http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 47

பக்கங்கள்

திங்கள், 22 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 47

 ஒன்றரை வருடம் கழித்து,


டெல்லியில் ஒரு புகழ் பெற்ற நட்சத்திர விடுதியின்சூட்டு அறையில் அமர்ந்திருந்தான்மணிகண்ணாடியில் தெரிந்தஅவன் கண்களின் பிரதிபலிப்பில் பார்வையைத் பதித்திருந்தான்அந்தக் கண்கள் சோர்வுற்று இருந்ததுஅதே நேரத்தில்ஒன்றரை வருடமாககட்டுக்குள் வைத்திருந்த மிருகம்உன்னை வென்றே தீர்வேன் என்றதுஇன்னும் அதுதன் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லைஅறையின் கதவு தட்டப்படும் ஓசைஅவனைஅந்த மிருகத்திடம் இருந்தும்சோர்விடம் இருந்தும்மீட்டெடுத்தது

.


"சார்!! இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டார்ட் ஆயிடும்!!" அறையின் கதவை திறந்ததும்அவனது உதவியாளர் சொல்லதலையசைத்த மணிவரவேற்பறையில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.

"இந்திய வர்த்தகத்தின் இளம் நட்சத்திரங்கள்!!" என்ற தலைப்பில் இந்தியாவின் பிரபலமான ஊடகம் நடத்திய கலந்தாய்வில் கலந்து கொள்ளவேடெல்லி வந்திருந்தான்அதுவரை ஊடகங்களில் முகம் காட்டாதவன்சில அரசியல்தொழில் நிர்பந்தங்களை சமாளிப்பதற்காக தான்அந்த நிகழ்சிச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டான்அவனோடு சேர்த்துஇன்னும் மூன்று இளம் தொழிலதிபர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்அந்த மூவரின் சம்பந்தமான குறிப்புகளைமீண்டும் ஒருமுறை வாசித்துக் கொண்டிருந்தான்அந்த நிகழ்வை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்போட்டு வாங்குவதில் வல்லவர்அந்த தொகுப்பாளரை பற்றிய குறிப்புகளைஅவன் வாசித்துக் கொண்டிருக்க

"சார்!! அவருக்கு உங்கள ஒரு கெஸ்ட்டா இந்த புரோகிராம்ல கூப்பிட்டது பிடிக்கலையாம்கண்டிப்பாஎதாவது குதர்க்கமா கேட்பார்!!" கலந்தாய்வில் கலந்து கொள்வதற்குஅவனை ஆயத்தப்படுத்தி கொள்ள உதவும் குழுவில் இருந்த ஒருவர் சொன்னார்நிமிர்ந்து அவரை பார்த்தவன்,

"அவருக்கு நம்மள புடிக்கலனா!!, அதுக்குநாம எதுவும் பண்ண முடியாது!!" சிரித்தான்.

இதுவே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால்இப்படி ஒரு சூழ்நிலை அமைந்திருந்தால்அந்த தொகுப்பாளரைநிகழ்ச்சி முடியும்முன் மண்டியிட வைக்க வேண்டும்என்பதுதான் அவனது ஒரே சிந்தனையாக இருந்திருக்கும்தொழிலில்அவனை நிலைநாட்டிக் கொள்ள அவனுக்கு பெரிதும் உதவியதுஇப்படி எதிரே நிற்பவர்களை மண்டியிட வைக்கும்பவர் கேம்தான்அதைஇன்னும் அவன்முழுதாக உதறித் தள்ளி விட்டாலும்அதை யாரிடம்எப்போதுஎதற்காகஉபயோகப்படுத்த வேண்டும் என்ற பக்குவத்தைகடந்த ஒன்றரை வருட வாழ்க்கைஅவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்ததுஅவனைப் பக்குவப்படுத்திய சில நிகழ்வுகள்

*************

மணியின்பெரிய ஆச்சி இறந்தஒரு மாதம் கழித்து,

சாப்பிட்டும்சாப்பிடாமலும் எழுந்து சென்றாள்சுமாஎழுந்து சென்றதாயைப் பார்த்துக் கொண்டிருந்தான்அவளது முகத்தில் ஒரு தவிப்புவேதனை.

"கொஞ்சம் வெளிய போலாமா?" சுமாவின் பின்னாலேயே எழுந்துகை கழுவச் சென்றவன்சுமாவைப் பார்த்து கேட்கஅவனது அருக்காமைக்காககனிவான பார்வைக்காகஒரு சொல்லுக்காகஇரண்டு வருடமாக எங்கித் தவித்தவள் அல்லாவாசரி என்று அவசர அவசரமாக தலையாட்டினாள்.

உடை மாற்றவில்லைஅலங்காரத்தை சரி பார்க்கவில்லைமகன் அழைத்ததும்அவன் பின்னால்சென்றாள்அரைமணி நேரத்தில்அவர்கள் பயணித்த கார்கோவையின் அப்போலோ மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தது.

"இறங்குங்க!!" என்ற மகனைநம்ப முடியாமல் பார்த்தாள்சுமா.

தன் அம்மாவை காரிலிருந்து அழைத்துக்கொண்டுஅந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான்சிறிது நேரத்தில் ஒரு அறையின் முன்னால் நின்றவன்தனது தாயைப் பார்த்து திரும்பிஉள்ளே போகும்படி கண் காட்டினான்அவள் தயங்கி நிற்ககதவைத் திறந்த மணிதன் தாயின் கைபற்றி உள்ளே அழைத்து சென்றான்தாயின்இறப்பிற்கு பிறகு சிவகுருவின் உடல்நிலைமேலும் மோசமடைந்துஅன்று காலைதான் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார்மணியின் தாத்தாவும்ஆச்சியும் செய்தி கேள்விப்பட்டு காலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டுதிரும்பிப் பார்த்த சிவகுருவைஒரு நொடி பார்த்தவன்பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்பெரியவர்கள் இருவரும் சென்று இருக்கசுமா மட்டும் அரை மனதுடன் தவிர்த்திருந்தால்தன் கணவன் மீதான கோபம் குறைந்திருந்தாலும்சிவகுருவால் ஏற்பட்ட காயத்தின் வலிஅவளுக்கு தயக்கத்தை கொடுத்ததுதன் அன்னையின் தவிப்பும்வேதனையும்ஏனோ மணிக்குமதுவை நினைவுபடுத்தியதுதனது உறுதியை கொஞ்சம் தளர்த்தினான்தன் அம்மாவிற்காகதனக்காகதன் தாய்தன்னை தண்டித்துக் கொள்வது குற்றஉணர்ச்சியைக் கொடுத்ததுமணிக்குஅந்த குற்ற உணர்ச்சியில்பாசம் எங்கேனும் ஒளிந்திருந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

***********

ஒருவாரம் கழித்து

குழப்பமான மன நிலையில் வீட்டிற்குள் நுழைந்தவன்ஹாலிலேயே அமர்ந்து விட்டான்கடந்த ஒரு வாரமாகமருத்துவமனையில் இருந்த சிவகுருவை கவனித்துக் கொள்வதில் மூவரும் பிசியாக இருந்தனர்அவன் அம்மாவிடம் பேசிக் கொள்ளாமல் இருந்திருந்தாலும்கடந்த இரண்டு வருடங்களில்சாப்பிடும் வேலைகளிலும்அவன் வீட்டில் இருக்கும் வேலைகளிலும்அவள் கவனமெல்லாம்அவன் மீதே இருந்ததுயாரிடமும் நெருங்கக் கூடாதென்றுஅவனுக்கு அவனே வேலிதிடுக் கொண்டு வாழ்ந்து வந்தாலும்தன் அம்மாவின் அந்த கவனத்தை அவனது மனம் விரும்பியிருக்கிறது என்பதேஅவனுக்கு கடந்த ஒரு வாரமாகஅவள் அருகில் இல்லாத போது தான் புரிந்ததுஎங்கே உடல்நலம் தேறிசிவகுரு மீண்டும் கொடைக்கானல் எஸ்டேட் சென்றால்தன் கணவருடன்அவளும் சென்று விடுவாளோஎன்ற எண்ணம் வரும்போதெல்லாம்இப்படி குழம்பிப் போவான்.

அவனது மனம் தனித்து இயங்கி சோர்வடைந்துஆறுதலைஅன்பை எதிர்பார்க்கத் துவங்கியிருந்ததுவாழ்க்கையில்இப்படியான ஒரு சிக்கலில் தவித்து இருந்தான் என்றால்தன் திருத்தி அனுப்பிய டாக்குமென்ட்டை பற்றிஎந்த ஒரு பதிலும் சொல்லாமல்அவினாஷ் தாக்கர் அமைதி காத்தார்அப்படி ஒரு வாய்ப்பைஅவருக்கு தராமல் இருந்திருக்கலாம்அப்படித் தந்தப் பின்இருவருக்குமான பவர்கேம் தொடங்கியிருந்ததுபவர் கேமில்யார் மேலேயார் கீழேஎன்பதுதான் ஆட்டமேமுதல் காய் நகர்த்தலை இவன் துவங்கியிருக்கஎதிராளி இன்னும் அவர் காயை நகர்த்தி இருக்கவில்லைதானே ஒருமுறை அவரிடம் அழைத்து பேசலாமாஎன்ற எண்ணம்அவனை குழப்பத்துக்கு ஆளாக்கியதுதன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும்அவினாஷ் தாக்கருக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியதும்முட்டாள்தனமான முடிவோ என்ற குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.

மருத்துவமனையில் இருந்து மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்தன் தாத்தாவிடம் சிவகுருவின் உடல்நிலை பற்றி விசாரித்தவன்அதற்காகத்தான் காத்திருந்தேன் என்று சொல்லிவிட்டுஅவனது அறைக்கு சென்று விட்டான்ஒரு மணி நேரம் கழித்துஅவனது அறையில் நுழைந்தாள் சுமாகட்டிலில் அமர்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டு இருந்த மணிநிமிர்ந்து அவளைப் பார்த்தான்என்ன என்பது போல் கேள்வியாய் பார்த்த மகனைப் பார்த்துவலிந்து புன்னகையை உதடுகளில் படரவிட்டாள்மணியின் அருகே மெத்தையில் சென்று அவள் அமரஏதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன்புத்தகத்தை மூடி வைத்துவிட்டுஅவள் பேசுவதற்காக காத்திருந்தான்கண்கள் நிலையில்லாமல் அங்குமிங்கும் அலைபாயமணிக்கு அவளது மனம் புரிந்ததுஅவள் கேட்க தயங்குகிறாள்நாமே சொல்லிவிடலாம் என்று மணி நினைத்துக்கொண்டிருக்கும் போதுஅவன் எதிர்பாராத விதமாகஅவனது மடியில் தலைவைத்து படுத்தாள்சுமாஅவளது ஒரு கையை பற்றியவள்அதை இழுத்து தன் முகத்தின் கீழே வைத்துக் கொண்டாள்அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்அவனது நைட் பேன்ட்டை ஈரமாக்கியது.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனான்அவளது மடியில் இப்படித் தலை வைத்து உறங்கஎவ்வளவு நாள் ஏங்கி இருக்கிறான்இப்போதுகடந்த இரண்டு நாட்களாக கூடஎங்கே அவளது அருகாமையை இழந்து விடுவோமோஎன்று ஏங்கிக் கொண்டிருந்தவனின் மடியில்படுத்துக்கொண்டுஅவன் அம்மா சத்தமில்லாமல் அழஒருசாய்ந்து படுத்திருந்தவளின் கையைத் தட்டிக் கொடுத்தான்அவன்ஏங்கி தவித்த போதுஅவளிடம் இருந்து அவனுக்கு கிடைக்காத அரவணைப்பைஅவள் ஏங்கித் தவித்த போதுஏனோ அவனால் மறுக்க முடியவில்லைஒரு வாரத்திற்கு முன் மதுவை ஞாபகப்படுத்தியவள்இன்று ஏனோஅவனையேஅவனுக்கு ஞாபகப்படுத்தினாள்.

*************

இரண்டு நாள் கழித்துஅலுவலகத்தில் அமர்ந்திருந்தான் மணி.

அவனது டேபிளில் இருந்த தொலைபேசி அடித்ததுஎடுத்து காதுக்கு கொடுக்க


                         


"சார்!! அவினாஷ் தாக்கர்லைன்ல இருக்கார்!!" ஏன்று செய்தி சொல்லப் படஅந்த தொலைபேசி அழைப்பு இணைக்கப்பட்டது.

இரண்டு நாள் அவரின் அழைப்புக்காக காத்திருந்தவன்தானே அவரை அழைத்து பேசுவது என்று முடிவு செய்துஅவரை இணைப்பில் எடுக்க கூறியிருந்தான்.

"Mr.தாக்கார்!! நீங்க என்ன பாஸ்டர்ட்னு சொல்லியிருக்க கூடாது!!" வழக்கமான குசல விசாரிப்புகள் எதுவுமின்றிநேரடியாக காரியத்தில் இறங்கினான்.

"சோ வாட்?" அவரும் தயாராகவே இருந்தார்.

"அந்த வார்த்தையை நீங்க திரும்ப எடுத்துக்கிட்டா நல்லது!!" ஆரம்பம் ஆனாது.

"முடியாது!! நான் சரியாத்தான் சொன்னேன்!!" விட்டுக்கொடுப்பதாய் இல்லைவாங்கிய அடியின் வீரியம் அப்படி.

"Mr. தாக்கர் சார்!! நான் உங்களஒரு பெரிய பிசினஸ்மேன்னு நம்பிகிட்டு இருக்கேன்!! அந்த நம்பிக்கை தப்புன்னு தோணுது!!" சீண்டினான்

"உனக்கு என்ன வேணும்!!" நேராக விஷயத்துக்கு வந்தார்.

"எனக்கு ஒன்னும் வேண்டாம் Mr. தாக்கர்!!, உங்களுக்கு தான் ஒன்னு குடுக்கலாம்னு இருக்கேன்!!" என்றவன்பேச்சில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தினான்.

".....…......." மறுபுறம் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கஇப்பொழுது அவர் தனது பேச்சைக் கேட்பதற்கு தயாராக இருக்கிறார் என்று புரிந்து மணிக்கு,

"டீல் இதுதான்!! ஃப்யூச்சர் குரூப்ஸ்போர்டுல மெம்பர் ஆகுறதுக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு!! நீங்க பண்ண வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்!! அந்த வார்த்தைய திரும்ப வாங்கிக்கணும்!! அன்ட்அந்த 20% ஆஃபர்க்கும்இதுக்கும்எந்த சம்பந்தமும் இல்லை!!" என்று சொல்லிவன்காதுகளை கூர்மையாக்கினான்சில நிமிட அமைதிக்குப் பின்

"You are a blood sniffing wolf!!" என்றவர் சிரித்தார்மணியும் சிரித்தான்.

"நேர்ல மீட் பண்ணலாமா?"

"சூர்!!"

பேரம் படிந்த நிறைவு இருவரின் குரலிலும்நீயாநானாஎன்று இருக்கும் வரைதான் பவர் கேம்மின் விதிகள் பொருந்தும்அடித்து வீழ்த்தி வெற்றி பெற்ற பின்வெற்றி பெற்றவன் இறங்கி இறங்கி வந்துவீழ்த்தியவனை கை தூக்கி விடுவதுவிழுந்தவன் தனகிக்கெதிரே நிற்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவெற்றியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமல்லாதுவிழ்த்தியவனை தன்னோடு இணைத்துக் கொண்டுதன் பலத்தையும் பெருக்கலாம்அவனது அம்மாஅவன் மடியில் படுத்து அழுதபோதுவாழ்க்கை அவனுக்குக் கற்றுத் தந்த பாடம்இன்று தாக்கரே தன்வசம் ஈர்த்துக்கொள்ள உதவியது.

***********

ஒரு மாதம் கழித்து,

அப்போதுதான் ஒரு மீட்டிங்கை முடித்துக்கொண்டுமணிஅவனது அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

"சார்!! உங்கள பாக்குறதுக்கு நேத்ரானு ஒருத்தங்க வந்திருக்காங்க!! கண்டிப்பா பாக்கணுமாம்உங்க பிரண்டுனு சொல்றாங்க!!" அவனைப் பின் தொடர்ந்து உள்ளே வந்தஅவனது உதவியாளர் சொல்லசிறுது நேரம் யோசித்தவன்

"வரச்சொல்லுங்க!!" என்றான்.

வரச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டானே ஒழியஎதற்காக வந்திருக்கிறாள் என்று அலைபாய்ந்த அவனது மனம்படபடத்ததுதேவை இல்லாத எதையும் சிந்திக்க விடாமல் மனதை கட்டுப்படுத்திவன்நேத்ரா அறைக்குள் நுழைந்ததும்அவளைப் பார்த்து சிறிதாக சிரித்தான்.

"வா!! நேத்ரா!!" மன ஓட்டத்திற்கு மாறாகஅமைதியாக காணப்பட்டது அவனது முகம்.

"என்ன சாப்பிடுற?" நேத்ரா அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்ததும்மணி கேட்கஒன்னும் வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.

அவளிடம் தென்பட்ட தயக்கம்மணியின் பதற்றத்தை மேலும் கூட்டியதுஅதைக்காட்டிக் கொள்ளாமல் இருக்கவேதொலைபேசியில் தொடர்பு கொண்டுஅவளுக்கு காபி ஆர்டர் செய்தான்.

"ஒரு சின்ன ஹெல்ப்!! ஆக்சுவலா பெரிய ஹெல்ப்!!" தயங்கியவாறே கூறினாள்நேத்ரா.

"எதா இருந்தாலும்தயங்காம சொல்லு!!" தைரியமூட்டினான்யாருக்கு என்று தெரியவில்லை.

"நான் வலுண்டீரா இருக்கிற NGOக்குகொஞ்சம் ஃபண்ட்ஸ் தேவைப்படுதுcochlear implants, இந்த பிறவியிலேயே காது கேட்காமல் போனாகுழந்தைகளுக்காக பண்ற சர்ஜரி........!!"  

"எஸ்தெரியும் எவ்வளவு வேணும்?" இடை மறித்தான் மணி

காசு தருகிறேன் அவன் சொன்னதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்நேத்ரா.


"ஒரு சர்ஜரிக்கு லட்சம் ஆகும்!! 30  குழந்தைங்க இருக்காங்க!!" அவளிடம் இருந்த தயக்கம் தணிந்தது.

தொலைபேசியில் அழைத்து யாருக்கோ பேசியவன்பின் அதை வைத்துவிட்டு

"இந்த வருசத்துக்கான CSR ஃபண்ட்ஸ் எல்லாம் ஸ்பெண்ட் பண்ணியாச்சு!!" என்று சொன்னவன்சிறிது நேரம் யோசித்து விட்டு,

"அதான்இந்த cochlear implants, தமிழ்நாடு கவர்மெண்ட் ஃப்ரீயா தான பண்ணி கொடுக்கிறாங்கல?" இலகுவாக சிந்திக்க ஆரம்பித்து இருந்தான்மணி.

"உண்மைதான்கவர்மெண்ட்ல இந்த வருஷம் கொடுத்த ஃபண்ட்ஸ் காலி ஆயிடுச்சு!!இன்னும் நாலு மாசம் வெயிட் பண்ணனும்!!பர்சனலா உன்னால எவ்வளவு முடியுமோ கொடு!!நிறைய இடத்துல ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கோம்!!" நேத்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதேட்ராவைத் திறந்துகாசோலையில் கையெழுத்திட்டுஅதைக் கிழித்துஅவளிடம் நீட்டினான்.

"தேங்க்யூசோ மச்!!" காசோலையில் இரண்டு கோடி என்று எழுதப்பட்டிருக்கசிரித்துக்கொண்டே மணியை பார்த்து கூறினாள்நன்றி கூறியவளை பார்த்து சிரித்தான்

"இருகாபிய குடிசிட்டு கிளம்பு!!" காசோலையைப் பெற்றுக்கொண்டதும் கிளம்பியவளை பார்த்து மணி கூறமறுக்க முடியாமல் அமர்ந்தாள்.

"சாரி டா!!" அந்த அறையில் சில நிமிடங்கள் நீடித்த அமைதியை கலைத்தாள்நேத்ரா.

"பரவால்ல!! அதெல்லாம் அப்போவே மறந்துட்டேன்!!" உதடுகள் விரிய புன்னகைத்தான். காபி வந்தது

"சாரி டாபானு திடீர்னு கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சொன்னவுடனே அவகிட்ட எவ்வளவு பேசிப் பார்த்தும்முடியலன்னு ஆனதுக்கு அப்புறம் தான் உன்னைத் தேடி வந்தேன்!! நீயும் அவளுக்கு மிச்சமா பேசினதால கோபத்துல தான்அப்படி பேசிட்டேன்!!"  காபியை குடித்தவாறு தொடர்ந்தாள்.

"நீங்க ரெண்டு பேரும்இவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பீங்கன்னு நான் நினைக்கலே!!" மணி அறிந்தபழைய நேத்ராவாய் மாறியிருந்தாள்அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தான்காபியை குடித்துவிட்டுடேபிளில் வைத்தவள்,

"நான் கிளம்புறேன்!!" விரக்தியாகசிரித்தாள்.

"நேத்ரா!!...........” என்று நிறுத்தியவன்பின் தொடர்ந்தான்.

"முட்டாள்தனமும்புத்திசாலித்தனமும்வேற!! வேற!! இல்ல!! நாம ஒன்ன பேசும் போதோஇல்ல ஒரு முடிவு எடுக்கும்போதோ!!நம்ம அறிவுக்கு எட்டினவர சரின்னு பட்டதத்தான் செய்கிறோம்!!. அது முட்டாள்தனமாபுத்திசாலித்தனமாங்கிறதகாலம் தான் முடிவு பண்ணும்!!” கொஞ்சம் பெரிதாக சிரித்தான்மணி.

மணியின் புன்னகை நேத்ராவிடமும் தொற்றிக் கொண்டதுசிரித்தவாறே இடதும்வலதுமாகதலையை ஆட்டினாள்.

"எனக்குத் தெரிஞ்ச மணி!!, ஒரு குழந்த பையன்!!, ரொம்ப நல்லவன்!! அவனுக்கு இப்படி தத்துவம் எல்லாம் பேச வராதுஎன்றவள்மீண்டும் இடதும் வலதுமாக தலையை அசைத்தாள்.

"அவனத்தான் நானும் தெடுறேன்!! கிடைச்சா சொல்லி விடுறேன்!!" என்று மணி சொல்லஇருவரும் சிரித்தனர்பின்அவனிடம் இருந்து விடைபெற்று கிளம்பினாள் நேத்ராமணிக்கு மனதின் கணம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.

*****************

நான்கு மாதம் கழித்து,

திட்டமிட்டதைப் போலவேகடந்த அறு மாதங்களில்தனது பணிச்சுமையை வெகுவாகக் குறைத்து இருந்தான்மணிதங்கள் குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிகளின் பொருட்டு  முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டுஅன்றாட நடவடிக்கைகளில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு இருந்தான்அதில் ஒரு அங்கமாக ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்குமீர் அலியை அழைத்திருந்தான்மணியின்  அலுவலக அறைக்குள் நுழைந்தவர்வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்ததும்

"சார்!! உங்கள நம்ம R&D ஹெட்டா போடலாம்னு இருக்கேன்!!" நேராக விஷயத்துக்கு வரவும்அவரது முகத்தில்மணி எதிர்பார்த்த ஏமாற்றம் தெரிந்தது


                         


நான்கு நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தங்களது குழுமத்தின் ஒவ்வொரு நிறுவனத்திற்கும்தனித்தனியாக CEOக்களை நியமிக்கும் முடிவின்கடைசி கட்ட காய் நகர்த்தலை செய்தான் மணிஃப்யூச்சர் பவர்ஸ்ஸின், CEOவாக ஆக்கப்டுவோம் என்று எதிர்பார்த்திருந்தார்மீர் அலி.

"CEO அவதற்கானஎல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு!! நான் உங்கள முதன்முதல்எங்க காலேஜ்ல பார்த்த அந்த ப்ரொபோஸருக்கு, R&Dதான் புடிக்கும்னு எனக்கு தோணுச்சு!! இது என்னோட பர்சனல் விருப்பம்!!. இதுல ரெண்டு ஆப்பரும் இருக்கு!!, உங்களுக்கு என்ன விருப்பமோ அதை எடுத்துக்கலாம்!! You deserve it!!" என்றவன் அவரை CEO ஆக்குவதற்கான கடிதத்தையும், R&D ஹேட் ஆக்குவதற்கான கடிதத்தையும்அவரிடம் நீட்டினான்வாங்கிக் கொண்டவர்அவனைப் பார்த்து சிரித்தார்!! அவரின் முகத்தில்சிறிது நேரத்திற்கு முன் தெரிந்த ஏமாற்றம் சுத்தமாக இல்லை.

அவருக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்திருந்தாலும்மணிக்கு உண்மையிலேயே அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பைதான்கொடுத்திருந்தான்வாழ்க்கையில் அவன் அடைந்திருந்த பக்குவம்தொழில் விஷயத்திலும் அவனுக்கு நிறையவே கைகொடுத்தது.

ஒரு சனிக்கிழமை மாலை நேரம்ஒரு திருமண வரவேற்பில் அமர்ந்து இருந்தான்

மேடையில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டுபுகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஜினாலி ஜெயின்அருகிலேயேமறுநாள் அவளுக்கு கணவனாகப் போகும் மார்வாடி பையன்சற்றுமுன்பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டுகிளம்பி விடலாம் என்று இருந்தவனைமுக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று வலுக்கட்டாயமாககாத்திருக்க சொல்லியிருந்தாள்ஜினாலிமணிமொபைலை நோண்டி கொண்டிருந்தான்

"வெயிட் பண்ணதுக்கு தேங்க்ஸ்!!" என்ற ஜினாலியின் குரல் கேட்கநிமிர்ந்து பார்த்தான்

சிரித்துக்கண்டிருந்தாள்அருகிலேயே அவளது வருங்கால கணவனும்மணிபதிலுக்கு இருவரையும் பார்த்து சிரித்தான்.

"இவர்யாருன்னு தெரியும்ல?" வருங்கால கணவனிடம் கேட்டாள்ஜினாலிஅவனும்தெரியும் என்பது போல் தலையசைத்தான்.

"சரி!! எனக்கு ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலிமணியைப் பார்த்துதிடீர் என்று கூற ஆண்கள் இருவரும் திகைத்தனர்

"வாட் இஸ் திஸ்?!!" ஆண்கள் இருவரும் ஒரே போல் குரல் எழுப்ப

வாட்?” என்று திருப்பிக்கக்கேட்டவள்

"எனக்கு ரூட் போட!!, என் பின்னால கொஞ்சநாள் சுத்துன இல்ல?" வருங்கால கணவனின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல்மணியைப் பார்த்து சீரியஸாக கேட்டாள்மணிஆமோதிப்பாக தலையாட்டினான்.

"அப்ப ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலியின் சிரிப்பு கொடுத்த தைரியத்தில்அவளுக்கு ப்ரபோஸ் செய்தான்மணிமணி புரோபோஸ் செய்ததும்தன் வருங்கால கணவனிடம் திரும்பிய ஜினாலி

"பாத்துக்க!! உனக்காகஇவன வேண்டாம்னு சொல்றேன்!! அதுக்கேத்த மாதிரிஎன்ன பார்த்துக்கணும்!! பார்த்துக்குவியா?" அருகிலிருந்தவனை மிரட்டினாள்நீண்ட நாட்களுக்குப் பிறகு எளிருகள் தெரிய சிரித்தான்மணி.

"இப்ப சரின்னு சொல்லிட்டு!!, அப்புறம் ஏதாவது ப்ராப்ளம் பண்ணுன........." மீண்டும் மிரட்டியவள்மணியிடம் திரும்பி

"நான் எப்ப வந்தாலும் என்ன அக்சப்ட் பண்ணிப்ப!! இல்ல?" என்று கேட்கசிரித்தவாறே அதற்கும் ஆமோதிப்பாக தலையாட்டினான்மணிஇருவரையும் மாறி மாறிப் பார்த்தான் மைதாமாவிடம் சிக்கி சீர் அழியப்போக்கும் அந்த அப்பாவிசிரித்தவள்மணியிடம் தேங்க்ஸ் என்றாள்இருவரிடமும் கை கொடுத்துவிட்டுஅங்கிருந்து கிளம்பினான்மணிகாரில் ஏறியதுமேஅவனது முகம் இருண்டதுஅவன் முகத்தைப் பார்த்தவர்கள்சற்றுமுன் எளிருகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்

அரை மணி நேரம் கழித்துரெசிடென்சி ஹோட்டலின்அறை எண் 303ல்சோபாவில் அமர்ந்தவாறுஅருகில் இருந்த டேபிளில்அவனும்மதுவும்மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தான்மனம் விட்டுச் சிரித்தால்நொடியே அவனது குற்ற உணர்ச்சியும்அவன் மனதின் ஏக்கமும்அவன் உயிரைப் பிடித்து குலுக்க ஆரம்பித்துவிடும்மது இல்லாமல் தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைஅவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாஅல்லது அவள் இல்லாத மகிழ்ச்சி உலகத்துக்காக அவன் போடும் வேடமாஎன்பதை அவன் மட்டுமே அறிவான்.

*************

மணியின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள்.

குலதெய்வம் கோவிலிலும்அவனது  பெரியப்பாவின் சமாதியிலும்வணங்கிவிட்டுபழனி வீட்டில் இருந்தனர்அனைவரும்எப்பொழுதும் தனது பெரியப்பாவின் சமாதிக்குச் சென்றால்தனியாக இருந்து விட்டுவரும்மணிக்குஇன்று அப்படி இருக்க தோன்றவில்லைமொபைலை எடுத்துநோண்டிக்கொண்டிருந்தான்ஒரு மனிதனின்முழு வாழ்க்கைக்குமான அனுபவங்களைகடந்த ஏழு வருடங்களில் அவனுக்கு கிடைத்து விட்டதைப் போல தோன்றியதுஅவனுக்குமுன்புபோல் மனம் அலைபாய வில்லைஒருவாராகவாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து இருந்தான்இருந்தும் ஒரு சின்ன எதிர்பார்ப்புமதுவிடம் இருந்து ஒரு வாழ்த்து செய்தியோஒரு அழைப்போவந்து விடாதா என்றுஅப்படி வந்தால்அதன் பின் அவர்களுக்குள்ளான உறவுஎப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம்அவன் யோசிக்க விரும்பவில்லைதானே மதுவுக்கு அழைத்து பேசலாமாஎன்றுகூடஒரு நொடி யோசித்துபின் அந்த யோசனையை அரைநொடியில்நிராகரித்தான்அலைபேசியின் தொடுதிரையில்கழுத்தில் மாலையுடன்அவனும்மதுவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவனின் உதடுகளில்இதுபோதும் வாழ்க்கைக்கு என்பது போல்ஒரு திருப்தியான புன்னகைகண்களை சில நொடிகள் மூடிமூச்சுவிட்டவன்மீண்டும் ஒருமுறைஅந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டுதொடுதிரையை அனைத்து வைத்தான்.

அம்மாதாத்தாஆச்சீ என்று மூவருடன்இரவு உணவை உண்டு முடித்தவன்சிறிது நேரம் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுஎழுந்துஅவனது அறைக்கு வந்தான்கட்டிலில் படுத்திருந்தவன் மனது முழுவதும்அவனது பதினெட்டாவது பிறந்தநாளின் நினைவுகள்அது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்த அதே அளவு ஏக்கத்தையும் கொடுத்ததுஎதேனும் ஒரு அதிசியம் நிகழ்ந்துகாலையில் விழித்து எழும் பொழுதுமதுவை ஆனத்துக் கொண்டுபதினெட்டு வயது மணியாகரெஸிடெனஸியின்அறை என் 303 ல் விழிக்க மாட்டோமா என்று அவன் மனம் எங்கித்தவித்துசுத்தமாக தூக்கம் வரவில்லைஇன்று தூக்க மாத்திரை உதவியுடன் தூங்குவதில்லை என்றுஉறுதியாக இருந்தான்கதவு திறக்கும்சத்தம் கேட்டு திரும்பசுமா அவனைப் பார்த்து சிரித்தவாறு வந்தாள்.

"இன்னும் தூங்கலையா மா?" மகனைஅம்மா என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள்சிரித்தான்

சுமாவின் மனதில்மகனின் கல்யாணத்தைக் குறித்து பேசவேண்டும் என்ற எண்ணம்அவன் கால்மாட்டில் உட்காரதனது காலை நகர்த்திஅவளுக்கு இடம் கொடுத்தான்.

"அதுக்குள்ள உனக்கு 25 வயசு ஆயிடுச்சு!!" என்று சொன்னவள்மகனைப் பார்த்து சிரித்தாள்.

தனது தாய் தன்னிடம் எதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன்எழுந்து அமர்ந்தான்ஏற்கனவே மகனின் கல்யாணத்தைக் குறித்துதனது தந்தையிடம் பேசி இருந்தாள்அதற்கு அவர்இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று சொல்லஅதில் உடன்பாடு இல்லை சுமாவுக்குஇனியாவதுஒரு தாயாக முடிந்த மட்டிலும் தன் மகனுக்கு செய்யவேண்டியதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற ஏக்கம் ஆவல் மனதில்ஆனால்அவளைக் காட்டிலும்மணியை சரியாக புரிந்து வைத்திருந்தார்அவனது தாத்தாஇருவரின் மனதிலும் ஏக்கம்சுமாவுக்கு மகனின் மானவாழ்வு குறித்த ஏக்கம் என்றால்அவனுக்கோஅவனது பதினெட்டாவது பிறந்த நாளின் நினைவுகள் ஒருபுறம் என்றால்சுமா அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்தது அவனது மனதில்இதே போன்றதொரு இரவில் தூக்கத்தில் தவறிப்போன அவனது பெரிய ஆச்சீயின் நினைவுகள்மதுவும்அவனது பெரிய அச்சீயும் அவனது வாழ்வில் ஏற்படுத்திய வெற்றிடம்அந்த வெற்றிடம் கொடுத்திருந்த ஏக்கம்அந்த ஏக்கம் அன்னையின் மடியை வேண்டியதுதன் தாயின் மடியில் படுக்க வேண்டும் என்ற ஏக்கம்கண்டிப்பாக மறுக்க மாட்டாள் என்று அவன் உணர்ந்து இருந்தாலும்ஏனோ தயங்கினான்பின் என்ன நினைத்தானோசுமாவின் மடியில்அவளுக்கு முதுகு காட்டிதலை வைத்துப் படுத்தான்கடந்த சில மாதங்களாக ஒருவருக்கொருவர் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாலும்தாய்க்கும்பிள்ளைக்குமானமுதல் நெருக்கம்இதுநெக்குருகிப் போனால் சுமாஅவள் பேசவேண்டும் என்று நினைத்தது  எல்லாம்மொத்தமாக மறந்து போயிருந்ததுஅனைத்தையும் மறந்தவள்மகனை தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

***************

இன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன்நாக்பூரி ஒரு நட்சத்திர விடுதியில் அமர்ந்து இருந்தான்மணி

"சார்!! எல்லாரும் வெயிட் பண்றாங்க!!" என்று அவனது உதவியாளர் சொல்லஎழுந்து அறையை விட்டு வெளியேறினான்.

அன்று காலைநிறுவனத்தின் சார்பில்இரண்டாவது சோலார் பவர் பிளான்ட்க்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்து முடிந்திருந்ததுமகாராஷ்டிராவின்வடகிழக்குப் பகுதி விதர்பாதனி மாநிலம் கோரிக்கையின் பொருட்டுஅவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பது வழக்கம்அடிக்கல் நாட்டு விழாவின் போதுஅப்படி செயல்பட்ட அமைப்பு ஒன்றுபெரிய அளவில் போராட்டத்தைஅடிக்கல் நாட்டுவிழா நடந்த இடத்தில்நடத்தியதுஅது சம்பந்தமாக பேசுவதற்கு தான்அந்த விழா நடத்தும் பொறுப்பேற்று நடத்திய ஆட்களைகூட சொல்லியிருந்தான்அவன் அறைக்குள் நுழைந்ததுமே அதுவரை இருந்த சலசலப்புகள் அடங்கியதுகாலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவுடன்இன்று நடந்த விழாவிற்கு பொறுப்பானவர்களைஒருமுறை சுற்றி நோக்கினான்

.


"சார்!! ஒரு வாரத்துக்கு முன்னாடியேஅவங்ககிட்ட பேசிகாம்பரமைஸ் பண்ணியாச்சு!!கைநீட்டி காசும் வாங்கிட்டாங்க!!"  

"மூணு மாசத்துல ஆசெம்ப்லி எலக்சன்மூணு டிஸ்ட்ரிக்ட்லஎப்படியும் ஒரு பத்து தொகுதிகளில்அந்த அமைப்புரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு!! அவங்கள கொஞ்சம் கவனமாததான் ஹாண்டில் பண்ணனும்!!" 

"கூப்பிட்டு மறுபடியும் பேசலாம்!!"

"இந்த எலக்சன்லஎதிர்க்கட்சி ஜெய்க்கிறதுக்குத் தான் அதிகமா வாய்ப்பு இருக்கு!!,  ஆனால் இந்த தடவை கலெக்ஷன் பண்டஸ்எதிர்க்கட்சிக்கு அதிகமாக கொடுத்து!!, ஜெயிச்சதும் இவங்களா ஆஃப் பண்ணிரலாம்!!" என்று ஆளாளுக்குஅவர்களுக்கு தோன்றிய யோசனைகளைச் சொன்னார்கள்.

"ஒருவேளை இந்த அமைப்பு ஒரு பத்து இடத்துல ஜெயிச்சா?" பொதுவாக கேட்டான் மணி

"ஜெய்ச்சதுக்கு அப்புறம் அவங்களுக்குகாசு கொடுக்கலாம்!!" என்று ஒருவர் சொல்ல அவரை பார்த்து சிரித்தான்.

"எதிர்க்கட்சிக்கு ஃபண்ட் அதிகமா  கொடுங்கஅந்த அமைப்பு ஒரு இடத்தில் கூட ஜெயிக்க கூடாது!!" என்றான் மணி.

"ஒருவேளை அதையும் மீறி அவங்க ஜெயிச்சாரொம்ப பிராப்ளம் பண்ணுவாங்க!!" தனது கருத்தை தெரிவித்தார் ஒருவர்.

"அப்ப அவங்க ஜெயிக்காம இருக்குறதுக்குஎன்னலாம் பண்ணுனுமோஅத்தனையும் பண்ணுங்க!! காசு வாங்கிட்டு நாணயம் இல்லாம செயல் படுறவாங்ககொள்கைனு வந்தாலும் நாணயம் இல்லாமத்தான் செயல் படுவாங்க!!" என்றான்

தொழில் விஷயங்களில் அவனுக்குள் இருந்த நெருப்பின் கணல்சிறிதும் குறையாமல் இருந்தது.

*************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக