ஒரு முக்கால் மணிநேரம் மலையேறியதன் பயனாக, அவள் சொன்ன வியூபாயின்ட்-ஐ அடைந்தோம்.
"சூப்பரா இருக்குல!!" என்று குதூகலித்த நேத்ராவை பார்த்து சிரித்துவிட்டு, அவள் சொன்ன பள்ளத்தாக்கில், என் பார்வையை படரவிட்டேன். அந்த பள்ளத்தாக்கு, நேத்ரா சொன்னதை போல "சூப்பரா தான்!!” இருந்தத
ு.
"என்னடா சண்டை!! ரொம்ப ஃபீல் பண்ற!!” நேத்ராவின் கேள்வி, என் ரசனையை கலைக்க
"அவ தான் சும்மா!! சும்மா!! கோவப்படுறா!! எத்தன டைம் சாரி கேட்டிருப்பேன் தெரியுமா?” இந்த டைம் அவளா வந்து சாரி கேக்காம, பேசவே மாட்டேன்!!” நேத்ரா கேட்ட ஒரு கேள்விக்கு, நான் என் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்க்க, அவள் சிரித்தாள்
"அவ சொன்னது கரெக்ட்டாதான்!! நீ இன்னும் சில்லியா தான் இருக்க!!” நேத்ரா சொல்ல அவளை முறைத்தேன்.
"என்ன முறைக்காத!! வந்ததிலிருந்து ஓவரா பண்ணிட்டு இருக்க!! கீழ போ!! இன்னிக்கு உன்னைய டின்னு கட்டப்போறா!!” என் முறைப்பை உதாசீனப் படுத்தியவள், சிரித்தவாரே கூறினாள்.
“கட்டுவா!! கட்டுவா!” என்று மனதில் எழுந்த எண்ணத்தை, அவள் கொஞ்ச நேரத்திற்கு முன் சொன்ன "சில்லி" என்ற வார்த்தை தடுத்துவிட
“அவளுக்கு என்னதான் ப்ராப்ளம்!!” சூடாக கேட்க
“நீதான்!!” என்றாள் சற்றும் தாமதிக்காமல். கண்களை மூடிக்கொண்டு, ஒரு பெரு மூச்சை இழுத்துவிட்டேன், பின் அருகில் இருந்த சிறுபாறையின் மீது அமர்ந்து கொண்டு, எதிரில் விரிந்துகிடந்த பள்ளத்தாக்கில், என் பார்வையை படரவிட்டேன். நான் ஸ்பெயின் செல்லுவதை தவிர்க்கும் விதமாக பேசியதுதான் அவள் கோபத்துக்கான காரணம் என்று எனக்கு புரியாமல் இல்லை, ஆனால், அவசியமாற்றது என்று எண்ணினேன். அதை விடவும், மது, நேத்ராவிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறாள் என்றாள், அவளை மனதில் வேறு ஏதோ உருத்திக் கொண்டிருக்கிறது என்று புரிந்தது.
“பானுக்கு, உன்னவிட நாலு வயசு ஜாஸ்தி தெரியும்ல!!” நேத்ரா கேட்க, சிறிது எரிச்சலுடன் அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகமோ, தீவிர சிந்தனையுடன், விரிந்துகிடந்த பள்ளத்தாக்கில் உலவிக்கொண்டு இருந்தது.
“அதுக்கு!!” தன்னால் வெளிப்பட்டது.
“அவ கல்யாணப் பேச்சு வரும், சீக்கிரம்!!” என்னை கண்களால் ஆராய்ந்தால்.
“அவதான் மாஸ்டர்ஸ் பண்ணப் போறாளே!!” அவள் பேசுவதின் அர்த்தம் புரியவில்லை.
"அவங்க அம்மா!! வேண்டாம்னு சொன்னா?" முறைத்தாள்.
"அதெல்லாம் ஒத்துக்குவாங்க!!"
"சரி, ஒரு பேச்சுக்கு வச்சுக்கலாம், ஒத்துக்கலனா?"
"நான், ஆண்டிகிட்ட பேசி ஒத்துக்க வைப்பேன்!!" நம்பிக்கையுடன் சொன்னேன். நான் சொன்னதில் எது அவளுக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை, மறுப்பாகத் தலையைசைத்தாள்.
"சரி, ரெண்டே வருஷத்துல PG முடிச்சிடுவா, முடிக்கிறதுக்கு முன்னாடியே, அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தா? என்ன பண்ணுவ?" இப்பொழுது ஏன், நான், இங்கு அழைத்து வரப்பட்டேன் என்பது புரிந்தது எனக்கு.
"அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு, அதுக்குள்ள கண்டிப்பா நான் ATP டோர்னமெண்ட்ல ஆட ஆரம்பிச்சுடுவேன்!!. குறைஞ்சபட்சம் டேவிஸ் கப், இந்தியன் டீம்ல கண்டிப்பா இருப்பேன்!!" என்மீது, டென்னிஸ் ஆட்டத்தின், மீது எனக்கு இருந்த நம்பிக்கையில் சொன்னேன்.
மீண்டும் நம்பமுடியாமல் தலையசைத்து அவள் சிரித்தாள்.
"நீ உன் பிரென்ட் மாதிரி ஒரு லூசு ஆயிட்டியா?" உண்மையிலேயே கடுப்பானேன்.
"ஆமா டா, லூசு தான்!!. நீ ஒரு லூசு!! அவ ஒரு லூசு!! உங்களுக்கு பஞ்சாயத்து பண்ணி வைக்கிறேன் பாத்தியா, நானும் லூசு தான்!!" என்று சிரித்து. என் தோளில் இரண்டு அடி போட்டாள்.
"சரி இப்போ சொல்லு மது என்ன சொன்னா?"
"சுரைக்காய் உப்பு இல்லன்னு சொன்னா!!" என்றவள், அந்த மலை மேட்டிலிருந்து, நாங்கள் தங்கியிருந்த வீட்டை நோக்கி, நடக்க ஆரம்பித்தாள்.
"எங்க கல்யாணத்துக்கும் வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு பயப்படுறாளா?" நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அருகே வந்ததும், நேத்துராவிடம் கேட்டேன்.
"ஸ்போர்ட்ஸ் விளையாடுற பசங்களுக்கு, மூளை நல்லா வேலைசெய்யும்னு கேள்விப்பட்டிருக்கேன்!! அது உனக்குமட்டும், ஏன், இவ்வளவு மெதுவா, வேலை செய்து?" நக்கலாக என்னைப்பார்த்து சிரித்தாள், நேத்ரா.
"அந்த லூசு கிட்ட போய் சொல்லு!!, லூசு மாதிரி எதையாவது யோசிச்சிக்கிட்டு, இப்படி என்ன டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா!!, நானே, ஒருநாள் எங்காவது ஓடிப் போகப்போறேன்!!" நேத்துராவின் நாக்கலிலும், சிறுப்பிலும், கடுப்பான நான், உண்மையான, கடுப்போடு சொல்ல
"ஓகே!! ஓகே!! இப்பவே போய், அவகிட்ட சொல்லுறேன்!!" முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு.
நேத்ரா அப்படி சொன்னதும்தான், நான், என்ன சொன்னேன், என்பது எனக்குப் புரிந்தது.
"நேத்ரா!! நேத்ரா!! ப்ளீஸ்!! தயவுசெய்து!! லூசுமாதிரி, அவகிட்ட போய் உளறி வைக்காதே!!" ஏற்கனவே இரண்டு நாள் பேசவில்லை, இதில், இவள்வேறு போட்டுக் கொடுத்தாள், என்ன செய்வது என்ற பதட்டத்தில், நேத்ராவிடம், கெஞ்சினேன்.
"நான் லூசா?" அவள் மிஞ்சினாள்.
நான் கண்களாலேயே கெஞ்ச, சிரித்தவள், சத்தமாக சிரித்தாள், சில நொடிகள் கழித்து. அவளின் பார்வை, என்னைத்தாண்டி, என் பின்னால் இருந்து. நேத்ராவின் சிரிப்பும், அவளது பார்வையின் அர்த்தம் புரிய, உள்ளுக்குள் கலவரமானேன். "மதுவா இருக்கக் கூடாது" என்று மனதில் வேண்டிக்கொண்டு, திரும்பிப் பார்த்தால், எனது வேண்டுதல் பலிக்கவில்லை. என்னை முறைத்துக் கொண்டிருந்தாள், மது. நேத்துராவிடம் தொடங்கிய கெஞ்சலை, மதுவிடம் தொடர்ந்தேன், கண்களால். முறைத்தவாறு என்னைத் தாண்டிச் சென்று, நேத்தராவை இழுத்துக் கொண்டு சென்றாள். சுத்தம், என்று நினைத்துக்கொண்டு, தலையில் கை வைத்து, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் படிகளில் அமர்ந்தேன்.
************
"என்னடா? இங்க உட்கார்ந்து இருக்க?" என்றபடி பிரதீப், என் அருகில் உட்கார்ந்தான்.
நான் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினேன்.
"உன் வண்டியில, ஒரு டிரைவ் போலாமா?" அவன் கேட்ட தோரணையில் இருந்தே தெரிந்தது, அவன் என்னிடம், ஏதோ பேச விரும்புகிறான் என்று.
இவனிடம் என்ன சொன்னாளோ? என்று நினைத்துக் கொண்டு, போகலாம் என்று தலையாட்டினேன். நாங்கள் காரை, நெருங்கும் போது "நானும் வர்றேன்" ஓடி வந்தான் அரவிந்த்.
அரை மணி நேரம் கழித்து,
"வீடியோகேம்ல ஓட்ற மாதிரி இருக்குடா, இந்த வண்டி!! செம்மையா ரெஸ்பாண்ட் பண்ணுது!!" ரேஞ்ச்ரோவரின் செயல்திறனை வியந்து கொண்டிருந்தான் அரவிந்த்.
கொடநாட்டில் இருந்து, குன்னூர் செல்லும் ரோட்டில், சீறிக்கொண்டிருந்தது நாங்கள் பயணம் செய்த அந்த வண்டி. பிரதீப், எவ்வளவோ, கெஞ்சியும் பிடிவாதமாக மறுத்து, எங்களுடன் ஏறிக்கொண்ட அரவிந்த்தான், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். டாஸ்மாக்கை பார்த்ததும் வண்டியை நிறுத்தியவன், இறங்கி, அதை நோக்கிச் சென்றான். பிரதீப்பும், நானும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அவன் எங்களுடன் வந்த நோக்கமே, சரக்குதான் என்பது, அப்பொழுதுதான் புரிந்தது. பிரதீப் என்ன நினைத்தானோ, இறங்கி அந்த டாஸ்மாக் கடையை நோக்கி நடந்தான். என் மொபைல் "டிங்" என்ற சத்தம் வந்தது. எடுத்துப் பார்த்தால் மது தான்.
"I love you!!" இன்று அனுப்பியிருந்தாள், குறுஞ்சிரிப்பு என் உதடுகளில்.
"வேண்டாம் நீயே வச்சுக்கோ!!" திருப்பி அனுப்பினேன்.
"I love you!!" மீண்டும் அனுப்பினாள், ஒரு கோப ஏமோஜி, பதிலாக அனுப்பினேன்
"I love you!!" மீண்டும் அனுப்பினாள். ஏனோ, எப்பொழுதும் போல “me too” என்று அனுப்ப தோணவில்லை
"I love you!!" அனுப்பி விட்டு, அவள் பதிலுக்காக காத்து இருந்தேன்.
நான் அனுப்பிய முதல் ஐ லவ் யூ. வீடியோ காலில் வந்தாள்.
"I love you!!" கால் எடுத்தவுடன் சொன்னாள்.
அருகில் யாராவது இருக்கிறார்களா என்ற எந்தக் கவலையும் இல்லை அவளிடம். அவள் முகத்தில் அவ்வளவு குறும்பு, சந்தோஷம்.
"Me too!!" என்றேன் சிரித்துக்கொண்டே.
"I love you!!" என்றால் மீண்டும்.
"நடுரோட்டில் இருக்கேன் பாப்பா!!"
"I love you!!"
"நான் வந்து சொல்றேன்!!"
"I love you!!" கால் கட்டானது.
திரும்ப அவளுக்கு அழைத்தேன், நாட் ரீச்சபிள் என்று வந்தது. ஏனோ, இன்று, ஐ லவ் யூ சொல்லும்பொழுது வழக்கத்தைவிட, மிகவும் அழகாக இருந்தாள். இன்னும் இரண்டு முறை அவள் சொல்லியிருந்தால், நானும் ஐ லவ் யூ சொல்லி இருப்பேனோ, என்னவோ. மீண்டும் அவளுக்கு அழைத்தேன், அழைப்பு கிடைக்கவில்லை.
"ஹேய்ய்ய்ய்......!!" என்னைப் பார்த்து, சரக்கை ஆட்டியவாறு, காரை நோக்கி வந்தான் அரவிந்த். பின்னால் வந்த பிரதீப்போ தலையில் அடித்துக் கொண்டான். பின் அங்கிருந்து கிளம்பினோம். வரும் வழியிலேயே, பெண்கள் அனைவரும் உறங்க சென்றதும், குடிக்கலாம் திட்டமிட்டனர், சரக்குவாங்கி வந்த அரவிந்தும், தலையில் அடித்துக்கொண்ட பிரதீப்பும்.
************
நான் வருவதற்காகவே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பாள் போல, மது, நான் காரிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கியதும், என் கையை பிடித்துக் கொண்டாள். என் காதருகே குனிந்தவள்
"ஐ லவ் யூ!!" என்றாள்.
"ஐ லவ் யூ!!" என்றாள்.
"Me too!!" அவள் காதுகளில் கிசுகிசுத்தேன். என் கையில் அடித்தாள்.
"இதெல்லாம் சுத்தமா நல்லா இல்ல!!" என்ற சத்தம் கேட்டு, இருவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தோம். அரவிந்த் முறைத்துக் கொண்டிருந்தான்.
"இப்படி சிங்கிள் பசங்க முன்னாடி, உறசிக்கிட்டு இருக்கீங்க!! சிங்கிள்ஸ் பாவம், உங்களை சும்மா விடாது!!" சாபம் விட்டான், அரவிந்த்.
அருகில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.
"ஐய்யே, போடா!!" என்று மது, படிகளில் அமர்ந்து, என்னையும் அருகில் அமர வைத்துக்கொண்டாள்.
"ஒரு பொண்ண, உஷார் பண்ண முடியல!! இதுல முரட்டு சிங்கள்னு ஸீனாப் போடுற?" அரவிந்தை, வாரினாள் நேத்ரா.
"நீயும் சிங்கிள் தானே?" என்ற அரவிந்த், தன் வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான், நேத்ராவிடம்.
கடுப்பான நேத்ரா, ஃபயர் கேம்க்கு, எரிக்க போட்டிருந்த கட்டையில் ஒன்றை கையில் எடுக்க, பிரதீப்பின் பின்னால் போய் ஒளிந்து கொண்ட அரவிந்த்
"நம்ம காலேஜ் சிங்கிள்ஸ் சங்க தலைவன்!!, முரட்டு சிங்கிளையும், மோசமான சிங்கிள்!!, என் தலைவன் பிரதீப்பைத்தாண்டி, என்ன தொடு பார்க்கலாம்!!" கொக்கரித்தான்.
"யாரு, பிரதீப் முரட்டு சிங்கிளா? என்னையவே, மதுக்கிட்ட தூது அனுப்பினா நல்லவன். அவன் முரட்டு சிங்கிளா?" நான் பிரதீப்பின் காலை வார, மொத்த கும்பலும் அதிர்ந்தது.
வெளிறிய முகத்துடன் என்னை அதிர்ச்சியாய் பார்த்த பிரதீப், அவன் சட்டையை பிடித்து இருந்த அரவிந்தை உதறித் தள்ளிவிட்டு, நாங்கள் தங்கியிருந்த வீட்டின் எதிரில் இருந்த மலையில் ஏறத் தொடங்கினான். அவன் முகம் வெளிறியதைக் கண்டதும்தான், நான் என்றுமே சொல்லியிருக்கக் கூடாததை, சொல்லிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். எழுந்து பிரதீப்பின் பின்னால் ஓடினேன், அவனோ என் சத்தம் கேட்டதும், நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான். ஒரே நாளில் இரண்டாவது முறையாக அந்த மலை முகட்டில் ஏறினேன்.
இருவரும் அமைதியாக அமர்ந்து இருந்தோம்.
"சாரி பிரதீப்!!" நான் தயங்கியபடியே கேட்டேன்.
"நான் நேத்துரவா லவ் பண்றேன்!!" பிரதீப், புது குண்டைத் தூக்கிப் போட்டான்.
என்னது என்பதைப்போல, அதிர்ச்சியில் அவனைப் பார்த்தேன்.
"அத சொல்லி, உன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னுதான், தனியா கூட்டிட்டுப்போன, இந்த தறுதலை அரவிந்து, கூடவே வந்து கெடுத்துட்டான்!! இப்ப, நீ, மொத்தமா எல்லாத்தையும் ஊத்தி மூடிட்ட!!" எங்கோ பார்த்த வெறிதான்.
சாதாரண நேரத்தில் நேத்தராவை, லவ் பண்றேன்னு, பிரதீப் சொல்லியிருந்தால், கண்டிப்பாக "உனக்கு வேற ஆளே கிடைக்கலையா ?" என்று கலாய்த்து இருப்பேன். ஆனால், இன்று என்னால், அவன்பட்ட அவமானத்தை சரிகட்ட வேண்டும் என்று மட்டும்தான் யோசித்தேன்
. பலிகொடுத்தேன், பிரதீப்பை.
"உனக்கு "சோக பால்னு" ஒரு ஐடியா சொல்றேன் கேக்குறியா?" என்னை விட நான்கு வயது மூத்தவனுக்கு, "லவ் குரு" ஆனேன்.
நான் வெறுத்த அனிஷூம், அவனது சோகபால் ஐடியாவும், எனக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலையில் உதவும் என்று எப்போதும் நினைத்ததிலை. அது வேலைக்காகும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், என் காதல் அனுபவத்தையும் கொண்டு, தற்சமயம் பிரதீப்பை சமாளிக்க, அவன் லவ்வுக்கு, ஒரு திட்டம் போட்டு கொடுத்தேன். என்னை லவ் குருவாக ஏற்றுக்கொண்ட, அவனும் பூம் பூம் மாடு போல் தலையசைத்தான். பின் வெற்றி நமதே என்று சமாதானாமாகி, இருவரும், அந்த மலையிலிருந்து கீழே இறங்கினோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டை நெருங்கும் போது
"இப்ப இருந்தே சோகமா இருக்கிறது மாதிரி, நடிக்க ஆரம்பி!!" பிரதீப்பின் காதலுக்கான முதல் விதை விதைத்தேன்.
பிரதீப்பும், நான் சொன்னது போல முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நெருப்பைச் சுற்றி இருந்த கூட்டத்தின் ஊடே, அமர்ந்து கொண்டான். நான் மதுவின் அருகே சென்று அமர, அவள் பட்டன, எழுந்தாள்.
"சிங்கிள்ஸ் சாபம் பலிச்சிருச்சு, பாத்தியா!!" நேரம், காலம் தெரியாமல், காமெடி பண்ணினான், அரவிந்த்.
அவனை முறைத்த மது, என் அருகிலேயே, என்னை ஒட்டி அமர்ந்துகொண்டு, என் மீது சாய்ந்து கொண்டாள்.
" பிரிந்த காதல, எப்படி ஒரே செகண்டில் சேர்த்து வச்சேன் பாத்தியா?" நல்ல பார்மில் இருந்தான் அரவிந்தன்.
அவனின் கூற்றில் மொத்த கும்பலும் சிரித்தது. பிரதீப்பின் காதல் தோல்வியை காரணம் காட்டியே, அரவிந்த் குடிப்பதற்கு அனைவரிடமும் ஒப்புதல் வாங்கி கொண்டான். பெண்கள் கூட்டம் சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்ல, நாங்கள், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் ஒன்றில் சென்று, குடிக்க ஆரம்பித்தோம். நான் கையில் குடித்க்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதோ பெரும் குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்ந்திருந்தது. பொதுவாக மது இப்படி அமைதியாக இருக்கமாட்டாளே? அதுவும் இன்று தான் நடந்து கொண்டதற்கு ஒரு நாலைந்து அடியாவது அடித்திருப்பாள். குறைந்தபட்சம் என்னிடம் கோபமாவது காட்டியிருப்பாள். ஆனால், இன்று மாலை முழுவதும், என்னை அவள் முறைக்கக்கூட இல்லை, நிமிர்ந்து பார்க்கவில்லை, என்பதுதான் உண்மை. அதுதான் என் மனதில் எழுந்த பயத்துக்கு காரணம். அரை மணி நேரம் கழித்து, திறந்திருந்த கதவு தட்டப்பட்டது. திரும்பிப் பார்த்தால், மது, என் கையில் இருந்த கிளாசை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அவன் குடிக்கல பானு, வெறும் கோக் தான்!!" என்றான் பிரதீப்.
"ஆமா!! பால் கிடைக்கல!! அதனாலதான், கோக் கொடுத்தோம்!!" என்றான் அரவிந்த்,
அனைவரும் அவனை முறைக்க, மது அமைதியாக இருந்தாள். மதுவின் அமைதி, என் மனதில் இருந்த கீலியை, மேலும் அதிகப்படுத்தியது. பொதுவாக என்னை, யாரும் மட்டம் தட்டிப் பேசினால், அவர்களை கிழித்து தொங்கவிட்டு விடுவாள்.
"வா!!" என்றாள், என்னை பார்த்து. எழுந்தேன்.
"உன், கார் சாவிய எடுத்துட்டு வா!!"
"பால் வாங்க போறியா பானு!!" அரை போதையில், அரவிந்த்.
"டேய்!! உண்ண சாவடிக்கப் போறேன்!!" பிரதீப், அரவிந்தின் முதுகில் இரண்டு அடி போட்டான்.
எதையும் கண்டு கொள்ளாமல், நான் மதுவின் பின்னால் சென்றேன். காரின் அருகில் சென்றதும், என்னிடம் கை நீட்டினாள். நீட்டிய கையில், காரின் சாவியை வைத்தேன். காரை எடுத்தவள், அந்த எஸ்டேட்டின் கரடுமுரடான சாலைகளில், வண்டியை ஓட்டினாள். என்ன? ஏது? என்று கேட்கும் தைரியம் இல்லாமல், எல்லாவற்றுக்கும் தயாராக இருந்தேன் நான். பதினைந்து நிமிடம் கழித்து, மூன்றாவது முறையாக, அந்த வ்யூ பாயிண்ட்டில் இருந்தோம், நானும் மதுவும். ஒரே நாளில், மூன்றாவது முறையாக, என்ன இந்த முறை, கொஞ்சம் சொகுசாக காரில். இறங்கி, பின் சீட்டில் போய் அமர்ந்து கொண்டாள். அவளை, நான், பின் தொடர்ந்தேன், அவளை நெருக்கி அமர்ந்து, தயங்கி தயங்கி, அவள் தோள் மீது கை போட்டேன்.
கோபப்படுவாள் என்று நான் நினைத்ததற்கு மாறாக, என் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"சாரி பாப்பா!!" நெடுநேர அமைதியை கலைத்தேன்.
அவள் மொபைலை நோண்டியவள், என்னிடம் நீட்டினாள், வாங்கிப் பார்த்த எனக்கு, என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாலையும், கழுத்துமாக, நானும் மதுவும். எனது பதினெட்டாவது பிறந்த அன்று, நானும், மதுவும், பழனிமலையில் எடுத்துக் கொண்டது. கணவன், மனைவி, போல் இருந்தோம். இந்த செல்பியை எடுத்தது எனக்கு ஞாபகத்தில் இருந்தது, ஆனால் இதை இப்போதுதான், முதல் முறையாக பார்க்கிறேன். கணவன், மனைவி போல, நானும், மதுவும், இருந்த அந்தப் படத்தை பார்க்கப் பார்க்க, எனது கண்கள் லேசாக கலங்கியது. திரும்பி, அவள் நெற்றியில் முத்தமிட்டேன். இரு கண்களில், நான் முத்தமிட, இமைகளை மூடிக் கொண்டாள். என் முத்த பயணத்தை, அவள் உதடுகளில் தொடர, திருப்பி என்னை முத்தமிட்டவாறே, என் மடியில் இருபக்கமும் கால்போட்டு, என் மீது அமர்ந்தாள். நீண்ட நெடிய முத்தம், உதடுகள் மட்டும் உரசிக் கொள்ள, எங்கள் நாவுகள் தீண்டவில்லை, எச்சில் இடம் மாறவில்லை, காமத்தையும், காதலையும் தாண்டி வேறு ஏதோ ஒன்றை, இருவரும் பரிமாறிக் கொண்டிருந்தோம். என் வலதுபுற தோளில், தன் தாடையை வைத்து, சிறு குழந்தையென படுத்திருந்தாள். எங்கள் உதடுகள் தான் பிரிந்து இருந்தன, ஆனால், அந்த முத்தத்தின், பரிமாற்றம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
"நான், உன்னை புருஷனை நினைச்சு!! அத, உன் கிட்ட சொல்ல முடியாமல் உருகி, தவிச்சுகிட்டு இருந்தப்பா!! நீ, எனக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டு இருந்திருக்க!! இல்ல!!" என்னை இறுக்கி அனைத்து கொண்டாள். அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு, நான் அழ ஆரம்பித்தேன். ஏனோ, எனக்கு சாரி கூட சொல்லத் தோன்றவில்லை, என் உயிர் எண்ணை பிரியும் வரை இந்த அழுகை நிற்கக் கூடாது என்றுதான் தோன்றியது.
"நான், உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறனா? பாப்பா!!" என்றாள், திடீரென்று.
என்னிடமிருந்து அவளை விலக்கி, அவள் முகம் பார்க்க, கீழ் உதடுகளை பற்களால் கடித்தவாறு, அழுகையை அடக்க முயன்று கொண்டிருந்தாள்.
"எதுக்கு பாப்பா!! இப்படி எல்லாம் பேசுற!!" என்ற என்னை, இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.
"அண்ணைக்கு பிரதீப் எங்கிட்ட ஹெல்ப் கேட்டப்ப எவ்வளவு பயந்தேன் தெரியுமா? அன்னைக்கு நைட் தான், நீ என் கிட்ட லவ் சொன்ன!! எப்படியும் உனக்கு கல்யாணம் பண்ணி வப்பாங்க!! அதுக்கு நான் ஹெல்ப் பண்ணா!! கடைசிவரஐ, உன் கூடவே இருக்கலாம்னு மட்டும்தான் யோசிச்சேன்!! அதனாலதான்....." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, என் உதடுகளில் கைவைத்து என்னை பேச வேண்டாம் என்றாள்.
பின் எழுந்து, முதலில் அமர்ந்து இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டாள். என்னை இழுத்து அவள் மடியில் போட்டாள். தயங்கியே, அவள் முகம் பார்த்தேன், கண்களில் கண்ணீருடன், ஒரு சின்ன புன்னகை அவள் முகமெங்கும்.
"என்ன இன்னொருத்தனுக்கு விட்டு கொடுத்திருவியா? ம்ம்?" அவள் கண்களில் இருந்த கண்ணீர், என் முகத்தில் விழுந்தது.
அவள் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டு, மாட்டேன் என்று சொல்லி வெடித்து அழுதேன். அவள் மடியில், என்னை இறுக்கிக் கொண்டு, என் தலை எங்கும் முத்தமிட்டாள்.
பின் சீட்டை, மொத்தமாக சரித்து, அதை படுக்கையாக்கி இருந்தோம். அவள் கழுத்துக் கதுப்பில் நான் முகம் புதைத்து இருக்க, என் தலைமுடிகளைம, மது விரலால் வாரிக்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்து, அவள் திரும்பிப் படுக்க, நானும் அவளது கையில் தலைவைத்து, அவளை நோக்கி திரும்பிப் படுத்தேன். என் மீது கால் போட்டு கொண்டவள்,
"நான் லூசா?" என் கண்ணத்தில் அடித்தாள்.
"இது எப்பவுமே லாஸ்ட்டா தானே வரும்? நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை?" பதில் தெரிந்தும் கேள்வி கேட்டேன் நான்.
ஆடைகளை, உடல்களை தாண்டிய பரிமாற்றத்தை, இருவரும் உடைக்க விரும்பவில்லை.
"நான் லூசா?" மீண்டும் என் கண்ணத்தில் அடித்தாள்.
கண்களையும் மூடிக்கொண்டு, புன்முறுவல் பூத்தேன்.
"நான் லூசா? மீண்டும் கேட்டவள், கன்னத்தில் அடித்தாள்.
நான் ஆம் என்பது போல் தலை அசைத்தேன்.
"கரெக்ட், உன் மேல!!" என் நெஞ்சில் ஒரு விரலை வைத்து குத்திவள், என் உதடுகளில், தன் உதடுகளை ஒற்றியெடுத்தாள்.
"உன்ன டார்ச்சர் பண்றேனா?"
"டப்" என்று என் கண்ணத்தில் அடித்தாள்.
"லவ் டார்ச்சர் பண்ற!!”
கண்களைத் திறந்து அவளைப் பார்த்துச் சொன்னேன். என் இரு கண்களிலும் முத்தம் இட்டாள்.
"எனக்கு மாப்பிள்ளை பார்ப்பியா?"
மீண்டும் கன்னத்தில் அடித்தாள்.
"பாத்தாச்சு!!, அவனும் பக்கத்துலதான் படுத்திருக்கான்!!"
நெற்றியல் முத்தமிட்டாள். பின் ஒரு கையால் என் இரு கன்னங்களையும் சேர்த்து பிடித்தவள்
"இது நான் பார்த்த மாப்பிள்ளை!!"என்றவள், என் உதடுகளில் முத்தமிட்டாள்.
அவள் உதடுகளை கவ்வி அவள் மீது படர்ந்தேன். உதடுகள் கடிபட, நாவுகள் தீண்டிக்கொள்ள, எச்சில் இடம் மாற, ஆவேசமாக முத்தமிட்டு கொண்டோம். முத்தத்தின் ஆவேசம் தீர, அவள் மார்பில் முகம் புதைத்து, அணைத்தவாறு இளைப்பாறிக் கொண்டு இருந்தேன்.
"ரெண்டு வருஷத்துல, டேவிஸ் கப் ஆடிருவியா?" என் முதுகைத் தடவிக் கொண்டே கேட்டாள்.
"ATP tournaments ஆடிருவேன், பார்!!" என் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.
"பாப்பா!!" கொஞ்சினாள், நான் அவள் கழுத்தில் முகம் புதைத்து, கட்டிக்கொண்டேன்.
"பாப்பா!!"
"ம்ம்!!"
"நீ, நான், நம்மளோட பாப்பா!! எல்லாருமே அதுக்கப்புறம் தான், ஓகேவா!!" என்றாள்
"இல்ல, நீ, நான், ஒரு மூணு பாப்பா!! ஓகேவா!!" என்றேன்
"மூணு போதுமா?" குனிந்து, என் தலையில் முத்தமிட்டாள்.
"எனக்கு போதும்!!" அவள் கழுத்தில் இதழ் பதித்தேன்.
"பாப்பா!!"
"ம்ம்!!"
"ஐ லவ் யூ!!"
"Me too!!"
"ஐ லவ் யூ!! பாப்பா!!"
பதில் சொன்னேன், அவள் கழுத்தில், என் எச்சிலால். என் தலையிலே நான்கு கொட்டு கொட்டியவள், என்னை இருக்கிக்கொண்டாள். இருவரும் கண்ணயர்ந்தோம்.
***********
பளீரென்று வெளிச்சம் கண்களைத் தீண்ட, எழுந்து அமர்ந்தான் மணி, நான்கு வருட தூக்கத்தில் இருந்து. என்னெதிரே, இருள் கவ்வியிருந்த பள்ளத்தாக்கை, விடியலின் வெளிச்சம் அணைத்துக்கொண்டது. சில நொடிகளில், மாயா அவன் கண்களில் பட்டாள். நான்கு வருடங்களில், இரண்டாவது முறையாக அவளை பார்த்து சிரித்தான் மணி.
காதுக்கு மொபைலை கொடுத்தவாறு வீட்டுக்குள் நுழைந்தவன், காதில் இருந்தா மொபைலை எடுத்துவிட்டு, அப்படியே நின்றான். அவன் கண்கள் மூடியிருந்தன, முகபாவனைகள் எப்பொழுதும் போல, எந்த உணர்வையும் காட்டவில்லை. தலையை பின்னால் சரித்தவன், சில நொடிகள் சிலைபோல் நின்றான். பின், சோர்வாக நடந்து வந்தவன், சோபாவில் பொத்தென்று விழுந்தான். மணி, வீட்டினுள் நுழைந்ததில் இருந்து, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், சுமா. கடந்த இரண்டு வருடமாக, இப்படித்தான், தன் மகனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சுமாவின் ஏக்க பார்வைக்கு, இன்றுவரை பதில் அளித்ததில்லை, அவன். தேவைபபட்டால் பேசுவான், சொற்களிலோ, பார்வையிலோ கணிவெண்பது சிறிதும் இருக்காது. எந்திரம் போல் வருவான், செல்வான்.
ஆனால் இன்று, அவனது நடத்தையால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உறுத்தியது சுமாவுக்கு. அவனின் அசைவுகளை கடந்த இரண்டு வருடங்களில் அவ்வளவு புரிந்து வைத்திருந்தாள், அவள். அதை பற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும், தேவைப்பட்டால் ஆறுதல் அளிக்க வேண்டும், அரவணைக்க வேண்டும் என்று உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாள். நெருங்கவே விடாதவன், உணர்வுகள் அற்ற, உயிரை உறைய செய்யும் பார்வையில், மன்னிப்பை கூட கேட்க விடாதவன், உணர்வுகளையா வெளிப்படுத்தி விட போகிறான் என்று, தன்னைத்தானே நொந்து கொண்டாள், சுமா. சிறிது நேரம் சென்ற பின்தான், யாரோ அருகில் இருப்பதை, உணர்ந்த மணி, நிமிர்ந்து பார்த்தான். சுமா, சோர்வடைந்த அவன் கண்களை பார்த்தாள், நொடியில் சுதாரித்து கொண்டவன், மொபைலை எடுத்து, அவன் செக்கரட்டரிக்கு அழைத்தான்.
"டாக்குமெண்ட் ரெடி ஆயிடுச்சா?"
"மதியத்துக்கு மேல வர்றேன்!!" பேசியவன், அழைப்பை தூண்டித்துவிட்டு, சோபாவில் இருந்து எழுந்தான்.
"அந்த கிரீன்பவர் டேக்-ஓவர் டாக்குமெண்ட், ரெடியாயிடுச்சுனா!! அதை எடுத்துக்கிட்டு!! தாத்தா, பழனிக்கு வரச்சொன்னார்!! பூஜை பண்றதுக்கு!!" அறைக்கு செல்ல எழுந்தவனிடம் சொன்னாள், சுமா.
ஏனோ அவனிடம் எதுவும் பேசாமல், அறைக்குச் செல்ல அனுமதிக்க அவளால் முடியவில்லை. இதுவரை, அவள் பார்த்திராத, மகனின் சோர்வான நடையும், கண்களும் அவளை உறுத்தியது.
"நாளைக்கு காலைல போலாமா?" அவளுக்கு பழக்கப்பட்ட, உணர்வுகளற்ற பார்வையும், சொற்களும். சரி என்று தலையாட்டினாள், அவன் அங்கிருந்து அகன்றான்.
*************
தனது அறையின் பாத்ரூம் கதவு இடுக்கில், மூன்று விரல்களை வைத்து, கதவை கைகளால் எழுத்து அடைக்க முயன்று கொண்டிருந்தான், மணி. மனவலிமை குறைந்து விட்டதோ? அல்லது உடலின் உணர்வு நரம்புகள் உயிர் பெற்று விட்டதோ? தெரியவில்லை, கதவை அடைத்து, தன்னை காயப் படுத்த முடியவில்லை. வாயில் இருந்த துண்டை பற்களில் கடித்துக்கொண்டு "ஆ" வென்று கத்தியவன், வாயில் இருந்த துண்டை எடுத்து முகத்தை மொத்தமாக மூடிக்கொண்டு, பெரிதாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, அவன் திரும்பிய வேகத்தில், முகத்தை மூடியிருந்த துண்டு, கீழே விழுந்தது. சட்டென கதவிடுக்கில் இருந்து, கையை எடுத்துக் கொண்டவன், துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் நுழைந்தான்.
அவன் அடைத்துவிட்டு சென்ற கதவையே, அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள், சுமா. ஹாலில் அமர்ந்திருந்தவளுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. சரி, வருவது வரட்டும் என்று துணிந்தவள், இரண்டு வருடங்களில், முதல்முறையாக தன் மகனின் அறைக் கதவைத் திறந்தவள், மகனின் இந்த செயலை எதிர் பார்த்திருக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக, அடிக்கடி மணியின் விரல்களில், காயம் எப்படி ஏற்பட்டது என்று உணர்ந்தவள், துடித்துப்போனாள். ஏற்கனவே, குற்ற உணர்ச்சியில் உழண்டு கொண்டிருந்தவளுக்கு, இரண்டு வருடங்களாக, தன் மகன், தன்னையே காயப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை, அவளால். கண்களில் இருந்து கண்ணீர், நிற்காமல் வழிந்தோடியது. இத்தனைநாள், அவன் மன்னிப்புக்காக காத்திருந்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தாள். இருந்தும், என்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு.
************
பாத்ரூம் கதவை அடைத்தவன், ஷவரை திறந்து அதனடியில் நின்றான். வீட்டிற்குள் நுழையும்முன் நேத்ராவிடம் பேசிய, உரையாடல், அவன் மனதில் ஓடியது.
காலை எஸ்டேட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து, மதுவும் அவனும், மாலையோடு இருக்கும் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கார், அவனது வீட்டின் சுற்றுச் சுவருக்குள் நுழையும் போதுதான், ஏதோ தோன்ற, காரில் இருந்து இறங்கும் பொழுது, நேத்துராவுக்கு அழைத்தான்,
"உங்கிட்ட பேசறது எனக்கு விருப்பமில்லை!!" எடுத்தவுடனேயே வெடித்தால் நேத்ரா.
"இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு!! அதுக்கப்புறம் சாத்தியமா, உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்.......... ப்ராமிஸ்!!" தாழ்ந்த குரலில் கெஞ்சினான், மணி.
"...…….........." எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள், நேத்ரா.
"அவ மாலையோடு இருக்கிற மாதிரி, ஒரே ஒரு போட்டோ மட்டும் அனுப்பி வை!! ப்ளீஸ்!!" மூன்று நாட்களுக்கு முன், தட்டையான, ஏற்றம், இறக்கமில்லாத குரலில் பேசியவன், இன்று தாழ்ந்து பேசியது, நேத்ராவை வெறுப்பேற்றியது.
"நார்த் இண்டியன் மேரேஜ்ல மாலை போடுவாங்களானு எனக்கு தெரியாது!! ஆனால என்ன? செஞ்சது தப்புன்னு, எப்படியும் ஒரு நாலஞ்சு நாள்ல, அவளுக்குப் புரியும்!! அப்படி, புரிஞ்சா அவ என்ன முடிவெடுப்பானு, உனக்கும் தெரியும்!! எனக்கும் தெரியும்!! அப்ப, ரெண்டு பேரும் சேர்ந்து போய், அவளுக்கு மாலை போட்டு, கண்குளிர பாத்துட்டு வரலாம்!! தயவு செய்து இனிமேல் எனக்கு போன் பண்ணாத!!" என்றவள், அழைப்பை துண்டித்து விட்டாள்.
மது, அப்படி முட்டாள்தனமாக எதுவும் செய்ய மாட்டாள் என்று, மூளை அவனுக்கு உணர்த்தினாலும், மனம் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. உடனே அவளைத் தேடிப் போவோம் என்ற மனதை தண்டிக்கவே, கதவிடுக்கில் விரல் வைத்தான். ஆனால், சுமா அப்படி, கதவைத் திறந்து கொண்டு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மது அப்படிச் செய்ய மாட்டாள், என்ற மூளையின் கட்டுக்குள், மனதை கொண்டு வந்தவன், குளித்து முடித்தான். அறைக்குள் நுழைந்தவன், தன் தாயை கொண்டு கொள்ளாமல், டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழைந்து, உடைகளை அணிந்து கொண்டான்
. மீண்டும், சங்கரபாணிக்கு அழைத்தான். உடனே அந்த கிரீன்பவர் டேக் ஓவர் டாக்குமெண்டை, எடுத்துக் கொண்டு வரும்படி, கட்டளையிட்டான்
"ஒன் ஹவர்ல டாக்குமெண்ட் வந்துரும்!! வந்ததும் பழனி கிளம்பலாம்!!" வழக்கம் போல தன் தாயை, அருகே நெருங்க விடாதவன் முன், அறையிலிருந்து வெளியேறினான்.
****************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக