http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : 03/20/21

பக்கங்கள்

சனி, 20 மார்ச், 2021

வல்லவன் - பகுதி - 40

 தனது மறைவிற்குப் பிறகு, தன் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் சிவகாமிக்கும், அவளது வாரிசுகளுக்கும் சேருமாறு எழுதிய உயில் பத்திரத்தின் நகலை தான் சிவகுருவிடம் காட்டினான் மணி. அதைப் படித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல், அறையிலிருந்த ஷோபாவில் அமர்ந்திருந்த சிவகுருவின் மனதில் பலவாறான எண்ணங்கள்.


சொத்து முழுவதும் மணியின் பெயருக்கு எழுதி வைத்த அடுத்த நாளில் இருந்துமணி கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்தான்

மணி கல்லூரிக்குச் செல்லும் கார் ஓட்டுனரில் இருந்துஎலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் முதற்கொண்டு அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தான் சிவகுருசிவகுரு இல்லாமல் அவர்களது குழுமத்தை நிர்வகிப்பது கடினம் என்பது சிவகுருவின் பாலம் என்றால்ஒரே பலகீனமாக சிவகுரு கருதுவது சிவகாமிக்கும் தனக்கும் இருந்த உறவுமணிக்கும் தெரியும் என்பதுதான்அதேபோல்அவர்களுக்குள்ளான உறவு தனக்கு தெரியும் என்பதால்அதை துருப்புச் சீட்டாக உபயோகப்படுத்த மாட்டான் மணிஎன்பது சிவகுருவின் கணக்குஅதே நேரம் தனது குட்டு வெளிப்பட்டு விட்டால்இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கைஒன்றுமில்லை என்று ஆகிப்போகும் என்று உணர்ந்த சிவகுருஇதுவரைக்கும் எதை வைத்து மணியை பலவீனப்படுத்தி இருந்தானோஅதே சுபாவின் அன்பை வைத்தேஅவனை மேலும் பலவீனப்படுத்திதனக்கு எதிராக எந்த எதிர்வினையையும் ஆற்ற விடாமல் செய்ய முயன்றான்.


அன்னையின் அன்பைமணியின் மீது ஆயுதமாகப் பயன்படுத்தும் காலம் கடந்து விட்டதை உணரவில்லை சிவகுருமணி கண்டிப்பாகதன்னை அருகில் அனுமதிக்க மாட்டான் என்பது தெரிந்திருந்தாலும்அவன்தன் மனைவி சுமாவை மட்டுமல்லாதுபெரியவர்களையும் அருகே அனுமதிக்க மறுத்தது கொஞ்சம் உறுத்தியதுமணியின் இந்த விலகளை எதிர்பார்க்காத அவனது தாத்தாகோயம்புத்தூரிலேயே தங்கிவிட முடிவெடுத்தது சிவகுருவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதுதன் மேலான அதிக நம்பிக்கையிலும்மணியைசிறுவன் தானே என்று எண்ணி உதாசீனமாக எண்ணினாலும்ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை சிவகுருமணியின் கவனத்தை டென்னிஸ் மீது திருப்பதன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தான்அதிலும் அவனுக்கு தோல்வி தான்மதுவை வைத்து முயற்சி செய்யலாமா என்று கூட ஒரு எண்ணம் வந்ததுஆனால் அதை அடுத்த நொடியிலேயே நிராகரித்து விட்டான்.

சிவகாமியையோஅவளின் மகளையோ திரும்பவும் அவர்களது வாழ்விற்குள் இழுத்துபுதிதாக ஏதேனும் சிக்கலை தானே உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் தான் அதற்குக் காரணம்யாரிடமும் பேசாமல்தான்தோன்றித்தனமாக கல்லூரிக்கு மட்டுமே சென்று வந்து கொண்டிருந்த மணிஅப்படியே இருப்பதுதான் தனக்கு நல்லது என்று நினைத்தான்பிணம் போல் சுற்றிக் கொண்டிருந்தவன்திடீரென்று எப்படி வந்து தனக்கு சவால் விடுவான் என்பதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை சிவகுருஎல்லாம் அவன் நினைத்தது போலவே நடந்து வந்த நிலையில்தான் மணியின் இந்த செயல்சிவகுருவை சற்று அதிர்ச்சி அடையச் செய்தது.

உள்ளுக்குள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டாலும்ஒரு சின்ன பதட்டம் சிவகுருவுக்குஎந்தக் காரணத்தைக் கொண்டும் தனக்கும்சிவகாமிக்கும் உள்ள உறவுதன் மனைவிக்கு தெரிந்துவிடக்கூடாது என்பது மட்டுமே சிவகுருவின் எண்ணமாக இருந்ததுசிவகாமியுடன் இருந்த உறவும் உணர்வுபூர்வமான ஒன்றுதான் என்றாலும்சுமாஅவனது காதல் மனைவிதன் மனதின் எச்சங்களையும்வக்கிறங்களையும்கொட்டுவதற்கு மட்டுமே சிவகாமியை பயன்படுத்தி வந்தான்சிவகாமியும் அப்படியேதேவையின்சிவகுருவின் அருகாமையில் கிடைக்கும் பாதுகாப்பின் பொருட்டுதான் அவனை பயன்படுத்தி வந்தாள்அதற்கு அவர்கள் “தங்களால் யாரும் புண்படவில்லை” என்ற சப்பையை கட்டி முட்டுக் கொடுத்து வந்தனர்அதேபோல் சிவகுருவுக்கு மணியை கொல்ல வேண்டும் என்ற எண்ணம்சிவகாமியும் மணியும்தன்னை அசிங்கமாக பேசிவதற்கு முன்இருந்ததில்லைமணியன் மரணம்தன் மனைவி சுமாவை கடுமையாக பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்த சிவகுருஅதைப்பற்றி சிந்திருக்கவில்லைஇன்னொரு குழந்தை மட்டும் அவர்களுக்கு பிறந்திருந்தால்மணியின் கதை சிறு வயதிலேயே முடிந்திருக்கலாம்சிவகுருவின் கெட்ட நேரமோமணியின் நல்ல நேரமோஅப்படி எதுவும் நடக்கவில்லை.

மணியை கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்ததற்கு முக்கியமான காரணம்இருவருக்குள் இருக்கும்வரை தான் அது ரகசியம்மணிக்கு தெரிந்த தன் கள்ள உறவு எந்த சூழ்நிலையிலும் தன் மனைவிக்கு தெரியக்கூடாது என்பதுதான்என்னதன்னை அசிங்கப்படுத்தியதற்காகசிவகாமிக்குமணிக்கும் இருக்கும் தொடர்பைமதுவுக்கு தெரியப்படுத்திஅதனால் அவர்கள் இருவரும் படப்போகும் துன்பத்தை ரசித்துவிட்டுபின் அவர்களை தீர்த்துக்கட்டலாம் என்று திட்டமிட்டு இருந்தான்மதுவே வலிய வந்து தன் பெயரிலான ஷேர்களை விற்க முயன்றதைசேட்-டீன் மூலமாக வாங்க கிடைத்த வாய்ப்பைபோனஸாகவே கருதினான்அதிர்ஷ்டம் அன்று தோன்றிய நிகழ்வுகள்இன்று தவறவிட்ட தருணங்களாக தோன்றியதுதன் ஈகோவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்காரியத்தை முடிப்பதில் மட்டும் கவனமாக இருந்திருக்க வேண்டுமோஎன்ற கேள்வி எழுந்தது.  மீண்டும் தன் வாழ்க்கையை 22, 23 வருடங்கள் பின்னால் சுழன்று அதைப் போல உணர்ந்தான் சிவகுரு

பெரு மூச்சுவிட்டுதன் மனதில் எழுந்த எண்ணங்களால் தான் பலவீனப்பட்டு விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான்நடப்பது எதுவும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பொழுதுஅனுமானத்தின் பெயரில் புதிதாக எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணிக்கொண்டான்மீண்டும் கண்களை மூடிதன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவன்இன்னும் கொஞ்சம் மணி விட்டுப் பிடிக்கலாம் என்று முடிவு செய்தான்

மணி தூக்கி எறிந்து விட்டு போன அட்டையில் இருந்த வாசகத்தை நினைவு வந்தது அவனது மூளைஉதாசீனச் சிரிப்பை உதிர்த்தான்

Ok, let's Play. முனுமுனுத்தான்.

***************

ஒரு வாரத்திற்கு முன்.

எப்பொழுதும்போல் மாதாந்தர ரிவியூவ் மீட்டிங் நடந்ததுஇரண்டு நாட்களுக்கு முன் தான்சோலார் மின் உற்பத்தி தளவாடங்கள் விற்பனைக்கான மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆகியிருந்ததுமீட்டிங் முடிந்ததும் அதற்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

"எல்லாம்தம்பி கொடுத்த ஐடியாவால்தான்மணியின் தாத்தாஅவனை உற்சாகமூட்டும் முயற்சியில்அனைவருக்கும் முன்பு தெரிவித்தார்மொத்த கூட்டம் கைதட்டியதுஅதை கொஞ்சமும் ரசிக்கவில்லை சிவகுருகாது கொடுத்தே கேட்கவில்லை மணி.

**************

"தப்பான நம்பிக்கை கொடுக்காதீங்க மாமா!! அதவிடவும் மத்தவங்களா டிஸ்கிரடிட் பண்ணாதீங்க!!" மூவரும் மட்டும் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வாய்ந்ததும்பொறுக்க மாட்டாமல் சிவகுரு

"புரியல சிவா!!" சிவகுரு எதைப் பற்றி பேசுகிறான் என்பது பபுரிந்தும்புரியாதது போல கேட்டார்மணியின் தாத்தா.

"இந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறதுக்குப் பின்னால் பத்து வருஷம் உழைப்பு இருக்குஅதுக்கான மொத்த கிரடிட்டும் எப்படி இவனுக்கு போகும்?" அருகில் இருந்த மணியை பார்த்து சிவகுரு.

"நாம புதுசா யூனிட் ஆரம்பிக்காமல் இருந்தாஇந்த காண்ட்ராக்ட் கிடைச்சீருக்குமா?" மாமனாரின் கேள்வியிலேயேதான் பேசியிருக்க கூடாது என்பதை உணர்ந்த சிவகுரு

"கிடைத்திருக்காது!!" சிவகுருவின் குரல் தாழ்ந்ததுமணியின் செவிகள் முதல் முறையாக அந்த உரையாடலை உள்வாங்கிக் கொண்டது.

"சப்ளை கேப்பாசிட்டி இல்லணு ரிஜக்ட் ஆகியிருக்கும்தம்பி மட்டும் ஒரு வருஷத்துக்கு முன்னால பேசி என்னை கன்வின்ஸ் பண்ணலன்னாகண்டிப்பாஅந்த விரிவாக்கத்துக்கு நான் ஒத்துக்கிட்டிருக்க மாட்டேன்இப்பவும் சொல்றேன்அந்த காண்ட்ராக்ட் கிடைக்கிறது மணி தான் காரணம்சொல்லி முடித்த விதத்திலேயே இதற்குமேல் இதை பற்றி பேச விரும்பவில்லை என்பதையும் சேர்த்தே சிவகுருவுக்கு உணர்த்தினார்மணியின் தாத்தா.

மணிக்குதான் பதற்றத்தில் இருந்த போதெல்லாம்எதிராளி அடித்த பந்தின் "டொக்சத்தம்எப்படி அவனை உசுப்பேற்றி விடுமோஅப்படி உசுப்பேற்றி விட்டு இருந்ததுசுருங்கிப்போன சிவகுருவின் முகம்அன்றுஇரவு அறையில் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான்காற்றுப்புகாத அறையில் அடைப்பட்டு கிடந்தவனுக்குஅந்த அறையின் சுவர்கள் எல்லாம் காற்றில் கரைந்து போனால் எப்படி இருக்குமோஅப்படி ஒரு மனநிலையில் இருந்தான்கொஞ்சம் தெளிவடைந்து இருந்தான் அவன்எங்கு அடித்தால் சிவகுருவுக்கு வலிக்கும் என்பதுகொஞ்சம் புரிந்தது போல் இருந்தது அவனுக்குகண்ணாடியின் முன் அமர்ந்துஅதில் தெரிந்த பார்வையில் தன்னைத் தொலைத்தான்.

மீண்டும் மதுவுடன் அவன் காதலித்து கசிந்துருக்கிய நாட்கள் நினைவுக்கு வந்ததுவாழ்க்கையை அவள்தான் என்றுயாரை நினைத்திருந்தானோஅவள்இனி அவன் வாழ்க்கையில் இல்லைஅவளுக்குத் தான் தகுதியானவனும் இல்லை என்பது அவனுக்கு தெளிவாக புரிந்ததுஅந்தத் தெளிவுதான்அந்த வலிக்கு காரணமானவனை அழித்தே தீருவது என்று அவனை உறுதி கொள்ளச் செய்ததுதான் செய்த தவறுகள் புரிந்ததுமுதன்முதன்முதலாக மதுமுடியாது என்று சொன்ன பொழுதேநேராக தாத்தாவிடம் சென்றிருக்க வேண்டும்அதுதான் தான் ஆடி இருக்கவேண்டிய ஆட்டம்தன்னுடைய ஆட்டம் என்று நினைத்துசிவகுரு-சிவகாமியின் ஆட்டத்தில் ஆடியதுதான்தான் செய்த தவறு என்பது உறைத்ததுஅதில் தான் இழைத்த தவறால்பண்ணக்கூடாத பாவங்களை எல்லாம் பண்ணிஇன்று விமோசனத்துக்கு வழியில்லாத இல்லாதஇழிநிலை தனக்கு.

எப்படி மதுவின் மீதான வெறுப்பில்அவளின் கவனத்தை ஈர்ப்பதரக்காகமுதன்முதலாக தொழில் விஷயங்களில் ஈடுபாடு காட்டினானோஅதேபோல் ஒரு ஆர்வ மிகுதியில்தன்பக்கம் தன் சகமாணவர்களின் கவனத்தைத் ஈர்க்கத்தான்முதன்முதலாக டென்னிஸ் கோர்டுக்குள் நுழைந்தான்டென்னிஸ் அவனுக்கு கைகூடியது போல்தொழிலும் கைகூடும் என்று நம்பினான்அப்படியே கைகூடாவிட்டாலும்இந்தமுறை தன்னால் யாருக்கும்எந்த இழப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

வலி ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்அவனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட வலியை வைராக்கியமாக பற்றிக்கொண்டான்.

ஒருவனுக்கு சாவதை காட்டிலும் அதிக வலி கொடுப்பதுஇதுதான் தன் வாழ்க்கை என்று அவன் நம்புவதை அழிப்பதுதான் என்பதை அவன் வாழ்க்கையே அவனுக்கு கற்றுக் கொடுத்திருந்ததுதன் அப்பாவுக்குஅவர் மனைவியோ அல்லது சிவகாமியோ வாழ்க்கை இல்லைஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர்என்பதும்சமுதாயத்தில் அதுதரும் மதிப்பும்அதிகாரமும்மரியாதையுமே அவரது வாழ்க்கை என்பது அவர் சொத்தை எழுதிக் கொடுத்தபோதும்கிரெடிட் மொத்தமும் அவனுக்கு கொடுக்கப்பட்டபோதும் சுருங்கிப்போன சிவகுருவின் அவனுக்கு புரியவைத்ததுஃப்யூச்சர் குரூப்ஸின் இயக்குனர் என்ற நிலையில் இருந்துஅவரை இறக்கிஅவருக்கு இருக்கும் அடையாளத்தை இல்லாமல் செய்வதுதான்அவருக்கு மரணத்தைக் காட்டிலும் அதிக வலி கொடுக்கும்அதைத்தான் தான் கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டான்.

**************

கல்லூரிப் படிப்பை ஒப்புக்கு முடித்தவன்படிக்கும்போதே படிப்பை காட்டிலும் தொழில்தான் கவனம் அதிக கவனம் செலுத்தினான்அதிலும்அவனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த சோலார் பிரிவின் மீது தனி கவனம் செலுத்தினான்படிப்பு முடிந்த ஆறு மாதத்திலேயே தங்கள் கம்பெனிகளின் தினசரி நடவடிக்கையில்இவனது தலையீடு அதிகமாகசிவகுருவிடம் இருந்து வந்த எதிர்ப்பைதாத்தாவை வைத்து சமாளித்தான்நெருங்கும் முயன்ற தாயையும் தள்ளியே வைத்திருந்தான்.

தேடித்தேடி படித்தான் இரவு பகல் பாராமல் உழைத்தான்கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் அவனது தந்தையின் முக்குடை தான்அவனது தந்தையால் மூக்கடைப்பும் பட்டான்ஆரம்பத்தில் அதிக மூக்குடைபட்டாலும் போகப்போக தொழிலில் தெளிவுபெற இவன் அவனது தந்தையின் கிடைக்கும் எண்ணிக்கைகள் அதிகமாயினசமுதாயத்தில் அவர் அடைந்திருக்கும் நிலையில் இருந்த அவரை அப்புறப்படுத்துவது ஒன்றையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவன்அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான்முடிந்த அளவுதனக்கும்தன் அப்பாவுக்கும் நடக்கும் சம்பாஷனைகளின் போதுஅருகில் தாத்தா இல்லாமல் செய்வதில்லை அவன்.

**************

மொத்த குடும்பமும் இரவு உணவு அருந்திக் கொண்டே இருக்கஆரம்பித்தான் மணி.

"நாமேஏன் ஒரு லைஃப்ஸ்டைல் ஸ்டோர் தொடங்கக் கூடாது? “ ஆர்வகோளாரில் மணி.

"நாம எதுக்கு சிலர வியாபாரம் எதுக்கு தொடங்கணும்?” சலிப்பாக சிவகுரு.


                               


"டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி வைச்சிருக்கோம்கார்மெண்ட்ஸ் வைச்சிருக்கோம்நாமேலே அத ரீடைலும் பண்ணினனா லாபத்தை அதிகப்படுத்தலாம்!!” விடாமுயற்சி மணி.

"நம்மாளளோட கஸ்டமர்ஸ்க்குநாமே காம்படீஷன் ஆனாஉள்ள பிஸினசும் போயிடும்இந்த மாதிர் கொஞ்சம் கூட லாஜீக்கே இல்லாத ஐடியாவா எடுத்துக்கிட்டு வந்து என்னோட டைம வேஸ்ட் பண்ணாத!!” மூக்குடைத்த சிவகுருமணியைஏளனமாக பார்க்கசிவகுருவின் சூடான வார்த்தைகளை தாங்கள் அங்கீகரிக்க வில்லை என்பது போல் சிவகுருவை பார்க்கசுதாரித்த சிவகுரு.

"கஸ்டமர்ஸ்க்குநாமே காம்படீஷன்னா இருக்குறது கூட ஓகேமேனேஜ் பன்னிக்கலாம்நம்ம டெக்ஸ்டைல் பிசினஸ் இன்னும் வருஷாவருஷம்குறைஞ்சது டூ பர்சண்ட் வளர்ந்துகிட்ட தான் இருக்குஎப்பவுமே ஒரு வளர தொழில் கையில் இருக்கும் போதுஅதில் உச்சம் தொடுகிற வரைக்கும்நம்ம கவனமெல்லாம் அதுல தான் இருக்கணும்இதுதான் அடிப்படை!!” வேறு வழி இல்லாமல் நெருக்கடியால்தானே மணிக்கு பிஸினஸ் நுணுக்கங்களை கற்றுக்கொண்டுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவான்.

***************

"நாம ஏன் மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட கூடாது?” ஆர்வகோளாரில் மணி.

“..........................” சலிப்புற்ற சிவகுரு.

"சோலார் பவர் உற்பத்தி பண்றதுக்கு தேவையான மொத்த பார்ட்ஸ்சும் நாமதான் தயாரிக்கிறோம்ஏன் மின்சாரமும் நாம்மலே உற்பத்தி செய்யக் கூடாதுவிடாமுயற்சி மணி.

"இன்னும் நம்ம சோலார் பிசினஸில்லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கலஅதுவுமில்லாம புதுசா தொழில் தொடங்க கேபிட்டல் எங்க இருக்குமுதலீடு எங்கிருந்து வரும்?” மூக்குடைத்த சிவகுருதன் மாமனாரின் பார்வையைபார்த்து மீண்டும் சலிப்புற்று

மாமாஸ்பூன் பீட் பண்ண முடியாதுஆபீஸ்ல இருக்கும் போது, I am his M. D, அவ்வளவுதான்!!” என்று இப்பொழுதெல்லாம் கொஞ்சம் சூடாக ஆரம்பித்தான்.

****************

இப்படி தன் தந்தையின் கைகளால் மூக்குடைபட்ட போதெல்லாம்கூடுதல் உத்வேகத்துடன் உழைக்க ஆரம்பித்தான் மணியாரிடமும் முன் அனுமதி கேட்க தேவையில்லை என்ற ஒரே காரணத்திற்காக தனியாக ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டுமுதலீடுகள் செய்வதற்கு என்றேதனியாக பியூச்சர் ஹோல்டிங் என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தான்சிவகுருவை வெறுப்பேற்ற வேண்டும் என்றுஅவன் செய்த இந்தச் செயல் உங்களுக்கு மேலும் பலம் சேர்த்ததுபணமுதலை ஒண்ணும் உள்ள இறங்கிருக்கு என்று பிஸினஸ் வட்டத்தில் தகவல் பரவமுதலீடுகளை எதிர்பார்த்துபல விதமான தொழில் புரிபவர்கள் வருவார்கள்இவனை தேடி வருவார்கள்அப்படி வருபவர்களின் தொழில் அறிவைமொத்தமாக உள்வாங்கிக் கொண்டுதன்னைத் தானே மேம்படுத்தி கொண்டான்இவன் செய்த பல முதலீடுகள் சொதப்பி இருந்தாலும்சில முதலீடுகளில் நம்பிக்கை தந்ததுஅது கொடுத்த தெம்பில்தன் ஆட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்தான்.

************

சிவகுரு அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்துஎதிர்ப்பட்ட அனைவரும் அவனுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்சிலர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்முதலில் குழம்பினாலும்சமாளித்துக்கொண்டு அனைவரது வாழ்த்துக்களையும்சிரித்த முகத்தோடு பெற்றுக்கொண்ட சிவகுருவின் மனதோ பதட்டம் அடைந்ததுகடந்த ஒன்றரை வருடங்களாகவேஇதே போன்ற ஒரு பதட்டம் எப்பொழுதும்சிவகுருவின் அடிமனதில் இருந்து கொண்டேதான் இருந்ததுதன்னை மீறி எதேனும் நடந்துவிடுமோ என்ற எண்ணம் கொடுக்கும் பதட்டம்ஏனோஇன்று அந்தப் பதட்டம் சற்று அளவுக்கு அதிகமாய் இருந்தது.

அறைக்குச் செல்ல திரும்பும்பொழுது தான்

"சார்சேர்மன் சார்உங்களஅவர் ரூமுக்கு வரச்சொன்னார்!!" இடைமறித்த சிவகுருவின் செக்ராடரி சங்கரபாணி.

குழப்பத்துடன் தனது மாமனாரின் அலுவலக அறையை நோக்கி நடந்தான்அறையின் வெளியே இருந்த பெயர்ப்பலகையை கண்டவனுக்கு அதிர்ச்சிதனது மாமனார் பெயர் இருந்தா இடத்தில் தனது பெயர்குழுமத்தின்தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவாக இருந்தாலும்தன் மாமானாரின் மேல் உள்ள அபிப்ராயத்தால் அவராகவே கொடுக்கட்டும் என்று அவருக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லைஇன்று தன் கனவுகளில் ஒன்று மெய்யாகமுழு மனதுடன்மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லைசிவகுருவால்தனக்கு சாதகமாக இப்பொழுதுவரை எல்லாம் நடந்து கொண்டிருந்தாலும்அது தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் நடப்பது வாடிக்கையாக இருந்தது சிவகுருவுக்குபெயர்பலகையைப் பார்த்தவாறு நின்றிருந்த சிவகுருவின் கவனத்தைகைதட்டல் ஒலி தொலைத்தது.

முகம் கொள்ளா சிரிப்புடன்சிவகுருவை நோக்கி வந்தார் மணியின் தாத்தா.

"வாழ்த்துக்கள்சிவாஇன்னையோட நான் ரிட்டையர்ட் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்என்றவர்சிவகுருவின் தோள்களில் கைபோட்டுசேர்மன் அறைக்குள்அழைத்துச் சென்றார்பின்னாலேயேஇருக்கிறதாஇல்லையாஎன்று தெரியாத ஒரு சிரிப்பை முதன்முதலாக சூடிக்கொண்டுஅவர்களை தொடர்ந்தான் மணி.

**************

"இப்ப எதுக்கு மாமா இதுஇன்னும் இறங்கி பார்க்க வேண்டிய வேல அதிகமா இருக்கு!! சோலார் பிசினஸ்இந்த குவாட்டர்ல பிரேக் ஈவன் ஆகிடும்!! அதுக்கு அப்புறம் உங்ககிட்டநானேஇதப்பத்தி பேசணும்னு தான் நினச்சுருந்தேன்அரைமணி நேரம் கழித்துதனக்கு கிடைத்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிவகுருசிரித்தார் பெரியவர்.

"அதனால தான் இன்னைக்குநல்ல வேளைஉங்களுக்கு வயசு ஆயிடுச்சுனு நீயா வந்து சொல்றதுக்குள்ளநானே இடத்தை காலி பண்ணினது நல்லதுஇல்லையா? " மீண்டும் சிரித்தார்.

"என்ன மாமா இது?" கொஞ்சம் பதட்டம் அடைந்த சிவகுரு.

"சும்மா பா!! பிசினஸ்ல எல்லா முடிவையும் சரியான டைம்ல எடுத்துக்கணும்!! இதுதான் கரெக்ட் ஆனா டைம்னு எனக்கு தோனிச்சு!! உன் அளவுக்கு இல்லாவிட்டாலும்நானும் ஒரு நல்ல பிசினஸ் மேன்தான்னு நம்புறேன்!!" தன் மருமகனைதங்களது குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமர்த்திவிட்ட பெருமிதம்அவர் முகத்தில் தெரிந்ததுஅவர் முகத்தில் தெரிந்த உண்மைசிவகுருவை கொஞ்சம் தைரியம் படுத்தியது.

****************

ஒரு மணி நேரம் கழித்துதனது இருக்கையிலிருந்து எழுந்துமணியன் அலுவலக அறையை நோக்கி நடந்த கொண்டிருந்த சிவகுருவின் மனதில் "நேரடியா உனக்கு என்ன தான் வேணும்னு கேட்டு விடலாம்என்ற ஆவேசம்உள்ளே நுழைந்த சிவகுருவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது போல்நின்றுகொண்டிருந்தான் மணி.

"Congratulations chairman sir!!" கண்ணடித்த மணிதன் பாக்கெட்டில் இருந்துஒரு சிவப்பு அட்டையை எடுத்து டேபிள் போட்டுவிட்டுஅந்த அறையில் இருந்த வாஷ்ரூம்க்குள் நுழைந்துகதவை அறைந்து சாத்தினான்.

தன்னியல்பில்அந்த அட்டையை எடுத்து வாசித்த சிவகுருவின் உதடுகள் முணுமுணுத்தது.

Checkmate!!

மணி அவன் மேற்கொண்ட தொடரும் முயற்சிகளில் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்தாலும்தான் எதையும் இழக்கவில்லை என்பதும்தன்னை குழுமத்தின் சேர்மனாக நியமித்த பின்தன் மாமனார் முகத்தில் தெரிந்த பெருமிதமும், கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது சிவகுருவுக்குஇருந்தும், எப்படி, சிறுவன் என, தான் உதாசீனப்படுத்திய ஒருவனால், இவ்வளவையும் செய்ய முடிந்தது என்று சிந்திக்கலானான்.

"எத்தனையோ பேர், பெரிய தொழில் முதலைனு சொல்லிக்கிட்டு திருஞ்சவன எல்லாம்ஒரு சின்ன இடைவெளி கிடச்சா போதும்அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் அசாலட்ட அடிச்சு சாச்சிருவேன்ஆனா இந்தப் பொடியன்....!! சின்னயப் பையன்இரண்டு வருஷத்துக்கு முன்னால அகோவுண்டஸ் பேலன்ஸ் ஷீட் எடுத்துக்கொடுத்துப் பார்க்க சொன்னதிருதிருனு முழிச்சிருப்பான்!!. ஆனா இன்னைக்கு இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பியஎனக்கே சவால்விடுறான்!!. ஒருவேளை நான் அவன தப்பா எடைபோட்டுடேனோஎங்க தப்புவிட்டோம்? ” என்று மூளையை கசக்கியவனுக்கு பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை.

இப்போவும் ஒண்ணும் கேட்டுப்போகவில்லை. அவன், என்னை தொழில் முறையில் ஜெயிக்கணும்னு மட்டும்தான் நினைசிக்கிருக்கான்சிவகாமிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அவன் சொல்லணும்னு நினைச்சிருந்தால்எப்போவோ சொல்லிருக்கலாம்எனக்குஎப்படி என்னோட பெயரை காப்பாற்றிக் கொள்ளுனும்னு கட்டாயம் இருக்கோஅதே மாதிரி அவனுக்கும்அவன் பேரை காப்பாற்றனும்னு கட்டாயம் இருக்குஅதனால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லைஇருக்கும்கண்டிப்பா சின்னதா ஒரு கேப் இருக்கும்அத மட்டும் கண்டு பிடிச்சிட்டா போதும்மொத்தமா இவனை அடிச்சு சாச்சிறலாம்பதட்டப் படாதஎதுவுமே உன் கைய விட்டுப் போகல!!. என்று தனக்கு தானே தெம்பு சொல்லிக்கொண்ட சிவகுருதன் கனவு மெய்ப்பட்டதைசேர்மேன் இருக்கையில் அமர்ந்தததை எண்ணி, அதை ரசிக்கலானான்.

**************

அன்று மாலையே சிவகுருவின் நிம்மதி தொலைந்ததுஃப்யூச்சர் குரூப்ஸின் சேர்மன் ஆக்கப்பட்டதன் பொருட்டுஅதற்கான பத்திரிக்கை அறிவிப்பின் கடிதத்தோடுமணியை எம்டியாக அறிவிக்கும் கடிதமும் சேர்ந்தே வந்திருந்தது சிவகுருக்குசிவகுருவை சேர்மன் ஆகும்அறிவிப்பில்ஏற்கனவே தனது மாமனார் கையெழுத்திட்டு இருக்கமணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பின் கீழ்சிவகுருவின் பெயர் பொறிக்கப்பட்டுகையெழுத்துக்காக காத்திருந்ததுஅவன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதேஉள்ளே நுழைந்தனர் இருவரும்

.


Checkmate. 

இப்பொழுது புரிந்தது சிவகுருவுக்குமணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பில் கையெழுத்திடுவதைத் தவிரதனக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த சிவகுருஅதில் கையெழுத்துவிட்டு நிமிர்ந்து தன் மாமனாரை பார்த்து புன்னகைத்தான்.

ஒன்றும் கைவிட்டுப் போகவில்லைஎல்லாம் beginners luck. என்ன மணிக்கு அந்த கால அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கிறதுஒரு சின்ன இடைவெளி கிடைத்தால்மொத்தமாக எல்லாத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்அந்தச் சின்ன இடைவெளிக்கு காத்திருக்கும் வரை தன்னை பலவீனமாக்கி கொள்ளக் கூடாது முடிவு செய்த சிவகுருஅடுத்த வாரமே பெரிய அளவில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தான்குடும்பத்தினரும்தொழில் வட்டத்தில் முக்கியமானவர்களையும்தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முக்கிய புள்ளிகளையும் அந்த விருந்துக்கு அழைத்துமணியை "ஆகா, ஓகோ" என்று புகழ்ந்து தள்ளினார்சிவகுரு.

சேர்மன் ஆனதற்காக கொடுக்கப்படும் பார்டி என்று நினைத்து வந்தவர்களுக்குஅப்படி அல்லஇது மணியின் வெற்றியை கொண்டாடும் விருந்து என்ற பிம்பத்தை எளிதாக கட்டியமைத்தார்சிவகுருவின் குடும்பத்துப் பெரியவர்கள் பூரித்துப் போனார்கள்விருந்தில் கலந்துகொண்ட பெரும்புள்ளிகளோ, "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று சிவகுருவை வாயாரப் புகழ்ந்தார்கள்சிவகுருவின் மனைவி சுமாவோஒருபடி மேலே சென்றுஅறைக்கு வந்ததும் கணவனை ஆரத்தழுவிக் கொண்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, ஆத்தமார்த்தமான அணைப்புஆரத்தழுவிக் கொண்டுவளின் காதுகளில், கிசுகிசுத்துஅவளை சிலிர்க்கச் செய்து தானும் சிலிர்த்துக் கொண்டான் சிவகுரு. நிம்மதியாக தன்னைக் காட்டிக்கொண்டு படுத்திருக்கும், தன் மனைவியை, அணைத்துக் கொண்டுஅவனும் உறங்கிப் போனான்மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கமணி எப்பொழுதும் போல் உணர்வற்று இருந்தான். அன்று இரவு அந்த வீட்டில், அனைவரும் நிம்மதியாக உறங்க, மணி மட்டும் விழித்திருந்தான், எப்பொழுதும் போல, ஆனால் குழப்பத்துடன். 

*************

இரண்டு மாதம் கழித்து,

மாமா!! நம்ம கம்பெனிகளை BSE(Bombay Stock Exchange) லிஸ்ட் பண்ணலாம்னு ஒரு ஐடியாநீங்க என்ன சொல்றீங்க?” தான் தேடியலைந்த ,அந்த சின்ன இடைவெளியை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டான் சிவகுரு. 

"இதத்தான், தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னால சொன்னப்ப, வேண்டாம்னு சொன்னஞாபகம் இருக்கா சிவாஅதுவும் இல்லாம ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் பண்ணினாபோர்ட் மெம்பர்ஸ் போடணும்அதிலும் நம்ம நிர்வாகத்துக்கு சம்பந்தம் இல்லாத இன்டிபெண்டன்ட் மெம்பர்ஸ் இருக்கணும்!!"

மணி மின்சாரத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்னபோதுமுதலீடு எங்கிருந்து வரும்என்று சிவகுரு கேட்கநான்கைந்து நாட்களுக்கு பின்இதை யோசனையை மணி தெரிவித்திருந்தான்ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் செய்தால்நிர்வாகத்தின் முழு கட்டுப்பாடும் தங்களிடம் இருக்காது என்ற காரணத்தைச் சொல்லி நிராகரித்த சிவகுருஅதை யோசனையோடு இன்று வரஅதே கேள்வி கேட்டார் மணியின் தாத்தா.

"தம்பி சொன்னதுதான் கரெக்ட்டு!!. நிர்வாகக் கட்டுப்பாடு நம்மகிட்ட இருக்கணும்னு நினைச்சேநாம்மல நாம்லேஅண்டர் வேல்யூ பண்ணிக்கிறோம் தோணுச்சு!! நாம அடுத்த கட்டத்திற்கு போகணும்னாஇது தான் ஒரே வழினு எனக்குத் தோணுது!! நம்முடைய எல்லா பிஸினஸும் இப்போ பிராஃபிட்ல தான் இருக்கு!! சோலார் இண்டஸ்ட்ரீஸ் கூட இந்த குவாட்டர்ல பிரேக்-ஈவென் ஆக்கிடுச்சு!! இதுதான் சரியான டைம்னு தோணுது!! இப்ப மட்டும் நம்ம லிஸ்ட் பண்ணினாகாஷ் ஃப்லோ இருக்கும்!! அதை யூஸ் பண்ணிதம்பி சொன்ன மாதிரி மின்சார தயாரிப்புல இறங்கலாம்!!” மணியை வைத்தே தன் காய்களை சரியாக நகர்த்தினான் சிவகுரு.

"ஐடியா நல்லாத்தான் இருக்குஆனா......” பெரியவர் தயங்கினார்.

"நாம ரெண்டு பேருமே பழைய காலத்து ஆளுங்க மாமா!! தம்பிஇந்த ஜெனரேஷன்!! அவனுக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கு!!” தன் மாமனாரின் தயக்கத்தை கண்டவுடன் அதற்கான மொத்த கிரெடிட்-டையும் மணியின் பக்க சாய்த்துஅவரை தன் பக்கம் சாய்த்தான் சிவகுரு

தன் மொத்த திட்டத்தையும் பெரியவரிடம் பகிர்ந்ததுஅவரது கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்துதிட்டத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டே அனைவருக்கும் தெரிவித்தான்

**************

இரண்டு மாதம் கழித்து ஒருநாள் மாலை,

பங்குசந்தையில் அங்கமாகும் முன்குலதெய்வம் கோயிலுக்கும்மணியின் பெரியப்பாவின் சம்பாதிக்கும்மொத்த குடும்பம் வணங்கச்சென்றதுகாலையில் குலதெய்வம் கோயிலுக்கு சென்றவர்கள்மாலையில் மணியின் பெரியப்பாவின் சமாதிக்கும் சென்று கும்பிட்டார்கள்அனைவரும் கிளம்பும் நேரத்தில்தான் கொஞ்ச நேரம் தனியாக தன் பெரியப்பாவின் சமாதியில் இருந்துவிட்டு வருவதாக சொன்னான் மணிமறுத்துப் பேச வலியில்லாமல் அனைவரையும் சமாளித்து அனுப்பினான்ஏனோ அவனுக்குஅங்குதனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

உன் பெரியப்பாவின் சமாதியை வெறித்துக் கொண்டிருந்தான்.

சிவகுரு என்ற தனிப்பட்ட மனிதனின் மேல் எந்த மரியாதையும் இல்லாவிட்டாலும்கடந்த ஒன்றரை வருடங்களில்தங்கள் குழுமத்தின் M.D சிவகுருவின் மிகப்பெரிய பிரம்மிப்பு உண்டாகியிருந்தது மணிக்குகுழப்பமில்லாதமிகவும் சீரான, Well-oiled machine போல தங்களது குழுமத்தின் நிர்வாக கட்டமைப்பைப் பார்த்து வந்த பிரமிப்பு அதுஅவர்கள் குழுமத்தில் பெரும்பாலான அதிகாரங்கள் M.Dயின் வசமே இருந்ததுசிவகுருவின் பெரும் பலமே இதுதான்சிவகுருவின் அந்த பலத்தை எடுத்துக்கொள்ள முடிவு செய்தான் மணிசீராக நடந்து கொண்டிருக்கும் தொழில்களில்தனது உழைப்பு பெரிதாக தேவைப்படாது என்பது புரிந்தது மணிக்குபெருங் கவனம் தேவைப்படும் ஒரே தொழில் சோலார் industries மட்டும்தான்அதைப் பற்றிய புரிதல் அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது ஒரு காரணம் என்றால்அதை நிர்வகிப்பது மீர் அலி என்பது மற்றொரு நம்பிக்கைஅந்த நம்பிக்கையில்தான் அடுத்தகட்ட நகர்வாக, M.D ஆவது என்று முடிவு செய்து வேலைகளில் இறங்கி அதை செய்து முடித்திருந்தான்.


                               


பங்குசந்தையில் அங்கமாகும் முன் கம்பெனிகள் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் மொத்தத்தையும் மாற்றி அமைக்க ஆரம்பித்த சிவகுருஅடுத்த இரண்டு மாதங்களிலேயே மூன்று பிரிவுகளாக கம்பெனி பிரிக்கப்பட்டதுஇண்டஸ்ட்ரீஸ்கன்ஸ்டிரக்ஷன்ஹோல்டிங்ஸ்மிகவும் சிறிய நிறுவனங்கள் விற்கப்பட்டனஅப்படி செய்யப்பட்ட மாற்றங்களின் அங்கமாகநிர்வாகத்தில் M. Dயின் அதிகாரங்களை குறைத்த சிவகுருஅதை சரிக்கட்டும் விதமாக மணியைதன் மாமனார்மனைவியைதன்னோடு சேர்த்துபோர்ட் மெமபர்களில் ஒருவனாக ஆக்கினான்.

இந்த முறை கொஞ்சம் பெரிதாகவே எதிர்வினையை எதிர்நோக்கி இருந்தான்ஆனால் தான் நினைத்ததற்கு மாறாகசிவகுருவோ கொண்டாட்டத்தில் இருக்கமுதல் முறையாக சற்று குழம்பினான்உணர்வற்று இருந்தாலும்உள்ளம் பரபரப்பாய் இருந்ததுஎல்லாம் சரியாக திட்டமிட்டுதான் செய்தான்மணி தான் எதிர்பார்த்த வினை வராமல் போக கொஞ்சம் பதட்டப்பட்டான்அதை சரியாக பயன் படுத்துக்கொண்டார் சிவகுரு

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்எனக்கு இருபத்தி மூணு வயசு கூட ஆகல!! நான் கொஞ்சம் தெளிவாகிக்கிறேன்என்று கேட்ட மணியை 

"உங்கப்பாவும்நானும்இதே வயசுல தான் தொழில் பண்ண ஆரம்பிச்சோம்நீ எங்கள விட திறமைசாலிஅதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!! இந்த ரெண்டு வருஷத்திலேயே உன்ன நீ நிரூபிச்சுட்ட!! எப்படிப் பார்த்தாலும் நம்ம கம்பெனியோட எதிர்காலம் நீ தான்!! இப்போதான் நீ தன்னிச்சையாக செயல்படணும்!! தள்ளி நின்னாலும் உனக்கு ஒரு வழிகாட்டநான் இருக்கேன்!! மேஜர் ஸ்டேக் ஹோல்டர் நம்ம தான், 20% லிஸ்ட் பண்றதால தொழிலை இன்னும் விருத்தி செய்யலாம்!! நீ சொன்னதுதான்இந்த வயசுலேயே போர்ட் மெம்பரானு திகைக்க கூடாது!! நீ என் பேரன் டா ராஜா!!" என்று மணியின் தாத்தாவைக் கொண்டே அவனின் வாயை அடைத்தான்சிவகுரு

தயாரிப்பு துறையில் இருந்த அத்தனை கம்பெனிகளையும் ஃப்யூச்சர் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துஅந்த நிறுவனத்தை லிஸ்டட் கம்பனியாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டதுமுதலில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டுமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கொடுப்பது என்று திட்டமிட்டிருந்தான்.

மொத்தமாக அடித்து வீழ்த்தி அசிங்கப்படுத்துவதைக் காட்டிலும்எப்படி மொத்த குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துதன்னை தனி மரமாகவே ஆட்டி வைத்தாரோஅதையே அவருக்கு தானும் செய்ய வேண்டும் என்று நினைத்துகிட்டத்தட்ட அதை அடைந்தும்விட்டான் மணிஅவன் செய்து முடிக்காமல் விட்டதுஅம்மா சுமாவை தன் வசம் இழுப்பது மட்டுமேஆனால் சிவகுருவின் சமீபத்திய செயல்பாடுகள்தன்னை பழைய நிலைக்கே கொண்டு வந்து விட்டதை நம்ப முடியவில்லைமணியால்இந்த முறையும் தோல்வி அடைந்தால்அது கொடுக்கும் வலியை தாங்கிக் கொள்ளும் சக்தி அவனிடம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது

சிவகாமிக்கும் சிவகுருவுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியிருந்தால்இரண்டு வருடங்களுக்கு முன்பே சிவகுருவை மிக எளிதாக தன்னால் விழத்தியிருக்க முடியும்ஆனால் இப்பொழுது அதை சொல்லி நம்ப வைப்பது கடினம் என்பதை காட்டிலும்சிவகுரு மட்டும் சாமர்த்தியமாக காய் நகர்த்தினால்தன் நிலை முன்னிலும் கேவலமாக மாறிவிடும்என்பதை நினைக்கையில் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மணிக்குசிவகுருவினால் கண்டிப்பாக அப்படி செய்யமுடியும் என்பகையும் மணி உணர்ந்திருந்தான்அவனுக்கு இருந்த ஒரே வாய்ப்புசிவகுருவை அடித்து வீழ்த்துவதுதான்அதற்கான வாய்ப்பு சரியான வாய்ப்பு இருந்தபோது அதை தவறவிட்டிருந்தவன்வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று எண்ணி எண்ணிஒன்றும் புலப்படாமல் போகவீரத்தியின் உச்சத்துக்கு சென்றான்.

எதிரில் தெரிந்த அவனது பெரியப்பாவின் சமாதியைவெறுப்புடன் பார்த்தான்.

"இவ்வளவு சொத்து சுகம் இருந்தும்இப்படி கிறுக்குத் தனமா சாமியாரா போயியாருக்கும் பிரயோஜனம் இப்படி செத்துப்போகாமபொறுப்பா இருந்திருந்தாஇன்னைக்கு எனக்கு இப்படி ஒரு நிலை வருமா?” கடந்த முறை பரிதாபப்பட்ட தன் பெரியப்பாவின் மேல் இந்த முறை வெருப்பை கக்கினான்தனக்கு மிகவும் அருகில் தெரியும் தோல்வியின் மொத்த பழியையும் தன் பெரியப்பாவின் மேல் போட்டான். "என்ன சாமிரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம் அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்றியது.

*****************

"என்ன சாமிரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம்அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்றசத்தம் வந்த திசையை நோக்கினான்.

அதே பிச்சைக்கார சாமியார்மணியைப் பார்த்து சினேகமாக சிரித்தார்சிரித்தவரைப் பார்த்து முறைத்தான்யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லைஅவன்.

"என்ன சாமி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!” முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து மீண்டும் கேட்டவரைநம்பமுடியாமல் பார்த்தவன்"முடியல" என்பதைப் போல் தலையசைத்தான்இந்த முறை சரியான அளவில் வேட்டி சட்டை அணிந்திருந்தார்சிகை அலங்காரம் போன முறை போல் அப்படியே இருந்தது.

"ஊதக் காத்து உசுர் வரபுடிச்சு ஆட்டுது!!, எப்படித்தான் வெறும் சட்டை துணையோடு இருக்கீங்களோ?" என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்துதன் மேல் உடலைப் போர்த்திக் கொண்டுஅவன் அருகில் அமர்ந்தார்.

சற்றுமுன் அவர் மேல் இருந்த வெறுப்புஇப்பொழுது இல்லைஅவனிடம்இவ்வளவுக்கும் அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லைமனிதரை கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர் போல என்று நினைத்தவன்கடந்த முறைபோல தன்னை தெம்பூட்ட எதேனும் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில்அவரையே பார்த்துக்கொண்டு இருந்தான்அவரோஇவனைக் கண்டு கொள்ளாமல்போர்த்திய துண்டை இழுத்து பிடித்துக் கொண்டுசமாதியை பார்த்துக் கொண்டிருந்தார்கொஞ்சநேரம் காத்திருந்தவன்போனதடவ ஏதோ உலறினார் என்பதற்காக பிச்சைக்காரரைசாமியாராக கருதும் தன் என்னைத்தை நொந்துகொண்டுஎழுந்தவன்ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினான்கடந்த கால நியாபாகத்தில்இவன் ரூபாய் நோட்டை நீட்டியதும் பல் இளித்தவர் 

"சாமி!! 50, 100, 500னு இருக்குமானு பாருங்களேன்!!, போனதடநீங்க குடுத்த 2000 ரூபாயை மாத்தூறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிருச்சு!!" இளித்தஇளிப்பை குறைக்காமல் கேட்டார்ஏதோ கொடுத்து வைத்ததைப் போலமீண்டும் அவர் செய்கையை நம்பமுடியாமல்தலையைாட்டியவன்வேலேட்டில் இருந்துஅவர் கேட்டது போல நோட்டுக்களை எடுத்துக்கொடுத்தான்வாங்கிக் கொண்டவர்அதை எண்ணிமடித்துதன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு.

"சாமிநம்ம சந்தோஷத்துக்கு வேணா ஆயிரம் பேர் என்ன லட்சம் பேர் கூடகாரணமா இருக்கலாம்!! நம்ம கஷ்டத்துக்கும்வலிக்குஎப்பவவுமேநம மட்டும்தான் காரணமா இருப்போம்!! என்றவர் போர்த்தி இருந்த துண்டை எடுத்துதன் இரு காதுகளையும் மறைத்தவாறுதலையில் கட்டிக் கொண்டார்.

"காதுகால்வழியாத்தான் குளிர் மனுஷனுக்குள்ள இறங்குமாம்துண்ட இப்படி காதை சுத்தி கட்டுனாஉடம்புக்கு குளிர் தெரியாதாம்என்று அவனுக்கு சம்பந்தமே இல்லாமல் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவது எப்படி என்று பாடம் எடுத்தவர்கால்களை சம்மணமிட்டுதனது வேட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டுசெய்முறை விளக்கமும் கௌததார்

"புத்திகெட்டவன்தான், தான் கஷ்டத்துக்கு அடுத்தவங்கிட்ட காரணம் தேடுவான்நம்ம வலிக்கு அடுத்தன் செயல்ல காரணம் தேடினா அந்த வழியில் இருந்து மீளவே முடியாது!! என்ன நாஞ் சொல்றது!!” என்றவர் அவனது பெரியப்பாவின் சமாதியைப் பார்த்தார்

"வலிக்குமேனு பயந்தவன் வாழ் வீச முடியுமா?" மணியைப் பார்த்து திரும்பியவர் கேட்கஅவனுக்கு அவர் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்கஎன்ன சொல்வதெண்டறு தெரியாமல் முழித்தான்.

"சாமிக்கு புரியலனு நினைக்கேன்!!” என்று யோசித்தவர்.

"சரி சாமி!! உங்களுக்கு புரியிற மாதிரியே சொல்லறேன்!!” என்றவர்பின் முகத்தை மாற்றி 

"சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?" வடிவேலு போலவே சொல்லிக் காட்டியவர்கலகலவென்று சிரித்தார்அவர் வலியைப் பற்றி சொன்னது மணிக்கு புரிந்ததோபுரியாவில்லையோஅது அவனுக்குத்தான் வெளிச்சம்ஆனால்அவன் மனதில் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்ததுஅங்கிருந்து சமாதியின் வாயிலை நோக்கி நடந்தான்.

"கோயம்புத்தூர் கிளம்பலாம் தாத்தாதன் பெரியப்பாவின் சாமதியில் இருந்து வீட்டிற்கு வந்ததுமேதாத்தாவிடம் சொன்னான்மணி.

"என்னாச்சுப்பாரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு நீதான சொன்ன?" சிவகுருவின் சாமர்த்தியமான காய் நகர்த்தல் சோர்வுற்று இருந்த மணிஇரண்டு நாள் பழனியிலே இருக்கலாம் என்று இன்று காலைதான்தன் தாத்தாவிடம் சொல்லியிருந்தான்.

"இல்ல தாத்தாகம்பெனி லிஸ்டிங்க்குஇன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!! நிறைய வேலை இருக்கும்!! என்னால இங்க ரெண்டு நாள் சும்மா இருக்க முடியாது!!” இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றும் இரண்டு நாட்களுக்குமுன் கெஞ்சியை பேரனின் புது உத்வேகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்ட மணியின் தாத்தா.

"இப்ப தாண்டா ராஜா நீ நான் வளர்த்த புள்ள!!" பெருமைப் பட்டுக்கொண்டார்

நீண்ட நாட்களுக்குப்பின் பழனி வந்ததால்மணியைப் பெற்றோருடன் கோயம்புத்தூர் அனுப்பிவிட்டுமூன்று நாள் கழித்து வருவதாக சொல்லிபெரியவர்கள் மூவரும் பழனியில் கொண்டார்கள்முன்னால்சிவகுரு அமர்ந்திருக்கபின்னால் அவனும்சுமாவும் அமர்ந்திருந்தனர் காரில்சுமா கொஞ்சம் நகர்ந்துதன் மகனுக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கதலை சாய்ந்து அமர்திருந்தவன்அப்படியே தூங்கி சரியஅவனை ஒட்டி அமர்ந்த சுமாமகனை தன் தோள்களில் சரித்துக்கொண்டாள்

"இறங்கி அடிக்க துணிஞ்சிட்டா
இரக்கம் பாக்குறது மடத்தனம்
அந்த மூடத்தனத்தை பண்ணிப்பூட்டா 
மண்ணுக்குள்ள தான் போவணும்"

தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்கஅந்த பிச்சைக்கார சாமியார்பெருங்குரல் எடுத்துராகமிட்டு பாடியது கேட்டதுவசதியாக படுத்துக் கொண்டவனின் கனவில்

************

இரண்டு நாள் கழித்து,

பழனியிலிருந்து உத்வேகத்துடன் வந்திருந்தாலும்தன் மூளையை கசக்கிப் பிழிந்த போதும்வழி ஏதும் புலப்படாமல் தவிர்த்திருந்தான் மணிஅவனுக்கான நேரம் மிகவும் குறைவாகவே இருந்ததுதங்கள் நிறுவனத்தைபங்குச்சந்தையில்பட்டியலிடுவதற்கான செயல்முறைகள் மற்றும் பதிவு செய்வதற்குதேவையான வழிமுறைகளில்தனக்கு எதுவாகஏதாவது வாய்ப்பு இருக்குமாஎன்று ஆராய்ந்து கொண்டிருந்தான்தன் அலுவலக அறையில்டேபிளில் இருந்த தொலைபேசி அழைப்பு அவனது கவனத்தைதன்பக்கம் ஈர்த்தது.

அதை எடுத்து காது கொடுக்க

"சார்!! பிரதீப்னு ஒருத்தர்உங்கள பார்க்கிறதுக்கு வந்திருக்கார்!!, உங்க பிரண்டுனு சொல்றார்!!.... " என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே ,

"உடனே உள்ள அனுப்புங்க!!" இடைமறித்து சொன்னவன்

பிரதீப்பின்
திடீர் வருகையால் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரதீப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை அவனுக்குகதவு திறக்கப்பட்டதும்ஒரு சின்னப் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ச்சியுற்றான்.

பிரதீப்பை பின் தொடர்ந்துமீண்டும் அவன் வாழ்வில் வந்தாள் மது.

*********