோண்டியவள்அந்த வீடியோவை ஓடச் செய்துநேத்ராவின் பக்கம் திருப்பினாள்.

"ச்சீஎன இரண்டு நொடியிலேயே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

"நான் கிளம்புறேன்!!, டெல்லி போயிட்டு உனக்கு கூப்பிடுறேன்!!" மது வெளியேறஅவளை இந்த நிலையில் அனுப்ப மனமில்லாமல்தடுக்கவும் தெம்பில்லாமல்தவித்துப் போய் நின்றாள் நேத்ராதான் கண்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியிலிருந்துவிலகாமல்.

*************

இரவுடெல்லி திரும்பிய மது செய்த முதல் காரியம்பழைய சிம்கார்டை தூக்கி எறிந்தது தான்அந்த சிம்கார்டோடு சேர்த்துகோயம்புத்தூரின் மொத்த உறவுகளைத் துறந்து இருந்தாள்அவள்பிறகு விடுதி அறைக்கு வந்தவள்மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டாள்கோபம்விரக்திஇழப்பின்சோகத்தின் வலி என்று எதையுமே உணரும் நிலையில் அவள் இல்லைஇப்பொழுது அவள் ஆசை ஆசையாய் குத்திக்கொண்ட அவள் காதலின் முத்திரையை பார்க்கும் வரைக்கும்.

மூன்று நாள்இல்லாத மொத்த உணர்வுகளும் தன்னை ஆட்கொள்ளஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் முடிவே இல்லாததீராத கண்ணீரில் தீக்குளித்தாள்நேரம்செல்லச்செல்ல அவளின் கண்ணீரும்அழுகையும்கூடியதே தவிரகொஞ்சமும் குறையவில்லைகுறைவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

****************

"ஏண்டா கண்ணு!! வந்ததுல இருந்து மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்க?" எட்டு வயதான மணியிடம்அவனது பெரியாச்சி கெஞ்சிக் கொண்டு இருக்க,

"ஹும்அவளிடம் மீண்டும் சினந்து கொண்டவன்தன் தாத்தா வந்ததை கண்டதும்அவரை நோக்கி ஓடினான்.

"ராஜா குட்டிஎதுக்கு கோவமா இருக்காரு?" பேரனுக்கும் தன் அக்காவுக்குமான உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்தவர்அவனை தூக்கிக்கொண்டார்.

"எதுக்கு தாத்தா எனக்கு மணிகண்டன்னு என்று பேர் வச்சீங்க?" தாத்தாவிடமும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளஅவன் கன்னத்தில் முத்தமிட்டவர்

"அதுநம்ம பழனி ஆண்டவர் பேருடா!!" தான் முத்தமிட்ட கன்னத்தைமுகத்தை சுளித்தவாறு துடைத்துக் கொண்டிருந்தமணியைப் பார்த்து சிரித்தார்.

"ரொம்பஓல்ட் நேம் தாத்தாஎனக்கு பிடிக்கலஸ்கூல்ல பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க!!" மணியின் கோபத்திற்கான காரணம் உணர்ந்து அவர் மேலும் சிரிக்க

"இப்படித்தான்ஸ்கூல்ல எல்லாரும் சிரிக்கிறாங்க!!" அழுகும் பாவனைக்கு மணியின் முகம் மாற,

"தங்கம் சாப்டீங்களா?" பேரனின் முகம் மாறுதலை கண்டவர்சிரிப்பை விடுத்துபேச்சை மாற்றினார்.

"எனக்கு வேற பேரு வையுங்க!!" அவன் விடுவதாக இல்லை.

"சரி மாத்திடலாம்உனக்கு புடிச்ச பெயர் என்னன்னு சொல்லுஅதையே உனக்கு வெச்சுடுவோம்!!.....…......" என ஆரம்பித்து ஏதேதோ பேசி அவனை சமாதானப்படுத்தினார்.

எப்போதும் போல இரவு உணவை முடித்துக் கொண்டுதன் மடியில் படுத்து கிடக்கும் மணியிடம் கதையை கதை பேசிக் கொண்டிருந்தவர்,


                               


"உனக்குமுதல்ல வேற பேருதான் வைக்கனும்னு நினைச்சேன்!!" மெதுவாக ஆரம்பித்தார் மணியின் தாத்தா.

"அது என்ன பேரு?" பெயர் என்றதும்உற்சாகத்துடன் வினவினான் மணி.

"முத்துரதம்!!" அவர் சொன்னதும்முகம் சுளித்தாள் மணி.

"என்ன முஞ்சு எப்படியோ போகுது?" தன் கணவன் பெயரை கேட்டதும் முகம் சுளித்த பேரனைவம்புக்கு இழுத்தால் சிவகுருவின் அம்மாமணியின் பெரியாச்சீ.

"நல்லாவே இல்ல!!" சுளித்த முகத்தை மாற்றவில்லை மணி.

"அது என் வீட்டுக்காரர் பேரு!!, அந்தப் பேரு வாங்குவதற்கு எல்லாம் குடுத்து வச்சிருக்கணும்!!" தன் கணவனின் பெயர் பற்றி அவனது பெரியாச்சீ மணியிடம் பீற்றிக் கொள்ள

"அப்போ எதுக்கு எனக்கு மணிகண்டன் பேரு வச்சீங்க?" திடீரென்று எதோ நினைத்தவன் தாத்தாவிடம் கேட்க

"உங்க பெரியப்பா பேரு என்ன?" கேள்வி கேட்டவ னிடம்கேள்வி கேட்டார்தாத்தா.

"என் பெயர் தான்!!"

"உன் பேற என் மகனுக்கு வைக்கல!! என் மகன் பேரன் தான் உனக்கு வச்சிருக்கோம்!!" வந்ததில் இருந்து தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல்இப்பொழுது தன் தம்பியின் மடியில் படுத்துக்கொண்டுகாலாட்டிக் கொண்டிருக்கும் தன் பேரனின் செயலால்பொருமிய அந்த கிழவிதன் அக்காவைபேசாமல் இருக்கும் படி செய்கையால் சொன்னவர்

"நீஉன்பெரியப்பாவா பாத்திருக்கியா?" மீண்டும் தன் பேரனிடம் கேட்டார்

"இல்லையே!!, அவர்தான்நான் பிறக்குறதுக்கு முன்னாலேயேசாமி ஆயிட்டாரே!!" உதட்டைப் பிதுக்கினான் மணி.

"உங்க பெரியப்பா சாமியா ஆனதும்உங்க ஆச்சீ அழுதுக்கிட்டே இருந்தா!! அவ அழுததை பார்த்து"ஐயோ பாவம்"னு இரக்கப்பட்ட கடவுள்அவ பையனசின்ன குழந்தையாக்கிஉங்க அம்மா வயித்துக்குள்ள வச்சுட்டாருஅப்புறம் நீ பொறந்த!! அதனாலதான் உனக்கு மணிகண்டன்னு பேரு வச்சோம்!!" எப்பொழுதும் போல் அவர் மணிக்கு கதை சொல்ல,

ஏன் என்ன ஆச்சி வயித்துல வைக்காமஅம்மா வயித்துல வச்சாரு கடவுள்?” என்ற பேரனின் துடுக்குத்தனத்தில் பெரியவர்கள் சிரிக்க

"அப்ப நான் சாமியா?" கதையில் சுவாரசியமாய் இருந்த மணிபெருமிதத்துடன் கேட்டான்.

"ஆமாஉங்க பெரியப்பா மாதிரிநீயும் எங்க குல சாமிதான்!!" உவகையால் பேரனின் கன்னம் தடவினார்அதைத் தொடர்ந்து விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கஅவரும் சளைக்காமல் பதில் சொன்னார்அவரிடம் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தவன்நான் தூங்கிப் போனேன்.

"மணிகண்டா!!, மணிகண்டா!!" என்று அவன் பெயரை சொல்லி யாரோ அழைக்கஎழுந்தவன்இருபது வயது மணிகண்டன்சின்ன வயதில் நடந்தது கனவாக வரஎழுந்தவன் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டிருந்தான்.

"என்னாச்சு தங்கம்!!" என்று கேட்ட தன் பெரியாச்சீயிடம்ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்ட,

"இன்னும் சாப்பிடல தங்கம்!!" விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்ததன் பேரனின் தலைதடவிகலங்கிய கண்களுடன் பெருமூச்சு விட்டாள் அந்த மூதாட்டி.

**************

அந்த ஆக்சிடென்ட் நடந்த இரண்டு வாரங்கள் கழித்துஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த நாளில்இவனது அறைக்கு வந்த தாத்தா

"போதும் டா தங்கம்!! இனிமேல் நீ இங்க இருக்க வேண்டாம்!! நம்ம வீட்டுக்கே வந்துருஎன்று சொல்லிஅவன் கைகளை பிடித்துக் கொண்டு அழுதவர்அடுத்த நாளேஅவனை அழைத்துக் கொண்டு பழனி சென்றுவிட்டார்பழனி வந்தும்இவன் எதுவும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல் இருக்கஎன்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போயினர் பெரியவர்கள் மூவரும்பின் யாரோ சொல்லித்தான்அவனைஅவனது பெரியப்பாவின் சமாதிக்கு அழைத்துச் சென்றார் அவனது தாத்தாஅங்கு தான் அவன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று தெரியாமல்அழைத்துச் சென்றவர்அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிவிட்டுஅவனுடன் சேர்ந்து அப்படியே அருகில் இருந்த திண்டில் அமர்ந்து விட்டார்இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

**************

"தூங்கிட்டியா தம்பி?" என்றவாறு மணியன் அறையில் நுழைந்தார் தாத்தாகண்ணைத் திறந்து பார்த்தவன்எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கசற்றுமுன் "மானாட்டம் துள்ளித்திரிஞ்ச புள்ளஇப்படி பொட்டி பாம்பா சுருண்டு கிடக்கிறானே" என்று அழுதபடிமூக்கைச் சிந்தியதன் மனைவி வருந்தி அழுத்துதான்நினைவுக்கு வந்தது மணியின் தாத்தாவுக்குமணி இப்படி எதுவும் பேசாமல் பித்துப் பிடித்தவன் போல் இருப்பதை பார்க்கமாட்டாமல் தான்அவனை கோயம்புத்தூரில் இருந்து பழனிக்குஅழைத்து வந்தார் அவனது தாத்தாபெரியவர்கள்மூவரும் என்னென்னவோ பேசிப் பார்த்தும்பேசுவேனா என்று இருந்தான் மணி.

விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில்பயத்தில்அமைதியாய் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்ஆழ்கடல் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும்அடி நீரோட்டத்தின் இழுப்பு அளவிட முடியாத அளவு இருக்கும்அதேபோலத்தான் வெளியில் அமைதியாக இருந்தாலும்மணி என் உள்ளம் அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருந்ததுசிவகுருவின் எதிர்வினையை கொஞ்சம் அவன் எதிர்நோக்கி இருந்தாலும்இப்படி நடக்கும் என்பது அவன் சிந்தனைக்கு அப்பாற்பட்டதுமருத்துவமனையில் விழித்துஉயிருடன் தான் இருக்கிறோம் என்றவன் உணர்ந்தஅடுத்த கணம் அவன் சிந்தித்ததுஎப்படித் தன்னை மாய்த்துக் கொள்வது என்பதுதான்தாத்தாவின் அழுகையேஅந்த எண்ணத்தைஅவனை கை விட வைத்தது தற்காலியமாக.

சிவகாமி தன் பிறப்பை பற்றி சொன்னது ஒரு புறம் புழுவைப் போல அவனது மூளையை அரித்துக் கொண்டு இருந்தது என்றால்மது அந்த வீடியோவை பார்த்து விட்டாள் என்ற உண்மை அவன் உள்ளத்தை குடைந்து கொண்டிருந்தது.

"பொண்டாட்டியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போல் ஒரு நாளும் அந்த ஆள் நடந்ததில்லையே?”

"ஒருவேளை சிவகாமி ஆன்ட்டி பொய் சொல்லி இருப்பாங்களோ?”

"இல்லை!! இல்லை!! அந்தாளு என்ன வெறுக்குறதுக்கு வேற என்ன காரணம் இருக்க முடியும்?”

"புருஷன் சந்தேகப்படுவது கூட புரியாத முட்டாளா அவள்?”

"அந்த வீடியோ எப்படி அந்தாள் கைக்கு போச்சு?”

என்று ஒரு நொடிஅமைதியாக தெளிவாக சிந்தித்தால்அடுத்த நொடி

"ஏதாவது பண்ணனும்கண்டிப்பா அந்தாள பழிவாங்கியே தீரனும்!!

"உயிரைக் கொடுத்தாவதுடென்னிஸ் பெரியாளாகிஇவன் என் அப்பாவே இல்லன்னு ஊருக்கே சொல்லணும்!!"

ஆத்திரத்தில் அடக்கமுடியாமல் திரியும் அவன் சிந்தனை

"வலது உள்ளங் கைகளையும்விரலையும் மட்டும் ஏழு எலும்பு முறிவுஇடது காலையும்சின்னதா ஒரு எலும்பு முறிவு?"

"கை சரியாகிபழையபடி ஸ்ட்ராங்கா ஆகுறதுக்குஎப்படியும் ஒரு வருஷம் ஆகும்!!, பழையபடி விளையாட முடியுமா?"

"மது வந்த வீடியோவை பாத்துட்டாளே?!!"

"மது முகத்துல இனி நான் எப்படி முழிப்பேன்?"

"சிவகாமி ஆண்ட்டி மோகத்துல நான் எப்படி முழிப்பேன்என்னை எவ்வளவு நம்பினார்கள்?"

"அந்தாளு ஒருவேளை அந்த வீடியோவை தாத்தாக்கு அனுப்பினா? ...............ஐயோ!!”

"என்னஇப்போஇந்த உலகத்திலமனுஷனா மதிக்கிறதுக்குபாசம் காட்டுறதுக்கு மிச்சமிருக்கிறது தாத்தாவும்ஆட்சிகளும் தான்இவங்களுக்கும் அந்த அசிங்கம் தெரிஞ்சா

? ......”


அய்யோ!!அய்யோ!! என அவன் மனம் கதற

நிமிடத்துக்கு ஒரு கேள்வியேனஅவனைக் கொன்று தின்று செறித்துக் கொண்டிருந்ததுஒவ்வொரு நொடியும் செத்துவிடு!! என்று அவனுக்குள்அந்த மிருகம் கட்டளையிடும்பின் மருத்துவமனையில் சிறு குழந்தை என கதறி அழுத அவனது தாத்தாவின் அழுகைஅவனது நினைவு அவனது மனஉறுதியை எல்லாம் கரைத்துவிடும்.

********************கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக