http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 38

பக்கங்கள்

சனி, 20 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 38

 "நாளை மறுநாள், ஹாஸ்பிடல் போகணும்!!" பதில் பேசாமல் வெற்றுப் பார்வை பார்த்தவனை, அப்படியே விட்டுவிட்டு போக மனமில்லாமல், மெத்தையில் அமர்ந்த தாத்தா, மணியின் தலையை பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, கட்டுப்போட்டு இருந்த அவனது வலது கையை, எடுத்து தன் கைகளுக்குள் வைத்து தடவியவாறு அவனிடம் பேச்சுக் கொடுத்தார்

.


"....................." வெற்றுப் பார்வையையே பதிலாக தந்தான்.

"கவலை படாத கண்ணு!!, ரெண்டு மாசத்துல மறுபடியும் விளையாட ஆரம்பிச்சுடலாம்!!" பேரனின் உணர்வற்ற நிலைக்குஇனி டென்னிஸ் விளையாட முடியாது என்ற பயம்கவலை காரணமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டுஅவராகவே பேச ஆரம்பித்தார்.

"இங்க வேண்டாம் ராஜா!!.... உனக்கு சரியானதும்நாம பேசாம கிளம்பி அமெரிக்கா போயிரலாம்ஏற்கனவே நல்ல டென்னிஸ் கோச்சிங் கிளப் பத்தி விசாரிச்சிக்கிட்டு தான் இருக்கேன்..... அடிபட்டத நினைச்சி மனசு விட்றாத.... எல்லாமே சின்னசின்னஅடிதான்நீயே பார்த்தே இல்லஅஞ்சு நாளிலேயே டிஸ்சார்ஜ் பன்னிக்கலாம்ணு சொன்னாங்க.... இந்த மாதிரி நேரத்துல தான் தங்கம்நாம ரொம்ப தைரியமா இருக்கணும்தாத்தா இருக்கேன்........ எதுக்கும் கவலைப்படாதடேண்ணிஸ்ல இந்த உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்குநீ பெரிய ஆளா வருவரெண்டே மாசத்துல இங்கிருந்து கிளம்பலாம்அமெரிக்கா ........ உனக்கு வேண்டாம்னாநீ போன வருஷம் போனியே அந்த ஸ்பெயின் கோச்சுக்கிட்ட கூடப் போகலாம்தன் பேரனுக்கு தெம்பு சொல்வதாய் நினைத்துஅவருக்குஅவரே தெம்பு சொல்லிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.

தாத்தாவின் பேச்சு அவன் காதில் வெறும் சத்தமாக மட்டும்தான் ஒலித்ததுசொற்களாக அல்ல.

*************

"தாத்தாஎன்ன நம்ம குரூப் போட சேர்மன் ஆக்குங்க!!" மறுநாள் காலைஎப்பொழுதும் போல் தன் பேரன் தேவையில்லாததை சிந்திக்கக் கூடாது என்ற எண்ணத்தில்அவனிடம் நம்பிக்கையை விதைக்கும் விதமாக தன்னுடைய ஆரம்பகால தொழில் முயற்சிகளைசவால்களைஅவர் சொல்லிக் கொண்டிருக்கதிடீர் என்று கேட்டான் மணி.

சட்டென்று அமைதியாகி விட்டார்விபத்திற்குப் பிறகு முதல் முறையாகதன் சுயத்தை தேவையைத் தாண்டி அவன் பேசமுதலில் அவன் கேட்டதன் அர்த்தம் உணர்ந்தவர் அதிர்ச்சியானார்பின் சுதாரித்துக் கொண்டு

"இப்பவேநீதான் அது எல்லாத்துக்கும் அதிபதி .....டா!!...ராஜா!!" சிரித்தவாறேஅவனது முதுகை வாஞ்சையாக தடவினார்.

"இல்ல!! எனக்கு நம்ம குரூப்போட சேர்மன் ஆகணும்ஆக்க முடியுமாமுடியாத?" சிவகுருவுக்கு மேலான பதவியில் அமர்ந்தே ஆக வேண்டுமென்றுஅவனுக்குத் திடீரென்று ஒரு சிந்தனை தோன்றமீண்டும் கேட்டான் மணி.

"அதுக்கு என்ன ராஜாஎப்படி இருந்தாலும்ஒரு நாள்நீ நம்ம குரூப்போட சேர்மன் ஆகத்தான் வேணும்!! ஆனா அதுக்கு முன்னாலஏதாவது பிசினஸ் ஸ்கூல்ல ஜாயின் பண்ணி மாஸ்டர்ஸ் பண்ணு!! திரும்பி வந்த உடனே அந்த சேர்மன் சீட் உனக்குத்தான்!!" பேரனுக்கு தாத்தாவாக இருந்தாலும்அவன் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

"என் தாத்தாஇப்பவே என்ன சேர்மன் ஆக்கினாஎன்னால அதுக்கேத்த மாதிரி செயல்பட முடியாது என்று நினைக்கிறீங்களாஎனக்கு அதுக்கான அறிவுதிறமை இல்லன்னு நினைக்கிறீங்களாஇல்லைஎனக்கு அந்த தகுதி இல்லையா?" தனது விரக்தியைஅவன் வெளிப்படுத்தஅவன் சும்மா கேட்கவில்லைநிஜமாகவே கேட்கிறான் என்பதை உணர்ந்த தாத்தாசிறிது நேரம் தீவிரமாகச் சிந்தித்தார்.

"முதல்லஇந்த மாதிரி முட்டாள் தனமா நினைக்கிறது நிறுத்துமுதல் முறையாக தன் பேரனை கடிந்துகொண்ட தாத்தாகொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு

"நீ என்னோட புள்ளஎன்னோட வளர்ப்பு!! உனக்கு எல்லா தகுதியும்திறமையும் இருக்கு!!. ஆனா பிஸினஸ்ங்கிறதுவெறுமனே காசு சம்பாதிக்கிறதுக்கு இல்ல!!, நம்மள நம்பிநேரடியாகவும் மறைமுகமாகவும் குறைந்தபட்சம்ஒருலட்சம் பேராவது இருக்காங்க!!. அத்தனை பேரோட வாழ்க்கைக்கும் ஆதாரமாநம்ம பண்ணுற தொழில்கள் இருக்கு!!. இது எல்லாம்நான் ஏற்கனவே உனக்கு சொன்னது தான்!! இன்ஜினியரிங் வேண்டாம்டிராப் பண்ணிக்கநீ காலேஜ் சேரும் போதேநான் சொன்ன மாதிரி, USலையோ, UKலையோபோய்ஏதாவது பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்துரெண்டுமூணுடிப்ளமோ பண்ணிட்டு வா!! தொழில் பண்ணுவதற்கு உத்வேகம் இருக்கிறஅதே அளவுக்குஅது சார்ந்த புரிதலும் இருக்கணும்!! நான் சொல்றதை செய்நீ திரும்ப வந்ததும்நீ கேட்டதை நான் செய்கிறேன்!!" மணி என் கன்னத்தை தடவிவர்அவனைப்பார்த்து புன்னகைத்தார்மறுப்பையும்அவனை பெரிதாக காயப்படுத்தாதவாறு தெரிவித்தவர்அதே நேரம் அவனது ஆசையை அடைவதற்கானவழியையும் தெளிவாக காட்டினார்அதன்பின் எதுவும் பேசவில்லை மணி.

***************

மனி தன் தாத்தாவிடம் "என்ன நம்ம குரூப் போட சேர்மன் ஆக்குங்க!!" என்று கேட்டஅதே நாள்மாலைடெல்லியில்.

"என்னதான் ஆச்சு?" என்று கேட்டரஞ்சித்தை நிமிர்ந்து பார்த்தாள் மது.

கோயம்புத்தூரில் இருந்து திரும்பி வந்த மதுவை முதல் முறை கண்டதுமேஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டவன்அவளாகவே சொல்லட்டும் என்று பொறுமை காத்தான்அந்தப் பொறுமைசிறிது நேரத்திற்கு முன்அவள் கல்லூரிக்கு அருகில் உள்ள பிரபல மருத்துவமனையில்இரவு டூட்டி டாக்டராகசேர்ந்தது தெரிந்தும்பறந்து போனது அவனது பொறுமைபொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டான்அவன் கேட்டதுமே கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் மது.

"வேணாம்வேணாம், நீ எதுவும் சொல்ல வேண்டாம்!! இட்ஸ் ஓகே!! இட்ஸ் ஓகே!! டேக் யுவர் டைம்!!" பதறியவனைப் பார்த்ததும்கண்ணீரை துடைத்தவள்.

"செத்துட்டான்!!" மீண்டும் அழுதாள்.

"வாட்?" அதிர்ச்சியில்தன் காதில் விழுந்ததைநம்ப முடியாமல்திரும்ப கேட்டவனிடம்

"நான் கோயம்புத்தூர் போன அன்னைக்குநடந்த ஒரு ஆக்ஸிடெண்ட்லஅவன் செத்துட்டான்!!" அன்று அவனுக்கு உண்மையிலேயே நிகழ்ந்த விபத்தை அறியாமல்அழுகையின் ஊடேதனக்கு தானே சொல்லிக்கொண்டதைரஞ்சித்துக்கும் சொன்னவள்அவனிடம் "ஸாரி!!” என்று சொல்லிவிட்டுவிடுதியை நோக்கி நடந்தாள்அழுதவாறே.

அதிர்ந்து போய்அழுது கொண்டு செல்லும் மதுவையே பார்த்துக்கொண்டிருந்தான் ரஞ்சித்அவள் சொன்னதை கிரகித்துக் கொண்டவன்நம்புவதாவேண்டாமாஎன்று குழம்பிப் போனான்அவள் சொன்னதில் சந்தேகம் இருந்தாலும்அவள் சொன்ன விதத்தில் அது உண்மையாய் இருக்குமோஎன்று நினைக்கஅவளுக்கு கண்ணீரை வரவழைத்த அதே வலி அவனுக்குள்ளும்இரண்டாம் முறையாக.

அறைக்கு வந்தவள்வாய்விட்டு அழுதாள்அவன் கட்டிய தாலியை கோர்த்து மாட்டி இருந்த தங்கச் சங்கிலியைகழட்டி வீசிஎறிந்தவள்அடக்க மாட்டாமல் அழுதாள்ஆவேசம் கொண்டவளாக கண்ணீரை துடைத்துவிட்டுமுகம் கழுவிகிளம்பிதான் புதிதாக சேர்ந்திருக்கும் வேலைக்கு சென்றாள்அவளைப் பொறுத்தவரைஅவளுக்கு அம்மாவும் இல்லைஅவனும் இல்லைஇருவரும் இறந்து விட்டதாகவேதன் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டாள்.

*************

"தாத்தாஎனக்குப் பெரியப்பாவோட சமாதிக்கு போகனும்!!" காலையில்திடீரென்று என்னை சேர்மன் ஆக்குங்கள் என்று கேட்பதைப் போலவேமாலையும் தன் பேரன் சொல்ல,

"நானேஉன்ன கூட்டிட்டு போகணும் தான் இருந்தேன்போகலாம்!!" தன் பேரன் வாய் விட்டு காலையில் பேசியதில்கொஞ்சம் நிம்மதி அடைந்தவர்அவன் வெளியே செல்ல பிரியப்படுகிறேன் என்றதும்உண்மையில் கொஞ்சம் மகிழ்ந்து தான் போனார்.

"இல்லதாத்தா எனக்கு தனியா போகனும்!!" என்ற மணியைசில நொடி கேள்வியாக பார்த்தவர்பின் அதற்கும் சம்மதித்துஅனுப்பி வைத்தார்அனுப்பி வைக்கும் முன்டிரைவரை தனியாக அழைத்துஎப்பொழுதும் மணியின் மீது ஒரு கண்ணுடன் இருக்கும் படியும்வண்டி ஓட்டும் போது கூடுதல் கவனத்துடன் ஓட்டும்படிம்அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

**************

தன் பெரியப்பாவின் சமாதியை நோக்கி கொண்டு இருந்தவள்,

"அண்ணாபசிக்குது ஏதாவது வாங்கிட்டு வரீங்களா?" டிரைவரிடம் கேட்டான் மணிஅவரோ அவனை தனியாக விட்டுச் செல்ல தயங்க,

"ப்ளீஸ்!!" அவரின் தயக்கம் உணர்ந்துஅவன் கெஞ்சபெரும் செல்வந்த குடும்பத்தின் வாரிசுஅவர்களிடம் டிரைவராக வேலை பார்க்கும்தன்னிடம் பசிக்குது என்று கெஞ்சமிகவும் சங்கடமாக உணர்ந்தார்அந்த ஓட்டுநர்.

"இல்ல தம்பிதாத்தா உங்களைத் தனியாக விட்டு எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க !!" சங்கடத்திலும்தயக்கமாக சொன்னார்.

"இருங்கநான் தாத்தா கிட்ட பர்மிஷன் கேட்கிறேன்!!அவன் அலைபேசியை எடுக்க,

"வேண்டாம் தம்பி!! வேண்டாம்!! என்ன வேணும் சொல்லுங்க வாங்கிட்டு வரேன்!!"

"ஏதாவது சூடா வாங்கிட்டு வாங்க!!"

"சரி தம்பி!!" என்றவர்அங்கிருந்து கிளம்பினார்.

மீண்டும் மணிதன் பார்வையைதன் பெரியப்பாவின் சமாதியின் மேல் பதித்தான்ஏனோஅந்த சமாதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததன் பெரியப்பாவுக்கும்தனக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தோன்றியது அவனுக்குதன்னைப் போலவேஅவரும் ஒரு சபிக்கப்பட்ட ஜீவனாகவே தோன்றினார்பெரும் செல்வந்தனாகராஜாவைப் போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டியவர்எதுவுமே வேண்டாம் என்றுசாமியாராய் வாழ்ந்துஜீவசமாதியாகிப் போனார்இன்றுஊர் அவரை ஒரு சித்தர் என்று வணங்கினாலும்தான் வாழும்வரைஒரு பரதேசிகவே வாழ்ந்தவர்தன் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகப்போகிறதோஇதையறிந்து தான் அவர் பெயரை தனக்கும் வைத்தார்களோஎன்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதுஅந்த சிந்தனையை கலைக்கும் விதமாக அந்த சத்தம் கேட்டது.

"என்ன சாமிரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" தன் அளவை காட்டிலும்ஒரு சைஸ் அதிகம் இருந்த சட்டையும்பேண்டும்அனிந்த ஒருவர்இவன் அருகில் அமர்ந்தவாறு கேட்டார்.

வயது எப்படியும் அம்பதுக்கு மேல் இருக்கலாம்கண்டிப்பாக வீடு இல்லாமல் சுற்றித் திரியும் ஒருவர்சாமியாராகவோஅல்லது பிச்சைக்காராகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம்எண்ணை வைத்துவடித்து வாரப்பட்ட தலைவருடக்கணக்கில் மழிக்கப்படாதநெஞ்சின் பாதி வரை வளர்ந்திருக்கும் தாடி.

"என்ன சாமி சந்தோஷமா இருக்கீங்க போல", வைத்த கண் வாங்காமல் நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மணியைப் பார்த்துமீண்டும் கேட்டார்அவர்.

பதில் சொல்லாமல் சிரித்தான் அவன்அவரின் கோலம் கண்டு சிரித்தானாஅல்லது தன்நிலை உணர்ந்து சரிதானாஎன்பதை அவன் மட்டுமே அறிவான்.

"கண்ணாடி போடலைன்னாகண்ணே அவிஞ்சுரும் போலஎன்னா வெயிலு!! என்னா வெயிலு!!" என்றவாறு தனது சட்டைப் பையிலிருந்துஒரு கண்ணாடியை எடுத்து அணிந்தார் அவர்அரசாங்க மருத்துவமனையில் கண் சிகிச்சை பெற்றால் கொடுக்கபடும்முகத்தை மொத்தமாக மறைக்கும்கருப்பு கண்ணாடி.

"என்ன சாமி!! வரம் வாங்கிட்டு வந்திருக்கீங்க போல!!", அவன் அருகில் அமர்ந்தவாறுஅவனை விடுவதாய் இல்லை அவர்.

அவர் அமர்ந்ததும் எழுந்தவன்தனது சட்டைப் பையில் இருந்துசில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்துஅவரை நோக்கி நீட்டினான்வாங்கியவர் வாங்கிய பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டுஒரேஒரு இரண்டாயிரம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டுமீதியை அவனிடமே திருப்பித் தந்தார்

வேண்டாம் என்பதை போல வாங்க மறுத்த அவனிடம்


"இம்புட்டு காசு வேண்டாம் சாமி!! போலீஸ் பிடிச்சதிருட்டு பயனு சொல்லுவாங்க!!" அவர் சொல்லலேசாக சிரித்தான்அவர் கொடுத்த நோட்டுகளை எடுத்து மீண்டும் தனது சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.

"சாமி!! வலி கத்துக் கொடுக்கிறத போலவாழ்க்கையை வேற எதுவுமே கத்து கொடுக்காது!! வலிங்கிறதுவாழ்க்கையில ஒரு மனுசனுக்கு கிடைக்கிற பெரியவரம்!! உங்களுக்குஇந்த சின்ன வயசுலயே கிடைச்சிருக்கு!!காலை ஆட்டிக் கொண்டிருந்தவர்அதை நிறுத்திபின் சம்மணமிட்டு அமர்ந்தவர்மணியை ஊடுருவிப் பார்த்தார்.

"வலிங்கிறதுஇரண்டு பக்கமும் கூரான கத்தி மாதிரி!! பிடிய கைகொள்ளுறதுதான் இதுல வித்தையே!! பிடி எதிரியோட கையில இருந்தா வலி உனக்குஅதே பிடி உன் கையில இருந்தா?...................” கேள்வியுடன் நிறுத்தியவர்பின் அவனைப் பார்த்து சிரித்தார்.


                               


"அந்தப் பிடியை தேடிப் பிடி!!அப்புறம் நீ தான் ராஜா!!தன் தொடையில் தட்டியவர்பின் தாடியைத் தடவினார்.

"ஆத்திரக்காரன் கையில இருக்கிற ஆயுதம்எப்பவவுமே அவனுக்கு வலியைத்தான் கொடுக்கும்!! இதேகோபக்காரன் கையில இருக்குற ஆயுதம்எதிரியின் குலத்தையே அழிக்கும்!!” தாடிக்குள் விரல் விட்டுசிக்கெடுத்தார்.

"உன்னோட பிடில இருந்தாஅதுக்கு பேர் கோபம்!! அதோட பிடிப்புள்ளநீ இருந்தாஅதுக்கு பேரு ஆத்திரம்!! அறிவுள்ளவன் அத்திரப்படமாட்டான்அவனுக்கு கோபம் தான் வரும்!!என்றவர் சுற்றிலும் துடைத்து விட்டு அப்படியே மல்லாந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார்.

முதலில் அவரை உதாசீனப்படுத்திஅங்கிருந்து செல்லத்தான் எழுந்தான் மணிஅவர் பேசப்பேசஏதோ அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல்நின்ற இடத்திலேயே நின்று விட்டான்அவர் படுத்த பின்பும்ஏதாவது பேசுவாரா என்று எதிர்பார்த்து காத்து நின்றவன்இனி அவர் பேச போவதில்லை என்று உணர்ந்துஅங்கிருந்து அப்படியே மெதுவாக ரோட்டை நோக்கி நடந்தான்.

இன்று காலை தாத்தாவின் மறுப்புஎனோ அவனுக்கு பெரிதாக வலித்ததுஆக்சிடென்ட்ஆனதிலிருந்து அவன் மீது எல்லாரும் அனுதாபம் காட்டஎங்கிருந்தோ வந்த ஒரு பிச்சைக்காரனோசாமியாரோஅதை வரம் என்று சொல்லஅது அவனுள் ஏதோ ஒன்றை விதைத்ததுஅதுவரை குற்ற உணர்ச்சியிலும்கழிவிரக்கத்திலும் உழண்டு கொண்டிருந்தவனின் எண்ணம்ஏதோ ஒன்றை தீவிரமாக ஆராய்ந்தது.

******************

வீட்டுக்கு வந்த மண்ணின் முகம் கொஞ்சம் தெளிவாய் இருக்கபெரியவர்கள் மூவரும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டனர்ஆனால்அது அன்று இரவு வரை மட்டுமே நீடித்ததுஇரவு அனைவரும் சாப்பிட்டு முடித்தபின்அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அதுவரை அமைதியாக இருந்த மணி,

"தாத்தா நான் கோயம்புத்தூர் போறேன்தன் விரித்து வைத்த உள்ளங்கையை பார்த்தபடி
சொன்னான்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்அவர் அமைதியாக இருக்கநிமிர்ந்து அவரை பார்த்தவன்

"என்ன நான் பாத்துக்குறேன் தாத்தா!! நீங்க பயப்படாதீங்க!!சொன்னவன் பார்வையிலும் வார்த்தையிலும் இருந்துஅவர் தெரிந்துகொண்டதுஒன்றே ஒன்றுதான்அவன் அனுமதி கேட்கவில்லைசெய்தி சொல்கிறான் என்பது தான் அது.

"காட்டுக்கு ராஜானாலும்...... 
சிங்கம்!! காட்டுல தான் இருக்கணும்!! 
சிங்கமாவே இருந்தாலும்,...... 
சர்க்கஸ்னு வந்துட்டா!!
சலாம் போட்டுத் தான் ஆகணும்!!
இல்லனா......... சாட்டையில தான்வாங்கணும்!!”

தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்கபடுத்திருந்த அந்த பிச்சைக்கார சாமியார்பெருங்குரல் எடுத்துராகமிட்டு பாடியதுஅங்கிருந்து கிளம்பியது முதல்இப்பொழுது வரைஅவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்ததுஉயிருள்ளவரை ஒலித்துக் கொண்டிருக்கும்.

*********************

நான்கு வருடம் கழித்துமும்பையில்தாஜ் ஹோட்டல்.

"சத்தியமாஎன்னால நம்ப முடியல!! இவ்வளவு சீக்கிரம் டேக்ஓவர் பண்ணுவோம்னு!!" அருகில் இருந்த மணியிடம்தனது மகிழ்ச்சியைஅதற்குமேலும் மறைக்க முடியாதவராய் வாய்விட்டே கூறிவிட்டார்மீர் அலி(If you want to pursue a carrier in solar, Call me, என்று அறு வருடத்துக்கு முன் மணியிடம் கார்டு கொடுத்தவருக்குஅவரது கனவை மெய்ப்பிக்கும் carrier , அவன் மூலமே அமைத்து கொடுத்து விதி).

அவரின் மகிழ்ச்சிக்குசிறு புன்சிரிப்பை பதிலாக அளித்தவன்.

ஏதோ உங்களுக்கு இதுல சம்பந்தமே இல்லாத மாதிரி சொல்றீங்க?” புரிவத்தை உயர்த்தி கேட்டான்மணிஅவரும் சிரித்தார்.

“Still, really it feels too good to be true!!” சிரித்தார்.

"Proper loading will result in a good serve!! டென்னிஸ்ல சர்வ பண்ணும் போதுபந்து அடிக்கிறதுக்கு முன்னாடி லோடிங் ஒன்னு இருக்கு!! The Stance, The Grip, The back swing and The hitting part. சும்மா ராக்கெட் வச்சு படிச்ச மட்டும் போதாது!! மொத்த உடம்பும் வேலை செய்யணும்!! முதல் மூணு விஷயத்த சரியா பண்ணினா!! தி ஹிட்டிங் இஸ் ஆல் அபௌட் ஃபாலோ த்ரூ!!" அவன் கண்ணில் ஒரு சின்ன புன்னகைஅந்த புன்னகை இவரிடம் பேசும் போது மட்டுமே காணக் கிடைக்கும்எந்த பங்கும் இல்லாவிட்டாலும்அவனது பசுமையான நாட்களின்மிச்சம் இருக்கும் ஒரே நபர் அவர்என்பதால் கூட இருக்கலாம்.

ஏற்கனவே கடந்த பத்து வருடங்களாக லாபம் பெரியதாக இல்லாவிட்டாலும்தொடர்ந்து விரிவாக்கம் செஞ்சுசந்தையை பிடிச்சாச்சு!! திட்டமிட்டுஇரண்டு வருஷமாசைனீஸ் லைசென்ஸ்ட் ப்ராடக்ட் வச்சுஅவனோட புரோபிட் மார்ஜின மொத்தமா காலி பண்ணியாச்சு!! அரசாங்க அவனுக்கு வேற வழியும் கிடையாது கம்பெனி கொடுத்தே ஆகணும்!! நம்மள விட்டா வேற யாரும் இல்ல!! இப்ப பண்ணது மணி சொன்ன மாதிரிஃபைனல் ஷாட்தான்ஜஸ்ட் ஃபார்மாலிட்டீஸ்!!" என்று நினைத்தார்மீர் அலி.

அவனது பேபர் பிரசெண்டேஷன் ஆகட்டும் அல்லது அவரை அழைத்து "எங்க கம்பெனியில ஜாயின் பண்ணிட்டீங்களா" என்று கேட்டதாகட்டும் அல்லது ஒரு பெரும் ஆபத்திலிருந்து தப்பி வந்தவன்கல்லூரி இறுதியாண்டு படிக்கும் பொழுதேஅவரின் கீழ் இருந்த அவனின் சொந்த நிறுவனத்தில்இரவெல்லாம் வேலை பார்த்ததாகட்டும் அல்லது அடுத்த இரண்டு வருடங்களிலேயேஇக்கட்டான சூழலில்அவனது குழுமத்தின் தலைமையை ஏற்றுஅதை இன்று வரை வெற்றிகரமாகமுன்னைக் காட்டிலும் கூடுதல் முனைப்புடன் வெற்றிகரமாக நடத்தி வருவதாகட்டும் அல்லது அவர்களது குழுமத்தின்அடுத்த உயரத்திற்கு எடுத்து செல்லும் ஒரு பெரும் நகர்வைவெற்றிகரமாக நடத்திவிட்டுஅதற்குப் பின்னாலான சிந்தனையைசற்று முன் சொன்னேனேசம்பந்தமே இல்லாத டென்னிஸ்ஸைக் கொண்டுமுத சந்திப்பில் இருந்தேதொடர்ந்து அவரையே ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய வந்துள்ளான்மணிஅவனது வளர்ச்சியில் தனக்குஒரு சிறிய பங்கு இருக்கிறது என்று நினைத்தவர்பெருமை பொங்க பார்த்தார்அவனை.

அவர்களது இரண்டாவது சந்திப்பின் போது “யு ஆர் ரியல்லி எ பிஸினஸ்மேன்ஸ் ட்ரூ ஹியர்!, ஸ்ட்ரைட் டூ த பிஸினஸ்!!” என்று அவனைப் பார்த்து சொன்னது நினைவுக்கு வந்ததுஅவனின் நேரடி கேள்வியில் ஆச்சரியம் அடைந்து சொன்னவார்த்தைஇவ்வளவு தூரம் உண்மையாகும்அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில் என்பதை அவரால் நம்பமுடியவில்லைஅதே நேரத்தில்அந்த சந்திப்பில் அவனது முகத்திலிருந்த சந்தோஷமும்அவருக்கு நன்றாக நினைவில் இருந்ததுஅன்று அவர் பார்த்த இளைஞன் ஆறு வருடத்தில்புரிந்துகொள்ள முடியாத மர்மென மாறுவான் என்று யாராவது சொல்லி இருப்பார்கள் என்றால்அப்படிச் சொல்லி அவர்களை நகைத்திருப்பார்தனக்கு உண்டான பொறுப்புடன்அவன் செயல் பட்டாலும்அவன் வாழ்க்கையைவாழவில்லை என்பது அவரது எண்ணம்இதை சில முறை அவனிடம் சொல்ல வேண்டும் என்று கூட நினைத்திருக்கிறார்ஆனால்அவரது எல்லை என்ன என்பது அவருக்குத் தெரியும்சற்று முன் பெருமையாக பார்த்தாள் அவனைகொஞ்சம் கருணையுடன் பார்த்தார் அவர்யாராலும்கலைக்க முடியாது அல்லது கலைக்க துணியாதகை தொடும் தூரத்திலும் இருந்தும்மனதால் தீண்ட முடியாத வெளியில்தனிமையில் இருந்தான் அவன்.
அவர்களது உரையாடலுக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம்.

**************

அன்று மாலைஅதே தாஜ்ஹோட்டல்.

"உங்கள் பாராட்டுக்கு நன்றி!!, நீங்கள் சொன்னதைப்போலஇந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தி துறையின் முன்னோடியாக நான் இருந்தாலும்எல்லாவற்றுக்கும் காலம் என்ற ஒன்று உண்டு!!. I think my time is up, its as simple as that!! அதுவும் போகஎன்னோட நிறுவனத்தை இழுத்து மூடவில்லைஇன்னைக்கு தேதியில்சூரிய மின்சக்திக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும்இந்தியாவின்மிகப் பெரிய நிறுவனமானஃபியூச்சர் பவரிடம்விற்கதான் செய்கிறோம்!! விற்கிறோம் என்பதை காட்டிலும்எங்களை விட பலம் வாய்ந்த கம்பெனிக்குமேலும் பலம் சேர்ப்பதாகவேஇந்த பரிவர்த்தனையைநான் பார்க்கிறேன்!! புதிதாகச் சேர்த்துக்கொண்ட பலத்துடன்நாட்டின் முன்னேற்றத்திற்குதேவைக்குபியூச்சர் பவர் முன்னை விடமுனைப்புடன் செயல்படும் என்று நம்புகிறேன்!! அதற்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்!!"

"துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த நீங்கள்உங்களுக்கு கொடுக்கப்பட்ட தொடர் நெருக்கடியின் காரணமாகத் தான் உங்கள் நிறுவனத்தைபோட்டி நிறுவனத்திற்கு விற்கிறீர்களா?” அந்த செய்தியாளர் சந்திப்பின்கடைசி கேள்வியாக கேட்கப்பட்ட கேள்விக்குத்தான்கனவுகளுடன்தான் கட்டியெழுப்பிய நிறுவனத்தைதனக்குப் போட்டியாக இருந்த நிறுவனத்திடமே விற்கும் நிலையிலும்வியாபார வட்டங்களில் கிசுகிசுக்கப்பட்டது போலதனக்கும்தன் நிறுவனத்தை வாங்கும் நிறுவனத்திற்கும்எந்த எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்பதையும்தான் ஒரு தேர்ந்தபக்குவப்பட்ட தொழிலதிபர் என்பதையும்நிரூபிக்கும் விதமாக பதில் அளித்தார்அவினாஷ் தாக்கர்இந்தியாவின் மரபுசாரா மின் உற்பத்தி துறையின் முன்னோடி.

"One last thing!! முன்புதாக்கர் கிரீன் பவர் லிமிடெட்-க்கு மட்டுமே வழிகாட்டியாக இருந்த திருஅவினாஷ் தாக்கர் அவர்கள்இன்றிலிருந்துஇந்தியாவின்மிகப்பெரிய மரபுசாரா மின் உற்பத்தி மற்றும் தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனியானஃப்யூச்சர் பவரு-க்கு வழிகாட்டியாக எப்போதும் இருப்பார் என்பதை இங்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்!! ஃப்யூச்சர் குரூப்ஸ்இதை ஒரு வியாபார பரிவர்த்தனையாக பார்க்காமல்நாட்டின் முன்னேற்றத்திலும்வளர்ச்சியிலும் எங்களுக்கு வலு சேர்க்கும் ஒரு இணைப்பாகவே பார்க்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! நன்றி!! Welcome to the futures group!!" என்று சொல்லிஎழுந்தவாறுசிரித்தபடிஅவினாஷ் தக்காரக்கு கைகொடுத்தார்மீர் அலிஃப்யூச்சர் பவரின் இயக்குனர்வியாபார பரிவர்த்தனை நல்ல படியாக நடந்துவிட்டாதின சந்தோஷத்தில்தாக்கர்மீர் அலியை விட பெரிதாக சிரித்தபடிகையை குலுக்கினார்செய்தியாளர் சந்திப்பில் பலத்த கரகோஷம் கேட்க துவங்கிய வேளையில் தான்அந்த செய்தியாளர் சந்திப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சி அணைத்தான்மணி.


                               


இந்தியாவின் மரபுசாரா உற்பத்தியில்இரண்டாம் பெரிய கம்பெனியான கிரீன் பவர் லிமிடெட்-டைஃப்யூச்சர் பவர்ஸ் கைப்பற்றம்ஒப்பந்தம் கையெழுத்தாகிஅதை முறையானஅதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு நடந்ததுதான்அந்த செய்தியாளர் சந்திப்புதாஜ் ஹோட்டலில் ஒரு பிசினஸ் ஹாலில்அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறஅதே ஓட்டலில் இருந்தஒரு சூட் அறையில் அமர்ந்தது அதைப் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான்மணி.

கடந்த சில வாரங்களாகவியாபார வட்டத்தில்சூடாக கிசுகிசுக்கப்பட்ட செய்தியைஉறுதி செய்யத்தான் அந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டதுஇது போன்ற செய்திகள் வழக்கமானதுதான் என்றாலும்ஃபியூச்சர் குரூப்ஸ் குழுமத்தின்இது போலான நடவடிக்கைகள்எப்போதுமே கொஞ்சம் அதிகம் கவனம் ஈர்க்கும்கடந்த இரண்டு வருடங்களாகவேகொஞ்சம் அதீத ஆக்ரோஷத்துடன்அந்தக் குழுமம் செயல்பட்டது ஒரு காரணம் என்றால்அதைத் தலைமை தாங்குபவன்இருபத்தி நான்கே வயதான மணிகண்டன் என்பதுமற்றொரு காரணம்.

*************

"சார் பிரஸ்மீட் முடிஞ்சது!!" கதவை தட்டிக்கொண்டுஉள்ளே வந்த சங்கரபாணி (மணியின் secretary) சொல்லஆட்டினானாஇல்லையாஎன்பதே தெரியாத அளவுக்கு தலையைாட்டிஅவருக்கு பதில் அளித்த மணி,

"ஈவினிங்பாட்டிக்கு வரணும்னுநான் சொன்னதாகதக்கார் கிட்ட சொல்லிருங்க!!" "வரணும்" என்பதில் அழுத்தம் கொடுத்தவன்அது அழைப்பு அல்ல என்பதை அவருக்குத் தெளிவாக்கிவிட்டுஉள் அறையில் நுழைந்தான்.

***************

ஒரு மணி நேரம் கழித்துபார்ட்டிக்கு தயாராகியவன்கண்ணாடி முன் நின்று தன்னை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டான்எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்தவன் கடைசியாககண்ணாடியில் தெரிந்த தன் கண்களின் பார்வையை பொருத்தினான்அவனது கண் இமைகள்கருவிழியின் மேற்புறத்திலும்கீழ்ப்புறத்திலும், 10 சதவீதத்தை மறைத்திருக்கவெள்ளை விழிகளைகாட்டிலும் கருவிழியின் சதவீதம் அதிகமாக இருந்ததுஅவனது கூர்மையான பார்வைஅகோரப் பசியுடன்,உலகப் பெருவெள்ளம் அனைத்தையும்மொத்தமாகக் இட்டு நிரப்பினாலும்கொடுத்ததெல்லாம் பத்தவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும்ஒளிகூட தப்பிக்க முடியாதஆளி பெருஞ்சுழி போல்அவன் ஆன்மாவை கேட்டதுஅண்டவெளியின் நிரந்தரமானஇருளின் பொருள் இதுதான் என்பதைப் போல இருந்தனஅவனதுஇரு கண்கள்.

அந்த விபத்துக்கு பின்பழனியில் இருந்துகோயம்புத்தூர் கிளம்பும் முன்தான்பெரும் பசியுடன்மூர்க்கமாக இருந்த இந்த கண்களைமுதன்முதலாக பார்த்தான்அவன்அதுவரைஅவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மிருகத்தைவலியைஅவன் வாழ்வின் ஒளியைமொத்தமாக தின்றுபூசித்துபெரும்பசியுடன்அவனது ஆன்மாவை கேட்டது,அன்றுஇன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறது.

உயிரினங்களின் செயல்பாடுகள்மொத்தமும் பாட்டம்-அப்டாப் டவுன்,(Bottom-Up, Top-Down) என்ற உடல் பரிவர்த்தனைகள்மூலமே நிகழ்கின்றனபுலன் உறுப்புகளாலும்புலால் உறுப்புகளாலும்ஆனதுதான்அனைத்து உயிரினங்களின் உடல்புற நிகழ்வை உணர்ந்து கொண்டு புலன் உறுப்புகள்அதை மூளைக்குக் கடத்தும்மூளைஅதை பகுத்துப் பார்த்துபுலால் உறுப்புகளுக்குஎன்ன செய்ய வேண்டும் என்ற கட்டளையை இடும்கண்காதுமூக்குவாய்தோல் என்ற இந்த ஐந்து புலன் உறுப்புகளில்மிகவும் முக்கியமானது கண்வெப்பத்தால் உடலின் ஏதோ ஒரு பாகம் சூடு பட்டால்உடனே அதிலிருந்து விலகிஎதனால் சூடு பட்டது என்று பார்ப்போம்ஊடலில் ஏற்பட்ட வெப்ப தாக்கத்தால்ஆபத்து என உணர்ந்துமூளை உடல் பாகங்களை இயக்கியதுஒரு சின்னஉடனடி செயல்பாடு தான்அடுத்தடுத்த செயல்பாடுகளைஆபத்தின் முழுபரிணாமத்தை தெரிந்து கொள்ளமற்ற புலன் உறுப்புகளை காட்டிலும்மூளை அதிகமாக நம்புவது கண்களைத்தான்அதனால்தான் கண்கள் புலன் உறுப்புகளில் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது கூட.

உணர்வகளை கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்கண்கள் பொய் பேசாது என்பார்கள்உண்மைதான்கண்களில் வெளிப்படும் உணர்வுகளைஓரளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடிந்தாலும்காதல்காமம்பயம்கோபம் போன்ற அடிப்படை உணர்வுகளை கண்கள் வெளிப்படுத்துவதைகட்டுப்படுத்துவது இயலாத காரியம்சிலரது பார்வையே பயமுறுத்துவதாக இருக்கும்அப்படியான பார்வைகளைநாம் அனைவரும் வாழ்க்கையில் சந்தித்திருப்போம்பயம்அந்தப் பார்வையின் காரணமாக வருவது அன்றுஅந்தப் பார்வையில் உள்ள உணர்வைஎன்னவென்று புரிந்துகொள்ள முடியாததால் வருவதுதனக்கென்று இருப்பதை பாதுகாத்துக் கொள்ளவும்பகிர்ந்து கொள்ளவும்வெளிப் படுத்திக் கொள்ளவும் நம்மை தூண்டுவதுதான் உணர்வுகள்பாதுகாத்துக் கொள்ளவும்கொடுப்பதற்கும்தன்னிடம் இருப்பதை காட்டிக் கொள்வதற்கு என்று எதுவுமே இல்லை என்ற நிலையில் இருக்கும் மனிதன்உணர்வுகள் அற்றவனாகத்தான் இருப்பான்மணியைப் போலஉணர்வுகள் இல்லாதவன்உயிரற்றவனுக்கு ஒப்பாவான்அப்படிப்பட்டவனின் பார்வையில்உயிர் இருக்காதுஅவன் விழிகள் எதுவும் பேசாதுபேச்சற்றஊமை விழிகளின்வெறுமையைஎதைக் கொண்டும் நிரப்ப இயலாதுஅது பார்ப்பவர்களுக்குதிகிலை கொடுக்கும்அகோரப் பசியுடன்தான்எப்பொழுதும் இருக்கும்.

****************

தன்னை தின்னும்தன் விழிகளில் இருந்துதன்னை விடுவித்துக் கொண்டவன்அறையில் இருந்து வெளியேற,

"சார்!! எல்லாரும் வெயிட்டிங் !!" அவன் நுழைந்ததுமேஎழுந்து நின்ற சங்கரபாணிஅவன் கேட்காமலே சொன்னார்அருகிலேயேமணியின் தனி உதவியாளர்மோசஸ்மீண்டும்ஆட்டினானாஇல்லையாஎன்பதே தெரியாதது போலஒரு தலையசைப்புஅவனிடம்.

மிடுக்காககம்பீரமாகஅவன் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததும்சலசலப்பு குறைந்துஒரு நொடி மொத்த கூட்டமும் அவனைப் பார்த்துவிட்டுதன் இயல்புக்கு திரும்பியதுஅந்த அறையில் இருந்த அனைவரும் இயல்புக்குத் திரும்பியது போல் தோன்றினாலும்ஒவ்வொருவருகக்குள்ளும்அவனுடன் அளவளாவும் வாய்ப்பு கிடைக்குமாகிடைக்கா விட்டால்அப்படிஒரு வாய்ப்பைஎப்படி ஏற்படுத்தி கொள்ளலாம் என்ற சிந்தனையை நிறைந்திருந்ததுஒருவரைத் தவிரஅந்த ஒருவர்வேறு யாருமல்லஎந்த நெருக்கடியும் இல்லைதானாக மனமுவந்துதன் நிறுவனத்தை விற்பதாகமூச்சுவிடக்கூட முடியாத நெருக்கடிக்கு மேல் நெருக்கடி தவித்தவேறு வழியே இல்லை என்பதை உணர்ந்துசிரித்த முகத்துடன் அப்படி சொல்ல பணிக்கப்பட்ட திரு அவினாஷ் தாக்கர் தான்உள்ளேவந்தவன் நேரடியாக சென்றது அவரிடம் தான்இருவரும்கைகுலுக்கி கொள்ளமொத்தக் கூட்டமும் கைதட்டியது.

"Come, let's have a drink!!" மறுப்பதற்கு வாய்ப்பு கொடுக்காமல்அடுத்த நொடி மதுபானங்கள் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தமணிதனக்கெனஒரு மது கோப்பையை வாங்கிஅங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டுதாக்கரின் மீது பார்வையைப் பதித்தான்.

*****************

ஒன்றரை வருடத்திற்கு முன்,

இதே பார்ட்டி ஹாலில் நடந்த ஒரு பார்ட்டியில்,

தன் அருகில் இருந்தவரிடம்ஏதோ பேசியவாறேதன் கையில் இருந்த மது கோப்பையைஉருஞ்சிக் கொண்டிருந்த மணியைவைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்அவினாஷ் தாக்கர்இந்தியவின்மரபுசாரா மின் உற்பத்தியின்முன்னோடிதனிக்காட்டு ராஜாவாகஅந்தத் துறையில் கொடிகட்டி பறந்தவர்கடந்த சில வருடங்களாகசிவகுருவின் அயராத உழைப்பால்தனது வியாபார சந்தை குறைந்துவந்த வன்மத்தில் இருந்தவருக்குசிவகுருவின் மகன்அந்த நிறுவனத்தின் தலைவராகி விட்டான்அவனது மொத்த பிடியில் தான் அது இயங்குகிறது என்று தெரிந்ததும்மீண்டும் தனியாவர்த்தனம் செய்வதற்குஇதைவிட ஒரு நல்ல வாய்ப்பு தனக்கு கிடைக்காது என்று கணக்கு போட்டார்.

அவர் கணித்ததற்கு மாறாகமுன்னிலும் முனைப்பாக செயல்பட்டது ஃப்யூச்சர் பவர்நேரில்மணியை ஆழம் பார்க்கவேண்டிஇந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்.

"பச்சா!! ரொம்ப சின்ன பையனா இருக்கான்?" தன்அருகில் நின்றிருந்தவரிடம் கூறியவர்அவரைஅழைத்துக்கொண்டுமணியை நோக்கி சென்றார்.

"வாழ்த்துக்கள்!!, ரொம்ப மகிழ்ச்சியா இருக்குசின்ன வயசுலேயேமிகத் திறமையாக செயல்படுறேனு கேள்விப்பட்டேன்!! உன்ன மாதிரி ஆட்கள்தான் நம்ம இன்டஸ்ட்ரி வேணும்!! உன்ன பார்த்தசின்ன வயசுல என்ன பார்த்தது மாதிரியே இருக்கு!! எனக்கு அப்புறம்நம்ம துறையைமேலும்மேலும் வளர்ச்சி பாதைக்கு நீ எடுத்துட்டு போகணும்!! வெளிநாட்டு நிறுவனங்கள் எதையும் காலுன்ற விடக்கூடாது!!. அடுத்த அம்பது வருஷம் நீதான்!!" என்றார்வாயெல்லாம் பல்லாகஇதே அவினாஷ் தாக்கர்மணிஅவனது குழுமத்தின்தலைவராக பொறுப்பேற்றஆறு மாதம் கழித்துஅவனை ஆழம் பார்த்தார்.

"நன்றி!!" என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவன்மதுக் கோப்பையை உறிஞ்ச ஆரம்பித்தான்.

"அப்பா எப்படி இருக்கிறார்?" ஆழம் பார்த்தார்.

"நல்லா இருக்கார்!!" இரண்டு வார்த்தைகளில் முடித்தான்.

"என்ன வயசாகுது உனக்கு?" இன்னும் கொஞ்சம் இறங்கிப் பார்த்தார்.

"இன்னும் அஞ்சு மாசத்துல 23!!" லேசாக உதடு விரித்தான்அப்பொழுது அவனது செகரட்ரி சங்கரபாணி வந்துஅவனிடம் தொலைபேசியை நீட்ட,

"எக்ஸ்க்யூஸ் மீ!!" தாக்கரிடம்விடைபெற்றுஅங்கிருந்து நகர்ந்தான்.

"கொஞ்சம் அழுத்தகாரனாத்தான் இருப்பான் போலசிவகுரு பையனா சும்மாவா!!" தாக்கருடன் வந்தவர்மணியைசிவகுருவின் மீதுதனக்குள்ள அபிப்ரயாத்தால் எடை போடஅவரைப் பார்த்து சிரித்த தக்கார்.

"நின்னு பேசவே பயந்துக்கிட்டு ஒடுறான் பாருசொல்லிவச்சு அவனுக்கு ஃபோன் வந்த மாதிரி இங்க இருந்து எஸ்கேப் ஆயிட்டான்

!!" தான் துல்லியமாக கணித்ததை சொன்னார் தாக்கர்பின்,


ஒத்துக்குறேன்சிவகுரு பிசினஸ்ல ஒரு சிங்கம் தான்!! நீ சொல்ற மாதிரிஇவன் சிங்கக்குட்டிவே இருநதிட்டு போகட்டும்!!” என்று நக்கலாக உதடு சுழித்தவர்

"உனக்கு சிங்கத்தோட சர்வைவல் ஸ்டோரி சொல்லுறேன் கேளு!! சிங்கம்மற்றொரு சிங்கக் கூட்டத்தோட ராஜாங்கத்தை பிடிக்கும் போதுபழைய சிங்கத்தோடகுட்டிங்க எல்லாத்தையும்அடிச்சு சாப்பிட்டு விடுமாம்!!. அதே மாதிரிதான்இந்த சிங்ககுட்டியின் கதையும் ஆகப்போகுதுஇந்த சிங்கத்து கிட்ட!!" தனக்கு சரிநிகர் போட்டியாக இருந்தசிவகுருவின் மகனின் தலைமையில் செயல்படும்ஃப்யூச்சர் பவர் என்னும் ராஜ்யத்தைஎளிதாக கைப்பற்றி விடலாம் என்று மனக்கோட்டை கட்டிய அவினாஷ் தக்கார்.

அவினாஷ் தக்காரின் அந்த உரையாடல் அடுத்த இரண்டும் மணி நேரத்தில்சில காதுகளுக்கு தாவிமணியின் காதை வந்தடைந்ததுசிரித்துக்கொண்டான்ஆனால்அவன் கோபம் வேறு விதமாக வெளிப்பட்டது அடுத்த நாள்கோயம்புத்தூரில்அதற்குகொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்களிடம்.

*****************கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக