http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 48

பக்கங்கள்

திங்கள், 22 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 48

 இரண்டு மாதம் கழித்துநேத்ராவின் வீட்டில்நீண்ட நாட்களாகஇருவரும் மணியைஅவர்களது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்கஒருவழியாக இன்றுதான் முதன்முதலாக அவர்களது வீட்டிற்கு வந்திருந்தான்ஞாயிறு மதிய உணவை முடித்துக் கொண்டுமூவரும் கதையை அடித்துக் கொண்டிருந்தனர்

.


"டீ குடிக்கிறியா?" என்று கேட்ட,

நேத்ராவைப் பார்த்துகுடிக்கிறேன் என்று தலையசைத்தான்மணிஅவள் எழுந்து சென்றதும்மணி பார்த்து சிரித்த பிரதீப்பின்மணியை கூர்மையாக பார்த்தவாறு,

"நான்!!, ஒன்னு கேட்டா!! தப்பாஎடுத்துக்க மாட்டியே?" கேள்வியுடன் நிறுத்தியவன்பின் 

"மன்னிக்க முடியாத தப்புனு!!, ஒன்னு இருக்கா டா?" சீரியஸாகவே கேட்டான் பிரதீப்அதற்கும் சிரித்தான்மணி.

"இல்ல!!, எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும்!! உன்ன அவளோஇல்லஅவள நீயோமன்னிக்க முடியாத தப்புனு ஒன்னு இருக்காஎன்ன?" மீண்டும் கேட்டான் பிரதீப்இந்த முறைகொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்மணிஅவனின் சிரிப்பின் போலித்தனத்தை உணர்ந்த பிரதீப்பும் விரத்தியாக சிரித்தான்

"பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணிட்டு!! இப்ப திருந்திட்டேன்னு சொல்லிட்டா!!, அந்த அயோக்கியன்யோக்கியமாககிட முடியுமா?" என்று மணியின் சிரிப்பில் இருந்த வலிபிரதீப்பை அதற்கு மேலும்அதைப்பற்றி பேச விடவில்லை.

யாரு யோக்கியன்யாரு அயோக்கியன்?” என்று கேட்டவாறு வந்த நெத்ராவிடம்ஜினாலியின் திருமானதிற்கு சென்ற கதையைச் சொல்லஅவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்

*********

"எப்படி இருக்கா?" வீட்டை விட்டு வெளியேறிஅவனது காரின் அருகில் சென்றதும்திரும்பி வழியனுப்பவந்த நேத்ராவைப் பார்த்து கேட்டான்.

"நல்லா இருக்காயூஸ்ல இருக்கா!!"

"பேசினியா?" மதுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்டான்.

"பேஸ்புக்கில் போட்டோ பார்த்தேன்!! நானும் அவகிட்ட பேசி வருஷம் ஆச்சு!! கடைசியா அவ கல்யாணத் தன்னைக்கு பேசினாது தான்அவளும்அதுக்கப்புறம் பேசலநான் ஒரு கோவத்துல விட்டுட்டேன்!!" 

"முடிஞ்சாஎனக்காக ஒரு தடவை பேசு!!" என்றவனிடம் 

"சரி நான் அவகிட்ட பேசுறேன்!! மாயா யாரு? அன்னைக்குநான்உன் ஆபீஸ் வந்தப்ப!!, கதவை திறந்திட்டு வந்தாளேஒரு பொண்ணு!!, அவதான் மாயா வாஎன்று கேட்ட நேத்ராவிடம் இல்லை என்று தலையசைத்தவன்

"அவ பேரு ஸ்ரீ!!" சிரித்தான்

"யார் அந்த பொண்ணு?" கண்களை குறுக்கி மணியைப் பார்த்து கேட்டாள்நேத்ரா.

"அது ஒரு பெரிய கதை!!, இன்னொரு நாள் சொல்றேன்!!' என்று சிரித்தான்.

"அப்ப மாயா?" குழப்பமாக கேட்டாள்

"நேரம் வரும்போது கண்டிப்பா அவள காட்டுறேன்!! சிரித்தவன்அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றான்.

****************

நீகழ் காலம்

மணியின் பெயர் அழைக்கப்படகலந்தாய்வு மேடையில் எறியதும்பலத்த கைதட்டல்சரித்தவன்ஏற்கனவே அமர்ந்திருந்த இருவரிடம் கைகுலுக்கிவிட்டுதனக்கான இருக்கையில் அமர்ந்தான்

இரண்டு மணி நேரம் கழித்துகாரில் பயணித்துக் கொண்டிருந்தான்பதட்டமாக இருந்தான்மணிகாதுக்கு அழைபேசியைக் கொடுத்திருந்தவன்அந்த அழைப்பு எடுக்கப்பட்டதும்

மது யுஸ்ல இருக்கானு சொன்ன?”

அதுக்கு இப்போ என்ன?”

"அவ இங்க டெல்லில இருக்கா!! இப்போ!!” என்றவன் எதிர்முனையில் பேசியவரின் பதிலை எதிர்பார்க்காமல்அழைப்பை தூண்டித்தான்

ஐந்து வருடங்களுக்குப் பிறகுமீண்டும் சீகிரெட்டை எடுத்துப் பத்த வைத்தவன்புகையை உள்ளிலுத்தான்மூக்கின் வழியேஉள்ளிலுத்த புகையை வெளியேற்றினான்

மதுமீண்டும் அவன் வாழ்வில் வந்தாள்

மணி அமர்ந்திருந்த விமானம் கோயம்புத்தூர் நோக்கி பறந்து கொண்டிருந்ததுமணியின் பதட்டம் கொஞ்சம் தணிந்திருந்ததுஆனால்இரண்டு மணிநேரத்துக்கு முன்வாழக்கை அவனுக்கு கொடுத்த அதிர்ச்சியில் இருந்துஇன்னும் அவன் முழுமையாக மீண்டுருக்கவில்லைமுடியுமாஎன்றும் தெரியவில்லைஅந்த கருத்தரங்கத்திற்கு செல்லும் பொழுதுமிகவும் தெளிவான மனநிலையுடன் இருந்தான்அந்தக் கருத்தரங்கத்தில் கேட்கப்படப் போகும் கேள்விகளில்ஒரே ஒரு கேள்விக்கான பதிலை அளிக்கத்தான்அந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளவே ஒப்புக் கொண்டு இருந்தான்.

சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டது போலவேஅந்த அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் தோற்றிருந்ததுஅதைத் தொடர்ந்துஎதிர் கட்சி ஆட்சிக்கு வரமணியின் நிறுவனத்தின்ப்ராஜக்ட் கட்டுமானப் பணிகள்வெகு ஜோராக நடந்து கொண்டிருந்ததுகட்டுமான பணியின் போது ஏற்பட்டஒரு சிறு விபத்தில்ஏழு பேர் மரணித்துவிடஅதை பெரும் பிரச்சனையாக்கிதேர்தல் தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டதுஅந்த அமைப்புஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பதுவியாபார கணக்குகளை காட்டிலும்உளவியல்உணர்வுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்அந்த விபத்தின் காரணமாகவும்அதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகவும்மணியின் நிறுவனத்தின் பெயர் ரொம்பவே அடி வாங்கியிருந்ததுஅதை சரிக்கட்டும் முயற்சிகளின்ஒரு பகுதியாகஅவன் இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சம்மதித்தான்இளம் வயதில் வெற்றி கொள்பவர்களை பெரிதாக தூக்கிக் கொண்டாடும் சமூகம்நமதுஇந்திய சமூகம்சமூகத்தின் அந்த இயல்பைதன் வயதைதனக்குச் சாதகமாகப் பயன்படுத்திஊடகங்களின் வழியேதனது நிறுவனத்தின் முகமாகதன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்அவனுக்குஅந்த விபத்தைப் பற்றிய கேள்விக்கான பதிலைஏற்கனவே தயாராக வைத்திருந்தான்அதை மட்டுமே மனதில் ஓட்டியபடிதெளிவாக அந்த மேடையில் அமர்ந்திருந்தான்.

இவனோடு சேர்த்து மொத்தம் நான்கு இளம் தொழில் முனைபவர்கள்அந்த கருத்தரங்கத்தில் விருந்தினராக பங்கேற்றிருந்தனர்நான்கு விருந்தினர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்அவருக்கு ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயதுநாட்டின் மிகப் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவர்மணியைஅறிமுகப்படுத்திப் பேசும் பொழுதுஅவனது நிறுவனத்தின் செயல்பாடுகளை காட்டிலும்அவனது வயதையே முன்னிறுத்தி பேசினார்எதை மணி தன் பலமாக நினைத்துக் கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நினைத்தானோஅதைவைத்தே அவனை சிறுமைப் படுத்துவது போலவஞ்சப் புகழச்சியில் பேசினார்இந்தியத் தொழில் துறையின் "போஸ்டர் பாய்", "மேன் வித் தி மிடஸ் டச்என்று அவர் மணியை அறிமுகம் செய்து பேசியது நல்ல எண்ணத்தில் கூட இருக்கலாம்மணியை அறிமுகப் படுத்திப் பேசும் பொழுது அவர் உபயோகப்படுத்திய "வொண்டர் கிட்வார்த்தை அவனை உரச கூடாத வகையில் உரசிஅவன் உணர்வுகளை தட்டி எழுப்பியதுசிலர் நொடிக்கு முன் அமைதியாக இருந்த மணியின் மனதுகொந்தளித்துக் கொண்டிருந்ததுஅந்த ஒரு சொல்லால்.

ஒருசொல்ஒருவரது வாழ்க்கையில் பெரிய உள்ள குழப்பத்தை ஏற்படுத்தும்அமைதி இழக்கச் செய்யும் என்பது அந்த வார்த்தைஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பைமுக்கியத்துவத்தை கொண்டே உணர முடியும்திகட்டாத இன்பத்தையும்உயிர்கொல்லும் வலி என இரண்டையும்அவன் வாழ்வின் பதின் வயதிலேயே கொடுத்திருந்தான்அந்த "வொண்டர் கிட்மணிகண்டன்சில நொடிகள்தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறக்கும் அளவுக்குஅவனது புலன்கள் மரத்துப் போய்விட்டனசில நொடிகளில்தான்சுதாரித்துக் கொண்டுஅறிமுகத்திற்கு நன்றி சொன்னாலும்அவனது உள்ளமோ எப்பொழுது இந்த மேடையில் இருந்து இறங்குவோம்? என்று நினைக்க ஆரம்பித்திருந்தது.


                         


தொகுப்பாளர்: "இந்தியத் தொழில்துறையின் "வொண்டர் கிட்ன்று உங்களை குறிப்பிடுவதை எப்படி பார்க்கிறீர்கள்?"

முதல் கேள்வியே அவனது மனசஞ்சலத்தை அதிகப்படுத்தியது"முட்டாள்கள் தான் அதிசயத்தை நம்புவார்கள்" என்று சொல்லு இன்று கொந்தளித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு

மணி: "நான் அதிசயங்களை நம்புவதில்லை!!" புன்னகைக்க முயன்று தோற்றுப் போனான்.

இரண்டு வருடங்களுக்கு முன்வரை உணர்வுகளை கட்டிப்போடுவதில் இணை இல்லாமல் இருந்தவனஉணர்ச்சிப் பிழம்பாய் இருந்தான்இன்னும் விளக்கமாக பேசுவான் என்று எதிர்பார்த்திருந்த தொகுப்பாளர்அவன் பதில் சொல்லி முடித்து விட்டான் என்று உணர்ந்ததும்மற்ற மூவரிடமும்தன் அடுத்த சுற்று கேள்வியைகேட்க ஆரம்பித்தார்.

தொகுப்பாளர்: "கடந்த ஒன்றரை வருஷத்துலஉங்களோட சொத்து மதிப்பு 46 மடங்கு!!, 46 சதவீதம் இல்ல46 மடங்கு உயர்ந்திருக்கு!! இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?"

ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்தவனைமேலும் தூண்டியதுஅவனை நோக்கி கேட்கப்பட்டஇரண்டாவது கேள்விநால்வருக்கு ஒரே மாதிரியான கேள்விதான் என்றாலும்வார்த்தைத் தேர்வுகளில் தெளிவாக அடித்தார்

அந்த தொகுப்பாளர்.


மணி: "ஒரு சின்ன திருத்தம், 46 மடங்கு உயர்ந்ததுஎன்னோட சொத்து மதிப்பு இல்லஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் சந்தை மதிப்பு!!தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பதிலளித்தாள்.

தொகுப்பாளர்"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

தொடர்ந்து சீண்ட பட்டான்மணி.

மணி"என்னோட சொத்துன்னு நான் நம்புவது!! ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸில் நேரடியாகவும்மறைமுகமாகவும்வேலை பார்ப்பவர்களைத் தான்!!. அப்படி பார்த்தாகடந்த மூணு வருஷத்துலஎன்னோட சொத்து மதிப்பு எட்டு மடங்கு உயர்ந்திருக்கு"

தன்னிலை இழக்கும்விழும்பில் இருந்தான்மணிஅவன் சொன்னது உண்மையா அல்லது பொய்யா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

தொகுப்பாளர்"உங்களுக்காக வேலை பாக்குறவங்கதான் உங்களோட சொத்துனு சொல்றீங்க!! மகிழ்ச்சி!! ஆனாரெண்டு மாசத்துக்கு முன்னாடிநாக்பூரில்உங்க கம்பெனி கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல ஏழு பேர் இறந்திருக்கிறார்கள்இல்லையா?"

உண்மையிலேயேமணிஇந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வதுஅந்த தொகுப்பாளருக்கு பிடிக்கவில்லை தான்போல.

மணி"அது ஒரு விபத்துவிபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை!! எங்க சைடுல நிர்வாக ரீதியா இன்னும் முழுமையான விசாரணை முடியல!! அதே மாதிரி சட்ட ரீதியான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்!! ஆதனால்இதைப்பற்றிஇதுக்கு மேலவிரிவாகப் பேசுறதுஇப்போசரியாக இருக்காது!! நீதிமன்ற விசாரணை முடிந்ததும்விரிவா பதில் சொல்றேன்!!”

எந்த கேள்விக்காகஇந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்தானோஅந்தக் கேள்விக்கு மிகவும் சுருக்கமாகவே பதிலளித்தான்இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு!!குடும்பத்தில் வேலை பார்க்கும் தகுதி உடையஅத்தனை பேருக்கும் வேலை!!படித்து கொண்டு இருப்பவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டது!! என விரிவானஒரு பதிலை வைத்திருந்தான்ஆனால் அப்படி தான் சொல்லப்போக்கும் பதிலில் இருந்தேமீண்டும் கேள்வி கேட்கப்பட்டால்எங்கேதன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோஎன்ற பயத்தில்மிகவும் சுருக்கமாகவே பதிலளித்தான்.

தொகுப்பாளர்"22 வயதில்உங்க குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?"

மணி"ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர்!! முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே வயது ஒரு சவாலாக இருந்திருக்கும்!! Business is part of our dinner table conversations!! சின்ன வயசுல இருந்தே தொழில் சூழலில் வளர்ந்த எனக்குஎப்படியும் ஒருநாள் அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தெரியும்!! அதனால அந்த நேரத்துலஎன்னை நிரூபிக்கணும்ங்கிற உறுதி மட்டுதான் மனசுல இருந்துச்சு!!"

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இருக்கக் கூடாது என்றுதான்மணியின்பின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

தொகுப்பாளர்"முன்னாடி ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதுஉங்ககிட்ட வேலை பாரக்கிறவங்க தான்உங்களுடைய சொத்துனு சொன்னிங்க!! ஆனா இந்த வருஷம்எழு தனி விமானங்கள் வாங்கி இருக்கீங்க!! உங்க பேச்சும்!!உங்களோட செயல்பாடும்!! முரணாக இருக்கே?" கருத்தரங்கின் கருத்தேதடம் மாறிக் கொண்டிருந்தது.

மணி"உங்க கையில கட்டியிருக்கிற வாட்ச்சோடா மதிப்பு என்ன?"

சில நொடிகள் தன்னை நிதானித்துக் கொண்டவன்தொகுப்பாளரின் கேள்விக்குமுதல் முதலாகசரியான பதிலளிக்கத் தயாராகியிருந்தான்.

தொகுப்பாளர்"6000 டாலர்ஸ்!!" மணி கேள்வி கேட்கதொகுப்பாளர் பதிலளித்தார்.

மணி"அது தொலைஞ்சி போனாஅதத்தேடி உங்ககிட்ட கொடுத்தாஅதிகபட்சமா எவ்வளவு சன்மானம் தருவீங்க?"

கருத்தரங்கின் சுவாரசியத்தை அடுத்த கேள்வியில் கூட்டினான்மணி.

தொகுப்பாளர்"ஒரு இரண்டாயிரம் ரூபாய்!!" பதில் சொல்லசிரித்தான்.

மணி"என் கையில் இருக்கிறது Aldo வாட்ச்!!அதிகபட்சம் 150 டாலர் இருக்கலாம்!!இது தொலைஞ்சி போனாதிரும்பக் கிடைக்கிறது!! என்னோடதனிப்பட்ட மொத்த சொத்தையும் செலவு பண்றதுக்குஒரு நொடி கூட யோசிக்க மாட்டேன்!! இரண்டு பேர் கையில் இருக்கிறது நேரத்தைமட்டுமே காட்டக்கூடிய வாட்ச்தான்!! ஆனாஅந்த வாட்ச் மேலரெண்டு பேருக்கும்வேற வேற மாதிரியானமதிப்பு இருக்கு!!அதே மாதிரிதான்சிலருக்கு சொத்து மதிப்புங்கிறது பணமாக இருக்கலாம்!! ஆனாஎனக்கு ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸில் வேலை பார்க்கிறவங்க தான்!! வாழ்க்கையிலநான் எதை அதிகமா மதிக்கிறேன்னு எனக்கு தெரியும்!! வாழ்க்கையைப் பத்தின என்னோட மதிப்பீடுஅடுத்தவர்களின் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது!!"

சிரித்தவாறே மணி சொல்லி முடிக்கஅரங்கத்தில் பலத்த கைதட்டல்கைதட்டல் அடங்கியதும் மீண்டும் தொடர்ந்தான்மணி.

மணி"இப்போ உங்கள் கேள்விக்கு பதில் சொல்றேன்!! ஏழு விமானங்கள் வாங்கியதுஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் தேவைக்காக!!மணிகண்டன்என்ற தனி மனுஷனோடதேவைக்காக இல்லை!!.

கொஞ்சம் பெரிதாகவே சிரித்தான்எதிராளியை அடித்து வீழ்த்துவதைவிடவும்வெற்றிபெருவது சாவாலானதுஅப்படி ஒரு சாவலான வெற்றியத்தான் பெற்றுவிட்டதாக நினைத்தான்மணியின் மனது இலகுவாக இருந்தது.

அதற்குப் பின்பு கேட்கப்பட்ட இயல்பாக கேள்விகளுக்கு இயல்பாகவும்நேர்த்தியாகவும் பதிலளித்தான்.

ஒரு மணி நேர உரையாடலுக்கு பின்.

தொகுப்பாளர்: "நிகழ்ச்சியின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம்கடைசியாக இரண்டு பர்சனல் கேள்வி்!!. நாலு பேருக்கும் ஒரே கேள்விதான்!!. நீங்க நாலு பேருமே சின்ன வயசிலேயே பெரிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டவர்கள்!! அதனால சொந்த வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகள்னு ஏதாவது இருக்கா?


                         


மற்ற மூவரும் தங்களின் நிராசைகளை கூறமணிதனக்கு அப்படி எதுவும் இல்லைசிறுவயதிலிருந்து தொழில் தான் தன்னுடைய ஒரே ஆசை என்று சொல்லி முடித்தான்.

தொகுப்பாளர்: உங்கள் வெற்றியின் ரகசியம் என்னபுதிதாக தொழில் புரிய விரும்புபவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

மற்ற மூவரும் தங்களின் எண்ணங்களை சொல்லமணியின் முறை வந்தது.

மணி"உண்மைய சொல்லனும்னாஇந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை!! என்று நிறுத்தியவன் சிரிக்கஇந்த அரங்கத்திலும் சிரிப்பொலி.

"எங்க நாலு பேர்ல, Mr.மான்ஜீத் தவிர்த்துமீதி மூணு பேருமேமூன்றாவது அல்லது நான்காவது தலைமுறை தொழில் முனைவோர்கள்!! நான் தொழிலில்ல ஈடுபட ஆரம்பிச்சப்பவேவலுவான அடித்தளத்தோடவழிகாட்ட சரியான ஆட்கள் எனக்கு துணையா இருந்தாங்க!!. அதனாலமற்ற இரண்டு பேரும் தப்பா எடுத்துக்கலானஇந்தக் கேள்விக்கு Mr.மான்ஜீத்தான்பதில் சொல்றதுக்கு தகுதியானவர்னு நான் நம்புறேன்!!" 

மணி சொல்லமீண்டும் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கைத்தட்டல் அடங்கியதும் தொடர்ந்தான்மணி.

"உழைப்பு!!. ஒரு செயல்லநாம இறங்குறப்பஅது கேக்குறஉழைப்பை நாம குடுக்கணும்!! ரொம்ப கிளிசேவான பதிலா இருந்தாலும்வெற்றிக்கான அத்தனை ரகசியமும் கிளிசேவாகத்தான் இருக்கும்னு நான் நம்புறேன்!!மீண்டும் அரங்கத்தில் கைதட்டல்.

தொகுப்பாளர்: "இந்த கருத்தரங்கத்தின் நிறைவாகஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்துஒரு புகைப்படம் காட்டப்படும்!!அதைப் பற்றிய உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம்!!என்று சொன்னதும் அங்கிருந்த திரையில் ஒன்றன் பின் ஒன்றாக புகைப்படங்கள் காட்டப்பட்டது

இந்தியாவில்இதுபோன்ற சென்டிமெண்டலான சடங்குகளைஎந்த துறையைச் சார்ந்தவர்களாலும் தவிர்க்க முடியாதுசினிமா கிசுகிசு போன்ற ஒரு அரிப்பு அதுமற்ற மூவரும் தங்களுக்கு காட்டப்பட்ட புகைப்படத்தை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளகடைசியாக மணியின் முறையும் வந்ததுதிரையில் காட்டப்பட்ட படத்தை பார்த்ததும் மணி அதிர்ந்தான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து ஒரு புகைப்படம் பகிரப்படும் என்பதும்அது பற்றிய கருத்துக் கூற வேண்டும் என்பதும் முன்பே அவனுக்கு சொல்லப்பட்டது தான்மணியும் அவன் மலை இறங்கும் ஒரு புகைப்படத்தைத் தான் இந்த கருத்தரங்கில் பகிர்வதற்காக கொடுத்திருந்தான்ஆனால் திரையில் காட்டப்பட்டதோகையில் நாலு இன்ச் வெற்றிக் கோப்பையுடன்கழுத்தில் மெடலுமாக19வயது மணிசிரித்துக்கொண்டிருந்தான்அதுவரை இலகுவாக இருந்தது மணியின் உடலின் மயிர்களெல்லாம் விடைத்து நின்றதுஉடல் சிலிர்த்துக் கொள்ளமனது இறுக்கமானதுஆறு வருடங்களுக்கு முன்வரைமது எப்படி அவன் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருந்தாளோஅதேபோலத்தான் டென்னிஸ்ம்சொல்லப்போனால்அன்புகக்காகஅரவணைப்புக்காக ஏங்கிக் கிடந்தவனுக்கு தேவைப்பட்ட அங்கீகாரத்தையும்வெளிச்சத்தையும்அவனுக்கு முதன் முதலில் கொடுத்தது டென்னிஸ் தான்மதுவைக் கொடுத்ததே டென்னிஸ் தான்மதுவை இழந்ததற்குமணியின் தவறொடுமற்றவர்களின் தவறும் காரணமாக இருந்திருந்தாலும்அவன் டென்னிஸை இழந்ததற்கானமொத்த காரணமும் அவன் மட்டுமேமணிமீண்டும்ஒரு இழப்பின் வலியை உணர்ந்தான்.

"சோ யு அர் அ டென்னிஸ் பிளேயர்?" தொகுப்பாளரின் கேள்வி அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்ததுதலையை மட்டும் அமோதிப்பாக ஆட்டினான்முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகளை அவனால் மறைக்க இயலவில்லை.

"இன்னும் சர்ப்ரைஸ் முடியல?" மர்மமாக புன்னகைத்தபடிதொகுப்பாளர் திரையை நோக்கமணியின் பார்வையும் திரையை நோக்கி சென்றது

திறையில் இருந்த புகைப்படம் விரிவடைந்ததுசற்றுமுன் வெற்றிக் கோப்பையுடன் காணப்பட்ட மணியின் அருகேஅவனிடம் தோற்ற எதிராளி இருந்தான்மணியிடம் தோற்ற எதிராளியின் புகைப்படம் காட்டப்பட்டதும்அந்த கருத்தரங்கு கூட்டத்தில்ஒரு சிறு சலசலப்புஆச்சரியத்தை வெளிப்படுத்தும் மனித சப்தங்கள்.

"உங்க ஆப்போனெண்ட் யாருன்னு தெரியுமா?" தொகுப்பாளர் கேட்ட கேள்விக்குதெரியாது என்பது போல் தலையசைத்தான்

"என்னோட ஞாபகம் சரியா இருந்தாhe is Spanish!!" என்றான் மணிபெரிதாக ஏதோ ஒன்று வந்து விழப்போகிறது என்ற பதட்டம் அவன் மனதில்முதன் முதலாக பதட்டப்படுபவனின் மன நிலையில் இருந்தான்

"உங்கள்ல யாருக்காவது தெரியுமா?" தொகுப்பாளர்கூட்டத்தைப் பார்த்து கேட்க

"felino munez" என்று கோரசாகசத்தம் வந்தது.

"த்ரீ டைம்ஸ் கிராண்ட்ஸ்லாம் சேம்பியன்!!" தொகுப்பாளர் சொல்லஅரங்கத்தில் பலத்த கைதட்டல்

நம்பமுடியாமல்இடதும் வலதுமாக தலையை அசைத்துக் கொண்டடிருந்த மணியின் வாயிலிருந்து "வாவ்!! வாவ்!!" என்ற வார்த்தைகள்அவனது கட்டுப்பாடில்லாமல் வந்து கொண்டிருந்தது.

சொல்ல முடியாத உணர்வுகள் மனதை நிறைத்திருக்கபல வருடங்களுக்குப் பின்முதல் முறையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருந்த மணியைமொத்தமாக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதுஅவனது மனதுகைத்தட்டல் அடங்க வெகுநேரம் ஆனதுகைதட்டல் அடங்கிய பின்னும் நம்பமுடியாத மணியின் தலையசைப்பு நிற்கவில்லைஒருவாராக சுதாகரித்துக் கொண்ட பின்.

"இந்த மேட்ச் விளையாடும்போதுஅவருக்கு பதினாறு அல்ல பதினேழு வயசுதான் இருக்கும்!! என்ன விட மூணு வயசு கம்மி!! அந்த ஏஜ்ல பிசிகல் க்ரோத் பெரிய அட்வண்டேஜ்!! ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஜெயிச்சேன் ஞாபகம்சொற்கள் அவன் சொல்லுக்கு கட்டுப்படாமல் போகஉலறினான்தன் தாடையை தடவ ஆரம்பித்தான்.

"இல்ல!!, நீங்க அந்த மேட்ச்லஸ்டிரேட் செட்ல ஜெயிச்சிருக்கிங்க!!" தொகுப்பாளர் மணியின் கூற்றை திருத்தவிரக்தியாக சிரித்தான்தீடிர் என்று கிடைத்த இந்த அங்கீகாரம்அவன் மூளையை முடக்கியதுஏதாவது சொல்லிஇந்த அங்கீகாரத்தை தட்டிக்கழிக்க வேண்டும் என்று சிந்தித்தான்

"லோக்கல் டோர்னமேண்டலரஞ்சிலசச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை நிறைய பேர் எடுத்திருக்கலாம்!! அதுக்காகஅவர் விக்கெட் எடுத்த எல்லாரும்அவரை விட திறமைசாலினு சொல்ல முடியாதுஇல்லையாஅந்த மாதிரிதான் இதுவும்!! தயவு செய்துஇந்த மாதிரி ஏதாவது போட்டோஸ் இருந்தாடெலீட் பண்ணிடுங்க!!. It's not fair for a champion!!" வலிந்து சிரித்தவாறே சொல்லி முடித்ததும்சிரிப்பலை அந்த அரங்கத்தில்அதைத் தொடர்ந்துகைதட்டல் ஒலிஅந்த அரங்கத்தை நிறைத்ததுஎனோ அந்த கைதட்டல்அவன் உள்ளத்தின் படபடப்பை மேலும் கூட்டியது

"அந்த டைம்லஎன் வாழ்க்கையே......" ஆரம்பித்தவன்தீடிர் என்று நிறுத்தினான்ஒரு நிமிடம் கண்களை மூடி பெருமூச்சு விட்டுவிட்டுதொடர்ந்தான்.

"அந்த டைம்ல என் வாழ்க்கையே அந்த மேட்ச்சோடா முடிவுல தான் இருந்துச்சின்னு நம்பினேன்!!. Loosing was not an option for me!!. ஜெயிச்சே ஆகனும்ற கட்டாயம்!! நான் கடைசியா விளையாண்ட டென்னிஸ் மேட்ச்ம்அதுதான்!! அந்தப் படத்துல இருக்குற கப்அந்த டோர்னமேண்ட் பிரைஸ் மணி-செக்னு எல்லாத்தையுமேமும்பை ஏர்போர்டில் தொலைச்சிட்டேன்!!" மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பேச்சை நிறுத்தினான்.

"எதுக்காகஅந்த டர்ணமெண்ட்ல ஆடுனேனோஅதமொத்தமா தொலைச்சிட்டேன்!! அதுக்காக எத்தனையோ நாள் கண்ணீர்விட்டு அழுதிருக்கேன்!! ஆனா இப்ப யோசிச்சுப் பார்த்தா, I don't deserve it!! அதனாலதான்அது என் கையை விட்டுப் போச்சு புரியுது!!" கண்களில் தெரிந்த வலியை மறைத்துக் கொண்டுவிரக்தியாக சிரித்தான்பெரும் மன பாரம் இறங்கியதைப் போல இருந்தது அவனுக்கு

"வெற்றியோட ரகசியம் என்ன கேட்டீங்கல்ல!! I'm a right hand player!! அந்த மேட்ச் முடிஞ்சு கொஞ்ச நாளிலேஒரு ஆக்சிடெண்ட்!! வலது கையில்உள்ளங்கையிளையும்விரல்கள்ளையும்ஏழு எழும்பு முறிவு!! டென்னிஸ் ராக்கெட்டை சரியா பிடிக்கிறதுக்குஆறு மாசம் தேவைப்பட்டிருக்கும்!! இதுதான் வாழ்க்கை என்று நம்பியிருந்த ஒன்ன என்னோட தவறால் இழந்துவிட்டேன்!! அந்த இழப்பை ஈடுகட்டத்தான்இப்ப வரைக்கும் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்!! என்னோட பிரண்டு ஒருத்தங்க சொன்னாங்க, that I am an early bloomer!! அவங்க சொன்ன போதுசும்மா சொல்றாங்கன்னு நெனச்சேன்!! யோசிச்சுப் பார்த்தாஅவங்க சொன்னது எல்லாம் உண்மைதான்னு தோணுது!! இந்த தடவை அந்த early bloomமை இன்னும் கொஞ்ச நாள் தக்கவச்சுக்கணும்னு உழைச்சுக்கிட்டு இருக்கேன்மணியின் உதடுகளில்ஒரு சிறு புன்னகைமீண்டும் அந்த அரங்கத்தில் கைதட்டல்

அந்த மேடையில் இருந்து இறங்கிய மணிக்கு வெளிக்காற்று வாங்க வேண்டும் என்று தோன்றியது

அவனது கண்கள்அவனது உதவியாளர்களை தேடியதுசில நொடிகள் அவனது தேடலை உணர்ந்துஅவனை நோக்கி வந்தனர்மணி, exit எங்கே என்று கேட்கஅவனை அழைத்துச் சென்றனர்வெளிக்க காற்றை சுவாசிக்கஅவனது மனதின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது


"ஹலோ!! மிஸ்டர் மணிகண்டன்!!" என்ற சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.

தலையில் டர்பனும்முகத்தில் முக்கால்வாசி தாடியுமாகஅந்தக் கருத்தரங்கில் இவன் பாராட்டிப் பேசிய, 35 வயதுமான்ஜீத் சிங்இவனை நோக்கி கை நிட்டினார்அருகிலேயே டர்பனும்தாடியுமாகஇன்னொருவன்கை கொடுததான்மணியின் உதவியாளர்கள்கொஞ்சம் தள்ளிச்சென்று நின்றார்கள்

"மை பிரதர்பல்விந்தர்!!" அருகில் இருந்தவனைஅறிமுகப் படுத்தினார்மணிஅவனுடனும் கைகுலுக்கினான்.

"தேங்க்ஸ்!!" என்ற பல்விந்தரைகேள்வியாக பார்த்தான் மணி.

"For your compliments!!" (என் அண்ணனை பாராட்டி பேசியதற்காக), அவன் சொன்னதும்சிரித்தான்மணி

"It's purely business Balvinder!!.... I have 18% stake in your brothers company!!,.... marketing strategy!! (அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை!! இது வியாபார தந்திரம் பல்விந்தர்!!, உங்க அண்ணன் கம்பெனில முதலீடு பண்ணி இருக்கேன்!! 18 சதவிகிதம்)!!" என்று சிரித்தவாறே கண்ணடித்தான் மணிசம்பந்தமே இல்லாமல் கேளிக்கையான ஒரு மூடில் இருந்தான்அண்ணன்தம்பி இருவரது முகத்திலும் ஈயாடவில்லை.

"Just kidding!! your brother deserves all the praise and more!! (சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்!! அத்தனை வார்த்தைகளும் தகுதியானவர் உங்க அண்ணன்!!)" என்று சொல்லி மீண்டும் கண்ணடித்தான்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக