வீட்டில் நடந்த கூத்து - பகுதி - 5

 நான் ஏன் திடிரென ஊருக்கு கிளம்புறேன் என்று எல்லாரும் நினைக்கலாம் அதுமட்டுமின்றி நல்ல வேலையும் ராஜினாமா செய்வதாக கூறுவது ஏன் என்று புரியாமல் இருக்கலாம் அனைத்திற்கும் காரணம் உண்டு. என் நண்பன் சரவணன் கடந்த நான்கு வருடங்களாக போனில் கூறிய விசயத்தை நான் உங்களுக்கு கண்டிப்பாக கூறினால் உங்களுக்கு கண்டிப்பாக புரியும்.

ரமேஷும் +2வில் பெயில் ஆயிட்டான் இது நான் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் கேட்டது

ரவி+2 பாஸ் ஆகி ஒரு காலேஜ் சேர்ந்து படிப்பதாக நான் நான்காம் வருடம் படிக்கும் போது கூறினான் ரவி இப்பொழுது கடைசி வருடம் படிக்கிறான்

அக்கா ராஜி ஒருவரை காதலித்து அவரையே பதிவு திருமணம் செய்து கொண்டாள் இது ஒரு ஆறு மாதங்கள் முன்னால் கேள்வி பட்டேன். அவள் மூன்று மாதத்தில் காணவனை பிரிந்து மீண்டும் வீட்டிற்கு வாழவெட்டியாக வந்துவிட்டாள்.

ஒரு மூன்று மாதம் முன்பு ரமேஷ் எங்கள் ஊர் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ய அது ஊர் பஞ்சாயத்து கூட்டி என் தம்பிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் பெண் வீட்டார் விரும்பினால் அவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என்று முடிவுசெய்தது என் அப்பா பெண் வீட்டாரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து காவல்துறையில் புகார் கொடுக்காமல் பார்த்து கொண்டார்  

மிகவும் முக்கியமான காரணம் இந்த வருடம் எங்கள் ஊர் கோயில் தலைவர் பதவிக்கு என் அப்பா போட்டி போட போவதாக என் நண்பன் சரவணன் கூறினான். அப்பா கோயில் தலைவராக தேர்ந்துதேடுக்கபட்டால் அவர் தான் பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊர் மக்கள் பிரச்சினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கவேன்டும் அது அவருக்கு கௌரவத்தை கொடுக்கும் எனவே அதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் தான் நான் ஊருக்கு மாற்றல் வாங்கினேன்.

எனக்கு ஊருக்கு மாற்றல் கிடைத்ததும் நான் செய்த முதல் வேலை ஒரு பெரிய நகைகடை சென்று எனக்கு ஒரு பத்து சவரனுக்கு செயின் ஏழு சவரனுக்கு ஒரு பிரேஸ்லெட் இரண்டு சவரனுக்கு இரண்டு மோதிரம் அதில் ஒரு மோதிரத்தில் வைரம் பதித்தும் இன்னொரு மோதிரத்தில் மரகதகல் பதித்தேன் நான் ஊருக்கு போய் சேர்ந்த அடுத்த நாள் என் நண்பன் ராஜெஷ் திருமணம் மணப்பெண் என் அப்பாவின் நண்பரின் மகள் அந்த பெண்ணுக்கு ஒரு நெக்லஸ் வளையல் மற்றும் நண்பனுக்கு ஒரு செயின் பத்து சவரனுக்கு வாங்கினேன். ஊர் கோயில் அம்மனுக்கு பஞ்சலோக நகைகள் வாங்கினேன்.

நான் வந்த ரயில் இரவு 12 மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேர்ந்தேன் ரயில் நிலையம் வெளியே வந்ததும் என் ஆபீஸ் டிரைவர் வந்து என் பொருட்களை வாங்கி எனக்கு ஆபீஸில் இருந்து கொடுத்த பிஎம்டபிள்யூ காரில் வைத்தார். எனக்கு இங்கு ஒரு பிஎம்டபிள்யூ கார் மற்றும் நான் தங்குவதற்கு ஒரு பெரிய பங்களா கொடுத்துள்ளார்.

ராஜா கோயம்புத்தூர் வந்து சேர்ந்துவிட்டார். நான் என் பங்களாவிற்கு 12.30மணக்கு வந்து சேர்ந்தேன். அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை இதே ஊரில் இருந்து எவ்வளவு மனவருத்ததுடன் என்ன செய்ய போகிறாய் என்று நினைத்து கொண்டு சென்றேனோ ஆனால் இன்று என்னிடம் பல கோடி ரூபாய் பணம் உள்ளது இந்த பணத்தை சம்பாதிக்க எத்தனை இரவுகள் தூங்காமல் கடினமாக உழைத்தேன் அனால் என் குறிக்கோள் நிறைவேறவில்லை. என் குறிக்கோள் என்ன வென்று நான் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். என் பழிவாங்கும் படலத்தின் முதல் படி நாளை காலையில் தொடங்குகிறேன் அது என்ன என்றால் எங்கள் ஊர் கோயிலில் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் அவர்கள் முறை செய்வார்கள் முறை செய்வது என்றால் அன்று சாயந்திரம் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும் இதில் அந்த குடும்பத்தை சேர்ந்த பங்காளிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அதேநேரம் பங்காளிகளுக்குள் எதாவது சண்டை இருந்தால் அவர்கள் காலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.

ஒன்று அந்த நாளில் அந்த குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் தான் பூஜை செய்ய முடியும். அதேபோல் நானும் USல் இருக்கும் என் அப்பாவின் பங்காளி நாளை காலையில் பூஜைகள் செய்வதாக கூற என் நண்பன் சரவணனிடம் சொன்னேன் உடனே அவன் எதற்காக அப்படி கூறவேண்டும் என்று கேட்டான் அதற்கு நான் பூஜைகள் செய்வதாக சொன்னால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்து விடுவார்கள்

நான் அவர்கள் யாரையும் கோயிலில் பார்க்க விரும்பவில்லை அதனால் தான் நான் இந்த மாதிரி செய்ய சொல்கிறேன் அதுமட்டுமல்ல நான் கோயிலில் பூஜை செய்யும் நாள் கோவிலில் அலங்காரம் மிகவும் அற்புதமாக இருக்கவேண்டும் அது ஊர் மொத்தம் அந்த அலங்காரம் பற்றி தான் பேசவேண்டும் இதுவே என் எண்ணம் என்று சரவணனிடம் கூறினேன் அவனும் அப்படியே செய்வதாக கூறினான். நான் சரவணனின் பேங் அக்கொண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பினேன்.

இதேல்லாம் நான் மும்பையில் இருக்கும் போதே செய்தது நான் மும்பையில் இருந்து கிளம்பும் முன் சரவணன் போன்செய்து நான் கூறியபடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் நான் பூஜை செய்யும் நாளில் கோயில் தூன்கள் அனைத்தும் பூக்களால் அலங்கரித்து கருவரை முதல் கோயில் கொடி மரம் வரை மலர் பாதை அமைப்பாகவும் மேலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினான். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்


நான் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து முடித்து விட்டு ரூமில் இருந்து வெளியே வந்தேன் அந்த நேரத்தில் சரவணன் போன் கால் பண்ணினான் ஆறு மணிக்கு ஊர் எல்லையில் வந்து சேருமாறு கூறினான் நான் ஏன்டா நான் நேராக கோயிலுக்கு வந்து விடுகிறேன் என்று கூறினேன் அவன் அதற்கு நான் சொல்வது போல் நீ செய் என்று கூறி போனை கட் செய்து விட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இவன் இப்படி ஊர் எல்லையில் நிற்க சொல்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து நான் ஒரு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நான் வாங்கிய நகைகளை அணிந்து கொண்டு ஊருக்கு என் காரில் புறப்பட்டேன் எனக்கு தங்க நகைகள் என்றாலே பிடிக்காது ஆனாலும் ஊருக்குகாக இதை செய்து தான் ஆக வேண்டும் ஏன் என்றால் ஒரு மனிதனை நம்ம ஊரில் அவன்  போடும் உடை மற்றும் நகைகள் அவனிடம் உள்ள பணம் இதைப்பார்த்து தான் அவனை எடைபோடுகின்றனர் நான் என் குடும்பத்தை பிரிந்தபின்னும் நான் நன்றாக இருக்கிறேன் என்று காட்ட இந்த மாதிரி செய்ய வேண்டியுள்ளது. சரவணன் சொன்ன மாதிரி ஊர் எல்லையில் என் காரை நிறுத்த அங்கே சரவணனுடன் என் நண்பர்கள் சுமார் 80பேர் வந்து இருந்தனர்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்படி இவர்களுக்கு எல்லாம் நான் வருவது தெரிந்தது அப்பொழுது புரிந்தது இது எல்லாம் சரவணன் வேலை என்று அவனை போல் ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு கண்களில் இருந்து நீர் வழிந்தது அது ஒரு ஆனந்த கண்ணீர் சரவணன் அதைப்பார்த்து மச்சான் நீ ஆறு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறாய் அதனால் உன் கெத்தை காட்டவேண்டும் என்றே இந்த ஏற்பாடு நான் முதலில் ஊர் கோயிலுக்கு போறேன் நீ ஒரு பத்து நிமிடம் கழித்து இங்கிருந்து புறப்படு என்று கூறி அவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான். நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன் சரவணன் சொன்ன மாதிரி பத்து நிமிடம் கழித்து நாங்கள் அனைவரும் புறப்பட்டோம் அது ஒரு ஊர்வலமாக இருந்தது என் காரின் முன்னால்

பின்னால் என் நண்பர்கள் அவர்களின் பைக்கில் வந்தார்கள் இதுபார்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

அனைவரும் கோயில் வந்து சேர்ந்தோம் நான் காரில் இருந்து இறங்கும் போது பட்டாசு வெடித்துக் எனக்கு வரவேற்பு கிடைத்தது பட்டாசு வெடித்துக் முடித்ததும் நாதசுவரம் முழங்க மரியாதை செய்தான் சரவணன். பிறகு என் கையில் ஒரு தட்டை கொடுத்தான் அதில் அம்மனுக்கு சார்த்த பட்டு புடவை பூ மாலை தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தது நான் உடனே அவனிடம் நான் மும்பையில் இருந்து வாங்கி வந்த நகைகளை காட்டினேன் அவன் அந்த நகைகளையும் அந்த தட்டில் வைத்தான் பிறகு அந்த தட்டை என்னிடம் கொடுத்து அதை நாதசுவரம் வசிக்க

நான் கோயிலுக்கு உள்ளே சென்றேன் என்கூட என் நண்பர்கள் அனைவரும் வந்தனர். கோயில் உள்ளே பூ அலங்காரம் கோயிலைசுற்றி செய்திருந்தனர் அது பார்க்க மிகவும் அழகாக இருந்தது நான் இதுவரை இதுபோல் ஒரு அலங்காரத்தை என் வாழ்நாளில் நான் பார்த்தது கிடையாது அந்த அலங்காரம் பார்க்கும் போதே சரவணனின் உழைப்பு தெரிந்தது. நாங்கள்  அனைவரும் கோயில் உள்ளே நுழையும்போது கோயில் ஐயர் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தார் அவர் பேசிமுடித்ததும் என்னிடம் வா ராஜா எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறினேன் பிறகு அவர் என்னிடம் இன்று காலை உங்கள் பங்காளி பூஜை செய்கிறார்கள் என்று கூறினார் நான் சிரித்தேன் அவரிடம் என்னுடைய பங்காளிகள் யாரும் பூஜை செய்யவில்லை நான் தான் பூஜை செய்ய போகிறேன் என்று கூறினேன் உடனே அவர் அப்படி பூஜை செய்ய முடியாது உனக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால் சாயந்திரம் உன் குடும்பத்தாருடன் வந்து செய்துக்கொள்ள என்று கூறினார் இதை கேட்ட உடன் சரவணன் மற்றும்

என் நண்பர்கள் சத்தம் போடதுடங்கினர் நான் அவர்களை நோக்கி அமைதியாக இருக்கும் படி கூறினேன் பிறகு ஐயரை பார்த்து சாமி நம்ம ஊரு வழக்கப்படி திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் பூஜை செய்ய வேண்டும் என்று இருக்கிறது சரி தானே என்று கேட்டேன் அதற்கு அவரும் ஆமாம் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அப்படி பூஜை செய்யும் நாளில் யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் அவர்கள் காலையில் பூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது இல்லையா என்று கேட்டேன் அதற்கும் அவர் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் அதற்கு நான் இப்பொழுது எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த வித விதமான தொடர்பும் கிடையாது அதனால் தான் நான் காலையில் பூஜை செய்ய விரும்புகிறேன் என்றேன் அதற்கு அவர் நீ வரும்போது என்னிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தது உன் அப்பா தான் அவர் என்னிடம் உனக்கு தனியாக பூஜை செய்ய கூடாது என்று கூறினார்

நான் என்ன செய்வேன் என்று கேட்டார் அதற்கு நான் அவர் எனக்கு அப்பாவும் கிடையாது நான் அவருக்கு மகனும் கிடையாது எங்கள் உறவு ஆறு வருடங்கள் முன்பே அறுந்து விட்டது அதனால் நீங்கள் எனக்கு பூஜை செய்தே ஆகவேண்டும் என்று கூறினேன் ஐயர் அதற்கு முடியாது என்று கூறிவிட்டார் உடனே சரவணன் இரண்டு வருடங்கள் முன்பு ராமசாமி ஐயாவின் மகள் தனியாக வந்து பூஜை செய்தாளே அது எப்படி செய்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர் ராமசாமி எந்தவொரு தடையும் கூறவில்லை அதனால் தான் நான் அவர்களுக்கு பூஜை செய்து கொடுத்தேன் என்று கூறினார் நான் அவரை பார்த்து நான் என்னை நன்றாக வாழவைக்கும் அம்மனுக்கு என் நன்றி செலுத்த தான் இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்தேன் ஆனால் நீங்களோ என் குடும்பத்தினருடன் வந்தால்

தான் பூஜை செய்வேன் என்று சொல்கிரிர்கள் ஆனால் நான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் உடன் இணைந்து வந்து இந்த பூஜையை செய்ய மாட்டேன் என்னை பொறுத்தவரை அவர்கள் வேறு நான் வேறு நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று அதுபோல் நானும் அவர்களும் வேறே வீட்டில் அவமானப்படுத்திய தால் நான் வீட்டிற்கு போகாமல் இருக்கின்றேன் இங்கு நீங்கள் கோயிலில் என்னை அவமான படுத்துகிறிர்கள் இனிமேல் நான் கோயிலுக்கு வரமாட்டேன் நம் ஊர் அம்மன் சக்திவாய்ந்தது என்றால் நான் தவறு செய்தால் என்னை தண்டிக்கட்டும் இல்லை நீங்கள் இன்று பூஜை செய்ய முடியாது என்பது தவறு என்றால் உங்களை தண்டிக்க வேண்டும் அதற்கு பிறகு நான் கோயிலுக்கு வருகிறேன் என்று ஆவேசமாக சொன்னேன் உடனே அவர் என்னிடம் நான் என்ன செய்வேன் என்று கேட்டார். அதற்கு நான் நீங்கள் பூஜை செய்யுங்கள் உங்களுக்கு எதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினேன் அதேநேரம் இதேவரை எங்கள் விவாதத்தை கேட்டுக்கொண்டு இருந்தன கோயில் செயலாளரும் ராஜா சொல்வது தான் சரி நீங்கள் பூஜையை ஆரம்பிக்கப் என்று கூறினார் ஆனாலும் ஐயர் இவனுடைய அப்பா வந்து சாயங்காலம் கேட்டால் நான் என்ன சொல்வது என்று கேட்டார் அதற்கு கோயிலுக்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் அனைவரும் அவன் தான் சொல்கிறாரே அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் எந்த ஒரு உறவும் இல்லை என்று அப்படி யாராவது ஒருவர் சொன்னால் அவர்களுக்கு பூஜை செய்து கொடுப்பது தானே உங்கள் வேலை என்று அனைவரும் அவரிடம் கூறினர் உடனே அவர் வா ராஜா அந்த தட்டை என்னிடம் கொடு என்று கூறி நான் கொண்டு போன தட்டை என்னிடம் இருந்து வாங்கினார். பிறகு அவர் பூஜை ஆரம்பிக்கப் பட்டது அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது நான் ஐயர் தட்டில் தட்சனையாக பத்தாயிரம் ரூபாய் போட்டேன் அதைப்பார்த்து ஐயர் மிகவும் சந்தோஷமாக என்னை வாழ்த்தினார். அவரிடம் நான் கூறினேன்

நான் எதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் நீ தவறாக எதுவும் பேசவில்லை நான் தான் உன்னிடம் தவறாக பேசிவிட்டேன் நீ என்னை மன்னித்து விடு இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். நான் அவரிடம் நீங்கள் பெரியவர் நீங்கள் என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் சரவணனிடம் கூறுங்கள் அவன் என்னிடம் சொல்லி விடுவான் நீங்கள் கேட்கும் உதவி என்னால் செய்ய கூடியது என்றால் கண்டிப்பாக செய்து தருவேன் என் அப்பாவை நினைத்து பயபடவேண்டாம் அதை நான் பார்த்து கொள்கிறேன் இனிமேல் நான் கோயம்புத்தூரில் தான் இருக்க போகிறேன்

அதனால் எதை நினைத்தும் கவலை கொள்ளவேண்டாம் சாயந்திரம் அவர் வந்து உங்களிடம் எதாவது பிரச்சனை செய்தார் என்றால் நீங்கள் அவரிடம் உன் மகன் தான் சொன்னான் அவனுக்கும் உங்களுக்கும் எந்த உறவும் கிடையாது என்று அதனால் நீங்க உங்க மகனை கூட்டிட்டு வாங்க அப்போ நான் செய்தது தவறு என ஒப்புக்கொள்கிறேன் என்று என் அப்பாவிடம் சொல்லுங்கள் அதோடு அவர் எதுவும் பேசாமல் இருப்பார் என்று கூறினேன்.  அதை கேட்ட ஊர் மக்கள் அனைவரும் சிரித்தனர். பிறகு நான் கோயிலுக்கு வெளியே வந்தேன் அங்கு கோயில் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து கோயில் திருவிழா நன்கொடை வசூலித்து கொண்டு இருந்தனர் நான் அவர்களிடம் சென்றதும் கோயில் கமிட்டி தலைவர் என்னிடம் கோயில் திருவிழாவிற்கு எவ்வளவு நன்கொடை தரபோகிறாய் என்று கேட்டார்

அதற்கு நான் சரவணனிடம் என் கார் சாவியை கொடுத்து காரில் ஒரு பெட்டி இருக்கும் சரவணா அதை எடுத்து கொண்டு வாடா என்று கூறினேன். அவன் அதை எடுக்க சென்றவுடன் தலைவர் என்னிடம் ராஜா நீ செய்வது எதுவும் சரியில்லை உங்க அப்பா உனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து உன்னை படிக்க வைத்தால் நீ வேலைக்கு போக ஆரம்பித்ததூம் அவரை மறந்து விட்டு எனக்கு அவர்களிடம் எந்த உறவும் இல்லை என்று சொல்வது

என்ன நியாயம் என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் எங்க அப்பா எப்போ எனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தார் என்று கேட்டேன். உடனே அவர் நீ பல்கலைக்கழகத்தில் அவருடைய பணத்தில் தானே படித்தாய் என்று கேட்டார். அதற்கு நான் வாய்விட்டு சிரித்தேன் அதற்கு அவர் இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டார்

அதற்கு நான் எங்க அப்பா உங்களை எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் பல்கலைக்கழகத்தில் முதல் பருவத்தில் மட்டுமே அவர் எனக்கு செலவு செய்தார் எப்போ எனக்கு பைக் வாங்கி தரமுடியாது எனக்கு சாப்பாடு போடுவதே அதிகம் என்று கூறினாரோ அன்று முதல் என் படிப்பு செலவுக்கு நான் வேலைக்கு போய் சம்பாதித்து கட்டினேன் என்று கூற தலைவரோ நீ தான் பொய் சொல்கிறாய் என்றார் நான் அவரிடம் நான் என் சம்பாதித்து கட்டினேன் என்று நிரூபிக்கவா என்று கேட்டேன் அதற்கு அவர் நிரூபி பார்க்கலாம் என்று கூறினார்.

அந்த நேரத்தில் சரவணன் என் பெட்டியை எடுத்து கொண்டு வந்து என்னிடம் தந்தான் உடனே நான் தலைவரிடம் இதோ என் பேங் பாஸ்புக் நீங்களே பாருங்கள் என்று கூறினேன் உடனே தலைவர் அதை வாங்கி பார்த்தார்  அதில் நான் பல்கலைக்கழகத்தில் என்னுடைய பீஸை செக் மூலம் செலுத்தியதை கண்ட அவர் நீ சொல்வது சரிதான் நாங்கள் தான் உன்னை தவறாக நினைத்து விட்டோம் என்று கூறினார்.

நான் அவரிடம் நீங்கள் என்ன செய்வீர்கள் என் அப்பா உங்னைவரையும் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்று கூறி இரண்டு லட்சத்திற்கு செக் கொடுத்தேன் அதை வாங்கி பார்த்த தலைவர் ராஜா நீ தவறாக இரண்டு லட்சம் ரூபாய் என்று போட்டிருக்கிறாய் என்று கூறினார் அதற்கு நான் ஐயா நான் சரியாக தான் போட்டிருக்கிறேன் இந்த பணத்தை கொண்டு திருவிழாவை நன்றாக நடத்துங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் மிகவும் நன்றி என்று கூறினார் நான் ஐயா நன்றி எல்லாம் சொல்லி என்னை இந்த ஊரில் இருந்து பிரித்து விடாதீர்கள் என்னிடம் உள்ளது அதை என் அம்மனுக்கு செலவு செய்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து என் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் கோயில் கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் என்னுடன் என் கார் வரை வந்தனர் நான் என் நண்பர்கள்

அனைவரிடமும் ஹோட்டலுக்கு அனைவரும் வந்து டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று கூறினேன் அதற்கு அனைவரும் வருவதாக கூறினர் நான் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரிடமும் போய் வருகிறேன் என்று கூறி சரவணனை என்னுடைய காரில் ஏற்றி கோயிலிருந்து புறப்பட்டேன்.  

சரவணன் என்னிடம் கோயிலில் எதற்காக அவ்வளவு பொறுமையாக பேசினாய் என்று கேட்டான் நான் அதற்கு நாம் கோயிலில் தகராறு செய்ய போகவில்லை நாம் சாமி கும்பிட போனோம் அங்கே நாம் எதாவது தகராறு செய்து இருந்தால் எங்க அப்பா சொல்வது அனைத்தும் உன்மையே என்று ஊர் மக்கள் அனைவரும் தவறாக நினைத்து இருப்பார்கள் அனால் இப்பொழுது எல்லாருக்கும் உன்மையில் என்ன நடந்தது என்று புரிந்து இருக்கும் என்று கூறினேன். அவன் இப்போது தான் எனக்கு எல்லாம் புரிந்தது என்று கூறினான் அதற்கு பின் ஹோட்டலுக்கு சென்று என் நண்பர்கள் அனைவருக்கும் டிபன் வாங்கி கொடுத்து அனுப்பினேன் பிறகு சரவணனிடம் இன்று சாயந்திரம் மீண்டும் கோவிலுக்கு போக சொன்னேன் அவன் ஏன் என்று கேட்டான் அதற்கு நான் என் குடும்பம் நான் காலையில் செய்த பூஜைக்கு எதாவது தகராறு பண்ணலாம் அதனால் தான் உன்னை கோயிலுக்கு போக சொல்றேன் என்று கூறினேன்.அவனும் போவதாக சொன்னான். இரவு ராஜேஷ் பார்ட்டி தர்றான் நீ வரவில்லையா என்று கேட்டான் அதற்கு நான் நாளை காலை திருமணத்திற்கு வருவதாக கூறினேன். அவனும் சரி என்றான்.

 

அன்று இரவு சரவணன் எனக்கு போன் செய்தான் அப்பொழுது ஊரில் அனைவரும் நாங்கள் செய்த கோயில் அலங்காரம் பற்றியும் கொடுத்த நன்கொடை பற்றியும் பேசுவதாக கூறினான் நான் உடனே என் அப்பா எதாவது தகராறு செய்தாரா என்று கேட்டேன் அதற்கு அவன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை ஆனால் என் அம்மாவும் அக்காவும் சரவணனை பார்த்து அவன் எதுக்காக இவ்வளவு பணம் செலவு செய்யான்

அவன் அந்த பணத்தை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான் அதை இப்படி ஊதாரி தனமாக செலவு செய்கிறானே என்று கவலையுடன் பேசியதாகவும் என் அப்பாவை ஊர் மக்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக கூறினான் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் அம்மாவும் அக்காவும் நான் செய்த செலவுக்கு கவலை படுகின்றனர் ஆனால் நான் நாளை திருமணத்திற்கு கொடுக்க போகும் பரிசுகளை கண்டால் இன்னும் எவ்வளவு வயிறு எரிந்து போவாற்களோ என்று நினைத்து கொண்டேன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக