http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 8

பக்கங்கள்

புதன், 17 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 8

 அந்த டிரைன் நாட்களுக்கு பின்னால் எங்கள் நெருக்கம் இன்னும் அதிகமானதுசாம்பியன்ஷிப் போட்டிகளுக் அப்புறம்பானுவின் கவனம் படிப்பில் திரும்பியதுஸ்கூல் ஃபைனல் இயர் வேறேஅவள் படிப்பினில் படு சுட்டிவார விடுமுறைகளில் அக்கடமி வருவாள்அதுவும் ரிலாக்ஸ் செய்யரெண்டு கேம் ஆடுவாஆனால் நான் இன்னும் தீவிரமாக பயிற்சி செய்தேன்அடுத்தவருடம் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று.


ஸ்கூல்லில் எப்போதும் போல ஒன்றாக சாப்பிடுவது, டெய்லி ஸ்கூல் முடிஞ்சு போகும் பொது என் ஸ்கூல் பேக்க எடுத்துட்டு போயிருவா, நான் பிரக்ட்டீஸ் முடிச்சுட்டு அவள் வீட்டுக்கு போய் அவளுடன் சேர்ந்து படித்து விட்டு, சைக்கிள்ல என் வீட்டுக்கு வந்துருவேன், காலையில மறுபடியும் பிரக்ட்டீஸ் முடிச்சிட்டு, வீட்டுக்கு வந்து கிளம்பி சைக்கிள் எடுத்துக்கிட்டு அவ வீட்டுக்கு போயி, அவளுடன் சேர்ந்து ஸ்கூல், இப்படித்தான் போனது மீதி வருடம்.



முதல் முறையாக சம்மர் ஹாலிடேஸ்க்கு கொஞ்சம் சோகத்துடன் சென்றேன் பழனிக்கு. போகும் வரைக்கும் இருந்த சோகம் தாத்தாவுடன் சேர்ந்து சுற்ற,, காணாமல் போனது, எண்ண பானுவ கொஞ்சம் மிஸ் செய்தேன். ஆன தினமும் கண்டிப்பா குறைந்தது ஒரு தடவையாவது பேசிறுவேன், இடையில் மெசேஜ் வேறு. அவள் மெடிக்கல் காலேஜ் கவுன்சிலிங் ரெண்டு நாள் முன்னாடி, தனக்கு சென்னை MMCயில் சீட் கண்டிப்பா கிடைக்கும்னு, அதனால அங்கேயே சேரப்போவதாக பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னாள், அவள் சென்னை போவதாக சொல்லிதும் நான் பேசாமல் இருக்க

“ஹலோ, டேய் கேக்குதா"

“ம்ம்"

“உண்மையிலேயே சென்னைக்கு போறியா?”னு நான் பரிதவிப்புடன் கேட்க 

“அம்மா அங்கதான் சேரச் சொல்றாங்க"

“ஏன், இங்க கோயம்புத்தூர்ல தான் காலேஜ் இருக்கே, இங்கயே படியேன்!”கெஞ்சினேன் 

“டேய் தமிழநாடலயே பெஸ்ட் காலேஜ் டா அது"னு என் எண்ணம் புரியாமல் பேசினாள். 

கவுன்சிலிங் சென்று வந்தவள், சொன்னதைப் போல் சென்னை MMCயில் சேர்ந்து விட்டதாக சொன்னாள். வாழ்வின் சுயம் எனக்கு முதன்முதலாக உரைத்த தருணம் அது. அடுத்தவருடம் ஸ்கூல் தொடங்க, திரும்ப கோவை வந்தேன், பானு அக்கா இல்லாத கோவை என்பதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராய் இல்ல. அவள் காலேஜ் செல்லும் நாளும் வந்தது, அவள் எவ்வளவோ சொல்லியும் நேரில் வந்து வழியனுப்ப முடியாதென்று மறுத்துவிட்டேன். 

அன்று மாலை டென்னிஸ் அக்கடமிக்கு எப்போதும் போல் செல்ல இன்ப அதிர்ச்சி, அங்கே அவள் எனக்கு முன்பாக வந்திருந்தாள், விளையாடிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்தவள் ஹாய்னு சிரித்து விட்டு விளையாடுவதை தொடர்ந்தாள். நான் குழப்பமாக இருக்க, அங்கேயே உக்காரந்து வேடிக்கை பார்த்தேன், கேம் முடியவும் வந்தவள், 

“என்ன சார்,,, மூஞ்சி உம்முணு இருக்கு?” நான் பதில் சொல்லாமல் மூஞ்சை திருப்பிக் கொண்டேன். 

“ஓகே,, பேசலனா போ,,, உனக்காக சென்னை MMC சேரமா,,,, இங்க கோயம்புத்தூர்ல காலேஜ் சேர்ந்தா , ஃபர்ஸ்ட் டே விஷ் பண்ண கூட வரல?”னு அவள் சொல்ல, 

என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை, அகம் மகிழ்ந்த நான் குனிந்த படியே இருந்தேன். அருகில் அமர்ந்தவள், என் தோள்களில் கை போட்டு, இன்னொரு கையால் என் முகத்தை பிடித்து திருப்பியவள், என் கண்கள் கலங்கியிருப்பதை கண்டவாள் முகத்தில் எரிச்சல்,

“எல்லாத்துக்கும் அழுகைதானா? பொம்பள பிள்ளைங்க கூட இப்படி அழமாட்டோம்"னு சொல்ல, லேசாக சிரித்தவன் 

“உண்மையிலேயே சென்னை போகலையா?”

“என் போகனுமா?”, நான் வேண்டாம் என்று தலையாட்ட, என் கண்ணீரைத் துடைத்தவளிடம் 

“அப்போ எதுக்கு அன்னைக்கு போய் சொன்னிங்க?”னு கேட்க 

“சும்மாதான், உண்மையிலேயே அக்கா மேல பாசமா இருக்கியானு செக் பண்ணலாம்னு" அவள் சொல்ல, செல்லமாக அவளை அடித்து விட்டு, அவள் மீது சாய்ந்து கொண்டேன். 

------------------------------

அன்று எனக்கு பதினெட்டாவது பிறந்தநாள்

அடுத்த மூன்று ஆண்டுகளில்இந்த கதையை முன் நகர்த்திய முக்கியமான சில நிகழ்வுகளும்உரையாடல்களும் 

அடுத்த இரண்டு வருடங்களும் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் என் கேட்டாகிரியில் வென்றேன்.

காலேஜ் சென்றதில் இருந்து பானுவின் டென்னிஸ் ஆர்வம் குறைந்தது, மருத்துவம் அதைவிட அவளுக்கு பிடித்ததே காரணம்.

வங்க, போங்கனு அவளை அழைத்த நான் வா! போ! என்று அழைக்க தொடங்கி இருந்தேன் நான், அவளின் வற்புறுத்தலால். 

அம்மா கூட இப்பொழுதெல்லாம் என்னிடம் கொஞ்சம் சகஜமாக பேச அரம்பித்திருந்தாள். 

ஜினாலி ஜெய்ன், ஒரு வட இந்திய பெண், புதிதாக எங்கள் டென்னிஸ் கிளப்பில் சேர்ந்திருந்தாள், சும்மா செம்ம ஹாட் மச்சி, பானுவின் வயது இருக்கலாம், விளையாடிக் கொண்டிருக்க, நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க


“என்னடா?,, வயசுக்கு வந்துட்டே போல?” என் தோல்மேல் கைபோட்டு கேட்டாள் பானு,, நான் அசடு வழிந்தபடி சிரிக்க 

"பாக்க கும்முணு இருக்கா? இல்ல?”னு மறுபடியும் என்னைச் சீண்ட "ச்சீ"னு நான் சொல்ல, எங்கள் பேச்சின் எல்லைகள் இன்னும் கொஞ்சம் விரிவடைந்தது. இது நடந்தது நான் பத்தாவது படிக்கும் போது.

------------------------------

நான் டிவெல்த் வகுப்பு படிக்கும் போது 

ஜினாலி ஜெய்ன், விளையாடிக் கொண்டிருக்க, நான் எப்போதும் போல் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன், பானு என்னை நோக்கி வந்தாள், வந்தவள் டென்னிஸ் ராக்கெட்டால் என் முகத்தில் வலிக்காதவாறு அடித்தவள்

“ச்சீ,, அசிங்கமா இல்ல,, இப்படி ஜொள்ளு வாடிய பாக்குறதுக்கு?”னு என்னை முறைத்தவாரே கேக்க 

“இதெல்லாம் வாலிப வயசு, அசிங்கமே படமாட்டோம், தம்பி சைட் அடிக்கும் போது, ஒரு நல்ல அக்கானா அப்படியே கண்டுக்காத மாதிரி போகணும், இப்படி அட்வைஸ் பன்னி அறுக்கக் கூடாது"னு நான் நக்கலாக கூற, 



                    


இந்த முறை கொஞ்சம் வலிக்கும் படியாகவே தலையில் அடித்தால், 

“ஆ,,,வலிக்குது கா"னு மறுபடியும் அடிக்க வந்தவளை, எழுந்து தடுக்க, மறுபடியும் அடித்தாள், இந்த முறை டிக்கியில் பலமாக 

“எத்தன தடவ சொல்றது, அக்கானு கூப்பிடாதனு?” என்று சொல்லி,

ஆமா, இப்போ கொஞ்ச நாள இப்படித்தான், 

நான் லேவென்த் லீவு முடிஞ்சு வரும் போது, அவளை விட கொஞ்சம் உயரமாக வளர்ந்திருந்தேன், திடீர் வளர்ச்சி, அதில இருந்து இவள் கேட்டு கொண்டு, இல்ல,, இல்ல,, கெஞ்சிக் கொண்டு இருக்கிறாள், 

"அக்கானு கூப்பிடாத! பேர் சொல்லிக் கூப்பிடுனு!”, நான் அக்கானு கூப்ட்டா, சுத்தி இருக்கவங்க எல்லாம் அவளுக்கு ஏதோ அதிக வயசுனு நெனப்பாங்கனு ஒரு எண்ணம் அவளுக்கு 

“பேர் சோல்லிலாம் கூப்பிட முடியாது, அக்கானு தான் கூப்பிடுவேன்"இந்த முறை நானும் அவளை போன்றே முருக்கிக் கொண்டு 

“டேய்,, பிளீஸ் டா, அக்கானு கூப்டாதே"னு பாவமாக கெஞ்ச, கொஞ்சம் இறங்கினேன்,

“ஓகே,, இனிமே அக்கானு கூப்பிடல"னு சொல்ல, முகம் மலர்ந்து என் கன்னத்தை கிள்ள அவள் கை நீட்ட, நக்கலாக சிரித்து 

“அதுக்காக பானுனு எல்லாம் கூப்பிட முடியாது, வேணும்னா ஆண்ட்டினு கூப்பிடுறேன்"னு சொல்லி நான் ஓட்டம் எடுக்க, என்னை அடிக்க தூரத்தினாள் 

------------------------------

இன்னொருநாள் 

“டேய் அந்த சுமேஷ் பையன் இருக்கான்ல, திடீர்னு வந்து “I love you” ங்குறான்!"னு அவள் சொல்ல 

“நீ என்ன சொன்ன?”னு கூலா நான் கேட்க 

“என்ன சொல்லிறுப்பேன்னு சொல்லு?”அவள் கேட்க, 

கொஞ்சம் பதறி விட்டேன், ஒரு வேலை ஓகே சொல்லிறுப்பலோ என்று, என்னதான் எனக்கு அப்பொழுது கொஞ்சம் மெச்சூரிட்டி வந்திருந்தாலும், அவள் வாழ்க்கையில் முதன்மையான ஆண் என்ற இடத்தை இன்னொருத்தனுக்கு விட்டுத்தர தயாராகி இருக்கவில்லை. கொஞ்சம் காலவரமான மனதுடன் 

“என்ன சொன்ன மது?” 

“முடியாதுணு சொன்னேன்!" சொல்லி சிரித்தாள், நான் முறைக்க, என் கன்னத்தை கிள்ளியவள் 

"நீ இன்னும் மாறவே இல்ல, அதே பொறாமை!, கவலைப்படாத உனட்ட சொல்லாம, உனக்கு பிடிக்காதே யாரைக்கும் லவ் பண்ண மாட்டேன்"னு சொல்ல, பூரித்துப் போனேன். 
------------------------------
மற்றொருநாள்

“மதுவா?, வேண்டாம் நீ பானுனே கூப்பிடு!”. நான் அவளை பேர் சொல்லி முதல்முறையாக அழைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள்.

“ஏன்"

“என்ன யாருமே அப்படிக் கூப்பிட்டதில்லை! நீ அப்படி கூப்பிடா கூட திரும்ப மாட்டேனோ என்னவோ!”

“ஓகே,,, உன் இஷ்டம்,,,, மது வேண்டாம்னா, அக்கானு தான் கூப்பிடுவேன்"னு சொல்லி நான் முரண்டு பிடிக்க, கை எடுத்து கும்பிட்டாள்

“நீ மதுனே கூப்பிடு,,,,, நான் பழகிக்கிறேன்"னு சொல்ல,

“அது"னு நான் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.

ஸ்கூல் ஃபைனலியர்யின் பொது நடந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினேன், என் டென்னிஸ் வாழ்க்கையின் முதல் சறுக்கல், காயம், ஹம்ஸ்ட்ரிங் லிக்மெண்ட் கிழிந்திருந்தது. குணமடைந்ததும், கடும் பயிற்சி, மறுபடியும் காயம், இந்த முறை பேக் ஸ்ட்ரெஸ், இரண்டு மாதங்கள் கழித்து நடந்த டோர்ணமென்ட் வென்றபோது, கால்களில் சிறு வலி, சோதித்துப் பார்த்ததில், ஷின் ஸ்ட்ரெஸ்.

அடுத்தடுத்து காயங்களால், கொஞ்சம் பதறிய தாத்தாவின் வற்புறுத்தலால், லண்டன் சென்றேன் மருத்துவ பரிசோதனைக்கு. பரிசோதித்த மருத்துவ குழு, சொன்னது, நான் என் உடலை அளவுக்கதிகமாக வருத்திக் கொண்டேன், டென்னிஸ் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டும் இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது அவர்கள் சொல்லும் பயிற்சிகளை தொடரவேண்டும், கோர் ஸ்ட்ரெந்த் இம்ப்ரூவ் பண்ண வேண்டும் என்று, இல்லாவிட்டால் டென்னிஸ் வாழ்க்கையை மறந்திட வேண்டும் என்று. முதலில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் வேறு வழியில்லாமல் உடலை வலிமையாக்க அவர்கள் சொன்னதையும் விட அதிகமாக பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். 

என் காயங்கள் காரணமா? இல்லை உண்மையான மகன் மீது கொண்ட அக்கரையானு தெரியல, அம்மா என்னிடம் கொஞ்சம் உரிமை, நிறைய அக்கறையோடு பழகினாள். தினமும் சிறிதாவது கதை அடிக்கும் அளவுக்கு. 

------------------------------

காலேஜ் முதல் வருடம்

கோவை GCTயில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்திருந்தேன், தாத்தா வெளிநாடு சென்று படிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்திருந்தேன்.

இன்னும் டென்னிஸ் பயிற்சி முழு வீச்சில் ஆரம்பிக்க வில்லை, டெக்னிக் இமப்ரவவேமெண்ட், கோர் உறுதியாக்க ஜிம், ஜூனியர் பசங்களுக்கு அக்கடமில பயிற்சி, அப்புறம் சும்மா தினமும் யாருடனாவது ரெண்டு கேம் ஃப்ரெண்ட்லியா. 

காலேஜ் சேர்ந்த சில தினங்கள் கழித்து எனக்கும், பானுவுக்கும் சாட்டிங்கில் நடந்த உரையாடலின் ஒரு பகுதி 

"ஏண்டா, இங்க மொக்க காலேஜ்ல இன்ஜினியரிங் சேர்ந்த?”

“ஹலோ, GCT ஒண்ணும் மொகக்க காலேஜ் இல்ல"

“ஒரு வரத்துலேயே காலேஜ் மேல பாசம் பொங்குது!”

“ஆமா, எம்பிபிஎஸ்கக்கு கோயம்புத்தூர்ல உங்க காலேஜ்னா, இன்ஜினியரிங்க்கு எங்க காலேஜ்"

“ஓகே, ரெம்ப பீத்தாத, நான் அத கேக்கலா, ஆப்ராட் போய் இருக்கலாமே?”

“நீயும் தான் சென்னை போய் இருக்கலாம், நீ என் போல?, அது மாதிரி தான்"

“எனக்காகவா?”

“இல்ல"

“அப்புறம்”

“என் பாப்பாவுக்காக"

“பாப்பாவா யாரு அது"

“அது ஒரு லூசு, என் கூட இப்போ சேட் பண்ணிக்கிட்டு இருக்கு"

ஒரு கோவ ஸ்மைலி அவளிடம் இருந்து 

“சாரி அக்கா"

மறுபாடியும் நிறைய கோவ ஸ்மைலி

“சாரி பாப்பா"

“luv u, நீ தான் என் பாப்பா"

“உனக்கு நான் பாப்பானா, எனக்கு நீயும் பாப்பாதான்"

“luv u" 

“me too”

இப்படி மது எனக்கு பாப்பாவானாள். 

--------------------------------------------------

“டேய் இப்போ நீ வரியா? இல்ல நான் போகவா?” எரிச்சலில் கத்தினாள் மது, வரலனு கை காட்டிட்டு, ஆடுவதிலேயே குறியாய் இருந்தேன், பத்து நிமிடம், கேம் முடிந்தது, 

“திஸ் இஸ் நாட் ஃபேர் மணி, யு ஷுட் கோ பிட் சாஃப்ட் ஆண் மீ!” னு பார்க்கிங் நோக்கி நடக்கும் போது குழைந்தாள்,,, ஜினாலி ஜெய்ன், அவளுடன் தான் ஆடி ஜெய்த்திருந்தேன்

“நோ வே!, டோன்ட் எக்ஸ்பெக்ட் மீ டூ கோ சாஃப்ட் வித் அ ப்யூடிஃபுல் கேர்ள் லைக் யு"னு நானும் வழிய 

“ச்சீ நாட்டி" என்னை செல்லமாக அடித்தாள், மதுவை பார்த்ததும் என்னிடம் "பாய்" சொல்லிவிட்டு சென்றாள், 

“நீ அப்போவே போறேன்னு சொன்ன"னு நான் நக்கலாக அவளப் பார்த்து கேக்க, எதுவும் சொல்லாமல் முறைத்தபடி அவள் வேஸ்பா-வை ஸ்டார்ட் செய்தாள், எதுவும் சொல்லாமல் ஏறி அமர்ந்தேன்.

--------------------------------------------------

என்னை முறைத்துக் கொடிருந்தாள் மது, 

“பிளீஸ் மது! ஏதாவது ஐடியா குடென்?”னு ஜினாலி ஜெய்ன்ன மடக்க இவளிடம் ஐடியா கேட்டதுதான் காரணம், 

“பிளீஸ் மது"னு நான் மறுபடியும் கெஞ்ச, முறைத்தவள் 

“என்ன படம் பாக்க விடு, கடுப்படிக்காத"னு அவள் சூடாக சொல்ல, நான் அமைதியானேன். 

ஆம் இப்பொழுதெல்லாம் ஜினாலி ஜெய்ன் மீது ஒரு சிறு மையல்,,, எனக்கு. நைட் ஷோ படம் முடிந்து வீட்டுக்கு வரும் பொழுது இடையில் நிறுத்தி டீக்குடித்துக் கொண்டிருந்தோம். 

“அவ எல்லாம் ஒரு ஃபிகர்-ஆ, நல்ல மைதா மாவு மாதிரி"னு, மது காரினுள் அமரந்தவாரே கூற, கதவருகே வெளியே நின்ற நான், அவளை லேசாக சிரித்துக் கொண்டு 



“கரெக்டா சொன்ன மது, எனக்கு மைதா மாவுதான் புடிக்கும்"னு நாக்கல சொல்ல, 


முறைத்தவாரே டீயை குடித்து முடித்தவள், கிலாசை என்னிடம் நீட்டினாள், நான் என் டீயை குடித்தவாறே கிலாசையும், காசையும் குடுத்து விட்டு வந்து கார் கதவை திறக்க, அது உள்ளிருந்து லாக் செய்ய பட்டிருந்தது. டிரைவர் சீட்டில் இருந்த மது, என்னைப் பார்த்து நக்கலாக சிரித்தாள். நான் அவளை முறைக்க, அவள் காரை எடுத்தாள், எடுத்தவள் ஒரு பத்தடி சென்று நிறுத்தினாள். நான் என் இடுப்பில் இருகைகளையும் ஊன்றி காரை முறைத்தேன், கார் ரிவர்ஸில் வந்தது, என் அருகே நின்றது, நான் அசையாமல் நின்றேன். கண்ணாடியை இறக்கியவள் 

“இப்போ வாரிய? இல்ல கிளம்பட்டுமா?”னு அவள் முறைக்க, நானும் முறைத்துக் கொண்டு 

“கிளம்பு, கிளம்பு, உங்க தயவு ஒண்ணும் தேவை இல்ல, இப்போ ஃபோன் பண்ண, என் மைதா மாவு பறந்து வருவா,, பாக்குறியா?”னு கேக்க, என்னை எரிப்பது போல் பார்த்தாள், கொஞ்சம் ஓவரா போய்டோம்னு எனக்கு தோண, அமைதியாக காரில் ஏறி அமர்ந்தேன், நான் டோர் அடைக்கும் முன் வண்டி பறக்க, அந்த விசையில் நான் தள்ளாடினேன், பதறி சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு அவளப் பார்த்தால், 



அவள் என்னை முறைப்பதை நிருத்தவில்லை.

--------------------------------------------------

“டேய், அது ஒரு மொக்க ஃபிகர்!!,,, அவகிட்ட போய் விழிஞ்சுக்கிட்டு இருக்க?”, ஜினாலி ஜெய்னிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்த என்னை, கையை பிடிச்சு இழுத்துக் கொண்டு போகும் போது சொன்னாள் மது, நான் அவளை செல்லமாக முறைத்து

“இங்க பாரு!,, உனக்கு வேணா அவள பிடிக்கமா இருக்கலாம்!,,,அதுக்காக மோக்க ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, அவ ஒரு குமத்தா!”னு சொல்ல, நின்றவள், என்னை கேவலமா பாத்து

“ஏண்டா?,,,,, உன் டேஸ்ட் இவ்வளவு கேவலமா இருக்கு? வேற நல்ல அழகான பொண்ணே கிடைக்கலையா உனக்கு?”னு சொல்ல

“முதல்ல உன் சகவாசத்த கட் பண்ணனும், இல்ல உன் கண்ண செக் பண்ணனும், இவள விட அழகான பொண்ணு எனக்கு தெரிஞ்சு இல்ல!”னு சிரிப்பு கலந்த கோபத்துடன் சொல்ல,

“பண்ணி, இவ உன்னவிட மூணு வயசு பெரிய பொண்ணு!”னு சொல்லியவள்

“வயசெல்லாம் ஒரு ப்ராப்ளமா!”னு நான் கேக்க 

“ஒரு ஃப்ரீ அட்வைஸ் சொல்றேன் கேளு, வயசு அதிகமான பொண்ணுங்னா ரெம்ப டாமினேட் பண்ணுவாளுக, உனக்கு ஓகேவா?” அவள் கேக்க, நான் சிரித்தவாரே தலையாட்ட, என் தலையில் தட்டியவள்

"உன் வயசுல, இல்ல உன்னவிட சின்ன பொண்ண பாத்து சைட் அடி!” அவ சீரியஸா அட்வைஸ் பண்ண, நான் கை எடுத்து கும்பிட்டு

“போதும்,,,, வண்டிய எடு, என்னால முடியல!”சொல்ல, சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினோம், நான் என் வீட்டில் இறங்கிய பின்பும் உம்மென்று இருக்க, “ஓய்" என்று அழைத்தாள், நான் நிமிர்ந்து பாக்க,

“எனக்கு தெரிஞ்சு ஒரு அழகான பொண்ணு இருக்கா!, எங்க காலேஜ்ல, இன்ட்ரோ கொடுக்கட்டா?!”, அவள் கேக்க, நான் ஈ-னு இளித்தவாறு தலையாட்ட

“அய்யயே, தொடச்சுக்கோ, பொண்ணுனா ஏன்டா இப்படி அலையுரிங்க?”னு நாக்கலாக கேட்க

“அதெல்லாம் யூத் மேட்டர், உன்ன மாதிரி ஆண்ட்டிக்கெல்லாம் புரியாது!”நானும் திரும்பி நாக்கலாக சொல்ல, முறைத்தவாரே வண்டியை எடுத்தாள், நான் கூறுக்க சென்று தடுத்து

“எப்போ இன்ட்ரோ கொடுப்ப?” அசடு வழிந்து கேக்க, இப்பொழுது அவள் நாக்கலாக என்னைப் பார்த்து சிரித்து

“கொஞ்ச நாள் உன் வாலை சுருட்டிக்கிட்டு,,,, நல்ல பிள்ளையா இருந்தா,,, யோசிக்கிறேன்"னு சொல்லி அவள் வண்டியை திருக்க

“ நீ பண்ண அட்வைஸ்ல திருந்திட்டேன், இப்போ இருந்தே நான் நல்ல பிள்ளைதான்" அவள் முதுகைப் பார்த்து நான் கத்த, அவள் டா,,,டா, காட்டி விட்டுச் சென்றாள்.

--------------------------------------------------

ஏய் மதுபிளீஸ் நானும் வர்றேன்!”னு கெஞ்சிக் கொண்டிருக்ககண்டுகொள்ளாமல் மேக்கப் பண்ணிக் கொண்டிருந்தாள் 

பிளீஸ்எவ்வளோ நாலா கேக்குறன்திரும்பி பார்த்தவள்

நீ சின்னப் பையன் டாஅதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டே!" நக்கலாக சிரித்தவாரே சொன்னாள்உண்மையான கோபத்தில் முறைத்தேன்

டேய்உனக்கு இன்னும் 18 வயசு ஆகலகண்டு பிடிச்சா ப்ராப்ளம் ஆகும்!, பூரிஞ்சுக்க சும்மா சின்ன பிள்ள மாதிரி முஞ்ச தூக்கி வச்சுகக்காதேபக்க சகிக்கலா!”

நான் அமைதியாக இருக்கஎன் கன்னத்தை தடவியவள்

நீ வளந்து பெரியவன் ஆனதும்நானே உண்ண கூட்டிடு போவேணாம்இப்போ நல்ல பிள்ளையா வந்து என்ன டிராப் பணனுவியாம்!”னு நக்கலாக கொஞ்ச 

வண்டி ஓட்டும் போது மட்டும் நான் சின்னப் பிள்ளை இல்லயாஎனக்கு லைசென்சு கூட இல்ல"னு இன்னும் அதே முறுக்கக்கோடு சொல்லஎன் பதிலை எதிர்பாராமல் அவள் பாட்டுக்கு வெளியே சென்றாள்வேறு வழி இல்லாததால் நானும் அவளைத் பின் தொடர்ந்தேன்

சிறிது நேரத்திற்கு பிறகுகோவையில் இருக்கும் ஒரே பப்இப்பொழுதெல்லாம் காலேஜ் gang கூட சேந்து அடிக்கடி போகிறாள்அதன் முன்னாள் பைக்கை நிறுத்தி இறங்கிக்கொள்ளநான் முன் நகர்ந்து ஹாண்டில் பார் பிடித்துக் கொண்டு அவளை முறைத்தேன்

ஹாய் பானு"னு கோரஸா ஒரு சத்தம்அருகில் வந்தனர்இவளின் காலேஜ் gang 

பிரதீப்,,,, ரெம்ப ஆசப்படுறான்டா,,, இவனையும் கூட்டிடு போலாமா"னு என்னை காட்டி பானு கேக்க 

இந்த பிரதீப்பைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லைரெம்ப ஸீன் போடுவான்என்ன ஏதோ ரெம்ப சின்னப் பையன் போல நடத்துவான்அரசியல்வாதி ஒருத்தாரோட பையன்.

இல்ல பானுஇது மெம்பர்ஸ் ஒன்லி பப்தெரிஞ்ச என் மெம்பர்ஷிப் கேன்ஸல் பன்னிமொத்தமா பார் பன்னிருவங்கசாரிப்பா"னு இவளைப் பார்த்து இளித்துக் கொண்டேபிரதீப் கூற

“சாரி டா, நீயே கேட்டேல!,, இவன் கூட சொல்லுறான் அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டேனு!” அவள் சொல்ல மொத்த கும்பலும் என்னை பார்த்து சிரிக்க, நான் அவளைப் பார்வையால் எரித்து விட்டு வண்டியை திருக்கினேன், நான் கிளம்ப அவள் ஏதோ கத்தினாள், என் காதில் எதுவும் விழவில்லை.

என் பதினெட்டாவது பிறந்தநாளுக்கு ரெண்டு நாள் முன்புமாலை அவள் வீட்டில்அவள் அறையில்கொஞ்சம் மூட் அவுட்டில் இருந்தாள்என்னாச்சுனு கேட்ட மறு நொடி பொறிந்து தள்ளினாள் 

“அந்த சுமேஷ் டாக், மறுபடியும் ப்ராப்ளம் பண்றான், சொன்ன புருஞ்சுக்க மாட்றான்"

“என் உன் gangல தான் பிரதீப்பும், சுந்தரும் இருக்காங்களே, அவங்க ஏதும் கேக்கலையா?”


                    


“அதே ஏன் கேக்குற, பிரதீப் கோவப்பட்டு அடிக்க போக, பெரிய அதகளம் ஆயிருச்சு, நல்ல வேல எல்லாம் கிளாஸ்க்குள்ள நடந்துச்சு, இல்லன பெரிய ப்ராப்ளம் ஆயிருக்கும்"னு சொல்ல எந்த சலனமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தும் கடுப்பானாள்

“ஏண்டா எவ்வளோ பெரிய ப்ராப்ளம்னு சொல்றேன், நீ என்னவோ கதை கேக்குற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்க?"னு அவளின் கோவம் மொத்தமும் என் மீது திரும்பியது

“இல்ல மது, நீ தான சொன்ன, நான் சின்ன பையன், நெறைய விசயத்துக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு, அதுதான் இந்த விசயத்துக்கு நான் சரிப்பட்டு வருவேனா? மாட்டேனானு? யோசிக்கிறேன்?”னு நக்கலாக சொல்ல, அருகில் இருந்த தலையணையை எடுத்து என் மீது எறிந்தாள்

----------------------------

அடுத்த நாள் மதியம் எங்க இருக்கேனு கேட்டு ஃபோன் பண்ணினாள், காலையிலேயே பண்ணுவாள் என்று எதிர்பார்த்திருந்தேன், நான் காலேஜ் கேண்டீனில் இருப்பதாக சொல்ல, சில நிமிடங்களில் காண்டீனுக்குள் நுழைந்தாள் வேகமாக!, இது நான் எதிர் பக்காதது. கொஞ்சம் தொலைவிலேயே நின்றாள், என்னை முறைத்துக் கொண்டு, நான் சிரித்தவாரே அவள் அருகில் செல்ல, பளார் என்று கன்னத்தில் விழுந்த அடியில்,,, சிரிப்பு எங்கோ பறந்து போனது!, வாங்கி அடியில் வந்த கோவத்தில் நான் பேச வாயெடுக்க

“பொருக்கியடா நீ?” என்றவள்

என் கை பற்றி இழுத்தாள், நான் என் கையை உருவிக் கொண்டு முறைக்க, அவளும் முறைத்தாள், வா என்று செய்கை காட்டியவள், என் பதிலுக்கு காத்திராமல், அவள் பாட்டுக்குப் போனால், எப்பொழுதும் போல் நானும் பின் தொடர்ந்தேன். அவள் வண்டியில் ஏறி அமர்ந்து எண்ணப் பார்த்தாள், எதுவும் பேசாமல் நானும் வண்டியில் அமர்ந்தேன்.

கொஞ்சம் நேரம் கழித்து,

“சாரி சொல்லு!”னு, அவள் என்னை பார்த்து முறைக்க,


நான் எதுவும் பேசாமல் எதிரில் இருந்த சுமேஷ்-யை முறைத்தேன்,


“சாரி சொல்லு!”னு இந்த முறை கொஞ்ச சத்தம் அதிகமாக வந்தது, அவளிடம் இருந்து, நான் திரும்பி மதுவைப் பார்த்து முறைத்தவாரே

“சாரி, ஆனா மறுபடியும் இவளை தேவை இல்லாம தொந்தரவு செஞ்ச,,,, நான் மனுசனவே இருக்க மாட்டேன்"னு சொல்லிட்டு, சுமேஷின் வீங்கி இருந்த முகத்தில் லேசாய் ஒரு தட்டு தட்டிவிட்டு, விருவிரு அங்கிருந்து நடையை காட்டினேன், திமிராக.

அது திமிர் இல்லை, என் மீது எனக்கு இருந்த நம்பிக்கை, இடைப்பட்ட இந்த மூன்று வருடங்களில் என் உடலின் வளர்ச்சி, வொர்கவுட் பண்ணி என் உடலில் ஏற்றி இருந்த உரம், அப்புறம் முக்கியமாக என் பின்புலம், அதை பற்றி எனக்கு உண்டான புரிதல், அது கொடுத்த நம்பிக்கை. எனது அல்லது என் குடும்பத்தின் பின்புலம், பணவலிமையை நான் எப்போது வெளிக் காட்டிக் கொண்டதில்லை யாரிடமும், இருந்தும் எல்லோரிடமும் மறைக்கவும் முடியதல்லவா, அப்படியோ அறிந்து கொண்ட சில நண்பர்கள் வியப்பதுண்டு.

எப்படி, இப்படி ஒரு பெரும் செல்வச் செழிப்பான குடும்பத்தின் வாரிசாக இருந்து கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல், ரெம்பவும் எளிமையாக இருக்கிறேன் என்று?, சிலருக்கு அதனாலேயே என் மீது கூடுதல் விருப்பம்!. ஆனால் அவர்களுக்கு தெரியாது, இந்த எளிமைக்கு காரணமே அந்த பின்புலமும், என்னிடம் இருக்கும் பணமும் தான் என்று. இந்த சமூகத்தில் பணம் என்பது அதிகாரத்தை குறிக்கும், உண்மையான அதிகாரம் தன் கையில் இருப்பதை உணர்ந்தவர்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள், எளிமையாகவே இருப்பார்கள்.

அன்று இரவு ஒன்பது மணி, டிங்னு மெசேஜ் டோன் என் மொபைலில் இருந்து, எனக்கு தெரியும் அவளாத்தான் இருக்கும் என்று, எடுத்துப் பார்க்கவில்லை, பத்து நொடிகளில் அவளிடம் இருந்து கால் வந்தது, எடுக்கவில்லை, இத்தோடு சேர்ந்து 11வது கால், மறுபடியும் டிங்னு மெசேஜ் டோன், எடுத்து பார்த்தால் பக்கம் பக்கமாக ஏதோ அனுப்பியிருந்தாள், படித்துப் பார்க்க மனம் இல்லை. பின்ன என்னதான் நினச்சுக்கிட்டு இருக்கா! இவள சும்மா சும்மா ஒருத்தன் நோண்டுன, நான் ஒண்ணும் செய்யாம பாத்துக்கிட்டு இருப்பேன்னு நெனச்சாளோ! என்கிற கோபம்.

"லீவு மே அலோன்"னு கோவமா ரிப்ளை பண்ண

“சாரி பாப்பா!"

பாப்பா!, என்னை எப்படி வீழத்தமுடியும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள், சிறு புன்னகை என் முகத்தில்

“ம்ம்"

“இன்னும் கோவமா?”

“என்னனு சொல்லு, எனக்கு தூக்கம் வருது"

“பாப்பா" - என் சிரிப்பின் அளவு பெரிதாகியது

“லூசு"

“சாரி பாப்பா, ரெம்ப வலிச்சதா?”, அதற்கு மேலும் அவளை கெஞ்ச வைக்க மனம் இல்லாமல் கால் செய்தேன், எடுத்ததும்

“சாரி டா"என்றாள், பாப்பா வெறும் மேஸேஜில் மட்டும் தான்,

“உன் சாரி தூக்கி குப்பைல போடு, அவன்டா என்னைய சாரி சொல்ல வச்சுடல"னு நான் செல்லமாக கோபித்துக் கொள்ள, சிரித்தவள்

“உனக்கே இது ஓவரா தெரியல, அவன்ட நீ சாரியா கேட்ட?”

“பின்ன பூரிய கேட்டாங்க?”

“நீ அடிச்சப்ப கூட, அவன் என்கிட்ட வந்து கோபமா தான் பேசுனான், நீ சொன்ன சாரில, சார் என் கிட்ட சாரி கேட்டுட்டு,,, ஓடிட்டாரு"னு சொல்லி அவள் சிரிக்க

“என்ன எதுக்கு அடிச்ச?”

"லூசு, உன்ன அடிச்சுட்டு,,, நான் எவ்வளோ கஷ்டபட்டேன் தெரியுமா?, சும்மா அதையே கேக்கக்காத!,,,, நீ எதுக்கு கால் எடுக்கல”

“எதுக்குனு தெரியாத?”

“நீ என் கால எடுக்க மாட்டேனு தெரிஞ்சு தான், மதியமே ஒண்ணு போட்டேன்"னு நக்கலாக அவள் சொல்ல

“நான் கால் எடுக்க மாட்டேனு உனக்கு எப்படி தெரியும்"

“எனக்குத்தான் இத்தாலில ஜோசியம் தெரியுமே!" சொல்லி அவள் சிரிக்க, நானும் கூட சேர்ந்து சிரித்தேன், பிறகு ஏதேதோ பேசினோம்,

“ஹாப்பி பர்த்டே டா", வாட்ச்சை பார்த்தேன் 12, அவளே தொடர்ந்தாள்

“சரி காலைல ரெடியா இரு, ஷார்ப்பா எய்ட் ஓ கிளாக் உன் வீட்ல இருப்பேன்! இப்போ நல்லா தூங்கு”னு சொல்லி வைத்தாள்.

நான் அப்படியே பெட்டில் படுத்து கண்மூட, ஐந்து நிமிடம் கழித்து, டிங்னு மெசேஜ் டோன், அவள் தான்

“தூங்கிட்டியா?”



“ஆமா"

ஒரு கோப ஸ்மைலி

“பர்த்டே பாய்க்கு என்ன கிப்ட் வேணும்"

“அதுதான் நீ நாளைக்கு எனக்கு டிரைவர் வேல பாக்குறிய, அது போதும்"

கோப ஸ்மைலி அவளிடம் இருந்து

“அது ஓகே, வேற என்ன கிப்ட் வேணும்?” - அவள்

“நீ என்ன குடுத்தாலும் ஓகே"

“பிளீஸ் பாப்பா, நான் குடுக்குறது இருக்கட்டும், உனக்கு ஏதாவது ஆசை இருக்க?”

“அந்த ஜினாலி ஜெய்ன மடக்க ஏதாவது வழி சொல்லேன்"னு மெசேஜ் போட்டுட்டு, எனக்குள் சிரிக்க

ஒரு செருப்பு ஸ்மைலி வந்தது, தொடர்ந்து கொஞ்ச கோப ஸ்மைலி

பலத்த யோசனைக்கு பின் கேட்டேன்

“எனக்கு உன் பாப்பாவா,,, டிரைன்ல இருந்தோமே,,,அந்த மாதிரி ஒரு ரெண்டு நாள் எங்கயாவது போகானும்"

ஹார்ட் ஸ்மைலி வந்தது, தொடர்ந்து

“luv u “

“me too”

“காலைல ரெடியா இருக்கு, இப்போ தூங்கு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக