http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வல்லவன் - பகுதி - 9

பக்கங்கள்

புதன், 17 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 9

 அன்று எனக்கு பதினெட்டாவது பிறந்தநாள்


காலையிலேயே அம்மா வந்து என்னை எழுப்பி விட்டுபிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு சென்றாள்சிறிது நேரத்தில் தாத்தாவும் ஃபோன் செய்து வாழ்த்து சொல்லஆச்சிகளிடமும் பேசிவிட்டுபத்து மணிக்குள் பழனிக்கு வருவதாக சொல்லி வைத்து விட்டுரெடி ஆகலாம் என்று எத்தனிக்கையில் என் மொபைல் அடித்துபார்த்தால் பிரதீப்மதுவின் கிளாஸ் மேட்எடுத்து ஹலோ சொல்ல 

ஹாப்பி பர்த்டே ப்ரோ!", “ப்ரோ?", இவன் இப்படி கூப்பிட்டதே இல்லையே என்கிற குழப்பத்தோட

நான் 


தாங்க்ஸ் ப்ரோஉங்களுக்கு எப்படி தெரியும்?"னு கேக்க 

பானுதான் சொன்னஉங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள்னுரெண்டு பேரும் பழனி போறீங்க,,,உங்க தாத்தா வீட்டுக்குனுஅவன் சொல்ல 

என்ன ப்ரோதிடீர்னு வாங்கபோங்கனு?” நான் கேக்க 

பதினெட்டு வயசு ஆகிடிச்சுஅடுத்த எலக்ஷன்ல ஓட்டுப் போட போறீங்கஒரு வேல அடுத்த எலக்ஷன்ல நின்னா ஓட்டு போடணும்லசொல்லி அவன் சிரிக்கஇவன் இப்படி எல்லாம் பேச மாட்டானேஎன்னாச்சு இவனுக்குகுழப்பத்திலேயே,,, நானும் ஒப்புக்கு சிரிக்க 

ஓகே ப்ரோரெம்ப தாங்க்ஸ்தப்பா எடுத்துக்காதீங்க,, நான் கெளம்பனும்ஈவினிங் கூப்பிடுறேன்"னு சொல்லி ஃபோன வைக்க போக 

ப்ரோ,,, ப்ரோ,,,வச்சுரதிங்க ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"னு அவன் சொல்லமறுபடியும் குழம்பியவாரே 

சொல்லுங்க"னு சொல்லஒரு சின்ன அமைதிக்கு பின் பேசினான் 

ப்ரோஒரு ஹெல்ப்!” அதுதானே பாத்தேன்எலி அதுக்கு அம்மணமா ஒடுதுனு புரியஅவனே தொடர்ந்தான்,

நான் பானுவ லவ் பண்ணுறேன்அவ என்ட பேசுரதபழகுறத,,, வச்சு பார்த்தஅவளும் என்ன லவ் பண்ற,,, மாதிரிதான் தோணுது,,, நேரடியா சொல்றதுக்கு ஒரு பயம்உங்ககிட்ட தான் அவ ரெம்ப குளோஸ்,,, இத பத்தி உங்ககிட்ட ஏதாவது சொல்லிறுக்காளா?”னு அவன் கேக்கஅதிர்ச்சியில் எனக்கு பேச்சு வரவில்லைநான் எதுவும் சொல்லாமல் இருக்கசிறிது நேர இடைவெளிக்கு பின்

ப்ரோப்ரோஇருக்கீங்களா?”னு அவன் கேக்க 

“ எஸ்ப்ரோஇருக்கேன்"னு நான் அதிரச்சயில் இருந்து மீளாமல் சொல்ல 

ஏதும் சொல்லிருக்காளா,, எண்ணப்பத்தி?, ப்ரோ!” னு மறுபடியும் அவன் கேக்க 

இல்லையே ப்ரோஇதுவரைக்கும்அந்த மாதிரி எதுவும் சொன்னதில்ல"னு நான் சொல்ல

ஓகேப்ரோ,,,, விடுங்க”னு கொஞ்சம் ஏமாற்றத்தில் சொன்னவன்சில நொடிகள் கழித்து 

ப்ரோரெண்டு பேரும் இன்னைக்கு தனியா தானே இருப்பீங்கமுடிஞ்ச சும்மா பேசுற மாதிரி அவ யாரையாவது லவ் பண்றாளானு மட்டும் கேட்டு சொல்லுங்களேன்பிளீஸ்"னு 

அவன் கெஞ்ச நான் ஓகேனு சொல்லஅவன் தாங்க்ஸ் சொல்லி ஃபோனை வைத்தான்நான் அப்படியே திரும்பவும் பெட்டில் உட்கார்ந்தேன்என்னதான் நான்சைட் அடித்தாலும்ஒரு பெண்ணை லவ் பண்ண தயாரா இருந்தாலும்அவளும் ஒருவனை லவ் பண்ணலாம்சைட் அடிகக்கலாம்என்பதை பற்றி நான் சிறிதும் சிந்தித்திருக்கவில்லைசிந்திக்க தயாராகவும் இல்லைஎந்த சகோதரனும் அப்படி சிந்திக்கவும் மாட்டான்எனக்கு பெரும் குழப்பமாகிப் போனதுஎன்ன செய்வதென்று தெரியவில்லைஅவளுக்கென்று ஒருவன் வந்து விட்டால்அவள் வாழ்க்கையில் நான் யாராக?, என்னவாக இருப்பேன்எவ்வளவு தொலைவில் இருப்பேன்என்கிற கேள்விகள் என் மனதைப் போட்டு பிசைந்தன

அதுவும் பிரதீப் வேறு என்னுடன் பேசும் பொழுது மிகவும் நம்பிக்கையுயன் பேசியது, அந்த கேள்விக்கான விடைகள் மிகவும் குறுகிய காலத்திலேயே கிடைக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணத்தை விதைத்தது. இவ்வாறான சிந்தனைகளில் மூழ்கி இருக்க, என் ஃபோன் அடித்து, மதுதான் அழைத்தாள்

ஹலோ"

என்னடா பர்த்டே பேபி,,, ரெடியாஇன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்"னு அவள் சொல்லஅப்பொழுது தான் நான் இன்னும் குளிக்கக்கூடா இல்லை என்பது நினைவுக்கு வரஎழுந்து பாத்ரூம் ஓடிக்கொண்டே 

15 மினிட்ஸ்"னு நான் சொல்ல 

இன்னும் பதினஞ்சு நிமிசமா?”னு அவள் கோபத்தோடு கேக்க 

பின்னநீ சொன்ன மாதிரி வேஷ்டி கட்டனும்னா டைம் ஆகும்,,,, பாண்ட் ஓகேனு சொல்லு இப்போவே கீழ வாறேன்"னு அவள் ஓகே சொல்ல மாட்டாள்,,,, என்ற தைரியத்தில் சொல்ல 

ஒண்ணும் வேண்டாம்கூட ஃபைவ் மினிட்ஸ் கூட எடுததுக்கோபட் வேஷ்டி தான்"னு சொல்லநான் ஃபோனை வைத்து விடு ஷவரைத் திறந்தேன்

இருபது நிமிடம் கழித்துஎன் விசில் சத்தத்தை கேட்டு,, சிரித்தவாரே என்னைப் பார்த்து திரும்பினாள்திரும்பியவளின் முகத்தில் இருந்து அந்த சிரிப்பு மறைந்து, கோபம் குடி கொண்டது,

உன்ன நான் வேஷ்டி தான கட்டச் சொன்னேன்"னுவாயில் இட்லியோடு என்னை கேக்க,

அவள் தலையில் தட்டிவிட்டுநானும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன்ஏற்கனவே என் அம்மாவுடன் உட்கார்ந்து அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்எனக்கும் இட்லியோடு தட்டு வரநான் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுமதுவைப் பார்க்கஅவள் இன்னும் என்னை முறைத்துக் கொண்டிருந்தாள்ஒரு பெரும் மூச்சுடன் நான்அவளை பார்த்து 


பழனிக்கு போன உடனே கட்டுறேன்கோவிலுக்கு வேஷ்டியோட தான் வருவேன்"னு கெஞ்சஅவள் அதை ஏறப்பதாக இல்லை,

ஃபர்ஸ்ட் டைம் கட்டுறேன் மது!,,, அவுந்துருமோனு பயமா இருக்குஆசிங்கமாயிரும்!”னு 

அழுவதைப் போல சொல்லலேசாக சிரித்துக் கொண்டே சாப்பிட ஆராம்பித்தாள்ஆனால் இன்னும் விரைப்பாகவேஇருவரும் சாப்பிட்டு விட்டுஅம்மாவிடம் பாய் சொல்லிட்டுவீட்டை விட்டு வெளியே வந்தோம்அவளின் காரை நோக்கி செல்லும் போது 

இந்த பட்டு சாரீல நீ ரெம்ப அழகாக இருக்கஎன் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லிஇரு கைகளால் அவள் முகத்தை சுற்றிநெட்டி முறிக்கசிரித்தாள்ஆனால் என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை,

உன் சரீயும் வயலெட்என் ஷர்ட்டும் வயலெட்சேம் பினச்", னு சொல்லி அவளைக் கிள்ளமுறைத்தவள்

செம்ம கோவத்துல இருக்கேன்பேசாம மூடிக்கிட்டு கார்ல ஏறு!”னு சொன்னாள்

மறு பேச்சு பேசாமல் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து கொள்ளகார் பழனி நோக்கி விரைந்ததுபிரதீப் சொன்னது நினைவுக்கு வரஎப்படி இருந்தாலும்,, மது யாரையாவது கல்யாணம் செய்தாகனும்அரசியல்வாதி பையனாக இருந்தாலும்பிரதீப் நல்லவன் தான்டாக்டர் ஆக போகிறவான்அவன் சொல்வதைப் பார்த்தால்இவளுக்கும் அவனைப் பிடித்திருக்கும் போலயாரை கல்யாணம் செய்தாலும்எனக்கானஎன்மீதான உரிமையையும்அன்பையும் இவள் குறைத்துக் கொள்ளவிட்டுக் கொடுக்க மாட்டாள்பிரதீப்க்காக நானே தூது போனால் அவனுக்கும் என் மீது ஒரு பிடிப்பும்பாசமும் இருக்கும்என்பது போன்ற பல வாரன எண்ணங்களில் முழக்கியிருக்க,


                    


என்னடா ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க?”னு கேட்டு என் எண்ண ஓட்டத்தை கலைத்தாள்அப்பொழுதுதான் கவனித்தேன்வண்டி பொள்ளாச்சி சாலையில் பறந்து கொண்டிருந்தது

நீ தான மூடிக்கிட்டு இருக்க சொன்ன?”னு நான் பதில் கேள்வி கேட்க 

மூடிக்கிட்டு கார்ல ஏறத்தான் சொன்னேன்கார்ல மூடிக்கிட்டு இருக்க சொல்லல!”அவள் திருப்பி அடிக்க 

நான் அந்த ஜினாலிய ட்ரை பண்ணுறத விட்டுறலாம்னு இருக்கேன்

"னு சொல்லஎன்ன சம்பந்தம் இல்லாம பேசுறான் ஒரு பார்வைப் பார்த்தவள்,


என்ன இந்த திடீர்னு இப்படி சொல்றஅந்த புள்ளைக்கு தெரிஞ்ச ஏங்கிர மாட்டா? “னு நாக்கலாக கேட்டாள்நான் முக்குடைந்ததில் அமைதியாக இருக்க 

என்னடா பிறந்தநாளும்அதுவுமா அறிவு வந்துருச்சா?”னு சீண்ட 

நீ அன்னைக்கு சொன்னது கரெக்ட் தான்!, வயசு அதிகமா இருந்தா டாமினேஷன் இருக்கும்னு!!.., உன்ன கட்டிக்கிட்டே அழமுடியால!, இதுல லவ் பண்ணுற பொண்ணும் டாமினேட் பன்னாநான் கிறுக்கு பிடிச்சுத் தான் சுத்தனும்!”னு சொல்லசெல்லமாக என்னை அடித்தவள் 

நீ நல்ல இருக்கணும்னு அட்வைஸ் பன்னாடாமினேஷன்னா?”

நீ அட்வைஸ் பண்ணிஅட்வைஸ் பண்ணிஎன்ணையே லவ்வே பண்ணவிட மாட்டே போல!”னு நான் அலுத்துக்கொள்ளஒரு கையால் கார் ஒட்டிக் கொண்டுமற்றொரு கையை என் தோள்களில் வைத்துக் கொண்டு

“விடு, ஒரு பொண்ணோட இன்ட்ரோ குடுக்கிறேன்னு சொன்னேன்ல, முடிஞ்ச இன்னைக்கு திரும்பி வந்ததும், அவள டின்னர்க் கூப்பிடலாம்"னு சொல்ல நான் கொஞ்சம் ஆர்வமாகி

என்ன திடீர்னு?”

இல்லநீ வேற ரெம்ப பீல் பண்ணுறே,, அதான்!”னு அவள் சொல்லஒரு ஆர்வத்துல 

யாரு?, எப்படி இருப்பா?, நல்ல பொண்ணா?, நான் பாத்திருக்கேனா?”னு நான் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகதோள்களில் இருந்த கைகளால்என் தலையில் அடித்து 

ச்சீ,,,,அலையாத,,,விட்டா இன்னைக்கே கல்யாணம் பண்ணிகுடும்பம் நடத்திருவ போல!”னு கிண்டலாக சிரிக்கநான் அசடு வழிந்தேன்

ரெம்ப வழியுது,,, தொடச்சுக்கோ!” என்றால் மறுபடியும் கிண்டலாகமனசுல இவள் சொல்பவளைப் பற்றி அறிந்து கொள்ள ஆசை இருந்தாலும்இவள் மூக்குடைப்புகளுக்கு ஆளாக வேண்டாமென்றுகொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்

அவளும் உன்னோட இன்ட்ரோ கேட்டு,, என்ன ரெம்ப நாளா நச்சரிக்குறா!!!”னு அவள் மறுபடியும் சீண்டகொறளி வித்த காட்டி வாய புடுங்குறாஇவள நம்பி வாய குடுத்தனாமறுபடியும் முக்குடைப்பா,,,, நம்பாதே!, மூடிக்கிட்டு இருனுஎனக்கு நானே சொல்லிக்கிட்டு அமைதியா இருந்தேன்

ஓய்"னு மறுபடியும் அவள் சீண்டஅவளைப் பார்த்து முறைத்தேன் 

என்னதான் உன் பிரச்சனை?, சும்மா சும்மா முறைக்க?”னு அவள் எகிற 

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லமாபிறந்தநாளும் அதுவுமா உன்கிட்ட எதுக்கு மூக்குடைபட்டுக் கிட்டே இருக்கனும்னு அமைதியா இருக்கேன்போதுமாநீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க!”னு அவளைப் பார்த்து சொல்லிநான் கை எடுத்து கும்பிடசிரித்தவள் 

அய்யோ,,,,,,,பாவம்,,,,,,,இன்னைக்கு ரெம்ப ஓவரா போறேனோ!”னு அவள் கேக்க 

தெரிஞ்ச சரி!”னு அவளுக்கு கேட்கும் படியாகவே முனங்கினேன்

சரிசரி,,,,,,பிறந்தநாளும் அதுவுமா முஞ்ச தூக்கி வச்சுக்காத!,,, என் செல்லம்ல!", அவள் கொஞ்சசிரித்துக் கொண்டே 

உண்மையிலேயே ஒரு பொண்ணு என்கிட்ட இன்ட்ரோ குடுக்க சொல்லி கேட்டுச்சா?”னு நான் சந்தேகத்துடன் கேக்க 

இன்னைக்கு நைட் அவள கூப்புடுவோம்,,, வந்தா இத நீ அவள்டா கேட்டுக்கோ!”னு அவள் சிரித்தவாரே கூறநான் அமைதியானேன் 

"அவளுக்கு உன்ன பிடிச்சிருக்குனு நினைக்கேன்,,,யாருக்கு தெரியும் லவ் கூட பண்ணுறாளோ? என்னவோ?”னு அவள் மறுபடியும் சொல்ல,

அவ பேரு என்ன?”னு அடக்க முடியாத ஆர்வத்தில் நான் கேக்க 

இன்னைக்கு நைட்நீயே கேட்டு தெருஞ்சுக்கோஇப்போ என்ன வண்டி ஓட்ட விடு"னு பொய் கோபத்தில் சொல்ல 

ஆமாபேசம இருந்தவனபேச சொல்லி தூண்டுவாஅப்புறம் பேசுனாமூடிக்கிட்டு இருக்க சொல்லுவா!”னு நான் வாயிக்குள் முணுமுணுக்க 

என்ன?”அதிகாரத்துல கேக்க

நீ கார் சூப்பரா ஓட்டுறேனு சொன்னேன்வேற ஒண்ணும் இல்ல!”னு கடுப்பாக சொல்லவாய்விட்டு சிரித்தாள்நான் கார் ஆடியோ வால்யூம் கூட்டி பாட்டு கேக்க ஆரம்பித்தேன்

------------------------------------

இரண்டு மணி நேரம் கழித்துநாங்கள் பழனி கோவிலில் இருந்தோம்ஆச்சிகளிடமும்தாத்தாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டுஅவள் சொன்னபடி வேஷ்டியை கட்டியவுடன்கோவிலுக்கு கிளம்பிவிட்டோம்தாத்தா தேவஸ்தான போர்ட் மெம்பர் என்பதால் நேரக உள்ளே அழைத்து செல்லப்பட்டோம்அர்ச்சனை செய்யும் போது ஆச்சி என் பெயரை சொல்லதாத்தா மது பெயரையும் சேர்த்து சொல்லஇருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து விட்டுகோவிலை ஒரு சுற்று சுற்றலாம் என்று மது சொல்லதாங்கள் வரவில்லை என்றும்எங்களை இருவரையும் சுற்றி வர சொல்லிவிட்டு அங்கே அமர்ந்து கொண்டார்கள்

நாங்களும் கோவிலை சுற்ற ஆரம்பித்தோம்,

மதுஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?”னு நான் கேக்ககேள்வியுடன் என்னைப் பார்த்தாள் 

நீ யாரையாவது லவ் பண்ணுரியா?”னு நான் பட்டுனுபிரதீப் சொன்னதை நேரம் பார்த்து கேக்க

என்ன திடீர்னுஇந்த கேள்வி?”னு அவள் முகத்தில் சலானமில்லாமல் கேட்கஅவளிடம் கோபத்தை எதிர்பார்த்த நான்கோபமில்லாத எதிர் கேள்வியை எதிர் பார்க்கவில்லை,

இல்லஇன்னைக்கு திடீர்னு பட்டுசாரீலாம் கட்டிருக்கஅதுதான்சும்மா கேட்டேன்!”னு ஏதோ சொல்லி மழுப்ப 

நீ கூடத்தான் வேஷ்டி கட்டிருக்கநீ யாரவாவது லவ் பண்ணுரியா?”னு அவள் கேட்க்க 

ஆமா"

உண்மையாவா?, யாரு?”னு அவள் அவலுடன் கேக்கநான் சிரித்துக் கொண்டே 

ஜினாலி ஜெய்ன்என் மைதா மாவு"னு நான் அவளப் பார்த்து கண்ணடித்து சொல்லிவிட்டுசிக்கிறாதட செவளனுமனசுக்குள்ள சொல்லுக்கிட்டு ஓட 

பண்ணிதிருந்தவே மாட்டியா?”னு கேட்டவாறே தூரத்தினாள்.

மதியம் சாப்பிட்டு விட்டுகொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டுஎன் சிறு வயது போட்டோக்களை காட்டி ஆச்சிகள் கதை சொல்லஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள்மதுநான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்அப்பொழுது தாத்தா என்னை அழைக்கஅவர் அருகில் சென்று அமர்ந்தேன்என்னிடம் ஒரு கவர் குடுக்கபிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு கிரெடிட் காரட்

எதுக்கு தாத்தா இது?”னு கேக்க 

சும்மா ஒரு கிப்ட்பதினெட்டு வயசு ஆகிடுச்சுநீ ரெம்ப பொறுப்பான பையன் தான்ஆனா இன்னும் பொருப்பா இருக்கனும்இனிமே எல்லா மாசமும் நம்ம குரூப் ரிவ்யு மீட்டிங் வரணும்இப்போ இருந்தே உன் பொறுப்ப உணர்ந்து செயல் படனும்"னு ஆரம்பிச்சு கொஞ்சம் அட்வைஸ்நிறைய நம்பிக்கையான வார்த்தைகள்அப்புறம் எனக்கு இருக்கும் எதிர்கால பொருப்புகளையும்அதற்கு நான் எப்படி என்னை தயார் படுத்திக் கொள்ளனும்னுபேசினோம்பேசிமுடித்தவுடன்மதுவை அழைத்தவர் 

ரெம்ப சந்தோஷம் மாகூடப் பிறந்த அக்காவ இருந்த கூட இவ்வளவு பாசமா இருப்பானு சொல்ல முடியாது மாஉனக்கு எப்படிதான் நன்றி சொல்லப் போறோம்னு தெரியல"னு ஆனாந்ததிலும்பாசத்திலும் மருக 

அங்க அம்மாட்ட வந்து கேளுங்கஅவங்களும் இதே விட பெருமையா பேசுவாங்க இவனப் பத்தி,,,, சும்மா பீல் பண்ணாதீங்கஅவர் கை பற்றி கூற, "சந்தோஷம் மாஇவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்


                    


தாத்தாஆச்சிகள் டாடா காட்டநாங்களும் பதிலுக்கு காட்டிவிட்டு கிளம்பினோம்தாத்தா சொன்னது மனதில் ஓட நான் அமைதியாக அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்கார் கோயம்புத்தூர் நோக்கி பறந்தது.

-----------------------------------------

என்ன சார்,,,இப்போ எல்லாம்,,அடிக்கடி தீவிர சிந்தனை?”,,ம்ம்??”னு கேக்கநான் தாத்தாவுடன் நடந்த உரையாடலைப் பற்றி சொல்லகாது கொடுத்துக் கேட்டவள் 

தாத்தா சொல்றது கரெக்ட் தான்அவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்ல!,,,எப்படி இருந்தாலும் உங்க தாத்தாஅப்பாவுக் அப்புறம்,,,பிசினஸ் எல்லாத்தையும் நீ தான பாத்துக்கணும்!”னு சொல்லஎனக்குள் ஒரு சிறிய பயம் 

கரெக்ட்தான்,,எனக்கும் புரியுது,,,ஆனா என்ன பண்ணப் போறேன்னு தெரியல?”னு என்னுள் இருந்த பயத்த அவளிடம் கூறினேன்

பணம்!, அது கொடுக்கும் தைரியத்தையும்அதிகாரத்தையும் மட்டுமே உணர்ந்த நான்அதன் பலம் மற்றும் எனக்கு இருக்கும் பொறுப்பையும் நினைத்ததால் வந்த பயம்

ரெம்ப வொர்ரி பண்ணாதயு ஆர் அ சாம்ப,,வென் டைம் கம்ஸ்,,,யு வில் ஹாண்டில் இட் ஈஸிலி!”னு அவள் சொல்லஇவளுக்கு எப்படி,, என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை?, நான் கொஞ்சம் சோர்வடைந்தால் கூட,,, இவளின் ஓரிரு வார்த்தைகள் போதும்என் நெஞ்சம் உத்வேகம் கொள்ள!” என்ற எண்ணத்தில்அவளை வாஞ்சையுடன் பார்த்து 

தாங்க்ஸ் மதுநீ மட்டும் என் கூடவே இரு!,, எல்லாத்தையும் சமாளிப்பேன்"னு சொல்ல 

என்ன சென்ட்டிமென்டா?, நல்ல மூட்ல இருக்கேன் கெடுக்காத”னு கேட்டு என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்இதுவும் இவளிடம் பிடித்த ஒன்று எனக்கு

----------------------------

உன் புது கிரெடிட் கார்டா குடு!”, அவள் கேட்ககோவையில் ஒரு லைப் ஸ்டைல் கடையின் கவுண்டரில் நின்றிருந்தோம்இரண்டு மணி நேர ஷாப்பிங்க்கு பிறகு

அப்போ,, இந்த டிரஸ் எல்லாம் உன் கிப்ட் இல்லையா?”னு நான் கேட்டவாறே காரட்டைக் குடுக்க 

என்னோட கிப்ட் தான்ஆன பில் உன் கணக்கு!”னு அவள் சிரித்துக்கொண்டே காரட்டை வாங்கி பில்லை காட்டினாள்

வாங்கிய உடைகளில் ஒரு பாண்ட்ஷர்ட்டை என்னிடம் கொடுத்து அணிந்து வரச்சொன்னாள்

அவள் சொன்னவாரே அணிந்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் காத்திருக்கவெள்ளை உடையில்மேரூன் கலர் ஓவர் வியரோடுஒரு தேவதை போல் வந்துஅந்த உடையின் இரு பாக்கெட்களிலும் கை விட்டவாறுஎனைப்பார்த்துபுருவம் உயர்த்திஎப்படி?னு கேக்கஎன் வாயில் இருந்து ஒரு விசில்“அழகா இருக்க மது, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, ஒரேநாளில் இரண்டாவது முறையாக இரு கைகளால் அவள் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, அருகில் இருந்த இரு கடை சேல்ஸ் கேர்ள்ஸ் சிரித்தார்கள், வெட்கப் பட்டவள் என் கைகளில் அடித்தாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக