http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 46

பக்கங்கள்

திங்கள், 22 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 46

 அன்று மாலை,


தன் பெரியப்பாவின் சமாதியை வெறித்துக் கொண்டிருந்தான், மணி. எனோ, அவன் மனதில் பரிதாபம், அது அவன் பெரியப்பாவின் மீதா? தன் மீதா? என்பதை, அவன் மட்டும்தான் அறிவான். ஏனோ, அவர் ஏன் செத்தார் என்று அவன் கேட்டதற்கு, இதுவரை, இதுவரை யாருமே சரியான பதிலை சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் அவர், தன்னைப் போலவே ஒரு வாழ்வு வாழ்ந்து இருப்பார் என்று தோன்றியது, அவனுக்கு. ஏனோ அதுவரை, அவனுக்கு சொல்லப்பட்ட, அவரின் மறு பிறப்பு, தான் என்பது உண்மை என்று தோன்றியது. சாமாதியாகும், அவருக்கு, மணி விட ஏழெட்டு வயது அதிகம் இருக்கலாம். மறுபிறப்பில், அந்த ஆயுள் கூட உனக்கு இல்லை என்று தன் பெரியப்பாவை சமாதியைப் பார்த்து நினைத்துக் கொண்டான். ஏனோ, அந்த சமாதியை கட்டிப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது.

"என்ன சாமி சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம், அவன் உணர்வுகளில் இருந்து வெளியே இழுத்து வந்தது. நிமிர்ந்து பார்த்தான், அதே பிச்சைக்காரசாமியார், இவனைப் பார்த்து, சினேகமாக சிரித்தார்.

 அவரைப் பார்த்து விரக்தியாக கூட சிரிக்க முடியவில்லை, மணியால்.


"உலகத்தையே ஜெயிச்ச வெற்றிகளை தெரியுதேமூஞ்சில!!" என்றார்சிரித்தவாறேஎதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்அங்கிருந்து செல்ல வேண்டும் என்று தோன்றியது அவனுக்குஆனாலும் இது எங்கள் இடம்நான் எதற்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி அவனை அங்கேயே அமர வைத்ததுஏனோஇந்த முறை அவருக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று மனதில் நிறுவிக் கொண்டான்.

"என்ன சாமி!! சந்தோசமா இருக்கிங்க போல!! சரிதானே!!" என்றவர், அவன் அருகில் வந்து நின்றார். காவி வேட்டி, கருப்பு சட்டை, சிகை அலங்காரத்தில், எந்த மாற்றமும் இல்லை. அவரை வெறுப்பாக பார்த்தான், வழக்கமான இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத சிரிப்பு, அவனது உதடுகளில்.

"சாமி!!, ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்களேன்?" கொடுத்து வைத்தவர், போல கேட்டார். இல்லை, என்று மறுப்பாக தலையசைத்தான். அவர் முகத்தில் இருந்த, சிரிப்பின் சசினேகம் கூடியது. அது மணியை உசுப்பேற்றியது, பெரும் தொழில் முதலைகளுடன் அதிகார போர் புரிந்தவன், இன்று, இவர்தான் தனக்கு, இரை என்று நினைத்தான்.

"பகல்ல ஒரே வேக்காடு!!, இப்ப காத்து சிலு சிலுனு அடிக்குது!! மழை வரும் போல!!" மணியிடம் இருந்து, இரண்டடி தள்ளி, அமர்ந்தவர், சட்டையை கழற்றினர்.

"வெள்ளை சட்டை மாதிரிதான், கருப்பு சட்டையும்!! அழுக்குப் பிடிச்ச பளிச்சுனு தெரியும்!!" அவன் கவனிக்கவில்லை என்று தெரிந்தும், தன் செயலுக்கான காரணத்தை சொன்னவர், சட்டையை கழட்டி, மடித்து வைத்தார். அவர் வெற்றுடம்பை பார்த்த மணி, முகம் சுளித்தான்.

"என்ன சாமி!! அருவருப்பா இருக்க?!!" முகத்தில், அதே சினேக, சிரிப்புடன் கேட்டவர், தன் உடலெங்கும் இருந்த, அம்மைக் கட்டிகளை பார்த்துக் கொண்டார். சிறிதும், பெரிதுமாக கட்டிகளும், கட்டிகள் இல்லா இடத்தில், எறும்பு கடித்தது போல் கருப்பு கருப்பாக, வீங்கி விகாரமாக இருந்தது, அவரது உடலில்.

"சாமி!! எனக்கு விவரம் தெரிஞ்சு, என் உடம்பு இப்படித்தான் இருக்கு!! உடம்ப, நாம, கேட்டா வாங்கிட்டு வர முடியும்?!!" என்றவர், விரக்தியாக சிரித்தார்.

"நான் சாமியார் எல்லாம் இல்லை!! இங்கேயும்!! இங்கேயும்!!.... உடம்புல இருக்குற விட பெருசா ரெண்டு கட்டி இருக்கு!! அதுக்குத்தான் தாடி!!" தன் கழுத்தின் இருபக்கமும் விரல் வைத்து காட்டியவர் முகத்தில் மீண்டும் அந்த சினேக சிரிப்பு.

"மன்னிச்சுடுங்க!!" ஏனோ வழக்கம்போல சாரி என்று ஆங்கிலத்தில் வருத்தப்படாமல், மன்னிப்பை வேண்டினான், மணி. சில நொடிக்களுக்கு முன் இரையாக பார்த்தவரிடம்.

"சாமி, நம்மள, நாமதான்!! மன்னிக்கணும்!!" அவர் கைகளை விரித்து உடம்பை முறுக்கினார்.

"சாமி!! நம்மள பாத்து நாமலே அசிங்கப்பட்ட!! இப்படி காத்து வாங்கி, ரசிக்க முடியுமா?" என்று சிரித்தவர்,

"சாமி!! ஒருத்தன் இருந்தான்!! இந்த உடம்ப பார்த்தாலே அவனுக்கு அருவருப்பு!! இந்த உடம்பை கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருப்பான்!! ஆனால், கூடவே இருப்பான், விலகவும் மாட்டான்!!" என்றவர், நிமிர்ந்து மணியைப் பார்த்தார். ஏனோ இப்பொழுது, அவர் உடம்பில் இருக்கும் கட்டிகள், அவனுக்கு விகாரமாக தெரியவில்லை.

"அது யாருன்னு கேளுங்க சாமி?!!" என்றவரைப் பார்த்து, லேசாக உதடுவிரித்து சிரித்தான்.

"நான்தான்!!" என்றவர், பெரிதாக சிரித்தார்.

தனது வேலட்டை திறந்து பார்த்தான். அதில் வெறும் 5,000 ரூபாய்களே இருந்தது. ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், ஆகிறது. இப்பொழுது இருக்கும் பணம் கூட, எப்பொழுது வைத்தான் என்பது நினைவில் இல்லை.

"இவ்வளவு தான் இருக்கு!!" அவரிடம் நீட்டினான். அதை வாங்கி, தலைக்கு மேல், இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டுவர், மடித்து வைத்த சட்டைப்பையில் அதை வைத்தார்.

"சாமி!! இந்த டிவில, பாட்டு போட்டி வைக்கிறாகல!! அதுல கலந்துக்கலாம்னு இருக்கேன்!! புதுசா ரெண்டு சட்ட துணியும், போட்டிக்கு மதுரையில் ஆள் எடுக்காங்கலாம்!! அங்க போகணும், அதுக்கு தான்!!" செலவுக்கான கணக்கு கொடுத்தார், அந்த பிச்சைக்கார சாமியார்.

"மன்னிச்சிடுங்க!!" எழுந்தவன், மீண்டும் அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

"சாமி, நம்மள நாமதான்!! மன்னிக்கணும்!!" என்றவர், சத்தமிட்டு சிரித்தார் வெள்ளந்தியாக.

வாயிலை நோக்கி நடந்த மணியின் மனதை, அவர் சொன்னதை காட்டிலும், அந்த பிச்சைக்கார சாமியாரின், அம்மை கட்டிகளும், அதைத் தாண்டிய சினேகமான சிரிப்புமே நிறைத்திருந்தது.

*************

ஆழிப் பெருஞ்சுழி போல், அகோரப் பசியுடன், அவனை உண்டு கொண்டு இருந்தது, அந்தப் பார்வை. கண்ணாடியின் முன்னால் இருந்த டேபிளில், கைகளை ஊன்றிக் கொண்டு, தனது பிம்பத்தின் கண்களில், பார்வையைப் பதித்து இருந்தான், மணி. இரண்டு வருடங்களில் முதல்முறையாக, அவன் கண்களின், பசி தீர்க்கும் இரை, தான்தான் என்பதை உணர்ந்தான்.

ஊத்துல பொங்கினாலும்!!
உப்பாக் கரிச்சா?!!
தேனா இணிச்சாலும்!!
குட்டையில தேங்கினா?!!
தண்ணிய!!,
அள்ளிக் குடிக்க முடியுமா?
அப்படி..
நீ குடிச்சாலும்!!
ஆறா தாகம்.. தீருமா?

அவன் ரோட்டை அடையும் போது, அந்தப் பிச்சைக்கார சாமியார், பாடிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, அவன் மனதில்.

ஆறாத் தாகம் தீர்க்க துணிந்தான்.

அந்த வீட்டிலிருந்த அனைவரது மனதும் இருக்கமாக இருந்தது. பெரியவர்களும் மூவருடன், சுமா, பழனி வீட்டின் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள். மணியை, அவன் பெரியப்பாவின் சமாதியில் தனித்து விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்ததும், தன் மனதில் இருந்த உறுத்தலை, பெரியவர்களிடம் கொட்டிவிட்டாள். மாலை, பொழுது அடைந்த பின்பே வீட்டுக்கு வந்த மணி, அறையில் தன்னை வைத்து அடைத்துக் கொண்டவன்தான், இன்னும் கதவை திறக்கவில்லை. சாப்பிடக் கூட வரவில்லை, மணியின் தாத்தாவும், அவனாக வரட்டும், அதுவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டதால், அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் பேசாமல், தத்தமது சிந்தனைகளில் மூழ்கி இருந்தனர்.


பெற்றது சுமாவா இருந்தாலும், வளர்த்தது பெரியவர்கள் மூவருமே. வீட்டிற்கு வந்ததுமே, அவனது முகபாவத்தில் இருந்து, சுமா சொன்னதை உணர்ந்திருந்தார்கள். ஒரு கம்பெனியின் நிர்வாகத்தை மொத்தமாக கைப்பற்றும் போது, 20 சதவீத பங்குகளை, பழைய உரிமையாளருக்கு, விற்கப்படும் விலையிலேயே, கொடுக்கப்பட வேண்டும், என்பது பங்குச்சந்தை விதி. விற்பவர், அப்படி வாங்க விருப்பம் இல்லாத பட்சத்தில் மட்டுமே, முழுவதுமாக வாங்க முடியும். அவினாஷ் தாக்கர், கடைசியாக இதற்குத்தான் கடுமையாக முயற்சி செய்தார், முடியாது போகவே, அரைமனதுடன் தான் மொத்தத்தையும் விற்க ஒப்புக்கொண்டார். அது சம்பந்தமாக ஏதாவது, நெருக்கடி இருக்குமோ? என்று மணியின் தாத்தாவின் மனது சிந்தித்துக் கொண்டிருந்தது. மணியின் சின்ன ஆச்சியின் மனது, பேரன் தன் வயதுக்கான வாழ்க்கை வாழாமல், இந்த வயதிலேயே அத்தனை பொறுப்புக்களையும் சுமந்து தெரிவதால்தான், வாய்விட்டு, சிரிக்கவும் மறந்துவிட்டான் என்று புலம்பிக் கொண்டிருந்தது. சுமாவோ, தனது கையாலாகாத தனத்தை நிணைத்து தனனேயே நொந்து கொண்டிருந்தாள்.

மணியின் பெரிய ஆச்சியின் நிலைதான், மற்ற மூவரை காட்டிலும் மோசமானதாக இருந்தது. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள், தலைமகனை, சிறுவயதிலேயே இறைவனுக்கு வாரிக்கொடுத்து, பேர், புகழோடு, வாழ்ந்த இரண்டாவது மகன், உடல் நலம் குன்றி, தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு துன்பப் படுகிறான் என்றால், தலைமகனே திரும்பிவந்து பிறந்து விட்டான் என்று தன் தலையில் வைத்துக் கொண்டாடிய பேரனின் வாழ்வை நினைத்து, என்ன வாழ்க்கை வாழ்ந்தோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். இப்படி, இவர்கள் நான்கு பேரும் ஹாலில் அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசாமல், நிம்மதி இழந்து தவித்து இருக்க, மணியோ கையிலிருந்த தூக்க மாத்திரைகளை உருட்டிக் கொண்டிருந்தான். வெறுமையின் கனம் தாங்காது, தூக்கம் வராத இரவுகளில், அவன் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள். மொத்தமாக விழுங்கிவிட்டு, தீராத இந்த மனச்சோர்வையும், உடல் சோர்வையும், மொத்தமாக தீர்த்துவிடலாமா? என்ற ஒரே கேள்விதான், அவன் மனதில். காலை தன் தாயிடம் இருந்து வெளிப்பட்ட அந்த பரிதாபப் பார்வை, பெரும் மனபரத்தை கொடுத்தது அவனுக்கு. கதவு தட்டப்பட, கையிலிருந்த மாத்திரைகளை மெத்தைக்கு அடியில் ஒளித்தவன், கதவை திறந்தான்.

"சாப்பிடலையா?? தங்கம்!!" மணியின் பெரியாச்சி, திறந்த கதவின் வெளியே நின்று இருந்தாள்.

"நீங்க சாப்பிடுங்க!! கொஞ்சம் நேரம் ஆகட்டும்!!" முகத்தில் உணர்வுகளை காட்டாதவன், வெருமையாகச் சொன்னான்.

"நாங்கள் எல்லாம் சாப்பிட்டோம் கண்ணு!!, மணி பத்தாவுது!!" கெஞ்சினாள்.

"பசி இல்ல!! கொஞ்சம் பால் மட்டும் குடுங்க!!" அவள் கெஞ்சலுக்காக இறங்கியவன், மெத்தையில் அமர்ந்து கொண்டான்.இரண்டு நிமிடம் கழித்து, கையில் தட்டு வந்தாள்,

"பால் அடுப்புல இருக்கு!! ஒரு ரெண்டு வாய் மட்டும் சாப்பிட்டு!!" அவனின் பதிலை எதிர்பாராமல், ஊட்டி விட ஆரம்பித்தாள்.

இதையே அவள் நேற்றிரவு செய்திருந்தால், மறுத்திருப்பான். இல்லை, இல்லை, இப்படி ஒரு சூழ்நிலையே ஏற்படாதவாறு, தவிர்த்திருப்பான். எதுவும் பேசாமல், அவள் ஊட்டியதை, சாப்பிட ஆரம்பித்தான். இரண்டு வாய் என்றவள், மொத்தத்தையும் ஊட்டி முடிக்கும்போது, அவனது சின்ன ஆச்சி, கையில் பாலுடன் வந்தாள். எதுவும் பேசாமல் அதை வாங்கி கொடு குடித்தவன், பாத்ரூம் சென்று வாய் கொப்பளித்து விட்டு வந்தவன், படுத்துக் கொண்டான். அவன் முகத்தையே பார்த்து இருந்த பெரியவர்கள், சிறிது நேரத்தில், அவன் அறையை விட்டு வெளியேறினார். அவனது மூளையின் சிந்தனை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவன், எதிரில் இருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் கழித்து, அவனது அறையின் கதவை திறந்துகொண்டு, மணியன் பெரிய ஆச்சி வந்தாள். மணியைப் பார்த்து சிரித்தவள், எதுவும் பேசாமல், அவனுக்கு அருகில் படுத்து, ஒருக்களித்துப் படுத்திருந்த அவள் முதுகை பார்த்தவாறு, அவன் கையை தடவ ஆரம்பித்தாள்.

"கண்டதை யோசிக்காத கண்ணு!!, கண்ண மூடிட்டு தூங்கு!!" என்றவள், அவன் தலை முடிகளை கோத ஆரம்பித்தாள்.

மணியின் சிறுவயது பழக்கம், தலைமுடியை கோத ஆரம்பித்த, இரண்டு நிமிடத்தில், தூங்கி விடுவான. அதுவரை வெறுமையாக இருந்த மணியின் மனதில், இந்த டெண்ணிஸ் மட்டும் ஆடாமல் இருந்திருந்தால், தாத்தா, அச்சிக்களின் பேரனாக, சந்தோஷமாக இருந்திருப்பேனோ? என்று கேள்வி ஏழ, தலையைத் தடவிக் கொண்டிருந்த கையை எடுத்து, தன் மார்போடு வைத்துக்கொண்டான். மணி, அப்படி செய்ததும், இன்னும் கொஞ்சம் நெருங்கிப் படுத்துக் கொண்டவள், சிறு குழந்தைக்கு தட்டிக் கொடுப்பதைப் போல, அவன் மார்பில் தட்டிக் கொடுத்தாள், கண்களை மூடினான். கண்களை மூடி இருந்தானே தவிர, இரவெல்லாம் விழித்தே இருந்தான். மனதில் ஒரே எண்ணம், தான் டென்னிஸ் விளையாடி இருக்க கூடாதோ? மதுவையும் வெறுக்க முடியாதவன், அவளை, தன் வாழ்வில் கொண்டுவந்த டென்னிஸை வெறுத்தான், முதல் முறையாக. கண் திறந்தவன், கடிக்காரத்தைப் பார்த்தான், காலை ஐந்து மணி என்று காட்டியது. எழுந்து, காலை கடன்களை முடித்துவிட்டு, வந்தவனின் கண்களில், தூங்கிக்கொண்டிருந்த அவனது பெரியாச்சி பட்டாள். அலுங்காமல், தூங்கும் அவளை, ஒரு பத்து வினாடி பார்த்துக்கொண்டிருந்தவன் உதடுகளில், லேசான புன்னகை. விலகியிருந்த போர்வையை எடுத்து, அவள் மார்புவரை போர்த்தியவன், அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

*************

ஒரு மணி நேரம் கழித்து,

தூரத்தில் தெரிந்த, பழனி முருகன் கோயிலை, பார்த்துக் கொண்டிருந்தான், மாடியில் அமைதியாக அமர்ந்தவாறு . கீழே வீட்டிலிருந்து வந்த கூக்குரல், அவன், எண்ணமற்ற எண்ணத்தைக் கலைத்தது. கீழே வந்தவன் காதுகளில், அந்த கூக்குரல், அழுகை சத்தமாக மாறியது, அதுவும் அவனது அறையில் இருந்து. ஒளித்து வைத்திருந்த, தூக்க மாத்திரையை பெரியாச்சி பார்த்து விட்டாளோ? என்ற எண்ணம் எழ, தனது முட்டாள்தனத்தை கடிந்து கொண்டவன், சரி சமாளித்துக் கொள்வோம், என்று நினைத்து, நிதானமாக அவனது அறையில் நுழைந்தான். உள்ளே நுழைந்தவன் கண்ட காட்சியில், அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டான். சுமாவும், சின்ன அச்சியும், அழுது கொண்டிருக்க, நிரந்தரமாய் தூங்கியவளுக்குத் தான் போர்வையைப் போர்த்திவிட்டு சென்றிருந்தான், மணி. மெதுவாக சென்றவன், அப்படியே அவளது கால் மாட்டில் அமர்ந்தான். மது அவனது வாழ்வில் இருந்து சென்றதில் இருந்து எங்கே? எங்கே? என்று அவன் தேடித் திரிந்த சாவு, அவன் எதிரில் நின்ற போது, எதுவும் செய்ய முடியாமல் உறைந்து போனான். மணியைப் பார்த்ததும், ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டு அழுதாள், சுமா. அவனை அணைத்துக்கொண்டு அழுதவள், அவனை இழுத்துச் சென்று, அவனைக் காட்டி ஒப்பாரி வைத்தாள், தன் மாமியாரிடம். கட்டிலின் ஓரத்தில், இரவு தன்னை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவளின், காலை பிடித்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.

*************

தன்னை யாரோ தொட்டு உலுக்க, நல்ல தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டதைப் போல் மலங்க, மலங்க, விழித்தான், மணி.

"இந்த ஜூஸையாவது குடி கண்ணு!!" அவன் அருகில் அமர்ந்தவாறு, சின்ன ஆச்சி, அவனை நோக்கி கிலாஸை நீட்டினாள். வேண்டாம் என்று தலையசைத்தான். ஜூஸ் இருந்த கிளாசை கீழே வைத்தவள், அழ ஆரம்பித்தாள். மீண்டும் தன் பார்வையை, புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த பெரிய ஆச்சியின் மீது வைத்தான், மணி. மாலையிட்டு அதன் முன்னே, ஒரு சின்ன தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

"வாய்விட்டு அழுதுறு கண்ணு!!" என்றபடி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

சுமாவின் அழுகையும், கூடச் சேர்ந்து கொண்டது. ஜூஸ் எடுத்து ஒரே மூச்சாக குடித்தான். அழுகையின் தூண்டுதலாலா? அல்லது பசியின் தூண்டுதலாலா? என்பதை, அவன் மட்டுமே அறிவான். எழுந்தவன், நேராக அவன் அறைக்குச் சென்றான். பின்னாலேயே எழுந்து, சின்ன ஆச்சியிடம், பாத்ரூம் போவதாக சொல்ல, எழுந்தவள், அப்படியே அமர்ந்து விட்டாள். அவனது அறையின், பாத்ரூம் கதவின் முன்னால், சில நிமிடம் நின்றுவன், அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான். நிமிர்ந்து பார்த்தவன் கண்ணில், எதிரே இருந்த கண்ணாடியில் அவன் பிம்பம் தெரிந்து. அவன், இதுவரை பார்த்திராத, தலை, தாடி, மீசை என்று மொத்தமும் ரோமமும் மழிக்கப்பட்டு, மொட்டையாக இருந்தான். உடல்நிலை மோசமாக இருக்க, பெற்ற தாய்கு கொள்ளி வைக்கக்கூட, கொடுத்து வைக்கவில்லை, சிவகுருவுக்கு. தாய்க்கு தலைமகன் கொள்ளி வைப்பது, அவர்களது வழக்கம். தலைமகனே திரும்பப் பிறந்துவிட்டான் என்று அவள் ஆயிரமாயிரம் முறை சொன்னதை, கொள்ளி வைத்து மெய்ப்பித்தான். கையில் மட்டும் பெயருக்கு முடியை எடுத்தால் போதும் என்று எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாய் மறுத்து மொட்டை அடித்தான்.


                         


கண்ணாடியில் இருந்து பார்வையை அகற்றியவன் கண்ணில் நேற்று அவலுடன் உறங்கிய, மெத்தையில் நின்றது. அவள் இன்னும் படுத்து இருப்பது போலவே, தோன்றியது அவனுக்கு. அதுவரை வெறுமையாய் இருந்தவன் மனதில் அழுத்தம் கூடியது. மூச்சுத் திணறி கஷ்டப்பட்டு இருப்பாளோ? நெஞ்சு வலியால் துடித்து இருப்பாளோ? என்று அவன் மனது அலைபாய, சுருக்கென்ற வழியை புஜத்தில் உணர்ந்தான். சாகப் போகிறோம் என்று தெரிந்துதான், நேற்று என்னுடன் வந்து படுத்தாளோ? இல்லை, நான் சாவதை தடுப்பதற்கு தான், அவள் உயிரை விட்டாளோ? என்ற எண்ணம் வர, வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது, அவனுக்கு. முயற்சித்தான், முடியவில்லை. நான் இருக்கிறேன்!! நான் இருக்கிறேன்!! என்று அவனை தேற்ற முயன்ற போதெல்லாம் விரட்டி அடித்தவனை, நேரம் பார்த்து பழி வாங்கியது, கண்ணீர். அவளிடம் முகம்கொடுத்து, கனிவாக இரண்டு வார்த்தைகள் பேசி இருக்கலாமோ!! சிறுவயதில் படுத்ததைப்போல, அவள் மடியில் கடைசியாக ஒருமுறை தலை வைத்துப் படுத்திருக்கலாமோ!! என்று அவன் மனதில் சீரற்ற எண்ணங்கள் தோன்ற, தொளில் ஆரம்பித்த வலி, அவன் நெஞ்சை நோக்கி படர்ந்தது. இதயத்தின் துடிப்பு, அவன் காதுகளுக்கு கேட்டது, மூச்சு முட்டியது, "மாத்திரை" என்றது அவன் மூளை. எழுந்துவனின் கண்கள் இருட்டிக்கொண்டு வர, அப்படியே மூர்ச்சையாகி, விழுந்தான். உள்ளுணர்வோ? தாய்மையின் உணர்வோ?, அவனைத் தேடிவந்த சுமா, கீழே குப்புற விழுந்து கிடந்த, மகனைப் பார்த்ததும், அவள் அடிவயிற்றில் இருந்து கிளம்பிய அலறலில், அடுத்த பத்து நொடியில், அந்த வீட்டில் இருந்த அத்தனை உயிர்களும், அந்த அறையில் இருந்தது.

************

மறுநாள்

விழித்தபோது கோயம்புத்தூரில், ஹாஸ்பிடலில் இருந்தான். இறந்தவளோடு சேர்த்து, இவனுக்காகவும் கண்ணீர்விட்டது, மிஞ்சி இருந்த மூன்று ஜீவன்களும். ஏகப்பட்ட பரிசோதனையின் முடிவில், ஒன்றுமில்லை என்று சொல்லப்பட, ஏற்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும், கொஞ்சம் நிம்மதி அடைந்தது மூவரின் மனதும்.

*************

மறுநாள்

தாத்தாவின் திருப்திக்காக, மீண்டும் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாலையில், வீட்டுக்கு செல்வது என்று முடிவெடுத்திருந்தார்கள்.

"சாரி டா!!, இன்னைக்கு காலைலதான் கேள்விப்பட்டேன்!!" பதினோரு மணி அளவில், செய்தி கேள்விப்பட்டு, மணியை மருத்துவமனையில் பார்க்க வந்திருந்த பிரதீப், அவன் கையைப் பிடித்துக் கொண்டு, துக்கம் விசாரித்தான்.

மணி, தலையை மட்டும் ஆட்டினான். அருகிலேயே தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள், நேத்ரா. இரண்டுநாள் முன்பு "சாவிற்கு மாலை போடலாம்!!" என்று பேசியவள், இப்பொழுது அதற்காக வருத்தப்பட்டாள்.

"என்ன ஆச்சு டா!!, வெளியே ஹார்ட் அட்டாக்னு பேசிக்கிறாங்க?" மணியின் உடல் நிலையை விசாரித்தான், பிரதீப். மறுப்பாக தலையசைத்தான் மணி.

"சாரி டா!!" நேத்ராவின், முறையானது. விரக்தியாக சிரித்தவன்.

"எனக்கு ஒன்னும் இல்ல!!, வலது பக்கம் தான் வலி!!. Muscle strainனு டாக்டர் சொல்றாங்க, அந்த பைக் ஆக்சிடென்டோட யெஃபேக்ட்!!" கொஞ்சம் தெளிவாக இருந்தான், மணி.

***************

மறுத்துப் பேச விடாமல், தன் ஆச்சிக்கான, ஏழாம் நாள் காரியத்தில், செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தான், மணி. அன்று இரவு, பழனி வீட்டின் ஹாலில் அமர்ந்து இருக்க, நிரந்தரமான வெற்றிடம் உருவாகியிருந்ததை உணர்ந்திருந்தான், மணி.

"நீங்களும் கோயம்புத்தூர் வந்துருங்க தாத்தா!!" என்றவன், அவர் மடியில் தலைவைத்து படுத்தான்அவரால் மருக்கமுடியாவில்லை. 

****************

"சார், ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஃபைலிங் பண்றதுக்கு, இன்னும் பத்து நாள் தான் இருக்கு!!" என்றபடி, சில பேப்பர்களை நீட்டினார் சங்கரபாணி.

பத்து நாள் கழித்து, முதல்முதலாக இன்றுதான் அலுவலகம் வந்திருந்தான், மணி. அவர் கொடுத்த பேப்பர்களை வாங்கிப் புரட்டிக் கொண்டிருந்தான். கடந்த மாதம் கையகப்படுத்திய அவினாஷ் தாக்கரின் நிறுவனத்தை, தங்கள் நிறுவனத்துடன் இணைத்து, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரம் அது. பதினைந்து நிமிட சிந்தனைக்குப் பின், அதில் சில திருத்தங்களை செய்தவன்,

"அவரோட கம்பெனி 20 பெர்செண்ட் ஈக்வாலான ஸ்டாக்க, அவருக்கு ஆஃபர் பண்ணுங்க. அவர் ஓகேன்னு சொன்னா, அவர்ட நான் பேசனும்னு சொன்னேனு சொல்லுங்க!!" திருத்தம் செய்த பேப்பர்களை, அவரை நோக்கி நீட்டிவன், அலுவலகத்தை விட்டு கிளம்பினான்.

அவனது மனதில், தான் செய்வது சரியா? தவறா? என்ற குழப்பம். கடந்த நான்கு வருடங்களில், இது போன்று குழப்பமான, மனம் சஞ்சலப்படும் நேரங்களில், செய்வதைப் போல, அந்த நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், இறங்கி கொண்டிருந்தான். மலை இறங்குவது, சில நாட்களுக்கு முன்பு இருந்ததைப் போல அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் பெய்த மழையின் சாட்சியாக, ஆங்காங்கே நீர் ஊற்று வழிந்து கொண்டிருந்தது, பாறைகளின் இடுக்கில். முதல் முறையாக இறங்கும்போது ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்டவன், இப்பொழுதெல்லாம் மூன்று மணி நேரங்களுக்குள் இறங்கி விடுகிறான். மலையின் அடிவாரத்தில் இருந்த காட்டாறை நெருங்கிய பொழுது, இருட்ட ஆரம்பித்திருந்தது. அந்த ஆற்றின் கரையில் அமர்ந்தவன், ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் பார்வையைப் பதித்தான். கடந்த முறை அடித்துச் செல்லப்பட்ட போது, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு, ஓடிய தண்ணீர், கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால் நீரில் இழுப்பு குறைய வில்லை என்றே தோன்றியது. எழுந்தவன், அந்த ஆற்றைக் கடப்பதற்கான ஏதுவான இடம் தேடி, நடந்தான். பாறைகளுக்கு இடையே ஓடும் பொழுது சலசலத்து நதியின் சத்தம் இல்லாத, இடத்தில் நின்றவனுக்கு, நீந்திக் கடப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்று தோன்றியது. மறு கரையை ஆராய்ந்தான், யோசிக்காமல் தண்ணீரில் குதித்துவன், ஆற்றின் போக்கிற்கு குறுக்காக, நீந்த ஆரம்பித்தான். நீண்ட போராட்டத்திற்குப் பின் கரையேறியவனக்கு, கை, கால்கள் எல்லாம் வலித்தது. கரையின், அருகில் இருந்த பாறையில் அமர்ந்தவன் மனதில், இந்த முறை உன்னை வென்று விட்டேன் என்றான், ஓடிக் கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்து. அவன் மனதில் இருந்த குழப்பம் அனைத்தையும், அந்த ஆற்றின் நீர் இழுப்பு, கரைத்து சென்றது.

அன்று இரவு,

"தாத்தா, எக்ஸிக்யூடிவ் பவர்ஸ் எல்லாம் கொடுத்துடலாம் இருக்கேன்!!" இரண்டு வருடங்களில் முதல் முறையாக தாத்தாவிடம் தொழில் சம்பந்தமாக பேசினான்.

காலையில் சென்றவன், இரவு வரும்வரை, மூவரும் தவித்து போயிருந்தனர். மணி வேலையை பற்றி பேசத் துவங்கியதும், தாத்தாவின் மனம் நிம்மதி கொண்டது, ஆமோதிப்பாக தலையசைத்தார். அதுவரைதனது முழு நேரத்தையும்சக்தியையும் தொழிலிலேயே காட்டி வந்தவனுக்குசற்று ஓய்வு தேவை என்று தோன்றியதுதனக்காகவே வாழ்ந்து வரும் தாத்தாஆச்சியிடம் பாசத்தோடுகொஞ்சம் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மனது சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல்ஒதுக்கித்தள்ளி இருந்தான்

அதுவும் இல்லாமல்தனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்தொழிலில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்தவன்அதற்காகத்தான் இன்று காலை அதற்கான முதல் புள்ளியை வைத்து இருந்தான்

மீட்சிக்கு வழியே இல்லாத ஒரே இழப்பு, இறப்புதான், என்பதை அவனது ஆச்சி அவனுக்கு உணர்த்திவிட்டிருந்தாள். ஒரு இழப்பில் தன்னைத் தொலைத்தவன், இன்னொரு இழப்பில் தன்னை மீட்க முனைந்தான்.
*************

P. S

கரையிலிருந்து பார்ப்பவனுக்கு, கடல் மட்டமானதாக, தட்டையானதாக தெரியலாம். ஆனால், அது உண்மையில்லை, என்பதை நாம் அனைவரும், அறிவோம். அருகில் இருந்தபொழுது மணியை விலக, மதுவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும், அவன் எப்பொழுதும் தன்னவனாக இருப்பான் என்ற நம்பிக்கையே, அவனை விலகும் உறுதியைக் கொடுத்து. அந்த நம்பிக்கையில், தான் கசிந்துருகி, காதலித்த மணி, தன்னைக் கண்டதும் தன்னிடம் ஓடி வந்து விடுவான் என்று நினைத்தவளுக்கு, அவனிடம், இப்படி ஒரு முகம் இருக்கும், என்பதை உணர்ந்த பொழுது, உடைந்து போனாள். அதைப் போலத்தான் வாழ்க்கையும். சில உறவுகளிடம் இருந்து விலகியும், சில உறவுகளுடன் எப்போதும் இணைந்தே இருப்பது தான், அந்த உறவை பாதுகாக்கும். இரண்டு புள்ளிகளுக்கு இடையே ஆன குறைந்தபட்ச தூரம் என்பது நேர்கோடு தான்.

And in nature "There are no straight lines". 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக